Tuesday, December 10, 2024
முகப்புஉலகம்ஈழம்காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று - புமாஇமு ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று – புமாஇமு ஆர்ப்பாட்டம்

-

லங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் போராடி வருகின்றன. இருந்தும், மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் -ராஜபக்சேஇதைத் தொடர்ந்து,

  • இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது.
  • இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது.
  • காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்

என்பனவற்றை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நவம்பர் 11-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணாசாலை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

  1. காம்மன் வெல்த் நாடுகளின் பொம்மலாட்ட கயிறு
    பிரிடன் மகாராணி கயில்தான் உள்ளது:
    இலங்கைக்கு,அதிவிரைவு படகு(இதில் வந்துதான்,இலங்கை ராணுவம்,நமது மீனவர்களை சுட்டுக் கொல்கிறது)
    லேசர் துப்பாக்கிகள்,மற்றும் நிதிஉதவி போன்றவைகளை அம்மணிதான் இலவசமாக வழங்கினாள்:
    அது என்னவோ தெரியவில்லை:தமிழன் என்றாலே தலை எடுக்க எல்லோரும் ஒரே அணியில்,ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு நிற்கிறார்கள்:
    சல்மான் குர்சித் இன்றுமுதல் அன்ன ஆகாரம் சாப்பிடாமல் உள்ளானாம்:இலங்கையில் “வயிறு” முட்ட வான் கோழி பிரியாணி சாப்பிட….தன் படைகளோடு தயார் நிலையில்….

  2. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி காமன்வெல்த் மாகாநாட்டை அங்கீகரித்ததிற்காக முன்னைய காலனிநாடுகளின் தலைவி மேன்மை பொருந்தி மகாராணியார் அவர்களால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு நற்சாட்சி பத்திரம் ஒன்று அனுப்பி வைக்கபட இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

  3. தாங்கள் அடிச்ச காப்பி பேஸ்டின்படி காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லவேண்டாம்.சரி அதன் பின் என்ன செய்வது?
    அதற்கு ஒரு தீர்வு சொல்லவேண்டாமா?
    காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லவேண்டாம் என்று சொல்வதைவிட இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் மற்றும் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவை ஒட்டி உள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டித் தரவேண்டும்.இதுதானே நமது முக்கியமான கடமை.
    அதற்கான வழிமுறைகளை இந்நிய அரசு செய்து தர வேண்டும் என நமது அரசைக் கேட்டு நிர்பந்திப்பதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

  4. இந்திய அரசைக் கேட்டு நிர்பந்திப்பது….
    இன்னும் 100(அ) 150 வருடங்கள் ஆகலாம்:
    அல்லது இந்தியா என்ற ஒன்று அமெரிக்காவின்
    அடிஆளாக மாற வாய்ப்புண்டு:
    இச்ரேல் ஏற்கனவே இந்திய ராணுவத்துக்கு
    பயிற்சியை ஆரம்பித்துவிட்டது

    • நான் எழுதிய பின்னுாட்டத்துக்குப் பதில்தானே தந்திருக்கிறீர்கள்.
      சரி மத்திய அரசுக்கு இதை செயல்படுத்த தாங்கள் சொல்லிய காலம் ஆகலாம்.
      காமன்வெல்த் மாநாடுக்கு போகவில்லை என்றாலும் மறுபடியும் 0 தானே நிக்கப்போகிறோம்.
      மறுபடியும் ஒன்றுலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்.
      போனாலும் போகாவிட்டாலும் அதுதான் நிலை.
      அதனால்தான் தாங்களாவது ஒரு நல்ல தீர்வு இதற்கு சொல்லுங்கள் என்று கேட்கிறேன்.
      தற்சமயம் இந்தியாவில் இதற்கு தீர்வு யாரிடமும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
      வாழ்க வளமுடன்
      கொச்சின் தேவதாஸ்

  5. காமன்வெல்த் எனப்படும் அமைப்பின் மூலமும் யோக்கியதையும் பற்றி நன்கறிந்த ம க இ க வினர் எல்லா தமிழக கட்சிகளும் அமைப்பும் வேண்டுகின்ற ஒரே காரணத்தினால் அதன் அசட்டுத்தனத்தை கேள்விக்கு உள்ளாக்காமல் உங்கள் தோழமை அமைப்பை கடைசி நாள்களில் இறக்கி விட்டிருப்பது சரியா என்பதனை விளக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க