Thursday, May 30, 2024
முகப்புஉலகம்ஈழம்இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து புமாஇமு ஆர்ப்பாட்டம் - படங்கள்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து புமாஇமு ஆர்ப்பாட்டம் – படங்கள்

-

 • இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது.
 • இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது.
 • காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்

என்பனவற்றை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் புமாஇமு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் மாணவர்கள், 11-11-2013 அன்று  அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலை 11 மணி அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் மாணவிகள் உட்பட திரளான மாணவர்கள்  கலந்து கொண்டார்கள். இங்கிலாந்து பிரதமர் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விவாதத்தை சேர்க்க விடுத்த கோரிக்கையை நிகழ்ச்சி நிரலில் உள்ளவற்றைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது என்று இலங்கை அதிபர் மறுத்திருக்கிறார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பகுதிகளை பார்வையிட போன போது விசா விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர் கூட்டம் நடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்டனர். தமது நாட்டுக்கு திரும்புவதற்கு ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காமன்வெல்த் மாநாடு நடக்கும் காலத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் மீது இது போன்று ஒடுக்குமுறை என்றால், ஈழத் தமிழ் மக்கள் மீது நிலவும் அடுக்குமுறையை புரிந்து கொள்ளலாம். இது போன்ற ஒரு மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லி விட்டு மற்றவர்கள் கலந்து கொள்வது மோசடியானது, தமிழ் மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுப்பது என்பது ஏமாற்று வேலை.

கனடா கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. இந்தியா நடத்துவது நாடகம் மட்டுமே, புறக்கணிப்பு இல்லை.

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை கொழும்புவில் நடத்துவது இனப் படுகொலையை மூடி மறைக்கும் நோக்கத்திலானது. இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பிலிருந்தே வெளியேற்ற வேண்டும். பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது போல இலங்கையும் நீக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் அம்பலப்படுத்திதோழர்கள் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தை பெரும் திரளான மக்கள் நின்று கவனித்தார்கள்.  சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக அரசே தீர்மானம் போட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதே கருத்தை சொல்ல விடக் கூடாது என்ற நோக்கத்தில் போர்க்களம் போலத்தான் போலீசை குவித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தை 10 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று போலீஸ் சொன்னதை மீறி 45 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,சென்னை

 1. குட்ட குட்ட குனிபவனும் முட்டாள், குனிய குனிய குட்டுபவனும் முட்டாள். இந்த உண்மை இஙு உள்ள சில கோமாளிக்கு ஏனொ புரிய மாட்டேன் என்கிறது. (புரிந்து இருந்தால் இப்படி இந்தியா , இலஙகையை கண்டு நடுஙுமா?)

  • சற்று புரையோடிப்போன காரணம் ஒன்று உண்டு:
   இந்திய வெளி விவகாரத்துரை ஒரு புதிய உத்தியை கையாள்கிறது…
   தமிழ்நாட்டில் இருந்து எந்த எதிர்ப்பு வந்தாலும்,. அதை நமது பலம்/பலவீனத்தை
   துனையாக சமாளிப்பது:இதன் உந்து விசை எதிர் துருவங்களான தி.மு.க/ஆயி.அ.தி.மு.க கையில்
   சிக்குண்டு, தமிழ்நாட்டின் போராட்ட களம் சரியான திசையில் பயனிக்காமல் செல்கிறது:
   இதை ட்ரையல்& எர்ரர் ஆக வெளி விவகாரத்துறை கையாண்டு வருகிறது: வரும் காலங்களில்
   போராடுபவர்களின் நிலை சற்று சிரமமாகவே இருக்கும்:
   கவலை வேண்டாம்…ஒவ்வொரு பிரச்சினைக்கும் 9 தீர்வுகள் உண்டு- அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து
   தொடக்கப் புள்ளியில் இருந்து நகர்வோம்

 2. மாறாது ஐயா மாறாது.இந்திய மத்திய அரசும் மன்மோகன் புத்தியும் மாறாது ஐயா மாறாது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க