Thursday, June 20, 2024
முகப்புகலைகவிதைசச்சினின் 'சீக்ரெட் ஆஃப் எனர்ஜி' !

சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !

-

ச்சின்
உங்கள் சாதனையைக் கண்டு
நாங்களும் வியக்கிறோம்.

டெண்டுல்கர் தேசபக்தி

இருபத்திநான்கு ஆண்டுகள்
எந்தச் சூழலிலும்,
சாதாரண இந்தியனின்
எந்தப் பாதிப்பிலும்
கவனம் திரும்பாமல்,
தனது ஆட்டத்திலேயே
குறியாயிருந்து
முன்னேறிய
தங்கள் ‘திறமை’
எங்களை திகைக்க வைக்கிறது!

தாயுடனான, மனைவியுடனான,
குழந்தைகளுடனான… பொழுதுகளை
நிறைய இழந்ததாய்
நிறைவுப்போட்டியின் இறுதியில்
நீங்கள் சொன்னபோது வருந்தினோம்,
குடும்பத்தை இழந்து ஷார்ஜாவிலும்
குவலயத்தின் ஏதாவதொரு தெருக்கோடியிலும்
தேசத்தையே இழந்து நாங்கள்
உங்கள் பின்னால் திரண்டபோதும்,
தன்னையே இழந்த
எங்களது இழப்பில்
நீங்கள் தடுமாறாமல்
ஆடிய அழகில் வியந்தோம்!

சிவசேனையால் கொல்லப்பட்ட
இசுலாமிய மக்களின் இல்லங்களில்
அழுகுரல் ஓயாத நிலையிலும்
உங்கள் திருமணத்திற்கு
வந்த சிலரில்
பால்தாக்கரேவும் உண்டு.
இறுதி ஓய்விற்காக
நீங்கள் அளித்த விருந்தில்
ராஜ் தாக்கரேவும் உண்டு.
கொலைகாரனையும்
உபசரிக்கும்
உங்கள் விருந்தோம்பல் சாதனையில்
நாங்கள் கிளீன் போல்டு!

தங்கள் சொந்த மாநிலமான
மகாராஷ்ட்ராவின்,
விதர்பா விவசாயிகள் தற்கொலை,
குரூரமாக கொளுத்தப்பட்ட
கயர்லாஞ்சியின் தலித்துக்கள்,
குஜராத்தில்
ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட
இசுலாமியர்கள்,
எந்த விசயத்தையும்
கண்டு கொள்ளாமல்
எச்சரிக்கையாய்,
எதைப் பற்றியும் வாய் நழுவாமல்
குவிக்கப்படும்
சொந்த ரன்களின் நலன்களிலேயே…
இப்படி ஒரு மனிதன்
இருக்க முடியுமா? என
வாழ்வை அர்ப்பணித்த
உங்கள் கிரிக்கெட் ‘வெறியில்’
நாங்களும் உறைந்தோம்!

பெப்சி சச்சின்
பெப்சியில் “சீக்ரெட் ஆஃப் எனர்ஜி”

விளையாட்டைத் தவிர
வேறெதிலும் செலவிடமுடியாத
தங்களது லட்சியத்தின் துடிப்பு,
பெப்சி, எம்.ஆர்.எஃப்,
பூஸ்ட்… போன்றவற்றில்
”சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக”
செயல்பட்டதைப் பார்த்து சிலிர்த்தோம்!

பாரத ரத்னா பற்றி
வேறு ஏதோ நினைத்திருந்தோம்,
உங்களுக்கு
வழங்கப்பட்ட பிறகுதான் புரிந்தது,
அது,
தன்னலம் தவிர
உலகம் மரத்துப்போன
மனிதர்களுக்கான குரூரம் என்று.
களத்துக்கு வெளியே
நீங்கள் கவனமாக ஆடிய
கார்ப்பொரேட் உணர்ச்சிகளுக்கான
நுட்பத்தை
உங்களைத் தவிர
உள்ளுக்குள் யார் ஆட முடியும்?

உலகமயம் சூடுபிடித்த
ஆடுகளத்தில்
ஒட்டு இடமுமின்றி
உடலெங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள்
விளம்பரம் தரித்து,
தேசபக்தியோடு நீங்கள் அடித்த
சிக்சரிலும், ஃபோரிலும்
இந்தியாவின் ஸ்கோர் மட்டுமா
எகிறியது?
அன்னிய மூலதனத்தின் அளவையும்
எகிறவைக்க ஆடிய நாயகன் நீங்கள்!

எவன் செத்தாலும்
யார் என்ன சொன்னாலும்!
சுற்றிலும் அழுத்தும்
மனித உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல்
தனது இலக்கில் மட்டுமே
வாயை மூடிக்கொண்டு
குறியாய் இருக்கும்
மன்மோகன்சிங் கிரிக்கெட் ஆடினால்
நிச்சயம் அவர்பெயர் டெண்டுல்கர்தான்!

– துரை.சண்முகம்

 1. காசை வீசி எரிந்தால் போதும்,,,மும்பாய் பூணூல்,நம்ம ஊர் கடா மார்க் சுருட்டு
  விளம்பரத்தில் கூட நடிக்கும்

 2. பாரத ரத்னா என்பதை மட்டும் விவாதப்பொருளாக தினமணி, புதிய தலைமுறை உள்ளிட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் மாற்றி சச்சனுக்கு ஒளிவட்டம் போட்ட நிலையில் அந்த ஒளிவட்டத்தை துரை.சண்முகத்தின் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உடைத்து எரிகிறது.

  பால்தாக்ரே,ராஜ்தாக்கரே உடன் உறவாடிய சச்சின் ’திறமை’ கொண்டாடத்தக்கதா?

  இவற்றை சரியாக உள்வாங்கும் போது கலைஞர்-ப.சிதம்பரத்தின் ‘திறமை’களை பேட்டி எடுக்கும் கோபிநாத்தின் மனதோட்டத்தையும் வைகுண்டராஜன் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டாலும் நடராசன் காலில் விழுந்தாலும் என்ன தப்பு என கேட்கும் ‘கரந்த பாலுக்கு’ சொதக்காரரான சீமானின் ஓட்டுஅரசியல் நரித்தனம் புரியும்…!

 3. I think you guys need to get a life!

  If we find fault with everyone in the world like this then there won’t be anyone who would be faultless.
  If Sachin doesn’t deserve Bharat Ratna for having called Thackrey to his wedding then how come you guys praise anyone like Saddam, Gadafi, Lenin, Stalin etc is beyond me. Those people are far far worse than you would find anyone in India!

 4. When Bal Thackrey had driven the Tamils and Malayaalis out of Mumbai in the sixties,perhaps Harikumar would not have born.But recent outbursts of Raj Thakrey against Biharis must be known to him.During his entire lifetime,Bal Thakrey spent his time and energy only on hate politics. I have served in Mumbai for 11 years and know very much about the psyche of Marathas under Shiv Sena.Harikumar,come out of your shell and see the world by reading all newspapers.

 5. You must be dreaming sooriyan.

  I have all my family in Mumbai and they have been there since the 1940s,the marathis did create a problem but nobody was driven away.

  It is natural some people got scared but nobody was killed,Marathis had such issues for quite sometime and they sorted it out.

  regarding Raj Thackeray,there are people pouring into mumbai in millions and most crime is done by bihari and UP muslims.

  No wonder Raj has a problem and he has been very clear in this regard.

  I have lived in Mumbai and there are tamils so many of them here from Tirunelveli & Kanyakumari making a great living.

  In 1992,Muslims targeted Hindus and all Hindus Marathi/Gujrati/Punjabi/Sikh/Tamil/Tulu/kannada/telugu all fought on the street to eliminate mullahs and there still are many nadars and thevars in Shiv Sena.

  I think living in Mumbai without knowing Hindi ll end up being blind like you.

  • Harikumar will accept that the Thakreys are villains only when Tamils are killed by them.He will not recognize any other type of bullying.People from Bihar and UP are doing menial jobs at Mumbai and most of the taxi drivers are from those states.I have working knowledge of Hindi.I worked in a public sector bank and encountered the dirty politics of Shiv Sena while running the branches of the bank.There are lakhs of Hindus among Biharis in Mumbai.Harikumar is the person who does not remove his coloured glass and the irony is he is calling others as blind.Marathis have not sorted out their problems.Only their targets are changing from time to time.

   • marathis do have issues and politicians handle it but Marathis alone can control the extreme aggressiveness and stupid behaviour of muslims who ll go and damage public property in mumbai for what happened in ayodhya.

    • “stupid behaviour of muslims who ll go and damage public property in mumbai for what happened in ayodhya.”

     Now, you are agreed that the stupid behaviour of Muslims in Mumbai for “worst and terror” behaviour of Hinduthva (by RSS & co). In this case, Thakray group must study the root cause of the “stupid behaviour of Muslims” and destroy the root cause which means they have to destroy RSS & co. You must agree this or remove your mask.

     • You make such silly inferences,

      I cant go get myself mixed up in someone else’s conflict.

      Shiv Sena is concerned about Mumbai/Maharashtra.

      They are not interested in solving the problems of ayodhya/UP.

      If a mad dog comes to bite me,i ll rather shoot it if i have a gun instead of trying to fund its rabies treatment which is impossible.

      The root cause of muslim behaviour is the appeasement by the congress,if u thrash the sullas first time,they know how to behave later like it happened in gujarat.

 6. You should analyse whther BharatRatna is applicable for sportspersons or NOT. whether cricket is eligible for coming under this…etc

  No one is born only to serve other. Everyone has own motive in life.

 7. குஜராத்தில்
  ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட
  இசுலாமியர்கள்
  — As usual no mention about Godhra.

 8. பாரத ரத்னா மிக உயர்ந்த கொஉரவம், தன்னலம் பாராது தேச சுதந்திரத்திர்கும், சமூதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவருக்கு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது! இந்தியாவின் சுதந்திரத்திற்கும்,சமூதாய ஒற்றுமைக்கும் பாடுபட்ட காந்தி,படேலுக்கும், இந்தியாவின் புனர்நிர்மாண சிற்பி என்று நேருவிற்கும் , தத்துவ மேதை என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியாவின் முதல் கவெர்னெர்ஜெனெரல் என்று ராஜாஜிக்கும், தேசிய கவி என்று தாகூருக்கும் கொடுத்ததில் தவறில்லை!

  பின்னர் தறி கெட்டு, எமெர்ஜென்சி சர்வாதிகார நடத்தைக்காக மக்களால் தண்டிக்கப்பட்ட இந்திராவிற்கும், திராவிட இயக்கத்தின் கோடாரிக்காம்பாக இருந்த காரணத்திற்காக எம் ஜி யாருக்கும், தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படுமே என்று (கும்பகொணத்தில் கோதானம்?) கதையாக காமராஜருக்கும், மைனாரிட்ட்ய் காஙகிரசு பிரதமர், ஊழல் பிதாமகர் , இந்துத்வாநாயகர் என்று பலருக்கும் பங்கு போட்டு கொடுக்கப்படும் கடைச்சரக்காகி விட்டது பாரத ரத்னா!

  ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள், முக்கியமாக பார்ப்பனர்கள் என்று பார்த்து பார்த்து கொடுக்கப்படும் பதமஷ்ரி போல ப்ளாட்பாரத்திற்கு வராத குறைதான்!

 9. கேடு கெட்ட நாட்டில் ஒரு சிறந்த மனிதரை தேடுவது கடினம்.தம்பட்டம் அடித்து கொள்ள உதவலாமே தவிர வேறு எதற்கும் உதவாது.

  • நான் சிறந்த மனிதன்?நீ…? சிறந்த, எதையும் எதிர் பாராமல் பிறர்க்காகவே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர்களை வரலாறு உனக்கு கட்டாயமாக அடையாளம் காட்டும்.

 10. tendulkar மாதிரி இனி யார் விளையாடுவா ?

  அய்யகோ டெண்டுல்கர் மாதிரி selfish game இனி யாரு விளையாடுவா ?

  டெண்டுல்கர் மாதிரி 90 ரன்னுக்கு அப்புறம் 10 ரன் அடிக்க 10 ஓவர் இனி யார் விளையாடுவா ?

  டெண்டுல்கர் மாதிரி தன்னோட individual ஸ்கோர் 100,, individual record ல Number of 100 ல 1 add ஆன அப்புறம் ஏறி சிக்ஸ் அடிக்கற மாதிரி கேட்ச் குடுத்துட்டு போற டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  ஒபென்னிங்க்ள வந்தாதான் individual ஸ்கோர் 100 அடிக்க முடியும்னு கடைசி வரைக்கும் ஒபென்னிங்க்ள விளையாடன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  வேற எந்த down ல வந்தாலும் ரன் அடிக்க முக்கு முக்குனு முக்கன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ? (பிளேயர் நா எந்த down ளையும் விளையாடி காட்டணும் )

  ஒவ்வொரு matchlayum இந்தியாவுக்காக விளையாடுறன் !! இந்தியாவுக்காக விளையாடுறன் !! தவறாம மறக்காம சொல்லிட்டு தனக்காக individual record க்காக மட்டுமே விளையாடுன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  கேப்டனா இருந்த அப்போ 10 matchla மொத்தமா 35 ரன் அடிச்சி pressure ல விளையாட முடியாம அந்த தெனரு தெனர்ன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  first inningsla மட்டும் தவறாம 100 அடிச்சிட்டு 2 nd இன்னின்க்ஸ்ல pressure ல வெறும் சொற்ப ரன் மட்டுமே அடிக்கற டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  இந்தியா தோத்தாலும் அத பத்தி கொஞ்சம் கூட கவலை படாம தன்னோட individual record க்காக மட்டுமே விளையாடுன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  தன்னோட individual record ல man of தி மேட்ச் க்காக மட்டுமே பௌலிங் போட வந்த டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  தன்னோட individual record க்காகவும் விளம்பரத்துல வர பணத்துக்காகவும் மட்டுமே 55 வயசு வரைக்கும்(விட்டா 75 வயசு வரைக்கும்விளையாடி இருப்பான் ) கிரிக்கெட் விளையாடன டெண்டுல்கர் மாதிரி இனி யார் விளையாடுவா ?

  அடடா இந்தியாவுல இருக்க 100 கோடி பேருல டெண்டுல்கர் மாதிரி selfish game விளயாடதெரியாத இன்னொரு கிரிக்கெட் பிளேயர் கிடைக்கறது அவ்ளோ கஷ்டமான காரியமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க