privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

-

ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு ! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம் !

பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம்.

சிறீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் அமைந்துள்ள நோக்கியா கைபேசி நிறுவனம், தமது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலை நீக்கம் செய்திருக்கிறது.

“ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!” என்று இவ் வேலை பறிப்புக்கெதிராக, தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த நவம்பர் 20 அன்று திருப்பெரும்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

கடந்த நவம்பர் 7-ம் தேதி அன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் 200 பேரை அழைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி, “கம்பெனியின் வளர்ச்சிக்கு நன்றாக உழைத்தீர்கள்; வேறு இடத்தில் நல்ல வேலை கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள்!” என்று வக்கிரமாகக் கூறி வெளியேற்றியிருக்கிறது, நோக்கியா நிர்வாகம். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவரின் வேலையும் பறிக்கப்பட்டதையடுத்து, “தம்மில் யாரேனும் ஒருவருக்காகவாவது வேலையைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று அத்தம்பதிகள் கெஞ்சிய போதும் மனமிரங்க மறுத்து விட்டது, நோக்கியா நிர்வாகம். நரிக்குறவர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர், 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு நோக்கியாவில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். “தனது வருமானத்தை மட்டும நம்பி தமது குடும்பம் இருக்கிறது; வேலை பறிக்கப்பட்டால் தனது குடும்பமும் சேர்ந்து பாதிக்கப்படும்” என்ற இவரது நியாயமான கோரிக்கையும் ஏற்கப்படவில்லை

தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இதனினும் கொடுமை, ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களின் மின்னணு அடையாள அட்டையை, நோக்கியா கம்பெனியின் மின்னணு வருகைப் பதிவேட்டு இயந்திரம் ஏற்க மறுத்து வெளியே தள்ளி விட்டதென்றால், அத்தொழிலாளியின் வேலை பறிக்கப்பட்டுவிட்டது என்று அவராகவே புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அதிகாரியையோ, நிர்வாகிகளையோ சந்தித்து முறையிட கூட அவர்களுக்கு அனுமதியில்லை.

ஒரு நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்கிறது என்றால், என்ன காரணத்திற்காக ஆட்குறைப்பு செய்கிறது என்பதையும் இது தொடர்பாக முறையான முன்னறிவிப்பையும் தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்; அதற்கு முன்னர், இந்த ஆட்குறைப்பிற்கான சட்டபூர்வமான காரணங்களை முன் வைத்து, தொழிலாளர் நல ஆணையரிடம் முன் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்; அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்; ஆனால், இவை எவற்றையும் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல; தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தொழிலாளர்களை மயிருக்குக்கூட சமமாக மதிக்காமலும், வக்கிரமான முறையிலும் கிள்ளுக்கீரைகளைப் போல கடாசி எறிந்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

ஆறாண்டுகளுக்கும் மேலாக, ஓடாக உழைத்த தொழிலாளர்களுக்கு நோக்கியா நிறுவனம் வழங்கியிருக்கும் “வெகுமதி’ இதுதான். தன்னுடன் பணியாற்றிய சக தொழிலாளிகளுள் யார் யாருடைய வேலை பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சக தொழிலாளிகளுக்குக் கூடத் தெரிய வாய்ப்பில்லை என்பது இதன் உச்சக்கட்ட அவலம்.

“நோக்கியா கைபேசிக்கான மார்க்கெட் சரிந்துவிட்டது; உற்பத்தி இல்லை; எனவ, வேலைநீக்கம் செய்கிறாம்.” என்கிறது அந்நிறுவனம். நோக்கியா தயாரிப்பு மொபைல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும், பங்கு சந்தையில் அதன் மதிப்பு குறைந்துள்ளது என்பதும் உண்மைதான் என்ற போதிலும், இதனால் தொழில் நொடித்துப் போக, போட்ட காசு எடுக்க முடியாமல் பின்லாந்து முதலாளி ஒன்றும் பிசசையெடுத்துத் திரியவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும பிரதானமாகக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான வழியில் அவர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி ஆறு ஆண்டுகளில் ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய்களை இலாபமாக மட்டும் ஈட்டியிருக்கிறது, இந்நிறுவனம். அரசின் பல்வேறு சலுகைகளையும், பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிவிலக்காகவும் பெற்றுள்ளதோடு, 1800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்ட கேடி நிறுவனம்தான் நோக்கியா. இவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்திற்கு நல்ல இலாபத்திற்குத்தான் விற்றிருக்கிறது.

“நிலைமை இவ்வாறிருக்க, தமது பொருளுக்கு சந்தையில்லை என்பதையும் மைக்ராசாஃப்ட் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டதையும சாக்காகக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையானது சட்ட விரோதமானது! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களையும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களையும் தற்கொலைக்குத் தள்ளும் நடவடிக்கை இது. தொழிலாளர்களின் குருதியைக் குடித்து கோடிகளாய் குவித்து, கரும்புச் சக்கைகளாய் தொழிலாளர்களை தூக்கி கடாசும் நோக்கியாவின் பயங்கரவாதம்; முதலாளித்துவப் பயங்கரவாதம் இது!” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுர மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

மேலும், இப்பிரச்சினையை தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கமாக கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், “இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூன்டாய்; ஹ்வாசின்; எஸ்.ஜி.எச். உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் பிரசுரங்களை விநியோகித்து, ஆலை வாயில் கூட்டங்களை நடத்தியுள்ளோம். ஹூண்டாய் ஆலைவாயில் கூட்டத்தின் பொழுது, தமது ஆலைவாயிலின் முன்பாக கூட்டம் போடக்கூடாது என மிரட்டினார், ஹூண்டாயின் பாதுகாப்பு அதிகாரி. ‘இது எமது தொழிற்சங்க உரிமை; தொழிலாளர்கள் கூடியிருக்கும் இடங்களில்தான் கூட்டம் நடத்துவோம். உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ! உன்னால் ஆனதைப் பார்’ என்று சவால் விட்டு தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர், எமது தோழர்கள்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 20.11.2013 அன்று மாலை திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சி.வெற்றிவேல் செழியன்; நோக்கியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றும் தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நிறுவனப் பேருந்துகளில் சென்ற தொழிலாளர்களின் கவனத்தை இவ்வார்ப்பாட்டம் ஈர்த்தது.

“ஆயிரம் பேரின் வேலை பறிப்புக்கு எதிரான எமது பிரச்சாரங்களின் பொழுது, நாங்கள் சந்தித்த பல தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்று, யாருக்கோ பாதிப்பு, நமக்கென்ன வந்தது” என்ற கண்ணோட்டத்தில் இருப்பதை உணர முடிந்தது.  ‘வேலைக்கு எடுக்கும் பொழுது, ஒப்பந்த அடிப்படையில்தான் எடுத்தனர். அவர்கள் ஒன்றும் நிரந்தரம் இல்லையே? அவர்கள் வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?’, ‘அவனால் சம்பளம் கொடுக்க முடியல… நட்டம்னு சொல்றான்.. வேறென்ன சார் பண்ண முடியும்?’, ‘நோக்கியா கம்பெனியை மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்கிடுச்சு’,  ‘நோக்கியா கம்பெனி 8-வது படிச்சவன கூட வேலைக்கு வச்சிகிட்டான். மைக்ராசாப்ட், சாப்ட்வேர் கம்பெனி, அவங்களுக்கு, தகுதியில்லாதவங்க தேவையில்லை; அதனால, அவங்கள மட்டும் வெளியேற்றியிருக்காங்க…’ என்று ஏறத்தாழ நோக்கியா கம்பெனிக்கு வக்காலத்து வாங்குவதைப் போலத்தான் தொழிலாளர்களுள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

நிரந்தரத் தொழிலாளி, யாருக்கோ பிரச்சினை என ஒதுங்கிச் செல்வதும்; ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் தன்னையும் வெகு விரைவில் வெளியேற்றி விடுவான் என்ற அச்சம் இருந்த போதிலும், தம் கண்ணெதிரே வேலை பறிக்கப்பட்டு தெருவில் வீசியெறியப்பட்ட சக தொழிலாளியின் உரிமைக்காகப் போராட முன்வரத் தயாராக இல்லை. அது போலத்தான், நோக்கியா தவிர்த்த பிற பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதை நோக்கியாவின் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கின்றனர். நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் எனத் தொழிலாளர்கள் பிரிந்து கிடப்பதும், பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தனித்தனிப் பிரச்சினைகளாகப் பிரித்துப் பார்ப்பதும்தான் தொழிலாளர்களைப் பீடித்துள்ள நோயாக உள்ளது.

இது, ஒப்பந்தத் தொழிலாளியின் பிரச்சினை மட்டுமல்ல; தொழிலாளர்கள் அனைவரின் பிரச்சினை. அந்நிய மூலதனத்தை வரவேற்பது; வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்கிற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி, அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை பணிக்கமர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கி, மலிவான விலையில் தொழிலாளர்களின் மனித வளத்தைப் பயன்படுத்திக் கொண்டும், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தும் நாட்டையே சூறையாடும் அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இவற்றுக்கு அடிப்படை.

நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் என அனைவரின் தலைக்கு மேலும் தொங்கும் கத்தியைப் போல, எந்நேரமும் நம்மை காவு வாங்க காத்திருக்கிறது முதலாளித்துவப் பயங்கரவாதம். நம்மிடைய உள்ள பிரிவினைகளை உடைத்தெறிந்து நாமெல்லாம் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் வர்க்கமாக அணி திரண்டு போராடாமல், நம்மை நடுத்தெருவுக்குத் தள்ளும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும் நாட்டையேச் சூறையாடும் மறுகாலனியாக்கக் கொள்கையையும் எதிர்த்து வீழ்த்தவியலாது!” என்று அறைகூவல் விடுத்து கண்டன உரையாற்றினார், தோழர் சி. வெற்றிவேல் செழியன்.

சி.ஐ.டி.யு.வின் அ.சவுந்திரராஜனை சிறப்புத் தலைவராகக் கொண்ட, நோக்கியா நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் சங்கமான “நோக்கியா (இந்தியா) தொழிலாளர் சங்கம்” ஒப்பந்தத் தொழிலாளர்களின் இப்பிரச்சினை குறித்து இதுவரை வாய்திறக்காத நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி மிரட்டல் மற்றும் போலீசின் பீதியூட்டல்களை எதிர்கொண்டு, இருங்காட்டுக்காட்டை சிப்காட் உள்ளிட்ட சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டுமென்ற அறைகூவலோடு தொழிலாளர்களை அணி திரட்டி வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டல தொழிற்சாலைகள் முன்பு பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

– இளங்கதிர்.

  1. முறையான விசாரணைக்குப்பின், தனிப்பட்ட ஒரு சில தொழிலாளை மீது ஒழுஙகு நடவடிக்கை எடுக்கலாம்! ஒட்டு மொத்தமாக இப்படி ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வது, சமூகநீதிக்கும், கூட்டு பேர உரிமைக்கும் விடப்பட்டும் சவால்! தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

  2. If there is anything legally wrong then let them take action. If the contract workers signed a contract with these terms and conditions, they cannot crib now. Neither can Vinavu…Why did they take up the job in the first place knowing that Nokia can take actions like this anytime? And, businesses are run for profit. They are not here for social service…In the name of “சமூகநீதி”, people perform atrocities…You can make requests to save your job but not dictate. Look at the title: “நோக்கியாவின் பயங்கரவாதம்” … if one wants a permanent job, let them start their own business and also to protect “சமூகநீதி” they can provide permanent emploment to people…

    • Well said சமூகநீதி, People like these doesnt have honest and ethics. The very fundamental policy of these crap communists is anti-private, they hate private companies like hell. They why the heck they desperately want to work there ?? Nokia once was a king of telecom, now they can go bankrupt any time, will these unions will help Nokia to make any good for the company?? These stupids wont work properly, I have seen atrocities of these barbarians, go to BHELL Ranipet, no operator work more than 1 hr a day, managers scared to even ask them this. All because of unions.

      Do unions care about people and the next generation who would need jobs soon??? These unions already chased away investments from Hyundai and ford to gujarat …So how many of our Tamil nadu youngsters lost the opportunity to get a job in TN??? Do unions care about this?? Now all they are trying is to close Nokia and chase them to other state or even other country. Then they will make everyone poor and eventually a Maoist ganag. Go to hell Vinavu

  3. தாழ்த்தப்பட்டவர்கள்.பிற்படுத்தப்பட்டவர்கள் உயர் பதவிக்கு வருவதை பொருத்துக்கொள்ளமுடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் கிளப்பிவிடும் அவதூறுதான் அரசுத்துறையில் தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை என்பது! தனியாருக்கு கான்ட்ராக்ட் விட்டால் கமிசனுடன், பரிவார பினாமி அமைப்புகளுக்கு பணமும் கிடைக்கிறது! தனியார் மயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த அவதூறு பரப்பல்! இந்தபதிவில் சமூகநீதிக்கு எதிராக பதிவு செய்பவர்களை அடையாளம் காண்டு கொள்ளுங்கள்!
    முன்னொரு காலத்தில், அரசுத்துறை வங்கி மற்றும் எல் இ சி யில் அதிக சம்பளத்துடன்(குறைந்த வேலைப்பளுவுடன்?) ஆதிக்கம் செலுத்திய கூட்டம், இந்திராவிற்கு எதிராக நாடே சஸ்தம்பிக்கும் வகையில் வேலை நிருத்தம் செய்தது! அப்போது பிற்படுத்தப்பட்டொருக்கு மத்திய அரசுகோட்டா இல்லை! தாழ்த்தப்பட்டோருக்கான கோட்டாவுக்கு தகுதியானவர்கள் கிடைக்கவுமில்லை!
    ஆனால் இன்று திடீரென அரசுத்துறை கசப்பதென்ன?
    இதே மக்களின் உழைப்பால் ரயில்வே இயஙவில்லையா? பொதுதுறை வங்கிகள் (இவர்களின் ஏராளமான சுரண்டலுக்கு பின்னரும்)செவ்வனே இயஙக வில்லையா? அரசு பேருந்துகளில் இவர்கள் பயணம் செய்வதில்லையா?
    அரசு செலவில் அய் அய் டிக்கள் மட்டும் இனிக்கிறதா? ஆரம்பபள்ளிகள் மட்டும் கசப்பதேன்?
    சாமானியர்களுடன் கலந்து கல்வி கற்க இவர்களின் குழந்தைகளைக்கூட அனுமதிக்கமாட்டார்கள்! தனியார் கல்லூரிகளில்நடக்காத அட்டூழியங்களா!
    இவர்களின் லாபத்துக்காகவே, தொழிலாளர்கள் பிறவி எடுத்திருப்பதாக நம்புகிற இவர்களை என்ன செய்யலாம்? ஒரு தாலியை வாங்கிக்கொண்டு உங்களுக்காக வாழ்க்கையை அர்பணிக்கும் மனைவியைகூட இப்படித்தான் நினைப்பீர்களா? தொழிலாளி முதலாளி உறவு அப்படித்தானிருக்கவேண்டும் ! ஜப்பனிய மனிதவள கோட்ப்பாடுகளை படித்திருக்கிறீர்களல்லவா!

    • //இதே மக்களின் உழைப்பால் ரயில்வே இயஙவில்லையா? பொதுதுறை வங்கிகள் (இவர்களின் ஏராளமான சுரண்டலுக்கு பின்னரும்)செவ்வனே இயஙக வில்லையா? அரசு பேருந்துகளில் இவர்கள் பயணம் செய்வதில்லையா?//
      இதே ரயில்வேயை தனியாரிடம் கொடுத்துப் பாருங்கள்…எவ்வாறு இயங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மனிதனாகப் பிறந்தால் உழைக்க வேண்டும்…உழைப்பது போல் நடிக்கக் கூடாது…அரசுத்துறையில் உள்ள அனைத்து ஜாதியினரும் வாங்குகின்ற காசுக்கு சரியாக உழைப்பதில்லை…இது தான் உண்மை.
      In the post office, the employee is asking what is “Philately”…Why is he in the job? Cant you see the difference between SBI and ICICI? Only after ICICI and Citibanks revolutionised the customer services, SBI changed to some extent. Illenaa enna kedupidi…enna araajagam panninaanga…Now, dont pull out few stray incidents from ICICI if you are planning to respond to this. Understand the crux of my post. Coming to schools, 90% of Government school teachers are useless. Their job is safe even if they dont perform. They are also not sincere. It is a fact that the government employees dont have any accountability, sense of urgency to resolve issues, dedication and passion to the service they provide and most of all no respect for customers. They know they cant be fired…How will you expect good service from them..?

      • அய்யா அரசுத்துறை!நீங்கள் சொல்லும் தனியார் வங்கிகள் பலவற்றின் சேவையையும் பார்த்தவன் நான்! தற்போது ஸ்டேட் பாங்க் சேவையையும் நுகர்ந்து வருகிறேன்! சட்டபூர்வ மான சேவைகளுக்கு அர்சுத்துறை வங்கிகள் நன்றாகவே பணியாற்றுகின்றன! சில தனியாரின் தனிப்பட்ட, சிலநிழலான சேவைகளுக்கு வேண்டுமானால் தனியார் வங்கிகள் வசதியாக இருக்கலாம்! நீங்கள் குறிப்பிட்ட வங்கி உட்பட சில தனியார் வங்கிகள் ரிசெர்வ் பாங்கினால் சமீபத்தில் எச்சரிக்கபட்டவை! சில வருடங்கலுக்கு முன் ஒரு தனியார் வங்கி, முறைகேடுகளால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு, சில காலம் அரசு எடுத்து நடத்தியது! தற்பொது வேறு பெயரில் இயங்குகிறது! உஷார்!

      • They are not stray incidents in ICICI Bank My dear.Whether it is two wheeler loan or housing loan,torture of customers by ICICI Bank are endless.Only thing to be appreciated about ICICI Bank is they spent maximum in their lobbying with the media so that their evil doings are not reported at all.Ask any person who availed two wheeler loan from them.If your post dated cheque is dated 3rd,they will purposely present on 2nd.Naturally,the cheque will bounce.Immediately they will seize the vehicle.So far there are smooth sailing it is ok.If at any time,you want to get some clarification over phone,just dial ICICI bank and tell me your experience.After 3 or 4 days also,you will not be able to talk to the concerned man.I was a public sector bank manager.Once Indus Ind Bank opened a branch near mine.My current account customers shifted their accounts to this bank.Just after 2 months,they came back telling they cannot afford the charges levied by that bank.So is the case with foreign banks like Standard Chartered Bank.Many of my businessmen customers were wooed by this bank.But after 3 months,they were driven out by the bank stating that they will not deal with customers enjoying less than 50 lakhs facilities.Customer service has improved a lot in public sector banks. Before comparing customer service in public sector bank with any private bank,just think about their clientele.Can you open SB Account with just Rs 500 in a private bank?Do you know what is the minimum amount for opening an account with private bank?Have you heard of the term “inclusive banking” and zero balance accounts opened by public sector banks in rural areas?Can you find an ICICI bank branch in a village?Who says there is no accountability?After 37 years service,I can vouch safe that there is strict accountability in these banks.Do you know how many non-education related duties are cast upon Govt school teachers?Livestock survey,Students”tooth decay survey,election duty,census enumeration,caste wise enumeration are some of them.Do you know that there are no clerks in Elementary or Middle Schools and the HM is expected to maintain more than 50 records and provide statistics every morning and evening?He has to visit several govt deptts several times in a month to get free stationery items supplied by govt.Do you know that there are no sweepers in these schools and that the teachers are cleaning not only class rooms but also toilets?Oorukku ilaitthavan pallikooda vaathi yenbathu umakku theriyumaa?With all these duties,only because of their hard work,Chennai(corporation)schools are showing good pass percentage.And remember students from these schools score high marks without any private coaching.

    • Just one question ajaata shatru,

      Are BC/MBC students with caste certificate and with very good marks ready to choose their quota seat instead of general quota seat.

      If not are they ready to give up their caste certificate,the moment they choose to be in general quota.

      So one person studies in General quota seat,then uses caste certificate for IAs exam and promotions.

      How is that correct sir,if u ever had a heart u ll let us know.

      • Arikumaar! Either You have not understood the very basis of ‘Reservation’ system or Simply fooling others! The 200 point Quota Roster system quarantees at educational institutes, at entry to a job and for promotion also! There is nothing wrong where a candidate can study in open Quota in a SC/backward dominated area and get a job under SC/OBC quota for job at relatively competitive town environment! I don’t think you are so dump to understand the weldefined Quota system, Ypu want to mislead and confuse others! Only fools or vested interests will fall prey to you! You are exposing youself with provocative challenge and all , I fully endorse for continuing the Quota system until all sections are represented fairely enough inproportion to their population! I will support all forward caste also get reservation inproportion to their population! Is it not fair?

        • If you noticed something,i clearly didn’t mention SC/ST in this list.

          I dont understand the SC/Backward dominated area,i am not talking about specific cases.now u r trying to avoid my question here.i expected such thillalangadi from you.

          I am asking about a guy studying in a open quota seat in say a good college then proceeding to use caste certificate later.

          I am insisting that if someone doesn’t choose a quota seat in his college days,in engineering counselling at a certain level the seat u ll get in your quota ll generally be better than what u get in general quota but if i am not using my quota,then why should i be allowed later.

          I am talking about quota abusers,people whose dads used quota and now the sons wont study well enough and they want quota.

          This is about them.

          • //I am asking about a guy studying in a open quota seat in say a good college then proceeding to use caste certificate later.// Your ‘thillaalangadi’ is exposed here, Arikumaar! Opting for quota or not is left to the individuals discretion, subject to eligibility! I think you have wrongly interpretting Reservation policy and Act! Quota under reservation rules is the minimum quaranteed proportion for the oppressed classes! Already, courts have accepted and clarified this very clearly , thanks to DK vs State of tamilnadu case during MGR regime! Apart from being protected under Quota, they are allowed to take open seats also! Putting a cap on all reservations as 50% is not correct according to my view! Your acceptance of Quota for SC/ST alone is purely a dividing tactice, I can not subscribe to that! Now a seperate quota for minorities is also emerging , you can not stop that! MINIMUM PROTECTIVE QUARANTEE IS REQUIRED FOR ALL OPRESSED SECTIONS OF SOCIETY!

  4. முதாலித்துவ நீதிக்கு பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே பதில் அளித்தாகிவிட்டது.முதாலித்வ நீதி எதை எதையெல்லாம் செய்ய வல்லது என்பது விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சுருக்கமா சொன்னால் மனிதனனுடன் மனிதனை மோதவிட்டு மகிழ்ச்சி காண்கிறது. ரோம அரசர்கள் அடிமைகளை சிங்கத்துடன் போரிட்டு இறுதியில் சிங்கத்திற்கு உணவாவது போல.. இதில் அரசர்கள் மட்டும் மகிழ்சிக்கடலில் திழைத்திருந்தார்கள் என்று சொல்வதில்ல்லை. இப்படியான நிகழ்வுகளில் பங்கு பற்றி சாதாரண மக்களும் அன்றை தினத்தில் பூரிப்பு அடைந்திருந்தார்கள்.

    ஓர்யிருஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னாலும் இது காட்சிகளை மாற்றி அதே திசையில் தான் தொடர்கிறது. அடிமைத்தனத்திற்கும் அரசனுக்கும் கூலியுழைப்பிற்கும் மூலதனத்திற்கும் உரிய போராட்டமாக காட்சி மாற்றப் பட்டிருக்கிறது.

    அடிமையின் இறப்பில் ஆரவாரப்படுகிறவர்கள் அரசர்கள் மட்டுமல்ல நவநாகரீக கலாச்சாரத்தால் போதை உட்டப்பட்ட சதாரண புல்லுருவிகளும் தான். நவீன தொலைபேசி போக்குவரத்து( ஒருசிலருக்கு மட்டும் உருத்தாக்கப்பட்டது)புதுபுது கண்டு பிடிப்பு சந்திரன் செவ்வாய் பயணங்கள். இப்படி செய்வதெல்லாம் தப்பு என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். இந்த பூமியில் பெரும் பகுதியான மக்களை தமக்கு கிடைக்கக் கூடிய சதாரணவசதிகளை மறுத்து இதை செய்வதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பது தான் எமது குற்றச்சாட்டு.

    நோக்கிய தொழிலாளர்கனின் வேலையிழப்பு கான போராட்டம் அந்த ஆயிரம் தொழிலாளர் பற்றியது மட்டுமல்ல போலிகளை உடைத்தெறிந்து நிஜயத்தை நிறுவுகிற உலகத் தொழிலார்களின் ஐக்கியம் அவர்களின் மாபெரும் சமூக பலம் பற்றியது.

    • //அடிமையின் இறப்பில் ஆரவாரப்படுகிறவர்கள் அரசர்கள் மட்டுமல்ல நவநாகரீக கலாச்சாரத்தால் போதை உட்டப்பட்ட சதாரண புல்லுருவிகளும் தான். நவீன தொலைபேசி போக்குவரத்து( ஒருசிலருக்கு மட்டும் உருத்தாக்கப்பட்டது)புதுபுது கண்டு பிடிப்பு சந்திரன் செவ்வாய் பயணங்கள். இப்படி செய்வதெல்லாம் தப்பு என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். இந்த பூமியில் பெரும் பகுதியான மக்களை தமக்கு கிடைக்கக் கூடிய சதாரணவசதிகளை மறுத்து இதை செய்வதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பது தான் எமது குற்றச்சாட்டு.//

      எல்லோரும் புசித்த பின்னர்தான் எதுவும் கண்டுபிடிக்க பட வேண்டும்.
      மாவோ அவர்கள் அதை வலியுறுத்தும் பொறுத்து உலகில் யாரும் பசியோடு இல்லை என்ற செய்தி அறிந்த் பின்னர் இணையத்தை பயன்படுத்துவாரா?.இணைய பயன்பாட்டிற்கு ஆகும் செலவினை ஏழைகள் பசியாற கொடுத்து உதவு வாரா ?

      //நோக்கிய தொழிலாளர்கனின் வேலையிழப்பு கான போராட்டம் அந்த ஆயிரம் தொழிலாளர் பற்றியது மட்டுமல்ல போலிகளை உடைத்தெறிந்து நிஜயத்தை நிறுவுகிற உலகத் தொழிலார்களின் ஐக்கியம் அவர்களின் மாபெரும் சமூக பலம் பற்றியது.//

      பூமியில் மனிதனாக பிறந்து விட்டால் , அவருக்கு வேலை,உணவு, வீடு,மருத்துவம் ,கல்வி என எல்லாம் கொடுத்துவிட வேண்டும். எல்லாம் அவனது உரிமை.

      மேற்கண்ட ஏதாவது ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம் முத்லாளிகள் தான்.

    • @Sooriyan

      I am also working for contract. Being the sole bread winner,I have been given “Thanks for your hardwork. Due to the situation we cannot extend your contract…” notice twice.

      When I think of it, I was in the exact situation that my contracting company bankrupted and bought by another company . I dint know if the new employer would keep me ..

      However I was given two weeks notice both times and fortunate enough to find another job.

      I know this capitalism will kick me out when it finds cheaper and younder person.I am not good in working 11hrs a day and play the role expected by corporate culture.

      I am planning for such a dooms day without getting into debt. I also wish Govt gurantees job for life ,pension till death…

      When you talk about empathy…
      Nokia not able to survive, it was sold to Microsoft. Now If our contry is capable, we should build our own product and export. which will also create jobs. Since we are not capable of this , we asked nokia to come and help our economy by creating jobs.
      Now Nokia himself is not able to sustain in innovation and lost it to Apple and Samsung.

      Rather then asking why Nokia closes its door, ASK your self why we are not able to grow Apple and Samsung like companies in our own soil? For that matter, you can also ask why there are no russian,chinease or North korean brand companies, creating products and jobs.

      I am seeing practical side. If you are not good in innovation , your civilization will be gone. poof. That is nature.

      Job creation is not easy, Obama pouring trillions of dollors to create jobs.If India wants to create a job it has to fix law and order and harvest innovative minds.

      Just by saying, we should give jobs to poor will acheive nothing.Other than portraying “You see Mr.Sooriyan is a very kind hearted person.”

      How it can be acheived, Why the curent system suppresses creative mind.. kind of questions may provide you some solution.

      If you want to acheive it by pointing gun to Innovative companies, they may obey in short term but in the long term they will leave your country and you may have to find another foreign company to point your gun…

Leave a Reply to Vijay பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க