privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்சிதம்பரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டா சுப்பிரமணிய சாமி கோர்ட்டா?

சிதம்பரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டா சுப்பிரமணிய சாமி கோர்ட்டா?

-

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப் படுத்தியதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்திருந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் சுருக்கத்தை கீழே தருகிறோம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையை இதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

    என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!
என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!

சுப்பிரமணிய சாமி என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனத் தரகனின் ஆட்சிதான் உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைப்பதற்கு தோதாக, அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்களைக் கூட நியமிக்காமல் வழக்கை அநாதையாக விட்டிருக்கின்ற ஜெ அரசின் சதியைப் புரிந்து கொள்ள முடியும்.

சுப்பிரமணிய சாமியுடனும் பாரதிய ஜனதாவுடனும் ஜெயலலிதா அரசு வைத்திருக்கும் கள்ளக்கூட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வழக்கில் நாம் தோற்றால்,

பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலின் பொதுச்சொத்துக்கள் தீட்சிதர்கள் எனும் திருட்டுப் பார்ப்பனக்கும்பலின் சொத்தாக மாறும்.

திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் இனி தேவாரம் பாட முடியாது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து இந்துக் கோயில்களை விடுவித்து தாங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற இந்து முன்னிணியின் கோரிக்கை வெற்றி பெற்றுவிடும்.

டிசம்பர் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை தொடங்குகிறது.

தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!

நூற்றாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகப் போகின்றன!

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிக்கு எதிராகப் போராடுவோம்!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

சிதம்பரம் வழக்கு :
கோயிலை மீண்டும் தீட்சித பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க ஜெயலலிதா அரசு – சுப்பிரமணிய சாமி கூட்டு சதி
நேற்று
(28.11.2013) உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்.

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009-ம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுடன், அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைந்துள்ளார். கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுக சாமி (சிவனடியார்), வி.எம்.சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் கூடுதலாக சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டு(implead)ள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம் கீழ் வருமாறு : 

“பிராமணர்கள் எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம்தான் ஒருவர் பிராமணரா என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான் பிறப்பால் பிராமணர் அல்லாத விசுவாமித்திரர் உள்ளிட்டோர் பிராமணர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். தில்லை தீட்சிதர்கள் சிவன் வழி வந்த பிராமணர்கள். அவர்கள் கன்னட-துளு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்து அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவு 45 என்பது குறிப்பிட்ட வகையறாக்களை சேராதவர்களின் கோயில்களுக்கு (non-denominational temples) மட்டுமே பொருந்தும். பிரிவு 107 denominational கோயில்களில் அறநிலையத் துறை தலையிடுவதை தடை செய்கிறது.

denomination என்றால் என்ன என்பதை அரசியல் சட்டம் விளக்கவில்லை. அதற்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில்தான் உள்ளது. தீட்சிதர்களைப் பொறுத்த வரை அவர்கள் 3000 பேர். அந்த 3000 பேரில் ஒருவர்தான் தில்லை நடராசன். இவர்கள் அனைவரும் கைலாசத்திலிருந்து வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இது தீட்சிதர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, பக்தர்களின் மத நம்பிக்கையும் அதுவே.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள், குறிப்பாக நாத்திக வாதிகளான கருணாநிதி போன்றோரும் பிற திராவிட இயக்கத்தினரும் கோயிலை பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்கள். 1989, 2006, 2008, ஆகிய ஆண்டுகளில் இத்தகைய பிராமண எதிர்ப்பு நாத்திக பிரச்சாரத்தை கருணாநிதி செய்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் இந்த வழக்கில் தலையிடுவது என்ற முடிவு செய்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். அப்போதுதான் புலிகள் ஆதரவாளர்கள் என்னை அங்கே தாக்கினார்கள். ஆனால், தற்போதைய மாநில அரசு அப்படியல்ல. இதனை நட்புரீதியான அரசாகவே நான் பார்க்கிறேன்.”

“தி.மு.க அரசு தீட்சிதர்களுடன் அறநிலையத் துறையும் இணைந்த கூட்டு நிர்வாகம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிர்வாக அதிகாரி நேரடியாக கோயிலை கையகப்படுத்தியுள்ளார். ஆகையினால், தீட்சிதர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே, இந்த அரசாணையே ரத்து செய்யப்பட வேண்டும்.”

“1951-ல் இக்கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்போதைய அரசு ஏற்றுக் கொண்டு தனது வழக்கை திரும்பப் பெற்றிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த முன்தீர்ப்பை கணக்கில் கொள்ளாமல் (resjudicata) தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த அரசாணை தீய உள்நோக்கத்துடன் கருணாநிதி அரசால் கொண்டு வரப்பட்டதாகும்”

என்று கூறி விட்டு, “தமிழக அரசின் வழக்கறிஞர் பேசிய பின்னர். நான் மீண்டும் பேசுகிறேன்” என்று கூறி சுப்பிரமணிய சுவாமி அமர்ந்தார்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களோ தலைமை வழக்குரைஞரோ இந்து அறநிலையத்துறையின் உயர்அதிகாரிகளோ சட்ட அதிகாரிகளோ யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தமிழக அரசின் சார்பில் யோகேஷ் கன்னா என்ற ஒரு இளம் (கீழ்நிலை) வழக்குரைஞர் மட்டுமே வந்திருந்தார். அவர் எதுவும் பேசவில்லை.

ஆறுமுகச் சாமி
சிவனடியார் ஆறுமுகச் சாமி

இந்நிலையில் ஆறுமுக சாமியின் (சிவனடியார்) வழக்குரைஞரான கோவிலன் பூங்குன்றன் தனது தரப்பை முன் வைக்கத் தொடங்கினார். “இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல, இது இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமான பொதுக் கோயில்” என்று 1890-லேயே நீதிபதிகள் முத்துசாமி அய்யர், ஷெஃப்பர்ட் ஆகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை அவர் சுட்டிக் காட்டினார். “இத்தகைய ஒரு பொதுக்கோயிலின் நிதி நிர்வாகத்தில் பல முறைகேடுகளும், நிதிக் கையாடல்களும் நடைபெற்ற காரணத்தினால்தான் இதில் அரசு தலையிட வேண்டிய வந்தது” என்று அதற்கான விவரங்களை அவர் கூற முற்படும் போதே இடை மறித்த நீதிபதிகள், “resjudicata (அதாவது முன்தீர்ப்பு) பற்றி பதில் சொல்லுங்கள்” என்று கேட்டனர். “அதனை பின்னர் விளக்குகிறேன். தற்போது, இதை எடுப்பதற்கான முகாந்திரங்களை விளக்குகிறேன்” என்று தீட்சிதர்களின் நிதிக்கையாடல்கள், நகைக் களவுகள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

உடனே, நீதிபதி பாப்டே, “நீங்கள் யாருடைய வழக்குரைஞர்” என்று கேட்டார். “நான் ஆறுமுகசாமி என்ற சிவனடியாரின் வழக்குரைஞர், தமிழ் பாடி வழிபடுவதற்கு உரிமை மறுக்கப்பட்டு அதற்காக போராடி வெற்றி பெற்றவர் என்னுடைய கட்சிக்காரர்” என்று கூறி விட்டு, தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தார். மீண்டும், குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, “நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்களே, பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கு போயிருக்கிறீர்களா, அங்கே மடியிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் சாமியை பார்க்க விடுவான்” என்று சொல்லி எள்ளலாக சிரித்தார். அடுத்து, நீதிபதி சௌகான் (இரண்டு நீதிபதிகளில் இவர்தான் சீனியர்), “மீண்டும் மீண்டும் நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்கள், உங்களுக்கு தனிப்பட்ட சொத்துத் தகராறு ஏதும் இருக்கிறதா. அந்த கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா” என்று குதர்க்கமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் கேள்வி கேட்டு அவரை பேச விடாமல் தடுத்து விட்டார்.

இதற்குப் பிறகு தமிழக அரசின் வழக்குரைஞரான யோகேஷ் கன்னா பேசத் தொடங்கினார். உயர் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி நிர்வாக முறைகேடுதான் கோயிலை எடுப்பதற்கு காரணம் என்றும் தீட்சிதர்கள் ஒரு தனி வகையறாவா என்பது பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். உடனே, அரசு வழக்குரைஞரிடம் வழக்கை ஒழுங்காக படித்து விட்டு வருமாறு நீதிபதிகள் கூறி விட்டு உணவுக்காக ஒத்தி வைத்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதை ஆதரித்து வாதிடத் தொடங்கினார். அவருடைய வாதத்தின் சாரம் கீழ் வருமாறு :

“தாங்கள் ஒரு தனி வகையறா என்பதை தீட்சிதர்கள்தான் நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு இது வரை அவர்கள் எங்கேயும் நிறுவியதில்லை. கோயிலை தாங்கள் கட்டவில்லை என்றும், மன்னர்கள்தான் கட்டினார்கள் என்றும் தமது மனுவிலேயே தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் அல்ல. இவர்கள் வகையறாவிலும் வர மாட்டார்கள். எனவே, கோயிலை நிர்வாகம் செய்ய இவர்களை அனுமதிக்க முடியாது.”

“தங்களை பரம்பரை அறங்காவலர்கள் என்றும் தீட்சிதர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அறங்காவலர்களாக இருப்பவர்கள் நிர்வாக முறைகேட்டில் ஈடுபட்டால் அதில் தலையிடுவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்பது ஏற்கனவே சட்ட ரீதியாக நிறுவப்பட்ட விஷயம்” என்று கூறினார்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள்
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).

இப்போது நீதிபதி சௌகான் குறுக்கிட்டார். “சுப்பிரமணிய சாமியின் வாதங்களில் நாங்கள் முற்று முழுதாக திருப்தி அடைந்திருக்கிறோம். மற்றவை பற்றி பேச வேண்டாம். resjudicata (முன்தீர்ப்பு) அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்” என்று துருவ் மேத்தாவிடம் நீதிபதி சௌகான் கூறினார்.

துருவ் மேத்தா பேசத் தொடங்குவதற்கு முன்னரே வேகமாக குறுக்கிட்ட சுப்பிரமணிய சாமி, “இந்தக் கேள்விக்கு துருவ் மேத்தா பதில் சொல்லக் கூடாது. அரசாங்கத்தின் வழக்குரைஞர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

உடனே, நீதிபதி அரசு வக்கீலை பதில் சொல்லப் பணித்தார்.

எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நிர்வாக அதிகாரியின் அதிகாரங்கள், அவர் கோயிலில் என்ன செய்கிறார் என்பது பற்றி அவர் ஏதேதோ படித்துக் காட்டத் தொடங்கினார். அவர் படித்த வரிகளில், வங்கிக் கணக்கை கையாள்வது, கால்நடைகளை கையாள்வது போன்றவை தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றன.

உடனே, நீதிபதி சௌகான், “நீங்கள் என்ன எல்லாம் வல்ல அரசா, எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொண்டால், தீட்சிதர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள், நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.

“கோயில் நிர்வாகத்தையே தீட்சிதர்களிடமிருந்து இன்னமும் நாங்கள் எடுக்க முடியவில்லை. அப்புறம் எப்படி சம்பளம் தருவது” என்று பதிலளித்தார் அரசின் வழக்குரைஞர்.

மறுபடியும், நீதிபதி குறுக்கிட்டார், “கோயிலுக்கு உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் வைத்திருக்கிறீர்களாமே. கோயிலுக்குள் உங்களுக்கு என்ன வேலை. முதலில் கோயிலை விட்டு வெளியில் வாருங்கள்.” என்று கூறி விட்டு, “நான் சீக்கிரமே ஓய்வு பெறப் போகிறேன். ஏதாவது செய்து விட்டு ஓய்வு பெற விரும்புகிறேன்” என்று கூறினார் நீதிபதி சௌகான்.

இத்துடன், நேற்றைய வாதங்கள் முடிவுற்றன. வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய்க் கிழமை டிசம்பர் 3-ம் தேதி தொடர இருக்கிறது.

விசாரணை முடிந்த பின் எதிர் தரப்பான தமிழக அரசின் வழக்குரைஞருடைய தோளில் கை போட்ட படியே, சுப்பிரமணிய சாமி வெளியில் வந்தார். “உங்கள் அரசாங்கம் எனக்கு நட்பான அரசாங்கம்தான். கருணாநிதி ஆட்சி என்பதால்தான் நான் இந்த வழக்கில் தலையிட்டேன். நீங்கள் கருணாநிதி போட்ட அரசாணையை வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று யோகேஷ் கன்னாவிடம் பேசியபடியே நடந்து சென்றார் சுப்பிரமணிய சாமி.

  1. பார்ப்பானுக்கு ஆதரவா இரண்டாவது தீர்ப்பு வர இருக்கிறது. எல்லா பெரியாரிஸ்டுகளும் வீட்டுல போய் தூங்குங்கோ.

  2. படிக்க படிக்க இரத்தம் கொதிக்கிறது. நீதிபதி இந்த பிழைப்பு பிழைப்பதற்கு சு.சாமியின் காலை நக்கலாம்.

  3. இன்னமும் பூணூல்களின் திரி எரிந்த நிலையில்தான் உள்ளது:
    அனைப்பது நமது கடமை:
    கொழுந்துவிட்டு எரியும் முன்,அறுத்து எறிவோம்….

  4. \\திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் இனி தேவாரம் பாட முடியாது\\ -ம.க.இ.க. ஆதங்கம். ஸ்ஸ்ஸ்ஸ் முடியல முருகா!

  5. இது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்த சவால் மட்டுமல்ல தமிழர்களின் மானப்பிரச்சனை. ஆனால் இதில் உலகத்தமிழர்கள் ஒன்றுமே செய்ய முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்த விடயத்திலும் ஞே என்று எருமை மாதிரி பார்த்துக் கொண்டிருப்பார்களா அல்லது சாதி, மத, கட்சி, கொள்கை வேறுபாடுகளை விட்டு ஒன்றுபட்டு தமிழர்களின் பாரம்பரிய சொத்தை தமிழர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலுவார்களா என்று பார்ப்போம்.

  6. காலம் காலமாய் உழைத்துச் சாப்பிட வக்கற்றவர்களின் சதி, உழைக்கும் மக்களை பார்ப்பனத்திமிர் இவர்களின்(மன்னராட்சி,அரசு,கோயில்,பஞ்சாயத்து,நீதிமன்றம்) துணையோடு முட்டாளாக்குகிறது. ஏதோ நம்பிக்கையில் மூடத்தனமாக கோவிலுக்கு செல்லும் மக்கள் தான் திருந்தனும்.

  7. நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறதா!!! அல்லது அரசியல் மன்றம் தீர்ப்பு வழங்குகிறதா!!!

    அப்பொழுது தி.மு.க ஆட்சியில் சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. // அது தி.மு.க வினரால் கொண்டு வரவில்லை என்பதும் தெரியும் //

    இப்பொழுது ஆ.தி.மு.க சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லமால் ஆதரவு கொடுக்கிறது. // அது முடியாது என்பதும் தெரியும் //

    இப்படி அரசியல் மன்றமே தீர்ப்பு வழங்கி கொண்டி இருந்தால்
    நீதிமன்றம் எதுக்கு வெறும் கண் துடைப்புக்கு மட்டும் தானா!!!

    இதற்கு மக்கள் கண்டிப்பாக முற்று புள்ளி வைப்பார்கள்.

  8. ஒரு இட்லி கடைக்காக, உயர்னீதிமன்றம் சென்றவர், ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள் உள்ள சிதம்பரம் கோவிலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்! அயொத்தி மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த அனீதி அரசர்கள் போன்று, உச்சநீதிமன்றத்திலும் இருக்கலாம்! சட்டங்களைவிட, சம்பிரதாயமே முக்கியம் என்று புது விளக்கங்கள் வரலாம்! மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்று மேலும் சர்ச்சையை கிளப்பிவிடலாம்! ராமராஜ்யம் அல்லவா வரப்போகிறது!

  9. ” நமது அரசியல் அமைப்புச்சட்டம் மிகவும் வலிமை(?) வாய்ந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதன் மூலம் தான் மக்களின் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ள்ப்படவேண்டும். வன்முறையெல்லாம் கூடாது. வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் ஜனநாயகவிரோதிகள் ” என்று வாய்கிழியப் பேசும் அறிவாளிகள்(?), அரச வன்முறையையும், மக்களுக்காகப் போராடும் புரட்சியாளர்களின் எதிர் வன்முறையையும், சமப்படுத்திப் புரட்சியாளர்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பெடுப்பவர்கள், பலகாலமாக நீதியின் பெயரால் உழைக்கும் மக்களை வல்லுறவு செய்யும் அரசமைப்பு, நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்பவர்களின் மீது மீண்டும் ஒருமுறை காறி உமிழ்ந்திருக்கின்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

    அந்த அறிவாளிகள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். தனிப்பட்ட மனிதர்களின் செயல்களைக் கொண்டு அரசியல் அமைப்புச்சட்டத்தையே குறை கூறக்கூடாது என்று அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் இந்நிகழ்வு முதன்முறை அல்ல. இது போல் ஏராளமான் நிகழ்வுகள் உள்ளன சங்கராச்சாரி விடுதலையை உள்ளிட்டு..

  10. பார்பனர்கள் எப்போதும் எந்த சட்டத்திற்கும் அடங்கியவர்கள் இல்லை! தங்கள் சுயனலத்திற்காக எந்த ராஜாவையும் காட்டி கொடுப்பார்கள்! சோமனாதபுரம் ராஜாவை காட்டிகொடுத்து கஜினியிடம் தங்கள் கொவிலை மட்டும் விட்டுவிடும்படி கேட்டிருக்கிரார்களே! கஜினி வெற்றி கொண்டதும் அவனுக்கு ஓடோடிச்சென்று பூர்ணகும்ப மரியாதை செய்தார்களாம்! அப்படியும் விடாமல் கோவில் கொள்ளையடிக்கபட்டது! திப்புசுல்தான் மற்றும் திருமலைனாயக்கர் வரலாற்றிலும் அப்படித்தானே! ஆதித்த கரிகாலனை அப்பொதே போட்டுதள்ளினார்களே! சங்கரராமனை போட்டுத்தள்ளியது வெகு சாதாரணமானதே!

  11. சு சாமியை வல்லம்படுகை காவல் நிலையத்தில்
    ஏட்டு”அய்யாவிடம்” ஒப்படைத்தால் போதுமானது…
    ராசிவ் காந்தி முதல்,சு.சாமி செய்த எல்லாவற்றையும்
    வாந்தி எடுப்பான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க