Wednesday, October 4, 2023
முகப்புகலைகவிதைஜாக்கிரதை! பெரியவா வர்ரா...

ஜாக்கிரதை! பெரியவா வர்ரா…

-

குருவி ரவி
தில் பாண்டியன்
மாட்டு பாஸ்கர்
காஞ்சி ஜெயேந்திரன்
மூஞ்சி விஜயேந்திரன்…
மொத்தமாய் விடுதலை.

சங்கர்ராமன் கொலை - ஜெயேந்திரன்வாணவேடிக்கை, பட்டாசு
கற்பூர ஆரத்தி, சிறப்பு பூசை…
சுவீட் எடு கொண்டாடு… என
கொண்டாட்டங்களின்
அருவருப்பு தாளாமல்
ஒருக்கழிக்கிறான் வரதராசப் பெருமாள்
கண்ணை மூடிக் கொள்கிறாள்
காஞ்சி காமாட்சி!

நீதியையே உடைத்த பிறகு
எதற்கு தனியாய்
நீதி தேவதைக்கு தேங்காய் உடைத்து?

குற்றங்களை கொண்டாடுவதுதான்
பார்ப்பனப் பண்டிகை!
இதையும் பண்டிகையாக்கி
தைரியமாய் கொண்டாடுங்கள் அம்பிகளே!
மயிர் நீத்தால் உயிர் நீப்பது
கவரி மான்கள்தான்.
பன்றிகளல்ல…
தைரியமாய் நீங்கள் கொண்டாடுங்கள்!

வேண்டாதவனுக்கு
வில்லாய் வளையும் இந்து தர்மம்
பெரியவாளுக்கு
காலில் புல்லாய் வளைந்தது,

சங்கர்ராமனுக்கு தர்ப்பணம்
சங்கராச்சாரிக்கு அர்ப்பணம்
என்னே! இந்து மதத்தின் அற்புதம்!

வெற்றிக் களிப்புக்கு முகம்காட்ட
ராமகோபாலன்,
ஏதோ இழந்தது போல மகிழ்ச்சியை மறைத்து
”இன்னும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
என்று முன்னேறி அடிக்க
முகம் காட்டும் ஆடிட்டர் குருமூர்த்தி,
என்னே! இந்துத்வாவின் பன்முகம்!

அடடா!
இந்து மதத்துக்குத்தான்
என்ன ஒரு சகிப்புத் தன்மை!

கூலிக்கு கொலையன்றி
வேறேதும் அறியாத தில்லும், குருவியும்
ஜாலிக்காக சகலமும் மேயும்
சங்கராச்சாரியோடு தம்மையும் சமமாக்கியதை
சகித்துத்தான் கொள்கிறார்கள்.

இருந்தாலும்
மாட்டு பாஸ்கருக்கு
மனதில் ஒரு நடுக்கம்,
குறைந்தபட்சம் ‘குவார்ட்டர்’ இல்லாமல்
குற்றக் குறி மறைக்கத் தெரியாது
தம்மால்,
எல்லாமும் செய்துவிட்டு
எதுவுமே நடக்காத மாதிரி
முகத்தை காட்டுகிறார்களே அவாள்?!

என்ன இருந்தாலும், சாமி ‘ஃபுல்லுக்கே’ ஒரு சவால்!
பார்த்து நடுங்குது பாவி மனம்.
கேட்டுத் தொலைக்கலாம் எனில்
சாமியோ மவுனவிரதம்!

வாயைத் திறந்து
உளறிக் கொட்டினால்
பிரம்ம ராட்சசியிடமிருந்து
பிடிவாரண்ட் வரும்,
என்ற தேவ ரகசியத்திற்காக
தேவரீர் சமூகம்
‘ஹோம் ஒர்க’ செய்த பூஜா பலன்
கூலிப்படை அறியுமா?
இல்லை,
காவிப்படைக்கு முன்தான்
கூலிப்படை மிஞ்சுமா?

பிறழ்சாட்சிகள்…
நீதியை விலைக்கு வாங்கும்
குரல் சாட்சிகள்…
வழக்கிடையே கொலைக் காட்சிகள்…
அத்தனை யாகத்திலும்
தூள்கிளப்பி… ஆள் கிளப்பி
விடுதலைக்கு நாள் கிளப்பிய
ஜகத்குருவின் ஜகஜால பிரதாபம் பார்த்து
சகல கேடிகளுக்கும்
உடல் வியர்க்குது!
அடப் பாவிகளா?
அவன் வெளியே… நான் உள்ளே
என்ன நீதியடா
என அசாராம் பாபுவுக்கே
ஆவி புழுங்குது!

பிரம்ம ரகசியத்தை
அறியப்போன நசிகேதனின்
தலை சுக்கு நூறானதோ இல்லையோ,
காஞ்சி பிர்லா மாளிகையின்
ரகசியத்தை அறிந்த
சங்கர்ராமனின் தலை
சுக்கு நூறானது!

அவாளின் அகராதிப்படி
செத்தவர்
‘சாட்சாத் பிராமணன்’
இருந்தாலென்ன?
கொன்றவன்
பர பிரம்மமாயிற்றே!

அனுராதா ரமணன் சொன்னாலென்ன
யார் சொன்னாலென்ன
பிரம்மத்திற்கு எதிராக
கேள்வி கேட்டால்
சங்கர்ராமனுக்கு நேர்ந்த கதி
சகலருக்கும் நேரும்…

ஜாக்கிரதை…
அதோ
பெரியவாள் வருகிறார்!
ஜெய! ஜெய! சங்கர!
ஜெயாவுக்கும்… சங்கர!

– துரை.சண்முகம்

  1. சங்கரராமனும் சங்கர மடமும்… ஒரு ப்ளாஷ்பேக்! >>>Tamil.oneindia.in<<<,

    சங்கரராமன்….

    ஒரு செய்தியாளனாக என்னால்(எஸ் ஷங்கர்) மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நானிருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்… ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!
    ஒரு முறை
    வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை
    என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார்.
    ‘குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே’

    என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான ‘படி இட்லி’ – புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

    அக்கிரமம்… கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை…

    அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

    சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.
    அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

    பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

    அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

    ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க – தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் ‘இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு’, என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

    எழுத்தாளர் அனுராதா ரமணன்
    ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

    பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.

    அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். ‘இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க… இதுமேலயும் தப்பு இருக்கு,’ என்றனர்.

    ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆரோக்களாக செயல்பட்டதுதான்.

    இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

    டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்…

    ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார்.

    “ஸாரி சங்கரராமன்… ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,” என்றேன். ‘என்னண்ணா சொல்றேள்…’ என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

    ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்… ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும்.

    கடைசியாக
    2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப்(எஸ் ஷங்கர்) பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

    பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே ‘எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

    அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

    இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

    -எஸ் ஷங்கர்

    SourCe: http://tamil.oneindia.in/news/tamilnadu/a-personal-experience-with-sankarraman-188377.html#

    AUTHOR PROFILE:

    The article is published by S.SANKAR(Shankar is Spl Correspondent in Oneindia Tamil)

    http://tamil.oneindia.in/sitemap/authors/shankar.html

    https://plus.google.com/113406318869319724898/posts

    OtheR Links: http://namathu.blogspot.in/2013/11/blog-post_4798.html

  2. மனு நீதி:
    பூணூல் கொலை செய்தால்,தலை மயிரை சிரைத்தால் போதும்:
    சூத்திரன் கொலை செய்தால்,தலையை(அஜீத்தை அல்ல) கொய்யவேண்டுமாம்…

    • You are giving wrong facts mr. Ramadoss… Manu does not says like that… It acually states this “8.337-338: If one conducts a theft willingly and in full senses knowing the implications, he should be penalized 8 times that of ordinary thief if he is a Shudra. The penalty should be 16 times if he is a Vaishya, 32 times if he is a Kshatriya and 64 times if he is a Brahmin. The punishment can be even 100 times or 128 times if he is a Brahmin. In other words, the punishment should be directly proportional to knowledge and social status of the criminal.”

  3. Sandan! Pl see Manu 8:379(As translated by Ilaiyavilli kousika Ramanujaachaari and verified by V.Vedanthachariyaar of Puduchery, published in1919) Mr.Ramadoss is absolutely correct!

  4. மனு அதர்மம்! )அம்பேத்கர் எழுதாத இ பி கோ, இந்துத்வா பீனல் கோட்! )
    அதியாயம் 8, ஸ்லொகம் 379:பிராமணனுக்கு தலையை முண்டகம் செய்வது கொலைத்தண்டமாகும், மற்ற வருணத்தாருக்கு கொலைதண்டமுண்டு.

    அதியாயம் 8, ஸ்லொகம் 380:பிராமணன் எல்லா பாவம் செய்தாலும், அவனை கொல்லாமல், காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டு துரத்த வேண்டியது.

    அதியாயம் 8, ஸ்லொகம் 310:பிரமஃகத்தியைவிட அதிகமான் பாவம் உலகத்தில் கிடையாது. ஆதலால் பிராமணனை கொல்லவேண்டுன்று அரசன் மனதினாலும்நினைக்க கூடாது.

    இது எப்ப்டி இருக்கு?

  5. இன்னும் உண்டு:அதியாயம் 11-ல் பல்வேறு பிரயச்சித்தங்கள் சொல்லப்பட்டிருக்கிறது! அவையெல்லாம் அறியாமல் (அஞ்னாநத்தல் செய்த பிரஃமகத்திக்கு!

    அதியாயம் 11, ஸ்லொகம் 89: அடத்தினால் வேண்டுமென்றே செய்த பிரமஃகத்திக்கு பிராயச்சித்தமே விதிக்கபடவில்லை!

    மனுதர்ம சாஸ்திரம், தமிழ் மொழி பெயர்ப்பு பெரியார் திடல், திராவிடர் கழகத்தில் கிடைக்கும்!

  6. உண்மை விடயங்கல்ளை சொல்லுவதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.வாழ்த்துக்கள்.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க