Wednesday, October 16, 2024
முகப்புசெய்திசிவனடியார் ஆறுமுகசாமி கைது - படங்கள்

சிவனடியார் ஆறுமுகசாமி கைது – படங்கள்

-

ன்று 2.12.2013 காலையிலிருந்து தில்லைக் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் திருச்சிற்றம்பல மேடையில் போராடி வந்தார்.

ஏராளமான போலிசு கோவிலுக்கு வெளியேயும், உள்ளேயும் குவிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.00 மணிக்கு கோவில் நடையை பூட்ட வேண்டும் என்று தீட்சிதர்கள் அவரை வெளியேற்ற முயன்றதை மறுத்து போராட்டம் தொடர்ந்தது.

அப்படி கோவில் பூட்டப்படவில்லை என்றால் அது ஆகமவிதிக்கு முரணானது என்று போலீசை அழைத்து வந்தார்கள் தீட்சிதர்கள். இறுதியில் மதியம் 2.30 மணி அளவில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு முப்பது பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டக் காட்சிகளின் சில பதிவுகளை இங்கே புகைப்படங்களாக வெளியிட்டிருக்கிறோம்.

கைது படங்கள்

போராட்ட படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

  1. அப்போ இன்னிக்கு 12 மணிக்கு ஆகம விதிப்படி கோயில் நடை சாத்த விடல்லையா.. தேவார பதிகங்கள் ஆகமத்தை வலியுறுத்துபவை.. ஓதுவார் ஆறுமுகசாமி கோவில் நடையை சாத்த விடவில்லை என்பதே சைவர்களையும் பிற ஓதுவார்களையும் அவரிடமிருந்து முற்றிலுமாக விலக்கும்..

    • அப்புடியா ???? அப்போது அவரை ஓதவிடாமல் தடுத்தோரை எவரிடம் இருந்து விலக்கும்??? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் தகும்.

  2. ஆகமவிதிகள் எல்லாம் மற்றவாளுக்குத்தான், அவாளுக்கு ஆகமாவது மண்ணாவது. அவா கோயிலுக்குள் கூத்தடிப்பதெல்லாம் எந்த ஆகம விதிப்படி? அவர் எதற்காகப் போராடுகிறார் என்பது தெரியாதா ஆகமம் தெரிந்த பண்டாரங்களுக்கு? தமிழ் நாட்டுக்குள் இருக்கும் ஒரு கோயிலில், அதுவும் எல்லா மொழிகளும் தெரிந்த கடவுளிடம் தமிழில் பாடுவதற்கு ஏன் உரிமையில்லை என கேட்கத்துப்பில்லை? ஆகமமாம், ஆகமம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க