Saturday, June 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!

தில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!

-

தில்லைக் கோயிலில் இருந்து அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரியை ஜெயலலிதா அரசு திரும்பப் பெற இருப்பதாக, எதிர்தரப்பு வழக்குரைஞர், எமது வழக்குரைஞரிடம் இன்று மாலை டில்லியில் தெரிவித்திருக்கிறார்.

தீட்சிதர் தரப்பு அரசாணையை எதிர்த்து வாதாடவேயில்லை என்பதையும், சுப்பிரமணிய சாமிதான் வாதாடினார் என்பதையும் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம்.

பார்ப்பனக் கூட்டணி
சிதம்பரம் கோயிலில் கை கோர்த்த சு.சாமி, தீட்சிதர்கள், அரசு (2009 புகைப்படம்)

இன்று காலை சிதம்பரம் கோயிலுக்குள் கைது செய்யப்பட்ட ஆறுமுசாமி மற்றும் எமது வழக்குரைஞர்களிடம், “மூத்த வழக்குரைஞரை வைத்து வாதிடுவதாக இல்லை என்பதுதான் மேலிடத்தின் முடிவு” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறினர். நேற்றைய இந்து நாளேட்டில் “அரசாணையை ஜெ அரசு திரும்பப் பெறும்” என்பதை சுப்பிரமணியசாமி சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

அரசே தீட்சிதர்களின் அரசாக இருப்பதால், இதனை எதிர்த்து வாதாட வேண்டிய தேவையே இல்லாமல் கோயிலையும் அதன் சொத்துகளையும் தங்கத் தட்டில் வைத்து தீட்சிதர்களிடம் கொடுக்கிறது ஜெயலலிதா அரசு.

வரவிருக்கும் அபாயத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னரே நாங்கள் அனைவருக்கும் அறிவித்து விட்டோம். பத்திரிகையாளர் சந்திப்பு, சிதம்பரம் போராட்டம், சென்னையில் அரங்கு கூட்டம், தமிழகத்தின் எல்லா மாவட்ட மையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், இன்று காலை தில்லை கோயிலுக்கு உள்ளும், சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும் போராட்டம் என்று கிடைத்த நேரத்திற்குள் சாத்தியமான எல்லா வழிகளிலும் போராடிப் பார்த்து விட்டோம்.

எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அனைவருக்கும் இது தெரியும். எனினும் ஜெயலலிதா அரசின் இந்த நடவடிக்கையை அம்பலமாக்கி கண்டிக்கும் விதத்தில் குறைந்த பட்சம் ஒரு கண்டன அறிக்கை கூட யாரிடமிருந்தும் வரவில்லை. தமிழ் மக்களின் தலைவர்கள் எனப்படுகிறவர்களுடைய யோக்கியதை இப்படி இருக்கும்போது, “தமிழனுக்கு ஒரு ரூபாய் இட்டிலி – தீட்சிதனுக்கு தில்லைப் பெருங்கோயில்” என்று ஜெயலலிதா எடுத்திருக்கும் இந்த முடிவில் வியப்பேதும் இல்லை.

சுப்பிரமணிய சாமி சித்தரிப்பதைப் போல, இது நாத்திகர் கருணாநிதியின் அரசு போட்ட ஆணை அல்ல. “தீட்சிதர்களின் திருட்டுகள், கொள்ளைகளைத் தடுப்பதற்கு இக்கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்ற இந்த அரசாணை 1982-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது.

1982 முதல் 2008 வரை இடைக்காலத் தடை வாங்கி, தீட்சிதர்களால் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த உத்தரவை தேடிக் கண்டுபிடித்து, 2008-2009-ல் விசாரணைக்கு கொண்டு வந்தோம். மிகுந்த ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்து, அசைக்க முடியாத பல வராலாற்று ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வைத்தார்கள் அன்றைய அறநிலையத்துறை அதிகாரிகள். வழக்கில் வெற்றியும் பெற்றோம்.

இப்போது கடிகார முள்ளைத் திருப்பி வைக்கிறது ஜெயலலிதா அரசு. “இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர். இன்று மேலும் பின்னோக்கிப் போகிறோம்.

நாளை, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடரும். “அரசாங்கமே ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகு நீ யார் வாதாடுவதற்கு?” என்று நீதிபதிகள் கேட்கக்கூடும்.

“கனம் நீதிபதி அவர்களே, இது அரசாங்கத்துக்கும் தீட்சிருக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினைஅல்ல. தமிழ் மக்களின் பொதுச் சொத்தை தீட்சிதர்கள் கொள்ளையடிப்பது குறித்த பிரச்சினை. கொள்ளை குறித்த புகாரை அன்று அரசுக்கு கொடுத்தவர்களே சக தீட்சிதர்கள்தான். அந்தப் புகாரை விசாரித்த பின்னர்தான், கொள்ளையைத் தடுப்பதற்கு, 1982-ல் நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசு உத்தரவிட்டது. 1982 முதல் 2008 வரை வழக்கு தூங்கியது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்திலும் தீட்சிதர்களின் கொள்ளை தொடர்ந்தது. நகை திருட்டு, நில மோசடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தீட்சிதர்களின் குற்றங்கள் தொடர்கின்றன. ஆனால் அரசாணை திரும்ப பெறப்படுகிறது. இதற்கென்ன விளக்கம்?” என்று கேள்வி எழுப்புவோம்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு, பன்னாட்டுக் கம்பெனிக்கோ, பார்ப்பனக் கும்பலுக்கோ மக்கள் சொத்தை எழுதி வைக்கும் அதிகாரம் கூடக் கிடையாதா? என்று அரசு தரப்பு கேள்வி எழுப்பலாம். அந்தக் கேள்வியின் பொருள், தீட்சிதர்களின் கொள்ளைக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டது என்பதுதான்.

நாளை உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பார்ப்போம். வழக்கு தொடருமா தொடராதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், நாங்கள் எதிர்த் தரப்பாக போராட்டத்தைத் தொடர்வோம்.

எதிர்த்தரப்பில் இணைந்து கொள்ள உங்களையும் அழைப்போம்.

– மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

 1. இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர்

  “பார்ப்பனர்கள் பஞ்சமகா பாவங்களும் செய்ய தயங்காதவர்கள்” என பேரறிஞர் அஜாதசத்ரு கூறியுள்ளார். மேலும் பார்ப்பனர்கள் கூட இருந்தே குழி பறிப்பவர்கள். எனவே பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பையெல்லாம் ஏற்க முடியாது. அவ்வ்…

   • அந்த வெள்ளைக்கார நீதிபதிக்கு நடராஜர் தான் தெரியுமா, இல்ல முன்குடுமி தான் தெரியுமா. ஐயர் நீட்டின எடத்துல கையெழுத்து போட்டுட்டார். பார்ப்பனர்களின் பஞ்சதந்திரங்களில் ஒன்றான “கூட்டி கொடுத்தல்” செஞ்ச வேலை. ஐயர் கோவிலுக்கு வந்தப்போ, தேங்காயை ஒடச்சிட்டு ரெண்டு மூடியையும் அவர் கிட்டே கொடுத்திருக்கலாம். தீட்ச்சிதர் ஒரு மூடிய லவட்டிட்டார். சட்னி அரைக்கரதுல மாமிக்கு பிரச்சனை. அதுனால ஐயருக்கு காண்டு. பூந்து வெளையாடிட்டார்!!

    தீட்சிதருக்கு ஆதரவா ஐயர் தீர்ப்பு சொல்லியிருந்தா வினவு வாசகர் யாராவது இப்படி எல்லாம் எழுதி இருப்பா. இப்போ நான் எழுதறேன். எல்லாம் கலி காலம்.

    ஸ்ஸப்பா… என்னாலையே முடியல…. 🙂

 2. Venkatesan: Why do you struggle so hard to show Brahmins in poor light? You know in your heart that it is not true. Even now, they are the people who stay away from violence and lust. You may cite exceptions like Devanathan like vinavu does always – magnifying the exception – but such people get ostracised by the community itself. Why do you want to do a character assassination of brahmins in all the responses? The current generation of brahmins are not the perpetrators of any crime nor are the current generation of non-brahmins who were victims. Your constant incorrect references to Manu Neethi is also funny. Neither the brahmins follow them today nor what you have been commenting is correct. So, the idea is clear. Just tarnish them since they wont come to fight. Try doing the same thing to any other jaathi or to Muslims. Are you not afraid..? Why beat a dead animal?

   • A citizen of India has every right to file a PIL and argue the case.

    he has as much rights as you.

    why do you want to mess with tradition?

    why dont u talk about the cartel that nadar retailers make to fix the pricing of goods,that affects the commn man and a farmer much more than being a priest.

    why would i trust someone with protecting the idols worth a lot,is it not enough that dravidian politicians have sucked the ground water and resources dry out of TN,now u want to mess with the temples also.

    • Harikumar,

     I have given few reasons to the question from a person asking why Paarpaans are still hated.

     Your response to my response does not speak about the validity or invalidity of my reasons.

     Instead you say Paarpaans have right to be mean. Let them be mean by all means. But let them be aware that as long as they remain mean they would be hated.

     By the by,

     The PIL they have raised is not in PUBLIC interest but in PAARPAAN interest.

     //why would i trust someone with protecting the idols worth a lot//

     First of all it is not YOUR idols. Then, those idols are worth not more than the metals and art work involved. Paarpaans are already known to have swindled the temple properties and lands.Why should we entrust those properties with Paarpaans only?

     The remaining is off-topic and i choose to ignore it.

     • u assume things on your own imagination and call them my statements.

      you want the real reason they are hated?

      All the landed vellalars were the real powers of TN especially in the delta region,some brahmins very few of them had a lot of land.

      Most were poor and living off working in the temples or rich people’s accountant and such things,when the british introduced english education the first people to take it up were these poor brahmins and some of the rich ones.

      Then when these poor brahmins came back as a revenue official or a collector or a judge with an ICS position,none of the landed vellalrs liked it.

      In Tirunelveli the situation is totally different,we dont have any silly things like that.

      Brahmins owned most of the land and in Kanyakuamri it was the ettuveetil pillaimaar and the Nairs.

      There is much less anti brahminism there compared to the delta.

      Swindled temple properties? Oh Please,u r referring to the temple in triplicane.

      There are laws in India which gives the tenant right of ownership if he has spent x number of years at one place.

      The township of Dharavi is owned by many tamils who were tenants in the first place and now they are owners.

      I find it funny that you noticed this,but u forget the amount of money dravidian politicians have swindled in power.

      There were laws which said the land belongs to the tiller alone,but the only lands which were seized were brahmin lands,i can show u lot of landed vellalars leasing out land to dalit people and keeping it forever,i wish the law and dumbasses like u notice that too.

      • Harikumar,

       At the second round itself, you could not resist name-calling. I expected better from you.

       Anyway,

       Here also you have gone too far off-topic which i choose to ignore.

       Paarpaans’ hold on Indian society is not limited to the areas (geographical, admin, etc) you mention. We can not just limit to few cases ignoring the big ugly picture. It is certain some were poor but many were/are mean.

       //laws in India which gives the tenant right of ownership //

       I did not know temples were rented to paarpaans as their residences.

  • Exceptions? like Devanathan?
   what about killer Jeyanthiran?
   why not talking about Subramanian swamy,who is always against non-bramins?
   Will u Garland Hindu Ram for his adament support to racist srilankan admn?
   BRAMINS HAS NEVER CHANGED THEIR ATTITUDE?
   If u feel Bramins are non violant…yes,it is their COOL strategy

 3. அய்யர்! எஙகாவது காவலாளி பல்லாண்டுகாலம் வெலைபார்த்தேன் அதனால் நானே முதலாளி என்றால் ஒப்புக்கொள்வீர்களா? அது போலத்தான் அர்ச்சகர் வேலை பார்த்தவர்கள் கோவிலே தங்களுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுவதும்! பழங்கால மன்னர்கள் கட்டிய கோவில்கள், மன்னர்களின் அதிகாரங்களை தன்வயமாக்கிக்கொண்ட அரசையே சாரும்! ஆகவே, ஜனனாயக?நாட்டில், பொது ஜனங்களுக்கே சொந்தம்! புதிய எஜமானர்களை அனுசரித்து, தழில் அர்ச்சித்து , அர்ச்சகர்நியமனத்தில் சாதியை ஒழித்து இந்துமதமும், இந்துவும் முன்னேற ஒத்துழையுங்கள்! அல்லேல், விளைவுகளை அனுபவியுங்கள்! சுப்பிரமணி மாமா எப்பொதும் ஜெயிக்க முடியாது!

 4. Custodian is not watchman and if the Kings die and are replaced by Atheists,the custodian has every right to refuse permission.

  Ajaatashatru,U can try whatever u want.

  we ll cleanse the temples off atheist filth including HR & CE.

  • Custodians or Care takers cannot claim the ownership of any property anywhere in the world. They are merely custodians period. Not all the people of the King are atheists now and the vast majority are still ardent Saivite Tamils. Therefore they alone can claim the ownership and not the theedsidhars, the so called custodians of Sithamparam Temple. Besides, the Theedsidhars agree that they came from outside of the Tamil country. Please tell me how on earth the descendants of a bunch of outsiders who came to work in the Temples of Tamils can the claim ownership of a temple built by the Kings and people of Tamil country.

   • When telugu speaking people who arrived in this country much later,pathani urdu speaking muslims and kannada speaking castes can call themselves tamil,when they can build mahals and temples and what not?

    When all this can happen,the dikshitars are easily more tamil than most tamils.

    • Harikumar< we never denied Dikshithar's Tamil token….But, we are always against LOOTING nature in the name of GOD!
     If u visit Chidambaram,u can realise their CHEATING TECHNICS:

   • who is the authority of the saiva tamils,saiva siddhandha mutt or a trust?

    Certainly not the government of tamilnadu.

    so,please.

    how do u know they are outsiders,srilankan tamils are outsiders,dikshitars are not.

    • //srilankan tamils are outsiders,………// Sri lankan Tamils are also hindus and they are connected to the temple from time immmemorial! The contribution of Arumuga navalar, a Srilankan, to saivite cause and to temple in particular, is unquestionable! Only dikshithars are outsiders, because they are only appointed for doing pujaas and not to own the temple!

      • Telugu, Kannada and Urdu speaking people built their own temples, Mosques and ‘what not’ on their own; they did not illegally grab the Temples of Tamils and claim it as theirs.

       They do not back-stab the Tamils and they do not act against the interests of Tamils, above all they do not denigrate the Tamil language like the dickshitars do.

       If those Telugu, Kannada and Urdu Tamils ever say the sacred Tamil hymns cannot be sung inside their temples, or if the Urdu Muslims ban the Tamil language being spoken in their mosques, they will all lose their Tamil identity because the Tamil language is the basis of the Tamil identity.

      • //When all this can happen,the dikshitars are easily more tamil than most tamils.//

       This is debatable because nobody can claim Tamil identity while denying the historic rights of Tamils in their ancestral temple in the land of Tamils. That audacity must be stopped at any cost.

      • //where did arumuga navalar ask to remove agama shastras or sanskrit from temples?//

       He did not ask that because during his period the Dickshitars were not anti-Tamils, they did not denigrate the Tamil language, they were not corrupt and they behaved according to the agamas. If Arumuganavalar was alive today, he would have replaced Sivanadiyar Arumugasamy . As an Eelam Tamil he would be furious to hear that Tamil Thevarams are being denied its place in front of Lord Aaadavallan who gave us the sacred Tamil language.

    • //how do u know they are outsiders,srilankan tamils are outsiders,dikshitars are not.//

     Not just the Sri Lankan Tamils but every Tamil around the globe is the heir and successors of the glorious past of Tamils. The Sri Lankan Tamils are also the proud inheritors of our ancestral temples in Tamil Nadu. Nobody can take away that god given right all because the treacherous British created an artificial country called India. Our blood boils when we hear the people who came to the Tamil country to eke out a living are claiming our ancestral temples as their own. That alone shows our right is in our blood.

     I think The Tamil Nadu Tamils must be slapped by their own slippers because they allow people like dickshitars and their supporters like you to have this much nerve. 🙂

 5. எப்பொழுதிலிருந்து அவர்கள் ‘கஸ்டொடியன்’ ஆனார்கள்? பிச்சாவரம் ஜமீன்நொடித்து போனதால், தனனிச்சையாக கோவில் எங்களுடயது என்றும்,நடராஜருடன் ஆயிரம் பேர்நேராக சொர்க்கத்திலிருந்து வந்ததாகவும் கதையை பரப்பி விட்டனர்! சென்னை ராஜதானியில் உயர்னீதிமன்றம் மிகத்தெளிவாக இவர்களது முகத்திரையை கிழித்தும், பின்னர் ஆர் வீ பார்ப்பனர் ஜனாதிபதியானதும் டெல்லிக்கு ஓடி இடைக்கால ஒப்பந்தம் செய்துகொண்டனர்! அதன்படி இவர்கள் தர்மகர்த்தா பொருப்பை வகித்தாலும், முறைகேடுகள் அம்பலமாகி அ தி மு க ஆட்சியில், கோவில் தமிழக அரசு எடுத்துகொள்ள அறநிலயத்துறை ஆணை பிறப்பித்தது! இது செல்லத்தக்கதே என்று சென்னை உயர்னீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், உச்சனீதிமன்றம் சென்று, காலம் கனியும்வரை, அதாவது பார்ப்பன மதவாத சூழ்னிலையை பயன்படுத்தி உச்சனீதிமன்றத்தில், அயொத்தி தனமான தீர்ப்பைபெற முயற்சிக்கின்றனர்!

   • I have seen gold flowers atop of the kalasams of sitrambala medai stolen in sixtees and also seen gold and siver coverings of many vahanams are stolen periodically!There was a dispute among dixithars regarding accountal of temple gold, the information is given by one of the dixithar at that time!

    Offlate , they gave misleading figures to HR&CE and the court about the real income of the temple; upon taken over by government , the income accounted was multifold! Is it not enough evidence, something was fishy with the adminstration of Dixithars?

 6. //ஆயிரம் பேர்நேராக சொர்க்கத்திலிருந்து வந்ததாகவும்…// மூவாயிரம்பேர் என்று திருத்தி வாசிக்கவும்! நன்றி!

 7. மிகவும் மோசமான பின்னடைவுக் காலம் நம்மைத் துரத்துகிறது. இப்போது தீட்சிதர்கள் வெற்றி பெறக்கூடும், ஆனால் அதற்குப் பொறுப்பு “தமிழ் நெய்யிலும் தமிழர் காசிலும் வயிறு வளர்த்த” தமிழ் சைவ மடங்களும், முக்கியமாக தமிழினவாதிகளும் தான். இது தான் உண்மையான பின்னடைவு. இந்த தமிழின உணர்வை வைத்துப் பிழைக்கும் ஒருவன் கூடவா சோற்றில் உப்புச்சத்துச் சேர்ப்பதில்லை? பெரியாரின் மரபுக்குக் கிடைத்த பேரிடியாக இது இருக்கும், இந்தத் தோல்விக்குக் காரணம் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் கேடுகெட்ட நாய்களும் தந்திர நரிகளும்தானென்று நாளைய வரலாறு காரி உமிழும். அதே வரலாறு பார்ப்பனிய எதிர்ப்பு மரபின், பெரியாரின் உண்மை வாரிசுகளாகப் போராடியவர்கள் புரச்சிகர அமைப்புகள் என்பதை உரக்கச் சொல்லும்.
  மானமற்றவர்கள் தமிழ்மக்களின் தலைவர்கள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்டு பெரியாரின் மானமுள்ள மண்ணில் மிடுக்குடன் வளம்வருவதுதான் நெஞ்சைப் பிளக்கும் பேரவலம்.
  மக்கள் இந்த தீட்சிதர்கலைப் புறக்கணிப்பதுதான், புறக்கணிக்க வைப்பதுதான் நம்முன் உள்ள உடனடியான வேலை! பெரியார்தாசன் முன்பு சொன்னதைப் போல, “கோயிலுக்குப் போய் நடராசனைப் பாருங்கள், ஆனால் அந்தத் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு ஒரு பைசாக்கூட காசுகொடுக்காதீர்கள்”!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க