Wednesday, February 8, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பொது தீட்சிதர்களா, பொதுக் கோவிலா ?

பொது தீட்சிதர்களா, பொதுக் கோவிலா ?

-

பக்தர்களே சிந்தியுங்கள்!

சிவனடியார் ஆறுமுகசாமி
தொண்ணூறு வயதில் போராடும் சிவனடியார் ஆறுமுகசாமி.

தொண்ணூறு வயது… தள்ளாத முதுமை… ஆனால் தன்மான மனது, சுயமரியாதை உணர்வை தள்ளாத உறுதியுடன் கொட்டும் மழையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழ் மக்களின் குறிப்பாக பக்தர்களின் உரிமையை நிலைநாட்ட தில்லையம்பலத்திலே ”தேவாரம் பாடியே உயிர்துறப்பேன், கோயில் மக்களின் பொதுச்சொத்து!” எனப் போராடும் காட்சி, வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! தமிழ்ச் சுவடிகளையே அழித்து, பெற வந்த சோழனையே எதிர்த்து, தொழ வந்த நந்தனையே எரித்து வெறியாடும் தீட்சிதர்களின் குகைக்குள் நுழைந்து கோயிலின் பொது உரிமைக்காகப் போராடுவது என்பது சாதாரண விசயமல்ல. தமிழுக்கும், சைவத்திற்காகவும் ‘மடம்’ வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் தொந்திகளும் முன் வராத நிலையில், தமிழுக்காகவே உயிர் வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் ‘தலைகளும்’ சுரணையற்ற நிலையில் ”சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுச்சொத்து, தீட்சிதர்களின் கொள்ளைக்கு அரசே துணை போகாதே!” என ஆறுமுகச்சாமி எழுப்பும் உரிமைக் குரல் பக்தர்களுக்கு அப்பாற்பட்ட விசயமா என்ன?

கோயிலை அரசு நிர்வாகம் செய்ய போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்காத பக்தர்கள் உண்டா? அரசு நிர்வாகம் ஏற்ற குறுகிய காலத்திலேயே உண்டியல் வசூலின் லட்சங்களும், முறையான தரிசனம், விழாக்களும் கொள்ளைக் கூடாரத்தின் இருட்டை விலக்கி வெளிப் பிரகார வெளிச்சங்களும்… இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் பெற்று வந்த பலனை, தனி ஒரு தீட்சிதர் கும்பலுக்கு தர வேண்டிய அவசியமென்ன?

சிவனடியாரும், அவரோடு சேர்ந்து போராடுபவர்களும் முன் வைக்கும் கோரிக்கை என்ன? கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கேட்டார்களா? இல்லையே! இல்லை கோயில் தொடர்பான பூஜை, நைவேத்யங்கள், நடராச தரிசனங்களை நாங்கள் மட்டும்தான் செய்வோம் என்று வம்புக்கு வந்தார்களா? இல்லையே! அவர்கள் முன் வைப்பது கோடிகளில் புரளும் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு அரசு அமைப்பிடம் மேற்பார்வையிடச் செய்வது, கோயில் நகைகள் உட்பட வரவு செலவு கணக்கை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த அதிகாரிகளை நியமிப்பது என்ற ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளைத்தானே முன் வைக்கிறார்கள், இது பக்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாம்தானே! இதற்கு தீட்சிதர்கள் ஏன் முரண்டு பிடிக்கவேண்டும்! நெடுநாள் கோயில் பணி செய்வதாலேயே கோயில் எனக்குத்தான் சொந்தம் என்றால்? இந்த நியாயத்தை எல்லா இடத்துக்கும் பொருத்த ‘அவாள்’ தயாரா? சட்டப்படியும், ஆதாரப்படியும் உரிமையில்லாத ஒரு கோயிலை தங்களது ‘தனிச்சொத்து’ என்று தீட்சிதர்கள் வாது செய்வதை நியாய உணர்வுள்ள எந்த பக்தனும் ஏற்க முடியுமா?

நெடுநாள் ஒரு காலை உயர்த்திக் காட்டி கால் கொலுசு களவாடப்பட்டதை அம்பலவாணன் குறிப்பாக அம்பலப்படுத்திக் காட்டியும், மது, மாமிசம், மர்டர் என தீட்சித லீலைகள் ‘காவல்’ புராணத்தில் பதிவான நிலையிலும்… கேட்பதற்கே நாதியற்ற நிலையில் கோயிலின் ‘இறைப் புனிதத்தையும்’ நிலைநாட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகச்சாமியும் வாராது வந்தது பக்தர்களுக்கு அந்த நடராசனே தந்த வரமல்லவா? அரசிடம் போனால் கோயில் அவ்வளவுதான் என்று புரளி கிளம்பிய தீட்சிதர்களின் குரலில் குழப்பமடைந்த பக்தர்களே… இந்த இடைப்பட்ட காலத்தில் முன்னை விட கோயிலின் தரிசனங்களும், விழா விமர்சைகளும், கோயில் பராமரிப்பும் நீங்கள் கண்ணாரக் கண்ட போராட்ட தரிசனங்கள் அல்லவா!

தீட்சிதர்கள்
போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை.

போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை, இல்லை இவ்வளவு நாள் பக்தர்களின் நிதியை கொள்ளையடித்து, கோயிலுக்கு ஒரு வெள்ளை கூட அடிக்காத ‘அவாளை’ விரட்டிடவுமில்லை, இப்படியிருக்க, கோயில் அரசு நிர்வாகத்திற்குப் போனால் பூலோகமே இருண்டு விடும் என்பது போல் தீட்சிதர்கள் அலறுவதும், அதை நாம் நம்பும்படி அவர்கள் பிரச்சாரம் செய்வதும் எவ்வளவு பொய் என்பதை உணரமுடியாத அளவுக்கு பக்தர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! இறைவன் தாள் பணிவதுதான் பக்தி உணர்வு, திருட்டு தீட்சிதனின் காலில் விழ வேண்டிய அவசியம் பக்தர்களுக்கில்லை!

யோசித்துப் பாருங்கள், இறைப் பணியாளர்களாய் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தீட்சிதர்களின் கவனம் இறைவனின் அருள் வேண்டி நிற்கிறதா? ஏக்கரா கணக்கில் உள்ள கோயிலின் பொருள் வேண்டி நிற்கிறதா? பூஜை பண்ண எனக்கு இன்னும் பூ கொடு, நெய் கொடு, ஆலயத்தை சுத்தப்படுத்து, குளத்தை தூர்வாரு, கொடி மரத்துக்கு தகடு சுற்று, வரும் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடு, கட்டணம் இல்லாத தரிசனம் கொடு என்றெல்லாம் தீட்சிதர்கள் வாயிலிருந்து ஒரு நாளும் ஒரு வார்த்தை உண்டா? இப்படி கோயில் நலன் சார்ந்து ‘அவாள்’ குரல் கொடுத்தால், அடடா! பக்தி பரவசம் என்று தீட்சிதர்களை நாமும் கொண்டாடலாம், இதையெல்லாம் பற்றி குடுமிக்கும் கவலைப்படாமல், கோயிலை எங்களுக்கு சொத்தாக்கு, நகைகளை நாங்களே வைத்திருப்போம், தேவாரம் பாடக்கூடாது, உண்டியல் கூடாது… என்று பொருள் நோக்கிலேயே குதியாட்டம் போடுபவர்கள் குருக்களா இல்லை கொள்ளைக் கும்பலா? பக்தர்களே அர்ச்சனை தட்டை அவாளிடம் கொடுத்ததோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கண்ணை மூடிக்கொள்ளாமல், சன்னதியில் நடக்கும் விவகாரங்களை கொஞ்சம் கண்னைத் திறந்து பாருங்கள்! போராடுபவர்களின் குரல் பக்தர்களின் நலனுக்கானது என்ற உண்மை தரிசனமாகும்.

விருதகிரீஸ்வரர் கோயில்
விருத்தாசலத்தில் விருதகிரீஸ்வரர் கோவிலில் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம் (2012-ம் ஆண்டு)

பக்தர்கள் கேள்வி கேட்க கூடாதென்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை! நக்கீரரை கேள்வி கேட்க வைத்து, அஞ்சாமல் உண்மை பேசிய அவருக்கு அருள் கொடுத்தவர்தான் சிவன், பக்தனுக்கு பகுத்தறிவு தப்பு என்றும் எந்தக் கடவுளும் சொன்னதில்லை. பஸ்சுக்கும், செலவுக்கும் காசை வைத்துக்கொண்டு உள்ள நிலைமைக்கு ஏற்ற மாதிரி உண்டியலில் காசு போடும் பகுத்தறிபவர்கள்தான் பக்தர்களும். கும்பிட நமக்கொரு கோயில் வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பாய் இருக்க முடியுமே ஒழிய, அந்தக் கோயிலை தீட்சிதனுக்கு சொந்தமாக்க வேண்டும் என்பது எந்த பக்தனின் வேண்டுதலுமல்ல! பக்தர்களே உங்கள் மவுனத்தை தீட்சிதர்கள் தங்களுக்குச் சாதகமாக்க அனுமதிக்காமல், பொதுக்கோயில் உரிமைக்காக உங்கள் பக்திக்கடனை வெளிப்படுத்துங்கள்! தீட்சிதர்களின் அநீதிகளுக்கு எதிராக பக்தர்களிடம் நியாயம் கேட்டு போராடுபவர் இன்றைய சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமல்ல, அன்றைக்கு வடலூர் ராமலிங்க அடிகளார் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முறைகேடுகளையும், அநீதிகளையும் தட்டிக்கேட்டு இவர்கள் தகாத கும்பல் என்று எட்டிச் சென்றவர்தான். இந்த வரலாற்றின் வரிசையில் பக்தர்களே தீட்சிதர்களின் அக்கிரமங்களுக்கு எதிராக உங்கள் காணிக்கையாக போராட்ட உணர்வை தாருங்கள்! குருக்களுக்கே கோயில் சொந்தம் என்று தீட்சிதர்கள் சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப அநியாயம் என்று ஆர்த்தெழவேண்டாமா?

பல்லாயிரம் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பிய கோயிலை, தமிழக உழைக்கும் மக்களின் பணத்தாலும், அரிசி, பருப்பாலும் நைவேத்திய மணம் கமழும் தமிழகத்தின் கோயிலில், தமிழுக்கும், தமிழனுக்கும் தீண்டாமை என்ற கொடுங் குற்றம் மட்டுமன்றி, தமிழக மக்களின் பாரம்பரிய சொத்தான கோயிலை, பிட்சைக்கு வந்த தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக்குவது என்ன நியாயம்? ஓமம் வளர்க்க வீட்டுக்குள் நுழைந்தவன் ஒட்டு மொத்த சொத்தையும் எழுதிக் கேட்டால் எந்த பக்தனும் எழுதித் தருவானா? நாம் பக்தர்களாக இருக்கலாம், அது தனிப்பட்ட விவகாரம், அதற்காக தீட்சினுக்கு அடிமையாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை!

போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

– துரை.சண்முகம்

 1. போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

 2. பொது தீக்ஷிதர்கள் அர்ச்சகர் மட்டுமே! கோவில் எந்த காலத்திலும் அவர்களின் சொத்து அல்ல! பொது மக்களின் சொத்துதான்! தமிழ்னாட்டில் எந்த கோவிலுக்கும் இது பொருந்தும்!

  • அவசரப்படாதீர்கள் ராஜா! மொட்டையடித்துக்கொள்ளவும், காது குத்திகொள்ளவும், ஊர்கூடி? பொங்கல் வைத்து திருவிழா கூத்தாடவும் நமக்கு கோவில் என்று ஒரு பொதுமடம் தேவை! அதில் மந்திர தந்திர வித்தைகள் காட்டி நமது பாமர மக்களுக்கு சொர்க்கத்தை ஊறுதி செய்ய பூசாரிகளும் தேவை! ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியானதும் அவர்கள் ஆடும் ஆட்டத்தைதான் சகிக்க முடியவில்லை! இவர்களின் பிழைப்புக்காக ஏற்படுத்திய கடவுள் மனித இனத்துக்கு தேவையா என்று ஆராயவேண்டியுள்ளது! ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்; சாதி பலவானால் பார்ப்பனுக்கே கொண்டாட்டம்! வேறு யாருக்கும் லாபமில்லை!

   • இதை நான் சொன்னால் தேவாரனாயனார் காதில் விழுவதில்லை

 3. தமிழில் பாடும்போது நடராசன் காதைத் திருப்பி வேறு பக்கம்
  வைக்கவில்லை”தீட்சதன் கள் ஏன் தமிழில் பாடுவதை
  எதிர்க்கவேண்டும்?

 4. Every class people have their own aim for fighting for the temple rights.

  [1] Bramins want to dominate the property’s of Temple through their meaning less vadas

  [2] Vellan people who are land lords in tamil nadu want to dominate the temple property so they are promoting [drug-abbin ] like Tamil davaram inside the temple and make common people to forget about their real problems

  [3] Working class people [communist] are fighting for temple rights to convert them in to schools for kids

  Hello public you decide which is good for socity!!!!

  • தேவாரம் தமிழர்களின் வேதம். அதனால் தமிழர்களின் கோயில்களில் தமிழ்வேதங்களாகிய தேவாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தேவாரம் வெள்ளாளருக்கு மட்டும் சொந்தமானதல்ல. தமிழ்ச்சைவத்தின் அடிப்படையே அறுபத்து மூன்று நாயன்மார்கள் தான், அதில் எல்லா சாதியினரும் அடங்குவர். புலையரும், மீனவரும், வேடரும், அரசரும், அந்தணரும், வேளாளரும் யாவரும் உண்டு. அவர்கள் யாவரும் சமமானவர்கள் அவர்களிடம் ஏற்றத் தாழ்வு கிடையாது என்பதைக் காட்டத் தான் சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளையும் ஒரே பீடத்தில் வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் சமக்கிருத வேதங்களை விட தமிழ்நாட்டில் தேவாரங்கள் பாடுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடபடுவது தமிழர்களின் மானப் பிரச்சனை. இதில் யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. கம்யூனிசம் பேசிக்கொண்டே தமிழரக்ளைச் சாதியடிப்படையில் பிளவு படுத்தும் குமரனிஸ்டாக்கள் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

   • [1]Who is the real owner of this Temples?

    Bramins? No
    Vellala land lords? No No
    Working class people? Yes yes yes

    [2]For my working class people ,we do not want Ditch-vethas or Drug[abin]-Devram but we need schools for kids.

    [3]When u and bramin have the rights for fighting for Devram or vetha, Why should not we–working class fight for converting temples into schools?

    [4]If my policy of converting temples into schools will divide the Tamil then I will be happy.
    The reason is then only Tamil people will have clear classification about them self as Working class ,capitalist and landlard

    [5] If u r not accepting the use of temples into school then how can u allow working class people to improve themselves?

    [6] Anyway people like u unacept

    • பெரிய,பெரிய கோவில்களை
     பள்ளிகளாக மாற்றலாம்-தவறில்லை:
     சேர,சோழ,பாண்டியனின் வம்சம் என்மிது சூடு வைக்கும்:பரவாயில்லை!

     • //சேர,சோழ,பாண்டியனின் வம்சம் என்மிது சூடு வைக்கும்:பரவாயில்லை!// சரி அடிச்சுட்டு பொங்கடான்னு விட்டுட்டேன்/ஏன் மொதலாளி நீங்க திருப்பி அடிக்கல/இல்ல/ஏன்/அடிக்கிறப்ப ஒருத்தன் சொன்னான் இவந் எவ்வளவு அடிச்சாலும் தாங்ரான் ரொம்ப நல்லவன் ஒரு வார்த்த சொல்லிபுட்டாம்மா நானும் எவ்வளவு நேரந்தான் வழிக்காத மாரியே நடிக்கிறது.

      • காவடி தூக்குபவர்கள் தானாகவே பழக்கத்தை விடவேண்டும்…
       மகனும் ஆரம்பித்துவிடுவான்..பேரனும் “பெரிய காவடி” தூக்குவான்

       • அண்ணே, உங்க நலன் கருதி 3வது முறையா சொல்றேன் நல்ல டாக்டர போயி உடனே பாருங்க!

        • நல்லது தேவரா நாயனார்: தொடர்ந்தும் ஒரு மனிதன்
         முட்டாள்தனமான,மத சம்பிரதாயங்களை கடைப் பிடிப்பது
         சிலருக்கு “தேவார்(மிதம்”):
         டாக்டரைப் பார்க்கவேண்டியது யார்?
         நீங்கள் இருக்கும் ஊரில் கூட மனநல வைத்தியர்கள் இருக்கக்கூடும்…
         முயற்சி செய்யுங்கள்

         • நான் பொதுவா டாக்டர பாக்க சொன்னதுக்கு மனநல டாக்டர்தான்னு கண்டுபிடிச்சிங்க பாருங்க,அங்கதான் உங்க அனுபவம் கைகொடுக்குது.

          • உங்களுக்கு மன நல டாகடர்தான் நல்ல சிகிச்சை
           அளிக்க முடியும்:போகும்போது,தோல் டாக்டர்
           கிலினிக்கில் ஜெயேந்திரன் இருப்பார்:
           வாழ்த்து சொல்லி,விபூதி பிரசாதம் வாங்குங்க:
           வீட்டுல எல்லாருக்கும் பூசி விடுங்க: அடுத்த தலைமுறை
           அமோகமாக “அறிவுக் கொழுந்தா” இருக்கும்!

   • Hello VIYSA,

    [1] If our Tamil society is supporting the cast system them I do not want this identity of being a Tamilan any more.Instead of Thinking myself as a Tamilan I will think and act myself as a Communist.

    [2] If my language and my race is against even its own people by suppressing them based on cast system then what is the hell reason for belonging to that race.?

    [3]If this temple struggle is not giving any gain for my working class people then what is the hell reason for me to support this temple struggle?

    [In real scenario the communist people are fighting for the convention of temple administration form private parpana people to government. So it is a progressive action in favor of Tamil people]

    [4] By promoting the singing of Devaram inside the temple you are trying to replace the meaning less vetha’s to drug-abbin like devarams. By singing these vetha’s or devarams what is the use of Tamil people?

    [5] If i am asking these logical questions then with out answering my questions you start blaming me as a Parpanan and cast dividing person!

    //கம்யூனிசம் பேசிக்கொண்டே தமிழரக்ளைச் சாதியடிப்படையில் பிளவு படுத்தும் குமரனிஸ்டாக்கள் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//

 5. Dear vinavu,

  I need not explain the Temple issue is not a separate issue!!! You know clearly that it is related with the Land lord system and Bramin and vellala people are dominating in Tamil Nadu inside the Temple.

  So Bramin promote their custom of vetha in side the temple
  So Vellala people promote their culture of Davarm in side the temple
  AS I am member of a working class I like to promote my idea of converting temples into schools for kids.[Bast on communist cultural revolution program]

  Whats wrong in my point of view?

  Yours sincerely,
  K.Senthil kumaran

 6. Hello sir துரை.சண்முகம்,

  Your essays are very informative and enthusiastic than your poems.

  pls write more essays related to temple issue

  yours friendly,
  k.senhil kumaran

 7. பெரியாரின் வேண்டுகோள் (பக்தர்களுக்கு);

  ” கடவுள் என்பது என்ன? அது எதற்காக வேண்டும் என்பதாக ஆராய்ந்து பாருங்கள். குருட்டு நம்பிக்கையால் கடவுளுக்கென்று பணத்தை செலவு செய்து பாழ்படுத்துகின்றோம்!

  கிறிஸ்துவர்களும், மகமதியர்களும் சாமி கும்பிடுவதில்லையா? அவர்கள் கடவுளுக்காக என்ன செலவு செய்கிறார்கள்?

  நாம் சுவாமிக்காக உற்சவமும், பொங்களும், பூசையும் செய்ய வேண்டும்.மேலும் இவைகளை சாமிக்கு எடுத்துச் செல்லவும் ஊட்டவும் தரகர்களை வேறு ஏற்படுத்துகிறோம். இதனால் நமது பணம் வீணாகிறது. அறிவு மோசமாகிறது.

  கடவுள் நமக்கு அவசியந்தான். ஆனால் எந்த விஷயத்தில்? நாம் தப்பிதம் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார் என்ற முறையில் கடவுளை வைத்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

  ஆனால் கும்பிடுவதற்கும், பூசை செய்வதற்கும், தேரில் வைத்து உற்சவம் செய்வதற்கும், தேவடியாள்களை விட்டு நடனம் செய்வதற்கும், பொங்கல், புளியோதரை சாப்பிடுவதற்கும், கடவுளை உபயோகப்படுத்துவதென்றால் அப்படிப்பட்ட கடவுள் இருக்கக் கூடாது.

  ஏனென்றால் ஒரு பாபம் செய்த பிறகு சாமிக்கு அர்ச்சனையும், பூசையும் செய்தால் பாபம் போய்விடும் என்ற எண்ணத்தை மக்களிடையே கடவுள் ஏற்படுத்துவாரேயானால் பாபம் அதிகரித்து சாமிக்கு லஞ்சம் கொடுத்து பாபத்தை போக்கி தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற அபிப்பிராயத்தில் மக்கள் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

  அதனால் மக்களின் ஒழுக்கம் கெடுவதற்கு கடவுள் அநுகூலமாயிருக்கின்றது.மக்கள் குற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கடவுளின் கடமை. அப்படி குற்றம் செய்துவிட்ட பிறகு லஞ்சம் வாங்கிக் கொண்டு மன்னிக்கலாம் என்ற கடவுளை ஒழிக்க வேண்டியது தான். கடவுளை வணங்குவதற்கு தேங்காய், பழம், சூடம், பொங்கல் இவைகளெல்லாம் எதற்காக வேண்டும்?நீங்கள் கடவுளிடத்தில் அன்பு பூண்டிருப்பதாக அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவருக்கு இதெல்லாம் எதற்காக?

  முன்காலத்தில் கிராமங்களில் பயிர் நன்றாக விளைந்தது. அதை ஊர்கட்கு அனுப்பாமல் அந்த கிராமத்து தொழிலாளர்கட்கு கொடுத்து சும்மா இருக்கவிடாமல் கோயில்களைக் கட்டினார்கள். ஆனால் இப்போது அக்கடவுளுக்கு எதற்காக செலவு செய்ய வேண்டும்?

  சாமிக்காக செலவிடப்படும் பொருளை படிப்பு விஷயத்திற்காகவும் ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்காகவும் உபயோகிங்கள். கோயில் கோயில் ரூ.50.000 ஆயிரம் போட்டு கட்டாவிட்டால் சாமி இந்த உலகத்தில் சாமீந்த உலகத்தில் இருக்காதா?

  நமது தயவினால் சாமி இருக்க வேண்டியதில்லை.

  உலகில் உள்ள மக்களின் மூன்றில் ஒரு பங்கு பவுத்தர்களும் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தர்ம சொத்துக்களை பள்ளிக் கூடங்கட்கும், பொது விஷயங்களுக்கும் செலவிடுகின்றனர்.

  சுவாமிக்கு கற்பூரம் எதற்காக கொளுத்த வேண்டும்? கோயிலை கரியாக்குதற்காகவா?

  முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.

  பார்ப்பனர்கள் ஜப்பான் தேசத்துக்காரருடன் ஒப்பந்தம் பேசி நாங்கள் சூடம் கொளுத்த ஏற்பாடு செய்கிறோம். நீ செய்து அனுப்பு என்பதாக தரகு பேசி செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்.

  நாம் சாமிக்காக எவ்வளவோ கோடிக்கணக்காக செலவிட்டும் அந்தச் சாமி நமக்கு ஊசிகூட செய்ய சொல்லிக் கொடுக்கவில்லை. காகிதம் பென்சில் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.(14-03-1929 அன்று லால்குடி அருகிலுள்ள நகர் என்னும் கிராமத்தில் தந்தை பெரியார் செய்த சொற்பொழிவின் ஒரு பகுதி. திராவிடனில் வெளியானது. “பெரியார் களஞ்சியம்” என்ற நூலில் இருந்து…. பக்கம்:138)

  • Hello sir,

   [1]if i am telling this matter [temple to school convertion] then vellala land load people are calling me as parpanan!!!!

   [2] Which true parpanan will accept my idea of temple to school covert ion?

   [3] from your comment i came to know that Periyar also accept my policy[temple to school convention] even before my birth.So according to these vellala land lords

   ” periyar is also a parpanar “!!!!

   [4] What i am asking from them. We need school for kids inside the temple.

   ” If kids are like God then why they are not allowing them to learn inside the temple? “

  • // முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.

   பார்ப்பனர்கள் ஜப்பான் தேசத்துக்காரருடன் ஒப்பந்தம் பேசி நாங்கள் சூடம் கொளுத்த ஏற்பாடு செய்கிறோம். நீ செய்து அனுப்பு என்பதாக தரகு பேசி செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். //

   பெரியாரின் சந்தேகம் அடிப்படையற்றது..

   சங்க கால பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள மலைபடு கடாம், நன்னன் அரண்மனை முற்றத்தில் குவிந்து கிடந்த பல்வேறு பொருட்களில் கற்பூரத்தையும் குறிப்பிடுகிறது..

   • //சுவாமிக்கு கற்பூரம் எதற்காக கொளுத்த வேண்டும்? கோயிலை கரியாக்குதற்காகவா?

    முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.//

    அம்பி அவசரப்படுகிரார்! பெரியார் சொன்னது கடவுளுக்கு கர்ப்பூர ஆரத்தி காட்டுவதையே! ஆண்டுக்கு ஆண்டு சூட இறக்குமதிக்கு ஆன செலவை தவிர்க்கவே அவ்வாறு கூறினார்!
    அப்போதைய அம்பிகள் அதை உணர்ந்துதான் எதிர்க்கவில்லை!

    ஆனால் இன்றைய அம்பி, மிகவும் பிரயாசைப்பட்டு, வாசனைப்பொருளாக கற்பூரம்,நன்னன் காலத்தில் இருந்ததை கண்டுபிடித்துவிட்டார்! பெரியார் சொன்னதில் உள்ள நியாயத்தை விமரிசிக்க முடியவில்லை! இப்போதும் பல கோவில்களைல் கற்பூரம் கொலுத்துவதை தடை செய்துவிட்டனர், முக்கியமாக சிறு கோவில்களில்! அதனால் ஏற்படும் புகை அர்ச்சகருக்கு ஒத்துகொள்ள வில்லை! மேற்கூரையில் படிந்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன!

 8. செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து. அவர் கம்யூனிஸ்டாக, சிதம்பரத்து தீட்சிதர்களுக்கு எதிராக போராடும் மனிதவுரிமைக் கழகத்தை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டே அவர்களைக் கொச்சைப்படுத்தி உள்வேலை பார்க்கிறார். ‘அவா’ இந்த வேலைகளில் கைவந்தவர்கள் என்பது தமிழ்நாடுத் தமிழர்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தும் கம்யூனிச தோழர்களை நக்கலடிப்பது மட்டுமல்ல, அவர்களின் நோக்கம் தமிழர்களின் சைவத்தை இழிவு படுத்துவது தான் என்ற கருத்தை, இந்த கருத்துப்பரிமாறலை வாசிக்கும் கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்த முனைகிறார்.

  உதாரணமாக “Yes temples are having huge properties and which are the belonging to working class so we want to CONVERT ALL THE TEMPLES INTO SCHOOLS TO EDUCATE OUR PEOPLE IN THEIR MOTHER LANGUAGE.Why are u having pain for this conversion.” 🙂

  • கம்யூனிஸ்டை ஒருத்தன் திட்டினால் அவன் பார்ப்பான். அதாவது யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவனைத் திட்ட வேண்டும் என்று நினைத்தால் அவனைப் பார்ப்பான் என்று சொல்லலாம்.

   அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் சூரியன் மாலையில் மறைவதற்குக் காரணம் பார்ப்பனர்களே என்றுநேற்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

   • சிவா, பார்பனரை ஏன் தமிழின எதிரியாக கூற கூடாது? 1.தேவார சுவடிகளை அறைக்குள் பூட்டி வைத்து அதை பாதிக்கு மேல் கரையான் அரிக்க வைத்தது பார்ப்பன்ர் 2.திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைத்து நாடகமாடியது பார்ப்பனர். 3.சிற்றம்பலத்தில் தமிழில் பாடிய மாணிக்கவாசகரை கீழே தள்ளியது பார்ப்பனர். ஒரு மொழியில் உள்ள இலக்கியத்தை அழிப்பது ஒரு திட்டமிட்ட அழித்தொழிப்பு செயல்தான். இலங்கையில் நடந்தது அப்பட்டமான இன அழித்தொழிப்பு என்று உலகமே ஏற்கையில் பார்ப்பன சோக்களும்,சுப்ரமனியம் சுவாமிகளும் மட்டும் அதை கொண்டாடி வரவேற்பது ஏன்?

    • // 1.தேவார சுவடிகளை அறைக்குள் பூட்டி வைத்து அதை பாதிக்கு மேல் கரையான் அரிக்க வைத்தது பார்ப்பன்ர் //

     தேவார சுவடிகள் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே நம்பியாண்டார் நம்பியும் (பார்ப்பனர்), திருமுறை கண்ட சோழரான ராஜராஜரும் தில்லைக் கோயில் மூடி சீல் வைக்கப்பட்ட அறையில் சுவடிகள் இருப்பதை அறிகிறார்கள்.. அங்கே புத்தம் புதிய காப்பியை எதிர்பார்க்க முடியாது.. தற்போது எழும் கேள்வி என்ன..?! அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் லாக்கர் வசதியுள்ள ஒரு வங்கி கூடவா இல்லை என்று ர.கோ.சீத்தாபதி அவர்களது பாணியில் கேட்கமாட்டேன்.. ஆனால் நான் கேட்பது, பார்ப்பான் மட்டும்தான் சுவடிகளை கரையானால் அரிக்கவிட்டானா.. வேறு எங்கும் சுவடிகள், பிரதிகள் பாதுகாக்கப் படவில்லையா.. சுவடிகளை இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சீல் வைத்துப் பூட்டிய அறையில் பத்திரமாக பாதுகாத்ததற்காகவா பார்ப்பனர்களைத் திட்டுகிறீர்கள்..?! அதுவரை யாரும் கவலைப்படாத சுவடிகளை தில்லைவாழ் ’தமிழின எதிரிகள்’ யாக குண்டத்தில் போட்டு சுவாகா சொல்லியிருந்தால், அந்தக் கால நம்பிக்கும், இந்தக் கால உ.வே.சாமிநாதையருக்கும் கூட எந்த மூவர் தேவார சுவடியும் கிட்டியிருக்காதே..

     // 2.திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைத்து நாடகமாடியது பார்ப்பனர். //

     ’தமிழின எதிரிகள்’ பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைக்காமல் யாக குண்டத்தில் போட்டு ஒழிக்காததன் காரணம் என்ன..?!

     // 3.சிற்றம்பலத்தில் தமிழில் பாடிய மாணிக்கவாசகரை கீழே தள்ளியது பார்ப்பனர். //

     இதை எங்கே படித்தீர்கள்..?! மாணிக்கவாசகர் என்ற பார்ப்பனர் எட்டாம் திருமுறை பாடியிருந்தாலும் அவரை ஒரு பார்ப்பான் பிடித்து தள்ளியதால் எல்லா பார்ப்பனர்களும் தமிழின எதிரிகள்..?! தமிழ் மீதுள்ள பற்றைவிட, பார்ப்பனர் மீதுள்ள வெறுப்புதான் இங்கும், எங்கும் காணப்படுகிறது..

     • அம்பி, அந்தகால அரசர்கள் அரண்மனையைவிட பாதுகாப்பான இடமாக கருதியது கோவில்களைதான்,ஏனென்றால் முஸ்லிம் மன்னர்களைதவிர வேறு பகைநாட்டு அரசர்கள் யாரும் கொவில்களை கொளுத்தியதாகவோ,கொள்ளையிட்டதாகவோ,சரித்திரம் இல்லை.தமிழ் சுவடிகள் ஆலயங்கலுக்கு வந்தது அந்த அடிப்படையில்தான்.ஆனால் அவர்கள் அறியவில்லை திருடன் கையில் சாவியை தருகிறோம் என்று.ராஜ ராஜ சோழனுடன் அவர்கள் செய்த தர்க்கமே சான்று,அவர்கள் மறைத்து வைத்து இருந்தனர்,பாதுகாத்து வைக்கவில்லை என்பதற்கு. ஓலைசுவடிகள் பராமரித்து சிதிலமடைந்ததை படி[காப்பி செய்வது] எடுத்து வைக்காவிட்டால் அவை அழிந்துவிடும் என்று தெரிந்தும் 2,3 நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்தனர் என்ற தங்கள் வாதம் எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது.நம்பியாண்டார் நம்பிக்கு பொல்லாபிள்ளையார்தான் சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள்தான் விளக்க வேண்டும்.சண்டையிட்டு பெற்றதே திருமந்திரமும்,தேவாரமும்.உலகிற்கு தெரியாமல் அழிந்தது ராமபாணத்திற்கே[கரையான்] வெளிச்சம்.

      • // அந்தகால அரசர்கள் அரண்மனையைவிட பாதுகாப்பான இடமாக கருதியது கோவில்களைதான்,ஏனென்றால் முஸ்லிம் மன்னர்களைதவிர வேறு பகைநாட்டு அரசர்கள் யாரும் கொவில்களை கொளுத்தியதாகவோ,கொள்ளையிட்டதாகவோ,சரித்திரம் இல்லை.தமிழ் சுவடிகள் ஆலயங்கலுக்கு வந்தது அந்த அடிப்படையில்தான்.ஆனால் அவர்கள் அறியவில்லை திருடன் கையில் சாவியை தருகிறோம் என்று.ராஜ ராஜ சோழனுடன் அவர்கள் செய்த தர்க்கமே சான்று,அவர்கள் மறைத்து வைத்து இருந்தனர்,பாதுகாத்து வைக்கவில்லை என்பதற்கு. //

       ”மாமன்னா.. தேவாரமா, சுவடிகளா, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே” என்று சொல்லியிருந்தால் மறைத்து வைத்தார்கள், ஒளித்து வைத்தார்கள் என்று கருத இடமுண்டு.. மூவர் முதலிகள் வந்து கேட்டால்தான் லாக்கரைத் திறப்போம் என்று வெளிப்படையாகத்தானே கூறியிருக்கிறார்கள்..! 7,8-ம் நூற்றாண்டுகளில் பட்டை போட்ட மன்னர்கள் மொட்டை போட்டுக் கொள்வதும், மொட்டையாக இருந்த மன்னர்கள் பட்டை போடுவதுமாக சமணத்துக்கும், சைவத்துக்கும் இடையே உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில், சுவடிகள் பத்திரமான கைகளில் சேரவேண்டுமே என்று அஞ்சியிருக்கலாம்.. ஆனாலும் ஆதித்தர், பராந்தகர், கண்டராதித்தர் போன்ற சிவபக்தர்கள் பரம்பரையில் வந்தவரும், சைவத்தின் பாதுகாப்பு உறுதிப்பட்டுவிட்ட 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான சிவனருட் செல்வரான அருள்மொழிவர்மரிடம் எந்த வித தயக்கமுமில்லாமல் சுவடிகளை முதலிலேயே கொடுத்திருக்கலாம்..!

       // ஓலைசுவடிகள் பராமரித்து சிதிலமடைந்ததை படி[காப்பி செய்வது] எடுத்து வைக்காவிட்டால் அவை அழிந்துவிடும் என்று தெரிந்தும் 2,3 நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்தனர் என்ற தங்கள் வாதம் எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. //

       மூலிகைக் காப்பிட்டு பல நூற்றாண்டுகள் வரை பாதுகாக்கப்பட்ட சுவடிகள் உண்டு..
       அய்யா தெரியாதய்யா கருங்கல் அறைக்குள்ளும் கரையான் வந்து கபளீகரம் செய்யும் என்று..!
       எல்லாம் ஆடவல்லானின் திருவிளையாடல்..!!! அது சரி, தில்லைவாழ் ‘தமிழின எதிரிகள்’ ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும்.. சுவடிகளை காணாமல் போக வைக்க யாக குண்டத்தின் வழியாக கையிலாசத்துக்கு அனுப்பும் எளிய நம்பகமான வழி இருக்கும்போது..?! தங்கள் கருத்து என்ன..?!

       // நம்பியாண்டார் நம்பிக்கு பொல்லாபிள்ளையார்தான் சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள்தான் விளக்க வேண்டும். //

       நான் மட்டும் என்ன பக்கத்திலா இருந்தேன்..?! திருமுறைகளைத் தேடி, தொகுத்து வழங்கிய நம்பி ஆண்டார் நம்பி அய்யரிடம் சைவப் பெருமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமய்யா..! பார்ப்பானை நம்பமுடியாது என்றால், நம்பி ஒரு மலைக் குறவர் என்று ஆய்வுகள் செய்து கண்டுபிடித்து கொள்வோம்..

       // சண்டையிட்டு பெற்றதே திருமந்திரமும்,தேவாரமும்.உலகிற்கு தெரியாமல் அழிந்தது ராமபாணத்திற்கே[கரையான்] வெளிச்சம். //

       இதெல்லாம் ஒரு சண்டையா.?! அறிவார்ந்த மன்னரின் ஆணை, சுவடிகள் கைக்கு வந்துவிட்டது..

       • //யாக குண்டத்தின் வழியாக கையிலாசத்துக்கு அனுப்பும் எளிய நம்பகமான வழி இருக்கும் போது// விட்டா அவரா செத்துபோற கெழவரை கொலை செய்வதுதான் எளிய நம்பகமான வழியா? கொலவிசயம் வெளிய தெரிந்தால் தூக்குல போட்ருவாங்க அம்பி. அவருக்கு சாப்பாடு கொடுக்காம கண்டுக்காம விடுவதுதான் எளிய நம்பகமான வழி.எச்சரிக்கை உணர்வுமிக்க அவா அதைதான் செய்வா.

     • மாணிக்கவாசகரை மருத்துவ சமூகத்தை சேர்ந்தவர் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.அவரை கீழெதள்ளியது அவர் வரலாறு அனைத்திலும் உள்ளது.

     • அப்பரும்,சம்பந்தரும் உருவாகிய தமிழ் சைவம், இவர்களின் பாடல்களை தேவாரப்பண்களில் மெட்டமைத்து கோவில்கள் தோறும் பாடப்பட்டும், அபினயிக்கப்பட்டும் வந்தது! சம்பந்தர் கூடவே யாழ்பாணர் என்பவரும் இருப்பார்!

      சம்பந்தருக்கு நாளாக நாளாக தமிழ்பற்றும், மத நல்லிணக்க சிந்தனையும் ஆரம்பித்தது சிலருக்கு பிடிக்கவில்லை! அவரது கல்யாணம் நடந்து கொண்டிருக்கும்போதே, அவரது பந்து மித்திரர்களுடன் , கதவை பூட்டி தீவைக்கப்பட்டது! ஒருவரும் உயிர்தப்பவில்லை!

      அரசுகள் மாறியபின், ஆதரவில்லாமல் தமிழ் பாடல்கள் அழிந்தன! தமிழ் நீச பாஷையானது! வழக்கம்போல வெள்ளாளர்கள் முதலியோர் தமிழ் ஏடுகளை புதுப்பிக்க அஞசினர்! அப்போதும்நம்பியான்டார் நம்பியின் உறவினரான ஒரு தீக்ஷிதரே அதை பாதுகாத்து வைத்திருந்தார்! அப்போதுதான் திருவாசகம் என்ற ஒருநூல் இருப்பதே தெரிய வந்தது! மாணிக்க வாசகர் என்பதே காரணப்பெயர்தான்! திருவள்ளுவர் போல! பார்பனர்களில் சிலநல்லவர்களால் தமிழ் பிழைத்தது!

      • நன்பர் அஜாத்சத்ரு அவர்கள் பின்னூட்டம் 10ல் எனக்கு மறுமொழியாக பொத்தாம் பொதுவான கருத்துகளை கொண்ட பதிவை எழுதினார்.அது குறித்து சில கேள்விகளை எழுப்பிய எனக்கு எந்த மறுமொழியும் தராமல் மீண்டும் ஒரு பொத்தாம் பொதுவான பதிலை எழுதுகிறார்.இதில் உள்ள அபத்தத்தின் உச்சம் திருஞான சம்பந்தர் சமய நல்லிணக்கம் பேனியதால் திருமண கூட்டத்தோடு வைத்து கொளுத்தப்பட்டார் என்பது.அண்ணனிண் சமய நல்லிணக்கம் பற்றிய கருத்து சமணர் காதில் விழாமல் இருப்பது நலம்.

       • உண்மைதான் ! அவரின் சமயநல்லிணக்கம், சமணம் ஒழிந்தபின், சைவ-வைணவ மதநல்லிணக்கம் பற்றியதே! சீர்காழியில் உள்ள ஒரு வணவ தலததையும் பாடியிருக்கிரார்! அவரை உயிருடன் கொளுத்தியவர்கள் , னிச்சயம் சமணர்களாயிருக்க முடியாது! ஏனென்றால், கொளுத்திய ஊர், சைவம் தழைத்த ஆச்சாள்புரமாகும்! சைவர்களுக்குள்ளேயே காழ்ப்புணர்வு இருந்திருக்கலாம்!

        • அப்பர்,சம்பந்தர் காலத்திற்கு பின்னர் சைவமும் வைணவமும் வெகு ஆக்ரொஷமாக சண்டையிட்டுக்கொண்டன ! தில்லை மாறி மாறி சொழர்களிடமும் கொய்ச்சளர்களிடம் இருந்தது! கொய்சளர்நிருவிய வைணவ கோவில் சைவ மன்னனால் இடித்து சிலை கிள்ளை கடலில் கரைக்கப்பட்டது! கூரத்து ஆழ்வான் முகம் தீயினால் சிதைக்கப்பட்டது! ராமானிஜர் உயிதப்பி திருப்பதி சென்றடைந்தார்! இறுதியில் விஜYஅநகர பேரரசு சிதம்பரத்தை கைப்பற்றி சமயநல்லிணக்கத்தைநடைமுறைபடுதும் முகத்தான், மீண்டுனம் வைண்வ கோவிலை புதுப்பித்து கொடுத்தது! வடக்கு கோபுரம் கட்டிகொடுத்தது!

   • சிவா…நாசா இருக்கட்டும்:
    தமிழன் வாழ்வு தலைகீழாக
    போனதற்கு, மேற்படி பூணூல்& நிறுவனம்
    3 ஷிப்ட் ஓச்சல் ஒழிசல் இல்லாமல்
    வேலை பார்த்தது உண்மைதானே?
    ராசாசி இதே வேலையாக(குச்சி ஊணியாவது)
    செய்து வந்ததை வரலாறு கூறுகிறதே?

    • // தமிழன் வாழ்வு தலைகீழாக
     போனதற்கு, மேற்படி பூணூல்& நிறுவனம்
     3 ஷிப்ட் ஓச்சல் ஒழிசல் இல்லாமல்
     வேலை பார்த்தது உண்மைதானே? //

     நிறுவன முதலாளிகள் நீங்கள் தானே நைனா..

     • பூணூல்களுக்கு ஒன்னுமே தெரியாது: பட்டப் பகலாக இருந்தாலும்
      சங்கரராமனை சதக்,,சதக்…

  • //செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து.//

   [1]If u say I am a parpanan then ok i am really happy!!!

   [2]I am happy because I am having support for my idea of temple to school convention FROM PERIYAR,MARX,LENIN AND MASO TUNG. SO you can call all of us “PARPANARKAL”

   [3]In This temple rights struggle in the name of Tamil people u-vellala land loads want to get all the gains.!!
   But i need only place for education kids inside the temple in our mother language.

  • //அவர் நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தும் கம்யூனிச தோழர்களை நக்கலடிப்பது மட்டுமல்ல, //

   Hello viysan,

   [1] Do you think communist people who are fighting for temple rights are foolish?

   [2] When they are fighting for temple rights it is also including the rights of the working class people.

   [3] Temple administration should me belonging to Government not parpanarkal who sing vetha’s. This is the aim of the communist people now. After achieving this goal next communist people will go for the next stage of the temple rights struggle.[temple to school convention]

  • //செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து. //
   Hello parpana-vellala viysan!,

   [0] In my school days I learned the books of periyar and in my college days i was educated by communist people from MKEK about the ideology of Marx and Lenin.All these knowledge helps me to live in this world with human face in all issues.

   [1] In my life I took steps to eliminate the cast system even in my personal life.I did inter-cast marriage just because I am inspired by the polices of Periyar and Communist people.

   [2] I give a nice Tamil name to my kid as “Siva karthikeyan” just because i and my wife are Tamilians. That does not mean that I am supporting the cast system of our Tamil society.

   [3]In EElam issue also I am supporting the creation of separate Tamil EElam. Since one of a center minister of India is against our EElam people,Tamil fisher man community and Kuttngulam people[atomic power station issue] I stop all my relationship with him even though he is my “Pangali” and close relative.

   [4]You should not and can not expect me to change my polices which I derived from Periyar and communist people from my mind.

   [5] What else u need from me to prove that I am not a Parpanan.?

   [6] If singing Devaram will stop all the problems of our Tamil people and Eelam Tamil then only I am ready to die while singing Devaram. But what is real? Singing devaram only create a Drug effect in Tamil people and make them to forget our real problem.

   [7] So that I am telling you that politically and scientifically educating kids inside the temple only create a new modern and progressive Tamil society in the near feature.

   [8] If u r not understanding my words or if u r acting for not understanding my words then THAT MEANS U START SPOILING OUR TAMIL SOCIETY

   [9] Any way THIS WILL BE MY LOST COMMENT AND DISCUSSION WITH U.

   • செந்தில் குமரன்,

    இறைநம்பிக்கை உள்ளவர்களிடம் கூட சமூக, பண்பாட்டு, சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் விதமாக பேசுவது சரியாக இருக்கும். மாறாக முத்திரை குத்தி எதிர் நிலையில் இருத்தி பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. சிதம்பரம் கோவில் போராட்டம் என்பது தமிழின மக்கள் மீது நடத்தப்படும் மொழி, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அந்த சொத்து மக்கள் வசம் இருக்க வேண்டும் என்பதால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்களின் உரிமைக்காகவும் போராடுகிறார்கள். வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள். ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களிடமும் பொறுமையாக பேசி, விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

    • //சிதம்பரம் கோவில் போராட்டம் என்பது தமிழின மக்கள் மீது நடத்தப்படும் மொழி, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அந்த சொத்து மக்கள் வசம் இருக்க வேண்டும் என்பதால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்க//

     I already said this to viysan:

     [1] Do you think communist people who are fighting for temple rights are foolish?

     [2] When they are fighting for temple rights it is also including the rights of the working class people.

     [3] Temple administration should me belonging to Government not parpanarkal who sing vetha’s. This is the aim of the communist people now. After achieving this goal next communist people will go for the next stage of the temple rights struggle.[temple to school convention]

    • Dear vinavu.., There is a conflict in your two statements..!

     [1]வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள்.

     [2]ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை.

     First statement is only correct.It[temple issue struggle] is a part of the class struggle because it is the communist people WAR strategy to improve our class struggle.

     The second statement is wrong..
     IF communist people are not fighting for this issue and some Tamil organization is only fighting THEN that means we are away from the cultural and language issues and problems of Tamil people. For example in Hindi agitation struggle, we communist people are away from it and only DMK is gaining the political ground in tamil nadu[We failed in our war strategy in Hindi agitation dtruggle]

     “so according to my political knowledge it is also our duty to fight along with other Tamil organizations against parpanerkal damination in side temple. ”

     Vinavu said: //வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள். ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை.//

   • லண்டன் துரை, இங்கிலிபிஸ்லதான் கதப்பிங்களா? உழைக்கும் மக்களுக்காக போராட போரதா சொல்ற உங்களுக்கும் நீங்கவுடுர பீட்டருக்கும் சம்மந்தம் இல்லையே வினவு தமிழ்தளம்தானே???!!

     • ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்.பெயர் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம். அவரின் அடுத்த வாதம் தமிழ்,ஆங்கிலத்தை கலந்து எழுதுவதுதான் தவறு என்பது.அவரின் வாதப்படி 1.தியாகராஜர் ஆராதனையில் தமிழில் பாட சொல்வது தவறு ஏனென்றால் தமிழ் கலக்காமல் சமஸ்கிரதம்,தெலுங்கில் மட்டுமே பாடப்படுகிறது.2.தமிழில் அர்ச்சனை,தமிழில் வழிபாடு போன்றவையையும் இதே காரணத்திற்காக மறுக்கலாம்.தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் பாடுவது தீட்டு என நினைக்கும் பார்ப்பனருக்கும் தமிழ் தளத்தில் தமிழில் எழுதுவது தீட்டு என நினைக்கும் இவருக்கும் என்னளவில் வேறுபாடு இல்லை.தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.நன்றி

      • I am telling u to write your name also in Tamil in the heading of your message.

       see the heading of my message.Like this you pls write u r name

      • //ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்.பெயர் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம்.//

       நான் உங்கள் பெயரை தமிழில் எழுத தானே சொன்னேன் !!!