Thursday, June 20, 2024
முகப்புகலைகவிதைடிசம்பர் 6 - அடங்காத நினைவுகள்

டிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்

-

 • னாதனமானவை
  அபௌருசமானவை
  கேள்விக்கு அப்பாற்பட்டவை
  உபநிடதங்கள், சம்ஷிதைகள், புராணங்கள்…

  அம்பேத்கர்
  அம்பேத்கர்

  எதைக் கண்டும் மலைக்காமல்
  இந்து மதத்தின் அநீதிகளை
  கண்ட இடத்திலேயே
  அடிக்கிற அடி இருக்கிறதே!

அதுதான் அம்பேத்கர்

 • நால்வகை வேதம், மனுதர்மம்,
  ரிஷிகள், இந்திரன்
  ராமன், கிருஷ்ணன்…எவனாயிருந்தாலும்
  பார்ப்பன பல்லைத் தட்டி
  அவர்கள் கையிலேயே கொடுக்கும்
  அறிவின் அழகிருக்கிறதே

அதுதான் அம்பேத்கர்

 • ஆரிய ‘கங்கை’யை
  அடித்துத் துவைத்து
  அவாளின் பூணுலிலேயே
  போட்டு அனுப்பும்
  அலுக்காத வேலை,சாதிய மனத்தின்
  தடித்தனத்தை
  நோகடித்து
  நோயகற்றும் வீச்சு,”என்ன விலை கொடுத்தேனும்
  இந்து  ஆட்சி தடுக்கப்பட்டாக வேண்டும்”
  எனும் பார்ப்பன எதிர்ப்பின் தவிப்பு!
 • ஆவி அடங்கவில்லை
  அம்பேத்கரின் தவிப்புகள்…பீகாரின் சோனே ஆற்றால்
  கழுவ முடியாத அளவுக்கு
  உறைந்துபோன
  லஷ்மன்பூர்-பதே தலித் மக்களின்
  இரத்தத்திலும்,நத்தம் காலனியின்,
  எரிந்த குடிசைகளில் புகைந்த காற்றில்
  தீய்ந்து கருகிய அழுகுரலிலும்
  அம்பேத்கரின் தவிப்புகள்
  விடை தேடுகின்றன!
 • பாராளுமன்றத்தில்
  அம்பேத்கர் சிலை,
  பரமக்குடியில்
  தலித்துகள் கொலை!
  இந்தப் போலி ஜனநாயகத்தை
  தோலுரிப்பதே
  புரட்சியாளன் வேலை!
 • அம்பேத்கரின்
  இந்து மதத்தின் புதிர்களை
  ஏழெட்டு தடவை
  படித்தது அல்ல பெருமை
  அம்பேத்கரையே
  காவிமயமாக்கும்
  ஆர்.எஸ்.எஸ் வலையை
  அறுத்திட வா களத்தில் !
 • காந்தியின் ராமராஜியத்தை
  அம்பேத்கர்
  அம்பலப்படுத்தியதைக் கற்பதோடு
  முடிவதில்லை
  அம்பேத்கர் நினைவுகள்,
  மோடியின் கொலை ராஜ்யத்தை
  முடிவுக்குள்ளாக்கும் வேலைகளில்
  தொடர்ந்திடும் அவர் நினைவுகள்

  கோயில் நுழைவு போராட்டம்
  1930 முதல் 1935 வரை நாசிக்கில் நடத்தப்பட்ட கலாராம் மந்திர் சத்தியாகிரகம் கலாராம் மந்திர் கோயில் நுழைவுப் போராட்டம்.
 • ஆண்டைகள்
  சாதிகளாக மட்டுமல்ல
  கார்ப்பரேட்டுகளாகவும்
  களவாடுகின்றனர்
  தலித்துகளின் வாழ்நிலையை
 • நான் எழுதுவதுதான்
  புதிய சட்டம்
  என அம்பேத்கரின் வரைவுகளை
  தூக்கி எறிகிறது பன்னாட்டுக் கம்பெனி
 • மறுகாலனிய தனிக் குடியிருப்பும்
  தனியார்மய தீண்டாமையும்
  நவீன சேரிகளில் தள்ளி வைக்கின்றன.
 • இந்தச் சூழலில் முடிவெடுப்போம்
  அம்பேத்கர் நினைவின் அடையாளமாய்
  ஆளுயர மாலையோடு அடங்குவதா?
  ஆளும் வர்க்க  எதிர்ப்பு வேலை தொடங்குவதா?

– துரை சண்முகம்

 1. இந்தச் சூழலில் முடிவெடுப்போம்
  அம்பேத்கர் நினைவின் அடையாளமாய்
  ஆளுயர மாலையோடு அடங்குவதா?
  ஆளும் வர்க்க எதிர்ப்பு வேலை தொடங்குவதா?

 2. //
  நால்வகை வேதம், மனுதர்மம்,
  ரிஷிகள், இந்திரன்
  ராமன், கிருஷ்ணன்…எவனாயிருந்தாலும்
  பார்ப்பன பல்லைத் தட்டி
  அவர்கள் கையிலேயே கொடுக்கும்
  அறிவின் அழகிருக்கிறதே

  அதுதான் அம்பேத்கர் //

  பார்ப்பன பல்லைத் தட்டி கையில் கொடுக்கும் அறிவின் அழகெல்லாம் (?!) உங்கள் பகுத்தறிவு பகலவருக்கே உரியது.. அம்பேத்கரின் அறிவும், கண்ணியத்தைக் கைவிடாத அறச் சீற்றமும் சாதித்தவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட சாதிக்க முடியாது உங்கள் திராவிட மார்க்சின் வெற்றுக் கூச்சல்களால்..

  // ”என்ன விலை கொடுத்தேனும்
  இந்து ஆட்சி தடுக்கப்பட்டாக வேண்டும்”
  எனும் பார்ப்பன எதிர்ப்பின் தவிப்பு! //

  ஆட்சி இந்துக்களிடம் இருக்கக் கூடாது என்று அம்பேத்கார் எப்போது கூறியிருக்கிறார்..?!
  இந்துத்துவ என்பதற்கு பதில் இந்து என்று கூறுகிறீர்களோ..?! பார்ப்பான் தான் பார்ப்பனீயம், பார்ப்பனீயம் தான் பார்ப்பான்; இந்து தான் பார்ப்பான், பார்ப்பான் தான் இந்து என்பது போலவா..?!

 3. தலீத்கள் இந்துத்துவப் கருத்திய்ல் கடலிலில் அன்ராடம் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ
  சீக்கவைஇக்க கப்படுகிரார்கைல்.

 4. அம்பெத்கர் தலிதுகளுக்காக போராடினார்! பெரியார் அனைத்து பிராமணர் அல்லாதோருக்காக வாதாடினார்! இருவருமே இரட்டைக்குழல் துப்பாக்கியைபோல பார்ப்பன சாதிக்கொTTஐயை தகர்த்தனர்! பார்பனர்கள் அப்பொது பதுஙகி இப்போது படமெடுக்கிரார்கள்! இருவருக்கும் இடையில் நூல் விடும் அம்பியின் தந்திரம் அறிந்து கொள்க!

 5. பாராளுமன்றத்தில்
  அம்பேத்கர் சிலை,
  பரமக்குடியில்
  தலித்துகள் கொலை!
  இந்தப் போலி ஜனநாயகத்தை
  தோலுரிப்பதே
  புரட்சியாளன் வேலை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க