Thursday, June 20, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.ககாஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

-

“ராகுலா
பொய்பேச வெட்கப்படாதவர்களின்
சிரமணத்தன்மை (துறவு)
கால் கழுவிய நீரைப் போல
விலக்குதற்குரியது!
நீரை ஊற்றிய பிறகு உள்ள
மண்பாண்டம் போல வெறுமையானது!”

– புத்தர்

(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள “ராகுலோவாத ஸூத்தம்’ என்ற சூத்திரத்திலிருந்து)

“அயோத்தி ராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை!” என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக “சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்” என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.

கும்பகோணம் மடம்
கும்பகோணம் மடம்

அந்த அயோக்கியனுக்காவது “சட்டத்தின் முன் ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டவன்” என்ற அடையாளம் உண்டு. ஆனால் “கும்பகோண மடம்” என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்திய மடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்து விட்டு (இன்று ஜெயேந்திரரின் பிணை விண்ணப்பம் வரை) திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்று வரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.

இந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; “ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாட” என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.

அந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய “சங்கராச்சாரி யார்?”, அருணன் எழுதிய “சங்கரமடத்தின் உண்மை வரலாறு” போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை. அவை முக்கியமாக வைணவ பக்தர்களின் நூல்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. இவை தவிர, சமஸ்கிருத அறிஞர்களான இறைநம்பிக்கை கொண்ட சைவப் பார்ப்பனர்களிடமிருந்தே பல நூல்கள் வந்துள்ளன. அவற்றை “சிருங்கேரி சங்கர மடத்தின் அவதூறு” என்று ஓரங்கட்டி வைத்தது காஞ்சிமடம் அதாவது ஒரிஜினல் கும்பகோணம் மடம். ஆனால் அவர்கள் சிருங்கேரி மட ஆதரவாளர்கள் அல்ல. ஆதிசங்கரர் மீது பக்தி கொண்ட பொதுவான நபர்கள்தான். அந்த நூல்கள்: முதலில் 1963இல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பிறகு தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முடிகொண்ட வெங்கடராம சாஸ்திரி என்பவரின் “காமகோடி சதகோடி” என்ற நூலும், “ஸ்ரீ கும்பகோணம் மடம் அதன் உண்மை” (1965) – பாகம்1: ஆர். கிருஷ்ணசாமி (அய்யர்); பாகம் 2: கே.ஆர். வெங்கட்ராமன் சி என்ற நூலும் ஆகும். இரண்டுமே காஞ்சி மடத்தின் பொய்களைக் கண்டித்து ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டவை.

எல்லா விமரிசனங்களோடும் அவர்கள் முன் வைத்த வாசகர்களுக்கான வேண்டுகோள் மிக மிக முக்கியமானது : “கும்பகோணம் மடத் தில்லுமுல்லுக்காரர்கள் புராணங்கள், கிரந்தங்கள் (நூல்கள்) போன்றவற்றை ஆதாரமாக வைக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அவை சொல்லாத விஷயங்களைக் காட்டி அவைகளே மூல மேற்கோள்கள் என்று பொய் சொல்லி வாதாடுவதையே நாங்கள் ஏற்க முடியாது.” அந்த நூலாசிரியர்கள் தங்கள் முன்னுரையில் மேலும் சொன்ன முக்கியச் செய்திகள்: ஜெர்மனிய கோயபல்சையும் பொய்யில் விஞ்சுபவர்கள் கும்பகோணம் மடத்தார்; அவர்கள் பழைய ஆவணங்களை, சாகித்தியங்களைத் திருத்திப் புரட்டி விட்டார்கள்; இடைச்செருகல் செய்தார்கள்; நவீன கால ஆய்வாளர்களையும் தங்கள் கும்பலில் சேர்த்தார்கள்; உதிரிகளாகத் திரியும் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் புரோகிதர்கள் பண்டிதர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து ஊழல்படுத்திப் பிரச்சாரக் கருவிகளாக மாற்றினார்கள்; இலக்கிய, சமூக, மத, அரசியல், வியாபார, தொழில்துறை விற்பன்னர்களை ஊழல்படுத்தி மடத்தின் சீடர்களாக்கினார்கள்.

books-2இத்தனைக் “கல்யாண குணங்களை”யும் சாரமாக்கிச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள ஒரே ஒரு சொல் பிற்கால லத்தீன் மொழியில்தான் இருக்கிறது. அது “கிரிமினாலிஸ்” என்பது. ஆங்கிலத்தில் அதுவே “கிரிமினல்”. இதைத்தான் ஜெயேந்திரருக்கு எதிராக அரசு வழக்குரைஞர் சொன்னார். இதில் சிறு திருத்தம் அந்த ஆசாமி ஏதோ ஒரு கிரிமினல் அல்ல; அது பார்ப்பனக் “கிரிமினல் பரம்பரை”.

கும்பகோணம் மடம் அதாவது “காஞ்சிமடம்’ என்று சொல்லப்படும் சங்கரமடம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தத்துவாசிரியர் புத்தனே. அவருக்கும் முன்னால் சங்கரனைக் கொண்டு வைக்கின்ற அசட்டுத் துணிச்சல் காஞ்சி மடத்துக்கே உண்டு. எந்த ஆய்வாளருமே இப்படிச் சொல்லவில்லை; ஆதிசங்கரர் காலம் கி.பி. 800 என்று டி.டி.கோசாம்பி, அம்பேத்கர் போன்றோர் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். “காஞ்சிமடம்” மட்டுமே ஆதிசங்கரர் காலத்தை “கி.மு. 508 கி.மு. 476” என்று முன் தள்ளி வைக்கிறது.

இவர்களது பொய்கள் அத்தனையும் ஆதிசங்கரன் அவதாரம் என்ற பொய்யின் மீதே கட்டப்பட்டன. “பூலோகத்தில் அனுட்டானம் (மக்கள் வாழ்க்கை முறை) மிகவும் கெட்டிருப்பதாக பிரும்மாவிடம் நாரதர் சொல்லி, அவர் மகேசுவரரிடம் சொல்லி, தர்மத்தைக் காக்க அவரே சங்கர அவதாரம் எடுக்கிறார்!” (ஆனந்தானந்த கிரீய சங்கர விஜயம் என்ற கதை நூலில் இருந்து ஆர். கிருஷ்ணசாமி தனது நூலில் காட்டும் மேற்கோள்) இதுவே பொய்களுக்கான ஆணிவேர். இப்புராணம் கும்பகோண மடத்தின் கற்பனைச் சரக்கு.

பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆதிசங்கரரின் தத்துவம் சமண பௌத்த மதங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே; அதன் வாதங்கள் பௌத்த தத்துவத்திலிருந்து திருடப்பட்டவை. அவரது வாதுகளும் பிற மதத்தவரை அழிப்பதற்காக, குறிப்பாக, குமரிலபட்டர் இறப்புக்கும், மண்டனமிஸ்ரர் அத்வைத மதத்துக்கு மாறுவதற்குச் செய்த மிரட்டல்களும் அறிவு நேர்மை அற்றவை. ஆதிசங்கரர் மடங்கள் அமைத்தது வேத மதத்தைக் கட்டிக் காக்கவும், எந்த ஒரு ஆட்சி வந்தாலும் வருணாசிரம தர்மம் சரிந்து விழாமல் தூக்கி நிறுத்துவதற்காகவும்தான். பெரிய நடு சின்ன சங்கரன்கள் அதே கொள்கையுடையவர்களே. இது நாடறிந்த விசயம்.

ஆதிசங்கரர் அமைத்ததாக 4 மடங்கள் உண்டு. வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. இந்த 4 மடங்களுமே ஆதிசங்கரர் கி.பி. 800-ல் கேரளத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்கின்றன; அதுபோலவே, வடக்கே கேதார்நாத்தில் இயற்கையோடு கரைந்து மறைந்து விட்டார் (அந்தர்தானம்) என்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லி வந்த கும்பகோணம் மடம் பிறகு பிறப்பு காலடி என்ற ஊரில் என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் அந்தர்தானம் ஆனது காஞ்சி காமாட்சி கோயிலில் என்று சொல்ல ஆரம்பித்து இன்று வரை விடாப்பிடியாக அப்படியே பொய் சொல்லி வருகிறது.

காஞ்சியில் ஆதிசங்கரர் நிறுவியது மத்திய மடமாம்; மற்றவை கிளை மடங்களாம். காஞ்சி மடத்தில்தான் ஆதிசங்கரர் எல்லாம் அறிந்த ஞானநிலையை அடைந்தாராம். அதன் பெயர் சர்வக்ஞ பீடம். மற்ற நான்கு மடங்களும் அந்தப் பொய்களை மறுத்தன, இன்று வரை மறுக்கின்றன. காஞ்சி “மகாப் பெரியவர்” காலத்திலேயே வடக்கே காசியில் இருந்த வேதபண்டிதர்கள் அவரை மறுத்துத் தீர்மானம் எழுதி அறிக்கை விட்டார்கள். பதிலுக்கு “மகாப் பெரியவாள்” காசு கொடுத்து காசி மற்றும் கல்கத்தாவிலிருந்து ஆள் பிடித்து எதிர் அறிக்கையும் விடச் செய்தார். காஞ்சி மடம் காட்டுகின்ற அத்தனைப் பழைய ஆதாரங்களுமே போலிகள். “மடாம்நாய ஸேது” (மட வரலாறு) (நான்கு மடங்களுக்கும் பொதுவான மடவரலாறு இருக்கும்போது காஞ்சிமடம் தனக்கேயான ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டது.), “குருரத்ன மாலிகா” (குரு வரலாறு), “மாதவீய சங்கர விஜயம்” என்று நான்கு மடங்களாலும் மேற்கோள் காட்டப்படும் வரலாற்றிலிருந்து திருடிச் செய்த “வியாஸாசலீயம்” மற்றும் “ஆனந்தானந்தகிரிய சங்கர விஜயம்” என்று அனைத்துமே புளுகு மூட்டை என்று கிருஷ்ணசாமி (அய்யர்) தனது நூலில் சொல்கிறார்.

booksஎல்லாப் புரட்டுக்களையும் அவர்கள் ஒரே நாளில் செய்யவில்லை. கும்பகோணம் மடத்தில் இருந்த சங்கராச்சாரிகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால்தான் திருட்டைக் கண்டு பிடித்தார்கள் பல பண்டிதர்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், “பெரிவாளு”ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர். “மகாப் பெரியவாளும்” கன்னட ஸ்மார்த்தரே. எனவே ஒரு பிரிவு ஆதிக்கத்தைத் திட்டமிட்டுப் பரம்பரையாக்கி, சிருங்கேரி மடத்திலிருந்து பிரித்து விட்டார்கள். அப்புறம் நடந்த கதை உங்களுக்கே தெரியும்.

——-

புதுமடம் என்பதால் புதுப் புராணங்கள், புதுக்கதைகள் விளைந்தன. ஏற்கெனவே இருந்த நூல்களைத் திருடி மாற்றி வியாஸாசலீயம், ஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் போன்ற கிரந்தங்களை (நூல்களை) உற்பத்தி செய்து கொண்டார்கள். மேலும் “சிவரஹஸ்யம்”, “மார்க்கண்டேய ஸம்ஹிதை” என்ற புராணங்களையும் தயாரித்தார்கள். இவை கும்பகோணம் மடப் பிறாமணாள் கபே தயாரிப்புக்கள்.

சுருக்கமாக இதன் வரலாறு என்ன? 1821-ல் கும்பகோணம் மடம் தொடங்கப்பட்டது. இது சிருங்கேரியின் கிளை மடம். பிறகு தில்லுமுல்லுகள். 1842-ல் காஞ்சி காமாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பிரிட்டிஷாரிடம் “அனுமதி” வாங்கி இந்த சர்க்கஸ் கூடாரம் (யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு சகிதமாக) காஞ்சி வந்தது. அதற்குமுன் காமாட்சிக்கே கூட அங்கே கோயில் இல்லை. அந்தக் கோயில் தாய்த் தெய்வ வழிபாடு நடந்த இடம். அந்த இடத்தைச் சுற்றி சமணப் பள்ளிகள், புத்தர் கோயில்கள் இருந்தன; பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ஒரு கோயிலில்தான் காமாட்சிக்கு இடம் உருவாக்கி காமகோடி பீடமும் கண்டார்கள் சங்கர மடத்தார். அங்கிருந்து 1/4 மைல் (சுமார் 1/2 கி.மீ.) தொலைவில் தற்போது அறியப்படும் காஞ்சி சங்கர மடத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

தி.க.விலிருந்து தி.மு.க. வந்தது; தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. வந்தது. ஆனால் அ.தி.மு.க. இன்று “பெரியார் தோற்றுவித்த மையக்கட்சியே அ.தி.மு.க.தான்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் கும்பகோண மடம் காஞ்சி மடமாகி, “நாங்களே ஆதிசங்கரர் தோற்றுவித்த மையமடம்” என்று சொல்லிக் கொள்கிறது. தவிர, 2,500 ஆண்டு பாரம்பரியம் என்று ஒரு பொய் சொன்னதால், அதை மறைக்க 70 சங்கராச்சாரிகளைப் பொய்யாகப் பட்டியல் போட்டது காஞ்சி மடம். மற்ற எல்லா சங்கர மடங்களுக்குமே வயது சுமார் 1,200 வருடங்கள்தான் அவர்கள் இதை மறைப்பதில்லை. கும்பகோண மடத்துக்கே வயது சுமார் 183 தான். காஞ்சி மடத்துக்கு வயது சுமார் 150 வருடங்கள்தான்.

காஞ்சி (ஒரிஜினல் கும்பகோணம்) மடம் உற்பத்தி செய்த “2500 ஆண்டு பாரம்பரியம்” என்ற புராணப் புளுகுகளுக்கு எதிராக முக்கியமான சில கேள்விகளை வைத்தாலே போதும் உண்மை துலங்கி விடும் :

1. 2,000 ஆண்டுப் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில் சங்கர தத்துவம், காஞ்சி சங்கரமடம் பற்றிய சான்றுகள் எதுவுமே இல்லை. ஏன்?

2. சுமார் 250 (கி.பி.) என்று சொல்லப்படும் கடைச்சங்க இலக்கியத்தில் கூட காஞ்சி மடச் சான்று இல்லை. 19-ம் நூற்றாண்டுக்கு முந்திய எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் காஞ்சிமடச் சான்றுகள் எதுவுமில்லை; ஏன்?

3. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “மாதவீய சங்கர விஜயம்” நூலில் காஞ்சி மடப் பரம்பரை இல்லை, ஏன்?

4. கி.பி. 200-க்கு முன் காஞ்சியில் புத்த மையம் அமைக்கப்பட்டது குறித்துப் புத்த மதச் சான்றாதாரங்கள் உள்ளன. அதே போல சீனப் பயணியும், அறிஞரும், புத்தமத ஆய்வாளருமான யுவான் சுவாங் காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டை “திராவிடம்’ என்று குறிப்பிடுகிறார். அங்கே காஞ்சிமடம், சங்கர தத்துவம் பற்றி எழுதவில்லையே, ஏன்?

5. 11,12ஆம் நூற்றாண்டில் பிறந்த விசிஷ்டாத்வைதம் பரப்பிய இராமானுசர் காஞ்சி மடம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. காஞ்சிதான் சர்வக்ஞ பீடம் என்பர் காஞ்சி மடத்தார். எனில், இராமானுசர் தன் எதிரி மத, சித்தாந்தங்களுக்கு எதிரான போரை காஞ்சி சர்வக்ஞ பீடத்திலிருந்து (சர்வக்ஞ = எல்லாம் உணர்ந்தவர் என்று அங்கீரிக்கப்பட்ட) தொடங்கவில்லையே ஏன்?

அதேபோல, தனது பாஷ்யத்திற்கு (விளக்க உரை) போதாயனர் விருத்தியைத் (இலக்கண விளக்கம்) தேடி இராமானுசர் காச்மீரம் போனார். காஞ்சி சர்வக்ஞ பீடமானால், இவர் ஏன் நூலைத் தேடி காச்மீருக்கு ஓடவேண்டும்? மடமிருந்ததாகச் சொல்லப்பட்ட பெரிய காஞ்சி (சிவகாஞ்சி)யிலிருந்து ஒரே நாளில் சின்னக் காஞ்சிக்கு (விஷ்ணு காஞ்சி) எடுத்துச் சென்றிருக்கலாமே?

6. 1791-ல் திப்பு சுல்தான் காஞ்சி வந்தார். தந்தை விட்டுச் சென்ற காஞ்சிக் கோயில் திருப்பணிகளுக்கு மறு ஏற்பாடு செய்து மேற்பார்வை வேலையை சிருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைத்தார்; ரதவிழாவும் நடத்தினார். (ஆதாரம்: ஜி.எஸ். சர்தேசாய், மராத்தியர்களின் புதிய வரலாறு, தொகுப்பு 3, பக். 190) அப்போது காஞ்சி சங்கர மடம் மத்திய மடமாக பெரிய மடமாக இருந்திருந்தால், உள்ளூரிலேயே பொறுப்பை ஒப்படைத்திருப்பாரே?

***

சந்திரசேகர்
“மகாப்பெரியவாள்”

2,500 ஆண்டுப் பாரம்பரியம் என்ற பிரும்மாண்டமான கட்டுக்கதையை உருவாக்கிய சாமர்த்தியம் மட்டுமல்ல; பின்னாளில் மடச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக 1940-ம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சாசனம் எழுதப்படும்போதே 26வது விதியை வெறுமனே “மதச் சுதந்திரம்” என்றிருந்ததை மாற்றுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளின் குழுக்கள், நேரு, பட்டேல், சாசன உறுப்பினர்களில் இருந்த பார்ப்பனர்கள் என்று எல்லோரையும் சரிக்கட்டி “ஒவ்வொரு மதப்பிரிவு அல்லது எந்த ஒரு வகைப் பிரிவைச் சேர்ந்ததாயினும் அவற்றுக்கு உரிமை / சுதந்திரம் உண்டு” என்று, “மகாப்பெரியவாள்” பருண்மையாக்கினார், “உலகம் மாயைதானே” என்று சும்மா இருந்துவிடவில்லை.

பின்னாளில் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரிய போது அது மறுக்கப்பட்டது. காரணம், விளக்கமாய் அமைந்த அந்த 26-வது விதிதான். காஞ்சி மடத்தின் கிரிமினல் மூளை என்பது இதுதான்.

இன்னொரு விதத்திலும் ஆதி சங்கரனுக்கு ஏற்ற சீடர்களே இவர்கள். “கடவுளின் அவதார பீடத்திலேயே இத்தனைப் பெரிய அவக்கேடா? ஒரு சாமி ஜெயிலுக்குப் போவதா? என்று கேட்கிறார்களே?” என்று கேட்ட போது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். “ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கரும வினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்” என்றார். ஆதிசங்கரருக்கு கடைசி காலத்தில் ஆசனவாய் வியாதி வந்ததாம். இதைச் சொல்லி, “கடவுள் அவதாரமான ஆதிசங்கரருக்கே ஆசனவாய் வியாதியா?” என்று அந்தக் காலத்திலேயே ஒரு விவாதம் எழும்பியதாம். அதற்கு அந்நாளைய சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர் போன்றுதான் விளக்கம் கொடுத்தார்களாம்.

திருட்டு செய்யலாம், கொலை செய்யலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு; அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் திராவிடச் சிசு (!) ஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளம் கேட்டானே, அதுபோல விளக்கம் சொல்லக் கூடும்.

இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே? அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2,500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் தூலமாகவே அந்த இடத்தையே இடித்துப் பார்த்து விட்டால் என்ன?

புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா? அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா?

எப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்?

– கடம்பன்
________________________________________
புதிய கலாச்சாரம் – 2005
________________________________________

 1. பார்பனர்களின் சூத்திரங்களில் ஒன்று தெருக்கு தெரு மது, போதைகளை உட்கொள்ள செய்து அதன் மூலம் வறுமை அடைய வைத்து அடக்குவது, இது தெரியாத மூடர்கள் போதைக்கு அடிமையாகி வருவது தெரிகிறது , இதன் மூலம் அதிகார அடக்கு முறைக்கு எதிராக ஆட்கள் திரட்டுவது குறையும், மூளையின் சிந்தனை குறைக்கபட்டு அடிமை தனம் பெருக செய்வது தான் இதன் நோக்கம்

 2. ஆதாரங்களோடு இந்த பயனுள்ள கட்டுரையை தந்தமைக்கு எனது நன்றியும் பாராட்டுகளும். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ம◌ாற்றாகப் பல புதிய ஆதீனங்களும் மத பீடங்களும் மக்களைத் திட்டமிட்ட மத போதனைக்குள் ஆழ்த்துவதற் கென்றே உருவாக்கப் பட்டதை கடந்த 50 வருடகாலமாகக் காண்கிறோம்.

  மீண்டும் பகுத்தறிவை வளர்க்க இனியொரு பெரியார் வரமுடியாது. உங்களைப் போன்றவர்களின் பொது மக்கள்தான் இப்பணியை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய முயற்சிக்கு இக் கட்டுரை ஒரு முன்னோடியாக அமையவேண்டும். பகுத்தறிவுப் பணி தொடர என் வாழ்த்துகள்.

 3. // “பெரிவாளு”ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர். “மகாப் பெரியவாளும்” கன்னட ஸ்மார்த்தரே. //
  அந்தப் பெரிசின் தமிழ் வெறுப்புக்கு இதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். தமிழ்ப்பிராமணமடத்தில் கூட கன்னடர்களின் ஆட்சியா? 🙂

  • தமிழ் பேசினால் தீட்டு என்று பெரியவர் கூறியதாகச் சொல்லும் மகான் யார்..? தாத்தாச்சாரியார்..!

   • அவர் ஒரு காலத்தில் உங்களுக்கு இனித்தவர்தானே! கடைசி காலத்திலாவது மனசாட்சியுடன் பேசினார்! அவ்வளவுதான்! அவரை ஆதாரங்களுடன் மறுத்தவர் யார்?

    • காஞ்சிப் பெரியவர் அந்த தமிழ் அடியாருக்கும் தனது பொதுவான வழக்கமான பேசாமலேயே ஆசி வழங்கியிருக்கலாமே, அதைவிட்டு அவருடன் தமிழ் பேசினால் தீட்டு அதனால்தான் தவிர்க்கிறேன் என்று தாத்தாச்சாரியாரிடம் கூறினாராம்..!!!

     காஞ்சிப் பெரியவர் தமிழ் பேசினால் தீட்டு என்று தன்னிடம் சொல்லிவிட்டு ஒரு பல்டி அடித்தார் என்று தாத்தாச்சாரியார் கூறினாலும் விரும்பி நம்பும் ஆட்கள் இருக்கும் போது தாத்தாச்சாரியார் ஏன் அளந்து விடமாட்டார்..?! ஆதாரத்தை தாத்தாச்சாரியாரிடம் தான் கேட்க வேண்டும், ஏனென்றால் மேற்படி சம்பவத்தில் தன்னிடம் மட்டும்தான் பெரியவர் அப்படி சொன்னார், வேறு யாரும் பக்கத்தில் இல்லை என்று உஷாராக, சாட்சிகள் இல்லை என்று தாத்தாச்சாரியார் தவிர்த்துவிட்டார்..

     பெரியவரின் வர்ணாசிரம நம்பிக்கைகளை வைத்து அவரை ஒரு தமிழின எதிரியாகவே சித்தரிக்க ஏன் இது போன்ற புளுகுகள்..?!

     • //பெரியவரின் வர்ணாசிரம நம்பிக்கைகளை வைத்து அவரை ஒரு தமிழின எதிரியாகவே சித்தரிக்க ஏன் இது போன்ற புளுகுகள்..?!//

      ஒரு சீனியர் அம்பியின் கூற்று இந்த அம்பிக்கு புழுகா?நாங்கள் எந்த அம்பியை நம்புவது? மொத்தத்தில் எல்லா அம்பிகளும் புலுகர்கள் என்றெ முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது! நன்றி,அம்பிகளே!

      • புளுகில் சீனியாரிட்டி பார்ப்பது சரியல்ல.. நான் கேள்வி கேட்டால் அது எப்படி புளுகாகும்..?!

      • // மொத்தத்தில் எல்லா அம்பிகளும் புலுகர்கள் என்றெ முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது! நன்றி,அம்பிகளே! //

       எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு – அய்யன் (பார்ப்பன அய்யர் அல்ல) திருவள்ளுவர்

 4. //அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் திராவிடச் சிசு (!) ஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளம் கேட்டானே, அதுபோல விளக்கம் சொல்லக் கூடும்.//

  இது தமிழறிவில்லாதவர்களின்ன் தவறான கருத்து.

  உண்மையில் ஞானசம்பந்தரின் “மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம் திண்ண காத்திரு வாலவா யாய்அருள் பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே” என்ற தேவாரத்தில் வரும் தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே என்ற வரிகளின் பொருள்:
  கற்பு < கல் என்னும் வேரினின்றும் தோன்றியது. மேற்கண்ட செய்யுளில் அது "கல்வி, அறிவு, கொள்கை நிலை/உறுதி" ஆகிய பொருள்களில் பயில்கிறது. அதாவ்து "அமணர் என்னும் அறிவிலிகளின் உள்ளத்தில் ஆழந்திருக்கும் சமண மதக் கல்வியைக் கொள்கையை, உறுதியை வேரோடு அழிப்பதற்குச் சிவனே உன் திருவுள்ளம் ஆயத்தந்தானே?" என்று வினவுகின்றார்.

  மேலதிக விளக்கத்துக்கு:

  http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_12.html

  • பாடலில் கற்பு என்றிருப்பதால் சமணப் பெண்களை வலிய இழுத்து வந்து சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.. அடப்பாவமே..!

   • (இந்தத் திராவிடர்களின் (பெண்களை) – மனைவிகளை, தானே ‘கற்பழிக்கத் திருவுளமே’ என்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விபரத்தைப் பண்டிதர்கள் – சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப்பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).
    வியாசன்! பெரியார் 1944-ல் ஆத்திகர் திரு விக , வாரியார் அவர்களை கேட்ட கேள்விக்கு அவர்களே பதிலளிக்க முடியவில்லை! அப்போது நீவிர் எங்கிருந்தீரோ! தெரிந்தால், உங்களிடமே அந்த கேள்வியை கேட்டு தெளிவடைந்திருப்பார்! இதற்கு வேறு பொருளா என்றுநன்றகத்தான் கேட்டிருக்கிரார்! அதென்ன ! பெரியாரை அவமதித்து பேசா நாளெல்லாம் பிறவா நாளே என்று ஏதாவது விரதமா?

    • //உங்களிடமே அந்த கேள்வியை கேட்டு தெளிவடைந்திருப்பார்! இதற்கு வேறு பொருளா என்றுநன்றகத்தான் கேட்டிருக்கிரார்!//

     நீங்கள் எனது பதிவை முழுமையாகப் படிக்காமல் பதில் எழுதியிருக்கிறேர்கள் போல் தெரிகிறது. உங்களின் கேள்விக்குப் பதில் எனது பதிவில் உள்ளது. ‘இது பெரியாரின் கையில் தேவாரம் பட்ட பாட்டைக் காட்டுகிறது. பெரியார் இந்த தேவாரத்தின் உண்மையான பொருளை அறியாது விட்டால் அல்லது அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் குடிஅரசு பத்திரிகையில் எழுது முன்பாக அந்த தேவாரத்தின் உண்மையான பொருளை யாரிடமாவது கேட்டறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர் அப்படிச் செய்யாமல் தன்னிட்டத்துக்கு கருத்து தெரிவித்ததைப் பார்க்கும் எவருக்குமே நிச்சயமாக அவரின் தமிழ் அறிவைப்பற்றி சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது.

     //அதென்ன ! பெரியாரை அவமதித்து பேசா நாளெல்லாம் பிறவா நாளே என்று ஏதாவது விரதமா?//

     நான் எங்கே பெரியாரை அவமதிக்கிறேன். பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதை விட அவரது கருத்துக்களை மற்றவர்கள் விமர்சிப்பதையும், விவாதிப்பதையும் பெரியார் உண்மையில் வரவேற்பார் என்பதை அவரது புரட்சிகரமான, துணிச்சலான எழுத்துக்களையும், சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் படித்தவர்களுக்கு தெரியும். பெரியாரை அறியாத Psycho fans தான், பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை, பெரியாரை அவமதிக்கிறார்கள் என அர்த்தம் கற்பிப்பார்கள் என நினைக்கிறேன். பெரியாரிசம் தமிழர்களுக்கு நன்மை மட்டும் செய்யவில்லை, பெரியாரிசத்தால் தீமையும் விளைந்துள்ளது என்பதை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

     • //பெரியார் இந்த தேவாரத்தின் உண்மையான பொருளை அறியாது விட்டால் அல்லது அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் குடிஅரசு பத்திரிகையில் எழுது முன்பாக அந்த தேவாரத்தின் உண்மையான பொருளை யாரிடமாவது கேட்டறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர் அப்படிச் செய்யாமல் தன்னிட்டத்துக்கு கருத்து தெரிவித்ததைப் பார்க்கும் எவருக்குமே நிச்சயமாக அவரின் தமிழ் அறிவைப்பற்றி சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது.//

      உண்மையான பொருள் என்றால் என்ன? உங்களால் பூசி மெழுகி செய்யப்பட்ட பொருளா? நேரடியான பொருள் வில்லங்கமாக இருப்பதால்தானே குடி அரசு மூலம் கேள்வி கேட்டார்! அந்தக்கால தமிழ் அறிஞர்களும், ஏன் இந்தக்கால அறிஞர் வெங்கடேசன் கூட தயங்குகிரார்களே!
      ஞானசம்பந்தரின் பின்னால் உங்களை போன்ற சைவ, நெறி அல்ல, வெறி பிடித்த கூட்டம் இருந்திருக்கிறது! பிற்காலத்தில் அப்பரையும் அடித்து கொன்றிருக்கிரார்கள்! பல ஜாதியினரை இணைத்து , புதிய சைவ வேளாள நெறியை அமைக்க முயன்றார்! இதில் சேர,சோழ, பாண்டியநாட்டு வேளாளர்களை யெல்லாம் சைவநெறிக்கு திருப்பினார்! ஆனால், வைணவ சமூதாயத்தினரிடம் சமரசம் கண்டது, ராமானுஜரை விரட்டி, கூரத்தாழ்வானை பொசுக்கிய அன்றைய அரசியல் சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை! இப்படிப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் அல்லவா?

      பெரியார் பெருந்தண்மையானவர் என்பதற்காக பொருத்தமின்றி விமர்சிக்கலாமா?

      உங்கள் ஆசிவக யு-டுப் காட்ஷிகளை கண்டேன்! மிகுந்த தன்னம்பிக்கையுடன் கதைத்திருக்கிரீர்கள்!

      நீங்கள் உங்கள் கருத்தை சம்பந்தபட்ட கூட்டத்தாரிடம் மதிப்புரை வாங்கி பின்னர் வெளியிட வேண்டியதுதானே! உங்களை போன்ற மத வெறியாளர்களால் தானே தமிழும் ,தமிழனும் தாழ்ந்து போனான்! சைவமும், வைணவமும் தங்கள், தங்கள் ஆதிக்கத்தை விரிவு படுத்தி, வருமானத்தை அதிகரித்து கொள்ளவும், ஆதிக்கதை நிலைபடுத்திக்கொள்ளவுமே
      முட்டாள் தமிழனுக்கு அய்ஸ் வைத்துநெற்றியில் பட்டையும், முத்திரையும் போட்டது! காரியம் முடிந்தவுடன் மீண்டும் ஆரிய ஆகமம் வந்து உட் கார்ந்து கொண்டது!

      • // நேரடியான பொருள் வில்லங்கமாக இருப்பதால்தானே குடி அரசு மூலம் கேள்வி கேட்டார்! அந்தக்கால தமிழ் அறிஞர்களும், ஏன் இந்தக்கால —— வெங்கடேசன் கூட தயங்குகிரார்களே! //

       பகுத்தறிவாயின் சம்பந்தர், திருநாவுக்கரசரை ஓலைக்கையால் அடித்துக் கொன்றார் என வாய்க்கு வந்தபடி பேசலாம். சாதா அறிவு தயங்கித்தான் பேசும்!

       // பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
       தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. //

       எது நேரடிப்பொருள்? “பெண்ணகத்தெழில்” என்பதை அடுத்த அடியில் உள்ள “கற்பழிக்க’ என்ற சொல்லோடு கொண்டு கூட்டுவதா? அல்லது, அதற்கு அடுத்த சொல்லான “சாக்கிய” என்பதோடு சேர்ப்பதா?

       • உங்கள் வசதிப்படி கூட்டி அவலத்தை மறுக்கலாம்! ஆனால் அந்தக்காலத்தில் சமணர் மேல் பார்ப்பனருக்கு இருந்த காட்டம் எது வேண்டுமானாலும் செய்திருக்கும்! ஆயிரக்கணக்கான சமணமுனிவர்கள் திருமோட்சம் அடைந்ததும், சமணரின் தமிழ் ஏடுகள் மறைந்தது சதியண்றி வேறு என்ன? இன்று எழுதப்படாத எமெர்ஜென்சிநடப்பது போல அன்று பார்ப்பன எமெர்ஜென்சி இருந்தது! மற்றவர்கள் வழக்கம்போல, பார்பனரை அண்டிபிழைத்தனர்! தப்பி பிழைத்த திரிகடுகமும், திருக்குறளும்,நாலடியார், குண்டலகேசி , சீவக சிந்தாமணி போன்றவை பார்பன பக்தி இயக்கத்திற்கு முன்னர் த்மிழ் இருந்த உன்னத நிலையை எடுத்து காட்டுகிறது! மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அனுபவ மொழியல்லவா!

        • பார்ப்பனர்கள் மட்டும் சமணர்கள் மேல் காட்டம் கொண்டிருக்கவில்லை. தமிழன் திருநாவுக்கரசர் கூடத் தான் சமணர்களை எதிர்த்தார், அவரகளுடன் வாதிட்டார். அவர்களும் அவரை எண்ணற்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். கொலை செய்ய முயன்றார்கள். அவர் மட்டுமன்றி, மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் போன்ற தமிழர்களும் சமணர்களை எதிர்த்தனர்.

         • அப்பர் தனது முதுமைக்காலம் வரை, சமண சமயத்தை தலைமை தாங்கி பரப்பி வந்தவரே! அவரை சமணர்கள் கொலை செய்ய முயன்றதும் புராணக்கற்பனையே! கல்வெட்டு ஆதாரங்கள் இன்மையால், சிதம்பரம் கோவிந்தராஜன் சிலையை சோழ அரசன் உடைத்திருக்க மாட்டான் என்று நம்புகிறிர்கள்! அவ்வாறே சமணர்கள் அப்பரை கல்லை கட்டி கெடிலம் ஆற்றில் போட்டதும் வெறும் கட்டுக்கதையாக ஏன் இருக்ககூடாது? தவ யோகிகளாக இருந்த சமண பெரியார்கள் வன்முறை பாதைக்கு எப்படி உடன்படுவார்கள்? இன்று தமிழ அரசியலை பார்த்தாலே ஏமாளித்தமிழனின் நிலை தெரிந்துவிடும்! அன்றும் அப்படித்தன் இருந்திருக்கிரார்கள்! ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என்று மரத்து போனதற்கு என்ன காரணம்?

          சமணர் கோவில்களெல்லாம் மட்டுமல்ல, அவர்தம் தெய்வங்கள் கூட பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு சைவ சிவாச்சாரியர்கள் வசம் சென்றது எப்படி? யோகி சிவனுக்கு பூணுல் போட்டு பெண் தெய்வத்தையும் இனைத்து புராணக்கதைகளும் எப்படி ஏற்பட்டது? தமிழனின் குலதெய்வங்களாக விளங்கும் அய்யனார், வினாயகர், முனி முதிய தெய்வங்கள் சைவ மன்னர்கள் ஆண்ட பகுதியில் திருனீற்று பட்டையுடனும், வைணவ மன்னன் ஆண்ட பகுதியில் நாமத்துடனும் இருப்பது ஏன்? பூசாரிகளும் பார்ப்பன பூசாரிகள் புகுந்து கொண்டனரே! புத்த கயா புத்தர் கோயிலில் இந்து அர்ச்சகரால் தானே பூஜிக்கப்பட்டு வந்தது? சமணர்களும், புத்தர்களும்நாடிய அனைவருக்கும் கல்வி புகட்டினர்!நலந்தா, சிரவண பெலெ குலா முதலிய கல்வி நிலயங்களில் சாதி வித்தியாசமின்றி செர்த்துகொள்ளபட்டனர்! ஆனால் பார்பனியம், குலகல்வியை வெத பாடசாலை மூலம் தன் சாதிக்கு மட்டும் உரியதாக்கிகொண்டது! பாமரனுக்கு பக்திபாடல்களும், அய்ந்தாம் ஜாதியினருக்கு கொபுர தரிசனமும் பெரிய சலுகையாக தரப்பட்டது! இன்றும் தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் தனியார் தொழிற்சாலைகள் போல, அன்று கல்விகற்கும் உரிமை தொழிலாள வர்க்கத்டிற்கு மறுக்கப்பட்டது! சூத்திரருக்கு கல்விகற்பித்த குருனாதர், ரான் ஆட்சியில் கொல்லபட்டார்! கல்விய பரவலாகிய காமராஜர் பதவி இழந்தார், கொல்லப்பட இருந்தார், கடசியில் காங்கிரசிடமிருந்து கழட்டி விடபட்டார்! அவரை வைத்து இன்று ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸ் பார்ப்பனர்களே அவரது மரணத்திற்கும் காரணமானவர்கள் அல்லவா? மக்கள் பக்தி மயக்கத்தில் மதியிழந்தனர் என்பது தானே உண்மை வரலாறு?

          • //அவ்வாறே சமணர்கள் அப்பரை கல்லை கட்டி கெடிலம் ஆற்றில் போட்டதும் வெறும் கட்டுக்கதையாக ஏன் இருக்ககூடாது? தவ யோகிகளாக இருந்த சமண பெரியார்கள் வன்முறை பாதைக்கு எப்படி உடன்படுவார்கள்? //

           அபப்டியானால் “கற்றுணைபூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று சும்மாவா பாடினார் திருநாவுக்கரசர். தேவாரப்பாடல்களில் உள்ள வரலாற்று ஆதாரங்களை ஒவ்வொருவரும் தமது விருப்பத்துக்கேற்றவாறு ஒதுக்கி விட முடியாது. எந்தவொரு உயிரையும் கொல்ல விரும்பாத, கெளதம புத்தரின் புத்தமதாத்தைக் கடைப்பிடிக்கும் சிங்கள பெளத்தர்கள் எப்படி தமிழர்களின் இரத்தத்தைக் குடிக்க ஆசைப்படுகிறார்களோ அது போல் தான் இதுவும். சிங்கள பிக்குகள் தமிழர்களை வெறுப்பதற்கு காரணம், அவர்களின் ஒரேயொரு சிங்கள பெளத்த நாட்டை தமிழர்கள் கூறு போடப் பார்க்கிறார்கள், அது தமது இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும் என்ற சுயநலத்தால் தான். அதே காரணத்துக்காகத் தான், அதாவது திருநாவுக்கரசர் சைவத்துக்கு மதம் மாறி, அதனால் மக்களையும், மன்னரையும் அவரது பேச்சுத் திறனால் சைவத்துக்கு மதம் மாற்றினால், சமணர்களின் இருப்பே கேள்விக்குறியாகி விடும். அதனால், தான் சிங்கள பெளத்தத் பிக்குகள் எவ்வாறு தமிழர்களுக்கெதிராக இனக்கலவரங்களுக்கு தலைமை தாங்கி, தமிழர்களைத் தாக்கினார்களோ அது போலவே, சமண மதகுருக்களும், தமது சீடர்களைத் தூண்டி, அல்லது அவர்களுக்கு தலைமை தாங்கி, அரசனின் ஆதரவுடன் திருநாவுக்கரசரை சித்திரவதை செய்தார்கள் என்றும் கொள்ளலாமல்லவா?

          • //சமணர் கோவில்களெல்லாம் மட்டுமல்ல, அவர்தம் தெய்வங்கள் கூட பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு சைவ சிவாச்சாரியர்கள் வசம் சென்றது எப்படி?//

           அரசர்கள் நாயன்மார்களால் சைவத்துக்கு மாற்றப்பட்டவுடன் பல சமணக் கோயிலகள் அவர்களாலேயே சைவக் கோயில்களாக மாற்றப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக பண்ருட்டியிலுள்ள திருவதிகை வீரட்டானம், முன்பு அது சமண அல்லது புத்தர் கோயில். இன்றும் அங்கு புத்தர் சிலையுள்ளது அல்லது அது சமண தீர்த்தங்கரர் ஆகக் கூட இருக்கலாம்.

           பார்ப்பனர்கள் தான் அவற்றையெல்லாம்செய்தார்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு, ஏன் தமிழர்களே தமது பாரம்பரிய தெய்வங்களின் வழிபாட்டைக் கைவிட விருப்பமில்லாமல், பக்திக் காலத்தில் மறுமலர்ச்சியடைந்த வைதீக சமயத்துடன் தாம் வழிபாட்டு வந்த சமண தெய்வங்களை இணைத்திருக்கலாம், தானே

           இலங்கையில் பல கண்ணகி கோயில்கள், ஆறுமுகநாவலர் சிறுதெய்வ வழிபாட்டை எதிர்த்ததால், இராஜராஜேஸ்வரியம்மன் கோயில்களாக மாறின, ஏனென்றால், ஆறுமுகநாவலரை எதிர்க்கவும் முடியவில்லை, பரம்பரை, பரம்பரையாக வழிபட்டு வந்த கண்ணகியை விடவும் முடியவில்லை. அதனால், அம்மனுடன் இணைத்து வழிபடத் தொடங்கி, அது அம்மன் கோயில்களாக மாறிவிட்டன.( ஆனால் ஒருசில கோயில்கள் இன்றும் கண்ணகியம்மன் கோயில்களாகவே இருக்கின்றன.) கிறித்தவத்தில் கூட, மேரியை கடவுளாக வணங்குவதற்குக் காரணம், ஆரம்ப காலக் கிறித்தவர்கள், அக்கால ரோமர்களிடம் வழக்கத்திலிருந்த பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை, அதனால். அந்த வழியிலேயே இயேசுவின் தாயைத் தாய்க்கடவுளாக வழிபடும் முறை உருவானது. இதேபோல் ஹெயிட்டி(Haiti) தீவுக்கு அடிமையாகக் கொண்டு வறப்பட்ட ஆபிரிக்க அடிமைகள் கிறித்தவ மதத்தை தழுவினாலும், அவர்கள் தமது முன்னோர்களின் ஆவிகள் வழிபாட்டையும் கைவிட விரும்பாமல் , கிறித்தவத்துடன் ஒருங்கிணைத்து தான் வூடு (Voodoo) மதம் உருவாகியது. இலங்கையில் போத்துக்கேயர், டச்சுக் காலத்தில் சம்பளத்துக்காக (ச-ம்-ப-ள-ம்) மதம் மாறிய ‘பஞ்சாட்சரக் கிறித்தவர்கள்’, ஆறுமுகநாவலர் காலத்தில் மீண்டும் சைவத்துக்கு திரும்பினாலும் கூட, கிறித்தவ தெய்வங்களை வழிபடும் பழக்க வழக்கத்தைக் கைவிடவில்லை. இன்றும் கூட பல ஈழத்துச் சைவர்கள், தாம் சுத்த சைவம் என்று கூறிக்கொண்டே கிறித்தவ ஆலயங்களுக்கும் போவார்கள். அதைத் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான், இலங்கைத்தமிழர்களிடையே, இந்து-கிறித்தவ நல்லிணக்கம் காணப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் பூசையறையில் பிள்ளையாருக்குப் பக்கத்தில மடுமாதாவும் சிரித்துக் கொண்டு காட்சியளிப்பார். அதாவது, மக்கள் மதம் மாறும்போது தமது முன்னைய தெய்வங்களை முற்று முழுதாக கை விட்டு விடுவதில்லை. அதே போல் சமணத்திலிருந்து நாயன்மார்களால் சைவத்துக்கு மாறிய, முன்னாள் தமிழ்ச்சமணர்கள் சமண தெய்வங்களையும் சைவத்தில் இணைத்து வழிபடத் தொடங்கியிருக்கலாம்.

       • //பகுத்தறிவாயின் சம்பந்தர், திருநாவுக்கரசரை ஓலைக்கையால் அடித்துக் கொன்றார் என வாய்க்கு வந்தபடி பேசலாம். சாதா அறிவு தயங்கித்தான் பேசும்!//

        பெரியாரையும், திராவிட இயக்கத்தினரையும் பழிக்கும்போது இந்த தயக்கம் இல்லமல் போனதேன்?

      • // ராமானுஜரை விரட்டி, கூரத்தாழ்வானை பொசுக்கிய அன்றைய அரசியல் சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை!//

       ராமானுஜரை விரட்டி அடித்து, கூரத்தாழ்வான், பெரிய நம்பிகள் ஆகியோர் கண்களை குருடாக்கினான் கிருமி கண்ட சோழன் என்ற சைவ வெறி பிடித்த மன்னன் என்பது ராமானுஜர் பற்றிய மத நூல்களில் கூறப்படும் கதை. இது உன்மையான வரலாறா என தொல்லியல் அறிஞர் நாகசாமி ஆராய்ந்து நூல் எழுதியுள்ளார். ராமானுஜர் கால சோழ மன்னர்கள் வைணவத்திற்கு ஆற்றிய பணிகள் அடிப்படையில் இது ஒரு கட்டுக்கதை என்ற முடிவுக்கு வருகிறார்.

       http://www.tamilartsacademy.com/ramanuja.asp

       இதற்கு மறுப்பு தெரிவிக்கும் கட்டுரை ஒன்று கீழே.

       http://www.sishri.org/ramanuja.html

       இந்த கட்டுரை ராமானுஜரை ஒரு சோழ மன்னன் விரட்டியது உண்மை. ஆனால், சைவ-வைணவ சண்டையால் அல்ல. அது ஒரு பங்காளி சண்டை என கூறுகிறது.

       நூலும், கட்டுரையும் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முறையைக் காணுங்கள். எத்தனை தரவுகள், ஆவணங்கள், கல்வெட்டுகள்.

       நீங்கள் “அப்பரை உலக்கையால் அடித்துக் கொன்றார்கள்” என சும்மா கதை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு துண்டு சீட்டு ஆவணமாவது காட்டுங்களேன் ஐயா!

       • வெங்கடேசன் !நீங்களே இப்படி சறுக்கலாமா? திரு.நாகசாமி அவரது வலைப்பதிவில் ஸ்ரிரங்கம் கோவில் ராமானுஜர் கட்டுப்பாடில் இருந்ததற்கும் , இதர மிகைப்படுத்தப்பட்ட சாதனைகளுக்கும் ஆதாரமும் இல்லை என்கிறார்; கல்வெட்டு அறிஞர் என்பதால் அப்படி சொல்கிரார்!

        “இராமானுஜர் மிகச் சிறந்த ஒரு வேதாந்தியே தவிர, ஒரு சீர்திருத்தவாதி என்பதற்கோ, திருவரங்கம் கோயிலை நிர்வகித்தார் என்பதற்கோ, சோழ அரசனால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இராமானுஜரை, ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு புரட்சியாளர் என்று சித்திரிப்பதற்காக வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே, வைணவர்களால் புனையப்பட்ட இக்கட்டுக்கதைகள்; சொல்லப்போனால் சோழ அரசர்கள் சமயப் பொறை மிக்கவர்கள்; பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில் இடுவதென்பது சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைக் கடலில் இட்ட செயலை ஒட்டக்கூத்தர் தம்முடைய மூவர் உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் சற்று மிகைப்படுத்திக் கூறிவிட்டார்; அவ்வளவுதான்.”

        அய்யா! இது உங்கள் சைவ வைஷ்ணவ சண்டைதான்!

        சிதம்பரம் திருசித்திரகூடம் இடிக்கப்பட்டு பின்னர் சமரசத்திற்கு பின்னர், பலகாலம் கழித்து, மீண்டும் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம்நடராஜர் கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்க, தில்லைகோவிந்தராஜர் இருப்பிடம் மேற்கட்டுமானம் மட்டும் செஙற்களால் கட்டப்பட்டுள்ளமை இன்றும் காணலாம்!

        ஸிஸ்ரி.ஆர்க் அதை மறுத்து சொல்வதாவது:

        ”தமக்குப் பின்னால் மடத்தை நிர்வகிப்பதற்குக் கலப்பின பட்டர் ஒருவரைத் தமது வாரிசாக நியமித்ததன் மூலம் இராமானுஜர் வைணவ சமயம் என்பது மக்கள் சமயம் என்பதை நிலைநாட்டினார். அதே வேளையில் வாரிசு அரசியலைச் சார்ந்தும், வருணக் காப்புச் சட்டங்களைச் சார்ந்தும் ஆட்சி நடத்திய சோழ அரச குலம் சமூக-அரசியல் நிர்பந்தங்களை எதிர்கொள்வதற்காக ஹொய்சள அரச குடும்பத்துடன் கொண்ட உறவின் காரணமாகத் தனது தனித் தன்மையை – குலப் பெருமித உணர்வை – இழந்தது. இரண்டாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி. 1163 அளவில் சோழ அரச குடும்பத்தில் வாரிசு குறித்த குழப்பம் ஏற்பட்டது.30 1190 அளவில் குறுநிலத் தலைவர்களின் எழுச்சியாலும் குகையிடி கலகங்கள்31 போன்றவற்றாலும் சோழர் ஆட்சிக்கும் நடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கத்தைத் தவிர்க்கின்ற நேர்ச்சையாகவே ”நடுக்கந்தவிர்த்த ஈசன்” (கம்பஹரேஸ்வரர்) கோயில் குடந்தைக்கு அருகிலுள்ள திரிபுவனத்தில் எழுப்பப்பட்டது. இறுதியில் கி.பி. 1218இல் பாண்டியர் படையெடுப்பின் விளைவாகச் சோழ அரச குலமே நிலை குலைந்து போனது; கி.பி. 1278க்குப்பின் சோழ அரசே சுவடின்றி மறைந்தது. திருவாரூர்த் தியாகராசர், கிருமி கண்ட சோழன் வைணவத்துக்கும் இராமானுஜர்க்கும் இழைத்த கொடுமையால் சோழ அரச வம்சமே ஆட்சியிழந்து போகச் சபித்துவிட்டார் என வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன.32 உயர்ந்தோரின் உள்ளக் கொதிப்பில் விளைந்த சாபங்கள், செல்வத்தைத் தேய்க்கும் படையாக வடிவெடுத்த அற்புதங்கள் பல, காவியக் காட்சிகளாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றை நம்புவதும் நம்பாதிருப்பதும் நம் விருப்பம். இராமானுஜர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் இத்தகைய அற்புத நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், இராமானுஜரின் வெகுஜனச் செல்வாக்கு என்பது கேள்விக்கிடமற்ற வரலாற்று உண்மை எனத் தெரிகிறது. இதுவே இரண்டாம் குலோத்துங்கன் இராமானுஜர்மீது கொண்ட காழ்ப்புணர்வுக்கு முதன்மையான காரணம் என்றும் நம்மால் உய்த்துணர முடிகிறது.

        திரைக்குப்பின்

        இராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே ஹொய்சளர் ஆட்சிப் பகுதியில் வீரசைவத் தத்துவத்திற்கும் விசிஷ்டாத்வைதத் தத்துவத்திற்கும் இடையே ஓர் உரையாடல் தொடங்கிவிட்டது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று குறிப்பிடும் அத்வைத ஞான விசார மரபினை ஒரு பெரும் தெய்வத்தின்மீது பக்தி செலுத்துகின்ற சரணாகதித் தத்துவத்துடன் இணைத்து விசிஷ்ட அத்வைதமாக இராமானுஜர் உருவாக்கினார். கோயில் வழிபாடுகள், நிர்வாகம் ஆகியவற்றில் விசிஷ்ட அத்வைதிகள் ஈடுபடுவதற்கு இத்தத்துவம் ஒருவித நியாயத்தைக் கற்பித்தது. விசிஷ்டாத்வைதிகளைப் பின்பற்றி அத்வைதிகள் பலர் சைவ சமயக் கோயில் வழிபாடுகளிலும் நிர்வாகத்திலும் ஈடுபடுகின்ற வழக்கம் அதன்பிறகே பரவலாயிற்று. சோழ நாட்டுச் சைவ சமயத்துக்குத் தத்துவ வடிவம் கொடுத்துச் சித்தாந்த சைவமாக அதனை முழுமைப்படுத்துகிற முயற்சியும் இதே காலகட்டத்தில் உருவாயிற்று. கி.பி. 1232ஆம் ஆண்டளவில்33 திருவெண்ணெய்நல்லூர் உடையார் மெய்கண்ட தேவர் சிவஞானபோதம் எழுதிச் சைவ சித்தாந்தத்தின் முதன்மைச் சந்தான குரவராக உருவெடுத்தாரெனில் அதற்கு அருணசமுத்திரத்தை (திருவண்ணாமலையை)த் தங்களுடைய துணைத் தலைநகராகக்கொண்டு செயல்படத் தொடங்கிய ஹொய்சளர்களின் சமூக அரசியல் ஆதிக்கம் முதன்மையான காரணமாகவும், இராமானுஜருடைய விசிஷ்டாத்வைதத் தத்துவத்தின் உருவாக்கம் உந்து சக்தியாகவும் அமைந்தன என்பதில் ஐயமில்லை. ”படமாடக் கோயில் பகவர்க் கொன்றீயில் நடமாடுங் கோயில் நம்பர்க் கங்காகா” என எழுதிய திருமூலரின் பதி – பசு – பாசத் தத்துவத்திற்கும், கோயில் வழிபாட்டு மரபில் மக்களின் பங்கேற்பு, அரசியல் ஆதரவு ஆகியவற்றையே அடித்தளமாகக்கொண்டு எழுப்பப்பட்ட சோழர் காலச் சைவ சமயத்திற்குத் தத்துவ வடிவம் வழங்கிய மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டால் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தம் உருவாவதற்குரிய நியாயத்தை ஏற்படுத்தியது இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமே என்பது விளங்கும்.

        கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இராமானுஜரின் கன்னட மடத்துச் சந்தானத்தின் ஐந்தாம் தலைமுறைக் குரவரான இராமானந்தரால் மராட்டிய மாநிலம் கோலாபுரிப் பகுதியிலும் வைணவம் பரவிற்று. தலையில் சிவலிங்கத்தைத் தரித்த விடலைக் கண்ணன் (விட்டலர் / விட்டோபா) வழிபாடு விஜயநகரத் தலைநகரான ஹம்பியில் உருவாகிப் பண்டரிபுரத்தில் பரவுவதற்கு வைணத்திற்கும் வீர சைவத்திற்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் முதன்மையான காரணமாயிற்று. இன்றைய சபரிமலை யாத்திரை போலச் சமூகத்தின் அனைத்து மட்டத்தைச் சேர்ந்த மக்களும் பங்குபெறும் வர்க்கரி யாத்திரை விட்டலர் வழிபாட்டின் தனித்த அடையாளமாயிற்று. விட்டலர் வழிபாட்டையும் வர்க்கரி யாத்திரை மரபையும் இந்து சமயத்தின் புராடஸ்டண்ட் இயக்கமாகவே சில வரலாற்றாசிரியர்கள் உருவகித்து எழுதியுள்ளனர். இத்தகைய ஜனநாயகப் போக்குகள் இராமானுஜர் விதைத்த விதையிலிருந்து முளைத்த விருட்சங்களே ஆகும்.

        (இராமானுஜர் தொடர்பான பதிப்பிக்கப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகளைத் தொகுத்து வழங்கிய, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கல்வெட்டு ஆய்வாளர் கே. எஸ். சம்பத் அவர்களுக்கு நன்றி.)

        அடிக்குறிப்புகள்:

        1. பக். 113-130, ஆழ்வார்கள் வழிக்குரவர் வரலாறு – இரண்டாம் புத்தகம், கா.ர. கோவிந்தராச முதலியார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 1, 1975. ‘திருமறுமார்பன்’ என்ற இயற்பெயருடைய, காஞ்சியையடுத்த கூரம் கிராமத்தின் நாடாள்வார் (கிராமணி) இவர் எனக் கொள்வது தென்கலை வைணவ மரபு.

        2. “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற எனது நூலில் இது குறித்து விரிவாக விவாதித்துள்ளேன். (பதிப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113, 2004.)

        3. தங்களுடைய ஆட்சியிலடங்கிய பாண்டி மண்டலத்தை நிர்வகிப்பதற்காகச் சோழ அரச வம்சத்தவர்களே சோழ பாண்டியன் என்ற பெயரில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் வழக்கம் கி.பி. 1021 முதல் நடைமுறையிலிருந்தது. இந்நடைமுறை கி.பி. 1080இல் முடிவுக்கு வந்தது. பார்க்க: ப். 46, Tகெ Cகொலச், ண்.ஸெட்குரமன், Pஉப்லிச்கெர்ச்: றமன் & றமன், Kஉம்பகொனம்.

        4. ப். 107, Tகெ Cகொலச், ண்.ஸெட்குரமன்; “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் -இதழ் 75 – அக். 2008. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8. (பார்க்க: க்ட்ட்ப்://ந்ந்ந்.சிஷ்ரி.ஒர்க்/சுன்கம்.க்ட்ம்ல்)

        5. ஒட்டக்கூத்தரின் மூவருலாவில், “பொற்றுவரை இந்துமரபில் இருக்குந் திருக்குலத்து வந்து மனுக் குலத்தை வாழ்வித்த பைந்தளிர்க்கை மாதர்ப்பிடி” என விக்கிரம சோழனின் தாயான ஹொய்சள குலப் பெண்மணி குறிப்பிடப்படுகிறாள். பார்க்க: பக். 126, தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், பாகம் 3, பகுதி 2, சரித்திரக் குறிப்புகள், தி. நா. சுப்பிரமணியன்.

        6. பக். 434, சோழர்கள், பாகம் – 2, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, மொழிபெயர்ப்பு: கே.வி. இராமன், நியூ செஞ்ரி புக் ஹவுஸ், சென்னை.

        7. விக்கிரமன் கி.பி. 1118இல் சோழ அரசனாக முடிசூடிய பின்னர் தன்னுடைய கல்வெட்டுகளில், “பூமாலைமிடைந்து” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியைப் பொறிக்கச் செய்தான். அம்மெய்க்கீர்த்தியில், தனது குழந்தைப் பருவத்திலேயே தான் வேங்கி மண்டலத்தில் ஆட்சிபுரிந்ததாகவும், படைக்கலன் தாங்கித் தெலுங்க வீமனின் தென்கலிங்கத்தைத் தாக்கியதாகவும் குறிப்பிடுகிறான்.

        (“தெலுங்கவீமன் விலங்கல் மிசையேறவும்
        கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
        ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
        வேங்கை மண்டலத்து ஆங்கினிதிருந்து
        வடதிசை யடிப்படுத்தருளி”)

        8. பக். 133, தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்,- பாகம் 3, பகுதி 2, சரித்திரக் குறிப்புகள். (மூன்றாம் பராந்தகன் 1119இல் இறந்தான் என்பதை வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.)

        9. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் எனப்படும் திருவயோத்திப் பெருமாள் கோயிலில் மூன்றாம் பராந்தகனின் கி.பி. 1110-ஆம் ஆண்டுக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் இராமானுஜர் மதுராந்தகத்திலிருந்தார் எனத் தெரிகிறது.

        10. இந்த மந்திரம், ”ஒம் நமோ நாராயணாய” என்பது மட்டுமே எனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இது ஓர் இரகசிய மந்திரமே அன்று; திவ்யப் பிரபந்தத்திலேயே இருப்பதுதானே? எனவே இதை உலகறிய இராமானுஜர் வெளிப்படுத்தினார் என்பதில் என்ன பெருமையிருக்க முடியும்?’ என்று ஆய்வறிஞர்கள் சிலரால் கேள்வியும் கேட்கப்படுகிறது. (பார்க்க: றமனுஜ – Mய்த் அன்ட் றெஅலிட்ய், ற். ணகச்நம்ய்.) மறை மொழிகளை உலகறிய வெளிப்படுத்தியதன் பின்னணியாக விளங்கிய ஜனநாயக உணர்வுகளே நம் கவனத்துக்குரியவை ஆகும்.

        11. கி.பி. 1158ஆம் ஆண்டுக் கல்வெட்டு. மேற்குறித்த தொண்டனூர் கிருஷ்ணாபுரம் கல்வெட்டுகள் பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: ப்ப். 37-40, ஆர்ச்கஎஒலொக்ய் இன் Mய்சொரெ – ஆன்னுஅல் றெபொர்ட்ச் – 1906-1911 – Vஒல். ஈ ப்ய் ற். ணரசிம்கச்கரி, ஏடிடெட் ப்ய் T. T. ஸ்கர்மன் & K. ணரயன ஈயென்கர், Tகெ Mய்ட்கிச் ஸொசிஎட்ய், Bஅன்கலொரெ-2, 1973.

        12. களங்கமற்றவன் எனப் பொருள்படும் அகளங்கன் என்ற பட்டப்பெயர், சோழ அரசர்களுள் விக்கிரமசோழனுக்குரிய சிறப்புப்பெயராகும். பார்க்க: பக். 331; 665-667, பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம். 1974. (”விக்கிரம சோழ அகளங்கன்” என்றே ஒட்டக்கூத்தர் குறிப்பிட்டுள்ளார்.)

        13. காடு எனப் பொருள்படும் வனம் என்ற சமஸ்கிருதச் ¦¡ல்லின் அடியாக வன்யர் என்ற சாதிப்பெயர் உருவாகியிருக்க வேண்டும். காடவர் குலத்தவர் குடிப்பள்ளி என்றும் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படுகின்றனர்.

        14. ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச் – Vஒல். XXஈV. ணொ. 111, 112, 113, 117, 118, 119, 120, 121(ஆ.ஸ்.ஈ., 1982.

        15. கோயிலொழுகு – பகுதி 1, பாகம் 1, அத்தியாயம் 12, 22, பதிப்பு: அ. கிருஷ்ணமாச்சாரியார், வைஷ்ணவ ஸ்ரீ, ஸ்ரீரங்கம், 25.03.2005.

        16. மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய குலோத்துங்க சோழ தேவற்குக் குலதனமாய் வருகிற கோயிலில் – – – அடையவளஞ்சான் திருமாளிகை இத்திருப்பணிகளும் தாயிலு நல்லானான குலோத்துங்கசோழ வாணகோவரையர் ரக்ஷை. (ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் XXஈV,நொ. 133.

        17. சோழர்களின் மேலாதிக்கத்தை ஏற்ற ‘கட்டி தேவயாதவராயன்’ என்ற சிற்றரசன், இராமானுஜரின் ஆலோசனை பெற்றுத் திருப்பதிக் கோயில் திருப்பணிகள் செய்தான் என வைணவ நூல்கள் கூறுகின்றன. இவன், கி.பி. 1139ஆம் ஆண்டுக்குரிய காளத்திக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளான். (ஆன்னுஅல் றெபொர்ட் ஒன் ஏபிக்ரப்க்ய் – 83/1922.)

        18. கி.பி. 1156 வரை திருவரங்கம் கோயில் நிர்வாகத்தில் இராமானுஜருக்கோ, அவருடைய அடியார்களுக்கோ சிறு பங்கும்கூட இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரம் இல்லை என இரா. நாகசாமி தம் நூலில் எழுதியுள்ளார். சமகாலத் திருவரங்கம் கல்வெட்டுகளில் ஆதாரம் இல்லை என்பது உண்மையே. திருவரங்கத்தில் நடைமுறையிலிருந்த கோயில் நிர்வாக அமைப்பு, இராமானுஜருடன் நேரடித் தொடர்பற்ற பாரம்பரிய அமைப்பாக இருந்திருக்கலாம். எனவே, இதனை மட்டுமே தமது வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டுவது பொருத்தமற்றது.

        19. விஷ்ணு வர்த்தனனின் மனைவி சாந்தலாதேவி, ஜைன சமயத்தைப் பின்பற்றிய கொங்காள்வர் குலச் சிற்றரசனின் மகளாவாள். இதனையொட்டி விஷ்ணு வர்த்தனன் பற்றிய கதை புனையப்பட்டிருக்கலாம்.

        20. விக்கிரம சோழனின் தலைமையமைச்சனாகத் திகழ்ந்த மாவலி வாணாதிராயன், திருவாரூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறான். (ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் V,நொ. 455.) வாணாதிராயர்கள், “வெட்டு மாவலி அகம்படியர்கள்” எனப் பிற்காலத்தில் குறிப்பிட்டுக்கொண்டனர்.

        21. ஆன்னுஅல் றெபொர்ட் ஒன் ஏபிக்ரப்க்ய் 389/1922.

        22. சம்புவரையர்களின் சமஸ்கிருதக் கல்வெட்டு, “ஜம்புகேஸஸ்ய சாசனம்” எனக் குறிப்பிடப்படும். ஜம்புகேசம் என்ற பெயரும் செங்கழுநீர் மலரும் சிவ வழிபாட்டோடு தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. (இதனையொட்டி, காஞ்சி ஏகாம்பரநாதர் பெயரைத் தமது பெயராகக்கொண்ட சைவ சமயச் சம்புவரையர்களும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர் என்பது உண்மையே.) ஆனால், இவை நீர்வழிபாட்டோடு – வருணன் வழிபாட்டோடு – தொடர்புடையவை என்பதே பூர்விக மரபாகும். அந்த அடிப்படையில் நீர்த் தெய்வமாகிய நாராயணனின் அடியார்களாகவே அவர்கள் தொடக்கத்தில் இராமானுஜரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்.

        23. கருணாகரத் தொண்டைமான், திருவரங்கன் என்ற இயற்பெயருடைய வைணவனாவான். கி.பி. 1103ஆம் ஆண்டுக்குரிய திராட்சாராமக் கல்வெட்டு இவ்விவரத்தைக் குறிப்பிடுகிறது. (ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் XXஈஈ,நொ. 23.) கருணாகரத் தொண்டைமானின் மனைவி அழகிய மணவாளினி மண்டையாழ்வார் என்ற பெயருடையவள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1113ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறாள். (ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் V,நொ. 862.)

        24. ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி (தாழிசை 777), குலோத்துங்க சோழன் உலா (கண்ணி 77-78), இராசராசன் உலா (கண்ணி 65-66) ஆகியவற்றால் இவ்வுண்மை தெரியவருகிறது. (பார்க்க: பக். 344, பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974.)

        25. ப். 53, றமனிஜ – Mய்த் அன்ட் றெஅலிட்ய், ற். ணகச்நம்ய்.

        26. தமது சித்தாந்த ஆதிக்கத்துக்குச் சவாலாக விளங்குகிற அல்லது ஆதிக்க சித்தாந்தம் என்று தம்மால் அடையாளம் காட்டப்படுகிற படிமங்களைத் தகர்ப்பது என்பதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாக, ”தில்லை நடராசரையும் ஸ்ரீரங்க நாதரையும், பீரங்கி வைத்துப் பிளந்தெறிவது எந்நாளோ” என்ற திராவிட இயக்க முழக்கத்தைக் குறிப்பிடலாம்.

        27. பக். 227, தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் – தி.நா.சு மேலே மேற்கோள் காட்டப்பட்டது.

        28. “மலைநாட்டு வேண்ணாட்டடிகள் ஸ்ரீகோதை ரவிவர்மர்… மாணிக்கம், முத்து, பொன்…. எம்பெருமானார் அருளிச் செயல் படியே கைக் கொண்டு” – ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் XXஈV,நொ. 125.

        29. ஸொஉத் ஈன்டிஅன் ஈன்ச்ச்ரிப்டிஒன்ச், Vஒல் XXஈV,நொ. 192.

        30. பல்லவராயன்பேட்டைக் கல்வெட்டு, ஏபிக்ரப்கிஅ ஈன்டிச, Vஒல் XXஈ,நொ. 31.

        31. ஆன்னுஅல் றெபொர்ட் ஒன் ஏபிக்ரப்க்ய், 471/1912.

        32. திவ்யசூரி சரிதம் XVஈஈஈ:84.

        33. மெய்கண்டார், செங்குன்ற நாட்டு மாத்தூரான ராஜராஜ நல்லூரில் தமது பெயரால் மெய்கண்டீச்சுரம் என்ற சிவாலயம் எடுப்பித்து, மெய்கண்ட தேவப் புத்தேரி வெட்டுவித்து இறையிலி நிலமும் வழங்கிய செய்தி கி.பி. 1232க்குரிய திருவண்ணாமலைக் கல்வெட்டில்குறிப்பிடப்படுகிறது.”

        திரு.னாகசாமிக்கு கிட்டாத ஆவண சான்றுகளும் குறிப்பிட்டமை காண்க!

        • அஜாதசத்ரு,
         நீங்கள் கட்டுரையில் புத்தகத்தை பற்றி சொல்லி இருந்த ஒரு பத்தியை பற்றி மட்டும் சொல்கிறீர்கள். நூலில் கூரத்தாழ்வான் கண்ணை சோழன் குருடாக்கியது என்பது நடக்கவில்லை என நாகசாமி கூறுகிறார்.

         நாகசாமியும் ராமானுஜர் தொடர்பான சைவ-வைணவ சண்டையை மறுக்கிறார். மேலே சொன்ன கட்டுரையும் சைவ-வைணவ சண்டை நடந்தது என கூறவில்லை.

         சரி. இவர்கள் இவ்வளவு ஆதாரங்கள் கொடுத்து பேசுகிறார்கள் அல்லவா. அப்பரை அடித்துக் கொன்றதற்கு இப்படி ஆதாரம் ஏதாவது தாரும்.

         • திரு,நாகசாமி கூறுவது:
          “இராமானுஜரை, ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு புரட்சியாளர் என்று சித்திரிப்பதற்காக வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே, வைணவர்களால் புனையப்பட்ட இக்கட்டுக்கதைகள்; சொல்லப்போனால் சோழ அரசர்கள் சமயப் பொறை மிக்கவர்கள்; பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில் இடுவதென்பது சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைக் கடலில் இட்ட செயலை ஒட்டக்கூத்தர் தம்முடைய மூவர் உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் சற்று மிகைப்படுத்திக் கூறிவிட்டார்; அவ்வளவுதான்.”
          திரு,நாகசாமி வைணவர்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்று சொல்வது , பங்காளி சண்டைக்காக அல்ல, சைவ மன்னனை குற்றவாளியாகவும், ராமானுஜரை பாதிக்கப்பட்டவராகவும் காட்டியது திட்டமிட்ட அரசியல் சதியல்லவா? இவர்களால் பரப்பட்ட அத்தனை கதைகளிலும் எது உண்மை? எது பொய்?

          கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைக் கடலில் இட்ட செயலை, ஒட்டக்கூத்தர் ஏன் மிகைப்படுத்தவேண்டும்? அதிலும் சோழனது அவைப்புலவராக இருந்தவர், அரசனுக்கு அபகீர்த்தி ஏற்படுமாறு எதற்கு கூற வேண்டும்? சைவர்நாகசாமி சொழன் பெருமையை காப்பாற்ற நினைப்பது புரிகிறது! ஆனால் சிதையுருவம் சிதைந்தது எவ்வாறு?

      • //உங்கள் ஆசிவக யு-டுப் காட்ஷிகளை கண்டேன்! மிகுந்த தன்னம்பிக்கையுடன் கதைத்திருக்கிரீர்கள்! நீங்கள் உங்கள் கருத்தை சம்பந்தபட்ட கூட்டத்தாரிடம் மதிப்புரை வாங்கி பின்னர் வெளியிட வேண்டியதுதானே!//

       நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், புரியும்படி சொல்லவும். 🙂

       // சைவமும், வைணவமும் தங்கள், தங்கள் ஆதிக்கத்தை விரிவு படுத்தி//

       சைவமும்(திருமாலியம் உட்பட) தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை.

     • திரு வியாசன் அவர்களே! உஙகள் வலைபக்கத்திலேயே அன்பரோருவர், த்ற்காலத்தில், சீர்காழி கோவில் திருவிழாவில் எப்படி அந்தநிகழ்வு நடிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிரார்! உங்கள் கருத்தை நீஙகள் தைரியமாக கூறலாம்! தெவையில்லாமல் பெரியாரை இழுத்தது யாரை திருப்திப்படுத்த?

      பார்க்க:
      Adhiraj said… Best Blogger TipsReply To This Comment
      நணபருக்கு வணக்கம், சம்பந்தர் தேவராத்திற்க்கு புதிய விளக்கத்தையும் கண்டேன் ஏதோ பெரியார் கையில் தேவாரம் சிக்கி அல்லல் பட்டதாக் கூறி உள்ளீர்கள்…தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம் இந்த வழக்கம் பல காலம் நடந்த வரலாறு தங்களுக்கு தெரியுமா ….
      December 14, 2013 at 6:56 PM

      • அந்த அன்பருக்கு(Adhiraj )நான் எனது வலைப்பதிவிலேயே பதிலளித்துள்ளேனே நீங்கள் பார்க்கவில்லையா? 🙂

       ‘மன்னிக்கவும் எனக்கு அதைப்பற்றி தெரியாது. அப்படி அந்த முட்டாள்கள் செய்வார்களேயானால், பெரியாரைப் போன்றே அவர்களுக்கும் அந்த தேவாரத்தின் உண்மையான பொருள் தெரியாது என்பது தான் கருத்து. அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

       ஓதுவார்களுக்கும் சிவாச்சாரியார்களுக்கும் பயிற்சியளிக்கும் தமிழக அரசு தேவாரங்களை எப்படிப் பாடுவதேன்று மட்டும் சொல்லிக் கொடுக்காமல் அவற்றின் பொருளையும் கற்பிக்க வேண்டும், அவர்களுக்கு அதில் தேர்வு வைக்க வேண்டும். உதாரணமாக இலங்கையில் சைவசமயம் ஒரு பாடமாக மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. விரும்பினால் இந்து கலாச்சாரத்தை ஒரு பாடமாக பல்கலைக் கழகங்களிலும் கற்கலாம். அதாவது எங்களின் குழந்தைகளுக்குக் கூட தேவாரம் கற்பிக்கும் போது அதன் பொருளும் விளக்கப்படுகிறது.

       உங்களைப் போன்ற தமிழர்கள் சீர்காழில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும் பொது உண்மையான பொருளை எடுத்துக் கூறலாம். அல்லது அறநிலையத்துறைக்கு அறிவித்து, அந்த விழாவில், அப்படி, முட்டாள் தனமாக உளறுவதை நிறுத்தச் செய்யலாம். உண்மை திரிக்கப்படுவதை தட்டிக்கேட்பதில் தவறில்லை’.

       • இந்த நிகழ்ச்சி தமிழக அறனிலயதுறையினாலோ, ஒதுவார்களாலோ இன்றைக்கு ஏற்படுத்திய வழிபாடுநிகழ்ச்சி அல்ல! பல்லாண்டுகளாக வழி வ்ழியாகநடந்து வரும் பழக்கம்!

        மதுரைக்கருகில் திருமங்கலத்தில் ஒருநிகழ்ச்சி:
        ”…..திருமங்கலத்தைச் சேர்ந்த பத்திரகாளி மாரியம்மன் கோயில் பழைய குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் உள்ள தகவல்கள் இவை. அக்காலத்திய தமிழில் உள்ளது. இதில் திருஞானசம்பந்தர் கூட்டத்தார் நிகழ்த்திய அனல்வாதம், புனல்வாதம் என்பது மோசடி என்று கூறப்பட்டிருப்பதைப் படித்தபோது திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் பற்றிக் கூறியதை ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது.

        பழைய குறிப்பில் கிட்டும் செய்திகள்:
        சமணர்களுக்கு எதிராக பொறாமை பேதகமாய் நடந்து, திருவிளையாடல் செய்து தேவாரம், திருவாசகம் பல ஏடுகள் இயற்றியிருப்பதால் இத்திருமங்கலம் ஸ்ரீ பத்ரகாளி மாரியம்மன் மகா உற்சவத்தில் ஆறாம் நாள் கழுவேற்றயாகத்தில் சம்பந்த மூர்த்திகளும், சமணாசிரியர்களும் தர்க்க வாதம் பேசி வேத சாஸ்திரம் போட்டி நடைபெறுகிற படியால் ஜனங்கள் யாபேரும் சாந்தமாய் இருந்து, சரித்திரம் தெரிந்து, நியாயமானதை அறிந்து இல்லறத்துறவு என்பதனை நிதானித்து நியாயங்களை புகழ்வீர்கள் என மகாகுருவை வணங்கி மகிழ்கிறோம்.”

        திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும்
        வரலாறும், உண்மையும் இடறுகிறது !

        முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

        றெஅட் மொரெ: க்ட்ட்ப்://விடுட்கலை.இன்/கொமெ/34-டமில்னடு-னெந்ச்/2939-2011-02-07-09-28-27.க்ட்ம்ல்#இxழ்ழ்2ன்Z0ப்ஜ்ட்2க்

        • இந்தக் கழுவேற்றல் என்பது உண்மையில் கழுவிலேற்றி ஒவ்வொருவராகக் கொல்லுவதல்ல, தோல்வியை ஒப்புக் கொள்ளுதல், அதாவது தமது உத்தரீயத்தைக் கழற்றி கழுமரத்தில் வீசுதல், அதாவது அவர்களின் அறிவும், பாண்டித்தியமும் தோற்று விட்டதாகப் பொருள் என்ற கருத்தைக் கூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றும் தமிழில் துண்டை எறிந்து விட்டுப் போவது என்பது போன்றது. அதைவிட இந்தக் கழுவேற்றம் பற்றி சமணர்களது எந்த நூல்களிலும் இல்லையாம். எண்ணாயிரம் பேரைக் கொன்றிருந்தால், நிச்சயமாக சமணர்கள் தமது நூல்களில் எழுதியிருப்பார்கள். சைவர்களை வசை பாடியிருப்பார்கள் அல்லவா. அந்தக் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

         அதிலும், எண்ணாயிரவர், மூவாயிரவர் எல்லாம் வெறும் சாதி அல்லது clan பெயர்கள் தானாம். சரியாக 8000 பேரும் 30000 பேர் மட்டும் தான் அந்தக் குழுவினரில் இருப்பார்கள் அல்லது அவர்களின் எண்ணிக்கையில் கூடினாலும் கூட கொன்று விடுவார்கள் என்றேல்லாம் கருத்தல்ல. அது வெறும் சாதி அல்லது Clan பெயர் தான். தில்லை தீட்சிதர்களின் 2999 +1 (நடராசர்)கதையும் அவர்களின் கற்பனை தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அது போல் தான் சரியாக எண்ணாயிரம் பேரைக் கழுவிலேற்றினார்கள் என்ற கதையும். 🙂

        • Adhiraj said:

         “சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம் ”

         //இந்த நிகழ்ச்சி தமிழக அறனிலயதுறையினாலோ, ஒதுவார்களாலோ இன்றைக்கு ஏற்படுத்திய வழிபாடுநிகழ்ச்சி அல்ல! பல்லாண்டுகளாக வழி வ்ழியாகநடந்து வரும் பழக்கம்!//

         அந்த அன்பர் ஆதிராஜ்க்குக் கூட இன்னும் அப்படி நடக்கிறதா என்று சரியாகத் தெரியாது. அதனால் தான் கேட்பார்களாம், பாடுவார்களாம், விமர்சிப்பர்களாம்.. என்று ‘ளாம்’ போடுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் அது “பல்லாண்டுகளாக வழி வ்ழியாகநடந்து வரும் பழக்கம்!” என்று தீர்க்கமாக கூறுகிறீர்கள். உங்களுக்குத் தெரிந்தால், மேலும் விவரங்களைத் தாருங்கள் நானே, எனது அடுத்த தமிழ்நாட்டுப்பயணத்தை அந்த சீகாழிக்குப் போய் அந்த திருவிழாவைப் பார்க்கக்கூடியவாறு அமைத்துக் கொள்கிறேன். உண்மை தெரிந்துவிடும்.

        • //இந்தத் திருமங்கலத்தைச் சேர்ந்த பத்திரகாளி மாரியம்மன் கோயில் பழைய குறிப்பு ஒன்று கிடைத்தது.//

         அந்தக் குறிப்புக்கு என்ன நடந்தது. அதை scan பண்ணி அந்தக அக்கட்டுரையில் அவர் இணைத்திருந்தால் நம்பக் கூடியதாக இருந்திருக்கும். அவரின் இந்தக் கதைகளுக்கு என்ன ஆதாரம். ஒரு கோயிலில் பழமையான குறிப்பு ஏதாவது கிடைத்தால், அது தமிழக அரசின் அறநிலையத்துறையிடம் இருக்க வேண்டும் அல்லது அகழ்வாராய்ச்சி திணைக்களத்திடம் (Department) இருக்க வேண்டும். இப்படியான பழமையான குறிப்பு, அதுவும் அக்காலத்திய தமிழில் உள்ள குறிப்பை பற்றிய கட்டுரையை நடுநிலையான பத்திரிகைகளில் வெளியிடாமல் எதற்காக அவர் விடுதலை பத்திரிகையில் வெளியிட வேண்டும். ஒரே மர்மமாக இருக்கிறது. அவரது தொடர் கட்டுரைகளையும் நான் இணையத்தில் படித்தேன், அதிலும் பல ஓட்டைகள் உண்டு. 🙂

      • Mr.Ajaathasathru,

       //தெவையில்லாமல் பெரியாரை இழுத்தது யாரை திருப்திப்படுத்த?//

       பெரியார் ஒரு பெரிய ஆள், பொருள் தெரியாமல் அல்லது அந்த தேவாரத்தின் பொருளை அறியாமல், குடியரசு பத்திரிகையில் அவரைது கருத்தை வெளியிட்டது தவறு. தனக்கு அந்த தேவாரத்தின் உண்மையான பொருள் தெரியாது என்பதை பின்குறிப்பில் அவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால் பெரியார் எழுதியதைப் பார்த்த அவரது வாலாயங்கள் மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கூட அதைப் பின்பற்றி, அதை ஆதாரமாகக் காட்டி இப்பொழுதும் வலைப்பதிவுகளில் சம்பந்தரை இழிவு படுத்துவதைக் காணலாம். தன்னை தமிழனாக அடையாளபப்டுத்தியவர், அதனைக் உயிரோடு எரிக்கப்பட்டவர் என்று நீங்களே குறிப்பிட்ட சம்பந்தரை மற்றவர்கள் இப்படி அநியாயமாக இழிவு படுத்த நாங்கள், தமிழர்கள் அனுமதிக்கலாமா? அனுமதிக்கக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து.

       எனக்கு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நான் பெரியாரின் தவறைச் சுட்டிக் காட்டுவது யாரையாவது திருப்திப்படுத்த என்றால், நான் பார்ப்பனர்களின் தவறுகளை எனது வலைப்பதிவில் சுட்டிக்காட்டுவது பெரியாரிஸ்டுகளை திருப்திப்படுத்த என்று மற்றவர்கள் கூறலாம் அல்லவா? உண்மை என்னவெனில், நீங்கள் யாரையும் திருப்திப்படுத்த பதில் எழுதுகிறீர்களோ என்னமோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் எனக்கு சரியெனப்பட்டதை,
       எனது கருத்தை எழுதுகிறேனே தவிர யாரையும் திருப்திப்படுத்துவதற்காக அல்ல.

       • can you also explain how your siva seduced rishi-pathnis? What kind of god is your siva that he can’t even identify his wife’s creation and beheaded his wife’s son(ganesh)? even after that why he was not able to find his head even with three eyes? why do plastic surgery with elephant head? what about murugan? your tamil god? when he attempted to marry second wife, neither his father nor his brother advised him not to do it, but his elder brother came as an elephant to help murugan to eve-tease valli.

       • பெரியார் மிக சிறந்த சமுக சிர்திருதவதி பெரிய மனிதர் பெரியாருடைய சில நாத்திக கருத்துகள் ஏற்றுகொள்ளபட வேண்டியதான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் கள் குடிப்பதை தடுக்க தென்னதோப்புகளை வெட்டிய முற்போக்கு சிந்தனையாளர் தான் இந்த பெரியார்.

    • // பெரியார் 1944-ல் ஆத்திகர் திரு விக , வாரியார் அவர்களை கேட்ட கேள்விக்கு அவர்களே பதிலளிக்க முடியவில்லை! //

     திரு வி.க., வாரியார் போன்ற தமிழ்ப் பெரியார்கள் நாத்திகப் பெரியாரின் கேள்விகளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டிருப்பார்களே தவிர பதில் கூறியே ஆகவேண்டும் என்ற எண்ணமே வந்திருக்காது..

     ”திரு வாலவா யாயருள் பெண்ணகத்து” – திரு ஆலவாய் என்ற பெயருடையதும், அங்கே அருளாட்சி செய்யும் பெண்ணரசியான மீனாட்சியம்மனின் நகருமான, மதுரையம்பதியில் ;

     ” எழிற் சாக்கியப் பேயமண் தெண்ணர் கற்பழிக்க ” – அழகான (பழிப்பு!) சாக்கியத்தை பரப்புவோரும், பேயனையரோன அமணத்தை பரப்புவோரும் கற்பித்தவற்றை அழிக்க ;

     என்றாவாறு பொருள் கொள்க..

     • அம்பி,
      இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. பழைய தேவார உரைகள் என்ன சொல்கின்றன என தெரியுமா?

      • கடைசியில் அம்பியும் நாணினரோ! புதிய விளக்கம் மிக நன்று! ஆனால் தமிழ சைவனின் முன்னோர்களான அமணர்கள் தஙகளின் எந்த தத்துவத்தில் தவ்றினார்கள்? பதவிக்காக போட்டியிடும் இன்றைய அரசியல் மாதிரி தானே உள்ளது! ஆட்சி அதிகாரமன்றி அவர்கள் அடைந்தது என்ன? மக்கள் எந்தவிதமான முன்னேற்றம் கண்டனர்?

       • // கடைசியில் அம்பியும் நாணினரோ! //

        நீங்கள்தான் கடைசி..

        // புதிய விளக்கம் மிக நன்று! //

        நன்றி அய்யா..

        //ஆனால் தமிழ சைவனின் முன்னோர்களான அமணர்கள் //

        தமிழ் சைவர்களின் முன்னோர்களும் தமிழ் சைவர்களே.. அமணர்கள் என்று திருமுறைகள் குறிக்கும் சமணர்களல்ல..

        • //தமிழ் சைவர்களின் முன்னோர்களும் தமிழ் சைவர்களே.. அமணர்கள் என்று திருமுறைகள் குறிக்கும் சமணர்களல்ல..// அம்பி! த்மிழ் சைவர் என்று நான் குறிப்பிட்டது, தாங்களே ஆதிவசைவர் என்று கூறிக்கொள்ளும் பார்பனர்களை அல்ல! சிரவண மதம் என்று ஆரியம் குறிப்பிடும் சமணம் உண்மையில் தமிழ் சித்தர் சிவன்/ஆதிபகவன் போதித்தது என்று தமிழ்மணம்->ஆசிவகம் வலைபதிவு கூறுகிறது. வியாசன் தான் விளக்க வேண்டும்!

      • வெங்கடேசன்,

       பழைய தேவார உரைகள் என்ன சொல்கின்றன என்பதை இனிமேல்தான் ஆராய வேண்டும்.. அஜாதசத்ரு உங்களை சாதி ஆராய்சி நடத்த வைத்துவிட்டார் என்பதால் என்னை இப்படி பழி வாங்குகிறீர்களே, இது நியாயமா..?! 🙂

       பழைய தேவார உரையாசிரியர்களுக்கு இது போன்ற கற்பழிப்பு கோஷங்களும், குற்றச்சாட்டுகளும் கிளம்பப் போகின்றன என்று தெரிந்திருந்தால் அதை தெளிவாக மறுத்து சரியான பொருளை விளக்கியிருப்பார்களே..

 5. // 1842-ல் காஞ்சி காமாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பிரிட்டிஷாரிடம் “அனுமதி” வாங்கி இந்த சர்க்கஸ் கூடாரம் (யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு சகிதமாக) காஞ்சி வந்தது. அதற்குமுன் காமாட்சிக்கே கூட அங்கே கோயில் இல்லை. //

  //6. 1791-ல் திப்பு சுல்தான் காஞ்சி வந்தார். தந்தை விட்டுச் சென்ற காஞ்சிக் கோயில் திருப்பணிகளுக்கு மறு ஏற்பாடு செய்து மேற்பார்வை வேலையை சிருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைத்தார்; ரதவிழாவும் நடத்தினார். (ஆதாரம்: ஜி.எஸ். சர்தேசாய், மராத்தியர்களின் புதிய வரலாறு, தொகுப்பு 3, பக். 190) அப்போது காஞ்சி சங்கர மடம் மத்திய மடமாக பெரிய மடமாக இருந்திருந்தால், உள்ளூரிலேயே பொறுப்பை ஒப்படைத்திருப்பாரே?//

  1791-ல் இருந்த கோயில் 1842-ல் இல்லையா..?!

  திப்பு சுல்தான் சிருங்கேரி சங்கர மடத்தை ஆதரித்து வந்தவர் என்பதால் இருக்கலாம்..

 6. சூரியனை கண்டுபிடிச்சது யாரு?
  சொர்ணமால்யாவை கண்டுபிடிச்சது யாரு?

  காஞ்சி மடம் மூடப்படும் நாள்: தமிழர்கள் ஒளி வெள்ளம் காணும் நாள்

 7. மேலே வியாசன் சொன்னதின் நீட்டிப்பு இது. மூன்றாம் திருமுறை “காட்டுமாவது” எனத் தொடங்கும் 47 ஆம் பதிகம் மூன்றாம் பாடல்.

  மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
  திண்ண கத்திரு வாலவா யாயருள்
  பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
  தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

  இதில் வரும் “கற்பழித்தல்” என்பதை rape என்றும் கொள்ளலாம், “கல்வியை அழித்தல்” என்றும் கொள்ளலாம். இதில் ஒரு முடிவு வரும் முன், மொத்த பதிகத்தையும் படித்து விடுங்கள். விளக்க உரையோடு கீழே.

  http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3047

  மொத்த பதிகத்தையும் படித்தால் இப்பாடலின் பின்புலம் (context) அறிந்து கொள்ளலாம். பதிகத்தின் மற்ற பாடல்களில் சாக்கியர்களையும், சமணர்களையும் வாதில் அழிக்க திருவுளம் கேட்பது தெளிவாக தெரிகிறது. கடைசி பாடலில் “வல்லமண் ஆசற” திருவுளம் கேட்டு தலைக்கட்டுவதை காண்கிறோம் (ஆசு – குற்றம்). நட்ட நடுவே, மூன்றாம் பாடலில் மட்டும் சமணப் பெண்களை rape செய்ய திருவுளம் கேட்பாரா?

  ஏன் மூன்றாம் பாடலில் “வாது” என நேரடியாக சொல்லவில்லை? இந்தப் பாடல்கள் மரபு ரீதியானவை. சொல்ல வரும் கருத்தோடு கூடவே, யாப்பு, எதுகை, மோனை, ஓசை நயம் என பல கட்டுப்பாடுகளின் கீழ் எழுதப் படுபவை. தெள்ளத் தெளிவாக எதையும் சொல்வது கடினம். முதல் வரியில் “மண்ணகத்து” என்ற பின், மூன்றாம் அடிக்கு “பெண்ணகத்து” என்பது எதுகையாய் பொருந்துவதை பார்க்கிறோம்.

  தமிழில் ஒரே சொல் பல பொருள் தரும் என்றும், ஒரே பொருளுக்கு பல சொற்கள் உண்டு என்றும் அறிவோம். என்னிடம் உள்ள தமிழ் அகராதி (வர்த்தமானன் பதிப்பகம்) “கற்பு” என்ற சொல்லுக்குகீழ்க் கண்ட பொருள் சொல்கிறது.

  கற்பு : மகளிர் நிறை, இல்லற ஒழுக்கம், நீதிநெறி, முறைமை, விதி, கல்வி, கற்பனை, மதில், மதிலுண்மேடை, முல்லைக்கொடி.

  எல்லாம் சரி. அந்த “பெண்ணகத்தெழில்” என்பதற்கு பொருள் என்ன? எனக்கு நிச்சயமில்லை. மேலே கொடுத்த சுட்டியில் உள்ள உரையும் பூசி மழுப்புகிறது! எனது தமிழ் சிற்றறிவுக்கு இப்படி தோன்றுகிறது. சமண-சாக்கியர்களுக்கு, “பேய்” என்றும், “தெண்ணர்” (வலிமையுடையோர், குண்டர்கள்) என்றும் அடைமொழி தந்தவர், “பெண்ணகத்தெழில் சாக்கியர்” என்றதை “பெண்தன்மை உடைய சாக்கியர்” (அதாவது “பொட்டை பசங்க”​) என சொன்னதாக கூறலாம். அல்லது, “பெண்ணகத்தெழில்” என்பதை முன் அடியில் உள்ள “ஆலவாய்” என்பதோடு கொண்டுகூட்டி, “எழில் மிக்க பெண்கள் வாழும் ஆலவாய்” எனலாம்.

  எனவே, இப்பாடலின் பொருளை அவரரர் அறிவுக்கு புலப்படும் வண்ணம் பொருள் கொள்க. ஆனால், அவ்வாறு செய்யும் முன், முழுதாய் ஆராய்ந்து நேர்மைத்திறத்தொடு செயல்படுவீராக!

  திருச்சிற்றம்பலம்!

  • “பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேய்அமண்” என்பதற்கு ஆலவாயில் (மதுரையில்) வாழும் பெண்கள் எப்படி தமது கற்பில் திண்ணமாக,உறுதியாக இருப்பார்களோ அது போன்று தமது கொள்கையில் (கல்வியில்) உறுதி கொண்டவர்கள் சாக்கியர்கள். அவர்களின் உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் சமண/சாக்கிய மதக் கல்வியைக் கொள்கையை, உறுதியை வேரோடு அழிப்பதற்குச் சிவனே உன் திருவுள்ளம் ஆயத்தந்தானே? என்றும் பொருள் கொள்ளமல்லவா?

  • “மண்ணகத்தில் பெண்ணகத் தெழிற் சாக்கிய பேயமண் தெண்ணற் கற்பழிக்கத்
   திருவுள்ளமே”

   இதன் பொருள்:

   மண்ணகத்தில் – உலகத்தில்
   பெண்ணகத்தெழிற் – பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்ற
   சாக்கிய பேயமண் – சாக்கியம் என்னும் பேய் போன்ற அமணர்களின்
   தெண்ணற கற்ப – தெண் எனப்படுவது இவ்விடத்தில் அறிவு அல்லது ஞானம்
   எனப்படும். கற்பு எனப்படுவது இவ்விடத்தில் கற்றது எனப்பொருள்படும்.
   அழிக்க தருவுள்ளமோ – அவர்களது அறிவென்னம் ஞானத்தை, அவர்கள் கற்றதை அழிக்க
   தருவுளமோ என பாடுகிறார்.

   முழுப்பொருள் –

   உலகத்தில் பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்று விளங்கும் சாக்கியம்
   எனும் சூனியவாதம் கற்ற பேய் போன்ற அமணர்களின் அறிவினால் பெற்ற அவர்களின்
   ஞானமான கல்வியினை அழித்து அவர்களுக்கு சிவஞானம் கிடைக்க அருள் தருவாய் என
   இறைவனை வேண்டுகிறார்.

   அதை விடுத்து அவர் பெண்களை கற்பழிக்க சொன்னார் எனச் சொல்வது சொல்பவரின்
   அறியாமையையே காட்டுகிறது.

   ஏட்டுக் கல்வியினால் இதை பெற முடியாது என்பதை பல முறை உணர்ந்துள்ளேன்.
   இப்போது மீண்டும் ஒரு முறை.

   நன்றி: http://nakinam.blogspot.ca/

   • வியாசன்,
    “பெண்ணகத்தெழில் சாக்கியம்” — “பெண்களின் மீது ஏற்படும் மோகம் போன்ற சாக்கியம்”. நான் சொன்ன “பொட்ட பசங்க” விளக்கத்தை விட இது பொருத்தமாய், ஏற்கும்படி உள்ளது.

 8. மதுரையில் நாலாயிரம் சமணரை, கழிவிலேற்றிய புண்ணியவான் , ‘பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே!’ என்றது வன்முறை நோக்கமுமிருந்ததோ என்று சந்தேகிக்க வைக்கிறது! அந்தக்காலத்து ‘இந்துத்வா’ அப்படி! இதில் வியாசனார் பெரியாரை இழுத்து குறை கூறுவது ஏன்? காணாமல் போயிருந்த அம்பியை கவரவோ?

  • //இதில் வியாசனார் பெரியாரை இழுத்து குறை கூறுவது ஏன்? காணாமல் போயிருந்த அம்பியை கவரவோ?//

   அம்பி என்ன பெரிய இவரா? உங்களுக்கு இணையத்தளங்களிலும் ஜால்ராக்கள் தேவைப்படுகிறார்களோ என்னமோ எனக்குத் தெரியாது, எனக்கு தனி ஆவர்த்தனமும் பிடிக்கும். 🙂

   • அம்பிகளுக்கும், தமிழ் தேசியர்களுக்கும் (சைவ பிரிவு) இடையே பிணக்கத்தை மூட்டிவிடும் அஜாதசத்ரு அவர்களின் திராவிடக் குசும்பு நன்றாக வேலை செய்கிறது..!

  • // மதுரையில் நாலாயிரம் சமணரை, கழிவிலேற்றிய புண்ணியவான் , //

   நாலாயிரம் சமணர்களோ, எட்டாயிரமோ அல்லது ஒரு லட்சமோ எதுவாயினும் சமணர் கழுவேற்றம் என்ற ’கொடும் நிகழ்வு’ சைவ நூல்களில்தான் காணப்படுகிறதே தவிர தமிழகத்திலோ, சமணச் செல்வாக்கு மிக்க கர்நாடகத்திலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ காணக்கிடைக்கும் சமண நூல்களில் ஒரு சிறு குறிப்பாகக் கூட இல்லை.. சமணர்களை வாதில் வென்ற நிகழ்ச்சி சைவர்களுக்கு ஒரு பெரும் வெற்றி என்ற களிப்பில் சமணர்கள் கழுவேறினர்/ சமணர்களை கழுவேற்றினார் (இக்கால சொல்வழக்கில், சமணர்களுக்கு ஆப்பு வைத்தார்) என்று கொண்டாடியிருக்கிறார்கள்..

   • தற்பெருமை பேசியே அழிந்தான் தமிழன் என சொல்ல வருகிறீரோ! சமணமும், சைவமும் தமிழ் வழியினதாக இருக்க தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டானோ தமிழன்? நக்கல் தானே!

    • // தற்பெருமை பேசியே அழிந்தான் தமிழன் என சொல்ல வருகிறீரோ! //

     தற்பெருமை பேசுவதும், நீங்கள் சாட்டும் கொலைக்குற்றமும் ஒன்றா..?

     // சமணமும், சைவமும் தமிழ் வழியினதாக இருக்க தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டானோ தமிழன்? //

     நீங்களும், நானும் அப்போது இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா.. மாறாக, ஆரிய-திராவிட யுத்தமல்லவா நடந்திருக்கும்..

   • ஒன்னுமே நடக்கலைனு இராஜ பட்சே மாறி பேசுவது சரியல்ல.

    சமண முனிவர்கள்,அவர்களது மாணவர்கள் கழுவேற்றப்பட்டது மதுரை சாமநத்தம் பகுதி.
    கழுவேற்றம் குறித்த மிக மிகப் பழமையான ஓவியங்கள் ஆவுடையார் கோவிலில் இருக்கிறது.
    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது முன்பு கழுவேற்றம் நாடகமாக நடத்தப்பட்டது தற்போது கதையாக சொல்லப்படுகிறது.
    தவிர சமணம் வேறு ஜைனம் வேறு.

    • // ஒன்னுமே நடக்கலைனு இராஜ பட்சே மாறி பேசுவது சரியல்ல. //

     ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆதாரங்களுடன் நிறுவுவதைப் போல பாதிக்கப்பட்ட சமணர்களின் ஆதாரங்கள் ஏதேனும் இது குறித்து இருக்கிறதா..?!

     // சமண முனிவர்கள்,அவர்களது மாணவர்கள் கழுவேற்றப்பட்டது மதுரை சாமநத்தம் பகுதி. //

     இதற்கான ஆதாரம் அங்குள்ள புடைப்பு சிற்பங்கள்..?! மேற்படி ‘கழுவேற்றம்’ நடந்தது 7ம் நூற்றாண்டில்.. 11ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த சைவ புராணங்களில் வரும் வருணனைகளைத் தான் சாமநத்தம் சிற்பங்கள் சித்தரிக்கின்றன (கழுவேற்றப்பட்டவர்களை நாய்களும், காக்கைகளும் கடித்துத் தின்றன என்பது போன்றவை ! ) இவற்றை செதுக்கியவர்களுக்கும் மேற்படி சைவ நூல்கள்தான் ஆதாரம்..!

     சமணரத்தம் தான் சமண நெத்தம் ஆகி சாமநத்தம் ஆகியது என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நம்புவதற்கு முன், நத்தம் என்பது ஊரை – குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளை – குறிக்கும் தமிழ்ச் சொல் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.. இங்கு வரும் நத்தம்/நெத்தம் என்பது ரத்தத்தின் திரிபு அல்ல.. சாம என்பது சமண/ச்ரமண என்பதின் திரிபு என்றே வைத்துக் கொண்டாலும் சாமநத்தம் என்பது சமண குடியிருப்பு என்றுதான் கொள்ளவேண்டும்..

     // தவிர சமணம் வேறு ஜைனம் வேறு. //

     இருதரப்பாரும் ஆதிநாதரையும், பார்ஸ்வநாதரையும், மகாவீரரையும் தான் வணங்கியிருக்கிறார்கள் என்பது சமணர்களின் கற்படுகைகள், புடைப்பு சிற்பங்கள், நூல்கள் மூலம் அறியலாம்.. வழிபாடுகள், கொள்கைகள் என்று எல்லாவிதத்திலும் ஒத்துப் போகும் இவர்களை வேறு வேறு என்று ஆராய்சி செய்து கண்டுபிடிப்பது மிகவும் கடினம்..

     // கழுவேற்றம் குறித்த மிக மிகப் பழமையான ஓவியங்கள் ஆவுடையார் கோவிலில் இருக்கிறது. //

     புதுகோட்டை ஆவுடையார் கோவில் ஓவியங்கள் அவ்வளவு பழமையானவை அல்ல, 11ம் நூற்றாண்டுக்குப் பின்னானவை…. நாய்களும், காக்கைகளும் கழுவேற்றப்பட்டவர்களை பிடுங்கின என்பது போன்ற, மேற் கூறிய சைவ நூல்களின் வருணனைகளுக்கு ஏற்ப வரையப் பட்டவை.. அதிலும் ஒரு சறுக்கல் என்னவெனில், கழுவேற்றப்பட்டுள்ள சமணர்களுக்கு தாடி, மீசை உள்ளது போல் வரைந்து வைத்தது..!

     // மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது முன்பு கழுவேற்றம் நாடகமாக நடத்தப்பட்டது தற்போது கதையாக சொல்லப்படுகிறது. //

     இது போன்ற விழாக்களும் மேற்படி சைவ நூல்களின் அடிப்படையிலானவையே..

 9. /தமிழின் இனிமையை, தொன்மையை அதன் அருமை பெருமையை அறியாதவர்களைப் பார்த்து “செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகள்” என்று ஏளனம் செய்தவர் நாளும் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன் என்றும் நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் என்றும் தமிழ்ஞானசம்பந்தன் என்றும் தன்னை தமிழால் அடையாளப்படுத்தியவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்./

  மிகவும் நன்று! தமிழின் அருமையையும் ,பெருமையையும் , தொன்மையையும் யார் மறுத்தார்கள்? ஆனால் தமிழரின் நிலை என்ன அய்யா? பக்தி போதையில் சிந்தனையை இழந்து அடிமையாய், தன்மானமிழந்து, தமிழைநீசபாஷையென் ஒப்புக்கொண்டு, சம்ஷ்ரிதம் போஷித்து வந்தவன் தானே தமிழன்? ஆறுமுகநாவலரும் அருட்பெருஞ்சோதியின் அருமையை உணர தலைப்படவில்லையே! சாதி பித்து தலைக்கு ஏறி, இன்று பெரியாரைநீங்கள் குறை கூற துணிவது போல், நல்லவர் மனித குலத்துக்கெல்லாம் ஒரே இறை என்று தெளிந்து கூறிய வள்ளலாரை சாடியவர் அல்லவா? அருட்பாவா , மருட்பாவா என்று பார்பன பாதந்தாங்கியாக செயல்பட்டு வழக்கும் தொடுத்தவர் அல்லவா? தமிழ் தமிழனக்கு தன்மானத்தை தரவில்லை, விஞ்ஞானத்தை தரவில்லை, ஏன் சாதிகளை ஒழித்து ஒற்றுமையாய் இருக்க, அக்ஞானத்தை அழிக்கவில்லை! சிலர் பிழைக்க, பலர் அடிமை வாழ்வு வாழ வைத்த பக்தி என்ன பக்தியோ!

  • ஆறுமுகநாவலர் மறைந்து 130 ஆண்டுகளுக்கு மேலாகிறது ஆனால் அவரை இன்னும் திட்டுவார்க்கு குறைவில்லை ஏனென்றால் அவரது குறிக்கோளை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

   அவரது நோக்கம் மிசனரிமார்களிடமிருந்து சைவத்தைக் காப்பதும், யாழ்ப்பாணம் இன்னொரு கோவா (Goa)போல் கத்தோலிக்க போத்துக்கேய கலாச்சார நாடாக மாறாமல் தவிப்பதும் தானே தவிர சாதி ஒழிப்பல்ல. அவர் வெளியில் வந்த எதிரியான மிசனரிகளைத் தான் தனது முதல் எதிரியாகப் பார்த்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். சம்பளத்துக்காக (பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள்) மதம் மாறிய ஈழத் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலேயர் காலத்தில் சட்டம் தளர்த்தப்பட்டதும், அபப்டியே குடும்பத்துடன் சைவர்களாக மாறினர்.அதாவது வெளியில் வந்த எதிரி (மிசனரிமார்) சைவத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் போது, எம்மிடையே, சைவர்களிடையே. பிரிவினையும், புதிய குழுக்களும் வருவதை அவர் விரும்பவில்லை. அதனால் தான் வள்ளலாரை எதிர்த்தார். அதனால் தான் நாவலர் சைவத்தின் காவலர் என இன்றும் போற்றப்படுகிறார்.

   • Just because Thamsanqa Jantjie do not know sign language and he is a Ex-schizophrenia person ,he did this blender mistake! BUT what about u?

    [1]How did u expect support from Indian government which killed Eelam people along with Sri lankan raja batcha gov? What is the logic or tactic in your action?//இந்தியாவின் ஆத‌ர‌வில்லாம‌ல் த‌மிழீழ‌ம் ஒருபோதும் அமைய‌ப் போவ‌தில்லை, அதை இந்தியா அனும‌திக்க‌ப் போவ‌துமில்லை.//
    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_3.html

    [2]What is the intention of showing your “Jafna Vellala pride” through your blog even in this pain full time of Eelam people?
    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html

    Do not you think all these attitudes are showing your “schizophrenia” mind set?????

   • viyasan refers ://அமெரிக்க ஜனாதிபதி பேசும் போது வானத்திலிருந்து Angels அல்லது வான தூதர்கள் வந்திறங்குவதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ///

    Yes I came to remember the genocide held in 2009.

    Just because of President Obama words about sending war ship to EElam to rescue Tamil people YOU PEOPLE AND LTTE WERE CHEATED BY usa!!!

    Till now that incident flashing in my mind painfully.

   • வள்ளலார் எந்த பிரிவினையையும் பேசவில்லையே! ஆண், பெண் வித்தியாசம் கூட இல்லாத அருவநிலையில் சிவத்தை காண்பதுதானே சிதம்பர ஸ்தல ரகஸ்யம்? தில்லை தீக்ஷிதர்களுடன் சேர்ந்து , தமிழறிஞர் நாவலரும் அருட்பாவை , மருட்பா என இகழலாமா? தில்லை கோவிலுக்குள் அருட்பாவிற்கு தடை போடலாமா? சரித்திரத்தில் வாகை சூடிநின்றது யார், தடை போட்டவர்களா, தடை செய்யப்பட்ட அருட்பாவா? ஆங்கிலேயர்களால் நகையாடப்பட்ட வழக்கு அல்லவா அது! காஞ்சி வடகலை-தெஙகலை சண்டை போல! சமரசம் கண்டவர்களையெல்லாம் சைவ எதிரியாக பாவித்து ஒழித்துகட்டிய இந்த பக்தியாளர்களை புரிந்து கொள்ள வேண்டாமா?

   • னாவலர் காத்த சைவம், பகைவரை குத்து வெட்டு என்று இறைவனை துணைக்கழைக்கும் கந்தஷஷ்டி கவசமல்லவா பாடியது! மாறாக வள்ளலார் பாடியது தானே உண்மையான அருட்பா! ‘வாடிய பயிரைக்கண்டு வாடிய’ பெருமானை தில்லைககோவிலுக்குள் அனுமதிக்க வில்லையே! அதனால் இழப்பு சைவநெறிக்குதானே! இப்படித்தான் உங்கள் சாதியபற்றை,சைவபற்றாக சித்தரித்து, ‘அன்பே சிவம்’ என்ற சைவ சித்தாந்தத்தை, சாதியம்பெசும் சாத்திரமாக்கிவிட்டீர்களே!

  • Dear viyasan….,

   [1]Not only this also every thing I have read from your blog.

   [2]You worked hard for collecting facts and info about eelam.Good Job.

   [3]Most of the essays are showing the pains of the eelam people.

   [4]Some essays are showing your pride about dominating cast[vellalar] of jafna
   ex
   http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html

   [5]Some essays are showing your confused thinking
   ex
   http://www.viyaasan.blogspot.in/2013/05/blog-post_18.html

   [6]Since you are working hard for the formation of Tamil Eelam, My advice for you is please read the books related to working class and national race issues.And try to get a solution for our eelam issues. Till that your mind will be in a “confused-schizophrenia” state.I am very sorry to say this!

   [7] There is no short cut method for Eeelm formation.

   Note :
   I “understand” the inner meaning of the link u refereed me.
   http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_13.html
   I am sorry to say that I have seen that person in your faces.

   With real care,,,
   K.Senthil kumaran

  • // தமிழ் தமிழனக்கு தன்மானத்தை தரவில்லை, விஞ்ஞானத்தை தரவில்லை, //

   தன்மானமும், விஞ்ஞானமும் இல்லாத தமிழன்தான் ஆயிரமாயிரம் மரக்கலங்கள் கட்டி 10ம் நூற்றிண்டில் அன்றைய உலகின் மிக வலிமையான கடற்படையுடன் தென் கிழக்காசியாவை கட்டுபடுத்தினானா..?! ஏறக்குறைய தென்னிந்தியா முழுவதையும் தன் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தானா..?!

   // ஏன் சாதிகளை ஒழித்து ஒற்றுமையாய் இருக்க, அக்ஞானத்தை அழிக்கவில்லை!//

   தமிழ் மொழி சாதிகளை ஒழிக்கவில்லை என்பதால் அதைக் கைவிட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, ஆங்கிலம் கற்றுக் கொண்டு, பேசி சாதிகளை ஒழித்து விட முடியுமா..?!

   // சிலர் பிழைக்க, பலர் அடிமை வாழ்வு வாழ வைத்த பக்தி என்ன பக்தியோ! //

   பக்தி இல்லாத நில பிரபுத்துவ சமூகங்களிலும் இதே நிலைதான்.. என்ன, பார்ப்பானுக்கு தட்சிணை கிடைக்காது.. அது போதாதா என்கிறீர்களோ..?!

 10. (Tamil Chinthanaiyalar Peravai 10 months ago in reply to Om Tamil)

  //I had read a book by Manjai Vasanthan, a Dravidian, regarding the siru deiva valipaadu and killing of Appar by Sambandan. Now I hate the Dravidians. But, I cross checked these info. with a Siddhar of Aaseevaham, Adhi Sankaran, and he told me that Appar was beaten to death by Sambandan gang, using ULAKKAI. Above all, when I read Manjai Vasanthan book, I did not fully grasp the ulterior motive of Sambandan. Today, after learning about Aaseevaham, I understand the Demi vs. FULL God conflict//

  Mr.Vyaasan! Can you enlighten us further? I have read this in your ref. Vinayaga vazhipaadu chapter 7, ‘conclutions’ … http://www.youtube.com/watch?v=9u5t9yY8oLo

  • அஜாதசத்ரு அய்யா,
   எனக்கும் இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.நானும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட தளத்திற்கு பார்வையாளனே.

 11. //Mr.Vyaasan! Can you enlighten us further? I have read this in your ref. Vinayaga vazhipaadu chapter 7, ‘conclutions’ …

  Mr. Ajaathasathru,

  உங்களின் இந்தக் கேள்வியை அந்த காணொளியை எனக்கும் தேவாரநாயனாருக்கும் சுட்டிக் காட்டிய Kavin அவர்களிடம் அல்லது தமிழ் சிந்தனையாளர் பேரவையினரிடம் கேட்பது தான் முறையே தவிர என்னிடமல்ல. என்னுடைய சிற்றறிவுக்கு உங்களின் கேளவிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது.

  ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படும் பிள்ளையார் வழிபாட்டுக்குக் காரணம், பிள்ளையார் உண்மையில் தமிழர்களின் கடவுளே தவிர, பிள்ளையார் வாதாபியிலிருந்து கொண்டுவரப்படவில்லை எனக் கருதலாம் என்பது மட்டும் தான் என்னுடைய கருத்து.

  //”I had read a book by Manjai Vasanthan, a DRAVIDIAN”//
  That says it all. 🙂

  சைவத்தின் மறுமலர்ச்சியில், அப்பரும் சம்பந்தரும் இருகுழல் துப்பாக்கி போலவே இயங்கினர் என்பதையும் அவர்களிடையே தந்தைக்கும் தனயனுக்கும் உள்ளது போன்ற நட்பு நிலவியது என்பதையும் நாயன்மார்களின் வரலாற்றைக் கற்ற அனைவரும் அறிவர். இப்படியான Conspiracy theories எல்லாமே திராவிடியனிசத்தாலும் , பெரியாரிசத்தாலும் ஏற்பட்ட சில எதிர்மறையான விளைவுகள். பார்ப்பனர்களிடையே உள்ள கோபத்தை, தமிழர்களின் கலை, கலாச்சாரம், எமது முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த சமய நெறிகள், திருமுறைகள் என்பவற்றில் காட்டி, தமிழர்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்துக்கும் இடையில் ஒரு நிரந்தர இடைவெளியை அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்.

 12. கற்பழிப்போ, கல்வியழிப்போ இரண்டுமே தவறானதுதான்.
  கல்வி என்பது சரியான அறிவினையே குறிக்கும். தவறான கருத்துகளாயின் கல்வி என்ற பதம் பொருந்தாது. எனவே சம்பந்தர் கருதியது கற்பழிப்போ, கல்வியழிப்போ இரண்டுமே தவறான வாதங்கள்.

 13. ஐந்தாவது கேள்வி பற்றி.

  நியாயமான கேள்வி. ராமனுஜரின் வாழ்க்கையை கூறும் மத நூல்களில் காஞ்சி மடம் பற்றிய குறிப்பை நான் கண்டதில்லை. ராமானுஜர் திருப்பெரும்பூதூரில் பிறந்து காஞ்சியில் யாதவ பிரகாசரிடம் அத்வைதம் பயின்று, அதில் உடன்பாடின்றி பின்பு வைணவரான திருக்கச்சி நம்பிகளின் சீடராக காஞ்சியில் பல காலம் வாழ்ந்தார். பின்னாளில், அத்வைதத்திற்கு எதிராக அவர் வாதம் செய்து வென்றவர்களில் முக்கியமானவர் யாதவ பிரகாசர். காஞ்சியில் இருந்து அவருடன் வாதம் செய்ததாக யாதவ பிரகாசர் மட்டுமே குறிப்பிடப் பெறுகிறார். குடந்தை, திருஅனந்தபுர நகர், வடக்கே பூரி என ராமானுஜர் வாதம் செய்ய திக்விஜயம் செய்த நகரங்களில் காஞ்சி குறிப்பிடப் படுவதில்லை.

  ————————————————————————–

  // குறிப்பாக, குமரிலபட்டர் இறப்புக்கும், மண்டனமிஸ்ரர் அத்வைத மதத்துக்கு மாறுவதற்குச் செய்த மிரட்டல்களும் அறிவு நேர்மை அற்றவை //

  என்ன இது? குமரிலர் பவுத்த சமயம் கற்றறிய அவ்வேடம் தாங்கி தன் குருவை ஏமாற்றியதற்காக மனம் வருந்தி தானே அல்லவே தீக்குள் பாய்ந்தார். மண்டனமிஸ்ரருடன் சங்கரர் வாதம் செய்த போது நடுவராய் இருந்தது மண்டனரின் மனைவி தானே. மேலும், ஒரிஜினல் பார்ப்பனீய மதமான மீமாம்சை கொள்கை கொண்டவர்கள் அல்லவா இவர்கள். ஒப்பீட்டளவில் எளிதில் வெல்லக் கூடிய மதம் தானே இது!

  —————————————————————————

  // போதாயனர் விருத்தியைத் (இலக்கண விளக்கம்)

  இது இலக்கண விளக்கம் அல்ல. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயனர் எழுதிய விளக்க உரை. ராமானுஜர் கட்டமைத்த விசிஷ்டாத்வைத கோட்பாட்டின் முன்னோடி. அதனால் தான், இதை தேடி ராமானுஜர் காஷ்மீரம் வரை செல்ல வேண்டி வந்தது. அங்கிருந்த அத்வைத பண்டிதர்கள் இந்நூலை தராமல் மறைக்க, ராமானுஜர் அதை திருடிக் கொண்டு கிளம்பி விட, அவர்கள் துரத்தி வந்து பிடுங்கி செல்ல, இடைப்பட்ட நாட்களில் ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வான் அதை முழுதும் மனனம் செய்து வைத்து, தன் நினைவில் இருந்து ஒரு பிரதி எழுதித் தந்தது தனிக் கதை!

  ———————————————————————————

  யாதவப் பிரகாசரிடம் பயின்ற மற்றொருவர் ராமானுஜரின் தம்பி (முறையான) கோவிந்தர். இவர் சைவ சமயம் சார்ந்து திருக்காளத்தி நாதனை வழிபாட்டு வாழ்ந்துவர, திருமலை நம்பிகளால் தடுத்தாட் கொள்ளப்பட்டு, வைணவம் திரும்பி, ராமனுஜரின் சீடராக துறவு பூண்டு “எம்பார்” என்ற பெயரோடு வைணவ ஆசார்ய பரம்பரையில் முக்கிய இடம் பிடித்தவர். இவரையும், மதுரகவி ஆழ்வாரையும் சேர்த்துக் குழப்பி, இடையில் தேவரடியாரையும் சேர்த்து புது புராணம் படைக்கும் அறிஞர்களும் உண்டு என்றறிக.

  • //இவரையும், மதுரகவி ஆழ்வாரையும் சேர்த்துக் குழப்பி, இடையில் தேவரடியாரையும் சேர்த்து புது புராணம் படைக்கும் அறிஞர்களும் உண்டு என்றறிக.//

   அறிந்தோம் வெங்கடேசன்! மறைந்த நாடக வித்தகர் மனோகரின் நாடகமான மதுரகவி என்ற புகழ்பெற்ற படைப்பில் பார்த்தது! காஞ்சியில் (ஆதிசேஷன்)பாயை சுருட்டிகொண்டு கிளம்பிய பெருமாள் இன்றும் என் கண்ணில் இருக்கிறாரே! உறுதிப்படுத்த தங்களையன்றி யாரிருக்கிரார்?

   • // காஞ்சியில் (ஆதிசேஷன்)பாயை சுருட்டிகொண்டு கிளம்பிய பெருமாள் இன்றும் என் கண்ணில் இருக்கிறாரே! உறுதிப்படுத்த தங்களையன்றி யாரிருக்கிரார்? //

    என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. “நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்” என பெருமாளை பாய் சுரட்ட சொன்னவர் திருமழிசைப்பிரான் அன்றோ? காஞ்சியில் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” (யதோத்தகாரி) இப்போதும் இருக்கிறார். நீங்கள் சொன்ன நாடகத்தை நான் பார்த்ததில்லை. மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற ஆழ்வார்கள் பற்றியும் நாடகத்தில் பேசினார்கள் போலும்.

    மரபான மதுரகவிகள் கதை எளியது. வடதிசை யாத்திரையில் இருந்த மதுரகவிகள், தென்திசையில் ஒரு ஒளி தெரிய அதை தொடர்ந்து, திருநெல்வேலிக்கு அருகே உள்ள திருக்குருகூர் அடைந்து, அங்கே புளியமர நீழலில் தவத்தில் இருந்த நம்மாழ்வாரைக் கண்டு, “சித்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என வினவ, நம்மாழ்வார், “அத்ததைத் தின்று அங்கே கிடக்கும்” என பதிலிறுக்க, நம்மாழ்வாரையே தமது குருவாக கொண்டு, “தேவு மற்று அறியேன், குருகூர் நகர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே” என, பெருமாளை விடுத்து மாறனையே தெய்வமாக் கொண்டு ,”கண்ணிணுண்சிறுத்தாம்பு” என்றொரு பதிகம் பாடினார். நீங்கள் சொல்லும் கதை நான் கேட்டறியாதது. ஆர் எஸ் மனோகர் நாடகம் என சொல்லி விட்டீர்கள். இது இணையத்தில் கிடைக்கவில்லை. எங்காவது வீடியோ கடையில் கிடைக்கிறதோ என்னவோ.

     • ஆர் எஸ் மனோகர் சொந்த சரக்கு விட்டாரோ, அல்லது உமது சொந்த சரக்கோ! அந்த மகிழ்னன் மாறனுக்கே வெளிச்சம்!

     • http://www.tamilkadal.com/?p=732

      சிவ வாக்கியர் பற்றிய ஒரு வலைப்பதிவில் அவரே திருமழிசை ஆழ்வார் என காணப்படுகிறது! சிவகவி சினிமா பார்த்திருகிறிர்களா?

      • Non of our own! pl see:http://en.wikipedia.org/wiki/Thirumalisai_Alvar
       ”Thirumazhisai decided to learn about all other religions. So, he studied Buddhism, Jainism and other literature. He became a staunch devotee of Siva assuming the name of Siva VAkya. One day, he saw an old man planting a plant upside down and then trying to water it with a broken pot using a tattered rope to lift water from a waterless well. Sivavakyar asked him why he was attempting such a foolish act. The old man was none other than Pey AzhwAr who replied that what he was doing was only less foolish than Sivavakya’s allegiance to Saivam, knowing full well that the Vedas and Smritis proclaim Sri Narayana as the Supreme deity.
       As a result of an argument with Pey Azhwar, he finally got initiated into Srivaishnavam by Peyalvar. After visiting several temples, he reached Tiruvekkaa, the birthplace of Budat Azhwar. Tirumazhisai Azhwar himself says
       Tamil
       சக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
       ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்
       Transliteration
       sAkkiyam katrOm, SamaNam katrOm, SankaranAr aakkiya Aagamanool
       aarAindhOM; BhaggiyathAl venkaTkariyAnai SerndOm
       “ We had learned SAkkiyam (jainism) SamaNam (Buddhism) and the Agamic Scriptures made by Lord Shankara (Shiva); Due to sheer grace, we landed at the feet of TiruvengadathAN. ”
       There is also evidence in his couplets that show that he asked God to help reveal their ignorance to them.
       Displeasing Pallava king[edit]

       Legend also says that when Kanikannan, his disciple displeased the pallava king for not agreeing to restore the king’s youth. Earlier on he granted youth to an old unmarried maid of the temple. The king married that woman but he himself was an old man and thus wanted to enjoy life as a youth with his new wife. Tirumalisai refused him and the king decided to banish him. Tirumalisai Alvar asked the God from the temple, Yathotkari, to leave with him.
       Tamil
       கணிகண்ணன் போகின்றான் காமரு பூங் கச்சி
       மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
       செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
       பை நாகப்பாயை சுருட்டிக் கொள்
       Transliteration
       KanikaNNan Poginraan Kaamaru poong Kachi
       ManivaNNaa! Nee Kidakka Vendaa
       Sennaap Pulavanum Poginren Neeyum Unran
       Pai Naagappaayai Suruttik KoLL
       “ KanikaNNan is going out of kAnchi Oh! Manivanna!, You don’t have to lie here anymore. Since, as the fluent poet that I am also leaving with him, you also roll your serpent bed and follow me”And, accordingly all of them left KAnchipuram ”
       Vishnu is said to have rolled up the snake Sesha like a mattress and left with him

     • அஜாதசத்ரு,
      மன்னிக்கவும். நீங்கள் வீசி வரும் குண்டுகளில் BP எகிறிவிட்டது.

      ஆர் எஸ் மனோகர் மதுரகவி ஆழ்வார் பற்றி நாடகம் போட்டதாக இணையத்தில் நான் தேடியவரை ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி உமது மறுமொழி ஒன்று மட்டுமே கிடைக்கிறது (கூகுள் ரொம்ப சுறுசுறுப்பாக உள்ளது). ஆனால், ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) “மதுரகவி” என ஒரு நாடகம் எழுதி அதை “அமைச்சர் மதுரகவி” என்ற பெயரோடு அவ்வை சண்முகம் மேடை ஏற்றி உள்ளார். இந்த நாடகத்தில் மதுரகவி ஆழ்வார் மையப் பாத்திரமாக வருவதாக புஷ்பா தங்கதுரை ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இந்த நாடகத்திற்கு அரசு விருது கூட கிடைத்திருக்கிறது. மேலே சொன்ன நாடகம் புத்தக வடிவில் கோவை நூலகத்தில் கிடைக்கிறது. இந்த நாடகத்தை குறிப்பிடுகிறீர்களா? நீங்கள் குறிப்பிடும் நாடகத்தை சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?

      http://tamilspeak.com/?p=683

      http://coimbatore.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=6593354

      • // நீங்கள் வீசி வரும் குண்டுகளில் BP எகிறிவிட்டது. //

       நீங்கள் சரியான பதில்களைச் சொல்லச் சொல்ல அஜாதசத்ருவும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ புதிது புதிதாக குண்டுகளை வீசிக் கொண்டேயிருப்பார்.. வாழ்த்துக்கள்..

 14. உங்கள் பார்பன வெறுப்பு என்பது சங்கரரை தெரிந்து கொள்ள தடையாக உள்ளது. காஞ்சி மேடம் , பார்ப்பனீயம் என்பது வேறு . சங்கரரின் அத்வைதம் என்பது வேறு. மதம் , சடங்குகள் என்பதற்கு அப்பாற்பட்டது மெய்ஞானம்.

  உண்மையை அறிவதற்கான அறிதளங்கள் [பிரமாணங்கள்] மூன்று. நேர்க்காட்சி , ஊகம் , முன்ன்னறிவு. [ பிரத்யட்சம் , அனுமானம், சுருதி] முதல் இரண்டுக்கும் முன்னறிவே அடிப்படையானதென்றும் முன்னறிவென்பது ரிஷிகளால் சொல்லபட்ட ஆப்தவாக்கியங்களே என்றும் சொல்லும் வேதாந்தக் கொள்கையே மெய்ச்சொல்கொள்கை.

  சொல்லப்போனால் சங்கரர் வேள்விகளால் பயனில்லை என்பதே வேதத்தை ஆதாரமாகக் கொண்ட கருத்து என வாதிட்டார்.

  முற்காலத்தில் மீமாம்சகர்கள் முன்னறிவு என்றால் சுருதி என்று பொருள் கொண்டு வேதங்களையே அது குறிக்கிறது என்று வாதிட்டார்கள். இது சுருதிவாதம் எனப்பட்டது. அக்கொள்கையின் நீட்சிநிலைதான் இது.

  ஆனால் வேதாந்தம் முன்னோடி தத்துவஞானியரால் கற்பிக்கப்பட்ட மெய்ஞானமே முன்னறிவு என்கிறது. அம்மெய்ஞானம் வேதசூத்திரங்களிலும் உபநிடதங்களிலும் மட்டுமே உள்ளது என்பது இதன் விரிவு. சங்கரர் இதை தன் மெய்காண்முறையின் அடிப்படையாகக கருதுகிறார். சங்கர மதத்தின் அடிப்படையே இதுதான் .

  உண்மையில் அத்வைதம் முன்னர் இருந்த வேதஞானத்தின் பெரும் பகுதியை மறுத்து எழுந்ததாகும் . வேதங்களில் உள்ள ஞானகாண்டம் என்று சொல்லப்படும் தூய அறிவை மட்டுமே முன்வைத்து அதன் பெரும்பகுதியான சடங்குகளையும் யாகங்களையும் நிராகரித்தது. அக்காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக இருந்த வைதிக மீமாம்சகர்களை எதிர்கொள்ள சங்கரர் மெய்ச்சொல்கொள்கையை ஓர் உத்தியாக கைக்கொண்டார். அதாவது தன் கொள்கைக்கு வேதங்களே மூலம் என்றும் தான் சொல்வதெல்லாம் வேதங்களில் சொல்லப்பட்டதே என்றார்.

  அவரது விரிவான கல்வியையும் தர்க்கத்தையும் வைதிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருவர் தான் மண்டன மிஸ்ரர்.மண்டன மிஸ்ரர் வேள்விகளால் , வேத கர்மங்களால் மோக்ஷத்தை அல்லது முக்தியை அடையமுடியும் என்று நம்பும் பூர்வ மீமாம்சக கொள்கையை கொண்ட ஒரு வங்காளி பிராமணர் .

  சங்கரர் உரைகளில் இவ்வாறு வேதத்தின் வாலுக்கு எதிராக தலையை கொண்டுசென்று நிறுத்தும் முயற்சி காரணமாக அற்புதமான அறிவார்ந்த கழைக்கூத்தாட்டங்களும் நடனங்களும் உள்ளன.

  இந்த உத்தி சங்கரருக்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியது. சங்கரர் மறைந்ததுமே அது அத்வைதத்தை திருப்பி தாக்கியது. வைதிகர்களுக்கும் சங்கரருக்கும் உள்ள தீர்க்கமுடியாத முரண்பாட்டை சங்கரருக்கும் மூலநூல் வேதங்களே என்ற ஒற்றைவரியை பயன்படுத்தி இல்லாமல் செய்தார்கள் .

  சங்கரர் மடம் அமைத்த காரணம் “அத்வைத” அறிவை பரப்ப தானே தவிர வேத சடங்குகளை பரப்ப இல்லை.

 15. //மதம் , சடங்குகள் என்பதற்கு அப்பாற்பட்டது மெய்ஞானம்.//

  உண்மையே! பொது மக்களின், (அந்தக்கால அரசர்களிடம் பெற்றதாயினும்) செல்வத்தை பாதுகாத்து, அவைசார்ந்த நெறிகளை பரப்புவதே மடங்களின் கடமையாக இருக்கவேண்டும்! இப்போதேனும், எல்லா மடங்களின் சொத்துக்களையும் அரசு மேற்கொண்டு, மடங்களை அந்தந்த நெறிகளின் பலகளை கழகமாக அங்கீகரிக்கவேண்டும்! அந்தந்த நெறிகளை அறிய விரும்புவோருக்கு அரசு உதவித்தொகையுடன், சாதி வித்தியாசமின்றி அனுமதிக்கவேண்டும்! கோவிலையும், மடங்களையும் பரம்பரை திருடர்களிடமிருந்து விடுவிக்கவேண்டும்!

  • நல்ல கருத்து. முழுதும் ஏற்கிறேன், சில திருத்தங்களுடன். மதம்-சடங்கு சார்ந்த கல்வியும், அவை படிக்க விரும்புவோர் இருந்தால், கற்பிக்கப் பட வேண்டும்.

   // அரசு உதவித்தொகை

   மதசார்பற்ற ஒரு அரசு இவ்வாறு செய்யவேண்டியதில்லை. இந்த மடங்களின் சொத்துக்களை ஒழுங்காக நிர்வகித்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்தே நிர்வாக செலவு, உதவித்தொகை எல்லாம் சமாளிக்க முடியும்.

 16. //மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
  திண்ண காத்திரு வாலவா யாய்அருள்
  பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,
  தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே//

  யாருக்கும் புரியாத அல்லது அனைவருக்கும் ஒரே பொருளைத் தராத செய்யுள்களை வைத்துக் கொண்டு இவ்வளவு விவாதமா? இவ்வளவு நேர விரயமா? எத்தனை ஆண்டுகள்? எத்தனை மனிதர்கள்? புரியாத செய்யுள்களை (கிட்டத் தட்ட எல்லாவற்றையுமே) ஒதுக்கிவிட்டு இனி ஆக வேண்டியதைப் பார்க்கலாமே.

  • உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் ஆகவேண்டியதை பார்க்கலாம். எனக்கு விருப்பம் உள்ளது.

 17. எந்த தத்துவமாயிருந்தாலும், அவற்றில் சமனோக்கும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும்! மதங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதோ, பிறவியின் அடிப்படையில் பிழைப்புக்கு பயன்படுத்துவதோ தடைசெய்யப்படல் வேண்டும்! கோவில் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைதன்மை தேவை! ஆகையால், அரசின் மேற்பார்வை மிக அவசியம்! அவை தனியார் வியாபாரக்கம்பனிகளல்ல!பொதுமக்களின் சொத்தே ஆகும்! அதிலும், தற்போது திருவனந்தபுரம் கோவில் சொத்துக்கள் தாவா எழுந்திருப்பதால், மற்ற கோவில்களிலும் அரசு தணிக்கை செய்து ஆவணப்படுத்தவேண்டும்!

 18. அஜாதசத்ரு,
  ராமானுஜரை விரட்டியடித்து, கூரத்தாழ்வான் கண்களை பொசுக்கியதாக சொல்லப்படுபவன் இரண்டாம் குலோத்துங்கன். இவனுக்கு முன் வந்த அரசர்களும், பின்வந்தோரும் வைணவத்தையும் ஆதரித்தனர் என்பதை நாகசாமி, ராமச்சந்திரன் இருவரும் ஏற்கின்றனர். இரண்டாம் குலோத்துங்கன் திருவரங்கம் ோவிலுக்கு செய்த பணிகளின் அடிப்படையில் அவன் மேற்கண்ட செயல்களை செய்திருக்க முடியாது என நாகசாமி கருதுகிறார். ஸ்ரீரங்கம் கோவில் பணிகள் செய்தான் என்ற செய்தியை ஏற்கும் ராமச்சந்திரன், இருப்பினும் அவன் ராமானுஜர் மீது வன்மம் கொண்டிருந்தான் என ஒரு முடிவுக்கு வருகிறார். தில்லை கோவில் கோவிந்தன் சிலையை அவன் அப்புறப்படுத்தியதை (?) தனது முடிவுக்கு ஆதாரமாக சொல்கிறார். இதற்கு முன் நடந்த விஷயங்களுக்கு கல்வெட்டு ஆதாரம் எல்லாம் கொடுப்பவர், இங்கே வலுவான சான்று இன்றி பேசுவதாக நான் உணர்கிறேன். மறுபுறம், கூரத்தாழ்வான் கண்கள் பொசுக்கப்பட்ததை “வைணவர்கள் நம்பிக்கை” என்றுதான் கூறுகிறார். இது ஒரு நிரூபனமாண வரலாற்று செய்தி என கூறவில்லை. எனினும், முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்து இவர்களிடையே நடந்த விவாதத்தை “சைவ-வைஷ்ணவ” சண்டை என நீங்கள் சுருக்குவது சரியல்ல.

  காலங்காலமாக சைவ-வைஷ்ணவ சண்டை நடந்தது என்பது உண்மைதான் என தோன்றுகிறது. ஆனால், இது தொடர்பாக சொல்லப்படும் விஷயங்கள் பலவும் இரு தரப்பாரும், உம்மை போன்ற மூன்றாது தரப்பாரும் எடுத்து விடும் கதைகளாக இருக்க கூடும். எனக்கு இங்குள்ள முக்கிய எதிர்ப்பு, தகுந்த வரலாற்றுப் பூர்வமான ஆதாரமின்றி பல கதைகளை “சூரியன் கிழக்கில் உதிக்கும்” என்பது போல சர்வ நிச்சயத்தோடு அடித்துப் அடித்துப் பேசுவதுதான். “திருஞானசம்பந்தர் கும்பல் அப்பரை அடித்துக் கொன்றது”, “மதுரகவி ஆழ்வாரை தேவரடியார் மூலமாக சைவத்தில் இருந்து வைணவத்துக்கு மாற்றினர்” என்பது போன்ற குண்டுகள் வீசுகின்றீர்கள். வைணவ மத நூல்கள் “கூரத்தாழ்வான் கண்கள் பொசுக்கப்பட்டன” என சொல்வதை, வேறெந்த ஆதாரமும் இன்றி உள்ளங்கை நெல்லிக்கனியென கொள்கிறீர்கள். பகுத்தறிவு என்றால் நேர்மையான வரலாற்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

  ————————————————————————-

  சம்பந்தர் சமணப் பெண்களை கற்பழிக்க சொல்லாவிட்டாலும், பதிகத்துக்கு பதிகம் அவர்களை வசை பாடி இருக்க வேண்டாம்! என் தத்துவம், என் மத நம்பிக்கைகள் எனக்கு. உன் மதம், உன் மத நம்பிக்கைகள் உனக்கு. அப்படியே தத்துவார்த்த விவாதம் என்றாலும், அடிதடி அற்று சாலமன் பாப்பையா பட்டி மன்றம் போல இருக்க வேண்டும். மதத்தை பெரிது படுத்தாமல் இணங்கி வாழ வேண்டும் என்பதே சரியான வழி. உங்களது கீழ்கண்ட கூற்றை ஏற்கிறேன்.

  // மதங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதோ, பிறவியின் அடிப்படையில் பிழைப்புக்கு பயன்படுத்துவதோ தடைசெய்யப்படல் வேண்டும்! கோவில் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைதன்மை தேவை! ஆகையால், அரசின் மேற்பார்வை மிக அவசியம்! அவை தனியார் வியாபாரக்கம்பனிகளல்ல!பொதுமக்களின் சொத்தே ஆகும்! //

  ஒரு திருத்தம் மட்டும். “பொது மக்களின் சொத்து” இல்லை. அந்தந்த மதங்களின் மீது ஈர்ப்பு கொண்டோர் சொத்து. கபாலீஸ்வரர் கோவிலில் தொழுகை செய்வேன் என்பதோ, ஆயிரம் விளக்கு மசூதியில் நாலாயிரம் பாடுவேன் என்று கிளம்புவதோ சரி அல்ல.

  ஆமென்.

 19. These type of conspiracy theories are too irresistible to publish. I have seen donation receipts (donated on a yearly basis) for Kanchi Kamakoti math in our ancestral house. These donations date back to early 20th century and were given by great-grandfather. We were informed that this tradition has been followed for generations. My great-great-grandfather’s was very much alive in the mid 19th century (as per your claim the Math was established in this period) and is not so credible to believe that people to shift their faith from one math to another in such a short period. He would not be sending the donations to a newly established Kumbakonam math deserting the Sringeri math if the tradition had been followed for generations.

  The math in the recent times has gained immense popularity because of HH Sri Chandrasekarendra Saraswati swamigal. But in those times without such a popular figure one will not change his faith so easily.

  Btw, where is that book available? I spent some 2 hours in the internet (also called Sri Ramakrishna press in Madurai), but the efforts have gone futile. Please share the link. I am even ready to buy that book for verifying the allegations. And the allegations you have made is simply translated from some blog post. Trust me, the conspiracy theory stated in ‘P.N. Oak’s Taj Mahal: The True Story’ is better than yours 🙂

 20. //“பொது மக்களின் சொத்து” இல்லை. அந்தந்த மதங்களின் மீது ஈர்ப்பு கொண்டோர் சொத்து. //

  கோவில் சொத்துக்கள் பெரும்பாலும் அரசர்களால்நிவந்தமாக கொடுக்கப்பட்டவை! சில கோவில்கள் ஆபத்துக்காலங்களில் அரசு கஜானைவை அனிய படையினரிடமிருந்து காப்பற்ற ரகசிய நிலவறை களை கொண்டிருந்தன! தோல்வியுற்ற ராஜனின் செல்வங்கள் எதிரியிடம் செல்லாமலிருக்க கோவில்களில் மறைத்து வைத்திருந்தனர்! மாலிக்கபுர் படைய்டுத்து வந்ததே தென்னக கோவில்களில் குவிந்திருக்கும் செல்வத்தை கொண்டு செல்லத்தான்! எதிர்பார்த்த தஙம் இல்லையேல் உற்சவ மூர்த்தியை கவர்ந்து செல்வர்! பிணைப்பணம் வந்து செர்ந்ததும் சிலைகலை விடுவித்தனர்!எப்படியும் ராஜனின் பணம் பொதுமக்களின் பணம்தானே! அர்த்தசாஸ்திரத்தில் கோவில் பணத்தை அரசு எடுத்துகொள்ள உரிமையுண்டு என்று கூறப்பட்டுள்ளதே! கோவில் வருமானமும் அரசு வருமானம்தான் என்று கூறப்பட்டுள்ளதே!

  • அஜாதசத்ரு,
   இதை வேறொரு தருணத்தில் விவாதிப்போம். நான் “உழைத்து” சம்பாதித்த பணத்தில், என் விருப்பப்படி கோவில் உண்டியலில் போட்ட பத்து ரூபாயும் அரசு சொத்து என கூற மாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி.

 21. //“பொது மக்களின் சொத்து” இல்லை. அந்தந்த மதங்களின் மீது ஈர்ப்பு கொண்டோர் சொத்து. //

  அப்படியானால் ஐரோப்பாவில் உள்ள பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்கள் எல்லாம் தமிழ்க்கிறித்தவர்களின் சொத்து என்றாகி விடும். தமது வரலாற்றில் பெருமை கொண்ட பெரும்பான்மையான ஐரோப்பியர்கள் அதற்கு சம்மதிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 🙂

  கோயிலோ, மசூதியோ அல்லது தேவாலயமாக இருந்தாலும் அது அந்த நாட்டு அரசர்களால் அல்லது அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டிருந்தால் அது அந்த நாட்டின் அல்லது மாநிலத்தின் பொதுமக்களின் சொத்து தான். அரசர்களோ அல்லது அரசாங்கமோ மக்களின் வரிப்பணத்தில், அந்த நாட்டு மக்களின் உழைப்பைக் கொண்டு தான் அவற்றைக் கட்டியிருப்பார்கள். அதற்காக பழமையான மசூதிகளை, இந்துக்கள் போய் இடிக்கவோ, அல்லது தம்முடையது என்று சொந்தம் கொண்டாடவோ முடியாது. அவற்றை எந்த தனிப்பட்ட குழுவினரோ அல்லது சாதியினரோ தனியுரிமை கொண்டாட முடியாது. அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் எந்த வித இடையூறிமில்லாமல் அந்தக் கோயில்களிலும், தேவாலயங்களிலும் அல்லது மசூதிகளிலும் தமது மதங்களைக்கடைப்பிடிக்க உரிமையுண்டு. அவை அந்த நாட்டின் அல்லது அந்த மாநிலத்தின் சொத்துக்கள்.

  ஆனால் தமது சொந்தப் பணத்தில் கட்டி, அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கோ அல்லது சலுகைகைகளோ பெற்றுக் கொள்ளாத தனிப்பட்ட வழிபாட்டுத் தலங்களை மட்டும் அதைக் கட்டியவர்கள் சொந்தம் கொண்டாடலாம்.

 22. வியாசன் வந்துவிட்டதால், வெங்கடேசனை விட்டொம்!

  பொதுமக்கள் பணத்தை கொண்டு நடைபெரும் எந்த அறக்கட்டளையையும், முறைடயாக நடக்கவில்லை என சநேகித்தால், அரசு தலையிட்டு, புதிய அறஙகாவலர் குழு அமைத்துநிர்வகிக்கலாம்! இந்த விதி, வக்ஃப் வாரியம் உட்பட எல்லா அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும்!

  சமீபத்தில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைநிர்வாகக்குழு கலைக்கப்பட்டு ஷேஷன் அதன் தலைவராகநியமிக்கப்பட்டார்! ஆங்கிலேயர் காலத்திலேயே திருச்சிநேஷனல் காலேஜ் ட்ரஸ்ட், பாப்பம்மால் ட்ரஸ்ட் முதலியவை அரசு தலையிட்டுநிர்வாக மாற்றம் செய்துள்ளது!

  தில்லை முதலிய சரித்திர முக்கியத்துவமும் கொண்ட கோவில்களை தனியார் வசம் விட்டு வைத்தல் கூடாது!

 23. ‘நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றமே’ என்று சிவனை எதிர்த்துநின்ற நக்கீரனார், பின்னர் சரணடைந்து திருமுருகாற்றுப்படை பாடினார்! இடயில் யாரால் அவர் சித்திரவதை செய்யப்பட்டார்?

  அதைபோல, “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று அப்பர் பாடியது உவமானத்துக்கே அன்றி உண்மையில் எப்படி நடக்கும்?

  மக்களே மனம் மாறி பார்பன அர்ச்சகரை ஏற்ற்யெளக்கொண்டது மகிழ்கக்ச்சிதான்! அதே போல. மக்கள் விருப்பட்டால் வேறு சாதி அர்ச்சகர் ஏற்றுக்கொள்ளப்படுவாரா? சிலபதிவுகளுக்கு பதிலிடும் பெட்டி திறக்கவில்லை. வினவு கவனிக்க!

  • நக்கீரர் எப்பொழுதுமே சைவர்தானே?அவர் முருகனை பாடும் முன்பே கயிலைபாதி காளாத்தி பாதி என்ற அந்தாதி பாடி நெற்றிகண் வெப்பத்திலிருந்து பிழைத்தார் என்று அதே திருவிளையாடல் புராணம்தான் கூறுகிறது.

 24. //அதைபோல, “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று அப்பர் பாடியது உவமானத்துக்கே அன்றி உண்மையில் எப்படி நடக்கும்?//

  என்னுடைய மட்டுப்பட்ட(Limited) தமிழறிவுக்கே நீங்கள் சொல்வது சரியாகப்படவில்லை. மேலே குறிப்பிட்டது உண்மையில் உவமானமா? உலகில் இறைவனருளால் நடைபெற்றதாகக் கூறப்படும் அதிசயங்கள் (எல்லா மதத்திலும்) எல்லாவற்றுக்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது.

  இந்த தேவார வரிகளில் ‘நீங்கள் என்னைக் கல்லில் கட்டி கடலில் மிதக்க விட்டாலும் , எனக்கு நமசிவாய என்ற ஐந்தெழுத்தும் துணை நிற்கும், நான் அஞ்சேன்’ என்கிறார் அப்பர் சுவாமிகள். சமணர்கள் அவரைக் கல்லில் கட்டிக் கடலில் விடுமுன்பே,, அவர்களுக்கு இப்படிச் செய்யுங்கள் என்று அதாவது “பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது” என்று ஈழத்தில் சொல்வது போல, தன்னைக் கல்லில் கட்டி கடலில் விடுமாறு சமணர்களுக்கு Idea கொடுக்கிறார் நாவுக்கரசர், என்ற உங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எனக்குத் தெரியவில்லை.

  கல்லில் கட்டி கடலில் விடுவதும், அது சிவனருளால் மிதப்பதும் நம்பமுடியாதவை, வெறும் உதாரணங்கள் என்றால், நாவுக்கரசரை நீற்றறையில் இட்டது, உணவில் நஞ்சிட்டது, மதயானையால் அவரைக் கொல்ல முயன்றது எல்லாம் வெறும் உவமானங்களா? அவையெல்லாம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனைகள்.

  • வைணவ பெரியார் ராமானுஜர் விடயத்தில் கல்வெட்டு ஆதாரமின்மையால் அதுநடக்கத கதை என்றிர்கள்! அப்பர் கூறுவது போல இன்றும் வழக்கில் சொற்றொடர் பயன்பாட்டிலுள்ளது! ‘என் தலையே பொனாலும் அந்தக்காரியம் செய்யமாட்டேன்’ என்ற் கூறுவதில்லையா? அப்பர் பாடலுக்கு ஒருநீதி, சம்பந்தர் பாடலுக்கு ஒஉ சப்பைக்கட்டுநீதி, ராமனுஜர், கூரத்தழ்வான், கல்வெட்டில் பொறிக்கபடாமையால் அன்னிகழ்வு கூடநடக்கவில்லை என் கிறீர்!நலநீதி உங்கள் சைவநீதி!

   //கல்லில் கட்டி கடலில் விடுவதும், அது சிவனருளால் மிதப்பதும் நம்பமுடியாதவை, வெறும் உதாரணங்கள் என்றால், நாவுக்கரசரை நீற்றறையில் இட்டது, உணவில் நஞ்சிட்டது, மதயானையால் அவரைக் கொல்ல முயன்றது எல்லாம் வெறும் உவமானங்களா? அவையெல்லாம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனைகள்.//

   நீங்களே சொல்லிவிட்டீர்கள்,நடை முறையில் இருந்த தண்டனைகள் என்று! தண்டனைகள் அரசனால் மட்டுமே கொடுக்கப்பட்டன! எந்த அர்சனால் அவ்வாறு தண்டிக்கபட்டார்? கல்வெட்டு ஆதாரம் ராமானுஜருக்கு மட்டும்தான் கேட்பீர்களா?

 25. // ‘நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றமே’ என்று சிவனை எதிர்த்துநின்ற நக்கீரனார், பின்னர் சரணடைந்து திருமுருகாற்றுப்படை பாடினார்! இடயில் யாரால் அவர் சித்திரவதை செய்யப்பட்டார்? //

  தருமிப் பார்ப்பான் நக்கீரரை சித்திரவதை செய்திருப்பான் என்கிறீர்களோ..? தழிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவரை, மன்னன் செண்பகப்பாண்டியனின் அன்புக்குகந்த நக்கீரரை மண்டகப்படி தருமி எப்படி சித்திரவதை செய்திருக்க இயலும்..?! பகுத்தறிவு உங்களிடம் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது அய்யாவே..

  • /மன்னன் செண்பகப்பாண்டியனின் அன்புக்குகந்த நக்கீரரை மண்டகப்படி தருமி எப்படி சித்திரவதை செய்திருக்க இயலும்..?!/

   மன்னனை மதி மயக்க உத்திகளா இல்லை பார்ப்பனரிடம்?

   இறையனார் தலைமையில் இருந்த இடைச்சங்கம் தமிழை வளர்த்ததைவிட ஆரியத்தையே வளர்த்தது! கடவுள் வாழ்த்து என்னும் பாயிரமும் , அரசனைப்போற்றியும் பாடாமல் எந்தப்புலவனும் பாட்டெழுதக்கூடாது, புலவனும் தண்டிக்கபட்டார்! ஆரிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் சங்கம் பக்கமே வரவில்லை! வள்ளவரும் சங்கம் வரலாற்றில் இல்லை! பின்னர் அவரைப்பற்றி கதைகள் புனையப்பட்டபோது செர்த்தார்கள்! அவ்வையாரும் அப்படியே! கடசி வரை குடியானவனின் கூழே பொதும் என்றிருந்தவர்!

   னற்கீரர் வரலாறே, புலவர் குழாமை எச்சரிக்கவே புனையப்பட்டது!

   அன்று ஏழை பார்ப்பன தருமிக்காக கவிதை எழிதி வந்த ஈசன் இன்று தில்லை தீக்ஷிதர்க்காக தீர்ப்பை மாற்றி எழுதநாட்டாமைகளுக்கு காட்சியளிக்கலாம்!

 26. பகுத்தறிவு உங்களிடம் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக இல்லை அம்பிகளே! உங்கள் பித்தட்டங்களை மக்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்பி ஏமாறுவார்கள் என்று பரிதாபமாக இருக்கிறது, மக்களின்மேல்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க