privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !

கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !

-

ராக்கி
சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பணிப்பெண் ராக்கி.

குஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தனஞ்செயின் மனைவி ஜாக்ரிதி, அவரது வீட்டுப் பணியாளரான ராக்கியை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். மற்றொரு பணிப்பெண் மீனாவும், 17 வயது சிறுவன் ராம்லாலும் கடுமையான காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்பது மாதங்களுக்கு முன் டெல்லியிலுள்ள தனஞ்செய் வீட்டில் வேலைக்கு சேர்ந்த மே.வங்கத்தைச் சேர்ந்த 35 வயதான ராக்கி, ஒரு விதவை. சொந்த பந்தம் ஏதுமற்ற இவ்விதவையையும் மற்றுமிரு வேலையாட்களையும் காட்டுத்தனமாக அடிப்பதோடு, உணவைத் தரையில் போட்டுத் தின்ன வைப்பது, சோற்றில் எச்சில் துப்பி வைத்துச் சாப்பிடச் செய்வது, கெட்டுப் போன உணவைக் குப்பையில் எறிந்தபின் அதை எடுத்துச் சாப்பிட நிர்பந்திப்பது – என்று மிகக் கொடிய வன்முறையை வக்கிரமாக ஏவியுள்ளார் ஜாக்ரிதி. கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ள ஜாக்ரிதி, தீபாவளியன்று சுத்தமாகத் தரையைத் துடைக்கவில்லையென்று ராக்கியின் கழுத்தை நெரித்து, தலைமுடியை இழுத்துச் சுவற்றில் மோதி, இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கி, அவரது பிட்டத்தில் இஸ்திரியால் சூடு போட்டுள்ளார். கோபம் அடங்காமல் மற்ற வேலையாட்களையும் இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். இக்கொடிய தாக்குதலால் குற்றுயிராகக் கிடந்த ராக்கி, நவம்பர் 4-ஆம் தேதியன்று பின்னிரவில் மாண்டு போனார்.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வீட்டுப்பணியாளர்கள் மீது வன்முறையை ஏவியதற்காக ஜாக்ரிதி மட்டுமின்றி, அல்ஸ்டெம் கம்பெனியின் இயக்குனர் வந்தனா தீர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியரான ஆரதி ஜெயின் ஆகியோரும் கைது செயப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்னர். இவர்களால் சித்திரவதை செயப்பட்டவர்களெல்லாம்பெண்களும் 16 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களுமாவர். விடுமுறை, முறையான சம்பளம், பாதுகாப்பு ஏதுமற்ற வீட்டுப் பணியாளர்கள்-குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட்ட நவீன அடிமைத்தனத்தில் இந்தியா உலகில் முதலாவது இடத்தில் இருப்பதாக உலக அடிமைத்தன அட்டவணை (global slavery index) கூறுகிறது. ஆனால், குற்றவாளிகள் மீது கொலை முயற்சி, சித்திரவதை போன்ற பொதுப்படையான பிரிவுகளில் மட்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து நவீன அடிமை முறையின் அரணாயிருக்கிறது இந்த அரசு.

______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

மேலும் படிக்க

தனஞ்செய்
பணிப்பெண் கொலைக்காக கைது செய்யப்படும் பிஎஸ்பி நாடாளுமன்ற உறுப்பினர் தனஞ்செய், அவரது மனைவி ஜாக்ரிதி.