முகப்புசமூகம்சாதி – மதம்சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

-

south-wall-cdm-temple
தெற்கு வாயில் தீண்டாமைச் சுவர்.

நோட்டீசை டவுன்லோட் செய்ய

வரலாற்றுச் சுவடுகளில் நந்தனார்

“மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ
ஆடு தின்னும் புலையா உனக்கு ஆனி திருமஞ்சனமோ”

“பார்ப்பார தெய்வமது பலிக்காது பறையரைக்
காப்பாற்ற மாட்டாது கைவிடுவீரென்றார்”

– நந்தனார்சரித்திர கீர்த்தனைகள்

“திருநாளைப் போவார் தொழுததால் புகழ் பெற்ற தில்லை”
– வள்ளலார்

உண்மைச் சமய உணர்வுள்ள மெய்யடியார்க்குள்ளே உயர்சாதி, புற சாதி எனும் வேற்றுமைகள், எதிர் நிற்க வலிமையற்றவை என்பதற்கு நந்தனார் கதை எடுத்துக்காட்டாக உள்ளது.
–  டாக்டர் ராதா கிருஷ்ணன்

“தீண்டப்படாதோரிடையே பிறந்து தமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பை பெற்று புகழ் மிக்க  செல்வர்களாக திகழ்ந்த நந்தனார், ரவிதாசர், சோகாமேளர் ஆகிய மூவன் நினைவுக்கு காணிக்கையாக்குகிறேன்.
–  தீண்டப்படாதவர் யார் ? என்ற நூலில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

சுவாமி சகஜாநந்தர் சிதம்பரத்தில் நந்தனார் பள்ளியையும், நந்தனார் மடத்தையும், கோயிலையும் நிறுவினார்.

“1935-ல் சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு சன்னதியில் கும்பிடும் கோலத்தில் ஆளுயரக் கற்சிலையாக நந்தனார் சிலை வழிபாட்டில் இருந்தது”.
-பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன், முன்னாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

“தெற்கு சுவரோரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக் கொண்டிருப்பார். நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியை தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும் உள்ளன. பாரதியார், நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து நினைந்து உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டுகோலாக இருந்தது”
– நந்தனார்  சரித்திர கீர்த்தனைகளை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியாரை பற்றி டாக்டர் உ.வே.சா.

  • தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்…
  • தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்…
  • தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
  • தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர் ! ..

டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம் !

சிதம்பரம் நடராசர் கோவிலில்
நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த
தெற்கு வாயிலை அடைத்து

தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும்
தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

ஆர்ப்பாட்டம் – முற்றுகை

நாள் : 25-12-13 புதன், காலை 10-00 மணி
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்

  • தெற்கு சன்னதியில் இருந்து தீண்டாமையின் காரணமாக
    தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
  • தில்லைக் கோவிலை தீட்சிதர்கள் கொள்ளையடிக்க, மீண்டும் கைப்பற்ற அனுமதியோம் !
  • சிதம்பரம் நடராசர்கோவிலில் தமிழ் மக்களின் உரிமைக்கும் தமிழ் வழிபாட்டிற்கும் குரல்  கொடுப்போம் !

[போஸ்டர்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி.

தொடர்பு – 9965097801, 9791776709, 9597789801