privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைதமிழிசை மரபு சில குறிப்புகள்

தமிழிசை மரபு சில குறிப்புகள்

-

தமிழ் இசை மரபை இருட்டடிப்பு செய்து பார்பனியம் மற்றும் வடமொழி சார்ந்த ‘கர்நாடக இசை’ மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே நிரூபித்தார்.

1917-ல் வெளியிடப்பட்ட அவரது கருணாமிருத சாகரம் என்னும் இசை ஆய்வு நூல் இவ்வுண்மையை ஆணித்தரமாக நிறுவுகிறது. இசைக் கல்லூரிகளிலோ, இசை விழாக்களிலோ இதுபற்றி மூச்சும் விடப்படுவதில்லை.

இதுவன்றி திரு.மு.அருணாசலம் அவர்கள் எழுதிய கருநாடக சங்கீதம், தமிழிசை ஆதிமும்மூர்த்திகள் என்ற நூலும் இசையறிஞர் தண்டபாணி அவர்களின் ‘திராவிட இசை’ எனும் நூலும் மேலும் பல அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இதனை நிரூபிக்கின்றன.

மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து நமது வாசகர்ரொருவர் தொகுத்தனுப்பிய விவரங்களை கீழே தருகிறோம்.

இசை மட்டுமல்ல கருவிகளும்

தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே உரிமையாயிருந்து, இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.

பரதர் நூலில் ஆதாரம்

“ தென்னிந்திய மக்கள் பற்பல நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் தனிப்பட்ட கலையார்வம் காட்டுகிறார்கள். அவர்களின் கலைகளில் அழகும் மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. அவர்களின் சமர்த்தியமான் அபிநயங்கள் பொலிவுடன் விளங்குகின்றன. இவ்வாறு நுண்கலைகள் உலவும் நாடானது வடக்கே விந்திய மலையாலும் மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டுள்ளது”, பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் 5-ம் நூற்றாண்டு.

பண்டைக்காலத் தமிழகத்தில் பண் இசைப்போரை பாணர் என்றும் பெண்டிரைப் பாடினி என்றும் குறித்தனர். இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர் என்றும் யாழ் இசைத்தவர் யாழ்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் என்று அழைக்கப்பட்டனர் என தமிழிலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. வடமொழியாளர் இசைபாடியதாகவோ நடனமாடியதாகவோ பழம் நூல்களில் குறிப்பு இல்லை.

தமிழ்ப் பண்கள்

நிலத்தை உழுது பயிரிடும் போதும் உணவுக்காக நெல்லைக் குற்றும் போதும் சுமை சுமந்து செல்லும் போதும் களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். அறுபடையிட்டு பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப்பாடினர். நெடுஞ்சாலையில் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயமின்றி பயணம் செய்தனர்.

தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன.

நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.

பார்ப்பனப் புரட்டு

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட “சங்கீத ரத்னாகரம்” என்ற நூலே குறிப்பிடத்தக்க வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும். தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னர் அந்நூல் இயற்றப்பட்டுள்ளது. அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி,தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய பிருகத தேசி என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. தமிழ்கத்தின் ஊர்ப்பெயர்களை வடமொழியில் கும்பகோணம் (குடமூக்கு), வேதாரண்யம் (மறைக்காடு), விருத்தாசலம் (பழமலை) என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களை வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாய் வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார். இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார். தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார். எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார். இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர்

இந்த ஆரிய இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

“பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் பரத நாட்டியம் என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

ச,ரி,க,ம,ப,நி

ஏழிசைக் குறீயீடு எழுத்துக்கள் சரிகமபதநி ஏழும் தமிழ் எழுத்துக்களே. சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில் “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர். தமிழ் ‘ச’ வுக்கும் பதிலாக வடமொழி ‘ஸ்’ வை வலிந்து திட்டமிட்டுப் பயன்படுத்தினார்.

இப்புரட்டினை மறைத்திரு நாரயண சாஸ்திரிகள் கீழ்கண்டவாறு வன்மையாக கண்டித்துள்ளார்

“சாரங்கதேவர் விவரித்த சரிகமபதநி என்கிற ஏழு சுரக்குறிகள் காரணப் பெயருள்ளவைகளென்பது, இடுகுறிப்பெயர்கள் என்று மெய்பித்து விளக்குகிற சிகண்டி மாமுனிவர் அருளிச் செய்த இசை நூலுக்கு விரோதப்படுகின்றது. அன்றியும் ஷட்ஜா என்ற பதத்திலிருந்து ‘ஸ்’ வும், ருஷப என்கிற பதத்திலிருந்து ‘ரி’ யும், காந்தார என்கிற பதத்திலிருந்து ‘க’வும், பஞ்சம என்கிற பதத்திலிருந்து ‘ப’ வும், தைவத என்கிற பதத்திலிருந்து ‘த’ வும், நிஷாத் என்கிற பதத்திலிருந்து ‘நி’ யும் வந்தனவென்று உரைக்கில், ‘ஷ’ என்கிற சமஸ்கிருத அட்சரம் ‘ஸ்’ என்கிற மாறுதலை அடைவதற்கும், ‘ரு’ என்கிற சமஸ்கிருத உயிரெழுத்து ‘ரி’ என்று சமஸ்கிருத மெய்யெழுத்தாக மாறுகிறதுக்கும், ‘கா’ என்கிற தீர்க்கம் ‘க’ என்று குறுகுவதற்கும், தைவத என்பதில் ‘த’ என்று அகர வடிவமைந்து வருவதற்கும் யாதொரு சமஸ்கிருத வியாகரண பிரமாணம் காண முடியாமையாலும்,ஷட்ஜா முதலிய ஏழு பதங்களும் காரணச் சொற்கள் என்று காட்டுவதற்காக ‘ரிஷப, காந்தார, தைவத’ என்கிற மூன்று பதங்களின் பொருள் ஆராய்ச்சியில் சுரங்களைச் சம்பந்தித்தவைகளாகவே சாரங்க தேவர் விவரிப்பதில் ஷட்ஜ, மத்திம, பஞ்சம, நிஷாத என்கிற உரைகள் சுரங்களையே சம்பந்தித்ததெனக் கூறுவது கிரமமில்லாமையும் அபந்நியாயத்தையும் ஷண்ட, ருதம், காத்ரம், மதுரம், பட்டலம், தைரியம் முதலான சமஸ்கிருத பதங்களில் முதல் அட்சரமாக அதிப்பிரசிங்கிப்பதாலும் திராவிடர்கள் அமைத்த இடுகுறிப்பெயரை மாற்றுவதற்கெடுத்த புரட்டு என்று தீர்மானிக்கப்படுகிறது”

கீர்த்தனைக்கு முன்னால் தேவாரம்

கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவார காலத்தில் தோன்றியது. கீர்த்தனத்தில் நிரவல் விருத்தி முதலிய இசையமைப்புகள் எல்லாம் தேவாரப் பாடல்களைக் கொண்டே அமைந்தவை. தியாகையர் கீர்த்தனங்களின் இசையமைப்பானது தொடக்கத்தில் பெரும்பாலும் எளிமையாகவே இருந்தது. பின்னாளில் ஆங்காங்கு பாடிய இசை வல்லுனர்களே நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களின் இசையமைப்பில் விருத்திகளைப் புகுத்தி வளர்த்து வந்துள்ளனர்.

தியாகய்யரின் கீர்த்தனங்களை(கொச்சையான தெலுங்குப் பாடல்கள்) அவருடைய தெலுங்கு மொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் கற்று கச்சேரி செய்ய ஆரம்பித்த பிறகு மொழிக்கொலையும், சங்கீத கொலையும் விளைந்தன. இதைக்கண்டு சுப்பிரமணிய பாரதியார் புலம்புவது பின்வருமாறு :

“ இசைஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனைகளும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்தில் சங்கீத வித்துவான்களிலே பல்ர் சங்கீதத்துக்கும் நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர்”

“முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவர்களுக்கு ரசம் தெரிய நியாயமில்லை”

“நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிற்து : “ வாதாபி கணபிதம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராம நீசமான மெருவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுசொசகி’,…. அய்யய்யோ, அய்யய்யோ ஒரே கதை

– பாரதியார் மேலும் எழுதிக் கொண்டே போகிறார்.

ஆதி மும்மூர்த்திகள்!

தியாகையர் (1767-1847), சியாமா சாஸ்திரிகள் (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776-1835) ஆகிய இம்மூவருமே கருநாடக இசை மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகிறார்கள். இம்மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இம்மூவருடைய சங்கீதமும் அன்னிய மொழிகளில் தாம், பரந்துபட்ட மக்களுக்கு புரியாத மொழிப்பாடல்களே. ஆகையால் இவர்களுடைய சங்கீதம் வாழ்க்கையில் சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களுக்கே உரியதாய் இருந்து வந்துள்ளது.

இராமப்பிரமத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை. ஆறுகாலங்களிலும் நாதஸ்வர வாத்திய இசை, தேவார இசை அவ்வளவே. அவருக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த சங்கீத வித்துவான்களுடைய இசையையும் அவர் கேட்டிருந்தார். இவ்வாறு பெற்ற இசையறிவை தெலுங்கு இசைப்பாடல்களாக இயற்றினார்.

தியாகையர் தல்லப்பாக்கம் அன்னமையாவிடமும் (1423-1503) புரந்தர தாசரிடமும் (1484-1564) இசை கற்றார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஏனெனில் தியாகையரின் காலம் (1767-1847) மேற்கூறிய இருவரின் காலத்துகு மிகவும் பிற்பட்டதாகும்.

இம்மூர்த்திகளுக்கும் மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார். அவர் சீர்காழி முத்துதாண்டவர்(1525-1625), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779), மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்பவர். இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. தற்போதைய மும்மூர்த்திகளுக்கு முன்னோடிகளாவார்.

இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.
_______________________________________
புதிய கலாச்சாரம்,  ஜனவரி 1994

_______________________________________

  1. //இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.//

    இம்மூன்று கருவிகளும் தமிழகத்தில்தான் தோன்றின என்பதைக்குறிக்கும் வண்ணமே இம்மூன்றின் பெயரிலும் தமிழுக்கே உரித்தான சிறப்பான ழகரத்தை வைத்தனர் தமிழர் – கு’ழ’ல், யா’ழ்’, மு’ழ’வு.
    இந்த செய்தி முத்தமிழ்காவலர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எழுதிய ‘தமிழின் சிறப்பு’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

  2. அற்புதமான கட்டுரை,..தகவல்களை தொகுத்து அனுப்பிய வாசகருக்கும்,வெளியிட்ட புதிய கலாச்சாரத்திற்கும்,மறுபதிவு செய்த வினவுக்கும் மிக்க நன்றிகள்.ஆனால் தமிழ் நாட்டில் கி.மு.2ம் நூற்றாண்டிலேயே மனுதர்ம ஆட்சி நடந்தது என்று கூறும் அம்பியும்,தமிழ் இனம் காட்டுமிராண்டி இனம் எனும் அஜாதசத்ருவும் இந்த கட்டுரையை மறுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  3. சரிங்க… ஒத்துக்கறேன்… ஆனால் இத்தனை நுட்ப மதி கொண்ட ஆய்வு கண்ணோட்டம் கொண்ட தமிழ்ன் (அதாங்க நாம) எப்படி பாப்பர்ன் வந்தவுடனே ”ஸ்விச்” போட்ட மாதிரி அவிங்களுக்கு அடிமை ஆயிட்டோம்னு தான் புரிய மாட்டேங்குது…. நாமள்ள அவன அடிமை படுத்தியிருக்கணும்…

    • உண்மைதானே……

      தமிழ் இசையை களவாடியது……

      உண்மைதானே!!!

      • உண்மைதானே! உண்மைதானே……!

        பார்பனன் தமிழ் இசையை களவாடி

        அரை தமிழனாய் வாழ்வது

        உண்மைதானே!!!

        கி.செந்தில்குமரன்

  4. ஒரு கல்லை தூக்கி இருக்கமாட்டான் உளியை பிடித்திருக்க மாட்டான் ஆனால் சிற்பசாஸ்திரம் வடமொழியில் எழுதிவிடுவான் அவன் தான் பார்ப்பான்.யோகாசன நூல் எழுதிய பதஞ்சலி தமிழகத்தில் தில்லையில் வாழ்ந்து செத்தவர் ஆனால் யோக சூத்திரங்களை வடமொழியிலேயே எழுதியுள்ளார்.நான் நினைக்கிறேன் இவர்கள் நமது கலைச்செல்வங்களை அவர் மொழிக்கு எடுத்து சென்றிருக்கின்றனர் பின்பு நமது நூல்களை எல்லாம் போகி நெருப்பிலும் ஆற்றிலும் இட சொல்லி இருக்கின்றனர்.சிலம்பம் களறி சித்த மருத்துவம் போன்ற நாட்டுக்கலைகள் உலகெங்கும் பரவியது இங்கிருந்து தான்,ஆனால் குங்க்பு மொத்தமாய் அத்தனை மீதும் உரிமை கொள்வது போலதான்.

    • // இவர்கள் நமது கலைச்செல்வங்களை அவர் மொழிக்கு எடுத்து சென்றிருக்கின்றனர் பின்பு நமது நூல்களை எல்லாம் போகி நெருப்பிலும் ஆற்றிலும் இட சொல்லி இருக்கின்றனர்.//

      போகி நெருப்பில் பழையதுகளைப் போட்டுத்தான் எரிப்பார்கள்.. நீர் ஏனய்யா உமது நூல்களைத் தூக்கி அதில் போட்டீர்..?!

    • I have the same doubt. The most 360 degree thinkers I’ve seen are Tamils and not IITs which is all theoretical and nothing practical (yes there are exceptions, but it clearly proves those intellectual kattukadhais and all Indian exposures through Sanskrit is completely wrong)… At India level have we heard one Tamil invention thru our books? highly suspicious! Also the most tolerant and submissive are Tamils too, that’s why they could have been easily fooled… Proofs are what we see built in Tamil Nadu and through the Pazhani/Adhichanallur etc. excavations, and also lack of total evidence (a.k.a. wiped off)… Again anybody can contradict but it seems truth to me!

  5. சுமேறியர்களுக்கு எழுத்த சொல்லி கொடுத்தான்
    ஆரியர்களுக்கு இசை சொல்லி கொடுத்தான்
    கிரேக்கர்களுக்கு வானவியல் அறிவை கொடுத்தான்
    சீனர்களுக்கு குக்பூ சொல்லி கொடுத்தான்
    கம்போடியர்களுக்கு கோவில் கட்டி சிற்ப சாஸ்திரம் கொடுத்தான்
    பார்ங்கியர்களுக்கு மருத்துவம் கற்று கொடுத்தான்
    தமிழன்டா!

    திட்ட மீட்டு பழைய பைபிளை உலகில் உள்ள எல்லா நூலகத்திலும் எரித்தது போல ,ஆரியர்கள் எல்லா தமிழ் சுவடிகளையும் எரித்து விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான் தமிழன்

    🙂

    • ஏதென்ஸ் மக்களுக்கு ஜனநாயகம் கற்று கொடுத்தான்
      ரோமானியர்களுக்கு போர் கலை கொடுத்தான்
      என்பது விடுபட்டு போய்விட்டது

      • ராமன்,நான் உங்களுக்கு ஆரியர்களின் வானவியல் அறிவ விளக்கி சொன்னேனே அதை நம்பினிங்களா இல்லையா? ஏன் கேக்குறேன்னா நம்புனா தொடர்ந்து சொல்லதான்.

        • நீங்கள் ஆடையின்றி நிற்கிறீர்கள் என்று நான் கூறினேன்
          பக்கத்துக்கு வீட்டுக்காரனும் ஆடையின்றி நிற்கிறான் என்று நீங்கள் கூறுகிறீர்கள்

          • அந்த பக்கத்து வீட்டுக்காரன் நீங்கதானே பாஸ்!மேலும் இங்க கேள்வி உங்க நம்பிக்கை குறித்துதானே? முழு ஆடை உடுத்தியவர்களை ஆடையின்றி நிற்பதாக கூறுபவர்கள் இரு வகையினர் மட்டுமே.ஒர் வகையினர் கண்ணு தெரியாதவர்கள் மற்றொரு வகையினர் மனநோயாளிகள்.

          • ராமன், இங்கு விவாதம் கர்னாடக சங்கீதம் தமிழ் இசை மரபிலிருந்து திருட பட்டதா இல்லையா என்பது குறித்து.கருணாமிர்த சாகரம் என்னும் 1300 பக்கமுள்ள நூலில் ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக விவாதித்து நிறுவியுள்ளார்.உங்களால் முடிந்தால் அதை மறுத்து விவாதியுங்கள்.சம்பந்தம் இல்லாமல் உளராதீர்கள்.

      • மார்க்ஸீக்கு கம்யூனிசம் கத்துக்கொடுத்தான்.. அதயும் சேத்துகுங்க…

    • வாஷிங்டன் : சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்.

      கி.செந்தில்குமரன்

    • வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ் நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் (“EMAIL”) என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.

      கி.செந்தில்குமரன்

    • நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து

      கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு

      மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.
      இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்றுவந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

      கி.செந்தில்குமரன்

    • உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் “பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா” எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை.

      • நீங்கள் கூறிய அனைவரும் GD தவிர வெளிநாட்டு கல்வி பயின்று வெளிநாட்டு கலாச்சாரத்தால் கண்டரியபட்டவர்கள் .

        இது திறமையுள்ள மனிதனை வெளிக்கொணரும் வெளிநாடுகளின் கட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி.

        • ராமன் ஐயா ,

          வெளிநாட்டு கல்வி பயின்ற

          மற்றவர்கள் சாதிக்காததையும்

          இந்த தமிழர்கள்

          சாதித்துள்ளார்களே !

          ராமன் ஐயா….. ,

          உங்கள் பதில்கள்

          மிக சரியான

          சப்பை கட்டுகள்!!!!!!!!

          கி.செந்தில்குமரன்

    • கர்னாடக இசை, தமிழிசையில் இருந்து

      தான் திருடப்பட்டது என்று ஆதாரத்துடன்

      கூறினால்………

      இராமனுக்கும், அம்பிகளுக்கும்

      ஏன் வயிற்று எரிச்சல் !

      கி.செந்தில்குமரன்

  6. ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடிபெயர்ந்த போது, ஆரிய பெண்களுடன் வரவில்லை! தங்களுடன் மேற்கத்திய போர்முறை தந்திரங்களையும், அரசர்களை மகிழ்விக்க யாகமந்திரஙகளையும் கொண்டுவந்தனர்! அக்காலத்தில் வட இந்தியாவில் பரவிக்கிடந்த திராவிடர்களின் தலைவர்களை ஈர்த்து பல பதவிகளில் அரசோச்சினர்! அக்காலத்தில் இத்தகைய அறிஞர்களுக்கு பிள்ளை பெற்று பல முனிவர்களின் கோத்திரங்களும், சாதிகளும் உருவாகின! சிந்து சமவெளி நாகரிக மொழியான பிராகிரத மொழி சானியர் பேசும் திரமில பிரகிருதம் என்றும், பிராமண அறிஞர்கள் மட்டுமே பேசும் சமஸ்கிருதம் என்றும் பிரிக்கப்பட்டது! சாமானியர்கள் பிராமணர்களின் கல்வியை கற்றால் தங்கள் மதிப்பு போய்விடும் என்று அஞ்சியே, சாமானியர்கள் படிக்க கூடாது என்றனர்! அதற்கு சாட்சியாக கடவுளே சொன்னார் என்றனர்! பல பெரியார்கள் அவ்வப்போது தோன்றி அதை மறுத்தாலும், அவர்களுக்கு சிஷ்யர்களாகி குருவின் கருத்தையே மாற்றினர்!

    யார் யார் பார்பனர்களது கொலை வேள்வியை எதிர்த்தார்களோ, அவர்களே பிராமண உயர் சாதியாஇ போற்றினர் என்று பொய்யான கதையை பரப்பினர்! நந்தியும், அனுமானும், மகாபலியும், நரகாசுரனும் அவர்கள் இறந்தபின் பிராமண தாசர்களாக சித்தரிக்கப்பட்டு, அவர்களின் வழிவந்தோரும் பிராமண ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள செய்தனர்! போரில் தோற்றாலும் புராணங்களில் ஜெயித்தார்கள்! ஏமாளிகள் பசுத்தோல் போர்த்திய நரிகளை அடையாளம் காணாமல் ஏமாந்தார்கள்! அரசர்களை ஆடலரசிகளைக்கொண்டும் , அசுரர்களை இவர்களது பெண் தெய்வங்களையும் கொண்டுதான் அழிக்கமுடிந்தது!

    ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ , ‘சிந்துவிலிருந்து கங்கைவரை’ நூல்கள் அந்தக்கால ஆரிய குடியமைப்பையும், அரசனுக்கும், அரசிக்கும் பகை ஏற்படுத்திய தலைமை குருவின் சதிகளையும் அம்பலப்படுத்தும்! அஜாதசத்ரு எழுந்தது அப்போதுதான்! அஜாதசத்ரு – அம்ரபாலா கதை பிரசித்தமானது!

    • உங்க பேருக்கு இப்பதான் அர்த்தமே புரிஞ்சுச்சு சூப்பர்னே!

    • // ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ , ‘சிந்துவிலிருந்து கங்கைவரை’ நூல்கள் அந்தக்கால ஆரிய குடியமைப்பையும், அரசனுக்கும், அரசிக்கும் பகை ஏற்படுத்திய தலைமை குருவின் சதிகளையும் அம்பலப்படுத்தும்! //

      ராகுல சாங்கிருத்தியாயன், அடிமை முறை திராவிடர்களிடம்தான் இருந்தது என்றும் தமது நாவலில் கூறியிருக்கிறார்..

      // அஜாதசத்ரு எழுந்தது அப்போதுதான்! //

      ’ஆரிய’ அஜாதசத்ரு அதன் பின் தூங்கப் போகவேயில்லையா..?!

      • இல்லை! விழித்திருந்து மற்ற மானுடரையும், தான் மட்டுமே ஆரியன் என்று புகலும் அம்பிகளிடமிருந்து தம்பிகளை காத்து வருகிறேன்! என் கடன் பணி செய்து கிடப்பதே!

  7. மிக அருமையான விடங்களைக் கொண்டுள்ள இக்கட்டுரையைத்தந்த வினவுக்கும் தயாரித்தளித்த வாசகருக்கும் நன்றியும் பாராட்டுகளும். உள்ளடக்கம் அத்தனையும் சத்தியமான உண்மை. தமிழனின் பக்தி இலக்கியங்களும் புராணப் புளுகுகளும் தமிழ் இனத்தின் உண்மை வரலாற்றை அழித்து உருவாக்கப்பட்டவையே.

    தமிழனின் முன்னோடித் தலைவர்களை நடுகல் வடிவில் வணங்கியதைக் கண்ட ஆரிய தாசர்கள் சிவன், சக்தி, உமை ,காளி, திருமால் என கைலாயத்தையும் வைகுண்டம் அயோத்தி என வடக்கே உருவாக்கி எழுதிய புராணங்கள் உண்மையானவை என புரியாத மொழியில் யாரோ மந்திரிக்க கடவுள் எனக் கைகூப்பி தரையில் புரளும் அறியாமையில் தமிழினம் அழிகிறது.

  8. // “நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிற்து : “ வாதாபி கணபிதம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராம நீசமான மெருவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுசொசகி’,…. அய்யய்யோ, அய்யய்யோ ஒரே கதை

    – பாரதியார் மேலும் எழுதிக் கொண்டே போகிறார். //

    ’ராமா நீ சமானம் எவரு!’ என்றால் தெலுங்கில் ’ராமா உனக்கு இணையானவர் யார்!’ என்று பொருள்.. அதைத்தான் ‘ராமா நீசமான மெவரு’ என்று ராமரை ஒரு நீசமான மெவரு ஆக்கி பதம் பார்த்திருக்கிறார்கள்..

    இப்படிக் கொத்து பரோட்டா போடுவதை மேடை நாடகப் பாடல் ஒன்றிலும் கேட்டதாக யாரோ நகைச்சுவையாக எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்.. ’பீமசேன மகராசா மரத்தே புடுங்கினானே’ என்பதை மரத்தேபு, மரத்தேபு, டுங்கினானே, டுங்கினானே என்று பாடி ஒரு பயலுக்கும் ஒண்ணும் புரியாத அளவுக்கு இசை வளர்க்கப்பட்டிருக்கிறது..

    • அம்பி, பீமசேனன் மரத்தை புடுங்குனது இருக்கட்டும் நீங்க இப்படி ஆணி புடுங்காம பொயிட்டியிலே ஏன்? தமிழனுக்கு தனியா இசை மரபு உண்டா இல்லையா? பார்ப்பனர்களின் கர்நாடக இசை தமிழ் இசை மரபை அழித்து உண்டாக்கியதா இல்லை? பொடீர்னு செதர்தேங்கா உடைச்சமாரி பதில் சொல்லுங்க பார்ப்போம்.[பாணர்கள் பார்ப்பனர்கள்னு சொல்ல எதாச்சும் ஆராய்ச்சி கீராய்ச்சி பன்றிங்களா]

      • // தமிழனுக்கு தனியா இசை மரபு உண்டா இல்லையா? //

        உண்டு, அதிலென்ன சந்தேகம்..?!

        // பார்ப்பனர்களின் கர்நாடக இசை தமிழ் இசை மரபை அழித்து உண்டாக்கியதா இல்லை? //

        திராவிட கர்நாடக இசையின் மூலம் தமிழிசை என்பதை யார் மறுத்தார்கள்..? ஆனால் தமிழிசை மரபை அழித்துத்தான் உண்டாக்கியது என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதை நம்பமுடியவில்லை.. தமிழர்கள் சாப்பிடாமல் புறக்கணித்த பழைய இட்லியைப் பிசைந்து கூடுதலாக இஞ்சி,மிளகாய், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து உப்புமா போட்டு தாமும் சாப்பிட்டு நமக்கும் கொடுத்திருக்கிறார்கள் கர்நாடக இசையை உருவாக்கியவர்கள்.. அதை சாப்பிட்டுவிட்டு, நான் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட இட்டிலியை ’திருடி’ உப்புமா செய்துவிட்டான் என்று கூப்பாடு போடுவது ஏன்..?! மூவேந்தருக்குப்பின் தமிழிசை அநாதையானது.. அதை உல்டா செய்து பாதுகாத்தது நாயக்கர், மராட்டியர்கள் காலத்தில்.. தமிழர்களே தமிழிசையைப் போற்றி,பாதுகாக்காதபோது நாயக்கர்களும், மராட்டியர்களும் அதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா..?! இன்றும் தமிழிசை அநாதையாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறது.. பார்ப்பானைத் திட்டுவதில் இருக்கும் ஆனந்தம் தமிழிசையை வளர்ப்பதில் இருக்குமா..!

        // பாணர்கள் பார்ப்பனர்கள்னு சொல்ல எதாச்சும் ஆராய்ச்சி கீராய்ச்சி பன்றிங்களா //

        ஆரிய ஏமநாத பாகவரை, திராவிட பாண பத்திரரின் சீடனாக வந்த சோமசுந்தரப் பெருமான் வெருட்டி, மிரட்டி, விரட்டியதை திருவிளையாடற் புராணத்தில் காண்க..

        • தமிழிசையில் இருந்து தான்

          கர்னாடக இசை

          திருடப்பட்டது என்று ஆதாரத்துடன்[கருணாமிர்த சாகரம் ஆபிரகாம் பண்டிதர்]

          கூறினால்………

          அம்பிகளுக்கும்

          ஏன் வயிற்று எரிச்சல் !

          கி.செந்தில்குமரன்

        • அம்பி…..!பார்பனன் தமிழ் இசையை களவாடி அரை தமிழனாய் வாழ்வது உண்மைதானே???

        • அம்பி அவர்களே, மூலத்தை ஏற்றுகொள்ளாத அல்லது மறைக்க முயலும் ஒரு கலையை திருடியது என்றோ,மூலத்தை அழித்து உருவாக்கியது என்றோ கூறுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.இட்லியில் இருந்து உப்புமா செய்தவர்கள் உப்புமா உயர்ந்தது இட்லி நீசமானது என்று இன்றுவரை கதைகட்டுகிறார்கள் நாங்கள் சுட்டிகாட்டுவது அதைதானே.ஆபிரகாம் பண்டிதர் சிலப்பதிகாரத்தை மேற்கோள்காட்டியே தனது ஆய்வுகளை நிறுவுகிறார்.திருவிளையாடல் புராணம் காலத்தால் பிற்பட்டது.இந்துஸ்தானி இசைக்கு மூல நூல் இல்லை என்றே நினைக்கிறேன் மேலும் அது இஸ்லாமிய இசையின் கலப்பால் உண்டானது,எனவே இந்திய இசையின் மூல இசையாக தமிழ் இசையை கொள்ளலாம்.தமிழில் பாடினால் சங்கீத மேடை தீட்டாகிவிடும் என்பவர்களைதான் திட்டுகிறார்கள்.கண்டிப்பாக உங்களை போன்றவர்களை அல்ல.நன்றி

          • There is nothing called islamic music,hindustani music is based on the same fundamentals as carnatic music.

            hindutani language is a mixture of turk/persian with sanskrit/prakrit.

            devaraya nayanar,

            try to support keerthanai in tamizh,try to encourage people to learn native music instead of wasting time debating here.

            because the people u accuse of xyz are doing precisely that whereas all u r doing is complaining.

            ilayaraja cud have chosen to do this instead of what he actually has done.

            • அரிகுமார், எனக்கு ஆங்கிலம் அவ்வளவா தெரியாது.நீங்கள் தமிழ்ல மறுமொழி செய்தால் மட்டுமே என்னால் பதில் கூற முடியும்.வினவு ஒரு தமிழ் தளம் என்று நினைக்கிறேன்.நன்றி.

              • என்னை மன்னிக்கவும்.

                இஸ்லாமிய இசை என்று எதுவும் இல்லை. மேற்கத்திய இசை அரபியாவிலும் ஹிந்துக்களின் இசை இந்தியா பாகிஸ்தான் மற்றும் வ்ங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியார்களால் பயன்படுத்தப்படுகிறது.

                இலாயராஜா இப்படி வெட்டி பேச்சு எதிலும் ஈடுபாடாமல் இசையாயும் பாடல்களாயும் வளர்த்தார்.

                தமிழ் இசை பயில அனைத்து தரப்பு மக்களயும் ஊக்குவியுங்கள்.

                இசை வளர்க்க வழி செய்யுங்கள்.

                தமிழ் இசை வளர்க்க அனுமதி இல்லை என்று எந்த வெள்ளார்க்கும் அனுமதி இல்லை என்று யாரும் கூற முடியாது,இதை கருணாநிடியல் கூட சொல்ல முடியாது.

                • நீங்கள் தமிழில் பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.முதலில் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்,நான் வெள்ளாள சாதியை சேர்ந்தவன் இல்லை.இங்கு விவாதம் தமிழில் உள்ள செவ்வியல் இசை[கிளாசிக்கல்] ஆகிய கர்னாடக இசை தமிழ் இசையில் இருந்து திருட பட்டது குறித்து.திருட்டு என்ற வார்த்தைக்கு காரணம் அவர்கள் தமிழ் இசையின் மூலத்தை மறுப்பதே ஆகும்.தமிழ்நாட்டில்,தமிழனிடமிருந்து திருடிய இசையை வைத்து கொண்டு தமிழில் பாடினால் தீட்டாகிவிடும் என கூறுவது எந்த வகையில் நியாயம்.இதை பற்றி பேசுவது வெட்டி பேச்சாகுமா?

                • இசை ஒரு நுட்பமான கலை.எந்த இசை பயிற்சியும் இல்லாத நான் எப்படி இசையை வளர்ப்பது என்று தெரியவில்லை.அரசியலின் ஊழல் பற்றி பேசுபவர்களை கட்சி ஆரம்பிக்க சொல்வதும்,சினிமாவை விமர்சிப்பவர்களை படம் எடுக்க சொல்வதும் போன்றதே உங்கள் வாதம்.

                  • இசை என்பதர்க்கு மொழி சாதி எதுவும் இல்லை. கலைஞன் போற்றும் கடவுளுக்கும் இல்லை.

                    நான் வெள்ளளர்கலை குறிப்பிட்டது அவர்கள் தமிழின் பாதுகாவலர்கள் ஆயிற்றே,அதனால் தான்.

                    மேலும்,பார்ப்பணர்கள் மலயளிகள் இருவருக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் எப்பொழுது கூறினர்?

                    இதை கூறுவது இசை தமிழ் இரண்டடயும் விட்டு வெறும் தன் வயிராய் மட்டுமே வளர்க்கும் கூட்டம் தானே.

                    • //பார்ப்பணர்கள் மலயளிகள் இருவருக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் எப்பொழுது கூறினர்?// நான் மலையாளிகளை பற்றி எதுவும் கூறவில்லையே.பார்ப்பனர்க்கும் தமிழுக்கும் ஆன தொடர்பு குறித்தும் கூறவில்லை.கர்னாடக இசைக்கும் தமிழிசைக்குமான தொடர்பு,கர்னாடக இசையில் தமிழுக்கு உள்ள அவமதிப்பு அதை குறித்து மட்டுமே.

                  • இசை பயின்றவர்கள் பலர் அதை கற்று குடுக்க வழி இல்லை.

                    நானும் சரி நீங்களும் சரி இன்று விழய மட்டுமே முடியும்.

                    நான் கூறுவது திராவிடர் கழகம் போன்றவார்களை பற்றி

                • மொகலாயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் அரசவையில் இந்திய இசைக்கு முக்கியத்துவம் தரபட்டது.ஆப்கானிய,இந்திய இசை கலந்து இந்துஸ்தானி இசை உருவானது.ஆபிரகாம் பண்டிதர் 20-3-1916 முதல் 24-3-1916 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் கலந்து கொண்டு வடக்கே இந்துஸ்தானி இசையாக விளங்குவது தமிழ் இசையே என்று கூறி நிருபித்தார்.

                  • சேர சோழ் பாண்டியருக்கு piragu தமிழ் அரசர்களே இல்லை. thamizh நாடு என்று எதுவுமே இல்லை.

                    பாளயங்கள் மட்டுமே இருந்தன.

                    ஆப்காண் இசை என்று எதுவும் இல்லை. சொற்கள் மட்டும் தான் பல மொழிகளுக்காந்து. ராகமும் தாளமும் அதே தான்.

                    பொதுவாக இந்த பிரச்சனை எல்லாம் டெல்டஅ தொடர்பான பிரசநயக தான் எனக்கு தோணுது.

                    எங்க ஊருல இந்த வேறுபாடு மொக்கை அரசியல் எல்லாம் இல்லை.

                    தமிழ் மலாயலாம் இரண்தடயும் வளர்க்கலாம்.

                    • தமிழ் நாட்டு எல்லை தமிழ் தேசிய காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலேயே வரையருக்கபட்டு தமிழ் கூறும் நல்லுலகு குறிக்கப்படுகிறது.உங்களின் வாதம் சிறுபிள்ளைதனமானது.முன்பு இருந்தது பின்பு இல்லாமல் ஆகிவிடுமா?.இந்துஸ்தானி இசைக்கு இன்றுவரை மூல நூல்கள் இல்லை.அது உருவானது மொகலாயர்களின் காலத்தில்தான்.நீங்கள் ஏன் மலையாளத்தை வளர்க்க சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லையே? மலையாளத்தை வளர்ப்பது தமிழர்களின் கடமைகளில் ஒன்றா?[ஹா,ஹா].எங்கள் அரசியல் மொக்கையாக இல்லை உங்கள் பதில்தான் மகா மொக்கையாக உள்ளது.இது பொன்ற பிரச்சனை இல்லாத உங்கள் ஊர் எது?

        • அந்த சோமசுந்தரப் பெருமானுக்கும், நடராசனுக்கும் முன்னால்கூட தமிழில் தேவாரம் பாடக் கூடாதென்கிறார்களே இக்காலப் பார்ப்பனர்கள். அந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுவது? பார்ப்பனர்கள் தமிழிசைமரபை பார்ப்பனர்கள் இருட்டடிப்பு செய்தனர் என்பது மட்டுமல்ல, தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும்அவர்கள் பாடியதால் தானே அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை இயக்கத்தையே தொடங்கினார். எல்லாப் பார்ப்பனர்களும் தமிழ் எதிரிகளல்ல என்பதை தமிழர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் அதே வேளையில் எல்லாப் பார்ப்பனர்களும் தமிழை எதிர்க்கவில்லை, தூற்றவில்லை, திரிபு படுத்தவில்லை, என்ற ரீதியில், நீங்கள் பார்ப்பனியம் தமிழுக்கும், தமிழருக்கும் இழைத்த கொடுமைகள் எல்லாவற்றையும், மறுப்பதும், நியாயப்படுத்துவதும் சரியாகப் படவில்லை அம்பி சார். 🙂

        • //மூவேந்தருக்குப்பின் தமிழிசை அநாதையானது.. அதை உல்டா செய்து பாதுகாத்தது நாயக்கர், மராட்டியர்கள் காலத்தில்.. தமிழர்களே தமிழிசையைப் போற்றி,பாதுகாக்காதபோது நாயக்கர்களும், மராட்டியர்களும் அதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா..?! //

          அம்பி சார், நீங்கள் செய்வது முழு பூசணிக்காயை அல்ல பெரும் யானையையே சோற்றில் மறைக்கப்பார்க்கும் தந்திரம்.

          விஜய நகர ஆட்சியாளர்கள் வழிநடத்தப்பட்டது மனுதர்மத்தால் அதன்படி
          தமிழ் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் செய்ததும் முழுமையான மனுதர்ம பார்பனிய ஆட்சியேதான்.
          இவர்களது ஆட்சியில் பெரும்பான்மையான தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு அவர்கள் திரும்ப எழாதவாறு இன்றைக்கு இருக்கும
          நூற்றுக்கணக்கான சாதிய முறைகளும் அவர்களது மீது திணிக்கப்பட்டது.ஆட்சி மொழி தெலுங்காகவும்,கோயில்களில் தமிழ் நீக்கப்பட்டு முழுமையாக சமஸ்கிருதம் நுழைக்கப்பட்டது.மொத்தத்தில் தமிழ்மொழியும், தமிழர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட பின் வந்த நாயக்க மன்னர்கள்,தஞ்சைபகுதிகளை ஆண்ட மராட்டியர்
          காலத்திலும் இதே நிலைதான்.
          இவ்வாறிருக்க
          நூற்றாண்டுகளாக திட்டமிட்டு கல்வி மறுக்கப்பட்ட அடிமைத் தமிழர் தமிழிசையை போற்றிப்
          பாதுகாக்கவில்லை,தூக்கிபோட்டுவிட்டார்கள்

          என இட்லி, உப்புமா கதை பேசுவது மோசடி.

  9. ஆராய்ச்சியே வேண்டாம் இந்தியாவில் இசைக்கப்படும் இசைக்கருவிகள் எல்லாம் எங்கெங்கே யாரால் தயாரிக்கப்படுகின்றன அவர்கள் எப்படி அந்த வாத்யங்களில் சுருதி சேர்க்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தாலே சூது தெரிந்துவிடும். மூணு பேர் எப்படி மூணு கோடி பேரை முட்டாள் ஆக்கினான் என்று.

    • this is also a good point to be debated. How come people who are ‘experts’ in music aren’t making those instruments! I know there are lot of Brahmins who do that, but typically they are engineering experts… Idhilayum varnamo? (tholai urippadhu oruthan, mridhangam seivadhu oruthan etc…).

        • it’s true that doctors doesn’t do any manufacturing. but stethoscope and other medicinal equipments were manufactured by people or company lead by scientist, who are more capable than that of so called general physicians. Here in this topic too, the Tamils claim that the carnatic music was an abstraction from Tamil native music system. That means they are the scientist who invent things and you parpans are just below the category general physicians. It’s sad to mention that I really won’t do it ever, but I have to, because you pin point it in your earlier comments.

          “I AM A VELLALAN”

          remember one thing now, the vellalan alone fought against you parpaans and it’s big time the others of Tamil society coming forward to join hands with vellalans in a way which no one knows. I guess it will be a great time for Tamils. And for parpaans too in negative way.

          • oh really?

            i guess the one who solders the metal into a shape and makes the alloy also can be a doctor.

            I request you to go public with such pronouncements of yours,u might get stoned to death.

            I ll talk straight,you vellalars go and make music,dont sit and complain.

            You earn respect of people not sit and do politics.

            I know so many vellalars and they are amongst our family’s best friends and they are all looking ahead and dont have any issues.

            I think there should be a separate community called inferiority complex tamils and vellalars like you should lead them.

            will fit in like a glove.

        • தம்பி ஹரிகுமார், ஒரு நவீன மருத்துவ கருவியை இருக்குமதி செஞ்சு ஒரு டாக்டர் கிட்ட கொடுத்தால் ஒடனே அதை இயக்குவாரா? செஞ்சவன் சொல்லி கொடுக்க ஒரு டெக்னிஷியனை அனுப்புவான் அதுதான் செஞ்சவனோட முக்யத்துவம்.இது வரை ஆயிரம் கருத்து சொல்லி ஆப்பு வாங்கியிரூப்பீர்கள் இன்னும் யோசித்து எழுத முடியவில்லை முதல்ல தமிழ்ல டைப் அடிக்க இவ்வளோ வருஷம் ஆகியும்….ம்ஹூம்

          • நீ எப்போ எனக்கு அண்ணன் ஆன?

            இங்க நான் எங்கயுமே technician தேவை இல்லை என்றோ அல்லது அவருக்கு அறிவு இல்லை என்று எப்பொழ்து கூறினேன்?

            இப்போ பிரச்னை என்ன?

            ஏ ஆர்ர ரஹ்மான், இளயராஜா போன்றோர் குழுவில் ஆடியோ போறியாளர்கள் உள்ளனர்.

            அதுக்காக அவர இசை அமைப்பாளர் ஆகிவிடலாமா?

            இதோ தமிழில் எழுதி ஆகிவிட்டது.

            உங்களுக்கு இத படிச்சு அறிவு வந்து விடுமா?

            • இத படிச்சா சவுண்ட் எஞ்சினியர்க்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்?என்ற டௌட்டும் கொஞ்சம் சிரிப்பும் வந்திச்சு.

  10. எல்லாம் சரி: ஆனால், சீர்காழி அருனாசலக் கவிராயர் என்பது தில்லையாடி என்று
    மாற்றம் செய்யவேண்டும்:
    அற்புதமான ஆராய்ச்சிக் கட்டுரை…இசைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு வரலாற்று
    பாடம்

  11. பகவத் கீதையில் பகவான், ஒருவேளை இப்படி கூறி இருக்கலாம்: ‘எவை எவை திருடப்பட்டதோ, அவையெல்லாம் இஙகிருந்தே திருடபட்டது’- என்று! பார்ப்பனர்களுக்கு அறிவுத்தாகம் அதிகம்!

    • பகவத் கீதையையே மிக சிறந்த இலக்கிய திருட்டு என்று டி.டி.கோசாம்பி சொல்றாருங்க[எதோ என்னால முடிஞ்சது]

  12. அருமையான ஆக்கம். இன்று கூட தமிழ் தொலைக்காட்சிகளில் ஏமாளித் தமிழர்களால் பார்க்கப்படும் சூப்பர் சிங்கர், மானாட மயிலாடா போன்ற குப்பைகளின் நடுவர்களைப் பாருங்கள் எத்தனை பேர் தமிழர்கள்? இந்நிகழ்ச்சியில் பாவிக்கப்படும் சொற்களில் எத்தனை வீதம் தமிழ் சொற்கள்?
    தமிழா சிந்திப்பாயா?

    • who is stopping u from watching makkal tv?

      and whatever u want,people like to watch such programs and they have long crossed the self fulfilling tamizh trap.

      u cant make them go back to an identity so strictly measured.

  13. ஆங்கிலத்தில் உள்ள ode, ballad, lyric, sonnet போன்ற இசை மற்றும் கவி மரபுகள் ஆங்கிலத்தில் பிறப்பெடுக்கவில்லை. அவை அனைத்தும் கிரேக்க, ரோமானிய மற்றும் இத்தாலிய மரபிலிருந்து ஆங்கிலத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆங்கில இலக்கிய வரலாறை எழுதிய அனைவரும் இந்த உண்மையை சுட்டிக்காட்டி ஒப்புக் கொண்டுள்ளனர். ஆங்கில இலக்கியச் சூழலில் இருக்கும் இந்த அடிப்படை நேர்மை இந்திய பார்ப்பன மரபுக்கு இல்லை என்பது தமிழிசை மரபை களவாடி கர்னாடக சங்கீதம் என்று நாமகரணம் சூட்டியுள்ளதிலிருந்து தெரிகிறது. இதற்கு வெட்கங்கெட்ட முறையில் வக்காலத்து வாங்கும் நண்பர்கள் கொஞ்சம் தங்கள் மனதை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    • இசை வெல்லாளார் என்று ஒரு சாதியே இருக்கு.

      இத விட அங்கீகாரம் என்ன வேணும்?

      பார்ப்பானுக்கும் சங்கீதத்துக்கும் என்ன சம்பந்தம்?

      • //பார்ப்பானுக்கும் சங்கீதத்துக்கும் என்ன சம்பந்தம்?//—அண்ணே என்னண்ணே இப்படி கேக்குறிங்க? இங்க நடக்குற மேட்டர் என்னன்னு லைட்டாவாச்சும் தெரியுமா இல்ல ஒன்னுமே புரியாம குறுக்க பூந்து குட்டைய கொழப்புறிங்களா?

        • நீங்க என்னை தம்பி என்று அழாயுங்கள்.

          என் சொந்த ஊர் கந்யகுமரி. இங்கு தமிழர் மாலயளீகல்இருவ்அரும் உண்டு.

          பல பார்ப்பனர் சங்ஈத்த கேள்வி ஞானம் மட்டுமே உள்ளவர்.

          நீங்க குறிப்பிடுவது தஞ்சாவூர் டெல்ட்அ பார்ப்பனாரை பற்றி மட்டும் தான்.

          • பேர பாத்து கெழவர் என்று முடிவு பண்ணிட்டிங்களா? 32வயதுதாங்க ஆகுது[நம்புங்க].நீங்கள் கூறுவது உண்மைதான்.ஆனால் இன்று கர்நாடக இசை பார்ப்பனர்களிடம்தான் உள்ளது.டெல்டா பகுதிகளில் மட்டும் இல்லை,சென்னை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும்.

            • தமிழ் இசை காற்றுக்கொள்ளவோ கச்சேரி செய்யவோ உங்களை தடுப்பது யார்?

              ஆனால் இன்று அனைவரும் ஹிந்துஸ்தானி அல்லதுமேற்கத்திய classical இசை கற்க தான் விரும்புகிறார்கள்.

              இந்த நிலமயில எதுக்கும் உதவாத கர்நாடக சங்கீதம் பார்ப்பனர் கயில இருக்காம்.

              I am 29.

              • //எதுக்கும் உதவாத கர்நாடக சங்கீதம்//—நீங்க கன்யாகுமரியில இருந்துகிட்டு எல்லாத்தையும் பேசாம ஒரு தடவை டிசம்பர் சீஸனுக்கு சென்னைக்கு வந்துட்டு போங்க.

                • எங்க ஊருல பல சாதிகளும் கர்நாடக சங்கீதம் பயின்றுள்ளனர்.

                  எந்த இசையாயியும் பயிலவொ வளர்க்கவோ யாருக்கும் தடை இல்லை.

                  நான் கட்சேரிக்கு போனதில்லை. ஆர்வமும் இல்லை.

                  • ஹரிகுமார், இந்த பக்கத்தில் உள்ள வினவின் கட்டுரையை படியுங்கள்.அதில் பாரதியாரின் கருத்தாக உள்ள பத்தியில் உள்ள கேலியை புரிந்து கொள்ளுங்கள்.அப்படியே தமிழ் மொழியின் புறக்கணிப்பையும்தான்.விவாதம் அது குறித்துதான்.

                    • நீங்கள் குறிப்பிடும் சமூகம் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழர்கள்.

                      இதை ஒரு பொருட்டாக வைத்து ஒரு அரசியல்.

                      வினவு போன்ற முட்டு சந்து சிந்தனையாளர்களின்பரப்பளவு இவ்வளவே தான்

          • //என் சொந்த ஊர் கந்யகுமரி. இங்கு தமிழர் மாலயளீகல்இருவ்அரும் உண்டு.//

            இந்த சுய புராணத்துக்கும் இங்கு நடக்கும் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம் ? நீங்கள் முன் வைக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது ஐம்பது வயது பெரியவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரைநிக்கர் போட்டு விட்டு நான் சின்னப் பையன் என்று தமாசு செய்வது போல் தெரிகிறது. இதில் வேண்டுமென்றே தப்புத் தப்பாக எழுதி வேறு சின்னப் பையன் என்று இம்சிக்கிறீர்கள்.

            • நீங்கள் பல முறை வாதத்தில் புரட்டி எடுக்கப்பட்ட புரொத்தா ஆவீர்.

              எதுக்கு வீணா?

  14. எல்லாம் சரி,கருணாமிர்த சாகரம் இது தமிழ் பெயரா,மேலும் (அநேக,பாஷை,அந்நிய) என ஆபிரகாம் பன்டிதரின் எழுத்துக்கள் வட மொழி கலப்பாய் இருக்கிறதே!

  15. ஆப்ரகாம் பண்டிதர்!!…..

    இந்த பதிவை எழுதிய ஏசுவின் ஊழியர்களுக்கு இறுதி தீர்ப்பில் எக்ஸ்ட்ரா அலவென்ஸ் கிடைக்க ஆண்டவன் அருள் புரிவாராக

    ஆமென்

  16. //நீங்கள் குறிப்பிடும் சமூகம் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழர்கள்//———-ஹரிகுமார், உங்களுக்கு தமிழிசையின் வரலாறோ கர்னாடக இசையின் வரலாறோ தெரியாது என்று தெரிகிறது. பிறகு ஏன் விவாதத்தை வளர்க்கிறீர்கள்?. விடுங்கள்.

  17. எவ்வளவு காலம் பார்பனர்கள் ஒழிக என்று எழுதவீர்கள்? இந்திய தேசியத்தை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ இசையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க நடப்பது என்ன ? அதை எழுதுங்கள்.இருட்டு இருட்டு என்று எவ்வளவுகாலம் கூப்பாடு போடப்போகின்றீர்கள். விளக்கை ஏற்றுங்களேன் -சுவாமி விவேகானந்தார

Leave a Reply to R Chandrasekaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க