Friday, December 6, 2024
முகப்புசெய்திசென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் !

சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் !

-

புத்தகங்கள் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி…

10.01.2014 முதல் 22.01.2014 வரை
சென்னை புத்தகக் கண்காட்சி
ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்வி மைதானம், நந்தனம், சென்னை.

கடை எண் : 369-370

வேலை நாட்கள் : பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை

 

books-image-001

books-image-0021. இதுவல்லவோ கதை…

சிறுகதை தொகுப்பு

வாழ்க்கைக்கான போராட்டத்தில் அற்பத்தனங்கள், காதல், உழைப்பு, அர்ப்பணிப்பு, பொதுநலனில் மகிழ்ச்சி இவைகளைப் பற்றி நாம் தவறவிடும் கண்ணோட்டங்களை உணர வைப்பதில் உயிரோட்டமாக பங்காற்றுகின்றன இச்சிறுகதைகள்.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை -40

பக்கம்-128.

 

 

2. தண்ணீர் தாகத்திற்books-image-003 books-image-004கா இலாபத்திற்கா?

தண்ணீர் தனியார்மயம் பற்றிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை -30

பக்கம்-72.

 

 

 

 

books-image-005 books-image-0063. மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன் ஃபோர்த்

மார்க்சிய தத்துவத் துறையில் மிக உயர்ந்த தேர்ச்சி பெற்ற கார்ன் ஃபோர்த் தான் கற்றது அனைத்தையும் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாக நூல்கள் ஆக்கினார். மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி என்ற இவரது நூல் மிகச்சீரிய அரிய முயற்சி.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை -150

பக்கம்-272.

 

books-image-007 books-image-0084. தாது மணல் கொள்ளை – உண்மை அறியும் குழு அறிக்கை.

மனித உரிமை பாதுகாப்பு மையம்.

நன்கொடை – ரூ 20

பக்கம்-48.

 

 

 

 

 

books-image-009 books-image-0105. ஈழம் தேவை- ஒரு நேர்மையான மீளாய்வு.

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான பிராந்திய மேலாதிக்கம், விரிவாக்கம், மூலதனக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலானதுதான் இந்தியாவின் இலங்கை – ஈழக் கொள்கை.

ஆகவே இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு எதிராக ஒரு போதும் எந்த இந்திய அரசும் செயல்படாது என்று பலமுறை வலியுறுத்தப்பட்டும், எதார்த்தம் இடித்துரைத்தும் புலிகளும் அதன் ஆதரவாளர்களும் மாறாகவே நடந்தார்கள்..

வெளியீடு :
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு

விலை- ரூ 100

பக்கம் -240

 

books-image-011 books-image-0126. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன்

மூளை என்ற பருப்பொருளே காலப்போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நாம் கடுமையாக உழைக்கும்பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால்…

உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்த தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதைப் பார்க்கும் போது என்ன செய்கிறீர்கள்?

இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது. ஏன்?

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை – ரூ 20

பக்கம்-30.

books-image-013 books-image-0147. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் -ஸ்டாலின்

முதலாளித்துவ முறையின் முரண்பாடுகளை நாம் மூடிமறைக்கக்கூடாது, அதற்கு பதிலாக அதன் முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும், சிக்கவிழ்த்துக் காட்ட வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நாம் தடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக, அதை அதன் முடிவுக்கு கொண்டு போக வேண்டும்.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை -ரூ 30

பக்கம்-56.

books-image-015 books-image-0168. அரசும் புரட்சியும். – லெனின்

அரசு, புரட்சி குறித்த மார்க்சிய போதனைகளை திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாத கருத்துக்களை விளக்கி, ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கும் மார்க்சிய தத்துவம் – நடைமுறையை தொகுத்து வழங்குகிறது இந்நூல்.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை -ரூ 90

பக்கம்-200.

 

books-image-017 books-image-0189. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ்

மனிதன் உயிர்வாழ காற்றும் நீரும் மட்டும் போதுமா? அவன் சமுதாயமாக, சமத்துவமாக வாழ கம்யூனிசம் தேவை. அது எப்படி? என்று ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றனவா! அதற்கு பதில் சொல்லும் கருத்தில் உங்கள் சமூக அறிவை ஒருபடி உயர்த்துகிறது இந்நூல்.

கீழைக்காற்று வெளியீட்டகம்.

விலை – ரூ 25

பக்கம்-40.

 

books-image-019 books-image-02010. சாதி – தீண்டாமை ஒழிப்பு என்ன செய்யப்போகிறீர்கள்.

ஆதிக்க சாதிவெறி கருத்துக்களை அம்பலப்படுத்துவதோடு சாதி தீண்டாமை ஒழிப்பிற்கான வழியையும் முன்வைக்கும் சிறு வெளியீடு

வெளியீடு:
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு

விலை- ரூ 10,

பக்கம் -24

 

 

books-image-021 books-image-02211. சாதி ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்.

புதிய ஜனநாயகம் இதழ் கட்டுரைகள்.

விலை – ரூ 60

பக்கம்- 96

 

 

 

 

 

books-image-025 books-image-02612. இலக்கிய இஸங்கள்.

இலக்கியத்தில் ரியலிசம், சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற பல்வெறு இசங்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு. தொகுப்பாசிரியர் – இ.எஸ்.டி

அன்னம் பதிப்பகம்

விலை – ரூ 110

பக்கம் -160

 

 

 

books-image-023 books-image-024

13. எரியும் பனிக்காடு (Red Tea) – பி.எச்.டேனியல் (தமிழில் இரா.முருகவேள்)

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மீதான கொடூரமான சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

பொன்னுலகம் பதிப்பகம்

விலை – ரூ 150

பக்-336.

 

 

books-image-027 books-image-02814. நவீன அரபு இலக்கியம் – எச் பீர் முகம்மது.

பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட அரபு படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள், மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

எதிர் வெளியீடு

விலை- ரூ 120

பக்கம்-160

 

books-image-029 books-image-03015. ஆப்கன் அவலம் : உலக நாடுகள் அலட்சியம் – மேசன் மக்மல்பாஃப்.

பல சர்வதேச விருதுகளை வென்ற புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் மக்மல்பாஃபின் ஆப்கனிஸ்தான் பற்றிய பதிவுகள்.

தமிழோசை பதிப்பகம்

விலை- ரூ 45

பக்கம்-64.

 

 

books-image-031 books-image-03216. கவர்மெண்ட் பிராமணன் – அரவிந்த் மாளஹத்தி.

மைசூர் மானச கங்கேத்திரி பல்கலைக்கழகத்தில் கன்னட ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் அரவிந்த மாளஹத்தி கன்னட தலித் இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவர். கவர்மெண்ட் பிராமணன் என்னும் இவரது சுயசரிதை கன்னட மொழியில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதையாகும்.

விடியல் பதிப்பகம்

விலை- ரூ 70

பக்கம்-136

 

books-image-033 books-image-03417. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது – மிகெய்ல் சோலோகோவ்.

பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அவ்வப்போது வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப் பாம்புகளின் சீறல்களும், கொடிய மிருகங்களின் பிளிறல்களும் குவிந்து கிடக்கையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீளும் சாதுக்களின் கதை இது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

விலை- ரூ 460

பக்கம்-570.

books-image-035 books-image-03618. சுவாமி சகஜாநந்தா – எழுத்தும் பேச்சும்.

தலித் வரலாற்று ஆவணத் தொகுப்பு.

தாழ்த்தப்பட்டவரான சுவாமி சகஜாநந்தா தமிழக சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக இருந்து உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்.

கரிசல் பதிப்பகம்

விலை- ரூ 100

பக்கம்-172

 

books-image-037 books-image-038 19. உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம். – ம.மதிவண்ணன்.

பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டுக்கெதிராக வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். அத்தனை வாத முனைகளையும் தர்க்கபூர்வமாகவும், வரலாற்று பூர்வமாகவும், அணுகுகிறார் ஆசிரியர்.

கருப்பு பிரதிகள்

விலை – ரூ 50

பக்கம்-80

books-image-039 books-image-04020. குர்து – தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம். எச். பீர் முகம்மது.

குர்திஸ்தான் தேசிய இன பிரச்சினையை பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்தும் நூல்.

எதிர் வெளியீடு

விலை – ரூ 200

பக்கம்-240

 

books-image-041 books-image-04221. ஹோ சி மின் ஜெயில் டைரி

தமிழில் : சுரா

வியட்நாம் விடுதலைக்காக பாடுபாட்ட தலைவர் ஹோசி மின்னின் எழுத்து

வ.உ.சி.நூலகம்

விலை – ரூ 50

பக்கம் – 112.

 

 

 

 

 

 

books-image-043 books-image-04422. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி.

உலகிற்கு ஜனநாயகத்தை கற்றுத்தரும் வெள்ளையர்களின், அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகறியச் செய்யும் நாவல். இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது விடுதலைக்காக போராடும் கருப்பின மக்களின் வரலாறு.

சிந்தன் புக்ஸ்

விலை – ரூ 130

பக்கம்-272

 

 

books-image-04523. நினைவுகள் அழிவதில்லை – நிரஞ்சனா

காலனியாதிக்கத்திற்கு எதிரான கையூர் விவசாயிகளின் போராட்டம், அப்போராட்டத்தில் பிரிட்டீஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட கையூர் தோழர்களின் வீரக்கதை.

சிந்தன் புக்ஸ்

விலை – ரூ 100

பக்கம்-244

 

 

 

books-image-047 books-image-04824. வன்னி யுத்தம்

புலிகளின் தோல்வி ஏன்? பின்னணி சொல்லும் புத்தகம்.

விகடன் பிரசுரம்

விலை- ரூ 125

பக்கம்-336

 

 

 

 

books-image-049 books-image-05025. காலனித்துவ திரிகோணமலை

திரிகோணமலை வெளியீட்டாளர்கள்.

விலை- ரூ 180

பக்கம்-400

 

 

 

 

books-image-051 26. முல்லைப் பெரியாறு அணை – சில வெளிப்படுத்தல்கள்

-நீதியரசர் கே.டி.தாமஸ்.

இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகிற இரைச்சல் கோடிக்கணக்கான மக்களுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

எதிர் வெளியீடு

விலை- ரூ 120

பக்கம்-144.

 

 

 

books-image-053 books-image-05427. தமிழகத்தில் மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும் – சா. காந்தி.

முகம் வெளியீடு

விலை- ரூ 110

பக்கம்-175.

 

 

books-image-055 books-image-05628. பறவை உலகம் – ஸலீம் அலி, லயீக் ஃபதேஹ் அலி

குறிப்பிடத்தக்க இந்தியப் பறவைகள், அவற்றின் சிறப்பியல்புகள், அடையாளங்கள், என பல விவரங்கள் சாதாரண வாசகர்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

நேசனல் புக் டிரஸ்ட்

விலை- ரூ 60

பக்கம்-132.

 

books-image-057 books-image-05829. மேலப்பாளையம் முஸ்லீம்கள் – பே சாந்தி

இலக்கிய சோலை

விலை – ரூ 80

பக்கம் – 134.

 

 

 

 

books-image-059 30. காவி கார்ப்பரேட் மோடி

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்த திரிசூலத்தின் கொலைவெறியே மோடி! கட்டுரை தொகுப்பு.

கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை- ரூ 120

பக்கம்-208

 

 

books-image-061 31. அயோத்தி: இருண்ட இரவு

பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு. கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா

விடியல் பதிப்பகம்

விலை- ரூ 150

பக்கம்-248

 

 

 

 

 

books-image-063 books-image-06432. மார்க்சும் அறிவியலும் – ஜே.டி பெர்னல்

ஜே.டி பெர்னல் குறிப்பிடத் தகுந்த இயற்கை அறிவியலாளர், அறிவியல் வரலாற்றியலாளர், மார்க்சிய அறிஞர். அவர் இச்சிறு நூலில் மார்க்ஸ் எவ்வாறு ஒரு மார்க்சியம் என்னும் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தை கண்டடைந்தார் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன் மூலம் மார்க்சின் இயற்கை அறிவியல் பார்வையையும் விளக்குகிறார்.

முகம் பதிப்பகம்

விலை- ரூ 60

பக்கம்-93.

 

books-image-065 books-image-06633. ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் – கிட்டி ஃபெர்கூசன்.

எதிர் வெளியீடு

விலை- ரூ 350

பக்கம்-432.

 

 

 

books-image-06734. தமிழகப் பழங்குடிகள் – பக்தவத்சல பாரதி

மானுடவியலில் தொல்குடிச் சமூகம் பற்றிய ஆய்வு முக்கியமானது, இந்த நூல் தமிழ் தொல்குடியின் ஆதிச்சமூக நிலையிலிருந்து இன்றைய நவீன காலம் வரையிலான நெடிய வரலாறு பற்றி பேசுகிறது.

அடையாளம் பதிப்பகம்

விலை- ரூ 170

பக்கம்-226.

 

 

 

books-image-069 books-image-070

35. வரலாற்று மானுடவியல்

– பக்தவத்சல பாரதி

வரலாற்றை நுட்பமாக அறிய, அறிவிக்க ஒரு புதிய வாசிப்பு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்நூல்.

அடையாளம் பதிப்பகம்,

விலை- ரூ 165

பக்கம்-214

 

books-image-072 books-image-07136. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – ஜான் பெர்க்கின்ஸ்

அமெரிக்க அரசு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இவற்றுக்கிடையான வலைப்பின்னல், இவை நடத்தும் சுரண்டல்கள், ஊழல் சதி இவற்றை தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து விளக்குகிறார் ஜான் பெர்க்கின்ஸ்.

விடியல் பதிப்பகம்

விலை- ரூ 200.

 

 

books-image-073 books-image-07437. அந்நியப்படும் கடல் –வறீதையா கான்ஸ்தந்தீன்

நாட்டின் வளங்களும் இயற்கையும் வாழ்வாதாரங்களும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபவெறிக்கு பலியாக்கப்படுகிறது. நாடு மறுகாலனியாகும் பகுதியாக நமது கடலும் மூலதனத்தின் சுனாமியால் சூறையாடப்படுகிறது. கடலும், கடல் சார்ந்த வாழ்க்கையும் களவாடப்படுவதை எச்சரிக்கிறது இந்நூல்.

கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை – ரூ 35

பக்கம்-64.

 

books-image-075 books-image-07638. முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர்

கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும் – ஆனந்த் தெல்தும்ப்டே

கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை – ரூ 65

பக்கம்-120.

 

 

 

 

 

books-image-077 books-image-07839. இந்தியாவைப் பற்றி – கார்ல் மார்க்ஸ்

இந்திய நிலைமைகள் பற்றி மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை, இந்திய நிலைமைகளுக்கு மார்க்சியம் பொருந்தாது போன்ற கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக வெளிவந்துள்ளது இந்நூல். இந்தியாவை பற்றியும் அதன் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல்.

விடியல் பதிப்பகம்

விலை- ரூ 390

 

books-image-079 books-image-08040. கண்ணை மறைக்கும் காவிப் புழுதி. புதிய கலாச்சாரம் கட்டுரைகள்.

முஸ்லீம்கள் என்றால் தேச துரோகிகள், பயங்கரவாதிகள், பாக் கிரிக்கெட் அணிக்கு கைதட்டுபவர்கள், ஐ.எஸ்.ஐ சதிக்கு உதவுபவர்கள் போன்ற ஆர்.எஸ்.எஸின் முடிவுறாத அவதூறுகள் காவிப்புழுதியாய்க் கிளம்பி பெரும்பான்மை மக்களின் கண்ணை மறைப்பது ஏன்?

கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை – ரூ 80

பக்கம்-160

books-image-081 books-image-08241. வாழ்வும் கலையும் வழக்கு எண் 18/9 – வினவு திரை விமர்சனம்.

துயரமும் போராட்டமும் துரத்தும் வாழ்க்கையை எட்டிப் பார்க்கக் கூட யாரும் விரும்புவதில்லை. அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால், அதையே திரைப்படமாக வடித்துக் காட்டினால், ரொம்ப போரடிக்குது சார் என்று ஒதுங்கிப் போகிறவர்கள் ஏராளம். அப்படி ஒதுங்கிப் போகிறவர்களின் ரசனையை வர்க்க கண்ணோட்டத்துடன் வழக்கு எண் திரைப்படத்துடன் சேர்த்து ஆராய்வது இச்சிறு நூலின் சிறப்பம்சமாகும்.

கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை – ரூ 15

பக்கம்-24

books-image-083 books-image-08442. ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள் – ச.செந்தில்நாதன்

புதுமைபித்தன் பதிப்பகம்

விலை- ரூ 15

பக்கம் -40.

 

 

 

 

 

 

books-image-085 books-image-08643. தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும். பேராசிரியர் கே.ராஜய்யன், தமிழில்: நெய்வேலி பாலு

ஐரோப்பிய மரபுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழக தன்மையிலேயே பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள நிலம் மற்றும் அரசியல் சிக்கல்களை பாளையக்காரர்களின் தோற்றத்திலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் இந்நூல் விவரிக்கிறது.

கருத்து பட்டறை

விலை – ரூ 120

பக்கம் – 158

books-image-087 books-image-08844. கஷ்மீர் மக்களின் கண்ணீர் கதைகள்

விடியல் வெள்ளி இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

இலக்கியச்சோலை வெளியீடு

விலை: ரூ 60

பக்கம் -156.

 

 

 

 

 

books-image-089 books-image-090

45. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு – அருணன்

வசந்தம் வெளியீடு

விலை – ரூ 200

பக்கம் -384

 

 

 

books-image-091 books-image-09246. தலித் – சுதந்திரப் போராட்டம்

தெரிந்த உண்மைகள் – தெரியாத வரலாறு

கேப்டன் S கலியபெருமாள்

புத்தர் ரிசர்ச் அகேடமி

விலை- ரூ 120

பக்கம்-196

 

 

books-image-093 books-image-09447.  இவர்தான் நாராயண குரு

ஜோசப் இடமருகு (தலைவர், இந்திய பகுத்தறிவாளர் சங்கம்)

நாளந்தா பதிப்பகம்,

விலை- ரூ 35

பக்கம்-102.

 

 

books-image-095 books-image-09648. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை –

– மார்க்ஸ் எங்கெல்ஸ்

கீழைக்காற்று

விலை – ரூ 40

பக்கம் -128

 

 

 

books-image-097 books-image-09849. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்

பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… கணேசன் (ஐயர்)

இனியொரு

விலை- ரூ 150

பக்கம்-224.

 

 

 

books-image-099 books-image-100

50. காந்தியார் கொலை – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

தந்தை பெரியார் அறிக்கைகளும் துசார் காந்தி எழுதிய ’Let’s kill Ganthi’ ஆங்கில நூலின் முக்கியப் பகுதிகளும்

திராவிடர் கழக வெளியீடு

விலை – ரூ 100

பக்கம் – 193

 

 

 

 

books-image-101 books-image-10251. கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

விலை – ரூ 20

பக்கம் -40

 

 

 

books-image-103 books-image-10452. நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை, துரை.சண்முகம்

வெளியீடு:
ம.க.இ.க, சென்னை.

விலை – ரூ 20

பக்கம் -40

 

 

 

books-image-105 books-image-10653. பொது உடைமைக் கல்வி முறை – குரூப்ஸ்காயா

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசமுurயைக் கட்டியெழுப்புவதற்கு நடைபெற்ற வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் – உழவர்களிடையே புதிய கல்வி இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியும், வளர்த்தும், மார்க்சிய-லெனினிய அடிப்படைகளைப் புதிய சூழல் தேவைகளுக்கேற்ப படைப்பாற்றலுடன் கையாண்டு பொதுவுடைமை கல்வி முறையின் அடிப்படை கோட்பாடுகளை குரூப்ஸ்காயா உருவாக்கினார். இந்நூல் கட்டுரைகள் பொதுவுடைமை கல்வி முறையின் அடிப்படை கோட்பாடுகளை எடுத்து விளக்குகின்றன.

முகம்

விலை –  ரூ 70

பக்கம்-112

 

books-image-107 books-image-10854. முறிந்த பனை

இலங்கையில் தமிழர் பிரச்சினை – உள்ளிருந்து ஒர் ஆய்வு

ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன்

பயணி வெளியீடு

விலை: ரூ 450

 

 

 

 

 

books-image-109 books-image-11055. மோடி: வளர்ச்சி என்ற முகமுடி

வெளியீடு:
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு

விலை-  ரூ 20

பக்கம் -32

 

 

 

books-image-111 books-image-11256. கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்

என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் கட்டுரைகளின் தொகுப்பு – இரா.முருகவேள்

பொன்னுலகம் பதிப்பகம்,

விலை – ரூ 50

பக்கம் -67

 

 

books-image-113 books-image-11457. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் சிகிச்சையும், தடுப்பு முறையும்

குழந்தை வளர்ப்பில் ஏற்படும் குறைபாடுகள், தாய் சேய் உறவில் தோன்றும் பிணக்குகள், சமூக உறவில் ஏற்படும் சிக்கல்கள், பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்கள், தனி மனித உணர்ச்சிப் போராட்டங்கள் இவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.

நியு செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை – ரூ 150

பக்கம் – 296

 

 

books-image-115 books-image-11658. ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை – ஆயிஷா இரா.நடராசன்

இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறிவதே இயற்பியல். இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை வாசகர்களுக்கு உவப்பான மொழி நடையில் புதினம் போல விவரித்து சொல்கிறார் ஆசிரியர். இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் இரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.

பாரதி புத்தகாலயம்

விலை- ரூ 100

பக்கம் -208.

 

books-image-117 books-image-11859. உயிரினங்களின் தோற்றம் – சார்லஸ் டார்வின்

உயிரனங்கள் படைக்கப்பட்டது பற்றி அது வரை நிலவி வந்த கருத்துக்களுக்கும் குறிப்பாக கிருஸ்துவ பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்தாக்க்கங்களுக்கும் பலத்த அடி கொடுத்து வரலாற்றில் குப்பைக்கு எறிந்த புரட்சிகரமான நூல் டார்வினின் உயிரினங்களின் தோற்றம்.

விடியல் பதிப்பகம்

விலை – ரூ 65

பக்கம் -136

 

books-image-119 books-image-12060. சட்டங்கள் ஆணையங்கள் நடுவர் மன்றங்கள் திட்டங்கள்….

அரசுத் தோட்டத்தில் ஏட்டு சுரைக்காய்கள் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள்.

இந்தியாவின் மத்திய மாநில ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கொண்டுவரும் சட்டங்கள், சமூக நலத்திட்டங்களை ஆய்வு செய்து அதன் அரசியல் பின்னணியை அறியத்தருகிறது இந்நூல்.

கீழைக்காற்று

விலை : ரூ 50

பக்கம் – 80.

 

books-image-121 books-image-12261. ஆண்குழந்தை யார்? பெண் குழந்தை யார்?

ஆண், பெண் பால் வேறுபாட்டையும், ஆண் பெண் குழந்தை ஏற்றதாழ்வுகள் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றன என்பதையும் எளிமையாக குழந்தைகளுக்கு விளக்கும் நூல்.

கமலாபாசின், கே.கே.கிருஷ்ணக்குமார் மொழியாக்கம்: யூமாவாசுகி

பாரதி புத்தகாலயம்

விலை – ரூ 15

பக்கம் -24.

 

 

books-image-123 books-image-124

62. கணிதத்தின் கதை – ஆயிஷா இரா.நடராசன்

இதுவரை யாரும் தொகுக்காத கணிதத்தின் வரலாறு. உலக அளவிலான கணித மேதைகளின் பங்களிப்பு இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கணிதத்தின் வரலாறு என்பது மனித குலத்தின், அறிவியல் வளர்ச்சியின் வரலாறாகும்.

பாரதி புத்தகாலயம்

விலை – ரூ 50

பக்கம் -112.

 

புத்தகங்கள் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி…

வேலை நாட்கள் : பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை

கடை எண் : 369-370

10.01.2014 முதல் 22.01.2014 வரை

ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்வி மைதானம், நந்தனம், சென்னை.

  1. நல்ல தொகுப்பு. வாசகர்களுக்கு அருமையாக பயன்படும். பொங்கல் விடுமுறை முடியும் பொழுது வெளியிடாமல், முன்கூட்டியே வெளியீட்டிருந்தால், இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

  2. புதிதாக வாசிப்பவர்களை இலக்காக கொண்டு இந்தப்பட்டியலில் இன்னும் கூட சிறிய அளவிலான எளிமையான புத்தகங்கள் உதாரண்மாக போராடும் தருணங்கள், சினிமா – திரை விலகும் போது, இந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே, மதிமாறன் கேள்வி பதில்கள் போன்ற புத்தகங்கள் இணைக்கலாம்…

  3. தோழர் வணக்கம்,காலனித்துவ திருகோணமலை புத்தகத்தின் பதிப்பாளர் யார் என்ற விவரம் தேவை,நான் பெங்களூரில் இருப்பவன் என்னால் புத்தக விழாவில் கலந்து கொள்ள இயலாது, எனவே தான் பதிப்பாளர் முகவரி தேவை.நன்றியுடன் விஜயன்.

  4. புத்தகங்களின் விலை ஏன் நூற்றுக்கணக்கில் இருக்கிறது? சாமானிய மனிதனை நினைத்துப் பார்த்தீர்களா?

    ஒரே பக்க எண்ணிக்கை கொண்ட இரு புத்தகங்கள் ஒரே விலையாகத்தானே இருக்க வேண்டும்? ஒன்று மிக அதிகமாகவும் ஒன்று மிகக் குறைவாகவும் இருக்கிறதே? புத்தகம் தயாரிக்க/அச்சடிக்க மிகக் குறைந்த செலவு தானே ஆகும்.

    உங்களுக்கும் லாப வெறி பிடித்துவிட்டதா? புத்தகம் என்பது அறிவை வளர்க்க ஒரு கருவி. அதில் காசு இருப்பவனுக்கு ஒருவகையான அறிவு, இல்லாதவனுக்கு குறைந்த அளவு அறிவு என்பது ஏற்க முடியாத வாதம். எப்படி கல்வியை இலவசமாய் அரசாங்கம் தர வேண்டும் என கோருகிறோமோ, அதேபோல் அனைத்து புத்தக பதிப்பகங்களையும்/நிலையங்களையும் அரசுடமையாக ஆக்க வேண்டும்.

    லாப வெறி ஒழிக!

    • புத்தகம் என்பது 10 பேர் பணம் போட்டு வாங்க முடியாத ஒன்றா?

      அழிந்து விட கூடும் திந்பந்தமா?

      விலை ஏன் ஒரு பிரச்னை?

    • உங்கள் கோபம் சரியானது தான், ஆனால் யார்மீது இருக்க வேண்டுமோ, அவர்கள் மீது இருக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ள பல (அதிக விலை உள்ள) புத்தகங்கள் `மற்ற` வெளியீட்டகத்தின் நூல்கள்.

      நான் பல புத்தகங்களை கடன் வாங்கியும், நூலகத்தில் தேடி பிடித்தும் தான் படிக்கிறேன். புத்தகத்தின் விலை அதிகமாக இருந்தாலும், எனக்கு படிப்தற்கு விலை ஒன்றும் தடையாக இல்லை.

    • ஐநூறு ரூபாய் கொடுத்து ஜில்லா பார்ப்பார்கள்..ஆனால் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்க யோசிப்பார்கள்…டிபிகல் தமிழன்

    • நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது.. ஆனால் புத்தகம் உருவாக குறைந்த செலவே ஆனாலும் அதற்கான பராமரிப்பு செலவை நினைத்து பாருங்கள் 500 புத்தகம் அச்சடித்து எத்தனை நாளில் அதை விற்றுவிட முடியும் என்று நினைத்து பாருங்கள்… அதை கடையில் வைத்து விற்று அது தீர்வதற்கு 2 மூன்று வருடங்கள் ஆகிவிடும் ஒரு சில புத்தகங்கள் தீர்ந்து விடலாம் ஆனால் மற்ற புத்தகங்களை என்ன செய்வது.. அது மட்டுமல்ல புத்தகத்தின் தரத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.. அதை கொண்டுவர அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முன்னால் இந்த பணம் ஒன்றும் பெரிதல்ல….

  5. தமிழக நூலகங்களில் லேனா தமிழ்வாணன் எழுதிய கதைகள் , ஜே ஜே ,கருணாநிதி, அண்ணா, தமிழ் இலக்கியம் போன்ற புத்தகங்கள் மட்டுமே உள்ளன

    சித்தாந்த புத்தகங்கள்
    அறிவியல் புத்தகங்கள்
    வரலாற்று புத்தகங்கள்
    வானவியல் புத்தகங்கள்
    சுய உதவி புத்தகங்கள்

    என ஒன்று கூட நூலகங்களில் இல்லை . மேலை நாட்டு நூலகங்களை ஒப்பிடுகையில் நாம் நூலகங்கள் அரசாங்கத்தின் பிரச்சார அமைப்பாக இருக்கின்றன

    உங்கள் புத்தக தொகுப்பு ஒவ்வொரு நூல்கத்திலும் இருக்க வேண்டும். இதில் பெரும்பாலான நூல்கள் இங்கே மேலை நாட்டில் கிடைக்கின்றன . அட நான் நூலகத்திற்கு கூட போக வேண்டியது இல்லை ஈ புத்தகமாக கணினியில் படிக்கும் வசதியை தந்திருக்கின்றன . அத்தகைய நாள் இந்தியாவுக்கு வராதா , இந்த அறிவு இருட்டடிப்புக்கு முடிவில்லையா என்ற ஏக்கத்துடன் .

    இது போன்ற புத்தகங்களை வாங்கி மாதா மாதம் நூல்ககங்களுக்கு கொடுக்க முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறேன் . இதுவரை இரண்டு நூல்ககங்கள் …

  6. சென்னைப் புத்தகக்காட்சி செய்திகள் :

    [1]திரு அசோகமித்திரன் தன் புத்தக கண்காட்சி அனுபவத்தை தமிழ் ஹிந்துவில் நேற்று பகிர்த்துகொண்டுள்ளார். [குறைகளை ]

    [2]நேற்று புத்தக கண்காட்சி உணவகத்தில் போலீஸ் வன்முறை

    [3]திரு பெருமாள் முருகன் அவர்களின் புதிய நாவல் “பூங்க்குழி” கிடைக்கும்.

  7. சென்னைப் புத்தகக்காட்சி செய்திகள் :
    திரு அசோகமித்திரன் தன் புத்தக கண்காட்சி அனுபவத்தை தமிழ் ஹிந்துவில் நேற்று பகிர்த்துகொண்டுள்ளார்.

    குறைகள் :

    [1] புத்தக கண்காட்சி உணவகத்தில் விலை அதிகம்

    [2] நூழைவு கட்டணம் அதிகம்

    • இணையத்தில் தமிழ் புத்தகங்கள் வாங்க நான் பயன்படுத்தும் சில தளங்கள். உங்களுக்கு இவை ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். வினவு பரிந்துரைத்த புத்தகங்களில் எவை எல்லாம் இத்தளங்களில் கிடைக்கின்றன என இன்னும் நான் தேடித் பார்க்கவில்லை.

      https://www.nhm.in/shop/home.php

      http://www.udumalai.com/

      http://www.newbooklands.com/new/home.php

  8. புத்தகங்கள் அறிவை தருவது.புத்தககண்காட்சிகள் சேவை புரியவை-
    அதாவது அறிவியலை கொண்டு செல்வதற்கு ஊழியம் செய்பவர்கள்.

    சந்தையில் எப்படிபட்ட புத்தகம் விலைபோகும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யகிற வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

    இந்த சந்தையில் இந்துமதத்தை சொன்னால் தமிழனின் பெருமையை சொன்னால் அதற்கும் ஒரு கூட்டம். சாதியை விரட்டியடிப்போம் என்று ஒரு புத்தகம் வந்தால் ஏது? எப்படி?? என்ற கேள்வி இல்லாமல் அதற்கும் ஒரு கூட்டம். பிராமணியம் தான் இந்தியாவை கெடுக்கிறது என்று ஒருவர் புத்தகம் எழுதினால் அதற்கு தனியொரு “மவுசு”.

    ஏப்பா! பிராமணியத்திலை தொழிலாளர்கள் இல்லையா? வறுமை இல்லையா? விபச்சாரம் இல்லையா? அவர்களுக்கு எல்லாம் இந்த சமூகநீதிகளை எதிர்த்து போராடுகிற சக்தி இல்லை? என்று கேட்டால் அதற்கு இன்னும் புத்தகம் வரவில்லையே சார் என்பான்.

    இதுவே புத்தகத்தின் நிலைமை.

    புத்தகத்தை படித்துமட்டும் எதுவும் இந்த படிப்பாளிகள் கிழித்து விடபோவதில்லை. சுருக்கமாக சொன்னால் இந்த இரண்டும் கெட்டான் படிப்பாளிகளால் தான் இந்த உலகம் இருள் மண்டியிருக்கிறது.

    ஆகவே.. புத்தகத்தையோ கல்வி-அறிவியல் தன்மையையோ யாம் குறைத்து பதிப்பீடுபோடுவதாக கருதவேண்டாம். எவ்வளவு வற்றுக்கு கல்வியை கற்கிறோமோ அவ்வற்றிக்கு அதை விலை பேசமுடியுமா என்பதிலேயே இந்த புத்தகவெளியீடு-புத்தங்கள் இருக்கின்றன. இதில் மாக்ஸியம் சார்ந்து வியாக்கியாணம் செய்கிற எழுத்தாளர்கள் வெளியீட்டார்களும் உள்ளடக்கம்.

  9. யார் சொன்னது புத்தகம் மி-நூல் வடிவில் வரவில்லை என்று அது வந்து வெகு நாட்கள் ஆகின்றது.அது முழுமை பெறவில்லை என்பது உண்மை

  10. பாட்டாளி வர்க்க அறிவு ஜீவிகளை உருவாக்கும் கீழைக் காற்றின் புத்தகப் பயணம் தொடரட்டும்…

  11. இசுலாம் பற்றி அம்பேத்கர் சொன்னதை தெளிவு படுத்தவேண்டிய அவசியம் என்ன?அப்போ மார்க்சிசம் என்பதைவிட இசுலாமில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்று சொல்லும் இசுலாமியர்களின் கருத்தோடு ஒன்றுகிறதா வினவு?

  12. சென்னைப் புத்தகக்காட்சியில் இன்று:

    இன்று சென்னைப் புத்தகக்காட்சிக்கு செல்ல நேரமும் ,பணமும் அமைந்தது. நைந்து போன பதிப்பகங்கள் வலிமையான பதிப்பகங்களுடன் நொண்டியடித்துக்கொண்டு இருந்தன. மதிய உணவை தவீர்த்து சென்றதால் ,அந்த ஒழுங்கற்ற தளத்தில் நடப்பது மது போதைக்கு ஏற்ற தள்ளாட்டத்தை கால்களுக்கு ஏற்படுத்தியது.

    புத்தகங்களை தேர்வு செய்வது பெருங்குப்பையில் இருந்து குண்டுமணியை தேடுவது போல இருந்தது. வினவின் “சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள்” கட்டுரை திசைக்காட்டியது. வாங்கிய புத்தக்ங்கள் :

    [1] கருக்கு நாவல் -பாமா

    [2]பூக்குழி நாவல் – பெருமாள் முருகன்

    [3]அமைப்பியமும் பின்அமைப்பியமும் -க.பூரணச்சந்திரன் [என் கல்லூரி என் தமிழ் ஆசிரியர்]

    [4]மதொருபாகன் நாவல் – பெருமாள் முருகன்

    [5]திருச்செங்கோடு சிறுகதை தொகுப்பு -பெருமாள் முருகன்

    [6]ஆண்டாள் பட்சி நாவல் -பெருமாள் முருகன்

    [7]அந்நியப்படும் கடல் -கீழைக்காற்று பதிப்பகம்

    [8]இதுவல்லவோ கதை -கீழைக்காற்று பதிப்பகம்

    [9]வேப் பெண்ணைய்க் கலயம் சிறுகதை தொகுப்பு-பெருமாள் முருகன்

    [10]கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்

    [11] கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -கீழைக்காற்று பதிப்பகம்

    [12]கணிதத்தின் கதை -ஆயிஷா இரா.நடராசன்

    [13] தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?-கீழைக்காற்று பதிப்பகம்

    [14] வான் குருவியின் கூடு கட்டுரைகள் – பெருமாள் முருகன்

    கீழைக்காற்று பதிப்பகத்தில் புத்தக பட்டியல் கிடைக்காதது பெருங்குறை. காலச்சுவடு பதிப்பகத்தில் கொற்கை நாவல் ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருந்தது. டீ ,காப்பி விலை முறையே ரூ10,ரூ 12. 3 இட்லி ரூ 30. எல்லாம் முடிந்து வெளியேறும் போது பெரியவர் கூவி கூவி விற்ற கை பை , புத்தகங்களை இன்று சுமக்கவும் நாளை காய்கறிகளை சுமக்கவும் பயன்படும் என்பதால் வாங்கிச்சென்ரேன் .

    • கணிதத்தின் கதை புத்தகத்தை பற்றி எழுதுங்கள் . விலை என்ன என்பதை பற்றியும் கூறுங்கள்

      விலை யோர்ந்த புத்தகத்திற்கு மாற்றாகவும் தமிழிலும் இருக்கும் என்று நினைக்கிறன்
      http://www.amazon.com/History-Mathematics-Carl-B-Boyer

      தமிழன் கண்டு பிடித்தான் என்கின்ற ரீதியில் இருந்தால் கூறி எச்சரியுங்கள்

      • Raman,

        கணிதத்தின் கதை – ஆயிஷா இரா.நடராசன்
        இதுவரை யாரும் தொகுக்காத கணிதத்தின் வரலாறு. உலக அளவிலான கணித மேதைகளின் பங்களிப்பு இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கணிதத்தின் வரலாறு என்பது மனித குலத்தின், அறிவியல் வளர்ச்சியின் வரலாறாகும்.

        பாரதி புத்தகாலயம்

        விலை – ரூ 50

        பக்கம் -112.[Thanks Vinavu]

        I bought this book from Book fare. But Very next day my younger sister [who have finished M.Sc ,B.Ed in Math] come to my home and captured that book and went to her home.

        So I missed to read that book.

        Your politics against Tamil people in your comment is very shame and shows your heated feeling about my Tamil race.

        Even though You are belonging to Bramin community, You and your parents are speaking any one of the Dravidian languages like Tamil or Telugu or Kannada or Malayalam at home but not Sanskrit.

        Do not forget this!

        raman//தமிழன் கண்டு பிடித்தான் என்கின்ற ரீதியில் இருந்தால் கூறி எச்சரியுங்கள்

  13. நண்பரே நீங்கள் எழுதிய ஒன்று, இரண்டு புத்தகங்களை தவிர மற்றவையை நான் படித்ததில்லை… ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் கம்யூனிசத்தின் அடிநாதமே கீழைகாற்று, விடியல், அடையாளம் பதிப்பகத்தை முன்னிறுத்தியே நீங்கள் இந்த புத்தக வரிசையை எழுதியிருக்கிறீர்கள்… நீங்கள் இந்த பதிப்பகத்திடம் என்ன எதிர்பார்க்கிர்கள் என்று தெரியவில்லை(பணம், பொருள்) நீங்கள் வரிசை படுத்தியுள்ள புத்தகங்களை நீங்கள் படித்திருப்பீர்களா என்று எனக்கு தெரியவில்லை. முடிந்தால்
    ஜெயமோகனின் வெள்ளையானை, அறம், புறப்பாடு
    சி.மோகன் மொழிப்பெயர்ப்பில் வந்துள்ள ஓனான் குல சின்னம்,
    போப்பு மொழிப்பெயர்ப்பில் வந்துள்ள வழிகொள்ளையனின் வாக்குமூலம்,
    கே.வி.ஜெயஸ்ரீ மொழிப்பெயர்ப்பில் யேசு கதைகள்,
    டாக்டர் சிவராமனின் ஆறாம் திணை …..
    இன்னும் இருக்கிறது.. ஆனால் எழுத வரவில்லை.. முதலில் உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள்…. ஒரு சில நிறுவனங்களுக்காக ஜாலரா (சைய் ஜப் ) அடிப்பதை நிறுத்துங்கள்.. முதலில் மக்களின் சிந்தனையை மாற்ற நினைக்காதீர்கள்….

    • //சி.மோகன் மொழிப்பெயர்ப்பில் வந்துள்ள ஓனான் குல சின்னம்//

      அது ஓனான் குல சின்னம் இல்லை.ஓநாய் குல சின்னம்.தலைப்பிலேயே கதை குறித்த செய்தி உள்ளதால் இதை கூறுகிறேன்.குறைகூறும் நோக்கம் எதுவும் இல்லை.

    • ஜெயமோகனின் வெள்ளையானை : critics

      ஜெயமோகனின் வெள்ளை யானை படித்தேன். நாவலின் மிகப் பெரிய பலவீனம், ஒரு கதாபாத்திரம்கூட எதையும் நிகழ்த்த மாட்டேனென்கிறது. எல்லாக் கதாபாத்திரங்களும் எது நடந்தாலும் ஜெயமோகனின் பிரதிக் குரலாக எதையாவது தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கின்றன அல்லது நினைத்து நினைத்து உருகிக்கொண்டேயிருக்கின்றன. இந்தப் பேச்சுக்களை மட்டுமே முன்வைத்து அவர்களை அத்தகைய குணாம்சமோ மகத்துவமோ திறமையோ மனிதாபிமானமோ குரூரமோ இருப்பவர்களாகக் கற்பனை செய்துகொள்ள ஆசிரியர் நம்மை நிர்பந்தித்துக்கொண்டேயிருக்கிறார். ஒரு மகத்தான நாவலோ தன் பரப்பில் சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலமாகவே தன் மகத்துவத்தைச் சாத்தியப்படுத்திக்கொள்கிறது. வாக்கியங்களின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட அனுமதித்துக்கொள்ளாமல் சற்று நிதானித்துப் பார்த்தால் நாவல் முழுவதிலும் மானுட துக்கம், மானுட உச்சம், மானுட எக்ஸ், மானுட ஒய் அல்லது மகத்துவம் அல்லது ஒளிப் பாய்ச்சல் அல்லது இவற்றுக்கிணையான, எப்போதும் உச்சாணிக் கொப்பிலேயே தொற்றிக்கொண்டிருக்கும் வார்த்தைக் கோர்ப்புகளாலேயே நிறைந்திருப்பதையும் இவையனைத்தும் வெறும் சொற்களாயும் நினைவோட்டங்களாயுமே இருப்பதையும் வாசகரால் அவதானிக்க முடியும். பெரும் சலிப்பை ஏற்படுத்தும் எழுத்து (உத்தி?). ஒரு தலித் எழுச்சி உருவாவதும் அது எழுந்த வேகத்தில் அடங்கிப்போவதுமான கதை சார்ந்த நிகழாமையைப்பற்றி நான் சொல்லவில்லை. நான் கதையைப்பற்றிப் பேசவேயில்லை. கதாபாத்திரங்கள் எதுவுமே அபிப்பிராயங்களாகவன்றி ரத்தமும் சதையுமான பிரதித் தன்மையைப் பெறவேயில்லையென்பதுதான் என் வருத்தம். நாவலின் ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் கதாபாத்திரங்கள் வாயிலாக ஜெயமோகன் பச்சையாகவே ஆஹா, இதை எப்படிச் சொல்லியிருக்கிறேன் பார்த்தாயா என்று கூடக்கூட வந்து புலம்பிக்கொண்டேயிருக்கிறார். வெறும் மானுட உச்சமான கற்பனைகள் மற்றும் எண்ணவோட்டங்களாலேயே (உண்மையில் சவடால்களாலேயே என்றுதான் சொல்ல வேண்டும்) ஒரு நபர் வரலாற்றில் (அல்லது ஒரு வரலாற்றுப் புதினத்தில்) தனக்குரிய புகழையோ கருணையையோ மன்னிப்பையோ (ஏய்டனை வாசகர்களின் இரக்கத்திற்குள்ளாக்குவதைப்போல) பெற்றுவிட முடியுமானால் அதற்கு மிகப் பெரிய முயற்சியோ நானூற்றுச் சொச்சப் பக்க படைப்போ தேவையில்லையென்றே தோன்றுகிறது. அட ஏய்டன் ஒரு கவிஞன் என்றும் மரீசா ஒரு நல்ல வாசகியென்றும் சொல்லும் ஆசிரியருக்குப் பிரதியில் அதை நிகழ்த்துவதற்குக்கூடவா கற்பனையில்லாமல் போய்விட்டது?! என்ன கவிதையை அவன் எழுதி அதில் அப்படியென்னதான் அந்த அறிவுஜீவிப் பாலியல் தொழிலாளி கண்டுவிட்டாள்? நாவல் முழுக்கப் பேச்சு பேச்சு பேச்சு. இந்த நாவலை ஒரு முதல் வரலாற்று நாவல் என்று புகழுமளவிற்குத் தமிழின் தீவிர வாசகர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களேகூட எத்தனை எளிமையான வாசகர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சுலபமாக அவர்களைத் திருப்திப்படுத்திவிட முடிகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற வார்த்தையொன்றே ஒரு பிரதியை வரலாற்று நிகழ்வாக அங்கீகரித்துக்கொள்ள அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஜெயமோகனைப் போன்ற ஒரு அற்புதமான படைப்பாளியிடம் ‘இது போதாது’ என்று சொல்லும் வாசகர்கள் போய்ச் சேரவில்லையென்றால் அது இப்படி அவர் வாசகர்களையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக்கொள்வதில்தான் போய் முடியும்.
      by
      Ba Venkatesan
      https://www.facebook.com/ba.venkatesan/posts/10201747359434138

    • “மீண்டும் ஒரு பசு அரசியல்” ஜெயமோகனின் “புறப்பாடு” விமர்சனம் : Jayamohan Purapadu critics

      “புறப்பாடு” கட்டுரையில் நாம் ஏன் பசும் பால் குடிக்கக் கூடாதுன்னா பசு குப்பை மற்றும் மலம் சாப்பிடுகிறது என்கிறார் ஜெயமோகன். அவருக்கு மிருகங்களை பற்றி போதுமான புரிதல் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. பொதுவாக நாய் கூட மலம் சாப்பிடும். அதற்கு பசி என்று அர்த்தம் இல்லை. மிருகங்களுக்கு மூத்திரம் மலம் எல்லாம் அசிங்கம் அல்ல.

      மூத்திரம் மூலமாக தான் காதல் தூதே விடும். என் வீட்டு நாய் பூனை மூத்திரத்தை தினமும் நக்கும். அதன் பொருளே வேறு. அது என்னுடைய மலத்தை கூட வாய்ப்பு கிடைத்தால் விரும்பி சாப்பிடும். அதற்கு பசி ஒன்றும் இல்லை. ஆனால் மலத்தில் அப்படி ஒரு ருசி போல.

      இது மிருகங்கள் வழக்கமாக செய்கிற ஒன்று தான். பெரும்பாலும் மலத்தில் உள்ள சத்துக்களை அடையவே சாப்பிடுகின்றன. இதை cacrophagia என்கிறார்கள். காண்டாமிருக, யானைக் குட்டிகள் பிறந்ததும் தாயின் மலத்தை உண்ணும். அதன் மூலம் தான் தம் குடலுக்கு ஜீரணுத்துக்கான நுண்ணுயிர்களை பெறும். இது போல் டயரியாவுக்கு பிறகு மனிதர்களுக்கு மலத்தை குழாய் வழி செலுத்தி நல்ல பேக்டீரியாக்களை அனுப்பும் ஒரு மருத்துவ முறை உள்ளது. ஒரு காலத்தில் மருத்துவர்கள் மலத்தை தொட்டு நக்கி தான் நோயை அறிவார்களாம். இப்படி மலம் மீதான அருவருப்பு கலாச்சாரரீதியானது தான். மிருகங்களுக்கு அதெல்லாம் இல்லை.
      மலைவாழ் இனத்தை சேர்ந்த பழங்குடி மாணவர்கள் விடுதியில் பாலே பயன்படுத்துவது இல்லை; ஏனென்றால் அம்மக்களுக்கு எருமை தெய்வம். சரி, அப்படி என்றால் எருமைப்பால் தானே குடிக்கக் கூடாது. பசும்பாலுக்கு என்ன சிக்கல்? இப்படி ஒரு வைதிக மனோபாவத்துக்கு கீழ்த்தட்டு வக்காலத்து வாங்க முயன்று சொதப்பவும் செய்கிறார்.
      குப்பை அழுகின உணவு மலம் சாப்பிடும் பசு என்பதால் ஜெமோ ஒரு கட்டத்தில் பால் சாப்பிடுவதை நிறுத்துகிறாராம். சரி, இதே லாஜிக்படி வயலில் சாணி உரம் போடுகிறார்கள். சிலர் மனித மலத்தை வைத்து பயிரிட்டு மிக அதிகமாக விளைச்சல் கிடைக்கும் என தமிழ்நாட்டில் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். இப்படி விளைச்சலான காய்கறி, தானியங்களை இவர் சாப்பிட மாட்டாரா? என்ன சாப்பிட்டாலும் உள்ளே போய் பாலாக தானே வெளிவருகிறது.
      மாட்டின் பால் மட்டும் அல்ல பொதுவாக நான் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் பின்னாலும் ஒரு வதையும் ஒடுக்குமுறையும் மறைமுகமாக இருக்கத் தான் செய்கிறது. அதனால் அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? உங்கள் பிள்ளை படிக்கிற பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு சம்பளம் மிக குறைவென்று பள்ளியில் இருந்து நீக்கி விடுவீர்களா? எல்லா பிரச்சனைகளையும் ஒன்றாக்கி பார்த்தால் வாழ முடியாது.

      இந்த “புறப்பாடு” தொடர் ஏன் சிலருக்கு பிடித்திருக்கிறது என புரிகிறது. வர வர ஜெயமோகன் மசாலா பட திரைக்கதை பாணியில் தான் கட்டுரை கூட எழுதுகிறார். இப்பதிவில் பசு கடைசியில் தற்கொலை கூட பண்ணுகிறது. இந்த பசுவை ஹீரோயினாக்கி ஒரு பாதிரியாரை அதன் மீட்பராக்கி ஒரு படம் கூட எடுக்கலாம். பசு தன் செத்துப் போன பாப்பாவை பத்தி பாட்டு கூட பாடலாம். எவ்வளவோ பண்ணலாம். தமிழ் சினிமா இதையும் தாங்கும்.

      BY ABILASH CHANDRAN
      http://thiruttusavi.blogspot.in/2013/08/blog-post_26.html

      republished on

      http://vansunsen.blogspot.in/2014/01/jayamohan-purapadu-critics.html

  14. Dear Vinavu, This is the complete critic on Carbon Paper You Do Not Know ?- Perumal Murugan – Essays
    கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ…? கட்டுரைகள் – பெருமாள் முருகன்[ஓரு முழுமையான விமர்சனம்]( Carbon Paper You Do Not Know ?- Perumal Murugan – Essays – A Complete Critic)
    கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ…? கட்டுரைகள் – பெருமாள் முருகன்[ஓரு முழுமையான விமர்சனம்]( Carbon Paper You Do Not Know ?- Perumal Murugan – Essays – A Complete Critic)

    ஐயா பெருமாள் முருகன் ,
    உங்கள் கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன . உங்கள் நாவல்,சிறுகதைகளை விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்] மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன. முதல் முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன். தமிழில் நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும் பயன் படுத்துவது மிக்க நன்று.

    கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ ? கட்டுரைகள் – பெருமாள்முருகன்[விமர்சனம்]

    23 கட்டுரைகள் உள்ள இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் சமுக-அரசியல் நிகழ்வுகளை மிக நூட்பமாக ஆய்துள்ளது.
    [1]”மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை ” யில் புரட்சிகர அரசியலை விட்டு வெளியேறிய பின், தாங்கள் சனநாயக முறையில் வேலை கேட்டு போராடியதையும்,போலிஸ் காட்டிய பூச்சாண்டி [உரிமை மீறல்களையும்] பதிவு செய்துள்ளீர்கள்.
    [2]”எருமைபாலும் பத்திரிகை வேலையும்” யில் தமிழ் கற்றவனின் கோபம் [கற்றது தமிழ் பிரபாகரனை விட] பல மடங்கு தெறிக்கின்றது. உங்களால் குறைந்த ஊதியத்தைக்கூட பொறுத்து இருக்க முடியும். “ஓற்றுப்பிழைகளை திருத்தக்கூடாது” என்ற தடை உங்களை அப்பத்திரிகையை விட்டு வெளியேறியது.இக்காரணத்தையே நீங்கள் கூறி வெளியேறி இருந்தால் மிக்க பொருத்தமாக இருந்து இருக்கும்.
    [3] “கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ” யில் புலவர் பெருஞ்சித்தனார் [ சித்திரனார் ?] அவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள மதிப்பீடுகள் ,தனித்தமிழ் மீது உள்ள உங்கள் நம்பிக்கை வெளிபடுகிறது. நான் கூகிளிட்டப்பொது “பெருஞ்சித்தனார்” என்று தான் அதிக பதில்கள் கிடைக்கின்றது.[ 5,000 மேலான பதில்கள்]
    [4]”ஆட்டோ வாசகங்கள்” கட்டுரையில் தனிமை மனிதனின் கிறுக்குத் தனங்களை காட்டியுள்ளிர்கள். இக்கட்டுரையை படிக்கும் போது நீங்கள் “கற்றது தமிழ் பிரபாகரனை” நினைக்க வைக்கின்றிர்கள்.

    [5]”வேகம் இழந்த விசைத்தறிகள்” கட்டுரை நம் மக்களின் மொக்கைத்தனமான போராட்ட முறைகளை கவனமாக விமர்சனம் செய்து உள்ளது. தமிழகத்தில் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ம க இ க போன்ற இயக்கங்களுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். புதிய போராட்ட முறைகளை கூறாதது இக்கட்டுரையின் மிகப்பெரிய குறை.
    [6]”கருவறை எலி” கட்டுரை நந்தன் முதல் ம க இ க வரை கோவில்[கருவறை] நுழையும் உரிமைக்காக போராடியதை நேர்மையாக பதிவு செய்து உள்ளீர்கள். கருவறையில் மொட்சம் ஆனா எலி ; கருவறை உள்ளே சென்று எலியை எடுத்து , கருவறையை புனிதப்படுத்திய உங்கள் மாணவனின் கதை கேடு கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய முரண்.இந்த இரு கட்டுரைகளும் ம க இ க மற்றும் வினவு.காம் ஆகியவர்களால் கவனிக்கப்படவேண்டியவை. ஈழம் சார்ந்த கட்டுரைகளை திரு பெமு எழுதாதது அவரின் ‘கவனமான கவனக்குறை’ என்று அய்யம் அடைகின்ரேன் .
    [7]”வண்ண வண்ணப் பூக்கள் ” கட்டுரை திரு பெருமாள் முருகன் அவர்களின் முதல் பெருங்கதை “ஏறு வெயில்” வெண் திரை நோக்கி பயனித்த கதை. திரு பாலு மகேந்திரா ஏறு வெயிலை திரைக்கு தெரிவு செய்தது ;திரைக்கு பொருந்துமா என்ற திரு பெமு வின் ஐயம்; இறுதியில் வாய்ப்பு கை நழுவி போனதன் கதை.தமிழ்த் திரைக்கு ஓரு “பதேர் பன்சாலி” வாய்க்கவில்லை.
    [8]”முதல் கடிதம்” கட்டுரை சினேகிதி, திரு பெமுவுக்கு எழுதிய முதல் பதில் கடிதம் கிடைத்தும், கைக்கு கிடைக்காத “அறம் சார் நீதி ” சோகக்கதை.

    [9]”உள்ளது கொண்டு உண்ணுதல் ” கட்டுரை , எம் கொங்கு மக்களின் [நான் வாழ்த மல்லசமுத்திர வாழ்க்கையை மறக்க முடியுமா ?] எளிய உணவு முறைகளை அவற்றின் வட்டார வழக்குச்சொற்களுடன் அறிமுகப்படுத்துகின்றது. திரு பெமு வின் கருத்துருக்கள் :
    [௧]மக்களின் உணவுமுறை ,அவர்கள் வாழும் நிலம் ,பொருளாதார வலிமை சார்தது.[இக்கட்டுரையில் ,கொங்கு மக்கள் “வீட்டுக்கு வெளியே” தனிப் பாத்திரத்தில் “பெரியாட்டுக்கறி” சமைக்கும் அழகியல் விடுபட்டு உள்ளது ]
    [௨]ஆண்டானும்,அடிமையும் ஒரே மாதிரியான உணவுமுறைகளை பெரும்பாலும் கொண்டு உள்ளனர். [1980கள் வரை உண்மை தான் என்றாலும், இன்று இருவருமே ரேசன் அரிசியை தானா சமைத்துண்கின்றனர் ?]
    [௩]குக்கர் இல்லாமல் ,கஞ்சி வடிக்காமல் சோறு ஆக்கும் முறை [எரிபொருள் சேமிப்பு ]
    [௪]கொங்கு மக்களின் “அரிசி-பருப்பு” சோறு செய்முறை [அரிசி-மாவுச்சத்து ,பருப்பு-புரதம் நன்று. ; எம் கொங்கு மக்கள் இத்துடன் ஏதோ ஒரு காய்கறி[விட்டமீன்] சேர்தால் மிக்க நன்று ]
    [௫]”விக்கவிக்கத் தின்னாலும் கெழக்க வெளுக்கப் பீதான்” என்ற கொங்கு வட்டார பழமொழியுடன் முடியும் இக்கட்டுரை, பெரு-சிறு நகர, நடுத்தர-உயர்நடுத்தர மக்களின் ஆடம்பர-சக்கை உணவுமுறைகளுக்கு எதிராக நல்ல மாற்று வழியை விவாதிக்கின்றது.
    [10]”ஹர ஹர மகாதேவா!சம்போ மகாதேவா!” கட்டுரை, நாட்டார் வழ்வியலுக்கு எதிராக, இந்து சனாதனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்த பலியிடல் தடுப்புச் சட்டம் மீது எதிர்வினை ஆற்றிய கையேடு.அசைவ முருகன் “சைவன்” ஆன கதையில் தொட்ங்கி ,உலகமயமாக்கலில் முடியும் கட்டுரை.
    திரு பெமு அவர்கள், வெளிப்படுத்தும் கருத்துக்கள் :

    [௧]”சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த “திருமுருகாற்றுப்படை அசைவ முருகன்”, பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான்.
    [௨]கோவில் அசைவம் ,மூலவர் சைவம் என்ற நிலையை மாற்றி கோவிலும் சைவம் ,மூலவரும் சைவம் என்ற நிலைக்கு மாற்ற முயலும் சட்டம் இது.
    [௩]இச்சட்டம் சிறுதெய்வங்களை பொருந்தெய்வங்களுடன் இணைக்கும் முயற்சி .[இணைக்கும் முயற்சியா ?அல்லது அழிக்கும் முயற்சியா ?]
    [௪]இச்சட்டம், நாட்டார் சிறுதெய்வ கோவில்களில் நிகழும் சமுக செயல்களை [இனக்குழுகளின் கூட்டங்களுக்கு இடையிலான திருமண பேச்சு , பஞ்சாயத்துகள்] குலைக்கின்றன.[திரு பெமு அவர்கள் ,இச்சட்டம் மூலம் , இனக்குழுகளின் சாதீய கட்டுமானத்தை தளர்த்த சாத்தியம் உள்ளதா என ஆய்வு செய்ய தவறிவிட்டார் ]
    [௫]கோவில்களை சைவமாக்கும் முயற்சி, இந்து மத அமைப்புகள் உலகமயமாக்கலுக்கு துணைபோகும் செயல்.
    [௬]த.அ வின் “கள்ளுக்கு தடை ,பிராந்திக்கு ஏற்புரை” கொள்கையை இச்சட்டத்தின் சிறுதெய்வ அழீப்பு கொள்கையுடன் ஓப்பீடு செய்யும் திரு பெமு அவர்கள் , இரண்டுமே [மதம் -மது ] போதைக்கான விடயங்ககள் தான் என்பதை ஏனோ கூறவில்லை.

    முற்றும்.

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  15. பாமாவின் “கருக்கு”களை தீய்க்கும் பெருமாள் முருகனின் “ஆளண்டாப் பட்சி” -விமர்சனம் [karukku And Aalanta Patsee A Complete Working Class View]

    “………ஆளண்டாப் பட்சி தீய்க்கும் “கருக்குளின் [கருக்குகளின் கலகக் குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப் பட்சியின் சமரசத்தை ] வாசத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. ……..”

    ஒரே காலக் கட்டத்தில் [1990களின் ஆரம்பத்தில்] நாவல் வடிவ சுய மற்றும் புனைக் கதைகளை எழுதத் தொடங்கிய பாமா ,பெமு- வின் முதல் ,ஆறாம் கதைகள் தான் கருக்கு மற்றும் ஆளாண்டாப் பட்சி. இரு கதைகளுமே நாட்டார் வழவியலை மையமாக கொண்டு, “மதுரை–தலித்” மற்றும் “கொங்கு–கவுண்ட” வட்டார வழக்கில் எழுதப்பட்ட மண் சார் கதைகள். இக் கதைகளை படித்து உனர மண் சார்ந்த மக்கள் மீது கரிசனமும் , மொழி மீது குறைந்த பற்றும் இருந்தாலே போதும்.

    கருக்கு,ஆளண்டாப் பட்சி கதைகள் மனிதர்களின் வலிகளையும்,தேடல்களையும் முன்னிலைப் படுத்தும் வகையில் அமைந்து இருந்தாலும் கதை மாந்தர்கள் வெளிப் படுத்தும் உள்ளார்ந்த அரசியலும் ,வர்க்கப் பார்வையும் வேறு வேறாக உள்ளது. துறவு வாழ்வை துறந்த பாமாவின் கருக்கு நிலம் இல்லாத தலித் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ,முன்னால் புரட்சியாளர் பெமு வின் ஆளாண்டாப் பட்சி நிலவுடைமை கவுண்ட விவசாயிகளையும் முன்னிலை படுத்துகின்றன.

    எல்லா மனிதர்களுக்கும் வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும் அவர்கள் வர்க்கம் சார்ந்து அதன் நோக்கம் வேறுபடுகின்றது. கருக்கு நாவலில் நிலம் இல்லாத தலித்தியர் கூலித் விவசாயத் தொழிலாளர்களின் வழ்க்கையை தன் சுய கதையுடன் இணைத்து கூறும் பாமா அவர்கள் ,பக்கத்துக்கு பக்கம் ,வார்த்தைக்கு வார்த்தை நிலம் உடமை சாதிகளுக்கு எதிராக வலிக் குரல் எழுப்புகின்றார். ஆளாண்டாப் பட்சி நாவலில் பங்காளிச் சூழ்ச்சியில் நிலம் இழந்த நிலம் உடமை கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவரின் புது நிலம் நோக்கிய அகதிப் பயணத்தில் தன் அடிமையுடன் நடத்தும் கதையாடல்களில் பெமு அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கவுண்டர் சாதியை ,தலித்தியர்களுடன் சமரசம் செய்து கொள்ள சொல்கின்றார்.

    சாதீய அடக்கு முறைகளுக்கு எதீராக மூத்த தமிழர்களிடம்[ தலித்தியர்களிடம்] கலகக் குரல் எழுப்புச் சொல்லும் கருக்குவின் வர்க்கப் பார்வையும் , தலித்தியர்களிடம் சமரசம் செய்து கொள்ள சொல்லும் ஆளண்டாப் பட்சியின் சமரசப் [வர்க்கப்] பார்வையும் முறையே அடிமை ,ஆண்டான் வர்க்கங்களை சார்ந்து உள்ளன.

    கருக்கு நாவலின் கதைக் களம் , தலித்தியர் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற பச்சை தமிழச்சியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே தலித்தியர்களின் நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் எழுத்தில் வடித்துள்ளார் பாமா.

    ஆளண்டாப் பட்சி நாவலின் கதைக் களம், பங்காளிச் சூழ்ச்சியில் நிலம் இழந்த நிலம் உடமை கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவரின் புது நிலம் நோக்கிய அகதிப் பயணத்தில் தன் அடிமையுடன் நடத்தும் கதையாடல்களின் தொகுப்பு.

    இரண்டையும் படித்த பின் “ஆளண்டாப் பட்சி” தீய்க்கும் “கருக்குளின் [கருக்குகளின் கலகக் குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப் பட்சியின் சமரசத்தை ] வாசத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை.

    முற்றும்

    கி.செந்தில்குமரன்
    http://vansunsen.blogspot.in/2014/02/karukku-and-aalanta-patsee-complete.html

  16. துயரமும் துயர நிமித்தமும் கட்டுரைகள் – பெருமாள் முருகன் [ஓரு சிறு விமர்சனம்](Critics About Causes Of Sadness -Essays -Perumal Murugan)

    “………வெவ் வேறு [தளங்களில் ,காலக் கட்டத்தில் ,நேக்கத்தில்] பெமு-வின் இக் கட்டுரைகள் எழுதப்பட்டாலும், இவற்றை புத்தகமாக பதிப்பிக்கும் போது வாசகன் சம நிலையில் ஆன விமர்சனத்தை நாடுவது இயற்கை தானே…….”

    http://vansunsen.blogspot.in/2014/02/critics-about-causes-of-sadness-essays.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க