Friday, May 20, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?

புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?

-

றிவுப் பசியை போக்கிக் கொள்ள சென்னை புத்தகக் காட்சிக்கு ஒரு எட்டு வைக்கலாம் என்று, ஆரம்பத்திலேயே நம்மை வழிமறிக்கும் ஸ்நாக்ஸ் கடைகளைத் தாண்டி, உள்ளே நுழைந்தேன்.

பிட்சாக் கடை
புத்தகக் கண்காட்சியில் ஸ்நாக்ஸ் கடைகள் (கோப்புப் படம்).

“ஏம்ப்பா! புத்தகக்காட்சி பொறுப்பாளர்களே, படிப்பு வாசனையைத் தேடி நுழையும் போதே நுழைவாயிலில் பாப்கார்ன் வாசனையை தூக்கலாக்கிக் காட்டி சுண்டி இழுப்பதை நிறுத்தக் கூடாதா? வரும் போதே தடுக்கி விழுந்தால் சாட் அயிட்டங்களில் விழும்படி என்னய்யா அப்படி ஒரு ஏற்பாடு?! போகட்டும், படிக்கும் பழக்கம் அருகி வரும் காலத்தில் இத்தனை புத்தகக் கடைகளை ஓரிடத்தில் வரிசை வைத்துக் காட்டும் உங்கள் முயற்சியை பாராட்டலாம்” என்ற எண்ணத்தோடு பார்வையிட்டேன்.

சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின் கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.

புத்தகக்கண்காட்சி என்ற வரம்புக்குள் மதவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை புத்தகங்களாக பார்வைக்கு வைப்பதைக் கூட சகித்துக்கொள்ளலாம், பல பார்ப்பன பண்டாரக் கடைகளில் அவர்களின் ‘நூல்’ விடும் முயற்சியே முறுக்கிக் கொண்டு தெரிகிறது.

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் ஆன்மீகக் கடைகள் (கோப்புப் படம்)

”இஸ்கான்” கடையில் கிருஷ்ண ஆலாபனையுடன் ஊதுவத்தி, தசாங்கம், அத்தர், ஜவ்வாது, நறுமணப் பொருட்கள் என புத்தகங்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தன. பகவத்கீதையை தூக்கி நிறுத்தவும், பார்ப்பன நாற்றத்தைப் பரப்பவும் புத்தகக்காட்சி சாக்கில் அவாளின் பிரசாதக் கடைகள், “வேத மந்தீர்” என்றொரு கடை, கிலோ கணக்கில் ராசிக்கற்கள், ஸ்படிக கும்பங்கள், கல் மணி மாலைகள் வேதாந்தம், மத அனுஷ்டானம் என்ற விளம்பரங்கள் இதற்குப்பெயரும் புத்தகக் கடையாம்! இன்னொரு வரிசையில் “ராமகிருஷ்ண மடம்” சங்கராச்சாரி, ஆதிசங்கரர் மினி கட் அவுட்டுகள், டாலர்கள் (அமெரிக்க டாலர் இல்லீங்க? அது அங்க! இங்க அவாள் குரு – க்களின் படம் போட்ட டாலர்!) விவேகானந்தர் படங்கள், ஒலி / ஒளி நாடாக்கள், கூடவே புத்தகங்கள் துளசி நீர்த்தம் மட்டும்தான் பாக்கி!

தன் பங்குக்கு “ஈஷா மையம்” லிங்கம், படங்கள், மாலைகள், சத்குருவின் படங்கள், கேசட்டுகள் என வாயைக் கொடுத்தால் ‘குண்டலினியில்’ தூக்கிப்போட குண்டுகட்டான ஆட்களுடன், “ஸ்ரீ வித்யதீர்த்தா பவுன்டேசன்” பெயரில் 80 – ஜி வரிவிலக்கோடு உண்டி வசூலுக்கு நோட்டீஸ் விநியோகம் வேறு, சூடம், ஊதி வத்திக்கு மசியாதவனை கட்டிப்போட “இன்ஃபினி” என்ற பெயரில் கார்ப்பரேட் குருவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி. காட்சியுடன் ஒரு கடை. நாலு தடியர்கள், கடை நிறைய பரப்பப்பட்டிருக்கும் குருவின் ஒரே ஒரு புத்தகத்தைக் காட்டி போகிற வருபவர்களைக் முதலில் கொக்கிப் போடுகிறார்கள், பின் டி.வி.யைக் காட்டி அதில் ஆவியாய் அலையும் குருவின் உரையில் முக்கி எடுத்து, முகவரியைப் பிடுங்க… முடிவற்ற காரிய வாதத்தில் உயர் நடுத்தரவர்க்கத்தை முக்தி அளிக்கும் திசைக்கு பத்தி விடுகிறது “இன்ஃபினி” கார்ப்பரேட் ‘கறிக் கடை!

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் கோயில் கடைகள் (கோப்புப் படம்)

இத்தனைக் கேடிகளும் இருக்குமிடத்தில் நித்யானந்தா இல்லாமல் விளங்குமா? நித்யபீடமும் புத்தகக்காட்சியில் உத்திராட்சங்களுடன் வருபவர்களைத் தடுக்கி விடுகிறது. ஒரு உத்திராட்சத்துடன் நித்யானந்தா டாலரைக் கோர்த்து வருபவர்களுக்கு அதை இனாமாகக் கட்டிவிட சிஷ்யகேடிகள்! மினி நித்தி கட் அவுட்டுகள் சந்தன மாலைகள், சிரிப்பாய் சிரித்த நித்தியின் சிரிப்பு படங்கள்… என ஆங்காங்கே புத்தகக் காட்சியில் சாமியார் மடங்கள் பத்தாது என அவ்வப்போது கண்காட்சி அரங்குகளில் திடீர் பிரசன்னமாகி விபூதி வழங்கும் சாமியார்களையும் நேரடியாக கடையில் கொண்டு வந்து அடுக்கி வைத்திருக்கின்றன சில காவிகள்!

பார்ப்பன பந்தாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பாவம் சன்மார்க்கம், ஓங்காரம் என்று சில சைவப் பண்டாரக் கடைகளில் விபூதி மணக்கும் கோலத்தில் சில சாமிகள் ‘தேமே’ என தாடியை தடவிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இசுலாமிய, கிறித்தவ நிறுவனங்கள் புத்தக வடிவம் தாண்டி வேறு ஜிகினாக்கள் காட்டாமல் அடக்கி வாசிக்கும் போது, பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் புத்தகக் காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!

“பபாசி” சங்கத்தில் புத்தகக் கடைகளில் ஆடியோ கேசட்டுகள் கூட வைத்து விற்கக் கூடாது என கறாராக விதி வகுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அங்கங்கே தகடுகளும், ஆடியோ/வீடியோ ஒளி பரப்புகளையும் பார்க்கையில் “பபாசியும்” பாப்பார பாசியாக இருப்பது அவமானம்!

‘விதியை’ நொந்து கொண்டு வெளியே வந்தால்… வெளியே உள்ள சொற்பொழிவு அரங்கில் ஒரு சாம்பிராணி தீவிரமாக புகைந்து கொண்டிருந்து, “ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் விவேகானந்தரை கொண்டு சேர்க்க வேண்டும்” என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். பிராண்ட் சாம்பிராணி யார் என்று எட்டிப் பார்த்தால் தமிழருவி மணியன்! வெளங்கிடும்?!

– சுடர்விழி

 1. இதப்பத்தி எந்த ப்ளாக்கரும் புத்தக கண்காட்சீயைப்பற்றிய பதிவில் குறிப்பிடவில்லை.

 2. ஏன்பா

  வீட்டுக்கு வீடு வந்து இயேசுவே கடவுள்னு ஒரு கூட்டம் கும்மியடிக்குதே. அதெல்லாம் கண்ணுக்கு தெரியதா

  • Jaisankar, seenuvum unga aal thaan. avarukku athellam nalla theriyum. aprom school college-la ISKCON karanuga pandrathu ungalukku theiryala? islam pathi free DVD kudukarathum theriyala?

   Topic is book fair and the state of it today. Stay in that if possible.

   • Hisfeet,

    You first have commented out “VInavu oru matha kurudu. islam mattum theriyaathu. ungalukku epdi ultra-violet theriyaatho, apdi”.

    Jaisankar next has commented out “வீட்டுக்கு வீடு வந்து இயேசுவே கடவுள்னு ஒரு கூட்டம் கும்மியடிக்குதே”

    You have replied him “Topic is book fair and the state of it today. Stay in that if possible”

    what a contradiction..

 3. வினவுக்கே உரித்தான ஸ்டைலில் புத்தக கண்காட்சியைப் பற்றிய கட்டுரை.(எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்)

  இந்தக் கட்டுரையாளர் என்ன சொல்ல வராங்க ? படிக்கப் படிக்கப் பாவமாக பரிதாபமாக இருக்கு.

 4. விவேகானந்தரை கொண்டு சேர்க்க வேண்டும்” என்ற பரிதவிப்பில் தினமணி அன்னாத்தே ஒன்னும் சொல்லலீங்களா ……….??ஃ

 5. சில விமர்சனங்களை ஏற்க முடிகிறது. சிலவற்றை ஏற்க முடியவில்லை.

  // புத்தகக்கண்காட்சி என்ற வரம்புக்குள் மதவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை புத்தகங்களாக பார்வைக்கு வைப்பதைக் கூட சகித்துக்கொள்ளலாம் //

  அதென்ன சகித்துக் கொள்ளலாம்? உங்கள் கருத்துகளை பரப்ப புத்தககடை வைக்க உரிமை இருக்கும் போது, அவர்களுக்கு அந்த உரிமை கிடையாதா?

  அதே போல பேனர்கள் வைப்பதில் என்ன தவறு? உங்கள் கடையில் லெனின், மார்க்ஸ் படங்களோ, பதாகைகளோ வைத்தால் தடை செய்ய வேண்டுமா? இந்த படங்களை விற்பதை வேண்டுமானால் தடை செய்யலாம்.

  ஆடியோ, வீடியோ சிடி விற்பதிலும் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சில வருடங்கள் முன்பு கண்காட்சிக்கு வந்திருந்த போது, “Pebbles” போன்ற கம்பெனிகளின் குழந்தைகளுக்கான சிடிகள் நான் வாங்கியிருக்கிறேன். இவற்றை தடை செய்து விதி வகுத்திருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

  // ஊதுவத்தி, தசாங்கம், அத்தர், ஜவ்வாது, நறுமணப் பொருட்கள் என புத்தகங்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தன //

  இது நியாயமான பேச்சு. தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், “ருசியான ஐம்பது பச்சடிகள்” என புத்தகம் விற்பவர், கூடவே காய்கறிகளையும் விற்க முனையலாம்! “அற்புத அசைவ சமையல்” விற்பவர், கூடவே கசாப்பு கடை போடலாம்! எவர்சில்வர், தட்டு முட்டு சாமான்கள் விற்க தொடங்கலாம்! இப்படியே போனால், குமரன் சில்க்ஸ் ஆசாமிகள் “தையல் கற்றுக் கொள்ளுங்கள்” என ஒரு புத்தகத்தை சாம்பிளுக்கு வைத்துவிட்டு துணிக்கடை போட்டு விடுவார்கள்!

 6. புத்தகக் காட்சியா ? கடசி ஆபிஸான்னு கூட கேளு…

  புத்தகக் காட்சியா ? சோஷலிசம் பேசி அயலவன் பெருமை பேசுற கும்பல் அரங்கமான்னு கூட கேளு…

 7. வினவு? நீ பேசுவதிலிருந்து நீ வேறு மதத்தை சார்ந்தவன் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது! அதனால்தான் உன் குறிக்கோள் இந்து மதத்தை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றது! கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்கூட அவரவர்கள் மத புத்தகங்களை விற்றுக்கொண்டு தான் இருந்தனர்.. அவர்களில் சிலர் இலவசமாகவே கூட கொடுத்துக் கொண்டிருந்தனர்! அவையெல்லாம் உன் கண்களில் பட்டிருக்காது! ஒருவேளை நீ பார்த்திருந்தாலும் அதை இங்கே எழுதப்போவதும் இல்லை! ஏனென்றால் உன் குறிக்கோள் இந்து மதத்தை மட்டம் தட்டுவது மட்டுமே!

  மேலே ராசி, venkatesan, jaisankarj, சீனு… இவுங்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இதுக்கும் பதில் சொல்லு!

 8. வெறுப்பேத்துறதுக்குன்னு எழுதுற வினவு கும்பல்கள்கிட்ட தர்க்கம் பண்றது வீண். மூளைசலவை செய்யப்பட்ட மூடர்கள்.

 9. [1]This essay should be written more patently with clear sentence formation.

  [2]This essay can be written more clearly with out any urgent in the simple sentence.

  Example for confusing sentence formation is:
  சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின் கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.

 10. [1]This essay should be written more patently with clear sentence formation.

  [2]This essay can be written more clearly with out any urgent in the simple sentence.

  Example for confusing sentence is:

  சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின் கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.

 11. பிஜேபி யின் முரளீமனோகர் ஜோஸி மத்தியில் மந்தி(ரி)யாக இருந்த போது உதவாக்கரை பார்ப்பனர்களை யூ.ஜி.சி உயர் சம்பள விகிதத்தில் பதவியில் அமர்த்த பல்கலை கழகங்களில் ஜோசியத்தை ஒரு பாடமாக அறிவித்து நாட்டை (பார்ப்பனர்களை) வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல திட்டமிட்டார்.ஜோசியம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட வள்ளுவன் சாதியினரையும்,குடுகுடுப்பை ஆட்டி குறி சொல்லும் நபர்களை பள்ளி கூட அளவில் பாடம்சொல்லித் தர அனுமதிப்பாரா?அது போல புத்தக கண்காட்சியில் சாம்பிராணி பத்தி சூடம் விற்க அனுமதிப்பவர்கள் தாயத்து விற்கும் குறவர்களை அனுமதிப்பார்களா? புத்தக கண்காட்சியில் அக்கிரகாரம் நுழைந்து விட்டால் சேரிகள் உருவாக்கப்பட்டு விடும்.

 12. இசுலாமிய, கிறித்தவ நிறுவனங்கள் புத்தக வடிவம் தாண்டி வேறு ஜிகினாக்கள் காட்டாமல் அடக்கி வாசிக்கும் போது”
  கொய்யால இதுலெர்ந்தே நீ யாருக்கு சாதகமா எழதுருங்கன்னு தெரியுது வினவு!
  அய்யா குரு அவர்களே,ஏற்கனவே கேட்ட எந்த கேள்விக்காவது பதில் சொல்லிட்டு மத்தத பேசுங்க ,எதுக்கு விவாதத்தை திசை மாத்திருங்க?

 13. பார்ப்பனர்கல் என்ரால் மட்டும் கெவலமா? க்ரிச்டியனை அல்லது முச்லிமை கெவலமா பெசுஙக பார்ப்பொம். இந்துக்கல் என்ட்ரால் அலட்ஷியம். இன்டியாவில் இருந்து கொன்டு. அடக்கி வாசி. ரிஷிகல் முனிவர்கல் வழி வந்தவர்கல் ப்ராமனர்கல். ஒன்ரும் முட்டால்கல் அல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க