Thursday, June 30, 2022
முகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்

நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்

-

பசுவின் புனிதம்
பசுவின் புனிதம்

“பசுவதை தடை சட்டம் வேண்டும்.”

“பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.”

“பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.”

“பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”

மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.

இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

“பசு புனிதமானது”

“கோமாதா பால் கொடுக்கிறது”

“பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது”

“இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்”

என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.

பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா?

அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா?

பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன?

Myth of the Holy Cowஇந்தக் கேள்விகளுக்கு விடை தரும் விதமாக வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை தந்துள்ளார். மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

வேதங்கள் மற்றும் இதர பார்ப்பன வரலாறு நூல்கள், இலக்கியங்கள், பவுத்த, சமண சமய நூல்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டைய கால இந்தியாவில் மாட்டுக் கறி உண்ணுவதும், பசுவை பலியிடுவதும், குறிப்பாக பசுவின் மாமிசத்தை உண்ணுவதும், இந்து, பவுத்த, சமண சமய மக்களிடம் மிக இயல்பாக இருந்த ஒரு நிகழ்வு என்பதை பல ஆய்வுகள மூலம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். முழு முடிவுகளும், ஆதாரங்களும், வேதம் மற்றும் பிற இந்து சமய நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதவாதிகள் இந்த புத்தகத்தை வெளிவரவிடாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் இதை பதிப்பிக்க ஒப்புக் கொண்ட டெல்லியை சேர்ந்த புத்தக பதிப்பகம், மதவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது. பின்னர் இதை மேட்ரிக்ஸ் நிறுவனம் பதிப்பிக்க முன் வந்தது. ஆனால் 2001 ஆகஸ்டில் வந்த இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் மதவாதிகள். அதனால் லண்டனில் இருக்கும் வெர்சோ பதிப்பகத்தாரின் மூலம் உலகம் முழுவதும் இந்த புத்த்கம் முதலில் வெளியிடப்பட்டது. இந்து மதவெறியர் ஒருவர் டி.என். ஜாவுக்கு மரண தண்டனை அறிவித்து ‘பத்வா’ கொடுத்து விட்டார்.

வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.

the-myth-of-the-holy-cowவேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம். வேத காலத்திலேயே மருத்துவத்தை உலகிற்கு சொன்னவர் என்று சுஸ்ருதரை குறித்து பெருமை அடித்துக் கொள்ளும் இந்துத்வா கும்பல் அவரின் நூல்களை படிக்கவில்லை என்பது தான் உண்மை என்று இதிலிருந்து தெரிகிறது.

பொதுவாகவே “பசுவின் புனிதம்” புத்தகத்தில், பல ஆதாரங்கள் வேதத்திலும், இந்து மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்படும்போது. இப்படி ஆதாரங்கள் இருக்க இந்து மதத்தை பற்றி பல பொய்களை இந்துத்துவா கும்பல் பெருமையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி வருவதை என்னவென்று சொல்வது? பொதுவில் மதவெறியர்கள அனைவரும் தமது மதப் புனிதத்தை இப்படித்தான் பொய்களாலும், புனைவுகளாலும், மற்ற பிரிவினர் மீதான கசப்புணர்விலும் கட்டியமைக்கின்றனர். அதில் இந்துமதவெறிப் பாசிஸ்ட்டுகள் முன் வரிசையில் இருக்கின்றனர்.

வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளின் பொய்களை அம்பலப்படுத்த அவர்கள் முன்வைக்கும் நூல்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் உண்மைகளை ஆய்வு செய்து தொகுத்து அம்பலப்படுத்த வேண்டியது அறிவுத் துறையினர், ஆய்வாளர்களின் கடமை. அதை மக்களுக்காக செய்பவர்களே உண்மையான அறிவுஜீவிகள். அந்த வகையில் டி.என். ஜா மிக அரும்பணியை செய்திருக்கிறார்.

டி.என். ஜாவின் “பசுவின் புனிதம்” எனும் நூல் வேத காலம் முதல் மக்கள் பசுவின் மாமிசத்தை உண்டு வந்ததை மட்டும் ஆதாரத்துடன் நம் முன் அம்பலப்படுத்தவில்லை, இந்து மதவாதிகள் எப்படிப்பட்ட பொய்களை வாய் கூசாமல் சொல்லுகிறார்கள், இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் மறைத்து விட்டு தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது, என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கும் நம் நன்றிகள்.

பசுவின் புனிதம்
ஆசிரியர் : டி.என்.ஜா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் கடைகள் போக கீழைக்காற்றிலும் கிடைக்கும்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370

 1. I am not meaning any holiness to Cattle (buffalo, cow, etc).

  But they are a natural way to recycle the agricultural by-products (straw,etc) and food wastes. In natural agriculture (Read some works of Nammaalvaar), they are inseparable companions to us. It would be better if we can allow cattle to do this work for most of their life. It will balance our food cycle.

  We can discuss this more in subsequent comments.

  • I support Organic, which doesn’t mean eating cow meat is in-organic or anti-green. onthe bright side cow meat is itself organic. eating cow or any other animals won’t spoil eco cysle or food cycle. will you prove how food cycle will be imbalance if we eat cow or any other animals. and also why cow meat is inorganic?

   • Hi Thoratti,

    Thanks for the questions.

    My point is not about organic or inorganic.

    As i already said, cattle is an inseparable link in the food cycle, by consuming straw, other farm wastes, kitchen and food wastes, turning them into dung and urine (leave alone milk). The dung and urine in turn give us a natural compost to our crops there by returning the nutrients to the soil and enriching the yield. The conversion of agri and food waste to dung is a main link in our food chain. Less cattle means less dung which is affecting our food security.

    So, let me repeat. It would be better if we can allow cattle to do this work of recycling for most of their life for a balanced food cycle.

    I hope i made it clear this time.

    • ஒரே நாளில் அத்தனை கால்நடைகளையும் கொன்று தின்று விட முடியாது.அவற்றின் இனப்பெருக்க வேகத்திற்கு ஏற்பத்தான் உணவு தேவைக்கு அறுப்பதற்கு விற்கப்படும்.ஆடு,மாடு வளர்ப்போருக்கு அது செல்வம்.அதுதான் பிழைப்புக்கு வழி .இனப்பெருக்கத்தால் உபரியாக இருப்பவற்றையே அவர்கள் விற்கிறார்கள்.விவசாய தேவைகளுக்கு போக மீதி இருந்தால் மட்டுமே விவசாயி விற்கிறான்.மேலும் இனப்பெருக்கத்துக்கொ,பாலுக்கோ,உழவுக்கோ பயன்படாத வயதான மாடுகளை அடிமாடுகளாக விற்கிறார்கள்.ஆகவே இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும்.யாரும் கவலை பட வேண்டியதில்லை.பஞ்ச கவ்யம் கிடைக்காமல் போய் விடுமோ என்று கோபப்பட்டு லச்சாரில் மாட்டுதோலை உரித்ததற்காக ஐந்து தலித்களை போட்டு தள்ளியது போல் யாரும் புறப்பட்டு விட வேண்டாம்.

     • Tippu,

      //வயதான மாடுகளை அடிமாடுகளாக விற்கிறார்கள். ஆகவே இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும். யாரும் கவலை பட வேண்டியதில்லை//

      Not only old cattle, very young (இனப்பெருக்கத்துக்கொ, பாலுக்கோ, உழவுக்கோ பயன்படாத) male cattle are regulary slaughtered. I won’t blame butchers at all. Due to tractors and artificial insemination, farmers don’t want these male calves. Chemical fertilizers promoted by Capitalism have made the farmers to ignore dung. This is the picture both in East and West. This is an error whose side-effects will be costly on near future generations. I wish the current system changes to sustainable system before it is too late.

      //லச்சாரில் மாட்டுதோலை உரித்ததற்காக ஐந்து தலித்களை போட்டு தள்ளியது//

      I strongly condemn this barbarity.

 2. மிஸ்டர் யுனிவர்ஸல், மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல, இக்கால பார்ப்பனர்களும் முன்னாளில் கறி சாப்பிட்டே வந்தனர் என்பதுதான் புத்தகம் மற்றும் கட்டுரையின் செய்தி. விவசாயம், சைவம் உணவு சிறந்தது என்பதெல்லாம் வேறு விடையங்கள்

  மேலும் ஒரு சைவ அன்பரிடம் இந்த பதிவை காட்டிய போது அவர் சொன்னார் : சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைக்கு நிறைய பொருட்கள் உள்ளன : உதாரண்த்திற்கு மகாபாரத்தில் துரோணரைக் கொல்ல, அஸ்வத்தாமன் (துரோணரின் மகன், யானை) இறந்தான் என்று இரு பொருளில் சொல்லியதை உதாரணமாகச் சொல்கின்றார், விடயம் தெரிந்த யாராவது எடுத்து சொல்லி விளக்கினால் வாதத்திற்கு நன்றாக இருக்கும்.

  • [1]எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் “(2 .5 . 2 )என்று “அஷ்டகா விதானம்” சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க …பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது!

   [2]இ ந்து மத, பார்பன வேதங்களில் “பசு மாமிசம்” ,குடிப்பழக்கம் (சுராபானம் , சோம பானம்) கண்டிப்பாக அனுமதிக்கப்படுகிறது.

   ஆதாரம்:

   ……..”மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது” என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்!

   • “A java script on this page is causing too many windows to open. If it continues to run ,your computer may become unresponsive. Do you want to abort the script?
    Note : Even you press “Yes” the script will continue to run.”

    [Yes] [No]

    • அம்பி,

     உங்கள் “கணினி ஒப்புமை” நய்யாடி நயம் மிக்க அழகு! மற்றவர்களுக்கு”ம்” புரியுமா ?

     Others pls refer my comment

     No UB Sir,

     I am only referring Thiru Ampi.
     Most of my comments are from old comments in the essay..

     https://www.vinavu.com/2013/10/22/gujarat-cattle-matter-more-than-people/

     //I think you address me here, as you use the word ‘cycle’ that i have used and pose the question கிழட்டு பசுவை என்ன செய்ய?//

     அன்புடன் ,
     கி.செந்தில்குமரன்

  • Dear vinavu Readers,

   எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?

   தமிழ்நாடு
   —————–
   தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சட்டம் 1958:

   அனைத்து வயது எருமைகள் ; எருதுகள் ,பசுக்கள் , காளைகள் வயது 10 ஆண்டுகலுக்கு மேல் இருந்து , வேலை மற்றும் இனப்பெருக்கத்திற்கான தகுதி பெறாத அல்லது நிரந்தரமாக வேலை செய்ய முடியாத மற்றும் காயம் குறைபாடு அல்லது எந்த தீரா நோய் காரணமாக இனப்பெருக்கத்திற்கான திறன் இல்லதாது எனில் …..

   நாம் அவற்றை உணவு மற்றும் எந்த வேறு தேவைக்கும் Industrial use பயன்படுத்தலாம்!!!!

   குஜராத்
   ————-
   மும்பை விலங்கு பாதுகாப்பு சட்டம் 1954:

   குஜராதில் மாநில கால்நடை படுகொலை , மாடுகள் படுகொலை , மாடுகள் , எருதுகள் மற்றும் எருதுகள் மற்றும் கன்றுகளுக்கு “முற்றிலும்” தடைசெய்யப்பட்டுள்ளது . எருமைகள் படுகொலை சில நிபந்தனைகளை அனுமதிக்கப்பட்டது

   எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?

   அன்புடன் ,
   கி.செந்தில் குமரன்

  • Dear vinavu friends,

   [1]இந்தியாவில் , 2012 ல் மாட்டுக்கறி 3,643 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி!!!

   [2]1,963 மில்லியன் மெட்ரிக் டன் உள்நாட்டில் விற்பனை !!!!

   [3]மற்றும் 1,680 மில்லியன் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது.

   [4] இந்தியாவின் மாட்டிறைச்சி உள்நாட்டு நுகர்வு 7 வது, மாட்டிறைச்சி உற்பத்தியில் உலகின் 5 வது மற்றும்

   [5]இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதி ல் 1 வது இடத்தில்.

   [6]குஜராத்தில் “மாட்டு இறைச்சி தடை” செயல்படுத்தும் “அறிவாளி மோடி” தனது இந்து சமய நம்பிக்கையின் அடிப்படையில் இதையெல்லாம் நிறுத்த முடிமா ?

   அன்புடன் ,
   கி.செந்தில் குமரன்

  • மகபாரதத்தில் அசுவதாமன் எனும் சொல்லுக்கு இரண்டு பொருள் இல்லை. அசுவதமான எனும் யானை இறந்த்து என்று சொல்லும்போது. எனும் யானை என்ற சொல் வருவத்ற்குள் கிருணன் வஞ்சகமாக சங்கை ஊதிவிட்டான்.அத்னால் துரோணர் குழம்பினார்.. சம்ஸ்கிரதத்திலொரு வார்த்தைக்கு இரண்டு பொருள் என்றாலும், நூலில் பல ஸ்லோகங்கள் முழுமையாக ஆய்வு செய்யபட்டு இரண்டு வார்த்தைகளின் பொருட்கள வந்தால் எது சரியானதாக் இருக்கும் எனவும் கவந்த்தில் கொள்ளபட்டுள்ளது

  • ஆதவன்,

   மிஸ்டர் யுனிவர்ஸல் என்று என்னைத்தான் விழிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

   எனது கருத்துக்கு தொடர்பில்லாமல் ஏதோ எழுதியிருக்கிறீர்கள்.

   //மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல//

   நான் நன்கு அறிவேன். அவர்கள் இறந்து போன கால்நடைகளையே உணவாகக் கொண்டனர். புத்தரின் உன்னத வழியில் அவர்கள் மற்றவர்களை சுரண்டுவதற்கோ ஏய்ப்பதற்கோ மறுத்தவர்கள். அதனாலேயே மேன்மேலும் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்க்கை நெறி முறையை விட சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை.

 3. நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு.

  மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு.

  இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
  சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?

  மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!

  மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

 4. இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.

  இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
  ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

 5. நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா?

  But India is a secular state. We should not do this!!!

 6. உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
  —————————————————————————————

  என் அன்பு தம்பி அம்பி ,
  நமக்குள் உள்ள ஒரே முரண்….கிழட்டு பசுவை என்ன செய்ய?
  கிழட்டு பசுவை B 12 உயிர்ச்சத்து[vitamin] மூலப்பொருள் [Raw material] ஆக்கலாமா ?
  உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

  கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டால் நமக்கு பி 12 உரமாகும்!!
  கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்தால் தாவரத்துக்கு எறு ஆகும் !!!
  தாவரத்தை நீயும் , பசுவின் இறைச்சிஐ நானும் வாயால் தானே உண்கிறோம்
  உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

  நீ உன் வழக்க படி கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்து …. B 12 ஊசி ஏற்றிகொள்!!
  நான் என் வழக்க படி கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டு B 12அய் செறித்து ஏற்றிகொள்கின்றேன்!!!
  நான் உன் பண்பாட்டில் தலைஇட மாட்டேன் ! நீயும் என் பண்பாட்டில் தலைஇடாதே!!!!
  உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

  பல மொழி , பல இனம் ,பல மதம் இந்த நாடு
  ஒத்திசைவு சமநிலையில்[harmonic balance] இருக்க…
  நாம் மற்றவர் முறைக்கும் இடம் கொடுப்போம்
  உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

  அன்புடன் ,
  கி.செந்தில் குமரன்

 7. என் அன்பு தம்பி அம்பி ,

  மாட்டு மந்திரம் [cow magic]
  ————-

  ஓடி விளையடு பாப்பா
  பால் குடித்து புரதம் ஏற்று பாப்பா !
  பால் தரும் கல்சியம்-பாப்பா எலும்பு,பல் வளர்திடும்!!
  கன்றுக்குட்டியையும் கொஞ்சம் குடிக்கவிடு பாப்பா!!!.//

  ஓடி விளையடு பாப்பா
  பசு ஈன்ற கன்றோடு!
  கன்றை குளிப்பாடி-மீண்டும் பால் குடித்து அறிவை வளர்திடு பாப்பா
  அடிக்கடி பால் குடிப்பது ஒரு வகையில் நல்லதுதான் பசுவும் கன்றும் என்ன நினைத்துக் கொள்ளுமோ//

  ஓடி விளையடு பாப்பா
  பசும் பாலை அப்பாவுக்கு கொடு
  அப்பாவின் இரத்த அழுத்தம் சீராகும் !!!
  நன்று, நன்று..//

  ஓடி விளையடு பாப்பா
  ஓடிய ஓட்டததில் நீ வளர்ந்தால்
  பசுவிற்கும் வயது ஆகும் அல்லவா!!
  கட்டாயமாக பாப்பாவுக்கும் பசுவுக்கும் வயதாகும்…..//

  ஓடி விளையடு பாப்பா
  கிழட்டு பசுவை என்ன செய்ய?
  நீ கிழட்டு பசுவை என்ன செய்வாய் ?
  தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதாதா..//

  ஓடி விளையடு பாப்பா
  கிழட்டு பசுவை–ரோட்டில் விட்டால் பஸ் மோதும்
  ட்ரக்க்ல் விட்டால் ரயில் மோதும்
  பாப்பா ஏன் பசுவை ரோட்டில்-[ட்ரக்க்ல்] விடவேண்டும்..//

  //நம்ம பாப்பா அடிக்கடி சாப்பிடும்போதெல்லாம்…
  அந்த பசுவுக்கும் நாலு கைப்பிடி வைக்கோலைப் போட்டால்
  அதுவும் அசை போட்டுக் கொண்டு,
  ஓடி விளையாட முடியாவிட்டாலும், தேமே என்று இருக்குமே..//

  ஓடி விளையடு பாப்பா
  கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு !!
  கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு-அது
  உன் குழதைக்கும் பி 12 உரமாகும் !!!!

  //பாப்பா, உன் பாப்பாவுக்கு பி12 வேணும்னா ஊசி போட்டுக்கோ பாப்பா.. பால் கொடுத்து, கூட விளையாடிய பசுவை பி12-க்காக நீ அடித்துத் தின்றால், நாளை உன் பாப்பா, தேவைப்பட்டால் உன் கிட்னியை உருவத் தயங்காது பாப்பா.. பெரிய பாப்பா.. இப்போதாவது நான் நான் என்று ஓடாமல் கொஞ்சம் உக்காந்து யோசி பாப்பா.. என் செல்லப் பாப்பா..// Ampi said

  பாப்பாவின் தொப்புல் கொடியை
  பாதுகாத்தல்-செல் சிகிச்சை முறையில் [stem cell therapy]
  சிறுநீரக செயலிழப்பை
  சரி செய்துகொள்லுமே பாப்பா!
  அம்மாவின் கிட்னியை ஏன் உருவ போவுது பாப்பா!!

  பாப்பாவும், அம்மாவும் இன்னும் அருந்தும்
  அனைத்து இரும்பு டானிக்லும் மாட்டின் இறைச்சியின் [ஈரல்] b12 vitamin
  தான் உள்ளது !!!

  அன்புடன் ,
  கி.செந்தில் குமரன்

  நன்றி:

  இந்த கவிதை சிறப்பு அடைய செய்த திரு என் அன்பு தம்பி அம்பி அவர்களுக்கு

 8. நாங்க என்ன மாட்டையும், யானையையும்,குதிரையையும் “அஸ்வமேத யாகம் நெருப்பிளா” போட்டோம் !!!
  ———————————————————————————————-
  குறிப்பு:

  ஏன் அக்னிப் புகை…? பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

  “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

  இரவு இந்த கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
  ———————————————————————————————

  வயீது பசிக்கா தானே மாட்டை சாப்பிடுகிறேன்.

  மாட்டின் இறைச்சி பாவம் என்றால் …

  மாட்டின் பால் மட்டும் புனிதமா !!!

  அன்புடன்,

  கி.செந்தில்குமரன்

 9. Dear Vinavu Readers,

  [1]இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
  ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

  [2]இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.

  [3]நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு பழக்கத்தை உங்கலுக்காக தடை செய்ய விரும்பினால்,நாம் எப்படி மற்ற மக்களையும் கட்டாயப்படுத்த முடியும்? நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு அல்லவா !!

  [4] மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!

  [5]நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா? சட்ட மோதல்[conflict of law] ஏற்படும் அல்லவா ?

  [6]இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இத்தனை இனம் ,மதம் ,மொழி பேசும் மக்கள் உள்ளார்களா ? இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
  சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?

  [7] இவை என் சிந்தனை மட்டும் அல்ல, ஆனால் என் ஆழ்ந்த கவலையும் தான்.இந்தியாவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் மதம் சார்ந்த போர்களும்- படுகொலைகளும் ,இன மோதல்களும் மிக்க அச்சத்தை எனக்கு உண்டாகுகிறது.

  அன்புடன்,

  கி.செந்தில்குமரன்

 10. இதை போல் முஸ்லீம்கள் எங்கெல்லாம் பன்றி கறி சாப்பிடுகிறார்கள் என்று எவனாவது எழுதினால், அது பற்றியும் வினவு கட்டுரை வெளியிடுமா?? பேடித்தனமான கட்டுரை…

 11. பன்றி இறைச்சி கொலஸ்டரோல்இல்லாத மிகவும் நல்ல உணவு, மேலைநாட்டவர்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை, அனைவரும் உண்ணுகிறார்கள். பண்டைய எகிப்தியர்கள் பன்றி இறைச்சியை கடவுளுக்குக்குக் கூடப் பலி கொடுத்தனர். பலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், துருக்கியிலும் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் வளர்ப்புப் பன்றிகளின் (domesticated pigs) எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனால் இக்கால அரபுக்களின் முன்னோர்கள் பன்றியை உணவாக உண்டனர் என்பது தெரிகிறது, அதனால் முஸ்லீம்களும் பன்றியை உண்பதில் என்ன தவறு என்று, யாராவது புத்தகம் எழுதி வெளியிட்டால் அது எவ்வளவு நாகரீகமற்றதும், முஸ்லீம்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் செயலோ அது போன்றது தான், இந்துக்களின் முன்னோர்கள் எல்லாம் மாட்டிறைச்சி உண்டார்கள் அதனால் இப்பொழுது மட்டும், இந்துக்கள் பசுவைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்றால் என்ன என்பதும்.

  • வியாசன் ,

   என்ன சொல்ல வருகிறீர்கள் ?

   மாட்டு கறி தின்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா ?

   இந்துக்களின் முன்னோர்கள் யாருன்னு சொன்னா ரொம்ப புண்ணியமா போய்டும்..

  • பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்துக்கள் என்று சொல்கிறீர்கள் இல்லையா வியாசன்? மேலும் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் உண்பதில்லையா கூடவே பீருடன்.

   • சைவ(தாவரவுணவு)உணவை மட்டும் ஒவ்வொரு நாளும் உண்ணும் பார்ப்பனர்களல்லாத இந்துக்கள் இலங்கையில் குறைவாக இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளனர். கோழியிறைச்சியை விரும்பியுண்ணும் எத்தனையோ தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மேலைநாடுகளில் உள்ளனர். நான் கூறுவதெல்லாம், இந்துமத அடிப்படையில் அதாவது மத நம்பிக்கையின் அடிப்படையில், மாட்டைப் புனிதமானதாகக் கருதி அதைக் கொன்று தின்னாதது மட்டுமன்றி, வேறு உயிர்களைக் கொல்வதையும் தவிர்த்து, சைவ உணவை மட்டும் உண்ணும் இந்துக்களை Orthodox இந்துக்கள் என அழைக்கலாம் என்பது தான்.

    மாடு, பன்றி எல்லாவற்றையும் உண்ணும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள், அப்படி மீன், இறைச்சி வகைகளை உண்டிருந்தால் அந்த நாளில் எந்தக் கோயிலுக்குக் கிட்டவும் போக மாட்டார்கள். அதாவது விலங்குணவை உண்டதால், தமக்கு தீட்டுப்பட்டு விட்டதாக அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழர்கள் எவருமே மீன், இறைச்சி போன்ற எந்த உணவை உண்டாலும் அடுத்த நாள் குளித்து முழுகிய பின்பு தான் கோயிலுக்குள் நுழைவார்கள். தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் கூட கோயில்களில் தேவாரம் பாடப்படுவதைக் காண்பது அரிது. ஆனால், தமது வீட்டில் நடக்கும் நல்லது, கேட்டது எல்லாவற்றுக்கும் தேவாரம் பாடும் வழக்கம் ஈழத்தமிழர்களிடமுண்டு. ஆனால் ஒருவர் மீன், இறைச்சி சாப்பிட்டிருந்தால், யாரும் பாடச் சொல்லிக் கேட்டாலும் கூட, இன்றைக்கு நான் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்று கூறி, தேவாரம் பாட மறுத்து விடுவார்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள். அதாவது மச்சம் (மீன்/இறைச்சி வகை) சாப்பிட்டதால், அவர் தீட்டுப்பட்டு விட்டார், (அந்த தீட்டுப்பட்ட வாயால், புனிதமான தேவாரங்களைப் பாடக் கூடாது,) அதனால் ஐயரையே தேவாரம் பாடச் சொல்லுங்கள் என்று கூறியதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

    அதிலும் விரத காலங்களில் அல்லது அவரவர்களின் ஊர்க்கோயிலில் கொடியேற்றம் தொடங்க சில நாட்களுக்கு முன்பே, யாழ்ப்பாண வெள்ளாளர்கள் தமது, மீன், இறைச்சி சமைத்த சட்டி பானைகளை எல்லாம், ஒதுக்கி வைத்து விட்டு, மரக்கறி உணவு மட்டும் சமைக்கவென அவர்கள் வைத்திருக்கும் பண்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்து அல்லது புதிதாக வாங்கி சமையல் தொடங்கி விடுவார்கள். கத்தி, கரண்டி எல்லாவற்றிலும் கூட நுணுக்கம் பார்ப்பார்கள். உதாரணமாக, நல்லூர் முருகனின் திருவிழா நாட்களிலும், புரட்டாதிச்சனிக்கிழமை போன்ற விரத நாட்களிலும் எங்களின் வீட்டில், கடையில் வாங்கிய Vegetarian Pizza வைக் கூட வீட்டுக்குள் கொண்டு வர யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படியான, பழக்க வழக்கங்களை, பல யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளில் கூட இன்றும் கைவிடாமலிருக்கின்றனர். அதனால், யாழ்ப்பாண வெள்ளாளர்கள் மாடு, பன்றி போன்றவற்றை வெளிநாடுகளில் உண்டாலும், அது சைவத்துக்கு எதிரானது, அப்படியான செயல் தவிர்க்க வேண்டியவை என்று ஒப்புக் கொள்கின்றனர், அதனால் தான் அந்த நாட்களில் அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. கோயிலுக்குப் போகும் நாட்களில் குளித்து, முழுகி, சுத்தமான ஆடையணிந்து, கோயிலுக்குப் போய் விட்டு வந்து தான் உணவருந்துவார்கள்

    • இதெல்லாம் ஒரு பெருமையா மிஸ்டர் வியாசன். ஐரோப்பாவில் இருந்தாலும் சாதிவெறி போகவில்லை. பார்ப்பனனை விட கேவலமான சாதிவெறியுடன் நடந்துகொள்ளும் யாழ்ப்பாண வெள்ளாள சாதி அதை பெருமைபீற்றித்திரிவது மனிதன் என்கிற வகையில் எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

     விசயம் இது தான், ஐரோப்பாவில் யாழ்ப்பாணத்துக்காரர்கள் மாட்டு இறச்சியும், பன்றி இறச்சியும் உண்கிறார்களா இல்லையா. அவ்வாறு உண்பவர்களை உங்களுடைய இந்து சட்டப்படி என்ன செய்யப்போகிறீர்கள்? மேலும் இந்துக்கள் என்று அறியப்படும் பெரும்பாண்மையான மக்களும் இந்த இறச்சி வகைகளை உண்கின்றனர் அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

     • இதென்னடா அநியாயமா இருக்கிறது. கேள்வியைக் கேட்கும் போது “யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் உண்பதில்லையா” என்று அந்தக் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் குறிப்பிட்டுக் கேள்வியைக் கேட்டார் திப்புசுல்தான். அதற்கு பதிலை விளக்கமாகக் கொடுத்ததும், நான் சாதிப் பெருமை பேசுவதாக கூச்சலிடுகிறார். என்னுடைய பதிலில் எங்கே சாதி வெறியிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை அப்படியானால், அவர் கேட்ட கேள்வியிலேயே சாதியைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். சாதியைக் குறிப்பிட்டு அவர் கேட்ட கேள்வியைப் பார்த்த போது எனக்கும் தான் அசிங்கமாக இருந்தது. ஏதோ, அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான், அவர் கேட்ட கேள்விக்கு பதிலையளிப்போம் என்று நினைத்து பதிலெழுதினால் குய்யோ, முறையோ என்று குளறுகிறார் திப்பு. நான் எனது சாதியைப் பற்றி எங்குமே பேசியதில்லை. எனக்கு சாதியில் நம்பிக்கையுமில்லை, சாதிப்பெருமையை இணையத்தளங்களில் பீற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்குக் கிடையாது. கேட்கும் கேள்வியைப் பொறுத்து தான் எனது விடையும் அமையும்.

      அதை விட, விலங்குணவை உண்டிருந்தால், கோயிலுக்குப் போகாமலிருப்பதும், கோயில் திருவிழாக் காலங்களில் அல்லது விரத காலங்களில் மிகவும் தீவிரமான வகையில் சைவ உணவைக் கடைப்பிடிப்பதும், சமைக்கும் பாத்திரங்களைக் கூட மாமிச உணவின் தீட்டுப்படாததாக வைத்திருப்பதும், யாழ்ப்பாண வெள்ளாளர்களுடைய வழக்கம் மட்டுமல்ல, ஈழத்தில் தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கும், அதாவது எல்லா இந்துக்களுக்கும் அந்த வழக்கம் பொதுவானது, அப்படியான விரத காலங்களில் யாழ்ப்பாண வெள்ளாளர் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து “தலித்”துகளும் கூட மாட்டையுண்ணும் சோனக(முஸ்லீம்) வீடுகளில் தண்ணி கூட வாங்கிக் குடிக்க மாட்டார்கள். அதாவது, இந்த வழக்கம் சாதிக்கப்பாற்பட்டது. ஈழத்துச் சைவத்தின் அடிப்படையில், எப்பொழுதும் கொல்லாமை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது விட்டாலும் கூட, குறைந்த பட்சம் புண்ணியகாலங்களிலாவது அதைக் கடைப்பிடிப்பது என்பது ஈழத்துச் சைவர்கள் அனைவருக்கும் பொதுவான, சாதிக்கப்பாற்பட்ட, வழக்கமாகும்.

      //அவ்வாறு உண்பவர்களை உங்களுடைய இந்து சட்டப்படி என்ன செய்யப்போகிறீர்கள்? மேலும் இந்துக்கள் என்று அறியப்படும் பெரும்பாண்மையான மக்களும் இந்த இறச்சி வகைகளை உண்கின்றனர் அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?///

      ஒன்றும் செய்யப்ப் போவதில்லை, ஒன்றும் செய்யவும் முடியாது. இந்துமதத்தில் பாட்வா அறிவிக்கவும் முடியாது. ஊரிலிருந்து அல்லது கோயிலிலிருந்து ஒதுக்கி வைக்க இந்துக் கோயில்களில் ஜமாஅத்தும் கிடையாது. 🙂

      • அவலை நினைத்து உரலை இடிப்பது என்பது இதுதானோ.யாரோ கேட்ட கேள்விக்கு என்னை இழுப்பது ஏனோ.நிதானத்தில்தானே இருக்கிறீர்கள் வியாசன்.

       புலம் பெயர்தல் ,தலித்கள்,சோனகர்கள் (முஸ்லீம்கள்) என்ற சொற்கள் அடிபடுவதால் அது குறித்து ஓரிரு சொற்கள்.

       போரை சாக்கிட்டு ஈழத்து உயர்சாதியினர் பசுமையான மேய்ச்சல் நிலம் தேடி அற்ற குளத்து அறுநீர் பறவையாய் புலம் பெயர்ந்து ஓடியபோதும் அந்த மண்ணிலேயே கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள் இந்த தலித்கள்,சோனகர்கள் (முஸ்லீம்கள்) .

       • திரு. திப்பு,

        ஈழத்தில் தலித் என்ற வார்த்தை உபயோகத்தில் இல்லை. அதை நான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்காகச் ‘சும்மா’ பாவித்ததேன், ஆனால் தலித்துகளும் இலங்கைச் சோனகர்களும் “கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற உங்களின் பம்மாத்தில் எள்ளளவும் உண்மை இல்லை. தெரிந்து தான் இந்த பம்மாத்தை விடுகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. இலங்கையின் தமிழ் பேசும் சோனகர்கள் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலைகளிலும், தமிழ்ப்பெண்களின் கற்பழிப்பிலும் சிங்கள இராணுவத்துடன் இணைந்து ஈடுபட்டனர், பல தமிழ்க்கிராமங்களில் இருந்து, தமிழர்களை அடியோடு விரட்டினர், கோயில்களில் கூட தமிழர்களைப் படுகொலை செய்து, இரத்த ஆற்றை ஓடவிட்டனர், இந்த உண்மையைப் பலர் கூறத் தயங்கினாலும், உங்களைப் போன்றவர்களின் “கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற உளறலைப் பார்த்த பின்பு அதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னால் முடியவில்லை.

        ஆனால் கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற வரிகள் ஈழத்துத் தலித்துகளுக்கும் (ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கும்) சோனகர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) பொருந்தாது ஆனால் ஈழத்துத் தலித்துகளுக்கும், ஈழத்தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். இலங்கைச் சோனகர்கள் தமிழ் அவர்களின் தாய் மொழியாக இருந்தாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் ஈழத்தில் பார்ப்பனர்களும் தங்களைத் தமிழர்களாகத் தான் அடையாளப்படுத்துகிறார்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் தான், தமிழைப் பேசிக்கொண்டே தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. பார்ப்பனர்களும் கூடத்தான் தமிழீழப் போரில்போராடி தமது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். மாவைக் குமரன் போன்ற பார்ப்பன மாவீரர்கள் தமிழ் மண்ணுக்காக உயிரை நீத்தார்கள் ஆனால் எமது மொழிவழிச் சகோதரர்களாகிய இலங்கை முஸ்லீம்கள், சிங்களவருடன் இணைந்து ஈழத்தமிழர்களைக் கருவறுத்தார்கள். இன்றைக்கும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப்பெண்ளைக் கற்பழித்துக் கொலை செய்த இலங்கை இராணுவம் பார்ப்பனப் பெண்களைத் தமிழர்களல்ல என்று விட்டு வைக்கவில்லை. அவர்களும் தமிழர்கள் என்று தான் கொல்லப்பட்டனர். ஆனால் சில தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தமிழ் எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்னைப் போன்ற ஈழத்தமிழர்கள், இணையத்தளங்களில் பார்ப்பனர்களை எதிர்த்தாலும் கூட, தமிழ்நாட்டில் உள்ளது போன்ற பார்ப்பன வெறுப்பை எல்லா ஈழத்தமிழர்களிடமும் எதிர்பார்க்க முடியாது.

       • திப்பு,

        Oops..தவறு என்னுடையது தான் மன்னிக்கவும், ஆனால் “அவலை நினைத்து உரலை இடிப்பது” என்ற பழமொழியை இங்கு குறிப்பிடுவதும் பொருந்தாது. 🙂

      • பத்வா, ஜாமாத் என்றெல்லாம் பேசிவிட்டு சாதாரணமாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள ஸ்மைலி போட்டுக்கொள்றீர்கள், இது உங்களுக்குக்குள் இருக்கும் சிறுபாண்மை மதங்களின் மீதான வெறுப்புணர்வை காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் காரன் என்றால் காக்கி அரை டவுசர் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை, உங்களுக்குள்ளும் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இருக்கிறான் என்பதை நான் முன்னமே கனித்திருந்தேன், எனினும் அது இப்போது தான் அம்பலமாகியிருக்கிறது.

       உங்களை வேண்டுமானால் (உங்களை என்றால் வியாசன் என்கிற தனிநபரான உங்களை மட்டுமே குறிக்கும், உங்கள் சாதியில் உள்ள அனைவரையும் அல்ல) பார்ப்பன கும்பலோடு இந்து என்று அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். இந்துக்கள் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் கோடிக்கணக்கான தமிழ் மக்களை அவ்வாறு அழைக்காதீர்கள். எந்த அடிப்படையில் அனைவரையும் இந்து என்று வரையறுக்கிறீர்கள்?

       அவர்கள் இந்துக்கள் அல்ல,நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல நீங்களும் இந்து அல்ல, எனினும் நீங்கள் பார்ப்பன கும்பலுடன் உங்களையும் இந்து என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அது உங்களுடைய விருப்பம், ஆனால் அள் உங்களை சேர்த்துக்கொள்வார்களா இல்லையா என்பது அடுத்த விசயம்.

    • Mr, Viyasan,

     நீங்கள் யாழ்ப்பாண வெள்ளாளர்களை வைத்துக் கொண்டு எல்லா இந்துக்களைப் பற்றி எழுதுவதைப் படிக்க வாந்தி தான் வருகிறது.

     • திருவாளர் Univerbuddy,

      உங்களின் பதில்களைப் பார்க்கும் போது நீங்கள் படித்துப் பார்க்காமல் தான் பதிலெழுதுகிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு, உங்களின் இந்தப் பதிலைப் பார்த்ததும் அது உண்மை என்று தெளிவாகிறது. 🙂

 12. Hi K Senthil kumaran,

  //என் அன்பு தம்பி,//

  I think you address me here, as you use the word ‘cycle’ that i have used and pose the question கிழட்டு பசுவை என்ன செய்ய?

  I did not say don’t eat the cattle at all. The கிழட்டு cattle would only be happy to become food to you as a way of thanking you for having taken care of them for their entire productive life.

  However, ideal would be to butcher it when it has breathed its last and consume it just as dalit bretheren have been doing it for ages. Every one should emulate this kindest way of life.

 13. Mr. Selvakumar,

  //என்ன சொல்ல வருகிறீர்கள் ? மாட்டு கறி தின்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா ?///

  இக்காலத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை Orthodox Hindus என்று சொல்ல முடியாது ஆனால் நான் சொல்ல வருவதென்னவென்றால், பன்றி இறைச்சி நல்ல உணவு, முற்காலத்தில் மத்திய கிழக்கில் அரபுக்கள் கூட பன்றியை உண்டனர். ஒரு நல்ல வகையான இறைச்சியாகிய பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்று எவருமே புத்தகம் எழுதத் துணிய மாட்டார்கள். அதற்குக் காரணம், முஸ்லீம்கள் பாட்வா அறிவித்து விடுவார்கள் என்ற பயம் மட்டுமல்ல அது முஸ்லீம்களின் மனதைப் புண்படுத்தும், நாகரீகமற்ற செயலும் கூட. ஆனால் இந்துக்கள் மாடு தின்ற அக்கால வழக்கத்தையும்( அது 5000 வருடங்களுக்குமுன்பாக இருந்தாலும் பரவாயில்லை), இக்கால வழக்கத்தையும் ஒப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் புத்தகம் எழுதலாம். கேட்பார் எவரும் கிடையாது, ஏனென்றால் அதை எதிர்ப்பவர்களை, இந்துத்துவா என்று பட்டம் சூட்டி, ஒரு மூலையில் இருத்தி விடலாம் அல்லவா? அத்துடன் இந்துமதம் என்பது தனிமனித சுதந்திரத்தை மதிக்க்கும் ஒரே மதம் இந்துமதமாகத் தானிருக்க வேண்டும்.

  ///இந்துக்களின் முன்னோர்கள் யாருன்னு சொன்னா ரொம்ப புண்ணியமா போய்டும்..///

  உதாரணமாக, முஸ்லீம்களுக்கு, அவர்களுக்கு நாடு, மொழி, இன வேறுபாடு கிடையாது, யார் அல்லாவை வழிபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் முஸ்லீம்கள். அவர்களின் ஒற்றுமை அந்த அடிப்படையில் தான் உள்ளது. அதனால் தான் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் போது, ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாத தமிழ்நாட்டு முஸ்லீம்கள், பலத்தீனத்தில் ஒரு அரபுக்குழந்தையின் பல்லுடைந்தால் கூட, அதற்காக அமெரிக்காவை, இஸ்ரேலை எதிர்த்தெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஏனென்றால் அவர்களின் மொழி, இனவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களை விட, முஸ்லீம்களாகிய அரேபியர்களும், ஆபிரிக்கர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள், ஏனென்றால் அவர்கள் முஸ்லீம்கள். உதாரணமாக, அண்மையில் அமேரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தவர் பி,ஜெய்னுலாப்தீன்.

  மேலே குறிப்பிட்ட உதாரணத்திலிருந்து நான் சொல்ல வருவதென்னவென்றால், இந்துக்களின் முன்னோர்கள் யாரென்றால், முற்காலத்தில் எவர் இந்துக்கடவுள்களை வணங்கினார்களோ அவர்கள் எல்லாம், இக்கால இன, மொழி வேறுபாடற்று இந்துக்களின் முன்னோர்கள். அது இந்துமதத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு தமிழனாக இருந்தாலென்ன, தன்சானியனாக இருந்தாலென்ன வேறுபாடு கிடையாது.

  நாங்கள் தமிழர்கள் எமக்கென்று தனித்துவமான சைவ/மாலிய பாரம்பரியங்களை தமிழாக்க வேண்டும், பார்ப்பனீயத்தை(பார்ப்பனர்களையல்ல) தமிழ்நாட்டின் கோயில்களிலிருந்து அகற்றி, சாதிப்பாகுபாடற்று தமிழர்களின் முன்னோர்களின் கோயில்கள் எல்லாம் தமிழுக்கு முன்னுரிமை தரும் வகையில் தமிழாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் இந்துக்களின் முன்னோர்கள் யார் என்ற கேள்விக்குப் பதில், எவர் முற்காலத்தில் இந்துக்களாக இருந்தார்களோ, தமது உயிரையும் கொடுத்து, அன்னியர்களிடமிருந்து இந்து தர்மத்தைக் காத்தார்களோ அனைவரும் இக்கால இந்துக்களின் முன்னோர்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும். அதன் அடிப்படையில் சைவத்தைக் காத்த தமிழனாகிய யாழ்ப்பாண ஆறுமுகநாவலர், காஸ்மீரத்து பார்ப்பான் ஒருவனின் இந்து முன்னோர் ஆகிறார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன்.

  • முசுலிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை.உண்மை.அதற்காக விரும்புபவர்கள் அதை உண்பதை எதிர்ப்பதில்லை.ஆனால் மாட்டுக்கறி உண்ணாத ”இந்துக்கள்” அதை விரும்புபவர்களை உண்ண கூடாது என தடுக்கிறார்களே.ஏன்.அந்த நியாயத்தை கொஞ்சம் பொளந்து கட்டுங்களேன்.

   • திப்புகாக்கா,

    //முசுலிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை.உண்மை.அதற்காக விரும்புபவர்கள் அதை உண்பதை எதிர்ப்பதில்லை.//
    /
    இன்னொரு முஸ்லீம் பன்றியை உண்டால், நீங்கள் நிச்சயமாக அவரை எதிர்ப்பீர்கள். அவரை அருவருப்பாக பார்ப்பீர்கள். தமிழ்நாடு ஜமாஅத்துக்குத் தெரிந்தால் அவரை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பார்கள். பி.ஜெய்னுலாப்தீன் அறிந்தாரேயானால் அறம் பாடியே அவரை மவுத்தாக்கி விடுவார். 🙂

    காபீர்கள் பன்றியை உண்டால் நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதை உண்பவர்களை அருவருப்பாக பார்ப்பீர்கள், அவர்கள் சுத்தமில்லை என்று நினைத்துக் கொள்வீர்கள். அதிலும் வஹாபிஸ்டாக இருந்தால் காபீர்களின் இப்படியான பழக்கவழக்கங்களை தனிமையில் நண்பர்களுடன் பேசி உங்களின் அருவருப்பைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    இந்துக்களும், முஸ்லீம்களும், கிறித்தவர்களும் வாழும் இராமநாதபுரக் கரையோரக் கிராமங்களுக்கு முஸ்லீம் நண்பர்களுடன் போனால் அங்கு திரியும் கட்டாக்காலி பன்றிகளைக் காட்டி, பார், எவ்வளவு அசிங்கத்தை எல்லாம் உண்ணுகிறது, அதனால் தான் குர்ஆனில் பன்றியை உண்ணுவது தடுக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்லாத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்பு படுத்தி விளக்கம் எல்லாம் தருவார்கள். அதைத் தான் தலித்துக்கள் உண்ணுகிறார்கள் என்று அதையும் சுட்டிக்காட்டத் தயங்கவும் மாட்டார்கள். இப்படி எல்லாம் பேசுவதும் கூட ஒருவகையான துவேசம்/ இனவாதம் தான் என்று அவர்களிடமே நேரடியாகக் கூறுமளவுக்கு நெருக்கமான, முஸ்லீம் நண்பர்கள் எனக்கும் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம், அவர்களின் கிராமங்களுக்கும் செல்வதுண்டு, நான் பன்றி, மாடு எதுவும் உண்ணாததால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சனை இல்லையென்று நினைக்கிறேன், நான் பன்றியை உண்ணாததால் தான், பன்றி உண்பவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னிடம் கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ///ஆனால் மாட்டுக்கறி உண்ணாத ”இந்துக்கள்” அதை விரும்புபவர்களை உண்ண கூடாது என தடுக்கிறார்களே.ஏன்.அந்த நியாயத்தை கொஞ்சம் பொளந்து கட்டுங்களேன்.///

    உங்களுக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் பன்றியைத் தின்றால் நீங்கள் எப்படி புத்திசொல்லித் தடுப்பீர்களோ அதைத்தான் மாடு தின்னும் இந்துக்களை இந்தியாவிலுள்ள இந்துக்கள் தடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஈழத்தில் மாட்டிறைச்சியை உண்பதற்கு எதிர்ப்பெல்லாம் கிடையாது. ஈழத்துச் சைவர்கள் மாடு, மீன், அல்லது எந்த மாமிச உணவையுண்டாலும் அன்று கோயிலுக்குப் போக மாட்டார்களே தவிர, கோயிலுக்குப் போகாத நாளில் எதை விரும்பினாலும் உண்ணலாம். ஒருவர் மாட்டிறைச்சி உண்ணாதததால் அவர் உயர்ந்த இந்து, உண்பவர்கள் எல்லாம் தாழ்ந்த இந்து என்றெல்லாம் கிடையாது. உணவில் பாகுபாடெல்லாம் இலங்கையில் கிடையாது. நான் மாடு, பன்றியை உண்ணாததற்கு இந்து மதம் காரணமல்ல. மேலைநாடுகளில் மிருகங்களை வரிசை வரிசையாக சித்திரவதை செய்து கொல்வதையும்,தலை வெட்டுப்பட்ட பின்பும் அவை துடி துடித்துக் கொண்டு கிடப்பதையும் நேரில் ஒருமுறை பார்த்தததால் தான் நான் மீனைத் தவிர எந்த இறைச்சியையும் உண்பதில்லை. பெரும்பான்மை யாழ்ப்பாணச் சைவர்களுக்கு மீன் அல்லது இறைச்சி இல்லாமல் சோறு இறங்காது. விரத நாட்களில் அல்லது கோயிலுக்குப் போகும் நாட்களில் மட்டும் தான் மரக்கறி உணவை உண்பது வழக்கம். அதனால் மற்றவர்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்கும் இந்திய இந்துக்களிடம் தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும், அவர்களால் தான் உங்களைப் போல் இந்த விடயத்தைப் பொளந்து கட்ட முடியும்.

    • வியாசன்,
     இணைய தள விவாதங்களில் பொதுவாக அனைவரும் சரிபார்க்க கூடிய தகவல்களை தந்து விவாதம் செய்யுங்கள்.எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று சொல்லி வாதிட்டால் மெய்ப்பிக்க சொல்லி கேட்க வேண்டியிருக்கிறது.அவனடி என்பவரை அப்படி கேட்டபோது ஏதோ அவரை கொலை செய்வதற்காக கேட்பது போல் குற்றம் சொல்லி தப்பித்துக் கொண்டார்.

     \\மேலைநாடுகளில் மிருகங்களை வரிசை வரிசையாக சித்திரவதை செய்து கொல்வதையும்,தலை வெட்டுப்பட்ட பின்பும் அவை துடி துடித்துக் கொண்டு கிடப்பதையும் நேரில் ஒருமுறை பார்த்தததால் தான் நான் மீனைத் தவிர எந்த இறைச்சியையும் உண்பதில்லை.//

     வலையில் சிக்கிய மீன்கள் மூச்சுக்காற்றுக்கு தவி தவித்து துள்ளித்துடித்து சாகும்.அப்போது இந்த இரக்க உணர்ச்சி கீழை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போய் விட்டதோ.

     • கடற்கரையில் நின்று மீன்கள் பிடித்து தொகை தொகையாக, உயிரோடு பிடித்து வரப்படுவதையோ அல்லது துடி துடித்துக் கொண்டு சாவதையோ நான் இதுவரை பார்த்ததில்லை. அல்லது மீன்கள் துடி துடித்துக் கொண்டு சாவது என்னையறியாமலே என்னிடம் ஒரு அருவருப்பையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் அதன் கருத்தாகும். அப்படியான அருவருப்பை பார்க்க நேரிடும் என்பதால் தான், நான் சீனர்களின் கடைகளுக்குப் போக விரும்புவதில்லை, அதை விட,அந்த அருவருப்பினால் தான் அங்கு அப்படிப் போக நேர்ந்தாலும், மீன் விற்கும் பகுதிகளுக்குப் போவதில்லை. அப்படி மீன்கள் துடி துடித்துச் சாவதை நான் பார்த்தாலும் கூட, மிருகங்கள், கம்பிகளில் கொழுவப்பட்டு வந்து, வரிசையாக, வந்து விழுந்தது, துடி துடித்ததைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்வும், அருவருப்பும் மீன்கள் சாவதைப் பார்க்கும் போது வராமல் கூட போகலாம். அந்த உதாரணத்தை நான் கூறியதற்குக் காரணம், நான் இறைச்சி சாப்பிடுவதில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. மத அடிப்படையில் அல்லாமல் கூட, பலர் இறைச்சி உண்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டத் தான். தயவு செய்து எந்த சந்தர்ப்பத்ததில் கருத்துக்கள் கூறப்பட்டன என்பதைப் பார்த்த பின்னர் கருத்து எழுதினால், மீண்டும் இப்படி பதிலெழுதி நேரத்தை வீணாக்குவதை மற்றவர்கள் தவிர்க்கலாம். மீன், இறைச்சி சாப்பிடாதவர்கள் சமுதாயத்தில் ஏதோ உயர்ந்தவர்கள், அல்லது அவர்கள் பெரிய சாமியார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு (எங்களின் குடும்பம் உட்பட)மீன், இறைச்சி இல்லாமல் (வாரத்தில் ஒரு சில நாட்களைத் தவிர) சோறு சாப்பிட மாட்டார்கள்

      //இணைய தள விவாதங்களில் பொதுவாக அனைவரும் சரிபார்க்க கூடிய தகவல்களை தந்து விவாதம் செய்யுங்கள்.எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று சொல்லி வாதிட்டால் மெய்ப்பிக்க சொல்லி கேட்க வேண்டியிருக்கிறது.///

      உங்களின் கேள்வி எனக்குப் புரியவில்லை, முஸ்லீம்களைப் பற்றிய உண்மையைக் கூறியது கசக்கிறது போல் தெரிகிறது. என்னுடைய அனுபவத்தைத் தான் நான் குறிப்பிட முடியும், உங்களைப் போன்றவர்கள் நம்ப வேண்டுமென்பதற்காக இணையத்தளங்களில், நண்பர்களின் பெயர், முகவரி எல்லாம் தந்தா நிரூபிக்க முடியும். பேசப்படும் விடயத்துக்கு அமைய, எனக்கும் ஏதாவது அனுபவங்கள், சம்பவங்கள் நடந்தால் அதைக் குறிப்பிடுவது சாதாரணமானதொன்று. உங்களைப் போன்ற நீதிபதிகள் வருவார்கள், அவர்களைத் திருப்திப்படுத்த, அவர்களின் குறுக்கு விசாரணையில் இப்படியான கேள்விகளைக் கேட்பார்கள் என நினைத்து, விசாரணைக்கு ஏற்றவாறு யாரும் பதிலெழுதுவதில்லை. 🙂

      • விவாதங்களில் நீங்கள் சொல்லும் தகவல்கள் உங்களை சாராமல் சரி பார்க்க கூடிய வகையில் இருக்க வேண்டும்.அப்போதுதான் அதன் உண்மை தன்மை உறுதிப்படும்.மாறாக எனக்கு தெரியும், நானே பார்த்தேன் என்பன போன்ற வாதங்கள் வாதியும் நானே நீதிபதியும் நானே என்ற வகையில் சேரும்.

       மீன் இறைச்சிக்கு இவ்வளவு சுற்றி வளைத்து விளக்கம் சொல்லி ஒரு பயனுமில்லை.வரிசையாக ஆடு மாடுகள் வெட்டுண்டு கிடப்பதை பார்த்ததிலிருந்து அவ்விறைச்சியை துறந்த கருணாமூர்த்தியான நீங்கள் மீன்கள் சாவதை பார்த்ததில்லை,அந்த இடங்களுக்கு போக மாட்டேன் அதனால் மீன் தின்பேன் எனபது நகைப்புக்குரியது.மனிதனுக்கு அழகே பகுத்தறியும் திறன் தான்.நாம் சாப்பிடும் உணவு எப்படி வந்தது என்று கூட எண்ணிப்பார்க்காமல்,எண்ணிப்பார்க்கவும் மாட்டேன் எனபது ஒரு கருணாமூர்த்திக்கு அழகில்லையே.

       உண்மையை சொன்னால் உயிர்கள் மீது கருணையால் அசைவம் உண்பதில்லை என்பதே கேலிக்கூத்தானது.ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் உயிர்களை அழித்து உணவாக்கி உண்பதால்தான் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உயிர் தரித்திருக்கிறது.அசைவம் உண்ண விருப்பமில்லையா.தாராளமாக உண்ணாதிருங்கள்.ஆனால் அது கருணையினால் என்று சொல்லி உண்பவர்களை இரக்கமற்றவர்கள் என சொல்லாமல் சொல்லி இழிவு படுத்தாதீர்கள்.

       • //உண்மையை சொன்னால் உயிர்கள் மீது கருணையால் அசைவம் உண்பதில்லை என்பதே கேலிக்கூத்தானது.ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் உயிர்களை அழித்து உணவாக்கி உண்பதால்தான் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உயிர் தரித்திருக்கிறது.அசைவம் உண்ண விருப்பமில்லையா.தாராளமாக உண்ணாதிருங்கள்.ஆனால் அது கருணையினால் என்று சொல்லி உண்பவர்களை இரக்கமற்றவர்கள் என சொல்லாமல் சொல்லி இழிவு படுத்தாதீர்கள்.//

        திப்பு,

        உங்களுக்கும், வியாசருக்கும் இடையே நடக்கும் இவ்விவாதத்தில் மேலே நீங்கள் கூறியவை ஒரு வகையில் சரி.. ஆனால் ஆடு, கோழி, மீன் போன்ற பிற உயிர்களிடம் தோன்றாத கருணை பசு,காளைகளிடம் மட்டும் தோன்றுவது ஏன் என்பதற்கு இந்து மதத்தினை பெரிதாக கட்டியமைத்த அதன் மூல கூறுகளான விவசாய, மேய்ச்சல் குடிகளின் வாழ்வியலை மீள்பார்வை செய்ய வேண்டியிருக்கும்..

        சிந்து, யமுனை, கங்கை, கோதவரி, காவிரி, வைகை முதலான நதிகளால் வளமூட்டப்பட்ட மருத நிலங்களின் குடிகளான வேளாளர்களும் அவர்களைச் சார்ந்த குடிகளும், இந்தியா முழுவதுமுள்ள காடுகளான முல்லைத் திணையின் யாதவர்களும் அவர்களைச் சார்ந்த குடிகளும் இந்து மதத்தின் மிக வலிமையான அடிப்படைக் கட்டுமானங்கள்.. சமயமாக்கல்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பழங்குடி தெய்வங்களில் பெரும்பான்மை இவ்விரு திணை மக்களைச் சார்ந்தவையே என்பதை புராணங்களில் வரும் அவற்றின் கதைகளிலிருந்தே அறிய முடியும்.. வேளாண், யாதவக் குடிகளுக்கும் பசு,காளைகளுக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் புராணத் தொகுப்பு காலங்களுக்கும், சமண, பவுத்த சமயங்களுக்கும் முன்பிருந்தே இருந்து வரும் ஒன்று.. இவ்விலங்குகள் எவ்வாறு தொன்மை தொட்டே அவர்களின் அன்றாட வாழ்வுடனும், தொன்மங்களிலும் பிணைந்தவை என்பதை இலக்கியங்களும், புராணங்களும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும்.. பின்பு சமயங்கள் எழுந்து, மருத,முல்லை நில மக்களை சமய ரீதியாக, மத ரீதியாக ஒருங்கிணைத்தபோது இந்த பிணைப்பும் முக்கியத்துவம் பெற்றது இயல்பே.. வேளாளர்கள், யாதவர்கள், இவர்களை சார்ந்த குடிகள் (பார்ப்பனர்கள்,வணிகர்கள்,கம்மாளர்கள்,கலைஞர்கள் உட்பட) பசு, காளைகளை அடித்து உண்பதில் ஒரு மனவிலக்கம் கொண்டிருப்பது, புனிதத்தன்மை,கருணை முதலானவற்றையும் தாண்டி, ஒரு சமூக மனமாக கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தால்தான்.. இந்த நெருக்கம் இல்லாத ஆடு,கோழி,மீன் இவற்றின் வதை ஏற்படுத்தும் தாக்கம், ’கருணை’ ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதல்ல; இவற்றின் இறைச்சியை உண்ணத்தடுக்கும் அளவு உணர்வு பூர்வமானதுமல்ல என்பது ஒரு கசப்பான உண்மை, ஆனால் எதார்த்தமானது.. ஒரு விவசாயி தன் காயடித்த காளையிடம் கொண்டிருக்கும் அக்கறை நீங்கள் ஏற்கனவே கூறியதுதான்.. அவன் அதை அடிமாடாக சில சமயங்களில் விற்க நேர்வதற்கு பொருளாதார நிலைமைதான் காரணம்.. அவனையே அவன் மாட்டை அடித்து சாப்பிடச் சொல்லுங்கள், மாட்டான் ( அதன் விலைக்குமேல் கூடுதலாக நீங்கள் அவனுக்கு பணம் கொடுத்தாலும்).. இதனால் நீங்கள் அவனைப் பார்ப்பனீயன் என்று கூறலாம் ஆனால் பார்ப்பனீயம் தோன்றுவதற்கு முன்பிருந்தே அவன் அப்படித்தான்.. இசுலாமும், கிறித்தவமும் அவனை மாற்றக்கூடும் ஏனெனில் கடவுள் அவற்றையும் அவன் உண்பதற்காகவே படைத்தார் என்று அவனை நம்ப வைப்பதால்..

        ஆடு,கோழி,மீன் முதலானவற்றை உண்ணும் அளவு வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கிடைத்த இறந்த மாட்டின் இறைச்சியை உண்டது விருப்பத்தால் அல்ல, அது அவர்களின் தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஏழ்மை நிலை காட்டிய ஒரே வழி.. இது அவர்கள்பால் மேலும் வெறுப்புணர்ச்சியை மாட்டிறைச்சி உண்ணாதவர்களிடம் வளர்த்தது நியாயமற்றது..

       • //உண்மையை சொன்னால் உயிர்கள் மீது கருணையால் அசைவம் உண்பதில்லை என்பதே கேலிக்கூத்தானது. ///

        திரு.திப்பு,

        நான் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை என்று கூறிய காரணத்துக்கு கருணை, பொருணை என்று உங்கள் பாட்டுக்கு நீங்கள் விளக்கம் கற்பித்துக் கொள்வதைப் பார்க்க எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. உயிர்கள் மீது கருணை என்றால் நான் எல்லா உயிர்களிலும் அதாவது பாம்பு, பல்லி, பூச்சி எல்லாவற்றிலும் கருணை காட்ட வேண்டும். எனக்கு அப்படி கருணை எல்லாம் கிடையாது, அதனால் தான், மத அடிப்படை இல்லாமல் கூட சிலர் இறைச்சி உண்பதைத் தவிர்க்கலாம் என்பதற்கு, நான் இறைச்சி சாப்பிடாததைக் குறிப்பிட்ட போது, ‘உயிர்களின் மீது கருணை’ என்ற சொற்களைப் பாவிக்கவில்லை. கருணையோ அல்லது என்ன மண்ணோ, விலங்குகள் வெட்டப்படுக் கிடந்த கோலம் எனக்கு அருவருப்பைத் தந்தது, பாவமாக இருந்தது, அன்றிலிருந்து எனக்கு இறைச்சி சாப்பிட விருப்பமில்லை. அவ்வளவு தான்.

        தமிழ்நாட்டில் சில உணவகங்களைப் பார்த்தால் கூடத் தான் எனக்குச் சாப்பிட மனம் வருவதில்லை. இராமநாதபுரத்தில் ஒரு உணவகத்தில் பரோட்டா சாப்பிட இருந்தவுடன், பரோட்டாவை தட்டில் வைத்த, வெயிட்டர், தனது இரண்டு கைகளாலும் என்னைக் கேட்காமலே பிய்த்துப் போடத் தொடங்கி விட்டார். அவர் தொட்ட பரோட்டாவை எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை, நான் மறுத்து விட்டது மட்டுமன்றி, அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் போய் முறைப்பாடும் செய்தேன். அவர் என்னடாவென்றால், அப்படிப் பிய்த்துப் போடாது விட்டால் தான் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று ஒரு போடு போட்டார். அப்படி அங்கு நான் பரோட்டாவை உண்ண மறுத்ததும், அவர் தனது கையை எனது உணவில் வைத்தது அருவருப்பாக இருந்ததால் தான், அதனால், மிருகங்களை வெட்டும் முறை அசிங்கமாக, அருவருப்பாக இருந்ததால் தான் நான் இறைச்சி உண்பதில்லை என்று கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். உயிர்களின் மீதுள்ள, கருணையாலா, அல்லது குற்றவுணர்வினாலா அல்லது அவருவருப்பினாலா நான் இறைச்சி சாப்பிடுவதில்லை என்பது எனக்கே தெரியாது. அதற்கு நீங்கள் ஏன் உங்களின் தலையைப் பிய்த்துக் கொள்கிறீர்கள் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 🙂

  • \\நாங்கள் தமிழர்கள் எமக்கென்று தனித்துவமான சைவ/மாலிய பாரம்பரியங்களை தமிழாக்க வேண்டும்,//

   சைவம்.வேடிக்கையான கொள்கை.இது பற்றி முன்னர் வினவில் நடந்த விவாதம் நினைவுக்கு வருகிறது.அன்பு என்ற நண்பர் எழுதியிருப்பதை படித்து பாருங்கள்.

   https://www.vinavu.com/2012/02/23/jaya-nakheeran/#comment-57773

   சுட்டியிலிருந்து;

   இயற்கையின் செயல்முறையையும் ecological balance பற்றியும் அறியாத மூடர்கள்தான் சைவ உணவுக்கு எல்லோரும் மாறுங்கள் என உளற முடியும்.காடுகளில் வாழும் தாவர உண்ணிகளின் இனப்பெருக்க வேகத்திற்கு மாமிச உண்ணிகள் இல்லையென்றால் காடு பூரா நிற்க கூட இடமில்லாமல் அவை மட்டுமே இருக்கும்.காடே அழிந்துபோகும் அளவுக்கு அவை பெருகி விடும். மாமிச உண்ணிகள் தாவர உண்ணிகள் போல் இனப்பெருக்கம் அடைவதில்லை.அப்படி நடந்தால் தாவர உன்னிகளே இல்லாமல் போய் அவையும் சேர்ந்து அழிந்து போகும்.இந்த செயல்பாட்டை மனதில் வைத்து மேற்கொண்டு படிக்கவும்.
   இந்த உலகில் ஒரு ஆண்டுக்கு எத்தனை கோடி கால்நடைகள் மனிதர்களின் உணவுக்காக கொல்லப்படுகின்றன தெரியுமா. 60 பில்லியன்.

   சுட்டியில் பார்க்கவும். http://answers.yahoo.com/question/index?qid=20110309120151AAsT6Wu

   இத்தன கோடி ஆடு மாடுகள மனுஷன் தின்று தீர்த்தாலும் அந்த இனங்கள் அழிந்து விடவில்லை.அவை அனைத்தும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் எத்தனை ஆயிரம் கோடிகளாக பல்கி பெருகி இருக்கும்.அப்புறம் உலகமே பெரிய மாட்டு தொழுவமாகத்தான் இருக்கும்.

   • //அப்புறம் உலகமே பெரிய மாட்டு தொழுவமாகத்தான் இருக்கும்.//

    பன்றி தொழுவமாக இருந்தால் பரவாய் இல்லையா ?

    இந்து மதம் பசுவின் மீது அன்பு காட்டி உயிர் வாழ விடுகின்றது
    இசுலாம் பன்றியின் மீது வெறுப்பு காட்டி உயிர் வாழ விடுகின்றது
    மற்றவர்கள் வளர்ப்பு நாய் என்பதால் , B12 இருந்தும் கூட அதை உண்பதில்லை

    // ecological balance //

    நான் ஏதோ இறைவன் தான் எல்லாத்தையும் பாலன்சே செய்கிறானோ என்று நினைத்தேன்
    அப்படி பார்த்தாலும் எட்டு குட்டி போடும் பன்றி உண்ணாமல் ஒரு குட்டி போடும் பசுவை உண்ணலாமா ?

    மனிதன் இடையூறு செய்யாத விலங்கு உயிரினம் பல்கி பெருகி உலகை ஆட்கொண்டுள்ளது என்று காட்ட முடியுமா ? நாய் பூனை சிங்கம் …?

    பத்து குட்டி போடும் யானையை ஏன் இயற்கை படைக்கவில்லை ?

    கடல் மீன்கள் இறக்கும் வரை சுதந்திரமாக உலகை அனுபவித்து இறக்கின்றன . ஆனால் இறைச்சி கோழி ஆடு பன்றி போன்றவை மனிதனால் படும் துன்பம் கோஞ்ஜ் நஞ்சமல்ல

    என்னது தாவர்திற்கும் யூய்ர் இருக்கிறது என்கிறீர்களா ? யாராவது வயலுக்கு போய் , இத்தனை செடியையும் அடைத்து கொடுமை படுத்துகிறார்கள் என்று வெளியே உளறிவிடாதீர்கள்

    • Rama,Rama,

     எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் “(2 .5 . 2 )என்று “அஷ்டகா விதானம்” சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க …பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது!

    • Rama,Rama,

     இந்து மத, பார்பன வேதங்களில் “பசு மாமிசம்” ,குடிப்பழக்கம் (சுராபானம் , சோம பானம்) கண்டிப்பாக அனுமதிக்கப்படுகிறது.

     ஆதாரம்:

     ……..”மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது” என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்!

    • Rama,Rama, Siva Rama,

     நாங்க என்ன மாட்டையும், யானையையும்,குதிரையையும் “அஸ்வமேத யாகம் நெருப்பிளா” போட்டோம் !!!

     வயீது பசிக்கா தானே மாட்டை சாப்பிடுகிறேன்.

     மாட்டின் இறைச்சி பாவம் என்றால் …

     மாட்டின் பால் மட்டும் புனிதமா !!!

     அன்புடன்,

     கி.செந்தில்குமரன்

    • புரியாமல் பேசுகிறார்களா.புரிந்தும் நடிக்கிறார்களா.மீண்டும் மீண்டும் சொல்வதற்கு சொல்வதற்கு அவலமாக இருக்கிறது.

     ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.\\கிருத்துவர்களும் தலித்களும் பன்றி இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக முசுலிம்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை.அவர்கள் கடைகளில் பொருள் வாங்காதேன்னு சொல்றதில்லை.அவர்களுக்கு வீடு தர மாட்டோம்னு முசுலிம்கள் சொல்றதில்ல.அவுக வீடுகள்ல குடியிருக்க மாட்டோம்னு சொல்றதில்ல.//ஆனால் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக தலித்களையும் முசுலிம்களையும் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு வெறுப்பு பரப்புரை செய்யும் அயோக்கியதனத்துடன்,காலித்தனத்துடன்,வெறிச்செயலுடன் முசுலிம்களின் பன்றி இறைச்சி உண்ணாமையை ஒப்புமை படுத்துவது அயோக்கியதனம்.

     \\அப்படி பார்த்தாலும் எட்டு குட்டி போடும் பன்றி உண்ணாமல் ஒரு குட்டி போடும் பசுவை உண்ணலாமா ?//

     ராமனுக்கு விருப்பமிருந்தால் பன்றியை உண்ணலாம்.யாரும் தடுக்கவில்லை.பன்றியை கோடான கோடி பேர் உண்கிறார்கள்.ஆனால் நாங்கள் பசுவை உண்ண கூடாது என தடுக்க நீங்கள் யார்.

     \\பத்து குட்டி போடும் யானையை ஏன் இயற்கை படைக்கவில்லை ?//

     எனக்கு தெரியாது.Deist அவனடியிடம் கேட்டு தெளிவு பெறவும்.

     \\கடல் மீன்கள் இறக்கும் வரை சுதந்திரமாக உலகை அனுபவித்து இறக்கின்றன . //

     மீன்புடிக்கிறதுல ராமன் கில்லாடி போல.வலை வீசும்போதே உயிரோட உள்ள மீன்கள் சிக்காமல் செத்த மீன்களாக வலையில் விழுமாறு பாத்துக்குவாரு போல.

     \\இறைச்சி கோழி ஆடு பன்றி போன்றவை மனிதனால் படும் துன்பம் கோஞ்ஜ் நஞ்சமல்ல//

     அந்த துன்பத்துக்கு பழி வாங்கத்தான் தலித்களையும் முசுலிம்களையும் கொல்ல வேண்டும் என சங் பரிவார கும்பல் கிளம்பி விட்டதா.இதற்கு அன்பு அவர்களின் சுட்டியிலேயே விடை உள்ளது.
     \\அப்புறம் இரக்கம்.அத பத்தி நீங்கல்லாம் பேசுறீங்க.வேத காலம் தொட்டு இன்று வரை எம் மக்களை வேட்டையாடி கொன்றோழித்த சமணர்களை கழுவேற்றியதிலிருந்து குஜராத் இனப்படுகொலை வரை உங்கள் அட்டூழியங்களுக்கு எல்லையே இல்லை.

     ஆடு மாடுகள் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள்.அவற்றுக்கு மனிதர்களை போல இறப்பு துன்ப நிகழ்வல்ல.அருகில் நிற்கும் மாடு நோயால் செத்து போனாலும் அது பாட்டுக்கு இரையை மேயும்.துக்கம் அனுசரிக்க தெரியாதவை.மனிதர்களின் உணவு தேவைக்காகவும் பிற தேவைக்காகவும் மனிதர்களால் வளக்கப்படுபவை.அவை அனுபவிக்கும் சில நிமிட துன்பத்திற்காக மனித இனமும் உலகமும் இயக்கத்தை நிறுத்தி வைக்க முடியாது.

     அதிருக்கட்டும்.மாட்டுக்கு காயடிக்காமல் உழவுக்கும பார வண்டி இழுக்கவும் பயன்படுத்த முடியாது.காயடிப்பது அவற்றுக்கு எத்தகைய துன்பத்தை தரும்.அப்படி இருந்தும் அந்த மாடுகளை பயன்படுத்தி விளைவிக்கும் நெல்,கடலை,கரும்பு போன்றவற்றை மனிதர்கள் உண்பது இரக்கமற்ற செயல் இல்லையா.காயடித்த மாட்டை பயன்படுத்தி கொண்டு வரும் எந்த பொருளையும் திங்க மாட்டேன் என்று ஒரு மனிதன் சொன்னால் அவன் மறுநாள் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியிருக்கும்.//

     • Dear Tipu,

      [1]This man Raman is only asking questions,he can not respond to your answers.

      [2] Do you think his questions and logic are worthy to be discussed here?

      [3]What is happened in the previous post? He run away far away from discussion.

      [4] Did you buy and read any new books from book fare?

      [5] pls spend your worthy time with your friends instead of spending with Raman

      with regards,
      K.Senthilkumaran

     • Tippu,

      //ஆடு மாடுகள் ***.அவற்றுக்கு மனிதர்களை போல இறப்பு துன்ப நிகழ்வல்ல//

      You may not be able to see their pain and mourning. That does not mean they don’t suffer and mourn.

      //அருகில் நிற்கும் மாடு நோயால் செத்து போனாலும் அது பாட்டுக்கு இரையை மேயும்.துக்கம் அனுசரிக்க தெரியாதவை//

      It holds good for human beings too as much as animals.

     • Tippu,

      //மாட்டுக்கு காயடிக்காமல் உழவுக்கும பார வண்டி இழுக்கவும் பயன்படுத்த முடியாது./

      Why not?

      In order to use in their houses and guard their harams, Muhamadans did not even flinch to castrate human children and reduce them to ‘Alis’ in countless numbers.

      Fortunately, we don’t have to depend on castration for ploughing and locomotion and harams are almost a thing of past. I hope we will never be going back to those periods.

      I also hope soon we will do away with the slaughter of live animals too for eating meat.

      • யுனிவேர் இப்போது முட்டாள்களின் உடோபியன் சொர்க்கத்தில் இடம் பிடிக்க கிளம்பி விட்டார்.
       இழுவையுந்து [ Tractor ]பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் கோடிக்கணக்கான மாடுகள் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
       வரப்பு கட்டி விவசாயம் செய்யும் பாரம்பரிய முறைகள் மாடுகளைத்தான் வேண்டுகின்றன.மின்வசதி இல்லாத மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இறைக்கவும் மாடுகள்தான் வேண்டும்.சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பொதி மாடுகள் வேண்டும்.தண்ணீர் இறைக்கும் வேலைக்கும் பொதி சுமந்து ஏர் உழுவதற்கும் அவாள்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாடுகளை விட்டு விடலாம்.

       • // தண்ணீர் இறைக்கும் வேலைக்கும் பொதி சுமந்து ஏர் உழுவதற்கும் அவாள்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாடுகளை விட்டு விடலாம்.//

        யா அல்லாஹ்.. இந்த முல்லா நம்மவாளையும் பிரியாணி போட பிளான் பண்றாரே.. அய்யய்யோ.. வாழ்க ஆர்.எஸ்.எஸ்..

       • // தண்ணீர் இறைக்கும் வேலைக்கும் பொதி சுமந்து ஏர் உழுவதற்கும் அவாள்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாடுகளை விட்டு விடலாம்.//

        யா அல்லாஹ்.. இந்த முல்லா நம்மவாளையும் பிரியாணி போட பிளான் பண்றாரே.. இதெல்லாம் நல்லதில்லே, ஹலால் இல்லேன்னு நீயாவது குரானில் அடைப்புக்குறிக்குள்ளாவது அட்வைஸ் பண்ணப்படாதா..

        • மாடு திங்கிறவன வெட்டாதேன்னு கீதோபச்சாரம் பண்ணிருந்தா அவாளை ஏர் உழுவ கூப்பிடுவோமா

        • அம்பி,இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துட்டுருக்கு.ஓரமா உக்கார்ந்து மிக்சர் தின்னுட்டு போயிடலாம்னு பாக்குறீங்களே.

         பொருளற்ற வெறும் நகைச்சுவை எதிர்வாதம் ஆகி விடுமா.மாடுகளுக்கு காயடித்து பயன்படுத்துவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.இந்த விவாதத்தில் குறுக்கிடும் நீங்கள் அது குறித்து எதுவுமே சொல்லாமல் போனால் எப்படி.

         .ட்ராக்டர் வந்தாச்சு,, டில்லர் வந்தாச்சு ஆகவே விவசாய வேலைகளுக்கு மாடுகளை பயன்படுத்த வேண்டாம் என்று பேசும் உங்களவாக்களை அந்த வேலைகளுக்கு பொறுப்பேற்க சொன்னால் அவர்களை பிரியாணி போட திட்டமிடுவதாக சொல்கிறீர்களே.அதற்கு என்ன பொருள்.கொலை செய்ய வேண்டும் என்று சொல்வதாக பொருளா.அல்லது உடல் உழைப்பு செய்ய சொல்வதே உங்களுக்கு ஆத்திரமூட்டுகிறதா.அதற்காக இன்னொரு மதத்தையும் அவர்கள் கடவுளையும் கிண்டல் செய்வது உங்களுக்கு நாகரீகமாக தெரிகிறதா.

         கடைசியாக உங்கள் காவி நிறத்தையும் காட்டி விட்டீர்கள்.

         \\வாழ்க ஆர்.எஸ்.எஸ்..//

         எங்களவா விவசாய வேலைக்கு பொறுப்பேற்கனும்னு சொல்றியா.உங்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஐ வைத்து போட்டு தள்ளுனாத்தா சரியா வரும் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

         • // அம்பி,இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துட்டுருக்கு.ஓரமா உக்கார்ந்து மிக்சர் தின்னுட்டு போயிடலாம்னு பாக்குறீங்களே. //

          ஏன் தேவையில்லாம அமளி துமளி நடக்குது.. மிக்சர் தின்னுறது தப்பா..

          // மாடுகளுக்கு காயடித்து பயன்படுத்துவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.இந்த விவாதத்தில் குறுக்கிடும் நீங்கள் அது குறித்து எதுவுமே சொல்லாமல் போனால் எப்படி. //

          என்னத்த சொல்றது.. காளையை காயடித்து பயன்படுத்துவது மட்டும் சரியா என்றால் சரியில்லைதான்.. அதை நான் சொன்னால் எனக்கு காயடித்து வண்டியிலோ, ஏரிலோ பூட்டவேண்டும் என்று அடம்பிடிப்பீர்கள்..

          // ட்ராக்டர் வந்தாச்சு,, டில்லர் வந்தாச்சு ஆகவே விவசாய வேலைகளுக்கு மாடுகளை பயன்படுத்த வேண்டாம் என்று பேசும் உங்களவாக்களை//

          நம்மவாக்கள் எல்லோரும் அப்படி சொல்வதில்லை.. அப்படி சொல்பவர்கள் எல்லோரும் நம்மவாக்களும் இல்லை.. அப்படி யார் சொன்னாலும் தவறுமில்லை.. ஆனால் அதற்கு முன்பு எல்லா விவசாயிகளுக்கும் டிராக்டர், டில்லர் , மோட்டார் வசதிகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதும் சரிதான்..

          // அந்த வேலைகளுக்கு பொறுப்பேற்க சொன்னால் அவர்களை பிரியாணி போட திட்டமிடுவதாக சொல்கிறீர்களே.அதற்கு என்ன பொருள்.கொலை செய்ய வேண்டும் என்று சொல்வதாக பொருளா.அல்லது உடல் உழைப்பு செய்ய சொல்வதே உங்களுக்கு ஆத்திரமூட்டுகிறதா.அதற்காக இன்னொரு மதத்தையும் அவர்கள் கடவுளையும் கிண்டல் செய்வது உங்களுக்கு நாகரீகமாக தெரிகிறதா.//

          மாட்டுக்கு பதில் மனிதர்களை ஏரிலும், வண்டியிலும் பூட்டுவது உடல் உழைப்பு செய்ய வைக்கவே என்பது போன்ற விளக்கங்கள் மட்டும் நாகரீகமாகத் தெரிகிறதா..?! அதற்கு பதில் அவர்களை பிரியாணி போடுவதே மேல், ஆனால் அதற்கு அல்லாஹ்வின் அனுமதியும், சட்டத்தின் அனுமதியும் கிடைக்காது என்பதை உங்களுக்கு உணர்த்த அல்லாஹ்வை துணைக்கழைத்தேன்.. எனது ‘கிண்டலாலோ’ அல்லது போற்றுதலாலோ மதங்களைக் கடந்த, எல்லா உயிர்களும் பொதுவான, அல்லாஹ்வுக்கு (இறைவனுக்கு) ஒரு நட்டமோ லாபமோ, கோபமோ மகிழ்ச்சியோ ஏற்படப்போவதில்லை.. ஆனால் உங்கள் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும்..

          • மனிதர்களை ஏரில் பூட்ட வேண்டும் என்று நான் சொல்வதாகவா அது பொருள் தருகிறது.தெளிவாக எழுதாதது என் தவறுதான்.அப்படி நினைத்து சொல்லவில்லை.

           அந்த வேலைகளை செய்து தர பொறுப்பேற்க சொல்வது மாட்டை பயன்படுத்தாமல் இருக்கும் வகையில் விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்க மின் மோட்டார்,உழுவதற்கு இழுவையுந்து ,பொதி சுமக்க சிறு சரக்குந்து போன்றவை கிடைக்க செய்யவும் அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவுகளுக்கும் இதனால் கூடுதலாகி போய் விடும் அடக்க விலைக்கு தகுந்தவாறு விளை பொருட்களுக்கு விலை கிடைக்க செய்யவும் ஜீவ காருண்ய ஆசாமிகள் பொறுப்பேற்க வேண்டும் என்ற பொருளில்தான்.

       • Tippu,

        You have taken some time to reply. But you have not replied to my only question to my above comment. I have asked why can’t the cattle be used without castration. Even elephants are used in many works without them castrated. As your forefathers (atleast in ideology) have not flinched to castrate even human children to suit their vile interests, you may be wondering why this guy is making so much fuss about castration.

        //யுனிவேர் இப்போது முட்டாள்களின் உடோபியன் சொர்க்கத்தில் இடம் பிடிக்க கிளம்பி விட்டார்.//

        There are millions of people who believe in paradise where 72 houris with pomegranate like boobs are waiting for those killing and getting killed during attack on kaafirs. I don’t know if you believe in it or not. For me the paradise is right here in our planet Earth. We can transform it into paradise for all of us both human beings and animals. We can achieve this if enough people aspire for it and work towards it in common.

        //இழுவையுந்து *** வந்த பின்னரும் *** மாடுகள் *** பயன்படுத்தப்படுகின்றன.//

        I did not say cattle are not used. All i said was we don’t need to depend on it. Let me add here. We should still use cattle in mutually beneficial way without castrating them or abusing them in any other ways. We may nose pierce them for some time in order to restrain them. (One day, both humans and cattle would be so complicit, we would no longer need nose piercing). Without overloading or overworking them, we can continue to use cattle for ever, in spite of the motors, motorable road, electrification, etc, for they are sentient beings just like us.

        //வரப்பு கட்டி விவசாயம் செய்யும் பாரம்பரிய முறைகள் மாடுகளைத்தான் வேண்டுகின்றன.//

        You have not heard of hand-held power tillers which can be used in all situations. We now have all sorts of power tools and we can design any new tool within days. In spite of all this, we should still use cattle as they are our natural companions.

        //பொறுப்பேற்றுக் கொண்டால் மாடுகளை விட்டு விடலாம்.//

        I wish that day comes too soon. Our cattle companions don’t have voice of their own. Let me be their virtual-voice. They are waiting for that day.

     • //ஆனால் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக தலித்களையும் முசுலிம்களையும் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு வெறுப்பு பரப்புரை//

      மாட்டிறைச்சியை தலித்களுக்கு கொடுப்பதே ஆதிக்க சாதிகள் தான் . இவர்களுடைய காட்டில் இறந்து விட்ட மாடுகளை, தலித்களின் உழைப்பை ஊருந்சுபவர்கள் , போனசாக இறந்து விட்ட மாட்டை கொடுத்து மகிழ்விப்பார்கள்.

      தலித்கள் மாடு இறைச்சிக்காக ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல . அவர்கள் உழைப்பை இலவசமாக ஊருந்சி குடிக்க அது மட்டும் காரணம் அல்ல . ஆண்டைகள் இது போன்ற அடிமைகளை உருவாக்க மதம் ஒரு கருவி

      //முசுலிம்களையும் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு வெறுப்பு பரப்புரை//

      தங்கள் பண்பாட்டில் இல்லாததை மற்றவர்கள் செய்யும் போது முகம் சுளிப்பது இயல்பு .
      உதாரணமாக் நாய் உணவை உன்னுபவர்களை நீங்கள் கேவலமாக பார்ர்க்க கூடும்.
      இந்தியர்கள் கையால் உண்பதை வெளிநாட்டவர் இகழ்ச்சியாக பார்ப்பதுண்டு .

      என்னுடைய இசுலாமிய நண்பன் , மாடுகளை கொன்று இறைச்சி விற்பவன் . அவனை நான் கொன்று விடவில்லை
      ஆனால் தங்களுக்கு பிடிக்காதபடி தர்காவில் வணங்குபவர்களை குண்டு வைத்து கொல்வதை அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன் .

      //ராமனுக்கு விருப்பமிருந்தால் பன்றியை உண்ணலாம்.யாரும் தடுக்கவில்லை//
      உங்களுடைய எகாலஜீ balensu ஆகுமா ? ஒரு வாதத்திற்கு உலகம் முழுவதும் இசுலாம் மதம் ஆகிவிடுகிறது என் கொள்வோம். பன்றியை யாரும் உண்ணாமல் விட்டால் , உலகம் முழுவது பன்றிகளாக இருக்குமே?

      //நாங்கள் பசுவை உண்ண கூடாது என தடுக்க நீங்கள் யார்.//
      பெரும்பான்மையான மக்கள் மற்றும் சுயநலமிகள் அது போன்ற சட்டத்தை ஏற்படுத்ததான் செய்வார்கள் .
      பொருளாதார அளவில் விவ்சாயியின் கழுத்தை நெருக்கினால் , அந்த தடை தானாக விலகும் .
      எங்கே உங்க ஊரில் கள் இறக்கி குடித்து விடுஇங்க பார்கலாம் ..?

      ஆனால் மாற்று மதத்தினரும் புர்கா போட வேண்டும் , ஷரியா கடை ப்டிக்க வேண்டும் என்று பெரும்பான்மை ஆனதும் நீங்கள் உங்கள் வண்ணத்தை காட்டி விட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் .
      சூடான் ஏனயா தனி நாடாக பிரிந்தது ? மாற்று மதத்தினரை அரவணைக்கும் பண்பினாளாஅ ?

      \\கடல் மீன்கள் இறக்கும் வரை சுதந்திரமாக உலகை அனுபவித்து இறக்கின்றன .

      மீன்புடிக்கிறதுல ராமன் கில்லாடி போல.வலை வீசும்போதே உயிரோட உள்ள மீன்கள் சிக்காமல் செத்த மீன்களாக வலையில் விழுமாறு பாத்துக்குவாரு போல.//

      நீங்கள் சென்று கொல்லும் வரை தான் இஷ்டப்படி நீந்தி விஉம்பியபடி வாழ்கிறது . அதை புரிந்து கொள்ளும் மன நிலை கூட உங்களிடம் இல்லை Sick

      //அப்புறம் இரக்கம்.அத பத்தி நீங்கல்லாம் பேசுறீங்க.வேத காலம் தொட்டு இன்று வரை எம் மக்களை வேட்டையாடி கொன்றோழித்த சமணர்களை கழுவேற்றியதிலிருந்து குஜராத் இனப்படுகொலை வரை உங்கள் அட்டூழியங்களுக்கு எல்லையே இல்லை//

      அட அட , என்ன செய்வது இந்துமதம் இசுலாம் போல அமைதி மார்க்கம் அல்ல

      //மனிதர்களை போல இறப்பு துன்ப நிகழ்வல்ல.//

      கா கா

      //.மனிதர்களின் உணவு தேவைக்காகவும் பிற தேவைக்காகவும் மனிதர்களால் வளக்கப்படுபவை.//

      வளருங்கள் , உண்ணுங்கள். ஆனால் ஒரு சீறிய இடத்தில் அடைத்து வைத்து கொடுமை படுத்தாதீர்கள்

      //அதிருக்கட்டும்.மாட்டுக்கு காயடிக்காமல் உழவுக்கும பார வண்டி இழுக்கவும் பயன்படுத்த முடியாது.காயடிப்பது அவற்றுக்கு எத்தகைய துன்பத்தை தரும்.//

      மாட்டிற்கு துன்பம் உண்டாகும் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி . இந்த நடைமுறை விரைவில் ஒழியும் . மணிதான் தான் சுய நலத்திற்காக பிற உயிரி இனங்களை கொடுமை படுத்துவதை நிறுத்த வேண்டும்

      //காயடித்த மாட்டை பயன்படுத்தி கொண்டு வரும் எந்த பொருளையும் திங்க மாட்டேன் என்று ஒரு மனிதன் சொன்னால் அவன் மறுநாள் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியிருக்கும்//

      டிராக்டர் வந்து நாளாச்சு

    • \\மாட்டிறைச்சியை தலித்களுக்கு…….ஆண்டைகள் இது போன்ற அடிமைகளை உருவாக்க மதம் ஒரு கருவி//

     கேள்வி என்ன.பதில் என்று உளறுவது என்ன.மாட்டை சாக்காக வைத்து கொலைவெறி பரப்புரை நடத்தப்படுகிறதா இல்லையா.ராமன் என்கிற தாய் நாட்டை விட்டு மேல்நாட்டுக்கு ஓடிப்போன,அங்கிருந்து கொண்டு இந்திய மக்களுக்கு எது நல்லது என அருள்பாலிக்கும் தன்னல மனிதர் தன இசுலாமிய நண்பரை கொன்று விடுவார் என சொல்லவில்லை.ஆனால் கொல்ல புறப்பட்டுவிட்ட கும்பலுக்கு தாராளாமாக துட்டு தட்டி விடுவார்.

     எந்த உணவை உண்பவராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே.ஆகவே அவரும் எம் சகோதரரே.மனிதர்களை இகழ்ச்சியாக பார்க்கும் உங்கள் பார்ப்பனிய மனப்பான்மையால் அனைவரையும் அளக்க வேண்டாம்.

     \\ஒரு வாதத்திற்கு உலகம் முழுவதும் இசுலாம் மதம் ஆகிவிடுகிறது உலகம் முழுவது பன்றிகளாக இருக்குமே?//

     எப்பேர்பட்ட அறிவாளி இந்த ராமன்.அய்யா அறிவாளியே, மனிதர்கள் உணவாக கொள்வதால்தான் பன்றிகள் ஊருக்குள் மனிதர்களின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகின்றன.அதனால்தான் அவை இப்போதைய எண்ணிக்கையில் உள்ளன.யாருக்கும் அது உணவாக தேவையில்லை எனும்போது அவை காட்டில்தான் இருக்க வேண்டியிருக்கும்.அப்போது அதன் எண்ணிக்கை இயல்பாக மாமிசம் உண்ணும் மிருகங்களால் கட்டுப்படுத்தப்ப்படும்.

     \\ பெரும்பான்மையான மக்கள் மற்றும் சுயநலமிகள் அது போன்ற சட்டத்தை ஏற்படுத்ததான் செய்வார்கள் .//

     நல்லது.பொது வாக்கெடுப்பு நடத்தித்தான் இது பெரும்பான்மை முடிவு என கண்டுபிடித்தீர்களா.

     \\நீங்கள் சென்று கொல்லும் வரை தான் இஷ்டப்படி நீந்தி விஉம்பியபடி வாழ்கிறது . அதை புரிந்து கொள்ளும் மன நிலை கூட உங்களிடம் இல்லை ிக்//

     முதலில் ராமன் சொன்னது.

     \\ கடல் மீன்கள் இறக்கும் வரை சுதந்திரமாக உலகை அனுபவித்து இறக்கின்றன . //

     நங்கள் வலை வீசியவுடன் அவை மகிழ்வோடு வந்து வலையில் விழுதாக்கும் அவை துடி துடித்து சாவதில்லையா.

     \\.என்னது தாவர்திற்கும் யூய்ர் இருக்கிறது என்கிறீர்களா ? //

     உயிரற்ற எதையும் மனிதன் உண்ண முடியாது.முன்னரே உங்களவா ஒருத்தர் வாங்கி கட்டிண்டு போயிருக்கார்.பாத்துக்கோங்க.

     https://www.vinavu.com/2011/09/30/conversion-9/#comment-50009

     • Tipu’s logic most often is so bad that he attracts senthilkumaran to put jinkchak for him.

      Cows eat plants/wolf eats cow but man doesn’t eat wolf,he also eats the cow.

      but there is no similarity between man and wolf,moreover man eats cooked meat for taste and not especially for protein.

      All this damages the environment but the action which causes least damage to the environment is the best.

      so vegetarianism is the best.

      All this timepass stories about how herbivorous animals ll increase in number if man doesn’t eat them is typical small brained islamist bullshit.

      The meat eaten whether cows/goats/birds are not hunted but raised in a farm and eaten.

      if someone is hunting that too with bare hands and a sharp tool,i can understand a little bit,but eating steroid boosted factory manufactured meat is just bad diet.

   • Tipu,

    dont give this bogus ecological balance bullshit.

    Lions want to kill deer/antelope but the antelope can run away.Lions cant eat fruits/plants,if they dont get raw meat,they ll die,human being wont die but maybe it is true that without meat u might get very sick and get diseases as your body is incapable to secreting its own amino acaids and proteins.

    The cattle u eat are not hunted by you,why dont u try hunting a wild buffalo without guns and with bare hands and eat it like a lion does,u cannot do that.

    That means u dont contribute directly to the food chain.

    u r not a caveman,u idiot.

    even a 5th standard child will understand this basic logic,u go to any extent shamelessly to justify ur action and that’s because ur brain is incapable of understanding this basic fact.

    wild animals have their own balance,for ur argument sake by eating the cows u r making the wild animals hungry and thus skewing the ecological imbalance even more.

    Hens & Goats are still small enough to make a difference but cows are huge.

    • \\u idiot.//

     கான முயல்எய்த அம்பினில் யானை
     பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

     ஒரு குட்டி கதை.பண்ருட்டி ராமசந்திரனுக்கு ”குடிலன்”என பெயர் சூட்டி கலைஞர் சொன்ன கதை. மதம் கொண்ட யானை ஒன்று கடைவீதியில் வெறி கொண்டு ஓடி அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.கட்டிளம் காளையொருவன் கையில் வேலேந்தி பாய்ந்து வந்தான்.யானையின் நேர் எதிரே நின்று அதன் நெற்றியை குறி வைத்து வேலை எறிந்தான்.யானையின் நடு நெற்றியில் பாய்ந்த வேல் அதனை கீழே சாய்த்தது.

     வந்த வழியே திரும்பி சென்றான் அந்த இளைஞன்.போகும் வழியில் சாக்கடையாக தேங்கி நின்ற குட்டையிலிருந்து பன்றி ஒன்று எழுந்து வந்தது.அவனை முறைத்து பார்த்தவாறு உடலை சிலிர்த்து உலுப்பியது.சாக்கடை திவலைகள் தெறித்து விடுமோ என அஞ்சி ஓடி ஒதுங்கினான் அந்த இளைஞன்.மதம் கொண்ட யானைக்கே அஞ்சாதவன் தனக்கு அஞ்சி ஓடுவதாக இறுமாந்து நின்றது பன்றி.

     • u still cant refute my argument on a factual basis,i have no regrets calling u an ____.

      people like u with some pseudo knowledge and analysis confuse muslim people from ever thinking for themselves.

  • வியாசன் அவர்களே,

   நீங்கள் இந்த விசயத்தை RSS பாணியில் எதிக்குறீர்கள். இங்கு அது பிரச்சனையில்லை.

   1) நீங்கள் இந்துக்களாக கருதும் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய மனது உங்கள் (Orthodox Hindus) மனது போல் புன்படுவதில்லை ஏன்? இப்போது எந்த இந்துவினுடைய மனதை ஏற்றுக் கொல்வது.

   2) நீங்கள் பசுவை புனிதமாக கருதும் இந்து சமய நூல்களில் இருந்துதான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா. அப்படியானால் நீங்கள் அவர் மேற்கோல் காட்டிய இந்து நூல்களை எதிக்கிறீர்களா?

   3) நீங்கள் உங்களுடைய orthodox இந்து கடவுள்களை மாட்டுத் தோலில் செய்த மிருதங்கம் முதலிய கருவிகளை கொண்டுதான் கோவில்களில் வழிபடுகிறீர்கள். அப்போது உங்கள் மனது புன்படவில்லையா?

   • DN.Jha or whoever,there is not enough proof to point out whether people really ate cows.

    Secondly,the sanskrit knowledge of most historians is very silly and all their research work comes with a probability of truth and not a certainity.

 14. //சைவம்.வேடிக்கையான கொள்கை.இது பற்றி முன்னர் வினவில் நடந்த விவாதம் நினைவுக்கு வருகிறது.அன்பு என்ற நண்பர் எழுதியிருப்பதை படித்து பாருங்கள்.///

  நீங்கள் தந்த சுட்டிகளையும் பார்த்தேன். உங்களுக்கு ‘நாங்கள் தமிழர்கள் எமக்கென்று தனித்துவமான சைவ/மாலிய பாரம்பரியங்களை தமிழாக்க வேண்டும்,’ என்று நான் கூறியதன் கருத்து புரியவில்லை என்று நினைக்கிறேன். சைவ/மாலிய பாரம்பரியங்கள் என நான் உணவுப்பபழக்க வழக்கங்களைக் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது தமிழர்கள் மத்தியிலுள்ள இரண்டு மதப்பிரிவுகளையும் தான். ஈழத்தமிழர்களிடம் யாராவது நீங்கள் என்ன மதம் அல்லது சமயம், என்று கேட்டால், நாங்கள் இந்து என்று கூறமாட்டார்கள். நாங்கள் சைவம் என்று தான் கூறுவார்கள் . அங்கு சைவம் என்பது தமிழ்நாட்டில் போல் மரக்கறி உணவைக் குறிப்பதல்ல.

  அரைவாசி மாட்டை அப்படியே உண்ணக் கூடிய ஈழத்தமிழர் ஒருவரிடம், நீங்கள் என்ன மதம் என்று கேட்டால் கூட, அவரும் நான் சைவம் என்பார். இங்கு அவர் தான் சிவனை முழுமுதல் கடவுளாக வழிபடுகிறேன் என்பதைக் குறிக்கிறாரே தவிர அவர் மரக்கறி உணவை மட்டும் உண்பவர் என்ற கருத்தல்ல. தமிழ்நாட்டில் சைவ வேளாளர்கள் என்றால் அவர்கள் மரக்கறி உணைவை அதாவது சைவ உணவை மட்டும் தான் உண்பவர்கள் என்று நினைக்கிறேன். பெரும்பான்மை யாழ்ப்பாணத்து சைவ வெள்ளாளர்கள் மீன் அல்லது இறைச்சி இல்லாமல் சோறு தின்ன மாட்டார்கள். அங்கு சைவ வெள்ளாளர் என்றால் கருத்து சிவனை முழுமுதலாக வணங்கும், திருநீற்றை முக்குறியாக அணியும் வெள்ளாளர் என்பது மட்டும் தான். 🙂

 15. திரு.முற்போக்கு அவர்களே,

  //நீங்கள் இந்த விசயத்தை RSS பாணியில் எதிக்குறீர்கள்.///

  யாரவது இந்து தனது மதத்தின் நியாயத்தைப் பேசினால் அவனை RSS ஆக அல்லது இந்த்துத்துவாவாக மாற்றி விடுவீர்கள் அப்படியானால் இஸ்லாத்தை ஆதரித்துப் பேசும் முஸ்லீம்கள் எல்லாம் தலிபான்கள், கிறித்தவத்தை ஆதரித்துப் பேசும் கிறித்தவர்கள் எல்லாம் cross burning ku klux klan களா? 🙂

  //1) நீங்கள் இந்துக்களாக கருதும் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய மனது உங்கள் (Orthodox Hindus) மனது போல்
  புன்படுவதில்லை ஏன்? இப்போது எந்த இந்துவினுடைய மனதை ஏற்றுக் கொல்வது.//

  இந்தியாவில் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சியை உண்பதன் காரணம் வறுமை. அவர்கள் வேலை செய்த உயர்ந்தசாதியினரின் பண்ணையில் இறந்த மாடுகளை அவர்கள் தான் அகற்ற வேண்டியிருந்தது வறுமையின் கொடுமையால் அதையே அவர்கள் உண்டு, மாடு உண்ணுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கமாக அவர்கள் மத்தியில் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்தது தான் அதற்குக் காரணமாகும். அந்த ஒடுக்கப்பட்ட இந்துக்கள் கூட, கோயிலுக்குப் போகும் நாளில் மாட்டிறைச்சியை உண்டு விட்டுப் போவார்கள் என்று நான் நம்பவில்லை, . ஈழத்தைப் போலல்லாது, தமிழ்நாட்டில் மரக்கறி அல்லது சைவ உணவுப்பழக்க வழக்கம், உயர்ந்த சாதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் முன்னோர்கள் மாட்டிறைச்சியை உண்டிருக்கலாம், அவர் இப்பொழுதும் மாட்டிறைச்சியை உண்ணுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதனால் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. ஒடுக்கப்பட்ட இந்துக்களும் Orthodox Hindus ஆகலாம். இந்து மதத்தில் அதற்கு தடையேதும் கிடையாது.

  //2) நீங்கள் பசுவை புனிதமாக கருதும் இந்து சமய நூல்களில் இருந்துதான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா. அப்படியானால் நீங்கள் அவர் மேற்கோல் காட்டிய இந்து நூல்களை எதிக்கிறீர்களா?///

  இந்துமதம் உலகில் பழமையான மதமாகையால், பிந்திய மதங்களைப் போல் மாற்றங்களைக் கண்டு அஞ்சாமல், மாற்றங்களை எதிர்த்து அடம்பிடிக்காமல் காலத்துக்கேற்றவாறு பல மாற்றங்களையேற்றுக் கொண்டு வளர்ச்சியடைந்திருக்கிறது. உதாரணமாக, ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, வழக்கத்திலிருந்த சில பழக்க வழக்கங்கள் இன்று இந்து மதத்தில் இல்லை. உதாரணமாக, சதி, உடன்கட்டையேறுதல் இன்று வழக்கத்தில் இல்லை. வேதகாலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இந்துக்கள் மாட்டுக்கறி உண்டார்கள், இப்பொழுது மட்டும் உண்டால் என்ன குறைந்தா போய்விடும் என்று இன்றைக்கு இவர் புத்தகம் எழுதுகிறார், நாளைக்கு உத்தரப்பிரதேசத்தில் எங்காவது ஒரு கிராமத்தில், உறவினர்கள் ஒரு பெண்ணை வற்புறுத்தி உடன்கட்டை ஏறச்செய்தால்(அப்படி நடந்ததுண்டு) சென்ற நூற்றாண்டில் கூட இந்துப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள், இப்பொழுது மட்டும் உடன்கட்டை ஏறுவதை ஏன் தடுக்க வேண்டும் என்று யாராவது புத்தகம் எழுதினால், அதையும் சரியென்று உங்களைப் போல் சிலர் வாதாடலாம். அது போன்றது தான் “பண்டைக்காலத்தில்” இந்துக்கள் மாடு தின்றார்கள், இப்பொழுதும் தின்றால் என்ன என்று வாதாடுவதும். அப்படியான கருத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதுவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவுமிருக்க முடியாது.

  வேதகாலத்தில் மாட்டை என்ன செய்தார்களோ, அதற்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்து மதத்தில். பசுமாடு புனிதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பசுமாடு சிவனுக்கு வேண்டிய தேவகணமாக போற்றப்படுகிறது. உதாரணமாக யாழ்ப்பாண அரசின் கொடி மட்டுமல்ல, இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சின்னமும் கூட நந்தி தேவர் (பசுமாடு) தான் அந்தளவுக்கு பசுமாடு தமிழர்களின் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறி விட்டது. அதனால் பசுவதை செய்வதை இந்துமதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எதிர்க்கிறார்கள். அதற்கு வேதகாலத்தில் கொன்றார்கள், இப்ப மட்டும் கொன்றால் என்ன என்று கேட்பது விதண்டாவாதம் மட்டுமல்ல, இந்துமக்களின் மதவுணர்வைப் புண்படுத்தும் செயலுமாகும்.

  http://www.aaa.org.hk/contentImage/programme399_TA3gTlERxqDCpIJ90LbP.jpg

  //3) நீங்கள் உங்களுடைய orthodox இந்து கடவுள்களை மாட்டுத் தோலில் செய்த மிருதங்கம் முதலிய கருவிகளை கொண்டுதான் கோவில்களில் வழிபடுகிறீர்கள். அப்போது உங்கள் மனது புன்படவில்லையா?///

  உயிரோடு பதைக்கப் பதைக்க மாட்டை அறுத்தோ அல்லது அது உயிருடன் இருக்கும் போதே காதை வெட்டி மேளம், காலை வெட்டி மிருதங்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லவில்லை. அப்படிச் செய்வதுமில்லை. இறந்த மாடுகளின் தோலை வீணாக்காமல் தான் இசைக் கருவிகள் செய்யப்படுகின்றன. அந்த இசைக்கருவிகள் மூலம், அதாவது அவை இறைவனைப் போற்றிப்புகழ பயன் படுவதால், அந்த மாட்டுக்கும் மறுவுலகில் முக்தி கிடைக்கும் என ஒரு நம்பிக்கையுள்ள இந்து எண்ணுவான், அதனால் தான் சிவபக்தனாகிய நந்தனார் மேளம் செய்ய தோல், கோரோசனை என்பவற்றை சிவன் கோயிலுக்கு அளித்தார் என்கிறது பெரியபுராணம்.

  • Viyasan,

   //“பண்டைக்காலத்தில்” இந்துக்கள் மாடு தின்றார்கள், இப்பொழுதும் தின்றால் என்ன என்று வாதாடுவதும். அப்படியான கருத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதுவதும்//

   Hindutva people try to create an impression that they have always been vegetarian. The book just say no to this assertion. It certainly does not say இப்பொழுதும் தின்றால் என்ன.

   My problem with Hindutva in this issue is, they single out Cow leaving other cattle like buffalo, goat, etc. I am not sure whether they are worried about bulls also.

   • Che Guevara on his maiden visit to India in 1959,After this visit Che said”. One can quite understand that the cow was a sacred animal for the ancient ones: it worked in the fields, gave milk, and even its excreta had the enormous importance of re- placing natural fuel,which doesn’t exist here; this explains why their religious precepts prohibited the farmer from killing this precious animal and, for that, the only way out was to consider it sacred; to have such a determining force as religion impose respect for the most efficient element of production which the community counted on.”

  • திரு வியாசன் அவர்களே,

   உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்து மதத்திலிருந்து பேசியிருந்தால் நான் RSS பாணி என்று குறிப்பிட்டிருக்கமாட்டேன். அனால் நீங்கள் அவர்களை போல இந்துத்துவத்தை பற்றி கேட்ட கேள்விக்கு இஸ்லாத்துக்கு ஒடினீர்களே அதற்காகத்தான் அப்படி குறிப்பிட்டேன்.

   ஆனால் நான் இப்போது கேட்ட கேள்விக்கு இந்து மதத்தில் நின்றே பதில் கூறுகிறீர்கள், அதை வரவேற்கிறேன்.

   1) பசு புனிதம் என்று என்னும் இந்துக்களை நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தவில்லை. தேவையின் பொருட்டோ அல்லது விரும்பியோ மாட்டுக்கறி சாப்பிடும் இந்துக்களை புனிதம் என்ற பெயரில் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். Orthodox Hinduகல் தான் இந்து மதத்தை குத்தகைகு எடுத்து வைத்திருக்கிறீர்களா என்ன?

   இந்தியாவில் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி உண்பதன் காரணம் வறுமை என்று தெரிந்தவர்க்கு, அவர்களுடைய வறுமைக்கு காரணம் இந்து மதம்தான் என்று தெரியாமல் போன மர்மம் என்ன?

   //இசையமைப்பாளர் இளையராஜாவின் முன்னோர்கள் மாட்டிறைச்சியை உண்டிருக்கலாம், அவர் இப்பொழுதும் மாட்டிறைச்சியை உண்ணுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? //

   இளையராஜா சாப்பிடுவாரா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருடைய பையன் யுவன்சங்கர் ராஜா அமெரிக்கா போனா hamburger சாப்பிடுவார்னு நினைக்குறேன்.

   2) இந்நூல் ஒரு வரலாற்று ஆராய்ச்சி பற்றியது. இங்கு எந்த கருத்தையும் வழியுருத்தவில்லை. மாறாக வரலாற்று ரீதியாக எவ்வாறு பசுக்களையும், குதிரையய்யும் யாகத்தில் பலி கொடுத்தும், அந்த இறச்சியை தின்று வயிறு வளர்த்த கூட்டம் தங்களுடைய மதத்தை தக்கவைபதற்காக சைவமாக மாறியது என்பதை காட்டுகிறது. ஆகையால் நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டு சம்பந்தம் இல்லாமல் ஒப்பீடு செய்யாதீர்கள்.

   3) இப்ப வருகிர எல்லா மேலத்திலும் செத்த மாட்டுத்தோல் தான் பயன்படுத்தப்படுகிறது என்று யார் சொன்னார்கள். மாட்டை கறிக்காக வெட்டியதுக்கப்புரம் தோலை என்ன செய்வார்கள்? உங்க ஊர்ல புதைசிடுவாங்கலோ!!! சபால மிருதங்கம் வாசிக்கிறவனும், கோவில்ல மேலம் அடிக்கிறவனுமா இங்க அந்த கருவிகள செய்யுறான். அதையும் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தான் உங்களுக்கு செய்து கொடுக்கிறார்கள்.

   செத்த மாட்டுத்தோலை உரித்தற்காகத்தான் வட இந்தையாவில் Orthodox Hinduக்கலால் ஈவு இரக்கமின்றி தலித் மக்கள் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.

   http://www.nchro.org/index.php?option=com_content&view=article&id=4261:five-dalits-lynched-to-death-for-skinning-cow-sacred-to-hindus&catid=5:dalitsatribals&Itemid=14

   http://www.outlookindia.com/article.aspx?217815

   மாட்டுக்கும் மறுவுலகில் முக்தி கிடைக்கும் என்று இரக்கப்படும் நீங்கள் உங்கள் இந்துமதத்தில் வாழும் மனிதனுக்கு இவ்வுலகில் வழியில்லை என்பதை எப்போது உனரப்போகிறீர்கள்.

   இந்து மதத்தில் மனித உயிரைவிட பசிவின் புனிதம் தான் பெரியது.

 16. Univerbuddy,

  நான் இந்துத்துவாவுமில்லை ஒரு மண்ணுமில்லை. அதை விட, இந்துக்கள் எப்பொழுதுமே மரக்கறியுணவை மட்டும் உண்டார்கள் என்று நிரூபிப்பதல்ல என்னுடைய நோக்கம் இந்துக்களில் பெரும்பான்மையினர் இன்றும் சைவ உணவை மட்டும் உண்பவர்களல்ல எனக்கும் தெரியும்.
  நீங்கள் இந்தப் புத்தகத்தின் தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. அதனால் உங்களைப் போல் இவ்வளவு தீர்க்கமாக என்னால் இந்தப் புத்தகம் என்ன கூறுகிறது என்று விளக்கம் அளிக்க முடியாது.

  வினவிலுள்ள நூல் அறிமுகம் இப்படிக் கூறுகிறது:

  “இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

  “பசு புனிதமானது”
  “கோமாதா பால் கொடுக்கிறது”
  “பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது”
  “இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்”
  என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.

  பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா?
  அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா?
  பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன? “

  என்று அதற்கு வேதகாலத்தில், புராண காலத்தில் நடந்த சம்பவங்களையும் கதைகளையும் ஆதாரம் காட்டி, மாடுகளை இக்காலத்திலும் கொல்வதில் தவறேதுமில்லை என நியாயப்படுத்துகிறார் இந்தப் புத்தக ஆசிரியர். இந்த புத்தக ஆசிரியர் மாடுகளைக் கொல்வது கூடாது என இத்துத்துவாக்கள் வாதாடுவது தவறு என ஆதாரங்களுடன் வாதாடுகிறார். எனக்குத் தெரிந்தவரையில் மாடுகளை கொல்பவர்கள் அனேகமாக உணவுக்காகக் கொல்வது தான் வழக்கம், விளையாட்டுக்காக இந்தியாவில் யாரும் மாடுகளைக் கொல்வதில்லை. அதாவது அவர் கூறுவது என்னவென்றால். மாடுகளை உணவுக்காக இப்பொழுதும் கொன்றால் என்ன, அதை ஏன் “இந்துத்துவாக் கும்பல்” தடுக்க வேண்டும் என்பது தான் என நான் நினைக்கிறேன்.

 17. திருவாளர் முற்போக்கு,

  //தேவையின் பொருட்டோ அல்லது விரும்பியோ மாட்டுக்கறி சாப்பிடும் இந்துக்களை புனிதம் என்ற பெயரில் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். Orthodox Hinduகல் தான் இந்து மதத்தை குத்தகைகு எடுத்து வைத்திருக்கிறீர்களா என்ன?///

  இந்த 21வது நூற்றாண்டில் ஒருவர் உண்ணும் உணவை எப்படி மற்றவர்களால் தடுக்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை. ஒருவரின் சமையலறைக்குள் புகுந்து பார்க்குமளவுக்கு யாருக்கும் நேரமும இல்லை, அந்தளவுக்கு உரிமையும் இல்லை. அதனால், பசுவதையை எதிர்க்கும் இந்துக்கள், அது தவறு என்று எடுத்துச் சொல்வார்களே தவிர, தடுக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உதாரணமாக, ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மாட்டிறைசசியை உண்ணும் தலித்துக்களையும் /தலித்தல்லாத இந்துக்கள், எவரையுமே யாரும் மாட்டுக்கறி உண்ணுவதைத் தடுத்ததாக நான் கேள்விப்படவில்லை. அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்தாலே தவிர, மாட்டுக்கறி உண்பதை அவர்கள் யாருக்கும் சொல்லப் போவதுமில்லை, அதை மற்றவர்கள் அறிவதும் கடினம்.

  //அவர்களுடைய வறுமைக்கு காரணம் இந்து மதம்தான் என்று தெரியாமல் போன மர்மம் என்ன?///

  இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வறுமைக்குக் காரணம் இந்துமதம் என்றால், ஏனையா இவ்வளவு வறிய முஸ்லீம்களும், கிறித்தவர்களும் இந்தியாவில் உள்ளார்கள். உங்களின் கருத்துப்படி பார்த்தால் கிறித்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் எல்லோரும் பணக்காரகளாக அல்லவா இருக்க வேண்டும்.

  //இளையராஜா சாப்பிடுவாரா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருடைய பையன் யுவன்சங்கர் ராஜா அமெரிக்கா போனா hamburger சாப்பிடுவார்னு நினைக்குறேன்///

  வெளிநாடுகளில் பிறந்த ஈழத்தமிழர்களின் குழந்தைகள் எல்லோரும் தான் Hamburger சாப்பிடுகிறார்கள். அதற்கும் சாதிக்கும், சமயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதைத் தான் நான் முதலிலேயே கூறினேன். ஒடுக்கப்பட்ட மக்கள் வறுமையின் காரணமாக, உண்ண எதுவும் கிடைக்காத போது, அவர்களுக்குப் பண்ணையில் கிடைத்த இறந்த மாட்டை உண்டு அதன் சுவை பிடித்துக் கொண்டதால், அதைத் தொடர்ந்து உண்டிருக்கலாமே தவிர, அவர்கள் சாதி குறைந்தவர்கள் என்பதால், மாட்டுக்கறியை நீ உண்ணத்தான் வேண்டும் என்று இந்து மதமோ அல்லது உயர்சாதி இந்துக்களோ அவர்களை வற்புறுத்தி மாட்டுக்கறியை உண்ண வைக்கவில்லை. அது போல், மாடு புனிதமானது, அதை உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று யாராவது இந்துக்கள் உபதேசம் செய்திருப்பார்களே தவிர, அவர்கள் என்ன உண்ணுகிறார்கள் என்பதை எப்படித் தடுக்க முடியும். உதாரணமாக, தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சியம்மன கோயிலுக்குள் போகிற எத்தனை பேர் மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம்.

  ///2) இந்நூல் ஒரு வரலாற்று ஆராய்ச்சி பற்றியது. அந்த இறச்சியை தின்று வயிறு வளர்த்த கூட்டம் தங்களுடைய மதத்தை தக்கவைபதற்காக சைவமாக மாறியது என்பதை காட்டுகிறது. ஆகையால் நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டு சம்பந்தம் இல்லாமல் ஒப்பீடு செய்யாதீர்கள்.///

  அவர்கள் தமது மதத்தை தக்க வைப்பதற்காக ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே சைவமாக மாறி விட்டார்கள் அல்லவா. இப்பொழுதெல்லாம் அவர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். அவர்கள் தமது இப்போதைய மாட்டுக்கறி எதிர்ப்புக் கொள்கையைப் பரப்புகிறார்கள் அதில் என்ன தவறு?

  நீங்கள் மேலை நாடுகளிலுள்ள vEgan, Veganism, Vegan movement என்பவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களின் தாய் தந்தையர் மட்டுமல்ல, அவர்களும் இளமையில் முழுப்பன்றியும் உண்டவர்கள் மட்டுமல்ல, அவர்களின் முழுப்பரம்பரையே முழுமாடு, முழுப்பன்றியைத் தின்று வாழ்ந்தவர்கள் தான். பின்னர் பல காரணங்களுக்காக, health, religion, ethical, moral, environment போன்ற பல காரணங்களுக்காக சைவ உணவுண்பவர்களாக அல்லது முட்டை மட்டும் உண்பவர்களாக மாறியவர்கள். ஆனால் அவர்களும், இறைச்சி உண்பவர்களை மத்தியில் சென்று இறைச்சி உண்பதை நிறுத்துமாறு பிரச்சாரம் செய்வதுண்டு. அவர்களும் முன்பு இறைச்சி வகைகளைத் உணடவர்கள் காரணத்தால், அவர்கள் மற்றவர்கள் இறைச்சி உண்பதைத் தடுக்க முடியாது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா? அது உங்களின் கருத்தல்ல என்றால், வேத காலத்தில் மாட்டைச் சாப்பிட்டவர்களின் வாரிசுகள், தமது நம்பிக்கையின் அடிப்படையில் இக்காலத்தில் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என மற்றவர்களுக்குக் கூறினால், அது பெரிய விவாதத்துக்குரிய விடயமா?

  //இப்ப வருகிர எல்லா மேலத்திலும் செத்த மாட்டுத்தோல் தான் பயன்படுத்தப்படுகிறது என்று யார் சொன்னார்கள். மாட்டை கறிக்காக வெட்டியதுக்கப்புரம் தோலை என்ன செய்வார்கள்? ///

  என்னுடைய கருத்து என்னவென்றால், மேளமும் மிருதங்கமும் செய்வதற்கென்றே மாட்டை யாரும் வெட்டுவதில்லை என்பது தான்.

  //அதையும் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தான் உங்களுக்கு செய்து கொடுக்கிறார்கள்.///

  இவ்வளவு விலை உயர்ந்த இசைக்கருவிகளின் தயாரிப்பின் முழு உரிமையும் ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் இன்றும் இருந்தால் அவர்கள் எல்லாம் மிகவும் பணக்காரர்களாக அல்லவா இருப்பார்கள். தமிழ்நாட்டில் தோல் வியாபாரம் முற்றுமுழுதாக முஸ்லீம்களின் கைகளில் தான் உள்ளதே தவிர ஒடுக்கப்பட்ட மக்களிடம் இல்லை. மாட்டுத் தோல் வியாபாரத்தால் எத்தனையோ முஸ்லீம்கள் கோடீஸ்வரர்களாகியுள்ளார்கள். உங்களின் பிரச்சனை என்னவென்றால், பண்டைக்காலத்தையும், இக்காலத்தையும் ஒப்பிட்டுக் குழப்புவது தான். அதைத் தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் செய்திருக்கிறார்.

  //செத்த மாட்டுத்தோலை உரித்தற்காகத்தான் வட இந்தையாவில் Orthodox Hinduக்கலால் ஈவு இரக்கமின்றி தலித் மக்கள் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.///
  செத்த மாட்டின் தொலை உரித்ததற்காக அல்ல, மாட்டின் தோலை மாடு உயிரோடிருக்கும் போதே உரித்துக் கொண்டிருப்பதாக சிலர் வதந்தியைப் பரப்பியதால் தான் அந்தச சம்பவம் நடந்தது. உலகில் பல இனக்கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் முக்கிய காரணமே பொய் வதந்திகள் தான்.

  ///இந்து மதத்தில் மனித உயிரைவிட பசிவின் புனிதம் தான் பெரியது.///

  பசுமாட்டை வெட்டி உண்டால் மட்டும் தான் உயிர் வாழலாம் என்ற நிலையில் தான் இந்தியாவில் மக்கள் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது உங்களின் பதில். பசு மாட்டுக்கறியை விட எவ்வளவோ இலகுவில் கிடைக்கக் கூடிய உணவும், புரத வகைகளும் இந்தியாவில் உண்டு, அவற்றை உண்டும் உயிர் வாழலாம். பசு மாட்டுக் கறி அல்லது பட்டினி கிடந்தது சாவது தான் இந்துமதத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்த கதி என்பது போலிருக்கிறது உங்களின் வாதம். இதனால் தான் தமிழ்நாட்டில் யாராவது முற்போக்கு என்ற சொல்லைச் சொன்னாலே எனக்குச் சிரிப்பு வருவதுண்டு. 🙂

  • திரு வியாசன்,

   மாட்டுக்கறி திண்ணும் வரலாற்றை அம்போத்கார் மற்றும் டி.என்.ஜா போன்ற ஆய்வாளர்கள் எடுத்துக்கூறாமல் இருந்தால், நீங்கள் வரலாற்றை திருத்தி கூறியிருப்பீர்கள். இப்போது ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி. நாங்கள் இந்துக்களை மாட்டுக்கறி சாப்பிட வேண்டாம் என்று தான் கூறுகின்றோம், ஆனால் சாப்பிடுவதை தடுக்கவில்லை.

   K.Senthilkumaran கூறியது போல தடை பசு வதை தடை சட்டம் மூலம் இதை உங்கள் கொள்கையோடு ஒத்துப்போகும் BJP அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதே அதற்கு என்ன கூறுகிறீர்கள்.

   //மாட்டின் தோலை மாடு உயிரோடிருக்கும் போதே உரித்துக் கொண்டிருப்பதாக சிலர் வதந்தியைப் பரப்பியதால் தான் அந்தச சம்பவம் நடந்தது. உலகில் பல இனக்கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் முக்கிய காரணமே பொய் வதந்திகள் தான்.//

   உங்களுடைய இந்து பாசிச தோலை உரித்து காட்டியத்ற்கு நன்றி. உங்களை போன்ற இந்து மதவெறியர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லை இதன் மூலம் நிறுபித்துள்ளீர்கள். வதந்தி உண்மையாகக் கூட இருந்து விட்டு போகட்டுமெ உங்களுக்கு (orthodax hindus) யார் உரிமை குடுத்தது அவர்களை கொல்ல. இதுவரை மதக்கலவரத்துக்கு இப்படி ஒரு விளக்கம் RSS கூட குடுத்திருக்காது.

 18. viyasan://இந்த 21வது நூற்றாண்டில் ஒருவர் உண்ணும் உணவை எப்படி மற்றவர்களால் தடுக்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை. ஒருவரின் சமையலறைக்குள் புகுந்து பார்க்குமளவுக்கு யாருக்கும் நேரமும இல்லை, அந்தளவுக்கு உரிமையும் இல்லை. அதனால், பசுவதையை எதிர்க்கும் இந்துக்கள், அது தவறு என்று எடுத்துச் சொல்வார்களே தவிர, தடுக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை

  No one eat cow meet in Gujarat just because of the following law:

  குஜராத்
  ————-
  மும்பை விலங்கு பாதுகாப்பு சட்டம் 1954:

  குஜராதில் மாநில கால்நடை படுகொலை , மாடுகள் படுகொலை , மாடுகள் , எருதுகள் மற்றும் எருதுகள் மற்றும் கன்றுகளுக்கு “முற்றிலும்” தடைசெய்யப்பட்டுள்ளது . எருமைகள் படுகொலை சில நிபந்தனைகளை அனுமதிக்கப்பட்டது

  அன்புடன் ,
  கி.செந்தில் குமரன்

  • இந்துக்களைப் பற்றிய எல்லா, நல்லது கெட்டதுக்கும், குஜராத்தையும், மோடியையும் உதாரணம் காட்டுவது, குண்டுச்சட்டிக்குள் குதிரை விட்டுக் கொண்டு, அது தான் உலகம் என்று நினைப்பது போன்றது. குஜராத்துக்கு வெளியே, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ளதால் குஜராத்தில் அந்தச் சட்டத்தை நடைமுறையில் கொண்டு வரக் கூடியதாக இருந்தது. குஜராத்தில் இந்துக்கள் மட்டும் மோடியை ஆதரிக்கவில்லை, கிறித்தவர்க்ளும், முஸ்லீம்களும் கூடத் தான் மோடியை ஆதரிக்கின்றனர். இது தான் சனநாயத்தின் குறைபாடு, சிறுபான்மை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக பெரும்பான்மையினர் சட்டங்களைக் கொண்டு வரலாம். அதற்கும் இந்துமதத்துக்கும் என்னையா தொடர்பு. தமிழ்நாட்டிலும் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அப்படியான சட்டம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறுவதற்கு வாய்ப்புக் குறைவு, அப்படியானால் குஜராத்தின் இந்துக்களுக்கும், தமிழ்நாடு இந்துக்களுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு என்பது தெரிகிறது. அப்படியிருக்க, எப்படி குஜராத் சட்டத்தை மட்டும் வைத்து, இந்து மதமும், இந்துக்களும் சிறுபான்மையினரின் மாடு தின்னும் உரிமையைத் தடுக்கிறார்கள் என்று கூறலாம், என்பதை அண்ணன் செந்தில் குமரன் விளக்குவார் என்று நம்புகிறேன்.

   • [1]Can you apply this concept in EElam issue?

    [2]Can minatory Eelam Tamil people obey the wishes of Majority Singala people concept of integrated Srilanka?

    [3]What a conflict in your statements!If Hindu religion is not responsible for this law, than are you trying to match this same logic for EElam and accepting that Srilankan Gov is not responsible for 2009 Eelam genocide ?

    Viyasan//இது தான் சனநாயத்தின் குறைபாடு, சிறுபான்மை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக பெரும்பான்மையினர் சட்டங்களைக் கொண்டு வரலாம். அதற்கும் இந்துமதத்துக்கும் என்னையா தொடர்பு.

   • Hello Viyasan,

    [1]You are telling that People can not stop others to eat cow meat. For that I am replaying you that “There IS a law in state law Gujarati-India” that can stop people to eat cow meat.

    [2] But with out understanding this answer and with out saying that this law is true or not, you start deviating from your own point.

    [3]This law is coming under state list in our constitution so the law is differing from oe state to another state.

 19. பால் வற்றிய பசு மாட்டை எந்த மனிதனாவது தண்டத்திற்கு வெட்டியாக செலவு செய்து பராமரித்து வளர்க முன்வருவானா ? அதை கறிக்கு விற்ககூடாது என்று பார்பனர்கள் சொல்வதால் அந்த அடி மாட்டை பார்பனர்களிடம் கொடுத்து 4 ஆயிரமோ 5 ஆயிரமோ பணம் வாங்கிக்கொள்ளுங்கள் மக்களே…. புனித பசுவுக்காக பார்பனர்கள் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள். தினமும் பூஜை செய்து அதை பராமரிப்பார்கள். அந்த புனித பசுவுக்காக பார்பனர்கள் இந்த திட்டத்தை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

 20. உணவு பழக்கம் அவரவர் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப ஏற்படுவது! அதில் மதம், இந்துத்வா ஆயினும், இஸ்லாம் ஆயினும் தலையிடுவது தனி மனித உரிமையில் தலையிடுவதாகும்! பன்றிகளும்,மாடுகளும் இந்தியா போன்றநாகரீக மற்றநாடுகளில் மட்டுமே தெருவில்நடமாட விடப்படுகின்றன! கிடைக்கும் கழிவுப்பொருள் அனைத்தையும் சாப்பிடுகின்றன! இஙகு ஆறுகள், ஏரிகள்,நகரங்களை ஒட்டிய கடல் பகுதியும் அசுத்தப்படுப்படுவதால், இங்கு கிடைக்கும் மீன் வகைகளும் , கீரை உள்ளிட்ட காய்கறிகளூம் கூட ஈயம், பாதரசம் முதலிய நச்சுகள் அதிகரித்து காணப்படுகின்றன! அதனால் பன்றிகறியாயினும், பசுக்கறியாயினும், ஆடு, கோழி கறியாயினும் சுகாதாரமான இடங்களில் வளர்க்கப்பட்டு, சுத்தமான முறையில் தாயாரிக்கப்பட்டு வ்ற்பனை செய்யப்படல் வேண்டும்!

  வளரும் குழந்தைகளுக்கு புரதம் மிக மிக அவசியம்! சரியான அள்வில் சிறுவயது முதற்கொண்டே புரதம் சேர்க்கப்படாவிட்டால், மூளைத்திறன் குறைவு, உடல் வளர்ச்சிக்குறைவு உள்ளிட்ட மரபு சீர்கேடு உறுதி!

  பசு தெய்வமாக வழிபடபாட்டது என்பதெல்லாம் சும்மா கதை! “பார்ப்பான் வளர்த்த பசு போல……” , “உப்பு கண்டம் பற்கொடுத்த பார்ப்பனத்தி போல…” என்ற பழமொழிகள் எப்படி ஏற்பட்டது? தெனாலி ராமன் வளர்த்த குதிரை போல?

  • // பசு தெய்வமாக வழிபடபாட்டது என்பதெல்லாம் சும்மா கதை! “பார்ப்பான் வளர்த்த பசு போல……” , “உப்பு கண்டம் பற்கொடுத்த பார்ப்பனத்தி போல…” என்ற பழமொழிகள் எப்படி ஏற்பட்டது? தெனாலி ராமன் வளர்த்த குதிரை போல? //

   உங்களைப் போன்ற புண்ணியவான்கள்தான் இது போன்ற பழமொழிகளை பரப்பி வைத்திருக்கவேண்டும்..

   பார்ப்பான் வளர்த்த பசு போல என்றால் என்ன பொருள்..?!

   உப்பு கண்டம் என்பது மீனாகவோ, இறைச்சியாகவோதான் இருக்கவேண்டுமா..?! நார்த்தங்காயை உப்பு கண்டம் போடுவதில்லையா..?!

   இறந்த பசுவின் இறைச்சியை இந்துக்களில் சமூக,பொருளாதார ரீதியில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் உண்பது தீட்டாகப் பார்க்கப்பட்டாலும் அது தடுக்கப்படவில்லை..

   மாட்டை இறைச்சிக்காக கொன்று உண்ணும் வழக்கம் புத்தருக்குப் பின் ஒழிந்தது என்றாலும், இசுலாமிய படையெடுப்புகளுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் வந்தத