privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதில்லை கோயில் மீட்பு மாநாடு - பிரச்சாரம்

தில்லை கோயில் மீட்பு மாநாடு – பிரச்சாரம்

-

தில்லைக் கோவில் மீட்பு , தீண்டாமை ஒழிப்பு.

மாநாடு,பேரணி, பொதுக்கூட்டம்
16-2-2014

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது கிளிக் செய்யவும்]

  • சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
  • தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ போராடுவோம்!
  • மக்கள் சொத்தான தில்லைக் கோவிலை மீட்க சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற நிர்ப்பந்திப்போம்!

என்ற முழக்கத்தை முன்வைத்து 31-1-2014 முதல் தோழர்கள் பேருந்து, குடியிருப்பு, தனிநபர் என மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் போகும்போது பெருவாரியான மக்கள் ஆதரவு தருகிறார்கள்.

சிலர், “உச்சநீதி மன்றம் தீட்சிதர்களிடம் கோவிலை கொடுத்துவிட்டார்களே இனி நாம் என்ன செய்ய முடியும்?”  என்று ஆவேசமாகக் கேட்கிறார்கள்.

தோழர்கள்  அவர்களிடம், ” உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது என்பதற்காக நாம் நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுத்திட வேண்டுமா?” என கேள்வி கேட்டு  போராட வேண்டியதன் அவசியத்தை  விளக்குகிறார்கள்.  மக்கள்  தோழர்களுக்கு உணவு கொடுத்தும், நிதி வழங்கியும்,  “நீங்கள் தொடர்ந்து போராடுங்கள், நாங்களும் வருகிறோம்” ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

சிதம்பரம் , திருவைகுளம் பகுதியில் ஒரு விட்டில் கணவன் –மனைவி இருவருமே அரசு ஊழியர்கள். தோழர்களுடைய பிரச்சாரத்தை பார்த்தவுடன் தோழர்களுக்கு அரை மணி நேரத்தில் உணவு தயார் செய்து கொடுத்தார்கள். போராட்ட நிதி தந்து, “பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

காட்டுமன்னார்குடி பகுதியில் பேருந்து பிரச்சாரம் செய்யும் போது பள்ளி மாணவர்கள் கடவுளை பற்றி தோழர்களிடம் கோட்டார்கள். “கடவுள் என்பது பார்ப்பன கூட்டத்தால்  உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கு ஏற்படுத்தப்பட்டது. சாதி மதத்தை பாதுகாப்பதும் கடவுள் பெயரில்தான்” என்று விளக்கியவுடன் ஒரு மாணவன் கழுத்தில் இருந்த சாமிடாலரை கழட்டி தூக்கி எறிந்தான். மேலும், “இந்த மாநாட்டிற்கு கண்டிப்பாக வருகிறேன்” என்று கூறினான்.

தில்லைகாளியம்மன் கோவில் பகுதி மற்றும் அன்னாகிராமம், கீழ்கரை பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் போது மக்கள் அனைவருக்கும் உணவு கொடுத்தார்கள், நிதியும் அளித்தார்கள். “கண்டிப்பாக போராட்டத்துக்கு வருகிறோம்” என்றார்கள்

எடத்தொரு என்ற பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது வயதான பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று ஜூஸ் கொடுத்து, “நீங்க விட்டுடாதீங்க” என்று கூறி பக்கத்து வீட்டில் கடன் வாங்கி நிதி  கொடுத்து ஆதரவளித்தார்.

சிதம்பரம், காட்டுமன்னார்குடி, மயிலாடுதுறை, விருத்தாசலம் பகுதிகளில் பேருந்துகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து உற்சாகத்தோடு தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சிதம்பரம் முழுவதிலும் பரவலாக சுவர் விள்ம்பரம் செய்ததன் விளைவாக பகுதி முழுவதும் 16-2-2014 மாநாடு,பேரணி, பொதுகூட்டம் பற்றி பேசப்படுகிறது.

செய்தி
பு.மா.இ.மு, கடலூர்

தில்லை திருவாரூர் தெருமுனைக் கூட்டம்
தில்லை நடராசர் அரசு ஏற்று நடத்தக் கோரி திருவாரூரில் பிப்ரவரி 3-ம் தேதி புமாஇமு நடத்திய தெருமுனைக் கூட்டம்.

செய்தி
பு.மா.இ.மு, வி.வி.மு,
திருவாரூர்