Tuesday, April 20, 2021
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் உடல் நாற்றத்தை போற்றுங்கள்!

உடல் நாற்றத்தை போற்றுங்கள்!

-

உடல் வாசம்ருவிழி, கைரேகையை போல உடல் வாசத்தையும் தனித்துவமான அடையாளமாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாட்ரிட் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஒரு புதிய உடற்கூறியல் அடையாள முறையை (biometric authentication) உருவாக்கி வருவது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல் வாசம் எப்படி உருவாகிறது?

எக்கிரைன் வியர்வை சுரப்பி, அப்போக்கிரைன் வியர்வை சுரப்பி, தோல் மெழுகுச்சுரப்பி என்ற மூன்று சுரப்பிகள் மனித தோலில் உள்ளன. உடல் வெப்பநிலையை சீராக வைப்பதில் பங்காற்றும் எக்கிரைன் வியர்வை சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தின் பெரும் பகுதி நீரை உள்ளடக்கியதாகும். மூளையின் செயல்பாடான மனதின் உணர்ச்சி மாற்றத்தால் பெருமளவு தூண்டப்படும் அப்போக்கிரைன் வியர்வை சுரப்பிகள் உடலில் அக்குள் போன்ற முடியிருக்கும் பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் திரவத்தில் புரதம், கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு கலந்துள்ளன. இச்சுரப்பிகளிலிருந்து வெளியேறும் திரவத்தை, தோலில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள் உட்கொண்டு வளர்சிதை மாற்றமடைய செய்வதால் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு தனிநபரின் வாசனை வகை-மாதிரியானது, MHC எனப்படும் பல்லுரு மரபணு தொகுதியிலுள்ள மரபணுக்களால் தீர்மானிக்கப்படுவதால், ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை, கருவிழியைப்போல தனித்துவமான உடல்வாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி – அமைப்பில் முக்கிய பங்காற்றும் MHC மரபணுக்கள் உடல் வாசத்தைக் கொண்டு தனது இணையை தேர்ந்தெடுப்பதிலும் ஆதிக்கம் செலுத்துவது கண்டறிப்பட்டுள்ளது. ஒரு சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் இயற்கையான தனித்துவமான வாசத்தை கொண்டு எதிர் MHC மரபணு கொண்டோரை அடையாளம் கண்டு பாலியல் இணையாக தேர்ந்தெடுத்தது தெரிய வந்துள்ளது. அதாவது, செயற்கையான வாசனை திரவிய மணத்தால் மட்டும் பாலியல் உணர்வை தூண்ட முடியாது.

உடல்வாசத்தில் வயது, உணவு, பாலினம், உளவியல் மனப்பாங்கு மற்றும் மரபணு பின்புலம் ஆகியவற்றை பொறுத்து ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகள் கூட வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கின்றன. அதாவது நாம் வெளிவிடும் மூச்சு, வியர்வை, தோல், சிறுநீர், மலம் மற்றும் இனப்பெருக்க சுரப்பிகள் VOC கலவைகளின் முக்கிய மூலங்கள் எனவும் நோய் தொற்று மற்றும் உடலின் உட்புற வளர்சிதை மாற்ற குறைபாடுகள், புதிய VOC கலவைகளை உற்பத்தி செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

காலரா, நிமோனியா, காசநோயிலிருந்து இரத்த புற்றுநோய், கணைய மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் வரை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட வாசமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு நோய்களை முன்னறிந்து விடமுடியும் என்றும் மன நோய்களைக் கூட உடல் வாசங்களை கொண்டு அறியமுடியுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பண்டைய கிரேக்கத்திலும், பண்டைய இந்தியாவிலும் நோய்களையும், விசக்கடிகளையும் உடலின் வாசம்மூலமே கண்டறியும் முறை அனுபவத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாசங்களை நுகர்ந்தறிய மின்னணு நுகர்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் இத்துறையில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

விலங்குலகில், உணவை கண்டறிவதிலும், சுற்றுச்சூழல் நச்சுகளை நுகர்ந்தறிவதிலும், உறவினர்கள், எதிரிகளை வேறுபடுத்திக் கொள்வதிலும் உடல்வாசம் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்கள் உள்ளிட்டு அனைத்து பாலூட்டிகளின் குட்டிகளும் முதலில் வாசனை உணர்வின் மூலமே தனது தாயுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.

இது மட்டுமின்றி மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உலகெங்கிலும் உடல்வாசம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருவரின் தனித்துவமான அடையாளமாக அவரது உடல் வாசத்தை பயன்படுத்த முடியும் என்று மாட்ரிட் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர்புள்ளியியல் அங்கீகரிப்பு முறையை உருவாக்கி வருகின்றனர்.

உளவியல் மனப்பாங்கு உடல்வாசத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை ஆய்வு செய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை 28 வெவ்வேறு அமர்வுகளில், வெவ்வேறு மனநிலைகளில் சோதித்ததில் தனித்துவமான உடல்வாசத்தின் வகை-மாதிரி 85%-க்கும் மேல் நிலையானதாக, அடையாளம் கண்டுணரக்கூடியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது நடைமுறையிலிருக்கும் நுகர் உணர்கருவி தொழில்நுட்பத்தாலும் 85%-க்கும் மேற்பட்ட துல்லியத்தில் ஆட்களின் அடையாளங்களை கண்டறிந்து விடலாமாம்.

இன்னும் ஆரம்ப ஆய்வுகட்டத்தில் இருக்கும் இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது ஒரு அறையில் உணர்கருவியை பொறுத்தி, அறைக்குள் வருபவர்கள் அறியாமலேயே அவர்களது உடல் வாசத்தை பதிவு செய்யும் சாத்தியமிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் வாசம்அதாவது, ஒருவர் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வந்தாலும், மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வந்தாலும் அவரது உடல் வாசத்தின் அடிப்படை தன்மை மாறுவதில்லை. அதே போல சாஸ்திர பஞ்சாங்கங்கள் ஜவ்வாது பூசி விட்டு வந்தாலும், ஒரு நகர சுத்தித் தொழிலாளி கால்வாயில் வேலை செய்து விட்டு வந்தாலும் அவர்களது தனித்துவமான உடல் வாசனை மாறிவிடுவதில்லை.

உண்மை இப்படியிருக்க உடலுழைப்பை செலுத்தும் உழைக்கும் மக்கள் வியர்வையின் காரணமாக அருவருப்புடன் பார்க்கும் மேட்டிமைத்தனம் உலகெங்கும் இருக்கிறது. நமது நாட்டிலோ அதற்கும் மேலதிகமாக மாட்டிறைச்சி உண்பதால் தலித் மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவுவதுடன் உடல்வாசம் என்பது சமூக ஒடுக்கு முறையின் பகுதியாகவும் இருக்கிறது.

மேலும், இன்றைய முதலாளித்துவ நுகர்வு உலகில் ‘உடல் துர்நாற்றம்’ மிகப்பெரும் பிரச்சனையாகவும், அதற்கு தீர்வாக வகைவகையான சோப்புகளும், வாசனை திரவியங்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் சில வாசனை திரவியங்கள் பெண்களை பாலியல் ரீதியில் ஈர்க்குமெனவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற பாரீஸ் நகரத்தை நோக்கி உலகின் சீமான்களும், சீமாட்டிகளும் எப்போதும் படையெடுக்கிறார்கள்.

இயற்கையான, மரபுரீதியாக தொடர்புடையதும், வரலாற்று – அறிவியல் ரீதியாக  பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உடல்வாசம் தான் அருவருப்பானதாகவும் சாதிரீதியான ஒடுக்குமுறை கருவியாகவும் இந்திய சமூகத்தில் கருதப்படுகிறது. நவீன முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமோ அதையும் மூடி மறைத்து, இருபாலினத்தவரும், எதிர் பாலினத்தவரை கவருவதற்கு விதவிதமான பொருட்களை களமிறக்கி சந்தையாக்கி  விட்டுள்ளது.

ஆனால் உங்களது இயல்பான தனித்துவமான உடல் வாசனைதான் உங்களது அடையாளமாகவும், வரும் நோய்களை முன்னறிந்து சொல்வதற்கும் எதிர்காலத்தில் பயன்படப்போகிறது. ஆகவே உங்களது நாற்றத்தை போற்றுங்கள்!

– மார்ட்டின்

மேலும் படிக்க

 1. வரும் நோய்களை முன்னறிந்து சொல்வதற்கும்////.
  .
  உடல் கப்பை வச்சு நோயென்ன என்று கண்டுபிடிக்கும் அந்த அப்பாடக்கர் டாக்டர்தான் யாரோ?

  • உடலை நுகர்ந்து பார்த்து புற்றுநோய் கண்டுபிடிக்கும் நாய்கள்….

   • பால் என்பது ரத்தம் என்று தவறாக சொல்கிறார்கள்.இஸ்லாமியர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள் என்றாலும் ரத்தத்தை தவறியும் உண்பதில்லை.அப்படி சாப்பிட்டால் அது ஹராம்.ஹலால் என்பது இரத்தமில்லாத உணவே(மாமிசம் அல்லது வேறு எந்த உணவாகினும்).பால் என்பது ரத்தம் என்றால் இஸ்லாமியர்கள் சாப்பிட மாட்டார்களே..ஆனால் இஸ்லாமியர்கள் பால்&பால் பொருட்கள் சாப்பிடுபவர்கலகவே உள்ளார்கள் .எனவே பால் என்பது ரத்தம் என்ற வாதமே தவறு.

 2. முஸ்லிம் மட்டும் தான் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறாரா? இதிலுமா உங்களுடைய மத வெறியை காமிக்க வேண்டும்? திருந்துங்க பாஸ்.

 3. ஆனா ஒன்னு உடல் நாத்தத்தெ மென்டெய்ன் பண்றதுல நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியுமா ? குளிக்காம இருந்தே சாதிப்பாங்களே. அதான் வெளினாட்டவர்கள் தூரத்துல இருந்தே இந்தியாகாரன் வரான்னு கண்டு பிடிச்சிற்றாங்களே.

  Hari & maakan both are right. meat & milk both should be avoided. But maakan no need to repeat a very silly statement.

  Mr Truth, read again parvaiyaalans comment. He his saying muslims follows their believe strictly. If scientifically proven milk is a blood, they will not consume.

  • Muslims are taught stuff like that,halaal meat is a copy of the jewish tradition of kosher meat.

   please read up about the kosher method of slaughtering animals,it gives a detailed reasoning of why they feel they should/shouldn’t eat certain birds/animals.

   muslim dietary laws are plagiarism of jewish kosher law.

   • Hi hari,
    Please try to understand that , the muslims strongly believe that all revolution or vedaas given to moses , jesus and the prophets , who were there before them also got from the same God who created whole living beings. So, there is no point in saying muslims copying all things from jews or christian. actually the rule is from the same God to different peoples who lived in different decades. some destroyed these laws and some performing till date. that’s what need to be understand.

    • Well i see a lot of anti semitism in the arab world and in the muslim world,they claim that jews fought with the prophet and hence are enemies,

     pagans are also enemies,so are christians.

     If Muslims believe this,then the crusades would have never heppened.

     Is the muslim ready to tell people that the crusades were mere political wars to gain control of the sinai peninsula and not a religious war as portrayed?

     They should do that.

  • shna,

   I didn’t say anything against parvaiyaalans comment. I was referring to the author who wrote this article. Read the introduction lines. He has mentioned Muslims use perfumes to get rid of the smell of beef meat.

   I condemn this one only. Not the views of parvaiyaalan.

   I too agree Muslims are strict in their halal foods and don’t consume haram. This is good in terms of following God’s order and also for health concern.

   • Mr. Truth,
    எதையுமே முழுவதுமாக படித்துப் புரிந்து கொள்ளாத முட்டாள்களும், கருத்துக் குருடர்களும் மட்டுமே இதை இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதப்பட்டதாக கருதமுடியும். இந்தக் கட்டுரை சமூகத்தில் நிலவும் கருத்துக்களை எடுத்துக்காட்டி அதை கண்டிக்கவும் செய்கிறது.

    ///நமது நாட்டிலோ அதற்கும் மேலதிகமாக மாட்டிறைச்சி உண்பதால் தலித் மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவுவதுடன் உடல்வாசம் என்பது சமூக ஒடுக்கு முறையின் பகுதியாகவும் இருக்கிறது.///

    ///ஆனால் உங்களது இயல்பான தனித்துவமான உடல் வாசனைதான் உங்களது அடையாளமாகவும், வரும் நோய்களை முன்னறிந்து சொல்வதற்கும் எதிர்காலத்தில் பயன்படப்போகிறது. ஆகவே உங்களது நாற்றத்தை போற்றுங்கள்!///

 4. மிகவும் பயனுள்ள தகவல்.

  ஒவ்வொருவருக்கும் தனி உடல் வாசம் உண்டு. மேலும் அதன் மூலம் நோய்களை கூட கண்டறிய முடியும் என்பது.

  இஸ்லாமியர்களை பற்றிய தவறான புரிதல்களை களையும் விதமாக பின்வரும் கருதுதுக்களை பதிவு செய்கிறேன்.

  1. பால் தயாரிப்பு பற்றி இஸ்லாம் கூறுவது:

  நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் 16:66)

  2. நறுமணம் பூசுதல் பற்றி இஸ்லாம் கூறுவது:

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

  “ஒரு பெண் மணம் பூசி அதன் நறுமணத்தை மக்கள் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபச்சாரியாவாள்“.
  ஆதாரம் : அந்நஸஈ

  3. மனிதனை அழகிய வடிவமைப்பில் படைத்துள்ளதாக இறைவன் கூறுகின்றான்.

  அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்
  அல்குர்ஆன் 40:64)

  “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான். அல்குர்ஆன் 71:17)

  இஸ்லாமையும், இஸ்லாமிய மக்களையும் தவறாக விளங்கியுள்ள மற்ற சகோதர, சகோதரிகள் மேற்சொன்ன வசனங்களை ஆராய்ந்தால் தீர்வு கிட்டும்.

  மேலும் இதுபோன்ற பல்வேறு உண்மைகள் திருக் குர்ஆனிலும், நபிகள் நாயகம் வாழ்விலும் இருப்பதை அதை படிக்கும்போது நாம் புரிந்து கொள்ளலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க