முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

-

ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை: பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்!

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் அனுதாபம் – என்ற நேரெதிரான இரண்டு விசயங்களையும் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. மூவர் தூக்கு மட்டுமல்ல, ஈழப் பிரச்சினை என்பதே ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவர் விரும்பிய படியெல்லாம் ஆதாயங்களைக் கறந்து கொள்ளக் கிடைத்த காமதேனுவாகத்தான் அன்று முதல் இன்று வரை பயன்பட்டு வருகிறது. அவ்வாறு கறந்து கொடுக்கும் பணியைத் தமிழகத்தின் இனவாதிகள் செய்து வருகிறார்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.

ராஜீவ் கொலை வழக்கு - சிறையில் உள்ள எழுவர்
ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனே, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், மூவரையும் தமிழக அரசு விடுவித்துவிடும் என்றும் அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

நோயாளியான தந்தையைப் பார்ப்பதற்குகூட நளினிக்கு பரோல் தரமுடியாது என்று அனுமதி மறுத்த “மனிதாபிமானி”யும், நளினியின் தூக்கு தண்டனையைக் குறைத்ததற்காகவும், நால்வரையும் தூக்கிலிடுவதைத் தாமதித்ததற்காகவும் கருணாநிதியைச் சாடிய “சுப்பிரமணிய மாமி” யுமான ஜெயலலிதா, மூன்றே நாளில் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கெடு வைத்து கர்ச்சிக்கிறார் என்றால், அதன் நோக்கம் நேர்மையானதாக இருக்குமென்று அரசியல் மூடர்கள் கூட நம்ப இயலாது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடனான தி.மு.க., தே.மு.தி.க.-வின் கூட்டணி வாய்ப்புகளை முறியடிப்பது ஜெயலலிதாவின் முதல் நோக்கம். மூவர் விடுதலைக்காகப் போராடிய – குரல் கொடுத்த அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் பெருமையையும் புகழையும் களவாடிக் கொள்வது இரண்டாவது நோக்கம். மூவர் விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு தருமபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்ற ரத்தத்தின் ரத்தங்களையும் விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்வது மூன்றாவது நோக்கம். தனது அதிரடி அறிவிப்பின் காரணமாக மூவர் விடுதலை தடைப்பட்டு விடுமோ என்ற கவலை ஜெயலலிதாவுக்கு இல்லை. ஏனென்றால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்பதும் தூக்கிலிட வேண்டும் என்பதும்தான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த தீர்ப்புக்கும், எழுவரை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுச் செய்திருக்கிறது மத்திய காங்கிரசு அரசு. இம்மனுக்களை அனுமதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், “எழுவர் விடுதலை எனும் முடிவை மேற்கொள்வதற்கு முன்னர் பின்பற்றியிருக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை” என்றும் கூறியிருக்கிறது. இவையனைத்தும் ஜெயலலிதா எதிர்பார்த்த எதிர்வினைகள்தாம்.

ஜெயலலிதாவின் தந்திரங்கள் ஒரு புறமிருக்கட்டும். ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் எற்றுக் கொண்ட மறுகணமே, காங்கிரசார் அதனை வெடிவெடித்துக் கொண்டாடி, தாங்கள் நசுக்கி ஒழிக்கப்படவேண்டிய நச்சுப்பூச்சிகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றர்.

ராகுல் - சோனியா
ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை.

“கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நடந்திருக்கும் கால தாமதம் என்ற காரணத்துக்காக தூக்கு தண்டனையை ரத்து செய்வதென்பது பிற வழக்குகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; ஒரு பிரதமரைக் கொலை செய்த வழக்கிற்குப் பொருந்தாது; அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது ராஜீவ் என்ற தனிநபரல்ல, இந்திய அரசு. எனவே, இந்தக் கொலை தனிநபருக்கு எதிரானது அல்ல, தேசத்துக்கு எதிரான குற்றம் என்பதால் இதனை மன்னிக்கவே கூடாது” என்பதுதான் காங்கிரசின் வாதம். சுப்பிரமணிய சாமி, சோ, பாரதிய ஜனதா உள்ளிட்டோரின் வாதமும் இதுவேதான்.

ஆனால், 1999-இல் 19 பேரை விடுதலை செய்து நால்வரின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, “இந்தக் கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையோ, தேசத்துக்கு எதிரான தாக்குதலோ அல்ல; ராஜீவ் என்ற தனிநபருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே” என்றும் கூறியிருக்கிறது. மேலும், சிறீபெரும்புதூரில் கொல்லப்படும்போது ராஜீவ் பிரதமரல்ல; தனது ஊழல்கள் மற்றும் பாசிச நடவடிக்கைகளின் காரணமாகத் தோற்றுப்போய் மதிப்பிழந்த ஒரு முன்னாள் பிரதமர். இந்த உண்மைகளையெல்லாம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டுத்தான், “ராஜீவ் கொலை என்பது தேசத்துக்கு எதிரான தாக்குதல்” என்ற தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துகிறது பார்ப்பனக் கும்பல். ராஜீவால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் தோற்றுப்போய் மதிப்பழந்து திரும்பி வந்த பின்னரும், அந்த ஆக்கிரமிப்பையும் படுகொலையையும் “தேசத்தின் முடிவு” என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

இந்த அடிப்படையில்தான் “தூக்கு தண்டனையை ரத்து செய்த தீர்ப்பே தவறு” என்கிறார் அருண் ஜேட்லி. “இவர்களுக்கெல்லாம் கருணை காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார் ரவிசங்கர் பிரசாத். “அரசியல் சட்டப்பிரிவு 256-இன் கீழ் இம்முடிவை அமல்படுத்த விடாமல் தமிழக அரசை பிரதமர் தடுக்க வேண்டும்” என்கிறார் சு.சாமி. இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதாவின் தலைவர்கள். ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனோ, எழுவரை விடுவிப்பது என்ற ஜெ.அரசின் முடிவை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது என்று தைரியமாகப் புளுகுகிறார். ஜெயலலிதா நடத்துவது நாடகம் என்று தெரிந்தவரான ஒப்பனைக்காரர் சோ, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இதனை, “இதெல்லாம் அரசியல்” என்கிறார். திராவிட அரசியலுக்கு ஜெயலலிதா பலியாகி விட்டதாகவும், இத்தகைய அணுகுமுறை அவர் தேசிய அரசியலில் இறங்குவதற்கு உதவாது என்றும் அங்கலாய்த்துக் கொள்கிறது எக்ஸ்பிரஸ் நாளேடு.

மூவர் தூக்கு ஆகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், காஷ்மீர் பிரச்சினையாகட்டும் – இவையனைத்தையும் பொருத்தவரை காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற வெறியர்கள் மட்டுமின்றி, வட இந்தியக் கட்சிகள், ஊடகங்கள் முதல் அரவிந்த் கேஜ்ரிவால் வரையிலான அனைவரின் கருத்தும் ஒன்றுதான். அமைதிப்படையை அனுப்பியது முதல் இனப் படுகொலையை உடனிருந்து நடத்தியது வரையிலான எல்லா நடவடிக்கைகளும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவ ஒடுக்குமுறைகளும் சரியானவை, கட்சி அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவை, தேசிய நலனின் பாற்பட்டவை என்பதுடன், இவற்றை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசவிரோத சக்திகள் என்பதுதான் இவர்களது கண்ணோட்டம்.

பார்ப்பனீய தேசியம்
“பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை”

சுருங்கக்கூறின், பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை என்பதுதான் காங்கிரசு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் கருத்து. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை என்ற பெயரில், ஆக்கிரமிப்பு முதல் இன அழிப்பு வரை எதையும் செய்யலாம் என்ற பாசிச அரசியலை அவர்கள் ஆணவமாகப் பேசுகிறார்கள்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், எழுவரின் விடுதலை செய்வது என்ற ஜெ.அரசின் முடிவையும் வரவேற்று கொண்டாடுவோர் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இராஜபக்சேவின் இன அழிப்புப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசுக்கு எதிராகவும், அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் மற்ற சந்தர்ப்பங்களில் சண்டமாருதம் செய்யும் வைகோ, சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன் உள்ளிட்டோர், “ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை; ஆகவே, அது போர்க்குற்றவாளிக்கு எதிரான ஒரு நடவடிக்கை” என்று பேசுவதில்லை. இலங்கை அரசின் இறையாண்மை கொண்ட அதிகாரத்தின் பெயரால் இன அழிப்புப் போரை ராஜபக்சே நியாயப்படுத்துவதைப் போலத்தான், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் காட்டி இந்திய அமைதிப் படையின் போர்க்குற்றங்களை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது என்று பதிலடி கொடுப்பதில்லை.

ராஜீவ் கொலை என்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த போதிலும், பயங்கரவாத தடை சட்டத்தின் (தடா) கீழ், போலீசே எழுதிக்கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் பித்தலாட்டம் செய்த தியாகராசனின் ஒப்புதல் வாக்குமூலமும் இப்போது வெளிவந்திருக்கிறது. இத்தனைக்குப் பின்னரும் தனது தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த மறுக்கும் உச்ச நீதிமன்றத்தின் நேர்மையை இவர்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. அப்சல் குரு முதல் வீரப்பன் கூட்டாளிகள் வரையிலான பலருக்கும் உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தும் அரசியல் ரீதியான முடிவுகளேயன்றி, சாட்சியங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல என்ற உண்மையை மூவர் பிரச்சினையுடன் இவர்கள் இணைத்துப் பேசுவதில்லை.

மாறாக, “ராஜீவைக் கொலை செய்தது தவறு; உண்மையான குற்றவாளிகளைப் பிடித்து தண்டியுங்கள்; மூவரும் நிரபராதிகள் என்பதால் விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். அல்லது, “மூவருக்காக மட்டும் கேட்கவில்லை, மரண தண்டனையே கூடாது என்பதால் கேட்கிறோம்” என்று மேலும் ஒரு அடி பின்வாங்குகிறார்கள். மூன்று பேரின் உயிரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுதான் தங்களது நோக்கம் போலவும், அதன் பொருட்டுத்தான் மேற்கூறிய கேள்விகளை எழுப்பாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது போலவும் இவர்கள் காட்டுவது வெறும் பம்மாத்து.

ஜெயலலிதா
ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க தமிழினவாதிகள் மறுக்கிறார்கள்.

இனவாத பிழைப்புவாதிகளைப் பொருத்தவரை, இது மூவரைக் காப்பாற்றுவது பற்றிய பிரச்சினையல்ல; தங்கள் சோந்த அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை. அதனால்தான் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறும் அருண் ஜெட்லிக்கு எதிராக வைகோ உள்ளிட்டோர் பேச மறுக்கின்றனர். இப்பிரச்சினையில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு தெரிந்தேதான் அனைவரும் கூட்டணி அமைக்கின்றனர். பொன். இராதாகிருஷ்ணன் பேசுவது பித்தலாட்டம் என்று தெரிந்தேதான் தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவரும் மோடிக்கு காவடி எடுக்கிறார்கள்.

ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க இவர்கள் மறுக்கிறார்கள். அவ்வாறு இவர்கள் அம்பலப்படுத்துவதன் காரணமாக ஜெயலலிதா தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிடவும் முடியாது என்பதையும் இவர்கள் அறிவார்கள். ஈழத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாவுக்கு உதவியவர்களே இவர்கள்தான் என்பதுதான் இவர்கள் வாய் திறக்க முடியாத நிலையின் இரகசியம்.

1991-இல் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தமிழ் உணர்வாளர்கள், புரட்சிகர அமைப்புகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் ஜெ.அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இன்று எழுவர் விடுதலையை ஓட்டு வங்கி அரசியல் என்று பேசும் பார்ப்பனக் கும்பல், அன்று ராஜீவின் மரணத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைத் தனது ஓட்டு வங்கியாக்கிக் கொண்டது. ஈழப் போராட்டத்தையும் ஈழத்தமிழ் மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவத்திற்கு தமிழக மக்கள் ஆட்படுத்தப்பட்டிருந்தனர்.

ராஜீவ் மரணத்துக்கு மொட்டை போட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு சீரழிந்திருந்த தமிழக மக்களின் மனோபாவம், குறிப்பிடத்தக்க அளவிற்கு மூவர் தூக்குக்கு எதிரானதாக மாறியிருக்கிறது என்று சொன்னால், அதனைச் சாதித்திருப்பது மரண தண்டனை ஒழிப்பு மனிதாபிமான அரசியல் அல்ல. “இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி” என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது. எழுவர் விடுதலை குறித்த ஜெ.அரசின் அறிவிப்பு என்பது அதன் விளைவுதான்.

இனவாத பிழைப்புவாதிகள் இந்த உண்மையை இருட்டடிப்பு செய்து தமிழக மக்களை அரசியல் மொன்னைகளாக மாற்றுவதற்கான நோக்கம், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் காவடி தூக்கும் அவர்களது அரசியல் பிழைப்புவாதமே அன்றி, வேறல்ல. இந்த அரசியல் பிழைப்புவாதிகளும் பார்ப்பன பாசிஸ்டுகளும் இன்னொரு முறை ஈழப் பிரச்சினையைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே நம்முன் இருக்கும் கேள்வி.

_____________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2014
_____________________________________

 1. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு – உச்சநீதிமன்றம்.
  குற்றவாளிகளை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம்
  ஜெயலலிதா எங்களுக்கு கெடு விதிக்க முடியாது – உள்துறை அமைச்சகம்
  ராஜீவ் கொலையாளிகள் விடுதலை – ஜெயலலிதா முடிவுக்கு ராகுல் கண்டனம்
  மூவரின் விடுதலை பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை – முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்
  ராஜீவ் கொலையாளிகள் விடுதலை -குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் எதிர்ப்பு
  ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது – வாய் திறக்காத பிரதமர் காட்டம்
  தண்டனை குறைப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் – மத்திய அரசு
  ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது – சுப்ரமணிய சுவாமி
  ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம்
  மூவர் விடுதலை சிக்கலுக்கு காரணம் ஜெயலலிதாவே – கருணாநிதி

  இறுதியாக, ஏழுபேரை விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை – நிர்மலா ராணி என்கிற பொய்யரை நீதிபதியாக பரிந்துரை செய்வதற்காக, அவர் முன்னிலையாகும் வழக்குகளில் தீர்ப்புகளை திரித்து எழுதி, நீதியை வல்லுறவு செய்வதில் வல்லவரான நிதிபதி கேனச்சந்துரு.

  இப்படி அதிகார வர்க்கத்திற்குள் அறிக்கைப்போர்கள் என்றால் செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு அக்கப்போர்கள் என எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது.

  இந்த அறிக்கைப் போரிலும், அக்கப்போரிலும் யாராவது ஒருவர், எழுந்துள்ள பிரச்சனைக்கு சட்ட காரண காரியங்களோடும், நடுநிலையோடும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியும் தீர்வு சொல்வார்களா என பார்த்தால் ஒருத்தரும் இல்லை. மாறாக, எல்லோரும் கூறுகெட்டவர்கள் போலவே பேசி, பிரச்சனையை பெரிதுபடுத்தி, மேன்மேலும் சிக்கலை உண்டாக்குகிறார்கள்.

  இந்திய அரசமைப்புக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும், நீதியைக்காப்பேன் எனவும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு, எடுத்துக்கொண்ட அச்சத்தியப்பிரமாணத்தின்படி நடக்கவேண்டியவர்களே கூ முட்டைகளாக அறிக்கைபோர் விடும்போது, மற்றவர்களது அக்கப்போர்களை சொல்லவா வேண்டும்?

  இது குடியரசு நாடா அல்லது கூத்தாடிகளின் கூடாரமா… அர்த்தமே இல்லாமல் ஆளாளுக்கு அறிக்கைப்போர் விட்டு, அக்கப்போர் செய்வதற்கு?

  ஆமாம், ஆயுள் தண்டனை பெற்ற பல பேர் பதினான்கு வருட சிறை தண்டனையைக்கூட முடிக்காமல் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெளிவந்திருக்கின்றனர். இதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்.

  இவர்களைப்பற்றி எவரும் சிந்திக்காதது, குரல் கொடுக்காதது ஏன்? மற்றவர்களை விடுங்கள் ராஜீவ் கொலை வழக்கில் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பவர்கள் ஒரு சொல்லுக்குகூட, மற்றவர்களை விடுவிக்க இப்படியொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை ஏன்?

  தமிழ்நாட்டில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ளவர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தியர்கள் இல்லையா? மற்ற நாட்டவர்களாக இருந்தாலுங்கூட, அவர்கள் எப்படி நம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தண்டிக்கப்பட்டார்களோ அப்படியே, விடுவிக்கப்படவும் வேண்டும் அல்லவா?

  இவ்விசயத்தில் தமிழர்களுக்காக, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கும் மத்திய அரசு, ‘கேரள மீனவர்களை சுட்டுக்கொலை செய்த இத்தாலி நாட்டவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கமாட்டோம்’ என ஒப்பந்தம் செய்து, அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்தது ஏன் என்பதை காரணமாக முன்னிருத்தி, இந்தியா முழுவதும் ஆயுள் தண்டனையை முடித்து, எப்போது விடுதலையாவோம் என தெரியாமல் காத்திருப்போர் அனைவருக்காகவும் பொதுநல வழக்கு தொடுத்திருந்தால், நம்மைப்போன்ற சக வெளி மாநிலத்தவர்கள், தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கூக்குரலிட வாய்ப்பில்லாமல் போயிருக்கும் அல்லவா?

  Visit the complete Articles: http://www.neethiyaithedy.org/?p=1122
  Thanks Neethiyaithedy.org.

 2. வினவு ….. கருணா 2000ல் காங் கிற்காக பயந்து கொண்டு நால்வர் தூக்கில் மூவருக்கு தூக்கு கன்ஃபர்ம் என்று சொன்னதை நீர் சொல்லாமல் விட்டது செலக்டிவ் அம்னீசியாவா…? மற்றவரைப் பற்றி பேசும் போது ”என்னா… நக்கலு…”
  இது ஒரு புறம்…
  ஜெ எதுக்காக இப்படி பண்றாருன்னு தெரியாதா… ஆனா எப்படியோ இந்த விசயத்தில ஆளும் வர்க்கம் பிளவு பட்ருக்கா இல்லையா… அதப்பாக்கவேணாமா…?

  • வேதனையான விசயம்:
   மஞ்சல் துண்டு தனது ஆட்சியில்
   சோனியாவுக்கு உள்பாவாடை துவைப்பதில் காட்டிய
   ஆர்வத்தை இவர்களை வெளியில் விட மயிரளவு கூட சிரத்தை காட்டவில்லை:
   மயிராண்டிக்கு உலக தமிழர்களின் தலைவர் என்று பெரியார் திடல் வீரமணி சுவாமிகள் பட்டம்!

  • எந்த வகையில் பிளவுற்றிருக்கிறார்கள்? யார் ஓட்டு வாங்குவது என்ற அளவில்தான். மற்றபடி இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்வதில் கருத்து வேறுபாடு இல்லை…

 3. பாஷாவின் கருத்து முற்றிலும் யதார்த்தமான உண்மை.

  தமிழினம், தமிழ்மொழிப்ப்பற்று, தமிழ்தேசியம், ஈழ ஆதரவு என தமிழ்நாட்டிலிருந்து கூக்குரலிடும் வெற்றுக்காக்கைகள் அனைத்துக்குமே ” எலி வளை ” மனப்பான்மைதான் ! இவர்களின் ஒரே நோக்கம் சுயநல அரசியல் ஆதாயம் மட்டுமே ! இவர்கள் கூறுகெட்டவர்கள் போல பேசவில்லை ! சரியாகத்தான் பேசுகிறார்கள் ! பிரச்சனை தீரக்கூடாது என்பதுதானே இவர்களின் நோக்கம் !! தீர்ந்துவிட்ட பிரச்சனை ஒரு தேர்தலில் ஒரே கட்சிக்கு மட்டும்தான் ஓட்டு வாங்கி கொடுக்கும் ! தீராத பிரச்சனைதான் பல தேர்தல்களில் பல கட்சிகளுக்கும் ஆதாயமாக முடியும் !!

  சமீபகாலமாக, அரசு பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற சிலரும் அவரவருக்கு ஏற்ற பக்குவத்தில் ( ! ) சுயநல அரசியல்வாதிகளுக்கு ஈடாக திருவாய் மலர்வது பெருங்கொடுமை ! இதற்கு ஊடகங்களும் ஒரு காரணமோ என தோன்றுகிறது. இவர்களின் அச்சுபிச்சு அறிக்கை போர்கள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து புகைப்படத்துடன் பேட்டிவெளியிட்டு, இவர்களின் தலைக்கு மேலே ” பிரபலம் ” ஒளிவட்டத்தை ஒளிரச்செய்துவிடுவது இவர்களை இன்னும் தூண்டிவிடுகிறது !!

 4. மற்றவர்களை விடுங்கள் ராஜீவ் கொலை வழக்கில் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பவர்கள் ஒரு சொல்லுக்குகூட, மற்றவர்களை விடுவிக்க இப்படியொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை ஏன்?

  தமிழ்நாட்டில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ளவர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தியர்கள் இல்லையா? மற்ற நாட்டவர்களாக இருந்தாலுங்கூட, அவர்கள் எப்படி நம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தண்டிக்கப்பட்டார்களோ அப்படியே, விடுவிக்கப்படவும் வேண்டும் அல்லவா?

  Thanks for & from the Article – http://www.neethiyaithedy.org/?p=1122

 5. வினவு சொல்ல வருவது என்ன? நீதியான நேர்மையான நீதி மன்ற விசாரணையின் அடிப்படையில் வழங்கப்◌பட்ட தீர்ப்பு எனவே இவர்கள் அனைவரும் தூக்கில் போடப்பட வேண்டும் என்பதா? உங்கள் அறிவுக்கு எட்டியவரை இவை சரியாக இருந்தால் ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை தூக்கில் போடுங்கள்.

  சில ஜன்மங்களுக்கு தனக்கு வந்தால் அல்லாது எதுவும் விளங்காது. இதில் அரசியல் நடத்துவது ஜெயலலிதா மட்டும்தானா?

 6. பாஷாவின் கருத்துக்கள், சாமானியன் கருத்துக்கள் முற்றிலும் யதார்த்தமானவை.

 7. கொலைக்குற்றத்திற்கு இரண்டுவிதமான தண்டனைகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உண்டு.ஒன்று மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை.ஆனால் இரண்டு தண்டனைகளும் ஒரு குற்றத்திற்குக் கொடுக்கமுடியாது.இந்த மூன்றுபேர் தூக்குத் தண்டனையும் இந்த அடிப்படையில்தான் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.எப்பொழுது நீதி மன்றத்தால் ஆயுள்தண்டனை என்று அறிவிக்கப் பட்டதோ,அப்பொழுதே மரண தண்டனையை மறந்துவிடவேண்டும்.ஆகவே இந்த மூவரும் ஆயுள்தண்டனைக் கைதிகளாகத்தான் கருதப் பட்டு,ஆயுள்தண்டனைக் கைதிகளை எப்படி நடத்தச் சட்டத்தில் இடம் இருக்கிறதோ அப்படி நடத்தப் படவேண்டும்.காலம் தாழ்த்தியதால்,அவர்கள் அந்தக் காலம் முழுதும் குற்றவாழிகளாச் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டர்கள்.குடியாட்சியில் உயர்ந்தவன் தாள்ந்தவன் நிலை என்றெல்லாம் கிடையாது.இராஜிவ் என்பதற்காக இரண்டு தண்டனை ஒருவருக்குக் கொடுக்கவேண்டும் என்று கூறுவது,அது ஒரு வகையான கொலை வெறியே.இப்படிப் பேசுபவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால்,கொலை செய்ய அஞ்ச மாட்டர்கள். காந்தியடிகள் 1948 இல் கொலை செய்யப் பட்டார். ஆனால் கமலஹாசன் என்ற பார்ப்பனன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு “ஹே ராம்” என்ற பெயரில் படம் எடுத்து, அதில்,”நான் காந்தியைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.நாதுராம் கோசே அல்லவா கொலை செய்து விட்டார்” என்று கூறி இரண்டாவது முறையாகக் காந்தியடிகளைக் கொலை செய்தான்.அப்படிப்பட்ட இந்த கொலைவெறிக் கூட்டம்தான் இன்று ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிறது.இன்னும் சொல்லப் போனால் இவர்களின் விடுதலையை விரும்பாதவர்கள் பட்டியலில் சுப்பிரமணியசாமி முன்னிலையில் இருக்கிறார்.அவர் ஜெயின் விசாரண ஆணயத்தால் கட்டம் கட்டப் பட்டவர்.ஏற்கன்வே படித்தவர்கள் மத்தியில் அவர் பெயர் ராஜிவ் கொலையில் சந்தேகப் படப் படுகிறது.எந்தவேளையும் அது வெடிக்கும்.ஆனால் அதற்கு முன்பு இவர்கள் தூகிலிடப் பட்டால்,இவரது ஆதரவுப் பார்ப்பனக் கூட்டமும்,இந்திய அதிகாரவர்க்கமும்,இராஜிவ் கொலையாளிகளைத் தண்டித்துவிட்டாகிவிட்டது.அதைப் பற்றியாரும் இனி யாரும் பேசக் கூடாது என்று கூறி எல்லோருக்கும் வாய்ப் பூட்டுப் போட்டுவிடும்.சுப்பிரமணிய சாமி மாட்ட மாட்டார்.இன்னும் சிலரின் மனதில், “கூட்டணிக கட்சியின் தலவர்(இராஜிவ்) கலந்து கொண்ட கூட்டத்தில் ஜெயா ஏன் கலந்துகொள்லவில்லை” என்ற கேள்வியும் எழலாம். இராஜிவ் படுகொலை வரை ஜெயா முதல்வர் இல்லை.ஒரு கட்சியின் தலைவிதான்.ஆனால் அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் தலைவர் பாரத பிரதமராக இருந்தவர்.புரட்டகோல் படி,ஜெயா அவரை வரவேற்று அவருடன் கூட்டங்களில் பங்கேற்றிருக்கவேண்டும்.அது மட்டுமில்லை இராஜிவின் இரத்தம் காயும் முன்பே, குற்றவாளிகள் யார் என்று சந்தேகம் வரு முன்பே,”கருணாநிதி இராஜிவைக் கொன்றுவிட்டார்” என்று ஜெயலலிதாவும், வாழப்ப்பாடி இராம மூர்த்தியும் மக்கள் முன் கூப்பாடு போட்டு,தேர்தலில் வெற்றிகண்டனர்.அப்படியானால் இவர்கள் இராஜிவின் மரணத்தை எதிர்பார்த்து இருந்தனரா? காந்தியைக் கொன்ற ஆரிய நாதுராம் கோட்சே,கையில் ரஹிம் என்று பச்சை குத்தி, “காந்தியை ஒரு இஸ்லாமியர்(இராஜிவ் கொலையில் கருணாநிதியின் நிலை) கொலை செய்துவிட்டான் என்று மக்களை ஏமாற்றினான்(ஜெயா போன்று).அதன் பலன் நாட்டில் பல இடங்களில் முகமதியர்கள் தாக்கப் பட்டனர். இராஜபாளையத்தில், முகமதியரின் சொத்துக்கள் சூரையாடப் பட்டது.காங்கிரஸைப் பொருத்தவரை,இராஜிவின் கொலையின் வீரியம் குறைந்துவிட்டால்,அதை வைத்து நாட்டில் அரசியல் செய்ய முடியாது.ஏன் ஜெயின் கமிசன்,வர்மா கமிசன் அறிக்கைகள் பற்றி மவுனிக்கின்றனர்.ஆகவே இவர்கள் தூகிலிடப் பட்டுவிட்டால், இந்த சந்தேகங்களின் கழுத்தை அறுத்துவிடலாம் இல்லையா?

  • தமிழ் நாட்டுக்கு வரும்போது இத்தாலி சோனியா ஏன் உடன் வரவில்லை?
   “எல்லாம்” தெரிந்துதான் நடந்ததா?

   • ஜெயலலிதா பற்றிய கருத்துக்கு நேரடியான கருத்தைக் கூறலாமே.உடனே திருமதி சோனியா காந்தி பற்றி கருத்துக் கூறி திசை திருப்புவானேன்.அப்படியானால் ஜெயலலிதாவின் நிலைப் பாட்டை மறுக்க முடியாது தவிப்பது போல் தெரிகிறது.சரி அது போகட்டும்.அந்த காலக் கட்டத்தில் திருமதி.சோனியா காந்தி ஜெயலலிதா மாதிரி அரசியல்வாதி அல்ல.அவ்வளவுதான்.இராஜிவின் கொலையினால் அவருக்கு ஆகப் போவது என்ன? பிற்காலத்தில் பிரதமர் வாய்ப்பு வந்த போதும் அதை நிராகறித்தவர்.ஆனால் ஜெயல்லலிதா அரசியல்வாதி.எப்படியாவது முதல்வர் ஆகவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவர்.இராஜிவின் மரணம் வரை ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கவில்லை.எம்ஜியார் மரணத்திற்குப் பின்பு நடந்த தேர்தல் தோல்விக்குப் பின்,திருமதி.வி.என்.ஜானகியிடம் சமரசம் செய்துகொண்டு,கட்சியின் தலைவியானார்.இராஜிவின் மரணத்தை வைத்துதான் ஜெயாவால் வெற்றிகொள்ள முடிந்தது.அதன் பின்பு கருணாநிதியின் தடுமாற்றத்தை மூலதனமாக வைத்து, தமிழக மக்களை அவர் சார்ந்த ஊடகங்களின்
    (இந்து,தினமணி,ஆனந்தவிகடன்,தினமலர்,பாதி ஆரிய ஊடகமான தினத் தந்தி போன்றவை) வாயிலாக தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். 1991 இல் இராஜிவ் காந்தியின் மரணம் தவிற்கப் பட்டிருந்தால்,ஜெயா அரசியலில் காணாமற் போயிருப்பார். அ.தி.மு.க.வை,உருவாக்கி வளர்த்தது காங்கிரஸும்,மத்திய அரசில் இருந்த ஜெயலலிதாவின் லாபியில் இருந்த அதிகாரவர்க்கமுமே. இன்று காங்கிரஸ் அதன் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாரவர்க்கம் தப்பித்துவிட்டது.

    • How did an average Italian woman get married into the top political family of India?

     If she is that innocent,how does she boss people like Sharad Pawar or the Late YS Rajashekar Reddy.

     • நான் திருமதி.சோனியா காந்தியைச் சாதாரண பெண் என்று கூறவில்லையே.ராஜிவ் மரணிக்கும் தருவாயில்,அவர் அரசியல்வாதியல்ல என்றுதான் கூறினேன்.நீங்களாக ஏன் கற்பனை செய்து கொள்ளவேண்டும்.இதுதான் பொய் புனை சுருட்டு என்பது.இவைகள் யாவும் ஒருவரின் உளம் ஊனமுற்றிருப்பதைக் காட்டும்.இப்படிப் பட்ட உள்ளத்தில் இருந்து வந்ததுதான் இரண்டாவது கருத்து.தமிழில் எழுதுவதைத் தமிழில் சிந்தியுங்கள்.ஆங்கிலத்தில் சிந்திப்பது பொருந்தாத ஒன்று.
      நீங்கள் ஜெயலலிதாவைப் பற்றிய கருத்துக்கு நேரடியான பதில் கூறலாமே.ஏனிந்த திசை திருப்பல்.

 8. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இன்று இந்த மூன்று பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகள்தான்.ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதோ அல்லது சிறையில் அதிக நாள் வைத்திருப்பதோ அந்தந்த மாநில அரசுகளின் கையில்தான்.சட்டம் ஒழுங்கும்,தண்டனைச் சட்டங்களின் படி தண்டனை நிறைவேற்றுவது மாநில அரசின் வரம்புக்குட்பட்டது.இப்படியிருக்க ஜெயா வேண்டுமென்றே மத்திய அமைச்சகத்தில் உள்ள ஆரிய லாபியுடன் கூட்டுச் சேர்ந்து,அவர்களின் வழிகாட்டுதலின் படி,”சிபிஐ விசாரித்தது” என்று புதிய வேதம் ஒதி மத்திய அரசுக்குஅனுப்பினார்.இதற்கு முன் எத்தனை சிபிஐ விசாரணை செய்த ஆயுள்தண்டனைக் கைதிகளின் விடுதலையின் போது இந்த மேதாவி மத்திய அரசுக்கு அனுப்பினார்.” 3 நாட்களில் மத்திய அரசு விடுதலை செய்யாவிடில்,நான் விடுதலை செய்து விடுவேன்” என்று கூறியும்,மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி,”இது சிபிஐ விசாரித்தது” என்ற சப்பைக் கட்டுடன் அனுப்பி விட்டார்.உள் துறை அமைச்சகமும்,ஜெயாவும் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.இதுவரை ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலைக்கு எந்த மாநில அரசும் மத்திய அரசை அதிகாரப் பூர்வமாக அங்க்கீகாரம் கேட்டது கிடையாது.இது இந்த பழநெடுமரங்களுக்கும்,வயிற்றுப் பிழைப்பு சீமான்களுக்கும்,இந்த தமிழ் உணர்வாளர்களுக்கும் உறைக்குமா?”எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறளின் வழிகாட்டுதலின்படி,ஜெயாவின் பளைய நடவடிக்கைகளையும்,இன்று அவர் செய்யும் காரியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து,உண்மை அறிவது நலம்.

 9. அய்யா தமிழ் மக்களுக்கு பெரியாரின் கொள்கையே என்னவென்று புரியவில்லை. திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையை தூக்கி குப்பையில் போட்டவர்கள். ஆசை நாயகிகளுக்கு நாட்டை தாரை வார்க்கும் மூட கூட்டத்திற்கு நீங்கள் பேசுவது பதிவது புரியுமா என்பது கேள்விக்குறி. தமிழ் உணர்வு பற்றி ஒன்றும் புரியாதவர்களுக்கு தமிழ் ஈழம் அவர்களின் துயரம் முதலியவை உணர முடியுமா என்பது அய்யமே.நான் அனைவரையும் குறிப்பிடவில்லை.மிகப் பெரும்பாலானவர்கள் நிலை பற்றி சொல்கிறேன். பார்ப்பன கூட்டத்தின் கைப்பாவைகளாக அவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி இருந்து வந்துளளனர். இந்த நிலை காலத்திற்கு தகுந்த மாதிரி மாறி வந்துள்ளது. அவ்வளவே.மேல் தட்டு “ர்”களுக்கெல்லாம் ஒடுக்கப் பட்ட மக்களைத்தான் ஏய்க்கத் தெரியும்.ஆனால் அம்மாவை நினைத்தவுடனே ஒன்பது ஒட்டைகளும் மூடிக் கொள்ளும்.

 10. இன்று தன்னிடம் அதிகாரம் இருந்தும், போகாத ஊருக்கு வழிகாட்டிய ஜெயா,தனது கட்சிக்காரரும்,தனக்குத் தண்டனை கொடுத்தவுடன் 3 மாணவியரை தர்மபுரியில் எறித்துக் கொலைசெய்த அதிமுக காரரான நெடு என்ற நெடுஞ்செழியன் என்பவரின் தூக்குத் தண்டனை ரத்தானால்,அது கருணாநிதி காலத்தில் விசாரிக்கப் பட்டது,என்று அவரிடமா அனுமதி கேட்டு அனுப்புவார்? ஆமா! டாஸ்மாக் கடைகளுக்கும், அரசு சொத்துக்களுக்கும் பாமாகா சேதம் விளைவித்ததற்க்கு ராமதாசையும்,அவரது கட்சியையும் சட்டத்தின் முன் நிருத்தி,நட்ட யீடு கேட்கும் ஜெயலலிதா,தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் எறித்துக் கொன்றதுடன், அரசுப் பேருந்தையும் அவர்கட்சிக்காரர்கள் எறித்ததற்கு ஜெயா பொருபேற்கலாமே.இதுதான் ஆரியக் கூத்து.

  • அன்பன் போன்ற அன்பு கொண்டோர், உண்மை அறிந்தோர் ஆயிரமாயிரம் பேர் வர வேண்டும் ஆரியத்தை ஒழிக்க.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க