Friday, December 2, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்

வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்

-

“குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’’. இது கடந்த மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.

வாய்தா ராணி
வாய்தா ராணியால் மிரட்டி விரட்டப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

தன் மீதான வழக்கை நடத்தவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக நீதித்துறையில் ‘புரட்சி” செய்து வரும் ஜெயலலிதா அம்மையாருக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தாது போலும்! இப்படி உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதிலும், நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வர் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து அம்மாவுக்கு ஆறுதல் அளித்துள்ளார்கள்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் அம்மா வாய்தா ராணி என்றால், அவருக்கு கேட்டபடியெல்லாம் வாய்தா வழங்கிய நீதியரசர்களை வாய்தா ராஜாக்கள் என்று அழைப்பதுதானே பொருத்தம்? ஒரு கிரிமினல் வழக்கை நடத்த விடாமல் சட்டப்படியே அதனை முடக்குவது எப்படி என அம்மா ஒரு புத்தகம் எழுதினால், அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் தகுதி பெற்றவர்கள் இந்த நீதியரசர்கள்தான்.

1996-ல் ஜெயா, சசி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சோத்துக் குவித்ததாக பதியப்பட்ட வழக்கில் 1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டு, 2001-ல் பெங்களூருக்கு மாற்றப்பட்டு, 6 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அம்மா நடத்திய திருவிளையாடல்கள் ஓராயிரம். உதாரணத்திற்கு சில……….

 • 2001-ல் ஏற்கனவே சாட்சியமளித்த 74 சாட்சிகளில் 63 பேரை பிறழ்சாட்சியாக மாற்றியது
 • அதன்பின் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு
 • அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என மனு
 • நீதிபதி நியமனத்தில் முறைகேடு என மனு
 • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய முன் அனுமதி இல்லையென்று மனு
 • ஆவணங்கள் தரக்கோரி மனு
 • மொழிபெயர்ப்பு செய்து தரக் கோரி மனு
 • மொழிபெயர்ப்பு சரியில்லை-மாற்றி தரக்கோரி மனு
 • புதிய வழக்கறிஞர் ஆஜராவதால் வாய்தா கோரி மனு
 • புதிய வழக்கறிஞர் கோப்புகளைப் படிக்க கால அவகாசம் கோரி மனு
 • 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக இலஞ்ச ஒழிப்பு போலீசு மூலம் வழக்கை மீண்டும் விசாரிக்க மனு
 • இவை அனைத்திற்கும் உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களில் மேல்முறையீட்டு மனுக்கள்

இத்தனைக்கும் மேலாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவை மிரட்டி வழக்கிலிருந்து விரட்டினார் ஜெயலலிதா. தனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் பவானிசிங்தான் வழக்கை நடத்தவேண்டுமென்றும், வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணாதான் விசாரிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உலகத்தில் எங்குமே கேள்விப்பட்டிராத இந்த அயோக்கியத்தனமான கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவரும் நீதியரசர் பி.எஸ்.சவுகான்தான்.

“ஏழு கடல் ஏழு மலை தாண்டி” சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது. உடனே அம்மையாரின் அபிமான அரசு வக்கீல் பவானிசிங், உடல்நிலை சரியில்லையென்று, பொய் மருத்துவ சான்றிதழ் கொடுத்தார். அதனை நிராகரித்து விசாரணைக்கு ஆஜராகாத நாளில் ரூ.65,000/- பவானிசிங் அபராதம் செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பவானிசிங் மேல்முறையீடு செய்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, இந்த வழக்கில் துவக்கம் முதலே பல நாடகங்கள் நடந்து வருவதாகக் கூறி பவானிசிங்கின் மேல்முறையீட்டை நிராகரித்தார். இப்படி கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் பச்சையாக விசயத்தை உடைத்த பிறகும், விசாரணைக்கு 3 வாரம் இடைக்காலத்தடை கொடுத்திருக்கிறார் உச்சநீதிமன்ற நீதியரசர் சவுகான். இதே நீதி அரசர் சவுகான்தான் சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்.

அடுத்து நமது சென்னை உயர்நீதிமன்றம்! ஜெயா, சசி பங்குதாரர்களாக இருந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களுக்கு 2000-வது ஆண்டில் இணைப்பாணை (Attachment Order) விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, அவை முடக்கப்பட்டன. இதன்பின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணையே முடிந்து தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பல சொத்துகள் ஜெயலலிதாவுக்கு தொடர்பானவை அல்ல என்று கூறி அவற்றை விடுவித்திருக்கிறார். பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் மேல் முறையீடுகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என்ற போதிலும் தெரிந்தே இதை மீறியிருக்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். வழக்கை மேலும் இழுத்தடிப்பதுதான் இதன் நோக்கம். இவ்வழக்கில் ஜெயாவுக்கு “எதிராக” சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பவர் அ.தி.மு.க. அரசு வழக்கறிஞர் இன்பதுரை. இப்படியொரு வழக்கு நடந்திருப்பதே தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார் சொத்துகுவிப்பு வழக்கை நடத்திவரும் பவானிசிங்.

இவை மட்டுமல்ல, சென்னையில் நடந்து வரும் வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் பெங்களூரு வழக்கின் கதைதான். வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்றும், இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி 30-ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன். இந்த தீர்ப்புக்குப் பின்னரும் ஏப்ரல் 10 வரை விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. ஏப்ரல் 28 அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று சென்னை தலைமை பெருநகர கூடுதல் மாஜிஸ்டிரேட் தட்சிணாமூர்த்தி ஏப் 10 அன்று உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை மேலும் 4 மாதம் தள்ளி வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு போட்டார் ஜெ. மனு ஏப்ரல் 11 அன்று விசாரணைக்கு வந்த போது, “இனிமேலும் விசாரணையை தள்ளி வைக்க முடியாது” என்று கூறிய நீதிபதி ராதாகிருஷ்ணன் வழக்கை ஏப்ரல் 15 க்கு ஒத்தி வைக்கிறார். ஆனால் ஏப் 15 அன்று, அதாவது நாலே நாட்களில், அவர் வழங்கும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறிவிடுகிறது. வழக்கு விசாரணையை மேலும் 3 மாதம் நீட்டித்து உத்தரவிடுகிறார் நீதிபதி ராதாகிருஷ்ணன். 28-ம் தேதி “ஜெயலலிதா கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்” என உத்தரவிட்ட சென்னை நீதிபதி தட்சிணாமூர்த்திக்கு, மறுநாளே (ஏப் 16) சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் மறுநாளே அந்த மாற்றல் உத்தரவு அவசரம் அவசரமாக ரத்து செயப்படுகிறது.

நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகிய அனைத்துமே மிகவும் மர்மமான முறையிலும் சந்தேகத்துக்கிடமான முறையிலும் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மூவர் விடுதலை குறித்து விரைவில் தீர்ப்பு வரவிருப்பதாக முறைகேடான அறிவிப்பொன்றை பொது அரங்கில் வெளியிடுகிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடும் முயற்சி என்று பச்சையாகத் தெரிந்தாலும் அவர் கவலைப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அனைத்துமே தலைமை நீதிபதியின் ஆசியுடன்தான் வழங்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதா மீதான வழக்குகளை அடுத்த அரசு அமையும் வரை முடிய விடாமல் இழுப்பதும், பிறகு அமையவிருக்கும் அரசாங்கத்துடன் பேரம்பேசி, எல்லா வழக்குகளுக்கும் சமாதி கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு உதவி செய்வதும்தான், மேற்கூறிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நோக்கம்.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் இத்தனை அயோக்கியத்தனங்கள் 17 வருடங்களாக தொடர்ந்து அரங்கேறுவதை ஜெயலலிதாவின் சாமர்த்தியம் என்று கூறிவிட முடியுமா? நீதிபதிகளின் கூட்டுக் களவாணித்தனம் இல்லாமல் இந்த சாமர்த்தியம் வெற்றி பெற்றிருக்க முடியுமா? சாதாரண மக்கள் கிடக்கட்டும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட வேறு எத்தனை அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருணைப்பார்வை கிடைத்திருக்கிறது? வழக்குகளை இழுத்தடிப்பதற்கு 17 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு நீதியரசர்கள் வழங்கி வரும் இந்த ஒத்துழைப்புக்கு காரணம், பணமா அல்லது (பார்ப்பனச் சாதி) பாசமா? பெண் வழக்குரைஞரின் கையைப் பிடித்து இழுத்த நீதிபதி கங்குலியின் காலித்தனத்தையே நிரூபிக்க இயலாத போது, இதையெல்லாம் சாட்சி வைத்தா நிரூபிக்க முடியும்?

வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைகளுக்கு சாட்சி எதற்கு? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பதும் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சிறப்பு சேவை செய்வதும், பளிச்சென்று தெரிகிறது. குற்றவியல் சட்டங்கள் முதல் தானே வகுத்துக் கொண்ட நெறிமுறைகள் வரையிலான எதையும் நீதிபதிகளே மதிப்பதில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டும் வழக்குரைஞர் பிரசாந்த் பூசனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தூங்குகிறது. உச்சநீதிமன்றம் தந்திரமாக மவுனம் சாதிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டுவிழாவில் கூச்சநாச்சம் இன்றி ஜெயலலிதாவுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் கள் நீதிபதிகள். இதுதான் நீதிமன்றத்தின் யோக்கியதை!

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின்  மீது கிளிக் செய்யவும்]

 • வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
 • வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு!
 • நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21.04.2014 திங்கள் கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : மதுரை உயர்நீதிமன்றம்

நீதிமன்றத்திற்கு வெளியில் மக்கள் மன்றத்தில் நாம் நீதியைத் தேடுவோம்! போராடுவோம்!

இவண் :

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை. தொடர்புக்கு: 94434 71003

 1. நீதிபதியா வருது எல்லம் வக்கீலா இருந்து குப்பை கொட்டுனதானே இதுல ஏதும் சந்தேகம் இல்லயே அப்புரம் அவன் கிட்ட நீதிய எதிர்பார்க்கிறடு முட்டாள் தனம் வினவு நம்ம நாட்டு குட்ட(சட்ட )புத்தகத்த ஆளுக்கு தகுந்த மாரி அர்த்தம் பண்ணிக்கிறதுல வக்கீல விட நீதிபதி குறைவா இருக்ககூடாதுல்ல எனா நீதிபதிக்கு எக்பீரியன்ஸ் அதிகமா இருக்குமுல்ல அரசியல் வாதி எவனும் நீதிபதிய பத்தி குறை கூற மாட்டானே ஏன் தெரியுமா நாளைக்கு அவன் தயவு அவனுக்கும் தேவை இருக்குதுல்ல

 2. அரசியல்வாதிகலுக்கு தனியாக ஒரு சட்டம் ……பாமரனுக்கு ஒரு சட்டம்…100 ரூபாய் பசிக்காக திருடும் பாமரனை தன்டிக்கதான்…..இந்த சட்டமா?…

 3. இந்தியாவில் கருப்பு அங்கி சாத்தான் களுக்கு நீதி(?)அரசர்கள் என்று பெயர்.முன்னாள் அரசவை கோமாளி அப்துல் கலாம் பெயருக்கே பணம் பெற்றுக்கொண்டு பிடிவாரண்ட் பிறப்பித்த மைலார்டு களை கொண்ட மகத்தான பெருமை நமக்கே சொந்தம்.ஜெயாவின் வழக்கை விசாரித்து நல்ல(!)தீர்ப்பு சொன்ன தங்கராஜ் என்ற க.அ.சாத்தான் கனத்த சூட் கேசுடன் சிங்கப்பூர்,மலேசியா இன்ப சுற்றுலா சென்றதும்,குற்றவாளியின் மனதுக்கு பிடிக்காத கெட்ட(?) தீர்ப்பினை சொல்லி குடும்பத்தினரை கஜ்ஜா கேசில் சிக்க வைத்த கொடுமையும் தமிழகம் கண்ட வரலாற்று உண்மைகள்.சாமானியனை ஏறி மிதிக்கும் சட்டத்தை நொறுக்குவோம்.

 4. வாய்தா ராணிய தெரியும்…..வாய்தா ராஜா யாருன்னு தெரியாமா அல்லாடிகிட்டு இருந்தேன். இப்பதான் புரிஞ்சது வாய்தா ராஜா யாருன்னா நீதிபதிகள்தான்னு……….

 5. நீதி அரசர்கள்????….இவனுக புடுங்குற புடுங்குக்கு கோடை விடுமுறை ஒரு கேடு….

 6. தமிழர் எழுவர் விடுதலையில் மீண்டும் நஞ்சு கக்கியுள்ளது வினவு. நீதிபதி சதாசிவம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குத்தான் பதில் அளித்துள்ளார். அதுவும் தாம் ஓய்வு பெறவுள்ள நிலையில் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு வரும் எனக் கூறினார். ஆனால் விரைவில் தீர்ப்பு வரவுள்ளதென சதாசிவம் கூறியதாக நீங்களாக அளக்கிறீர்கள். எனவே இது முறைகேடான அறிவிப்பு என்கிறீர்கள். இது எவ்வகையில் முறைகேடான அறிவிப்பு? அப்படியானால் விரைவில் தமிழர் விடுதலையாவது மகஇகவுக்க முறைகேடாகத் தெரிகிறதா? இந்த விடுதலை ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடும் முயற்சி என்றால், இந்த விடுதலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என மகஇக கருதுகிறதா? முன்பு எழுவர் விடுதலைக்கான கடிவாளம் மத்திய காங்கிரஸ் அரசிடம் இருப்பது தெரிந்தேதான் ஜெயலலிதா அவர்களை விடுவிக்கும் முடிவைச் சட்டமன்றத்தில் அறிவித்ததாகக் கூறினீர்கள் (கட்டுரை – பாஜகவிடம் பம்மும் தமிழினவாதிகள்!). ஆனால் இப்போது உச்ச நீதிமன்றம் எழுவரையும் விடுவிக்கவிருப்பதே ஜெயலலிதாவுக்கு ஆதரவு திரட்டவே என்கிறீர்கள். உங்களின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் தெளிவான தன்முரண்பாட்டுக்கு இட்டுச் சென்று விட்டதே!

  • கட்டுரையின் மையப்பொருள் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் ஜெயலைதாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது? அது குறித்து எதுவும் சொல்லவில்லையே?

  • ஏழு தமிழர்கள் விடுதலையை காங்கிரஸ்,பாஜக,மற்றும் ஒரு சில பார்ப்பனர் களை தவிர ஒட்டுமொத்த தமிழினமே ஆதரித்து வரவேற்கிறது.ஆனால் பாசிச ராஜீவ் கொலையுண்ட போது அவரின் பிணத்தின் மீது ஏறி நின்று வாழப்பாடி கும்பலுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு ஆட்சியை பிடித்ததும்,நளினிக்கு பரோல் தர மறுத்தவர் ஏழு பேரை விடுதலை செய்ய போவதாக அறிவித்து அரசியல் ஆதாயம் தேடுவதை அம்பலபடுத்துவதில் எங்கே சந்தர்ப்பவாத அரசியல் இருக்கிறது?

  • விசயங்களை எளிமையாக பார்ப்பதால் வரும் பிரச்சினை இது. பல்வேறு தொடர்புகளும் சிக்கல்களும் நிறைந்த பிரச்சினைகளை நலங்கிள்ளி கருப்பு மற்றும் வெள்ளையாகவும், ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் அணுகும் போது ம.க.இ.க வின் நிலைப்பாடு சந்தர்ப்பவாதமாக தான் தெரியும்.

   • [1]ஒருவேலை மனித உரிமை பாதுகாப்பு மையமும் ,கருணாநிதியும் கொடுக்கும் அழுத்தம் காரணமாக 25/4/2014 அன்று பணி ஒய்வு பெறும் நம் “தமிழகத்தை” சேர்ந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் 25/4/2014 அன்றுக்குள் தீர்ப்பை கூறாமல் பணி ஒய்வில் சென்று விட்டால்…..

    [2]அதன் பின் இவ் வழக்கை கையாலபோகும் பி.எஸ்.சவுகான் போன்ற நீதிபதிகள் இம் முவர் உரிமைக்கும் எதிராகவும் , தமிழக மக்களீன் உணர்வுக்கு எதிராகவும் தீர்ப்பு அளித்தால் …


    அப்போது ம.க.இ.க தமிழக மக்கள் இடம் இருந்து தனிமை பட்டு போகப் போகும்.

    • உமக்கும் ,பெருசுக்கும் இருக்கு ஆப்பு .

     நீரும் ,பெருசும்[கருணா ] கொடுத்த அழுத்தம் காரணமாக தானே தீர்ப்பை அறிவிக்காமல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்வதாக அறிவித்து வி்ட்டார்.

     இருக்கட்டும்…. இருக்கட்டும் உம்முடைய ஆளுங்களை பொடா ,குடா ,மொட சட்டத்துல உள்ளே போடாமலா இருக்கும் இந்த ஜெயா பாசிச அரசு?…. அப்ப நாங்களும் உம்மை பார்த்து சிரிபோம் இல்ல

     உம்முடைய முட்டாள் தனமான போர் தந்திரத்த எடுத்து குப்பையில் போடு !

     நீ என்ன காங்கிரசுகாரனுக்கு பினாமியா ?

     அவனை மாதிரியே ஊளை இடுகின்ராய்

   • ஓட்டுப்போடாதே புரட்சி செய் ,

    [1]நீரு எங்க மார்சீயம்-லெனியம் கத்துகொண்டு வந்திர்?

    [2]பேரறிவாளன் விடுதலை அடையும் சாத்தியகூறுகளை உடைக்கும் அளவுக்கு உமக்கு போர் தந்திரம் சொல்லிகொடுத்த கம்யூனிஸ்ட் முட்டாள் வாத்தியார் யாரு ?

    [3]தீர்ப்பு வரும்வரை, இரண்டு நாட்கள் கூட மூடிகொண்டு உம்மாளையும்,பெரிசு கருணாவாளையும் சும்மா இருக்க முடியாமா அப்படி என்ன அரிப்பு உங்க இருவருக்கும் ?

    [4]பெரிசு கருணாவுக்காவது தீர்ப்பு தேர்தல் நாள் அன்று வந்தால் அவர் பொருக்கும் ஒட்டுகள் குறையும் என்று பயம். அதனால் பெருசு பெனாத்துகின்றது.

    [5]ஒட்டு பொருக்காத உமக்கு தேர்தல் நாள் அன்று தீர்ப்பு வருவதில் என்ன பிரச்சனை ?

    [6]நீரு,பெரிசு கருணாவும் செய்வது கொலைக்காரன் காங்கீரசு சார்பா செய்யும் அப்பட்டமான அரசியல்

    [7]தமிழ் மக்கள் உம் இடம் கேள்வி கேட்டால் நீர் செல்லும் மொக்கை பதில் என்ன ?

    “விசயங்களை எளிமையாக பார்ப்பதால் வரும் பிரச்சினை இது. பல்வேறு தொடர்புகளும் சிக்கல்களும் நிறைந்த பிரச்சினைகளை நலங்கிள்ளி கருப்பு மற்றும் வெள்ளையாகவும், ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் அணுகும் போது ம.க.இ.க வின் நிலைப்பாடு சந்தர்ப்பவாதமாக தான் தெரியும்”

    [8]உம்முடைய முட்டாள் தனமான காங்கிரஸ் ஆதரவான பதிலுக்கு நீயும் உம் ம.க.இ.க வும் நாசமா போவிங்க. இது சாபம் அல்ல. தமிழக மக்களீன் மனோநிலை

    //விசயங்களை எளிமையாக பார்ப்பதால் வரும் பிரச்சினை இது. பல்வேறு தொடர்புகளும் சிக்கல்களும் நிறைந்த பிரச்சினைகளை நலங்கிள்ளி கருப்பு மற்றும் வெள்ளையாகவும், ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் அணுகும் போது ம.க.இ.க வின் நிலைப்பாடு சந்தர்ப்பவாதமாக தான் தெரியும்.//

 7. பேரறிவாளன் விடயம் நான் கூறுவது :

  25/4/2014 அன்று பணி ஒய்வு பெறும் நம் தமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் 25/4/2014 அன்றுக்குள் தீர்ப்பை சொல்லுவேன் என்று கூறுவதில் என்ன தவறு?

  தீர்ப்பை தான் வெளியில் சொல்லகூடாது. தீர்ப்பு தேதியை சொல்லலாம் என்ற விடயம் கூட மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடுக்கு தெரியாதா?

  பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  ———————————————————

  தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, எம்.ஜி.ஆர்., நகரில், 20/4/2014 இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கருணாநிதி பேசியது :

  ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என தி.மு.க., மற்றும் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.

  இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சதாசிவம், ‘தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை விடுவிக்க முடியும்’ என, கருத்து தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, தமிழக அரசு, சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல், அவசர, அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு, மத்திய அரசு, மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும் என, ஜெயலலிதா கூறியிருந்தார்.மத்திய அரசு, அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, ‘தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தது.’அந்த வழக்கின் தீர்ப்பு, ஏப்., 25ம் தேதிக்குள் வழங்கப்படும்’ என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், கோவையில் நடந்த பொது விழாவில் தெரிவித்துள்ளார்.

  வரும் 24ம் தேதி, தமிழகத்தில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நீதிபதி சதாசிவம், ஓய்வு பெற உள்ள, 25ம் தேதிக்குள், ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என கூறியிருப்பது, அரசியல் ரீதியான விளைவை, தமிழகத்தில் ஏற்படுத்துமோ என்ற சந்தேகம், பலருக்கு எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, லோக்சபா தேர்தலுக்கு முன் வரும் என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியே, ஒரு பொது விழாவில் அறிவித்திருப்பது, எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும்; அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என்பதை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது, நீதிமன்ற நெறிகளை காப்பாற்றப் பயன்படும். அனைவருக்கும் நலன் பயக்கும்.இது நல்ல விஷயமா? யாருக்கோ உதவி செய்வதற்காக கூறப்பட்டதா?என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சதாசிவம் எனக்கும் வேண்டியவர் தான்.நீதிபதியாக இருப்பவர், தான் சொல்லப்போகும் தீர்ப்பை பற்றி, ‘யாரும் பயப்படாதீர்; நல்ல தீர்ப்பு வழங்குவேன்’ என்பது, எங்கு சென்று முடியும்? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
  —————————————————————-
  வினவு கூறுவது :

  நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகிய அனைத்துமே மிகவும் மர்மமான முறையிலும் சந்தேகத்துக்கிடமான முறையிலும் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மூவர் விடுதலை குறித்து விரைவில் தீர்ப்பு வரவிருப்பதாக முறைகேடான அறிவிப்பொன்றை பொது அரங்கில் வெளியிடுகிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடும் முயற்சி என்று பச்சையாகத் தெரிந்தாலும் அவர் கவலைப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அனைத்துமே தலைமை நீதிபதியின் ஆசியுடன்தான் வழங்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

  ——————————————————–

 8. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கும் வேளை.இன்னொரு புறம் பாராளுமன்றத் தேர்தல்.அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல் நிலையைக் காரணம் காட்டி வய்தா கேட்கிறார். நீதிபதி குன்ஹா நாள் ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கிறார்.அதை எதிர்த்து பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.அந்த மனுவின் மீது நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான்,செல்லமேஸ்வர்,ஜெ சொத்து குவிப்பு வழக்கை விசரிக்க 3 மாதம் இடைக் காலத் தடை விதிக்கிறார்கள்.ஜெ சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றம் கண்டிப்பதற்குப் பதிலாக தேர்தலை கவனத்தில் கொண்டு ஜெ க்கு ஆதரவாக 3மாதம் இடைக் காலத் தடை விதிக்கிறது.இந்த அ நீதி அரசர் சவுகான் தான் நீதிபதி பாலகிருஷ்ணாதான் வழக்கை விசாரிக்க வேண்டும்,பவானி சிங்கைத்தான் அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று ஜெ கேட்டு,ஓகே சொன்னவர் .மாத்திரமல்லாமல் தில்லை நடராசர் கோவிலை,மக்களைத் திரட்டியும்,சட்டத்தின் முன்பும் நீண்ட போராட்டம் நடத்தி இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தது மனித உரிமை பாதுகாப்பு மையமும் அதன் தோழமை அமைப்புகளும்.ஜெயும் சு சாமியும் சவுகானும் கூட்டு சதி செய்து சபா நாயகரை மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைத்தனர்.அப்போது சவுகான் நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்தது ”நான் சீக்கிரம் ஓய்வு பெறப்போகிறேன் அதற்கு முன்பாக தீட்சிதர்களுக்கு நல்லது செய்துவிட்டுப் போகவிரும்புகிறேன்.”பார்த்தீர்களா நீதி எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று? நீதியரசர் சவுகான் தலைமை நீதிபதி சதாசிவத்தின் பினாமி என்பது எல்லோரும் அறிந்ததுதான் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.இந்த சூழலில் தான் சதசிவம் [நீதியரசர்]கோவையில் மூவர் விடுதலையைப் பற்றி நீதிமன்றதிற்கு வெளியே அறிவிக்கிறார்.அவரும் ஓய்வு பெறும் நிலையில்தான் இருக்கிறார்.தனித்தமிழ் ஈழம்,விடுதலைப் புலிகள், நளினி பரோல்,தமிழ் நாட்டில் ஈழ அகதிகளின் நிலை இவற்றிலெல்லாம் ஜெ யின் நிலைப்பாடு என்ன? இன்று ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டபின் அவர் ஆடுகின்ற நாடகம் என்ன என்பதோடு இனைத்துப் பார்கத் தெரிந்தவர்களால் மட்டுமே இந்த நாடகத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ளளமுடியும்.உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையாக ஜெ இருப்பது பணத்தாலா சாதிப் பாசத்தாலா? இதைத்தான் கருணாநிதி அரசியல் என்கிறார்.மூவர் விடுதலைக்காக மனித உரிமை பாதுகாப்பு மையமும் அதன் தோழமை அமைப்புகளும் பலபோராட்டங்களை நடத்தியுள்ளனர் என்பது நலங்கிள்ளி போன்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

 9. வாய்தா ராஜா நீதிபதிகள் . பட்ரி யாரும் பெச முடியாது. . ! பெசினலும் ஜைலல உல்ல வட்சு பொலந்துருவானுக .. . எனக்கு ஜெயலலிதவின் 11 பெரு கொன்ட குலு யாருநு தெரிய்னும் ..?? அடியால் ?

 10. கத்தியை காட்டி ரூபாய் 300/- வழிப்பறி செய்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை. ஆனால் கோடிகளில் ஊழல் செய்தவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க