Sunday, August 9, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் இந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே - பென்னாகரத்தில் விவிமு

இந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே – பென்னாகரத்தில் விவிமு

-

மறுகாலனியாக்கத்திற்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! புதிய ஜனநாயக அரசை கட்டியமைப்போம்! தெருமுனைக் கூட்டம்

16-வது பாராளுமன்ற தேர்தல் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தும் திருவிழாவாகவும், மக்களே தங்களுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உயர்ந்த வடிவம் கொண்டது இத்தேர்தல் என்றும் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் புளுத்து நாறும் போலி ஜனநாயகத்தை மக்களுக்கானது என்று கூறி, மக்களுக்கு அதிகாரம் இல்லாத இந்த வழியிலேயே தீர்வை தேடச்சொல்லி மக்களை நிர்ப்பந்தித்து வருகின்றன.

மறுபக்கத்தில் ஓட்டுக் கட்சிகள் பல வெற்று வாக்குறுதிகளையும், கவர்ச்சி அறிக்கைகளையும் அறிவித்து மக்களை மீண்டும் புதைகுழியில் நிரந்தரமாக தள்ளும் வேலையை செய்து வருகின்றன. கேடி, கிரிமினல், கொலைகாரர்கள், கல்வி முதலாளிகள் என்று மக்கள் விரோதிகளே நல்லவர்களாக மக்கள்முன் காட்டப்பட்டு நான் வந்தால் செய்வேன் என மக்களை குழப்பி வருகின்றனர். இன்னொரு புறம் எப்போதுமே இல்லாத அளவிற்கு சாதிவெறி கட்சிகளும் வெளிப்படையாகவே, சாதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வெறியை தூண்டி வருகிறார்கள்.

இவ்வாறு மக்கள் சிந்தனையை சீரழித்து வரும் நிலையில், சீரழிந்து கிடக்கும் இந்த கட்டமைப்பை தூக்கியெறிந்து, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்று மக்களுக்கு அறைகூவி நம்பிக்கை நட்சத்திரமாக துணிவுடன் செயல்பட்டு வருகிறது நக்சல்பாரி அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணி. போலி ஜனநாயக் தேர்தலை புறக்கணிப்போம் என்ற அடிப்படையில் கடந்த 15/4/2014 அன்று பென்னாகரம் நகரத்தில் கடை பிரச்சாரம் மாலை வரை செய்யப்பட்டது.

மாலை 5 மணிக்கு தெருமுனைக்கூட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதிவரை கலைந்து செல்லாமல் கூட்டத்தை கவனித்தனர். இக்கூட்டத்திற்கு தோழர் சிவா தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினார். வட்டார செயலர் தோழர் கோபிநாத் சிறப்புரை ஆற்றினார். மக்களுக்கு அதிகாரம் வழங்கவும், தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் அதிகாரம் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு. நீதிபதி, போலீசு, அதிகாரிகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க மக்களுக்கே அதிகாரம் உண்டு. ஏழைகள் மட்டும் பாராளுமன்றத்திற்கு போக முடியும் என்ற உண்மையான ஜனநாயகத்தை நக்சல்பாரிகள் தலைமையில் படைப்போம் என்ற சிறப்புரை ஆற்றியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளி்க் செய்யவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி
9443312467
பென்னாகரம் வட்டம்
தருமபுரி மாவட்டம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. நக்சல்பாரிகள் எல்லாம் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்து கொண்டு இருக்கும் போது, வினவு தேவையில்லாமல் தமிழகத்தில் சங்கு ஊதுவது சிரிப்பாக உள்ளது…. ஏற்கனவே நக்சலைட்டுகள் தமிழகத்தில் நாசமாய் போன கதை தெரியாதா??????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க