Friday, August 12, 2022
முகப்பு செய்தி பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 20/05/2014

பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 20/05/2014

-

செய்தி: Manushya Puthiran

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் எப்படி வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றி மூச்சுவிடக் கூடிய துப்பிலாத பலர் தி.மு.க என்ன தவறு செய்தது, இடது சாரிகள் என்ன தவறு செய்தார்கள், அறிவுஜீவிகள் என்ன தவறு செய்தார்கள் என்றெல்லாம் இஷ்டத்துக்கு சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்… வென்றவர்களின் அறம் பிறழ்ந்த காரியங்கள் அனைத்தையும் கொண்டாடுவதும் தோல்விக்கு காரணம் தோற்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும் என்று தேடுவதும் அதிகாரத்தோடு அண்டிவாழ விரும்பும் மனோபாவம். வீழ்ந்தவர்களுக்கு எப்படி எழுவது என்று தெரியும்…இதில் கொசுக்களுக்கு என்ன வேலை?

நீதி: வெற்றி பெற்றவரின் அராஜகமே தோல்வியடைந்தவர்களுக்கு காரணமாம். ஒருவேளை திமுக வெற்றி பெற்றிருந்தால் கவிஞரின் தத்துவ விளக்கம் என்ன மாதிரி இருந்திருக்கும்? அறம் எப்படி விளக்கப்படும்? கொசுக்கள் இருக்கும் நாட்டில் ஈக்களும் இருக்கலாம் என்பதைத் தாண்டி கவிஞரின் கவித்துவம் கர்ணகொடூரமாக இருக்கிறது.
______________

செய்தி: Araathu அராத்து

ராஜ்ய சபாவில் பாஜக மெஜாரிட்டி இல்லை – ஹையா ஜாலி !
ராஜ்ய சபாவைப்பற்றி பலரும் “கன்னி” பேச்சு பேசுகிறார்கள். ராஜ்ய சபாவில் பாஜக விற்கு மெஜாரிட்டி இல்லை , அதனால் ஒன்றையும் நிறைவேற்ற முடியாது என்று சொல்லி பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். அரசியல் மாற்றுக்கருத்துக்களால் தன் நாடு என்பதையே மறந்து விட வைக்கிறது ஈகோ. மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராக வேண்டும் என்பது இவர்களின் உள்மனது ஆசை. மோடி தலைமையில் நாடு விளங்காமல் போக வேண்டும் என்று மனதார விரும்புகிறார்கள். இந்தியாவிற்கு சாபம் கொடுத்தபடி நகம் கடித்து அமர்ந்திருக்கிறார்கள். மோடி ஆட்சியில் பூகம்பம் வந்து இந்தியா அடியோடு ஒழிந்தால் கூட இவர்கள் புன்னகையோடு சாக ரெடி !

நீதி: இளம் வயது கரப்பழக்கத்தினால் பலவீனமடையும் இளைஞர்களுக்கு ‘சிகிச்சை’ அளிக்கும் சிட்டுக்குருவி லேகிய புகழ் சேலம் சிவராஜ் வைத்தியர் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முனைந்தால் எப்படி இருக்கும்? எழுத்தாளர் சாருவின் சொம்படி சீடரான அராத்து அரசியல் பேசினால் அப்படி இருக்கும். ஆனாலும் மோடியின் பங்களா நாய்களோ, இல்லை இணைய வாய்களோ குரைப்பதிலும், கொழுப்பிலும் குறையுள்ளவர்கள் இல்லை.
_____________________

செய்தி Bala Cartoonist Bala

mummy-returns

மம்மி ராக்ஸ்..

நீதி: தவறு பாலா அவர்களே, இது “மம்மி ரிடர்ன்ஸ்”!
_________________

செய்தி: Senthil Nathan

எனக்கு 1746 வாக்குகள்தான் கிடைத்தன. (இந்தியா டுடேவில் செய்தியாளராக பணியாற்றியவரும், ஆழி பதிப்பகத்தின் உரிமையாளரும், ‘மக்கள் இணையம்’ எனும் கட்சியின் நிறுவனருமான செந்தில் நாதன், ஆரணி தொகுதியில் போட்டியிட்டார்)

நீதி: ஆண்டிகள் மடம் கட்டக்கூடாது என்றோ போண்டிகள் போண்டா சாப்பிடக்கூடாது என்றோ சொல்லக்கூடாது என்றாலும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
____________

செய்தி : Badri Seshadri

நான் எதிர்பார்த்தைவிட அதிகமான இடங்கள் பாஜகவுக்குக் கிடைத்துள்ளன. இரண்டு முக்கியமான மகிழ்ச்சிகள்:
(1) பாஜகவுக்குத் தனியாகவே பெரும்பான்மை கிடைத்துள்ளது
(2) ஜெயலலிதா, மமதா பானர்ஜி போன்ற தெய்வங்களின் துணையின்றி, அவர்களின் தொந்தரவின்றி ஆட்சி அமையும்.

நீதி: பாவம், பத்ரி! பரவசத்தில் ராஜ்யசபாவை மறந்து விட்டார். அங்கே பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதால் சோனியா, ஜெயா, மமதா, மாயாவதி என்று ஏகப்பட்ட தெய்வங்களை தொழவேண்டியது கட்டாயம். ஆகவே வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக சட்டசபை மேலவையை எம்ஜிஆர் கலைத்தது போல மாநிலங்களவையை கலைத்தால்தான் பத்ரியின் மகிழ்ச்சியை மோடிஜி காப்பாற்ற முடியும். மாநிலங்களவையைக் கலைக்கலாம் என்றால் பத்ரியைப் போன்ற காவிப்படையின் அறிஞர் படைக்கு உபதேசம் பண்ண ஒரு மடம் இருக்காது என்பது ஒரு சோகம்!
______________________

செய்தி : Marx Anthonisamy

தேர்தல் முடிவுகள்…

இந்தியா முழுவதும் மோடி, ஜெயா, மம்தா வகை அரசியலுக்குத்தான் இது காலம் என்பதை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு அதை எதிர்கொள்வது குறித்து யோசிப்போம். கடைசி நேரத்தில் அதிமுக காசு கொடுத்தது… மே.வங்கத்தில் மார்க்சிஸ்டுகளை ஒட்டுப்போட திருனாமுல்காரர்கள் அனுமதிக்கவில்லை…. கார்ப்பொரேட்களும் மீடியாக்களும் இரண்டாண்டு காலமாக திட்டமிட்டுச் சதி செய்து விட்டனர் என்றெல்லாம் சில திமுக காரர்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் டிவி யில் புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது..

இவை எல்லாம் பொய் என நான் சொல்லவில்லை. ஆனால் இவை மட்டுமே காரணம் எனத் தன் ஊழல் வாரிசு இழிவு அரசியலை திமுகவும், தங்களின் 20 ஆண்டு காடையர் ஆட்சியை மார்க்சிஸ்டுகளும் சுய விமர்சனம் செய்து கொள்ளாதவரை இவர்களுக்கு விடிவில்லை. காங்கிரஸ், தலித் கட்சிகள், யாதவ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகல் எல்லாம் தங்களின் அபத்த அரசியல்களை உள் நோக்கிப் பரிசீலிக்காமல் இப்படி சமாளிப்புகளைச் செய்து கொண்டிருந்தால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. காலம் மாறிப் போச்சு சார். கொஞ்சம் உள் நோக்கியும் பாருங்க.

நீதி: வைகோ, பஸ்வான் – பாஜக கூட்டணி, ஜெயாவை முதலில் ஆதரித்த தவ்ஹீத் ஜமாஅத் – போலிக் கம்யூனிஸ்டுகள், வாஜ்பாயியைக் கொண்டாடிய கருணாநிதி, என்று தலித், முசுலீம், சமூகநீதிக் கட்சிகள் அனைத்தும் தமது சந்தர்ப்பவாத பிழைப்பிற்காக பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து கொண்டுள்ள நிலையில், இந்துமதவெறியை வீழ்த்த இந்த வீபிடணர்களுக்கு அட்வைசு செய்கிறாராம் அறிஞர் மார்க்ஸ். ஓட்டுப் பொறுக்கி அரசியலின் வீழ்ச்சி விளிம்புக்கு சென்றுள்ள கட்சிகளை ஆதரிப்பதுதான் பின்நவீனத்துவம் பேசும் விளிம்புநிலை அரசியல் போலும்!
____________

செய்தி:  Aravindan Neelakandan

அனந்த மூர்த்தி நாட்டை விட்டு போவேன் என்றெல்லாம் சொன்னது சிறுபிள்ளைத்தனம். அதை பெரிது படுத்தி மோடியை தாக்கின போலிமதச்சார்பின்மை ஊடகங்கள். இப்போது அவருக்கு பாகிஸ்தானுக்கு டிக்கெட் அனுப்புவதெல்லாம் அதைவிட மோசம். வெற்றியில் தேவை பெருந்தன்மை என்பது மட்டுமல்ல அனந்தமூர்த்தி போன்ற இலக்கியவாதிகள் என்னதான் மடத்தனமாக பிற விஷயங்களில் கருத்து சொன்னாலும் அவர்கள் கருத்துரிமையை பேணுவது அவர்களை மதிப்பது நம் கடமை நம் பண்பாடு.

நீதி: அனந்தமூர்த்தி பேசியது சிறுபிள்ளைத்தனம்-மடத்தனம் என்றெல்லாம் வைது விட்டு, பாகிஸ்தானுக்கு டிக்கெட் அனுப்புவது மோசம், கருத்துரிமை பேணவது கடமை, பண்பாடு என்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ் அடிப்பொடி. பிச்சை எடுப்பவனுக்கு ரெண்டு இட்லி போட்டு விட்டு மூன்று அறை கொடுத்தால் முன்னது கடமையாம், பின்னது பண்பாடாம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு அடக்கமாக பேசினாலும் ஜனநாயகத்தை ஏற்காது!
____________

செய்தி:  Athiyaman de Libertarian

தோழர் கலையரசின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் : மற்றபடி எம்மை அடிக்கடி ‘அறிவுஜீவி’ என்று அழைத்து கூச்சப்படுத்துகிறீர்கள். உண்மையில் நான் அதற்க்கு தகுதியானவன் அல்ல. யாருக்கும் புரியாத கடின மொழியில், நீட்ட நீட்ட வாக்கியங்களில், தெரிதா, பூக்கோ, என்று சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும். என்ன சொல்ல வருகிறார் என்று படிப்பவர்கள் மண்டைய பிச்சுக் வைக்க வேண்டும். என்னால் முடியாது. எனவே !! :))

நீதி: புரியாத கடின மொழியில் எழுதும் அறிஞர்களை கேலி செய்யும் அதியமான் புரியும் மொழியில் உளறுவதை எவ்வளவு தன்னடக்கமாக கூறுகிறார் பாருங்கள்! அதியமான் ராக்ஸ்!
___________________

செய்தி: Jataayu B’lore

ராமனுக்கு அனுமன் போல நரேந்திர மோதிக்கு அமித் ஷா. தருமத்தின் தனிமை தீர்ப்பான் !

நீதி: பயங்கர புகழ் மோடி, மர்மப் புகழ் அமித் ஷா உடனான கூட்டணி இல்லை என்று தருமம் தனிமையில் கேவிக் கேவி அழுததாம், கருமம், கருமம்!
__________________

செய்தி: Bavachelladurai Bava

கடந்த மூன்று நாட்களாக ஊட்டியில் நடந்த விஷ்ணுபுரம் வாசகர் வட்ட சந்திப்பில் தமிழ், இந்திய, உலக சிறுகதை வரிசையில் என் ‘சத்ரு’ கதை சிறில் அலெக்ஸ் அவர்களால் வாசிப்பிற்குட்படுத்தப்பட்டு கட்டுரை வடிவில் முன்வைத்து விவாதத்திற்குட்பட்டதற்கு என் நன்றி.

நீதி: விஷ்ணுபுரம் வட்டத்திற்கு அமாவாசை தோறும் சிக்கன் பிரியாணி போட்டு, எஸ்.கே.பி கல்லூரியில் திருமண நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்த உதவிகளோடு ஒப்பிடுகையில், ஊட்டி சந்திப்பின் கட்டிங்கெல்லாம் எம்மாத்திரம் பவா செல்லத்துரை அவர்களே?
_____________

செய்தி :  Arul Ezhilan

ஒரு தமிழ் தேசிய தோழரை சந்தித்தேன்.
‘’என்ன செய்றீங்க தோழர்”
”கட்டுமானம்”
‘ஓ ரியல் எஸ்டேட் தொழில் பண்றீங்களா”
”இல்லை தோழர் அமைப்பு கட்டுமானம்”
“ஓஓ ஓ சாரி”

நீதி: வீடு-நாடு, கமிஷன்-சென்சேஷன், போட்டி-ஈட்டி, விளம்பரம்-பெருமை பேசுதல், சூதாட்டம்-திண்டாட்டம், பில்டப்பு-படபடப்பு, தரகு-உறவு, அப்பார்ட்மெண்ட்-அட்ஜஸ்ட்மெண்ட், விலை-இலை, சகாரா-மதிமுக என்று ஏகப்பட்ட விசயங்களில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் ஒற்றுமையும் கொடுக்கல் வாங்கலும் உண்டு.
__________________

செய்தி: Venkatesh Chakravarthy

அராஜகம் என்றால் ராஜனற்ற/அரசனற்ற உலகம் அல்லது நாடு. அரசனற்ற நாடு குழப்பத்திற்குள்ளாகும் (anarchy) என்ற அடிப்படையில் உருவான கருத்தாக்கம் இது. பிறகு எப்படி இந்த சொல் சர்வாதிகார செயல்பாடுகளை குறிக்கும் தன்மையை பெற்றது?

நீதி: சர்வ அதிகாரம் அரசனுக்கு இல்லையா? ராஜனற்ற உலகத்தில் சர்வாதிகாரம்தான் இருந்தாக வேண்டும் என்று விதியா? கருவின் தாக்கம் கருத்தாக்கம் என்றால் சொற்களின் வீக்கம் சொல்லோவியமாகி விடுமா?
_____________

செய்தி: Abilash Chandran

நேற்று தோழர்கள் மம்தாவுக்கு எதிராக திருவல்லிக்கேணியில் போராட்டம் நடத்தினார்கள். அதைக் கேள்விப்பட்டு மம்தா பேனர்ஜி மிகவும் பயந்து போயிருப்பதாக அறிந்தேன். அடுத்து தங்களுக்கு எதிராகவும் தோழர்கள் போராடக் கூடும் என ஒபாமா மற்றும் டேவிட் காமரூன் கலங்கி போய் தினமும் தில்லிக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம்.

நீதி: எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் நீயா நானா வள வள கொழ கொழ விவாதங்களைப் பார்த்து தமிழகமே அறிவுத் தேடலில் திளைத்திருப்பதாக நினைத்துக் கொண்டால், போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மமதாவும், ஒபாமாவும் ஏன் பயப்படக் கூடாது?
______________

செய்தி: Meenakshipuram Deivakumar Muthukumaraswamy

தமிழகத்தின் அரசியல் தனிமை கனவுகளின் தனிமையைப் போன்றிருக்கிறது. திமுக தோல்வியில் வருத்தமுமில்லை அதிமுக வெற்றியில் பிரயோஜனமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. நீர்ப்படலத்தில் அசையும் பிம்பங்களைப் போல மோடியின் முகமூடிகள் அலைவுறுகின்ற காட்சிகள் அந்நிய மொழி நாடகம் போலிருக்க மேலும் தனிமைப்பட்டிருக்கிறது தமிழகம்

நீதி: அமெரிக்காவின் கனவு அரசியலில், இனிமை புகுத்தி, கனிமை கொண்டு, ஃபண்டு மொண்டு ஃபோர்டு பவுண்டேஷன் விண்டு வரும் நரித்தன நர்த்தக காட்சிகள் தெளிவாக இருப்பதாலேயே நமது கைவிடப்பட்ட தனிமைக்கு விடுதலை கிடைத்து விடாது. மோடியின் பிம்பங்களும், என்ஜிவோக்களின் படிமங்களும் அலைவுறும் காட்சிகளில் அர்த்தமிழக்கின்றன, அநாவசிய தத்துவ உபதேசங்கள்! ஆமென்!
______________________

செய்தி: Don Ashok

“ஸ்டாலின் ராஜினாமா செய்வதாகச் சொன்னவுடனேயே நான் மறுத்துவிட்டேன், அவரும் ஏற்றுக்கொண்டார். ராஜினாமா செய்துவிட்டு வாபஸ் வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்,” என இந்துதமிழ் நாளிதழை நேரடியாகவே காய்ச்சியிருக்கிறார் கலைஞர். ஆனால் இன்னமும் சில ஜந்துக்கள் ஸ்டாலின் நாடகமாடியதாக புலம்பிக்கொண்டிருக்கின்றன.

நீதி: பொறுப்பேற்றுக் கொள்வது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் போல ராஜினாமா செய்வதும் தனிப்பட்ட முடிவுதான். மற்றவர் கேட்க ராஜினாமா வாபஸ் என்பதே நாடகமெனும் போது ராஜினாமா என்று சொல்லி வாபஸா, ராஜினாமா செய்துவிட்டு வாபஸா என்று ஆய்வதே இது எள்ளலுக்குரிய நாடகம் என்று காட்டி விடுகிறது. திமுவிற்கு வாக்கப்பட்டால் டான்களும் டணால்களாகத்தான் பேசவார்களோ?.
_______________

செய்தி: Kavin Malar கவின் மலர் shared Prabakar Kappikulam’s photo

tears..out of pride..!

mohanraj

வாக்கு எண்ணும் மையத்தில் தூத்துக்குடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் — with Lprabhakaran Karan

நீதி: போயஸ் தோட்டத்திற்கு போகும் போது கூட தா பாண்டியனோ, நல்லக்கண்ணுவோ எளிமையோடுதான் செல்கிறார்கள். அவர்களது எளிமைக்காக கண்ணீர் விடுவதா,  கம்யூனிசத்தை கூண்டோடு அம்மாயிசத்திடம் அடகு வைத்ததற்கு கோபம் கொள்வதா? எளிமையின் நலன் யாருக்காக செயல்படுகிறது என்று வலிமையாக பார்க்காமல் எளிமையை எளிமையாக பார்த்து எளிமையாக கண்ணீர் விடுபவர்களை எளிமையின் சொந்தக்காரர்களான ஏழைகள் கண்டுகொள்ள வேண்டும்.
_____________

செய்தி: Yuva Krishna

வெள்ளை காக்கா பறக்கிறது என்று சாரு சொன்னால், “ஆமாம். வெள்ளை காக்காதான் பறக்கிறது” என்று அராத்து ஒப்புக் கொள்வார். “ஆமாம், ஆமாம். வெள்ளை காக்கா கூட்டமாக பறக்கிறது” என்று கூடவே பஜனை செய்ய நான்கு எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்ட்டுகளை சேர்த்து வைத்து இருக்கிறார்கள். இம்மாதிரி கூட்டு பஜனை செய்ய மட்டுமே தெரிந்த தேங்காய் மூடி பாகவதர்கள் கொஞ்சம் காலமாக சாரு, மோடி பஜனை செய்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் பலமாகவே அந்த பஜனைக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம், சாருவை பற்றி அறியாதவர்கள். இன்னும் ரெண்டு, மூணு மாசத்திலேயே “குஜராத் கலவரத்தின் சூத்ரதாரி மோடியை எந்நாளும் ஆதரிக்க முடியாது, இதுவரை ஆதரித்ததும் இல்லை” என்று சாரு திடீர் கலகக்குரல் எழுப்புவார். சொம்பு அடித்தவர்களின் சொம்புதான் தேவையில்லாமல் நசுங்கும்

நீதி: சாரு சொல்லாதவற்றை சொல்வார் என்று மறைமுகமாக சொம்படிக்கும் சொம்புகளை விட சாரு சொன்னவற்றுக்காக நேரடியாக சொம்படிக்கும் சொம்புகள் மேல்! சொம்பு என்று வந்தபிறகு நேரடி சொம்பு, நேர்த்திக் கடன் சொம்பு என்று பிரித்துப் பார்ப்பது வம்பு.
_______________

செய்தி: தமிழ்நாடு மக்கள் கட்சி

major-mukunth

மேஜர் முகுந்தனுக்கு அஞ்சலி! இந்திய அரசே! உமது விரிவாக்க வெறிக்காக சாமானிய மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தையும், அப்பாவி ராணுவ வீரர்களையும், காசுமீர் மக்களையும் பலியிட்டது போதும்! ஐ.நா சபை முன்னிலையில்நேரு போட்ட ஒப்பந்தத்தின் படி காசுமீர் மக்களிடையே பொது வாக்கெடுப்பை நடத்து!

நீதி: இனி ஈழப் போராட்டத்தில் இலங்கை இராணவ அதிகாரிகள் கொல்லப்பட்டாலும் இது போன்ற அஞ்சலி சுவரொட்டிகளை இலங்கை அரசுக்கு விடுக்கும் கோரிக்கைகளோடு போடுவார்களோ? இராணுவம் அப்பாவியாக இருக்கும் போது இந்திய அரசு மட்டும் அப்பாவியாக இருக்க கூடாதா? மலைக்க வைக்கும் அரசியல், புல்லரிக்கும் அறிவு!
____________________

 1. vinavu:

  OTTU PODADENU SONNALUM KETKAMMATTAN,OTTU POTTAPURAMUM THATTIKETKA MATTAN
  ETHANAI THADAVAI SERUPALA ADICHALUM THANGUVAAN TAMILAN

  PAARPANA ARIYA SOOLCHIYAI OLIPOM KAAVI
  BAYANGARAVATHAI EDIRPOM ADUTHA ELECTIONLAYAVATHU

 2. // சிக்கன் பிரியாணி

  சொம்மா சிக்கன் பிரியாணி, சிக்கன் பிரயாணின்னுட்டு. பெரிய அப்பாடக்கர் சாப்பாடா அது. புளியோதரையோட கால் தூசி பெறாது. ம்ம்.

 3. // அராஜகம் என்றால் ராஜனற்ற/அரசனற்ற உலகம் அல்லது நாடு. அரசனற்ற நாடு குழப்பத்திற்குள்ளாகும் (anarchy) என்ற அடிப்படையில் உருவான கருத்தாக்கம் இது. பிறகு எப்படி இந்த சொல் சர்வாதிகார செயல்பாடுகளை குறிக்கும் தன்மையை பெற்றது? //

  எனக்கு தெரியாது சார்.

 4. There can be a joint meeting of Lok Sabha & Rajya Sabha in which NDA ll need 400 seats to pass a law,NDA has 340 in LS,45 in RS and if they win elections in Bihar & Maharashtra,they can easily make up the numbers.

  Not to forget,Jaya can support them and that is also there.

  So,Rajya Sabha logic is dead.

  • Jaya is a non-ally. Vinavu’s counter point to Badri Seshadri’s ejaculation of happiness at Modi’s victory is correct.

   Trusting her is to fall into a well headlong and lose life as Vajpayee had found. RS logic is not dead. Because you yourself say he has to seek the help of a non-ally, that too, a dangerous and treacherous one.

   I will post more on it after hearing it from you.

 5. எளிமையின் இலக்கணம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏன் அம்மா தண்ணீர் குடிக்காமல் “KINLEY”குடிக்கிறார்?

  • Are you sure he has bought a new Kinley or used the empty ball to bring water from home? Without knowing the truth, to abuse a person is the habit of certain type of people writing in internet.

  • எளிமையின் இலக்கணம் எதுக்கு சோறு சாப்பிடுறார் வேட்டி சட்டை போட்டிருக்கார்ந்னு கேக்காம விட்டுடீங்க சங்கரு :p

 6. பழைய கின்லே பாட்டில் காலியாகவே விலைக்கு வாங்கி உபயோகிபீர்களா ?அல்லதுபுதுசு வாங்கி காலியான பின்னர் அதை மீண்டும் மீண்டும் நிரப்பி உபயோகிபீர்களா ?Sar Mar அவர்களே

 7. கருணாநிதியை பற்றி “வினவுவில்” பெரும்பாலும் எழுதுவது இல்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை!! கருணாநிதியின் பகுத்தறிவு கொள்கைகள் பிடித்துவிட்டது போலும்! அது என்ன பகுத்தறிவு? அதுதான் அரசியலை வைத்து “சம்பாதிப்பது”! 2 ஜி மற்றும் ஏராளம்!

  அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்றாகும் என்பார்கள். அது கருணாநிதிக்கு பொருந்தும்!!! அதனால்தால் இவர் கடைசி காலத்தில் இப்படி தோல்வியை சந்தித்து வருகிறார் அல்லது சோனியாவின் காலில் விழுந்து தனது மகளுக்கு எம்.பி. பதவி வாங்கி தருகிறார்!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க