Thursday, October 1, 2020
முகப்பு உலகம் ஆசியா பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

-

ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு ‘அடக்கமாக’ பேசினாலும் ஜனநாயகத்தை ஏற்காது என்பதற்கு மற்றொரு உதாரணமாக ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பாஜக அடிப்பொடி தலைவர் நிதின் கட்காரி நிரூபித்திருக்கிறார். ஆள் அரவமற்ற சிவன் கோவில் திண்ணையில் குடியும் சீட்டுமாக வாழும் ஒரு ரவுடி போல, அடாவடியாகவும், பொறுப்பின்றியும் பேசி, பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதாவை ஒருமையில் திட்டியிருக்கிறார் முன்னாள் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.

தாரிக் பிர்சாதா பாக் அரசில் பொறுப்பு வகித்தாலும், இந்தியா-பாக் உறவு குறித்து நாகரீகமாக பேசக் கூடியவர். அதன் பொருட்டே அவரை இந்திய தொலைக்காட்சிகள் அவ்வப்போது விவாதத்துக்கு அழைக்கின்றன. கட்காரியைப் போன்ற காட்டுமிராண்டிகள் காட்டுமிராண்டித்தனமாக பேசுவது அதிசயமில்லைதான். ஆனாலும் ஆட்சி அமைக்கும் பொழுதில், அமைச்சராக வாய்ப்புள்ள கியூவில் நிற்கும் ஒரு தொழிலதிபர், தறுதலை போல பேசியதுதான் குறிப்பிடத்தக்கது.

ஹெட்லைன்ஸ் டுடேவில் நடந்த விவாதத்தின் வீடியோவையும், உரை வடிவத்தையும் கீழே தந்திருக்கிறோம். பார்த்துவிட்டு இந்து மத வெறியர்கள் இந்தியாவின் குடிமக்களா இல்லை டிராகுலாக்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

++++++++++

உரை வடிவம்

ஹெட்லைன்ஸ் டுடேபா.ஜ.க அரசு அமைக்க தயாராகி வரும் இந்நேரத்தில் அக்கட்சி பாகிஸ்தான் மீது கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மூத்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொள்ளா விட்டால் … புதிய அரசாங்கம் பொருத்தமான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்திருக்கிறார் என்ற அறிவிப்போடு முந்தைய இரவு ஹெட்லைன்ஸ் டுடேவில் நடைபெற்ற விவாதப் பகுதியை காண்பிக்கின்றனர்.

கட்காரி (இந்தியில்) : நான் பாகிஸ்தானிய நண்பர்களை கேட்க விரும்புகிறேன். எங்களுடைய நான்கு வீரர்களின் கழுத்தை வெட்டி சென்றீர்களே, இது போன்ற வேலை செய்வது அவர்களுடைய மிலிட்டரிக்கு அழகு சேர்க்கிறதா, நாங்கள் பாகிஸ்தானோடு அமைதியே விரும்புகிறோம். ஆனால், அவர்கள் பயங்கர நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தால், அதற்கான பதிலடி நிச்சயம்உறுதியான வடிவில் கிடைக்கும். இது மன்மோகன் சிங், காங்கிரஸ் அரசு இல்லை, எங்களுடையது.

கட்காரி (ஆங்கிலத்தில்) : நாங்க பாகிஸ்தானோடு போரை விரும்பவில்லை, நாங்கள் அமைதியை வேண்டுகிறோம். ஆனால், அதே நேரம், நாங்கள் பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஜீரோ சகிப்புத் தன்மை கொண்டிருக்கிறோம். (இந்தியில்) பாகிஸ்தான் இதை நிறுத்தவில்லை என்றால், இதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். மன்மோகன் அரசு பேசாமல் இருந்தது, நாங்கள் அப்படி இருக்க மாட்டோம்.

தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : நான் பதில் சொல்லலாமா, ஆங்கிலத்தில் பேசவா, உருதுவில் பேசவா?. (ஆங்கில நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும், வேற்று நாட்டைச் சேர்ந்தவரிடம் நமது மொழி வெறியை காட்டக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் பேசும் கட்காரியின் தவறை நாகரீகமாக சுட்டிக் காட்டுகிறார் பிர்சாதா)

ஒருங்கிணைப்பாளர் : “முன்னாள் பா.ஜ.க தலைவரிடமிருந்து மிகவும் பரபரப்பான சவால் வந்திருக்கிறது. நீங்கள் எங்கள் படைவீரர்களின் கழுத்தை வெட்டிச் சென்றால் நாங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது” (இவர் பரபரப்பை ஏற்றி விடுகிறாராம்)

நிதின் கட்காரி
நிதின் கட்காரி

தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : கட்காரி மிகவும் தவறான எண்ணத்தில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். முதலில், பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நல்ல அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால், திரு மோடி அல்லது பா.ஜ.க தாவூத் இப்ராகிம் அல்லது வேறு ஏதாவது பயங்கரவாத குழு இந்தியாவுக்கு எதிராக ஏதோ செய்து விட்டது என்ற பொய்யான முகாந்திரத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்குள் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்தால், நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு.

கட்காரி (இந்தியில்) : திரு பீராதா வுக்கு இந்தியாவின் வலிமை தெரியாதா என்ன? அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்றால், எங்களிடம் இல்லையா என்ன? முதலில் நாம் அமைதியை விரும்புகிறோம்.

பிர்சாதா  (ஆங்கிலத்தில்): உங்களுக்கு பாகிஸ்தானின் வலிமை தெரியாது என்று நான் நினைக்கிறேன். எமது அணுஆயுத வலிமை இந்தியாவின் வலிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.

கட்காரி (இந்தியில்) : திரு பீராதா இந்த மிரட்டல்கள் எல்லாம் மன்மோகன் சிங் அரசிடம் வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் வேண்டாம். (தொடை தட்டுகிறாராம்)

பிர்சாதா (இந்தியில்) : இல்லை, இல்லை. இது மிரட்டல் இல்லை, பாகிஸ்தானின் வலிமையை பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினால் அவர்கள் புது தில்லியை துடைத்து அழித்து விட முடியும், எந்த நேரத்திலும். (பிர்சாதா அவரது இயல்புக்கு மாறாக கடுமையான கருத்தை சொல்கிறார்)

கட்காரி (இந்தியில்) : திரு பீர்ராதா, மூன்று முறை போரில் உங்களுக்கு என்ன கதி ஆனது என்று நினைவிருக்கிறதா. சிம்லாவுக்கு வர வேண்டி ஏற்பட்டது நினைவிருக்கிறதா? அதெல்லாம் மறந்து விட்டதா, அந்த வரலாறு உங்களுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா? உங்களுக்கு அமைதி வேண்டுமென்றால் இது போன்று தவறாக பேசாதீர்கள். இது மன்மோகன்சிங் அரசு இல்லை, இது எங்கள் அரசு. நாங்க பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் பார்த்து பயப்பட மாட்டோம். (ஏளனம் செய்து இன்னும் அவரை கோபப்படுத்த முயற்சிக்கிறாராம்)

தாரிக் பிர்சாதா
தாரிக் பிர்சாதா

பிர்சாதா  (ஆங்கிலத்தில்) : நீங்கள் உண்மைகளை திரித்து கூறுகிறீர்கள், பொய் சொல்கிறீர்கள். வரலாற்றை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு தெரியாது என்ன பேசுகிறோம் என்று. வங்கதேச போரைப் பொறுத்த வரை அது வங்க தேச மக்களுக்கானதாக போனது. 1965-ல் நாங்கள் உங்கள் விமானப் படையை அழித்து ஒழித்து விட்டோம். 1948-ல் பாகிஸ்தான் அப்போதுதான் புதிதாக உருவாகியிருந்தது. இன்றைய பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு. பாகிஸ்தானை மிரட்டி தாக்கும் தவறை செய்யும் நாளை நினைத்து கவலைப்படுங்கள். பதிலடி மிகவும் பயங்கரமாக இருக்கும்.

பிர்சாதா  (இந்தியில்) : மும்பை தாக்குதலை பொறுத்த வரை உங்களுக்குத் தெரியாது, வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. நாங்கள் உண்மை என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தியாவுடன் அமைதிக்காகவே எங்களது முயற்சி. பாகிஸ்தானிலிருந்து எந்த ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இந்தியா மீது நடக்கவில்லை, இனிமேலும் நடக்காது. நீங்கள் உங்கள் உளவுத் துறைகளிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நேபாள் எல்லையிலிருந்து பிடித்த ஆள் யார்? நீங்கள் ஒருவரை பிடித்து அவரது பெயரை வைத்துக் கொண்டு கதை உருவாக்கி வருகிறீர்கள். (இயன்ற வரை நிதானமாக தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்)

ஒருங்கிணைப்பாளர் (இந்தியில்) : நீங்க என்ன சொல்றீங்க, கசாப் எங்கேருந்து வந்தான், பாகிஸ்தானில் அவனுடைய அம்மா, அப்பா எல்லாம் இருக்கின்றனர். பாகிஸ்தானி சேனல் அந்த கிராமத்துக்கு போனது (எதிர் தரப்பின் கருத்துப் பற்றி கவலையே படாமல், தான் சொல்வது உலகறிந்த உண்மை என்ற விடலை பையன் போல பேசுகிறார்).

கட்காரி (இந்தியில்) : உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு பொய் சொல்லாதே, அல்லா மீது ஆணையாக உண்மை சொல்ல பழகு. அவனுங்க கராச்சியிலிருந்து வரவில்லையா…. (பொறுக்கி மொழியில் இறங்குகிறார்)

பிர்சாதா : நீங்கதான் பொய் சொல்கிறீர்கள்

(மூன்று பேரும் ஒரே நேரத்தில் பேசிக் கொள்கின்றனர்)

==========

‘பாகிஸ்தான் காரன் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துட்டு போறான், மன்மோகன் சிங் என்ற கோழை கையை கட்டிக் கொண்டு கவலையில்லாமல் இருக்கிறார்’ என்று இந்து மத வெறி, இந்திய தேச வெறி முரடர்கள் பேசுவது போல, பாகிஸ்தானிலும்,

‘இந்திய உளவுத் துறை வேண்டுமென்றே கதைகளை கட்டி பாகிஸ்தான் மீது அவதூறு செய்கிறது. பாகிஸ்தானை அழித்து விட இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று பாகிஸ்தானிய மதவெறி, தேச வெறியர்கள் பேசுவதில் ஆச்சரியமில்லை.

நிதின் கட்கரி - தாரிக் பிர்சாதா
நிதின் கட்காரி – தாரிக் பிர்சாதா

மேலும், இந்தியா பாகிஸ்தானை ஒரே நாளில் காலி செய்து விடும் என்று இந்த பக்கத்திலிருந்தும், பாகிஸ்தான் இந்தியாவை அழித்து ஒழித்து விடும் என்று அந்த பக்கத்திலிருந்து சவடால் விடும் போர்வெறியர்கள் இரு நாடுகளின் தெருக்களை நிரப்பியிருக்கிறார்கள்.

இந்திய உளவுத்துறைக்கும், பாகிஸ்தானிய உளவுத் துறைக்கும், அமெரிக்காவின் மேலாதிக்க திட்டங்களுக்கும் நடுவில் இருக்கும் உண்மையை மதவெறி, தேசவெறியை ஒதுக்கி விட்டு விவரங்களின் அடிப்படையில் பரிசீலித்து வந்தடைவதுதான் இரு நாடுகளிலும் உள்ள பொறுப்புள்ள ஜனநாயக சக்திகளின் கடமை. இருநாடுகளும் அமெரிக்க அடிமை என்பதோடும், உள்ளூரில் ஏழைகளை வாட்டுவதையும் ஒரே மாதிரி செய்கின்றன. இதை நாம் அம்பலப்படுத்தினால்தான் இருநாட்டு மக்களையும் இரு நாட்டு அரசுகளிடமிருந்து காப்பாற்ற முடியும். இதன்றி போர் வெறிப் பேச்சுக்களால் எப்பயனும் இல்லை.

பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதா அத்தகைய நிதானமான அரசியல்வாதி. ஆனால், நிதின் கட்காரியும், ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளரும், தொலைக்காட்சி சேனலிலேயே இந்திய-பாகிஸ்தான் போரை நடத்தி முடித்து விடுவது போல அடாவடியாக பேசுகின்றனர்.

நிதின் கட்காரி முதலான ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் உள்நாட்டில் படம் காண்பிப்பதற்காக தாரிக் பிர்சாதா போன்ற அமைதியான, முதிர்ந்த அரசிய்வாதியைக் கூட நிதானமிழக்க வைக்கும் வகையில் பேசினாலும் நிதர்சனம் வேறாக இருக்கிறது.

வாஜ்பாயி ஆட்சியின் போது கார்கில் போரை முடித்துக் கொள்ள அமெரிக்காவின் காலில் விழுந்து சமாதானம் செய்து வைக்க கெஞ்சியதும், காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட போது கைதிகளையும், பணத்தையும் கொண்டு கொடுத்து மீட்டு வந்ததும், இரு தரப்பிலும் நல்லுறவு வேண்டும் என்று தற்போது மோடி பேசியிருப்பதும்தான் யதார்த்தம். இல்லை காந்தகாரில் பணயக் கைதியை விட முடியாது என்று அப்போதைய பாஜக அரசு ஏன் பேசவில்லை? உயிருக்கு அஞ்சாத ஸ்வயம் சேகவ குஞ்சுகள் எங்கே போயிருந்தார்கள்?

இது இவர்களது விருப்பமல்ல என்றாலும் பாக்கோடு போர் அல்லது பதட்டம் என்பது இரு நாடுகளுக்கும் கேடு விளைவிக்கும். இதை ஒரு அளவு தாண்டி ஆட முடியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மேடைகளிலும், இணையங்களிலும் பாகிஸ்தானை கூண்டோடு காலி செய்வது போல உதார் விடுகிறார்கள்.

பாகிஸ்தான் பிரதமரும் சரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்த நிதர்சனங்களை உணர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். மோடியும் வேறு வழியின்றி பதவியேற்பு விழாவிற்கு பாக் பிரதமரை அழைத்திருக்கிறார். ஒரு வேளை இது அகண்டபாரதத்துக்கான சாணக்கிய தந்திரமென்று கூட இந்துமதவெறியர்கள் வியாக்கியானம் செய்யக்கூடும்.

நிலைமை இப்படி இருக்க பா.ஜ.கவின் நிதின் கட்காரி முதல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இணையத்தில் கமென்ட் போடும் இந்துத்துவா அடிப்பொடிகளும் விளைவுகளை தாம் எதிர் கொள்ளப் போவதில்லை என்ற தைரியத்தில் வெற்று வாய்ச்சவடால் அடித்து வருகிறார்கள்.

இந்த நிதின் கட்காரி ஒரு பெரும் தரகு முதலாளி என்பதோடு ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர். ராஜ்நாத் சிங்கிற்கு முன்னதாக அகில இந்திய தலைவராக இருந்தவர். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்க போகிறவர். இத்தகைய நபர் தொலைக்காட்சியில் பாகிஸ்தானை போருக்கு அழைக்கும் கொடுமையினை என்ன சொல்ல?

போர் என்று வந்தால் மோடியோ இல்லை வானரப்படையோ சண்டை போடப் போவதில்லை. இராணுவ வீரர்களும், காஷ்மீர் மக்களும் மற்றைய எல்லைப்புற மக்களும்தான் உயிரையும், உடமையையும் இழக்க வேண்டும். அப்படி போர் நடந்தால் கட்காரி தனது மும்பை வீட்டில் சேட்டுக்கடை ஜிலேபியையும், லட்டுவையும் விழுங்கிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.

இத்தகைய முட்டாள் பாசிஸ்டுகள்தான் இனி இந்தியாவை ஆளப்போகின்றனர் என்றால் இதை விட என்ன அபாயம் வேண்டும்?

– செழியன்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. எவன் ஒருவன் மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறானோ அவனிடம் தான் இதை போன்ற கேவலமான எண்ணங்கள் இருக்கும். அனைவரும் அவரவர்கள் மதத்தில் இருக்கும் இவர்களை போன்ற கயவர்களை எதிர்போம்.. முடியாவிட்டால் அனைவரும் ஜாதி மத அடையாளத்தை துறப்போம், அனைவரும் மனிதர்களாக ஒன்றினைவோம்.. இதை போல போலி தேசபக்தியை வேரறுப்போம்..இல்லை என்றால் இதை போன்ற வெறியர்களின் பசிக்கு நாம்தான் பலியாவோம்.

 2. எவன் ஒருவன் மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறானோ அவனிடம் தான் இதை போன்ற கேவலமான எண்ணங்கள் இருக்கும். அனைவரும் அவரவர்கள் மதத்தில் இருக்கும் இவர்களை போன்ற கயவர்களை எதிர்போம்.. முடியாவிட்டால் அனைவரும் ஜாதி மத அடையாளத்தை துறப்போம், அனைவரும் மனிதர்களாக ஒன்றினைவோம்..பிஜேபி, ஆர்எஸ்எஸ், முஸ்லிம், கிறுஸ்தவ போலி தேசபக்தியை வேரறுப்போம்..இல்லை என்றால் பிஜேபி வெறியர்களின் பசிக்கு நாம்தான் பலியாவோம்.

 3. Noorani in a recent issue of Frontline wrote a detailed note of the Jansangh’s /Vajpayees’s insistence to confront with China which ended up in the huge offensive by china and India lost heavily due to the chinese war in 1962

 4. போர் என்று வந்தால் மோடியோ இல்லை வானரப்படையோ சண்டை போடப் போவதில்லை. இராணுவ வீரர்களும், காஷ்மீர் மக்களும் மற்றைய எல்லைப்புற மக்களும்தான் உயிரையும், உடமையையும் இழக்க வேண்டும். அப்படி போர் நடந்தால் கட்காரி தனது மும்பை வீட்டில் சேட்டுக்கடை ஜிலேபியையும், லட்டுவையும் விழுங்கிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.

  இத்தகைய முட்டாள் பாசிஸ்டுகள்தான் இனி இந்தியாவை ஆளப்போகின்றனர் என்றால் இதை விட என்ன அபாயம் வேண்டும்?—சொந்தக் காசிலேயே சூனியம்

 5. Nithin kadkaari has sent a strong message.
  Who spoke first about atomic bomb in the conversation ? Kadkaari ?

  Vinavu is spreading false message using headlines like dinamalar.

  • பதிலடி கொடுப்போம் என முதலில் சொன்னவர் கட்கரிதான். எதிரில் இருப்பவரை உசுப்பேற்றும் தொனிதான் அவரது பேச்சில் இருக்கிறது

   • ‘பதிலடி’னு சொல்றது எப்படி முதலில் சொன்னதாகும்? ‘அடி’ கொடுக்கிறேனு சொன்னாத்தான ‘பதிலடி’ கொடுக்குறேங்கிறதாகும்?

 6. http://varunamultimedia.com/videos/btv/vmtube/news-specials/narendra-modi-and-mahinda_-17-05-14/play.html

  I just searched “mahinda rajapaksa and narendra modi similarities” in google and I got above video link. May be vinavu can write one article based on the speech in that link.I dont understand the language of the video. But you can do little research and write one article about it.

  http://www.adaderana.lk/includes/video_story_iframe_fb.php?id=19110&rate_id=19110

 7. பாகிஸ்தான் காரன் அனு ஆயுத வலிமையைப்பற்றி பேசுரான் இந்தியா அமைதியை விரும்புகிறது என்கிறார் கட்கரி வினவு பாகிஸ்தானுக்கும் இசுலாமுக்கும் ஆதரவா பேசுது என்ன கமுனிசமோ ஒரு வேலை கமுனிசம்னா அது இசுலாம் ஆதரவு பாகிஸ்தான் ஆதரவுதானோ ஜால்ரா ஓவரா இருக்க மாறி தெரியுது கொஞ்சம் குறச்சுக்கங்க

 8. உண்மையிலேயே ஊழல் பெருச்சாளி கட் கரிக்கு தேசபக்தி இருக்குமானால் 5 ராணுவவீரர்களின் தலையை வெட்டிய பாக்கிஸ்தானுக்கு போர் சவடால் விடுக்கும் இவர் 600 தமிழ் மீனவர்களை,1.5லட்ஷம் ஈழ தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்ச தமது இளவல் மோடியின் பதவியேற்புக்கு வரும்போது தேசபக்தியை (?) கொஞ்சமாவது வெளிபடுத்துவாரா?

  • கார்கில் போரில் மரணமடைந்த போர் வீரர்களின் விதவைகளுக்காகக் கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் ஊழல் செய்து தனக்கும் தனது கார் ஓட்டுனருக்கும் இரு வீடுகளை வாங்கிக் கொண்ட மிகப் பெரிய தேச பக்தர்தான் இந்த _______ கட்காரி. இவனெல்லாம் தேசபக்தனென்றால் இந்த நாடு நிச்சயம் நாசமாகத்தான் போகும்.

 9. கட்கரி ஒரு கடைந்தெடுத்த ஊழல் வாதி தான், அந்த ஆள் சொல்வதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதே சமயம் இந்த கட்டுரையை முழுதாக படிக்கும்போது சில விடயங்கள் நெருடலாக உள்ளது.

  1. அணு ஆயுதம் பற்றி முதலில் பேசியது திரு. தாரிக் பிர்தாசா தான்.
  2. இருவருமே அத்து மீறி பேசுகையில் திரு. தாரிக் அவர்களை மட்டும் வினவு மிகவும் கனிவாக விமர்சிப்பது சரியல்ல.
  3. இந்திய வீரர்களின் தலையை வெட்டி எடுத்தது, கார்கில் போர், மும்பை குண்டு வெடிப்பு, தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம், மும்பாய்க்குள் அஜ்மல் கசாப் பற்றும் குழுவினரை அனுப்பி நூற்றுக்கனக்கனவர்களை கொன்றது, இதற்கெல்லாம் பாகிஸ்தான் தானே காரணம். ஆனால் வினவின் கட்டுரையை படித்தால் என்னவோ அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் போலவும், நாம் தான் வீண் சண்டை போடுகிறோம் என்றும் ஒரு தோற்றம் எழுகிறது.
  4. தவறு செய்தால் அதை வெளிப்படையாக தவறு என்று சொல்லுங்கள்.
  5. நிதின் கட்கரி ஒரு ஊழல் அரசியல்வாதி. ஆனால் அவர் பாகிஸ்தான் பற்றி சொன்ன சில கருத்துக்கள் உண்மையே.

  • நிதின் கட்கரி பாகிஸ்தான் பற்றி சொன்ன சில கருத்துக்கள் உண்மையாக இருப்பதைப் போலவே இந்தியா பற்றி தாரிக் பிர்தாசா சொல்லும் சில கருத்துக்களும் உண்மைதானே.

 10. பாக்கிஸ்தானின் வலிமை பேசும் நீங்கள் இந்தியரின் மனதில் பயம் ஊட்டிப் படம் காட்டுகிறீர்களா? ஆர் எஸ் எஸ் மற்றும் பஜக எதிர்ப்பு கொள்கையும், இந்துமத எதிர்ப்புக் கொள்கையும், தன் இனத்தே கேடு. எந்த இஸ்லாமியனாவது இஸ்லாத்தை எதிர்க்கிறானா? நம்மோர் மத்தும் காவித்தீவிரவாதம் பற்ரிப் பேசும் கம்யூனிஸ்டுக்களாக வலம் வருவது சரிதானா? நம்மை பாக்கிஸ்தான் அணுகுண்டு போட்டு அழிக்கத்தேவையில்லை. நம்மை நாமே அழித்துக்கொள்வோம். மற்றவர்களைப் பார்த்துப் பயந்து பயந்து நாளாந்தம் ஜீவன்ம் செய்யச் சொல்லுவது சரியா? அவன் அணுகுண்டு போடுவான் இவன் சுட்டுத்தள்ளுவான், பக்கத்தில் ஊடுருவுவான் உள்ளே இருந்து சில விசமிகள் நாசவேலையில் ஈடுபடுவர், _________என்று கூற்க்கொண்டு எமது இனத்தையும் மதத்தையும் அழிக்கத் துடிக்கும்போது நீங்கள் கமுனிசத்தையும் இந்துமத எதிர்ப்பையும் கடைப்பிடிப்பது நியாயமாக உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். எந்த இஸ்லாமியன் பாரதத்தை நோக்கிப் படையெடுப்பின் போது, தன் இனப் பெண்களைக் கொண்டுவந்தான்? பார்பனனை எதிர்ப்பதாயின் பார்பனனை எதிர்கொள்ளுங்கள் எதற்கு இந்து மதத்தை எதிர்க்கிறீர்கள்? தமிழர் சைவர்கள் என்றால் இந்து மதம் எங்கின்ற குடை பிடிக்கப்படும் போதே எதிர்த்திருக்க வேண்டும். அதைவிடுத்து அன்னிய கொமுனிசத்தை ஆட்சியில் வைக்கத் துடிக்கும் நீங்கள் இஸுலாம் ஆதிக்கத்தை எதிர்க்கும் அணியினரை வசைபாடும் கொள்கையை மாற்றுங்கள். காங்கிரஸ் சொல்வதுபோல் காந்தீயமே நீங்களும் பேசுகிறீர்கள். அவரடித்தால் இவர் இடித்தால் என்று பயந்து கொண்டேயிருப்பின் என்றும் இந்தியன் அடிமைதான். நமக்கென்று ஒரு கலாச்சாரமும், மதமும் இருக்கும் பட்சத்திலேயே நமது சமுதாயம் நல்வழிப்படும். அதை விடுத்து பிறமதங்களுக்கு அடிபணிந்து நமது இனத்தையும் மதத்தையும் நாட்டையும் கொச்சைப்படுத்தும் கொமுயூனிசம் நமது கலாச்சாரமோ மதமோ ஆகிவிடாது. பெரிதாக என்ன வித்தியாசம்? இசுலாமியன் தன் மததிற்கு நம்மை மாற்றப் பார்க்கிறான், கிறீஸ்தவன் தன் மதத்திற்கு மாறப்பார்கிறான், நீங்களும் அன்னிய நாட்டிலிருந்து வந்த கம்யூனிசத்திற்கு இந்து மத எதிப்புடன் மாற்றும் வழிகளில் எடுபட்டுள்ளீர்களேயானால், இந்து மதம் அர்றுப்போய்விடுமல்லவா? நம்மோரே நமது கலாச்சாரத்தை மாற்றி உருக்குலைய வைப்பது உங்கள் மனையிக்கும் பெற்ற தாய்க்கும் செயும் துரோகமல்லவா! தயவுசெய்து இரு பக்கமும் சிந்தியுங்கள். இன்று புத்தபகவானால் நன்மைப்படுத்தப்பட்ட நாகரீகப்படுத்தபட்ட இந்து சமயம் பவுத்தமாகிப் படுத்தும்பாடு உலகறிந்த ஊண்மை. அதற்குப் பத்த பெருமான் என் செய்வார்? இருப்பினும் அவர் நினைத்துப்பாத்திருப்பாரா, தான் செய்த நற்காரியம் நாளடைவில் வக்கிரகதியாகுமென்று? அதே போல் ஒரு செயலைச் செய்யும் முன் / ஆரம்பிக்குமுன் எதிர்கால நூற்றாண்டுகளையும் கமுனிஸ்டுகள் சிந்திக்கவேண்டும். கம்யூனிஸ்டுகள் உயர்ந்த சிந்தனையாளர்கள் ஆயினும் நாம் நமக்கென்று ஒரு சித்தாந்தம் உருவாக்கிக் கொள்ளவேண்டுமே தவிர, அயல்னாட்டுக் கொமுயூனிசத்தை அடியோடு பெயர்த்துக்கொண்டு வந்து வேதாந்தம் பேசக் கூடாது. _______________ இதில் கம்யூனிஸ்டுகளின் பிறமத சார்பு செயல்ப்பாடு அறவே இல்லாதொளிக்கப் படவேண்டும். நாம் சொல்வது உண்மை, நிதர்சனம். கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்காது என்பது யாம் அறிந்ததே. இருப்பினும் என் கடமை பணி செய்து கிடப்பதே.

  • அய்யா,பார்ப்பனனை எதிர்ப்பதாயின் பார்ப்பனனை எதிர்கொள்ளுங்கள் எதற்கு இந்து மதத்தை எதிற்கிறீர்கள் என வினவியுள்ளீர்கள்.பார்ப்பனரை தவிர மற்றவர்கள் இந்துக்கள்தானா?அரசு வேதாகம பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்று கோவில் குருக்கள் பணிக்கு முழுதகுதி பெற்ற பிற சாதியினரை குருக்கள் பணியில் அமர்த்த பார்ப்பனர்கள் தடைசெய்கின்றனர்.கரசேவைக்கு கூப்பிட்டவர்கள் கருவரைக்குள் வரக்கூடாது என தடுக்கின்றனர்.மேலும் எங்களை சூத்திரன் என இழிவு படுத்துகின்றனர்.இது போன்ற இழிவுகளை சுமந்துகொண்டு இந்துவாக இருப்பதில் என்ன பயன்?

 11. semma jalra poduringa pakistanukku. anu ayuthathai patri antha manithar than muthalil vayayi thirakirar. athan pin yerpatta anaiathu vivathangalum vinanavai. athai patri vinavil ezhuthuvathu athai vida vinanana velai. nadu nilamaiyoda irukka pazhaghungal. Nattil payangaravathaiyum, makkalin andradam puzhangum edathil vedikundu vaithu avargalin vazhkaiyai sirkulaikkum ennam konada kayavarkallukku sorinthu vidathirgal. ithu thernthu edukkapatta arasin veliyuravu kolkai, akkramippu seithalum alathu namathu virarkalin thalai aruthu kondu sentralum thakka pathiladi kathirukkirathu enru echarikkai seikirarkal. Ithai solvathu enna thavaru irukkirathu. congress karanai pola evan vanthu akkramippu sithalum thungi kondirunthal athu oru arasa. annmaiyatra arasu than ippadi amaithiyaga irukkum. vinavin ikkatturai pakkin thani manitha kunathasiyathai thukki pidithu indiavin veliyurvu kolkai mel muthirram adikkirathu. Nanraga illai ungal katturai

 12. vinavu katturaikalai padithu parthal ondru mattum purikirathu nengal ondrum desa otrumai patri pesa villa muslim muslim muslim piragu parpana payangaram avlotha entha oru katturai eduthalum ippa pakistanuku jalra adipathu ponru than therikirathu nengal yen ippadi matha veri pidithu irukirirkal ungaluku rsskum periya vithyasam theriya villai enaku nengalum athu ponra oru amaipu than unmayai solla ponal…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க