Wednesday, June 7, 2023
முகப்புஉலகம்அமெரிக்காநைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் 'ஜிகாத்'!

நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!

-

டந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முன்னிரவு. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோ மாநிலத்திற்கு உட்பட்ட சிபோக் பகுதியினுள் டொயோட்டா ஜீப்புகளில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் நுழைகிறார்கள். சிபோக் ஒரு ஒதுக்குப்புறமான கிராமப் பகுதி. அங்கே இருந்த உறைவிடப் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுகளை எழுத நூற்றுக்கணக்கான மாணவிகள் குழுமியிருக்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்தை சுற்றி வளைக்கும் ‘ஜிகாதி’கள், அங்கே பரீட்சைக்காக கூடியிருந்த மாணவிகளில் சுமார் 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு நைஜீரியா – காமரூன் எல்லைப் பகுதியை ஒட்டிய சம்பீசிய வனப் பகுதிக்குள் புகுந்து விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்

கடத்தப்பட்ட மாணவிகளில் சுமார் 50 பேர் வரை செல்லும் வழியில் தப்பி விட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. எனினும், தப்பிய மாணவிகளின் எண்ணிக்கையையோ தீவிரவாதிகள் பிடியிலிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கையையோ இது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சுமார் 267 மாணவிகள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வந்துள்ளன. சில செய்திகள் 300 என்றும், வேறு சில செய்திகள் 276 என்றும், சில செய்திகள் 267 என்றும் வெவ்வேறு எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றது.

மாணவிகள் கடத்தப்பட்ட அதே நாளில் அருகில் இருந்த  இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மாணவிகள் கடத்தப்பட்ட சில நாட்களுக்குள் ‘ஜிகாதி’ தீவிரவாத குழுவின் சார்பாக காணொளிக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் அக்குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெகா, கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க தனக்கு அல்லா கட்டளை இட்டிருப்பதாகவும், அவ்வாறு விற்பதை இஸ்லாம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவிகளில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சர்வதேச சமூகங்களின் நீலிக் கண்ணீர்

தங்கள் அமைப்பை போகோ ஹராம் என்று அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கத்தின் பின்னணி குறித்தும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்தும் நாம் அறிந்து கொள்ளும் முன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவது நல்லது. அதற்கும் முன், இந்த சம்பவம் சர்வதேச அளவில் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளின் பரிமாணத்தையும் பார்த்து விடுவோம்.

மாணவிகள் கடத்தப்பட்டு ஒருவாரம் கழித்து நைஜீரியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் ஒபியாகிலி ஆற்றிய உரையில் ”எங்கள் பெண்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை இப்ராஹிம் அப்துல்லாஹி என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் தனிச்செய்தியோடைத் தலைப்பாக (ஹேஷ்டேக்) குறிப்பிடுகிறார்(#Bringbackourgirls). அடுத்த சில நாட்களுக்கு இந்த தலைப்பு மில்லியன் முறைகளுக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது.

மே மாத துவக்கத்தில் மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் போன்ற பிரபலங்கள் இதே தலைப்பில் கீச்சுகள் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. மே 11-ம் தேதி வரை சுமார் 30 லட்சம் பேரால் இந்தச் செய்தியோடைத் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நைஜீரிய பெண்களின் நிலைமை குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேற்கத்திய உலகின் பல்வேறு நகரங்களில் நம்மூர் ‘ஆம் ஆத்மி வகைப்பட்ட’ மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடத்தப்பட்ட பெண்களை மீட்க எந்த வகையான உதவிகளையும் செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளன. நைஜீரியாவுக்கு ’உதவி’ செய்யும் பொருட்டு தனது போர் விமானங்களையும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் நைஜீரியாவில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா.

#Bringbackourgirls

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போகோ ஹராம் : நதிமூலம்

”மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்’ (இறைத் தூதரின் போதனைகளையும் ஜிஹாதையும் முன்னெடுத்துச் செல்லும் கடப்பாடு கொண்டவர்கள்). 1995-ம் ஆண்டு இசுலாமிய இளைஞர்களுக்கான ஷபாப் என்கிற இயக்கம் துவங்கப்படுகிறது. அதன் தலைவராக இருந்த மல்லாம் லாவல் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து 2002-ம் ஆண்டு ஷபாப் இயக்கத்தை முகம்மது யூசூப் என்கிற அடிப்படைவாதி கைப்பற்றுகிறார். அதிலிருந்து இந்த அமைப்பு சுன்னி இசுலாத்தின் கடுங்கோட்பாட்டுவாத அடிப்படைகளைக் கொண்ட சலாஃபி (வஹாபி) பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

தாலிபான்களைப் போலவே, ‘பெண்கள் படிக்க கூடாது, வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது, குரானைத் தவிர்த்து எதையும் கற்க கூடாது’ போன்ற பல ’கூடாதுகளின்’ பட்டியல் ஒன்றை வைத்திருக்கும் போகோ ஹராம், அதை அமுல்படுத்துவதற்குத் தோதாக ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை நைஜீரியாவில் அமைப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று அறிவித்துக் கொண்டது. சில்லறைத் தாக்குதல்களையும், ஆட்கடத்தல்களையும் செய்து வந்த போகோ ஹராமின் மேல் இரண்டாயிரங்களின் இறுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக 2009-ம் ஆண்டு யூசூப் கொல்லப்படுகிறார்; அதிலிருந்து அமைப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அபூபக்கர்
போகோ ஹராம் தலைவன் அபூபக்கர்

அபூபக்கர் தலைமைக்கு வந்த காலகட்டத்தின் சர்வதேச அரசியல் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பதாக அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கும் பொருளாதார பெருமந்தம் உலகு தழுவிய அளவுக்கு முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியாக முற்றி வளர்ந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த சமயம் அது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ’வண்ணப்புரட்சிகள்’ நடப்பதற்கான சமூக பொருளாதார சூழல் ’கனிந்து’ வந்தது.

தனது சூதாட்டப் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் இது வரை, தான் கால் பதித்திராத பிரதேசங்களில் நுழைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் உள்விவகாரங்கள் வரை தலையிட்ட அமெரிக்கா, அந்நாடுகளின் பொதுத் துறைகளையும் இயற்கை வளங்களையும் பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விட பல்வேறு வகைகளில் நிர்பந்தித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பொருளாதார தர வரிசையை எஸ்&பி குறைத்ததையும் மன்மோகன் சிங்கை கையாலாகாதவர் (under acheiver) என்று டைம் பத்திரிகையில் முகப்புக் கட்டுரை வெளிவந்ததையும் இந்த இடத்தில் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டாயிரங்களின் இறுதியில் அரபு வசந்தத்திற்கான தயாரிப்புகளில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது.

அதே காலப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தை முற்று முழுதாக எந்தப் போட்டியுமின்றி கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போகோ ஹராம் அமெரிக்காவின் கைகளில் இருந்த துருப்புச் சீட்டுகளில் ஒன்று.

முகம்மது யூசூபின் தலைமையில் இருந்த வரை, போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பிராந்தியம் என்பது ஒரு சில மாவட்டங்களுக்குள் சுருங்கியிருந்தது. அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்ற கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நைஜீரியாவின் சரிபாதி பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள போகோ ஹராமின் வளர்ச்சி திகைப்பூட்டக்கூடியது. போகோ ஹராமின் நிதி வலைப்பின்னலைத் தொடர்ந்து சென்றால் அது இங்கிலாந்தில் உள்ள அல் முண்டாடா என்கிற அறக்கட்டளைக்கும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாள் சவூதி அரேபியாவினுள்ளும் அழைத்து செல்கிறது.

போகோ ஹராம்
போகோ ஹராம் தீவிரவாதிகள்

லிபியாவில் முவாம்மர் கடாஃபியை எதிர்த்துப் போராடிய கூட்டணியில் பங்கு பெற்றிருந்த இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா (Al-qaeda in Islamic Magreb / Magreb stands for North western African continent) என்கிற அமைப்பு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏவிடமிருந்து சவூதி வழியாக நேரடியாக ஆயுதங்களைப் பெற்றது. பின்னர் லிபியாவில் தனது அமெரிக்க அடிவருடிக் ’கடமையை’ முடித்துக் கொள்ளும் மேற்படி அமைப்பு, தனது கவனத்தை அல்ஜீரியாவை நோக்கித் திருப்புகிறது.

அமெரிக்கா பிச்சையாக அளித்த ஆயுதங்களுடனும், அமெரிக்கா வகுத்துக் கொடுத்த திட்டத்துடனும் அல்ஜீரியாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தவும், அமெரிக்க ‘ஜிகாத்’தை வழி நடத்தும் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா அமைப்பு தான் போகோ ஹராமின் ஆயுதப் புரவலர். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் அபூ மௌஸப் அப்தல் வாதௌத் என்பவர் நைஜீரியாவில் உள்ள கிருத்துவ சிறுபான்மையினரை எதிர்த்துப் போராட போகோ ஹராம் அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை வழங்கி வருவதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது – போதுமான வளர்ச்சியை போகோ ஹராம் அடைய வழங்கப்பட்ட இடைவெளி அது.

ஏனெனில், ஆப்கானிய முஜாஹின்கள், அல்-குவைதா, பின் லாடன் போலவே போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தான். நைஜீரியா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் போகோ ஹராம் செயல்பட்டு வருகிறது. இதே போன்ற இசுலாமிய கைக்கூலி அமைப்புகளை வேறு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.

சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-ஷபாப்,
அல்ஜீரியா மற்றும் மாலியில் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா,
எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ கூட்டணி
லிபியாவில் இசுலாமிய போராளிகள் கூட்டணி

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் அல்-குவைதா என்கிற குடை அமைப்பின் பல்வேறு கிளைகள் (Franchise). இசுலாமிய சர்வதேசியம் இயங்கும் முறையும் அமெரிக்காவின் மெக்டொனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவகம் செயல்படும் முறையும் ஏறக்குறைய ஒன்று தான்.

இசுலாமிய சர்வதேசியமும் மெக்டொனால்டு மயமாதலும்

உலகெங்கும் கிளைகளைப் பரப்பியிருக்கும் மெக்டொனால்டு துரித உணவகத்தின் பல்வேறு தின் பண்டங்கள் அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. அங்கே விற்கப்படும் குப்பை உணவுகளின் கச்சாப் பொருட்களான உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, ஏற்கனவே வெட்டி உறைய வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்ற சமாச்சாரங்கள் மையப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். கிளைகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள் பனிப்பெட்டியில் இருந்து கச்சாப் பொருளை எடுத்து அவ்வப்போதைக்கு பொரித்து அந்தந்த நாட்டின் உள்ளூர் சுவை பாரம்பரியத்திற்கு ஏற்ப மசாலாக்களை தடவி விற்பார்கள்.

போகோ ஹராம் ஆயுதங்கள்
போகோ ஹராம் ஆயுதங்கள்

இன்றைய தேதியில் ‘ஜிகாத்’ மெக்டொனால்டுமயமாகி இருக்கிறது (Mcdonaldization). ஒரு ‘ஜிகாத்’தை துவங்கி நடத்துவதற்கு போதுமான அளவிற்கு சலாபிசம் வஹாபியம் போன்ற சித்தாந்த பயிற்சிகளை சவூதி மதகுருமார்களை வைத்து அமெரிக்காவே அளித்து விடுகிறது. மற்றபடி எந்த நாட்டில் ‘ஜிகாது’ நடக்க உள்ளதோ அந்த நாட்டின் உள்ளூர் விவகாரங்களுக்கு ஏற்ப முழக்கங்களையும் வழங்கி விடுகிறார்கள். ‘ஜிகாது’க்கு பொருத்தமான முழக்கங்களையும் (அது சில வேளைகளில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாக கூட இருக்கிறது) கையில் தயாராக கொடுத்து விடுகிறார்கள்.

போகோ ஹராம் போன்ற ஜிஹாதிகளின் கடமை எளிமையானது. காஃபிர் அமெரிக்காவுக்கும், இசுலாமிய சவூதிக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்த அமெரிக்க ’ஜிஹாதின்’ கச்சாப் பொருளின் மேல் உள்ளூர் மசாலாவை (உதாரணம் – விசுவரூபம் எதிர்ப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை) தடவி யாவாரத்தை சிறப்பாக நடத்த வேண்டியது தான்.

அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? ஏன் சொந்த முறையில் போகோ ஹராம் போன்ற ‘ஜிகாதி’களை வளர்க்க வேண்டும்?

ஆப்பிரிக்காவின் வளம்

ஆப்பிரிக்க கண்டம் அள்ளித் தீராத இயற்கை வளங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலனியவாதிகளில் நடத்திய மாபெரும் சூறையாடல்களுக்கு ஈடு கொடுத்து இன்னமும் தன்னுள் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டிருக்கிறது. நைஜீரியா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் ஏராளமான எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

போகோ ஹராம் தலைவனின் பேச்சு
போகோ ஹராம் தலைவனின் பேச்சு

ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திர நாடுகள் அல்ல. பெரும்பாலும் தமது முந்தைய காலனிய காலத்து எஜமானர்களான ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாகவோ அமெரிக்காவை நேரடியாகவோ அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணித் தரகு வர்க்கங்களே ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. எனினும், நைஜீரியா போன்ற ஓரிரு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு திறந்து வைத்த அதே வாயிற் கதவை சீனாவுக்கும் திறந்து விட்டிருக்கின்றன.

நைஜீரியாவுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வரும் சீனா, அதன் தொலைத் தொடர்புத் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 2,300 கோடி டாலர்கள் மதிப்பில் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், எண்ணெய் துரப்பணம் மற்றும் புதிய எண்ணெய் வயல்களைக் கவளங்களைக் கண்டறிவதற்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீளத் துடிக்கும் அமெரிக்காவின் சுரண்டல் வெறியும் அடங்காத எண்ணெய்ப் பசியும் சிறு அளவுக்கு பெயரளவிலான போட்டியைக் கூட விரும்புவதில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவை விரட்டுவது, ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் செயல்பாடுகளை தனது தலைமையில் மறுஒழுங்கமைப்பது என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காம்

இரண்டாயிரங்களின் மத்திய காலப்பகுதி வரை அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரம் மற்றும் ஐரோப்பியாவிற்கான அமெரிக்காவின் இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரத்தின் பொறுப்பில் ஆப்பிரிக்கா இருந்தது. 2008-ல் ஜார்ஜ் புஷ்ஷின் இறுதி நாட்களில் ஆப்பிரிக்காவுக்கென தனிச்சிறப்பான இராணுவ கட்டுப்பாட்டுக் கேந்திரமாக ஆப்பிரிக்காம் (USAFRICOM – United States African Command) ஏற்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்காம்
ஆப்பிரிக்காம் – வரைபடம்.

ஆப்பிரிக்காமின் இராணுவ தளம் சூயஸ் கால்வாயின் முகப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபௌட்டியில் அமைந்திருக்கிறது. இசுலாமிய தீவிரவாதத்திலிருந்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்தும் வடகிழக்கு ஆப்பிரிக்க முனைக்கு விடுதலை அளிப்பது (Operation Enduring Freedom – Horn of Africa) என்கிற பெயரில் உள்ளே நுழையவும் கேம்ப் லெமான்னியர் என்ற தற்காலிய இராணுவ தளத்தை ஆப்பிரிக்காமின் நிரந்தரமான இராணுவ தளமாக அமைத்துக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தது ’ஜிஹாதிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நூறு இராணுவ வீரர்களோடு சோம்பிக் கிடந்த ஜிபௌட்டியின் லெமான்னியர் இராணுவ முகாம், இன்று ‘இசுலாமிய ஜிஹாதின்’ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் இராணுவ செயல் கேந்திரமாக குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ‘ஆர்மி டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

அமெரிக்க வைஸ் அட்மிரல் ராபர்ட் மில்லர், “ஆப்பிரிக்காவில் இருந்து உலகச் சந்தைக்கு இயற்கை வளங்கள் சுலபமாக சென்று சேர்வதை உறுதி செய்வது தான்” ஆப்பிரிகாமின் கடமை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார். அமெரிக்காவின் எண்ணெய் தேவையை உத்திரவாதப்படுத்தும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுவதே ஆப்பிரிகாமின் நோக்கம் என்கிறார் அமெரிக்க இராணுவ ஜெனரல் வில்லியம் வார்ட்.

ஆக, எந்த நாட்டிற்குள்ளும் அமெரிக்கா நுழைவதற்குத் தேவையான அடிப்படை முகாந்திரங்களையும் அரசியல் தேவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கைக்கூலிகள் தான் ஜிஹாதிகள். ”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம். இது போன்ற வீடியோக்களையும் சில சில்லறைத்தனமான தாக்குதல் சம்பவங்களையும் சி.என்.என் போன்ற ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் உருவாவது தான் ‘இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டி’.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20-ம் தேதி) இரவு போகோ ஹராம் தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களை தாக்கி 48 பேரை கொன்று குவித்திருக்கும் செய்தி இப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பரேஷன் நைஜீரியாவுக்கு அமெரிக்க ‘உதவி’

போகோ  ஹராமின் மூலம் நைஜீரியாவுக்கான இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டியை உருவாக்கி முடித்து விட்ட அமெரிக்கா, தனது தலையீட்டுக்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி முடித்துள்ளது. நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன் துவக்கத்தில் அமெரிக்க தலையீட்டை ஏற்பதில் சுணக்கம் காட்டுகிறார், உடனடியாக ஜொனாதன் எப்பேர்பட்ட கையாலாகாதவர் என்பதையும் மாணவிகள் கடத்தப்பட்ட அதே சமயத்தில் அவர் கலந்து கொண்ட குடி விருந்தில் அடித்த சரக்கின் விலை என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் ‘ஆய்வு’ கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக கசியத் துவங்கியன.

உடனே ‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், அமெரிக்காவின் உதவியைத் தாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடப்பதாக அறிவித்து முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார். அமெரிக்கா தற்போது மாணவிகளைத் ‘தேடி’ வருகிறது. விரைவில் இசுலாமிய பூச்சாண்டியை ஒழித்து அமெரிக்காவின் நிரந்தர இராணுவதளம் ஒன்றின் நிழலில் ‘ஜனநாயகத்தின்’ மகாத்மியம் நைஜீரியாவில் நிலைநாட்டப்படக் கூடும். மாலி, சூடான், சோமாலியா, அல்ஜீரியா, சாட், நைஜர் உள்ளிட்ட பிற வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ’ஜிகாத்’ உக்கிரமாக நடந்து வருகிறது – டாம்ஹாக் எரிகணைகள் ’ஜனநாயகத்தின்’ நற்செய்தியை ஓசையோடு அறிவிக்கும் ஆசையோடு லெமான்னியர் முகாமில் காத்துக்கிடக்கின்றன.

ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்களோ ‘ஜிகாத்’தையும் அதன் அப்பனான அமெரிக்காவையும் வீழ்த்தவல்ல வர்க்கப் போராட்டம் ஒன்றுக்காக நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

–    தமிழரசன்

 1. Dear Vinavu & தமிழரசன்,

  //அமெரிக்க ‘ஜிகாத்’//
  //போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த *** குழந்தை தான்.//

  Blaming US for everything is such a simpleton approach. I have read ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’. I understand US’s reach and control. But still even ‘jihad’ is by US is very long shot. Please give credit to Muhamadans at least for Jihad.

  //2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது//

  I think it is still not done, as Obama follows a soft approach with Jihadists.

  //‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், *** முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார்.//

  Jonathan is a Christian unlike Kaddafi. Nigeria is slightly Christian majority country unlike Libya. Comparison is not amusing.

 2. முசுலீம் தீவிரவாதிகள் எது பன்னாலும் அதுக்கு அமெரிக்கா சதிதான் காரணம் குரான கூட எதிரிகளை கண்ட இடத்தில் வெட்டுங்கள் அவர்களை பிடரிகளிலிம் கைகளிலும் வெட்டுங்கள் என்கிற வாசகம் கூட அமெரிக்கா குரானுல இறக்கீரிச்சோ என்னவோ தெரியல முசுலீம்களுக்கு அல்லானா அமெரிக்கானு வினவு சொல்ல வருதா ஒன்னும் புரியல இசுலாமியர்களை கொன்றது இந்தியாவில் இந்து மத வெறி மியான்மரில் பவுத்த மத வெறி முசுலீம்கள் மட்டும் மத வெறில செய்யல அது அமெரிக்கா சதி அழகான நடுனிலமை அல்லா வினவு தள எழுத்தாளர்களுக்கு சொர்கம் தருவார்

 3. எல்லாவ்ற்றிற்கும் அமெரிக்காவை குறை சொல்ல முடியாது. இஸ்லாம் எல்லாவற்றயும் புனிதப்படுத்தவல்லது என்று ஒரு சாரார் முஸ்லீம் வெறித்தனமாக நம்புகின்றனர். அவர்கள் எல்லா நாடுகளுலும் அவர்கள் வலிமைக்கு ஏற்ப பிரச்சனை செய்கின்றனர். பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லுவது முதல் வினவு அலுவலகத்தில் வந்து சண்டை பிடித்த இயக்கம் வரையில் எல்லாம் ஒன்றுதான். அவ்ர்களை முழுமையாக இயக்குவது சொர்க்கம் போவது உறுதி என்ற நம்பிக்கை.

  இதை மாற்ற முடியாது. இது நாள் வரை எத்தனை பார்ப்பன, பாசிச கும்பல் என்று பிஜேபி முதல் ஜெயலலிதா … எத்தனையோ பேரை விமர்சித்துள்ளீர்கள். ஏதாவது ஒரு கட்சியோ, அமைப்போ உங்கள் அலுவலத்திற்கு வந்ததுண்டா? ஒரே ஒரு முறை இஸ்லாமிய இயக்கங்களின் கலாச்சார போலீஸ் வேலையை எழுதினீர்கள். உடனே சண்டை போட வந்து விட்டார்கள்.

  அவர்களை இயக்குவது அதீத மத நம்பிக்கை. அதற்கு அமெரிக்கா எல்லாம் தேவையில்லை.

 4. Seems Vinavu got afraid of TNTJ – to cool off they are compensating with two articles.
  1. Mynmar buddhist against muslims
  Truth is Muslims were troubling Buddhists with usual rape and murder and forming a ghetto. Buddhist retaliated.
  2. Now USA responsible for muslim terrorist Boko Haram
  I cannot find even a remote link between Boko Haram and USA. Please read the series of article in Economists last 2 issues on Boko Haram.

 5. முக்கியமான பங்காலி இஸ்ரேலை எதிலும் வினவு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் என்னவோ!!!! இந்த விஷாயத்தில் உதவ வருகிறோம் என பொய் சொல்லி உள்ளே சென்ற இஸ்ரேலை கட்டுரை மறந்து விட்டதோ!!!!

 6. @ Univerbuddy, Joseph & AAR

  இசுலாம் என்கிற மதத்தின் தோற்றமும் அந்தக் காலத்தில் அதற்காக எழுதப்பட்ட புனித நூலின் நோக்கமும் வேறு. அது கொலை செய்யப் பிறந்த மதமல்ல. பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம். இசுலாத்தின் தோற்றத்திற்குப் பின் அரபுலகில் ஏற்பட்ட அறிவுப் புரட்சியை இன்றைய மேற்கத்திய வரலாற்றாரியர்கள் மறைக்கவே செய்கின்றனர். அரபிகளை காட்டுமிராண்டிகளாக காட்டுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஆனால், ஐரோப்பாவுக்கு வானவியலையும், கணிதத்தையும், உலோகவியலையும் கற்பித்தது அரபுலகம் தான்.

  இசுலாம் செய்த கொலைகள் என்று நீங்கள் சொன்னால் கிருத்துவம் செய்த கொலைகளையும் கணக்கிலெடுத்தே பரிசீலிக்க வேண்டும். சுமார் 20 கோடி செவ்விந்தியர்களை அழித்தது, குருசேட் போர்களில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது, அன்மைக் கால வரலாற்றில் கோவா மற்றும் கொங்கன் கரையோரங்களில் நடந்த இன்க்விசிஷன்கள் என்று அந்தப் பட்டியல் மிக நீண்டது.

  என்றாலும் கிருத்துவின் வாழ்வும் பிறப்பும் அவரது காலத்துக்கு பிந்தைய கொலைகளுக்காக ஏற்பட்டதல்ல. ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளின் விடுதலைக்கான ஏக்கப் பெருமூச்சின் பதிலாக இயேசு கிருஸ்து அமைந்தார்.

  ஒரு சமூகத்தின் ஏதோவொரு சிக்கலுக்கு அந்தக் காலகட்டத்திற்கு பொருத்தமான தீர்வாக வரும் இயேசு முகம்மது நபி போன்றவர்களைப் பின்பற்றி பின்னர் மதங்கள் உருவாகிறது. அது தனிப்பட்ட நம்பிக்கை என்னும் எல்லைக்குள் இருக்கும் வரை சிக்கலில்லை. அதிகாரத்தோடு இணைந்து அதன் ஒரு கருவியாக மாறும் போது அபாயகரமான கொலைக்கருவியாகிறது.

  அந்த வகையில் தான் வஹாபியத்தை (அல்லது சலாபியம்) பார்க்க வேண்டும். வஹாபியத்தின் தோற்றமே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்காக ஏற்பட்டது தான். இன்றளவும் வஹாபியத்தின் கருமையமாக விளங்கும் சவூதி அமெரிக்க ஏகாதிபத்தின் கால் நக்கியாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல.

  ஆப்கானிய முஜாஹித்தீன்களை உண்ட்டாக்கியதே அமெரிக்கா தான் (ப்ரெஸென்ஸ்கி என்கிற சி.ஐ.ஏ அதிகாரி தான் முஜாஹித்தீன்களின் தகப்பன் – இதை அவரே தனது நூலில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்). பின்லேடன் யார்? இந்தக் கட்டுரையின் இடையில் வினவின் முந்தைய கட்டுரைக்கான ஒரு இணைப்பு உள்ளது. வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

  இசுலாத்தில் வஹாபிகள் எப்படியோ ஏறக்குறைய சிந்தனை / கொள்கை அடிப்படையில் கிருத்துவத்தில் உள்ள பெந்தெகோஸ்தேவினரை குறிப்பிடலாம். அவர்கள் ஏ.கே 47ஐயும் இவர்கள் பைபிலையும் கையில் ஏந்தியிருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வித்தியாசங்கள் ஏதுமில்லை. இரண்டுமே மதக் கடுங்கோட்பாட்டுவாதம் தான். இரண்டுமே மக்களை கும்பல் கும்பலாக மூளைச் சலவை செய்பவை தான். இரண்டுமே சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.

  பெந்தெகொஸ்தேவின் கூட்டங்களுக்குச் சென்று பாருங்கள் – தவ்ஹீது வஹாபிகள் (பி.ஜே கும்பல்) எத்தனையோ மேல் என்கிற முடிவுக்கு வருவீர்கள். காதை அடைக்கும் அந்த ‘பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” என்று அந்நிய பாஷை என்கிற பெயரில் அவர்கள் போடும் காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது.

  வினவு நண்பர்கள் பெந்தெகொஸ்தே கூட்டம் பற்றிக் கூட எழுத வேண்டும். வஹாபிகளின் மேலான விமர்சனங்களுக்கு குதூகலிக்கும் யுனிவர்பட்டி போன்றவர்கள் அப்போது அதை எப்படி பரிசீலிப்பார்கள் என்று பார்க்க ஆசை 🙂

  • //பெந்தெகொஸ்தேவின் கூட்டங்களுக்குச் சென்று பாருங்கள் – தவ்ஹீது வஹாபிகள் (பி.ஜே கும்பல்) எத்தனையோ மேல் என்கிற முடிவுக்கு வருவீர்கள். காதை அடைக்கும் அந்த ‘பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” என்று அந்நிய பாஷை என்கிற பெயரில் அவர்கள் போடும் காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது//
   .சீனா வில் மார்க்கெட்டில் குன்டு வெடிப்பு 35 பேர் சாவு
   நைஜீரியாவில் 125 பேர் கொலை 200 மானவிகள் கடத்தல்
   கென்யாவில் 7 பேர் எரித்து கொலை
   இதை மாரி நெறைய செத்து போனார்கள் பெந்தகொஸ்தெவின் முட்டாள்தனமான் காட்டு கூச்சலினால் அதனால் இசுலாமிய தீவிரவாதத்தை விட பெந்தகொஸ்தெ ஆபத்தானது அதை தடை செய்வோம்
   கமூனிசம் வாழ்க பச்சைகொடியும் வாழ்க அண்னன் மன்னாறு என்கிற முகமதும் வாழ்க அல்லாகு அக்பர்

  • @manaru:
   Ali Sina, ex-Muslim, who is well versed in Quran and Haddith is willing to reward 50,000USD to any one who can win debate against him on evils of islam. Please take up your arguments with Ali Sina.

   Non-muslims like me are not interested in the contents of islam but our point is simple whatever maybe the contents but it should not affect non-muslims.
   Whats the actual reality – wherever islam is there, there is trouble for others. If others retaliate, then muslims start complaining that they are victims.

  • Hi Mannaru,

   // அவர்கள் ஏ.கே 47ஐயும் இவர்கள் பைபிலையும்//

   ஒரு கொடிய துப்பாக்கிக்கும் ஒரு புத்தகத்திற்கும் இடையே வித்தியாசங்கள் ஏதுமில்லை என்று கூறும் உங்களிடம் எதை பேசி என்ன பயன். எனினும் மற்ற வாசகர்களுக்காக உங்கள் கருத்துக்களுக்கு பதில் கூறுகிறேன்.

   //பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம்//

   Nothing can be farther from truth than this. Muhamadism offered nothing but death to many tribes. Only those tribes who feared their lives and surrendered to Muhamad could live. It gave sex slaves and booty to jihadists and blood and slavery to kaafirs.

   //ஐரோப்பாவுக்கு வானவியலையும், கணிதத்தையும், உலோகவியலையும் கற்பித்தது அரபுலகம் தான்.//

   Goaded by booty and women, Arabs conquered all the lands around them and far from them. During their centuries of expeditions and interactions, the contributions of the people like, Iranians, Iraqis, Syrians, Indians, Egyptians, Ethiopians, Spanish, etc were carried around. This took place in spite of Arabs, who were only interested in Jihad and resulting booties.

   //கிருத்துவம் செய்த கொலைகளையும்//

   No one denies it. But if you count it, the toll of Muhamadans is an unbeatable record. In all the lands they conquered, in all the routes they took, they created terror and death. In India alone, an estimate says 80 million murders. Their killings in African can never be counted. From Morocco to Philippines their toll is unimaginable. Christians come only second with a big difference from no.1.

   //குருசேட் போர்களில்//

   Crusade took place in 11th century. 4 century before, it self, Muhamadans started creating troubles in Europe. They first conquered Spain in 8th century. They kept on attacking coastal villages in Europe, killing men, enslaving White women and selling them in Muhamadan countries. It is a pity that Chirstians could only retaliate in 11th century. Even then their attack was short lived as they did not establish their rule in Muhamadan lands. They just came to claim Jerusalem. Within very short period they lost their control on it. All the while they did not stop attacking European coastal villages and ships for booty and white women. (Have you ever wondered why Muhamadans are light skinned? Now you know). Till France attacked north African countries like Algeria, Tunisia, Morocco, etc and occupied them.

   //இன்க்விசிஷன்கள்//

   This is not teaching of Jesus. The danger of Muhamadism and puritanical movements in Muhamadism are important reasons for the appearance of inquisition.

   //ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளின் விடுதலைக்கான ஏக்கப் பெருமூச்சின் பதிலாக இயேசு கிருஸ்து அமைந்தார்.//

   It is not true. We don’t know fully what Jesus taught. But his main disciples like peter and paul wanted slaves to continue to be slaves even if they accept Christianism. The Church did nothing to abolish slavery. It is only the enlightened Europeans who strived for it and achieved. But If I do not give credit to the Church for having easily let its hold on the power go without lot of burning in stakes, I would be a thankless moron.

   //நபி//

   இறைத்தூது என்பது ஏமாற்று வேலை.

   //வஹாபியத்தை (அல்லது சலாபியம்)//

   முகமதியம் இவை எல்லாவற்றிற்கும் எல்லாவிதத்திலும் பாட்டன்.

   //ஆப்கானிய முஜாஹித்தீன்களை உண்ட்டாக்கியதே அமெரிக்கா தான்//

   Muhamadans were (still are) not happy about Communism put in place in Afghanistan with the help of Soviet Russia. US helped them in all ways to fight Communism. Twisting the facts is favorite tool of fascists.

   //காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது.//

   Takbeeeeeer Allaaaaaaaaaaaahu Akbar என்று கத்துவதும் கழுத்தை அறுப்பதும் கைகால்களை வெட்டுவதும் போன்றவற்றை விட இது கொடூரமானதில்லை.

   //வினவு நண்பர்கள் பெந்தெகொஸ்தே கூட்டம் பற்றிக் கூட எழுத வேண்டும்.//

   When Pentocoste terrorists kidnap 300 muslim girls and enslave them, etc Vinavu would write about them and your desire of seeing my comments on them would be fulfilled. Ok?

   • நன்பர் யுனிவர்புட்டி நீங்க என்னதான் விளக்கம் குடுத்தாலும் அத மன்னறும் தென்றலும் ஏத்துகிட மாட்டாங்க ஏன்னா அவங்க ஒரு முடுவு பன்னிட்டு வாதம் பன்றாங்க கம்யூனிசம்னா இதுதான் போல இருக்கு

  • கிருத்துவர்கள் மேல் குறை கூறுவதால் இசுலாம் எப்படி தூய்மையானதாக மாறி விடும்?
   இருக்கும் குறைகளை அந்தந்த மதங்கள் நிவர்த்தி செய்யும் வேலையை கவனிக்கலாம்

 7. இஸ்லாமிய பயங்கர வாதத்தால் உலகமே அச்சத்துடன் இருக்கிறது. இது நைஜீரியாவில் மட்டும் அல்ல ____________ இப்படி எத்தனையோ சொல்லலாம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஈராக், ஈரான், பாகிஸ்தான்,பாலஸ்தீனம், மற்றும் பல இஸ்லாமிய நாடுகளிலும் இதே நிலைதான். முஸ்லீம் பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்றால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் போக பொருளாக வைத்திருக்கவேண்டியதுதான்!! அது அவர்களின் அல்லா கொடுத்த மகிமை!!! யாரும் தலையிட வேண்டியதில்லைதான். ஆனால் மற்றவர்களின் உரிமையில் தலையிட ____________ என்ன உரிமை இருக்கிறது? இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் தங்களின் நிலையை தெளிவு படுத்தவேண்டும். இங்கு அதே நிலைதான். ஆனால் இந்கு முஸ்லீம்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் பலவற்றை மறைக்கிறார்கள். முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடும்போது பெண்களை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். இதற்குமுன் வினவு இந்த இஸ்லாமிற்கு தான் வக்கலாத்து வாங்கியது.

  இஸ்ரேல் தனது நாட்டை பாதுகாத்து வருகிறது. இதற்கு நிங்கள் முதற்கொண்டு இந்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறிர்கள். _____________ “ஜிகாத்” என்பதற்கு பல்வேறு பொருள் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். __________________

 8. பெந்தேகொஸ்தெ சர்ச்சுகளுக்கு போவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள்தான் ஆதிதிராவிட ,பள்ளர்,நாடார் இன உழைக்கும் மக்கள் தங்களின் உலக கஸ்டங்களை மறக்க இது போன்று கொஞ்சம் ஆடி குதித்து சத்தம் போட்டு யேசுவை வணங்குகிறார்கள் அவர்களுக்கு அமெரிக்காவும் தெரியாது கொலை செய்வதும் குண்டு வைப்பதும் தெரியாது அதனால் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் இசுலாமிய தீவிரவாதிகளை விட நல்ல கருத்து வினவும் பெந்தகோஸ்த தீவிரவாதிகளின் அமெரிக்க சார்பயும் கொலைவெறி தாக்குதல்களையும் அம்பலப்படுத்த வேண்டும் மன்னாரின் கோரிக்கையை ஏற்று என்று கேட்டுக்கொள்கிறேன்

  • வொய் டென்சன் திரு யோசேப்பு அவர்களே?

   மத அடிப்படைவாதம் கடுங்கோட்பாட்டுவாதம் ஆகியவை சாமானியர்களான இசுலாமியர்களிடமும் கிருத்துவர்களிடமும் (ஏன் இந்துக்களிடமும்) ஏற்படுத்தும் விளைவுகள் ஒன்றாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

   பின்லேடன் / தாலிபான் வகையினங்கள் செய்யும் கொலைகளுக்கான நீங்கள் எல்லா பாய்மார்களின் மேலும் போட முடியும் என்றால், அமெரிக்கா செய்த கொலைகளுக்கான பொருப்பை ஏன் கிருஸ்துவத்தின் மேல் போட்டுப் பார்க்க கூடாது?

   நான் தெளிவாகத் தானே சொன்னேன்? கிருஸ்தவமோ இசுலாமோ இந்து மதமோ – அது தனிப்பட்டவர்களின் இறை நம்பிக்கையாக மட்டும் இருக்கும் போது யாருக்கு என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது. எந்த மதமாக இருந்தாலும் அது அதிகாரத்தோடு இணையும் போது, அதிகார வர்க்கத்தின் கரங்களில் ஒரு கருவியாகும் போது மக்களைக் கொல்கிறது.

   க்ருசேட் போர்கள் மற்றும் இன்க்விசிஷன்கள் மற்றும் அமெரிக்க அபாரிஜின்கள் அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடிகள் அழித்தொழிப்பு – இதையெல்லாம் எந்த முல்லாவின் கணக்கில் வரவு வைத்திருக்கிறீர்கள் யோசேப்பு?

   யோசித்து சொல்லுங்க. அதுவரைக்கும் உங்களுக்காக மத்தேயுவின் புஸ்தகத்தின் பத்தாவது அதிகாரத்திலிருந்து இந்த வசனங்களை டெடிகேட் செய்கிறேன் 😉 என்ஜாய்

   பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

   எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

   ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

   தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

   • MATHTHEW 10:34:- Do not suppose that I have come to bring peace to the earth.
    I did not come to bring peace, but A SWORD. – பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

    “The first important observation is to recognize that Jesus does NOT speak about “THE SWORD”, but about “A SWORD”.

    Jesus is not a prophet of the sword. The sword of violence, force and war has no place in his message. What kind of sword is he talking about?

    The above passage speaks about the consequence of being obedient to the command of Jesus that we are to preach his message. Some will listen and accept it but many will reject it and react violently.

    We will be hated for the message of repentance that we have to bring. We will be hated because we call people from evil to light and because this message exposes their evil deeds.
    For many it will mean that even our own family will turn against us.

    What kind of sword? It is the sword of division that God’s word brings. It is the division of truth from error, and the reaction of the darkness against the light. The sword that Jesus brings is the sword that his followers have to suffer, a sword that is applied to them, NOT A SWORD THAT THEY WIELD AGAINST OTHERS.”

 9. உங்க கூட மத விவாதம் பன்ன என்னால முடியாது யேசுவ கூட நீங்க திட்டலாம் எல்லா கிறிஸ்துவர்களையும் திட்டலாம் எனக்கு எந்த டென்சனும் இல்ல மதம் பெரிய போதை தான் அதுக்கு நீங்க மட்டும் அடிமையா இருங்க என்னையும் அதுல இழுக்காதிங்க பைபிளோ குரானோ எனக்கு தெரியாது

 10. தோழர்கள் யுனிவர்படி, ஜோசப் மற்றும் ஏஏஆர்,

  தோழர் மன்னாரின் கருத்தை வரவேற்கிறேன். அவர் வைத்த கருத்துக்களில் பார்வையைச் செலுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

  1. மதவெறிக்கு அச்சாணியாக ஏகே 47தான் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்திருந்தால் புலிகேசியின் கையில் வாளைப் பிடிங்கிவிட்டு கிளுகிளுப்பையை நாசர் கொடுத்திருக்கமாட்டார்.
  2. ஜோசப் சொல்வது ஒருவிதத்தில் சரி, பெந்தோகொஸ்தே எளிய மக்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் வஹாபிகளா? ஆனால் மன்னார் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்; “வஹாபியத்தின் தோற்றமே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்காக ஏற்பட்டது தான்”
  3. பெந்தோகொஸ்தேவும் இதர கிறித்துவமும் ஏகாதிபத்தியத்திற்காகத்தான். அதனால் தான் ஆப்ரிக்க விவசாயி இப்படிச் சொல்கிறான்; வெள்ளையர்கள் இங்கு வந்த போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது; எங்கள் கைகளில் நிலம் இருந்தது; இன்று அவர்கள் கைகளில் நிலம் இருக்கிறது; எங்கள் கைகளில் பைபிள் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் சமூக பருண்மைகளை புரிந்துகொள்ளாமல் வெறும் இசுலாம் மதவெறியாக குறுக்குவதில் என்ன பலன்?
  4. மன்னார் சொல்கிற “பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” க்கு சர்வதேச தன்மை உண்டு!!! தோழர் ஜோசப் இங்கு கவனிக்க வேண்டும். நீங்கள் சொல்வதைப் போல பறையர்களும் நாடார்களும் மட்டும் இதைச் சொல்லவில்லை. ஐரோப்பாவில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம்: Exorcism of Emily Rose. ரோசுக்கு பல பிசாசுகள் பிடித்திருக்கும். ஹீப்ரு மொழி கூட பேசுவாள் (கோர்ட் ஆவணத்தில் இருக்கிறது). ஆனால் அவருக்கு ஹீப்ரு மொழியே தெரியாது! பாதிரியார் பேய் விரட்ட போய் எமிலி சவுக்கடி வாங்கியே இறந்து போவாள்! மேரி மாதாவிடம் அடைக்கலம் புகுவாள்! எமிலி தொடர்பாக நடந்த ஷப்பாரப்பா உள்பட அனைத்தும் உண்மை என பாதிரியாரை கொலைக் குற்றத்தில் இருந்து விடுவித்தது கோர்ட். சமீபத்தில் மிகவும் திட்டமிட்டு மக்களிடம் நினைவுபடுத்தப்பட்ட கிறித்துவம் இது. திரைப்படமாக வந்தது. எமிலி ரோஸ் இப்பொழுது திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்படிருக்கிறார். கூட்டம் கூட்டமாக மக்கள் அவரது கல்லறைக்கு வருகை தருகிறார்கள். இதன் பிண்ணனியில் தான் மன்னாரின் கருத்து வலுப்பெறுகிறது இப்படி “இரண்டுமே சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.” இதற்கு நீங்கள் மூவரும் பதில் சொல்ல வேண்டும்.
  5. ஜோசப் சொல்வதைப் போல கிறித்தவம் எளிய மக்களுக்கானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அங்கேயேயும் வஹாபிசம் உண்டு. கத்தோலிக்க திருச்சபையின் ஆறரை மணித் திருப்பலியின் முதல் வசனமே இப்படித்தான் தொடங்கும் “அருள் நிறை மரியே வாழ்க! கர்த்தருக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே” ஏனென்றால் அவள் மாமிசத்தின் இணைவின் மூலமாக இயேசுவை பெற்றடுக்கவில்லை. ஆராதனைக்கு வந்தவர்களை பாவிகள் என்று பார்ப்பதற்கு கத்தோலிக்கம் சொல்லும் காரணம் செக்ஸ் வைத்துக்கொள்கிற மனிதன் பாவி! பாவத்திலிருந்து விடுபட ஞாயிறு தோறும் பாவ மன்னிப்பு! ஒது முறிந்தால் என்ன செய்வது என்று நாக்கை மடக்குகிற பிஜே மட்டும் வெறியனல்ல. இவர்களும் தான். இவ்வகையில் பாவ மன்னிப்பும் துவா செய்வதும் வஹாபிசம் நிர்பந்திக்கிற இருமைகள் தான்! அது அரசையும் ஆளும் வர்க்கத்தையும் பாதுகாக்கிறது! மன்னார் சொல்வதைப் போல “சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.” கத்தோலிக்கத்தை வெள்ளைப்பார்ப்பனீயம் என்று சொல்வதில் இதுபோன்ற அராஜகவாதங்கள் பல உண்டு. சைவபிள்ளைகள் ஆச்சாரம் நிறைந்த இந்த கிறித்துவத்தைத்தான் ஏற்றுக்கொண்டார்கள் எனில் மதவெறிக்கு சாம்பல் புதனும் ஒருநாள் தான்! வஹாபிஸ்டுகள் நைஜிரீயாவில் மட்டுமல்ல திருநெல்வேலியிலும் உண்டு!

  மையமாக என் கேள்வி இதுதான்; மதவெறி வஹாபிஸ்டுகளுக்கு மட்டும் சொந்தமானதா? மதம் இன்று அடைந்திருக்கிற பரிமாணங்கள் என்ன? கட்டுரை இதை வைத்து தான் இயங்குவதாக கருதுகிறேன்.

  குறிப்பு: மன்னாரை முகம்மது என்று அவதூறு செய்வதைப் போல் பால் தினகரனின் கூட்டத்தை விமர்சிக்கவில்லை என்று அற்புத சுகமளிக்கும் கூட்டத்திற்குள் மறுமொழி இடுபவர்களை அடைக்கக் கூடாது என வேண்டுகிறேன். மேலும் சனிக்கிழமை புரட்சி நடந்தாலும் தோழர்கள் கலந்து கொள்வார்கள். ஆகையால் அவர்கள் அட்வெண்டிஸ்டுகளும் அல்லர்.

  • Hi Thendral,

   Mannar has copy-pasted Muhamadans’ [I don’t use Wahabi or some other names] text as a comment. (Now he has made another similar comment)
   You say /மன்னாரின் கருத்தை வரவேற்கிறேன்/. I think you have read my reply to him.
   //ஏகே 47தான் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை//

   I think this is in reply to my comment. True. But Muhamadans have a viler book in their hand in addition to the deadly weapon. So that is a deadly combination that I indeed fear.

   //மதவெறி [முகமதியர்]களுக்கு மட்டும் சொந்தமானதா?//

   இல்லை. ஆனால் தனது தன்மையால் முகமதியம் தனது பின்பற்றிகளை ஒரு குறிப்பான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

  • என்னா அண்ணன் தென்றல் உங்க மத வெரி எப்பிடி தனிஞிருச்சா இல்ல மேலும் அதிகமாகுமா நீங்க கொஞ்சம் திரிசூலம் பக்கம் வாரிங்களா உங்களுக்கு உழைக்கும் மக்கள் யாருனு காட்டுரேன் அவங்களுடய பெந்தகோஸ்தே மத வெரியும் நீங்க தெரிஞ்சுக்கலாம் அதொட இசுலாமிய மத வெரியும் தெரிஞ்சுக்கலாம் வரீங்களா

   • தோழர் ஜோசப்,

    மதவெறியில் எந்த வெறி குறைந்தது. அதிகமானது என்பது ஒரு விவாதமாக இருக்க முடியாது. உழைக்கும் வர்க்கங்களின் பண்பாடு இசுலாம், கிறித்துவம் மற்றும் இந்து மதங்களைத் தாண்டி நாம் அறிந்து கொள்ள முடியும். நமக்கு தெளிவான லட்சியம் உண்டு; அது உழுபவனுக்கு நிலம்; உழைப்பவனுக்கு அதிகாரம். இதைச் சிதைக்கிற எந்த ஒரு இயக்கத்தையும் நாம் கண்டுகொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

    தோழர் ஸ்டாலின் சொல்வதைப் போல சகலவிதமான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக ஈவு இரக்கமற்ற போராட்டங்களை நிகழ்த்துவது தான் பாட்டாளிகள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்கிற முன் நிபந்தனை. அதனால் தான் இசுலாம் என்பதோடு மட்டுமில்லாமல் பெந்தோகோஸ்தே, இந்து, பவுத்தம் என்பதையும் சேர்க்கிறோம். நான்கையும் தனித்தனியாக கண்டிக்க வேண்டுமா? தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்தப் பதிவு குறித்தும் சிந்திக்கிறவர்களை கருத்துகள் உந்தித் தள்ளும். போராட்டத்தைக் கோரும். மக்களைக் கருத்துகள் பற்றுகிற பொழுது அது ஆகச் சிறந்த பவுதிக சக்தி என்பதை நிரூபித்தது கம்யுனிசம் தான். அதனால் தான் ஆளும் வர்க்கம் கம்யுனிசத்தை பூதம் என்கிறது.

    இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.

    மதங்களுக்கு சமூக பொருளியல் நிகழ்வுகள் உண்டு. அதை அந்த தளத்தில் நோக்குகிறோம் என்பதன் பொருள் அதை ஆதரிக்கிறோம் என்பதல்ல. மாறாக, பாட்டாளிகள் நாம் வர்க்கமாக திரள்கிறோம் திரள வேண்டும் என்பது தான்.

    தோழர் யுனிவர்படி மற்றும் நீங்கள் வைக்கிற கருத்துகளில் நல்லெண்ணங்கள் உண்டு. அதன் அடிப்படையில் மதத்தை சாடுகீறிர்கள். ஆனால் இவை மட்டும் போதுமானவையல்ல என்று நினைக்கிறேன். தத்துவ துறையில் இதை எம்பயரிசம் (அனுபவவாதம்) என்பார்கள். ஒரு கட்டத்தில் நல்லெண்ணங்கள் என்பதைத் தாண்டி யுனிவர்படி மற்றும் நீங்கள் சார்ந்து நிற்கிற கருத்து இசுலாம் வெறி என்று அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடுவதாக கருதுகிறேன். இதில் ஒரு யந்திரத்தனம் உண்டு. ஏனெனில் தவ்ஹீத் போன்ற காலிகளை மத நம்பிக்கையாளர்களே எளிதில் இனங்கண்டு புறக்கணிக்கிறார்கள். மதத்திற்கு, அதன் அராஜகவாதத்திற்கு பலியாகிற மக்களை நாம் எப்படி அணுகு வேண்டும் என்பதை மக்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள முடியும். சான்றாக அரேபியாவில் நாத்திகத்தை சார்ந்து இயங்குபவர்கள் எப்படி வந்தார்கள்? எது அவர்களை நோக்கி உந்தித் தள்ளியது?

    மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கமே அனைத்து வர்க்கங்களுக்கும் தலைமையேற்க தகுதியானது என்று முடிவிற்கு வர காரணமாக அமைந்தது எது? ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு தான் என்று எங்கெல்சை சொல்ல வைத்தது எது?

    இதற்கு பதில் தேட வேண்டுமானால் வர்க்க எதிரிகளை சரியாக இணங்கண்டு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விவாதம் தான் இது. ஒரு கட்டத்தில் இசுலாம் பெந்தேகொஸ்தேவை தாண்டிச் சிந்திக்கிற பொறிகளை அடைந்துதான் தீர வேண்டும். நீங்கள் இது குறித்து சிந்தியுங்கள். இசுலாம் வெறி என்று மட்டும் சொல்லி நகர்கிற பொழுது இந்துத்துவ வெறியை கத்தோலிக்க பார்ப்பனீய வாதத்தை பெந்தேகோஸ்தேவின் ஷபரப்பாவை எப்படி எதிர்கொள்வீர்கள்? இந்த விவாதத்திலேயே இந்துத்துவம் அல்லது கிறித்துவம் சிறந்தது என்று பதிவிடுவதற்கு எது காரணமாக அமைந்தது?

    இதற்கு திரிசூலம் வரத் தேவையில்லை என்று கருதுகிறேன். என்ன சொல்கீறிர்கள்?

    • Hi Thendral,

     // மதவெறியில் எந்த வெறி குறைந்தது. அதிகமானது என்பது ஒரு விவாதமாக இருக்க முடியாது.//

     I differ. Will your communism allow a certain section of women and girls forced into being enveloped in black? Such questions are too many to list.

     //உழைப்பவனுக்கு அதிகாரம். இதைச் சிதைக்கிற எந்த ஒரு இயக்கத்தையும் நாம் கண்டுகொள்வது அவசியம்//

     I agree.

     // நான்கையும் தனித்தனியாக கண்டிக்க வேண்டுமா?//

     Yes. As per the quality and quantity.

     // தவ்ஹீத் போன்ற காலிகளை மத நம்பிக்கையாளர்களே எளிதில் இனங்கண்டு புறக்கணிக்கிறார்கள்.//

     I am not worried about TJ at all. I am worried about Muhamadism. TJ is just one manifestation of it out of a million forms. Till believers identify and ignore Muhamadism, we need to expose it.

     // வர்க்க எதிரிகளை சரியாக இணங்கண்டு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விவாதம் தான் இது.//

     You think Mannaru’s comments are such debate? You should be kidding.

     // இசுலாம் வெறி என்று மட்டும் சொல்லி நகர்கிற பொழுது இந்துத்துவ வெறியை கத்தோலிக்க பார்ப்பனீய வாதத்தை பெந்தேகோஸ்தேவின் ஷபரப்பாவை எப்படி எதிர்கொள்வீர்கள்?//

     Other fanaticisms are fuelled by Muhamadism and are growing in response to it. If we don’t speak about the unique nature of Muhamadism and expose it, other fanaticisms will grow in strength by mimicking it. Already this is what is happening since a long time. Thus by exposing the no.1 we address all others too.

 11. ##இசுலாம் என்கிற மதத்தின் தோற்றமும் அந்தக் காலத்தில் அதற்காக எழுதப்பட்ட புனித நூலின் நோக்கமும் வேறு. அது கொலை செய்யப் பிறந்த மதமல்ல. பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம்.##
  வரலாறு தெரியாமல் மன்னாறு புனித நூலின் மகத்துவத்தை பாராட்டுகிறார். பதூன்களிடமும், இஸ்ரவேலர்களிடமும் இருந்த சிறப்பான பண்புகளை அழித்ததுதான் இசுலாம். குறிப்பாக பெண்களை சிறப்பிடத்தில் வைத்திருந்த பதூயின்களின் பண்பாட்டை சிதைத்தது இசுலாம்.
  பதூயின்களை இசுலாம் பண்படுத்தியது எப்படி?
  குர்ஆன் வசனம் 9: 5 —- புனித மாதங்கள் சென்றுவிட்டாள் இணைவைப்பவர்களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் கொல்லுங்கள். அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகை இடுங்கள்; (அவர்கள்) நடமாடும் பாதைகளெல்லாம் அவர்களுக்காக நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.ஆனால் அவர்கள் பாவமன்னிப்பு கோரி , தொழுகையை கடைபிடித்து வந்தால் அவர்களுடைய பாதையை குறுக்கிடாமல் விட்டு விடுங்கள்.

  இசுலாத்திற்கு மாறிவிட்டாள் பதூயின்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடாதீர்கள் என்பது கடைசிவரியின் பொருள். இப்படி நிறைய வசனங்கள் உண்டு.

 12. இஸ்லாம் மற்றும் கிறிஸ்து சம்பத்தப்பட்ட புத்தகங்களில் எல்லாம்