Wednesday, February 19, 2020
முகப்பு உலகம் ஆசியா சவுதியில் நாத்திகர் கதி என்ன ?

சவுதியில் நாத்திகர் கதி என்ன ?

-

தில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம். பகிரங்க விவாதம் எனும் ஜனநாயக வழிமுறையை மதமோ இல்லை மார்க்கத்தை பின்பற்றும் இசுலாமிய நாடுகளோ அனுமதிப்பதில்லை.  ஏன் அனுமதிப்பதில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பது மதத்தை இழிவுபடுத்துவது என்கிறார்கள்.

சவுதி மன்னர்
சவுதி மன்னர் – அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள்.

இவர்களே இப்படியென்றால் இவர்களுக்கு ஜனநாயக ’விழுமியங்களை’ கற்றுக் கொடுத்த சித்தாந்த மூலவர்களான சவுதி அரேபியாவின் அரசியல் சூழல் எப்படியிருக்கும்? சவுதியில் குழந்தைகள் மண்ணில் குழி தோண்டி விளையாடினாலே பெட்ரோலும் டீசலும் பீறிட்டு அடிக்கும் என்கிற  அம்புலிமாமா கதைகளை விடுத்து அங்கே ஜனநாயகம் என்கிற வஸ்து கிலோ என்ன விலைக்கு விற்கிறது என்ற இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி சவுதி அரசு தீவிரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ’தீவிரவாதம்’ என்றால் என்னவென்று அமெரிக்கா துவங்கி இந்தியா வரை உழைக்கும் மக்களை இனம், மொழி, மதத்தின் பெயரில் ஒடுக்குவதறத்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரசு தீவிரவாதத்திற்கு புதிய விளக்கங்களை அளிக்கிறது. மேற்படி சட்டப் பிரிவின் முதல் ஷரத்தின் படி “சவுதி நாட்டின் அடித்தளமான இசுலாமிய மதத்தின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோ, நாத்திக கருத்தை எந்த வடிவத்திலாவது கொண்டிருப்பதோ” தண்டனைக்குரிய குற்றம் என்றாகிறது.

தீவிரவாத தடுப்பு சட்டம் என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் இந்த கேலிக்கூத்தில், எது தீவிரவாதம் என்பதற்கான குறிப்பான விளக்கங்களே இல்லை. மாறாக, அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற இயல்பான கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள். சவுதி அரசால் ’தீவிரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்டவர் என்றால் ’குற்றத்தின்’ தன்மைக்கேற்ப தலையைக் கூட இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்க.

கடவுள் மறுப்பு மட்டுமல்ல, இசுலாத்தை மறுத்து வேறு மதங்களைத் தேர்ந்தெடுத்தாலும் (apostasy), சவுதியில் ஏற்கனவே நடப்பில் உள்ள ஷரியா சட்டங்களின் படி மரண தண்டனை தான். இசுலாத்தை உள்ளிருந்தே விமர்சிப்பதும் கூட மத விரோதம் என்கிற பிரிவுக்குள் அடங்கி உயிரை பலிவாங்கி விடக்கூடும். சுதந்திரம் என்கிற வார்த்தை மூளைக்குள் நுழையும் முன்பே தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.

சவுதியைச் சேர்ந்த ராயீஃப் பதாவி சொந்தமாக இணையதளம் ஒன்றை நடத்தும் இணைய எழுத்தாளர். ’சவுதியின் தாராள சிந்தனையாளர்களை விடுவி’ (Free Saudi Liberals) என்ற இணையதளத்தில் இசுலாத்தை விமர்சித்து எழுதிய ‘குற்றத்திற்காக’ 2012 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். மத விரோத (apostasy) குற்றச்சாட்டை எதிர்கொண்ட ராயீஃப் பதாவி, சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் தொடர்ச்சியான அவதானிப்பை அடுத்து கடந்த ஏழாம் தேதி 10 ஆண்டு சிறை வாசத்தையும் ஆயிரம் சவுக்கடியையும் ஒரு லட்சம் ரியால் அபாரதத்தையும் தண்டனையாகப் பெற்று தலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அரசரை கேலியாக பேசியவர்கள், இசுலாத்தை கிண்டலடித்து எழுதியவர்களெல்லாம் ஒன்று முதுகுத் தோல் உரிக்கப்பட்டு அலைகிறார்கள் அல்லது தலையைத் தொலைத்து விட்டு மண்ணுக்குள் உறங்குகிறார்கள். உலக சுதந்திரத்தின் ஒரே காவல் தெய்வமான அமெரிக்காவோ அதன் இன்னபிற அடிவருடி அறிவுஜீவிகளோ, இது வரைக்கும் சவுதியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அரசர் அணிந்து வீசிய கிழிந்த ஜட்டி போல பாலைவன புயலில் பறப்பதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

சவுதியில் நாத்திகர்கள்
சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

வானத்தில் துப்பிய எச்சில் ஏன் மூஞ்சியில் விழுகிறது என்று அதிசயப்பட்ட முல்லாவின் கதையை படித்திருப்போம். அது புவியீர்ப்பு விசையின் அடிப்படை விதி என்பதைப் புரிந்து கொள்ள அவரிடம் அறிவும் இல்லை, அதிகாரமுமில்லை – பின்னது இருந்திருக்குமானால் சவுதி அரசைப் போல், எச்சில் மூஞ்சியில் விழுவதைத் தவிர்க்க சட்டமியற்றியிருப்பார். சவுதி அரசு நாத்திகத்தைக் குறித்து அஞ்சுவதற்கும் இந்த தீவிரவாத அச்சத்திற்கும் காரணமில்லாமல் இல்லை.

சவுதியில் வஹாபிய பாணி இசுலாமிய மதமும் அதிகாரமும் வேறு வேறல்ல. சவுதி போன்ற நாடுகளில் அதிகாரத்திற்கு எதிரான எந்த சிந்தனையும் மதத் துறப்பிலிருந்தும் இறை மறுப்பிலிருந்தும் தான் இயல்பாகவே துவங்குகிறது – இந்தியாவில் பார்ப்பனிய படிநிலை சாதி அமைப்பைத் தொடாமல் ஜனநாயகம் குறித்து பேசவே முடியாது என்பதைப் போல.

சமீபத்தில் கல்லப் என்கிற வலைத்தளம் எடுத்த இணைய வாக்கெடுப்பில் சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ‘நாத்திகம் என்றாலே ஆபாசமானது, தீங்கானது, சபிக்கப்பட்ட பரலோக வாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது’ என்றெல்லாம் சவுதி மதகுருமார்களால் விளக்கமளிக்கப்படுகிறது. உலகிலேயே முத்தவீன்கள் எனப்படும் மத போலீசைக் கொண்டு தடிக்கம்பாலும் தலைவெட்டி தண்டனைகளாலும் மதப் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வெகு சில நாடுகளில் ஒன்றான சவுதியில், ஐந்து சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், அடக்குமுறைகள் விலகினால் அந்த சதவீதத்தின் அளவு எந்தளவுக்கு கூடும் என்பதை நாம் அனுமானிக்கலாம்.

சவுதியில் நாத்திகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

”யாரேனும் தங்களை இறை நம்பிக்கையற்றவர் என்று அறிவித்துக் கொண்டால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, குடும்பத்திலிருந்து முதலில் வெளியேற்றப்படுவார். அவரது வேலை பறிபோகலாம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவார்கள் – பிறரிடமும் அவரைக் குறித்து எச்சரிப்பார்கள். ஒருவேளை அவர் தாக்கப்படலாம், ஏன் கொலை கூட செய்யப்படலாம்” என்கிறார் ஜாபிர்.

ஜாபிர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் துடிப்பான இளைஞர். சவுதியின் மதிப்பு வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் கல்வி படித்தவர். கடுமையான இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவர். சொந்த முறையில் குரான் மற்றும் பிற ஹதீதுகளைப் படித்து அதன் முரண்பாடுகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் நாத்திகராக மாறியவர்.

’உங்கள் மத்திய கிழக்கு’ (your middle east) என்கிற பத்திரிகையின் செய்தியாளருக்கு தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஜாபிர் (மாற்றப்பட்ட பெயர்) அளித்த பேட்டியில் ’இது போன்ற சமூக நிலைமைகளில் ஒரு சவுதிக்காரனாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறார்’ என்று பேட்டியாளர் கேட்டதற்கு அவர் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார் –

”சவுதி ஒரு மதச்சார்பற்ற நாடல்ல என்கிற எதார்த்தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. எனது நாடு ஒரு மதச்சார்புள்ள நாடு என்பதும் இசுலாத்தின் அதிதீவிரமான பிரிவு ஒன்றை முன்மொழிகிறது என்ற எதார்த்தமும் என்னை அச்சுறுத்துகிறது. நான் இந்தச் சமூகத்தில் மாற்றங்களைக் காணவில்லை, அரச குடும்பத்தில் மாற்றங்களைக் காணவில்லை. வெளியுலகைப் பொருத்தவரை, இங்கே தாம் பிறந்த மதத்தை நம்ப மறுத்த எளிமையான காரணத்தை முன்வைத்து எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் எண்ணெய் மட்டும் தான்.”

“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களான இணையதளமும், சமூக வலைத்தளங்களுமே நாத்திகர்களின் ஒரே தொடர்பு சாதனமாக உள்ளது. பல்வேறு நகரங்களில் நாத்திக குழுக்கள் இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன.”

”இறை நம்பிக்கையற்ற நாங்கள் பல்வேறு நகரங்களில் எங்களது சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அவை பிறரின் அவதானிப்புக்கு வருவது கடினம் என்றாலும் நீங்கள் அந்தக் கூட்டங்களுக்குச் சென்றால் அங்கே கூடுபவர்களின் எண்ணிக்கையும், பல்வேறு சமூகத்தட்டுகளைப் பிரதிபலிக்கும் உறுப்பினர்களையும் பார்த்து வியப்படைவீர்கள்” என்கிறார் ஜாபிர்.

சவுதியில் நாத்திக வாழ்க்கை
“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான்.”

மிர்ஸா காலிப் என்ற இந்திய முசுலீம் ஒருவரின் அனுபவமோ வேறு சில செய்திகளைச் சொல்கிறது. கடுமையான மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட மிர்ஸா காலிப், பணி நிமித்தமாக சுமார் பத்தாண்டுகளாக சவுதியில் வசித்துள்ளார். சவுதிக்குச் செல்லும் போது தீவிர மதப்பற்றாளராக சென்ற மிர்ஸா, திரும்பி வரும் போது நாத்திகராகத் திரும்பியுள்ளார். இங்கே வந்ததும் எழுபது வயதான தனது தந்தையிடம் சுமார் பத்தாண்டு காலம் விவாதித்து அவரது எண்பதாவது வயதில் அவரையும் நாத்திகராக மாற்றியுள்ளார்.

“நான் நாத்திகனாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. என்னோடு பணிபுரிந்த அரபிக்கள் என்னை மிக மோசமான முறையில் கேலி பேசியது அதில் பிரதானமானது. நான் ஒரு சரியான முஸ்லீம் இல்லை என்றார்கள். அது எனது மத பெருமிதத்தை இழிவு படுத்தியது. ஏனெனில், நான் ஒரு சிறந்த முஸ்லீம் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். பின்னர் இந்த உளவியல் சித்திரவதைகளைத் தாள முடியாமல், நானே சொந்த முறையில் இசுலாத்தை ஆய்வு செய்யத் துவங்கினேன்” என்கிறார் மிர்ஸா.

மேற்கத்திய நாடுகளுக்கு தனது எணணெய் கிணறுகளைத் திறந்து விட்டு, அவர்கள் அளிக்கும் எச்சில் காசில் கொட்டமடித்து வரும் சவுதி ஆளும் வர்க்கத்துக்கு மக்களின் அதிருப்தி தங்களை நோக்கித் திரும்பாமல் தடுக்கும் தடுப்பணையாக இசுலாம் பயன்படுகிறது. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ள நடுத்தர மற்றும் உயர் வர்க்க சவுதிகளோ தடித்தனத்தில் ஊறி வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்களையே கூட மிக இழிவாக நடத்துகிறார்கள். இந்த இனவெறியாலேயே சுயமரியாதை கொண்ட பிறநாட்டு முசுலீம் மக்கள் மனதளவில் இசுலாத்தை விட்டு இயல்பாகவே விலகுகிறார்கள்.

நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது. இது வேலையே செய்யாமல் கையெழுத்துப் போட்டு சம்பளம் மட்டும் வாங்கும் ஒரு பிரிவினரை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அமெரிக்காவின் எச்சில் காசில் சவுதி அரசு மக்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதும் வராமலிருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ள ஏராளமான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உள்ளது. மொத்த நாடும் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டிருப்பது குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சொரணையின் நெருப்பு தோலைச் சுடாதபடிக்கு வஹாபியம் அரணாக போர்த்திக் கொள்கிறது.

உள்ளூரில் விறைப்பு காட்டும் அதே வஹாபிய அதிகாரத் திமிர், பணக்கார சவுதிகளுக்கு நாட்டின் எல்லைகளை மத்திய கிழக்கின் விபச்சார சொர்க்கங்களை நோக்கி இருபத்து நான்கு மணி நேரமும் திறந்து வைத்திருக்கிறது. நாட்டிற்கு வெளியே விபச்சாரத்தில் மூழ்கித் திளைத்து விட்டு, நாட்டிற்கு உள்ளே ஐந்து வேளை தவறாமல் தொழுது தங்கள் ஈமானைக் காத்துக் கொள்ள, வசதியான ஷேக்குகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் பணக்கார ஷேக்குகளின் முதலீட்டு இலக்கே அமெரிக்கா தான் எனும் போது தனது சொந்த நாடு தொடர்ந்து அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் இயல்பான விருப்பம்.

சவுதி மாணவர்கள்
நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது.

ஆனால், சமூகத்தின் நிலைமை, சக மக்களின் இழிந்த வாழ்க்கை, ஏழை சவுதிகளை வாட்டும் வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் சுதந்திரம் பறிபோய் மேற்குலகங்களின் செருப்பாக சவுதி மாற்றப்பட்டிருப்பது என்கிற எதார்த்தமான உண்மைகளுக்கு முகம் கொடுத்து, நேர்மையாக பரிசீலிக்கும் திறன் உள்ளவர்கள் சவுதியில் அதிகாரமும் மதமும் பிரிக்கவொண்ணாதபடிக்கு இணைந்திருப்பதை சுலபமாக புரிந்து கொள்வார்கள்.

அதிகாரத்திற்கு எதிரான அமைப்பாக திரளவோ, ஒரு கட்சியின் தலைமையில் சவுதி அரச குடும்ப சர்வாதிகார அரசை வீழ்த்தவோ சாதகமான சூழல் உடனடியாக இல்லை. ஆகவே இயல்பாகவே மதக் கடுங்கோட்பாட்டு வாதத்தின் பிடியில் இருந்து விடுபடுவதே சுதந்திரத்தை நேசிப்பவர்களின் முன் உள்ளே முதல் தேர்வாக உள்ளது. அடிவருடி அதிகார வர்க்கத்தின் மேலான கசப்பின் உடனடி விளைவாக அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே வஹாபிய இசுலாத்தின் எதிர் திசையை நோக்கி இருக்கிறது.

இது சவுதியின் பாசிச மன்னர் குடும்பத்திற்கும் தெரியும். அதனால் தான் நாத்திகர்களைத் தீவிரவாதிகள் என்று அறிவித்த முதல் ஷரத்தை தொடர்ந்து வரும் 2-வது ஷரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது –

”ஆட்சியாளர்கள் மேல் விசுவாசம் வைக்காதவர்கள் மற்றும் வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனை போக்குகள், நாட்டிற்கு உள்ளே – வெளியே உள்ள தனிநபர்களையோ குழுவையோ உணர்வுப்பூர்வமாக ஆதரிப்பவர்கள்” – இவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்கிறது சவுதி.

அரசரைத் தவிர, வஹாபியத்தைத் தவிர வேறு ‘சிந்தனைப் போக்குகள்’ கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது தான் இதில் உள்ள கோணங்கித்தனத்தின் உச்சம். என்னதான் வல்லமை கொண்டதாயினும், மண்டையோட்டைத் துளைத்துக் கொண்டு மூளைக்குள் ஊடுருவி, அதன் நியூரான்கள் அல்லாவையும் அரசனையும் விடுத்து வேறு எதை யோசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பீராய்ந்து வந்து மதக் கோர்ட்டின் விசாரணைக் கூண்டுக்குள் நிப்பாட்டும் ஆற்றல் இசுலாத்திற்கு இல்லை. அதற்காகத்தான் வஹாபிய தடிக்கொம்பை வைத்திருக்கிறார்கள்.

இசுலாத்தால் இயலாதது எல்லாவற்றையும் வஹாபிய வெறி சாதிக்கும். ஏனெனில், மத நீதிமன்றத்தில் குருமார்கள் சொல்வது தான் சட்டம். எந்த அடிப்படையும் இன்றி சர்வதேச மனித உரிமை இயக்கங்களின் அழுத்தங்களைக் காலில் போட்டு மிதித்து விட்டு அப்பாவிப் பெண் ரிசானா நபீக்கின் தலையை ஊரே பார்க்க அறுத்தெறிந்த வாட்களுக்கும் அறிவும் இல்லை அதை இயக்கும் அதிகாரத்திற்கு மனசாட்சியும் இல்லை.

மெல்லிய சலசலப்பைக் கூட இசுலாமியத்துக்கே ஏற்பட்ட ஆபத்தாக அறிவித்து நாத்திகர்கள் என்று முத்திரை குத்தி எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி நடந்தால் அதற்கும் கூட்டம் போட்டு சவுதி அரச பரம்பரைக்கு வக்காலத்து வாங்கி சொம்படித்து நியாயப்படுத்த உலகெங்கும் வஹாபியர்கள் உண்டு. நம்மூரிலும் கூட ’மண்ணடி மார்க்க அறிஞர்கள்’ படை ஒன்று உள்ளதை நீங்களே அறிவீர்கள் தானே.

வஹாபியத்தை வாயில் திணித்து, தொண்டைக்குழிக்குள் கம்பால் அடித்து இறக்க முயலும் ஒரு தேசத்தில் நாத்திகர்களாகவும் அதன் வழி அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களாகவும் இருப்பது அசாதாரணமானது. மதப் பிற்போக்குவாதத்தை எதிர்த்து நீண்டதொரு பயணத்தைத் துவங்கியுள்ள சவுதி நாத்திகர்களின் பயணம் அதிகாரத்திற்கு எதிரானதாக வெகு விரைவில் மிளிர வேண்டும்.

தங்கள் நம்பிக்கைகளுக்கான தனிப்பட்ட சுதந்திரம் என்பதும் சமூகத்திற்கான பொதுவான சுதந்திரம் என்பதும் வேறு வேறு அல்ல என்பதை அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே உணர்வார்கள். அப்படி நடக்கும் போது ஜனநாயகத்துக்கான கோரிக்கை வலுப்பெற்று சவுதி அரச வம்சத்தினரை பாலைவனப் புழுதியில் விசிறியடிக்கும் நாள் வந்தே தீரும். அதைச் சாதிக்கப் போகும் அமிலத்தில் பூத்த அந்த மலர்களை நாம் வாழ்த்துவோம்.

–    தமிழரசன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. Vinavu getting ready for another round of boxing?

  Islam is founded on the belief that Quran is Gods saying. Muslims do everything as per Quran. You cannot question anything written in Quran. So Take care.

 2. ஹலோ அட்மின், ஒரு விஷயத்தை பற்றி தெரியாவிட்டால் வாய் மூடி இருப்பது தான் நன்று…நீங்கள் சவுதி நாட்டை பற்றி விமர்சிப்பது சரி என்று ஏற்றுகொள்ளலாம். ஏன் என்றால் மன்னர் ஆட்சியை இஸ்லாம் எதிர்க்கிறது. இந்த ஒரு முக்கியமான விசயத்திலேயே நமக்கு புரியலாம், சவுதியில் பண அதிகாரமும் அமெரிகாவின் அடிமைகளும் தான் ஆட்சி புரிகிறது இஸ்லாம் ஆட்சி அல்ல என்று….ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு தனி மனிதனை வைத்து அவன் நடந்து கொள்ளும் முறையை வைத்து அவனின் மதத்தை கணக்கிட முடியாது, அப்படி என்றால் பூசாரி பூஜை அறையில் களியாட்டம் ஆடுவதும், கிறிஸ்தவ பாதர் சர்ச்சில் உடன் இருக்கும் பெண்களுக்கு “புது நன்மை” எடுப்பதும் அவர்களின் மத அடிப்படையில் என்று ஒத்துக்கொள்ள முடியுமா??? உலகில் 99% பேர் அவர்களுடைய மதத்தின் அறிவுரை படி நடப்பதே இல்லை பின்னர் எப்படி ஒரு மனிதனின் நடவடிக்கையை பார்த்து மதத்தை எடை போட முடியும்???? தந்தை பெரியாரே இஸ்லாமியர்களை பற்றி அதிகம் பேசியது கிடையாது இந்துக்களையும் அவர்களின் செயலையும் அதிகம் பேசி இருக்கிறார்…நீங்கள் சவுதி மற்றும் மற்ற அரபு நாட்டை பற்றி நீங்கள் மட்டும் அல்ல உலகில் உள்ள நிறைய முஸ்லிம்கள் கவலை கொள்கிறார்கள் ஏன் என்றால் எங்கள் தலைவர் நபி பெருமானரை பற்றி ஒரு யூத ______ அசிங்கமாக படம் எடுத்த போது இந்த முஸ்லிம் பெயரை தாங்கிய அரபு நாடுகள் ஒரு சிறிய எதிர்ப்பும் காட்டவில்லை…இவன்கள் எல்லாம் இஸ்லாத்தை பின்பற்றி தான் ஆட்சி புரிகிறார்கள் என்று நீங்கள் நினைக்க தேவை இல்லை. அது மட்டும் அல்லாமல் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநிதி செய்கிறான் என்று எந்த ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டான்…அவன் கண்டிப்பாக ஒரு யூத or பார்ப்பனிய_________ சூழ்ச்சியில் சிக்கி சீரழிய போகிறான் என்று தான் அர்த்தம்.இஸ்லாம் வேறு மனிதன் வேறு (இன்றைய காலகட்டத்தில்)…இன்றைய நிலையில் அமெரிக்க நாய், ஆப்கனிஸ்தான் ஈராக் எகிப்து சிரியா…இன்னும் இந்த லிஸ்ட் வரும் காலத்தில் நீண்டு போகும் ஏன் என்றால் உலகில் முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் என்று தான் யூத மற்றும் BJP RSS —– திட்டம் தீட்டுகிறார்கள்….அமெரிக்கா இத்தனை நாடுகளை குடி கெடுத்தானே என்ன கிடைத்தது அவனுக்கு????அந்த நாடு அழிந்ததை தவிர….இவ்வாறு ஒரு நாட்டுக்குள் கலக காரர்களை உருவாக்கி அவர்களுக்கு அணு ஆயுதத்தை விற்று அந்த நாட்டை மண்ணாக்கி சுடுகாடாக்கி பின்னேர் அறிவிப்பான் இப்போ இந்த நாடு சுதந்திரம் அடைந்தது என்றும் நல்ல அமைதியாகி விட்டது என்றும் சொல்லுவான்…இப்படி தான் முஸ்லிம் நாடுகள் மட்டும் அல்லாமல் முஸ்லிம் மக்களை பற்றியும் தவறான என்னத்தை உருவாக்குகிறான்…பிரச்சனையை உண்டு பண்ணி அதனை இவனே போய் தீர்த்து வைப்பவன் போல நடிக்கிறான். நீங்கள் சொன்னது போல சவுதி அமெரிக்காவின் அடிமை தான் இந்த உலகத்துக்கே இந்த உண்மை தெரியும். உலகில் நடக்கும் எல்லா அநீதிகளுக்கும் அமெரிக்கா மட்டு ம்தான் காரணம்…நீங்கள் சொல்வது போல இந்த மன்னர் ஆட்சியை தக்கவைத்து கொள்ள தான் இன்றைய சவுதி அரசு நிறைய தவறான முடியுகளை எடுத்திருக்கலாம்…அவர்கள் செய்யும் நிறைய விஷயம் தவறு கலந்து தான் உள்ளது. இதனால் சவுதி அரசு கொடுக்கும் தண்டனை மற்றும் நிறைவேற்றும் சட்டங்களையும் பார்த்து முஸ்லிம் மதத்தை விட்டு ஒருவன் விலகிவிட்டான் என்று சொன்னால் அவனுக்கு முதலில் இஸ்லாத்தை பற்றி ஒன்றும் தெரியவில்லை மற்றும் எந்த ஒருவர் ஆங்கிலயேர் போல வாழ்க்கை வாழ நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது….ஏனென்றால் ஒருவன் தான் மனைவி குழந்தைகளிடம் எப்படி நடக்க வேண்டும் என்று கூட இஸ்லாம் அறிவுறுதிகிறது முக்கியமாக பணம் வியாபாரம் பெண்கள் போன்றவைகளில் ரொம்பவும் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுதிகிறது… ஆக மொத்தத்தில் நீ உன் வாழ்க்கையை சரியாக நடத்தி பின்னர் மற்றவர் வாழ உதவி செய் அடுத்தவர் அமைதியில் நுழையாதே (இது அமெரிக்காவால் பின்பற்ற முடியாது) என்பது எல்லாம் இஸ்லாத்தின் வழி முறைகள் இதில் இன்றைய கால கட்டத்தில் எந்த ஒரு நாடும் மனிதனும் கடை பிடிப்பது இல்லை அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்…ஏன் உன் தேவைக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஜகாத் 2.5% ஏழைகளுக்கு கொடுத்தே ஆகா வேண்டும் என்று இஸ்லாம் கண்டிக்கிறது இதை எத்தை பேர் கடை பிடிகிறார்கள்????இல்லை அதனால் தான் வறுமை கொடுமை எல்லாம்…இந்த உண்மை எல்லாம் தெரியாமல் ஒருவன் இஸ்லாத்தை விட்டு வந்துட்டான் அவன் தான் உலகில் உண்மையானவன் அப்படி இப்படி என்று எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை…உலகில் எங்கும் இஸ்லாத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றால் விலகிடு!!! அவ்வளவுதான் இஸ்லாம் என்றால் அது ஒரு மதம் கிடையாது அது ஒரு வாழ்கை நெறி இப்படி தான் வாழ வேண்டும் என்று வழி முறை…பாஸ் ஏன் குஜராத்தில் பொய் நரபலி மோடியை ஒரு வார்த்தை தப்பாக பேசி பாரும்….நீ உயிருடன் வந்தால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்…இந்தியாவிலேயே இப்படி என்றால் உலகின் முக்கியமான உபயோக பொருள் நிறைந்து வழியும் நாட்டின் அரசு கண்டிப்பாக இப்படிதான் இருப்பான் (இதை நான் வரவேற்கவில்லை எதிர்க்கிறேன்) அவன் அவனுடைய அரசு கேந்திரத்தை தற்காத்து கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறான் ….ஆனால் அவன் ஆடும் நாடகம் இஸ்லாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு உள்ள அறிவு செயல் திறன் அவ்வளவு தான் பாஸ்…விடுங்க பாஸ் இந்தியாவில் உள்ள நாறிப்போன செய்திகளை மட்டும் சொல்லுங்கள் இவர்களை திருத்திய பின்னர் நாம் எல்லா அரபு நாடுகள் ஏன் அமெரிக்காவையே திருத்துவோம்….

  • இதுக்கு வினவின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   //எங்கள் தலைவர் நபி பெருமானரை பற்றி ஒரு யூத ______ அசிங்கமாக படம் எடுத்த போது இந்த முஸ்லிம் பெயரை தாங்கிய அரபு நாடுகள் ஒரு சிறிய எதிர்ப்பும் காட்டவில்லை//

   ஒ! அதான் இங்க ஒரு _______ அமெரிக்க தூதரகத்த அடிச்சு நொறுக்குச்சா?

   • அமெரிக்க காரன் விட்ட (பீ) போட்டாலும் அதையும் பொன் முட்டை என்று சொல்லக்கூடிய அன்பர்கள் தமிழகத்திலும் மிகுதியாக உள்ளனர் என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. மத உணர்வை சீண்டியதின் விளைவாக அந்த மத சமுகத்தில் ஒரு சாரார் உணர்ச்சி மிகுதியால் அமெரிக்க தூதரகத்த அடித்து நொறுக்கியதில் உள்ள குறையை காணும் தாங்கள் அமெரிக்கா இராணுவத்தினால் சொந்த நாட்டிலேயே பல ஆயிரம் பேர்கள் பொய் காரணங்கள் கூறி கொல்லப்பட்ட ஈராக் மற்றும் அப்கானிஸ்தான் மக்களை பற்றி சிந்தனையில் ஏற்றாமல் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுக்காததும் ஈனோ. உயிரில்ல தூதரகத்திற்க்கு காட்டப்படும் கருசனை கூட உயெருல்ல மனிதருக்கிலையா?

 3. /என்னதான் வல்லமை கொண்டதாயினும், மண்டையோட்டைத் துளைத்துக் கொண்டு மூளைக்குள் ஊடுருவி, அதன் நியூரான்கள் அல்லாவையும் அரசனையும் விடுத்து வேறு எதை யோசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பீராய்ந்து வந்து மதக் கோர்ட்டின் விசாரணைக் கூண்டுக்குள் நிப்பாட்டும் ஆற்றல் இசுலாத்திற்கு இல்லை. அதற்காகத்தான் வஹாபிய தடிக்கொம்பை வைத்திருக்கிறார்கள்./

  🙂

 4. தோழர் தென்றல் மன்னாறு போன்றவர்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன் இந்த பதிவிற்க்கு

 5. அமிலத்தில் பூத்த அந்த மலர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  //எச்சில் காசில் கொட்டமடித்து வரும் சவுதி ஆளும் வர்க்கத்துக்கு மக்களின் அதிருப்தி தங்களை நோக்கித் திரும்பாமல் தடுக்கும் தடுப்பணையாக இசுலாம் பயன்படுகிறது. //

  True. This is also true with the Ruling class of all other places. People who benefit from cultish establishments are those who foist them as holy places, etc. It is their foreparents who have created these establishments. And each generation adds more and more embellishments to them.

  • Univerbuddy knows nothing about Islam, but he will speak like a scholar of Islam by the help of his useless master Ali-sena. If anyone answer there base less claims then these people will run like anything and find something in websites about baseless anti Islamic thoughts and copy paste the same.I really need to say that, bro’s don’t depend on others knowledge, use some sense of yours.

 6. இப்படியே பக்கம் பக்கமா எழுதி .. அரிப்பை தீர்த்து கொள்ளுங்கள்…

  வினவுக்கு ,,, வினவுவதை தவிர உருப்படியே ஒண்ணுமே தெரியாது …

  அடுத்தவன கேள்வி கேட்டு சந்தோசபடும் கூட்டம்…

  பேச கூப்பிட்டால் ஓட்டம்… நல்ல வருவீங்க பாஸ்

 7. இஸ்லாத்தை சவுதி அரேபியாவை வைத்து எடை போடக்கூடாது. இஸ்லாம் உருவான காலத்தில் அதற்கிருந்த கொள்கைகள் இன்னமும் இருக்கின்றன. ஆனால் அதை சவுது மன்னரின் அரேபியா பின்பற்றுகிறதா இல்லையா என்ற கவலையுமில்லை, அக்கறையுமில்லை. சவுது குடும்பத்தினரிடமிருந்து இரண்டு புனிதத்தலங்களையும் மீட்டு ஜெருசலேம் போன்று, வாட்டிகன் போன்று தனி அரசாங்கமாக உருவாக்குகிறோமோ அன்றுதான் அக்குடும்பத்தினரின் ஆட்சியால் உலகின் ஏனைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க முடியும்.

  இஸ்லாம் வேறு, சவுதி குடும்பத்தினரின் அரேபிய ஆட்சி வேறு. இந்த அடிப்படை வித்தியாசத்தைக் கட்டுரையாளர் ஆராய்ந்திருக்கலாம். அரேபியாவிற்கு வெளியில்தான் அதிக முஸ்லிம்கள் இன்றைக்கு வாழ்கிறார்கள். இஸ்லாம் சில மன்னர்களின் கட்டுக்குள் ஒருபோதும் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை.

  அறிவுக்குட்பட்ட தர்க்கத்தில் புதிய பிரச்னைகளுக்கு தீர்வு காணுவது இஸ்லாத்தின் வழிமுறை. சிந்திப்பவர்களாக சிலரைச் சித்தரித்து ஃபத்வாக்களை தன் கைக்குள் வைத்திருக்கும் சூழ்ச்சியை அமெரிக்காவின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு சவுதி அரேபியா இன்றைக்குச் செய்து வருகிறது.

  ஆகையால் இஸ்லாத்தின் கொள்கைகளை சவுதி குடும்பத்தினரின் ஆட்சிக்குள் தேடாதீர்கள் என்று கட்டுரையாளரைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • Note: Any one who knows kuran can and pls answer my question!
   Jamal,

   பிறக்கும் குழந்தை ஆணா ,பெண்ணா என்று முடிவு செய்யபடுவது பற்றி திரு நபிகள் வடிவமைத்த குரான் [அது இறைவன் செயல் என்று ]ஏதாவது கூறுகீன்றதா ?

   //அறிவுக்குட்பட்ட தர்க்கத்தில் புதிய பிரச்னைகளுக்கு தீர்வு காணுவது இஸ்லாத்தின் வழிமுறை. சிந்திப்பவர்களாக சிலரைச் சித்தரித்து ஃபத்வாக்களை தன் கைக்குள் வைத்திருக்கும் சூழ்ச்சியை அமெரிக்காவின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு சவுதி அரேபியா இன்றைக்குச் செய்து வருகிறது. //

   • சரவணன், குரானில் அதற்கு விளக்கம் உள்ளதாகவே அறிகிறேன். ஆனாலும், அதைப் பற்றி முப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கும் சுவனப்பிரியன் போன்றோர்கள் அதற்கு விளக்கம் தரமுடியும். எனக்கு அவ்வளவு பாண்டித்யம் குரானில் இல்லை.

 8. ## அது மட்டும் அல்லாமல் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநிதி செய்கிறான் என்று எந்த ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டான்…
  ….எல்லாம் இஸ்லாத்தின் வழி முறைகள் இதில் இன்றைய கால கட்டத்தில் எந்த ஒரு நாடும் மனிதனும் கடை பிடிப்பது இல்லை ##

  எவனும் இசுலாத்தின் வழிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.கடைபிடிக்கவில்லை என்றால் அவன் இசுலாமியன் இல்லை. (சௌதி மன்னன் உட்பட). அப்படி என்றால் இசுலாத்தை விட்டு விலக மாட்டான் என்று லஹிர் சொல்வது வேடிக்கையாக இல்லை.

  ## ஏன் என்றால் மன்னர் ஆட்சியை இஸ்லாம் எதிர்க்கிறது. ##

  மன்னர் ஆசட்சியை இசுலாம் ஆதரிக்கவில்லை என்று ஆதாரம் காட்டமுடியுமா லஹிர்.?

  • பாஸ், உலகில் உள்ள அணைத்து மதத்தினரும் தங்கள் மத கோட்பாடுகளை முழுவதும் கடைபிடிப்பது இல்லை கண்டிப்பாக அவர்கள் ஒரு சில தவறுகளை செய்வார்கள் அந்த தவறு அவர்களின் மதத்தில் இருந்து சிறுது வேறுபட்டே தீரும் அவர்களின் நடவடிக்கையை பார்த்து இது தான் இஸ்லாம் என்று மதிப்பிட கூடாது….அதற்காக அவர்கள் மதத்தை விட்டு விட வேண்டும் என்றால் சரியான முட்டாள் தனமான வாதம். ஒரு வீட்டில் குடும்பத்திற்குள் சண்டை போட்டால் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அவன் அந்த வீடு ஆளே கிடையாது என்றால் இது எப்படி பொருந்தும். உண்மையான இஸ்லாம் அறியவேண்டுமானால் ஒரே ஆதாரம் குரான். எவன் ஒருவன், அல்லாஹ் ஒருவன் தான் கடவுள் அவன் யாரையும் பெறவில்லை பெறப்படவும் இல்லை கடைசி இறைதூதர் நபி என்று நம்பினால் அவர் ஒரு முஸ்லிம் தான். உருவ வழிபாடை வெறுத்து, அல்லாஹ் ஏற்படுத்திய வழிமுறையில் இறைவனை வணங்கினால் அவன் ஒரு முஸ்லிம் தான். 100% ஒருவன் மதத்தை பின்பற்ற வில்லை என்றால் அவன் அந்த மதத்தை சார்ந்தவன் அல்ல என்று எவரும் கூற முடியாது. நான் கூறியது, ஒரு முஸ்லிம் மனிதன் கொடுமையாக நடந்து கொள்கிறான் என்று மற்ற மனிதன் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறுகிறான் என்று சொல்ல்வது கேலிகூத்து தான். முதலில் அவன் இஸ்லாத்தை ஒழுங்காக அறியவில்லை என்று தான் அர்த்தம். கோவபடுவது தண்டிப்பது திருடுவது கொலை செய்வது கற்பழிப்பது கொடுமையான ஆட்சி பிறரை ஏமாற்றுவது எல்லாமே ஒரு தனி மனிதனின் செயல், எந்த ஒரு மதமும் குறிப்பாக இஸ்லாம் தான் இதை கற்பிக்கிறது என்றால்…உங்கள் அறிவை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. இஸ்லாம் பொய் சொல்ல கூடாது என்று தான் சொல்கிறாது இவன் பொய் சொன்னால் அவனின் சுயநலத்தின் காரணமாக சொல்கிறான் இதனால் அவன் அந்த மதத்தை விட்டு விட சொல்ல முடியாது. அடுத்து மன்னர் ஆட்சி கூடாது என்பதற்கு நல்ல ஆதாரம் கொடுத்துள்ளேன். உங்களுடைய சிறந்த கேள்விக்கு என் நன்றிகள்.

   Prophecy that there shall be Kingship in Islam

   1.1 The Prophet said – Allah bless and greet him: “This business began as prophethood and mercy, then mercy and a khalifate, then a voracious kingdom, and then arrogance and tyranny and corruption will enter the community.” In Qadi`Iyad’s al-Shifa’, chapter on the Prophet’s (SAWS)
   knowledge of the Unseen. This is a proof in Islam and Shari`a that kingship is not as good as caliphate but is better than tyranny. Here are some narrations to that effect in their precise wordings insha Allah:

   1.2 “Successorship (al-khilâfa) after me shall last for thirty years. After that, there will be kingship.” Imam Ahmad declared this narration sound and adduced it as a proof for the caliphate of the four Imams. A sound hadith narrated from Safina by al-Tirmidhi (hasan) with a fair chain
   ac-cording to Shaykh ‘Abd Allah al-Talidi who declared it sahîh because of its cor-robo-rative and witness-chains in his edition of al-Suyuti’s Tahdhib al-Khasa’is (p. 293 #375); also narrated by al-Nasa’i, Abu Dawud,Ahmad in his Musnad with two chains; al-Hakim; Ibn Hibban with two fair
   chains as stated by al-Arna’ut (15:34 #6657, 15:392 #6943); al-Tayalisi in his Musnad (p. 151, 479); and al-Tabarani in al-Kabir with several chains. This narration is among the “Proofs of Prophethood” (dalâ’il al-nubuwwa) as the sum of the first five caliphates is exactly thirty years: two years and three months for Abu Bakr, ten years and a half for ‘Umar, twelve years for ‘Uthman, four years and nine months for ‘Ali, and six months for al-Hasan as narrated from Safina by al-Suyuti in Tahdhib al-Khasa’is (p. 293 #375) and Tarikh al-Khulafa’ (p. 22, 198-199). Al-Dhahabi cites the saying by Mu’awiya: “I am the first of the kings” (anâ awwalu al-mulûk) in the Siyar (3:157).

   1.3 To the man who said: “O Messenger of Allah! I saw in my dream as if a balance came down from the heaven in which you were weighed against Abu Bakr and outweighed him, then Abu Bakr was weighed against ‘Umar and outweighed him, then ‘Umar was weighed against ‘Uthman and outweighed him, then the balance was raised up.” The Prophet ? said: “Successorship of
   prophethood (khilâfa nubuwwa)! Then Allah shall give kingship to whomever He will.” Narrated from Abu Bakrah by Ahmad with three chains, Abu Dawud, and al-Tirmidhi who said: hasan sahîh, and from Safina by Abu Dawud with a fair chain and al-Bazzar with a fair chain as indicated by al-Haythami. Al-Tirmidhi’s narration omits the last statement of the Prophet (SAWS). Al-Hakim narrated it with a chain similar to al-Tirmidhi’s and graded it sahîh, and al-Dhahabi concurred.

   1.4 “There shall be Prophethood (nubuwwa) among you for as long as Allah wishes it to be among you. Then it shall be lifted up when Allah wishes to lift it up. Then there shall be successorship (khilâfa) on the pattern (minhâj) of Prophetship for as long as Allah wishes it to be. Then it
   shall be lifted up when Allah wishes to lift it up. Then there shall be a trying kingship (mulkan ‘âddan) for as long as Allah wishes it to be. Then it shall be lifted up when Allah wishes to lift it up. Then there shall be a tyrannical kingship (mulkan jabriyyatan) for as long as Allah wishes it to be. Then it shall be lifted up when Allah wishes to lift it up. Then there shall be successorship on the pattern of Prophetship.” Narrated from Hudhayfa by Ahmad with a sound chain as stated by al-Zayn in the Musnad (14:163 #18319) and as indicated by al-Haythami (5:188-189): “Narrated by
   Ahmad, al-Bazzar with a more complete wording, and al-Tabarani partly, in al-Awsat. The narrators in its chain are trustworthy.” Also narrated from Abu ‘Ubayda by al-Tabarani in al-Kabir (1:157) with the wording “Then there shall be kingship and tyranny” after the mention of successorship. It was pointed out that the sequence of events described in these narrations is strikingly similar to the Christian Eastern Orthodox explanation of the Prophet Daniel’s interpretation of the dream of the Babylonian King in Daniel 2:31-43.

 9. ரிஸானா நபீக்கின் தலையை வெட்டி மகிந்த அரபுகளின் செயலை வரவேற்று மகிழ்த பிஜே, தன்னுடன் பாக்கர் கூட்டாளியாக இருந்தபோது விபச்சாரம் செயததற்கு இசுலாமிய சரியத் சட்டமான கல்லெரி தண்டனையை தூக்கிக்கொண்டு வரவில்லை. மாறாக தான் முட்டாளாக்கி வைத்திருக்கும் கூட்டத்தினரிடம் ” அவருக்கு சொந்த வேலையிருப்பதால் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று பொய் சொல்லி ஏமாற்றி மறைந்துவந்தனர். ஒருவருடகாலம் இப்படியே பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு, பிறகு அதனை அந்த கூமுட்டை கூட்டம் மறந்தவிட்ட பிறகு மீண்டும் அந்த மன்மதன் (அவர்கள் வைத்த பெயர்தான்) பொதுக் கூட்டத்தில் இசுலாத்இதின் கண்ணியத்தை தூக்கிநிறுத்த பேச அனுமதிக்கப்பட்டார். இதுதான் மன்னடி வகாபிகளின் ஒழுக்கம்.

 10. இஸ்லாத்தில் சொல்லப்படாததை செய்வது இஸ்லாமல்ல. இஸ்லாத்திலிருந்து நீங்கினால் மரணதண்டனை என இஸ்லாம் கூறவில்லை. ஆளும் கும்பலுக்கு ஒரு வில்லன் தேவைப்படுகிறான். உலகளாவிய அமெரிக்க பாணியில் முஸ்லீம்கள் வில்லனாக்கப்பட்டு விட்டனர். ஆனால், முஸ்லீம்களை கொண்ட சவூதியில் இதை பின்பர்ற இயலவில்லை. தங்களுக்கு (சவூதி அரசுக்கு) எதிராக உருவாகும் போராட்டங்களயோ அல்லது கருத்துக்களையோ முடக்குவதற்கு அவைகளை மடைமாற்ற ஒரு வில்லன் பாத்திரம் சவூதிக்கும் தேவைப்படுகிறது. அதன் விளைவே நாத்திகர்கள் மீதான ஒடுக்குமுறை சட்டங்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

  • “2171. Narrated ‘Abdullah: The Prophet said, “The blood of a Muslim, who confesses that Lâ ilâha ill-Allâh (there is no god but Allâh), cannot be shed except in three cases: 1. Life for life (in cases of intentional murders without right i.e., in Al-Qis̩âs̩ – Law of Equality in punishment); 2. A married person who commits illegal sexual intercourse; and 3. The one who turns renegade from Islâm (apostate) and leaves the group of Muslims. [9:17-O.B]”

 11. இங்கு பலரும் இஸ்லாத்தில்
  அப்படி சொல்லவில்லை இஸ்லாம்
  மன்னராட்சியை ஏற்கவில்லை என்று ஏதேதோ பதிவிடுகிறார்கள்.அவர்கள்
  சொல்வது உண்மையெனில்
  அந்த மன்னராட்சியையும் அந்த
  சட்டங்களையும் எதிர்க்கவும்
  எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாகவும்
  எத்தனை இஸ்லாமிய
  அமைப்புகள் குரல்
  கொடுக்கின்றன? அப்படிபட்ட
  இஸ்லாமிய
  அமைப்புகளை நீங்கள்
  கேள்விக்குட்படுத்தியது உண்டா?

  • //இங்கு பலரும் இஸ்லாத்தில்
   அப்படி சொல்லவில்லை இஸ்லாம்//

   இஸ்லாத்தில் சொல்லப்படாததை ஒருவர் செய்தால் அதுபோல இஸ்லாம் சொல்லவில்லை என்றுதான் சொல்லமுடியும். வேறு எப்படி சொல்வது? உங்களுக்கு புரியவேண்டுமானால் தா.பாண்டியன கம்யூனிஸ்டான்னு உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்

   • சிபிஐ,சிபிஎம் போலி கம்யுனிஸ்ட்கள் என்றே அழைத்துவருகிறது வினவு அதை நானும் ஏற்கிறேன். ஆனால் நான் கேட்ட மீதி கேள்விகளுக்கு பதில் சொல்லததனால் நீங்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய அமைப்பையும் ஏற்கவில்லை என எடுத்துக்கொள்கிறேன்.அப்படி இல்லையெனில் நீங்கள் ஏற்கும் அமைப்பின் நிலைப்பாடு என்ன இந்த விஷயத்தில்?

    • உண்மைதான் நான் இங்குள்ள எந்த இஸ்லாமிய அமைப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் இஸ்லாத்தில் உள்ள ஹதீசுகளையும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதுமில்லை. அதில் முல்லாக்களுக்கு தகுந்தவாறான விஷயங்கள் செருகப்பட்டுள்ளன.

     என்னைப் பொறுத்தவரையில், ஏகாதியபத்தியமானது தனது சுரண்டலுக்காக எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டமைத்த அவலங்களை எமது முஸ்லீம் சமூகம் மட்டுமே தனித்து எதிர் நின்று முறியடிக்கமுடியாது என்பதாகவே கருதுகின்றேன். எனவே, மற்ற மக்களுடன் ஐக்கியப்படும் நிலைப்பாடு கொண்ட அமைப்பையே ஏற்பேன்.

 12. இசுலாத்தை கடைபிடிக்காவிட்டால் அவன் இசுலாமியனும் இல்லை. கடைபிடிக்காத நாடு இசுலாமிய நாடும் இல்லை என்று சொல்வதும் அவர்கள்தான் . பிறகு அவர்களை இசுலாமியர்கள், இது இசுலாமிய நாடு என்று சொல்வதும் அவர்கள்தான். வீட்டுலை சண்டை பிடிச்சிட்டா வீட்டைவிட்டு போகமாட்டானாம். அரைலூசுகளுக்கு பதில் சொன்னா இப்படித்தான் உதாரணங்களை கேட்டு சாவனும். அய்யோ சாமி தாங்க முடியலடா!
  லாஹிர் உங்களை ஆதாரத்தை தமிழில் தரவும்.

  • ஹலோ, இங்கிலீஷ் தெரியவில்லை என்றால் நான் மொழி மாற்றம் எல்லாம் செய்துகிட்டு இருக்க முடியாது, தெரிஞ்சவனிடம் காட்டி அர்த்தம் கேட்டு தெரிஞ்சி கொள்ளவும்…அறைலூசுகிடே ஏன் மறுபடியும் உதாரணம் கேட்கவேண்டும் உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமில்ல. முதலில் மத்தவங்ககிட்ட எப்படி பேச வேண்டும் என்று கத்துக்கிட்டு அப்புறம் உதாரணம் கேட்கவும்…சில பேருக்கு சொல் புத்தியும் இருக்காது சுய புத்தியும் இருக்காது…

   • Mohamed Lahir,

    லூசு மாதீரீ உளற கூறாது ! இங்கிலீஷ் தெரியாததுக்கு இப்படி நீங்க பெனாத்துனுமா ?

    சரி நான் கூறும் ஜப்பான் language உமக்கு புரியுமா ?

    モハメド·ラヒリは精神障害者である

    ஹலோ, உமக்கு Japanese தெரியவில்லை என்றால் நான் மொழி மாற்றம் செய்து கொடுக்க முடியும்

    • ஹலோ சரவணன், ஏன் ஜப்பான் மொழியை மொழி மாற்றம் செய்யும் உங்களுக்கு ஆங்கிலத்தை மொழி மாற்றம் செய்ய தெரியாதா??// இதுக்கு போய் நீங்க எல்லாரும் தான் லூசு மாதிரி எழுதுறிங்க…..google போய் மாத்தி படிக்க வேண்டியது தானே, ஆங்கிலம் உலகம் முழுவதும் தெரியும் மொழி ஆனால் ஜப்பான் மொழி அவனை தவிர யாருக்கும் தெரியாது…ஒரு பொது மொழிக்கும் ஒரு நாட்டின் மொழிக்கும் வித்தியாசம் தெரியவில்லை…மத்தவங்களை லூசு என்று எழுதும் நீங்கள் எல்லாம்….

 13. எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளிநல்ல கொள்ளி? மதவாதம் என்பதே, மதங்களின் கோட்பாடுகளை மறந்துவிட்டு, வெறும் கூப்பாடுகளை முன்னிலைப்படுத்துவதே!

  மதங்கள் தோன்றுவதே அந்தந்த காலகட்டத்தில், மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல் ஆதிக்கத்திற்கும் முடிவு கட்டவே! முக்கியனோக்கம் நிறைவேறிய பின்னர், புதிய ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்தைநிலைனிருத்தி கொள்ள , பழைய அடக்குமுறை உத்திகளையே நம்பியிருக்கின்றனர்! அதற்காக மக்களை சிந்திக்க அனுமதியாமல் , தங்கள் வலையிலேயே வைத்திருக்கின்றனர்!

  எல்லா மதமும், அரசியல்நடத்தும் கும்பலே, ஆன்மீகம் என்று நம்பி படித்த முட்டாள்கள் ஏமாறுகிரார்கள் ! படிக்காதவர்கள் தலையெழுத்தைநொந்து கொள்கிறார்கள்!

 14. ## இஸ்லாத்திலிருந்து நீங்கினால் மரணதண்டனை என இஸ்லாம் கூறவில்லை. ##

  காவன்னா மீனா கருஆனையும் ஹதீதுகளையும் ஒழுங்கா படித்துவிட்டு கருத்துச் சொல்லனும். இஸ்லாத்திலிருந்து நீங்கினால் மரணதண்டனை என்பதற்கு கீழே ஆதாரம் தரப்பட்டுள்ளது.

  புகாரி 3017. அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்’ என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்’ என்றார்கள்” என இக்ரிமா(ரஹ்) கூறினார்.

  புகாரி 4341. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூ மூஸா(ரலி) அவர்களையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘யமன் இரண்டு மாகாணங்களாகும்” என்று கூறினார்கள். பிறகு, ‘(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி(இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தம் சந்திப்பைப் புதுப்பித்துக் கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத்(ரலி) தம் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது தம் சகாவான அபூ மூஸா(ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தம் கோவேறுக் கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்று சேர்ந்தார். அப்போது அபூ மூஸா(ரலி), தம்மிடம் மக்கள் ஒன்று கூடியிருக்க (தம் அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இருகைகளும் தம் கழுத்துடனும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒருவர் நின்றிருந்தார். முஆத்(ரலி), அபூ மூஸா(ரலி) அவர்களிடம், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸ் அவர்களே! என்ன இது?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ மூஸா(ரலி), ‘இவன் இஸ்லாத்தை ஏற்ற பின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.
  முஆத்(ரலி), ‘இவன் கொல்லப்படும் வரை நான் (என் வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்” என்றார்கள். அபூ மூஸா(ரலி), ‘இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத் தான். எனவே, நீங்கள் இறங்குங்கள்” என்று கூறினார்கள். அதற்கு முஆத், ‘இவன் கொல்லப்படும் வரை நான் (வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்” என்று (மீண்டும்) கூறினார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவனைக் கொல்லும் படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு, முஆத் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, ‘அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அபூ மூஸா(ரலி), ‘(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள், ‘முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகீறீர்கள்?’ என்று கேட்க, முஆத்(ரலி), ‘இரவின் முற்பகுதியில் நான் உறங்கி விடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். எனவே, நான் எழு(ந்து வணக்கம் புரிவ)தற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

  • மிஸ்டர்நாட்டு வேங்கை….. முதலில் குர் ஆனுக்கும் புகாரி போன்ற புத்தகங்களுக்குமான வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு இந்த மாதிரி கட் அன்ட் பேஸ்ட் எல்லாம் செய்து கேள்வி கேளுங்கள்….

   புகாரி மாதிரி 24 புத்தக விளக்கங்கள் உள்ளன. ஆனால் குர் ஆன் ஒன்றே ஒன்று தான். உலக முஸ்லிம்கள் குர் ஆனை மட்டும்தான் முழுமையாக நம்புகிறார்கள். ஏனைய புத்தக விளக்கங்களை எல்லாம் எல்லாரும் நம்புவதுமில்லை, பின்பற்றுவதுமில்லை. அவைகள் எல்லாம் நபிகள் நாயகத்தின் சீடர்களால் நபிகள் நாயகம் சொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது.

 15. இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாது,

  குரானை பற்றி எதுவும் தெரியாது,

  முகமது நபிகளை பற்றி எதுவும் தெரியாது,

  ஹதீசுகள் பற்றி எதுவும் தெரியாது,

  ஷரியத்கள் பற்றி எதுவும் தெரியாது,

  ஆனால் இவற்றின் மீது சேற்றை மட்டுமே வாரி அடிக்க தெரியும் வினவுக்கு
  இப்படி இவைகளை பற்றி தெரியாமல் விமர்சிக்காதீர்கள் இவைகளை பற்றி விவாதம் செய்து தெளிவு பெற்று பிறகு விமர்சியுங்கள் என்று நட்போடு அழைப்பவர்களிடம்… அதெல்லாம் முடியாது இந்தப்பக்கம் நான் நின்று சேற்றை வாரி அடிக்கிறேன்… அந்தப்பக்கம் நீ வாரி என் மீது அடித்துக்கொள் இப்படி கூலாக கூறும் வினவின் நிலைப்பாடை என்ன வென்று சொல்வது.!!! தன பக்க நியாத்தை தெளிவு படுத்த வருபவர்களை நய்யாண்டி, கேலி செய்து கட்டுரை போடும் வினவின் இயலாமை அப்பட்டமாக தெரிகிறது. தற்போது சவுதி அரசர் ஆட்சியை விமர்சித்து வினவு நன்றாக சொரிந்துக்கொல்கிறது. நீங்க என்னத்த கட்டுரை போட்டு கர்ணம் அடித்தாலும் உங்கள் இயலாமையை மறைக்க முடியாது. விவாதம் என்கிற பந்து உங்கள் கோர்டிளியே கிடக்கிறது. மீண்டும் மீண்டும் அசிங்கப்படாதீங்க சேகருகளா….

 16. “”பதில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம்”” இந்த முதல் 4 வரிகளிலேயே தெரியுது உங்க பித்தலாட்ட அரசியல். பதில் இருப்பதால் தான் உங்களை விவாதிக்க அழைக்கிறார்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் என்றால் அவர்கள் அதற்கு பதில் தருவார்கள். அதில் உங்களுக்கு நான்கு கேள்விகள் எழும் அதற்கும் விரிவான பதில்கள் தருவார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் அமர்ந்து பேசினால் பதில் இருக்கா இல்லையா என்று தெரியும். இதற்கு பேர் தான் விவாதம். “””” பதில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை “””” இங்கு பதில் இல்லை என்று வினவே ஒரு முடிவு செய்துக்கொண்டு, பதில் தர வருவோரையும் கண்டுக்கொள்ளாமல் வாங்கடா எங்க ஏரியாவுக்கு, வாங்கடா வாங்கடான்னு வடிவேலு போல கூவிக்கொண்டே ஓடுகிறது வினவு. இதில் எளிதாக புரிந்துக்கொள்ளும் நியாயத்தை கூட சில பேர் ஏற்றுக்கொள்ளாமல் வினவுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள். இதை தான் போங்காட்டம்னு சொல்றது

  • நேரில் வந்து விவாதித்தால், அங்கிருக்கும் ஒரு நான்கு/ஐந்து நபர்கள் மட்டும் விவாதிக்க முடியும். இணையத்தில் விவாதித்தால் அனைவரும் விவாதத்தில் கலந்து கொள்ளலாம் இல்லையா? இணைய விவாதங்களில் அனைத்து விவாதங்களும் டாகுமென்ட் செய்யப்பட்டு உடனுக்குடன் உலகம் முழுதும் பரவுகிறது. பின்வரும் காலங்களில் இந்த விவாதத்தின் போக்கு குறித்து பலர் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே, நேரில் தான் வந்து விவாதிக்க வேண்டும் என்பதை தவிர்த்து இணைய விவாதங்களில் பங்கு கொள்ளுங்கள்.

   • நீங்கள் கூறுவது .00001 சதவீதம் கூட சாத்தியம் இல்லை. நீங்கள் கூறுவது போல் விவாதித்தால் சந்தக்கடை தான். எந்த முடிவும் எடுக்க முடியாது. வருஷக்கணக்கில் தொடர்ந்துக்கொண்டே போகும். எது நியாயமானது என்ற முடிவை எட்டவே முடியாது. போன வாரம் ஒரு கருத்து சொன்ன நபர் இந்த வாரம் அதை முரண்படும் விதத்தில் ஒரு கருத்தை சொல்லுவார். போனவாரம் சொன்ன கருத்தை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். முரண்பட்டவர் எளிதாக தப்பிவிடுவார். வெறும் குழப்பம் தான் மிஞ்சும். இது தான் எதார்த்த நிலை. அப்படி இல்லாமல் ச்மபந்தப்பட்டவர்கள் இரு குழுவாக அமர்ந்து ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு நாள் என்று ஒதுக்கி கொண்டு இரு தரப்புக்கும் சமமாக நேரம் ஒதுக்கி கொண்டு (இவர்கள் 15 நிமிடம் வாதம் செய்தால், எதிர் தரப்பு 15 நிமிடம் வாதம் என்ற அடிப்படையில்) விவாதம் செய்ய வேண்டும். இதில் தவறாக கருத்து தெரிவித்தாலோ , தனக்கு தானே முரண் பட்டாலோ எளிதாக மக்களிடம் அம்பலப்பட்டுவிடும். யாரும் தப்பிக்க முடியாது. மக்களின் மறதியை பயன்படுத்திக்கொண்டு இன்று அரசியல் வாதிகள் எப்படி எல்லாம் நடந்துக்கொள்கிறார்கள் என்பது நாடே அறியும். அது போல் நடக்காமல் நேரடி விவாதம் செய்து அதை இரு தரப்புக்கும் பொதுவாக நேரம் பதிவிட்ட எடிட் செய்யப்படாத வீடியோவாக வெளியிட்டால் மக்களுக்கு எளிதாக சென்றடையும். எளிதாக விளங்கும். நியாயம் புரியும். மற்றப்படி இணையதள விவாதம் மற்றும் எழுத்து விவாதம் என்பது எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்து ஓடும் வழியே தவிர வேறொன்றும் இல்லை.

 17. இஸ்லாம் ,இந்து என்று எந்த மத தத்துவ ஆய்வைவிட அவை எவையும் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளான வேலைவாய்ப்புயின்மை,வறுமை,சுரண்டல் என்று எதற்கும் மதங்களில் தீர்வு இல்லை என்பதும், அவை கூடுதலாக சாதிய,ஆணாதிக்க அடக்குமுறைகளையும் ஏவுகின்றன மதங்கள்.அவை குறித்த தத்துவ விசாரணைகளுக்கு போவதற்கு அவசியமே இல்லை.

 18. திராணி இருந்தால் சுவனப்பிரியன் அவர்கள் தளத்துக்கு வந்து விவாதிக்கலாமே?அதை விடுத்து சகட்டு மேனிக்கு இஸ்லாம் மீது அவதூறு செய்வதுதான் வீரமா?வாருங்கள் சுவனப்பிரியன் தளத்துக்கு விவாதிப்போம்.மாஷா அல்லாஹ்

  • அப்துல்லாஹ்,

   உமக்கும் , உம் நன்பர்களுக்கும் வினவுகு வந்து வீவாதீக்கும் அளவுக்கு துப்பு ,திராணி ,நேர்மை ,அறிவு நாணயம் இல்லையா ?

 19. காவன்னா மீனா மௌனமாயிட்டாரு. ஜமால் வந்துட்டாரு. என்ன ஜமால், குர்ஆனைத்தவிர புகாரி எல்லாம் குப்பையா? நல்ல மாற்றம். அதைத்தானே நாங்களும் சொல்றோம். அடுத்து குர்ஆன் மொழிபெயர்ப்பெல்லாம் குப்பையின்னும் சொல்லியாச்சு. இனி அரபுல உள்ள குரானை குப்பைன்னு சொல்லனும். அதான் பாக்கி . மாற்றம் வரும்.

 20. முட்டாள்களுடன் விவாதிக்க ஆரம்பித்தால் நம்மை அவர்கள் தரத்திற்கு இறக்கி முட்டாள்யதனமாக விவாதிக்க ஆரம்பிப்பார்கள். அதற்கெல்லாம் ஈடு கொடுத்துநம் பொழுதை வீணாக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  கடவுள் யார் என்றும் காட்டிய வழி முறைகள் என்ன என்பதைப் பற்றியும்நான்நன்றாகவே அறிந்திருக்கிறேன். தேவையில்லாமல், சிந்திக்க மறுத்து மாற்றுக்கருத்துக்களை ஆராய மறுக்கும்வெறி பிடித்த கூட்டத்தாரிடம் பேசி என்ன ஆகப்போகிறது.

  என் வழி எனக்கு, உன் வழி உனக்கு.

  • மிக சரியாக சொன்னீர்கள் ஜமால். குரானுக்கும் புகாரிக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல், அதை பற்றி அறிந்துக்கொள்ள கூட முன்வராமல் நாட்டு வேங்கை அவராக ஒரு கருத்தை பதிவிட்டு அவரே குதூகுளிக்கிறார். இவர்கள் போன்றோரிடம் இணையதளத்திலோ, எழுத்து மூலமோ என்னத்த விவாதிப்பது? ஒரு விஷயத்தின் அடிப்படை அறிவுகூட இல்லாமல் விமர்சிப்போரிடம் இதை பற்றி அறிந்து பிறகு விமர்சியுங்கள் என்று தெளிவுபடுத்த முன்வந்தால் அதை பற்றி அறிந்துக்கொள்ள கூட சிறிதும் முன் வராமல் அநாகரீகமாக நடந்துக்கொள்கிறார்கள். மாற்றுக்கருத்துக்களை ஆராய மறுக்கும் இவர்கள் போன்றோரிடம் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.

 21. yoosuf,அப்துல்லாஹ்,

  [1]ஏன் உங்களுக்குள் இப்படி முரண் படுகீண்றீர்கள்!

  [2]அப்துல்லாஹ், சுவனப்பிரியன் தளத்துக்கு வாருங்கள் விவாதிப்போம் என்கின்றார் !

  [3]yoosuf,இணையத்தில் விவாதிப்பது .00001 சதவீதம் கூட சாத்தியம் இல்லை என்கின்றார் !

  [4]yoosuf,சுவனப்பிரியன் தளத்தில் வந்து விவாதீத்தால் அது மட்டும் சந்தக்கடை ஆகாதா ?

  [5]yoosuf, TNTJ வெளிஇட்ட edit செய்த audio/video லட்சனத்தை தான் பாகீன்றோமே! குரான் இப்படி அறிவு நாணயம் இன்றி நடக்க TNTJ வுக்கு மட்டும் தனியாக அறிவுரை கூறுகீன்றதா ?

 22. சாக்கடையில் குரான்

  சௌதி அரேபியா தாய்ஃப் நகரில் 50 க்கும் மேற்பட்ட குரான்கள் சாக்கடையில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சௌதியில் வேகமாக பரவி வரும் நாத்திகம். அல்லது 70களின் தொடக்கத்தில் நஜ்ரான் நகரில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கான சமூக விளைவு வெளிப்பட்டிருக்கிறது.

  <a href="http://splashurl.com/k4kfkcn

  • குரானிலும் அதீசிலும் விவரிக்கப் பட்ட சுல்கர்னைன் சுவர் இல்லை என்று தெரிந்தாலே குரான் மீது நம்பிக்கை போய்விடும்.

 23. இரைவன் என்ட்ர ஒர்வன் ஒரு வேலை இருக்கலாம் ஆனால் அது ஏசுவொ, அலாவொ,சிவனொ,பிரம்மாவொ, விஷ்னுவொ இல்லை. அதனால் அரிவியல் படி வாழ்க்கையைநடத்துவது நல்லது.வாழ்க பெரியார்.

 24. உண்மையில் தங்களை பகுத்தறிவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் , தாங்களே குரானை மற்றும் ஹதீஸை பகுத்து ஆராய மறுப்பதேன். குரான் ஒன்றுதான் என்றாலும் அதனை பற்றிய விளக்க வுரையானது மனிதருக்கு மனிதர் வேறுபாடும் , எப்படி மனிதருக்கு மனிதர் கருத்து வேறுபாடு உள்ளதோ அதுபோல். நிச்சயமாக குரானில் ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்று கொடுக்கப்பட்ட விஷயங்களை மாட்டும் எடுத்து ஆராய்ச்சி செய்தாலே உங்களுக்கு குரானின் தனித்தன்மை தெரியும். அப்படி உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் தெளிவு பெற நினைக்கும் விஷயங்களை , விபரம் தெரிந்தவர்களின் தளத்திலோ , அலுவலகத்திலோ அல்லது நேரிலோ சென்று தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லாமல் தாங்கள் அறிவாளிகள் என்று காட்டிக்கொள்ளும் நோக்கில் ஏதேனும் இணையத்தில் தேடி அதை அப்படியே காபி பேஸ்ட் சைவத்தினால் என்ன ஒரு மாற்றத்தை பெற விரும்புகிறீர்கள். அடுத்தவனின் அறிவில் மேல் வைக்கும் மதிப்பை உங்களின் அறிவின் மேல் வைத்து நீங்களே ஆய்வில் இறங்குங்கள் , முடிந்தால் தெளிவுறுங்கள் . அப்படி இல்லாமல் நாங்கள் இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்னேரே பதிலளிக்கப்பட்ட கேள்வி ஆனாலும் அதனை அப்படியே காபி பேஸ்ட் செய்து, தங்களின் அறிவை அப்படியே உபயோகிக்காமல் தான் இருப்போம் என்றால் , எண்ணம் போல் வாழ்வு அப்படியே இருந்துக்கொல்லுங்கள் . இப்படிப்பட்டவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை , பதிலளிப்பதினால் எவ்வித ப்ரோயோஜனமும் இல்லை , நேரம் தான் வீணாக கழியும் உங்களுக்கும் எனக்கும்.

 25. அடேயப்பா! நாற்பத்தேழு பின்னூட்டங்கள்! வேறெந்த கட்டுரைக்குக் கூட இவ்வளவு இல்லை.
  இந்த விளம்பரத்தனமான கட்டுரைகள் உன் இணையதளத்தை உலகிற்குப் பறைசாற்றலாம் என்ற ஒழுக்கமற்ற சிந்தனைகளை உதிக்கச் செய்யலாம். ஆனால் உன் இறுதி நிலை அந்தோ பாவம்!

  • ராஜா, முதல் தடவையா வினவுக்கு வற்றீங்களா ? 300 ம் மேல் பின்னூட்டம் இருக்கும் கட்டுரைகளும் உண்டு.

  • Vinavu has reported issues about common people but people spend more time analyzing “How their religion is best and how Vinavu team failed to understand the greatness in their religion” and comment on those sections most. It is not the fault of Vinavu team rather our failure to come out of religious thought and our lack of willingness to spend time analyzing common man’s problem

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க