privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !

தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !

-

தலைமை ஆசிரியர் வேடத்தில் உலவும் பொறுக்கியை பாதுகாப்பதா கல்வித்துறையின் வேலை?

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது இச்சைக்கு இணங்க மறுத்தவுடன், அப்பெண் ஊழியரை சாதியை சொல்லி, சாதி திமிருடனும், ஆணாதிக்கத்துடனும் இழிவாக பேசியுள்ளார்.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதலில் வழக்கை பதிவு செய்ய மறுத்த காவல்துறை, உயர்நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்ற பின்னர் பெயரளவுக்கு கிரிமினல் வழக்கு பதிவு செய்து, பொறுக்கி தலைமையாசிரியரை கைது செய்யாமல் காலம் கடத்தியது.

தன்னை கைது செய்யாமலிருக்க முன்பிணை கோரிய பொறுக்கி தலைமையாசிரியர் விஸ்வநாதன் தாக்கல் செய்த முன்பிணை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணும் எதிர்மனுதாரராக சேர்ந்து வாதாடியதால், மேற்படி முன்பிணை மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

ஆனாலும், காவல்துறையின் ‘பொறுப்பான’ உதவியினால் பொறுக்கி விஸ்வநாதன் மாவட்ட நீதிமன்றத்தில் ‘சரண்டராகி’ உடனடியாக பிணை பெற்று இன்று சுதந்திரமாக வெளியே உலவி வருகின்றார்.

சாதாரண சைக்கிள் திருடியவனையே பயங்கரவாதி போன்று நடத்தும் காவல்துறை, இந்த பாலியல் பொறுக்கிக்கு எல்லா வகையிலும் உதவி செய்து வருகின்றது.

காவல்துறையின் ‘சேவை’ இப்படியென்றால், கல்வித்துறையோ ஒருபடி மேலே போய், பொறுக்கி விஸ்வநாதனின் பணிக்கு எவ்வித பங்கமில்லாமல் பாதுகாப்பு கொடுத்து வருகின்றது.

காவல்துறை – கல்வித்துறையின் மேற்படி நடவடிக்கைகளை கண்டித்தும், பொறுக்கி விஸ்வநாதனை பணிநீக்கம் செய்யக் கோரியும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை கிளையின் இணைச்செயலர் வழக்குரைஞர் பார்த்தசாரதி தலைமையில், “தலைமை ஆசிரியர் வேடத்தில் உலவும் பொறுக்கியை பாதுகாப்பதா கல்வித்துறையின் வேலை?” என்ற முழக்கத்தின் அடிப்படையில் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக 20.05.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பொறுக்கி விஸ்வநாதனை கைது செய்ய துப்பற்ற காவல்துறை, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்காதது குறித்து குறைபட்டுக் கொண்டனர். தோழர்களின் முழக்கங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு இருப்பதை பார்த்து, ”எங்களிடம் அனுமதி கேட்டால் நாங்களே அனுமதி வழங்கியிருப்போம் ” என்றும், மேற்படி பொறுக்கி விஸ்வநாதனை கைது செய்ய ஆவன செய்வதாகவும் தெரிவித்தனர்.

பெண்களை இழிவுபடுத்தும் பொறுக்கி விஸ்வநாதன் போன்ற நபர்களுக்கு செருப்படியை பரிசாய் கொடுப்போம்” என தோழர்கள் முழங்கியதை மக்கள் ஆதரித்து வாழ்த்தினர்.

பொறுக்கி விஸ்வநாதனை பணிநீக்கம் செய்யவைக்கவும், சிறையில் தள்ள வைப்பதற்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறது!

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

புகழேந்தி புலவர் அரசு பள்ளியில்
தலைமை ஆசிரியர் வேடத்தில்
உலவுகின்ற பாலியல் பொறுக்கி
விஸ்வநாதனை பாதுகாக்கும்
மாவட்ட கல்வித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பாலியல் குற்றச்சாட்டில்
கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள
பொறுக்கி விஸ்வநாதன் மீது
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாததின்
மர்மம் என்ன?

பாலியல் பொறுக்கிகளை
பாதுகாத்து காப்பது தான்
கல்வித்துறையின் வேலையா?

மாவட்ட கல்வித்துறையே
தலைமை ஆசிரியர் வேடத்தில்
உலவுகின்ற பாலியல் பொறுக்கி
கிரிமினல் விஸ்வநாதனை
உடனடியாக பணிநீக்கம் செய்!

பாலியல் பொறுக்கி விஸ்வநாதனை
கிரிமினல் வழக்கிலிருந்து
கைதாகாமல் காப்பாற்றுவது
செங்கல்பட்டு காவல் நிலையம்!

பொறுக்கி விஸ்வநாதனுக்கு
பணிபாதுகாப்பு வழங்குவது
மாவட்ட கல்வித்துறை!

பாலியல் பொறுக்கியை
பாதுகாத்து காப்பாற்றும்
காவல்துறையையும்-கல்வித்துறையையும்
அம்பலப்படுத்தி போராடுவோம்!

பெண்களை இழிவுபடுத்தும்
விஸ்வநாதனை போன்ற
பாலியல் பொறுக்கிகளுக்கு
செருப்படியை பரிசாய் கொடுப்போம்!

நீதி கேட்டு போராடும்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு
துணை நின்று போராடுவோம்!

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

தொடர்புக்கு : – 9842812062