privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது - மோடி

இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது – மோடி

-

மோடி வந்தால் வளர்ச்சி வரும் என்று இணையத்தில் இடைவிடாமல் கரடியாய் கத்திய கோயிந்துகள் விரக்தியில் ஓடி ஒளிந்து கொள்ளும் வகையில் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு.

மோடிஅரசு தாக்குதல்
நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு

அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டியை பொருத்தப் போவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, தென்னக ரயில்வேயின் பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் தயாரிப்பதை முழுமையாக நிறுத்தி விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மாற்றப்பட வேண்டிய நிலை வரும் போது அவை நீக்கப்பட்டு, குளிர்பதன பெட்டிகள் சேர்க்கப்படும்.

ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், தேவையான நிதியை திரட்ட இந்த முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. இந்த நவீனப்படுத்தலில் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வசதிகளை ஒழித்துவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டும்தான் ரயில் பயணம் என்பதை மோடி கும்பல் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

அரசுக்குத் தேவையான நிதியை திரட்ட ‘முதலாளிகளுக்கு வரியை உயர்த்தினால் அவர்கள் எல்லாம் வரி ஏய்ப்பு செய்வார்கள், அல்லது வேறு நாட்டுக்கு ஓடிப் போய் விடுவார்கள், நாடு வளராது’ என்று கார்ப்பரேட் வரிச்சலுகைகளை நியாயப்படுத்துகிறார்கள் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள். உண்மைதான், எவ்வளவு சுமையை இறக்கினாலும், ரயில் பயணத்தை குறைத்துக் கொண்டு, அல்லது பயணிப்பதையே நிறுத்திக் கொண்டு அடங்கிப் போகும் நடுத்தர வர்க்கத்தை மோடி தலைமையில் பிழிந்து எடுக்கப் போகிறது ஆளும் வர்க்கம். வேண்டுமானால், ‘இந்தியா ராக்கெட் விட்டது, லார்ட்ஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது’ என்று தேசப் பெருமிதத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்வது மட்டும்தான் நடுத்தரவர்க்கத்துக்கு எஞ்சியிருக்கும்.

இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ஒழித்துக் கட்டும் இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எர்ணாகுளம்-நிஜமுதீன்(டெல்லி) மங்களா எக்ஸ்பிரசில் ஒரு இரண்டாம் வகுப்பை பெட்டியை நீக்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த ரயிலில் ரூ 925 செலவில் 2-ம் வகுப்பில் டெல்லிக்கு பயணம் செய்தவர்கள் அதே பயணத்துக்கு ஏ.சி பெட்டியில் போக ரூ 2,370 செலவழிக்க வேண்டியிருக்கும்.

சென்ற ஞாயிற்றுக் கிழமை முதல் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 பெட்டி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது 10 ஆக குறைந்து, ஏசி பெட்டிகள் 4 ஆக உயர்ந்திருக்கின்றன; 72 டிக்கெட்டுகள் ஏசி கட்டணத்துக்கு மாறியிருக்கின்றன. படிப்படியாக 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 0 ஆகி, 3 ஏசி பெட்டிகள் 14 ஆக மாற்றப்படும்.

அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது. “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே பெட்டியில் இடம் ஒதுக்க முயற்சி செய்யப்படும்” என்று ஒரு அதிகாரி சமாதானம் கூறியிருக்கிறார். முன்பதிவு சுழற்சிக் காலம் (60 நாட்கள்) முடிவது வரை கூட பொறுக்காமல் மக்கள்மீது உடனடியாக தாக்குதலை இறக்கும் மோடியின் வேகம்தான் பன்னாட்டு/இந்திய முதலாளிகளின் விருப்பம்.

சென்னை எழும்பூரிலிருந்து மங்களூர் சென்டிரல் போகும் வண்டி எண் 16859-ல் எஸ்-7 என்ற பெட்டி ஒழித்துக் கட்டப்படுகிறது, மங்களூர் சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வண்டி எண் 16860ல் எஸ்-9 என்ற பெட்டி இனிமேல் இணைக்கப்படாது. அவற்றுக்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏசி சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் வண்டிகளில் இருந்து நீக்கப்படும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் நடு படுக்கையை அகற்றி விட்டு அவற்றை இருக்கை பயணிகள் மட்டும் செல்லும் ரயிலில் பயன்படுத்த போவதாக ரயில்வே கூறியிருக்கிறது.

மோடியின் வளர்ச்சி என்பது டாடாவுக்கும், அதானிக்கும், அம்பானிக்கும்தான், உழைக்கும் மக்கள் மீதும், நடுத்தர வர்க்கம் மீதும் அது பெரும் சுமையாக இறங்கும் என்பதை மறைத்து ‘ஆட்டோ ஓட்டுபவர்களும், இளநீர் வெட்டுபவர்களும், ஐ.டி துறையினரும் என சாதாரண மக்கள் பெருவாரியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்‘ என நடுத்தர வர்க்க வாசகர்களை நம்பவைக்க முயன்ற கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இப்போது ரயில் கட்டண உயர்வு குறித்தோ, 2-ம் வகுப்பு ஒழிப்பு என்ன சொல்வார்? வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இனி வெக்கையின்றி ஏசியில் ‘மக்கள்’ பயணம் செய்யலாம், வேர்வையின் கஷ்டங்கள் இல்லை என எழுதுவாரோ?

மேலும் ரயில் நிலையங்களில் ‘அங்கேயே கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம்’ என்றெல்லாம் இனி ‘பிளடி இந்தியாவை’ சலித்துக் கொண்டு அவர் எழுத வேண்டியதில்லை. ஏனெனில் இனி நம்மைப் போன்ற பரதேசிகளும், நடுத்தர வர்க்கமும் கூட ரயில்வே நிலையத்திற்கு போகவே மாட்டோம். உடை கலையாத கனவான்கள் மட்டும் வந்து போகுமிடமாக ரயில் நிலையங்கள் மாறிய பிறகு பத்ரி அவர்களின் கனவு ரயில் நிலையம் அமுலுக்கு வரும்.

மோடியின் ஆட்சியில் இத்தகைய சாதாரண மக்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் புல்லட் ரயில்களில் அல்லது ஏசி பெட்டியில் பயணிக்கும் கனவான்களுக்கென, ஸ்பெசல் நடைபாதை, பூங்காக்கள், நட்சத்திர விடுதி ஓய்வறைகள், சிறு மல்டிபிளக்சுகள், ஷாப்பிங்மால்கள், கிளப்புகள், ரயில்களையே மாளிகைகளாக்கும் திட்டம் எல்லாம் அமல்படுத்தலாம். இதற்கெல்லாம் நிதி வேண்டுமென்றால் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகளை ஒழிக்க வேண்டும் என்பது சரிதானே?.

ஏ.சி பெட்டியில் போக வசதியற்ற உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஏசி பெட்டிகளுக்கு பின் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பெட்டிகளில் கூட்டமாக தொங்கிக் கொண்டே வருவது பணக்காரர்களின் கண்களில் படாமல் தவிர்க்க அவர்களுக்கென தனி நடைமேடையை ஸ்டேசனுக்கு வெளியே அமைக்கவும் மோடி அரசு ஏற்பாடு செய்து தரும்.

தப்பித் தவறி கனவான்களின் நடைபாதையில் சாதாரண மக்கள் வந்து விட்டால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கும் ரயில்வே வழிகாட்டுகிறது. கடந்த 25-ம் தேதி மும்பை புறநகர் ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருந்த 65 வயது பெண் பயணி ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியிருக்கிறார். பயணச் சீட்டை பரிசோதித்த பெண் பரிசோதகர்கள் இருவர் அவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். தன்னிடம் ரூ 25 மட்டும் இருப்பதாக பயணி சொல்லவே, அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டு அவமானப்படுத்தியிருக்கின்றனர்.

மேலும், சட்டங்களும், விதிமுறைகளும் உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு கறாராக அமல்படுத்தப்படும் என்பதற்கு டெல்லி போக்குவரத்துத் துறையும் வழிகாட்டுகிறது.

1973-ம் ஆண்டு ஒரு பயணிக்கு 15 பைசா சீட்டுக்கு பதிலாக 10 பைசா சீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் ரன்வீர் சிங்-ஐ எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் 40 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக பணியாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் பணியாளர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு சொன்னது. அதற்குள் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டிருந்த ரன்வீர் சிங்குக்கு முன் தேதியிட்ட ஊதியம், ஓய்வுக்கால சலுகைகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம்.

‘சட்டத்தை எல்லாம் ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணணும் சார்’ என்று டிராஃபிக்  ராமசாமிகள் பேசும் வீரம் இது போன்ற வயதான ஏழை பெண்களிடமும், ரன்வீர் சிங் போன்ற தொழிலாளர்களிடம் பாய்ச்சப்படுகிறது. இந்திய அரசுக்கு இயற்கை எரிவாயு எடுத்து தர காண்டிராக்ட் எடுத்து, பல மடங்கு விலை உயர்த்தி வாங்க பிளாக் மெயில் செய்யும் அம்பானி, அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற சதி செய்த டாடா, மிட்டல் போன்ற முதலாளிகளிடம் இந்த சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மட்டுமல்ல, தேவைப்பட்டால் வளைந்து கொடுத்தோ இல்லை புதிதாக வேறு வடிவில் பிறந்தோ காப்பாற்றும்.

எந்த மக்களை ஓட்டுப் போட வைத்து ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாறாக காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காக ஆறுவழிச்சாலைகள், புல்லட் ரயில்கள், நவீன நகரங்கள் என்று திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொடுக்கின்றன.

ரயில் கட்டண உயர்வு, மானிய விலை சமையல் வாயு ரத்து, மாதம் தோறும் டீசல் விலை உயர்வு, சேவை வரி மூலம் மக்களை சுரண்டுதல் என்று அடுத்தடுத்து மோடி அரசு தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதைத் தவிர உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வேறு வழியே இல்லை.

காவி கல்லுளிமங்கன்

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடையாது என்பதை ஏற்கப் போகிறீர்களா? இல்லை மோடிக்கு எதிராக களம் இறங்குவீர்களா?

–    அப்துல்

மேலும் படிக்க

  1. மோடி வந்த ஸ்லீப்பர் செல்களை ஒழிப்பாருனு சொன்னீங்களேடா இப்போ ஸ்லீப்பர் கோச்சு போச்சா… என்ன சோனமுத்தா போச்சா?

  2. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்குப் பதிலாக, இரண்டால் வகுப்பை உட்கார்ந்து செல்லும் வகையில் பெட்டிகளை மாற்ற வேண்டும்.
    பணம் கொழுத்தவன் ஏசியில் போகட்டும்; பணம் இல்லாதவன் உட்கார்ந்தே போகட்டுமே?
    ஏழெட்டு மணிநேர பயணத்திற்கு படுக்கை வசதியே தேவையில்லை.

  3. மனோஜ் “மோடி வந்த ஸ்லீப்பர் செல்களை ஒழிப்பாருனு சொன்னீங்களேடா இப்போ ஸ்லீப்பர் கோச்சு போச்சா… என்ன ”

    🙂 🙂 செம

    வினவு உங்களின் வழக்கமான டெம்ப்ளேட் கம்யுனிச வார்த்தைகளாக இல்லாமல் சரியான விமர்சனமாக இருந்தால், இன்னும் பலரை சென்றடையும் என்பது என் கருத்து.

    இவர்கள் உடனடியாக இதை செயல்படுத்தியது ஜெ அரசு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது நினைவிற்கு வந்தது.

  4. காவிக் கூட்டத்துக்கு காவடி தூக்கிய தமிழக இனமான கூஜாக்களை முதலில் உடைத்தழிக்க வேண்டும். கூஜாக் தூக்கிகள் இருப்பதால்தான் காவிக் கோவணங்கள் நம் தலைமீது மிளகாய் அரைக்கிறார்கள்.

    • well said. you are correct. after having voted for b.j.p. north Indians have to wait for 5 years to remove him. at the end of five years he may bring emergency to cancel elections and may become a dictator with the help of his friends.

  5. அவா எல்லாம் இனி ரயில் போறதக்கு ஆசை படலாமா; அவா எல்லாதையும் இத்தனை காலம் சகிசுன்டது அதிகம்; இவா அப்பன் பாட்டன் எல்லாம் ரயில் பாத்திருப்பாலா. இனி பராப்த்ம் இல்லைனு நினைச்சு மாட்டு வன்டியில போக சொல்லுங்கோ…

  6. இனிமேல் சரக்கு பெட்டியில் தான் போக வேண்டும் என நினைக்கின்றேன்.மோடி வந்தா எல்லாத்தையும் மாத்துவாறு என்பது இதுவும் ஒன்றோ?

  7. எதுக்கு இப்படி எல்லாரும் கூவுறீங்கோ… மோடி தேர்தலுக்கு முன்னாடி என்ன சொன்னார்? இந்தியாவை வல்லரசாக மாற்றுவேன்னு சொன்னார். ஒரு வல்லரசு நாட்டில் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி இருக்கலாமா? அதான் தூக்க சொல்லிட்டார். ஒரு பழமொழி சொல்வார்கள். உள்ளதும் போச்சுட நொள்ளகன்னா… அனுபவி ராஜா அனுபவி.

  8. Mohamed,kingsly,Nithaya Kalayani,

    பிஜேபி கேபிள் நியூஸ் :

    எங்க மோடியையா கலாய்கிறிங்க…… இருங்க அவரு என்ன செய்ய போறாருனு, கொஞ்சம் பொருத்து பாருங்க…. TRAI இடம் முன்பே பேசிட்டாரு Internet கட்டணத்தை 3 மடங்கு ஏத்த முடிவு பண்ணிட்டாரு….. அப்புரம் எப்படி வினவில் வந்து கலாய்பிங்க என்று பார்கின்றேன்!

    பாரத் மாதக்கி ஜெ ஜெ ! ஏழைகளீன் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி ஒழிக ஒழிக !

  9. நெற்றியில் நாமம் போட்டவன் எப்படி வேறு அரசியல் நடத்தனும் என யோசிக்கிறீர்கள்?

    இவரைவிட மத்த கட்சிக்காரர்கள் உசதியானவர்கள் என உங்களால் நிரூபிக்க முடியாமா?

    மோடி கொடுமைகாரன் அல்ல. ஆனால் ஆட்சி எல்லா கொடுமைக்காரர்களையும் மிஞ்சுவதாக இருக்கும்.

    இதுவே வரலாற்றின் நியமனம்.

    இங்கிருந்துதான் புரட்சியின் ஊற்று உற்பத்தியாகி காவேரி ஊற்றாக உருமாறி இந்தியாவை மட்டுமல்ல ஏனைய நாடுகளையும் குளிர்விக்கும்.

    • //நெற்றியில் நாமம் போட்டவன் எப்படி வேறு அரசியல் நடத்தனும் என யோசிக்கிறீர்கள்?//

      இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை? மோடி அரசாங்கம் இலவசத்தை ஊக்குவிக்கும் அரசாங்கம் அல்ல எனபது அனைவரும் அறிந்தது தான் .

      இரண்டாம் வகுப்பு கட்டணத்தை உயர்த்தி தேவையை சரி செய்து இருக்கலாம். ஆனால் இரண்டாம் வகுப்பையே மூடுவது நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் . மேலும் படித்த பொது இதை அதிவேக ரயிலில் மட்டும் அமல்படுதுகிரார்கள். ஆக நடுத்தர மற்றும் ஏழைகள் நேரத்தை சேமிக்க அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள் போலும் .

      • Do you mean to say that middle class and poor need not travel in long distance express trains?Whenever they introduce such measures affecting poor and marginalized,they cleverly bring some right wing measures such as “Indianizing education”,Sanskrit Week,Circular on use of Hindi in Central Govt offices.People focus will be diverted to emotional issues and the hard core economic measures will not be noticed.That is right of people will be stolen during their sleep.You should regularly read Pudhiya Jananayagam to understand the tricks employed by the rulers.Vinavu has written many essays on these tricks.People have not asked for free rail travel.

  10. நான் தினசரி வாசிக்கும் பத்திரிகைகளில் தினகரனில் இந்த செய்தி வந்தது, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வரவில்லை. தற்போது இச்செய்திக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருப்பதாக தட்ஸ் தமிழ் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. எது உண்மை என தெரியவில்லை.

    • உங்களுடைய பின்னூட்டங்கள் நடுநிலை நடுநிலை என்று சொல்லிகிட்டு, வேறு ஏதோ ஒரு கருத்தை ஜாக்கி வெச்சு தூக்கிற மாதிரி இல்லையா? நீங்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவீர்களா என்று பார்ப்போம்?

      • அன்புள்ள நந்தன்,
        நான் மோடியையோ இந்துத்வம் பேசுபவர்களையோ ஆதரிக்கவில்லை. இந்து மதம் (மற்ற மதங்களும்) தனி நபர் விருப்பம், உரிமை என்ற வகையில் சுருக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளேன்.

        எனினும், மோடி உட்பட எது ஒன்றையும் முழு மோசம் என்று முத்திரை குத்திவிட்டு, அனைத்து விஷயங்களிலும் போட்டுத் தாக்குவது என்பதில் உடன்பாடு இல்லை. ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாக ஆராய வேண்டும். இவற்றில் இருந்து மொத்தக் கருத்தை உருவாக்க வேண்டும். ஆனால், இவ்வாறு உருவாகும் மொத்தக் கருத்து தனிப் பிரச்சனைகளை பற்றிய ஆய்வில் சாய்வுத்தன்மையை உருவாக்கி விடக் கூடாது.

        • வெங்கடேசன் அவர்களே,

          // இந்து மதம் (மற்ற மதங்களும்) தனி நபர் விருப்பம், உரிமை என்ற வகையில் சுருக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளேன்.// இப்படி தான் நீங்கள் இருப்பதாக கூறுவதால் தான் நான் மேற்கண்ட கேள்வியை கேட்டேன். வில்லவன் அவர்களின் பழைய கட்டுரையிலும் நீங்கள் கூறிய கருத்து இயல்பான கருத்தாக இல்லை. அங்கேயும் நான் இதை பத்தி கூறியுள்ளேன்.

          //ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாக ஆராய வேண்டும். இவற்றில் இருந்து மொத்தக் கருத்தை உருவாக்க வேண்டும்.//

          இப்படி கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே, //ஆனால், இவ்வாறு உருவாகும் மொத்தக் கருத்து தனிப் பிரச்சனைகளை பற்றிய ஆய்வில் சாய்வுத்தன்மையை உருவாக்கி விடக் கூடாது.// என்று கூறுகீர்கள். இது எப்படி சரியாக இருக்க முடியும்? அப்படி என்றால் உருவாக்கிய மொத்த கருத்தே தவறு தான்.

          • இப்படி கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே, //ஆனால், இவ்வாறு உருவாகும் மொத்தக் கருத்து தனிப் பிரச்சனைகளை பற்றிய ஆய்வில் சாய்வுத்தன்மையை உருவாக்கி விடக் கூடாது.// என்று கூறுகீர்கள். இது எப்படி சரியாக இருக்க முடியும்?

    • சுட்டிகளுக்கு நன்றி, வினவு.

      தினகரனில் தலைப்புச் செய்தியாக ஜூலை 29 இல் இச்செய்தி வெளியானது. ஜூலை 27 முதல் 30 வரையான டைம்ஸ் ஆப் இந்தியாவில் (பெங்களூர் அச்சுப் பதிப்பு) இச்செய்தி வெளியாகவில்லை. அவர்களது இணைய பக்கத்தில் வெளியானதை கவனிக்காமல் மறுமொழி எழுதியதற்கு மன்னிக்கவும்.

      தற்போது இச்செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. சாதாரண பெட்டி ஏசி பெட்டியாக மாற்றப்படுவது தற்காலிகமானது என சொல்லியுள்ளது. இந்த மறுப்புச் செய்தியை கீழே உள்ள சுட்டியில் காணலாம்.

      http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/AC-coach-replacement-temporary-Southern-railways/articleshow/39281030.cms

      • கட்டுரையின் கீழேயே டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சுட்டியை தந்திருந்தோம், நீங்கள் கவனிக்கவில்லை. இது மேலும் சில ஆங்கிலப் பத்திரிகைளிலும் கூட வெளியாகியிருக்கின்றன. இப்படி ஒரு செய்தி எந்த முகாந்திரமும் இல்லாமல் வெளியாகவில்லை. ரயில்வே துறையின் கருத்துக்கள், தொலைநோக்கு, திட்டம் ஆகியவற்றை அறிந்தே வெளியானது. தற்போது ரயில்வே இதை மறுத்திருந்தாலும், இதை ஒரு முன்னோட்டமாக விட்டு என்ன எதிர்வினை என்று தெரிந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கலாம். மேலும் இரண்டு விரைவு வண்டிகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு பற்றாக்குறை என்று வரும்போது குளிர்பதன பெட்டிகள் மட்டும் மாற்றாக எப்படி தயாராக கொண்டு வரப்பட்டது? இரண்டாம் வகுப்பு பெட்டிகள்தான் அதிகம் பயன்பாடு என்று இருக்கும் போது அதை அதிகமாக உற்பத்தி செய்யாமல் குளிர் பெட்டிகளை ரிசர்வில் வைத்திருக்குமளவு உற்பத்தி எப்படி அதிகரித்தது? மேலும் இதை டெக்னிக்கலாக அரசு மறுத்துவிட்டது, தற்காலிக ஏற்பாடு என்று ஊடக இணைப்புகள், செய்திகளை வைத்து மட்டும் முடிவு செய்வது தவறு. புல்லட்டின் ரயிலுக்கு 50,000 கோடி ஒதுக்க திட்டம் போட்டவர்கள் சாதாரண மக்கள் பயணிக்கும் வசதிகள் குறித்து எப்படி சிந்திப்பார்கள்? பல்லாயிரம் கோடி ரூபாயில் சாதாரண மக்கள் பயணிக்கும் ரயில்களை அதிகம் விட திட்டமிடாமல் போனது ஏன்? தண்ணீர், மின்சாரம், கல்வி அனைத்தும் காசுள்ளவனுக்கே கிடைக்கும் என்ற நிலை பொதுப்போக்குவரத்திலும் கொண்டு வருவதற்கான முன்னோட்டமே இது. இன்றும் முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மக்கள் ஆடு மாடுகளைப் போல அடைத்துக் கொண்டு செல்வது இந்தியாவெங்கும் காணக்கிடைக்கும் காட்சி. இந்த பெட்டிகளை ஒரு ரயிலில் 10,15 என்று இணைக்க மறுப்பதற்கோ, அப்படி யோசிப்பதற்கோ எது தடை?

        ஒருக்கால் மும்பைக்கோ, தில்லி அல்லது சென்னை, பெங்களூருவுக்கு பயணிக்கும் போது முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்தால் யாரும் இதை புரிந்து கொள்ள முடியும். அப்போது ரயில்வே துறை சாதாரண மக்களுக்கானதாக இல்லாமல் வசதியானவர்களுக்காகவே செயல்படுகிறது என்பதை சொந்தமாக புரிந்து கொள்ள முடியும். அந்த பயணத்திற்கு பிறகு இதை மறுப்பதற்கு ஆதாரமாக இணைய இணைப்புகளை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

        • தினகரனில் தலைப்பு செய்தியாக இதை படித்தபோது, தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த மடையனும் இப்படி ஒரு துக்ளக் பாணி செயலில் இறங்க மாட்டான் என்ற சந்தேகம் வந்தது. அதற்கு ஏற்றாற்போல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இச்செய்தி வெளியாகவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கட்டுரைக்கு கீழே நீங்கள் கொடுத்த சுட்டிகளை கவனிக்காமல் மறுமொழி எழுதியமைக்கு மன்னிக்கவும்.

          AC பெட்டி உற்பத்தி அதிகரிப்பு, சாதாரண பெட்டி குறைப்பு, ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் குறைவு என்ற நீங்கள் குறிப்பிடும் பிரச்சனைகள் கடந்த இரண்டு மாதத்தில் புதிதாக ஏற்பட்டதல்ல. புதிய செய்தி என்றால், ஒரு சில ரயில்களில் சாதா பெட்டி நீக்கி, AC பெட்டி இணைப்பு என்பதே. அத்துடன், நீண்ட கால நோக்கில் இது கடைபிடிக்கப்பட்டு, ஐந்தாறு ஆண்டுகளில் சாதா பெட்டிகள் மொத்தமாக நீக்கப்படும் என்ற செய்தி. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறிருக்க மோடியை இந்த விஷயத்தில் போட்டுத் தாக்குவது சரியல்ல என்பது என் கருத்து. AC பெட்டிகளை அதிகமாக்குகிறார்களா, சாதா பெட்டிகளை மொத்தமாக நீக்குகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

          // ஒருக்கால் மும்பைக்கோ, தில்லி அல்லது சென்னை, பெங்களூருவுக்கு பயணிக்கும் போது முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்தால் யாரும் இதை புரிந்து கொள்ள முடியும். அப்போது ரயில்வே துறை சாதாரண மக்களுக்கானதாக இல்லாமல் வசதியானவர்களுக்காகவே செயல்படுகிறது என்பதை சொந்தமாக புரிந்து கொள்ள முடியும். அந்த பயணத்திற்கு பிறகு இதை மறுப்பதற்கு ஆதாரமாக இணைய இணைப்புகளை தேட வேண்டிய அவசியம் இருக்காது. //

          ஒரு ரயில் என்ஜினால் எத்தனை பெட்டிகள் இழுக்க முடியும் என்ற கணக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லும்படி சாதா ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்கிவிட்டு முன்பதிவில்லா பெட்டிகளை அதிகமாக்கினாலும் விமர்சனங்கள் எழும் என கருதுகிறேன்.

          சென்னையில் இருந்து தில்லிக்கு முன்பதிவின்றி சென்ற அனுபவம் இல்லை. ஆனால், தமிழ் நாட்டுக்குள், ஏழெட்டு மணி நேர பயண நகரங்களுக்கு முன்பதிவின்றியும், செகண்ட் சிட்டிங் முறையிலும் பல முறை பயணித்திருக்கிறேன். இரண்டுக்குமான கட்டண வித்தியாசம் அதிகம் இல்லை. மேலும் நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் … வேணாம் உடுங்க.

          மோடிக்கு வக்காலத்து வாங்கும் தொனியில் பேசிக்கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. ஆனால், மோடியே ஆனாலும் கண்மூடித்தனமாக கும்மாங்குத்து குத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி சொன்னாலும், கலைஞரை முன்வைத்து நானும் இவ்வாறு செய்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

          • விடுபட்ட கருத்து:

            //புல்லட்டின் ரயிலுக்கு 50,000 கோடி ஒதுக்க திட்டம் போட்டவர்கள் சாதாரண மக்கள் பயணிக்கும் வசதிகள் குறித்து எப்படி சிந்திப்பார்கள்? பல்லாயிரம் கோடி ரூபாயில் சாதாரண மக்கள் பயணிக்கும் ரயில்களை அதிகம் விட திட்டமிடாமல் போனது ஏன்?//

            இதற்கு வெங்கடேசன் பதில் இப்படியும் இருக்கலாம்.

            “புல்லட்டின் ரயில் செலவில் நீங்கள் சொன்னது போன்ற ரயில்கள் விடலாம்தான். அப்படி விட்டாலும் வேறு வகைகளில் விமரிசனம் வரும். காங்கிரசு அரசு இருந்தாலும் புல்லட்டின் ரயில் வராமல் இருக்குமா? இல்லை மோடி, மன்மோகன் இல்லாமல் வேறு யார் வந்தாலும் இதுதான் நடக்கும். இதை முன்னேற்றமாகவும் பார்க்க வேண்டாமா? நாமே சாதா பாசஞ்சர் ரயிலை விடுத்து சூப்பர் ஃபாஸ்ட்டை மட்டும் தெரிவு செய்து போவது ஏன்? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், நீங்களெல்லாம் பாசஞ்சர் ரயிலிலா பயணிக்கிறீர்கள்? உங்களுக்கு சூப்பர் பாஸ்ட் என்றால் உங்களுக்கு மேலே இருப்பவன் புல்லட்டை எதிர்பார்ப்பாக்கத்தான் செய்வான். எனினும் ஏழைகளின் நலனை கணக்கில் கொண்டுதான் ஒரு நாட்டின் திட்டம் தீட்டப்பட வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. மாறாக எப்போது பார்த்தாலும் மோடியை வைவதால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?”

            “வினவு வரவர ஆக்கபூர்வமாக எழுதுவதற்கு பதில் அழிவுபூர்வமாக எழுதுவது வருத்தம் தருகிறது.”

            • இல்லை வினவு. சொல்ல வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக் கொள்ளாமல் மனதில் வைத்து எழுதியதில் புல்லட் வண்டி பற்றி சொல்ல நினைத்திருந்தது விடுபட்டு விட்டது.

              பல ஊர்களுக்கு ரயில் இணைப்பு கேட்டு பல முறை கோரிக்கைகள் எழுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் வெறும் 2% சத அளவே ரயில் தடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக படித்தேன். புல்லட் வண்டிக்கு ஆகும் செலவில் புதிய ரயில் தடங்கள் அமைக்கலாம்.

              மோடியின் புல்லட் ரயில் திட்டம் பற்றிய உங்கள் விமர்சனத்தோடு உடன்படுகிறேன்., அதை முன்வைத்து அவர் மேல்தட்டு வர்கத்தினருக்கு ஆதரவாகவும், எளிய மக்களுக்கு எதிராகவும் செயல்பட முனைபவர் என்ற உங்கள் கருத்தோடும் உடன்படுகிறேன்.

              மறுபுறம், மோடியே கூட இரண்டாம் வகுப்பு பெட்டிகளை தூக்கி விட்டு, AC பெட்டிகள் மட்டுமே என்றொரு திட்டத்தை செயல்படுத்த மாட்டார் என நம்புகிறேன். எளியவர்கள் மீதான கரிசனம் இல்லாவிட்டாலும் கூட, தேர்தல் பற்றிய கணக்கின் காரணமாகவாவது அவர் அப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார் என்பது என் கணிப்பு.

              • //மோடிக்கு வக்காலத்து வாங்கும் தொனியில் பேசிக்கொண்டிருப்பது வருத்தம் தருகிறது.//
                //மோடியின் புல்லட் ரயில் திட்டம் பற்றிய உங்கள் விமர்சனத்தோடு உடன்படுகிறேன்.,//
                //ஆனால், மோடியே ஆனாலும் கண்மூடித்தனமாக கும்மாங்குத்து குத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.//
                // இப்படி சொன்னாலும், கலைஞரை முன்வைத்து நானும் இவ்வாறு செய்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.//
                ????

              • to venkatesan

                இது தான் வளர்ச்சியா? பிரீமியம் ரயில் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சென்னை ஹவுரா இடையிலான ரயிலில், முன்பதிவுக்குரிய மூன்று படுக்கை இரண்டாம் வகுப்பும் இல்லை, மூன்றாம் வகுப்பும் இல்லை. 1000 கி.மீ பயணிக்கும் இந்த ரயில் நிற்பதோ மூன்றே நிலையங்களில் தான். இது தொடர்பான செய்தி இன்றைய தினமணியில்.

                “இந்த ரயிலில் குளிர்சாதன 2-ஆம் வகுப்பு பெட்டிகள் மூன்றும், குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள் எட்டும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் காரக்பூர், புவனேசுவரம், விஜயவாடா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.”

                http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/08/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D—%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80/article2368041.ece

          • /தினகரனில் தலைப்பு செய்தியாக இதை படித்தபோது, தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த மடையனும் இப்படி ஒரு துக்ளக் பாணி செயலில் இறங்க மாட்டான் என்ற சந்தேகம் வந்தது./

            தண்ணி எல்லாம் யாராவது வெலைக்கு விப்பாங்களா? தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த மடையனும் இப்படி ஒரு துக்ளக் பாணி செயலில் இறங்க மாட்டான்.

            என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் நிச்சயமாக சொல்லியிருப்பார் என்பது இதை படிக்கும்போது தெரிகிறது

          • // மோடிக்கு வக்காலத்து வாங்கும் தொனியில் பேசிக்கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. ஆனால், மோடியே ஆனாலும் கண்மூடித்தனமாக கும்மாங்குத்து குத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. //

            உங்களின் இந்தப் ’பகுத்தறிவு’ புல்லறிக்க வைக்கிறது. உங்களைப் போன்றவர்கள்தான் மோடி ஆதரவின் அடித்தளம். மோடி ஆட்சியிடம் இருந்தும் மக்கள் நலத்திட்டங்கள் வரும் என்ற நம்பிக்கைதான், இந்தப் ’பகுத்தறிவிற்கான’ அடிப்படை என்று நினைக்கிறேன்.

            மோடியாக இருந்தாலும், மன்மோகனாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஆட்சிக்கு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து மோடியை ஆட்சியில் அமர்த்திய முதலாளிகள் அப்படிச் செய்வதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அப்படியே தப்பித்தவறி ஓரிரு மக்கள் நலத்திட்டங்கள் இவ்வரசுகளிடம் வந்தாலும், அது வெறும் கண் துடைப்பாகவும் அல்லது மறைமுகமாக முதலாளிகளுக்கு உதவும் வகையில்தான் இருக்கும்.

            உண்மையான போராட்டம் என்பது மக்களின் போராட்டங்களினால்தான் வரும்.

            அரசுகளின் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வெளிப்படையாக “நான் business friendly” என்று அறிவித்துக் கொண்ட ஒருவரிடம் இருந்தும் மக்கள் நலத்திட்டங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு, போராடத் தயாரில்லாத நடுத்தர் வர்க்கத்தின் ஒருவகையான கையாலாகாத தனம் தான்.

            • // உண்மையான போராட்டம் என்பது மக்களின் போராட்டங்களினால்தான் வரும். //

              மன்னிக்கவும். இதை ”உண்மையான மாற்றம் என்பது மக்களின் போராட்டங்களினால்தான் வரும்” என்று மாற்றிப் படிக்கவும்.

  11. We are welcome. Who is middle now. Ready to pay 500 repees to buy a cinimaticket these persons are not middleclass. Even a cooli is also earning 500 Rupees a day/ 1000 rupees everyday if husband and wife working sunday holiday .they are ready to pay high fees and put their kids in matriculation school everybody is having TV, So there is no middleclass in India. The communists are making the middleclass.
    When u are giving instruction on comments we shouldnot mention the indiduals , but when u are writing the names of indiduals. theis is communisa SIDHANTHAM

  12. இதற்கும் ஏதாவது பொருளாதார கணக்கை கண்டுபிடித்து ரீல் சுற்றினாலும் ஆச்சரியப்படமுடியாது

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க