Monday, August 8, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

-

“அமெரிக்கா: ஜனநாயகக் கட்டுக்கதையும் கொள்ளையடிக்கும் வங்கிகளின் ஆட்சியும்” – ரிச்சர்ட் பேக்கர் என்பவர் எழுதிய நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழாக்கம் நிழல்வண்ணன்.

நூலின் சில கருத்துக்களை பார்ப்போம்.

ரிச்சர்ட் பேக்கர்
ரிச்சர்ட் பேக்கர்

வங்கி என்றால் என்ன? “ஒரு வங்கியை தோற்றுவிப்பதை விட ஒரு வங்கியில் கொள்ளையடிப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல” எனும் பெட்ரோல்ட் பிரெக்ட்டின் மேற்கோளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர்.

2008 பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 42 இலட்சம்  கோடி ரூபாயை வங்கிகளை மீட்பதற்கு செலவிட்டது. இந்த பணத்தை அந்த வங்கிகள் என்ன செய்தார்கள் என்று கேட்ட போதெல்லாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று வங்கி முதலாளிகள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இந்த வங்கிகள் தமது அதிகார வர்க்கத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றன. 5000 பேருக்கு தலா பத்து இலட்சம் டாலர் ஊக்க ஊதியம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஏதோ முதலாளிகளின் செருக்கா என்றால் இல்லை. அவர்கள்தான் அமெரிக்க அரசை கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்துக்களில் 60 சதவீதம் பத்து பெரிய வங்கிகளிடம் இருக்கிறது. நிதிச்சாதனங்களின் (derivatives) வர்த்தக மதிப்புகளில் 95% ஐந்து வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 5 பெரிய வங்கிகள் தலா 1000 கோடி டாலர்களுக்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கின்றன.

“அந்தக் காலகட்டத்தின் போது பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், வால் ஸ்ட்ரீட்டுக்கும், வங்கியாளர்களுக்கும் ஒரு உயர்ந்த வகை அடியாளாகத் தான் எனது பெரும்பாலான நேரங்களைக் கழித்தேன். சுருக்கமாகச் சொன்னால், நான் முதலாளித்துவத்திற்கு ஒரு எடுபிடியாகவும் அடியாளாகவும் இருந்தேன்” என்கிறார் 1935-ல் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஸ்மெட்லி பட்லர். எனில் இன்றைக்கு அதன் பரிமாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்? இதன் பொருட்டே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 900-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்று இருக்கின்றன.

ஆங்கில நூல்
ஆங்கில நூலின் அட்டை

இப்படி நிதியாதிக்க கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 187 லட்சம் காலி குடியிருப்புகள் இருந்தன. அந்த ஆண்டில் மட்டும் 38 லட்சம் வீடுகள் கடனுக்காக கைப்பற்றப்பட்டன. இவை மீண்டும் சந்தைக்கு வருகின்றன. காலி குடியிருப்புகளின் எண்ணிக்கையோ மீண்டும் அதிகரிக்கின்றன. எனில் காலி செய்த மக்கள் எங்கே எப்படி வாழ்வார்கள்? இதுதான் அமெரிக்கா. இதுதான முதலாளித்துவம்.

“அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்பது பொது மக்களையும், வால்ட் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது” என சி பி எஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. ஆனால் இது குற்றமாக ஊடகங்களுக்கோ, கட்சிகளுக்கோ தோன்றவில்லை. இதுவும்தான் அமெரிக்கா. அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முதலாளித்துவத்தின் சேவைக்காகவே அல்லும் பகலும் செயல்படுகின்றன.

2008 வீட்டுக்கடன் குமிழ் நெருக்கடியை முன்வைத்து அமெரிக்க சமூகம், பொருளாதாரத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தினை அளிக்கிறது இச்சிறு நூல். சோசலிசமே மாற்று என்பது ஏதோ ஒரு கொள்கை மட்டுமல்ல முதலாளித்துவத்தின் அழிவிலிருந்து பிறந்தே ஆக வேண்டிய மாமருந்து என்பதையும் நிறுவுகிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.

நூல்: அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்.
ஆசிரியர்: ரிச்சர்ட் பேக்கர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்.
பக்கம்: 48, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013

வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,

தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367

 1. சோசலிசம் மாற்று என்பது கிடையாது. சோசலிசத்தில் என்ன நடந்தாலும் வெளியே தெரியாது.

  குடும்ப அமைப்பில் கட்டமைந்த, சேமிப்புப் பழக்கம் உள்ள, கடன் வாங்கி அனாவசிய செலவு செய்வதைத் தவிர்க்கும் இந்திய சமூக வாழ்க்கை முறையே இதற்கு விடை, மருந்து.

  • //சோசலிசம் மாற்று என்பது கிடையாது.//
   Thank you. Could you kindly explain what is socialism? What are the disadvantages? Please give complete references for your explanations (ie, from where you came to know these information).

  • மணவை சிவா, உங்களிடம் ஒரு பகிர்தல்: சோசலிச நாட்டில் என்ன நடந்தாலும் வெளியே தெரியாது என்கிறீர்களே, இந்தியாவில், 2012இல் மட்டும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 11,772 என்பது உங்களுக்குத் தெரியுமா? தெலுங்கானாவில் மட்டும் கடந்த மே மாதத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட விவாசாயிகளின் எண்ணிக்கை 80க்கும் மேல் என்பது தெரியுமா? உங்களது பதில் எவ்வளவு மேட்டிமைத்தனம் நிறைந்தது என்று புரிகிறதா?

   எதற்காக விவசாயிகளைக் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் கடன்கட்ட முடியாமல் செத்தவர்கள். ஆனால் உங்களது பதில், சொல்லப்போனால் மிகவும் கொச்சையாக கடன்வாங்கி அனாவசிய செலவு செய்வதை தவிர்க்கும் இந்திய சமூகமே மருந்து என்று வியக்கிறது. மல்லையாவிற்கு இதைச் சொன்னால் ஓரளவு பொருத்தமாக இருக்கும். கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்கள் எத்துணை கோடி என்பதை ஒருமுறை பரிசிலீயுங்கள்.

   பணக்காரர்கள் தான் உங்களைப் போன்ற புரிதலைக் கொண்டிருக்கின்றனர்.

   குறிப்பு: மறுமொழி எழுதினால் பதில் சொல்லுங்கள். மறுமொழி இடுபவரின் தவறையும் இதனால் திருத்திக்கொள்ள இயலும். ஆனால் இதுவரை எங்கே விவாதம் தொடர்ந்துவிடுமோ என்றே பலபதிவுகளில் பதில் சொல்லாமலேயே போய்விடுகிறீர்கள்.

   • i’m currently live in usa. i feel indian system is always better.
    the farmers who killed themselves got migrated to western way of living, spending, farming etc….
    wait wait…western way of living doesnt mean wearing dress like them.

    its monoculture (single crop) in agriculture. they lost the traditional knowledge. i too have a farm in India. i dont need so much of water, fertilizers, pesticides. all i need is one country cow per acre.
    same way allopathic meds, its just cheating of innocent people.

    now indians living either western or indian culture. we dont know what to do.
    westerners invented plastic bags, they dispose properly and recycle.
    what we do in india? plastic bags are flying everywhere, seems to be national bird of india. american just sell his technology, but never tells you how safe to handle. we are just prey for advertisements.

    now we suffer.

    its very utter mistake by farmers and people, in this case either socialism or federalism will not work. we will perish, if this continues

    its fairly ignorance of people and farmers, but mistake of government. govt interested only in looting. there is no real interest in people.

    either change like a western, destroy everyone on the planet, or be a social kind to environment, humanity etc.

    but now we are neither western or eastern.

    all your constructive comments are welcome.

    • // same way allopathic meds, its just cheating of innocent people.

     ஆஹா! சந்தடி சாக்குல அறிவியல்பூர்வ மருத்துவத்துக்கு ஆப்பு வைக்கிறாங்களே!

     • இதில் ஆப்பு ஒன்றும் இல்லை.
      என்னுடைய மகனுக்கு இங்ஙு அமெரிகாவில் வலிப்பு வந்த போது மருத்துவமனையில் குழந்தைகள்நரம்பியல் கூறியது.

        • மறைவழி மருத்துவம் பார்ப்பதில் தவறில்லை. திருப்பதிக்கு மொட்டை, திருபரங்குன்றத்தில் காவடி என எல்லாம் செய்யலாம். ஆனால், அதற்கு முன்னால் அறிவியல் பூர்வ அல்லோபதி மருந்து எடுத்துக்கொள்வது முக்கியம்! சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்!

         • அறிவியல் பூர்வ அல்லோபதி…அருமை…
          தமிழ்நாட்டு வெயிலில் குழந்தைகளுக்கு சூ, டை அனுப்புகிற பெற்றோர்கள் இருக்கும் சமுதாயத்தில் இருக்கின்ற வரையில்…

          சொல்வதெல்லாம் விழலுக்கு இரைத்த நீர்தான்.

          சூ, டை இதுவும் அறிவியல் தானா?

   • “…என்பது உங்களுக்குத் தெரியுமா? ….என்பது தெரியுமா? ”

    எனக்குத் தெரிய வேண்டும் என்பது கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்கிறதல்லவா ? நீங்களும் நானும் பொது மக்கள் என்ற அளவிலே ஒன்றுதான். ஆனால் சோஷலிச நாடுகளில் என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. சீனாவில் ஒரு ப்ராஜெக்ட் க்குத் தேவையென்றால் ஒரு ஊரையே கட்டாயமாகக் காலி செய்கிறார்கள். இழப்பீடும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது.(https://www.mtholyoke.edu/~vanti20m/classweb/website/socialconsequences.html)

    life in communist countries என்று google ல் தேடுங்கள். நாடு வாரியாக கதை கதையாகக் கிடைக்கும்.

    வட கொரியாவில் நாட்டைவிட்டு பெருவாரியான மக்கள் ஒடாமல் இருக்கக் காரணம், ஓடினால் அவர்களது குடும்பத்தாரின் நிலை அதோ கதிதான். அனைத்து மக்களையும் மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.

    “…இவர்களெல்லாம் கடன்கட்ட முடியாமல் செத்தவர்கள்”
    விவசாயிகளின் கடனையும் நான் குறிப்பிட்ட கடனையும் ஒரே தட்டில் வைத்து குழப்பக் கூடாது. நான் குறிப்பிட்டது நடுத்தர மக்கள் செய்யும் அளவுக்கு மீறிய செலவு அதற்கான கடன்.
    விவசாயக் கடனின் மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். எத்தனை விவசாயிகள் வசதியிருந்தும் கடன் வாங்கி திருப்பிக் கட்ட மறுக்கிறார்கள் ! ஒவ்வொரு அரசாங்கமும் போட்டி போட்டுக் கொண்டு அவற்றைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஒழுங்காகத் திருப்பிக் கட்டுபவனும் முட்டாளாகி அடுத்த முறை அந்தத் தப்பைச் செய்வதில்லை. அந்த வகையில் வங்காள தேசத்தின் கிராமீன் வங்கி போன்ற அமைப்பில் கடன் வாங்கி அதை ஒழுங்காகத் திருப்பி அடைக்கும் சிறு தொழில் செய்பவர்களை எவ்வளாவு பாராட்டினாலும் தகும்.

    மல்லையா கடன் திருப்பித் தர வில்லையென்னும் போது நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும். சொத்துக்களை ஜப்தி பண்ண வேண்டும்.

    “பணக்காரர்கள் தான் உங்களைப் போன்ற புரிதலைக் கொண்டிருக்கின்றனர்.”
    இது இந்த இடத்தில் தேவையில்லாத வாதம்;நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதத் தோழர்கள் இது போலத்தான் தேவையில்லாமல் பணக்காரன் முதலாளி என்று எல்லா விஷயத்திலும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். எப்படி சர்வ ரோகணி கிடையாதோ அது போல சர்வ காரணியும் கிடையாது. தவிர நான் பணக்காரனும் இல்லை.

    “மறுமொழி இடுபவரின் தவறையும் இதனால் திருத்திக்கொள்ள இயலும்.”

    உங்களது பணிவுக்கு வணக்கம். யாரும் சரி தவறு என்பது கிடையாது. ஒரு சமயத்துக்கு சரியானது மறு சமயத்துக்கு சரியாகாமல் போகலாம். இருநூறு வருடத்துக்கு முன் நடந்ததுதான் இன்றைக்கும் சரியான தீர்வு என்பதுதான் எனக்கு உடன்பாடில்லாத கருத்து.

    “ஆனால் இதுவரை எங்கே விவாதம் தொடர்ந்துவிடுமோ என்றே பலபதிவுகளில் பதில் சொல்லாமலேயே போய்விடுகிறீர்கள்.”

    நேரமின்மை ஒரு காரணம்.தவிரவும் வினவிற்கு எதிர் கருத்தை முழுமையாகப் வாசகர்களிடையே கொண்டு செல்லும் நேர்மை இல்லாததால் பல முறை சுவாரசியம் போய்விடுகிறது. ரொம்ப நாகரிகமாக எழுதியதையும் வினவு வெட்டி விடும். ஆனால் சில ஆஸ்தான வாசகர்கள் என்ன எழுதினாலும் போடும். பல சமயம் வினவிற்கு ஒரு மாதிரியான குழாயடிச் சண்டைதான் தேவையோ என்று தோன்றி விடுகிறது. அதுவும் சாதி ஸப்ஜெக்ட் என்றால் இங்கேயும் ஒரே வெட்டு குத்து கலவரம்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க