privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

-

மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் பேசியதை “ஏன் இந்துக்களாக இருக்க முடியாது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.

mohan-bhagwat-2அதில் “இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இந்த நாட்டில் இந்துக்களிடையே சமத்துவத்தை உருவாக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொன் விழாவில் மோகன் பாகவத் பேசிய”தாக பூரிக்கிறது தினமலர். தாமரை நாடாண்டால் காவி வெறியர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.

இது ஒன்றும் புதிதல்ல. சாவர்கர், ஹெட்கேவார், கோல்வால்கர் முதல் இராம கோபாலன், அசோக் சிங்கால் வரை ஆயிரக்கணக்கான இந்துமதவெறியர்கள் அனைத்து மொழிகளிலும் இந்த மிரட்டலை பேசாத நாளில்லை. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆளும் காலத்தில் சட்டபூர்வ இந்துராஷ்டிர அமலாக்கம் நடந்து வரும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது வெறும் கருத்தல்ல. அமலுக்கு வரும் ஒரு துவக்கம்.

ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? என்பது கேள்வியல்ல, ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தினை அறிவிக்கும் மிரட்டல். இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசும் போது இந்தியாவில் சமஸ்கிருதமோ இல்லை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியோதான் பேச வேண்டும் என்பதும், அதற்கான துறை சார் உத்திரவுகளை பாஜக அரசு பிறப்பித்திருப்பதும் வேறு வேறு அல்ல. மற்ற இந்திய மொழிகள் அவாளின் புனித மொழிக்கு கட்டுப்பட்டே காலந்தள்ள வேண்டும் அல்லது ஒழிந்து போக வேண்டும்.

அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படுவது ஒரு இடம் சார்ந்த நாட்டின் குறியீடே அன்றி பண்பாடு, மொழி, சமூகவியல், மதம் சார்ந்த ஆதிக்கத்தின்பாற்பட்டதல்ல. இத்தனைக்கும் அங்கே கிறித்தவமே அதிகாரப்பூர்வமற்ற அரச மதமாகவம், வெள்ளை நிறவெறியே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செய்யும் நிலைமை இருந்தாலும் சட்டபூர்வமாகவும், பொதுப்புத்தியின் கருத்தளவிலும் அங்கே பெரும்பான்மையினரின் மதம் சார்ந்த பண்பாடு “அமெரிக்கனிசமாக” முன்னிறுத்தப்படுவதில்லை.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பேசும் இந்து வெறியைப் போன்றே ஆரிய இனவெறியை உயர்த்திய ஹிட்லரும் பேசினான். ஆனால் அதை ஜெர்மனிய மக்கள் இன்று வரையும் ஒரு குற்றவியல் கொடூரமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் புதிய நாசிசக் கட்சிகள் கூப்பாடு போடும் போதெல்லாம் பெரும்பான்மையான ஜெர்மனிய மக்களும் அவர்களை எதிர்த்து போராடுகிறார்கள். இந்தியாவிலோ அந்த நாசிசம் ஆண்டு கொண்டிருக்கிறது. இதன்படி ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிட்டால் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரியாகச் சொன்னால் இந்துமதவெறியர்களின் பாசிசத்தை கண்டு உலக நாடுகள் காறித் துப்பலாம். இந்த கேவலத்தின் விளைவால்தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது.

இந்துமதத்தின் எந்த அம்சங்களையும் அறியாமல், ஏற்காமல் வாழும் பழங்குடி மக்களும், வருண அமைப்பின் வெளியே தூக்கி எறியப்பட்ட பஞ்சம மக்களும், சாதிக்குள்ளே அடிமைகளாக இழிவு படுத்தப்படும் சூத்திர மக்களும் வாழும் இந்தியாவில் யார் இந்து? அவாள்களும், ஷத்திரிய, வைசிய, பனியா சாதிகளை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர்தான் பெரும்பான்மையினர்.

‘சூத்திர’ பத்திரிகையான தினத்தந்தி, மோகன் பகவத்தின் பேச்சை சர்ச்சை என்று தலைப்பில் போட்டிருந்தாலும் உள்ளே அவர் பேசியதை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறது.

“இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்”.

இந்த சமத்துவத்தை ஏற்காதோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் குடும்ப இயக்கங்களில் இருக்க முடியாது என்று ஏன் அமல்படுத்தவில்லை? தீண்டாமையை ஏற்காதவன் மட்டுமே காங்கிரசில் இருக்க முடியும் என்று அறிவிக்க முடியுமா என்று காந்திக்கு சவால் விடுத்தார் அம்பேத்கர். அந்த சவாலை காந்தி முதல் சங்க பரிவாரங்கள் வரை இப்படித்தான் கள்ளத்தனமாக எதிர் கொள்கிறார்கள்.

எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்? ஒரு வேளை கிராமங்களில் அப்படி இல்லை என்றால் அந்த இல்லாமைக்கு என்ன காரணம்?

நிலவுடைமையிலும், பொருளாதாரத்திலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களை விடுவிக்காமல் இந்த சமத்துவம் சாத்தியமில்லை. இது இந்து மதவெறியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனால் விரும்பாத ஒன்று. காரணம் சங்க வானரங்கள் அனைத்தும் கொள்கையில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் ஆதிக்க சாதிகளை சார்ந்தே உயிர் பிழைத்து வருகின்றன. தேவைப்படும் போது சிறுபான்மை மற்றும் சூத்திர-தலித் மக்களின் உயிரை எடுத்தும் வருகின்றன.

சென்னையில் இவர்கள் நடத்திய ஆன்மீக கண்காட்சியில் தலித் மக்களை ஒடுக்கும் எல்லா சாதிவெறியர்களுக்கும் இடம் கொடுத்துவிட்டு, உத்திர பிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிராக திருப்பி இந்துவெறியாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று இரத்தம் சுவைத்த ஓநாய்கள் இப்படி வெட்கமில்லாமல் சைவப்புலிகளாக நாடகமிடுகின்றன.

மகாராஷ்டிரத்திலும், ஹரியானாவிலும் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் தலித்களின் வாக்குகளை அள்ளுவதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வாய் தனக்கு எதிரான சமத்துவத்தை வேண்டா வெறுப்பாக கதைக்கிறது. மராட்டியத்தில் இந்துமதவெறியர்களோடு தலித் கட்சிகளை கூட்டணியில் இணைப்பதோடு (இது ஏற்கனவே நடக்கும் ஒன்றுதான்) மக்களின் வாக்குகளை கவருவதற்கும் இந்த நாடகம் தேவைப்படுகிறது.

அரியானா எனும் இந்தி பேசும் மாநிலத்தில் தலித்துக்களுக்கு எந்த இடமும் அரசியலில் இல்லை என்றாலும் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருக்கும் அவர்களை, கொத்தாக கைப்பற்றுவதற்கும் இந்த நாடகம் அரங்கேறுகிறது.

முசுலீம்களை எதிர்ப்பதும், ஆதிக்க சாதிவெறியை ஆதரிப்பதும் இந்தியாவெங்கும் இருந்தாலும் இப்படி தலித் மக்களை அரவணைப்பது போல நடிப்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு தேவைப்படுகிறது. ஆனால் அது நாடகமென்பதை தினமலரின் தலைப்பு சொல்லும் போது அரவிந்தன் நீலகண்டன் போன்று இதயத்தில் ஆதிக்க சாதிவெறியான இந்துத்துவத்தை மறைத்து விட்டு தலித் வேடமிடும் கபடதாரிகள் புரட்சி என்று வரவேற்பார்கள்.

போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போர்த்தினாலும் இந்து மதவெறியர்களின் ஆன்மா சாதிவெறி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை.  தேவையெல்லாம் அதை முறியடிப்பதே!

  1. “அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்”.

    இதைத்தானே வினவு உள்பட எல்லோரும் சொல்லுகிறோம். மோகன் பாகவத் சொன்னால் மட்டும் அது மத வெறியா?

  2. போகிற போக்கைப் பார்த்தால்…..
    பூணூல் போடாதவனைப் போட்டுத் தள்ளினாலும் ஆச்சரியமில்லை!
    இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…பாரதகுமாரா!

    • உங்கள் சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. ஆயுதங்கள் இல்லாத குறை.

      வரும் காலத்தில் இதற்கும் என்.ஜி. ஓ-கள் உதவி செய்வார்கள்.

  3. இது இந்துக்களின் நாடு தான்… வினவு மாதிரி ஆட்கள் விமர்சிக்கும் அளவு இந்து மதமும், இந்த நாடும் இன்னும் தாழ்ந்துவிடவில்லை…. செருப்பையும்,நாயையும் வைக்க வேண்டிய இடத்துல் வைக்க வேண்டும்… அது தான் இன்றும், என்றும் இங்கே நடக்கும்… பெரும்பான்மை மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் அடங்கி தான் இருக்க வேண்டும்…இது உலகத்தில் எல்லா நாட்டுக்கும் பொருந்தும்… இல்லையென்றால் பாலஸ்தீணைப் போல சாகவேண்டியது தான்….. இந்தியாவில் இவர்கள் இவ்வளவு உரிமை பெற்று இருப்பதே இந்துக்கள் போட்ட பிச்சை தான்… உங்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன் உங்களுக்கு பிச்சையிடப்பட்டதை தூக்கி எறிந்து விட்டு, பின்னர் கொடி பிடிக்கவும், அப்படி செய்தால்,நீ உண்மையான மானஸ்தன்….

    • இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பார்களே. அது சும்மாவா ? இது இந்து நாடென்றால் இந்து அல்லாத 20% மக்களை குறி வைத்து அரசியல் பண்ணுவது ஏன்?
      /*பெரும்பான்மை மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் அடங்கி தான் இருக்க வேண்டும் */
      சமத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை எல்லாம் எங்கே பொய் விட்டது ?
      எப்போ இவங்க பிச்சை போட்டாங்க விளங்கவில்லை .

    • இந்தியன்…நீங்கள் வீறு கொண்டு பேசும்போது, உங்கள்
      பூணூல் வெளியே தெரிகிறது….
      அது என்ன பிராண்ட்?
      சுப்ரமனியன் சாமியும் உங்க பிராண்ட்
      பூணூல்தான் அணிகிரான்போல!

      • ராமதாசு,

        பூனைக்கு வெளுத்ததெல்லாம் பால் மாதிரி, உன்னை மாதிரி மூடர்களுக்கு எல்லாம் பூணூலாகத்தான் தெரியும். இது சிகப்பு சட்டைக்காரர்களுக்கே உரிய பூணூல் போபியா

        • பூணுல் என்பது வெறும் கயிறுதானே ?
          அதில் வேறு என்ன மயிறு இருக்கு ?

    • இந்தியன் அவர்களே,

      //செருப்பையும்,நாயையும் வைக்க வேண்டிய இடத்துல் வைக்க வேண்டும்… //

      ஆண்டாண்டு காலமாக ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினரை பார்த்து சொல்லும் வாக்கியம் இது. இதை தமிழர்கள் அல்லது இந்தியர்கள் மைனாரிட்டியாக இருக்கும் இடங்களில் உபயோகித்தால் நீங்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? மெஜாரிட்டி இனம் மைனாரிட்டி இனத்தை நசுக்க நினைத்தால் பின் அங்கு அமைதி தங்காது. இலங்கையை எடுத்து கொள்ளுங்கள்.

      வார்த்தைகளை அள்ளி விட்டுவிட்டால் பின் மீண்டும் அல்ல முடியாது.

  4. இது இந்துக்களின் நாடு தான்… வினவு மாதிரி ஆட்கள் விமர்சிக்கும் அளவு இந்து மதமும், இந்த நாடும் இன்னும் தாழ்ந்துவிடவில்லை

  5. //அதில் “இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது?\\இந்தியாவில் உள்ளவர்கள் ஏன் இந்தியர்களாக இருக்கக்கூடாது என்று கேட்க்க வேண்டியதை இந்துக்களாக என்று கேட்டுவிட்டார் போல. தேச உணர்வுக்கும் மத உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாதவனா ஒரு தலைவன்.. நல்லா வருவீங்க தலைவா? கூட்டம் சேர்த்த வணல்லாம் தலைவன்ன டாஸ்மாக் கடையில் வேலை செய்பவன் ஒவ்வொருவனும் தலைவன் தான். அங்கு தான் இன்று கூட்டம் நிரம்பிவழிகிறது .

  6. இந்தியா இந்து நாடு என்று சொல்லுவதில் தவறு இல்லை மற்ற மதங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று சொல்ல வில்லையே ஒரே குடும்ப மதங்களாகிய யூதம் இஸ்லாம் கிறிஸ்தவர்கள் அடித்துக்கொண்டு சாகின்றதை பார்க்கும் போது இந்து மதத்தில் பல பிரிவுகள் இருத்தாலும் ஒவொருவரின் நம்பிக்கையை மதிக்கும் குணம் கொடுத்த்த இந்து மதம் ஏத்தனையோ மடங்கு மேல் அப்படி பட்ட இந்து மதம் ஒன்று தான் இந்தியாவின் மதமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது

  7. இந்து என தன்னை அழைத்துக் கொள்ள விரும்பாதவனை இந்து என அழைப்பது வன்முறை. இந்நாட்டில், தன்னை இந்து என அழைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடும் என கணிக்கிறேன்.

    • ஸார் அரபு நாடுகளில் இந்தியர்களை பொதுவாக அழைக்க பயன் படுத்தும் வார்த்த்தை இந்தி என்பது இந்த இந்தி என்கிற வார்த்தையுள் எல்லா வர்க்க மக்களும் அடங்குவார்கள் அப்ப்டி கூப்பிடும் போது யாரும் கேட்பது இல்லை இதை ஏற்று கொள்பவர்களுக்கு இந்து என்று சொல்வதை ஏற்று கொள்ள என்ன தயக்கம்

      • கேரளாகாரன் தமிழனை “பாண்டி” என்று இழிவாக அழைக்க பயன்படுத்தும் வார்த்தை எனவே “தமிழன்” என்பதை மாற்றி பாண்டி என்று வைத்துகொள்வோமா.

        • பிரேமா அவர்களே,

          வடநாட்டவர்கள் தமிழரை மதராசி என்று அழைப்பார்கள். அதனால் நாம் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி பழையபடி மதராஸ் என்று மாற்றி அமைத்து கொள்ளலாமா?

  8. இது எங்களின் நாடு.இந்த நாட்டினை எப்படி அழைப்பது என்பதை பூர்வகுடி மக்களான நாங்களே தீர்மானம் செய்து கொள்கிறோம். வந்தேறிகளுக்கு அந்த வேலை வேண்டாம்.

  9. இந்த கட்டுரைய பார்த்த உடன மொத்த வானர கூட்டமும் வினவு பக்கம் திரும்பி இருக்குங்க. அதனால எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஒடுங்க…..

    //
    Indian
    இது இந்துக்களின் நாடு தான்… வினவு மாதிரி ஆட்கள் விமர்சிக்கும் அளவு இந்து மதமும், இந்த நாடும் இன்னும் தாழ்ந்துவிடவில்லை…. செருப்பையும்,நாயையும் வைக்க வேண்டிய இடத்துல் வைக்க வேண்டும்… அது தான் இன்றும், என்றும் இங்கே நடக்கும்… பெரும்பான்மை மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் அடங்கி தான் இருக்க வேண்டும்…இது உலகத்தில் எல்லா நாட்டுக்கும் பொருந்தும்… இல்லையென்றால் பாலஸ்தீணைப் போல சாகவேண்டியது தான்….//

    இதுதான் ஓட்டு மொத்த வானர கும்பலின் கருத்து. அதை வெளிப்படையாக இப்படி சொல்லி பழகும் இந்தியன் போன்ற —–களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்

    //

    • இந்தியா இந்து நாடு. இதை சொல்ல எதற்காக வெட்கப் பட வேண்டும் ? சரியில்லாதவைகளை உதருவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதற்காக மதத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

      என்ன இருந்தாலும் உங்களுடைய ஜோக் சூப்பர்.

      //மொத்த வானர கூட்டமும் வினவு பக்கம் திரும்பி இருக்குங்க. அதனால எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஒடுங்க….//

  10. R.S.S.அமைப்பு தேவயில்லாமல் இந்தியாவின் இரையான்மைக்கு யெதிராகப் அவ்வபொழுது மதவெரியைக் கிலப்பிவருகிரது, அதாவது பாகிச்தானை வம்புக்கு இழுக்கிரது. ஒருவெலை பாகிச்தான் குஜராத்,நாக்புர், மட்டும் மோடி நடமாடும்பொது அனுகுன்டு விசினால் யென்ன ஆவது ?

  11. முதல்ல இந்தியா என்ரால் வெரும் இந்து கிடையாது ….
    இது தெரியல ///

    உங்கலுக்கு நல்லது பன்னவெ தெரியாத ….

Leave a Reply to suma பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க