Friday, August 12, 2022
முகப்பு செய்தி விளம்பரங்களின் வில்லங்கம் – 27/08/2014

விளம்பரங்களின் வில்லங்கம் – 27/08/2014

-

விளம்பரங்கள்

விளம்பரம்: இந்த ஆண்டு ஓணம் பண்டிகையில், மலையாளிகள் சொந்த முறையில், உங்களது பிராண்டை தெரிவு செய்யட்டும். 14,58,796 படிகளைக் கொண்ட மாத்ருபூமி இதழில் இலட்சக்கணக்கானோர் உங்களது பிராண்டை தெரிவு செய்யலாம். – மாத்ருபூமி ஓணம் சிறப்பிதழுக்கான விளம்பரதாரர் விளம்பரம்.

வில்லங்கம்: விளம்பரங்களுக்கு கம்பெனி ஜவாப்தாரி அல்லான்னுட்டு ஒரு டிஸ்கியை குஞ்சாட்டம் பறையறது ரூலாக்கும். இவிட சேட்டன் பிரில்லியண்டாயிட்டு சொந்த முடிவில் மலையாளக்கமார் ஆத்ம திருப்தியோட பிராண்டை தெரிந்தெடுக்கும்ணு  பறையறது தெற்றாணு! இது ஆத்ம ஹத்தியாணு!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: “அத்தை தனக்கு வாங்கினாலும் முதல்ல எனக்கு போட்டுத்தான் அழகு பார்ப்பாங்க” – நட்பில் ஒளிரும் உறவு – கசானா ஜூவல்லரி – இந்தியா முழுவதும் 41 ஷோரூம்கள்.

வில்லங்கம்: காமடிக்கு மாமியார் மருமகள் சண்டை! கசானாவின் காசு வேட்டைக்கு அத்தை மருமகள் உறவு! இடம் மாறினால் மண்குடம் பொன்குடமாகும்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: “உம்முன்னு பாத்தது போதும்…. இனி ஜம்முன்னு பாருங்க”, “இனி உற்சாகத்தின் ரிமோட் உங்கள் கையில்”….. உங்களை குஷிப்படுத்த வந்தாச்சு வேந்தர் டிவி.

வில்லங்கம்: பச்சமுத்துவின் விக்கு தலையையே சகித்துக் கொள்பவனுக்கு வேந்தர் டிவியின் கூந்தல் குரங்கு நிகழ்ச்சிகள் பிடிக்காமலா போகும்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: டேஸ்ட்டி சட்னி அதன் ருசியில் மறந்துபோய் விடும் ஸெல்பி! – PHILIPS கிச்சன் அப்ளையன்ஸின் மாயாஜாலம் எவ்வளவு இணையற்றது என்றால் அது உங்கள் குடும்பத்தினரை டைனிங் டேபிளை நோக்கி கவர்ந்திழுக்கும்.

வில்லங்கம்: பிலிப்ஸ் மிக்சி விளம்பர தமிலை கடிக்கும் அவஸ்தைக்கு, இந்த மூஞ்சிக்கு எதுக்கு செல்பி, இந்த நாக்கிற்கு எதற்கு சட்னி, தலையில் இருக்கும் கிட்னியே மேலென்று ஓடுவான்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை இப்பொழுது விழுப்புரத்திலும் கிளைகள் ஆரம்பம்! பொருத்தம் மிக்க புகழ் ஜோடி! பார்த்து மகிழ்ந்தவர் பல கோடி! உங்களது நல்லாதரவு நாடி!

வில்லங்கம்: துணியில் துட்டடித்தது ஏராளம் கோடி! நகை விற்க கட்டுனான் நாலு மாடி! பர்சோடு சேர்த்து உன்னையும் வாட்ட விழுப்புரத்திற்கு வாரான்  தீவிரமா ஈட்ட!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: வழுக்கைத் தலையில் முடி…… ஒரு மணி நேரத்தில் – ஏஞ்செல்ஸ் சிலிக்கான் சிஸ்டம் மூலமாக – ஏஞ்செல்ஸ் அட்வான்ஸ் கிளினிக் பிரைவேட் லிமிடெட்.

வில்லங்கம்: விக்க நட்டு வைச்சா என்ன, ஒட்டி வைச்சா என்ன? மக்கள மொட்ட போடுறதலயும் ஒரு நியாயம் வேண்டாமா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: நீங்கள் பணக்காரர் ஆகப் போகிறீர்கள்! உங்கள் பிரச்னைகள் எதுவானாலும் உடனே தீரும்! இரட்டிப்பு சந்தோஷம் பெற குமுதம் பக்தி ஸ்பெஷல் மறக்காம வாங்கிடுங்க!

வில்லங்கம்: கோபுரக் கலசத்துல ‘பவர்’ இருக்குமென்று பணக்காரனை ஏமாற்றினால் அது ரைஸ் புல்லிங். பக்தி ஸ்பெசலை வாங்கினா பணக்காரனா ஆகலாம்னு ஏழைகளை ஏமாத்துனா அது குமுதம் கில்லிங்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: முதல் மாத வருமானம் ரூ. 15,000 வேண்டுமா? இன்றே எங்கள் ஹோட்டல் அகாடமியில் சேருங்கள். சிறப்பு அம்சங்கள்: 100% வேலை வாய்ப்பு (சொகுசு கப்பல், விமானம், நட்சத்திர விடுதிகள்), படிக்கும் போதே வெளிநாட்டில் பயிற்சி, பார்ட் டைம் வேலை வாய்ப்பு…… அட்மிஷன் நடைபெறுகிறது – எமர்ஜ் வொகேஷனல் ஸ்கில்ஸ் பிரைவேட் லிமிடெட்!

வில்லங்கம்: நட்சத்திர விடுதிகளில் தின்றால் உடம்பு பெருக்கும்! நட்சத்திர விடுதி படிப்பு படித்தால் குடும்பம் இளைக்கும்! 100% போண்டி உறுதி!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: உங்களது விடாப்பிடியான மாசுமருவைக் குறைக்கும் ஃபேர்னஸ் க்ரீம் உள்ளது. இது எங்களது மிகச் சிறந்த சிகப்பழகை உங்களுக்குத் தரும். அதுவும் பிசுபிசுப்பு இல்லாமல். பெட்டு வைக்கலாமா! – புதிய பெஸ்ட் எவர் ஃபேர் அண்டு லவ்லி பயன்படுத்துங்கள், பலனை நீங்களே பாருங்கள்!

வில்லங்கம்: கருப்பழகு கொடூரம், சிகப்பழகு சிங்காரமென்று பேசும் ஃபேர் அண்டு லவ்லியை வன்கொடுமை சட்டத்தில் தடை செய்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: மருத்துவர் ஸ்ரீதர் மற்றும் அவரது அணியினரை, எஸ்.ஆர்.எம் மருத்துவ அறிவியல் கழகத்தின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை வரவேற்பதில் பெருமையடைகிறது!

வில்லங்கம்: பெருமை நற்பெயராகி, நற்பெயர், நடுத்தர வர்க்கம் தரும் நன்கொடையாகி, நன்கொடை பச்சமுத்துவின் தொலைக்காட்சியாகி, தொலைக்காட்சி செய்திகள் மோடிக்கு கொடி பிடித்து, கொடியின் நிழலில் சாம்ராஜ்ஜியம் விரிய…… வாருங்கள் மருத்துவர் ஸ்ரீதர் ஐயா!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: பண்டிகைக்கால விற்பனை! உறவுகளை வெறுமனே வாழ்த்தாதீர்கள்! பறந்து சென்று சந்தியுங்கள்! கட்டணம் ரூ 1,888லிருந்து ஆரம்பிக்கிறது. கொல்கத்தா வழி பாங்காங் பயணம் ரூ. 5,599லிருந்து ஆரம்பம் – எமது இதயக் கனிவுடன்…..ஸ்பைஸ் ஜெட்!

வில்லங்கம்: மின்னஞ்சலில் வாழ்த்தினால் மதி! கலாநிதிமாறனின் விமானத்தில் சென்று வாழ்த்தினால் நிதி! மதியை மயக்கும் நிதி – நீதியா, சதியா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: நகரெங்கும் பேச்சு, தவற விடாதீர்கள்! இந்தியாவின் உயர்தர நவநாகரீக, ஆடை அலங்கார, சிருங்கார கண்காட்சி மற்றும் விற்பனை! நாடெங்கிலிருந்தும் 150 அலங்கார நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். ஹை லைஃப் கண்காட்சி – ஹையாத் ரீஜென்சி – நுழைவுக் கட்டணம் ரூ 50 மட்டும்.

வில்லங்கம்: சென்னையில் கொசு சீசன் ஆரம்பிச்சு ரெண்டு நாளாச்சுன்னு ஊரெங்கும் ஒரே பேச்சு!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: அன்பைச் சொல்ல அழகான வழி – ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் கணேஷ் சதுர்த்தி சிறப்பு டின் பெட்டி! இனிப்பு, கேரள பிடி கொழுக்கட்டை, அதிரசம், மிளகு தட்டை, தேன் குழல், லட்டு, சிறப்பு அவல் மிக்சர், திரட்டிபால், மனோகரம் மற்றும் மரபார்ந்த மண் பிள்ளையார் குடை, அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலையுடன்! விலை ரூ. 410 மற்றும் வாட் வரியுடன்! – எங்களது வி.என் சாலை கிளையில் 2,600 பிள்ளையார்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளனர்.

வில்லங்கம்: இந்து முன்னணி பிள்ளையார் ஊர்வலம் போதையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பிள்ளையார் டின் பெட்டி நெய்யுடனும் உலா வருகின்றனர். மாட்டுப் பால் நெய்யும், திராட்சை ரச ஒயினும் நிறத்தால்,சுவையால் வேறுபட்டாலும் பிள்ளையார் பிள்ளையார்தானே?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

விளம்பரம்: கொழுக்கட்டை திருவிழா வந்து விட்டது! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுவை நிறைந்த எட்டு வகை கொழுக்கட்டைகள் – இஷா லைஃப் மகாமுத்ரா ரெஸ்ட்ராரெண்டில் மாலை 4 மணி முதல் – வீட்டு சேவை 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்…..

வில்லங்கம்: மாட்டு வால் சூப்பு, மாட்டுக் கறி குழம்பு, பொறியல், பக்கோடா, பிரியாணி, 65, கோலா உருண்டை, வடை, என்று எட்டு வகையும் ஊர் முழுக்க மணம் பரப்பி நா சுரக்கும் அமிர்தமாக இருக்கையில் கொழுப்பெடுத்த இஷாவின் கொழுக்கட்டை யாருக்கைய்யா வேண்டும்?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 1. எதிர்வரும் வைகுண்ட ஏகாதசி அன்று எங்கள்
  பொருட்களை வா(வீ)ங்கும் ஒவ்வொரு “அல்பமும்” மன்னிக்கவும் “அப்பமும்”
  ஒரு மொட்டை இலவசமாக கடை வாசலில் !
  அம்பிகள் பறந்து வருக!

 2. // பிள்ளையார் பிள்ளையார்தானே

  இல்லை. தனிப் பிள்ளையாரும், இந்து முன்னணி பிள்ளையாரும் ஒன்றல்ல. இரண்டாவது தடை செய்யப்படவேண்டியது. முதலாவது தனி மனித உரிமை.

 3. பிள்ளையாரின் வாழ்க்கை வரலாறு சற்று வினோதமானது….
  பிள்ளையாருக்கு எந்த தாசில்தாராவது
  பிறப்பு சான்றிதழ் வழங்குவாரா?

 4. முதலாளித்துவ விளம்பரங்களில்,
  மனிதன் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்தின் இலாபவெறி இருக்கின்றது என்பதை இந்த பதிவு தெளிவாக உணர்த்துகின்றது.
  வினவுக்கு நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க