மதுரை தமுக்கம் மைதானத்தில் 9-வது புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 29, 2014 முதல் செப்டம்பர் 7, 2014 வரை நடைபெற்று வருகிறது.
கண்காட்சியில் கடை எண் 146-ல் கீழைக்காற்று பல அரிய முற்போக்கு நூல்களுடன், பழைய சோவியத் நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர். மார்க்ஸ் , எங்கெல்ஸ் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புரட்சியை நேசிப்போர், சமூக மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் அவசியம் வாங்கவேண்டிய நூல்கள் அனைத்தும் கீழைக்காற்று கடையில் கிடைக்கின்றன. வாசகர்கள் அனைவரும் கீழைக்காற்று கடைக்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.
____________________
படிக்க தக்க புத்தகங்கள் பட்டியலையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்