மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்…
ஐயா வைகுந்தர் வழிபாடு: “கருவறைக்குள் பார்ப்பான் எதற்கு? நாங்களே தமிழில் வழிபடுகிறோம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.
“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.
இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.
இவ்கையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்ந்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.
172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”
_____________________________
மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…
“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:
“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.
1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.
1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’
“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.
1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
______________________________
பார்ப்பனின் அடக்கு முறைக்கு ஆளான பாட்டனின் பேரன் ராதாகிருஷ்ணன் இன்று காவிக்கு தன் கோவணத்தை தாரை வார்த்து பித்து பிடித்து திரிவது கவலைக்குரிய விஷயம்.
பணம்….ராதாகிரிஷ்னன் வாயை பிளந்து காட்டுவான்
For heaven’s sake, write how things have changed now: the literacy rate in Kerala and among the so-called once-backward community. Who have taught them? Who have enabled their upcoming? The same bloody rascals, whom we call Parppans have changed their thinking, thanks to Lajpat Roys, Narayana Guru, et al and of course, Periyaar. It is time, you appreciated the reformation brought about by them: like Vaidyanath Iyer, who led harijans into Meenakshi temple, etc. Do some work where it is needed; not where things have changed so much.
The atrocities meted out on persons based on one”s birth still continues (of course in a subtler manner)in media,private companies,PSUs,Govt service,temples etc.If you think that there are no atrocities nowadays,you can be compared to a cat which thought that the entire universe is dark just by closing it”s eyes.There is no limitation or jurisdiction for this evil.Avid browsers know the countless sites where this evil is nurtured.What is your solution to 206 Archagar students who are waiting before SC for benign verdict?What about the people who were behind the forces who deny them their jobs just because they are non-brahmins.
Are we not jumping track? what I am saying is: Paarppaans have certainly changed their outlook on castes and have done the teaching all castes (if learning was their sole right, they only had knowledge and they did teach others; that is how we all use this knowledge). 2. In the same Kerala, where such atrocious things happened, the literacy among all castes and both sexes is close to hundred per cent. Treatment to all castes is same. No double-tumbler, etc, to my knowledge. I have travelled in Kerala extensively; n but of course Vinvau readers can point out places where double-tumbler is practised) My point is let us recognise the change that has come about. 3. Archaka, being caste-based is a different topic for which I am not in the game.
Vignaani has understood the foundation of the caste discrimination.Since the brahmins only taught others,they taught caste discrimination.Not only that,they want to maintain the status-quo since they are in the uppermost crust of this caste ladder.In Kerala also,the equality has come only after struggles.50% of Archagars in Travancore Devoswam Board are non-brahmins.This was not handed over to them in platter.The yezhavas went up to SC to get Archagar posts.In that case,the judgement of the SC stated that fundamental rights enshrined in the Constitution should be safeguarded.SC also told that claiming right on the basis of one”s birth can not be accepted when we have a Constitution.My point is change has not come on its own.In many States,the caste discrimination continues.Why are you excluding yourself from the live issue of Archagars in TN?I want to ask why TN Gods are not accepting non-brahmin Archagars when Kerala Gods have already accepted?
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலரும் பின்பற்றும் இறை வழிபாடு ‘அய்யா வழி’.
உருவ வழிபாடு, சாதி, வேத மந்திரங்கள், யாகம், ஜாதகம், பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட அனைத்துக்கும் எதிராக அய்யா வைகுண்டரால் தொடங்கப்பட்ட வழிபாட்டு முறை.
இந்து மதத்திற்கு அப்படியே நேரெதிரான வழிபாட்டு முறை.
ஆனால் கிறிஸ்து, முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’ என்னும் அடையாளத்துக்குள் அடைக்கிறது இந்திய அரசியல் சட்டம்.
அய்யா வழி மக்களும் தங்களை இந்துக்களாகவே மாற்றிக் கொண்டனர். 🙁
http://velvetri.blogspot.in/2012/10/blog-post_24.html
இதையும் படியுங்கள்
இந்த வரலாறெல்லாம் இப்போதுள்ள தலைமுறை நாடார் சமூகத்தினர் அறிய வாய்ப்பில்லை.அதனை சொல்லி தமது சமுதாயத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை தோற்றுவிக்க காரணமாக அமைந்த வர்ணாச்ரம இந்து மதம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவோரும் இல்லை. சரத்குமார் போன்ற ஒட்டு பொறுக்கிகள் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டுவதையே லட்சியமாக கூறி ஒரு ஜால்ரா கட்சியை நடத்தி பிழைக்கின்றனர். எந்த இந்து மதம் இதனையெல்லாம் நிகழ்த்த காரணமாக இருந்ததோ அதே மதவாதிகளின் கட்சியில் வரலாறு படிக்காமலே மருத்துவம் பயின்ற தமிழிசை மாநில தலைவராக நியமனம் பெறுகிறார்.ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற அந்தஸ்து அசல் காவிகளை தாண்டி தனக்கு வந்தது எப்படி என்பது அந்தம்மாவுக்கு விளங்குமோ என்னவோ?
ஐயா வழி பற்றியும் , மிக கொடூரமான மேலாடை அணிய விடாத அளவு சாதி வெறி பற்றியும் அறிந்து கொண்டேன் .
இது போன்ற முக்கியமான வரலாறுகள் பாட புத்தகத்தில் படித்ததாக நினைவு இல்லை. திராவிட கட்சிகளாவது இது போன்ற வரலாற்றை பாடத்தில் சேர்த்து இருந்து இருக்க வேண்டும்
//பார்ப்பனின் அடக்கு முறைக்கு ஆளான பாட்டனின் பேரன்//
பார்பானின் கருத்துகளும் அதை சிரெமெர்கொண்டு நடைமுறை படுத்திய ஆதிக்க சாதிகளும் என்பதே சரி . அனைவரும் கூட்டு களவாணிகள் தான் .
Dear Vignani,Read today”s Times of India.A dalit student”s wrist slit by his non-dalit seniors for wearing a watch to school in Thirutthangal in Virudhunagar Dt.It is reported that this sort of incidents are not new in this particular school.Earlier,it was a co-educational school.Since dalit girls were repeatedly teased by non-dalit students,it was made as boys” school.Non-dalit students used to object dalit students wearing footwear to the school.
The original Post is about Nadars in Kerala (Travancore State). You have cited an incident in Tamil Nadu, dominated by our dear Thevars/Servais/Nadars (They may be now practising Untouchability to the Dalits: remember, the Post speaks of subjecting Nadars to such practices!). I am not saying casteism is dead. The Reservation system has ensured that it will never die in a century.
Vignaani should know that Kanyakumari District (now in TN)was part of Travancore Samasthanam and the Nadars who were ill-treated were from Kanyakumari.You are contradicting yourself.In your earlier comments,you said that the caste discrimination has vanished due to change of heart of high caste people.Caste based reservation is meant to give opportunities to backward and Scheduled caste people,who were denied such opportunities for centuries.Reservation should continue till such time they become at par with forward caste people.Your jealousy is misplaced.
Sorry Mr.Sooriyan. Not jealous. Disappointed.
1) You quoted an incident in Virudhunagar, which was not part of Travancore State. I know that area very well.
2)Belonging to the small percentage of non-OBC, we have provided food in our house to several SC/OBC students and taught lessons for free. In the 50’s, 60’s and early 70’s, when we were in School/College, swayed (brain-washed?) by rising Dravidianism/Communisism/films,we were hopeful casteism will die one day. Thanks to Mandal, the Government has ensured that the casteist approach will never die. We are disappointed.
In towns and cities, people move along with one another WITHOUT any thought of caste: only Reservation in jobs/promotions have brought the reference to caste in the workspot. Dejected and disappointed. Fortunately, the Private Sector, is free from the Caste approach to jobs: see how many promising youngsters from ALL COMMUNITIES WORK IN THE IT SECTOR, without any thinking of Caste, they work alongside, eat the same food, take the same drinks.
I think you are not keeping yourself abreast of happenings in our own country.Are you not aware that in Ahemedabad,State Govt officers belonging to SC`community are provided Govt accommodation separately in a colony and they can not live with other caste people?What Mandal has to do in this matter?Give your reply honestly.
I did not want to have running arguments on petty points, sorry. My only request to Vinavu and followers, let us stop recounting the bad, villainous, dirty, gruesome, inhuman behaviour/incidents of 1800’s. Just detailing how my great-great-grandfather joined a group in preventing some pregnant woman of a lower caste taking from a well meant for forward-community, will make me feel sad and make you feel revengeful on me, when my present behaviour is hundred per cent benevolent, irrespective of caste/religion/race The 1900’s and 2000’s have brought about excellent changes, developments, etc. Let us endeavour growing the mutual good will, mutual respect and humanitarian responses. Let us live together peacefully, if you wish, mutually helpful and in any case not obstructing one another. Periyaar needed to work up the majority people’s awakening by describing in gory details of upper-caste persecuting lower castes. We have grown out of it now. let us work for a better society free from ill-will to one another.
If you have no valid points leave it.But do not say it is a petty issue.We have not grown out of it.Do you know that caste discrimination is very much prevalent in media and in the private sector also.Are you new to Vinavu site?Have you not read about The Hindu not permitting non-vegetarian dishes to be eaten by the staff members in it”s office canteen?The oppressors should have change of heart.Do not advice the oppressed.
திருவாளர் விஞ்ஞானி அவர்களே,
தொடர்ந்து பிடிவாதமாக ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவதால் நீங்கள் கீழ்கண்ட 3 வகையை சார்ந்தவராக இருக்கலாம்:
1. தமிழில் எப்படி பதிவிடுவது என்று தெரியாதவராக இருக்கலாம்.
2. தமிழ் எழுத படிக்க தெரியாத வேற்று மொழிக்காரராக இருக்கலாம்.
3. தமிழில் எழுத பிடிக்காத, ஆங்கிலத்தில் எழுதினால் தான் கவுரவம் என்று எண்ணக்கூடிய மேட்டுமைபான்மை உடையவராக இருக்கலாம். இல்லை, வினவில் ஏற்கனவே பின்னூட்டமிடும் வேறு ஒரு நபர், ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் வகையில் ஒரு Alter Ego வேண்டும் என்ற காரணத்தால் ஆங்கிலத்தில் மட்டும் பின்னூட்டம் இடுபவராக இருக்கலாம்.
தாங்கள் மேற்கூறிய முதல் வகையை சார்ந்தவராக இருந்தால் தங்களுக்கு Google Input Tools பதிவிறக்கம் செய்து தமிழில் பின்னூட்டமிடலாம்.
தாங்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்றால், தமிழ் தெரியாத தங்களுக்காக நான் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுகிறேன்.
தாங்கள் மூன்றாம் வகையை சார்ந்தவறேன்றால் பின் பேச ஒன்றும் இல்லை.
சரி, இரண்டாம் வகையை சார்ந்தவர் என்றே நம்பி இனி உங்களுக்காக ஆங்கிலத்தில் பதிலளிக்கிறேன்.
Are you not aware of the Double Tumbler System followed in Tamilnadu even now?
Are you not aware that a child was made to carry his slippers on his head because he dared to walk with slippers on a street dominated by upper castes?
Are people from all castes allowed to enter into temple karbagraha and do poojas?
Are you aware of the Ilavarasan incident?
You conveniently forget all the above and say Mandal commission is the root cause of the casteist problems prevailing in our nation?
What a Joke!
For your kind information, the above incidents did not happen in 1800 or 1900, it is still happening in 2014. Do you still believe that we have grown out of caste discrimination issues?
You are trying to say that there is no casteism in private offices.
Please check, If any Non Brahmin can occupy any pivotal post in Simpsons.
Please check, if the employees can bring non veg food to Hindu Office.
Please check, if Any Non Brahmin can become a priest in Parthasarathy temple or any other Brahmin dominated temple.
Do you know that When our Ex President Mr.KR Narayanan visited Guruvayoor temple, The Temple was cleaned with cow dung to purify the temple as KR Narayanan is a dalit.
Also Please refer what happened in Thinniyam in Tamilnadu.
If you really want to have a better society free from ill-will, you can start with No Caste Discrimination in all temples. Please do something to allow non brahmins to become temple priests in Parthasarathy Temple. Try your luck!
No bramin priest will will perform pooja to full figure statue of Mariamman because she i half head belonged higher caste and lower part belong to lower caste maid.
For the kind attention of Mr.Vignaani-“The basic idea of caste is the social and religious sanction of inequality.The belief that a child”s birth should legitimately determine whether and where she can study,the limits to her wealth,her social status,and which livelihoods are opened and barred to her.You only have to look at contemporary India to see how much the accident of a child”s origins continues to determine her destiny”
“India will transform and caste will end,only when all children-regardless of their parents” social standing and wealth-can access the same quality education,in mixed and egalitarian classrooms.When the mettle of her character and intellect-not her parents” caste-will determine a child”s future”-Harsh Mander in his article with the title, “Caste factor”-The Hindu dt 7-9-2014.
“The near absence of Dalits in private sector employment is an expression of caste”-Anand Teltumde,IIT Professor.
//Are you not aware of the Double Tumbler System followed in Tamilnadu even now?
Are you not aware that a child was made to carry his slippers on his head because he dared to walk with slippers on a street dominated by upper castes?//
Honestly, I do not know. May God bless Tamil Nadu.
Mr.Vignaani,
Not only Tamilnadu, In Entire India, in someway or other, Caste Discrimination happens.
Have you not heard about the Innumerable Gang Rape Verdicts against Lower Caste women given by village panchayats in North India and the countless Honour Killing cases happening till date because of girls from upper caste marrying/loving boys from lower caste and vice versa?
Also, Can you please let me know which state you are from and whether you know to read and write Tamil?Since you mentioned your name as Vignaani, I am curious to know whether you are a Tamil?
If you dont know to read or write in Tamil, I can converse with you in English, No problems.
If you know Tamil, but doesnt know how to use Tamil Transliteration, No issues, you can use Google Input Tools.
But If you know tamil very well and just want to type in English just for some false/fake prestige, then it is bad.
R.S.S – Naanum rowdy thaan. Naanum rowdy thaan. read it in vadivelu style.
But the real ones are – ISIS, AL QAEDA, HAMAS, BOKA HARAM, LET. JUD.
தோழர்களே!
சீதையை சந்தேகப்பட்டு தீக் குளிக்க சொல்லவில்லை. அந்நாட்டு மக்களின் சந்தேகத்தை போக்கவே தீக்குளித்தார்.
அரசியல் வாதிகளின் கொடுமை அரசாங்கத்தின் கொடுமை
மதத்தின் கொடுமை ஆகுமா
நண்பர் அமுதன் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூற்கிறார் என்று விளக்கினால் நல்லது! வால்மீகி ராமாயணப்படி, இலங்கையை வெற்றி கொண்டவுடன் சீதையை வரவழைத்த ராமன் , ராவணனை கொண்றதுடன் தனது பணி முடிந்ததுவிட்டது எனவும், சீதை தனக்கு பிடித்த வேறு யாருடனும் செல்லலாம் என்ற் பகர்ந்தது ஏன்? பின்னர் சீதையின் வசவுக்கு பின்னர் அவளை அழைத்து கொண்ட ராமன் , அவளின் கற்பம் அறிந்தவுடன் மீண்டும் சந்தேகம் கொள்கிறான்! ஊர் மக்கள் பேச்சும் செர்ந்து கொள்ளவே சீதையை கொடிய மிருகஙள் வாழும் காட்டில் விட்டுவிட்டு வர சொல்கிரான்! காட்டில் சீதைக்கு மற்றொரு குழந்தையும் உண்டாகிறது, வால்மீகி முனிவன் மூலம்!