privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !

தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !

-

மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

கல்லூரி மாணவர்களை சந்தித்த ‘பெரியார்’

“மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிரசுரங்களை அச்சிட்டு சென்னை மாநகரம் முழுவதும் கொடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மொழிப்போரில் இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி அதனை வீழ்த்திய மாணவர்கள் மோடி அரசின் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை தந்தை பெரியார் எப்படி நேரடியாக வலியுறுத்தினாரோ அப்படி அணுக வேண்டும் என்பதனால் பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, அம்பேத்கர் சட்டக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியாரின் வேடமிட்டு பிரசுரங்கள் கொடுத்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நந்தனம் கல்லூரி,  லயோலா கல்லூரி, சட்டக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியார் வேடமணிந்த தோழர்கள் செல்கின்ற மாணவர்களை அழைத்து “நான் இங்கே  நின்னுகிட்டு இருக்கேன், இங்க வா, இந்த பிரசுரத்தைப்படி, என்ன புரியுது சொல்லு” என்று கேட்டார்கள். மாணவர்களும் பெரியார்களிடம் மரியாதையுடன் பதில் சொல்வது என்றும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெளிவு பெறுவது என்றும் இருந்தனர். பல மாணவர்கள் தாங்கள் கருத்தரங்கத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். காதில் இயர்போனுடன் சென்று கொண்டிருந்த ஒரு மாணவியை பெரியார் அழைத்து “முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே” கேட்டவுடன் அந்த மாணவியும் இயர்போனை கழட்டிவிட்டு “ தமிழை கேவலப்படுத்துறவனை செருப்பாலேயே அடிக்கணும்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரியில் பிரசுரங்கள் கொடுக்கத் தொடங்கியதில் இருந்தே  உளவுப்பிரிவு போலீசு ஒருவர் பிரச்சினை செய்து “வேற எங்கேயாவது போய் கொடு, இங்கே கொடுக்காதே” என்றார். பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்று  நாம் கூறுவது எதையும் கேட்கவில்லை. போலீசுகாரர்களை கூப்பிட்டு  “டேய்! அங்க என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க , இவனுங்களை அடிச்சு வண்டியில ஏத்துங்கடா” என்றவுடன்  பெரியார் வேடமிட்ட 7 தோழர்களையும் அடித்து வண்டியில் ஏற்றி ஜி-3 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு இருந்த ஆய்வாளரிடம் “பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா? அவர் வேசம் போட்டதுக்குதான் எங்களை அடிச்ச்சு கைது செய்தீங்களா?” என்றார்கள் தோழர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதற்கு பதில் அளிக்காத ஆய்வாளர், தான் வந்த 32 நாட்களில் கல்லூரியில் படிக்கின்ற சூழலை ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறி அந்தக் கல்லூரியில் பிரசுரம் கொடுக்கக்கூடாது என்றார். “எங்களை ரிமாண்ட் பண்ணுங்க, வெளியே விட்டா கண்டிப்பாக அந்தக்கல்லூரியில் தான் பிரசுரம் கொடுப்போம். ரிமாண்ட் செய்தாலும் கவலை இல்லை, பெரியார் வேசம் போட்டு அவர் என்ன செய்யச்சொன்னாரோ  அதைச் சொன்னதுக்குதானே  கைது செய்தீங்க, சிறைக்கு போகிற வரை  பெரியார் முகமூடியை கழட்ட மாட்டோம், எங்க பேரையும் சிறை வரைக்கும் பெரியார்ன்னு தான் பதிவு செய்வோம்” என்று வாதிட்டார்கள் தோழர்கள்.  “சரி கிளம்புங்க, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கொடுங்க” என்றார் ஆய்வாளர். சொரணை கெட்டுப்போய் இருந்த  இந்த சமூகத்தை தொந்தரவு செய்வதுதான் பெரியார் வேலை என்பது தெரியவில்லை ஆய்வாளருக்கு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அந்தக்காவல் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ தொலைவு, அது வரை நடந்தே  சென்று பொது மக்கள் அனைவரிடமும் பிரசுரங்களை கொடுத்தோம். பெரியார் வேடத்தில் இருந்த இளந்தோழர் ஒருவர் கொடுக்கும் பிரசுரத்தை மரியாதையுடன் எழுந்து  நின்று வாங்குவது கட்டிப்பிடித்து வாழ்த்துவதும்  தாங்களே முன்வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றும் மக்கள் ஆதரவளித்தனர். மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்தனர். வெள்ளை சட்டை என்று அழைக்கப்படும் அந்த ஐஎஸ் போலீசு  அங்கே போ, இங்கே போ என்று விரட்டிக்கொண்டும் தோழர்களை போட்டோ எடுத்துக்கொண்டும் வழக்கு பதிவு செய்தும்  இருந்தார். ஒரு அமைப்பு என்று இருக்கும் நபர்களையே இப்படி காட்டு மிராண்டி போல அணுகும் போலீசு சாதாரண மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை சோதித்து அனுப்புவது முதல் தாமதமாக வரும் மாணவர்களின் அடையாள அட்டைய பிடுங்கி வைத்துக் கொள்வது  தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களை பொய் வழக்கில் பிடித்துக்கொண்டு செல்வது வரை அனைத்தும் போலீசு ராஜ்ஜியம் தான்  பச்சையப்பன் கல்லூரியில் நடக்கிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக்  காட்டியது.

முன்னெப்போதையும் விட பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் தற்போதைக்கு வந்திருக்கிறது. பெரியார் இப்போதுதானே வர ஆரம்பித்து இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பார்ப்பனீயமும் அதன் ஊது குழலான போலீசும் வாலை சுருட்டிக்கொண்டுதான் ஆக வேண்டும்.

புமாஇமு கருத்தரங்கம் (1) புமாஇமு கருத்தரங்கம் (2) புமாஇமு கருத்தரங்கம் (3)

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

  1. //தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !//
    இந்த குமுதம் ஆவி மாதிரி பத்திரிக்கை தான் இந்த மாதிரி பத்து பைசாவுக்கு தேறாத பர பரப்பு தகவல்களை வெச்சி துட்டு பாக்குறாங்க வினவுக்கு ஏன் சாமி இந்த வேலை?

  2. உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே” கேட்டவுடன் அந்த மாணவியும் இயர்போனை கழட்டிவிட்டு “ தமிழை கேவலப்படுத்துறவனை செருப்பாலேயே அடிக்கணும்” என்றார்.

    வீர தமிழ்ச்சி வாழ்கா

  3. Good Work RSYF,
    In the days of Brahminic cultural terrorism, Its very vital to bring Periyar to streets. The younger generation has to be introduced to Periyar. Great formula, request RSYF to print more masks and make Periyar revolve in our cities and villages quite frequently. All around the year.
    Cheers,

  4. பெரியார் ஒருவர்தான் பெரியார்
    அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் – தந்தை பெரியார்

    பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
    தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி – தந்தை பெரியார்

    மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
    மனிதனைத் தீண்ட மறுத்தானே!

    நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
    நரிகளின் வாலை அறுத்தானே!

    கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
    கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

    காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
    கிழவன்; துடைத்து வைத்தான் – தந்தை பெரியார்

    மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
    மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

    வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
    யார் இங்கு மறப்பார் பெரியாரை – தந்தை பெரியார்

    – பெரியார் குறித்த கவிஞர் காசி ஆனந்தன் கவிதை

    • நடப்பு வரலாற்று காலத்தில் ராமசாமியை பெரியார் என்று சொல்வதே தப்பு.

      நாம் எல்லாம் அப்போது பிறக்கல்ல. இந்த பெரியார் பிறந்திருந்தார். அந்த நேரத்தில் உலகத்தை அதிரவைக்கிற போல்சேவிக்களின் புரட்சி உலகத்தொழிலாளவர்கத்திற்கு நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருந்தது.

      அரசியல் உணர்மையுள்ளவனாக இருந்தால் இந்த மனிதனுக்கு வரலாற்றின் உண்மை புலப்பட்டிருக்க வேண்டும்.

      இல்லையே! பாவிமனிதன் வரலாற்று ரீதியாக வந்த வர்க்க போராட்டத்தையே நிராகரித்தான்.

      இன்று வினவில் பெரியாரின் ஆதரவாளர்களையே கானமுடியும்
      அது கடைந்தெடுத்த காவாலித்தனம்.

      இந்த மனிதன்.இராமசாமி கண்ட உண்மைகள் குண்சட்டி குதிரை. இதைவைத்து இந்திய தொழிலாளவர்கத்தை பாதுகாக்க முடியாது மட்டுமல்ல. தமிழ்நாட்டு தமிழரைக் கூட காக்க முடியாது.

      எவன் தமிழ்நாட்டின் தொழிலாளவர்கத்திற்காக குரல் கொடுக்கிறானோ அவனே! தன்யினத்தையும் காப்பதற்கான பொறுப்பையும் எடுப்பான்.

      ஆகவே பெரியாரின் வாசகளின் மிஞ்சிபோனது பிராமணிய எதிர்ப்பு ஒன்றுதான். அது தான் அவரின் சிதைக்கு எரிவூட்டக் கொண்டிருக்கின்றன.

      அவர் மீளவும் மாட்டார். உயிர்தெழவும் மாட்டார்

      • மாவோ அவர்களே,

        மக்கள் மனதில் இருந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் பெரியார்.
        அந்த காலகட்டத்தில் சாதி வேற்றுமை மிக அதிகமாக இருந்தது உண்மை.
        எல்லா அரசு அலுவலங்களிலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் ஆதிக்கம் செலுத்திய காலம் அது.
        இல்லை என்று மறுக்க முடியாது. பெரியாரின் சேவையை அவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது. அவரது நடவடிக்கைகள் சற்று கடுமையாக இருக்கலாம், அந்த காலத்தில் மூடநம்பிக்கைகளில் முழுக்க மூழ்கிய மக்களை எழுப்ப சற்று கடுமையாக தான் நடக்க வேண்டி இருந்தது. ஆனால் அவரது குறிக்கோள் நிச்சயம் தவறல்ல.

        இப்போதும் கூட கோவில்களில் லிட்டர் லிட்டராக பாலை சாமி சிலை மீது ஊற்றி வீணடிக்கிறார்கள். உணவுப்பொருட்களை வீணடிப்பது மகாபாவம். பெரியாரை குறை கூறும் முன் நீங்கள் மதங்களின் பெயரால் மனிதர்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை தகர்க்க முயலுங்கள்.

        தீட்டு என்ற பெயரில் சக மனிதர்களை அவமானப்படுத்துவது உங்கள் கண்களுக்கு சரியாகப்பட்டதோ? பெரியார் முயற்சியினால் தான் அது பெருமளவு ஒழிந்தது. இன்றும் சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை இருப்பது தங்களுக்கு தெரியாததல்ல. அதனால் பெரியாரின் கருத்துக்கள் இன்றளவும் தேவை.

        கடவுள் என்ற ஒரு காரணத்தை வைத்து அந்த காலத்தில் மூட நம்பிக்கைகள், சாதிய வேறுபாடுகள் இருந்ததனால் பெரியார் அந்த கடவுள் என்ற நம்பிக்கையை உடைத்தால் அந்த மூட நம்பிக்கைகளை உடைக்கலாம் என்று எண்ணினார்.

        • //எல்லா அரசு அலுவலங்களிலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் ஆதிக்கம் செலுத்திய காலம் அது.
          //

          அதில் என்ன குற்றம்? எல்லா விவசாய நிலங்களும் குறிப்பிட்ட சமூகங்கள் வைத்திருக்கின்றன. வியாபாரத்தை குறிபிட்ட சமூகங்கள் வைத்திருக்கின்றன.

          விவசாய நிலங்களும் வியாபாரங்களும் வைத்து இருந்தவர்களுக்கு படிப்பு தேவையாய் இருந்து இருக்கவில்லை . அவர்கள் குமாஸ்தா என்று பிராமணர்களை வேலைக்கு வைதுகொண்டார்கள் .

          பிராமணர்களின் சோம்பேறித்தனம் அவர்களுக்கு பிடித்து இருந்தது , நம்ம தொழிலை கத்துகிட்டு நாளைக்கு நமக்கே போட்டியாக வரமாட்டான் என்கின்ற எண்ணம் தான் காரணம் .

          பிராமணர்களும் படித்து அரசாங்க வேலைக்கு போய்கொண்டு இருந்தார்கள் . நில உடைமை காலத்தில் அப்போது அரசாங்க வேலைக்கு போவது கேவலம் . என் அப்பா அரசாங்க வேலை பெற்று சென்றபோது , ஒரு வெள்ளாமை எடுத்தா ரெண்டு வரச சம்பளம் வாங்கிடலாம் எதுக்கு அந்த வேலை என்று ஏச்சு வாங்கியவர்

          எனவே பிராமணர்கள் மற்ற சமூகத்தை ஏமாற்றி வேலையை பறித்து கொள்ளவில்லை .ஒவ்வொரு சமூகமும் அவர்களுது தொழில் சார்ந்த கம்போர்ட் சோனில் இருந்தார்கள் என்பதே உண்மை .

          இன்றைக்கு அரசாங்க வேலை பணம் கொழிக்கும் தொழில் ஆகிபோனவுடன் மற்றவர்கள் தாம் எமாற்றபட்டுவிட்டதாக கூப்பாடு போடுவது ஒருவிதமான தந்திரம் . அதனால்தான்
          தலித் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு என்பதை நான் எதிர்கிறேன் .

          இதே போல பெரியாரின் பிராமண சமூகதை எதிர்ப்பு என்பதை மாவோ போல நானும் ஏற்றுகொள்வது இல்லை .பெரியாரின் மற்ற கருத்துகளில் மற்றும் பிராமணீய எதிர்ப்பு ஆகியவற்றில் உடன்படுகிறேன்.

          பிராமண சமூக வெறுப்பு எனபது மக்களை எளிதில் சென்றடைந்தது . வெறுப்பு எளிதில் இதயத்தை அடைந்து விடும் . இதனால்தான் கருவாட்டு பிரச்சனயில் ஒரு சமூஅகதை தாக்கி எழுதி பெரியார் விவேகிகள் போல காட்டி கொள்கிறார்கள் ஆனால் அவர்கள கடவுள் மறுப்பாளர்களோ அல்லது சாதி மறுப்பாளர்களோ அல்ல. பெரியாரின் சீரிய நோக்கம் மறைந்து இவை மட்டுமே பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது.

          • //என் அப்பா அரசாங்க வேலை பெற்று சென்றபோது , ஒரு வெள்ளாமை எடுத்தா ரெண்டு வரச சம்பளம் வாங்கிடலாம் எதுக்கு அந்த வேலை என்று ஏச்சு வாங்கியவர்//உங்க அப்பா நிறைய காடு கரை தோட்டம் துறவு வச்சு இருந்துருப்பார் அதனால கொஞம் சம்பலம் வாங்கும் அரசு வேலக்கி போக வேனாமுனு சொல்லி இருப்பாரு நீங்க பணக்கார்ரன் அரசு வேலை வெனாமுனு சொல்லுறீங்க ஆனா ஏழை விவசாயிங்க இருக்கிறாங்க விவசாய கூலிகளும் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் உதவி செய்த்து அரசு முன்னேற்றனுமுனு நினைக்ககூடாதா……

            • என்னுடைய கருத்து என்ன வென்றால் விவசாய நிலம் இருந்தது அதனால் படிக்க தேவை இல்லை , கைகட்டி நிற்கும் அரசாங்க உத்தியோகம் தேவை இல்லை என்கின்ற பொது கருத்து நிலவி இருந்து இருக்கிறது . அதனால் சில சமூகங்கள் அரசாங்க வேலை என்பதை முயசிக்கவே இல்லை . ஏழை விவசாயிகளால் படிக்க வைக்க முடியவில்லை.

              அதனால் வெறுமனே பார்பனர்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை.

              //நிறைய காடு கரை தோட்டம் //
              கடன்தாங்க வெச்சு இருந்தாங்க . இசுகோல் பீசு இரண்டு ரூபா காட்ட முடியாம ரொம்ப கசுடப்பட்டுடாறு. காமராசர் வந்து தான் கரையெதுனாரு

        • திரு க.கை

          காகம் இருக்க பனம்பழம் விழுந்ததாக ஒருபழமொழி உள்ளது. மூடத்தனத்தை பெரியார் ஒழித்ததாக சொல்லுகிறீர்கள்.

          எந்த மூடத்தனத்தை?

          யாரும் லிட்டர்கணக்கில் பால்ஊத்தி அபிசேஷகம் செய்வதில்லையா இன்று? அல்லது ஏதாவது குறைந்த அளவில் ஆவது கடவுள் வழிபாட்டை நிராகரிக்கிறார்களா மக்கள்?
          தமிழ்நாட்டில் முட்டிதடக்குப்பட்டு விழுந்தாலும் ஏதாவது ஒரு கோவிலிலே தானே விழவேண்டியதாக இருக்கிறது?

          க.கைனா! நான் மேதையோ அறிவாளியோ அல்ல.உங்களைப் போல ஒருசாதாரண மனிதன் தான் நானும்.

          வரலாற்று நியமம் இன்று இந்தியா அரசியலை இந்தியாவுக்குள் மட்டும் தீர்கக முடியாது என்கிற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.இந்தியாவும் சர்வதேச நிதியக்கட்டுப்பாடு சட்டத்திற்கு உட்பட்டது. இதுவே உலகமயமாக்கலின் உச்சநிலை.

          இந்தியாவில் ஏற்படப்போகிற கிளர்ச்சிகளிலும் பார்க்க ஐரோப்பா-அமெரிக்கா கிளர்ச்சிகள் முன்சென்று கொண்டிருக்கும்.

          இதில் சர்வதேசியத்தை நிராகரிப்பதும் தமிழ்நாட்டு பெரியார்-இசத்துக்குள் பதில் தேடுவதும் எங்கனம்?

          நீங்கள் சொல்லுகிற தலித்துக்களின் விடுதலை விகிதப்பங்கீடு கேட்டு இந்தியமுதாலிளித்துவத்திற்கு மனுக் கொடுப்பதல்ல. மாறாக….

          கட்டாயக் கல்வியை கோரி நிற்கிறது. ஆண்டான் அடிமை கொத்தடிமை முறை ஒழிய நிலங்களை சொந்தமாக்க சொல்லி நிற்கிறது. சாதியை அடயாளப்படத்தும் குலத்தொழில் முறை ஒழிய தொழில்கல்வியை வேண்டி நிற்கிறது.

          ஆகமொத்தத்தில் இந்தியபுரட்சியை நடத்தவதற்கு இந்திய பாட்டாளிவர்க்கம் தன்னை தயார்படுத்துகிறது என்று தான் நான் சொல்வேன்.

          அதில் சமூகவெறியையே அடித்தளமாக கொண்ட பெரியார்யிசத்தில் என்ன தேடல் வேண்டிருக்கிறது.

          ஆகவே இந்தியதொழிலாளர்களே! சர்வதேச தொழிலாளவர்கத்தின் கையை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்!

          அனைத்துலக குழுவால் தலைமைதாங்கப்படும் நான்காம் அகிலத்துடன் சேர்ந்து பணியாற்ற வாருங்கள் என்று தான் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன் திரு.க.கை அவர்களே!.

          • தோழர்களுக்கு,

            நம்மிடையே ஒரு ஓநாய் அலைந்து கொண்டிருக்கிறது. பனம்பழம் தானாக விழும் என்று தன் வளையில் முடங்கிக்கிடக்காமல் இப்படியேன் ஒரு பெரியாரை ஒருமையில் தூற்றிக்கொண்டு அலைய வேண்டும்?

          • அன்புள்ள வினவு,

            பெரியார்களை ஒருமையில் தூற்றும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதே நல்லது. அதற்கு வேறு இடங்கள் இருக்கலாம். அங்கே போகட்டும். வினவில் அது முடியக்கூடாது. இது கடினமான வேலைதான். முடிந்த வரை முயலவும்.

            நன்றி.

          • தோழர்களுக்கு,

            இந்த ஓநாய்க்கு ஏன் பெரியாரின் மேல் இவ்வளவு வன்மம் இருக்க வேண்டும்? பொதுவுடமை சமூகம் உருவாவதற்கு அவர் எவ்வாறு தடையாக இருந்தார். பழுத்திருந்த அந்த தென்னம்பழத்தை விழாமல் கட்டிப் போட்டுவிட்டாரா? இதற்கு பதில் கூறுவதற்கு முயலுமா இந்த மா.ஓ.

            பெரியாரின் பங்கை சிறுமைப் படுத்துவதற்கு எவ்வளவு கெட்ட எண்ணம் வேண்டும்?

            • ஆண்டான் அடிமை என்கின்ற பொதுவுடைமை கண்ணோட்டத்தை மாற்றி
              குற்றவாளி பார்பனர்கள்,அப்பாவி ஆதிக்க சாதிகள் , ஒடுக்கப்பட்ட சாதிகள் என்று சமுதாயத்தை வேறு விட்தமாக திருப்பிவிட்டார் என்பதே மாவோவின் ஆதங்கம் .

              சுரண்டுபவர்களை நோக்கி தொழிலாளிக்கு வரவேண்டிய கோபம் திசை திரும்பி பார்பனர்கள் என்று சமூக வெறுப்பாக மாறியிருப்பது அவரை எரிச்சல் அடைய செய்து இருக்கும்

              கற்றது கையளவு போல ஆரோகியமாக விவாதம் புரியாமல் , என்னுடைய கடவுளை எப்படி குறை சொல்லலாம் என்கின்ற உங்கள் மனோபாவத்தை பெரியாரும் விரும்ப மாட்டார்

              • மாவோ மற்றூம் இராமன் அவர்களுக்கு

                \\ஆண்டான் அடிமை என்கின்ற பொதுவுடைமை கண்ணோட்டத்தை மாற்றி
                குற்றவாளி பார்பனர்கள்,அப்பாவி ஆதிக்க சாதிகள் , ஒடுக்கப்பட்ட சாதிகள் என்று சமுதாயத்தை வேறு விட்தமாக திருப்பிவிட்டார் என்பதே மாவோவின் ஆதங்கம் .\\

                இதில் பல தவறுகளும் சந்தர்ப்பவாதங்களும் உள்ளன. முதலில் மாவோவின் பெரியார் மீதான தனிமனித தாக்குதல் சுயசாதிப்பற்றேயன்றி அதில் வர்க்கசாயமோ அல்லது கம்யுனிசோ புரிதலோ கிடையாது. மாவோ வைத்த முதல் வாதம் ரசியாவில் போல்விஸ்க் தலைமையில் புரட்சி நடந்த பொழுது இங்கு அது நடக்கவில்லை என்பதன் அடிப்படையில் பெரியார் வர்க்கப்போராட்டத்தை நிராகரித்தார் என்ற தட்டையான புரிதலை முன் வைக்கிறார். ஆனால் நிதர்சனத்தில் அவருக்கு இருப்பது தட்டையான புரிதல் அல்ல! இது வேண்டுமென்ற ஜீவஆதாரமான பிரச்சனைகளை புறக்கணித்துவிட்டு தன் கருத்துக்கு கம்யுனிசத்தை நாடுகிற வழைமையான சந்தர்ப்பவாத போக்கு ஆகும்.

                இந்திய சமூகத்தின் வரலாற்று நிலைமகளில் நிலவுடமைச் சமுதாயமும் தரகுமுதலாளித்துவ மறுகாலனியாதிக்க கொள்கைகளும் இன்றும் பார்ப்பனீயத்தின் கொடையிலேயே தான் வாழ்ந்துவருகின்றன. அதை எதிர்க்கிற எந்தவொரு போராட்டங்களும் நமக்கு அவசியமான ஒன்றே. இதே மாவோ அவர்கள் பிறிதொரு பின்னூட்டத்தில் மதத்தை அரசியலில் இருந்து பிரித்துவிட வேண்டுமென்று ஆணித்தரமாக கூறியவர். ஆனால் உண்மை என்ன? மதம் என்பதே அழுகி நாறும் முதலாளித்துவத்திற்கு முட்டுக்கொடுக்கும் வன்முறையான முயற்சி என்பது வரலாறு சொல்கிற தத்துவம். இதனால் தான் பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் கிறித்துவம் அரசாளும் மதமாக இருந்து மக்களை அடக்கி ஒடுக்கியது. இதற்கு மாவோவின் பதில் என்ன?

                பார்பனியத்தின் உயிர்நாடியே மக்களை பிரித்தாள்வது தான். அதை எதிர்க்கிற போராட்டங்கள் பெரியாரல் நடத்தப்பட்டது என்றால் தற்போதைய ஆளும்வர்க்கத்தை முறியடிப்பதற்கு பெரியாரின் போராட்ட வடிவங்கள் எல்லாவிதத்திலும் நமக்கு பயன்படுமேயன்றி இவை எப்படி வர்க்கபோராட்டத்தில் இருந்து திசை திருப்பும் என்பதை மாவோவும் இராமனும் விளக்க முற்பட வேண்டும்.

                நிதர்சனம் என்னவென்றால் பெரியாரின் போராட்டங்கள் ஆதிக்க சாதிகளுக்கு சகிக்க முடியாத அளவு ஆத்திரத்தை வரவைக்கிறது. அவர்களால் இது போன்ற போராட்டங்களை துளியும் பொறுத்துக்கொள்ள இயலுவதில்லை. ஒன்று இவர்கள் சாதிய மதத்தின் நிழலில் வேர்பிடித்துவாழ்கிறவர்களாக இருக்க வேண்டும் அல்லது சாதி மத கொடூரங்களுக்கு அப்பாற்பட்ட உலகில் சீவீத்திருக்க வேண்டும். இரண்டாவது சாத்தியமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

                சரி, அவர்கள் வழிக்கே வருவோம். பார்ப்பனியத்தை எதிர்க்காத வர்க்கப்போராட்டம் என்ற ஒன்று இருக்கமுடியுமா? சில வரையறைகளை முன்வைப்போம். ஏகாதிபத்தியம் சேர்த்திருக்கிற நிதிமூலதனத்தின் ஒருபகுதி, மக்களை பிழைப்புவாதிகளாக மாற்றுவதற்கு பயன்படுகிறது என்று வரையறுத்திருக்கிறது லெனினியம். அப்படியானால் இந்தியாவில் பிழைப்புவாதத்தின் கூறுகள் என்ன? ஒருகாலத்தில் மக்கள் திரளிற்கு விழுமியங்கள் மற்றும் கொள்கைகள் உண்டு. இன்றைக்கு அவைகள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. அதற்குப்பதிலாக பிழைப்புவாதம் நீக்கமற அங்கிங்கிணாதபடி இருக்கின்றன. இதற்கு மாறாக இனவாத, மதவாத அரசியல் கோலோச்சுகிற பாசிச காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். மாவோ நினைப்பதை போல வர்க்கபோராட்டம் ஒருவழிப்பாதை அல்ல. இது பலமுனைத்தாக்குதல்!!!!

                இரண்டாவதாக இதே மாவோ அவர்கள் முன்வைக்கிற மற்றொருவாதம் பெரியாரின் போராட்டங்கள் எடுபட்டிருந்தால் இன்றைக்கு ஏன் மக்கள் மதசகதிக்குள் விழுந்துகிடக்கிறார்கள் என்பதாகும். அதே சமயத்தில் மறுபுறத்தில் பாட்டாளிகளின் வர்க்க ஒன்றிணைவை முன்வைக்கிறார். பார்ப்பதற்கு அலங்காரமான வாதமாக இருந்தாலும் உள்ளே இருப்பது மாவோவின் இரட்டை நாக்கு மட்டுமே. ஒரு எடுத்துக்காட்டு மூலமாக விளக்குவோம். இந்திய இரயில்வேயில் மஸ்தூர் யுனியன் பார்ப்பன சனாதினிகளின் கூடாரமாக இருக்கிறது. பணி நிரந்தரம், மருத்துவம், பிஎப், போனஸ் போன்ற கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் தினமும் காலை-வழிபாடு நடத்தவேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ஒருசங்கம் மதத்தை வைத்து தொழிலாளர்களை காவுகொடுப்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மாவோவின் பதில் என்ன? பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை கட்டியமைக்காமல் இதிலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பது எப்படி?

                இதே தமிழக நிலைமகளில் ஆட்டோ சங்கங்களில் இருந்து பல்வேறு சாதிச்சங்கங்கள் இருக்கின்றன. இவையும் பார்ப்பனிய-முதலாளித்துவத்தின் கள்ளக்கூட்டின் விளைவுகள் தான். சத்திரிய சாதிப்பெருமை பேசாதீர் என்று வன்னியர்கள் கூட்டத்திலே நறுக்கென்று கொட்டியவர் பெரியார். ஆனால் இன்றைக்கு ராமதாசுக்கு அதுதான் தொழில் மூலதனம். யார் காரணம்?

                வணிகர் சங்கத்தின் ஒருபகுதி இன்றைக்கு மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கிற பொழுது அதே வணிகர் சங்கங்களின் மற்றொரு பகுதி இந்துத்துவ அரசியலுக்கு பலியாகிருக்கிறது. ஆர் எஸ் எஸ்ஸின் கூடாரமாக பல சாதிச் சங்கங்கள் மாறிப்போயின. பாரதிய கிசான் சங்கம் என்ற பெயரில் விவசாயிகளையும் ஆர் எஸ் எஸ் விட்டுவைக்கவில்லை. நடைமுறையில் இதை முறியடித்து பாட்டாளிகளின் வர்க்க உணர்வை எப்படி கட்டமைக்க முடியும் என்பதற்கு மாவோ அவர்கள் பதில் சொல்லவேண்டும்?

                தான் பார்ப்பனர் என்ற ஒற்றைக்காரணத்திற்காக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தான் தற்பொழுதைய நிலைமை. இது அவதூறு எனில் மேலே நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு மாவோ அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

                • //பார்பனியத்தின் உயிர்நாடியே மக்களை பிரித்தாள்வது தான். அதை எதிர்க்கிற போராட்டங்கள் பெரியாரல் நடத்தப்பட்டது என்றால் தற்போதைய ஆளும்வர்க்கத்தை முறியடிப்பதற்கு பெரியாரின் போராட்ட வடிவங்கள் எல்லாவிதத்திலும் நமக்கு பயன்படுமேயன்றி இவை எப்படி வர்க்கபோராட்டத்தில் இருந்து திசை திருப்பும் என்பதை மாவோவும் இராமனும் விளக்க முற்பட வேண்டும் //

                  பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி

                  இந்த வாக்கியங்கள் மக்களை பிரிதாலவில்லையா ? பாரபனத்தை எதிக்க பார்பனதையே பயன்படுத்தலாமா ?

                  என்னுடைய பார்வையில்

                  ” பார்பனீயம் எனபது, இந்த சாதி மக்கள் குணம் எல்லாம் இப்படித்தான் . அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்கள் ” என்று வரையறை செய்வது .

                  “”பார்பனர்கள் எல்லாம் இப்படிதான் .அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்கள் ” என்று பெரியார் வரையறை செய்தார் .

                  மேற்கண்ட இரண்டு வாக்கியங்களுக்கும் வித்தியாசம் இல்லை . பார்பனர்களின் அதே ஆயுதத்தை பெரியாரும் பயன்படுத்தி உள்ளார் .

                  அடுத்து நான் ஏற்கனவே கூறியபடி , ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு வழங்கினார் .
                  இன்றைக்கு வெள்ளாளர்களும் தேவர்களும் எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் ? அவர்களுக்கு எப்படி உதவி கேட்கும் தைரியம் வந்தது ?

                  ஆகவே அணைத்து சாதி பிரச்சினைகளுக்கும் பார்பனர்கள் மட்டும் காரணம் எனபது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் . மற்ற ஆதிக்க சாதிகளுக்கு குற்ற உணர்ச்சியும் இல்லை , குற்றத்தை கைவிடும் அவசியமும் இல்லை .

                  மதம் தனிவுடைமை வாதிகளின் ஆயுதம் என்கிறீர்கள் . எய்த சுரண்டல்காரர்களை விட்டுவிட்டு ஆய்தத்தை அடிப்பதால் பலன் உண்டா ?

                  இலவசமாக நிலங்களில்/வீடுகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டனர் . அந்த தேவையை பார்பனீயம் பூர்த்தி செய்தது . அதனால் இலவச கூலி ஆட்களை பெற்ற வெள்ளலர்களும் , தேவர்கள் மீதும் வரவேண்டிய இயல்பான கோபத்தை திசை திருப்பி விட்டதோடு அல்லாமல் , இந்த ஆதிக்க சாதிகள் பார்பனர்களை திட்டிக்கொண்டு தனக்ளுக்கும் சாதிகொடுமைக்கும் சம்பந்தம் இல்லை எனபது போல உலாவருகிறார்கள் .

                  மதவாதிகள் மற்றும் சுரண்டல்காரர்களின் கூட்டணியில் , மதவாதிகளை மட்டும் குறிவைத்தார்

                  • Raman,

                    “”பார்பனர்கள் எல்லாம் இப்படிதான் .அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்கள் ” என்று பெரியார் வரையறை செய்தார் .

                    தவறு. அவர் பார்ப்பனர்களின் மற்றும் பார்ப்பனியர்களை தலைமையில் கொண்ட சமூக கட்டமைப்பின் அநீதிகளை சுட்டிக்காட்டினார். விதிவிலக்குகள் எங்கும் உண்டு. பேசும் ஒவ்வொரு வரியிலும் Disclaimer போட்டுப் பேச முடியாதல்லவா. அவரின் சில வரிகள் பஞ்ச் டயலாக்குகளாக மாறிவிட்டதற்கு அவற்றில் இருந்த பொருள் தான் காரணம்.

                    //ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு வழங்கினார் .//

                    தவறு. இது மொன்னையான புரிதல். இந்தியா முழுவதிலும் அதிகாரம் படைத்த மற்றும் தன்சாதித் தொடர்புகளைக் கொண்ட ஒரே ஆதிக்க சாதி பார்ப்பனர்கள் தான். அதனாலேயே அவர்களைப்பற்றி விகிதாச்சாரத்தில் பேச வேண்டியதாயிற்று. ஆரிய திராவிட சமத்துவத்தைப் பேசிய அவர் திராவிடர்களுக்கிடையேயும் சமத்துவத்திற்காக பேசியிருக்கிறார் என்பது உறுதி. பேசவில்லை என்பது மோசடியான வாதம்.

                    //வெள்ளாளர்களும் தேவர்களும் எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் ?//

                    இது ஒதுக்கீடு என்பதை விட பங்கீடு என்பதே சரி. பங்கீட்டில் உச்ச வரம்ப என்பதுதான் மோசடி. எல்லா குழுக்களும் தங்கள் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு தங்கள் பங்கீட்டைப் பெறுவது தான் சமத்துவத்திற்கு வழி, அது அல்லது அதற்கு நிகரான ஒரு பங்கீடு நிகழும் வரை நமது தெருக்கள் சாக்கடைகளாகவும் குப்பை மேடாகவும் ரப்பிஷ் இறைந்ததாகவும் குண்டும் குழியுமாகத்தான் இருக்கும்.

                    //இலவச கூலி ஆட்களை பெற்ற வெள்ளலர்களும், தேவர்கள் மீதும் வரவேண்டிய இயல்பான கோபத்தை திசை திருப்பி விட்டதோடு….//

                    இன்று பார்ப்பனர்கள் ஒரு முக்கியமான நிலவுடைமையாளர்களாக இல்லாதது போல தோற்றமளிக்கிறது. ஆனால் பெரியார் காலத்தில் நிலமை வேறு. வெள்ளாளர்களை விட அதிகமான நிலங்களை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் தான் இவர்கள். பெரும்பாலும் அரசாங்க பணிகளில் அமர நகரத்திற்கு குடி பெயர்ந்துவிட்ட இவர்கள் நிலச்சீர்த்திருத்ததிற்கான போராட்டங்களுக்கு பயந்து அவசர அவசரமாக தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த நிலங்களை விற்றுவிட்டவர்கள் தான் இவர்கள். இன்றைய நிலையில் இருந்து பார்த்தால் பெரியாரின் அனுகுமுறை முரண்பாடுடையதாகத் தோன்றலாம்.
                    அவர் ஆதிக்க சாதிகளிடன் பறையன் பட்டம் போனால்தான் சூத்திரப் பட்டம் போகும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களின் மற்றும் சூத்திரர்களின் பங்கைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். தலித் மக்களின் கோபத்தை யாரும் திசைதிருப்பி விடமுடியாது. அவர்கள் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பதிலுக்குப் பதில் என்ற அளவில் சமமாக போரடும் நிலையில் என்றும் இருந்ததில்லை. நாளை அந்நிலை வரலாம். ஆனால் நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. அவர்களுக்கு உதவியாக மற்ற சமத்துவ சக்திகள் போதிய அளவில் திரளாத வரையில் நிலைமை நீடிக்கவே செய்யும்.

                    //எந்த போர்டும் மாட்டாமல் காலில் செருப்போடு கடைக்குள் வரகூடாது என்பதை எதிர்த்து கேட்டுவிட முடியுமா ?//

                    கருப்பு மற்றும் செஞ் சட்டைக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கைக் குறைவு என்பது இவர்களின் குறையில்லை. இது இந்த இந்திய சமூகத்தின் இழிநிலை.

                    • // ஒரே ஆதிக்க சாதி பார்ப்பனர்கள்//

                      ஒரே போடா போட்டுடீங்க , இதைதான் பெரியாரிசத்தின் தோல்வி என்று கூறிகிறேன்

                      //இது ஒதுக்கீடு என்பதை விட பங்கீடு என்பதே சரி//

                      நிலத்தை பங்கு போடுங்க! தொழிலை பங்கு போடுங்க

                      //ஆனால் பெரியார் காலத்தில் நிலமை வேறு. வெள்ளாளர்களை விட அதிகமான நிலங்களை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் தான் இவர்கள்//

                      புள்ளி விவரப்படி நிரூபியுங்கள் …. உங்கள் மன வெறுப்பின் படி அல்ல

                      //அவர் ஆதிக்க சாதிகளிடன் பறையன் பட்டம் போனால்தான் சூத்திரப் பட்டம் போகும் என்று வலியுறுத்தியிருக்கிறார்//

                      I dont agree. And the results dont agree

                    • Raman,

                      //ஒரே போடா போட்டுடீங்க//

                      இந்தியா முழவதும் எங்கும் குறிப்பிட்ட அளவு பரவியுள்ள ஒரே சாதி பார்ப்பனர்கள் தான். வேறு எந்த சாதியும் அந்த அளவுக்கு பரவவில்லை. பனியாக்களின் பரவல் முந்தையவர்களின் பரவலுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு குறைந்தது மற்றும் அன்மைக்காலத்தியது. எந்த பார்ப்பனரும் இந்த கருத்தை மறுக்கமாட்டார். நான் இவ்வாறு சொல்வதை நீங்கள் பெரியாரிசத்தின் தோல்வி என்று ஏன் கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

                      //புள்ளி விவரப்படி நிரூபியுங்கள் …. உங்கள் மன வெறுப்பின் படி அல்ல//

                      பல்வேறு வகையில் பார்ப்பணியம் சமூகத்தின் கழுத்தில் கட்டிய அரவைக்கல்லாக இருப்பதால் நான் அதை வெறுப்பது உண்மைதான். அதற்காக பொய்த் தகவல்களை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. புள்ளி விவரங்கள் தலைமைச் செயலக தீயில் சாம்பலாகிவிட்டிருக்கலாம். வேறு ஆதாரங்களைத் தான் தேடவேண்டும். நாட்கள் ஆகும். அதுவரை நீங்களும் விசாரியுங்கள். கோயில் நிலங்கள் பெரும்பாலும் அவர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்தது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஜமீன்தார்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சில இடங்களில் கோயில் சிலையின் பெயரில் எழுதப்பட்ட மற்றும் தானமாக எழுதித் தரப்பட்ட நிலங்களைக்கூட தங்கள் குழந்தைகளுக்கு அதே பெயரை சூட்டி தமதாக்கிக் கொண்டுமிருக்கிறார்கள்.
                      இதைப்பற்றியெல்லாம் நான் படித்திருக்கிறேன். எங்கெங்கே என்பது கூட நினைவில் இல்லை. இதற்கெல்லாம் உடனே ஆதாரம் தரும் நிலையில் நான் இல்லை. ஏதேனும் கொடுக்க முயற்சி செய்கிறேன். மறுக்கும் நிலையில் அவர்களும் இல்லை.

                      //And the results dont agree//

                      என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

                      //கொங்குதேர் வாழ்க்கை //

                      வடமொழி செய்யுள்களும் இது போன்ற புரியாத புதிர்கள் தான். உலகமெங்கும் இதே கதைதான். நமது மொழியில் உள்ள எல்லாவற்றையும் நம்மால் கற்க முடியாது. அவரவர் தங்கள் பழமையை சிறிதேனும் தெரிந்து கொள்வதே நல்லது. அது நமக்கு நமது மொழியில் ஏற்படும் பரிணாமத்தை சிறிதேனும் புரிந்து கொள்ள உதவுகிறது.

                • // இந்திய சமூகத்தின் வரலாற்று நிலைமகளில் நிலவுடமைச் சமுதாயமும் தரகுமுதலாளித்துவ மறுகாலனியாதிக்க கொள்கைகளும் இன்றும் பார்ப்பனீயத்தின் கொடையிலேயே தான் வாழ்ந்துவருகின்றன. //

                  பார்ப்பனீயத்தையும், நிலவுடமைச் சமுதாயத்தையும் தகர்க்க வேண்டுமென்றால் நிலச்சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது.. மேலே நண்பர் மாவோ சரியாகவே சொன்னார்.. இன்றுவரை பெரியாரின் ரசிகர்கள் நிலச்சீர்த்திருத்தத்தை ஏன் வலியுறுத்துவதில்லை..?! களி தின்ன வேண்டியிருக்கும்.. பார்ப்பானின் பூணூலில் ஊஞ்சல் ஆடி புரட்சி கீதம் பாடும் சுகம் இருக்காது..

                  • விவரம் தெரியாம பேசாதீங்க அம்பி.

                    நிலச்சீர்திருத்தத்தை பெரியாரின் ரசிகர்கள் வலியுறுத்தவில்லை என்று கேள்வி கேட்டால் பெரியார் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றாகிவிடுமே அம்பி!

                    ஏனெனில் மூன்றுவேதம் கற்ற திரிவேதி பார்ப்பான்களுக்கும், நான்கு வேதம் கற்ற சதுர்வேதி பார்ப்பான்களுக்கும் பல சொத்துக்கள் சோழன் காலத்திலேயே எழுதிவைக்கபட்டிருக்கின்றன. காஞ்சி மடத்தின் கையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள், சங்கர நேத்ராலாயா பேரில் பலகோடி சொத்துக்கள், தீட்சிகர்களும் வாண்டையாரும் தில்லை நகர் என்று ரியல் எஸ்டேட் மூலமாக பலகோடிகளை சுருட்டிய அயோக்கியர்கள் என்று பார்ப்பனர்களின் சொத்துப்பட்டியல் நீள்கிறதே அம்பி.

                    பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதை இன்று நாம் கேட்காமல் இருந்ததால் தானே ஆடிட்டர் சங்கரராமனும் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். கடைசியில் பார்ப்பான் தானே பார்ப்பானாக் கொன்னான்.!!!

                    சொல்லப்போனால் ஜெயந்திரேன் போன்ற ஆட்களிடம் உங்களைப் போன்றவர்கள் பொறுக்கித்தின்னும் கைக்கூலியாக இருப்பீர்கள் போல இருக்கிறது. மானம் ரோசம் இருந்தா காஞ்சி மடத்தின் சொத்துக்களை கைப்பற்ற போராட வரவேண்டியதுதானே அம்பி! அதைவிடுத்து இப்பொழுது பெரியாரின் மயிரை பிடித்து தொங்குவதற்கு கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லையா?

                    • // நிலச்சீர்திருத்தத்தை பெரியாரின் ரசிகர்கள் வலியுறுத்தவில்லை என்று கேள்வி கேட்டால் பெரியார் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றாகிவிடுமே அம்பி! //

                      ஆகட்டுமே தம்பி.. பார்ப்பனர்களுக்கு’ம்’ ஆதரவாக இருந்தார் என்று இருக்கவேண்டும்.. பார்ப்பனர்கள் பூசாரித் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்கள் செய்து கோடீஸ்வரர்கள் ஆனாலும் எனக்கு சந்தோசமே என்று கூறிய பெருந்தனக்காரர்..ஙே.. பெருந்தன்மையாளர்தான் பெரியார்.. எனவே பார்ப்பனர்களும் நிலத்தை இழப்பார்களே என்று நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்..

                      // ஏனெனில் மூன்றுவேதம் கற்ற திரிவேதி பார்ப்பான்களுக்கும், நான்கு வேதம் கற்ற சதுர்வேதி பார்ப்பான்களுக்கும் பல சொத்துக்கள் சோழன் காலத்திலேயே எழுதிவைக்கபட்டிருக்கின்றன. காஞ்சி மடத்தின் கையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள், சங்கர நேத்ராலாயா பேரில் பலகோடி சொத்துக்கள், தீட்சிகர்களும் வாண்டையாரும் தில்லை நகர் என்று ரியல் எஸ்டேட் மூலமாக பலகோடிகளை சுருட்டிய அயோக்கியர்கள் என்று பார்ப்பனர்களின் சொத்துப்பட்டியல் நீள்கிறதே அம்பி.//

                      எவ்வளவு நீண்டாலும் பார்ப்பனர்களிடம் மட்டும்தான் எல்லா விவசாய நிலங்களும் இருந்தன/இருக்கின்றன என்று நீங்கள் நம்பத் தொடங்கியிருக்கமாட்டீர்கள் என எண்ணுகிறேன்..

                      // பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதை இன்று நாம் கேட்காமல் இருந்ததால் தானே ஆடிட்டர் சங்கரராமனும் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். கடைசியில் பார்ப்பான் தானே பார்ப்பானாக் கொன்னான்.!!! //

                      முதலில் பெரியார் அடித்தாரா..?! ராஜாஜி கையிலும் தடி இருந்தது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.. இரண்டு பேர் தலையிலும் கொப்பளங்களோ/புடைப்புகளோ அவ்வப்போது தென்பட்டனவா என்பதும் சிந்திக்கத்தக்கது..

                      // சொல்லப்போனால் ஜெயந்திரேன் போன்ற ஆட்களிடம் உங்களைப் போன்றவர்கள் பொறுக்கித்தின்னும் கைக்கூலியாக இருப்பீர்கள் போல இருக்கிறது. //

                      உங்களிடமிருந்து இத்தகைய கண்டுபிடிப்புகளை எதிர்பார்க்கவில்லை..!

                      // மானம் ரோசம் இருந்தா காஞ்சி மடத்தின் சொத்துக்களை கைப்பற்ற போராட வரவேண்டியதுதானே அம்பி! //

                      என்னை ஏன் அழைக்கிறீர்கள்.. எனக்குத்தான் 10000000 ஏக்கர் நிலம் இருக்கிறதே..!!!! அதில் 5000000 ஏக்கரை காஞ்சி மடத்துக்கு கொடுத்திருக்கிறேன்..!!! தமிழகத்தில் இப்போது யாரிடமும் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இல்லை.. இல்லை இருக்கிறதா..?!

                      // பெரியாரின் மயிரை பிடித்து தொங்குவதற்கு கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லையா? //

                      நன்றாக யோசித்து பதிலளியுங்கள், தோழர்.. இல்லையெனில் இந்தக் கேள்வி உங்களுக்குத்தான்..

                  • அம்பி அவர்களே,

                    பார்ப்பனிய எதிர்ப்பாளரான பெரியாரை, பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டும் சுருக்குவது என்பது சாதிப்படிநிலைக்கெதிரான பெரியாரின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம் தான். பெரியாரை நேரடியாக எதிர்கொள்ள வக்கில்லாமல், தலித் ஆதரவு போன்று பாசாங்கு செய்து கொண்டு பெரியாரை அவதூறு செய்கிறார்கள் பார்ப்பனர்கள். இதற்குப் பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது..

                    • பகத் அவர்களே, நான் செய்வது பாசாங்கோ, தேவாங்கோ.. ஆனால் உங்களிடம் பதில் இல்லை என்பது தெரிகிறது..

                  • அம்பி,

                    // பெரியாரின் ரசிகர்கள் நிலச்சீர்த்திருத்தத்தை ஏன் வலியுறுத்துவதில்லை..?!//

                    நிலச்சீர்த்திருத்தத்தை வலியுறுத்தினால் களி கிடைக்காது என்கௌன்டர் தான் கிடைக்கும் என்பது தெரியாதா இல்லை தெரியாததைப் போல நடிக்கிறீரா. உமது கேள்விக்கு பெரியாரே பதில் கூறியிருக்கிறார். அவர் கருப்புச்சட்டைக்காரர்களை தியாகிகளாக்க விரும்பவில்லை. சமூகத்தில் தங்களால் முடிந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தவே கேட்டுக்கொண்டார்.

                  • //இன்றுவரை பெரியாரின் ரசிகர்கள் நிலச்சீர்த்திருத்தத்தை ஏன் வலியுறுத்துவதில்லை..?!//
                    அம்பி தான் ஒரு அரைவேக்காடு என்பதைதான் மீண்டும் நிருபீக்கிரார்! மானில காங்கிரஸ் அரசுநில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என சட்டமியற்றியது! அதற்கு முன்பே இத்தகைய சட்டம் வரப்போதை உணர்த்தி பார்ப்பனமடங்களுக்கும், வேத பாடசாலைகளுக்கும் எழுதி வாங்கினர்! ஒரு சிலரே தனியாக கல்வி அறக்கட்டளை அமைத்து கல்விக்கொடை நல்கினர்! பின்னர் வந்த தி மு க ஆட்சியில் உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக குறைக்கப்பட்டதும், அப்போது மத்திய அரசிலிருந்த புண்ணியவான் வெங்கட்ராமன் அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்காமல் பார்த்துகொண்டதும், சட்டசபையில் அதைபற்றி மு க விற்கும், மூப்பனருக்கும் சவால் சொற்போர் நடந்தது சரித்திரம்!

                    அம்பிக்கு தான் பாவம் செலச்டிவ் அம்னீஷியா, மற்றவர்களாவது சரித்திரம் அறிந்து சொல்லக்கூடாதா?

                    • உச்சவரம்பு 30-15 ஏக்கர்கள். நிலம் இல்லாதவர்களுக்கு?

                      இங்குதான் பெரியார்தாசர்களின் போலிகள் அம்பலமாகிறது.

                      முதாலித்துவ கோட்பாட்டை உடைக்க இந்தியமுதாலித்துவ எதிராக போராட இந்தியா தொழிலாளவர்க்கத்தை அணிதிரட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை இவர்கள் வடிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

                      “நிலம் இல்லாவர்களுக்கு நிலம்” என போராட்டம் நடத்தினால் அதில் பெருமயளவு நன்மையடைய போகிறவர்கள் தலித்துக்கள் தான் என்பதையும் அறிவார்கள்.

                      தலித்துக்களுக்கு நிலம்கிடைத்தால் ஆயிரக்கணக்கான வருடங்களாக தொடர்ந்துவந்த கொத்தடிமை முறை ஒழிந்து விடும் எனவும் பயப்படுகிறார்கள்.

                      ஒழிந்தால்…திராவிடம் கதைத்து மொழிகதைத்து பார்ப்பணியம் கதைத்து அரசியல் செய்யமுடியாதே..!

                      இங்குதான் பெரியார்கண்ட திராவிடம் ஊன்றுகோல் இல்லாமல் கூனிக்குறுகி நிற்கிறது.குறிப்பாக தலித்திய அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேலும் இருள் சூழ வைக்கிறது.

                      அதிலும் விசேஷச பதிப்பாக பிராமணியசமூகம் முதலாளித்துவத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது எனவும் புதுகதை அளந்து கொண்டிருக்கிறார்கள்.

                    • தலித் மக்களின் பார்வையில் திராவிடத்தை விட பார்ப்பனியம் அருவருப்பானது. பெரியார் மற்றும் அவரின் குறைந்த எண்ணிக்கையிலான வழி நடந்தவர்கள் தலித் மக்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்தார்கள். மா. ஓ. வியந்தோதும் பார்ப்பன சமூகம் தலித் மக்களுக்காக என்ன செய்தது? யார் கூனிக்குறுக வேண்டும்? தங்கள் பங்கிற்காக பார்ப்பனர்கள் கூனிக்குறுகி நிற்கிறார்களா?

                      இவ்வளவு நஞ்சேறியக் கருத்துக்களும் இருக்கமுடியுமா? இவர்களைப் பற்றி பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

                    • // அம்பி தான் ஒரு அரைவேக்காடு என்பதைதான் மீண்டும் நிருபீக்கிரார்! //

                      உனிவெர்புட்டி வெந்த அளவுக்குக் கூட நீங்கள் வேகவில்லையே.. இப்படி இடைவெளியே விடாது நீங்கள் பிதற்றிக் கொண்டே இருந்தால் எப்படி வேகப்போகிறீர்கள் சொல்லுங்களய்யா..

                      // மானில காங்கிரஸ் அரசுநில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என சட்டமியற்றியது! அதற்கு முன்பே இத்தகைய சட்டம் வரப்போதை உணர்த்தி பார்ப்பனமடங்களுக்கும், வேத பாடசாலைகளுக்கும் எழுதி வாங்கினர்! ஒரு சிலரே தனியாக கல்வி அறக்கட்டளை அமைத்து கல்விக்கொடை நல்கினர்! பின்னர் வந்த தி மு க ஆட்சியில் உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக குறைக்கப்பட்டதும், அப்போது மத்திய அரசிலிருந்த புண்ணியவான் வெங்கட்ராமன் அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்காமல் பார்த்துகொண்டதும், சட்டசபையில் அதைபற்றி மு க விற்கும், மூப்பனருக்கும் சவால் சொற்போர் நடந்தது சரித்திரம்!//

                      உங்கள் கக்கத்தில் சுருட்டி வைத்திருக்கும் உச்சவரம்பு சட்டத்துக்கும் ;
                      பினாமிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தேவையா இல்லையா என்ற மூப்பனார்-மு.க. சட்டசபை சொற்போர் வரலாற்றுக்கும் இங்கே விவாதிக்கும் நிலச்சீர்திருத்ததிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியவில்லையா

                      அல்லது

                      நிலசீர்த்திருத்தம் நடந்துவிட்டது, எல்லோரும் போய் பார்ப்பானைத் திட்டுங்க, இனிமேல் அதுதான் புரட்சியில பாக்கி என்று பூ சுத்துகிறீர்களா..

              • Raman,

                // என்னுடைய கடவுளை எப்படி குறை சொல்லலாம்//

                எந்த ஒரு பொதுவுடைமைவாதியும் பெரியாரின் செயல்களை பங்கை சிறுமைபடுத்தி விடமாட்டார்கள். ஒருமையில் தூற்ற மாட்டார்கள். ராமன் லக்குவன் என்று பெயர் வைத்துக்கொண்டு சமத்துவத்தை வெறுப்பவர்கள் அவ்வாறு செய்தால் அதை ஜீரணிக்கலாம். பொதுவுடைமைவாதி போல வேசம் போட்டுக்கொண்டு இவ்வாறு ஊளையிடுவதைத்தான் சகிக்க முடியவில்லை. ஒருமையில் தூற்றுபவர்களிடம் ஆரோக்கியமாக விவாதிப்பது எப்பிடி என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். மா. ஓ. ஒருமையில் பசிய போது நீங்கள் ஆரோக்கியமாக விவாதிக்க சொல்லியிருக்கலாமே.

                //சுரண்டுபவர்களை நோக்கி தொழிலாளிக்கு வரவேண்டிய கோபம் திசை திரும்பி பார்பனர்கள் என்று சமூக வெறுப்பாக மாறியிருப்பது//

                சமூக வெறுப்பாக ஒன்றும் மாறவில்லை. பெரியாரின் போதனையும் அதுவல்ல.

                அன்றைய சூழ்நிலையைப் பற்றி, அன்றைய பார்ப்பணர்களின் ஆதிக்கத்தைப் பற்றி அறியாமல் அவரை அவதூறு பசுவதும் தீய நோக்கத்தில் தான். இன்று பூசாரியாள் மட்டும் என்ற பலகைகள் உணவகங்களில் மாட்டியிருப்பது உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அந்த பலகைகள் பழுத்துத் தானாக உதிர்ந்து விடவில்லை. கறுப்புச்சட்டைக்கார்ரகள் தான் அதை உடைத்தார்கள்.

                பெரியார் பற்றிய விமர்சனங்களுக்கு எல்லாம் அவரே பதில் எழுதியிருக்கிறார். சமத்துவத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் அதைப் படித்துத் தெரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நோக்கம் இல்லாதவர்கள் மட்டுமே ஊளையிட்டுக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் அவரை ஒருமையில் தூற்றுவதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் அமைதியாக இருக்க என்னால் முடியவில்லை.

                • //அன்றைய சூழ்நிலையைப் பற்றி, அன்றைய பார்ப்பணர்களின் ஆதிக்கத்தைப் பற்றி அறியாமல் அவரை அவதூறு பசுவதும் தீய நோக்கத்தில் தான்//

                  அன்றைய காலகட்டத்தில் தொழில்களை பிரிதுகொண்டார்கள் , அதனால் இயல்பாகவே அவைகள் கோவிலில் மனியாடுவதும் , கனகேளுதுவதும் அரசாங்க பணியில் இருந்தார்கள் .
                  வெள்ளாளர்கள் ந்மட்டும் ஏன் அதிக நிலம் வைத்து இருகிறார்கள் என்று சிந்தனை வந்ததா ? வரவில்லை , நமக்கு இன்றைக்குக் அரசாங்க வேலை வேண்டும் , அதனால் நமது கோபம் என்னடா இவங்க அதிகமாக இருகிறாங்க என்று வருகிறது .

                  அதுது நாளை விவசாயம் தான் அதிக சம்பளம் கொடுக்கும் வேலை என்றால் நீங்கள் உடனே , அதை எதிர்பீர்கள் .

                  //இன்று பூசாரியாள் மட்டும் என்ற பலகைகள் உணவகங்களில் மாட்டியிருப்பது உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா/

                  நல்லது . ஆனால் எந்த போர்டும் மாட்டாமல் காலில் செருப்போடு கடைக்குள் வரகூடாது என்பதை எதிர்த்து கேட்டுவிட முடியுமா ? அட ஒரு சினிமா எடுத்துவிட முடியுமா ?

              • இராமன்,

                பார்ப்பனீயம் எங்கெல்லாம் அடிபடுகிறதோ அங்கெல்லாம் முட்டுக் கொடுக்க ஓடோடி வருகிறீர்கள். அல்லது பார்ப்பனியத்தை யாரவது ஆதரித்தால் ஓடோடி வந்து முட்டுக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பெரியாரைப் பற்றி ஏதாவது பேசினால் பதறியடித்துக் கொண்டு ஓடி வருகிறீர்கள். முதலாளித்துவமும் பேசுகிறீர்கள். அறிவியலும் பேசுகிறீர்கள். தாய்மொழிக் கல்வியை எதிர்கிறீர்கள். செத்த மொழியான சமத்கிருதத்தை ஆளும் வர்க்கமே திணிக்கும் போது வாளவிருக்கிரீர்கள். நவயுக ராமனின் தர்மம் இதுவோ.

                • சிவப்பு
                  நீங்கள் ஓரளவு தான் புரிந்து வைத்து இருகின்றீர்கள் . இங்கே என்னுடைய நிலைப்படிர்கான காரணங்களை கூறுகிறேன்.

                  //பார்ப்பனீயம் எங்கெல்லாம் அடிபடுகிறதோ அங்கெல்லாம் முட்டுக் கொடுக்க ஓடோடி வருகிறீர்கள்//

                  பார்பனீயத்தை நான் ஆதரிக்கவில்லை , அதனால் தான் பார்பனர்களை சமூக அளவில் தாக்கி பேசும்போது அதை எதிர்கிறேன் .

                  //ஆனால் பெரியாரைப் பற்றி ஏதாவது பேசினால் பதறியடித்துக் கொண்டு ஓடி வருகிறீர்கள். //

                  பெரியாரை நான் மதிக்கிறேன் . ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தான் நேரேம் ஒதுக்க முடியும் . செயலில் இறங்கி போராடியவரை , காகித புலியாக இணையத்தில் கருத்து மட்டும் தெரிவிக்கும் நிலையில் உள்ள நான் , குறைவாக பேச அருகதை அற்றவன் . அவர் சமுதாயத்தை சற்றே வேறுவிதமாக நடத்தி சென்று இருக்கலாம் என்கின்ற ஆதங்கம் தான் உள்ளது.

                  //செத்த மொழியான சமத்கிருதத்தை ஆளும் வர்க்கமே திணிக்கும் போது வாளவிருக்கிரீர்கள்//

                  இன்கே திணிப்பு ஏதும் இல்லை . இறந்தவர்களின் நினைவு நாள் போல சமஸ்கிருத வாரம். அவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் திணிப்பு . அதை படித்து இருந்தால் தான் வேலை என்று சொன்னால் அது திணிப்பு.

                  ஆனால் செத்துவிட்ட செந்தமிழை (( இங்கே தேரா மன்னா செப்புவதுடையோய் போன்ற இலக்கியங்களை குறிபிடுகிறேன் )) படித்தால் தான் தேர்வு பெற முடியும் எனபது திணிப்பு.
                  அதில் இருந்து தப்பவே மதிய தர வர்க்கம் , மெட்ரிகுலேசன், சி பி எஸ் ஈ என்று ஓடுகிறது . அது மொழி பாசம் உள்ளவர்கள் கண்களுக்கு தெரிவது இல்லை

                  • நினைவு நாளிற்கு தான் 1௦௦ கோடி ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்கிறார்களா?

                  • இராமன்,
                    நான் ஓரளவிற்கு புரிந்து வைத்துள்ளேன் என்றதற்கு எனது நன்றிகள்.

                    முதலில் பெரியார் ஒரு மர்க்சியவதியோ அல்ல முதளித்துவவாதியோ அல்ல. திரு மாவோ அவதூறு செய்வதைப் போல பழுத்துத் தொங்கிய வர்க்க போராட்டத்தை கசக்கிப் போட்டவர் பெரியார் அல்லர்.

                    ஏனெனில் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துவதர்ற்கு உரிய ஒரு பாட்டாளி வர்க்க கட்சி ஒன்று வேண்டும். அது சித்தாந்த ரீதியில் பலமாகவும் இருக்க வேண்டும்.
                    பெரியார் அப்படி ஒன்றும் பாட்டாளி வர்க்க போராட்டத்தை வழி நடத்தி செல்லவில்லை.அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சில திரிபுவாதிகளே அன்று நடந்த தெலுங்கான போராட்டமாகட்டும், நக்சல்பாரி உழவர் எழுச்சியாகட்டும் முனை மழுங்க செய்தனர்.

                    செத்த மொழிக்கு நினைவு நாள் கொண்டாட ஆண்டிற்கு 1௦௦ கோடி தெண்டத்திக்கு செலவு. எவன் ஊட்டு காச எடுத்து எவன் செலவு செய்யறது. சொந்த காசுல வேணும்னா தேவசத்த கொண்டாட வேண்டியது தானே. இப்படி ஊதாரித் தனமா நாதாரித் தனமா செலவுப் பண்றது உங்களுக்கு சாதரணமாப் படுதுன்னா உங்களோட உள்நோக்கம் என்னவென்பது வெள்ளிடைமலை.

                    செத்து விட்ட செந்தமிழை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய தமிழ் மொழி மீதான வன்மத்தை கக்குகிறீர்கள். செந்தமிழ் என்று தமிழானது. தாய்மொழிக கல்வி என்பதை வெறும் செய்யுள் மனப்பாடம் செய்வதாக குறுகிய எண்ணத்தில் தாங்கள் புரிந்து வைத்துள்ளதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.

                    நன்றி.

                    • சம்ச்கிருததிர்காக நூறு கோடி செலவு செய்தால் கண்டிக்கப்பட வேண்டியதே . எல்லா மொழி வெறியர்களும் அத்தான் செய்கிறார்கள் . தமிழுக்கு செம்மொழி மகுடம் சூட்ட ஆன் செலவு நானூறு கோடி ரூபாய் .

                      இரண்டுமே கண்டிக்க தக்கது . ஆனால் முன்னது செலவோடு போச்சு , பின்னது கல்வி கூடத்தில் வந்து கொங்குதேர் வாழ்க்கை என்கிறது .

                      செந்தமிழ் எப்படி தமிழாகும் ? தொண்ணூறு சதவீட்தம் புரியாத , அகராதி இல்லாமல் படிக்க முடியாத ஒன்று எப்படி தமிழாகும் .

                      இதை மனபாடம் செய்யும் நேரத்தில் ஒருவன் ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் . அது பின்னர் வாழ்க்கைக்கும் உதவும்.

                      மொழி பாசம் மத பாசம் போன்றது. மற்ற மதத்தில் உள்ள மூட பழக்க வழக்கங்கள் மூளைக்கு போகும் , ஆனால் தனது மதத்தில் இருப்பது போகாது .

            • பொதுவுடைமையில் பெரியாரின் பங்கு இருந்ததா 🙂 பெரியாருக்கு ஒன்றை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திறன் கிடையாது. அரசியல்வியாதிகளை வைத்து அரசியலே சாக்கடை என்பார். தமிழ் மொழியில் வேலை கிடைக்காது என்றால் அதை காட்டுமிராண்டி மொழி என்பார். ஆண் சோரம் போனால் பெண்ணையும் ஐந்தாறு கட்டிக்கொள்ளச் சொல்வார். கூடுதலாக ரஷ்யா சென்று வந்த பிறகும் ராஜாஜியுடன் கூடிக் குலாவியவர்.

            • தோழர் யூனிவர்படி!

              இந்த இடத்தில் மற்றக் கன்னத்தையும் நான் அமைதியாக திருப்ப காட்ட தயாராக இருக்கிறேன்.

              அதற்காக தங்களின் ஒவ்வொரு பின்னோட்த்திலும் ராமசாமியின் அதாவது உங்களின் “பெரியார்” அவர்களின் ஒவ்வொரு பொன்மொழிகளை பதிவிடுவீராக இருந்தால் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்திற்காக போராடும் வினவுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

              இதுவே தலித்மக்களின் சமூகமாற்றத்திற்கும் (புரட்சிக்கு)செய்யும் கைமாறாகவும் அமையும்.

          • திரு மாவு தந்தை பெரியார் என்ன செய்தார் இந்து கிறிஸ்தவ மத நம்பிக்கைகளிலுள்ள ஓட்டைகளை எடுத்து உறைத்தார் பாமரகளும் புரிந்துகொள்ளும் படி, ஜாதிய ஏற்ற்த்தாழ்வுகளை கண்டிதார் அதற்க்கான் காரணம் இந்து மதம் என்றார் ,மக்களுக்கு அதைப்பற்றிய தெளிவை ஏற்ப்படுத்தினார் சமூக நீதிக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று அதற்க்காக போராடினார் காந்தியை கூட இந்து மததை தூக்கி பிடிப்பவர் என்று சாடினார் அம்பேத்கரின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்தார் அவருடம் சில குறைகள் இருக்கலாம், சொல்லலாம் .அனால் அவரைத்தவிர்த்து விட்டு சமூக விடுதலையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்றால் நீங்கள் பொய்யர் போலியான் கமூனிச வாதி இன்னும் சொல்ல போனா நம்பர் ஒன் டுபாக்கூர்…….

            • மாமா யோசப்பு!

              கிறிஷ்தவ மிஷினரிகள் எல்லாம் திராவிடத்தில் மூடுவிழா நடத்து விட்டு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய்யிட்டாங்களாமே!

              பாமரமக்கள் எல்லோரும் விழிப்படைந்து இராமயாணகதை கேட்பதும் இல்லை கோவிலுக்கு போவதும் இல்லையாமே! உண்மையா மாமா?

              அப்புறம் என்னா! விடுதலைக்கு பிராமணீய கும்மி ஒன்றுதான் பாக்கி. பிடியுங்கா…அது தான் விடுதலை.

              மாமாவுக்கு உடம்பெல்லாம் மூளை.

              • //கிறிஷ்தவ மிஷினரிகள் எல்லாம் திராவிடத்தில் மூடுவிழா நடத்து விட்டு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய்யிட்டாங்களாமே!//
                அமெரிக்கா ஐரோப்பால இருந்து எந்த மிசினரி இப்ப வந்து இருக்காங்க அதவது இந்த கால கட்டத்துல
                //பாமரமக்கள் எல்லோரும் விழிப்படைந்து இராமயாணகதை கேட்பதும் இல்லை கோவிலுக்கு போவதும் இல்லையாமே! உண்மையா மாமா?//
                பாமர மக்கள் யாரு படிக்கிறா ராமாயணகதை உண்மைதான் கோவிலுக்கு போறான் வருடம் ஒரு தடவை மட்டும் அதுவும் திருவிழா சமயத்துல மட்டும் சந்தோசமா இருக்கிறான்
                //அப்புறம் என்னா! விடுதலைக்கு பிராமணீய கும்மி ஒன்றுதான் பாக்கி. பிடியுங்கா…அது தான் விடுதலை.//
                இப்ப நீங்க அடிச்சிட்டு இருக்கும்போது நான் வேற எதுக்கு
                //மாமாவுக்கு உடம்பெல்லாம் மூளை.//
                உடம்பெல்லாம் இருந்தா அதுக்கு பெயர் கொழுப்பு அதுதான் பெரியாரை கண்டபடி திட்ட சொல்லுது அப்புறம் என்னயா மாமா என்று விளிக்க காரனம் நான் உன் தாயின் சகோதரன் இல்லையே மாமா வின் பொருள் வேறு என்றாள் உங்களுக்கு என் மீது ஏன் இந்த கொலை வேறி இல்லை என் வயது என் எழுத்தில் தெரிகிறதா………….

                • //அமெரிக்கா ஐரோப்பால இருந்து எந்த மிசினரி இப்ப வந்து இருக்காங்க அதவது இந்த கால கட்டத்துல//

                  Read Breaking India, they have the correlation. How Vinavu team has an article on Foreign hand through NGOs, similarly there are links.

                  I wont blame them, India should give reservation to Dalith Christians/Muslims/Budhhists/Atheist

                  They were oppressed and they have the right to get our support of society. But our BC community eats their share.

      • //அரசியல் உணர்மையுள்ளவனாக இருந்தால் இந்த மனிதனுக்கு வரலாற்றின் உண்மை புலப்பட்டிருக்க வேண்டும்.// உமக்கு மிகவும் பொருத்தமான வரிகள் மனோ அவர்களே! இந்திய பொதுவுடமைக்கு ஆசைப்பட்டு, பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற தோழர்கள், சிங்கார வேலர், ஜீவா, ஏ எஸ் கே முதலியவர்கள். வட இந்திய பார்ப்பன தலைமையில் இருந்த இடம் தெரியாமல் போயினர்! பார்பன ஆதிக்கத்தில், பொதுவுடமையும் அவாள் பதவி பெறவே! இல்லையென்றால் வரலாற்றில் புகழ்பெற்ற. தோழர் ரணதிவே முன்னின்று நடத்திய போராட்டம் தோல்வியுற்றிருக்குமா?

      • திரு மாவோ,

        முதலில் குருட்டுத் தனமாக பெரியாரை ஏகவசனத்தில் பேசுவதை நிறுத்தி, அவர் எப்படி வரலாற்றுரீதியாக வந்த வர்க்கப் போராட்டத்திற்கு தடையாக இருந்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒருவரை விமர்சனம் செய்வது வேறு பழிப்பது வேறு.

        இந்தியா இன்னும் ஒரு முதலாளித்துவ நாடாகவே மாறவில்லை மட்டுமல்லாமல், இந்த நாட்டின் அரியணையில் மிகவும் பிற்போக்குத்தனமான மதவாதம் தான் அரியனையில் உள்ளது. பார்பனியமும், ஏகாதிபத்தியமும் கூட்டணியில் உள்ளது எனில் எதை விடுத்து எதை எதிர்ப்பீர்?

        பெரியாருக்கு வர்க்கக் கண்ணோட்டமோ, பொருளாதார ரீதியிலான ஒரு அரசியல் கண்ணோட்டமோ இல்லை என்பது உண்மையென்றாலும், ஒரு நிலஉடமை சமுதாயப் பின்னணியில் அந்த சமுதாயத்திற்கே உரிய பிற்போக்குத் தனங்களை குறிப்பாக வருணாசிரமக் கொள்கையை அடித்து நொறுக்குவதில் முன்னணியில் இருந்தவர்.

        வர்க்கப் போரில் எதிரி யார் நண்பன் யார் என்பதை பார்க்கும் பொது பெரியார் எமக்கு நண்பனாகத் தான் தெரிகிறார். பார்ப்பனர் போல் மனிதகுலத்திற்கு நன்மை செய்தவர்கள் யாரும் இல்லை என்று கூறியதில் இருந்து உமக்கு பார்ப்பனீயம் தோழமையாக தெரிகிறது அது எமக்கு எதிரியாகத் தெரிகிறது.அது எப்படி நன்மை செய்தது என்பதுப் பற்றி ஒரு விளக்கமும் நீங்கள் கொடுக்கவில்லை.

        பழந்தின்னு கொட்டைப் போட்ட பொதுவுடைமைவாதிகளே, வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்று கூறிக்கொண்டவர்களே வர்க்கப் போராட்டத்தை முனை மழுங்க செய்து விட்ட பின், அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் பின்வாங்கவே செய்வர். அவர் அன்றைய சமூகதிற்குட்பட்டே வேலை செய்தார் மற்றும் அவர் ஒன்றும் மார்க்சியவாதியல்லவே.

        கேள்விகள்:
        1. பெரியார் எப்படி வரலாற்றுரீதியாக வந்த வர்க்கப் போராட்டத்திற்கு தடையாக இருந்தார்?
        2. பார்ப்பனீயம் எப்படி எந்தவிதத்தில் மனிதகுலத்திற்கு நன்மை செய்தது?
        3. பெரியார் வர்க்கபோருக்கு துரோகம் செய்து விட்டார் என்று கூறிய உமது நாவு பார்ப்பனீயம் மனிதகுலத்திற்கு நல்லது செய்தது என்று கூறியது. வர்க்கப் போரில் நண்பன் யார் எதிரி யார் என்பதன் வரையறையில் இதை வரையறுத்துக் கூற முடியுமா?

        நன்றி.

        • ஈரோடு இராமசாமி பெரியாரின் நீதிமன்றத்தில் நிலப்பிரத்துவம்-நிலவுடைமையாளர்கள் அரசர்கள் நாட்டைக் காலணியாக்கிய பிரிட்டீஸ்காரர்கள் அவர்களை எல்லாம் நிரபராதிகளாக்கி விட்டு பிராமணிய சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

          பாட்டாளிவர்கத்திற்கும் அடக்கியாளும் முதலாளிவர்க்கதிற்கும் உள்ள உறவுகளை உழைப்பையும் சுரண்டலையும் கொண்டே விபரிக்க வேண்டுமே ஒழிய ஒருசமூகத்தையே இனத்தையே சாதியடுக்களையோ கொண்டல்ல.

          இதுவே கம்யூனிஸத்தை பொதுவுடமை தத்துவத்தில் ஆர்வம் கொண்டவனுக்கு இருக்க கூடிய குறைந்த ஆரம்ப அறிவு.

          இதில் சிவப்பு இராமசாமி பெரியார் மாக்ஸியவாதி அல்ல என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த அளவில் சிவப்பின் ஒழிவுமறைவு இல்லாத உள்ளத்திற்கு நன்றி.அதாவது பெரியார் கண்ட சமத்துவம் திராவிட மெடல்.

          அதாவது உழைப்பாளி தொழிலாளிகளின் முதல் எதிரி முதலாளித்துவம் அல்ல நிலத்தையும் தொழில்சாலைகளையும் உடமையாக வைத்திருக்கும் பிராமணிய சமூகமே! அந்த சமூகம் எப்படியிருக்கும் என்றால் வயிறு தொந்தி விழுந்திருக்கும்(உண்டு கொழுத்து திண்டு) பூணுல் மாட்டப்பட்டு உச்சிக் கும்பி வைத்திருக்கும். இந்த சமூகம் மாடாயடித்து ஓடாய் தேய்தாலும் இந்த நவீனஉலகத்தில் இதன் வர்ணணை மாறப்போவதில்லை.

          இதைச் சொல்வதுதான் பெரியார்யிசம்.

          சிவப்புவின் அடுத்த வாதம் இந்தியா இன்னும் முதலாளித்துவ நாடாக மாறவில்லை என்பது.

          பில்கேட் இந்தியா பெங்குயூர் வந்தது தனது உதவி ஊழியர்களை சந்திதது அணுக்குண்டை தயாரித்தது உலகின் நான்காவது பெரிய இராணுவமாக இந்தியா பெயர் எடுத்திருபதெல்லாம் இந்தியாவில் உடமையில்லா தொழிலாளர் வர்க்கம் இல்லை. அவர்களுக்கு போர்குணமும் இல்லை. வெறும் கொடுக்குகட்டிய விவசாயிகள் தான்.அதற்கு பிராமணியசமூகமே எதிரி.

          இதுவே பெரியார்யிசம்.

          ஆனால் நாமே! இந்தியமுதாலித்துவத்தை எதிர்ப்பதற்கு இந்தியபாட்டாளிகளின் 99 வீதமான பாட்டாளிகளை அணிதிரட்டி தொழிலாளவர்கத்தை தலைமை தாங்க செய்வதற்கான கடமைப்பாடு உண்டு. இதில் எவ்வளவு தூரம் வெற்றிபெறுவோம் தோல்வியடைவோம் என்பதும் எமக்கு தெரியாது. நம்பிக்கையான பாதை இது ஒன்றே!

          அதற்கு முதல் இனவெறிகளையும் சமூகவெறியர்களையும் மதவெறியர்களையும் ஓரம் கட்டாமல் வர்க்கரீதியில் அணிதிரட்டுவது நடவாத காரியம்.

          இந்தியாவின் அறிவுகூர்மை படைத்த சமூகம் பிராமணிய சமூகம் என்பதில் அன்றும் இன்றும் மாற்றுகருத்து இருந்ததில்லை. இந்தியாவில் சாதுரியமாக சுரண்டலை அடக்கு முறைக்கும் காரணமாக உதவியாக இருப்பவர்களும் அவர்கள் தான். ஒப்பீட்டளவில் மிகமிக எண்ணிக்கையில் குறைந்தவர்களே!இதை விட பலலட்சம் தொகையானவர்கள் முதலாளித்துவ சுரண்டல் வீச்சால் பாதிக்கப்பட்டு உடமையில்லாமல் தெருவில் வீசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

          நாளை இந்தபாட்டாளிவர்கத்தின் முன்னணிபடையாக தலைவர்களாக வரகூடிய சாத்திய கூறு இவர்களுக்கு உண்டு.
          வினவிலும் அதன் அடையாளத்தை காணக்கூடியதாக இருக்கிறது.இல்லையேல் விகடன் குமுதத்திற்கு செய்தி துணுக்கு சேகரிப்பவர்களா அல்லவா? சென்றிருப்பார்கள்.

          எதுஎப்படியாயினும் பெரியார்யிசம் இனம் மதம் சமூகம் கடந்து பாட்டாளிவர்கத்தை அணிதிரட்டுவதற்கு நாசகாரம் செய்வது.அதற்கு வர்க்ககண்ணோட்டமும் இல்லை.வரலாற்று ஞானமும் இல்லை. வெறும் சமூகவெறி பிராமணியத்தைப் பற்றி அசட்டுதனமான கணிப்பு.

          • *dY92u6v9X

            கேள்விகளுக்கு தாங்கள் இன்னும் பதில் வைக்கவில்லை.
            முந்தைய பதிவிலேயே சில கேள்விகள் கேட்டேன். அதற்க்கு தாங்கள் விடையளிக்கவில்லை.

            1)வசூல் ஆகாத கோயில்களில் மணியாட்டும் பார்பனர்கள் என்னவோ சோத்துக்கு வழியில்லாத பாட்டாளிகள் போல தாங்கள் கதைத்தீர்கள். கேள்விஎன்னவேனில் , உண்டியல் தேறாத நிலையில் உடலுழைப்பில் ஈடுபட அவர்களுக்கு என்ன தயக்கம்? மாறாக சோறு போடும் விவசாய வர்க்கம்
            வறுமைக் காரணமாக எலிக்கறித் தின்றும், தற்கொலை செய்தும் கொண்டதே இவர்கள் இருவரும் ஒன்றா?

            2)இந்தியாவின் அரியணையில் பார்ப்பனீய இந்துத்வா அமர்ந்துள்ளது. அது ஏகதிபதியத்துடன் கூட்டு வைத்துள்ளது எனில் எதை விடுத்து எதை எதிர்ப்பீர்.

            இன்னுமொரு கேள்வி.
            3)அன்றும் இன்றும் பார்ப்பனர்கள்/பார்பனிய சமூகம் அறிவாளிகளா? இதற்க்கு ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா? இதில் மாற்றுக் கருத்து உங்களுக்கு வேண்டுமென்றால் இல்லாமல் இருக்கலாம்.
            இது பிறப்பின் அடிப்படையில் இன்று வரை பார்ப்பனீயம் கொழுப்பெடுத்து பேசி வரும் ஒன்றாகும் இதற்கு இந்து மத கண்காட்சில் பேசிய அத்துனை பார்பனர்களும் சாட்சி.
            இதன் மூலம் , சமூகப் பொருளாதாரச் சூழல் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது எனும் மார்க்சியத்தை தான் மறுக்கின்றீர்கள்.

            4)இனவெறியர்களையும்,மத வெறியர்களையும் ஓரம் கட்ட சொல்கிறீர்கள். சுரண்டளிற்கு காரனனமாக இருந்தவர்களும் பார்பனர்களே என்றும் கூரிகிரீர்கள். ஆனால் பார்ப்பனர்கள் முன்னணிப் படைத் தலைவர்களாக வரக் கூடியச் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறுகிறீர்கள். ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறீர்கள்.

            5)வளர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தை முனை மழுங்க செய்தது பெரியாரா இல்லை திரிபுவாதிகளா?
            6) 99 விழுக்காட்டு பாட்டாளிகளை அப்படியே வழிநடத்தி புரட்சி செய்து முதலாளித்துவத்தை/ஏகாதிபத்தியத்தை வென்றெடுக்க முடியுமா? இடையில் கருத்துத் துறையில் எதுவும் செய்யத் தேவையில்லையா?

            7)நிலவுடமைப் பிற்போக்குத் தனங்கள் இன்னும் இந்தியாவில் வேருன்றி இருப்பதர்ற்கு பெரியார் காரணமா இல்லை பார்ப்பனியமா?
            இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய அளவில் நிலவுடை சமூகம் நீண்டதற்கு பின்புலமாக இந்த பார்ப்பனீயம் இருந்துள்ளடு என்பது கண்கூடு. ஏற்கனவேக் கூறியதைப் போல பெரியாருக்கு மார்க்சியக் கண்ணோட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால்
            ஓரடி முன்னோக்கி செல்ல எத்தனிக்கும் சமூகத்தை நான்கடி பின்னிழுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து கருத்தியல் ரீதியாக பெரியார் தொடுத்த பரப்புரைகள் இன்றும் தொடர வேண்டியுள்ளது.

            நன்றி.

          • தோழர்களுக்கு,

            மா. ஓ. வின் விசக்கருத்துக்களின் வீரியம் கூடிக்கொண்டே போகிறது.

            மாடாயடித்து ஓடாய் தேய்ந்த பார்ப்பனர்களும் இருக்கிறார்களாம். அப்படியிருந்தாலும் அது விதிவிலக்கா? பொதுவான நிலையா?

            இந்தியாவின் அறிவுகூர்மை படைத்த சமூகம் பிராமணிய சமூகமாம். எந்த அறிவு என்று கூறவில்லை. சுரண்டலுக்கு அடக்கு முறைக்கு உதவியாக இருக்கின்ற அறிவா? (அம்பேத்கர் இந்த பார்ப்பன அறிவுஜீவிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.)

            ஆனால் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் ஒப்பீட்டளவில் மிகமிக எண்ணிக்கையில் குறைந்தவர்களாம். பலலட்சம் தொகையான பார்ப்பனர்கள் முதலாளித்துவ சுரண்டல் வீச்சால் பாதிக்கப்பட்டு உடமையில்லாமல் தெருவில் வீசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். நாளை பாட்டாளிவர்கத்தின் முன்னணி படையாக தலைவர்களாக வரகூடிய சாத்திய கூறு இவர்களுக்கு உண்டாம். இவர்கள் வராவிட்டால் புரட்சி நடக்கவே நடக்காதா. அப்படிப்பட்ட புரட்சி யாருக்கு வேண்டும்.

            மா. ஓ. வின் தற்போதைய உச்ச விசம். வினவுத் தோழர்கள் கூட பார்ப்பனர்களாம். இல்லையென்றால் அவர்கள் துணுக்குகள் சேகரிக்கப் போயிருப்பார்களாம்.

            இப்படியும் ஒரு பிழைப்பா!

    • நயமிக்க கவிதை வரிகள்!ஆயிரம் பாரத ரத்னாக்கள் அவருக்கு ஈடாகுமா? நன்றி கெட்ட ஜன்மங்களா தமிழர்கள்?

  5. … இவரு வேசம் போட்டாராம், போலீசு தூக்கிடுச்சாம், அப்புறம் விட்டுடூச்சாம், உடனே இவனுங்க புரட்சி புடிங்கிட்டானுங்களாம்…. 5000 ஆயிரம் பழமையான தமிழ் மொழியை காப்பாற்ற வினவும், அதன் குழுவும் தேவையில்லை…

    • தனித் தமிழ் இயக்கம் தமிழகமெங்கும் நடத்தி வரும் இந்தியன் சொல்லிட்டாரு…. எல்லோரும் கேட்டுக்கங்க….! அவன் இவன் ன்னு பேசுற இந்த மாதிரி புடிங்கிகளைத் தான் முதலில் புடிங்கியிருக்கனும் தப்பு பண்ணிட்டாங்க…!

      இவிங்க தேவையில்லைனு நீ சொல்லாத….?

  6. ஏங்க எவளவு நாளைக்கு தான் இந்த பார்பன எதிர்ப்ப வச்சு காலத்தை ஓட்டுவீங்க…………
    மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்குங்க …………. சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி …. தமிழ் போல……..

    இந்தியாவினுடைய அறிவு குவியல் என்பது சமஸ்கிருதத்தில் பதிவு உள்ளது.
    சார்வாகம்,சமணம்,பௌத்தம் சாங்கியம்,யோகம்,நையாயிகம்,மீமாமசகம்,வேதாந்தம்,சைவம் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் எவ்வள்ளவு முக்கியமோ அதுபோல சமஸ்கிருதமும் முக்கியம்.தமிழ் மொழியை பேணுவது போல சமஸ்கிரதத்தையும் பேண வேண்டும். நம் தத்துவ சிந்தனைகளை புரிந்து கொள்வதில் சமஸ்கிருதத்தின் பங்கு மிக முக்கிமானது.

    இதில் பார்ப்பனீயம் பற்றி பேசுவது அறிவீனம்.

    • @manithan, Sanskrit and Brahminism cant be separated. Lets explain this in Mohan Bagavat’s style..
      Language of Thailand is called Thai, Language of Japan is called as Japanese, Language of France is called as French. AND THE LANGUAGE OF BRAHMINS IS CALLED SANSKRIT.

      Let the Tamils save Tamil, Gujarati’s save Gujarati, Let the Kannadiga’s save Kannada, the Bengali’s save Bengali. Now tell us who should save Sanskrit? t’s a good idea to revive Sanskrit, But it’s the brahmins who have to make the effort. It should not be done by the government spending people’s tax money.
      Read this > http://palindia.wordpress.com/2014/08/24/story-of-sanskrit-for-beginners/

    • //மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்குங்க …………. சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி …. தமிழ் போல…
      தமிழ் மொழியை பேணுவது போல சமஸ்கிரதத்தையும் பேண வேண்டும்….//

      அண்ணே! புரிஞ்சிக்குங்க! தமிழ் மொழியை பேணுவது போல சமஸ்கிரதத்தையும் பேண வேண்டும் என்பது தாண்ணே எங்கள் கோரிக்கை!

      அப்புறம் என்ன சொன்னீங்க ?

      //சார்வாகம்,சமணம்,பௌத்தம் சாங்கியம்,யோகம்,நையாயிகம்,மீமாமசகம்,வேதாந்தம்,சைவம் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது//

      சமஸ்கிருதத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தை ஊற்ற் சொன்னது ஏண்ணே ? இவற்றை திருத்தி, அடியோடு ஒழித்து பாடைகட்டியது யாரண்ணே?

      அப்புறம் என்ன சொன்னீங்க ?

      //இதில் பார்ப்பனீயம் பற்றி பேசுவது அறிவீனம்.//

      சமணம், பவுத்தம் உட்பட பல உயர்ந்த இந்திய தத்துவங்களை திரித்து, ஒளித்து, பின்னர் அழிது ஒழித்த நாசகாரர்களை தோலுரிப்பதில் என்னண்ணே அறிவீனம்?

      அப்புறம் என்ன சொன்னீங்க ?

      //தமிழ் மொழியை பேணுவது போல சமஸ்கிரதத்தையும் பேண வேண்டும்.//

      ரொம்ப சரி அண்ணே! முதலில் நீஙக தமிழையும் கொஞ்சம் கவனியுங்க ! செம்மொழி அறிவிப்பிற்கே எப்படி குதித்தீங்க?

      • இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களாக நடந்த பல்வேறு துறைகள் சார்ந்த விவாதங்கள் பல நிலைகளில் எழுதப்பட்டு, தொகுக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆதலால் சமஸ்கிருதத்தை எதிர்ப்பது/அழிப்பது என்பது நமக்குதான் இழப்பு.

        //சமஸ்கிருதத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தை ஊற்ற் சொன்னது ஏண்ணே ? இவற்றை திருத்தி, அடியோடு ஒழித்து பாடைகட்டியது யாரண்ணே?//
        சமணம், பௌத்தம், சார்வாகம் வேதத்திற்கு எதிராக உரையாடிய தரிசனங்கள்.இதை படிப்பதை எந்த பார்பனரும் எதிர்க்க போவதில்லை.அவையும் சமஸ்கிருதத்தில் தான் பதிவு செயப்பட்டுள்ளன .மேலும் சமஸ்கிருதம் வைதிக மரபுக்கும் மட்டும் உண்டான மொழி அல்ல.பூர்வ மிமாம்ச கர்ம விதிகள் சமஸ்கிருதத்தில் உள்ளது.அந்த ஒரு காரணத்துக்காகவே அது பார்பன மொழி ஆகிவிடாது.
        //சமணம், பவுத்தம் உட்பட பல உயர்ந்த இந்திய தத்துவங்களை திரித்து, ஒளித்து, பின்னர் அழிது ஒழித்த நாசகாரர்களை தோலுரிப்பதில் என்னண்ணே அறிவீனம்? //
        முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.சமணமும் , பௌத்தமும் அழிந்து விடவில்லை.இன்றும் அது உள்ளது. நீங்கள் கூறுவது போல திரித்து அழித்து விடக்கூடியது அல்ல ஞான மரபு.
        //அண்ணே! புரிஞ்சிக்குங்க! தமிழ் மொழியை பேணுவது போல சமஸ்கிரதத்தையும் பேண வேண்டும் என்பது தாண்ணே எங்கள் கோரிக்கை! //

        எதற்கு கோரிக்கை????பார்பனர்களுக்கு எதிரான திராவிட பாரம்பரிய ஆட்சி தான் கடந்த ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் நடந்து வருகிறது.ஏன் பெரியாரிய,திராவிட கழக பாரம்பரிய சீடர்கள், தாங்களை கோரிக்கை வைக்கும் நிலையிலேயே வைத்திருகிறார்கள்??????

        • என்ன மனிதனய்யாநீங்கள்? நாற்பது அய்மபது வருடங்களாக திராவிட பாரம்பரிய ஆட்சிநடை பெற்றதா? நடக்க விட்டீர்களா? பர்ப்பனையம் பதுங்கியிருந்து, சமயம் கிடைத்தவுடன் பாய்கிறது! பார்ப்பனர்-அசுரர் போராட்டம் என்று ஓய்ந்தது?

          • //சமணமும் , பௌத்தமும் அழிந்து விடவில்லை.இன்றும் அது உள்ளது. நீங்கள் கூறுவது போல திரித்து அழித்து விடக்கூடியது அல்ல ஞான மரபு.//

            மனிதன், மனசாட்சியுள்ள மனிதனா? உங்கள் ஞான மரபை ஊறுகாய் போட்டு வைத்துள்ளீரோ?
            ராமாயணம், மகாபாரதம்( கீதை) முதற்கொண்டு எல்லா பார்ப்பன புராணங்களிலெல்லாம் ‘புத்தனைநம்பாதே, புத்தன் பின் செல்லாதே, புத்தன் சொற்கேட்டால் நரகத்திற்கு போவாய்’ எழுதி வைத்த போது இந்த ஞான மரபு எஙகே சென்றது?

            • புதிய செய்தி !!!நீங்கள் கூறுவது போல ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றில் புத்தனை பற்றி கூறியதாக அல்லது பதிவு இருபதாக எனக்கு தெரியவில்லை.
              ராமாயணம் மகாபாரதம் என்பது பார்ப்பனபுராணம் அல்ல. அதை இயற்றியவர்கள் பிராமணர்கள் அல்ல.
              தாங்களுடைய தரப்பு பார்பனர்களை எதிர்ப்பது.நன்று.அது தங்கள் விருப்பம்.ஞான மரபு என்பது வேறு. இந்திய ஞான மரபை பற்றிய உங்களுடைய புரிதலில் பிழை உள்ளது.இந்திய ஞான மரபையும் சனாதன தர்மத்தையும் போட்டு குழப்பி கொள்கிறீர்கள்
              இந்திய ஞான மரபு என்பது பல தலைமுறைகளின் சிந்தனை நீட்சி. பல தரிசனங்கள் பல ஆயிரம் வருடங்கள் விவாதித்து முன்னகர்ந்த ஒரு தொடர் சிந்தனை ஓட்டம்.
              நீங்கள் இந்திய தத்துவ ஞானத்தை பற்றி அறிய திரு டி.டி.கோசாம்பி/திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் நூலை படித்தீர்களானால் புரியும்.
              பௌத்தத்திற்கும் நாதிகவாததிற்கும் பல வித்தியாசத்தை உள்ளது. இரண்டும் வேதத்திற்கு எதிராக தன் தரப்பை முன்வைகின்றன.அது ஒன்று தான் ஒற்றுமையான புள்ளி.அந்த ஒரே ஒரு ஒற்றுமையை வைத்து நீங்கள் பௌத்தத்தின் சார்பாக பேசுகிறீர்கள் .பௌத்தத்தில் உட்பிரிவுகள் பதினாறுக்கு மேல் உள்ளது.இதில் பல பிரிவுகளில் இந்து மதத்தை போல பல நம்பிக்கைகளும் சடங்குகளும் உள்ளது.எல்லா மதங்களிலும் பிரிவுகளும், உட்பிரிவுகளும் உள்ளது போல பௌத்தத்திலும் உள்ளது.சமணத்திலும் உள்ளது.ஏற்ற தாழ்வுகளும் உள்ளது.புரிந்துகொள்ளுங்கள்
              தத்துவம் வேறு மதம் வேறு. மனிதன் என்றும் மனசாட்சி உள்ளவன். ஐயமே வேண்டாம் 

              • /புதிய செய்தி !!!நீங்கள் கூறுவது போல ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றில் புத்தனை பற்றி கூறியதாக அல்லது பதிவு இருபதாக எனக்கு தெரியவில்லை./

                அய்யா பெரிய மனிதரே! (அறிவு ஜீவியான ஒருவரை சதாரண மனிதன் என்று கூறலாமா? அதான் !) ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் முதலிய, பழைய சமஸ்க்ரித மூலங்களிலும், தமிழ் மொழி பெயற்புகளிலும் இவை இருந்தது! பெரியாரின் சுயமரியாதை நிறுவன் வெளியீடுகளில் (ராமாயண ஆராய்ச்சி, மகாபாரத ஆராய்ச்சி முதலியன), அம்பெத்கர் வெளியீடுகலிலும் ஆதாரங்களை காணலாம்! ஆர் எஸ் எஸ் வலப்பதிவுகளில் இவை எடிட் செய்யப்பட்டுள்ளது, ஆச்சரியமல்ல!

                //இந்திய ஞான மரபு என்பது பல தலைமுறைகளின் சிந்தனை நீட்சி. பல தரிசனங்கள் பல ஆயிரம் வருடங்கள் விவாதித்து முன்னகர்ந்த ஒரு தொடர் சிந்தனை ஓட்டம்.
                நீங்கள் இந்திய தத்துவ ஞானத்தை பற்றி அறிய திரு டி.டி.கோசாம்பி/திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் நூலை படித்தீர்களானால் புரியும்.//

                பார்ப்பனர் பசப்புகளில் இதுவும் ஒன்று! யாருக்குமே தெரியாது,உனக்கும் புரியாது என்று தத்துவ விசாரணை செய்வதால் என்ன பலன்? டாக்டர் கோசாம்பி, அன்னிபெசன்ட் அம்மையார் கண்டுபிடிப்பான ஜே கே, ரஜ்னீஷ், தற்போது ஜக்கி இவர்களின் சில நூல்களையாவது நான் தமிழில் படித்திருக்கிறேன்!

                கோசாம்பி, மஜும்தார் இவர்களின் ஆய்வுகள் பல, திராவிட இயக்கத்தினராலும் சுட்டப்படுகின்றன!

                இந்த தத்துவ விசாரணைகள், பொதுனலம் கருதி தமிழில் தரப்பட்டு, விவாதப் பொருளாக்கப்படல் வேண்டும்!

                தெனாலி ராமன் கதையில், எருமை கட்டும் கயிற்றையும், எள்ளுச்செடியையும் புத்தகம்போல் கட்டி , சம்ஸ்கிருத பண்டிதரின் செருக்கை அடக்கிய நிகழ்வு போல, இந்திய மரபு பேசி ஏமாற்றி திரிகிறீர்கள்!

                //தத்துவம் வேறு மதம் வேறு.//

                பார்பனர் வேறு இந்து த்வா வேறா? சமண , புத்த சமஷ்க்ரிதத்துக்கு முந்தியவை அல்லவா? அவற்றில் திராவிடபிராக்ருததிலிருந்து எடுத்துகொள்ளபட்டதல்லவா? சமஸ்க்ரித ஆதிக்கம் ஏற்பட்ட பின்னரே இவை மறைக்கப்பட்டு, பிராமணருக்கு மட்டுமே என ஒளிக்கப்பட்டதல்லவா?

                மனசாட்சியுள்ள மனிதரை, தவறு மாமனிதரை காண மகிழ்ச்சி!

                • நான் எங்கும் இந்துத்வத்தயோ அல்லது பார்பனர்களையோ ஆதரித்து பேசவில்லை.

                  நான் முன்வைக்கும் புள்ளிகள் இந்திய ஞான மரபை பற்றியது .இந்திய தத்துவ ஞானத்திற்கும் இந்துத்வதிற்கும் உள்ள எளிய அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
                  மகாபாரதம் எழுதப்பட்டது வியாசரால்.வியாச மகாபாரதத்தை வைத்தே விவாதிக்க வேண்டுமே ஒழிய பெரியாரிய மகாபாரதத்தை அல்ல.வியாச மகாபாரதத்தில் எங்கும் நீங்கள் கூறும் கௌதம புத்தரை பற்றிய குறிப்புக்கள் இல்லை.அதே போல் வால்மீகி ராமாயணத்திலும்.
                  //இந்திய ஞான மரபு என்பது பல தலைமுறைகளின் சிந்தனை நீட்சி//
                  இதை கூற பார்பனர் வேண்டாம் . படித்த யார் வேண்டும் என்றாலும் கூறலாம்.மாக்ஸ் முல்லர் , அம்பேத்கர், இ.எம்.எஸ்,திரு அயோதிதாச பண்டிதர். டி.டி. கோசாம்பி இதையே கூறுகிறார்கள்.மேற் கூறியவர்கள் யாரும் பார்பனர்கள் அல்ல.மேலும் அதை பார்பனர்கள் ஆதரிக்க அது பார்பன/பிராமணியத்தை பற்றியதும் அல்ல.

                  இந்திய ஞான மரபு என்பது ஒரு மிகபெரிய விவாத களம் .அதில் பல தரிசனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்த்து/மறுத்து வாதிட்டு வளர்ந்த பல்வேறு ஞானத்தரப்புகளின் பெருந்தொகை. பன்மைத்தன்மையே அதன் அடையாளம். அதில் எந்த தத்துவத்தரப்புக்கும் மைய இடம் கிடையாது.

                  //இந்த தத்துவ விசாரணைகள், பொதுனலம் கருதி தமிழில் தரப்பட்டு, விவாதப் பொருளாக்கப்படல் வேண்டும்!//
                  இதைதான் நான் முதலில் சுட்டிக்காட்டினேன்.// இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களாக நடந்த பல்வேறு துறைகள் சார்ந்த விவாதங்கள் பல நிலைகளில் எழுதப்பட்டு, தொகுக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆதலால் சமஸ்கிருதத்தை எதிர்ப்பது/அழிப்பது என்பது நமக்குதான் இழப்பு.//

                  பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள்.முன்முடிவுகளுடன் நாம் இருந்தோமென்றால் நம்மால் எதையும் ஆராய முடியாது.நம் நம்பிக்கைக்காக நடுநிலை பார்வையை இழந்தொமேன்றல் பல அறிய விடயங்களை இழந்து விடுவோம்.

                  அத்வைதத்தை பரப்பிய திரு.சங்கரரும் ,பௌத்தத்தின் தம்மத்தை கூறிய திரு அம்பேத்கரும் என் பார்வையில் மறுக்கமுடியாத சிந்தனையாளர்களே

                  • //மார்க்ஸ் முல்லர்,அம்பேத்கர்,இ.எம்.எஸ்.திரு.அயோதிதாச பண்டிதர்,டி.டி.கோசாம்பி இதையே கூறுகிறார்கள்.மேற்கூறியவர்கள் யாரும் பார்பனர்கள் அல்ல//

                    இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும்,டி.டி.கோசாம்பியும் பிராமணர்கள் இல்லையா? இது எனக்கு புதிய செய்தியாக உள்ளதே.
                    அம்பேத்கரும்,அயோத்திதாசரும் பெளத்த மதம் சார்ந்தவர்கள்.அனேக பெளத்த நூல்கள் பாலி,பிராகிருத மொழியில் உள்ளது.இந்திய அரசு பாலி மொழிவாரம் கொண்டாடுமா?

                    சங்கரர் கூறும் பிரம்மத்துக்கும்,பெளத்த ம்கா தர்மத்துக்கும் உள்ள ஒற்றுமையும் சங்கரர் மாறுவேடமிட்ட பவுத்தன்[பிரசன்ட பவுத்தன்] என்று ஏன் பழிக்கப்படுகிறார் என்று தெரியுமா?

                    • //மார்க்ஸ் முல்லர்,அம்பேத்கர்,இ.எம்.எஸ்.திரு.அயோதிதாச பண்டிதர்,டி.டி.கோசாம்பி இதையே கூறுகிறார்கள்.மேற்கூறியவர்கள் யாரும் பார்பனர்கள் அல்ல//
                      இதற்கு நான் என்ன கூறுவது ராம் அவர்களே….
                      திரு.இ.எம்.எஸ் மற்றும் திரு.டி.டி.கோசாம்பியும் என் பார்வையில் பார்பனர்கள் இல்லை.பார்பனியத்தை ஆதரித்தவர்களும் இல்லை.(இவ்விருவருக்கும் அறிமுகம் தேவையா நண்பரே)

                      //அம்பேத்கரும்,அயோத்திதாசரும் பெளத்த மதம் சார்ந்தவர்கள்.அனேக பெளத்த நூல்கள் பாலி,பிராகிருத மொழியில் உள்ளது.இந்திய அரசு பாலி மொழிவாரம் கொண்டாடுமா?//

                      இந்திய ஞான மரபின் எல்லா தரிசனத்திற்கும் சமஸ்கிருதமே மூல மொழி(நாத்திகவாதம் உட்பட). சமஸ்கிருதத்தில் உள்ள அளவு உரையாடல்களும்,விவாதங்களும் மற்ற மொழிகளில் இல்லை.ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்த விவாதங்களில் தொகுப்பு பாலியை,பிராகிருதத்தை விட சமஸ்கிருதத்தில் தான் பெரும்பாலும் உள்ளது.ஆதலால் சம்ஸ்கிருத வாரத்தை கொண்டாடுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

                      //சங்கரர் மாறுவேடமிட்ட பவுத்தன்[பிரசன்ட பவுத்தன்] என்று ஏன் பழிக்கப்படுகிறார் என்று தெரியுமா?//

                      வேதாந்தத்தின் மையம் பிரம்மம்.பௌத்தம் முன் வைத்ததில் முக்கியமானது விக்ஞானவாதம் மற்றும் சூனியவாதம்.பௌத்தம் நியாய மரபின் தர்க்க முறையை கையாண்டது.வேதாந்தம் பௌதத்துடன் நடந்த விவாதம் மூலம் தன் தரப்பை விரிவாக்கி கொண்டது. பிற்கால வேதாந்தங்களான அத்வைதம்,விசிஷ்டாத்வைதம்,த்வைதம் முதலியவற்றில் நியாய மரபின் தர்க்க முறையை காணலாம். வேதாந்தமே இந்து ஞான மரபின் தத்துவார்த்தமான உச்சம். அதில் அத்வைதம் மிக முக்கியமான தரப்பு. பௌத்த மதத்தின் யோகாசார மரபின் உயர்தள தத்துவத்துடன் மோதும் வலிமை இருந்த ஒரே தரப்பு அத்வைதம்.
                      நீண்ட விவாதத்தின் மூலம் அது சூனியவாதத்தையும் விக்ஞானவாதத்தையும் உள்ளிழுத்து கொண்டது.அதன் மூலம் பௌத்தத்தை தாண்டியது. அத்வைதத்தில் இருந்த பௌத்த சாயல் காரணமாக,திரு ராமானுஜர் சங்கரரை மாறுவேடமிட்ட பௌத்தர் என்று கூறுகிறார்.

                      ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கையை நம்மால் முழுமையாக அறிய முடியாது.அறிய முடியாத அந்த பிரமாண்டமான பிரபஞ்ச வெளியே சூனியம் என்று நாகார்ஜுனர் கூறுகிறார்(சூனியவாதம்).நம் புலன்களால் அறியப்படும் அறிவே புறவுலகம் என்பது அறிவகவாதம்.

                      சங்கரர் கூறுவது பிரம்மமே அனைத்திற்கும் சாரம். புறவுலகாக தெரியும் வடிவங்களும் ,குணங்களும் மாயை .(பிரம்ம சத்ய :ஜகன் மித்ய : )
                      சங்கரர் கூறும் ப்ரஹ்மமும் (ஓரிறை கோட்பாடு) பௌத்தத்தின் மகாதர்மமும் ஒன்றே.

                      எனக்கு தெரிந்த/படித்த/கேட்டவற்றை கொண்டு எளிய முறையில் விளக்கியுள்ளேன் . தவறு இருப்பின் திருத்திக்கொள்ள சித்தமாக உள்ளேன்.

                  • வியாசரின் பாரதத்தை வைத்தே பெரியாரின் மகாபாரத ஆராய்ச்சி எழுதப்பட்டுள்ளது! சந்தேகமிருந்தால் , பெரியார் திடலில் உள்ளநூலகத்தை அணுகலாம்! டாக்டர் ராதாகிருஷ்னன் எழுதிய ‘பாரதீய தர்சனம்’ என்ற நூலை தமிழில் மேற்கோளிட்டு ‘பிராமணமதம்; தோற்றமும் வளர்ச்சியும்’ எனெ டாக்டர் ஜோசப் இடமருகு எழுதியநூலையும் பார்க்க!

  7. “முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே”

    அப்ப ராமசாமி நாயக்கர் தாய்த்தமிழை காட்டுமிராண்டி பாஸை எனச்சொன்னது அவமானப்படுத்துவது இல்லையா…???

    • என்னப்பா இது ஒருத்தனும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீங்களா?

      • பையா, பெரியாரே சொல்லியிருக்கிறாரு மானமும் ரோசமும் மனிதருக்கு அழகு என்று. அதனடிப்படையில் உமது கேள்வியைப் பரிசிலீப்போம்.

        “மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று” என்று சொன்னது புறப்பொருள் வெண்பாமாலை. ஆனால் கம்பராமாயணமோ “ராமனைக்கண்டதும் சீதையின் அல்குல் அகன்றது” என்றது. உங்கள் வீட்டுப்பெண்களிடம் படிக்கச் சொல்லுங்களேன். இது என்ன வகையான இலக்கியம் என்று தெரியும்? பார்ப்பன கூஜாக்கள் பெரியாரை எதிர்க்கத் துப்பின்றி மட்டையடியாக தமிழை எதிர்த்தார் என்ற வாதங்களுக்குள் இறங்குகிறார்கள். ஆனால் மிகக் கணிசமான பார்ப்பனிய இலக்கியங்கள் காட்டுமிராண்டித்தனமானவை. எல்லா மொழிகளும் காட்டுமிராண்டி நிலையில் இருந்துதான் முன்னேறிவந்தது. ஆனால் பார்ப்பனியம் உட்புகுத்தப்பட்ட பிறகுதான் தமிழின் உன்னதம் காட்டுமிராண்டித்தனமாக போனது.

        நெடுநல்வாடையில் நக்கீரர் கோப்பெருந்தேவியின் நலம்புனைந்து உரைக்கிறார். அப்படி நலம்புனைந்து உரைக்க கோப்பெருந்தேவி நக்கீரரின் மனைவி அல்ல! மேலும் பெரியாரின் அரசியல், பெண்ணடிமைத்தனமும் அல்ல;

        “அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
        மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்று சொல்கிற குறளையும் விமர்சித்த ஒரே குரல் பெரியாருடையது.

        மூன்றாவதாக “புண்டரீகம்” என்ற சொல் பார்ப்பனிய இலக்கியங்களில் தாமரை என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆனால் தாமரைக்கு தமிழ் சொற்கள் நிறைய உண்டு. கம்பராமாயணமோ அல்லது சேக்கிழாரின் பெரியபுராணமோ இச்சொல்லை பயன்படுத்தாத இடங்கள் இல்லை. ஆனால் பாலியல் வசைச்சொல்லாக இச்சொல் இன்றைக்கு நிற்பதை விக்கிபிடீயா கூட காட்டுகிறது!

        இப்பொழுது புரிகிறதா பார்ப்பனிய தமிழ் இலக்கியங்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று!
        பெரியார் பாராட்டிய நூல் மற்றும் எழுத்து சீர்த்திருத்தம் உமக்குக் கிடைத்தால் தேடிப்படிக்கவும். இப்பொழுது பார்ப்பனிய முகமூடியை சரி செய்துகொள்ளவும்.

        • //புண்டரீகம்” என்ற சொல் பார்ப்பனிய இலக்கியங்களில் தாமரை என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆனால் தாமரைக்கு தமிழ் சொற்கள் நிறைய உண்டு. கம்பராமாயணமோ அல்லது சேக்கிழாரின் பெரியபுராணமோ இச்சொல்லை பயன்படுத்தாத இடங்கள் இல்லை. ஆனால் பாலியல் வசைச்சொல்லாக இச்சொல் இன்றைக்கு நிற்பதை விக்கிபிடீயா கூட காட்டுகிறது!//

          பார்பனர்களின் வேள்வி முறைகளில் ‘பவுண்டரீகம்’ என்று ஒன்று உண்டு ! அன்றைய பார்ப்பனநாகரீகப்படி, வேள்வி தீயின் மேலாக பந்தலிட்டு, நிர்வாண மாக பெண்ணை நிருத்தி பல ஆண்கள் புணர்வார்களாம் !

          மற்ற பார்ப்பன வேள்விகளைப்போலவே, அசுவமேதம், புத்திர காமேஷ்டி எக்சட்ரா , இதுவும அசுரர்களால் ‘ஆபாசமென’ தடுக்கப்பட்டது! இதற்காகவே, அத்தைய ஆபாச பிறப்பாளனாகிய ராமன் அசுரர்களை அழிக்க துணை சென்றான் போலும்!

      • //அப்ப ராமசாமி நாயக்கர் தாய்த்தமிழை காட்டுமிராண்டி பாஸை எனச்சொன்னது அவமானப்படுத்துவது இல்லையா…???//

        ரொம்ப சரியாகத்தான் சொல்லியிருக்கிரார்! காலத்தால் முந்தி இருந்தும், தன்னுள் அடங்கிய தத்துவ, அற்வு களஞ்சியங்களையெல்லாம் ஆரியத்திடமிழந்தபின், எஞ்சியது என்ன? சிண்டு முடியும் உமது பணி முடிந்ததா?

        • கால்டுவெல் தமிழின் தனித்தன்மையை, தனிச்சிறப்பை சொன்ன பிறகும் அதை காட்டுமிராண்டி பாசை என்கிறார் உங்கள் பகுத்தறிவுப் பகலவர்.. வீட்டில் இங்கிலீசு பேசச் சொன்னார்.. ஆங்கிலத்தில் இல்லாத கண்றாவியா தமிழில் இருக்கிறது..?!

          • அம்பிகள் கண்றாவிக்காக தேடி தேடி அலையவேண்டாம்! பெரியார் சொன்னது தமிழில் ஆஙிலம் போல அறிவியல் சிந்தனை ஏற்படாதது குறித்துதான், ஆங்கிலத்தில் உள்ள கண்றாவிகளெல்லாம் உமக்கு தெரிந்த அளவில் அவருக்கு தெரியாமலிருக்கலாம்! அந்த மட்டில் நீங்களும் பெரியார்தான், கண்றாவி பெரியார்! திருப்திதானே!

              • கன்றாவியையே பக்தி காப்பியங்களாக்கி படித்து படித்து இன்புற்றது யாரோ?

                • ஐம்பெரும் காப்பியங்களை படிக்கவேண்டியதுதானே.. உங்களுக்கு அவற்றில் ஒன்றும் புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை என்றால் அது தமிழின் குற்றமா..?!

                  • அக்கிரகார அம்பிகள் எல்லாம் இனிமேல் கிளுகிளுப்பான சம்ஸ்கிருததை விடுத்து, தமிழில் அய்ம்பெரும் காப்பியங்களை படிக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சி!

          • ஏன் தமிழ் மொழியை பெரியார் காட்டுமிராண்டி பாசை என்று கூறினார் என்பதற்கு அவரே விளக்கமும் கொடுத்து உள்ள நிலையில் அவ்விளக்கத்தில் இருந்து அல்லவா அதனை பற்றி விவாதம் தொடர வேண்டும் ? அதனை விட்டுவிட்டு பொதுவாக பெரியார் காட்டுமிராண்டி பாசை என்று கூறினார் என்பதில் என்ன சாமார்தியம் உள்ளது அம்பி ?

          • http://mathimaran.wordpress.com/2009/07/27/article-221/

            More over

            தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

            அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

            நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

            இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

            • தமிழ்-தாகம் அவர்களே,

              ஆங்கிலத்தில் அறிவியல் இருக்கிறது அதனால் ஆங்கிலமும் படியுங்கள் என்பதற்கும்;

              தமிழில் இருக்கும் ‘புராண,பக்தி,குப்பைகளை’ விட ஆங்கிலத்தில் உள்ளது போல அறிவியல் ஆக்கங்களை படையுங்கள் என்பதற்கும்;

              தமிழ் ஒரு வெங்காய காட்டுமிராண்டி பாசை, அதை பேசாமல் ஆங்கிலம் பேசுங்கள் என்பதற்கும்

              உள்ள வேறுபாடுகளை உற்று நோக்குக..

        • அஜாதஸத்ரு கூறும் பல தகவல்களுக்கு ஆதாரம் இல்லை.

          அவை எல்லாம் பொய்யான வரலாறுகள்.

          இரண்டு, ஹிந்து மதத்திர்க்கு எதிராக புத்தர் இருந்தாலும், அவர் மிகவும் சரியான கேள்விகளை தொடுத்தார்.

          ஆனால் அவரயும் அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் பயன்படுத்த முயலும் பொழுது அது வன்முறையாக முடிகிறது.

      • தமிழை நீச பாஷை என ஆதிக்க சாதியினர் சொன்னதற்கும் அதனை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னதற்கும் உள்ள வித்தியாசம் யாம் அனைவரும் அறிந்ததே. அவரது காலத்தில் தமிழில் ஆக்கப் பட்ட அனைத்தும் பக்தி இலக்கியங்களாகவே இருந்தன. இப்படி கடவுளை போற்றி பாடிக்கொண்டே மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருந்தாலே அடிப்படை வாழ்க்கை பிரச்சினை தீர்ந்து போகும் நிலை வெகு சிலருக்கு வாய்த்திருந்தது. ஆனால் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் சமுகம் அதிலிருந்து மீண்டு வர, அறிவியலோ தொழில் நுட்பமோ பயில எந்த முயற்சியும் தமிழில் இல்லை. இந்த சூழல் தான் திரைப்படங்களிலும் கூட நீடித்திருந்தது.1950 க்கு முன்னர் வந்த 90 சதவிகித படங்களின் பாடு பொருள் பக்தி. மெல்லத் தமிழினிச் சாகும் என்ற பாரதி கவிதையின் ஆசை தமிழ் சாவது தான் என்று யாரும் இங்கே விதண்டாவாதம் செய்வதில்லை .ஆனால் அதே நோக்கில் பெரியார் பேசியது அவதூறாக பலராலும் சிண்டு முடிய பயன்படுகிறது. ஒரு சிங்கம் தன் இரையை கவ்வுவதற்கும் தன் குட்டியை கவ்வுவதற்கும் உள்ள வித்தியாசம் சிங்கத்திற்கும் அதன் குட்டிக்கும் நன்கு தெரியும். பொது அறிவற்ற மூடக் கண்கள் அது தன் குட்டியை கொல்லப்போகிறது என கதை பேசி திரிந்தால் அறிவுள்ளோர் யாரும் நம்ப போவதில்லை

        • சிங்கம் தன் குட்டியை ’இதம்பதமாக’ கவ்விக் கொண்டு எங்கே போனது..?! இங்கிலீசு கிணற்றுக்குள் போடவா..?!

          • அம்பி,

            நீர் உமது குழந்தைகளை எந்த கிணற்றுக்குள் போட்டீர்? பார்ப்பனர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் கிணற்றுக்குள் போடுகிறார்களா? இல்லை இங்கிலீசு கிணற்றுக்குள்ளா? குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக?

          • இந்த உலகில் எந்த மொழியையும் சிறுமைப்படுத்த யாருக்கும் எந்த அவசியமும் ஏற்படுவதில்லை.ஆனால் இந்தியாவில் ஒரு மொழியை தேவ பாஷை என்றும் மற்ற மொழிகளை நீச பாஷை என்றும் சொல்லி வந்த வரலாறும் அந்த தேவ பாஷையை எல்லோரும் படித்து விட முடியாது என்கிற கட்டுப்பாடும் தான் இன்றைக்கு அந்த தேவ பாஷைக்கு பாடை கட்டி அனுப்பி வைத்திருக்கிறது. இன்றைக்கு எத்தனை கோடி கொட்டி இறைத்தாலும் உயிர்ப்பித்து விட அதாவது மக்கள் மொழியாக நாவினில் தவழ முடியாது.இந்த நிலையில் “இங்கிலீசு கிணற்று” என்று ஈயத்தை பார்த்து இளிக்கிற பித்தளையாக அம்பி ஆங்கிலத்தை பழிக்கிறார். அந்த இங்கிலிசு படித்து வெள்ளைக்காரன் கோட்டு சூட்டை தானும் போட்டு மினுக்கி திரிந்த கூட்டம் இன்றைக்கு அதே இங்கிலிசும் கோட்டு சூட்டும் சாமானியனாக இருந்த அடிநிலை மனிதன் வசம் வந்து விட்ட பின் பவிசு போன வயிற்றெரிச்சலில் பழிக்கும் நிலை வந்தனரே!ஆமாம் அம்பி பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார்.அவரின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே கருதுகிறேன்.உங்கள் கருத்து அதைத்தான் உணர்த்துகிறது.தமிழுக்கு எதிராக ஒருக்காலும் பெரியார் ஆங்கிலத்தை போற்றியவர் இல்லை.ஒரு திருக்குறளை (அதிலும் கூட விமர்சனங்களோடு) தவிர எந்த இலக்கியத்தையும் ஏற்க இயலாத பெரியாரின் பார்வையை புரிந்து கொள்ள அவரின் ஒட்டுமொத்த சீர்திருத்த கருத்துக்களை உள்வாங்கி கொண்டவர்களுக்கு எளிமையானது.ஆனால் அம்பியைப் போன்று அவரை பழிக்க விரும்புவோர் அந்த வார்த்தைக்கு சிண்டு முடியும் பொருள் கூறுவதில் இன்பம் காண்பது வெளிப்படை.

            • வீட்டிலும் இங்கிலீசு பேசிக் கொண்டு காட்டுமிராண்டி பாசை பேசாத தங்கிலீசுக்காரனாக தமிழன் மாறிப்போவதில் பார்ப்பானுக்கு என்ன கட்டநட்டம் என்கிறீர்களா..?!! நிகர லாபம் யாருக்கு என்று அப்போது தெரிந்துவிடும்..

              • அம்பி,

                ஏன் இந்த வாதம் ? தமிழனுக்கு தன் மொழி தமிழ் வேண்டும் ! இனைப்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும் ! உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை ? பார்பனர்கள் வேண்டுமானால் அவர்கள் விருப்பப்படி அவர்கள் மொழி சமஸ்கிருதத்தையும் பயன்படுத்தட்டுமே !

    • //அப்ப ராமசாமி நாயக்கர் தாய்த்தமிழை காட்டுமிராண்டி பாஸை எனச்சொன்னது அவமானப்படுத்துவது இல்லையா…???//

      அவர் சொன்னது இருக்கட்டும். முதலில் தமிழை நீசபாசைன்னு ஒதுக்கி வச்சது யாரு?
      ஏதோ அவர் தமிழை அவமானப்படுத்தினது போலவும், பார்பனர்களும், நீங்களும் தமிழை ஆராதித்து காப்பாற்றி வருவது போலவும் அல்லவா சொல்கிறீர்கள். ஏன் இந்த பித்தலாட்டம்?

      இந்த வெக்கங்கெட்ட விவாதமுறைக்கு நாண்டுகிட்டு சாவலாம்…

  8. பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா?

    இதே கேள்விய இன்னும் எத்தன வருடம் தான் கேட்டுக்கொண்டே இருப்பீர்…

    • Paiya,You think that you have not attained your present position because of Periyar.Either you are ungrateful or a person who belong to the caste that monopolizes high posts.But people like me who owe our present status in the society will be ever grateful to Periyar.What is your issue in this?Better read Kumudam.That suits you.

  9. //பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா?
    இதே கேள்விய இன்னும் எத்தன வருடம் தான் கேட்டுக்கொண்டே இருப்பீர்…//

    வருடங்கள் என்ன? யுகங்கள் பல கடந்தாலும் உண்மையை மறுக்க முடியுமா? மன சாட்சியுள்ள மனிதர்கள் செய்நன்றியை மறக்க முடியுமா?

    • //பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா? //
      எந்த காலத்தில் பிராமணர்கள் காவலர்களாக ஆதிக்கம் செலுத்தினார்கள் ?

      • சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரனுக்கு அடுத்த இடத்தில் பல டவுண் போலிசுநிலயங்களில் அவாளே இருந்தனர்! சுதந்திரத்திற்கு பின்னர் கூட சீரங்கம் முதலிய இடங்களில் அய்யங்கார் ஏட்டய்யா இருந்ததை நான் அறிவேன்! ஒருவேளை நீதிக்கட்சி ஆட்சியின்போது பிராமணர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம், சூத்திர மேலதிகாரிக்கு சலாம் போட மனமின்றி!

  10. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி,பிறகு பாம்பை அடிக்கலாம் என்றார்.அய்யாவின் தீர்க்கதரிசனமான வார்த்தையை தவற விட்டதனால் இன்று நச்சு அரவங்களின் பிடியில் நாடு சிக்கி சீரழிந்துவருகிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு கோவிலில் அனுமதி இல்லை,சூத்திரனுக்கு கல்வி இல்லை,அக்கிரகாரத்தில் செருப்பு அணியக்கூடாது,தோலில் துண்டுபோடக்கூடாது,சிரட்டையில் தேனீர் குடிக்கவேண்டும்,இதிலே கொடுமையிலும் கொடுமை அர்ச்சகர் தேவநாதன் போன்ற பெண் பொறுக்கிகளை சாமீ என்றுதான் அழைக்க வேண்டும்.அய்யா அவர்களால் இன்ஸ்பெக்டர்கள்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,கல்வியாளர்கள் என பார்ப்பனர் அல்லாதவர்களும் ஆக முடிந்தது.இதைவிட மேலாக மானம்,மரியாதை ,சூடு ,சொரணையை உணர்த்தி மனிதனாக வாழ கற்றுக்கொடுத்தவர்.வாழ்க அய்யா பெரியார்.

    • தாழ்த்தப்பட்டவன ஜாதிப்பேர் சொல்லித்திட்டுவது எவ்வளவு கேவலமோ அதே போலத்தான் இந்த வாக்கியமும் எனக்கு

      //பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி//

      • 100 வீதமும் சரியானது.

        இதை விட வேறு வியாக்கியாணம் தேவையில்லை.அப்படி கதைத்தால் பொழுதுபோகவில்லை என வினவுக்கு வந்து குத்திமுறிகிறவர்களாகவே இருக்கமுடியும்…?

      • தாழ்த்தப்பட்டவர்களை சாதி பெயர் சொல்லி திட்டுவது கேவலம் தான்.ஆனால் பிறப்பின் அடிப்படையில் சாதீயப் படிமானங்களை உருவாக்கி ,தமது இனம் பிழைப்பதற்காக அந்த கட்டமைப்பினை இன்றளவும் சரியவிடாமல் கட்டி காத்துவருவதனால் தான் பாம்பின் விசத்தை விட கொடியது என பெரியார் கூறுகிறார்.இது 100 க்கு 100 சரியான வாதமே.

        • //மது இனம் பிழைப்பதற்காக அந்த கட்டமைப்பினை இன்றளவும் சரியவிடாமல் கட்டி காத்துவருவதனால் தான் பாம்பின் விசத்தை விட கொடியது என பெரியார் கூறுகிறார்//

          மற்ற ஆதிக்க சாதிகளுக்கு எல்லாம் இந்த சாதி பாகுபாட்டில் ஆசை இல்லை . இந்த பார்பனர்கள் தான் அதை திணிக்கிறார்கள் . நல்லா சொன்னீங்க சார் !

          ஒருத்தன் வாங்கடா ஒரு பொன்னை ரேபு பண்ணலாம்னு கூபுட்டானாம் . மத்தவங்களும் இது நல்ல யோசனையை இருக்கே அப்படீன்னு சேந்து அந்த தப்பை பன்னுனான்கலாம் .

          இப்போ அந்த பொண்ணு பாதிக்கபட்டதுன்னு உதவும் போது, சார் அவன் பார்பான் சொல்லி தான் இந்த தப்ப பண்ணுனோம் நாங்க அப்பாவிங்க அப்படீன்னு சொல்ல, ஊர் தலைவர் அவங்களுக்கும் உதவி செய்தாராம். ஆனா அப்படி உதவி வாங்கினவுங்க ரேபு பண்றத நிறுத்தவும் இல்லையாம் .

          இன்னைக்கும் பார்பான் தான் எங்களை கேடுதுட்டான்னு கூப்பாடு போட்டு தப்புசது ஆதிக்க சாதி ! அவங்க தப்பை மறைக்க தேவை இந்த ஆயுதம்!

          அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கிய ஜீசஸ் பெரியார்!

          reservationfraud.blogspot.com

  11. யாருங்க இந்த ஆதிக்க சாதி ? பார்பன ஆதிக்க சாதியினரால் ஏவி விடப்படும் ஆயுதந்தானே இவர்கள்?

    • // யாருங்க இந்த ஆதிக்க சாதி ? பார்பன ஆதிக்க சாதியினரால் ஏவி விடப்படும் ஆயுதந்தானே இவர்கள்?
      //

      ஆதிக்க சாதி என்ன சிந்திக்க தெரியாதா நாயா , ஏவி விடபடுவதற்கு ?
      ஆதாயம் இல்லாமல் அப்பாவித்தனமாக ஏமாந்து அவர்கள் செய்யவில்லை .
      அந்த கட்டமைப்பு முறையின் பயன்பாடுகளை அனபவிது, விரும்பி, அதை கட்டி காக்க முயலுகிறார்கள் . கூட்டு களவாணிகள்.

      • //ஆதிக்க சாதி என்ன சிந்திக்க தெரியாதா நாயா , ஏவி விடபடுவதற்கு ?
        ஆதாயம் இல்லாமல் அப்பாவித்தனமாக ஏமாந்து அவர்கள் செய்யவில்லை .
        அந்த கட்டமைப்பு முறையின் பயன்பாடுகளை அனபவிது, விரும்பி, அதை கட்டி காக்க முயலுகிறார்கள் . கூட்டு களவாணிகள்.//

        ஏற்றுக்கொள்கிறேன்! சிந்திக்க தெரிந்த நாய்கள்தான்! பார்ப்பனர்களாலும், அவர்கள் படைத்த கடவுள் கதைகளும், பார்ப்பன அமைப்புகளில் கொடுக்கபடும் பதவி,பரிவட்ட பலர் பலியாகியே விபீஷனராய் உள்ளனர்! சாதி விஷயத்தில் மேல் சாதியினர் திருந்தி வருகின்றன்ர், இல்லாவிட்டால் அய் பி எல் சீனியும், செட்டியாரும் சம்பந்தியாக முடியுமா? காசு இருந்தால், குறைந்த பட்சம் பதவியும், பவிஷும் இருந்தால் சாதிக்கோட்டை தாண்டலாம்!

        பெரியாரை வெளிப்படையாக பயம, சுய கவுரவம் காரணமாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்,நகரப்பகுதிகளில் மாற்றம்நடந்து கொண்டுதான் உள்ளது! ஓட்டுக்காக சாதியை முன்னிருத்துவது அந்த மாற்றத்திற்கு தடை போடுகிறது! சமுதாய மேல்மட்டத்தில் உள்ளவர்கள், பார்ப்பனர் உட்பட மாறி வந்தாலும், அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை இழக்க விரும்பாத சக்திகள் மீண்டும் சாதிய கலவரத்தை தூண்டியே வருகிரார்கள் ! இதை செய்வது யார்? மூலத்தை அறிந்து செயல்படுஙகள், பகைவரின் திசைதிருப்பும் சதியினை முறியடியுங்கள், பெரியார்-அம்பேதர் கருத்துக்களை மறவாதீர்கள் அன்பர்களே! நாணல் புல்லின் வலிமையை குறைத்து மதிப்பிடாதீர்! பிரமாச்திரத்திற்கு மிஞ்சிய அஸ்திரம் உண்டா?

        • //அவர்கள் படைத்த கடவுள் கதைகளும், பார்ப்பன அமைப்புகளில் கொடுக்கபடும் பதவி,பரிவட்ட பலர் பலியாகியே விபீஷனராய் உள்ளனர்! //

          //அவர்கள் படைத்த கடவுள் கதைகளும், பார்ப்பன அமைப்புகளில் கொடுக்கபடும் பதவி,பரிவட்ட பலர் பலியாகியே விபீஷனராய் உள்ளனர்! //

          சமண மத கதைகளும் கிடைத்தன புத்த மத கதைகளும் கிடைத்தன . பார்பன கதை மட்டும் பிடித்தான் காரணம் என்னவோ ?

          இலவச தொழிலாளர்கள் காரணம் கிடையாது , பாவம் அப்பாவிங்க ஏமாந்துட்டாங்க அப்படின்னு நீலி கண்ணீர் விடுங்க , பாவ மன்னிப்பு கொடுங்க!

          சொந்த சாதி பாசத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட முடியாது ஆனாலும் நீண்ட கால நோக்கில் ஒரு நாள் உண்மையை நீங்கள் உணருவீர்கள் என்று நம்பிக்கையுடன் …

  12. பெளத்த மத கோட்பாடுகளை கல்வெட்டில் செதுக்கி, அசொக சக்கரம் பொதித்த தூண்களை நிறுவி, உலகெங்கும் சமாதானம் நிலவ உறுதி கொண்ட, அசொகரை ஒரு பார்பனபெண் மூல கொலை செய்ய முயன்று, பிடிபட்ட அந்தபெண் தீயிட்டு கொளுத்தப்படவில்லையா?

    அசோகரின் காலத்தில் அமைச்சராக இருந்து உண்டு கொழுத்த பார்ப்பன, புஷ்ய மித்ர சுஙகன் அசோகரின் வாரிசை கொன்று, பார்பன சுங்க அரசைநிறுவ வில்லையா? அதற்குப்பின் பவுத்தம் இந்தியாவில் தலை தூக்கவில்லையே!

    சந்திர குப்த மவுரியன், பார்ப்பன தாசனாக இல்லாமல் சமண சமயம் போற்ற தலைப்பட்டபோது, அரண்மனைபுரட்சி செய்து ( இன்றைய நேபாளத்தை போல), அவன் மகனை அரசனாக்கி ஆண்டது பார்ப்பன கொடில்யன் அல்லவா? அற்றோடு சமணமும் அகன்றது! எஙகோ ஒரு சிலர் , அதுவும் தென்னாட்டில் ஒளிந்து கொள்ள, அவரையும் அனல்வாதம், புனல்வாதம் என ஏமாற்று வாதபுரிந்து கழுவிலேற்ற வில்லையா?

    • // அசோகரின் காலத்தில் அமைச்சராக இருந்து உண்டு கொழுத்த பார்ப்பன, புஷ்ய மித்ர சுஙகன் அசோகரின் வாரிசை கொன்று, பார்பன சுங்க அரசைநிறுவ வில்லையா? அதற்குப்பின் பவுத்தம் இந்தியாவில் தலை தூக்கவில்லையே!//

      புஷ்ய மித்ர சுங்கன் உண்டு கொழுத்த அமைச்சனல்ல, மவுரியப் பேரரசை விரிவாக்க உதவிய தளபதி.. பார்ப்பான் தளபதி என்றால் மன்னன் அவனை விட கில்லாடியாக இருக்கவேண்டும்.. இல்லாவிட்டால் மணிமுடி குடுமியாகிவிடும்..

      பார்ப்பான் கையில் ஆயுதம் இருப்பது ஆபத்தானது என்றுதான் அவன் கையில் மணியை கொடுத்து கோவிலுக்கு நேர்ந்துவிட்டார்கள் உங்கள் ஆதிக்க சாதி முன்னோர்கள்..

      // அதற்குப்பின் பவுத்தம் இந்தியாவில் தலை தூக்கவில்லையே!//

      அதற்குப் பின் 6-ம் நூற்றாண்டுவரை பல்லவர் காலம் வரை காஞ்சி பவுத்த மையமாக, இந்தியா முழுவதுமிருந்து வந்த மாணவர்களுக்கு பல்கலை கல்வி வழங்கி வந்தது.. நாளந்தா பல்கலைக் கழகம் மேற்படி குப்தர்களால் இடிக்கப்படவில்லை.. 13-ம் நூற்றாண்டு வரை உலகமுழுதும் இருந்து வந்த மாணவர்களுக்கு பவுத்த ஞானமரபை வழங்கிக் கொண்டுதான் இருந்தது.. இந்திய துணைக் கண்டத்திலிருந்து பவுத்தத்தை துடைத்து வழித்த ’திருப்பணியை’ செய்தது யார் என்று நெசமாகவே உங்களுக்குத் தெரியாதா அய்யா..?!

      • I do not know whether Pushyamitra Sungan was a fat fellow or not.But I do know that this person was instrumental in writing Manu Smiriti.Prior to Manu Smirithi,strong punishments were there for Brahmin murderers.Only Manu Smiriti prescribed mild punishment for Brahmin murderers.A Brahmin murderer’s head will be shaved and sent away from that town or village.That is the punishment prescribed in Manu Smiriti.

      • அம்பி !நீர் ஒரு அரை வேக்காடு மட்டுமல்ல! வெற்று வேட்டும் கூட!
        ‘சிறந்த பார்பன மதத்தினான புஷ்யமித்திரன் கடைசி மெளரிய அரசனின் ‘அமைச்சராக’ ஆனதுடன், இறுதியில் அவரைக்கொன்று பார்பன அரசைநிறுவவும் செய்தார்…அதிகாரத்தை கைப்பற்றியபின், புத்த மததவர் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டார்…….புத்த விகாரங்களையும், 84000 தூண்களையும் (ஸ்தூபிகள்) இடித்தடுடன் மட்டுமன்றி அங்கேயிருந்த பிட்சு களையும், பிட்சுணிகளையும் கொல்லவும் செய்தார்………………பக்கம் 119, பிராமணமதம்-தோற்றமும் வரலாறும்-ஜோசெப் இடமருகு, அலைகள் வெளியீடு

        • // அம்பி !நீர் ஒரு அரை வேக்காடு மட்டுமல்ல! வெற்று வேட்டும் கூட! //

          அய்யா தானியங்கி பீரங்கியே,

          ஜொசப் இடமருகுதான் புஷ்யமித்ர சுங்கனை அமைச்சர் என்றாரா அல்லது தமிழில் மொழிபெயர்த்தவர் சுங்கனை அமைச்சராக்கிவிட்டாரா அல்லது தளபதியை அமைச்சர் என்று அடித்துவிடும் உங்கள் திருகுவேலையா என்று தெரியவில்லை..

          எனக்கு தெரிந்து எல்லா வரலாற்றுக் குறிப்புகளிலும் புஷ்யமித்ர சுங்கனை தளபதி என்றே குறிப்பிடுகிறார்கள்.. ரொமிலா தாப்பருக்கு கூட உங்கள் கற்பனை வளம் இல்லை.. அவரும் “The last of the Mauryas, Brihadratha, was assassinated during an inspection of the troops by the brahman Pushyamitra, the commander of the Army.” என்று சுங்கனை தளபதி என்றே குறிப்பிடுகிறார் (The Penguin History of Early India: From the Origins to AD 1300 – By Romila Thapar, பக்கம் 204)..

  13. அசோகரின் காலத்திற்கு பின்னர் பவுத்தம் சமஸ்க்ருதமயமாகி, பிளவு பட்டு அழிந்தது! மேற்கு இந்தியாவில், தங்கள் பவுத்தர்கள் என்று கூறிக்கொண்டு ஆண்ட பிராமணர்கள் வரலாறு உண்டு! பின்னர் இவர்களே 2000 புத்த அவதார கதைகளை கொண்டு, மகவிஷணு அவதார புராணங்களை ஏற்படுத்தி பிழைக்க தலைப்பட்டனர்! பிராமணர்கள் ஆயுதம் ஏந்துவதில்லை என்பது தங்கள் இனம் ஒருவரை ஒருவர் அழித்துகொண்டு சாககூடாது என்பதற்காகவும், அதற்கென சத்திரிய, வைசிய, சற்சூத்திர முட்டாள்கள்( காட்டுமிராண்டிகள்) அபரிமிதமாக கிடைத்ததாலும் தான்!

    // நாளந்தா பல்கலைக் கழகம் மேற்படி குப்தர்களால் இடிக்கப்படவில்லை.. 13-ம் நூற்றாண்டு வரை //
    முதலில் நாளந்தா பல்கலைகழகத்தில் சமஸ்க்ருதம் நுழைக்கப்பட்டது, பாலி ஒழிக்கப்பட்டது, பார்பனர் தவிர மற்றவர் பயிலக்கூடாது என்ற ஆரிய கொள்கைக்கு ஏற்ப, இடிக்கப்பட்டது? உலகமுழுதும் இருந்து வந்த மாணவர்களுக்கு பவுத்த ஞானமரபை வழங்கிக் கொண்டுதான் இருந்தது..ஏன், யாரால் இடிக்கப்பட்டது? விளக்கமுடியுமா அம்பிகளே!

    • // முதலில் நாளந்தா பல்கலைகழகத்தில் சமஸ்க்ருதம் நுழைக்கப்பட்டது, பாலி ஒழிக்கப்பட்டது, பார்பனர் தவிர மற்றவர் பயிலக்கூடாது என்ற ஆரிய கொள்கைக்கு ஏற்ப, இடிக்கப்பட்டது? //

      இது கேள்வியா இல்ல பதிலா..?!!!

      // உலகமுழுதும் இருந்து வந்த மாணவர்களுக்கு பவுத்த ஞானமரபை வழங்கிக் கொண்டுதான் இருந்தது..ஏன், யாரால் இடிக்கப்பட்டது? விளக்கமுடியுமா அம்பிகளே! //

      இது தெரியாமல்தான் இத்தனை நேரம் பவுத்தத்தைப் பற்றி பொளந்து கட்டிக் கொண்டிருந்தீர்களா..?!!

      • /இது தெரியாமல்தான் இத்தனை நேரம் பவுத்தத்தைப் பற்றி பொளந்து கட்டிக் கொண்டிருந்தீர்களா..?/
        கேள்விக்கு பதிலில்லை ! வழக்கமான குதர்க்க பசப்பல்! ஓ ! இதுதான் அம்பி!

  14. /பார்ப்பான் கையில் ஆயுதம் இருப்பது ஆபத்தானது என்றுதான் அவன் கையில் மணியை கொடுத்து கோவிலுக்கு நேர்ந்துவிட்டார்கள் உங்கள் ஆதிக்க சாதி முன்னோர்கள்../
    ஆயுத மேந்தி வந்த பரசுராமன் சத்திரிய ராமனுடன் தோற்றோடியதுடன் உங்கள் செருக்கு அழிந்து விட்டதே! பார்பனருக்கு வாய்ச்சொல் வீரம்தான் என்பது மகாபாரதப்போரிலும் நிரூபித்தாகிவிட்டதே! கருப்பன் ராமனிடம், வீரத்திலும், மற்றொரு கருப்பன் கிருஷ்ணனுடன் சூழ்ச்சியிலும் தோல்வி கண்டு, பின்னர் ‘உய்ய வழி பொய்யே’ என்று சரித்திரத்தை திரித்து, கீதையை திரித்து, திணித்து அல்லவா எம்மை மூளைச்சலவை செய்தீர்கள்! அம்பெத்கர்-பெரியார் ஆராய்ந்து விளக்கையும் இன்னும் கடைகோடி மக்கள் பக்தியினால் புத்தி மழுங்கி உள்ளனரே! அரசன் உண்மையை உணர்ந்து விட்டால், எதிரியை அழைத்து அரசானாக்குவீர்! திருமலையை அடைத்து கொன்ற வரலாறும், திப்புவை அணைத்து கொன்ற வரலாறும் சமீபத்தில் நடந்தவை தானே!

    • மேலே ராமனை கேவலப்படுத்திவிட்டு இப்ப எங்காளுன்னு எடுத்து கொஞ்சுறீங்க.. சந்தோசம்தான்..

      • ராமனும் , கிருஷ்ணனும் எங்காளுதான்! உங்கள் புராணாக்கதை அபத்தமாய் இருந்தாலும், அதற்கு முன்னரே புத்த ராமாயணம், தசரதஜாதம் என்ற பெயரில் வழங்கி வந்தது! வால்மீகி, வியாச பாரதம் உட்பட 48 ராமாயணங்களை தொகுத்துள்ளார் மணவாளன் என்ற அறிஞர், தமது ‘இராம காதையும், இராமாயணங்களும்’ எனும் நுலில்!

        கிருஷ்ணனோ மராட்டிய சிற்றரசன்! இந்திரனுடனான போரில் மாண்டவன்! கேரளத்தில் பலியை பொலி போட்டவர்களே பலி வருடாவருடம் மீண்டும் வருவதாக கூறி மக்களின் கோபத்தை திசைதிருப்பியது போல, கிருஷ்ணனை கொன்றவர்களே, கீதையில் அவனை கடவுளாக்கி பார்பனர் பெருமையை அவன் வாயாலேயே பகர்வதாய் இட்டுக்கட்டினர்!

        முன்னால் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாக்ரிஷ்ணன் தமது ‘ பாரதீய த்ர்சனம்’ என்றநூலில் குறிப்பிடுவது:ரிக் வேத காலத்தில் இந்திரன் வென்ற இடயர் குல தலைவனாக கிருஷ்ணன் இருந்திக்கலாம். ஆனால் பவத் கீதையில் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுவிட்டார்’ என் கிறார்!

        தகவல்:ஜொசெப் இடமருகு அவர்களின் ‘பிராமண மதம் தோற்றமும் வளர்ச்சியும்’

  15. பாவம்! அம்பிகளின் இந்த அரற்றலுக்கு பிறகு, எனக்கும் கூட இந்த ஆதிக்க? முட்டாள்களின் மேல் கோபமும், ஆயுதம் ஏந்தாத அம்பிகளின் மேல் பரிதாபமும் ஏற்படுகிறது! தமிழக அரசை மன்றாடி நான் கேட்டுக்கொள்வது: ஆதிக்க சக்திகளின் சதியினால் அர்ச்சகராக்கப்பட்ட அனைத்து அம்பிகளையும் விடுவித்து, ஆயுதம் கொடுத்து கார்கிலுக்கும், லடாக்குக்கும் அனுப்பவேண்டும் ! எங்கள் அம்பி தலைமை தாங்குவார்! அப்புறம் பாருமய்யா எஙகள் நாட்டை!நினைக்கும் போதே உதறுதுல்ல?

    • ஒண்ணு மணியாட்ட வைக்கவேண்டியது இல்ல கார்கிலுக்கும், லடாக்குக்கும் அனுப்பவேண்டியது.. ஆண்டைக்கு எவ்ளோ நல்ல மனசு..!!!

      • உங்கள் நல்ல அறிவுக்கும், ஆற்றலுக்கும் எங்களை போல விவசாயம் செய்ய மாட்டிர்கள்! விவ்சாயம் உட்பட வேறு எந்த உடலுழைப்பு வேலையும் செய்தால், உங்கள் குல தர்மத்துக்கு ஆகாது! அதனால், உங்கல் முன்னோர், பரசு ராமன் செய்தை போல நீங்கள் போர்த்தொழில் செய்யலாம்! அம்பிகளின் வீரம் அப்போது தெரிந்துவிடும்!

  16. அன்பிற்கினிய வினவுத் தோழர்களே, வாசகர்களே, தோழர்களே, நண்பர்களே,

    கல்லூரியில் ஒரு முறை பயிற்று மொழி குறித்து விவாதம் வந்த பொழுது ஒரு நண்பர் (பெரியாரியவாதி) தமிழகத்தில் 1970-ல் கலைஞர் கொண்டு வந்த கல்லூரி வரை தமிழ்வழிக்கல்வி திட்டம் பெருந்தோல்வி அடைந்தது என்று கூறிய அவர் ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவாக வாதிட்டார். அதற்கு அவர் பெரியாரின் கீழ்க்காணும் வாசகங்களை மேற்கொள் காட்டினார்.

    ”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

    “தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களைதமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” பெரியார்-‘மொழியும் அறிவும்’ (1957-1962)

    ஆனால் தோழர்.சுப.வீரபாண்டியன் பெ.மணியரசனுடனான ஒரு விவாத்தில் “பெரியார் 01.12.1970 நாளிட்ட ’விடுதலை’ இதழ் கட்டுரையில் தமிழ்வழிக்கல்வியை ஆதரித்து எழுதினார்” என்று கூறினார்.
    http://www.youtube.com/watch?v=zYK_I3BHWzA&feature=youtu.be&t=21m4s

    அதை வேறொரு காரணத்திற்காக எழுதிய வேறொரு கட்டுரையிலும் விளக்குகிறார். “பெரியாரின் கல்விக் கொள்கை தவறு என்று தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். ஆனால் அன்று, தமிழ் வழிக் கல்வியை வரவேற்றுத் தலையங்கம் எழுதியவர் பெரியார்தான். 01.12.1970ஆம் நாளிட்ட ‘விடுதலை’ நாளேட்டில், ‘நமதுகடமை’ என்று தலைப்பிட்டு, அதனை வரவேற்று எழுதியுள்ளார்.”
    http://subavee-blog.blogspot.in/2013/07/5.html

    1970 நவம்பர் 30 அன்று, இனிமேல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழே பயிற்று மொழி என்னும் கலைஞர் கொண்டு வந்த சட்ட முன்வடிவை ஆதரித்துதான் பெரியார் விடுதலை நாளேட்டில் அக்கட்டுரையை எழுதினார் என்றும் கூறுகிறார் சுப வீ.

    என்னுடைய சந்தேகங்கள்:

    1. 01.12.1970 ஆம் நாளிட்ட ‘விடுதலை’ நாளேட்டில், ‘நமதுகடமை’ என்ற தலைப்பில் தமிழ்வழிக்கல்வியை ஆதரித்து பெரியார் எழுதிய கட்டுரையை வைத்து, பெரியார் முன்னர் பேசி வந்த ஆங்கிலவழிக் கல்வி என்ற தனது கருத்தை மாற்றிக்கொண்டார் என்று வைத்துக் கொள்ளலாமா?

    2. நாற்பதாண்டுகாலமாக தமிழைக் ’காட்டுமிராண்டி மொழி’ என்று கூறிவந்த பெரியார், அப்படி மாற்றிக்கொண்டார் என்றால் அதற்கு என்ன காரணம்?

    இது குறித்து அறிந்த நண்பர்கள், தோழர்கள் தயவு செய்து விளக்கவும்.

    நன்றி.

    குறிப்பு:
    01.12.1970 ஆம் நாளிட்ட ‘விடுதலை’ நாளேட்டில், ‘நமதுகடமை’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை இணையத்தில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. இக்கட்டுரை பெரியாரின் தொகுதிகளில் எதிலாவது வந்துள்ளதா? இக்கட்டுரை எங்காவது கிடைத்தால் கொடுத்துதவவும்.

    • //”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

      “தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களைதமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” பெரியார்-‘மொழியும் அறிவும்’ (1957-1962)//

      இந்த கால கட்டத்தில் இந்தி மட்டுமே இந்திய ஆட்சி மொழி என்ற இந்திவெறியகளிடம் மதி மயங்கிய தேசிய வாதிகளிடமும் இருந்து, தமிழ்னாட்டவரை விரைந்து முன்னேற்ற பெரியார் சொன்ன யொசனை இது! அறிவியல்தமிழ் வளர அரசு ஆதரவும், அதுவரை மற்ற மானிலத்தவரிடனமிருந்து போட்டியிட்டு தமிழன் முன்னேற ஆங்கில அறிவு அவசியம் என்பது அவர்கருத்து! தமிழ்னாட்டில் தமிழராட்சி ஏற்பட்ட பின் அவர் கருத்தே 1970 கட்டுரை! முரண்பாடு ஏதுமில்லையே!

    • ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை
      ————————————————————-
      ம.பொ.சிவஞானம் -பூங்கொடி பதிப்பகம்.

      முன்னுரையில் இருந்து: “நூலின் தலைப்பு,சிலருக்கு வியப்பைதரலாம்.ஆம்,ஆங்கில மொழி ஒன்றுதான் அறிவை வளர்க்கும் கருவி என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு!-தமிழ் மொழிக்கும் அறிவுக் கலைகளுக்கும் நெடுந்தொலைவு என்னும் முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு!….”

      “மூடநம்பிக்கை” என்னுஞ் சொல் “பகுத்தறிவு” என்னும் பெயரில் இயக்கம் நடத்துவோரால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கை! காலத்தால் கழிக்கப்படவேண்டிய ஒன்றை கழிக்காமல் கடைப்பிடிப்பது மூடநம்பிக்கை!”மூடநம்பிக்கை” என்னுஞ் சொல்லுக்கு இப்படித்தான் விளக்கம் தந்திருக்கின்றனர் பகுத்தறிவாளர்கள்! இதனைச் சரியான வாதமென்று ஏற்றுக் கொள்வதானால்,ஆங்கிலந்தான் அறிவு மொழி என்று சொல்வதையும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகவே கருத வேண்டும்…”[மேலது நூல் பக்.5]

      “..பகுத்தறிவாளர்கள்,இந்திய மொழிகளை- குறிப்பாக,அவர்களுக்கே தாய் மொழியாக உள்ள தமிழ் மொழியை அறிவுக்குப் புறம்பான மொழி என்று சொல்லவும் துணிந்து விடுகின்றனர்.’ஆங்கிலமே தமிழருக்கு வீட்டு மொழியாக இருப்பதுகூட நாட்டில் அறிவைப் பெருக்குவதற்குப் பயன்படும்’ என்று பகுத்தறிவுப் பெரியார்கள் சொன்னதுண்டு.இதைவிட மூடநம்பிக்கை வேறென்ன இருக்க முடியும்?..”[மேலது நூல் பக்.7]

  17. பெரியார் அரை கை சட்டைதான் போடுவாராம் முழு கை சட்டை போட்டா அது பொருளாதார ரீதியா தேவை இல்லாதது 4 முழு கை சட்ட தைக்கிற துணிய மிச்சம் பன்னினா இன்னொறு அரை கை சட்டை தைச்சுக்கலாமுனு சொன்னவர் பெரியார் அவர் வேசம் போடுற நீங்க எல்லாம் கருப்பு முழு கை சட்ட போட்டு இருக்கீங்க அதனால்தான் போலி பெரியார்னு உங்கள தமிழக போலிஸ் கைது செஞ்சு இருக்குது……..

  18. /ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை
    ————————————————————-
    ம.பொ.சிவஞானம் -பூங்கொடி பதிப்பகம்./

    அய்யா ம பொ சி, திரு வி க , எம் சி ராஜா இவர்களை பெரியாருக்கு எதிராக களமிறக்கியதே பார்பன கும்பல் தான்! ஆனால் இருவரும் அவ்வப்போது உண்மையை, பார்ப்பன ஆதிக்கத்தால் திராவிட தத்துவ இயல் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்! வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்றநூல் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்தும், மெய்கண்டார், வள்ளலார் கோள்கையை ஆதரித்தும் எழுதப்பட்டமை காண்க! கடைசியில் திரு விக உட்பட பலரும், பெரியாரின் கடவுள் மறுப்புக்கு மருண்டாலும், பார்பன ஆதிக்க எதிர்ப்பில் இணைந்தனர்! வ உ சி பெரியாரை கடவுள் அவதாரம் என பூஜித்த வரலாறும் உண்டு! பார்பன தாசர் ம பொ சி திராவிட கட்சிகளின் தயவில் மேல்சபை தலைவராக நீடித்ததையும் (எம் ஜி ஆர் கலைக்கும் வரை)நினைவு கூறுகிறேன்!

    இன்னொரு பார்ப்பனீய எதிர்ப்பாளரும், அதே சமயத்தில் பார்ப்பனர் ராஜாஜிக்கு நண்பராகவும் விளங்கியவர் டி கே சி! பெரியாரும் கடவுள் மறுப்பு கொள்கையையும் கைவிடாமல், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிடாமல் ராஜாஜி உட்பட பல தேசிய, கம்யூனிச்டு தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில்நண்பராகவே இருந்தார் !

  19. //செந்தமிழ் எப்படி தமிழாகும்? தொண்ணூறு சதவீட்தம் புரியாத,அகராதி இல்லாமல் படிக்க முடியாத ஒன்று எப்படி தமிழாகும்//
    ராமன்,
    மற்றவர்களிடம் புள்ளிவிபரம் கேட்கும் நீங்கள் உங்கள் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீர்களா? தொண்ணூறு சதவீதம் உங்களுக்கு புரியவில்லை என்றால் உலகத்துக்கே அப்படிதான் என்று அர்த்தமா?

    செந்தமிழை படிக்க சொல்லி கொடுமைபடுத்துவதாக புலம்பும் நீங்கள் அரசு பொது தேர்வில் தமிழில் மட்டும் தேர்ச்சி அடையாத மாணவர் ஒருவரையாவது காட்டமுடியுமா?.அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாவிட்டாலும் தமிழில் தேறிவிடுவார்கள் அதுதான் எதார்த்த உண்மை.

    “கொங்குதேர் வாழ்க்கை” மனப்பாட செய்யுள் மட்டும் இல்லை.2000 வருட பாரம்பரியமுள்ள ஒரு இனத்தின் வாழ்க்கையும்,பழக்க வழக்கங்களும் பண்பாடும் அதில் உள்ளது.அதை நாங்கள் படித்தால் உங்களுக்கு எங்கு வலிக்கிறது.

    • இராமன்,

      வினவு முதல் பக்கத்தில் தேடல் பெட்டியில் “செம்மொழி” என்றுத் தேடித் பாருங்கள். செம்மொழி மாநாட்டிற்கு நானூறு கோடிகள் செலவென்பது வேட்ககேடானது மற்றும் அதைக் கண்டித்து வினாவில் கட்டுரையெல்லாம் எழுதப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியவில்லை என்றால் தவறு எங்களுடையது அல்ல. தோழர்கள் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி கைது செய்யப்பட்டனர். உங்களுக்கு சிவப்பும் ஆகாது கருப்பும் ஆகாது எனில் பிரச்சினை உங்கள் கண்ணில் இருக்கறது.

      //செந்தமிழ் எப்படி தமிழாகும் ? தொண்ணூறு சதவீட்தம் புரியாத , அகராதி இல்லாமல் படிக்க முடியாத ஒன்று எப்படி தமிழாகும் ///

      அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும். மொழி வளர்ச்சி என்பதுக் குறித்து சிறிய அறிவியல் பார்வையே இருந்தால் போதுமானது இதை விளங்க. இன்று போல எழுதும் தாளோ,கணினியோ இல்லாத காலத்தில் அதாவது அறிவியல் தொழினுட்பம் வளராத காலத்தில் மக்கள் தங்களது கருத்துக்களை, கலைகளை, பண்பாடுகளை தங்களது அறிவுச் செல்வத்தை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்து செல்ல ஓலைசுவடி போன்றவைகளே பயன்படுத்தினர். அதில் சுருக்கமாக (எ.கா: செய்யுள்) எழுதாமல் உரைநடையா எழுத முடியும். அப்புறம் செந்தமிழ் என்று தனியாக ஒரு மொழி இருக்கிறதா?

      அப்புறம் உங்களுக்கு பிரச்சினை தமிழா இல்லை தமிழ் வழிக் கல்வியா? தமிழை ஒரு மொழியாக கற்க அதன் இலக்கணம், இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. அதுப் போல தான் ஆங்கிலம் ஒரு மொழியாக கற்றுக் கொள்ள அதன் இலக்கணம்,இலக்கியம் கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்க்கு ஷேக்ஸ்பியர்,ஷெல்லி போன்ற மாபெரும் கலைஞர்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

      அப்புறம் தாங்கள் கூறும் செந்தமிழ் என்பது தமிழ் மொழி பாடத்தில் மட்டுமே உள்ளது. அதில் செந்தமிழ் இல்லாமல் வேறென்ன மொளையய்யா இருக்கும். மாறாக அறிவியல்,கணிதம்,சமூக அறிவியல் போன்ற பாடங்களில் எங்கு அய்யா உங்களுக்கு புரியாத செந்தமிழ் (செய்யுள்,குறள்,பா) போன்றவை உள்ளது.

      என்னோட கருத்து மற்றும் புரிதல்:
      1.தமிழ் மொழி பாடம் என்பது, தமிழைக் கற்றுக் கொள்ள மட்டுமே. தமிழைக் கற்றுக் கொள்வதென்பது தாங்கள் சொல்லும் செந்தமிழையும் புரிந்து கொள்வதும் அடங்கும். அது மட்டுமல்லலாமல் வேறு மொழிச் சொற்களுக்கு நிகராக தமிழ் மொழியில் சொற்களை உருவாக்குவதும் அடங்கும்.

      2.ஆங்கில மொழிப் பாடம் என்பது, ஆங்கிலம் கற்றுக் கொள்ள மட்டுமே.அதில் ஆங்கில இலக்கணம்,இலக்கியம் கற்றுக் கொள்வதும் அடங்கும். அது மட்டுமல்லலாமல் அதன் நீட்சியாக ஆங்கில மொழியில் உள்ள அறிவியல் நூற்களை கற்றறிவதும் அடங்கும்.

      3.தமிழ் வழிக்கல்வி என்பது, தாங்கள் நினைப்பது போல செந்தமிழைக் கற்பது அல்ல, மாறாக தமிழில், அதாவது வளர்ந்த நிலையில் உள்ள தமிழ்(அதாவது தற்போதய உரைநடை வடிவம்) வழியில் அறிவியல்,கணிதம்,கணிப்பொறியியல்,கட்டுமானப் பொறியியல்,மின்னியல்,சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்றுக் கொள்வது.

      இதில் மொழிப் பாசம் என்ன வேண்டிக் கிடக்கிறது. இது இயல்பானது. அறிவியல்பூர்வமானது.

      நன்றி.

      • //தமிழ் மொழி பாடம் என்பது, தமிழைக் கற்றுக் கொள்ள மட்டுமே. //

        நல்லது . நானும் அதை ஏற்று கொள்கிறேன் . தாய்மொழியில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

        //தமிழைக் கற்றுக் கொள்வதென்பது தாங்கள் சொல்லும் செந்தமிழையும் புரிந்து கொள்வதும் அடங்கும்//

        இது திணிப்பு . இது தான் தமிழ் என்கின்ற போர்வையில் செத்துவிட்ட மொழியை பரிமாறுவது . இல்லாத தமிழர் பெருமையை பொங்க வைப்பது. தமிழ் இலக்கியம் படிப்பது கிரேக்க மொழியை படிப்பது போல . இளைஞர்களுக்கு ஒன்றும் புரிவது இல்லை . கடினமான வாழ்க்கைக்கு உதவாத சொற்களை , உதவாத வரிசையில் தேமா புளிமாவோடு எழதி என்ன பயன் .

        இப்படி புரியாத ஒன்றை படிப்பதற்கு , அறிவியலை ஆங்கிலத்தில் படித்து விடலாமே ?
        உங்க புரியாத மொழியை படிக்க முடியுமாம் ஆனால் ஆங்கிலத்தில் அறிவியலை படிக்க முடியாதாம் .

        இப்படி எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க டார்ச்சர் பண்றதுனால மதிய தர வர்க்கம் , இந்தியும் பெறேஞ்சும் படிக்குறாங்க

        //2.ஆங்கில மொழிப் பாடம் என்பது, ஆங்கிலம் கற்றுக் கொள்ள மட்டுமே.அதில் ஆங்கில இலக்கணம்,இலக்கியம் கற்றுக் கொள்வதும் அடங்கும்//

        ஆங்கிலம் பேச முதலில் உதவ வேண்டும் . இலக்கியம் தேவை இல்லை.

        இலக்கியம் ரசனை ஆர்ட்ஸ் எல்லாம் அடிப்படை தேவைகள் பூர்த்தியடைந்த பிறகு சேர்க்கப்பட வேண்டியவை . விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்து ரசிக்கலாம் . வசந்தவள்ளியின் பந்தாடும் சிறப்பை படித்து மகிழலாம் . ஆனால் அதை கட்டாய பாடம் ஆக்குவது தேவை இல்லாதது .

        //3.தமிழ் வழிக்கல்வி என்பது, தாங்கள் நினைப்பது போல செந்தமிழைக் கற்பது அல்ல, மாறாக தமிழில், அதாவது வளர்ந்த நிலையில் உள்ள தமிழ்(அதாவது தற்போதய உரைநடை வடிவம்) வழியில் அறிவியல்,கணிதம்,கணிப்பொறியியல்,கட்டுமானப் பொறியியல்,மின்னியல்,சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்றுக் கொள்வது//

        முதலில் செத்துவிட்ட செந்தமிழை திணிப்பு என்றேன் . அதே போல வளராத மொழியை வைத்து அறிவியல் படிப்பதால் கிணற்று தவளையாகதான் இருக்க முடியும் . இது இன்னொரு விதமான திணிப்பு . சீனிவாசன் ராமனுஜன் ஆங்கில வழி கணித புத்தகத்தை படித்ததால்தான் உலக அளவிற்கு தன பங்களிப்பை தர முடிந்தது .

        //இதில் மொழிப் பாசம் என்ன வேண்டிக் கிடக்கிறது. இது இயல்பானது. அறிவியல்பூர்வமானது//

        தமிழ்ல எகோ சிஸ்டம் இருந்தா பண்ணலாம் . அது ஆகுற காரியம் இல்லை .

        • // இது தான் தமிழ் என்கின்ற போர்வையில் செத்துவிட்ட மொழியை பரிமாறுவது . இல்லாத தமிழர் பெருமையை பொங்க வைப்பது. தமிழ் இலக்கியம் படிப்பது கிரேக்க மொழியை படிப்பது போல . இளைஞர்களுக்கு ஒன்றும் புரிவது இல்லை . கடினமான வாழ்க்கைக்கு உதவாத சொற்களை , உதவாத வரிசையில் தேமா புளிமாவோடு எழதி என்ன பயன் . //

          ராமன் அவர்களே,

          கொங்கு தேர் வாழ்க்கை என்ற சங்கப்பாடல் பிரபலமானது திரைப்படம் மூலமாக.. இல்லையெனில் அதுவும் தங்களுக்கு தெரிந்திருக்காது.. அதன் பொருளை தெரிந்து கொள்ள தலைப்பட்டிருந்தால் தமிழ் ஏன் சாகாது என்பது புரியும்.. ”பயிலியது கெழீஇய நட்பின்” என்ற வார்த்தைகளால் மனைவியை/காதலியை ”உயர்ந்த நட்பு பேணப் பயின்றவள்” என்று நட்பு பாராட்டும் பண்டைய தமிழரின் உயர்ந்த பண்பாடும் வாழ்வியலும் புரியும்.. செறியெயிற்று அரிவை என்ற சொற்கள் நெருக்கமான அழகிய பற்கள் கொண்ட பெண்ணின் முத்துச் சிரிப்பை (பான் பராக் கறையுடன் பல்லைக் காட்டும் வட இந்திய அழகிகளுடைய இடைவெளி விட்ட சிரிப்பை ஒப்பு நோக்குக) ரசித்த தமிழர்களின் அழகியலும், ரசனையும் தெரியும்.. தமிழின் சுவையை உணர்த்தும் நல்லாசிரியர்களோ, பிற வாய்ப்புகளோ தங்களுக்கு கிட்டவில்லை என எண்ணுகிறேன்..! தேமா புளிமா இலக்கணத்தை இலக்கியத்துடன் சேர்த்து குழப்பாதீர்கள்..!

        • இராமன்,

          தமிழ் மொழிப் பாடம் என்பது தமிழைப் பற்றி படிப்பது,அறிவது,கற்றுக் கொள்வது மட்டுமேயன்றி வேறேதும் அல்ல. தமிழ் மொழியாவது அதனுடைய இலக்கணம்,இலக்கியம் ஆகியவைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு மொழியும் இந்த சமூகம் மாறும் போது பரிணமித்து தான் வருகிறது. தமிழ் மொழியும் அதற்க்கு விதி விலக்கல்ல. “செந்தமிழ் செத்து விட்டது” என்பது உங்கள் அறியாமையால் கூறுகிறீர்கள். செந்தமிழ் என்று ஒரு மொழி தனியாக இருக்கிறதா?

          ஒரு இனத்தின்,சமுதாயத்தின் வரலாறு அந்தந்த காலகட்டத்தின் சமுதாய வளர்ச்சிக்கேற்ப உள்ள மொழியில் (எ.கா: செய்யுள்) எழுதப்படுகிறது. தற்போதய நிகழ்வுகள்,கருத்துக்கள்,கட்டுரைகள் என்ன செய்யுள் வடிவிலா எழுதப்படுகின்றன? வினவையே எடுத்துக் கொள்ளுங்கள் என்ன செய்யுளா எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் உரைநடை வடிவில் தானே.

          உங்களுக்கும் அந்த “செந்தமிழை” படிப்பதற்கு விருப்பம் இல்லையென்றாலும் நமக்கு வேறு வழியில்லை. நமது பழைய வரலாறு உரைநடை வடிவில் இல்லை. அது சுருக்கமான (எ.கா:செய்யுள்) வடிவில் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல், என்னமோ மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் செய்யுள் தான் படிப்பது போல மிகவும் அலுத்துக் கொள்கிறீர்கள்.

          தாங்கள் சொல்வது போல தமிழிலேயே அனைத்தையும் கற்றுத தேறுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்பது உண்மையே. ஆனால் அதற்காக அதற்க்கு வாய்ப்பே இல்லை என்பது போல தாங்கள் சொல்வது சிறுபிள்ளை பிதற்றுவது போல் தான் உள்ளது. அதாவது அது ஒரு மூடநம்பிக்கை. சரி, தமிழ் முற்றாக பாட மொழியாக முடியாது என்பதை ஆணித் தரமாக எடுத்தாள வேண்டும். அதை தாங்கள் செய்யவில்லை.

          கடைசியாக நான் சொல்லிக் கொள்வது. சமத்கிருதம் செத்த மொழி என்று நாங்கள் கூறுவதில் தங்களுக்கு எங்கோ வலிக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் தமிழ் செத்து விட்டது என்று கூற முடியாமல் செந்தமிழ் செத்து விட்டது என்று உளறுகிறீர்கள். இந்த கூற்றில் உள்ள வன்மத்தை எம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
          செந்தமிழ் என்பது தமிழ் மொழி வளர்ச்சியின் ஒரு கட்டம். தமிழ் இன்று ஒரு வளர்ந்த நிலையில் உள்ளது. இன்னும் நீங்கள் கருத்து முதல்வாதி போல இன்னும் மக்கள் செந்தமிழில் தான் படித்துக் கொண்டிருப்பது போல பேசித் திரிகிறீர்கள் என்றால் அதற்க்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை.

          நன்றி.

          • கடவுள் இல்லைன்னு சொன்னவுடனே , இவன் சாத்தானோட ஆளாத்தான் இருக்கணும் அப்படின்னு அனலிசிஸ் பண்ணுவாங்களே, அந்த மாதிரி கடைசியிலே வந்து நிற்பது தனி நபர் தாக்குதல். சரக்கு தீர்ந்தவுடன் வருவது தனி நபர் தாக்குதல்.

            இவன் இன்ன சாதிகாரனா இருப்பண்டா , அதனால அப்படி சொல்றான் .
            பெரியார் நல்லா சாதியை மனதில் விதைத்துவிட்டார்

  20. தெளிவான விளக்கம்! ஆனால் விதண்டாவாதத்திற்காகவே பின்னூட்டமிடும் சிலருக்கு புரியவேண்டுமே!

  21. அடிக்கடி மாவோ இஙகிதமின்றி ஏதொ பின்னூட்டமிடுகிரார்! சிவப்பு அவர்கள் சிறப்பாக பதிலளித்தபின்னரும் பிளிற்றும் இந்த அம்பிகளுக்கும், மாவோவுக்கும் என்ன தொடர்பு?நிலனமற்றோருக்கு நிலம் கேட்டு ஏன் பெரியார் போராடவில்லை என்னும் மாவோவே, அவர் முன்னெடுத்தது சாதி ஒழிப்பு, கல்வி,அரசு வேலையில் சமவாய்ப்பு என்பதும் தானே! சாதீயம் ஒழிந்தால்
    கல்வினாலும், வேலைவாய்ப்பினாலும் சமதர்மம் மலரும் என அவர் நினைத்திருக்கலாம்! பார்பன்ருக்கு பக்கவாத்தியமாக மாவோ, ஜொசெப் அம்பிகளை அறிவீர் நண்பர்களே! அன்று தீவிர இடதுசாரியம் பேசிய ட்ராட்ஸ்கியை லெனின் விமரிசித்தது தோழர்கள் படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன்! இந்த பார்ப்பன தாசர்களின் இடது சாரியமும் அத்தகையதே!

    • குருவுக்கு தப்பாத சீடர்கள்.

      அஜாதசாத்துருவும் அதையே செய்கிறார்.இன்று இந்தியாவை அவமானப்படுத்தி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது சாதியும் சாதிக்கேற்ற தொழில்முறையும் தான்.

      இதை நான் அவர்களுக்கு கட்டாயக் கல்வியும் தொழில்கல்வியும் வேண்டும் என்று எழுதியிருந்தேன். அது இந்த முதலாளித்துவ அரசால் ஒரு போதும் தீர்க்க முடியாது என்பது போக இதை இந்தியபாட்டாளிவர்க்க அரசால் மட்டுமே சாத்தியமான ஒரு நிலை.

      இதுவே! வரலாறு போட்டுவிட்ட இரும்புசூட்டு அடையாளத்தை மாற்றி மனிதர்களாக அவர்களும் வாழ்வதற்கான ஒரே ஒரு வழி.

      முதலாளித்துவ அரசிடம் ஒதுக்கீடு கேட்டு சாதியடையாளத்தை நிரந்தரமாக பதிந்திருக்கும் படி செய்வதற்கு “வேலைவாய்ப்பு” என மாற்றி கட்டாயக்கல்வியை “கல்வி” என மாற்றி பித்தலாட்டம் செய்கிறார் இந்தசீடர்.

      பிராமணியத்தின் முதுகில் சவாரி செய்துகொண்டு அடக்கியொடுக்கப்பட்ட மக்களான தலித்துகளுக்கு நீலிக்கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பது ஈரோடுராமசாமியின் வாழ்நாள் காலத்தின் பத்தில் ஒருபகுதி காலத்தைக் கூட தாண்ட போவதில்லை.

      உங்கள்சமூகவெறி கொள்கை ஒழிக!.

      • சிறுதிருத்தம்:

        தொழில்கல்வியை வேலைவாய்ப்பாக மாற்றி என வாசிக்கவும்.

        • திரு மாவோ அவர்களே! பிராமணீய எதிர்ப்பு ஏன் முன்னெடுக்கப்பட்டது எனபதை அறிந்தால் இப்படி பெரியாரை அவமதிக்கமாட்டீர்கள்! பெரியாரும் அம்பேத்கரும் சமகாலத்தில் ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுத்து, பிராமணிய மத மாயையை வீழ்த்தினால் ஒழிய தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட (இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடு இருந்தாலும்) மக்கள் சுய மரியாதையுடன் வாழ்ந்து, கல்வி , வேலைவாய்ப்பு பெறுவது இயலாது என்று பாடுபட்டனர்! அம்பேதர், ‘தமிழரும், வட இந்தியாவில் நாகர்கள் என வழங்கப்படும் பூர்வகுடிகளும் ஒரே இனமாதல் வேண்டும்.தமிழரின் திராவிட கலாச்சாரமே, ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் (அகண்ட பாரதம்?) இருந்திருக்ககூடும் என்ற கருத்துள்ளவர்’, பெரியாரை புத்த மத்தில் சேர அழைத்தபோது கூட ‘மதம் மாறினால் நான் இந்து மதத்தை விமரிசிக்க தார்மீக உரிமை கிடையாது’ என மறுத்தவர்! இருவரும் ஏன் இந்திய பொதுவுடமை கட்சியில் செர்ந்து சமதர்மத்திற்கு உழைக்கவில்லை? அப்போதும் பொதுவுடமை வாதிகள், பார்பன மேலாண்மையை கண்டிக்கவோ, திராவிட கலாசாரத்தை அங்கீகரிக்கவோ இல்லை, அவர்கள் அப்போதே ஒரு இந்தியா, ஒரே மொழி(இந்தி) என்ற சித்தாந்தத்தில்தான் இருந்தார்கள். பெரியாரின் நண்பர்கள் சிஙகாரவேலரும், ஜீவாவும் பார்பன கூடாரத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை!

          தமிழ் இனத்தை கூறுபோட்டு சிதைத்து வரும் ஆரியம், இலஙகை வாழ் தமிழரை நாடற்றவராக்கி, இந்திய தமிழரை மொழியற்றவராக்க முனைகிறதல்லவா? பொதுவுடமை வாதிகள் தமிழினம் அழிந்து கொண்டிருக்கையில், அது வேறுநாடு, இது வேறுநாடு என திண்ணைப்பேச்சு அல்லவா பேசிக்கொண்டிருந்தனர்!பொதுவுடமைக்குள்ளும் இனமான சுய உரிமை வேண்டும்! இலஙை தோழர் தா. கலையரசன் முகனூலில் பெரியாரை புகழ்வதை படித்தீர்களா?

          • திரு அஜாதசாத்துரு!

            பிராமணீய எதிர்ப்பு ஏன் முன்னெடுக்கப்பட்டது. ஏன்? என்று கேட்டால் அது அடக்கியொடுக்கப்பட்ட தலித்மக்களுக்காக அல்ல.
            எந்த விளைவுகள் வந்தாலும்..அந்த பல பத்தாக இருக்கிற சாதியமைப்புகளை தீர்க்குமா தீர்க்க முடியாதா என்கிற முன்னோக்கு பார்வையும் இல்லாமல் முதலாளித்து அரசுக்குள் ஒரு “அரசியல்அந்தஸ்து” தேடுவது பற்றியது அல்லாமல் வேறு ஒன்றுமே! இல்லை.

            இதை விட பெரியார் ஏதாவது சாதித்திருக்றார் என்று கருதினால்? உங்களைப்போல சிவப்பு போல உள்ளவரின் கற்பனை மண்டைக்குள் மட்டுமே!.

            இதைவிட அடுத்த உங்களின் ஈழம்பற்றிய கணிப்பு எல்லா கருத்துக்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும் போல் இருக்கிறது.

            “தேசியயினங்களின்சுயநிர்ணய உரிமை” இரண்டாம் அகிலம் மூன்றாம்அகிலம் மரித்தவுடன் இனங்களின் சுயநிர்ணய உரிமையும் மரித்துவிட்டது.

            இன்று சுயநிர்ணயஉரிமையை தத்தெடுத்துள்ளவர்கள் ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளுமே.உதாரணம்: கிழக்குக்கு தீமோர் கொசோவோ சைப்பிரஸ் போன்ற நாடுகள்.அது ஏகாதிபத்தியங்கங்களின் சுயதேவையில்-நலன்களில் பிரிக்கப்பட்டவை எழுதப்பட்டவை என்பதை மறக்கக் கூடாது.

            இலங்கையரசில் பல்லாண்டுகாலமாக இலங்கையான தீர்வாக இலங்கையரசிலை பார்க்காமல் இனத்திற்கான மதத்திற்கான தீர்வாகத்தான் வளர்ந்து வந்திருக்கிறது.அரசியலில் “அந்தஸ்து” தேடுகிற நடவடிக்கையாகவே இருந்திருக்கிறது.

            இதில் இலங்கைப்பாட்டாளிகளுக்கு எந்த சம்பந்தமும் இருக்கவில்லை.அவர்கள் அறிந்து செய்த குற்றம் தேர்தல் காலத்தில் புள்ளடி போட்டது தான. இருபக்கத்திலும் யார் இனவெறியை கூடுதலாக கிளப்புகிறார்களோ அவர்களே ஆட்சிக்கு வரமுடியும்.

            அதில் இருந்து வெளிக்கிழம்பியதே புலிஎன்கிற பயங்கரவாத அமைப்பு இதையும் காலத்திற்கு ஏற்றமாதிரி ஏகாதிகத்தியங்கள் தமது சூழ்ச்சி திறனால் கையாண்டு வந்திருக்கின்றன. அழிவை சம்பாரித்துக் கொண்டது மட்டும் இலங்கை பாட்டாளிவர்கம்.

            இதில் உங்களுக்கு எங்கே ஆரியம் வருகிறது?.எங்கெங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ அங்கங்கெல்லாம் பார்ப்பணீயஎதிர்ப்புடன் சமூகம் அளித்துவிடுகிறீர்களே!

            பெரியாரின் ஆலோசனைகளை தூக்கியெறிந்து விட்டு வேறு திராவிடம் தாண்டி சிந்திக்க முடியுமா? என்று உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள்….?

            • அன்னன் மாவு தந்தை பெரியார் பார்ப்பனீயத்தை மட்டும் எதிற்க்க காரனம் ஏன் என்று கேள்விக்கு பதில் நமது நாட்டினை பொருத்த வரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட அதிகம் கொலொட்சி வந்தது சாதிய அடக்கு முறைகளும் தீண்டாமையும் தான் முதலில் அதை ஒழிப்பததுதான் சரி இதற்க்கு ஏகப்பட்ட உதாரணங்களை தர முடியும் அம்பேத்கர் அதிகமான வாடகை குடுக்க தயாராக இருந்தும் அவருக்கு வீடு குடுக்க மேல் சாதிக்காரன் விரும்பவில்லை ஐ ஏ எஸ் கலக்டராக இருந்த தலித் செருப்பு சுமந்தார் வசதியான தலித் தேனி மாவட்டத்த சேர்ந்தவர் சாதி கொடுமைகளை தாங்க முடியாமல் இசுலாத்தில் இனைந்தார் என்ற செய்திகளே எனவே முதலில் பார்ப்பணிய இந்து மத அம்சமான சாதி கொடுமைகளை ஒழிக்க முக்கியத்துவம் குடுத்தார் கம்மூனிசத்தை தள்ளி போடுவோம் கம்மூனிசம் தேவை இல்லை என்று சொல்லவில்லை கம்மூனிசத்தை ஆதரித்தார் அனால் அதை செயல் படுத்த இப்பொழுது கடினம் முதலில் சாதி ஒழிப்புதான் என் வேலை என்றார் இதில் எதுவும் தவறு இருப்பதாக தோன்றவில்லை அதற்க்காக அவர் சாதிய வாதி பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்தார் என்று அவதூறு பேசுவது சரி அல்ல இப்பவும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் மாற்று சாதி கீழ்நிலை ஊழியர்களால் மதிக்கப்படுவது இல்லை என்று சொல்லப்பட்டுகிறது என்வே ஒழிக்க பட வேண்டியது சாதிய ஏற்ற்த்தாழ்வுகள் தான் …..

              • // நமது நாட்டினை பொருத்த வரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட அதிகம் கொலொட்சி வந்தது சாதிய அடக்கு முறைகளும் தீண்டாமையும் தான் முதலில் அதை ஒழிப்பததுதான் சரி //

                ஜோசப் அவர்களே,

                ஒரு பதிவில் உங்கள் முன்னோர்கள் தேவந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறியிருந்தீர்கள்.. அவர்கள் மீது சாதிய அடக்குமுறைகள் வரக் காரணம் என்ன..? தீண்டாமை பாயக் காரணம் என்ன..?! அரசியல், பொருளாதார ரீதியில் நிலமற்ற கொத்தடிமைகளாக்கப்பட்டார்கள், கொத்தடிமைகளாகவே நிலை நிறுத்தப்பட்டார்கள்.. கொத்தடிமைகள் எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எளிய இலக்கு என்பதைத் தவிர மத,வர்ணாசிரமக் காரணங்களைக் கூற இயலுமா..?! இயலாது.. முயன்று பாருங்கள்.. ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள் மேலும் கொத்தடிமை அடக்குமுறைகள் நிலவக் காரணம் நிலவுடமை இன்மையும், அரசியல் பொருளாதார சுரண்டலுமே.. கூடவே வர்ணாசிரமம் வசதியாக வந்து வாய்த்தது அல்லது வசதிக்காக உருவாக்கப்பட்டது..

                // இதற்க்கு ஏகப்பட்ட உதாரணங்களை தர முடியும் அம்பேத்கர் அதிகமான வாடகை குடுக்க தயாராக இருந்தும் அவருக்கு வீடு குடுக்க மேல் சாதிக்காரன் விரும்பவில்லை ஐ ஏ எஸ் கலக்டராக இருந்த தலித் செருப்பு சுமந்தார் வசதியான தலித் தேனி மாவட்டத்த சேர்ந்தவர் சாதி கொடுமைகளை தாங்க முடியாமல் இசுலாத்தில் இனைந்தார் என்ற செய்திகளே //

                ஒருவரது சமுதாயமே பிற சமுதாயங்களின் கொத்தடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும், நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகச் சூழலில், அவரது பதவியும், பணமும் பிற சமூகத்தவரிடம் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் அவல நிலையே நிலவுகிறது அல்லாது அவரது படிப்பும் திறமையும் மதிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு.. மார்ட்டின் லூதர் கிங்கை மதிக்காமல் தங்களது அடிமைகளில் இருந்த வந்த ஒருவர் என்ற நினைப்புடன் வெறுத்த வெள்ளையர்கள் எண்ணிக்கை கணிசமானது.. இசுலாத்தில் இணைந்தால் கொத்தடிமைச் சமுதாயம் என்ற அடையாளத்திலிருந்து இசுலாமிய சமுதாயம் என்ற பெரிய அடையாளம் கிட்டும் என்றாலும் அங்கும் போராடித்தான் முன் வரவேண்டும்.. சென்ற நூற்றாண்டில் சாணார்கள் என்று இழிவு படுத்தப்பட்ட சமுதாயம் பொருளாதார ரீதியில் எழுந்து இன்று அண்ணாச்சி என்றழைக்கப்படும் போது சாதியும், மதமும் குறுக்கே நிற்க முடிந்ததா.. ஒடுக்கப்பட்டவர்கள் கொத்தடிமை நிலையிலிருந்து விடுபட மார்க்சீயர்கள் முன்வைக்கும் இயல்பான தீர்வு எது..?!

                // முதலில் பார்ப்பணிய இந்து மத அம்சமான சாதி கொடுமைகளை ஒழிக்க முக்கியத்துவம் குடுத்தார் கம்மூனிசத்தை தள்ளி போடுவோம் கம்மூனிசம் தேவை இல்லை என்று சொல்லவில்லை கம்மூனிசத்தை ஆதரித்தார் அனால் அதை செயல் படுத்த இப்பொழுது கடினம் முதலில் சாதி ஒழிப்புதான் என் வேலை என்றார் இதில் எதுவும் தவறு இருப்பதாக தோன்றவில்லை //

                உங்களுக்குத் தோன்றவில்லை.. கம்யூனிஸ்டுகளுக்கு தோன்றியிருக்க வேண்டுமே.. சாதிக் கொடுமைகளுக்கு இலக்காகும் சமுதாயங்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் எது இல்லையோ அதை பெற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை அவர்களே எதிர்கொண்டு சமநிலையை கொண்டு வந்திருப்பார்கள்.. எது இல்லை.? நிலம், அதன் மூலம் வாழ்வாதாரமும், பொருளாதாரமும்..

                பெரியார் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை என்று யார் சொன்னது..?! கீழ் தஞ்சைப் போராட்டம் கருகிப் போய் இன்னும் சாட்சியாக நிற்கிறது.. இன்று சாதியும் ஒழியவில்லை, பார்ப்பனீயமும் ஒழியவில்லை, பெருநிலவுடமைச் சமூகமும் ஒழியவில்லை.. பெருகிப் போனது சாதிக்கட்சிகளும், சாதி அரசியலும், பெரியாரின் சிலைகளும் தான்..

                • கொத்தடிமைக்கும் நிலவுடைமின்மைக்கும் காரணமாக மத வர்ணாசிரமக் கொள்கைகள் காரணமாக இருக்க முடியுமா என்று கேட்கிறார் அம்பி. பெருந்தன்மையுடன் அதை விளக்க முயன்று பாருங்கள் என்று அறிவிக்கிறார்.

                  அவித்த நெல் தீட்டு; பச்சை நெல் தீட்டல்ல என்கிறது மனு தர்மம். அதாவது நிலத்தில் கொத்தடிமையாக்கப்பட்ட தலித்துகளின் வியர்வையில் கிடைக்கிற விளைச்சல் தீட்டல்ல. ஏனெனில் அவன் உழைக்க வேண்டும் என்பது அவன் விதி. ஆனால் சமூக கலப்பு ஏற்பட்டால் உழைப்பதற்கே பங்கம் வரும் என்று நினைக்கிற பார்ப்பனியம் அவித்த நெல் தீட்டு என்கிறது. ஒரு தலித்துடன் சமூகத்தைப் பிரிப்பதன் நோக்கம் அவனது உழைப்பைச் சுரண்டுவதற்கன்றி வேறல்ல. அதை பார்ப்பனியம் இன்று வரை முழுமூச்சாக செய்துவருகிறது.

                  இந்தியாவில் பார்ப்பனியம் மட்டுமல்ல மேலை நாடுகளில் நிலவுடமைச் சமூகத்தில் கிறித்தவம் தொழிலாளிகளை தன்பங்கிற்கு சுரண்டியது என்பது வரலாறு. ஆப்ரிக்க விவசாயி எழுதுகிற பொழுது, “வெள்ளைக்காரன் முதன்முதலில் வந்த பொழுது அவன் கையில் பைபிள் இருந்தது. எங்கள் கையில் நிலம் இருந்தது; ஆனால் இன்றோ எங்கள் கையில் பைபிள் இருக்கிறது; அவன் கையில் நிலம் இருக்கிறது” என்றார். இது தான் மதம் நிலவுடமையுடன் கொண்ட கள்ள உறவு.

                  இந்தியாவில் நிலவுடமையின்மையில் பார்ப்பனியத்தின் கொடூரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. அவித்த நெல் தீட்டு என்பது மட்டுமல்ல. மன்னர் காலத்தில் சாதிகளுக்கு ஏற்பத்தான் வரி வசூல் செய்யப்பட்டது. இடங்கை வலங்கை சாதிகள் வரி கட்டியே செத்த பொழுது சோழர்களின் அரசாட்சியில் பார்ப்பனர்கள் கங்காணிவேலை பார்த்தவர்கள்.
                  இதில் வர்ணசாஸ்ரம் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்கிறார். ஆனால் நைச்சியமாக யாருடைய வசதிக்காக என்பதைச் சொல்ல வாய்திறக்க மறுக்கிறார். ஆனால் அம்பேத்கர் வருணாசிஸ்ரமத்தின் கோவணத்தை கறாராக அம்பலப்படுத்தினார். சாதி தொழில்களைப்பிரிப்பதல்ல; தொழிலாளர்களைப் பிரிப்பது என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொன்னார்.

                  இன்றைக்கு கம்யுனிசம் பேசுகிற மாவோ பெரியவர் மகா பெரியவராக தோழர் சிவப்புவிடம் ஒரு வாதத்தை முன்வைத்தார். தேங்காய்மூடிக்கு கூட வழியற்ற பார்ப்பனர்கள் இருக்கிறார்களே; இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? என்றார். ஆனால் வறுமைகாரணமாக பார்ப்பனர்கள் கட்டிட வேலைபார்க்கவோ மூட்டை தூக்கவோ சித்தாளாகவோ சாக்கடையல்லவோ வந்துவிடவில்லை என்பதை தோழர் சிவப்பு சரியாக சுட்டிக்காட்டினார். இதற்கான விடை பார்ப்பனியம் தான் என்பது பதிவிடுகிற பார்ப்பனர்களுக்கும் தெரியும். இதற்கான தத்துவத்தின் மூலம் என்ன? பார்ப்பனியம் தான். அது அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைப் போல தொழில்களைப் பிரிக்கவில்லை. தொழிலாளர்களைப் பிரித்தது! பார்ப்பனியத்தின் கொடூரம் நிலவுடைமையின்மையின் ஆணி வேர் என்று சொல்வது மிகையல்ல.

                  • //அவித்த நெல் தீட்டு; பச்சை நெல் தீட்டல்ல என்கிறது மனு தர்மம். அதாவது நிலத்தில் கொத்தடிமையாக்கப்பட்ட தலித்துகளின் வியர்வையில் கிடைக்கிற விளைச்சல் தீட்டல்ல. ஏனெனில் அவன் உழைக்க வேண்டும் என்பது அவன் விதி. ஆனால் சமூக கலப்பு ஏற்பட்டால் உழைப்பதற்கே பங்கம் வரும் என்று நினைக்கிற பார்ப்பனியம் அவித்த நெல் தீட்டு என்கிறது. ஒரு தலித்துடன் சமூகத்தைப் பிரிப்பதன் நோக்கம் அவனது உழைப்பைச் சுரண்டுவதற்கன்றி வேறல்ல. அதை பார்ப்பனியம் இன்று வரை முழுமூச்சாக செய்துவருகிறது.//

                    நெல்லை அவிப்பதற்கும் சமூக கலப்புக்கும் என்ன தொடர்பு..?! நெல்லை அவிப்பது வென்னீர் காய்ச்சுவதை விட சற்று கடினமானதுதான்.. ஆனால் விளைவிப்பது போன்று கடினமானதல்ல.. அவ்வப்போது தேவையான நெல்லை சில மணி நேரங்களில் அவித்து காய வைப்பது சர்வ சாதாரணமான வழக்கம்தான்.. எல்லா வீடுகளிலும் பிறர் உதவி தேவையின்றி அவர்களாகவே நெல் அவித்து, பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.. உங்கள் வீட்டில் நெல் அவித்ததே இல்லையா.. விதைக்க முடியாத அவித்த நெல்லை தீட்டு என்று பெயரிட்டு மனுவாதிகள் உளறியதை நீங்கள் எதெதெற்கோ முடிச்சு போட்டு பார்ப்பனியத்தில் வந்து நிற்பதுதான் பகுத்தறிவா..?!

                    // மன்னர் காலத்தில் சாதிகளுக்கு ஏற்பத்தான் வரி வசூல் செய்யப்பட்டது. இடங்கை வலங்கை சாதிகள் வரி கட்டியே செத்த பொழுது சோழர்களின் அரசாட்சியில் பார்ப்பனர்கள் கங்காணிவேலை பார்த்தவர்கள். //

                    சோழர் காலத்துக்குப் போவதால் என்ன பயன்..?! எல்லா மன்னர்கள் ஆட்சியிலும் சாதிகள் இருந்தன, சாதிக்கேற்ற வரியும் இருந்தது.. எல்லா சாதிகளும் வரிகட்டியே செத்தால் சோழப்பேரரசு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைத்திருந்தது எப்படி..?! இது பற்றி ஏற்கனவே விளக்கி ஓய்ந்தாகிவிட்டது.. சுருக்கமாகச் சொன்னால், மன்னர்களின் ஆட்சி காலமும் ஒரு நிலவுடமைச் சமுதாயமே, நிலமற்ற விவசாய கொத்தடிமைகள் உழைப்பு சுரண்டப்பட்டது, உலகம் முழுவதும் அதுதான் நிலைமை..

                    // இதில் வர்ணசாஸ்ரம் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்கிறார். ஆனால் நைச்சியமாக யாருடைய வசதிக்காக என்பதைச் சொல்ல வாய்திறக்க மறுக்கிறார். ஆனால் அம்பேத்கர் வருணாசிஸ்ரமத்தின் கோவணத்தை கறாராக அம்பலப்படுத்தினார். சாதி தொழில்களைப்பிரிப்பதல்ல; தொழிலாளர்களைப் பிரிப்பது என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொன்னார். //

                    உலகம் முழுவதும் நிலவுடமை ஆதிக்க சக்திகள் வெவ்வேறு ஆடைகள்தான் அணிந்திருந்தனர்.. இந்தியாவில் வர்ணாசிரம பட்டுச் சொக்காய்.. எதுவுமே இல்லாமல் நிலப்பிரபுத்துவம் அம்மணமாக நின்றாலும் கொத்தடிமைகளுக்கு கருணை காட்டாது.. அவர்கள் கிரேக்கத்து நகர-தேசங்களில் அடிமைகளாக இருந்தாலும், ரோமானியக் குடியரசில் அடிமைகளாக இருந்தாலும், கிறித்தவ-இசுலாமிய பேரரசில் அடிமைகளாக இருந்தாலும் கூட..

                    // இன்றைக்கு கம்யுனிசம் பேசுகிற மாவோ பெரியவர் மகா பெரியவராக தோழர் சிவப்புவிடம் ஒரு வாதத்தை முன்வைத்தார். தேங்காய்மூடிக்கு கூட வழியற்ற பார்ப்பனர்கள் இருக்கிறார்களே; இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? என்றார். ஆனால் வறுமைகாரணமாக பார்ப்பனர்கள் கட்டிட வேலைபார்க்கவோ மூட்டை தூக்கவோ சித்தாளாகவோ சாக்கடையல்லவோ வந்துவிடவில்லை என்பதை தோழர் சிவப்பு சரியாக சுட்டிக்காட்டினார். //

                    மேற்படி வேலைகளை, குறிப்பாக சாக்கடையள்ளும் வேலையை செய்பவர்கள் உழைத்து வாழ்கிறார்கள் என்றாலும் மனம் விரும்பியா செய்கிறார்கள்..? நீங்கள் தலித்தல்ல.. சிவப்பு தலித்தா என்று தெரியாது.. உங்கள் சாதிக்காரர்கள் வறுமை காரணமாக சாக்கடையள்ளுகிறார்களா..?! பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா.. இதுதான் மார்க்சீயமா..? தவிர, தொழிலாளர்களில் பார்ப்பனர்கள் இல்லையா..?

                    // அது அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைப் போல தொழில்களைப் பிரிக்கவில்லை. தொழிலாளர்களைப் பிரித்தது! பார்ப்பனியத்தின் கொடூரம் நிலவுடைமையின்மையின் ஆணி வேர் என்று சொல்வது மிகையல்ல. //

                    அம்பேத்கர் சொன்னது சரிதான்.. இது சுரண்டப்படுபவர்களுக்கும் தெரியும்.. அவர்களுக்குத் தேவை நிலம்தான்.. பார்ப்பனீயத்தின் கொடூரத்தைப் பற்றிய வியாக்கியானங்கள் அல்ல.. பார்ப்பனியம் இல்லாத, அதாவது நீங்கள் கூறும் ஆணிவேர் இல்லாத, நாடுகளில் எல்லாம் நிலம் கொத்தடிமைகளுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதா..? நிழல் எப்படியிருந்தாலும் நிஜத்துடன் அல்லவா உங்கள் வழக்கு நடக்கவேண்டும்.. நிழல் யுத்தம் யாருக்கு பலனளிக்கும்..?!

                • //ஒரு பதிவில் உங்கள் முன்னோர்கள் தேவந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்// தேவேந்தர வகுப்பு என்று நான் சொல்லவில்லை பள்ளர் வகுப்பு என்றுதான் சொல்லி இருக்கிறேன் தேவேந்திரர் என்பது பார்ப்பணிய இந்து மததை ஆதரிக்கும் கருத்து சாதி பெருமை பேசவே தேவெந்திரர் என்று சொல்லுகிறார்கள் // சென்ற நூற்றாண்டில் சாணார்கள் என்று இழிவு படுத்தப்பட்ட சமுதாயம் பொருளாதார ரீதியில் எழுந்து இன்று அண்ணாச்சி என்றழைக்கப்படும் போது சாதியும்// சானார்கள் நாடார்கள் ஆனாலும் கோவில் கட்டினாலும் கருவறைக்குள் நுழைய குறுக்கே நிற்க்கிறது பார்ப்பனிய இந்து மதம்
                  //இசுலாமிய சமுதாயம் என்ற பெரிய அடையாளம் கிட்டும் என்றாலும் அங்கும் போராடித்தான் முன் வரவேண்டும்//
                  இசுலாமிற்கு மாறுவதை நான் ஆதரிப்பது இல்லை அவரவர் சுய அடையாளத்தை இழப்பதை விட் தனது அடையாள்த்துடன் சாதியை எதிற்ப்பதைத்தான் விரும்புவேன் என்னை பொருத்தவரையில் இசுலாம் போலி சம்த்துவத்தையும் வன்முறையையும் ஆதரிக்கும் மதம்
                  //உங்களுக்குத் தோன்றவில்லை.. கம்யூனிஸ்டுகளுக்கு தோன்றியிருக்க வேண்டுமே//
                  எந்த கமூனிஸ்டுகள் பிராமணர்களை அதிகம் கொண்டதாக கருதப்படும் மார்க்ஸிஸ்ட் கம்மூனிஸ்டா இல்லை வினவா வினவு கமூனிச தளம் இல்லை என் கிறீர்களா

                • இதுதவிர பார்ப்பனியத்தின் பண்பாட்டு தளத்தையும் விவாதத்தில் எடுக்க வேண்டும். ஏனெனில் அம்பி அவர்கள் “சென்ற நூற்றாண்டில் சாணார்கள் என்று இழிவு படுத்தப்பட்ட சமுதாயம் பொருளாதார ரீதியில் எழுந்து இன்று அண்ணாச்சி என்றழைக்கப்படும் போது சாதியும், மதமும் குறுக்கே நிற்க முடிந்ததா..?” என்றொரு கேள்வியை முன்வைக்கிறார்.

                  ஆம் சாதியும் மதமும் குறுக்கே தான் நிற்கின்றன. வளர்ச்சி என்பதற்கு சாணாரிலிருந்து அண்ணாச்சி என்றொரு வரையறையை முன்வைக்கிறார் அம்பி. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அம்பி அம்பி தான். இதுவும் வளர்ச்சிதான். பார்ப்பனிய வளர்ச்சி!!

                  மாறாக நாடார்கள் அண்ணாச்சியாக மாறிய வரலாறு பார்ப்பனியத்தை எதிர்த்த வரலாறு! தோள்சீலைக்கலம் ஆதிக்கசாதிகளுக்கு எதிராக மேலாடை அணிய அனுமதிக்க மறுக்கிற பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் நிகழ்த்தப்பட்டது.

                  அய்யா வைகுண்டரின் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் மக்களுக்கு தன்மானத்தை வழங்கியது என்பது பொய்யல்ல. அம்பிக்கு பெரியாரின் பிம்பங்கள் அரிப்பாக இருக்கிறபொழுது வரலாற்று நெடுகிலும் பார்ப்பனிய எதிர்ப்புதான் சமூகமக்களுக்கு விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்பதை அம்பி பரிசிலீக்க வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனிய எதிர்ப்பின் விவரம் புரியாமல் செந்தட்டி தேய்த்த முதுகாக எரிய வேண்டி இருக்கும்.

                  இதே அம்பி அவர்கள் இன்றைக்கு பெரியாரின் பிரச்சாரங்கள் எடுபடாமல் சாதிச்சங்கங்கள் தெருக்கு தெரு முளைத்துவிட்டன என்கிறார். உண்மை தான். ஆனால் அம்பி அண்ணாச்சிகளின் சாதி சங்கங்களை திரையிட்டு மறைக்கிறார். இது பார்ப்பனியத்தின் கைங்கர்யம் என்பது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு கன்னியாகுமரியில் நாடார்கள் இந்துத்துவ பார்ப்பனிய அரசியலுக்கு பலியாகிப்போனதை கவனிக்க வேண்டும். ஆனால் சமூகம் இதுவரை போரிட்ட எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொள்ளாமல் அம்பிகள் அம்பிகளாகவே இருக்கின்றனர். ஆனால் சாணார்கள் அண்ணாச்சியாக மாறி நாடாராக அவதாரமெடுத்து சமூகத்தில் சாதியாகவே வளைய வருகிற இந்தப்புள்ளிதான் பெரியாரின் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதற்காக நாம் அம்பிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் பார்ப்பனியம் அத்துணை லேசுப்பட்டதல்ல.

                  தொகுப்பாக இவர்வைத்த வாதங்களில் அம்பியும் சரி, ராமனும் சரி மாவோவும் சரி பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை ஏதோ ஒரு சாதிக்கெதிரான எதிர்ப்பாக காட்டுகின்றனர். இதன் பரிமாணத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். ஒரு சூத்திரன் தன் தகப்பனுக்கு இறுதி மரியாதை செய்கிற பொழுது, அதவாது சிதையைச் சுற்றுகிற பொழுது கூட பூணுல் அணிய வேண்டும். அதாவது ஒரு சூத்திரனுக்கு தன் தந்தைக்கு இறுதி மரியாதை செய்கிற உரிமை கிடையாது. ஆக பார்ப்பான் இல்லாத ஒரு இடம் பார்ப்பனியமாக பண்பாடுகளின் வழியே சடங்குகளில் வழியே விதைக்கப்படுவதை இவர்கள் கேள்வி எழுப்பவில்லை. சக மனிதன் இவ்விதம் பார்ப்பனியத்தால் இழிவுபடுத்துவது இவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எங்கெல்லாம் இண்டு இடுக்குகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கரப்பான்பூச்சி தன் உடலைத் திணித்துக்கொள்வதைப் போன்று தங்கள் வாதத்தைத் திணிக்கிறார்கள். இதுவும் பார்ப்பனியத்தின் அகக்கூறுகளில் ஒன்று என்பதும் இத்தன்மை சமசரமற்ற போராட்டங்களால் முறியடிக்கப்பட வேண்டுமென்பதிலும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

                  • // ஆம் சாதியும் மதமும் குறுக்கே தான் நிற்கின்றன. வளர்ச்சி என்பதற்கு சாணாரிலிருந்து அண்ணாச்சி என்றொரு வரையறையை முன்வைக்கிறார் அம்பி. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அம்பி அம்பி தான். இதுவும் வளர்ச்சிதான். பார்ப்பனிய வளர்ச்சி!! //

                    அம்பி தும்பியானால்தான் அது ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியா..?

                    // மாறாக நாடார்கள் அண்ணாச்சியாக மாறிய வரலாறு பார்ப்பனியத்தை எதிர்த்த வரலாறு! தோள்சீலைக்கலம் ஆதிக்கசாதிகளுக்கு எதிராக மேலாடை அணிய அனுமதிக்க மறுக்கிற பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் நிகழ்த்தப்பட்டது. //

                    ஒருங்கிணந்த ஒரு வியாபார சமூகமாக பொருள் ஆதாரங்களை கைவசமாக்கிய நாடார்கள் அண்ணாச்சிகளான வளர்ச்சியில் இருக்கிறது பார்ப்பனீயத்துக்கான பதில்..

                    // அய்யா வைகுண்டரின் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் மக்களுக்கு தன்மானத்தை வழங்கியது என்பது பொய்யல்ல. அம்பிக்கு பெரியாரின் பிம்பங்கள் அரிப்பாக இருக்கிறபொழுது வரலாற்று நெடுகிலும் பார்ப்பனிய எதிர்ப்புதான் சமூகமக்களுக்கு விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்பதை அம்பி பரிசிலீக்க வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனிய எதிர்ப்பின் விவரம் புரியாமல் செந்தட்டி தேய்த்த முதுகாக எரிய வேண்டி இருக்கும்.//

                    100 % அத்வைத வேதாந்தியான அய்யா வைகுண்டரை பெரியாரின் பிம்பமாக்கியதில் தெரிகிறது உங்கள் பெரியார் பக்தி.. கிறித்துவத்திற்கு மதம்மாறிக்கொண்டிருந்த நாடார் மக்களை ‘பார்ப்பனிய இந்து அத்வைதத்தால்’ தடுத்தி நிறுத்தியவருக்கு இப்படி ஒரு ’பெருமை’ அளித்ததை பெரியாரின் சாதனைகளில் ஒன்றாக அடுக்கிக் கொள்ளவும்..

                    // இதே அம்பி அவர்கள் இன்றைக்கு பெரியாரின் பிரச்சாரங்கள் எடுபடாமல் சாதிச்சங்கங்கள் தெருக்கு தெரு முளைத்துவிட்டன என்கிறார். உண்மை தான். ஆனால் அம்பி அண்ணாச்சிகளின் சாதி சங்கங்களை திரையிட்டு மறைக்கிறார். இது பார்ப்பனியத்தின் கைங்கர்யம் என்பது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு கன்னியாகுமரியில் நாடார்கள் இந்துத்துவ பார்ப்பனிய அரசியலுக்கு பலியாகிப்போனதை கவனிக்க வேண்டும். ஆனால் சமூகம் இதுவரை போரிட்ட எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொள்ளாமல் அம்பிகள் அம்பிகளாகவே இருக்கின்றனர். ஆனால் சாணார்கள் அண்ணாச்சியாக மாறி நாடாராக அவதாரமெடுத்து சமூகத்தில் சாதியாகவே வளைய வருகிற இந்தப்புள்ளிதான் பெரியாரின் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதற்காக நாம் அம்பிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் பார்ப்பனியம் அத்துணை லேசுப்பட்டதல்ல. //

                    அண்ணாச்சிகளின் எழுச்சியை பார்ப்பன எதிர்ப்பு மரபு என்று சொல்லிவிட்டு, அவர்கள் இந்துத்வத்தின் முன்னணியில் இருப்பதை விளக்கமுடியாமல், பார்ப்பனீயம் லேசுப்பட்டதல்ல என்று புலம்ப வேண்டுமா..?!

                    // ஒரு சூத்திரன் தன் தகப்பனுக்கு இறுதி மரியாதை செய்கிற பொழுது, அதவாது சிதையைச் சுற்றுகிற பொழுது கூட பூணுல் அணிய வேண்டும். அதாவது ஒரு சூத்திரனுக்கு தன் தந்தைக்கு இறுதி மரியாதை செய்கிற உரிமை கிடையாது. ஆக பார்ப்பான் இல்லாத ஒரு இடம் பார்ப்பனியமாக பண்பாடுகளின் வழியே சடங்குகளில் வழியே விதைக்கப்படுவதை இவர்கள் கேள்வி எழுப்பவில்லை. சக மனிதன் இவ்விதம் பார்ப்பனியத்தால் இழிவுபடுத்துவது இவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவில்லை. //

                    பூணூல் அணிந்துதான் இறுதி மரியாதை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் ‘சூத்திரனுக்கு’ இல்லை.. பூணூல் அணியாமலும் இறுதி மரியாதை செய்யலாம்.. ஒன்றும் தவறில்லை.. இதனால் யார் தலையும் போய்விடப் போவதில்லை.. பூணூல் அணிவது மேட்டிமையைக் காட்டுவதைவிட ஒரு விரத நிலையைக் காட்டுகிறது என்பதற்கு ஒரு சரியான உதாரணத்தைக் காட்டியதற்கு நன்றி..

                • இதையும் தாண்டி முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார் அம்பி; “ஒடுக்கப்பட்டவர்கள் கொத்தடிமை நிலையிலிருந்து விடுபட மார்க்சீயர்கள் முன்வைக்கும் இயல்பான தீர்வு எது..?”

                  பதில்: உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்.

                  இதில் ஏழை பார்ப்பானை எவ்விதம் இயல்பாக அடக்குவார் என்பதை அம்பியிடமே விட்டுவிடுவோம். பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் உழைப்பாளிகளுக்கு விடிவு இல்லை என்பது நிதர்சனம் என்பதால் தான் அம்பியின் பார்ப்பனப்பாசம் ஜெயந்திரனுக்கு கைக்கூலி வேலை பார்க்கிறது என்று முந்தைய பின்னுட்டத்தில் குறிப்பிட்டேன். இதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

                  —-

                  கடைசியில் பார்ப்பனியத்திற்கே உரிய நைச்சியத்துடன் ‘பெரியார் கம்யுனிசத்தை எதிர்க்கவில்லை என்று யார் சொன்னது?’ என்று கேட்கிறார் அம்பி. அதற்கு வடிவம் கொடுக்க கீழ்தஞ்சைப் போராட்டம் கருகிப்போய் சாட்சியாக நிற்கிறது என்று ஒரு வாந்தியை மன்னிக்கவும் வாதத்தை முன்வைக்கிறார். ஆர் எஸ் எஸ் காலிகளின் பிரச்சாரத்தில் இது ஒரு பகுதியாகவே நீடிப்பதால் அம்பி அவர்கள் அதையே பற்றிக்கொண்டு கீழ்தஞ்சைப் போராட்டத்தில் இருந்து என்ன சொல்லவருகிறார் என்பதை ஓடி ஒளியாமல் நமக்கு விளக்கவேண்டும். அரவிந்த நீலகண்டன் போன்ற ஆர் எஸ் எஸ் வெறியர்களும் இதே போன்ற பிரச்சாரங்களை முன்வைப்பதால் இருவரும் கூட்டாக இதை விளக்க முன்வரவேண்டும். அம்பியாவது இதைச் செய்வார் என்று எதிர்பார்ப்போம். இந்த ஒரு பகுதியை நிலுவையில் வைத்துவிட்டு இவர் முன்வைக்கிற முடிவுரையை கவனிப்போம்.

                  “இன்று சாதியும் ஒழியவில்லை, பார்ப்பனீயமும் ஒழியவில்லை, பெருநிலவுடமைச் சமூகமும் ஒழியவில்லை.. பெருகிப் போனது சாதிக்கட்சிகளும், சாதி அரசியலும், பெரியாரின் சிலைகளும் தான்..” என்று இறுதியாகச் சொல்கிறார் அம்பி.

                  அம்பி முன்வைக்கிற வாதம் அயோக்கித்தனமானது என்று கருதுகிறேன். ஏனெனில் சாதி ஒழியவில்லை பார்ப்பனியமும் ஒழியவில்லை என்று சொல்கிற அம்பி அவர்கள் இதைக்கட்டிக்காக்கிற களவாணி கூட்டங்களைப் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் மண்டைக்காடு கலவரத்தை சாதியை பார்ப்ப்பனீயத்தை முன்வைத்து தான் நடத்தின. இதற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சமூக இயக்கங்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டன.

                  சாதிக்கட்சிகள் பெருகிப்போனது என்று சொல்கிறார் அம்பி. சத்ரிய குல சாதிப்பெருமை பேசாதீர் என்று வன்னியசாதி வெறியர்களை கண்டிக்கிற பெரியாரின் போராட்டங்கள் இல்லாத நிலையில் வன்னியசாதி வெறியர்கள் இன்றைய நிலையில் ஆர் எஸ் எஸ்ஸுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள். பார்ப்பனியம் சாதிச்சங்கத்தை ஊட்டி வளர்க்கிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு அதற்கு கைக்கூலி வேலை பார்த்து விட்டு பெரியாரின் போராட்டங்கள் எடுபடவில்லை என்று இங்கு கதைக்கிறார். இது அப்பட்டமான அயோக்கித்தனமாகும்.

                  வேண்டுமானால் பெரியாரின் சிலைகள் பெருகிவிட்டன என்ற அம்பியின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பெரியாரின் போராட்டங்களுக்கு உயிர்ப்பூட்டி தமிழக இளைஞர்களிடையே பல பெரியாரை உருவாக்கவேண்டும் என்பதை நாம் உறுதியாக வழிமொழியலாம்.

                  • அம்பிகளுக்கு சரியான நெற்றியடி கொடுத்தீர்கள்! ஆனால் ஆணவக்காரர்களுக்கு இதெல்லாம் புரிந்தாலும், சாதிவெறி, இன வெறி கண்ணை மறைக்கிறதே! ஒப்புக்கு கூட சாதி சமத்துவம் பேசாத,நையாண்டியும் நக்கலுமாக சமதர்வாதிகளை கொச்சைபடுத்தும் பார்பனீய தாசர்களை புறக்கணிப்போம்!

                  • // இதையும் தாண்டி முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார் அம்பி; “ஒடுக்கப்பட்டவர்கள் கொத்தடிமை நிலையிலிருந்து விடுபட மார்க்சீயர்கள் முன்வைக்கும் இயல்பான தீர்வு எது..?”

                    பதில்: உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம். //

                    இப்போதுதான் விசயத்துக்கே வந்திருக்கிறீர்கள்..

                    // இதில் ஏழை பார்ப்பானை எவ்விதம் இயல்பாக அடக்குவார் என்பதை அம்பியிடமே விட்டுவிடுவோம்.//

                    பார்ப்பாந்தான் கரப்பான் பூச்சி என்று சொல்லிவிட்டீர்களே.. அவன் எங்காவது இண்டு இடுக்கு பார்த்துக் கொள்வான்.. நீங்கள் அவனைப் பற்றி கவலை கொள்ளாமல் உழுபவனுக்கு நிலம் என்று போராட ஆரம்பிக்க வேண்டியதுதானே..

                    // பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் உழைப்பாளிகளுக்கு விடிவு இல்லை என்பது நிதர்சனம் என்பதால் தான் //

                    அது எப்படி நிதர்சனம் என்று இன்னும் நீங்கள் தர்சனம் தரவில்லை தோழரே..

                    // அம்பியின் பார்ப்பனப்பாசம் ஜெயந்திரனுக்கு கைக்கூலி வேலை பார்க்கிறது என்று முந்தைய பின்னுட்டத்தில் குறிப்பிட்டேன். இதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். //

                    பேசாமல் அதைச் செய்யலாம் போலிருக்கிறது.. எனக்கு அந்த அவசியம் இல்லாததற்கு வீதி முனை பெரியார் கணபதிக்கு ஒரு தேங்காய் உடைக்கிறேன்..!

                    // கடைசியில் பார்ப்பனியத்திற்கே உரிய நைச்சியத்துடன் ‘பெரியார் கம்யுனிசத்தை எதிர்க்கவில்லை என்று யார் சொன்னது?’ என்று கேட்கிறார் அம்பி. அதற்கு வடிவம் கொடுக்க கீழ்தஞ்சைப் போராட்டம் கருகிப்போய் சாட்சியாக நிற்கிறது என்று ஒரு வாந்தியை மன்னிக்கவும் வாதத்தை முன்வைக்கிறார். ஆர் எஸ் எஸ் காலிகளின் பிரச்சாரத்தில் இது ஒரு பகுதியாகவே நீடிப்பதால் அம்பி அவர்கள் அதையே பற்றிக்கொண்டு கீழ்தஞ்சைப் போராட்டத்தில் இருந்து என்ன சொல்லவருகிறார் என்பதை ஓடி ஒளியாமல் நமக்கு விளக்கவேண்டும். அரவிந்த நீலகண்டன் போன்ற ஆர் எஸ் எஸ் வெறியர்களும் இதே போன்ற பிரச்சாரங்களை முன்வைப்பதால் இருவரும் கூட்டாக இதை விளக்க முன்வரவேண்டும். அம்பியாவது இதைச் செய்வார் என்று எதிர்பார்ப்போம். இந்த ஒரு பகுதியை நிலுவையில் வைத்துவிட்டு இவர் முன்வைக்கிற முடிவுரையை கவனிப்போம். //

                    இந்தக் கேள்வி எப்போதுமே நிலுவையில்தான் இருக்கும்..

                    // அம்பி முன்வைக்கிற வாதம் அயோக்கித்தனமானது என்று கருதுகிறேன். ஏனெனில் சாதி ஒழியவில்லை பார்ப்பனியமும் ஒழியவில்லை என்று சொல்கிற அம்பி அவர்கள் இதைக்கட்டிக்காக்கிற களவாணி கூட்டங்களைப் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் மண்டைக்காடு கலவரத்தை சாதியை பார்ப்ப்பனீயத்தை முன்வைத்து தான் நடத்தின. இதற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சமூக இயக்கங்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டன. //

                    சாதி ஓட்டு, சாதிக்காரனுக்கு பதவி என்று சாதி வளர்த்தவர்களை என்ன சொல்லி அழைப்பீர்கள்.. மண்டைக்காடு கலவரம்தான் சாதியை தமிழகத்தில் நிலை நிறுத்தியதா..?!

                    // சாதிக்கட்சிகள் பெருகிப்போனது என்று சொல்கிறார் அம்பி. சத்ரிய குல சாதிப்பெருமை பேசாதீர் என்று வன்னியசாதி வெறியர்களை கண்டிக்கிற பெரியாரின் போராட்டங்கள் இல்லாத நிலையில் வன்னியசாதி வெறியர்கள் இன்றைய நிலையில் ஆர் எஸ் எஸ்ஸுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள். //

                    வன்னியசாதி வெறியர்களை கண்டித்து பெரியார் போராட்டங்கள் நடத்தினாரா..?!!!

                    // பார்ப்பனியம் சாதிச்சங்கத்தை ஊட்டி வளர்க்கிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு அதற்கு கைக்கூலி வேலை பார்த்து விட்டு பெரியாரின் போராட்டங்கள் எடுபடவில்லை என்று இங்கு கதைக்கிறார். இது அப்பட்டமான அயோக்கித்தனமாகும். //

                    வன்னிய சாதி சங்கங்களில் பெரியாரே கலந்து கொண்டுவிட்டு, ”நீங்கள் சத்திரியர்கள் என்று மட்டும் கூறிக்கொள்ளாதீர்கள்” என்று படையாட்சிகளுக்கு ஆசி வழங்கிவிட்டு வந்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது..? அதுவும் ஓட்டுக் கணக்குதானா..?!

                    // வேண்டுமானால் பெரியாரின் சிலைகள் பெருகிவிட்டன என்ற அம்பியின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பெரியாரின் போராட்டங்களுக்கு உயிர்ப்பூட்டி தமிழக இளைஞர்களிடையே பல பெரியாரை உருவாக்கவேண்டும் என்பதை நாம் உறுதியாக வழிமொழியலாம்.//

                    அப்ப உழுபவனுக்கு நிலம் கிடைக்காதா, தோழர்..?!

            • திரு மாவோ,

              ஏற்கனவேத் தெளிவாக எனது புரிதலை சொல்லி விட்டேன். பெரியார் அன்றைய சமூக அமைப்பிற்குள் நின்றுக் கொண்டு தான் தீர்வைத் தேடினார் மற்றும் அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமே அன்றி கம்யூனிஸ்ட் அல்ல. அதுமட்டுமல்லாமல் பெரியார் எப்படி வர்க்கப் போராட்டத்தை முனை மழுங்க செய்தார் என்று இன்னும் சாட்சாத் மாவோ அவர்கள் விளக்கவேயில்லை.

              ஒருவரை விமர்சனம் செய்யும் போது அதற்க்கான சரியான காரணத்தை வைக்க வேண்டும். அதே போல உங்கள் மீது வைக்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலும் வைக்க நேர்மையும் வேண்டும். அதை விட்டு விட்டு முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம் …. என்று சொல்லி புரட்சியை நீங்களே செய்து முடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே.

              ஏழைப் பார்ப்பனர்கள் பாட்டாளிகளா? எப்படி ஏழை விவசாயுடன் ஒப்பிடுகிறீர்கள் என்றுக் கேட்டதற்கு ஒரு பதிலும் இல்லை. பார்ப்பன சமூகம் எப்படி அறிவாளி சமூகமாக இருக்கிறது என்றதற்கும் ஒரு பதிலும் இல்லை. இந்தியாவில் பண்ணையாதிக்க சாதித் தொழிலை நிலைநாட்டி இருக்கும் பார்ப்பனீயம் எப்படி பாட்டாளி வர்க்கத்தை தலைமையேற்று வழி நடத்தி செல்லும்? நக்சல் போராட்டம், தெலுங்கானா விவசாய போராட்டத்தை முனை மழுங்க செய்தது பெரியாரா இல்லை கம்யூனிஸ்ட் அமைப்பிற்க்குள்ளே இருந்த திரிபுவாதிகளா?

              எமது மண்டைக்குள் நுழைந்து பார்ப்பது இருக்கட்டும் உமது மண்டைக்குள் இருக்கும் சரக்கை பாருமையா – பார்பனர்கள்,யூதர்கள் சிங்களவர்கள் என குறிப்பிட்ட சமூகத்தின் புனித ஆத்மாக்கள் மனித குலத்தை மேன்மையுற செய்தவர்களாக உலா வருகிறார்கள். எப்படி என்று கேட்டால் பதிலில்லை. பார்ப்பனீயம் உங்களது மண்டைக்குள் புழுத்து நாறுகிறது. இதற்க்கு கிடைத்த வேடம் கம்யூனிஸ்ட். அது என்னவோ தெரியவில்லை இந்த பார்ப்பனர்கள் முற்போக்கு வேடம் கட்ட சிவப்பு சட்டக் கூட போட்டுகிறாங்க ஆனால் கருப்பு சட்டைக் கண்டா பயந்து ஓடுறாங்க.

              உங்களது முற்போக்கு வேடங்கள் பல இடங்களில் தோழர்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் படும் போது ஒரு பதிலும் இல்லாமல் பம்முகிரீர்கள். வெறும் வாய்சொல் வீரரை போல அங்கங்கே வந்து முதலாளிகள் – பாட்டாளிகள் என்று பம்மாத்து கட்டுகிறீர்கள். உமது கம்முனிச வேடத்தை ஒரு வேடமும் பெரியாரிடம் ஏனையா காட்டுகிறீர்கள். உங்களைப் போல கம்யூனிஸ்ட் வறட்டுவாதிகளை விட பெரியார் எவ்வளவோ மேல்.

              நன்றி.

      • திரு மாவோ,

        இப்படி ஓலமிட்டுக் கொண்டிருப்பது எதனால்? உங்களுக்கு வாத நேர்மை சிறிதும் இல்லை.
        சாதியும் சாதிக்கேற்ற தொழில்முறையும் எப்படி நிலை நிறுத்தப்பட்டன?
        பார்பனியம் இந்த சமூகத்திற்கு செய்த நன்மை என்ன? இதை சொன்னப் பிறகு உங்களது அவதூறுகளையும், சொல் விளையாட்டுகளையும் தொடருங்கள்.

        நன்றி.

  22. @Univerbuddy

    //இந்தியா முழவதும் எங்கும் குறிப்பிட்ட அளவு பரவியுள்ள ஒரே சாதி பார்ப்பனர்கள் தான். வேறு எந்த சாதியும் அந்த அளவுக்கு பரவவில்லை//

    நிலா உடைமை சமுதாயம் , பஞ்சம் வந்தால் மட்டும்தான் இடம் பெயரும் . அங்கோர்வாட் பற்றி படித்து பாருங்கள் .

    ஆனால தொழில் மற்றும் அறிவு சார்ந்தவர்கள் எங்கு தொழில் கிடைக்கிறதோ அங்கே போக முடியும் . அறிவு சார்ந்த தொழில் செய்வதால் இன்றைக்கு கணினி படித்தவர்கள் உலகம் முழுவதும் செல்ல முடிகிறது .

    அடுத்து நிலா உடைமை சமுதாயத்திடம் வேலைக்கு செல்ல வேண்டும் . அந்த விசயத்தில் அவர்கள் படித்து கணக்கு எழுதி தான் பிழைத்தார்கள் . அவர்கள் இடம் பெயர்வு சென்ற ஏற்கனவே இருந்த மக்களை கொன்று குவித்ததாக வரலாறு இல்லை .

    ராஜராஜன் கணக்கு எழுத வடக்கில் இருந்து பிராமணர்களை அழைத்து வந்தது வரலாறு .
    அதே போல பிராமண சமுதாயம் பாபிலோனியர்களின் கால கணக்கு முறை , ஜோசியம் போன்ற அறிவை மொழிபெயர்த்தாவது சமஸ்கிருடஹ்திற்கு கொண்டுவந்து இருந்தார்கள்.
    கிரேக்க கணிதம் கூட மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. சொந்தமாக வட்டத்தின் பரப்பளவை கணக்கிடும் முறை கண்டு பிடித்து இருந்தார்கள்.

    ஜாதகம் இல்லை என்றால் , நமது முன்னோர் பிறந்த நாளை எதில் குறித்து வைத்து கொண்டாடி இருப்பார்கள் ?

    அது அவனது சொந்த சரக்கோ இல்லையோ அறிவை தேடி தெரிந்து வைத்து இருந்தான் , அது இல்லாத சமுதாயம் அந்த அறிவிற்காக அழைத்து வந்தது . கத்தி இன்றி ரத்தம் இன்றி இறைவன் பெயரால் நிலத்தை எடுத்து கொண்டார்கள் என்றால் , அது அவர்கள் புத்திசாலி தானம். நமது முன்னோர்களின் முட்டாள்தனமும் கூட .

    நிலம் உடைமை சமுதாயம் அமெரிக்காவிற்கும் ஆபிரிக்கவிற்கும் சென்ற பொழுது அங்கிருத்வர்களை அடிமைபடுதினார்கள் அல்லது கொன்று ஒழித்தார்கள்

    டார்வின் தியரிபடி இயற்கை தேர்வுதான் நடக்கும்

    • At last Raman openly praises the cheats and exploiters in the guise of praising their cunning nature as their intelligence.Just for namesake he includes himself as one of our forefathers who were exploited.We have been reading your comments for the past 3 years Mr.Raman.You have the sadist pleasure in calling the farmers/villagers as unlettered and fools.In spite of many comments by many here,you are not prepared to change your hatred towards TN farmers.First learn about our land holding pattern.All farmers are not big landlords.There are lakhs of small and marginal farmers.

      • உண்மைய சொன்னா வலிக்கத்தான் செய்யும் சார் . கருத்துக்கு பதில் தெருன்ச்சா சொல்லுங்க , இல்லை நான் சொல்றது இதுனால தப்புன்னு புரிய வையுங்க . எதுக்கு திட்டறீங்க ?

        ஏழை விவசாயிங்க இருக்காங்க அதே மாதிரி ஏழை பிராமணனும் இருகிறாங்க சார் !
        அப்போ இட ஒதுக்கீட்டுக்கு அவங்களுக்கு சலுகை கொடுக்கலாமா ?

        என்னோட பாட்டன் இருபது ஏக்கர் வைத்து இருந்தார் , இன்னைக்கு என்னிடம் ஒன்னும் இல்லை . அதனால் நான் ஏழை விவசாயி …

        • /ஏழை விவசாயிங்க இருக்காங்க அதே மாதிரி ஏழை பிராமணனும் இருகிறாங்க சார் !
          அப்போ இட ஒதுக்கீட்டுக்கு அவங்களுக்கு சலுகை கொடுக்கலாமா ?/

          கொடுக்கலாமே! உங்கள் ஏழை பிராமணர் எத்தனை சதவீதம்? அதை எடுத்து கொண்டு மீதத்தை எங்களுக்கு தாருஙகள் அய்யா! அப்படியே ஏழை விவசாயியையும் கொஞ்சம் பூஜாரி வேலைக்கு ட்ரையினிங் தந்து அர்ச்சகராக ஒத்துழைப்பீர்களா! உங்கள் ஏழை பிராமணரை, பிராமண பெண்களை விவசாய வேலைக்கு அனுப்புங்களேன்! அதில் இட ஒதுக்கீடு வேண்டாமா?

          • நான் நடுநிலையாளன் . என்னை பார்பனராக்கும் உங்கள் முயற்சி பல் இளிகிறது

            // ஏழை விவசாயியையும் கொஞ்சம் பூஜாரி வேலைக்கு ட்ரையினிங் தந்து அர்ச்சகராக ஒத்துழைப்பீர்களா!//

            திறமை இருக்கும் யாரும் எந்த வேலையையும் யாரும் விரும்பினால் செய்யும் நிலை வர வேண்டும் .

            அதில் சாதி அடிப்படையிலான பிராமணர்களின் நிலைப்பாடு தவறானது .
            குலத்தொழில் செய்து சுகபோகமாக இருந்து பழகிவிட்டார்கள் . அதை தக்க வைத்து கொள்ள போராடுகிறார்கள் . அதை நான் கண்டிப்பாக எதிர்க்றேன் .

            சாதி அடிப்படையில் உள்ள அவர்களுடைய தொழிலை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரும் உத்வேகம் , சாதி அடிப்படையில் உள்ள நிலத்தை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரவிலையே

            //ஏழை பிராமணரை, பிராமண பெண்களை விவசாய வேலைக்கு அனுப்புங்களேன்! அதில் இட ஒதுக்கீடு வேண்டாமா?//

            கண்டிப்பாக அவர்களும் பங்கு பெற வேண்டும் . நம் விவசாய சாதிகள் நிலத்தை , விவசாயம் தெரியாத பார்பனர்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்தால் அவர்களும் செய்ய முன் வருவார்கள்

            அது சரி ஏழை விவசாயி அப்படின்னு உருகுரீன்களே , அந்த விவசாயி சாதி மேட்டிமையை விட்டுவிட்டானா ?

            விவசாயி கருவறை புகுவது போல ,அவன் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி அவன் வீட்டு வேசெசதில் சமமாக உண்டு உணவருந்த முடியுமா ! இரண்டுமே ஒன்றுதான் .

            பிராமணன் செய்வது ஏழை விவசாய் செய்வது இரண்டுமே எனக்கு வெறியாக தெரிகிறது .
            உங்களுக்கு ஏன் இந்த பாரபட்சம் என்றுதான் கேட்கிறேன் .

            • // அது சரி ஏழை விவசாயி அப்படின்னு உருகுரீன்களே , அந்த விவசாயி சாதி மேட்டிமையை விட்டுவிட்டானா ? //

              அவர் எங்கே உருகினார்..?! கொத்தடிமைகளை ஒன்று சேர விடாமல் சாதி வெறியேற்றி கொம்பு சீவிவிடும் பண்ணைகளிடமே கொத்தடிமைகளின் சாதி வெறி பற்றி குறை கூறுகிறீர்களே..!

            • /சாதி அடிப்படையில் உள்ள அவர்களுடைய தொழிலை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரும் உத்வேகம் , சாதி அடிப்படையில் உள்ள நிலத்தை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரவிலையே/

              வரவில்லை என்று யார் சொன்னது? இன்றும் தஞ்சை மாவட்டத்தில் இரட்டைகுவளை முறை, தலித்துகளை வீட்டினுள் அனுமதிக்காமை அனேகமாக மறைந்து விட்டது! பல தலித் இளைஞர்கள் மற்ற இந்து சாதி இளைஞர்களுடன் ஒன்றாக படித்து வருகிரார்கள்!நடுவில் விஷமம் செந்ய்வதே ஆரிய இந்துத்வா அமைப்புகளான வி எச் பி முதலிய அமைப்பினர்தான்! அவர்களை முறியடிக்க ஒரெ வழி பெரியாரின் சமத்துவ கொள்கையை பரப்புவதுதான்! அதை பழிப்பதால் அல்ல! தலித இளைஞர்கள் எஞ்சினியர்களாக, மருத்துவர்களாக, ஆசியர்களாக ஏன், விஞ்ஞானிகளாகவும் வந்துவிட்டார்கள், ஆனால் அர்ச்சகராக ஏன் முடியவில்லை? கோவிலில் சமையல் காராராகவும் முடியவில்லையே! ஏன்!

              • // வரவில்லை என்று யார் சொன்னது? //

                அவர் என்ன கேட்டார், நீங்கள் என்ன அளந்து கொண்டு இருக்கிறீர்கள்..?!

            • Raman,

              //அவர்களுடைய தொழிலை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரும் உத்வேகம் , சாதி அடிப்படையில் உள்ள நிலத்தை வாங்கி தலித் சகோதரர்களோடு பகிரலாம் என்னும் பொழுது வரவிலையே//

              வினவுத் தோழர்கள் இவை இரண்டுக்கும் சேரத்துப் போராடுபவர்கள் தான். எங்களிடம் இது போன்று நயவஞ்சமாகக் கேட்பதில் தான் உங்கள் நடுநிலைமை பல்லிளிக்கிறது. இவை இரண்டுக்கும் போராடாதவர்கள் தான் தற்போதைக்குப் பெரும்பான்மை. அவர்களிடம் போய் இதைக் கேளுங்கள்.

              //விவசாயி கருவறை புகுவது போல, அவன் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி அவன் வீட்டு வேசெசதில் சமமாக உண்டு உணவருந்த முடியுமா ! இரண்டுமே ஒன்றுதான்.//

              இங்கேயும் உங்கள் நடுநிலைமை நயவஞ்சகம் பல்லிளிக்கிறது. தனது வீட்டில் தனது தொழிலாளியை அனுமதிக்காத விவசாயி கருவறை புகுவதற்காக நாங்கள் போரடவில்லை. அவருக்கு அதற்கு அருகதையுமில்லை. தொழிலாளிகளும் அந்த வீட்டிற்குள் காலடி வைக்கக் கூசவே செய்வார்கள்.
              அதேசமயம் ஒருவரின் வீடு என்பது அவரின் அந்தரங்கப் பகுதி. அதில் அவர் தகுந்து காரணமில்லாமல் எல்லோரையும் அனுமதிக்க வேண்டிய தேவையில்லை. நட்புமுறையில் வரவேற்காக பட்சத்தில் யாரும் யார் வீட்டுக்கும் போகத்தேவையில்லை. ஆனால் கோயில் என்பது பொதுச்சொத்து (தற்போது அது பலரின் பள்ளியறையாகக் கூட இருக்கிறது). அதைப் பார்த்துக்கொள்ள யாரை வேண்டுமானாலும் நியமிக்கப்பட வேண்டும். வேறுபாடு இப்போது விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

              • Read it properly, I have told

                தொழிலாளி அவன் வீட்டு வேசெசதில் சமமாக உண்டு உணவருந்த முடியுமா

                I dint ask for unlimited access to private area…

              • // வினவுத் தோழர்கள் இவை இரண்டுக்கும் சேரத்துப் போராடுபவர்கள் தான். //

                இதை வினவுத் தோழர்கள் சொல்லட்டும்..

                // எங்களிடம் இது போன்று நயவஞ்சமாகக் கேட்பதில் தான் உங்கள் நடுநிலைமை பல்லிளிக்கிறது. //

                எங்களிடம் என்று உம்முடன் யாரைச் சேர்த்துக் கொள்கிறீர்..? வினவுத் தோழர்களையா..? அவர்கள்தான் உம்மை தோழர் என்று அழைப்பதையே நிறுத்தி விட்டார்களே.. ராச்செல் படுகொலையை விபத்து என்று பசப்பிய உமது சிவப்புக் கோவணத்தை உருவி உதறிவிட்டார்களே.. அது புரியாமல் இன்னும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறீரே..

                // அதேசமயம் ஒருவரின் வீடு என்பது அவரின் அந்தரங்கப் பகுதி. அதில் அவர் தகுந்து காரணமில்லாமல் எல்லோரையும் அனுமதிக்க வேண்டிய தேவையில்லை. //

                உம் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி உம் வீட்டு விசேசத்தில் சமமாக உணவு அருந்தமுடியுமா என்று கேட்டால் தேவையில்லை என்கிறீர்.. பொது இடத்தில்தான் சுயமரியாதை, என் வீட்டீல் அதேல்லாம் நடக்காது என்கிறீர்.. குருவுக்குத் தப்பாத சீடர்கள்தான்..

          • // உங்கள் ஏழை பிராமணரை, பிராமண பெண்களை விவசாய வேலைக்கு அனுப்புங்களேன்! அதில் இட ஒதுக்கீடு வேண்டாமா? //

            விவசாய வேலைக்கு ஆள்பிடிக்கிற ஆண்டையோட சாமர்த்தியத்தைப் பாருங்கள்.. அடேங்கப்பா..!

            • வார்த்தை ஜாலத்தினால், கேள்வியை திசை திருப்பாதீர் அம்பியே!
              // அது சரி ஏழை விவசாயி அப்படின்னு உருகுரீன்களே , அந்த விவசாயி சாதி மேட்டிமையை விட்டுவிட்டானா ? //

              அதெப்படி விடுவான்? அவனுக்கு பரிவட்டம் கட்டி, வீரசத்திரியபட்டமும் கொடுத்தால் ஆண்டாண்டு காலத்திற்கும் பார்ப்பன தாசனாக இருப்பானே ஒழிய, தன் சகோதர சாதியாளரையே தாழ்ந்தவனாகத்தான் பார்ப்பான்! பார்ப்பனர் தன்னை சுற்றி பின்னிய வலை அறிய மேலும் படியுஙகள்: கேரளநாட்டு ஒஅகுத்தறிவாளர் ஜோசப் இடமருகு எழுதிய ‘பிராமண மதம்-தோற்றமும் வளர்ச்சியும் ‘ தமிழில் தருவது த.அமலா, அலைகள் வெளியீட்டகம். ஆர்வமுள்ளவர்கள் படிக்கவும்! விதண்டாவாத அம்பிகள் தவிர்க்கவும், மீறி பி பி ஏறினால்நான் பொறுப்பல்ல!

        • /உண்மைய சொன்னா வலிக்கத்தான் செய்யும் சார் . கருத்துக்கு பதில் தெருன்ச்சா சொல்லுங்க , இல்லை நான் சொல்றது இதுனால தப்புன்னு புரிய வையுங்க……./

          ஏழை விவசாயிங்க இருக்காங்க அதே மாதிரி ஏழை பிராமணனும் இருகிறாங்க சார் !
          அப்போ இட ஒதுக்கீட்டுக்கு அவங்களுக்கு சலுகை கொடுக்கலாமா ?

          கொடுக்கலாமே உஙகள் சதவீதப்படி! முதலில் அடுத்தவர் இடத்தை பிடித்துகொண்டிருக்கும் பார்பனரை விவசாயத்திற்கு வரச்சொல்லுமே! அர்ச்சகர் படிப்பு முடித்த பிற சாதியினருக்கு சமவாய்ப்பு கொடுங்களேன்!

          • ஏழை விவசாயிக்கு நிலத்தைக் கொடுங்கள் என்றால் அவர்கள் கையில் மணியைக் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் ஆஸ்தான ஆண்டை அஜாதசத்ரு அய்யா..

            • //ஏழை விவசாயிக்கு நிலத்தைக் கொடுங்கள் என்றால் அவர்கள் கையில் மணியைக் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் //

              இந்த மணியும், மணியடிப்பவரும் இந்திய அரசியல் சட்டத்தையே மாற்றிப்போடும் ஆரியநாடகத்தை ரசித்து வருபவன் அல்லவா? அதனால் அவர்கள் உய்ய ஒரு வழியை காட்டினேன்! அதிலென்ன தவறு அம்பீ?

        • Which is truth?Your charge of farmers as fools is the truth?We have given you the clarifications about Indian economy and Govt schemes to eliminate poverty.Just because you have some education and a cushy job,you think that you have every right to call poor farmers names.

          • //our charge of farmers as fools is the truth?//

            Not sure where I blamed blatantly.

            Lets say one invests in chit fund for high return and looses money.

            Your perspective is Chit fund company cheated him
            My perspective is that the investor is to be blamed.

            Go and read all the sugar coated stories of how Brahmins cheated your innocent forefathers with stories…

            Those are for the small minds which does not want to accept the truth.
            I have seen so many character assassination attempts, there goes another one…

    • Raman,

      முதலில் பார்ப்பனப் பரவல் பற்றிய என் கருத்தை மறுத்தீர்கள். இப்பொழுது பரவல் எப்படி நடந்ததென காரண விளக்கும் கொடுக்கிறீர்கள். ஏன் இந்த பல்டி?

      எப்படியோ. நீங்கள் கொடுத்த காரணம் சரியானதில்லை. மேலே படியுங்கள்.

      //கணக்கு எழுத வடக்கில் இருந்து பிராமணர்களை அழைத்து வந்தது//

      தென்னிந்தியாவில் பார்ப்பனர்களை அழைத்து வந்தது கணக்கெழத அல்ல. (நான் இயல்பாகச் சொல்வது சிலருக்கு அரைவேக்காடாகப் படுகிறது. அதனால் இங்கே பச்சையாகச் சொல்கிறேன்) கணக்கு செய்யத்தான். நம் முன்னோர்களின் பாரம்பரியம் (Weakness) இன்னும் தொடர்கிறது. இன்றும் திரைப்பட நடிகைகளை இறக்குமதி செய்தால் தான் நமக்குப் பிடிக்கிறது. (முன்னர் குடும்பங்களாக வந்ததினால் நமது பெண்களுக்கும் இது பயன்பட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே சொல்லியாகவேண்டும்.)

      • மிகவும் அருவெருப்பாக உள்ளது உங்கள் பதில் ..

        என்னுடைய கிராமத்தில் ஒருவன் , _________ வீடு நாறும் என்றான் .
        நான் இசுலாமியர் யார் வேட்டுகாவது போயிருக்கியா ? என்று கேட்டேன் .
        இல்லை என்றான் . பொத்தாம் பொதுவாக மன வெறுப்பை கக்குவது .

        உங்கள் மனதில் உள்ள இனம் புரியாத வெறுப்புக்கு தான் நான் பெரியாரை குறை கூறுகிறேன் , . இது போன்ற இன அடிப்படையில் ஆனா வெறுப்பு உள்ளவர்களுக்கு புரிய வைப்பது கடினமான வேலை இது போன்ற சிந்தனை உள்ளவர்களிடம் பேசி என்னுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பதில் அர்த்தம் இல்லை

        • Raman,

          இனக்கவர்ச்சி, இனக்கலப்பு போன்றவற்றைப்பற்றி சொல்லியிருக்கிறேன். இயல்பாக நடக்க வேண்டியதற்கு எதிராக செயற்கையான தடுப்பு இருந்ததால் நம் முன்னோர்கள் சற்று சுற்றி வளைத்துச் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அதிக விலையும் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணுரிமையையும் இந்கே நிலை நாட்டியிருக்கிறேன். இதில் எங்கே அருவருப்பு இருக்கிறது? இங்கே ஏன் பெரியாரை இழுக்கிறீர்கள்?

          உங்களிடம் விவாதிக்க எனக்கும் ஆர்வமில்லைதான். முன்னரே ஒரு பதிவில் இதைக் கூறியிருக்கிறேன். சிறிது காலம் தவிர்த்தும் வந்தேன். ஆனாலும் உங்கள் சித்துவேலைகளை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

      • // (நான் இயல்பாகச் சொல்வது சிலருக்கு அரைவேக்காடாகப் படுகிறது. அதனால் இங்கே பச்சையாகச் சொல்கிறேன்) //

        உம்மைப் போன்ற ஒரு அரைவேக்காடு ஒரு கழிசடையாகவும் இருக்கமுடியாதா என்ன..?!

        • அம்பிகள் கண்ணாடி முன்நின்றுகொண்டு கருத்து சொல்லக்கூடாது! வசவு சொல்லை, வக்கில்லாதவர்தான் பயன்படுத்துவர்!

          • அரிகுமார் சொல்வது சரியே! இந்திய துணைக்கண்டத்துக்குள் வரும்வரை, ஆரியருக்கு திருமண உறவோ , குடும்ப வாழக்கையோ கிடையாது! விருப்பபட்டவர்களுடன் செர்ந்து வாழ்ந்தனர்! பலர் சொந்த சகொதரனையே துணையாக கொண்டனர்!

            புத்தர் காலத்தில் கூட பார்பனர் அவர்களின் தனி கூட்டமைப்பில், குடியரசாக, (லிச்சாவி என்று ராகுல சங்கிருத்தியாயன் குறிப்பிடுகிரார்) இருந்திருக்கிரார்கள்! ரிக் வேதத்தில் ஒரே பத்தினியுடனும் , ஒரே ஆண் துணையுடனும் இருந்தது, ஒரு சிலரே(அநுசூயா, அருந்ததி) ! ஆதனால் தனோ என்னவோ மும்மூர்த்திகளான கயவர்கள் அவர்களை சோதிக்க? துணிவு கொண்டனர்! மற்ற ரிஷிகள், அகச்தியர், துர்வாசர் முதலியோர் அவ்வப்போதுநாட்டுக்கு சென்று இளம் அரச குமாரிகளை பாலியல் பணிவிடைக்கு அழைத்து சென்று , கர்ப்பமானவுடன் ஆசீர்வதித்து அனுப்புவர்! சுவகேது என்ற ரிஷியோ, தனது ஆசிரமத்திற்கு எந்த பெண்ணையும் கர்ப்பமாக்காமல் விட்டதில்லை எனும் பெருமை பெற்றவன்! அதுமட்டுமல்ல, இவனது விந்துவினால் உண்டான கர்ப்பம் ராத்தஙகாதாம்! இப்படி 60,000 பில்லைகள் பெற்று புகழபெற்றிருக்கிரான்! இப்போது பார்ப்பனர் பலரது கோத்திரம் ஏன் ரிஷிகள் பெயரில் உள்ளது புரிகிறதா? இந்திரன் முதலோனோர் மாறினாலும், பெண்ணரசி இந்திராணி மாறாத மர்மம் இதுதான்! இந்த ரிஷிகளில் கூட அனைவரும் பார்ப்பனரல்ல! பார்பணியம் என்னும் வருனாஸ்ரமத்தை ஒப்புக்கொண்டவருமல்ல! பல்வேறு ச்மூக , அரசியல் கலப்புகளுக்கு பின்னரே , வருணாஸ்ரம கொள்கை வரையறுக்கப்பட்டு, உழைக்கும் சமூகம் ச்ரண்டி ஒடுக்கப்பட்டது! கிரேக்க, ரோமானிய நாடுகளில் அடிமை குடிகளை ஏற்படுத்திய நிகழ்வுகள், இந்திய பார்பனர்களுக்கு ஊக்கமளித்திருக்கலாம்! இங்குள்ள திராவிட பழங்குடிகள், போர்த்திராணியும், ஆயுத அறிவும், மனிதர்களை அடிமையாக்கும் குயுக்தியும் அற்ற வெள்ளை மனதிராய் இருந்தது இவர்களின் பூச்சுற்றலுக்கு வசதியாகப்போனது!

            பழங்கால ராமாயண ராமனும், கிருஷ்ணனும், பலராமனும் தங்கள் சொந்த சகோதரியையே மணந்திருந்தனர்!

            • // பழங்கால ராமாயண ராமனும், கிருஷ்ணனும், பலராமனும் தங்கள் சொந்த சகோதரியையே மணந்திருந்தனர்! //

              ஒரு ரவுண்டுக்கப்பறம் சீதைக்கு ராமன் சித்தப்பன், 3-வது ரவுண்டுல சீதைக்கு ராமன் அண்ணனாயிட்டானா.. இன்னும் என்னவெல்லாம் ஆகப் போறானோ..

              அதிருக்கட்டும், நாலு நாளைக்கு முன்னதானெ “ஒருவனுக்கு எதற்கு ஒருத்தி? ஒருத்திக்கு எதற்கு ஒருவன்? திருமணம் என்பதே பெண்ணடிமை சாசனம்!” அப்படின்னு திருவாய் மலர்ந்தருளுனீங்க ( https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/#comment-19307 ).. இன்னிக்கு வேற சரக்கா.. 2-வது ரவுண்டுலயே பார்ப்பான் குரங்கா இருந்தப்ப என்ன பண்ணான், வேட்டையாடுனப்ப என்ன பண்ணான், வால்கா நதிக்குள்ள என்ன பண்ணாங்குறதெல்லாம் ஞானக் கண்ணுல தெரிய ஆரம்பிச்சுருச்சா.. இதே மப்புலயெ லிச்சாவிக் குடியசுக்கு போய் கல்யாணம் பண்ணாமயே எவளயாச்சும் பிடிச்சுக்கினு செட்டிலாயிருங்க.. மத்தத காலையில தெளிஞ்ச பொறவு பேசிக்கலாம்..

  23. “பெரியாரை ‘முழுமையாக’ பார்த்து, அவரின் தேவையை உணர்ந்து, அவரது கருத்துககள் சாதிய இந்துத்வ பார்ப்பனிய கும்பலுக்கு சரியான பதிலடி என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், எம்.எல் குழுக்கள், நக்சல்பாரி அமைப்புகள் பெரியாரை புறக்கணிப்பதில்லை….ஏனென்றால், சாதிய எதிர்ப்பின் அவசியத்தை மிகத்தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்…
    ஆனால், கம்யூனிசத்திற்கெதிராக, உழைக்கும் மகக்ளுக்கெதிராக, இனவாதம் பேசித்திரியும் முற்போக்கு முகமூடி அணிந்த வலதுசாரி கும்பல்….
    அய்யய்யோ, பெரியார் கம்யூனிஸ்டுகளை எதிர்த்தவராயிற்றேனு குதிக்கிறானுக…..
    பெரியாரின் பிம்பத்தை எவ்வளவு எம்பி,எம்பி குதிச்சாலும் தகர்க்க முடியாதுடே…..”

    நன்றி: கலையரசன், (முகனூலிலிருந்து)

  24. @மனிதன்,

    இவர்களில் யாரும் பார்ப்பனர் இல்லை என்று கூறியதால்தான் கேட்டேன்.அவர்கள் இருவரும் பார்ப்பனிய ஆதரவாளர்கள் என்று நானும் கருதவில்லை.

    சங்கரர் குறித்து நான் கூறவந்தது வேறு ஆனால் அதை தெளிவாக கூறாதது என் தவறுதான்.
    கி.மு.6ம்நூற்றாண்டில் புத்தமதம் உருவாகி வ்ரும்வரை வேதமரபு அரச மதமாக உள்ளது.வேள்விகள் மலிகின்றன.பெரும் செல்வ,தானிய வகையறாக்கள் நெருப்பில் போட்டு கருக்கப்படுகிறது.பெளத்தம் வேதமரபை வென்று அரச மதமாக வளர்கிறது.பார்ப்பன,பார்ப்பனிய மேலாதிக்கம் கட்டுபடுத்தப்படுகிறது.பிறகு சங்கரர் வருகிறார்,அத்வைத தரிசனத்தை நிறுவி பெளத்தத்தை வெற்றி கொள்கிறார்.தனது தரிசனம் வேதத்தை ஆதாரமாக கொண்டது என்று தனது வாததிறன் மூலம் நிறுவுகிறார்.வேத மரபு மீண்டும் அதிகாரத்தை கைபற்றுகிறது.

    இன்று வரை இந்துமதமாக முன்வைக்கப்படுவது பார்ப்பானிய புரோகிதவாதம்தான் என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.மகாதர்மத்தின் மாற்றுவடிவம்தான் சங்கரரின் பிரம்மம்.ஆனால் வேதத்தை ஆதாரம் காட்டி மீண்டும் வைதீகத்தை அரசமதம் ஆக்கிவிட்டார்.சாங்கியம்,யோகம் முதலிய தரிசனங்களை அனைத்து மதங்களும் உள்வாங்கி உள்ளது.ஆனால் இன்று சமஸ்கிருதத்தில் உள்ள மூலநூல்கள்தான் அதன் மூலநூல்கள் என்று அனேக ஆய்வாளர்கள் ஏற்கவில்லை.
    தத்துவநூல்களில் எளிய வாசிப்புதான் எனக்கு உள்ளது.தவறு கண்டுபிடிக்கும் அளவுக்கு இல்லை.

  25. /குருவுக்கு தப்பாத சீடர்கள்./
    ஆனால் உங்களைபோல பரமார்த்த குரு சீடனில்லை!
    /இன்று இந்தியாவை அவமானப்படுத்தி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது சாதியும் சாதிக்கேற்ற தொழில்முறையும் தான்…இதை நான் அவர்களுக்கு கட்டாயக் கல்வியும் தொழில்கல்வியும் வேண்டும் என்று எழுதியிருந்தேன்/
    து அம்பெதர்-பெரியார் காலத்திற்கு முன்னிருந்தநிலையே! குறைந்த பட்சம் தமிழ்னாட்டில்நீதிகட்சி ஆட்சியிலும், காமராஜர் ஆட்சியிலும்நிலமை மாறவில்லையா? கட்டாயக் கல்வியும் தொழில்கல்வியும் பெற ஆவண செய்யப்படவில்லையா? உண்மையில் உமக்கு என்ன குறை அய்யா? பெரியார் புரட்சி செய்யவில்லை என்று கூறும் நீவிரும் பார்ப்பன புரட்சியைத்தானே செய்ய எத்தனிக்கிறீர்?

  26. அஜாந்தசத்துரு நீங்கள் எல்லாம் சினிமா நட்சித்திரமாக யொலிக்க வேண்டியவர்கள். காலமும் நேரமும் எல்லோருக்கும் சாதகமாக அமைதில்லை.

    இருந்திடலாம் நாட்டில் பலவர்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    இருக்கவேண்டும் ஒரு சின்னக் கொடி
    அது பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி.

    கழகக் கண்ணீர்துளிகளே இப்படி பாட்டுபடித்து பஞ்சத்தை போக்கியிருக்கிறது என்றால்…

    திராவிடகழக கதாநாயகனே வந்தால் என்னமாதிரி பாட்டுபடித்துத்து பஞ்சத்தை போக்கியிருப்பார்..?

    ______

  27. நன்றி மாவோ அவர்களே! உங்களின் புரட்சி போருக்கு எனது வாழ்த்துக்கள்!
    /கழகக் கண்ணீர்துளிகளே இப்படி பாட்டுபடித்து பஞ்சத்தை போக்கியிருக்கிறது என்றால்…
    திராவிடகழக கதாநாயகனே வந்தால் என்னமாதிரி பாட்டுபடித்துத்து பஞ்சத்தை போக்கியிருப்பார்..?/
    பாட்டுபடித்து , ஆட்டமாடியது எல்லாம் ஆட்சியை பிடிக்கும்வரைதான்! ஆட்சிய மோகனாங்கி முதலில் பெரியாரின் சிஷ்யை என்றார், ஆட்சி நிலையானவுடன்,நானும் பார்ப்பாத்திதான்’ என் கிறார்! எல்லாம் ஜனனாயகம் போய் பணனாயகம் வந்ததினால் ஏற்பட்டநிலை?

    நீங்கள் சொன்னவாறு திராவிட கூத்தாடியவர்கள், இன்று பெரியாரை மட்டுமல்ல , ஓரளவு சமதர்ம பாதையில் சென்றுவந்த அரசு கொள்கைகளையும் குழி தோண்டி புதைக்க எத்தனிக்கிறார்கள்!

    என்ன வறுமை இருந்தென்ன! மக்கள் தசங்கள் மடைமையிலிருந்து மீள்வார்களா என்ன? காரல்மார்க் இந்தியாவை பற்றி கூறியுள்ளாராமே ! அஙகு மதம் இருக்கும்வரை புரட்சி வராது என்று! இங்குள்ள தோழர்கள் செய்வதென்ன? கொஞ்சம் மனசாட்சியை கேளுங்கள் தலைவரே! தொலைத்து விடவில்லையே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க