Thursday, September 28, 2023
முகப்புகட்சிகள்காங்கிரஸ்பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1

முன்னுரை

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் (படம் : நன்றி outlookindia.com)

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

பிப்ரவரி’ 2002
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்

1. பொது சிவில் சட்டம் : மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் என்று வழங்கப்படும் ‘ஒரு சீரான உரிமையியல் சட்டம்’ (Uniform Civil Code) குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.

”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

ஷா பானு வழக்கு
“ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து.

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பின் இணைப்பாக ”பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல் கோட்பாடு தந்துள்ள இந்த வாக்குறுதியை அமல்படுத் வேண்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருப்பது பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன் “ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து. “முசுலீம்களை ராஜீவ் அரசு தாஜா செய்கிறது” என்ற பாரதீய ஜனதா கும்பல் குற்றம் சாட்டியவுடனே அதைச் சமாளிப்பதற்காகப் பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு ராமஜென்மபூமி விவகாரத்துக்கு உயிரூட்டினார் ராஜீவ். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டித் தன்னைச் சந்தித்த முசுலீம் தலைவர்களிடம் ”பொது சிவில் சட்டமெதுவும் கொண்டு வரும் உத்தேசம் அரசுக்கு இல்லை” என்று வாக்குறுதியளித்திருக்கிறார் நரசிம்மராவ். சிறுபான்மையினரைத் “தாஜா” செய்யும் இந்த வாக்குறுதியினால் கோபமடையக்கூடிய இந்து வெறியர்களை சமாதானப்படுத்த, ராவ் எதைத் திறத்துவிடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

முசுலீம் மதவாதிகளோ ”எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை” என்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம்!

ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு- ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாரதீய ஜனதா அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. பாரதீய ஜனதா மட்டுமல்ல, மீனாவின் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குல்தீப் சிங்கும் இதையேதான் கூறுகிறார்.

பொது சிவில் சட்டம்
ஆணாதிக்க மதச் சட்டங்களை புனிதப்படுத்திக் கொள்ளவா பொது சிவில் சட்டம்? (படம் : நன்றி http://www.thehindu.com )

“இந்தியாவுக்குள்ளே இரண்டு தேசங்கள் அல்லது மூன்று தேசங்களாக வாழ்வது குறித்த கோட்பாடுகளையெல்லாம் இந்தியத் தலைவர்கள் ஏற்கவில்லை என்பதும், இந்தியக் குடியரசு எனபது ஒரே தேசம்தான் – இந்தியத் தேசம்தான் என்பதும், அதில் எந்தச் சமூகத்தினரும் மதத்தின் அடிப்படையில் தனித்தன்மை எதையும் கோர முடியாது என்பதும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. இந்துக்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், ஜைனர்களும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் மத உணர்வுகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சில சமூகத்தினர்தான் அவ்வாறு விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.”

மத உரிமை, பெண்ணுரிமை, சொத்துரிமை, குடும்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினை இந்திய ஒருமைப்பாடு குறித்த பிரச்சினையாக மாறிவிட்டது. பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் ) தங்கள் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் விஷமப் பிரச்சாரம் உச்சநீதி மன்றத்தீர்ப்பினால் புனிதப்படுத்தப்பட்டுவிட்டது.

இத்தனை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் என்பது தான் என்ன?

  • எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
  • ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
  • கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
  • பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
  • சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
  • மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக மேற்கத்திய அரசுகள் கொண்டு வந்த, மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட “குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்” என்பது திருமணம், சொத்துரிமை, மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தைப் பறிக்கிறது; மதச்சார்பற்ற அரசு அவற்றைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.

முசுலீம் சட்டத்திற்கு மட்டுமா முரண்பாடு?

அம்பேத்கர் சட்ட அமைச்சர்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.

இத்தகையதொரு பொது சிவில் சட்டத்துடன் முசுலீம் தனிநபர் சட்டம் மட்டுமல்ல, தற்போது அமலில் உள்ள இந்து, கிறித்தவ, பார்சி தனிநபர் சட்டங்கள் அனைத்துமே வெவ்வேறு அளவில் முரண்படுகின்றன.

ஆனால் அத்வானியின் சீடர்கள் பொது சிவில் சட்டத்திற்குத் தரும் விளக்கம் மிகவும் சுருக்கமானது;  “முசுலீம் நாலு பொண்டாட்டி வச்சிக்கலாம்; ‘நமக்கு’ அந்த உரிமை இல்லை. அவன் ‘தலாக் தலாக தலாக்’ னு சொன்னாப் போதும். உடனே விவகாரத்து; நாம் கோர்ட்டுக்கு அலையணும். அதென்ன அவனுக்கு மட்டும் தனிச் சட்டம்?”

நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். முசுலீம் தனிநபர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். பாரதீய ஜனதாவிற்குத் தங்கள் மேல் தோன்றியுள்ள திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, பாரதீய ஜனதாவும் இப்பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்வதில்லை. மாறாக ,மேற்படி ‘உரிமைகளில்லாத ‘ இந்து ஆண்களிடம் தான் கொண்டு செல்கிறது. அதன் நோக்கமும் கண்ணோட்டமும் இதன் மூலம் அம்பலமாகிறது.

இந்துச் சட்டத்தின் வரலாறு

இது ஒருபுறமிருக்க, ‘நமக்குள்ளேயே’ இந்து சட்டம் விதித்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், நம்முடைய சட்டத்தில் அசிங்கமாக வெளிப்படும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் பற்றியும் பாரதீய ஜனதா பேசுவதில்லை.

வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது முழுமுதற் கொள்ளையாக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதா இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாரதீய ஜனதாவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’ இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.

சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும் . கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது . இதனால்தான் இந்துச் சமூகத்தில்தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.

”கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை’’ என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இராசேந்திரப் பிரசாத்
மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவைகளைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு முன்வைத்த சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால் மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

தற்போது வழக்கில் உள்ள இந்துச் சட்டம் 1955-56-ல் நிறைவேற்றப்பட்டது. இது மூன்று வகைப்பட்ட விசயங்களைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

  1. வருண சமூகத்தைக் கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பார்ப்பனியச் சட்ட மரபுகளான சுருதிகள், சுமிருதிகள் மற்றும் அவற்றுக்கான விளக்கவுரைகள்.
  2. சூத்திரர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மரபுகள்.
  3. மேற்கத்திய சட்ட மரபுகளான நியாயம் – நீதி – மனச்சாட்சி, முன்மாதிரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்கள்.

1.சுருதிகள், சுமிருதிகள், விளக்கவுரைகள்

வேதங்கள் ‘ஒலி வடிவில் இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டவை’ என்பதால் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுருதி என்ற சொல்லுக்கு ‘காதால் கேட்டது’ என்று பொருள்.

சுமிருதிகள் என்றால் ‘நினைவில் நின்றவை ‘ எனப் பொருள். வேதங்களின் உட்பொருள் குறித்த ஆதிகால முனிவர்கள் அளித்த விளக்கங்களைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொண்டவையே சுமிருதிகள். முற்கால சுமிருதிகளுக்குத் தரும சூத்திரங்கள் என்றும், ‘மனுஸ்மிருதி’ போன்ற பிற்கால சுமிருதிகளுக்குத் தரும சாத்திரங்கள் என்றும் பெயர்.

தரும சாத்திரங்கள் என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் நாடெங்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை. புதிதாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி எழுதப்பட்ட விளக்கவுரைகள் ஏராளமாக உள்ளன. கி.பி- 7-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை இத்தகைய விளக்கவுரைகள் பல எழுதப்பட்டுள்ளன. நால்வருண முறை என்னும் அடிப்படைச் சட்டத்தில் ஒன்றுபடுகின்ற அதே சமயம் மரபுகள், பழக்கங்கள், ஒவ்வொரு வட்டாரமும் சந்திக்கும் சிறப்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த விளக்கவுரைகள் மாறுபட்டன

2. சூத்திரர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் மரபுகள்

இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களாகிய மேற்கூறியோர் மத்தியில் (ஒவ்வொரு சாதி அல்லது சமூகக் குழுவிற்குள்ளும்) நிலவி வந்த பண்பாடு, மேல் வருணத்தாரின் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனது பண்பாட்டைப் பின்பற்றும்படி முற்காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, அவ்வாறு பின்பற்ற முயன்றோரைத் (எ.கா: நந்தன்) தண்டித்தது.

ஆனால், இந்து மதத்தை அனைத்திந்திய ரீதியில் ஒருங்கிணைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இப்போது ‘கீழ்சாதி மரபு’ களையும் இந்துச் சட்டத்தின் அங்கமாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் வேதங்கள், சுமிருதிகளின் அடிப்படையிலான மைய நீரோட்ட இந்துச் சட்டத்திற்கு இவற்றை அடிப்படையாக ஏற்காமல், ‘இழிவான இந்த மரபுகளை’ பின்னிணைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் தனது ‘புனிதத்தை’க் காப்பாற்றிக் கொண்டது.

3. மேற்கத்திய சட்ட மரபுகள்

நவீன சமூகம் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு சுமிருதிகளில் விடை தேடவியலாது என்பதை இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் புரிந்திருந்தனர். எனவே மதச்சார்பின்மை என்னும் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, மேற்கத்திய சட்ட மரபின் வடிவத்தை அவர்கள் இந்துச் சட்டத்தின் அடிப்படையாகச் சேர்த்துக் கொண்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டத்திற்கேற்ப புதியதொரு இந்து மதத்தை உருவாக்க இது அவசியமாக இருந்தது.

ஆசை வார்த்தைகள், மன்னர்- மானியம், பதவிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு உபாயங்களையும் கடைப்பிடித்து ‘இரும்பு மனிதர்’ இந்தியாவை உருவாக்கிவிட்டார். ஆனால் இந்து மதத்தை ஒருங்கிணைத்து புத்துருவாக்கம் செய்வது இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணியாக இருந்தது.

தனது வாள்முனையில் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரிட்டீஷ் ஆட்சியின் பேனா முனையேகூட ஒருங்கிணைந்த இந்துச் சட்டத்தை உருவாக்கவில்லை. அந்தந்த வட்டாரத்தில் என்ன தரும சாத்திரங்கள் வழக்கில் உள்ளனவோ அவற்றிற்கு பிரிட்டீஷ் நீதிமன்றங்களில் விளக்கம் கூறும் அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களுக்கே இருந்தது.

‘சுதந்திர – ஜனநாயக ‘ இந்தியாவில் இந்த முறையைத் தொடர முடியாதென்பதால் ஒரே சுமிருதியையும், அதற்கு விளக்கம் சொல்ல ஒரே பண்டிதரையும் உருவாக்கும் பணியை இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்கிய சநாதனிகள் மேற்கொண்டனர். ( இவ்வாறு தொகுக்கும் போது அடிப்படையான வருண தருமநெறிகளுக்கு ஊறு வந்துவிடக் கூடாதேயென்று திரைமறைவில் காஞ்சி சங்கராச்சாரி செய்த சித்துவேலைகளை வீரமணி அவர்கள் தனி நூலில் அம்பலப்படுத்தியுள்ளார் ) ஒருவாறாக இந்துச் சட்டத் தொகுப்பு எனும் ‘ஒருங்கிணைந்த சுமிருதி’ உருவாக்கப்பட்டது. அதற்கு விளக்கமளிக்க இறுதி அதிகாரம் படைத்த பார்ப்பனப் பண்டிதராக உச்சநீதி மன்றம் ‘நியமனம்’ பெற்றது.

அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, இந்து திருமணச் சட்டம் (1955), இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1955 ) (1956), இந்து காப்பாளர் சட்டம் (1956) ஆகியவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.

(தொடரும்…)

  1. இந்துக்களைப்பற்றி குறை சொல்வதே வினவுவின் வேலை. இந்து சட்டத்தை அம்பேத்கர் சீர்திருத்த முயன்றபோது அதனை எதிர்த்தார்களாம்!! அம்பேத்கார் சொன்னவுடன் அனைத்து இந்துக்களும் கேட்டு நடக்க வேண்டும் என்ற நியதி இல்லை!!!! அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். அவ்வளவே! அதற்காக அவரது கருத்தை ஏற்கவேண்டும் என்பதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அம்பேத்கார் சொன்னார் என்பதற்காக ஒரு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

    இன்றைய சூழலில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும். இந்துக்களின் சட்டத்தைத்தான் பொது சிவில் சட்டமாக்கவேண்டும் என்று யாரும் கூறவில்லை. முசுலிம்களின் சட்டம்தான் “அறிவியல்” சார்ந்தது என்றால் அதையே பொது சிவில் சட்டமாகவும் ஏற்கலாம். இத்துடன் பெண் உரிமையையும் பார்க்கவேண்டும்.

    ஒரு ஆண் பல பெண்களை மணப்பதால் பெண்களுக்கு உரிமை அதிகமாகிறதா இல்லையா என்பதையும் “பகுத்தறிவு” கொண்டு சிந்திக்க வேண்டும். அதேபோல் கிருத்துவர்களின் பெண் உரிமையையும் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தளவில் ஒரு ஆணையோ பெண்ணையோ விவாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. அதைத்தான் ஐரோப்பிய அமெரிக்க கிருத்துவ சமுதாயங்கள் கடைப்பிடிக்கின்றன.வாழ்நாளில் எத்தனை திருமணம் வேண்டுமாலும் செய்து கொள்ளலாம். (அனால் இந்தியாவில் இருப்பவர்கள் அப்படி இல்லைதான். இந்துக்களைப் போல் கடைப்பிடிக்கிறார்கள்) கால மாற்றத்தால் அவர்களும் கிருத்துவ பாதிரிகள் பொய்களைக் கேட்டு அமெரிக்க ஐரோப்பா போல் பல “விவாக ரத்து” திருமணங்கள் செய்யலாம்.. இவர்களும் மாறலாம்.

    பொது சிவில் சட்டம் என்பதை இந்துக்களின் சட்டம் என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்றுவேலை!! பொது சிவில் சட்டத்தை அனைத்து சட்டங்களையும் ஆராய்ந்து புதிதாக கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து இந்துக்களின் மீதும் பா.ஜ.க.மீதும் வழக்கம்போல் வசைபாடுவது சரியல்ல.

    • /நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அம்பேத்கார் சொன்னார் என்பதற்காக ஒரு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை./

      இந்தியை பொது மொழி என்று எந்த நாடாளுமன்றத்தில் விவாதிதீர்கள் அய்யனே! அந்த அடிப்படையில் தானே மும்பை உயர்னீதி மன்றம், இந்தி பொது மொழி அல்ல, ஆங்கிலம் போன்ற மற்றொரு அலுவல் மொழிமட்டுமே என்று தீர்ப்பளித்துள்ளது! அரசியல் சட்டம் , அறிஞர்களால் வரையப்பட்டு, அரசியல் நிர்ணய சபை பின்னர் கேபினெட் மந்திரி சபை இவை ஏதாவதோன்றில் ஆராயப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் , தேவப்பட்டால் விவாதிக்கப்படுகிறது! அம்பெத் கரின் பொது சட்டம் கேபினெட் அளவிலேயே எதிர்க்கபட்டு, இந்துத்வா சக்திகளால், முறியடிக்கப்பட்டுவிட்டது!

      மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசாவும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! ஒருவேளை அவர் தலையிட்டு இருந்தால் அன்றே பொது சட்டம் நிறைவேறியிருக்கும், அதிக எதிர்ப்பில்லாமல்!

    • இஸ்லாமியர்களை விடுங்கள், இந்தியாவில் பலதார மனம் புரிந்தவர்கள் எண்ணிக்கை ஹிணுக்களே அதிகம் இதற்க்கு என்ன செய்வது?

  2. Dear Vinavu & Author

    //இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை//

    ட்ரெண்டு என்னவென்றால் முகமதியர்களின் (உலகின் மற்றும் இந்தியாவின்) தொகை கூடிக்கொண்டே போகிறது. அதாவது அவர்களின் பலம் கூடிக்கொண்டே போகிறது. எப்போது அலை ஓய்வது? இணக்கமான சூழ்நிலை உருவாவது?
    எப்படியோ. நான் பொதுச் சட்டத்தை ஆதரிக்கிறேன். விவாதங்களை வரவேற்கிறேன்.

    //பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் )//

    கிறித்தவர்களுக்கு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு பொதுமைக்குப் புறம்பான நிலைப்பாடுகள் ஏதும் கிடையாது.

    //நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். //

    இந்த வரி தெளிவாக இல்லை.
    முசுலீம் பெண்களின் மத்தியில் இருந்து இந்த கேள்விகள் வரவேண்டும் என்று பொருளா. அப்படியென்றால் அந்த கேள்விகளை முசுலீம் பெண்களின் மத்தியில் இருந்து வந்ததே இல்லையா.
    முசுலீம் பெண்களிடம் இந்த கேள்விகளைக் கேட்கப்படவேண்டும் என்று பொருளா. அப்படியென்றால் பாதிக்கப்பட்டவர்களிடமே ஏன் பாதிக்கப்பட்டீர்கள் என்று கேட்க வேண்டுமா.

    //திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை//

    எப்படித் தெரியும். அவர்கள் இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் ஷாபனு அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை ஏன் போக வேண்டும்.

    //முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.//

    நல்லவேளை அந்த இந்து மதவாதிகள் தங்களின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முடியாமல் போனது. இந்த நல்வாய்ப்பைப் பெற்ற பெண்கள் தங்கள் வருங்காலத்தில் அதை தவறவிடாமல் பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும். நம் பெண்களுக்காக நாமும் விழிப்புடன் தான் இருக்க வேண்டும்.

    • Univerbuddy,

      \\ட்ரெண்டு என்னவென்றால் முகமதியர்களின் (உலகின் மற்றும் இந்தியாவின்) தொகை கூடிக்கொண்டே போகிறது. அதாவது அவர்களின் பலம் கூடிக்கொண்டே போகிறது. எப்போது அலை ஓய்வது? இணக்கமான சூழ்நிலை உருவாவது?\\
      இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் இணக்கமான சூல்னிலைக்கும் என்ன சம்பந்தம் பட்டி. அதாவது உன்வேர்புட்டி .

      //ஷாபனு அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை ஏன் போக வேண்டும்.\\ ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக ஷாபானுவை கொள்கிறீர்களோ? இதிலிருந்து நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் விஷயம் விரல் விட்டு என்னும் அளவிற்க்கு ஓரிரு பெண்கள் மட்டும் இஸ்லாமிய சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதா?

      • Zahir,

        //இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் இணக்கமான சூல்னிலைக்கும் என்ன சம்பந்தம் //

        இவரு சொல்றத கேளுங்க.

        http://www.answeringmuslims.com/2012/01/three-stages-of-jihad.html

        // ஓரிரு பெண்கள் மட்டும் இஸ்லாமிய சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதா?//

        Don’t act smart. I normally give just one example. In this case, I cannot list out 1000s.

        • Univerbutty,
          //இவரு சொல்றத கேளுங்க.\\

          அவருடைய படித்தரம் என்ன , கண்டவன் சொல்வதையும் வேதவாக்காக தாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்னை ஏன் அப்படி இருக்க சொல்கிறீர்கள் . இவர் சொல்வதை கேட்பதர்க்க்கு முன் இவர் யார் இவரின் பின்னணி என்ன என்று சொல்லுங்கள். இவனுடைய இணையதள முகவரியே சொல்கிறது இவன் யார் என்று… அது எப்படி தங்களுக்கு அலிசேன, மற்றும் இது போன்றவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக தெரிகிறது என்பதையும் விளக்குங்கள்.
          ஒரு துறை சம்பந்தமான விஷயங்களை அந்தத்துறை சம்பந்தப்பட்டவர்களிடம்தானே கேட்டு தெரிந்துக்கொள்ள முடியும் . ஆனால் தாங்கள் எதிர்மாறாக விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மருத்துவரிடமும் , மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை என்கிநீரிடமும் கேட்டு தெரிந்துக்கொள்ள நினைப்பது போல் உள்ளது தாங்கள் இஸ்லாத்திற்க்கு எதிராக கருத்துசொல்பவர்களின் கருத்தை வைத்து இஸ்லாத்தின் வடிவத்தை பார்ப்பது…

          //In this case, I cannot list out 1000s.\\
          எல்லா சட்டத்திலும் அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்வார்கள்… அந்த சட்ட திட்டங்களால் நன்மை விளைந்ததா? அல்லது தீமை விளைந்ததா என்பதை பொறுத்துத்தான் சட்டத்தின் தன்மையை பார்க்க முடியும். பல மில்லியன் மக்கள் பின்பற்றும் இந்த மார்க்கத்தில் சில பேர்கள் மட்டுமே மனநிறைவு அடையாமல் இருப்பதை அறியமுடிகிறது … ஆனால் தாங்கள் சொல்லும் ஆயெரக்கனக்கு என்பது தங்களின் மனக்கணக்காக இருக்கலாம் உண்மை நிலவரம் அதுவல்ல…

  3. //எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ //

    ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்ற ஒன்று உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தினால் தான் அதல்லாத மற்ற தனிநபர் சட்டங்களும் உருவாக்க வேண்டி வந்தது என்பதுதான் உன்மை.

    • கிழக்கிந்தியக் கம்பெனி 1850களில் Caste Disabilities removal act ஐக் கொண்டுவந்த பொழுது கூப்பாடு போட்டவர்கள் சனாதினிகள். வருணாசிரத்திற்கு தீங்கு ஏற்படுகிறதே என்று பார்ப்பன பேஷ்வாக்களும் பெரியாவாக்களும் கலகம் புரிந்த காலகட்டமே பார்ப்பன இந்துச் சட்டம் இருந்ததை தெளிவாகக் காட்டும். இதில் முசுலீம் தனிநபர் சட்டம் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தினால் தான் மற்றதனிநபர் சட்டங்களும் உருவாக்க வேண்டியிருந்தது என்று சொல்வது ஆர் எஸ் எஸ் கைக்கூலித்தனம். இந்துத்துவக்காலிகளின் கீழறுப்பான வேலைக்கு ஊதுகுழலாக இருக்கிறது யுனிவர்படியின் இசுலாமியர்கள் மீதான வன்மம்.

      • பழைய கதைய ஏன் பேசுறிங்க தென்றல் பொது சிவில் சட்டத்தாலா யாருக்கு என்ன பாதிப்பு என்பதை அந்த சட்டத்தின் சரத்துகள் மூலம் எடுத்து உறையுங்கள் அத விட்டுட்டு 1853 ல நடந்த மத கலவரத்த எல்லாம் ஏன் இழுக்கிறீங்க …….

        • தெரியாத மாதிரி நடிக்காததீங்கப்பு. முசுலீம் தனிநபர் சட்டத்தால் தான் இந்து தனிநபர் சட்டம் உருவாக்கப்பட்டது என்ற அப்பட்டமான புளுகலுக்குதான் மேற்கண்ட பதில். காலனியாதிக்கத்தில் சட்டங்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் பார்ப்பன பண்டிதர்களால் தான் நிறைவேற்றப்பட்டன என்பது கட்டுரையிலும் விளக்கப்பட்டிருக்கிறது. அக்கால கட்டங்களிலேயே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக பார்ப்பனியம் தான் இருந்தது. ஆக இந்துக்களுக்கென்று தனிநபர் சட்டம் அன்றோ இன்றோ பிற மதத்தால் வந்துவிடவில்லை. சரியா? நீங்கள் இருவரும் தான் மதவெறியர்களாக போனீர்களே. பிறகு எப்படி இதையெல்லாம் பரிசீலிக்கப் போகிறீர்கள்?

          இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருவோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பார்ப்பனியத்தைப் புகுத்தி விட்டு, இன்றைக்கு பொதுசிவில் சட்டம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் அமுக்குவது போன்றது.

          பொதுசிவில் சட்டம் என்கிற பொழுது பார்ப்பனியத்தை பூனைப் பீயை பதுக்குவது போல பதுக்கமுடியாது.

          இன்னும் சொல்லப்போனால் பொதுசிவில் சட்டத்தில் உள்ள முக்கியமான சரத்துக்கள் சமூக ஜனநாயகத்திற்காக போராடியவர்களால் கொண்டுவரப்பட்டவை. அதில் உள்ள மறுமணம், சொத்துரிமை மற்றும் விவாகரத்து போன்ற பல பிரிவுகளை இந்துமதமும் இப்பொழுது அதை வழிமொழிகிற பிஜேபி ஆர் எஸ் எஸ் காலிகளும் கடுமையாக எதிர்ப்பவர்கள்.
          நிதர்சனத்தில் கிறித்தவமும் இசுலாமும் இதற்கு இடையூறல்ல.

          இதில் கத்தோலிக்க கிறித்தவம் பார்ப்பனியத்தைப் போன்றது. ஏனெனில் நெதர்லாந்து போன்ற நாடுகளில் விவாகரத்து சட்டம் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் கொண்டுவரப்பட்டது. காரணம் தேவன் மணமக்களை தேர்ந்தெடுக்கிறார்; அதை பிரிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்கிறது கத்தோலிக்கம். இப்பேர்பட்ட கேலிக்கூத்தான நிலைமையில் தான் முசுலீம்கள் நாலு பொண்டாட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்ற வன்மத்தோடு படையெடுக்கிறீர்கள். இது மதவெறியன்றி வேறொன்றும் இல்லை.

          மேலும் ஒரு அடி முன்னே சென்றால், நாயர்கள் மற்றும் நம்பூதிரிபாடு சாதிகளின் ஒரே குடும்பத்து சகோதரர்கள் ஒரே மனைவியை திருமணம் செய்கிற போக்கு 80களில் கூட முற்றாக மறைந்துவிடவில்லை. பார்ப்பனியம் இதை சாதிகளின் மரபு என்று வரையறுத்திருக்கிறதா என்ன?

          தமிழ்நாட்டிலும் சரி வடமாநிலங்களிலும் சரி, நீதிபரிபாலனை, பெண்கள் விசயத்தில் கோர்ட் படிக்கட்டுகளை எல்லாம் தாண்டிவிடவில்லை. பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இந்துமதமும் ஆதிக்கசாதிகளின் பஞ்சாயத்தும் தான் இன்றைய நிலைமையில் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக காப் பஞ்சாயத்துக்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்றப்படுகின்றன. இதையே ஆதாரமாக கொண்ட இந்து வெறியர்கள், காப் பஞ்சாயத்தையே தேர்தல் உத்தியாக கொண்ட பிஜேபி தான் பொது சிவில் சட்டம் என்கிறார்கள்! பார்ப்பனியத்தை எதிர்க்காத பொது சிவில் சட்டம் என்பது பிஜேபியின் இந்து ராஷ்ட்ர கனவின் ஒரு பகுதி தான் என்பதில் ஐயம் ஏதும் இருக்காது.

          கடைசியில் பிஜேபியின் பொது சிவில் சட்டத்தில் பொதுவும் கிடையாது, சிவிலும் கிடையாது. வெறும் சட்டம் மட்டுமே இருக்கும். இது பாசிஸ்டுகளின் வழமையான போக்கு அன்றி வேறல்ல.

          • தென்றல் பொது சிவில் சட்டம் எந்த வகையில் இந்து மதத்திற்க்கு ஆதரவானது என்பதை இந்த கட்டுரை தெளிவு படுத்த வில்லை ஏதோ சாணாதானிகள் எதிற்த்தார்கள் முஸிலீம்கள் எதிற்த்தார்கள் என்று எழுதி இருக்கிறார் கட்டுரை புரியும் படி இல்லை எந்த புத்தகத்தை மேற்கோள் காட்டினார்களோ அதை படித்தால் மட்டுமே தெளிவு பெற முடியும் பொது சிவில் சட்டத்தை இசுலாமியர் எதிற்க்க என்ன காரணம் அவர்கள் எந்த வகையில் பாதிக்கபடுகிறார்கள் என்பதை எல்லாம் நீங்கள் விளக்குங்கள் அரசியல சட்டத்த ஒரு மதத்து படி எல்லா மாத்த முடியாது அப்பிடி அரசியல் அமைப்பு சட்டத்துல இந்து மதத்துக்கு சாதகமா என்ன சொல்லி இருக்கு நீங்க விளக்குங்க எனக்கு சந்தேகம் நீங்களும் வினவும் போலி மதச்சார்பின்மை வாதிகளோ……..

          • தென்றல் அவர்களுக்கு,

            //மதவெறியர்களாக போனீர்களே//

            மதவெறிக்கொள்கைகளைப் பற்றி பேசினால் என்னையும் மதவெறியன் என்கிறீர்கள். கழுத்தறுப்பு செய்யும் இயத்தைப் பற்றியும் பேசும் என்னை நானே கழுத்தறுப்பு வேலை செய்வதாகவே முன்னர் ஒருமுறை சாடினீர்கள். உங்கள் வார்த்தைப் பயன்பாடுகள் விநோதமாகவே இருக்கிறது. எப்படியோ. இப்போது எனக்கு பழகிவிட்டது. தொடர்வோம்.

            //மறுமணம், சொத்துரிமை மற்றும் விவாகரத்து போன்ற பல பிரிவுகளை இந்துமதமும் ***ஆர் எஸ் எஸ் காலிகளும் கடுமையாக எதிர்ப்பவர்கள். //

            ‘இந்து’மதத்தில் ஒரு வழிகாட்டியைத்தான் பின்பற்றவேண்டும் என்ற கொடூரம் இல்லையில்லையா. மாற்றத்திற்கு/ தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இடம் இருக்கிறதில்லையா. போராடித்திருத்திக்கொள்ள வழியிருக்கிறதில்லையா. இது எனக்கு பெரிய விசயமாகத்தான் தெரிகிறது.

            //நெதர்லாந்து போன்ற நாடுகளில் விவாகரத்து சட்டம் ***//

            கிருத்தவ சமூகங்கள் மிகவும் வேகமான மாற்றங்களைக் கொண்டவை தனிநபர் மற்றும் குடும்ப விசயங்களில் சட்டம் தளையிடுவது மிகமிகக் குறைவு. இன்று விவாகரத்தை அனுமதிக்காத சமூகங்கள் ஏதும் இல்லை தானே.

            //நாயர்கள் மற்றும் நம்பூதிரிபாடு சாதிகளின் ஒரே குடும்பத்து சகோதரர்கள் ஒரே மனைவியை திருமணம் செய்கிற போக்கு 80களில் கூட முற்றாக மறைந்துவிடவில்லை.//

            இந்த போக்கு இன்று இல்லை தானே.

            இங்கே ஒரு திருத்தம். ஒரே பெண்ணைத் திருமணம் செய்வதில்லை.

            இந்த இரண்டு சாதிகளும் ஒன்றுக்கொன்று முழுமையாக்குபவை. இவர்கள் ஒன்றாக இடம்பெயர்ந்து இந்கே வந்தவர்கள். சைபரஸ் தீவில் இவர்களைப் போன்ற மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆரம்ப வழக்கம் பின்வருமாறு. ஒரு சாதியில் (நம்பூதிரி) களில் முதல் ஆணுக்கு மட்டும் குடும்பமுருவாக்கும் உரிமையிருந்தது. சொத்து பிரியாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடு. மற்றொரு (நாயர்) சாதியில் பெண்கள் மணம் செய்து கொள்ளாமல் யாருடன் வேண்டுமானாலும் சேரும் சுதந்திரம் தான் வழக்கம். அவர்கள் யாரையும் மணந்து கொள்வதில்லை. பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா கிடையாது. முதல் சாதியின் அதிகப்படியான ஆண்கள் இந்த பெண்களுடன் தங்கள் வேட்கையைத் தனித்துக் கொண்டார்கள்.

            இது பெண்வழிச் சமூகத்தையும் ஆண்வழிச் சமூகத்தையும் ஒருங்கே கொண்ட அமைப்பு. இந்த வழக்கத்தில் பெரிதாக எந்த அநீதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

            //பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இந்துமதமும் ஆதிக்கசாதிகளின் பஞ்சாயத்தும் தான்***//

            மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முகமதியக் குடும்பங்களில் பிறந்த பெணகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒப்பிடும் போது இவையெல்லாம் ஜுஜூபி.

            முற்றும்.

      • தென்றல் அவர்களுக்கு,

        கடந்த இரு தினங்களாக வேலையின் காரணமாக பதிலளிக்க முடியவில்லை. இன்று மாலையில் முடியும் என்று நம்புகிறேன்.

        நன்றி.

      • தென்றல் அவர்களுக்கு,

        //வருணாசிரத்திற்கு தீங்கு ஏற்படுகிறதே என்று பார்ப்பன பேஷ்வாக்களும் பெரியாவாக்களும் கலகம் புரிந்த காலகட்டமே பார்ப்பன இந்துச் சட்டம் இருந்ததை தெளிவாகக் காட்டும்.//

        நீங்கள் குறிப்பிடும் 1850 சட்டம் ‘இந்து’ வழிபாட்டுத்தலங்களைப்பற்றியது. (இது போன்று முகமதிய தொழுகைத்தலங்களைப்பற்றிய வக்பு சட்டங்களும் இருக்கின்றன.) இது போன்ற சட்டம் இயற்றத் தேவையிருந்த இழிநிலையையும் அந்த சட்டம் பல தடைகளை சந்தித்தையும் நான் கண்டிக்கிறேன்.
        ஆனால், மாற்றங்களின் வேகம் நாம் விரும்பும் வண்ணமில்லாவிட்டாலும் நமது சட்டங்கள் தொடரந்து மாற்றங்கள் அடைந்து வந்ததிருக்கின்றன. எனவே 1950 களில் இயற்றப்பட்ட சட்டம் ‘இந்திய தனிநபர் சட்டம்’ அல்லது ‘தனிநபர் சட்டம்’ என்றிருக்க வேண்டியதே முறை. இதற்கு யாரிடமிருந்து அதிக எதிர்ப்பு வந்திருக்கும் என்று நீங்கள் தான் யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த பொது சட்டத்தை ‘இந்து’ சட்டம் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு ‘இந்து’ வெறியர்கள் வெறியர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.

        நீங்கள் முகமதியர்கள் இந்தியாவின் சிறுபான்மை என்ற அடிப்படையில் பேசிவருகிறீர்கள். நான் முகமதியர்கள் உலகில் 56 நாடுகளையும் 1.5 பில்லியன் மக்களையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசி வருகிறேன்.

        தொடரும்…

        • UNIVERBUTTY

          //நீங்கள் முகமதியர்கள் இந்தியாவின் சிறுபான்மை என்ற அடிப்படையில் பேசிவருகிறீர்கள். நான் முகமதியர்கள் உலகில் 56 நாடுகளையும் 1.5 பில்லியன் மக்களையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசி வருகிறேன்.\\

          உலக அளவில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகையை குறிப்பிட்டு பேசும் தாங்கள் உலகளவில் இருக்க வேண்டிய சட்டத்தை பற்றி பேசுகிறீர்களா? அல்லது இந்திய அளவில் பேசுகிறீர்களா? ஏனனில் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மை பொது சிவில் சட்டமும் இந்தியாவுக்கான சட்டம் என்னும் போது தாங்கள் உலகளவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை இங்கு வந்து கலப்பதன் நோக்கம் என்ன என்று விளக்கவும்…

          ஒரு சட்டமானது தவறுகளை குறைக்கும் வகையில் இருத்தல் வேண்டும் தவறுகளை ஊக்குவிக்கும் வகையிலோ அல்லது குற்றவாளிகளை அதிகமாக்கும் வகைலோ இருக்குமானால் அந்த சட்டத்தினால் எவ்வித பயனும் இல்லை அர்த்தமும் இல்லை. குற்றவாளிகளை குறைக்கும் அளவிற்க்கு சட்டம் எங்கு உள்ளது என்பதனை ஆராய்ந்து பாருங்கள் .

      • தென்றல் அவர்களுக்கு,

        //யுனிவர்படியின் இசுலாமியர்கள் மீதான வன்மம்//

        நான் மனுவை புகழ்பவனை எப்படி வெறுக்கிறேனோ அப்படித்தான் பெண்களை கறுப்பில் மூடுபவனையும் வெறுக்கிறேன்.

        தொடரும்…

        • மனுவைப் புகழ்பவனை முதுகில் குத்துவில்லை. கருத்திலும் களத்திலும் பார்ப்பனியத்தை வீழ்த்துவதிலும் அதை மக்கள் திரள் முன் அம்பலப்படுத்துவதிலும் எவ்வகையான நைச்சியமும் தேவையில்லை. ஆனால் உங்களுக்கு? இசுலாமியர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதற்கு கம்யுனிச மூகமூடி தேவைப்படுகிறது! ஏற்கனவே ஒரு முறை நான் இதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். அதாவது உங்களது ஒருதரப்பு பார்வை இசுலாமிய மதஅடிப்படைவாதிகளை எளிதில் விட்டுவிடுகிறது. சொல்லபோனால் பிஜேவிற்கு சாமரம் வீசுகிறீர்கள் என்று நிறுவ முடியும். இசுலாமியர்கள் குறித்த உங்கள் பின்னூட்டம் எல்லாம் சொல்கிற செய்தி ஆர் எஸ் எஸ்ஸின் அகில பாரதிய வெளியிடூகளாக இருக்கின்றன. எதிரிக்கு எதிரி நண்பனாக மாறுவது இப்படித்தான்.

          இந்தப் பதிவில் முதல் பின்னூட்டத்தில் நீங்கள் வைத்த கருத்தை வாசித்துப்பாருங்கள். கருத்தே இல்லாமல் பஜ்ரங்தள் ஆசாமி கதறுவதைப்போன்று முசுலீம்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது என்று சொல்கிறீர்கள். பொதுவுடமை வேடம் அணிந்த வஞ்சகர்கள் கூட இதுபோன்று சொல்லத் துணிந்ததில்லை என்பது எமது துணிபு.

          மக்கள் திரள் போராட்டம், வரலாற்றில் இதுபோன்ற பல நபர்களைச் சந்தித்திருக்கிறது. ஆகையால் மக்கள் திரளிற்கு உங்களைப் போன்றவர்களின் அடையாளம் தெரியும். ஆனால் உங்களது அடையாளம் தான் உங்களுக்குத் தெரியவில்லை. எனக்கு இருக்கிற ஒரே தயக்கம் என்னவென்றால் பின்னூட்ட விவாதங்களில் ஈடுபடுகிற உங்களைப்போன்ற நபர்களின் மீது இதுபோன்று விமர்சனங்களை வைக்கிற அளவிற்கு நான் என்னைத் தயார்படுத்தியிருக்கிறேனா என்பது தான். ஏனெனில் நாம் விவாதிக்கிற பிழைப்புவாதம், ஊசலாட்டம், சந்தர்ப்பவாதம், வன்மம் போன்ற பலதரப்பு அபாயங்களில் நானும் தப்பித்துவிடவில்லை. ஆனால் ஒன்றை என்னால் தெளிவாக்கிக்கொள்ள முடியும். “நெறிபிறழாமல் வாழ்வது தற்செயலான நிகழ்வல்ல” என்று ‘போராடும் தருணங்களில்’ என்ற பதிவில் வாசித்திருக்கிறேன். ஒரு வாசிப்பால் என்னசெய்துவிடும் என்கிற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் என்கிற பேச்சுரிமையால் ஒரு தனிமனிதர் வார்க்கப்படுகிறார் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது என்று நம்புகிறேன்.

          உங்கள் தரப்பில் அப்படியொரு நம்பிக்கை இல்லை என்கிற காரணத்தால் தான் தான் இதுநாள் வரை இசுலாமியர்கள் குறித்த பதிவுகளில் எந்த விவரப்பாடும் இல்லாமல் வன்மத்திற்கு மேல் வன்மமாக கக்கிக்கொண்டுள்ளீர்கள் என்று கருதுகிறேன். சான்றாக ஒன்று; வினவில் சமீபத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் பற்றிய பதிவு ஒன்று வந்தது. பீடி சுற்றுகிற தொழிலாளர்கள் இசுலாமியர்கள் என்ற ஒருகாரணத்திற்காகவே நீங்கள் ஒருவரியில் “இதைவிட வேறு சொல்லொணாத் துயரங்கள் இருக்கின்றன” என்பதாக எழுதியிருந்தீர்கள். இவங்களைப் பத்தி எதுக்கு எழுதுற என்பதாக உங்கள் எண்ணம் இருந்தது. சமூகத்தின் பொதுப்புத்தியில் இசுலாமியன் குறித்த பார்வையை இந்துத்துவ கும்பல் வலுவாக வேரூன்றியிருக்கிறது. அதையும் தாண்டி வர்க்கம் பேசுகிற தாங்கள் அறிவிக்கப்படாத வெறியராக விளங்குகிறீர்கள் என்பது தான் நான் புரிந்துகொண்டது.

          பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இசுலாமியனை பலிகொடுத்துவிட்டு ஆர் எஸ் எஸ் காரன் ஜனநாயகவாதியாக வலம் வருகிறான் என்பதற்கு பதில் ஏதும் இல்லை. விவரம் தெரிந்த திப்புவிற்கும் சாகிருக்கும் விவாதக்களத்திலேயே பல லிட்மஸ் டெஸ்டுகளை வைக்கிறோம். ஆனால் இசுலாமிய சமூகம் பலகோணங்களில் எப்படி இந்துக்கள் பார்ப்பனிய கொடுங்கோன்மையால் சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க முடியாமல் இருக்கிறார்களோ அப்படித்தான் பல இசுலாமியர்கள் இன்றும் நசுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இதை வர்க்கரீதியில் பிளவுப்பட்டிருக்கிற இசுலாமியரும் இந்துவும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவுடமை பேசுகிற நீங்கள் வலதுகும்பலோடு சேர்ந்துகொண்டு எண்ணிக்கை பெருகிவிட்டது என்று நச்சுப்பிரச்சாரம் செய்கிறீர்கள். இது என்ன வகையான அரசியல்?

          மக்கள்திரளின் சமுத்தவத்திற்கு சமூகப்புரட்சி தான் தீர்வு என்பதை பலமுறை வழிமொழிகிற தாங்கள் சம்பந்தமேயில்லாமல் பிஜேபி முன்வைக்கிற பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள். இதெல்லாம் கீழறுப்புவேலையில்லையா? தனிமைப்படுத்திக்கொள்வது என்பது இதுதான். இதன் அடுத்த கட்டம் எதிர்முகாமிற்கு சேவகம் செய்வது.

          பல பதிவுகளிலும் உங்களால் வெளிப்படையாக விவாதிக்க முடியாததையும் காண்கிறேன். உங்களது கருத்துக்கள் தடைசெய்யப்படுவதாகவும், பொறுத்துக்கொண்டு பின்னூட்டமிடுவதைப்போல பிலிம் காட்டுகிறீர்கள். இது தேவையல்ல என்பது என் புரிதல். ஏனெனில் நமக்கு விவாதம், பரிசீலனை, சுயபரிசீலனை, மறுக்க முடியாத தரவுகள் போன்ற பல அடையாளங்கள் உள்ளன. இதில் எல்லாம் நம்பிக்கையில்லாத ஒருவர் மட்டுமே முன்முடிவுகளுடன் பிரச்சனைகளை அணுகுவார். மேலும் கம்யுனிசம் என்பது விஞ்ஞான சோசலிசம். ஊக பேரங்களுக்கு அப்பாற்பட்டது. ஒருவர் ஆதாரப்பூர்வமாக வரலாற்று நிலைமைகளுடன் விளக்குகிற பொழுது நாம் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு உத்தி இல்லை. முகம்மதிசம் என்பதற்கு இதன் அடிப்படையில் எந்த துரும்பையும் தாங்கள் கிள்ளிப்போடவில்லை. இருப்பதெல்லாம் வெறும் வன்மம் மட்டுமே. இனி நீங்கள் பரிசீலியுங்கள்.

          தொழிலாளர்கள் சிறை சென்ற பதிவில் உங்களுக்கும் சிறை செல்லும் ஆர்வம் தொற்றிக்கொண்டதாக பதிவிட்டீர்கள். அப்படியெனில் ஒரு முறை தூக்குமேடைக் குறிப்புகளை வாசியுங்கள். அந்த நூல் முழுவதிலும் தோழர் பூசிக் சிறையில் தான் இருப்பார். ஆனால் கைக்காட்டிய மிரேக் ஒரு சமயத்தில் வெளியில் இருப்பான். இத்தணைக்கும் மிரேக் சாதாரணமான ஆள் அல்லர். அவர் குழுவாக இருந்தபொழுது தோழராக இருந்தார். யுத்தக்களத்தில் நேரடியாக போரிட்டார். ஆனால் தனியாக இருந்த பொழுது தோழராக இருக்கவில்லை. நீங்கள் அப்படித்தான். முகம்மதிசம் என்ற முகமூடிக்குள் தனிமைப்பட்டு போகிறீர்கள். இதனால் உங்களால் இசுலாமிய மதவெறியர்களையும் இந்துத்துவ வெறியர்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிவில்லை. ஏனெனில் நீங்களே வெறியராகத்தான் இருக்கிறீர்கள் இப்பொழுதுவரை. இதற்குமேல் உங்களுடன் விவாதிக்க எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

          • முகமதிசத்தை விமர்சித்தால் இசுலாமியர்கள் மீதான வன்மம் என் கிறீர் மாற்று மதங்களை நீங்கள் விமர்சிப்பது சமுகத்தின் மீது உள்ள பற்றா இல்லை வன்மமா இதற்க்கு பதில் சொல்லும் மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் அதற்க்கு தங்களிம் மத புத்தகத்தைதான் மேற்க்கோள் காட்டுகிறார்கள் உனிவர்புட்டி இசுலாமிய மத புத்தகங்களில் இருப்பதையேதான் எடுத்து விள்க்குகிறார் இசுலாமிய மதவாதிகளின் முட்டாள்தனங்களை குறை கூறினால் தென்றல் என்ற பொது உடமை வாதிக்கு ஏன் வலிக்கிறது அன்றைக்கு கேட்ட அதே கேள்விதான் இப்பொழுதும் கேட்கிறேன் நீர் வெறும் தென்றலா இல்லை சுவனத் தென்றலா இல்லை பொது உடமை வேசம் போடும் முகமதுவின் பக்தனா

            • தென்றல் என்பவர் பொது உடமைவாதி பெயரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதவெறியனாகவே நான் நினைக்கிறேன். இவர் பிற மதத்தை பற்றி பேசும் போது அதில் உள்ள சின்ன குறைகளையும் பெரிதுபடுத்தி பேசுவார். அதை இல்லை என்று யாராவது சொன்னால் உடனடியாக மதவெறியன் என்று முத்திரை குத்தி விடுவார். ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரையும் உத்தமர்கள் போல் பேசுவார். அப்படி இஸ்லாமியர்கள் யாராவது தவறு செய்தாலும் அதற்கும் அமேரிக்காவும், RSSதான் காரணம் என்று கூறுவார். ஒன்று இவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் அல்லது ஜிகாதிகள் மேல் உள்ள பயத்தினால் இப்படி எழுதுகிறார்.
              கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்ச நாள் முன்பாக ராமனை பற்றி மிக கேவலமாக ஒரு கட்டுரையை வினவு எழுதியது. இதேபோல் அடிமைப் பெண்கள் குறித்து முகமது நபி கூறியதை பற்றி விமர்சனம் செய்ய தென்றலுக்கு தைரியம் உள்ளதா? ராமனை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடந்த போதே அமைதியாக இருந்த நாடு இந்தியா. ஆனால் இஸ்லாமை மென்மையாக விமர்சித்த தஸ்லிமா நஸ்லினுக்கு ஏற்பட்ட கதி என்ன? இத்னைக்கும் பங்கலாதேஷ் இஸ்லாமிய மிதவாதிகள் அதிக அளவில் இருக்கும் நாடு. அங்கே இந்த நிலை?
              கொஞ்சம் யோசியுங்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய மதவெறிக்கு குடைபிடித்து நாட்டின் அமைதியை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை இந்தியா அழிந்தால் அதனால் மிகவும் பாதிக்கப்பட போவது நிச்சயமாக இஸ்லாமியர்களாக தான் இருக்கும்.இது உங்களுக்கு காமடியாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை

              • முதல் பத்தியில் வைத்திருக்கிற உங்களது ஊகங்கள் எனக்குப் புதிதல்ல. உங்களது ஊகங்கள் உண்மை என்று வைத்துக்கொள்வோம். மதவெறியை போராடி வீழ்த்துவதற்கு உங்கள் தரப்பில் என்ன செய்யப்போகிறீர்கள்? ஆனால் நிதர்சனம் என்னவென்றால் பின்னூட்டம் 7.1 நான் வைத்த கேள்விகளுக்கு ஏற்றோ மறுத்தோ பதிலளிக்க வக்கின்றி இருந்துவிட்டு மதவெறி என்று போங்காட்டம் ஆடுகிறீர்கள். இந்தக் கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

                இரண்டாவது பத்தியில் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். அதற்கு சில பார்வைகளை வைப்போம்.

                1. ராமனைப் பற்றி வினவு கேவலமான பதிவு எழுதியதாக சொல்கிறீர்கள். ஒன்று சொந்தப் புத்தி வேண்டும் அல்லது சொல்புத்தி வேண்டும். ராமனைப் பற்றிய அம்பேத்கரின் ஆய்வு வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாங்கள் எது கேவலம் என்று நினைக்கிறீர்களோ, நீங்களே வால்மீகி இராமாயணத்தைப் படித்து பார்த்து குற்றச்சாட்டை வைக்க வேண்டும். பண்பு நலன்களே இல்லாத ஒரு அரசன் ஆர் எஸ் எஸ்ஸால் கடவுளாக சித்தரிக்கப்படுவது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லை. வினவு எழுதுவது உங்களுக்கு கேவலமாகத் தெரிகிறது என்றால் இங்கு உண்மையில் யார் மதவெறியர்?

                2. அடிமைப் பெண்கள் பற்றி முகம்மது கூறியதை விமர்சனம் செய்ய தைரியம் உள்ளதா என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறீர்கள். இதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு. மேலும் இதே வினவு தளத்தில் தலாக் தொடர்பான பதிவு தோழர் சாகித் அவர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அங்கு முகம்மது எவ்விதம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வாசித்துவிட்டு வாருங்களேன். தைரியத்தைப் பற்றி பிறகு இன்னும் விரிவாக கதைக்கலாம்.

                3. ராமனை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடந்த பொழுது இந்திய சமூகம் அமைதியாக இருக்கவில்லை. மாறாக பார்ப்பனிய சமூகம் மெளனித்துப்போனது. இது சகிப்புத்தன்மையல்ல. மாறாக பிழைப்புவாதம். இன்றைக்கு இராமன் தமிழகத்தில் விற்றுத் தீர்க்கமுடியாத பண்டம். இதற்கு பெரியார் கட்டியமைத்த பார்ப்பன எதிர்ப்பு மரபுதான் காரணம். பார்ப்பனிய பீடை தமிழ்நாட்டில் இல்லாததால் தான் மதவெறி அரசியல் காலுன்ற முடியவில்லை.

                4. இப்பொழுது பங்களாதேசுக்கு வருவோம். நீங்கள் சொல்வதைப் போல மதஅடிப்படைவாதம் தஸ்லிமா நஸ்ரின் என்ற அளவிற்கு மட்டும் இல்லை. இசுலாத்தை நம்புகிற பெண்களே பங்களாதேசில் ஆணாதிக்கத்தால் அமில வீச்சிற்கு ஆளாகியிருக்கிறார்களே. இதற்கு என்ன பதில்? அங்குள்ள இசுலாமியத்தலைவன் கலவரத்தைத் தூண்டியதில் இலட்சக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்களே? என்ன காரணம்? அதே பங்களாதேசில் இசுலாமியர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுகிற தொழிலாளர் போராட்டங்கள் நசுக்கப்பட்டதே! என்ன காரணம்? வர்க்கம் என்று வருகிற பொழுது இசுலாமியர்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவே நின்றார்கள். அப்பொழுது கம்யுனிச எதிர்ப்பு பேசுகிற பதர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு கொண்டார்கள். எந்த அரசாவது உங்களுக்கு வாழ்நாளில் மக்கள் மதங்களைத்தாண்டி இதுபோன்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்லியதுண்டா? இதைவிடுத்து மதவெறிக்கும்பல்கள் இசுலாமியனை மதம் சார்ந்து மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தியிருக்கிறதென்றால் உண்மையில் நரித்தனம் எங்கிருக்கிறது?

                5. இந்திய நிலைமைக்கு வாருங்கள். இசுலாமியர்களை விட்டுவிட்டு இந்துக்களை எடுத்துக்கொள்வோம். கயர்லாஞ்சியில் சுரேகா மற்றும் பிரியங்காவை தலித்துகள் என்பதற்காக பாலியல் வண்புணர்வு செய்துகொன்றார்களே? இந்துக்களின் சிவில் மற்றும் கிரிமனல் சட்டங்களைக் கூடவிட்டுவிடுங்கள். ஆன்மா எங்கே போயிற்று? எத்துனை இந்துக்கள் எதிர்வினையாற்றினார்கள்? இந்துப் பெண்களை இந்துக்களிடம் இருந்து காப்பாற்ற இந்துக்கள் என்ன செய்தார்கள்?

                6. சரி. இதே விசயத்திலும் இந்திய இசுலாமியப் பெண்களையும் கணக்கில் எடுப்போம். கோவையிலும் மேலப்பாளையத்திலும் இசுலாமிய பெண்கள் இசுலாமிய மதஅடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார்களே? இசுலாமியர்களும் கண்டிக்கவில்லை. இந்துக்களும் கண்டிக்கவில்லை. ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு இதுபோன்ற உள் அரசியலும் தேவையற்ற ஒன்று. பிறகு எங்கிருக்கிறது மதச்சார்பின்மை? சகமனிதனாக ஒரு கொடுமையைக் கண்டிக்க தன் மதத்திற்குள்ளேயே வராத இந்துவெறியர்கள் இசுலாமிய மதத்தவர்களுக்கான ஜனநாயக உரிமையை பெற்றெடுக்க எவ்விதம் வருவார்கள்?

                7. ஆர் எஸ் எஸ் காலிகள் எப்பொழுதும் அரைபக்க உண்மையோடு தான் நிற்பார்கள். அது தஸ்லிமா மதபிற்போக்குவாதிகளால் தாக்கப்பட்டார் என்ற அளவோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இசுலாமியர் இசுலாமிய அடிப்படைவாதத்தால் பாதிக்கப்படுவதை கேள்வி எழுப்பமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வேலைத்திட்டம் இசுலாமியர்களின் வாழ்வு பற்றியதல்ல. அவர்களின் வேலைத்திட்டம் இசுலாமியர்களை இந்துக்களின் எதிரிகளாக காட்டுவதற்கு தேவையான நிகழ்ச்சிநிரல் மட்டுமே. இந்தப்பதிவு சுட்டிக்காட்டுகிற பொது சிவில் சட்டமும் இந்த வகைப்பட்டதே.

                8. இந்தியா அமிழ்ந்தால் இசுலாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்களே. ஒரு இந்துவிற்கு பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்பது சமத்துவத்தை தேடுவதற்கான முதல் படி. ஆனால் இசுலாமியனுக்கு சமத்துவத்தை தேட குறைந்தபட்சம் இரட்டைத்தாக்குதலைத் தொடுக்க வேண்டும். அது சொந்த மதத்தின் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை. மாறாக அவர்கள் பார்ப்பனியத்தோடும் எதிர்த்துப்போராட வேண்டும். ஆக இந்தியா அமிழ்ந்துதான் போயிருக்கிறது. இங்கு இந்துவிற்கே மதசுதந்திரம் கிடையாது. இதில் இசுலாமியர்களுக்கு எப்படி இருக்கும்? ஆக ஒரு இந்துவை இசுலாமியனுக்கு எதிராக நிறுத்துகிற நிகழ்ச்சி நிரலுக்குப்பதிலாக, ஒர் இசுலாமியனையும் இந்துவையும் வர்க்க அரசியலில் மதபிற்போக்குத்தனத்திற்கு எதிராக முதலாளித்துவத்திற்கு எதிராக முன் நிறுத்துவதுதான் பொதுவுடமைவாதிகளின் முதன்மையான நோக்கம் என்பதைப் புரிந்து கொள்கிற பொழுது உங்களைப் போன்றவர்கள், இந்துத்துவ விபூதிக்கு தும்முகிற செம்மறிகள் அன்றி வேறல்ல என்பதைக் கண்டுகொள்ள முடியும்.

                • //இசுலாமியனுக்கு சமத்துவத்தை தேட குறைந்தபட்சம் இரட்டைத்தாக்குதலைத் தொடுக்க வேண்டும். அது சொந்த மதத்தின் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை. மாறாக அவர்கள் பார்ப்பனியத்தோடும் எதிர்த்துப்போராட வேண்டும்.// தோழர் தென்றல் இங்குதான் நீர் ஏமாற்றுகிறீர் பார்பானீய சாதி படிநிலைகளில் அதிகம் பாதிப்படைவது இந்துக்கள்தான் ஆனால் அவர்கள் அதை அறிய வில்லை பெரும்பாலும் இசுலாமியர்கள் பார்ப்பனிய்த்துடன் இணைந்தே இருந்து வந்து உள்ளனர் என்பதே எனது பார்வை எனென்றால் தாழ்த்தப்பட்ட இந்துவிற்கு இசுலாமியனும் ஒரு ஆதிக்க சாதியே இதை இல்லை என்று மறுக்க முடியுமா என்னமோ இசுலாமியர்கள் மட்டும் பாதிக்கப்படுவதாக பீலா விடாதிங்க பாஸ்….

                  • ஏமாளி யோசேப்பு,

                    ‘முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்’ எனும் நூல் ஆனந்த் டெல்டும்டேவால் ஆர் எஸ் எஸ்ஸ்ன் நச்சுப்பிரச்சாரத்திற்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது. அம்பேத்கர் பார்ப்பனியத்தின் கோவணத்தை உருவியபொழுது முசுலீம் சமூகத்தைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். இதுவரை இசுலாமியர்கள் மீது நீர் வைத்திருக்கிற கருத்துக்களை அம்பேத்கரின் எழுத்துக்களோடு உரசிப்பாரும். ஏனெனில் இசுலாமிய சமூகத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறோர். அதோடு இசுலாமிய சமூகத்தின் மீதான பார்ப்பனிய தாக்கம் விரிவாக கடைசி இரண்டு பகுதிகளிலும் விளக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து என்னைப்போன்றவர்களிடம் ஏமாறாமல் தற்காத்துக்கொள்ளவும்.

                    • //என்னைப்போன்றவர்களிடம் ஏமாறாமல் தற்காத்துக்கொள்ளவும்.//தோழர் தென்றல் எந்த புத்தகத்தயும் படிச்சு படிப்பறிவுல ஏத்துகிறத விட பட்டறிவுல தெரிஞ்சததான் சொன்னே என்ன எந்த வகையில் ஏமாற்ற போறிங்க இல்ல நான் யாரிடம் ஏமாந்து விட்டேன் என்று நினைக்கிறீர்கள் எனக்கு கொண்ஜம் விளக்குனா பரவாயில்லை ……..

                  • யோசெப்,

                    பார்பனிய படிநிலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என்றுக் கூறுவது சரிதான். அதே காரணத்தால் தான் அந்த தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருப் பகுதி இசுலாமிற்கு மாறினார்கள் மற்றும் கிருத்துவத்திற்க்கும் மாறினார்கள். அது மட்டுமல்லாமல், அம்பேத்கர் மற்றும் அவருடன் தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்திற்கு மாறியதும் பார்பனியத்தால் தான்.

                    வரலாறு இப்படி இருக்கையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இசுலாமியரும் ஆதிக்க சாதியாக இருப்பார்கள். இதை வேறு மறுக்க முடியாது என்று சவடால் வேறு அடிக்கிறீர்கள். ஹிந்து மத வெறியால் இசுலாமியர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று எங்கே கூறுகிறார்கள்.

                    • நடுனிலமை வாதி சிகப்பு அவர்களே ஒரு தாழ்த்தபட்ட இந்துவை ஆர் எஸ் எஸ் காரன் கீழ்சாதிக்காரனாகத்தான் பார்ப்பான் ஒரு இசுலாமியனும் தாழ்த்தப்பட்ட இந்துவை கீழ்சாதிக்காரனாகத்தான் பார்ப்பான் ஒரு ஆர் எஸ் எஸ் ஒரு முசிலீமை முசுலீமாகத்தான் பார்ப்பான் அவனை கீழ்சாதிக்காரனாக ஒரு போதும் பார்க்க மாட்டான் நீங்க தாழ்த்தப்பட்டவனாக இருந்தால் மட்டுமே இதை உணர்ந்து இருக்க முடியும் நான் சொன்னது உண்மை சவுடால் அல்ல…….

                • //ராமனைப் பற்றிய அம்பேத்கரின் ஆய்வு வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது//
                  அதே அம்பேத்கார் இஸ்லாத்தை‌யும் முகமதுவையும் கிழிகிழி என்று கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். அதைப் பற்றி என்றாவது ஒரு வரியாவவது எழுத வினவுக்கும் தென்றலுக்கும் துப்பில்லை.

                  //பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு. மேலும் இதே வினவு தளத்தில் தலாக் தொடர்பான பதிவு தோழர் சாகித் அவர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அங்கு முகம்மது எவ்விதம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வாசித்துவிட்டு வாருங்களேன்.//
                  ராமனை அவன் இவன் என்று ஒருமையில் எழுதியுள்ளீரே இதைப் போல் நபியை எழுதமுடியுமா? எழுதியிருந்தால் ஈராக்கில் கிருஸ்தவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் வினவுக்கும் ஏற்பட்டிருக்கும்.
                  வினவு இஸ்லாமை விமர்சிப்பதெல்லாம், தொட்டால் பூ மலரும் பாடலில் MGR சரோஜாதேவியின் கண்ணத்தை செல்லமாக தட்டுவாரே அந்த மாதிரி தட்டிவிட்டு, அதோ பார் அடித்துவிட்டேன் அடித்துவிட்டேன் என்று கூச்சல் போடுவது தான்.இதை வீரம் என்று வேறு பீற்றிக்கொள்வது.
                  //இங்கு இந்துவிற்கே மதசுதந்திரம் கிடையாது. இதில் இசுலாமியர்களுக்கு எப்படி இருக்கும்? //
                  ஆமாம் கம்யூனிஸ்ட்களிடம் தான் மத சுகந்திரத்தை கற்று கொள்ள வேண்டும். சீனாவில் உய்குர் பகுதியில் முஸ்லீம்கள் பொது இடத்தில் பர்தா அணிவதற்கும் நோம்பு கடைபிடிப்பதற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

                  • //பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு.//

                    கிருத்துவத்திற்கும் கூட உண்டு! ஆனால், பொது சிவில் சட்டம் என்று வரும்போது எங்கள் மத சட்டங்களே பொது சட்டமாக வரவேண்டும் என ஒவ்வொரு சிறுபான்மை குழுவும் வலியுறுத்தும்! இந்து மத சட்டங்கள் கூட ஒவ்வோரு மானிலத்திலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது!

                    கலைஞர் கருணானிதி 1972ல் சட்டமியற்றும் வரை, பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கில்லை! கேரளாவில் மருமக்கள் தாயம் என்ற்முறை தோன்று தொட்டு வழங்கப்பட்டு வந்ததால், ஆண்களுக்கு பெண்வழி வரும் சொத்தில் பங்கில்லை! ஏன் திருவிதாங்கூர் அரசுரிமையும் அப்படியே மருமனுக்கு (அம்மான் மகன்)சென்றது !

                    இவ்வாறு இல்லாத இந்துமதத்தில், ஊருக்கு ஒருநீதி வழங்கபட்டதால், பிராமண மத மனுதர்மநீதியை புறந்தள்ளி, அப்பகுதி மக்களின் பழக்கம் என்பதாக ஆயிற்று!

                    பெரியாரின் சுயமரியாதை (சப்தபதி இல்லாத) திருமணம் செல்லாது என்ற கீழ்கோர்ட் தீர்ப்பே, அப்பீலில், திராவிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்றும், சூத்திரர்களுக்கு ஆரிய முறை திருமண முறை இல்லை எனவே, சீர்திருத்த திருமணம் செல்லும் என்றே தீர்ப்பானது! பின்னர் கலைஞரே அதை சட்டவடிவில் அங்கீகரித்தார்! தற்போது ஒரு உயர்னீதிமன்ற தீர்ப்பால் சடங்குகள் இல்லாமலும், திருமண்மே பதிவு செய்யாமலும் செர்ந்து வாழ்ந்திருந்தாலே அது சட்டப்படியான திருமணமே என்றாகிவிட்டது!

                    இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள்! முதலில்நம் வீட்டை சுத்தம் செய்வோம்!

                    ஷாபானு விஷயத்தில் முஸ்லிம் மக்களே பலர் கொதித்தெழுந்தனர்! அவர்கள் மதநம்பிக்கையில் அரசு தலையீடு கூடாது என்பதில் தான் ஒற்றுமை! மற்றபடி சீர்திருத்தக்கருத்துக்கள் அங்கும் தோன்றியுள்ளன!

                    கிருத்துவத்தை பொறுத்தவரை, அவர்கள் உலகமுழுவதும் பரவியுள்ளதால், அந்தந்த பகுதி அரசு சட்டத்தையே ஏற்றுள்ளனர்! பெரும்பகுதியில் அரசாள்பவராக