Tuesday, October 3, 2023
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்பகத்சிங் பாதையில் அணி திரள்வோம் - புமாஇமு கூட்டங்கள்

பகத்சிங் பாதையில் அணி திரள்வோம் – புமாஇமு கூட்டங்கள்

-

1. கோவை

கோவை ரயில் நிலைய சாலை அன்று சற்று அதிக பரபரப்புடன் ஆனால் சற்றே இருளடைந்தது போல காணப்பட்டது. அனைத்து சூரியக்கதிர்களும் அண்ணாமலை அரங்கினுள் குவிந்ததனாலோ என்னவோ…!

ஆசியுடன் என பிளக்ஸ் வைக்க சட்ட மன்ற உறுப்பினர்கள் இல்லை. அண்ணன் முன்னிலையில் என போர்டு வைக்க மாநகராட்சி உறுப்பினர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.

வழிகாட்டிகளாய் அனுபவசாலிகள் சிலரும், இழப்புகளுடன் சரிவிகிதத்தில் பெருமித உணர்வும் கொண்ட பாட்டாளி வர்க்க இளைஞர்களும், கனவு மின்னும் கண்களுடன் மாணவர்களும் மட்டுமே இந்த மொத்த நிகழ்வின் காரணகர்த்தாக்கள்.

அதோ அங்கே சிலர் வரும் பார்வையாளர்களுக்கு குடிநீர் வேண்டுமே என அதற்காக பாத்திரங்களை கொண்டு வர செல்கின்றனர். இதோ இங்கே சிலர் வரும் மாணவர்களுக்கு இடத்தை அடையாளம் காட்டியவாறு வெளியே நின்று வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

bhagat-singh-kovai-rsyf-03

ஒழுங்கான முறையில் கலைத்து விடப்பட்டதொரு தேனீக் கூட்டத்தைப் போல சிவப்பு ஆடைகள் ஆங்காங்கே ஆளுக்கொரு பணியில். உயிர் பிரிந்து இரண்டு தலைமுறைகளை கடந்தும் இன்னும் புரட்சியை நேசிக்கும் இளைஞர்களுக்கு உற்சாகமும் உணர்வும் ஊட்டிக் கொண்டிருக்கும் தோழன் பகத்சிங்கின் பிறந்த நாள் நினைவு கூரலே அந்த நிகழ்வு.

bhagat-singh-kovai-rsyf-01

ஆம், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் 26-09-2014 அன்று பகத்சிங் பிறந்த நாள் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தோழர் உமா தலைமை வகித்தார்.

பறையாட்டத்துடன் துவங்கிய கூட்டத்தில், முதலாவதாக தோழர் திலீபன் தனது வரவேற்புரையில், சிறப்புரையாற்ற வந்திருக்கும் தோழர் காளியப்பன் அவர்களையும், அதிகாலை சூரியனின் பிரகாசமும் ஆற்றலும் நிறைந்த மாணவ வர்க்கத்தையும் வரவேற்று, மோடியின் கேடித்தனமான “மேக் இன் இண்டியா” எனும் பிரச்சார முழக்கத்தையும் அது இந்தியாவை, அவர்கள் கூற்றுப்படி பாரத மாதாவை எப்படி 22 கூறாக போட்டு அதில் அந்நிய முதலீடு வந்து நோக்கியாவை போல கொள்ளையடிக்க போகிறார்கள் என்று விளக்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

bhagat-singh-kovai-rsyf-02

அடுத்து, தோழர் உமா தனது தலைமையுரையில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பகத்சிங் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார் என்பதனையும் தேசத் துரோகி காந்தி எப்படி பிரபலமாக உள்ளார் என்பதையும் இது எப்படி திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கூறினார். இன்றைய இந்து மத வெறி கட்சிகள் பகத்சிங்கை ஒரு காளி பக்தனாக சித்தரிப்பதையும், உண்மையான பகத் சிங்கின் நாத்திக கருத்துக்களையும் அவரின் ஆளுமையையும் எடுத்துக் கூறினார்.

bhagat-singh-kovai-rsyf-07

தோழர் காளியப்பன் தனது சிறப்புரையில், இந்தியாவை ஆண்ட சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமான பிரிட்டிஷ் அரசுக்கு ஒரே ஒரு பெயர்ச்சொல் சிம்ம சொப்பனமாக விளங்கியதையும் அது எப்படி என்றும் கூறினார். உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கியதாக சொல்லும் வெள்ளைக்காரர்கள் பகத் சிங் என்ற ஒருவனுக்காக, தாம் கூறும் அத்தனை ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி எறிந்து, தமது உண்மை நோக்கங்களை வெளிப்படுத்தும் வண்ணம் செயல்பட வைத்த தீரம் பகத் சிங்கினுடையது.

பகத் சிங்கை பற்றி நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளாதது பெரிய துயரம். பகத் சிங்கை பற்றி தெரிந்து கொள்ளாமல் இந்திய சுதந்திரத்தை நாம் படித்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அர்த்தம். பகத்சிங் ஒரு சமத்துவ சமுதாயத்தை படைக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருந்தான். ஆனால் பகத்சிங்கின் அத்துணை லட்சியங்களையும் இந்த காங்கிரசு, பாஜக அரசுகள் குழி தோண்டி புதைத்து சீரழித்து வருகின்றன. இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பிச்சைக்காரர்கள் போல தினசரி பிழைப்புக்கு அலைந்து கொண்டிருக்கையில் மங்கள்யானை கொண்டாடுவது எந்த விதத்தில் சரியாகும். மோடி மேக் இன் இண்டியா திட்டத்தின் மூலம் இந்தியாவை படிப்படியாக விற்கிறார். இந்த தனியார்மயம் எப்படி சமூக சீர்குலைவை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவுற எடுத்தியம்பினார்.

bhagat-singh-kovai-rsyf-12

அடுத்து, பகுதி தோழர்களின் கலை நிகழ்ச்சியாக இந்து மத வெறி பாசிசத்தையும் மறுகாலனியாக்கத்தையும் அம்பலப்படுத்தும் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக, தோழர் கிரீஷ் மாணவர்களின் இன்றைய நிலையையும் போராட்டமே நமக்கான விடிவுப்பாதை என்பதையும் கூறி நன்றியுரை நல்கினார்.

bhagat-singh-kovai-rsyf-06

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

2. தருமபுரி

காதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் பிறந்தநாள் – செப்டம்பர் 28

இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை!
எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதும் இல்லை!

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் தோழர்கள் பகத்சிங் பிறந்தநாளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கும் செவ்வணக்கம் செலுத்தினர். படத்தை பார்த்தும், முழக்கங்களை கேட்டும், யாருடைய பிறந்தநாள் என்று விசாரித்து மக்கள் ஆர்வம் காட்டினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
8148055539

3. திருச்சி

ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளி மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

“புரட்சி ஓங்குக” ! என்ற பகத்சிங்கின் முழக்கம் நாடு முழுக்க வியாபித்தது. தனது 23 – வது வயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த பகத்சிங்கின் மரணம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சியை இந்நாட்டு இளைஞர்களுக்கு தோற்றுவித்தது. தனது மரணத்தையே தாய் நாட்டின் விடுதலைக்கான வேலைத்திட்டமாக எடுத்துச்சென்ற மாவீரன் பகத்சிங்கின் 107 – வது பிறந்த நாள் விழா செப் 28 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை சார்பாக பகத்சிங் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் செப் 28 மாலை 7 மணி அளவில் நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கல்லாங்காடு பகுதியில் தோழர்கள் வீடு வீடாகச்சென்று பகத்சிங் பிறந்த நாள் விழா பிரசுரம் கொடுத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

பறை முழக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கல்லாங்காடு பகுதி கிளையைச் சேர்ந்த தோழர் செழியன் தலைமை தாங்கினார்.

தோழர் செழியன் பேசும்போது ‘’ தாய் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்து கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் விடுதலைத் தீயை ஏற்படுத்திய தோழர். பகத்சிங் வழியை ஒவ்வொரு இளைஞரும் தேர்ந்தெடுக்க வேண்டும் ‘’ என்று பேசினார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்டப் பொருளாளர் தோழர் ஓவியா பகத்சிங் வாழ்வை பார்த்து , அதிலிருந்து இன்றைய இளைஞர்கள் தனது “ரோல்மாடலாக” அஜித், விஜய் போன்ற சினிமா கழிசடைகளை கொண்டிருப்பதைத்தூக்கியெறிந்து பகத்சிங் – ஐ இலட்சிய நாயகனாக் கொண்டு இன்றைய மறுகாலனியாக்க அபாயத்திலிருந்து நாட்டை காக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.

அதற்கு அடுத்தபடியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கல்லாங்காடு கிளை தோழர் தமிழ்செல்வன் “கல்லாங்காடு பகுதிக்கு அமைப்பு வருவதற்கு முன்பு காவல்துறையின் கரும்புள்ளியாக இருந்தது, காவல்துறைக்கு வழக்கிற்கு ஆள் கிடைக்கவில்லை என்றால் பொய் வழக்குப்போடுவது என்ற நிலை இருந்தது. அமைப்பு வந்த பிறகு அந்த நிலை முற்றிலும் மாறி இன்று காவல்துறை மட்டும் அல்லாமல் அனைவரும் கல்லாங்காடு பகுதியை மதிக்கும் நிலைக்கு மாறயுள்ளது. நமது பகுதி பின் தங்கிய நிலையில் உள்ளது அதனை மாற்ற இங்குள்ள இளைஞர்கள் பகத்சிங் பாதையில் அணிதிரண்டு நமது உரிமைக்காக போராட வேண்டும். அதற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி- யின் பின்னால் அணிதிரள வேண்டும்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மைய கலைக்குழு தோழர்களின் கலை நிகழ்ச்சியும் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பகத்சிங்கின் தியாத்தையும் இன்றைய இளைஞர்கள் அவரின் பாதையை பின்பற்றி வாழ வேண்டும் என்றும் உணர்வூட்டும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.

இறுதியாக கல்லாங்காடு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பகுதி கிளை செயலர் தோழர் மணி நன்றியுரையாற்றினார். திரளாக நின்றுகொண்டிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கல்லாங்காடு பகுதி கிளை
திருச்சி மாவட்டம்.
அலைபேசி _ 99431 76246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க