புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு
நெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல்,சென்னை – 95,
9445112675 | rsyfchennai@gmail.com
கண்டன அறிக்கை
ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
1991-96 ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம்.
இந்த தண்டனை கூட சாதாரணமாக கிடைத்து விடவில்லை. உழைத்து வாழும் சாமானிய மக்கள் ரயிலில் வெள்ளரிக்காய் விற்றால் சட்டவிரோதமான செயல் என்று கூறி விசாரணையின்றி உடனே சிறை. இதே ஜெயலலிதா அரசால் எவ்வித குற்றமும், விசாரணையும் இன்றி அரசியல் பழிவாங்குதலுக்காக எத்தனைபேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாடே பார்க்க பகிரங்கமாக நடந்த பகற்கொள்ளைக்கு 18 ஆண்டுகள் கழித்த பிறகே தீர்ப்பும், தண்டனையும். இந்த காலங்களில் மீண்டும் 2 முறை முதல்வராகி பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஜெயலலிதா வகையறாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிக மிக குறைவானது. கட்சியின் பொதுச்செயலாளரே கிரிமினல் என்றால், அவர் வழி நடத்தும் கட்சி எப்படிப்பட்டதாக இருக்கும். சந்தேகத்திற்கிடமில்லாமல் அந்த கட்சியே கிரிமினல் மயமானது என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்லமுடியும். குற்றவாளிகளாக ஓடி ஒளிய வேண்டியவர்கள் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே முடக்கியுள்ளனர். பேருந்து எரிப்பு, பொதுச்சொத்துக்களை நாசம் செய்வது, கடைகளை சூறையாடுவது என வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூகவிரோத அ.தி.மு.க கட்சியை தடைசெய்திருக்க வேண்டும். ஜெயா வகையறாக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறும் 4 வருடம் என்பது ஒரு தண்டனையே இல்லை. அதிலிருந்தும் தப்பிக்க பெயில் என்ற பெயரில் பல தகிடுதத்தங்களை செய்கின்றது ஜெயா கும்பல்.
வயதையும், தனக்குள்ள நோய்களையும் காரணம் காட்டி பெயிலில் வெளிவர முயற்சிக்கின்றார் ஜெயா. சாதாரண உழைக்கும் மக்கள் குற்றம் எதுவும் செய்யாமல் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் தமிழகச் சிறைகளில் வதைபடுகிறார்கள். இவர்களுக்கு பெயில் இல்லை. தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பல்லாயிரக்கணக்கில் சிறப்பு முகாம்கள் எனும் முள்வேலிக் கம்பிக்குள் வதைபட்டு சாகிறார்கள். இந்த சட்டவிரோத முகாம்கள் கலைக்கப்படவில்லை, இம்மக்களுக்கும் பெயில் இல்லை. அவர்களில் பலர் ஜெயலலிதாவின் வயது உடையவர்கள், பலர் அவருடைய வயதுக்கும் அதிகமானவர்கள். ஜெயலலிதாவுக்கு சாதாரணமாக உடல்நிலையை சோதிக்கவே அவர் விரும்பிய மருத்துவர் வருகிறார். அப்பல்லோவில் இருந்து மருந்து வருகிறது. ஆனால் சிறையில் வாடும் சாதாரண மக்களுக்கு என்ன நோய் என்று தெரியாமலும், உரிய மருத்துவம் இல்லாமலும் செத்தவர்கள்,செத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பல நூறு பேர். ஒரு குற்றமும் செய்யாத இவர்களெல்லாம் பெயில் இல்லாமல் ஜெயிலில் அடைபட்டுக் கிடக்கும் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டும் சிறை என்ற பெயரில் சகல வசதிகளுடன் சொகுசாக ஓய்வெடுக்கும் ஜெயாவுக்கு எதற்கு பெயில்.
இப்படிப்பட்ட கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும். எனவே கொள்ளை கும்பலான ஜெயலலிதா வகையறாக்களை பெயிலில் விடக்கூடாது.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த 27 ந்தேதி முதல் அ.தி.மு.க வினர் தமிழகம் முழுவதும் பொதுச் சொத்தை நாசப்படுத்தி வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ’அம்மாவு’க்கான அனுதாப அலையை உருவாக்குவதற்காக தமிழக மக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறார்கள். பல கல்லூரி மாணவர்களை மிரட்டியும், சாராயாம், பிரியாணி கொடுத்து வளைத்துப் போட்டும், கல்லூரி நிர்வாகங்களின் துணையுடனும் அம்மா ஆதரவு மாணவர் போராட்டங்களை நடத்தி, மாணவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். இதனை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திலுள்ள ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும், மாணவர்கள், இளைஞர்களும் அ.தி.மு.க வினரின் இந்த வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.
இவண்
த. கணேசன்,மாநில அமைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
The jaalra medias must also be condemned especially Thanthi TV Paande and Hariharan.
சாதாரண மக்களுக்கு பெயில் கிடைகலன்னா நீதிபதியை, நீதிமன்றத குறை சொல். அதுக்கும் ஜெய பெயிளுக்கும் என்ன சம்பந்தாம்? கருணாநிதி ஆட்சியில, மற்ற எல்ல ஆட்சியிளையும் எது நடக்கது.
சட்டப் படி அப்பீல் பண்ண உரிமை இருக்கும் பொது, உனக்கு என்ன அரிக்குது?
சொத்து சேர்க்காத ஒரு அரசியல் கட்சியை சொல்லு? அயோக்யத்தனம் பண்ணாத ஒரு கட்சியி சொல்லு? எல்லாத்துக்கும் தெரியும் ஜெயாவும் மோசம் தான், ஆனா இருக்கற கழிசடைல இது பரவால்லன்னு தான் சட்ட மன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தெரிதலிலும் மக்கள் தீர்ப்பு கொடுத்தாங்க. மக்கள் போட்ட வோட்டு ஜெயலலிதா என்ற ஒருத்தருக்கு தான்.
கருணாநிதி காங்கிரஸ் கிட்ட மண்டியிட்ட மாதிரி, ஜெய பிஜேபி கிட்ட விலை போல.
?
//சொத்து சேர்க்காத ஒரு அரசியல் கட்சியை சொல்லு? அயோக்யத்தனம் பண்ணாத ஒரு கட்சியி சொல்லு? எல்லாத்துக்கும் தெரியும் ஜெயாவும் மோசம் தான்//
அப்புறம் எதுக்கய்யா சட்டம், காவல் துறை, நீதி துறை?
அம்மா சொன்னது தான் சட்டம்! அவரின் ஏவல் படையே காவல்!
ரப்பர் ஸ்டாம்ப் வைப்பவரே நீதிபதியா?
வினவு! உங்கள் கருத்தைநான் ஏற்கவில்லை! ஜாமீன் கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்- 18 வருடம் கழித்து!நீதி வாழ்க!
அந்தம்மா வெளிய வராத இருக்கறதுக்கு போராட்டம் பண்றீங்களே……………… இதுக்கு பதில் அப்பவே அந்தம்மா ஆட்சிக்கு வராத மாதிரி புரட்சி பண்ணிருக்கலாமே……………
இந்த வழக்க பதிவு செஞ்சதுக்கப்புறம் ரெண்டு தடவ முதல் அமைச்சராகிருகாங்க………… எதாவது செய்ய முடிஞ்சுதா ………..ம்ம்ஹும் …………..
பாராளமன்ற தேர்தல புரட்சி பண்ணி அந்தம்மா மண்ணை கவ்வ வைக்க வேண்டியதுதானே………….ம்ம்ஹும் …………..
Atleast அந்தம்மா உள்ளாட்சி தேர்தல விளையாடின விளையாட்ட எதிர்த்து புரட்சி பண்ணி தேர்தல்ல ஜெயித்து புரட்சி பண்ணிருக்கணும்…..ம்ம்ஹும் …………..
உங்க புரட்சியும் , போராட்டமும் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு ஜி …………
ராம் சோ(த்)து மலானிக்கி பதிலா, நம்ம வக்கீல்
வண்டு முருகனை அனுப்பி இருந்தால், “வாய்தா ராணி”
வெளியே வந்திருக்கும்….
கெடுத்திட்டிங்கலே பரட்டை
வழக்கு …நடத்துறது …மட்டும் …” ஆமை “…வேகத்துல விடுதலை..கேக்குறது..மட்டும்..” புருஸ்லி “..வேகத்துலியா? வழக்குக்கு..20..வருஷம்..விடுதலை மட்டும்..2..நாள்லியா? விசாரணைக்கு..வா…வா..ன்னு…கூப்புட்டப்போ..போவலை இப்போ..விசாரி..விசாரி..ன்னு…கோர்ட்டுலியே..குடும்பம் நடத்துறீங்க……
mr. alagar you are really joking. real joker.
மனிதனின் அறிவு வளர்ச்சியை பார்த்து எனக்கு பயங்கரமா பிச்சுக்குது. அய்யா முதலாளித்துவம் என்றாள் என்ன வென்று முதலில் உங்களுக்குத் தெரியுமா.நாட்ட்டின் பொருளாதரமும் , ராணுவமும், முதலாளிகளின் கையில் இருக்கும் போது தேர்தலில் நின்று ஜெயித்தால் என்ன நிலை ஏற்படும் நீங்கள் சொல்லுங்கள் பார்க்களாம். அனைத்தையும் சீர்குலைப்பார்கள் அனைத்திற்கும் புதிதாக பதவி ஏற்ற சோசலிச அரசுதான் என்று காரணம் பழி போடுவார்கள். மேலும் மக்களின் போராட்டங்களின் மூலம் பாட்டாளி வார்க்க அரசு அமையும் போதுதான் இந்த நாட்டை நாமே ஆளமுடியும் என்ற நம்பிக்கையும் அவர்கள் பெற முடியும். அதற்க்கு ஒரே வழி அவர்களை போராட பயிற்று விப்பதுதான். தேர்தலில் நின்று அவர்களுக்கு போலி ஜன நாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதில்லை.மனிதன் கொஞ்சம் மனிதாக யோசிக்கவேணும்.
பெங்கலூரு முழுவதும் “பச்சை”நிற வர்ணம் அடித்து
இருந்தால், தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும்…
யார்டா அங்கே?
எடுடா பெய்ன்ட் வாளியை
பெங்கலூரு முழுசும் பச்சையாய் தெரியனும்
பொதுவாக, தமிழக அதிகாரிகள்,நீதிமன்றங்கள் மீது மக்கள்நம்பிக்கை இழந்து விட்டார்கள்!நடந்து முடிந்த தேர்தலும் புரட்டு தேர்தல், நடப்பது அராக ஆட்சி என்பதால் சாதாரண மக்கள் பயத்துடனே ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ (ஜெயா ஆண்டால் என்ன-பன்னீர் ஆண்டல்ல என்ன) என இருக்கிரார்கள்! அம்மா வந்தாலும் மண்ற்கொள்ளை, விலைவாசி உயர்வு, கரண்ட் பில், பஸ் கட்டணம், குண்டர் வசூல் குறையப்போவதில்லை!
இன்னிலையில் பார்ப்பனர்கள் மட்டுமே அம்மாவை உத்தமர் என கூசாமல் சொல்ல துணிகின்றனர்!, மற்றவர்கள் அம்மாவின் ‘திறமை’ பற்றிதான் பேசுகிறார்கள்,நேர்மையை பற்றி யாரும் நம்ப வில்லை!
கடந்த பத்துநாதளாக அரங்கேறிய அராஜகங்கள், இன்று கல்விநிலயங்கள் மூடல் வரை வந்து விட்டது! அரசு அதிகாரிகளும், நீதிமான் களும் இன்னும் நித்திரை கலையவில்லை!
இந்த அராஜக வாதிகளுக்கு பணிந்து ஜாமின் கொடுத்தால், அவர்கள் சரித்திரத்தில் மன்னிக்கபட மாட்டார்கள்!