Wednesday, May 14, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீதிபதியை எருமை, சனியன், முண்டம்....திட்டுகிறது அதிமுக

நீதிபதியை எருமை, சனியன், முண்டம்….திட்டுகிறது அதிமுக

-

jaya areest poster

சுவரொட்டியில் இடம் பெற்றிருக்கும் வரிகள்:

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

“பொறுமையை காக்க வேண்டிய எருமை நீதிபதியே,
சட்டதிட்டத்தை சரியாக படிக்க தெரியாத சனியனே,
தமிழ்நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே,
அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே!”

இன்னும் 24 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டு புரட்சி தலைவி அம்மாவை விடுதலை செய்!
தமிழ்நாட்டு மக்களை கொந்தளிக்க வைக்காதே!
கடலை பொங்க வைக்காதே!

மக்களின் தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா விடுதலை ஆகும் வரை தமிழ்நாடு ஒருபோதும் ஓயாது!

கருணாநிதியே, நீ தீட்டிய திட்டம் ஒரு போதும் நடக்காது,  தமிழ்நாட்டு மக்கள் கிட்ட நடக்காது

இவண்
அம்மாவின் உண்மை உயிர் தொண்டன்
R.C.மனோ (கரண்ட்)
கந்தன்சாவடி

_______________________________________________________________________________________

மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயாவுக்கு தண்டனை வழங்கியவர் நீதிபதி குன்ஹா. அவரை எருமை, சனியன், கருமாந்திரம், திருட்டு முண்டம் என்று அதிமுக ரவுடிகள் சுவரொட்டியே அடித்திருக்கிறார்கள் என்றால் இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, மாஃபியாக்களின் ஆட்சியா? சாமானியர்களை சட்டம் ஒழுங்கின் பெயரால் அச்சுறுத்தும் போலீசு இங்கே பாசிச ஜெயாவின் ரவுடிக் கூட்டத்திற்கு வெண்சாமரம் வீசுகிறது. எதிர்க்கும் எமது தோழர்களை கைது செய்கிறது!

ஜெயாவை லேசாக விமரிசித்தாலே ஊடகங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும்! இனி குன்ஹா தமிழ்நாட்டில் பயணித்தால் கஞ்சா வழக்கு உறுதி!