Sunday, January 17, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நீதிபதியை எருமை, சனியன், முண்டம்....திட்டுகிறது அதிமுக

நீதிபதியை எருமை, சனியன், முண்டம்….திட்டுகிறது அதிமுக

-

jaya areest poster

சுவரொட்டியில் இடம் பெற்றிருக்கும் வரிகள்:

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

“பொறுமையை காக்க வேண்டிய எருமை நீதிபதியே,
சட்டதிட்டத்தை சரியாக படிக்க தெரியாத சனியனே,
தமிழ்நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே,
அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே!”

இன்னும் 24 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டு புரட்சி தலைவி அம்மாவை விடுதலை செய்!
தமிழ்நாட்டு மக்களை கொந்தளிக்க வைக்காதே!
கடலை பொங்க வைக்காதே!

மக்களின் தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா விடுதலை ஆகும் வரை தமிழ்நாடு ஒருபோதும் ஓயாது!

கருணாநிதியே, நீ தீட்டிய திட்டம் ஒரு போதும் நடக்காது,  தமிழ்நாட்டு மக்கள் கிட்ட நடக்காது

இவண்
அம்மாவின் உண்மை உயிர் தொண்டன்
R.C.மனோ (கரண்ட்)
கந்தன்சாவடி

_______________________________________________________________________________________

மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயாவுக்கு தண்டனை வழங்கியவர் நீதிபதி குன்ஹா. அவரை எருமை, சனியன், கருமாந்திரம், திருட்டு முண்டம் என்று அதிமுக ரவுடிகள் சுவரொட்டியே அடித்திருக்கிறார்கள் என்றால் இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, மாஃபியாக்களின் ஆட்சியா? சாமானியர்களை சட்டம் ஒழுங்கின் பெயரால் அச்சுறுத்தும் போலீசு இங்கே பாசிச ஜெயாவின் ரவுடிக் கூட்டத்திற்கு வெண்சாமரம் வீசுகிறது. எதிர்க்கும் எமது தோழர்களை கைது செய்கிறது!

ஜெயாவை லேசாக விமரிசித்தாலே ஊடகங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும்! இனி குன்ஹா தமிழ்நாட்டில் பயணித்தால் கஞ்சா வழக்கு உறுதி!

 1. அம்மா திமுக என்பதே குண்டர் படைகளை கொண்ட மாஃபியாக்கள் கும்பல் என்று பலமுறைநிருபித்துள்ளனர்.சட்டம்,நீதி,மன்றம் இவை எல்லாம் சாமாணிய மக்களை ஒடுக்க அவர்கள் பயன்படுத்துவது.அதே அவர்கள் மீது பாய்ந்தால் சும்ம இருப்பார்களா என்ன.

  இதிலிருந்து அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால் மற்றவற்கள் எச்சில் துப்பினாலே கண்டிக்கும் நீதிதுறை எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று.
  ஏறதாழ 17 ஆண்டுகளுக்கு முன்பு ம க இ க சொன்னது உண்மையென மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்கள் .

  ” ஜெயலலிதா தமிழக அரசியலை பீடித்திருக்க்கும் அசிங்கமான சீக்கு.அதை தடுக்காவிட்டால் தமிழகம் அழுகிநாறுவதை தடுக்கவே முடியாது.”
  முடியலேயே.
  முடியாதா?

 2. ஜெயலாலிதா சின்னத்திற்கு வோட்டு போடுகிறேன் , அந்த தொகுதியில் யார் நிற்கிறார் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை என்கின்ற மனபோக்கு தொடரும் வரை ,
  தலைவர்களை விசுவாசிப்பவர்களே அரசியலில் வெற்றி பெற முட்யும் என்கின்ற நிலை தொடரும் .

  அது இருக்கும் வரை விசுவாசிகளில் யார் சிறந்த விசுவாசி என்பதை நிரூபிக்க , தனி தன்மையை நிரூபிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் .

  அவர்களுடைய ரெஸ்யூமில் இவை புல்லட் பாயிண்டுகள்

 3. அம்மாவ நிரந்தரமா நாலு வருசம் உள்ள வச்சுடனுமுனு முடிவு கட்டிடானுக அதிமுக அடிமைகள் …அய்யோ சனியன் சடை போட ஆரம்பிச்சுரிச்சே இனி பொட்டு வைச்சு பூ வைக்காம போகாதே இதைத்தான் அம்மா ஜெ புலம்பிக்கொண்டு இருபார்களோ ஜெயிலில் என்று நான் ஐயுருகிறேன் …நீதிபதி ரத்னகலா அம்மாவ கோவபடுத்தினீங்க இப்ப சந்திரசேகர் அடுத்து சுப்ரிம் கோர்ட் நீதிபதிய வேற டென்சன் பன்னாதிங்க அதிமுக அடிமைகளா அம்மா ஓபிஎஸகூட சந்திக்க பிரியப்படலயாம் பாத்துக்கங்க அடிமைகளா இல்ல அம்மா நிரந்தரமா உள்ளதான் ஏற்க்கனவே மோடி வேற ஊழல் செய்தவர்களின் ஆதரவு எனக்கு தேவை இல்லனு சொல்லீட்டாராம் கொஞ்சம் பார்து நடந்துக்கங்க…….

 4. What happened to AIADMK’s slogans “Kadamai Kanniyam and Kattupadu”? EVR started self respect movement to exhort tamil people not to be slaves to political class. What is the result. If only EVR had started Jhaalra movement, probably the people of tamil nadu and the ottunnis of political parties would have thought of self respect and personal dignity

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க