டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளனர். மஹிசாசுரனை நாயகனாக சித்தரித்து வெளிவந்த “பார்வர்ட் பிரஸ்” ( Forward Press) என்ற பத்திரிகை அலுவலகத்தை போலீசை கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆரிய பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை, பழங்குடிகளை இனப்படுகொலை செய்ததை கொண்டாடும் பல்வேறு பார்ப்பன பண்டிகைளில் ஒன்று துர்காபூஜை என்ற மஹிசாசுரன் படுகொலை கொண்டாட்டம். அதே சமயத்தில் மஹிசாசுரனை தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடி மக்களின் நாயகனாக முன்னிறுத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இங்கு இருந்து வருகிறது.
அம்பேத்கர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இது போன்ற விழாக்களை ஊக்குவித்துள்ளனர். தலித் மக்கள் ஆங்கிலேயர் படையில் சேர்ந்து, பார்ப்பன மன்னனை கொன்றோழித்த தினத்தை அம்பேதக்ர் கொண்டாட வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இராவண லீலா நிகழ்வுகளை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அசுர கானம் என்ற பெயரில் பாடல் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளது: தமிழ் மக்கள் இசை விழாவையும் பல ஆண்டுகளாக நடத்தியிருக்கிறது.
அந்த வகையில் பார்ப்பனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, “வீரமரணமடைந்த மஹிசாசுரனுக்கு நினைவேந்தல் நிகழ்வு” என்று ஒரு நிகழ்வை அக்டோபர் 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம். நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியின் காவேரி மெஸ்சில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு திரண்டு வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். விடுதி உணவகத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தங்கள் வெறியை காட்டியுள்ளனர். தங்களின் வன்முறை மூலம் நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்துள்ளனர்.
இதே போல கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினரின் தூண்டுதலின் பேரில் பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தோம்.
ஏபிவிபி யின் இந்த அடாவடி செயலை செயலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது.
நிகழ்வில் கல்ந்துகொண்ட ஒரு மாணவர் இது குறித்து கூறும்போது “ஏபிவிபி யினரும் இதே காவேரி மெஸ்சில் தான் தங்களின் துர்கா பூஜைக்கான சிலைகளை வைத்து வழிபட்டனர்.அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை ஆனால் இன்று தலித்துகள் தங்களின் நாயகன் மஹிசாசுரன் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் போது ஏபிவிபியினர், அந்தப் பகுதி குண்டர்களின் துணையுடன் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேரு பல்கலைகழக மாணவர் தேர்தலின் அனைத்து பதவிகளிலும் சி.பி.எம்.எல் (லிபரேசன்)-ன் மாணவர் அமைப்பான AISA-விடம் படுதோல்வியடைந்த ஏ.பி.வி.பி தனது கோபத்தை இந்த வன்முறை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது. AISA-வின் வெற்றியைவிட “நக்சல்பாரி ஜிந்தாபாத்” “லால் சலாம்” போன்ற முழக்கங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிப்பது ஆளும்வர்க்க எடுபிடிகளான ஏபிவிபி-யினருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இந்துத்துவவாதிகளின் தூண்டுதலில் பேரில் அதே நாள் இரவில் “மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ் பத்திரிகை அலுவலகம் டெல்லி போலீசாரால் சூறையாடப்பட்டது. அதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடில்லாமல் அதன் நான்கு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்வர்ட் பிரஸ் பத்திரிகை “நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆணையும் இல்லாமல் போலீசார் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஊழியர்களை கைதுசெய்ததோடில்லாமல் நகரின் பல இடங்களிலிருந்தும் எங்கள் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றி வருகிறார்கள். பகுஜன் – சிரமன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அக்டோபர் மாத இதழில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் அறிவுஜீவிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் மஹிசாசுரன்-துர்கா கதையை பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்து கட்டுரைகள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்துவது நோக்கம் எங்களுக்கு இல்லை. பகுஜன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளங்களை கண்டுபிடிப்பதும், அதை மீட்டுருவாக்கம் செய்வதும் தான் எங்கள் நோக்கம். சொல்லப்படும் புனித நூல்களை பகுஜன் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்ட நெடியது. எங்களுக்கு முன்பே அது ஜோதிராவ் பூலேவிலிருந்து ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் என்று நீள்கிறது.
இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பார்பனிய பா.ஜ.க சக்திகளின் உத்தரவின் பேரில்தான் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடி மக்களின் இதழான எங்களை இந்த பார்ப்பன சக்திகள் எப்போது அருவெறுப்பகத்தான் பார்த்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பல முறை எங்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் எங்களை மேலும் பலமாக்கியிருக்கிறதே ஒழிய வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த பிரச்சனையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதோடு பிரேம்குமார் மணி என்பவரது கட்டுரையின் சில பகுதிகளையும் தங்கள் கண்டன அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். அவை முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை.
“பழங்குடிகளின் நாயகர்களான அசுரர்கள் கொல்லப்பட்டது எப்படி கொண்டாடத்தக்க விழாவானது? கொலையை கொண்டாடும் இந்த மனநிலை எதைக் குறிக்கிறது? இதே போன்று குஜராத் படுகொலைகளையோ இல்லை பீகாரின் தலித் படுகொலைகளையோ கொண்டாடினால் அதை நாம் எப்படி பார்ப்போம். ஆம் அசுரர்கள் தோற்றுவிட்டார்கள்தான். அதற்காக ஆண்டுதோறும் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் தான் மக்களை அவமதிக்கிறீர்கள்” என்று பார்ப்பன கொண்டாட்டங்களை கேள்விக்குள்ளாக்குகிறது அந்த கண்டன அறிக்கை.
மாறாக, “மஹிசாசுரன் வீரமரணமடைந்த நாளை நினைவுகூறுவதன் மூலம் நாங்கள் யாரையும் புணபடுத்தவில்லை. நாம் ஏன் தோற்றோம் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் தான் நிகழ்காலத்தில் எங்களை உயர்த்திக்கொள்ள முடியும். எங்களின் எல்லா சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் சில தரவுகளின் மூலம் தான் எங்கள் ஏகலைவன் அர்ஜூனனைவிட திறமையாளன் என்பதை அறியமுடிகிறது. ஆனால் அரசு, திறமை குறைந்த அர்ஜுனன் பெயரில்தான் விருதுகள் தருகிறது. வரலாற்றிலிருந்து எங்கள் நாயகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எங்கள் குறியீடுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாயகர்களின் கட்டைவிரல்கள், தலைகளை வெட்டிய மரபை நாங்ள் கேள்வி கேட்க விரும்புகிறோம். அவர்களின் அவமானம் எங்களின் அவமானம்.” என்று பார்ப்பன கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கும் தமது நடவடிக்கைகளின் நோக்கத்தை விளக்குகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆர்.எஸ்.எஸ் காரனும் தயாராக இல்லை. அவர்களின் ஒரே பதில் வன்முறை. அரச அதிகாரம் மூலம் கேள்வி கேட்பவனின் குரல்வளையை நெறிப்பது. இதைதான் நந்தன் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.
இத்தகைய பாசிஸ்டுகள் தங்களை ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்துத்துவம என்பது அனைத்து வழிபாடுகளையும் அங்கீகரிக்கரிப்பது, அதில் நாத்திகம் உள்ளிட்டு ‘பாரத’ கலாச்சாரத்தின் அனைத்தும் அடக்கம் என்று சில கபடதாரிகள் பசப்புகிறார்கள்.
இது உண்மை எனில், ‘மாபெரும் பாரத கலாச்சாரத்தின்’ சில புதல்வர்கள் அதே பாரதத்தின் கொல்லப்பட்ட புதல்வரான மகிசாசுரனுக்கு நினைவுநாள் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு பதற்றத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்குவது ஏன்? மஹிசாசுரன் என்ன ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்டவரா? இல்லை பாபருக்கு பக்கத் துணையாக வந்தவரா? இல்லையே பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே ‘பாரதத்தில்’ இருந்தவர்கள் தானே. பின்னே ஏன் நடுக்கம் பதற்றம் எல்லாம்.
உண்மையில் இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பனியம் சற்றும் சகிப்புத் தன்மை அற்றது. அதை எதிர் கொண்டு தமது உரிமைகளை நிலைநாட்டியது இங்கேயிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டமே அன்றி அது இந்து மதத்தின் பொறுமை அல்ல. மாறாக பார்ப்பனியத்தின் வேரே, ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத கலாச்சார மேலாதிக்கம்தான்.
குமரித்தாய் வழிபாட்டிற்கு கத்தோலிக்கம் தடை விதிப்பதாகவும், இந்துத்துவம் தான் பன்முகத்தன்மை கொண்டது என்றும் நாமெல்லாம் மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்கள் என்றும் கூறி குமரித்தாயின் ஜனநாயக உரிமைக்கு போர்க்கொடிதூக்கும் ஜோ.டி.குரூஸ் போன்றவரகள் அதே மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்களான அசுரர்களுக்கு நினைவேந்தலை தடை செய்யும் இந்த்துத்துவம் பற்றி என்ன கருதுகிறார்கள்? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பிறகு இம்சைதானே நீதி?
இந்துத்துவத்தின் சாதிய வர்ணாசிரம ஜீன்களிலேயே பன்முகத்தன்மைக்கோ சமத்துவத்திற்கோ இடமில்லை. ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத மொழி வழி கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் தான் இந்த்துவம். அதில் அசுர-திராவிட-தேசிய இன மொழிவழிபட்ட கலாச்சாரத்திற்கு என்றைக்குமே இடமில்லை. அதை இழிவுபடுத்துவது தான் இந்துத்துவம். மாற்று கருத்துக்களை இடமளிக்காத பாசிஸ்டுகள்தான் பார்ப்பன இந்துத்துவவாதிகள் எனபதை மீண்டும் ஒரு முறை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
அடுத்தாக ஐரோப்பிய பார்வையில் இந்திய வரலாறு எழுதப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியப் பார்வையில் மாற்றி எழுத வேண்டும் என்று சமீப காலமாக கதைத்து வருகிறார்கள் இந்த்துவவாதிகள். அதே இந்துத்துவவாதிகள் தான் சூத்திர இந்தியனின் பார்வையில் வேத, புராண வரலாறை மறுவாசிப்பு செய்தால் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனில் இவர்கள் கூறும் இந்தியப் பார்வை என்பது என்ன? அது ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத பார்வை மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆக இவர்கள் கூறும் தேசியம் என்பது பார்ப்பன தேசியம்.
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
– ரவி
Indhu enru sollathey Sonanvanai Serupal Adi.
அருமையான மீட்பு நடவடிக்கைகள்.
நண்பர்களுக்கு நன்றிகள்.
அருமையான கட்டுரை. இதையெல்லாம் படித்தப்பிறகும் (தீபாவளி, துர்கா பூஜை) தாழ்த்தபட்டோரையும் பழங்குடிகளையும் கொன்ற நாட்களை கொண்டாடிகொண்டு இருந்தோம் என்றால் இதைவிட வேறு அவமானம் ஒன்றும் இல்லை.
ஏ.பி.வி.பி அமைப்பினை மோடி அரசு ஒருபோதும் தடை செய்யாது. ஆனாலும் மாணவர்களை மதவெறிப் பிடித்த காலிகளாக உருவாக்கும் இவ்வமைப்பினை புறக்கணிக்க வேண்டும்.
இது ஒரு வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம்…யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்.
Good Initiative,
Why not we do the same in TN. DK or PALA can start..
Enna daa……….elaarum ennamo perusa support panrel….openaavaa neenga raakshashaanu othundu evil side serarelaa……….yen dhaan ipdi budhi poradho………
adhaan reservation kondu vandhurkaale………..Engg. paduchu ITla serndhu neengalum America poi sambhaadhikardhu………..yaaru vendaamnaa?
kadandhu alayardhugal
அப்படியே திருச்செந்துருக்கு போங்க. அங்க ஒரு தமிழ் அரக்கனை தமிழ்க்கடவுள் இன்னைக்கு கொல்றார்.. போய் தடுங்க.. என்ன சீன் போடுறீங்க திராவிடன் ஆரியன்னு?
தமிழ் கடவுள் முருகன். சுப்ரமணிய சுவாமி அல்ல. மனிதனாக இருக்கும் சுப்ரமணிய சுவாமியே தரகு மாமாவாக இருக்கிற பொழுது கடவுளாக இருந்தால் அதன் நிலை என்னவாக இருக்கும்? பழனியில் அங்கு முருகனுக்கு பேக்சைடு பஞ்சர் என்று கேள்விபடுகிறோம். ஆனால் இங்கு சுப்ரமணிய சாமி வைரக் கலசத்துடன் பார்ப்பன ஆகமங்களுடன் சொலிக்கிறார்.
வட இந்தியாவில் தேவயானை இந்திரலோகத்து அழகி. அதை அப்படியே தெய்வானை என்று மாற்றி சிறு தெய்வ முருகனை சுவாமியாக்கி அழகுபார்த்தது பார்ப்பன சனாதனம் தான். சிறு தெய்வ வழிபாட்டுக்காரனுக்கு இதுபோன்ற தப்புலிப்புத்தியெல்லாம் வராது. தமிழக முருகக்கடவுளும், ஆப்ரிக்க மொருங்காவும், யேசிடி மக்களின் முருக வழிபாடும் பழங்குடிச் சமூகத்திற்கே உரிய இயற்கை வழிபாடு. துரோகத்தின் வரலாறு தெரிந்துகொண்டு வாதாடுமய்யா.
தென்றல் அவர்களுக்கு,
தெய்வங்களுக்கு எதற்கு சிறு பெறு என்ற ஒட்டுகள். நீங்களும் எத்தர்களின் வலையில் விழுந்துவிட்டீரே. வெளியே வாருங்கள். நன்றி.
தென்றல் அவர்களுக்கு,
பின்னூட்டம் 8.1.1 ல் /தெய்வங்களுக்கு எதற்கு சிறு பெறு என்ற ஒட்டுகள்/ என்று கேட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. தொடர்ந்து தெய்வம் என்ற வார்த்தைக்கு சிறு என்ற அடைமொழியை ஒட்டுகிறீர்கள்.
இது மனிதமதத்தை பின்னுக்குக் தள்ளி பார்ப்பனியமதத்தை முன்னுக்குத் தள்ள உதவும் உபாயங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் பதிலை மற்றும் கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.
தெய்வங்களுக்கு சிறு-பெறு ஒட்டுக்கள் எதற்கு என்ற கேள்வியை இவ்விதம் அணுகலாம்.
நடைமுறையில் சிறுதெய்வங்கள் என்ற பதமே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைத்தான் குறிக்கிறது என்பது என் புரிதல். இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்கள், பெருந்தெய்வங்கள் தொடர்பான சொல்லாடல்களுக்கும், சடங்குகளுக்கும், மிகவும் அன்னியப்பட்டவர்கள். ‘கோபுரத்தைப் பார்த்து கும்பிட்டாலே கோடி புண்ணியம்’ என்ற சொலவடை இச்சமூகத்தின் அப்பட்டமான சாதிரீதியிலான சுரண்டலைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் கவனிக்கலாம். பார்ப்பனியத்தின் கீழ் அடங்க மறுக்கிற அனைத்து மரபுகளும் சிறு தெய்வங்களாக இருக்கின்றன.
பிரம்மா என்று சொல்கிற பொழுது கருப்பசாமி எதைக்குறிக்கும்? இதில் ஆன்மிகம் எல்லாம் ஏதும் இல்லை. வெறும் எதேச்சதிகாரம் மட்டும் இருப்பதைக் காணலாம். அதே சமயம் தாங்கள் சொல்வதைப்போல சிறுதெய்வங்கள் பார்ப்பனியத்திற்குள்ளும் இழுக்கப்பட்டிருக்கிறார்கள். மாரியம்மன் கோயிலில் கருவாடு சேர்த்து கூழ் ஊற்றுகிற நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. அவாள்கள், அம்பாள் அபிசேகமாக மாற்றியிருக்கிறார்கள். குத்துவிளக்கு பூஜை இடைச்செருகலாக சொருகப்பட்டிருக்கிறது (தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா எப்படி ஆர் எஸ் எஸ் ஸிற்கு சேவை செய்கிறது என்பதைக்கவனிக்கலாம்). இதில் போராடுவதற்கு நிறைய களவிசயங்கள் இருக்கின்றன. எனவே கருத்துருவாக மனிதமதம் என்று சொல்வதற்கு பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது.
சான்றாக ஒரு கேள்வியைப் பரிசீலிக்கலாம். கிடா வெட்டு தடைச் சட்டம் கொண்டு வருகிற ஜெயலலிதா தன் வீட்டு நாய்க்கு கிலோ கணக்கில் கறி வாங்கிப்போடுகிறார் என்றால் பார்ப்பனியத்தின் பரிமாணம் என்னவாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தைப் பரிசீலிப்பது இன்றைய அவசியம் என்று கருதுகிறேன். நன்றி.
தென்றல் அவர்களுக்கு,
//சிறுதெய்வங்கள் என்ற பதமே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைத்தான் குறிக்கிறது என்பது என் புரிதல்//
பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக்கொண்டவர்கள் அதாவது நாமே நமது தெய்வங்களை ‘சிறு’மைப் படுத்திக்கொண்டு அவர்களின் தெய்வங்களை ‘பெறு’மை படுத்திக் கொண்டு நாம் எதை மீட்கப் போகிறோம்?
இந்த பதஙகளுக்கு மாற்று காண வேண்டும். இடத்திற்கேற்ப நாம் சரியான பதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அணைத்து சூழ்நிலைக்கும் ஏற்ற மாற்றுப்பதங்களை நாம் யோசிக்கவேண்டும்.
எனது தெரிவுகள்
திராவிட/தமிழ் தெய்வம்.
குல தெய்வம்
முன்னோர் தெய்வம் (முன்னோர் வழிபாடு),
இவற்றிற்கு மாறாக, பார்ப்பனியர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வத்திற்கு பார்ப்பனியதெய்வம் என்ற பதம் சரியாக இருக்கும்.
இதை பரிசீலிப்பதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் நன்றி.
// மனிதனாக இருக்கும் சுப்ரமணிய சுவாமியே தரகு மாமாவாக இருக்கிற பொழுது கடவுளாக இருந்தால் அதன் நிலை என்னவாக இருக்கும்? //
வர வர உங்கள் பகுத்தறிவு உச்சத்தை நெருங்குகிறது போலிருக்கிறதே..
தமிழ் முருகனது தொன்மையான ஆறு படை வீடுகளும் எதைக் குறிக்கின்றன என்பதை பார்ப்பன எதிர்ப்பு மரபில் நின்று கொண்டு கொஞ்சம் விளக்குங்கள்.. அறிய ஆவலாயிருக்கிறேன்..
அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்?
சமணத்தோடு தொடர்புபடுத்துவதற்கு நமக்கு குறீயிடுகள் இருக்கின்றன. ஆனால் இங்குமே பலவாதங்கள் உண்டு. நமது நண்பர் இராம் சமண மதம் வணிகர்களின் மதம் என்பார். இதை அப்படியே ஒதுக்காமல் சில தரவுகளுடன் தான் பார்க்கவேண்டியிருக்கிறது.
மதுரை பழமுதிர்ச்சோலை அறுபடைவீடுகளில் ஒன்றாகும். ஆனால் அழகர் மலை வைணவத் தலம். நிற்க. ஏதோ உள்குத்து இதில் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இராமின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதை நேரிலே தாங்கள் ஆராய வேண்டுமானால் அடுத்த முறை தமிழ்பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதிக்கு ஆராய்ச்சிக்கு செல்கிற பொழுது தாங்களும் போக வேண்டும். ‘அறிய ஆவலாக இருக்கின்றேன்’ என்று சுமையை என் பக்கம் தள்ளுவது சரியல்ல. அப்படியே நான் எடுத்துச் சொன்னாலும் நீங்கள் பார்ப்பனீயத்திற்கு பங்கம் வராமல் பார்ப்பதற்குத்தான் மெனக்கெடுவீர்களே தவர, போராட்டங்களில் கலந்துகொள்ளப் போகிறீர்களா என்ன?
சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு. மேலூர் யானைமலை, திருப்பரங்குன்றம், அழகர்மலை என்று மதுரையைச் சுற்றிய குன்றுகளில் அதிகமான சமணப்படுக்கைகள் உண்டு. ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.
தமிழ் சைவம் என்று இங்கு ஆதிக்க சாதிகள் வாதிடுவார்கள். முருகன் பிற்காலத்தில் தான் பார்பனியச் சைவத்தில் உள்ளிளுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கு இரு குறிப்புகளை என்னால் சுட்ட முடியும். சமணத்தில் தலைவன் தலைவி வழிபாடு கிடையாது. இறைவனை வணங்குவதில் நாய-நாயகி முறையும் கிடையாது. பண்டைய தமிழ்சூழலில் களப்பிர்ர் கால தமிழ் சைவ நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. காரைக்கால் அம்மையாரின் சிவவழிபாட்டிலும் நாயக-நாயகி வழிபாடு கிடையாது. சுடலை என்றுதான் சிவன் சுட்டப்படுகிறான்.
அர்த்தநாரிஸ்சுவர் வடிவம் நாயக-நாயக வழிபாட்டிற்கு தொடக்கம். சம்பந்தனும் ‘தோடுடைச் செவியோன்’ என்று பார்ப்பனியத்தைத் தமிழ்படுத்துகிறான். ஆனால் சம்பந்தனுடையது காளாமுகச் சைவம். பார்ப்பனியச் பாசுபத வடிவத்தின் பிரிவு. முருகனுக்கும் இங்குதான் தெய்வானை வந்திருக்க வேண்டும். முருகனும் நாயக-நாயக வழிபாட்டிற்குள் இழுக்கப்பட்டது பார்ப்பனிய மரபு வந்தபிறகு தான் என்பது உற்று நோக்க வேண்டியது.முருகன்-தெய்வானை தொடர்பு இப்படித்தான்.
“அசுரரை வென்ற இடம்; தேவரைக் காத்த இடம்” என்று திருச்செந்தூரைப்பற்றி அவரோகணத்தில் பாடுவார்கள். வெல்வது கொல்வது புறத்திணைகளுள் வரும் என்றாலும் கூட தேவரைக்காக்கிற பிழைப்பெல்லாம் தமிழ்நாட்டில் பிற்பாடுபான். ஆக சுப்ரமணிய சுவாமியைத் தலமாகக் கொண்ட திருச்செந்தூர் பார்ப்பனிய மரபு எதிர்ப்பு மரபு உட்புகுத்தப்பட்ட தலம் என்று விளக்கலாம்.
அதுபோக, தமிழர்களின் மலைவழிபாட்டுக்கடவுளுக்கும் ஆப்ரிக்க மொருங்காவிற்கும், இராக் யேசிடி மக்களின் மயில்வாகன இறைவனுக்கும் தொடர்புகள் உண்டு. சுப்ரமணிய சுவாமிக்கு சிஐஏ தொடர்பு மட்டும் தான் உண்டு.
உடன்பிறப்பான என் தென்றலுக்கு ,
/**அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.**/
நீவிர் – ஒரு சமணக் குன்றில் வைணவர்கள் கோயில் சமைத்ததாகக் கூறுகின்றீரோ?
உங்கள் கூற்றின்படி வைணவர்கள் குன்றினை கைப்பற்றிய பின்னர் ,ஏன் அந்த சமணக் கல்வெட்டுக்கள் முழுவதையும் அழித்துப் பொகட்டாமல் விட்டனர்?
அன்புடன்,
சுரேஷ்
// அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்? //
சமண சிரவணன் கையில் வேல் எதற்கு..?!
// அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதை நேரிலே தாங்கள் ஆராய வேண்டுமானால் அடுத்த முறை தமிழ்பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதிக்கு ஆராய்ச்சிக்கு செல்கிற பொழுது தாங்களும் போக வேண்டும். ‘அறிய ஆவலாக இருக்கின்றேன்’ என்று சுமையை என் பக்கம் தள்ளுவது சரியல்ல.//
சமண முனிகள் முழையில்/குகையில் வசித்தவர்கள் ஆதலால் எங்கெல்லாம் பொந்து அமைக்கமுடியுமோ அங்கு வசித்து தவம், தொண்டு செய்தார்கள்.. எங்கெல்லாம் குன்றம் இருந்ததோ அங்கெல்லாம் அநேகமாக முருகன் கோவில் இருந்தது.. இதிலும் உள்குத்து ஏதாவது தெரிகிறதா..?!
// சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு. மேலூர் யானைமலை, திருப்பரங்குன்றம், அழகர்மலை என்று மதுரையைச் சுற்றிய குன்றுகளில் அதிகமான சமணப்படுக்கைகள் உண்டு. ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.//
சிரவண என்றால் ஓண நட்சத்திரத்துக்கு வடமொழிப்பெயர்.. சிராவண என்றால் ஆடி மாதம்.. இப்போது ராவணனும் சரவணனாக வாய்ப்புள்ள போட்டியாளராவதை கவனிக்கவும்.. மதுரையில் சமணம் தழைத்தோங்கியது, அங்கே அதற்கு முன்பே இந்த படைவீடுகளும் இருந்ததை கருவாடாற்றுபடைக்கும் காலத்தால் முற்பட்ட சங்க கால திருமுருகாற்றுபடையில் காண்க..
// தமிழ் சைவம் என்று இங்கு ஆதிக்க சாதிகள் வாதிடுவார்கள். முருகன் பிற்காலத்தில் தான் பார்பனியச் சைவத்தில் உள்ளிளுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கு இரு குறிப்புகளை என்னால் சுட்ட முடியும். சமணத்தில் தலைவன் தலைவி வழிபாடு கிடையாது. இறைவனை வணங்குவதில் நாய-நாயகி முறையும் கிடையாது. பண்டைய தமிழ்சூழலில் களப்பிர்ர் கால தமிழ் சைவ நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. காரைக்கால் அம்மையாரின் சிவவழிபாட்டிலும் நாயக-நாயகி வழிபாடு கிடையாது. சுடலை என்றுதான் சிவன் சுட்டப்படுகிறான்.
அர்த்தநாரிஸ்சுவர் வடிவம் நாயக-நாயக வழிபாட்டிற்கு தொடக்கம். சம்பந்தனும் ‘தோடுடைச் செவியோன்’ என்று பார்ப்பனியத்தைத் தமிழ்படுத்துகிறான். ஆனால் சம்பந்தனுடையது காளாமுகச் சைவம். பார்ப்பனியச் பாசுபத வடிவத்தின் பிரிவு. முருகனுக்கும் இங்குதான் தெய்வானை வந்திருக்க வேண்டும். முருகனும் நாயக-நாயக வழிபாட்டிற்குள் இழுக்கப்பட்டது பார்ப்பனிய மரபு வந்தபிறகு தான் என்பது உற்று நோக்க வேண்டியது.முருகன்-தெய்வானை தொடர்பு இப்படித்தான்.
“அசுரரை வென்ற இடம்; தேவரைக் காத்த இடம்” என்று திருச்செந்தூரைப்பற்றி அவரோகணத்தில் பாடுவார்கள். வெல்வது கொல்வது புறத்திணைகளுள் வரும் என்றாலும் கூட தேவரைக்காக்கிற பிழைப்பெல்லாம் தமிழ்நாட்டில் பிற்பாடுபான். ஆக சுப்ரமணிய சுவாமியைத் தலமாகக் கொண்ட திருச்செந்தூர் பார்ப்பனிய மரபு எதிர்ப்பு மரபு உட்புகுத்தப்பட்ட தலம் என்று விளக்கலாம்.//
ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! 260
மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொன்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265 – திருமுருகாற்றுபடை
நீங்கள் கூறும் காலகட்டத்துக்கு முன்பே சரவணன் தாய், தந்தை, மங்கையர் (வள்ளி-தேவயானை) என்று உறவுகளோடும் கையில் வேலோடும் வானோர் தானைத் தலைவனாக திணை வேறுபாடின்றி தமிழ் மண் முழுவதும் வழிபடப்பட்டிருக்கிறாரே..! மேலும் வெல்வது கொல்வது எல்லாம் சிரவணர் செய்யும் வேலையும் அல்லவே.. சூர் தடிந்த (சூரனை தண்டித்த முருகன்) என்ற சொற்றொடர் திருமுருகாற்றுபடையில் பல இடங்களில் வருகிறது என்பதால் அதை முழுமையாக படித்துப் பார்க்கலாம்..
// அதுபோக, தமிழர்களின் மலைவழிபாட்டுக்கடவுளுக்கும் ஆப்ரிக்க மொருங்காவிற்கும், இராக் யேசிடி மக்களின் மயில்வாகன இறைவனுக்கும் தொடர்புகள் உண்டு. //
தமிழன் சென்ற இடமெல்லாம் முருக வழிபாடும் சென்றிருக்க வாய்ப்புண்டு..
\\சமண சிரவணன் கையில் வேல் எதற்கு..?!\\
நியாயப்படி முருகன் முதுகில் பூணுல் எப்படி என்று கேட்பதுதான் சரி. மனிதனாக வாழும் காஞ்சி-காகம், பூணுல் அணிகிற பொழுது அம்பியாக மாறுவதைப்போல கடவுள் பார்ப்பானாக மாற்றப்பட்டான் என்று சொல்வதில் துரோகத்தை உணர்த்துகொள்ளும் வரலாறு உண்டு. வேல் விசயத்திற்கு வருவோம். முருகனுக்கு வேல் ஏன் உண்டு என்று கேட்டால் அது சரி. ஏனெனில் சமணத்தையும் சிறுதெய்வ வழிபாட்டையும் பகுத்துப்புரிந்துகொள்வது இயற்கையோடு இயைந்த ஒன்று. முருகன் குறித்த பதிவுகள் வெறியாட்டுதல் நிகழ்வுகளில் காண இயலும். வெறியாட்டுதல் தமிழ்குடிகளின் தொன்மையான மரபு. இதில் வேல் இருப்பது இனக்குழுச்சமூகத்தின் மரபுதான். இதை விளங்குவதும் விளக்குவது எளிது. சமணர்கால எழுத்துகளிலும் சிரவணனோடு இதைத் தனித்தும் சேர்த்தும் இதைக் காண இயலும். ஆனால் தாங்கள் சுட்டிக்காட்டுகிற திருமுருகாற்றூப்படையில் வெறியாட்டு நிகழ்வுக் குறிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இதே நிகழ்வு நற்றிணையில் நிறைய உண்டு. ஆக சிரவணன் கையில் வேல் இருப்பதை ஆழ அகலாமக நூல் பிடித்தார் போல் விளக்க இயலும். ஆனால் முருகன் முதுகில் பூணுல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்காக வரவேண்டும்?
// நியாயப்படி முருகன் முதுகில் பூணுல் எப்படி என்று கேட்பதுதான் சரி. மனிதனாக வாழும் காஞ்சி-காகம், பூணுல் அணிகிற பொழுது அம்பியாக மாறுவதைப்போல கடவுள் பார்ப்பானாக மாற்றப்பட்டான் என்று சொல்வதில் துரோகத்தை உணர்த்துகொள்ளும் வரலாறு உண்டு. //
பூணூல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை, தவிர பூணூலுக்கு பதிலாக குல்லா போட்டிருந்தாலும் கையில் வேல் ஏந்திய முருகன் எப்படி சமண அருகனாகவோ / சிரவணனாகவோ -இருக்கமுடியும் என்பதைத்தான் நீங்கள் விளக்கவேண்டும்..
// வேல் விசயத்திற்கு வருவோம். முருகனுக்கு வேல் ஏன் உண்டு என்று கேட்டால் அது சரி. ஏனெனில் சமணத்தையும் சிறுதெய்வ வழிபாட்டையும் பகுத்துப்புரிந்துகொள்வது இயற்கையோடு இயைந்த ஒன்று. முருகன் குறித்த பதிவுகள் வெறியாட்டுதல் நிகழ்வுகளில் காண இயலும். வெறியாட்டுதல் தமிழ்குடிகளின் தொன்மையான மரபு. இதில் வேல் இருப்பது இனக்குழுச்சமூகத்தின் மரபுதான். இதை விளங்குவதும் விளக்குவது எளிது. //
நன்று..
// சமணர்கால எழுத்துகளிலும் சிரவணனோடு இதைத் தனித்தும் சேர்த்தும் இதைக் காண இயலும். //
புதிர் போடுகிறீர்கள்..
// ஆனால் தாங்கள் சுட்டிக்காட்டுகிற திருமுருகாற்றூப்படையில் வெறியாட்டு நிகழ்வுக் குறிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இதே நிகழ்வு நற்றிணையில் நிறைய உண்டு. //
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்
மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து,
குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230
செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ,
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, 235
பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,
நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி,
நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240
உருவப் பல் பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந் தினை பரப்பி, குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன் 245
கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.
திருமுருகாற்றுபடையில் வரும் இத்தனை வெறியாட்டு போதாது என்கிறீர்களா..?!
// ஆக சிரவணன் கையில் வேல் இருப்பதை ஆழ அகலாமக நூல் பிடித்தார் போல் விளக்க இயலும். //
சிரவணன் ஏன் கூர் வேல் பிடித்தார் என்பதை குத்து மதிப்பாக விளக்கினால்கூட போதும்..
// ஆனால் முருகன் முதுகில் பூணுல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்காக வரவேண்டும்? //
பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கையில் வேல் இருக்கும் வரை சிரவணன் சரவணன் ஆக முடியாதே..
\\சமண முனிகள் முழையில்/குகையில் வசித்தவர்கள் ஆதலால் எங்கெல்லாம் பொந்து அமைக்கமுடியுமோ அங்கு வசித்து தவம், தொண்டு செய்தார்கள்.. எங்கெல்லாம் குன்றம் இருந்ததோ அங்கெல்லாம் அநேகமாக முருகன் கோவில் இருந்தது.. இதிலும் உள்குத்து ஏதாவது தெரிகிறதா..?!\\
ஆமாம் உள்குத்து இருக்கிறது. ஏனெனில் இண்டு இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கரப்பான்கள் யாரென்று அம்பிக்குத் தெரியும். குன்றம் விசயத்திற்கு வருவோம். கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைத்தொடவும். அர்ஜீன் சம்பந்தின் கருத்துப்படி, மதுரையில் சமணர்களின் சொல்லொணாத்துயரில் மக்கள் வாழ்ந்தாகவும், அவர்களைத் துயரில் இருந்து காக்கும் பொருட்டே இந்துமதப் புரட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் தன்னாலான கைங்கர்யத்தை அவிழ்த்துவிட்டவர். சமணத்தை அழித்து பார்ப்பனியம் உட்புகுந்த காலம் என்பது அர்ஜின் சம்பந் சொல்லவருகிற வாதத்தில் இருந்து தெரியவருகிறது. இதை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்.
வாதம் இரண்டு: முருகன் என்றில்லை. குகைவரைகோயில்கள் அனைத்துமே சமணர்களுடையது. இதையும் ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இரண்டில் எதைத்தொட்டாலும் பார்ப்பனியத்திற்கு முந்தைய முருக வழிபாடு தொல்குடிகளின் வழிபாடகத்தான் இருந்தது. தமிழனுக்கு கோயில் என்ற வார்த்தையே அரசன் உறைகிற இடம் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை மூலவர்களின் பெயர்கள் அனைத்துமே அப்பகுதியை ஆண்ட மன்னர்களின் பெயரிலே வழங்கப்பெறுதலையும் காணலாம். இதுஒருபுறமிருக்க, சுடலையும் சேயோனும் சிவனாவதும், முருகன் சுப்ரமணியன் ஆவதும், சிவனும் முருகனும் அப்பா மகன் ஆவதும் தமிழ்நாட்டில் புராண புளுகுமூட்டைகள் புகுத்தப்பட்ட பிறகுதான். அதையும் பிற்பாடு விளக்கலாம்.
இதில் உள்குத்து என்பது என்ன? அழகர் மலை வைணவத்தலமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைணவம் நாட்டார் கலாச்சாரமாக நின்றுபோனதை தொ. பரமசிவன் வலியுறுத்துகிறார். ஆனால் சைவம் நகர்புறக்கலாச்சாரம். பல நூற்றாண்டுகள் சைவம் அரசமதமாக இருந்தது. பழமுதிர்ச் சோலையின் தலபுரணாத்தை வாசிப்பவர்கள் அழகர்மலைக்கும் பழமுதிர்ச்சோலைக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்க கடமைப்பட்டவர்கள். அப்படிவிளக்குகிற பொழுது காலகட்டத்தையும் நமக்கு தருவார்கள் என்று நம்புவோமாக. இதன் அச்சாரமாக இன்னொன்றும் உண்டு. அழகர்மலை, வைணவத்திற்கும், சைவத்திற்கும், தளமாக இருக்கிற பொழுது அங்கு முதன்மைத் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பாகும். கருப்பசாமி இந்துமதத்தைச் சாராத தமிழ்நாட்டார்களின் சிறுதெய்வமாகும். ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டும் என்பார்கள் இல்லையா! சைவமும் வைணவமும் அப்படித்தான் இங்கு இருப்பதை இனம்காணலாம்.
// அர்ஜீன் சம்பந்தின் கருத்துப்படி, மதுரையில் சமணர்களின் சொல்லொணாத்துயரில் மக்கள் வாழ்ந்தாகவும், அவர்களைத் துயரில் இருந்து காக்கும் பொருட்டே இந்துமதப் புரட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் தன்னாலான கைங்கர்யத்தை அவிழ்த்துவிட்டவர். சமணத்தை அழித்து பார்ப்பனியம் உட்புகுந்த காலம் என்பது அர்ஜின் சம்பந் சொல்லவருகிற வாதத்தில் இருந்து தெரியவருகிறது. இதை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். //
ஜூனியர் புஷ் போல பேசுகிறீர்களே.. பாண்டிய மன்னர் நின்ற சீர் நெடுமாறன் தாய்ச்சமயமான சைவத்தை புறக்கணித்துவிட்டு சமணத்தை ஆதரித்ததையும், அரச ஆதரவுடன் சமணர்கள் சைவத்தை அழிக்க முனைந்ததையும்தான் அப்படிக் கூறுகிறார் என எண்ணுகிறேன்.. அப்போதுதான் பார்ப்பனியம் உட்புகுந்தது என்று நீங்கள் கூறுவதற்கு இதை எப்படி ஆதாரமாகக் கொள்ள இயலும்..?!
// வாதம் இரண்டு: முருகன் என்றில்லை. குகைவரைகோயில்கள் அனைத்துமே சமணர்களுடையது. இதையும் ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். //
கொற்றவைக்கும், முருகனுக்கும் குகைவரைகோயில்கள் இருக்கின்றன.. சமண முனிகள் மற்றும் தீர்த்தங்கரர்கள் சிலைகளுக்கும் முருகனின் சிலைக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா..?!
// இரண்டில் எதைத்தொட்டாலும் பார்ப்பனியத்திற்கு முந்தைய முருக வழிபாடு தொல்குடிகளின் வழிபாடகத்தான் இருந்தது. //
முருக வழிபாடு இன்றைக்கும் தமிழ் தொல்குடியின் வழிபாடுதான்..
// தமிழனுக்கு கோயில் என்ற வார்த்தையே அரசன் உறைகிற இடம் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. //
அரசன் என்ற அதிகார பதவி உருவாகிவருமுன்பே கோயில்களும், வழிபாடும் பரவியிருந்தது.. மன்னனின் அதிகாரம் கேள்விக்கிடமில்லாத வகையில் இருக்கவேண்டும் என்று அவனையும் இறைவன் என்னும் பொருளில் கோ என்றும் அழைத்தது வேறு விசயம்..
// இன்றுவரை மூலவர்களின் பெயர்கள் அனைத்துமே அப்பகுதியை ஆண்ட மன்னர்களின் பெயரிலே வழங்கப்பெறுதலையும் காணலாம். //
இடம் (ஸ்தலம்) மற்றும் காரணங்களால் அழைக்கப்படும் மூலவர்களின் பெயர்களே அதிகம்..
// இதுஒருபுறமிருக்க, சுடலையும் சேயோனும் சிவனாவதும், முருகன் சுப்ரமணியன் ஆவதும், சிவனும் முருகனும் அப்பா மகன் ஆவதும் தமிழ்நாட்டில் புராண புளுகுமூட்டைகள் புகுத்தப்பட்ட பிறகுதான். அதையும் பிற்பாடு விளக்கலாம். //
விளக்கத்துக்கு செல்வோம்..
\\சிரவண என்றால் ஓண நட்சத்திரத்துக்கு வடமொழிப்பெயர்.. சிராவண என்றால் ஆடி மாதம்.. இப்போது ராவணனும் சரவணனாக வாய்ப்புள்ள போட்டியாளராவதை கவனிக்கவும்.. மதுரையில் சமணம் தழைத்தோங்கியது, அங்கே அதற்கு முன்பே இந்த படைவீடுகளும் இருந்ததை கருவாடாற்றுபடைக்கும் காலத்தால் முற்பட்ட சங்க கால திருமுருகாற்றுபடையில் காண்க..\\
வடமொழிப்பெயர் என்று பொத்தாம் பொதுவாக அடிப்பதற்கு முன்னர் பாலியும் பிராகருதமும் மக்களின் வழக்காடு மொழிகளாக இருப்பதைக் கவனிக்க. தமிழில் உள்ள நிகண்டுகளில் காணப்படுகிற வடமொழிச் சொற்களும் சமணர்களுடையதுதான். இதைச்சுட்டுவதன் மூலமாக சமஸ்கிருதம் மக்கள் வாழ்விற்கு எவ்வித செழுமையையும் வழங்கவில்லை என்பதை பதிவுசெய்யலாம்.
விசயத்திற்கு வருவோம். களப்பிரர் காலத்திற்கு முன்னமே கூட முருகனைக்காட்ட இயலும். ஆனால் அந்த முருகனுக்கும் பார்ப்பனிய முருகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் தான் வெறியாட்டுதல் நிகழ்வை குறிப்பிட்டேன்.
திருமுருகாற்றுப்படை சங்கப்பாடல்களின் கீழ் தொகுக்கபடுதல் சரியா? (வீ. அரசு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் சில குறிப்புகள் உள்ளன. அதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்). நக்கீர நாயனார் என்பவர் வேறு நக்கீரர் வேறு. நக்கீர நாயனார் கி.பி. எட்டாம் நுற்றாண்டு ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் பேசப்பட்டவர். இந்த சர்ச்சையை பிறகு கவனிப்போம்.
திருமுருகாற்றூப்படையை விட காலத்தால் முந்திய பரிபாடலில் உள்ள முருகனே பார்ப்பனியத்திற்கு முழுவதும் ஆட்பட்டவன். அங்கேயே புராணக்கதைகள் வந்துவிடுகின்றன.
ஆனால் காலத்தால் முந்திய முருகன் வெறும் இனக்குழுத்தலைவனாக இருப்பதையும் பல குறிப்புகளில் காண முடியும். ஒட்டுமொத்த முருகனுக்கு உண்டான பார்ப்பனியக் காலக்கோடு கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன், எஸ். இராமச்சந்திரன், திண்ணையில் இருக்கிறது. இக்கட்டுரை எக்கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டது என்று எமக்குத்தெரியவில்லை. திருமுருகாற்றூப்படைக்கு குறிப்புகள் தேடப்போய் வலைத்தளத்தில் கிடைத்தன. விவாதத்திற்கு ஒருவேளை பயன்படலாம்.
// வடமொழிப்பெயர் என்று பொத்தாம் பொதுவாக அடிப்பதற்கு முன்னர் பாலியும் பிராகருதமும் மக்களின் வழக்காடு மொழிகளாக இருப்பதைக் கவனிக்க. //
அது வடக்கில்..
// தமிழில் உள்ள நிகண்டுகளில் காணப்படுகிற வடமொழிச் சொற்களும் சமணர்களுடையதுதான். இதைச்சுட்டுவதன் மூலமாக சமஸ்கிருதம் மக்கள் வாழ்விற்கு எவ்வித செழுமையையும் வழங்கவில்லை என்பதை பதிவுசெய்யலாம். //
சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு என நீங்கள் கூறியதை வைத்து அதனாலேயே சமணர்கள் இங்கு சிரவணர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்று நீங்கள் கூற வருவதாக பொருள் கொண்டேன்.. எனவே சிரவணர் என்பது இங்கே சமணர்களின் காரணப் பெயரேயன்றி மூலப்பெயரான சிரவண என்பதாக வடமொழிகளில் அழைக்கப்படும் ஓண நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுபவர்களும் சமணரல்லாதவரில் இருக்கக்கூடும்.. இந்தப் பெயர் முயக்கத்தை வாதத்தில் ஆதாரமாகக்காட்டுவது பொருந்துமா என்று கருதுங்கள்.. மேலும் பாலிக்கும் பிராகிருதத்துக்கும் முந்தைய தமிழ் கூறும் உலகில் முருக வழிபாடு இருந்ததில்லை எனவும் காட்ட வேண்டியிருக்கும்..
// விசயத்திற்கு வருவோம். களப்பிரர் காலத்திற்கு முன்னமே கூட முருகனைக்காட்ட இயலும். ஆனால் அந்த முருகனுக்கும் பார்ப்பனிய முருகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் தான் வெறியாட்டுதல் நிகழ்வை குறிப்பிட்டேன். //
சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் பின்னாளில் வந்ததால் முருகனுக்கு முருகனே சம்பந்தமில்லாதவன் என்று எப்படி கூறமுடியும்.. வெறியாட்டுக்கு இணையான அலகு குத்துதல், தீ மிதித்தல் என்றும் வெற்றி வேல் முருகா என விளித்துக் கொண்டும் பரவசத்தில் செல்லும் அடியார்களை சுப்ரமணிய சுவாமியாகப்பட்டவர் தடுத்து நிறுத்திவிட்டாரா..?!
// திருமுருகாற்றுப்படை சங்கப்பாடல்களின் கீழ் தொகுக்கபடுதல் சரியா? (வீ. அரசு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் சில குறிப்புகள் உள்ளன. அதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்). நக்கீர நாயனார் என்பவர் வேறு நக்கீரர் வேறு. நக்கீர நாயனார் கி.பி. எட்டாம் நுற்றாண்டு ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் பேசப்பட்டவர். இந்த சர்ச்சையை பிறகு கவனிப்போம்.//
சரி..
// திருமுருகாற்றூப்படையை விட காலத்தால் முந்திய பரிபாடலில் உள்ள முருகனே பார்ப்பனியத்திற்கு முழுவதும் ஆட்பட்டவன். அங்கேயே புராணக்கதைகள் வந்துவிடுகின்றன.//
திருமுருகாற்றுப்படை பக்தி இயக்க காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற எண்ணத்தில் அது காலத்தால் சங்க கால பரிபாடலுக்கு பிந்தையது என்று கூறுகிறீர்கள்.. அது சரியா என நீங்கள் கூறப்போகும் விளக்கத்தில் பார்க்கலாம்..
// ஆனால் காலத்தால் முந்திய முருகன் வெறும் இனக்குழுத்தலைவனாக இருப்பதையும் பல குறிப்புகளில் காண முடியும். //
முருகனை வெறும் இனக்குழுத்தலைவனாகப் பார்த்தால் அவன் அடியார்கள் பண்டைய தமிழகம் முழுவதும், அதுவும் தீவிர பக்தி வெறியாட்டுதலில் இருந்ததை விளக்குவது கடினம்..
// ஒட்டுமொத்த முருகனுக்கு உண்டான பார்ப்பனியக் காலக்கோடு கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன், எஸ். இராமச்சந்திரன், திண்ணையில் இருக்கிறது. இக்கட்டுரை எக்கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டது என்று எமக்குத்தெரியவில்லை. திருமுருகாற்றூப்படைக்கு குறிப்புகள் தேடப்போய் வலைத்தளத்தில் கிடைத்தன. விவாதத்திற்கு ஒருவேளை பயன்படலாம்.//
நன்றி.. தேடிப்படிக்கிறேன்..
திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை?
இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? அசுரனை அழித்து தேவனைக்காப்பது புராணங்களில் இருந்துதொடங்குகின்றன. சங்க இலக்கியங்களின் அகமும் புறமும் இந்தக் கூத்தைப்பேசவில்லை. இதெல்லாம் பார்ப்பனியம் வந்தபிறகு நடந்தேறிய அசிங்கங்கள்.
திருமுருகாற்றூப்படையை எதன் வரிசையின் கீழ் இருத்துவது என்பதற்கு வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கு பதிவிடுகிறேன். (கட்டுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு: நவீனத்துவம்; கீற்று, 18-04-2014)
சங்கப்பிரதிகளை ஆராய்வதற்கு முன் வீ.அரசு அவர்கள் கொடுக்கிற சுயவிளக்கம்:
“கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார – திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். ஆனால் சங்கப் பிரதிகள் அப்படியல்ல. காரணம் அவை நவீனத்தன்மையை உள்வாங்கியுள்ளன . சமயச் சார்பற்ற மனித உறவை முதன்மைப்படுத்துகின்ற இலக்கியங் களாக உருப்பெறுகின்றன. இந்தத் தன்மையை நாம் செவ்வியல் இலக்கியத்துக்கான முக்கிய பண்பாகக் கூறமுடியும்.”
சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று சொல்கிற பொழுது, இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட முறை பற்றி வீ. அரசு இவ்வாறாக சுட்டிக்காட்ட்டுகிறார்;
“தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப்படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.
பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றோர் தேவார – திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். திருவிளையாடற் புராணம் மற்றும் கந்தபுராண மரபின் ஊடாக உருவானவர்கள். ஆனால் செவ்விலக்கிய மரபில் புராணீகத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம் நமக்கு ஏற்பட்ட வைதீக – சமசுகிருத தாக்கம். இவற்றால் நன்மை நடந்தாலும் மிக மோசமான தீமைகளே அதிகம். காரணம் வைதீக மரபில் உருவான வேதங்கள், பாரதக்கதை, பெரிய புராணம் உள்ளிட்டவை புராணீக மரபைச் சார்ந்தவை. இயற்கையைப் பேசும் மரபல்ல. இம்மரபில் வந்த திருமுருகாற்றுப்படை சங்கப் பிரதிகளின் செவ்விலக்கிய மரபிற்கு எதிரானது. ஆகவே அதனைத் தனித்து வாசிக்க வேண்டும். இதனை எனது ‘சங்க நூல்களின் காலம்’ என்ற குறுநூலில் குறிப்பிட்டுள்ளேன். கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும்.
ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதி காரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது.”
ஆக வீ. அரசுவின் கட்டுரை சங்க இலக்கியங்களில் இருந்து புராணப்புளுகுகளை தனியாக எடுத்துவிடுகிறது என்பதைப்பார்க்கிறோம். முருகன் புராணங்களில் எவ்விதம் பிறந்தார் என்பது அறுவெறுக்கத்தக்க ஆபாசக்கதைகளைக் கொண்டது என்பதை எவர் ஒருவரும் விளங்க இயலும்.
முடிவுரையாக:
1. அரக்கனைக்கொன்று தேவனைக்காத்தல் பார்ப்பனர்களின் புராணப் புளுகுகள் ஆகும். இதற்கும் தமிழ் பண்பாட்டிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.
2. சைவப்பார்ப்பனீயத்தின் விளைபொருள் தான் சுப்ரமணியன். இப்பெயரில் உள்ள பிரம்மத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
3. தமிழர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் முருகவழிபாடு வந்திருக்கும் என்கிறார் அம்பி. இதுபோன்ற அர்த்தமற்ற பெருமை பேசுவது நம் நோக்கம் இல்லை என்றாலும் நாம் இங்குவிளங்க வேண்டியது பார்ப்பனியம் வருகிற இடங்களில் எல்லாம் அசுரர்கள் அழிக்கப்பட்டு, தேவர்கள் காக்கப்படுவார்கள். அதற்கு கடவுளர்களே துணைபோவார்கள். இந்தக் கூத்து எங்கெல்லாம் பார்ப்பனியம் சென்றதோ அங்கெல்லாம் நடந்திருக்கிறது.
//திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை? //
அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்..
// இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? //
தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா..?!
// அசுரனை அழித்து தேவனைக்காப்பது புராணங்களில் இருந்துதொடங்குகின்றன. //
முருகன் சூரனை தண்டிப்பதற்கு முன்பு பிரம்மனையே தண்டித்ததும் புராணம்தானே..
// சங்க இலக்கியங்களின் அகமும் புறமும் இந்தக் கூத்தைப்பேசவில்லை. இதெல்லாம் பார்ப்பனியம் வந்தபிறகு நடந்தேறிய அசிங்கங்கள்.//
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி 595
சங்க கால மதுரைக்காஞ்சியில் வரும் அவுணர் (அரக்கர்) என்போர் திராவிடர்கள் என்பது மாங்குடி மருதனாருக்கு தெரியவில்லை போலும்.. விரும்பினால் இன்னும் மேற்கோள்கள் தருகிறேன்..
// திருமுருகாற்றூப்படையை எதன் வரிசையின் கீழ் இருத்துவது என்பதற்கு வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கு பதிவிடுகிறேன். (கட்டுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு: நவீனத்துவம்; கீற்று, 18-04-2014)
சங்கப்பிரதிகளை ஆராய்வதற்கு முன் வீ.அரசு அவர்கள் கொடுக்கிற சுயவிளக்கம்: //
உங்களிடம் விளக்கம் கேட்டால், சுமையை என்னிடம் தள்ளுவது சரியல்ல என்று கூறிவிட்டு இப்போது திரு.வீ.அரசு அவர்களை மறுக்கும் சுமையை என்னிடம் தள்ளுகிறீர்களே..!
// “கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார – திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். //
ஒரு நாத்திகர் பரிபாடலையும், திருமுருகாற்றுபடையையும் சங்க இலக்கியம் இல்லை என்று தள்ளிவைப்பது வியப்பில்லை..
//சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று சொல்கிற பொழுது, இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட முறை பற்றி வீ. அரசு இவ்வாறாக சுட்டிக்காட்ட்டுகிறார்;
தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப்படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.//
நக்கீர நாயனார்தான் திருமுருகாற்றுப்படையை எழுதினார் என்று நம்பியதால் வந்த வினை..
// பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றோர் தேவார – திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். //
திருமுருகாற்றுபடையையும், நெடுநல்வாடையையும் எழுதிய மதுரை கணக்காயரின் மகனாராகிய நக்கீரனார் தேவார-திருவாசக காலத்து நக்கீர நாயனாருக்கு பல நூற்றாண்டுகள் முந்தைய சங்கப் புலவர்..
// கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். //
இப்போது இவரும் அய்ரோப்பியர்களிடம் என்னைத் தள்ளிவிடுகிறார்..
//எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும். //
இது அவருடைய சிந்தனைக்கேற்ற பகுப்புமுறை..
// ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதி காரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது.”//
எந்தெந்தப் பாடல்களில் எல்லாம் புராணக் குறிப்புகள் வருகின்றனவோ அவற்றையெல்லாம் சங்க இலக்கியமல்ல என்று முடிந்தவரை மறுதலித்து அல்லது பிற்படுத்தி வகைப்படுத்த வேண்டும் என்கிறார்..!
// ஆக வீ. அரசுவின் கட்டுரை சங்க இலக்கியங்களில் இருந்து புராணப்புளுகுகளை தனியாக எடுத்துவிடுகிறது என்பதைப்பார்க்கிறோம். //
இவ்வாறாக வகைப்படுத்துவதன் மூலமாக புராணப்புளுகற்றதாக சங்க இலக்கியத்தை ஆக்கிவிடுகிறீர்களாக்கும்..!
// முடிவுரையாக:
1. அரக்கனைக்கொன்று தேவனைக்காத்தல் பார்ப்பனர்களின் புராணப் புளுகுகள் ஆகும். இதற்கும் தமிழ் பண்பாட்டிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.//
சங்க இலக்கியங்கள் தமிழ் பண்பாட்டில் இல்லையா.. சொந்த ’இனத்தவனை’(?) தண்டிக்ககூடாது என்பது தமிழ் கலாச்சாரமா..?!
// 2. சைவப்பார்ப்பனீயத்தின் விளைபொருள் தான் சுப்ரமணியன். இப்பெயரில் உள்ள பிரம்மத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? //
சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..
// 3. தமிழர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் முருகவழிபாடு வந்திருக்கும் என்கிறார் அம்பி. இதுபோன்ற அர்த்தமற்ற பெருமை பேசுவது நம் நோக்கம் இல்லை என்றாலும் நாம் இங்குவிளங்க வேண்டியது பார்ப்பனியம் வருகிற இடங்களில் எல்லாம் அசுரர்கள் அழிக்கப்பட்டு, தேவர்கள் காக்கப்படுவார்கள். அதற்கு கடவுளர்களே துணைபோவார்கள். இந்தக் கூத்து எங்கெல்லாம் பார்ப்பனியம் சென்றதோ அங்கெல்லாம் நடந்திருக்கிறது. //
இது அர்த்தமற்ற பெருமையல்ல.. வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே கடலோடியவர்கள் தமிழர்கள்.. மேற்கே ரோம்,கிரேக்கம்,அரபுலகம் முதல் கிழக்கே இன்றைய பிலிப்பைன்ஸ், சீனம் வரை கடல் வாணிபம் செய்தவர்கள்.. முருக வழிபாடும் கூடவே சென்றிருக்கும்..
பார்ப்பான் சீனாவுக்கு போனாலும் அசுரர்களும் தேவர்களும் கூடவே போவார்கள்.. ஆனால் சீனர்கள் தாங்கள்தான் அசுரர்கள் என்று நம்பிக்கொள்வார்களா என்பது சந்தேகமே..!
இது அம்பியின் உச்சகட்ட உளறல் !திருமுருகாற்றுப்படை புறப்பாடல் ஆகும் என்பது தெரியாமல் அதனை அகப்பொருளில் சேர்கின்றார்
[முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும்.]
நன்றி :
http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043113.htm
Thendral//திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை? //
Ambi//அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்..
திருமுருகை அகம் என்று சற்று முன்னே உளறியவர் , அடுத்த வரியிலேயே தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா என்று கேட்டு திருமுருகுடன் புறத்துக்கு தாவுகின்றார்.
Thendral// இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? //
Ambi//தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா..?! //
வீ.அரசுவை பார்த்து இப்படி நக்கல் ,நய்யாண்டி செய்யும் அம்பி சங்க இலக்கியத்தில் புராணப்புளுகு இருப்பதை ஏற்கின்றார். [அதே திருமுருகு-புராணப்புளுகை என்னிடம் முருகன் பிறப்புக்கு ஆதாரமாக காட்டுவது தான் அப்பியின் பார்பன மூளை !]
//இவ்வாறாக வகைப்படுத்துவதன் மூலமாக புராணப்புளுகற்றதாக சங்க இலக்கியத்தை ஆக்கிவிடுகிறீர்களாக்கும்..!//
//அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்.. //
அகப்பொருள் என்பது மனதில் தோன்றும் காதல் சம்பந்தப்பட்டது என்று சங்க நூல்கள் சுட்டும். தலைவன் தலைவி மேல் வைக்கும் காதல், தலைவி தலைவன் மேல் வைக்கும் காதல் என்று இதுவே அகப்பொருள் என்று படித்து இருக்கின்றேன். ஆனால் பக்தி எப்போது அகப்பொருள் ஆனது என்று தெரியவில்லை.
\\ கொற்றவைக்கும், முருகனுக்கும் குகைவரைகோயில்கள் இருக்கின்றன.. சமண முனிகள் மற்றும் தீர்த்தங்கரர்கள் சிலைகளுக்கும் முருகனின் சிலைக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா..?!\\
அதற்காகத்தான் பெயர்களை விளக்கியது. அருகன் சமணக்கடவுள்; முருகன் தமிழ் கடவுள். சிரவணன் சமணப்பெயர் என்கிற பொழுது சரவணன் எதைக்குறிக்கிறது? என்றுகேட்டேன்.
ஆனால் மலைமுழுங்கியாக முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று சொல்லவில்லை. முருகன் எப்படி சரவணன் ஆனான் என்று சொல்லவில்லை. இதற்குமாறாக சிரவணனுக்கு வேல் எப்படி வந்தது என்று திருப்புகிறீர்கள். சிரவணனுக்கு வேல், முருகன் என்ற தொல்குடிக்கடவுளிடமிருந்து வந்தது என்று வைப்போம். கடைசங்க காலமான கி,பி 250களில் வந்த ஆற்றுப்படை பாடல்கள் உதாரணம் என்கிற பொழுது கூட(கவனிக்க; திருமுருகுவை சேர்க்கவில்லை; முருக வழிப்பாட்டை பரிபாடலில் இருந்தும் எடுக்க இயலும். திருமுருகை விட்டுவிட்டு பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் எடுக்க இயலும். இதே காலகட்டமான பெருங்காப்பியத்தில் அருகன் வருகிறான். திருக்குறள் இதே காலகட்டம் என்கிற பொழுது அருகக்கடவுளின் குறியீடுகள் மிகுந்து இருக்கின்றன) முருகன் எப்படி சுப்ரமணியனாக பார்ப்பனியமயமாக்கப்பட்டான் என்பதற்கு என்ன பதிலைத் தந்தீர்கள்? உள்ளக்கிடக்கையாக வாதத்தை ஒப்புகொண்டுவிட்டு, சுப்ரமணி வந்ததால் வெறியாடல் நின்றுவிட்டதா என்று கேட்கிறீர்கள்? இங்கேயே உங்கள் பித்தலாட்டம் வெளிப்படுகிறது இல்லையா?
// அதற்காகத்தான் பெயர்களை விளக்கியது. அருகன் சமணக்கடவுள்; முருகன் தமிழ் கடவுள். சிரவணன் சமணப்பெயர் என்கிற பொழுது சரவணன் எதைக்குறிக்கிறது? என்றுகேட்டேன்.//
ஏன் கேட்டீர்கள்..?!
”அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்?
சமணத்தோடு தொடர்புபடுத்துவதற்கு நமக்கு குறீயிடுகள் இருக்கின்றன.”
”ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.”
என்றும் கூறியதன் மூலம் சமண சிரவணன்தான் சரவணன் என்று காட்ட முயன்றீர்கள்.. ஆனால் முருகன் கையில் வேலை வைத்துக் கொண்டு பிரச்சினை செய்கிறான் என்பதால் அவனுக்கு பூணூல் ஏன் வந்தது எப்படி வந்தது என்று தாவிவிட்டீர்கள்..
// சிரவணனுக்கு வேல், முருகன் என்ற தொல்குடிக்கடவுளிடமிருந்து வந்தது என்று வைப்போம். //
அப்படியெல்லாம் வைத்துக் கொள்வது சமண சிரவணனுக்கு பொருத்தமாக இருக்காது.. வேலுக்கு பதில் முருகனின் மயிலிடமிருந்து ஒரு கொத்து மயில்பீலிகளை எடுத்து சமண சிரவணருக்கு கொடுத்து கையில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்..
// கடைசங்க காலமான கி,பி 250களில் வந்த ஆற்றுப்படை பாடல்கள் உதாரணம் என்கிற பொழுது கூட(கவனிக்க; திருமுருகுவை சேர்க்கவில்லை; முருக வழிப்பாட்டை பரிபாடலில் இருந்தும் எடுக்க இயலும். திருமுருகை விட்டுவிட்டு பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் எடுக்க இயலும். இதே காலகட்டமான பெருங்காப்பியத்தில் அருகன் வருகிறான். திருக்குறள் இதே காலகட்டம் என்கிற பொழுது அருகக்கடவுளின் குறியீடுகள் மிகுந்து இருக்கின்றன)//
என்ன சொல்ல வருகிறீர்கள்.. தெளிவாக சொல்லுங்கள்..
// முருகன் எப்படி சுப்ரமணியனாக பார்ப்பனியமயமாக்கப்பட்டான் என்பதற்கு என்ன பதிலைத் தந்தீர்கள்? உள்ளக்கிடக்கையாக வாதத்தை ஒப்புகொண்டுவிட்டு, சுப்ரமணி வந்ததால் வெறியாடல் நின்றுவிட்டதா என்று கேட்கிறீர்கள்? இங்கேயே உங்கள் பித்தலாட்டம் வெளிப்படுகிறது இல்லையா? //
முருகனுக்கு புதிதாக ஒரு பெயர் வந்ததால் அவன் பார்ப்பனியனாகிவிட்டானா..?! முருக வழிபாட்டின் தொடர்ச்சியில் சமணச் சாயலே இல்லையே அய்யா.. வேல் இன்னும் கையில் தானே இருக்கிறது.. யாருடைய பித்தலாட்டம் வெளிப்படுகிறது..?!
மேற்கண்ட பதிவிற்கான மறுமொழியை சற்று விரிவான குறிப்புகளுடன் கீழ்க்கண்ட கேள்வியை அணுகுதன் மூலம் முன்வைத்திருக்கிறேன்.
\\ முருகன் சுப்ரமணியாகும் முன்பே சூரர் தண்டிக்கப்பட்டுவிட்டாரே என்ன செய்வது..\\
தவறு. ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இதில் முருகன் சு. சுவாமி எனப்படுகிறார். சூரனை வதம் செய்வதற்காகத்தான் முருகனே பார்ப்பனியமயமாக்கப்படுகிறான். ஆனால் திருப்பரங்குன்றமே சைவத்திற்கு லேட்டஸ்ட் திணிப்பு என்கிற பொழுது திருமுருகாற்றுப்படையும் அப்படித்தான். பத்துப்பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம்.
ஏனெனில் ஆற்றுப்படையின் இலக்கணம் அரசனிடம் பரிசில் பெற்றவர் இனி பரிசில் பெறப்போகிறவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த செய்யுளாகும். யாழ் வாசிக்கிற சிறுபாணர்களுக்கும், பெரும்பாணார்களுக்கும் செய்யுள் அமைந்ததை காண்கிறோம். ஆனால் திருமுருகு மட்டும், முருகனிடம் வீடுபேறு அடைந்த புலவர், இனி வீடுபேறு அடையப்போகும் புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. வீடுபேறு பார்ப்பனியத்தின் மோசடி. திருமுருகைத்தவிர சிறுபாணாற்றுப்படையிலும் பெரும்பாணாற்றூப்படையிலும் எட்டுத்தொகையிலும் வீடுபேறு எத்துணை சதவீதம் இருக்கிறது?
சாமியாடுதல், வெறியாட்டல், தமிழ் தொல்குடிகளின் மரபு என்று நிறுவுகிற பொழுது சங்ககால முருகவழிபாடு சாங்கியத் தத்துவத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். சாங்கியம் என்பது சரியானால் பார்ப்பனிய வேதமரபிற்கும் பின் சமணத்திற்கும் காரியப்பொருளாக இருக்கின்ற வீடுபேற்றை பேசுவதில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை. ஏனெனில் சங்க கால அகமும் புறமும், அறம், பொருள், இன்பத்துடன் நின்றது. சமண இலக்கியங்களும், வைதீக பார்ப்பனியமும் மட்டுமே வீடுபேறைப்பற்றி பேசுகின்றன. வைதீக மரபு என்ற நைச்சியம் இல்லாமல் வீடுபேறு சாத்தியமல்ல என்கிற பொழுது முருகன் வீடுபேறு அளிக்கிறான் என்று சொல்கிற திருமுருகு, பார்ப்பனிய பித்தலாட்டமின்றி வேறில்லை.
சமணமும் வீடுபேறைப்பற்றிப் பேசுவதாக அறிகிறோம். சிலம்பும், பெருங்கதையும், திருக்குறளும், மலர்மிசை என்று அருகனையும், பிறவிப்பெருங்கடல் என்று வீடுபேற்றையும் குறிக்கின்றன.
ஆனால் திருமுருகு வைதீக மரபை பார்ப்பனிய சனாதனத்தைப் புராணப்புளுகளை உள்வாங்குவதன் மூலம்தெளிவாகக் காட்டுகிறது. வீடுபேறைத் தாங்கி பல புரணாங்கள் புகுத்தப்படுகின்றன. நீங்கள் சொல்வதைப்போல முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரமே எடுக்கிறான் என்று ஒரு சேர புராணமும், திருப்பரங்குன்ற தலபுராணமும் இயம்புகின்றன. ஆனால் இன்னபிற சங்க இலக்கியங்கள் தன் உணர்ச்சிப்பாடலாக முருகனை வெறியாட்டுதலுடன் இணப்பதாக அறிகிறோம். பார்ப்பனியம் புகுந்தபிறகு உருவாக்கப்பட்ட செட்டப்பின்றி சூரனை வதம் செய்வது சாத்தியமல்ல.
——-
சமணக்குறிப்புகளை தென்பரங்குன்றத்துடன் பேசுவோம். தென்பரங்குன்றத்தின் தமிழ்பிராமி எழுத்துக்களுக்கும் சமணர்களின் கற்படுக்கையும் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் திருமுருகு சங்கபாடல் என்று சொல்கிற பொழுது அது நிலைத்தப்படுகிற காலகட்டம் கி.பி 250. கடைச்சங்க இலக்கியம் முழுமையுமே கிறித்து பிறந்த இரு நூற்றாண்டுகளில் தான் வரையறுக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்தின் புடைப்புச் சிற்பங்கள் சமணர் காலத்தவை. அதாவது சிற்பங்களுக்கு சாமுத்ரிகா இலட்சணம் கிடையாது. ஆனால் தமிழகத்தின் குடைவரைக்கோயில்களில் இந்துப்பார்ப்பனியம் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பாடுதான் (மகேந்திரவர்மன் காலகட்டத்திலிருந்து என்கிறார் மயிலை சீனி; மேலும் பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் சமணர் காலத்தவை என்று சுட்டத்தவறவில்லை). சிலைகளைக் கவனித்தால் பார்ப்பனிய பித்தலாட்டம் புலப்படும்.
சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்; ஏனெனில் மொழி என்பதன் உச்சரிப்பில் இதை அணுகியிருந்தால் சரவணன் என்பது முழுக்கவும் மோசடி என்பதை நோக்கி நகர்ந்திருக்க முடியும். காரணம், சரவணன் என்ற வார்த்தை வைதீகச்சூழலில் புழங்குவதற்கு முன்பாகவே களப்பிரர்கால வரலாற்றில் கி,பி 250 லிருந்து- கி.பி 700 முடிய சிரவணன் என்ற வார்த்தை பரவலாக இருக்கிறது. சரவண-சிரவணனைப் பற்றி பெரியார்தள கட்டுரை பாலி-சமஸ்கிருத அடிப்படையில் இருப்பதைக் காண்க. (http://www.unmaionline.com/new/archives/96-unmaionline/unmai-2014/%E0%AE%AE%E0%AF%87-01-15/2005-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html) களப்பிரர் காலத்திற்கு பிந்தைய பகுதியில் தான் தமிழ் இராமாயணமும், பார்ப்பனிய பாசுபத சைவமும் உட்புகுகின்றன. இதற்குபிந்தைய ஏற்பாடுதன் சரவணப் பிரச்சாரம்!
மேலும் சரவணன் என்று மட்டுமில்லை முருகன் கையிலும் வேல் எப்படி வந்தது? என்று பல விவாதம் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா முருகன் கோயிலும் வேல், முருகன் சிலை மீது சாத்திவைக்கப்படுகிறது. ஆனால் பழநி முருகன் கையில் தண்டம் இருக்கிறது. கையில் கம்பு உள்ள முருகன் எதைக் குறிக்கிறது? வேல் சாத்தப்படுவது எதைக் குறிக்கிறது?
இலக்கியங்களில் வேலன் முருகன் சார்பாக வேல் எடுத்து ஆடுகிற பூசாரி என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. தலைவி முருகனால் ஆட்கொள்ளப்படுகிற பொழுது பூசாரி தான் வெறியாட்டுதலில் ஈடுபடுகிறான். அவன் வேலன் என்று அழைக்கப்படுகிறான். சேவற்கொடி ஏற்றப்பட்டு முருகனுக்கு பூசை நடைபெறுகிறது. அப்படியானால் தண்டம் மற்றும் வேலின் மூலம் என்ன? இதில் வேல் உள்ளவன் காலத்தால் முந்தியவனா? இல்லை கம்பு உள்ள முருகன் காலத்தால் முந்தியவனா?
இவ்வளவு சிக்கல் முருகனுக்கே இருக்கிறபொழுது சுப்புணி என்பதன் சூட்சுமம் என்ன?
//பத்துப் பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம்//
பாவம் உவேசா! இப்படியெல்லாம் திட்டுவாங்குவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கொலநெடுநல் வாடை கோல் குறிஞ்க்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இந்த பழம் பாடல் பத்துப்பாட்டு நூல்கள் எவை என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
பத்துப்பாட்டு முழுமைக்கும் கி.பி.9ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கருதப்படும் நச்சினார்க்கினியர் உரை எழுதிஉள்ளார்.அவர் மேற்கோள்கள் அவருக்கு முந்திய பழைய உரை ஒன்று பத்துப்பாட்டுக்கு இருக்கலாம் என்பதற்கு சான்றாகிறது.
திருமுருகாற்றுப்படை குறித்து நச்சினார்க்கினியர்”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை,வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக” என்று கூறி திருமுருகாற்றுப்படை ஒர் ஆற்றுப்படை நூல் என்று உறுதி செய்கிறார்.உவேசா குறித்த நண்பர் தென்றலின் அவதூறு ஆதாரமற்றது.
அதுதானே! எங்கடா ஆள இன்னும் காணமே என்று பார்த்தா? வந்துவிட்டீர்கள். சரி விசயத்திற்கு செல்வோம். நச்சானிர்க்கினியர் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் பிரச்சனை உவேசாவுக்குத்தானே! நச்சானிர்க்கினியர் உரையை வைத்துத்தான் திருமுருகு கடைச்சங்ககாலம் அல்ல என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. இதை மறுத்தவர் மயிலை சீனி. இவர் ஒரு சைவ பக்தராவார்! இவரது புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது வாசிக்கவும். என்ன மாதிரியான குறிப்புகளை விவாதித்திருக்கிறார் என்று வாசித்துப்பார்க்கவும். நக்கீரர் காலத்திற்கான விவாதமும் இவரால் மறுக்கப்பட்டு திருமுருகு இனிதே கடைச்சங்க காலத்தில் வைக்கப்பட்டது. நச்சனிர்க்கினியர் உரையும் காலமும் சரியென்றால் (என் முன்முடிவுகளும் அதுவே; கி,பி ஒன்பதாம் நூற்றாண்டு என்பது சரி) உவேசாவின் மீது பிராது ஏன் வைக்கக் கூடாது? இப்படியொரு கருத்தே அவதூறு என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இப்படியொரு விவாதம் ஏன் தேவை என்று யோசியுங்கள். அல்லது வீடுபேற்றை எடுத்துக்கொண்டு, தமிழ்குடிகளின் வழிபாடு இடம்பெற்றிருக்கும் பரிபாடலில், சிறுபாணாற்றூப்படையில் எத்துனை சதம் இருக்கிறது என்று பாருங்கள்? அங்கேயும் வைதீகக் கலப்புகள் உண்டு. ஆனால் தனிச்சிறப்பாக திருமுருகு மட்டும் எப்படி கடைச்சங்க காலமான கி,பி. 250லிலேயே வீடுபேறைப்பற்றி இவ்வளவு தனித்தன்மையுடன் பாடுகிறது என்று சொல்லுங்கள்.
//நச்சானிர்க்கினியர் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் பிரச்சனை உவேசாவுக்குதான்//
எப்படி அய்யா? நான் ஒரு பழம் பாடலை சுட்டிக்காட்டினேனே! அதை உவேசா தான் எழுதினார் என்று கூறாதவரை பத்துப்பாட்டில் திருமுருகுவை சொருகினார் என்ற குற்றசாட்டு எப்படி சரியாகும்.
//நச்சானிர்க்கினியர்…..வாதிடுகிறது//
நச்சினார்க்கினியர் திருமுருகுக்கு மட்டும் உரை எழுதவில்லையே? பத்துப்பாட்டு தொகுப்பு முழுமைக்கும் அல்லவா உரை எழுதி உள்ளார்? முருகு கடைச்சங்க நூல் இல்லை மற்றவை கடைச்சங்க நூல்கள் என்று எப்படி இந்த கூட்டம் சொல்கிறது?
//இதை மறுத்தவர் மயிலை சீனி.இவர் ஒரு சைவ பக்தராவார்//
மயிலையாரின் “தமிழும் சமணமும்” படித்தவர்கள் அவரை சைவ பக்தர் என்று கூறமாட்டார்களே!! இது உங்கள் சொந்த கருத்தா? இல்லை அந்த கூட்டத்தின் கருத்தா?
//நச்சனிர்க்கினியர்……ஏன் வைக்ககூடாது//
மேலே கூறி உள்ளேன்.
தமிழர்களுக்கான தத்துவமரபு வெளியில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் மீதம் உள்ள கேள்விகளை கேட்கிறீர்கள்.அதற்கான பதிலை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
//இப்படியொரு விவாதம் ஏன் தேவை என்று யோசியுங்கள்//
தேவாசுர யுத்தம் குறித்து இரண்டு தரப்பு உண்டு.முதல் தரப்பை இந்த பதிவின் கட்டுரை பேசுகிறது.இன்னொரு தரப்பு யோக,தத்துவ மரபில் குறியீடுகளாக உள்ளதை புராணீகர்கள் புராண கட்டுகதையாக எழுதிவிட்டார்கள் என்பது.
இந்த தரப்பின் முதல் குரலாக தமிழில் ஒலிப்பது திருமூலருடையது என்பதால் இந்த தரப்பு கவனம் பெறுகிறது.
காட்டாக
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே[திருமந்திரம்-343]
முப்புரங்களை அதில் உள்ள அரக்கர்களை அழித்தது சிவன் மும்மலங்களை அழித்ததுதான் என்கிறார்.
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே[திரு.345]
திருக்கடவூரில் காலனை உதைத்தது மூலக்கனலை சிரசுக்கு ஏத்துவது என்கிறார்.
அடுத்ததாக சமணம்,சைவம் குறித்து நாளை.பணி பளு
இக
\\ எப்படி அய்யா? நான் ஒரு பழம் பாடலை சுட்டிக்காட்டினேனே! அதை உவேசா தான் எழுதினார் என்று கூறாதவரை பத்துப்பாட்டில் திருமுருகுவை சொருகினார் என்ற குற்றசாட்டு எப்படி சரியாகும்.\\
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்” தொல்காப்பியம்- 1037
இது தான் ஆற்றுப்படைக்கு இலக்கணமாக தொல்காப்பியம் கூறுவது. மன்னரிடம் பரிசு வாங்குகிற நான்குவிதமான தொழிலாளர்கள் பரிசுவாங்காதவர்களை ஆற்றுப்படுத்துக்கிறார்கள். திருமுருகு இதற்குள் எவ்விதம் பொருந்துகிறது என்று எடுத்துச் சொல்லுங்கள். இப்பொழுது நச்சினார்க்கினியாரை ஏற்பீர்களா? அனாதையாக இருக்கிற பழம்பாடலை ஏற்பீர்களா? அல்லது தொல்காப்பியத்தை ஏற்பீர்களா? அல்லது திருமுருகை மூன்றாவதாக பதிப்பித்த உவேசாவை ஏற்பீர்களா? தமிழ் அறிஞர்கள் ஏன் இன்று வரை திருமுருகு என்றால் மவுனம் காக்கிறார்கள்?
கத்தும் குயிலோசை என் காதில் விழுந்தது என்று பாரதி பாடினால் மட்டும் இச்சமூகம் மரபுப் பிழை என்று பார்க்காமல் வழூவமைதி என்கிறது. அதே போல் சம்பந்தமேயில்லாமல் திருமுருகாற்றுப்படையும் இங்கே வருகிறது என்றால் ஆன்மிகத்தின் நெடிதான் என்ன? இதில் பழம்பாடல் திருமுருகை பத்துப்பாட்டோடு இணைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு தமிழர்கள் ஏன் தன்மானம் அற்றவர்களாக இருக்க வேண்டும்?
தமிழ், சமஸ்கிருத புலமை பெற்ற நச்சினார்க்கினியருக்கும் மற்றும் மொழியை அச்சிலேற்றிய மகோபாத்யாய உவேசாவிற்கு, இதெல்லாம் தெரியாதா என்ன? தெரியும். ஆனால் அவர்களுக்கெல்லாம் கலாச்சாரம் என்பது வெறும் ஆன்மிகம் மட்டுமே; இதற்கு மாறாக தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய சிந்தனை முறை முற்றிலும் வேறானது. அவர்கள் கிறித்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பொருட்டு சமண இலக்கியங்களை முழுவதும் ஆய்ந்திருக்கிறார்கள். நச்சினார்க்கினியரையும் ஆய்ந்து இருக்கிறார்கள். கால வைப்புமுறையில் இவர்கள் பல அதிர்ச்சிகளை முன் வைக்கிறார்கள். வைதீக மரபின் அனேக கூச்ச நாச்சங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இருந்தாலும் இவர்களும் சுடுதண்ணீருக்குப் பதில் கொதிக்கும் எண்ணெய்யைக் கைகாட்டியவர்கள் தான். ஆனால் தமிழ் மரபு என்றாலே நமக்கு உவேசாவிலிருந்து தான் சொல்லித்தருக்கிறார்களே தவிர, மாற்றுச்சிந்தனையை மருந்துக்கும் தொடுவதில்லை. தாங்களும் பழம்பாடலைச் சுட்டுவதோடு திருப்திபட்டு கொள்கிறீர்கள்.
திருமுருகுவில் இருந்து புறப்பொருள் வெண்பாமாலைவரை அச்சிலேற்றியவர் உவேசா. அதற்கு முன்பு, திருமுருகை பதிப்பத்தவர் ஆறுமுக நாவலர் (1850) உவேசா 1855இல் தான் பிறக்கிறார் என்றும் பார்க்கிறோம். (தமிழ் என்றால் சைவம் மட்டும் தான் என்று கருதுகிற மனப்பாங்கு நாவலருக்கு; உவேசா கூட சமண இலக்கியங்களை தொழில்முறை காரணமாக பதிப்பித்தவர்) இதற்கு முன்பு திருமுருகு, 1831 இல் மற்றொருவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட்டால் நச்சானிக்கினியர். அதற்குமுன்பான சமணர் காலம் முழுவதும் தமிழ்நாட்டுக்காரனுக்கு அவசியமற்றது என்பதுமாதிரி களப்பிரர் என்று கருதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது சைவர்களின் போக்கு; வரலாறே இப்படித்தான் அணுகப்பட வேண்டும் என்றால் பார்ப்பனீயம் ஏன் இவ்வாறு தமிழ்நாட்டில் பாடாது “அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!”
இதில் உவேசாவை ஏன் சேர்க்கக்கூடாது? அச்சில் ஏற்றப்பட்டது தமிழ் மட்டுமல்ல; பார்ப்பனியமும் தான்; அன்றுபோல இன்று, தமிழ் என்பது பார்ப்பனர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மட்டும் சொந்தமான சாதிய லெளகீகப்பொருள் அல்ல. மாறாக ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றானே பாரதிதாசன்; ‘பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கு தமிழ் என்று பெயர்’ என்று சொன்னதே புரட்சிகர இயக்கங்கள். இவையெல்லாம் வெறும் பொழுதுபோக்குகள் அல்ல. மாறாக புதிய கலாச்சார கீற்றுகள். ஆகையால் உவேசாவிலிருந்து அனைவரையும் சேர்க்கத்தான் வேண்டும்.
\\ நச்சினார்க்கினியர் திருமுருகுக்கு மட்டும் உரை எழுதவில்லையே? பத்துப்பாட்டு தொகுப்பு முழுமைக்கும் அல்லவா உரை எழுதி உள்ளார்? முருகு கடைச்சங்க நூல் இல்லை மற்றவை கடைச்சங்க நூல்கள் என்று எப்படி இந்த கூட்டம் சொல்கிறது?\\
நச்சினார்க்கினியர் பத்துபாட்டுக்கு முழுமையும் உரை எழுதினார் என்று சொல்கிற பொழுது, திருமுருகு மட்டும் அல்ல. பரிபாடலும் அப்படித்தான். இவையுமே கி,பி, ஏழாம் நூற்றாண்டுக்கு பிற்பாடானவைதான்.
எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையும் கி,பிக்கு ஐந்திற்கு பிற்பாடுதான்.
வச்சர நந்தியின் திரமிள சங்கம் கி,பி. 450 என்கிற பொழுது அதற்கு பிற்பாடுதான் சங்க நூல்களின் காலம் என்று சொன்ன வையாபுரி, பாவாணாரால் ‘தமிழ்த்துரோகி’ என்று சுட்டப்பட்டதாக வீ.அரசுவின் கட்டுரை மூலமாக அறிகிறோம். தொல்காப்பியத்தையும் கி,பி. ஐந்தாம் நூற்றாண்டு பிற்பாடு நகர்த்தியவர் வையாபுரி பிள்ளை.
இதில் கடைச்சங்க காலத்தில் நூல்களை நிறுத்துவதற்கு சில தர்க்கங்களை வழங்கியவர் மயிலை சீனி. மேற்கொண்டு படியுங்கள் கீழே.
—–
\\ மயிலையாரின் “தமிழும் சமணமும்” படித்தவர்கள் அவரை சைவ பக்தர் என்று கூறமாட்டார்களே!! இது உங்கள் சொந்த கருத்தா? இல்லை அந்த கூட்டத்தின் கருத்தா?\\
மயிலை சீனி வைச பக்தர் தான். இவருடைய தமிழும் சமணமும் என்ற நூலை விட, களப்பிரர்காலத்தில் தமிழகம் என்ற நூல் தமிழ்நாட்டில் கலகக்குரலையே ஏற்படுத்தியது. சைவர்களின் சமணக்காழ்ப்புணர்வை புட்டு புட்டுவைத்தது. இருந்தபோதிலும் சைவப்பற்று அன்னாருக்கும் உண்டு. அதைக்குறிப்பிடும்பொருட்டே மயிலை சீனி சைவப் பக்தர் என்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியிருந்தது. சைவப்பற்று காரணமாகத்தான் வேள்விக்குடி சாசனம் பற்றி இவர் ஏதும் குறிப்பிடவில்லை என்று பார்க்கிறோம்.
——————————–
இறையனார் கலம்பகம் கி,பி 5-6க்குள் எழுதப்பட்டதற்கு ஆதாரத்துடன் விளக்கம் தந்தவர் மயிலை சீனிதான். இறையனார் கலம்பகம் நக்கீரரால் எழுதப்பட்டது என்று கூறுகிற பொழிப்புரையை ஒட்டுமொத்தமாக மறுத்தவர். பல்வேறு ஆதாரங்களை விவாதித்து இருப்பார். அதே சமயம் திருமுருகு, நெடுநெல்வாடை ஆகியவற்றை கடைச்சங்க நக்கீரரிடம் விட்டுவிட்டு, இறையனார் கலம்பகம், கோபப்பிரசாதம் முதலிய நூல்களை நக்கீர நாயனாரிடம் விட்டுவிடுவார். கபிலருக்கும் இதேப்பிரச்சனைதான் உண்டு. குறிஞ்சிப்பாட்டு கபிலர் என்று சொல்லிவிட்டு, களப்பிரர் காலத்திற்கு பிற்பாடான கபிலரை கபில நாயனார் என்று கூறுவோரும் உண்டு.
இவ்விதம் வையாபுரி துரோகியாக வேண்டுமானால் கடைச்சங்கத்தில் நூல்கள் வைக்கப்படுவதற்கு நக்கீரரும் நக்கீர நாயனாரும் வேறு வேறாக இருந்தாக வேண்டும், கபிலர் நாயனார் ஆக வேண்டும். இவ்விதம் பல சர்ச்சைகள் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன. ஆன்மீகம் என்ற ஒற்றைக்காரணத்திற்காக இவை அணுகப்படாமலும் இருக்கின்றன.
திருத்தம்: வையாபுரி குறித்த தகவல்களை (வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது) வெறும் சங்க இலக்கிய காலம் என்பதுடன் தூக்கிப்பிடிக்கிற பொழுது திராவிட இயக்கம் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை குறைத்து மதிப்பிடுகிற அபாயமும் என் கருத்தில் உள்ளது. வையாபுரியின் வடமொழி குறித்த செய்திகள் மற்றும் அதன் மீதான பற்று போன்றவற்றை நாம் சுட்டாமல் சங்க இலக்கிய காலத்திற்கு மட்டும் வையாபுரியை நாடுவது நாம் விவாதிக்கிற புராணபுளுகுகளை அறிந்துகொள்வதன் மீதான பார்வையை சிதைக்கக் கூடியவை. சான்றாக இன்றைக்கு வையாபுரி இந்துவெறியன் இராமகோபலான், தினமணி வைத்தி, தினமலர் போன்ற பார்ப்பன அக்கரகாரங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றது. இதையும் சேர்த்துக்கொண்டுதான் வையாபுரியின் பணியை கணக்கில் எடுக்க முடியும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்றை ஒரு பக்கமாக தெரிந்துகொள்வதன் பிழை இது. இதை வரும் விவாதங்களில் திருத்திக்கொள்கிறேன்.
கலித்தொகை 5ன் நூற்றாண்டா என்று முதலில் பார்ப்போம்.
கலிப்பாவினால் பாடப்பட்டதால் கலித்தொகை.
பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்டகலி.
வெண்பா கூறுவது பாலைத்திணையில் அமைந்த பாலைகலியை பெருங்கடுங்கோனும் குறிஞ்சிகலியை கபிலரும் மருதக்கலியை மருதனிளநாகனும்,முல்லைக்கலியை அருஞ்சோழன்நல்லுருத்திரனும் நெய்தல் நல்லந்துவனாரும் பாடினார்கள் என்பதை.
இதில் கபிலரும்,உருத்திரசன்மனும் சங்க கால பாடல்களை பாடியவர்கள்.பாரி,கரிகால பெருவளத்தான் எனும் வரலாற்று நாயகர்களுடன் தொடர்புடையவர்கள்.இது எப்படி சாத்தியம்?
அடுத்து பரிபாடல் 13 புலவர்களால் பாடப்பட்டது.கலித்தொகை,பரிபாடல் இரண்டிலும் உள்ளவர் நல்லந்துவனார். இவரின் பாடலில் உள்ள கிரகநிலை[பரிபாடல் 11] கி.மு உள்ளதாக உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
பரிபாடல் 12ஐ இயற்றிய நல் வழுதி கடைசங்க காலத்து பாண்டிய மன்னன் என்கிறார் வரலாற்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்.இது எப்படி சாத்தியம்?
இன்னா நாற்பது எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் கபிலர் பெயரால் உள்ளது.புலாலுண்ணாமையை தீவிரமாக எதிர்க்கும் இந்நூலை “மட்டுவாய் ஊன்சோறு” உண்ட குறிஞ்சி கபிலர் எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.இது சரிதானே இதில் என்ன சிக்கல்?
சகரம் மொழியின் முதலில் வராது எனவே சங்க காலம் என்பதே பொய் என்று சொல்லும் ஆய்வு கட்டுரைகள் உண்டு.நிலமை என்னவெனில் சங்க இலக்கியங்கள் எனும் தமிழரின் இலக்கிய சொத்து பல தரப்பினருக்கு உறுத்தலாக உள்ளது.எனவே கவனமாக உண்மையை அறிய முயல வேண்டும்.
திருத்தம்:புலாலுண்ணுதலை தீவிரமாக எதிர்க்கும் என்று படிக்கவும்.
//வச்சிர நந்தியின் திரமிள சங்கம் கி.பி.450 என்கிறபொழுது அதற்கு பிற்பாடுதான் சங்க நுல்களின் காலம்//
மேலோட்டமான பார்வைக்கே தெரியும் இது தவறான வாதம் என்று.கரிகால பெருவளத்தான் இலங்கையின் மீது கி.பி.முதல் நூற்றாண்டில் படை எடுத்து 10000 பேரை போர்கைதிகளாக பிடித்து வந்தான் என்று இலங்கையின் மகா வம்ச சரித்திரம் ஒத்து கொள்கிறது.பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படைக்கும்,பட்டினப்பாலைக்கும் கரிகாலந்தான் பாட்டுடைத் தலைவன்.திரமிள சங்கத்திற்குதான் ஆதாரம் குறைவு.
திருமுருகாற்றுப்படைக்கு வருவோம்.பத்துப்பாட்டு எப்படி தொகுக்கப்பட்டது என்று பன்னிருபாட்டியல் பின்வருமாறு விளக்குகிறது.
நூறடிச் சிறுமை நூற்றுப்பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம்பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப்படுமே[பன்னிரு பாட்டியல் 266-7]
புறநாநூற்றிலும்,பதிற்றுப்பத்திலும் பல செய்யுள்கள் ஆற்றுப்படைகளாக அமைந்துள்ளன.நூறடி சிறுமை என்ற விதிக்கு அவை பொருந்தாதலால் அவை பத்துப்பாட்டில் தொகுக்கப்படவில்லை.எனவே தொகுத்தல் கறாராக நடந்தது என தெளிவாகிறது.
நச்சினார்க்கினியர்க்கு காலத்தால் முந்திய பேராசிரியர் போன்ற உரையாசிரியர்கள் “பாட்டிலும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க” என்று சுட்டுவதால் இதை நச்சினார்க்கினியர் தொகுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இலக்கணத்திற்கு தொல்காப்பியம் போன்று உரைக்கு நச்சினார்க்கினியம் என்று புகழப்படும் நச்சினார்க்கியர்,”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக”
என்று கூறி திருமுருகு ஒர் ஆற்றுப்படை நூலென்று உறுதி செய்கிறார்.இதற்கு மேலும் திருமுருகு ஆற்றுப்படை இல்லை என்பது எப்படி சரியாகும்.
வீ.அரசு சொல்வது போல் முருகு தேவார,திருவாசக நூல்களுக்கு பிறகு எழுதப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த பாட்டு இடம் பெற்றிருக்காது.அது
“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து”
முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது 7ம்நூற்றாண்டில் நடைமுறையில் இருந்ததா? களப்பிரர் காலத்திய முக்கிய பண்பாட்டு மாற்றம் புலால் உண்பது கடும் பாவமாக நம்பவைக்கப்பட்டதுதான்.எனவே முருகன் கிடா கறி கேட்டது சங்க காலத்தில்தான்.முருகு சங்க கால நூல் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
\\”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக”
என்று கூறி திருமுருகு ஒர் ஆற்றுப்படை நூலென்று உறுதி செய்கிறார்.இதற்கு மேலும் திருமுருகு ஆற்றுப்படை இல்லை என்பது எப்படி சரியாகும்.”\\
தாங்கள் சுட்டிக்காட்டுகிற இவ்வாதம் எவ்விதத்திலும் திருமுருகை சங்க காலத்தில் சேர்க்க போதுமானவை அல்ல. முதலில் சமகால காலத்தன்மையை உற்றுநோக்கவும். வீடுபேறு என்பது முதலில் ஆற்றுப்படைக்கு உரியதா? தொல்காப்பியல் அகம், பொருள், இன்பம் என்று லெளகீக வாழ்வை மட்டும்தான்பேசுகிறது. இதற்குப்பிற்பாடான இறையனார் கலம்பகம் மட்டுமே பேரின்பத்தைப் பேசுகிறது. தொல்காப்பிய ஆற்றுப்படை இலக்கணத்தோடு மறுபடி ஒப்பிட்டுப்பார்க்கவும். மறி அறுத்து என்றொரு வாழ்வியல் முறையை சுட்டிக்காட்டுகிறீர்கள். அதற்கு பதில் சொல்கிற பொழுது மேலும் ஆதாரங்களை முன்வைக்கிறேன். அதற்கு முன்பாக பன்னிரு பாட்டியலின் காலத்தைத் தெரிந்துகொள்ளவும். எட்டுத்தொகை தொகுக்கப்பட்டது முதலில் இறையனார் அகப்பொருளில். இது களப்பிரர் கால நூலாகும். ஆனால் பன்னிருபாட்டியல் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு ஒரு விசயத்தைக் கவனிக்கவேண்டும். தொகுக்கப்பட்டதால் நூல் எழுதப்பட்ட காலமும் அதுவே என்று சொல்லவரவில்லை. ஆனால் கால அளவை நிர்ணயப்படுத்திக்கொள்வதன் மூலமாக பத்துப்பாட்டு , எட்டுத்தொகை வெண்பா பாடலுக்கான காலத்தை நோக்கி நகர இயலும். பன்னிரு பாட்டியல் 10 ஆம் நூற்றாண்டு என்றால் நச்சினார்க்கினியர் காலம் இதற்குப் பிற்பாடு என்றாகிறது. இதையும் விவாதிக்கும் பொழுது கவனத்தில் எடுக்கவும்.
\\“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து”
முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது 7ம்நூற்றாண்டில் நடைமுறையில் இருந்ததா? களப்பிரர் காலத்திய முக்கிய பண்பாட்டு மாற்றம் புலால் உண்பது கடும் பாவமாக நம்பவைக்கப்பட்டதுதான்.எனவே முருகன் கிடா கறி கேட்டது சங்க காலத்தில்தான்.முருகு சங்க கால நூல் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.\\
இதில் ஒன்றைத் தெளிவுபடுத்துவோம். முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது நற்றிணையிலே வந்துவிடுகிறது. சான்றாக நற்றிணையில்; “வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு”
குறுந்தொகையில் “சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி”.
கடந்த ஒரு வாரகாலமாக, முருகன் பார்ப்பனியமயக்கப்பட்டான் என்று வாதிடுகிற பொழுது இதுபோன்ற வாதங்களை எடுத்துவைப்பார் யாரும் இலர்! தமிழ் தாகம் இதை வேறொரு பதிவில் வலியுறுத்தியிருக்கிறார். சரவணன் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறிஅறுத்து எனும் வாதத்தை மேட்டுக்குடி வெள்ளாளர்களிடம் விவாத்திருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இதை வலுப்படுத்துவதை விட்டுவிட்டு, தாங்கள் திருமுருகை சங்க காலத்தில் வைப்பதற்காக மட்டும் இதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இது எதிர்தரப்பு அரசியல்! இதன் பலன் முருகன் பார்ப்பனியமாக்கப்பட்டான் என்பதற்குத்தான் பயன்படுமே தவிர, முருகன் கறிசோறு திங்கிற தொல்குடிகளின் கடவுள் என்று சொல்வதற்கு பயன்படாது.
ஏனெனில் திருமுருகு அப்படிப்பட்டதல்ல. சங்க இலக்கியங்களிலே மறி அறுத்தல் வந்துவிடுவதால் திருமுருகுவில் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதே சமயம் திருமுருகு ஏன் கடைச் சங்க காலம் அல்ல என்பதற்கு கீழ்க்கண்ட தரவுகளை பரிசிலீக்கவும்.
1. திருமுருகாற்றின் பாடல் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும். நக்கீர தேவநாயனாரின் அனைத்துப்பாடல்களுமே இணைக்குறள் ஆசிரியப்பா வகையைத்தான் கொண்டிருக்கின்றன். ஆனால் நக்கீரரின் நெடுநல்வாடை நேரிசை ஆசிரியப்பாவாகும். திருமுருகு கடைச் சங்க காலமென்றால் திருமுருகு தனித்து நிற்கவேண்டியிருக்கும்.
2. திருமுருகாற்றின் கடைசி தொகுப்புப்பாடல் (தொகுப்புப் பாடல் என்பது நூலைச் சிறப்பித்துப்பாடப்படுகிற பாடலாகும்) கட்டளைக் கலித்துறையால் ஆன “ஒருமுரு காவென்ற னுள்ளங் குளிர வுவந்துடனே” என்று தொடங்குகிற பாடலாகும். ஏற்கனவே கூறியுள்ளது படி, துறை, விருத்தம் மற்றும் தாழிசை களப்பிரர் காலத்திய கண்டுபிடிப்புகளாகும் (பார்க்க; மயிலை சீனியின் புத்தகம்)
3. சங்ககால பாடல்களில் “நான்” என்பது மிகவும் அருகிய சொல்லாகும். பரிபாடலில் இரண்டொருமுறை வருவதைச் சுட்டிக்காட்டுகிற பொழுது (ஆகையால் அது அங்கு வராது என்றும் சொல்லலாம்! பரிபாடல் அங்கு வருவதும் இல்லை. தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிற பரிபாடல் சான்றை நாம் ஆராய்வது பாக்கியாக இருக்கிறது; கவனம் செலுத்தவும்), திருமுருகையும் சுட்டிக்காட்டலாம். இதைத் தாண்டி புறப்பொருள் திரட்டில் “நான்” என்ற இடப்பெயர் வருகிறது. வையாபுரி, களப்பிரர் கால நக்கீர நாயனாரின் பாடலில் (கயிலைபாதி அந்தாதியில்) “நான்” என்ற சொல் 96 முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
4. களப்பிரர் காலத்தில் ஊண் உண்ணாமையைச் சுட்டிக்காட்டுவதை பொருத்தமானதாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் களப்பிரர் காலத்தில் தான் எண்ணற்ற சைவ நூல்கள் வெளிவருகின்றன. (பார்க்க மயிலை சீனி புத்தகம்) . திருக்கண்ணப்ப தேவர் திருமறம், இறைச்சியை சிவனுக்குப் படைப்பதைப் பேசுகிறது. இதில் சிவனைக் காட்டிலும் முருகன் தான் சங்க கால இலக்கியப்பாடல்களில் அதிகம் வருகிறான். லேட்டஸ்டா வந்தே சிவனுக்கு களப்பிரர் காலத்தில் இறைச்சி அளிக்கப்படுகிறது என்று பார்க்கிறோம்.
5. இறுதியாக புறப்பாடலில் முருகயர்தல் போருடனும், அகப்பாடலில் வெறியாட்டல் தலைவன்-தலைவியுடனுடம் முருகன் தொடர்பு படுத்தப்படுகிறான். ஆனால் திருமுருகாற்றுப்படையின் முதல் படைத்தளமான திருப்பரங்குன்றத்தில் முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரம் எடுக்கப்படுவதாக பார்ப்பனியம் தன் சொருகலைச் சொருகுகிறது. திருமுருகாற்றுப்படையில் உள்ள மீதமுள்ள புராணப்புளுகுகள் இதுவரை நாம் விவாதிக்கின்ற முருகன்-தொல்குடிகளின் கடவுள் என்பதற்கு எதிர்மாறானவை. கடைச் சங்கப்பாடல்கள் முருகனை ஒருமாதிரியாக காட்டுவதும், திருமுருகு முருகனை புராணங்களின் அடிப்படையில் காட்டுவதிலும் இருந்தே இதன் காலம் வேறானது என்பதை எளிதில் விளக்கலாம்.
திருத்தம்: \\ வையாபுரி, களப்பிரர் கால நக்கீர நாயனாரின் பாடலில் (கயிலைபாதி அந்தாதியில்) “நான்” என்ற சொல் 96 முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\\ இக்கருத்து தவறானதாகும். இங்கு நான் என்பது 96வது அடியில் வருகிறது. 96 முறை என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறேன். “அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல படுகின்ற வண்ணம் பணி.” என்ற 96வது பாடலில் நான் என்பது எடுத்தாளப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து எண்ணிக்கை என்பதைப் பொறுத்தவரை பக்தி இலக்கியமான தேவாரத்தில் நான் என்ற சொல் மொத்தம் 339 இடங்களில் வருகிறது. சங்க காலம் தொட்டு பயன்பட்டுவரும் ‘யான்’ என்ற சொல் திருநாவுக்கரசர் தேவாரத்தில் 29 முறை மட்டுமே வருகிறது (http://www.tamilvu.org/courses/degree/d041/d0412/html/d0412112.htm). இதைக் கவனத்தில் கொள்ளவும்.
\\இதில் கபிலரும்,உருத்திரசன்மனும் சங்க கால பாடல்களை பாடியவர்கள்.பாரி,கரிகால பெருவளத்தான் எனும் வரலாற்று நாயகர்களுடன் தொடர்புடையவர்கள்.இது எப்படி சாத்தியம்\\
சங்க காலத்தில் வருகிற கபிலர் சற்றேறக்குறைய 206 செய்யுட்களைப் பாடியுள்ளார். இவையனைத்தும் பாண்டியனைப் பற்றியதோ அல்லது கூடல் மாநகரைப்பற்றியதோ அல்ல. ஆனால் கலித்தொகை பாண்டியனைப் பற்றி பாடுகிற பாடலாகும். இதற்கான ஆதாரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, சங்க கால கபிலரின் சர்ச்சையைப் பார்த்துவிடுவோம்.
சங்க கால கபிலர், ஐங்குறுநூறில் குறிஞ்சித் திணையையும், அகநானூறில் பதினெட்டு செய்யுள்களையும், குறுந்தொகையில் 27 செய்யுள்களையும் புறநானூறில் 28 செய்யுள்களையும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டையும் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தையும் பாடியவர். இது சரியெனில் கபிலரின் வயது என்ன? ஒரு மனிதர் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும் என்று வைத்துக்கொண்டாலும், சங்க கால இலக்கியங்களின் பெரும்பாலான பாடல்களை ஒரே நூற்றாண்டுக்குள் அடக்குவது தமிழரின் தொன்மையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. ஆனால் கடைச் சங்க பாடல்களின் காலத்தின் மேல்- எல்லை கி.மு 300 லிருந்து கி,பி 250 முடிய என்று நிறுத்துகிறார்கள். இது எப்படி சரி?
இரண்டாவதாக கபிலரின் பதிற்றுப்பத்து (7ஆம் பத்து) செல்வக்கடுங்கோ வாழியாதனைப்பற்றிப் பாடுகிறது. இவர் சேர மன்னர். ஆனால் கலித்தொகை பாண்டியனைப்பற்றி மதுரையைப் பற்றி பாடுகிறது. இது எப்படி சாத்தியம்?
பதிற்றுப்பத்தும் கலித்தொகையும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டு, கபிலர் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர பாடினாலே ஒழிய, தாங்கள் குறிப்பிடுவது சாத்தியமாகும்.
மேலும் கலித்தொகையில் வருகிற ஐந்து திணைப் பாடல்கள் மதுரையைப் பற்றியும் பாண்டியனைக் குறித்து பாடியதன் மூலமாக கலித்தொகையின் சமகாலத்தன்மையை நிறுவுகிறார் வையாபுரி;
வையாபுரி தரும் சான்று;
பாலைக் கலியில் (30)
மீனிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழவே
எனவும், குறிஞ்சிக்கலியில் (21)
பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல்
எனவும், மருதக்கலியில் (33)
பொய்யாவாட் டானைப் புனைகழற்காற் றென்னவன்
எனவும், முல்லைக்கலியில் (4)
வாடாச் சீர்த் தென்னவன்
எனவும், நெய்தற் கலியில் (26)
தென்னவற் றெளித்த தேஎம் போல எனவும் வருதலால் இது தெரியலாகும்.” (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0326.html)
——————————————–
மேலும் வெண்பாவின் முரணை இவ்விதம் சுட்டிக்காட்டுகிறார் வையாபுரி;
“பெருங்கடுங் கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழ
னல்லுத் திரன்முல்லை நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி.
இச்செய்யுள் ’இன்னிலை’ ’ஊசிமுறி’ முதலிய நூல்களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ்சென்ற த.மு.சொர்ணம் பிள்ளையவர்கள் முதன் முதலில் வெளியிட்டது. தொகை நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரியர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச்செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் ஏட்டுப்பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன் முதலில் வெளியிட்ட ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாததனோடு, இச்செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லுந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினார்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற்றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற்குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றிலேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண்டியனுக்கும் யாதோர் இயைபும் இல்லை. ஆனால் குறிஞ்சிக் கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாகவுள்ளது இச் செய்யுள்.”
—-
ஆக இதன்படி கபிலரை வைத்து கலித்தொகை சங்க இலக்கியம் என்று நிறுவ இயலாது. கலித்தொகையின் காலநிர்ணயத்தை வையாபுரியின் ஆய்வுகளை படிப்பதன் மூலமாக அறியலாம். நேரம் கிடைக்கும் போது இதைச் செய்யலாம். அதே சமயம் கி.மு 300 லிருந்து, கி,பி 250க்குண்டான கடைச்சங்க காலத்தில் கலித்தொகையை நிறுத்துவது எந்தளவிற்கு சரி?
\\ சகரம் மொழியின் முதலில் வராது எனவே சங்க காலம் என்பதே பொய் என்று சொல்லும் ஆய்வு கட்டுரைகள் உண்டு.நிலமை என்னவெனில் சங்க இலக்கியங்கள் எனும் தமிழரின் இலக்கிய சொத்து பல தரப்பினருக்கு உறுத்தலாக உள்ளது.எனவே கவனமாக உண்மையை அறிய முயல வேண்டும்.\\
தமிழின் தொன்மையை அறிவதற்கு சங்கம் என்ற வார்த்தை தேவையில்லை. ஏனெனில் தற்பொழுதைய அகழ்வராய்ச்சிகள் கூட (அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்) போன்றவை தமிழர் தொன்மையை அறிவுப்பூர்வமாக கி,மு எட்டாம் நூற்றாண்டு வரை எடுத்துச் சென்றிருக்கிறது. இதற்கு முன்பு அசோகர் கால கல்வெட்டுகள் பாண்டியனைக் குறிப்பிடுவதாக அறிகிறோம். ஆனால் இலக்கியங்களில் அத்தகைய ஆராய்ச்சிகள் வெகுகுறைவு. தமிழரின் இலக்கிய சொத்து என்று சொல்லவருகிற பொழுது சமகாலத்தன்மையை மனம் திறந்து ஆராய முன்வருதல் வேண்டும். இதன் பொருட்டே தான் வீ. அரசு போன்றவர்களால் சில ஐரோப்பியர்களின் காலநிர்ணயத்தை தவறென்று சுட்டிக்காட்ட முடிவதுடன் பார்ப்பனியத்திலிருந்தும் தமிழர்தம் கலாச்சாரத்தை தனியாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால் வரலாற்று பொருள் முதல் பார்வைக்குப் பதிலாக புராணங்களையும் மன்னர் தரப்பு வாழ்க்கை முறைகளையும் பார்ப்பனப்புலவர்களின் கவிதைகளை மட்டுமே கணக்கில் கொள்கிற பொழுது அது பார்ப்பனியமாக நின்றுவிடுகிற அபாயம் உண்டு.
\\ அடுத்து பரிபாடல் 13 புலவர்களால் பாடப்பட்டது.கலித்தொகை,பரிபாடல் இரண்டிலும் உள்ளவர் நல்லந்துவனார். இவரின் பாடலில் உள்ள கிரகநிலை[பரிபாடல் 11] கி.மு உள்ளதாக உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
பரிபாடல் 12ஐ இயற்றிய நல் வழுதி கடைசங்க காலத்து பாண்டிய மன்னன் என்கிறார் வரலாற்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்.இது எப்படி சாத்தியம்?\\
இரு குறிப்புகளைச் சுட்ட விழைகிறேன். எட்டுத்தொகை நூல்களிலேயே கலித்தொகையிலும் பரிபாடலிலும் தான் புராணப்புளுகுகள் அதிகம். பீமன், துரியோதணன் போன்ற செய்திகள் கலித்தொகையிலும் (வலைத்தளத்தில் சேகரித்தது), முருகனின் பிறப்பு, சூரபத்மனை கொன்றழிப்பதை விரிவாக பரிபாடலிலும் பார்க்கிறோம்.
பரிபாடல் முருகன் பற்றிய பிறப்பை புராணத்துடன் இணைப்பதைப் பார்க்கிறோம். சான்றாக இந்தக் கட்டுரையை சொடுக்கிப்படிக்கவும் (http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60604074&format=print&edition_id=20060407).
இரண்டாவதாக கலித்தொகையிலும், பரிபாடலிலும் தாழிசை உள்ளுக்குள் வருகிறது. தாழிசை, விருத்தம், துறை இம்மூன்று பாவகைகளும் களப்பிரர் காலத்திய கண்டிபிடிப்புகள். இதற்குமுன்பு, தொல்காப்பியம் ஆசிரியம், வஞ்சி, கலி, வெண்பாவைச் சுட்டுகிறது. கலித்தொகையும், பரிபாடலும் தான் அதிக ஓசை நயம் உடையவை என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. தாழிசை எப்படி கலித்தொகைக்குள் வந்தது என்பது விவாதத்திற்குரியது.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்-[தொல்-999]
ஆடல் பாடல் இசைக்கு ஏற்றது கலிப்பாவும்,பரிபாடலும் என்கிறார்.என்மனார் புலவர் என்பதன் மூலம் அவர் காலத்துக்கு முன்பிருந்தே என்பதை அறியலாம்.
களப்பிரர் காலத்தில் இசை,நாடகத்தின் நிலை என்ன என்பது நான் சொல்ல தேவை இல்லை.தமிழின் பாணர் மரபே முடிவுக்கு வந்து விட்டது.எனவே கலிப்பாவின் தாழிசை முயற்சிகள் களப்பிரர் காலத்தியது என்பது ஏற்புடையது இல்லை.
\\ தமிழர்களுக்கான தத்துவமரபு வெளியில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் மீதம் உள்ள கேள்விகளை கேட்கிறீர்கள். அதற்கான பதிலை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.\\
நன்று. அதே சமயம் விவாதத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிசீலிக்கவும்.
1. அசுரர் குடி கெடுத்த ஐயா வருக! என்ற பதத்திற்கு தமிழ் பக்தனின் பதில் என்ன?.
2. வெறியாட்டுதல் தன் உணர்ச்சிப் பாடல்களாக நற்றிணையில் இருந்து தொடங்குகிற பொழுது சுரா பானம் தவிர்க்கப்பட்டவர்கள் அசுரர்கள்; அத்தகைய அசுரர்கள் அழிக்கபட்டு தேவர்கள் காக்கப்பட்டனர் என்று பார்ப்பனியம் வரையறுக்கிற கலாச்சாரம், தமிழ்க்குடிகளுக்கு எவ்விதம் பொருந்துகிறது?
// தவறு. ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இதில் முருகன் சு. சுவாமி எனப்படுகிறார். சூரனை வதம் செய்வதற்காகத்தான் முருகனே பார்ப்பனியமயமாக்கப்படுகிறான். ஆனால் திருப்பரங்குன்றமே சைவத்திற்கு லேட்டஸ்ட் திணிப்பு என்கிற பொழுது திருமுருகாற்றுப்படையும் அப்படித்தான். பத்துப்பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம். //
சூரனை தண்டிக்கும் குறிப்புகள் பார்ப்பனியம் புகுந்ததாக நீங்கள் கூறிய காலகட்டத்துக்கு முந்திய சங்கப்பாடல்களில் இருக்கும் போது இந்த தலைகீழ் பார்வை ஏன்..?! திருமுருகாற்றுபடை பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர்..?! போகிற போக்கில் உவேசாவையும் விட்டுவைக்கவில்லை..
// ஏனெனில் ஆற்றுப்படையின் இலக்கணம் அரசனிடம் பரிசில் பெற்றவர் இனி பரிசில் பெறப்போகிறவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த செய்யுளாகும். யாழ் வாசிக்கிற சிறுபாணர்களுக்கும், பெரும்பாணார்களுக்கும் செய்யுள் அமைந்ததை காண்கிறோம். ஆனால் திருமுருகு மட்டும், முருகனிடம் வீடுபேறு அடைந்த புலவர், இனி வீடுபேறு அடையப்போகும் புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. வீடுபேறு பார்ப்பனியத்தின் மோசடி. திருமுருகைத்தவிர சிறுபாணாற்றுப்படையிலும் பெரும்பாணாற்றூப்படையிலும் எட்டுத்தொகையிலும் வீடுபேறு எத்துணை சதவீதம் இருக்கிறது? //
பாணிரண்டு என்று கூறப்படும் சிறு,பெரும்பாணாற்றுப்படை பாடல்களில், பாணர்கள் பாடினால் மன்னர்கள் பரிசில் கொடுப்பார்கள் என்றுதான் காட்டமுடியுமே தவிர வீடுபேற்றைத் தருவார்கள் என்றா காட்டமுடியும்..?! இவற்றில் ஏன் வீடுபேற்றைத் தேடுகிறீர்கள்..?!
// சாமியாடுதல், வெறியாட்டல், தமிழ் தொல்குடிகளின் மரபு என்று நிறுவுகிற பொழுது சங்ககால முருகவழிபாடு சாங்கியத் தத்துவத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். //
சாங்கியத்தில் ஏது சாமியாடுதலும், வெறியாட்டுதலும்..?!
// வைதீக மரபு என்ற நைச்சியம் இல்லாமல் வீடுபேறு சாத்தியமல்ல என்கிற பொழுது முருகன் வீடுபேறு அளிக்கிறான் என்று சொல்கிற திருமுருகு, பார்ப்பனிய பித்தலாட்டமின்றி வேறில்லை.//
வீடுபேறு என்பது வைதீக மரபு மட்டுமல்ல என்று சமணத்தையும் சரியாக காட்டுகிறீர்கள்.. சமணம், வைதிகம் இவற்றில் மட்டும்தான் வீடுபேறு சாத்தியமா..?! தமிழர்களுக்கு வீடுபேறு சிந்தனை எட்டாத சிந்தனையா..?! சூரனும் சாகவில்லை, முருகனால் தண்டிக்கப்ப்பட்டு, ஆட்கொள்ளப்பட்டு மயிலானான் என்றால் முருகனின் அடியவர்கள் அவன் பதம் சேர விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள ஏன் வைதீக மரபு வந்தாக வேண்டும்..?! முருகன் அருளைப் பெற ஆற்றுப்படுத்தினால் அது எப்படி பார்ப்பனியப் பித்தலாட்டம் என்று புரியவில்லை..
// சமணமும் வீடுபேறைப்பற்றிப் பேசுவதாக அறிகிறோம். சிலம்பும், பெருங்கதையும், திருக்குறளும், மலர்மிசை என்று அருகனையும், பிறவிப்பெருங்கடல் என்று வீடுபேற்றையும் குறிக்கின்றன.
ஆனால் திருமுருகு வைதீக மரபை பார்ப்பனிய சனாதனத்தைப் புராணப்புளுகளை உள்வாங்குவதன் மூலம்தெளிவாகக் காட்டுகிறது. வீடுபேறைத் தாங்கி பல புரணாங்கள் புகுத்தப்படுகின்றன. நீங்கள் சொல்வதைப்போல முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரமே எடுக்கிறான் என்று ஒரு சேர புராணமும், திருப்பரங்குன்ற தலபுராணமும் இயம்புகின்றன. ஆனால் இன்னபிற சங்க இலக்கியங்கள் தன் உணர்ச்சிப்பாடலாக முருகனை வெறியாட்டுதலுடன் இணப்பதாக அறிகிறோம். பார்ப்பனியம் புகுந்தபிறகு உருவாக்கப்பட்ட செட்டப்பின்றி சூரனை வதம் செய்வது சாத்தியமல்ல.//
”முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா
ரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார்
சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார். 2548
(இ – ள்.) சேண் நெடிய கண்ணார் – மிகவும் நீண்ட கண்ணினரான மகளிர், நம்பி முந்து சூர் தடிந்த முருகன் என்பார் – இந் நம்பி முன்னர்ச் சூரனை வீழ்த்திய முருகன் என்பார்; ஐந்து உருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் – ஐந்து அழகிய அம்புகளையுடைய காமனே இவன் என்று வருந்துவார்; கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார் – கந்துக்கடன் வளர்த்த சிங்கம் போன்றவனைக் காணுங்கோள் என்பார்; சிந்தையில் களிப்பார் – மன மகிழ்வு கொள்வார். “
– முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி
”சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. ”
– குன்றக்குரவை, வஞ்சிக்காண்டம், சிலப்பதிகாரம்
சமணர்களான திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் சீவக சிந்தாமணியிலும், சிலப்பதிகாரத்திலும் முருகனை சூரனை தடிந்தவனாகவே குறிப்பாகப் பாடியிருக்கும் போது தென்றலுக்கு மட்டும் சூரனை தண்டிக்க பார்ப்பனியம் வேண்டியிருப்பது ஏனோ..?!
——-
// சமணக்குறிப்புகளை தென்பரங்குன்றத்துடன் பேசுவோம். தென்பரங்குன்றத்தின் தமிழ்பிராமி எழுத்துக்களுக்கும் சமணர்களின் கற்படுக்கையும் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் திருமுருகு சங்கபாடல் என்று சொல்கிற பொழுது அது நிலைத்தப்படுகிற காலகட்டம் கி.பி 250. கடைச்சங்க இலக்கியம் முழுமையுமே கிறித்து பிறந்த இரு நூற்றாண்டுகளில் தான் வரையறுக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்தின் புடைப்புச் சிற்பங்கள் சமணர் காலத்தவை. அதாவது சிற்பங்களுக்கு சாமுத்ரிகா இலட்சணம் கிடையாது. ஆனால் தமிழகத்தின் குடைவரைக்கோயில்களில் இந்துப்பார்ப்பனியம் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பாடுதான் (மகேந்திரவர்மன் காலகட்டத்திலிருந்து என்கிறார் மயிலை சீனி; மேலும் பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் சமணர் காலத்தவை என்று சுட்டத்தவறவில்லை). சிலைகளைக் கவனித்தால் பார்ப்பனிய பித்தலாட்டம் புலப்படும். //
குடைவரை கோயில்களை சமணர்கள் மட்டும்தான் அமைக்க வேண்டுமா..?! முக்குடையுடன் கூடிய அருகரோ, பாம்புக்குடை கொண்ட பார்சுவநாதரோ, எதுவும் இல்லாமல் இரு கைககளையும் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும் பாகுபலியோ முருகன் சன்னிதியிலா தென்படுகிறார்கள்..?! இல்லை அந்தக் குன்றிலிருக்கும் சிக்கந்தர் தர்க்காவில் தென்படுகிறார்களோ..?!
// சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்; ஏனெனில் மொழி என்பதன் உச்சரிப்பில் இதை அணுகியிருந்தால் சரவணன் என்பது முழுக்கவும் மோசடி என்பதை நோக்கி நகர்ந்திருக்க முடியும். காரணம், சரவணன் என்ற வார்த்தை வைதீகச்சூழலில் புழங்குவதற்கு முன்பாகவே களப்பிரர்கால வரலாற்றில் கி,பி 250 லிருந்து- கி.பி 700 முடிய சிரவணன் என்ற வார்த்தை பரவலாக இருக்கிறது. சரவண-சிரவணனைப் பற்றி பெரியார்தள கட்டுரை பாலி-சமஸ்கிருத அடிப்படையில் இருப்பதைக் காண்க. (http://www.unmaionline.com/new/archives/96-unmaionline/unmai-2014/%E0%AE%AE%E0%AF%87-01-15/2005-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html) களப்பிரர் காலத்திற்கு பிந்தைய பகுதியில் தான் தமிழ் இராமாயணமும், பார்ப்பனிய பாசுபத சைவமும் உட்புகுகின்றன. இதற்குபிந்தைய ஏற்பாடுதன் சரவணப் பிரச்சாரம்! //
சரவணன், சுப்ரமணிய சுவாமி போன்ற வடமொழிப் பெயர்களை காட்டி முருகன் பார்ப்பனியன் என்று நிறுவமுடியாது, முருகன் சூரனை தண்டித்தவன் என்ற தொன்மத்தையும் மாற்றமுடியாது.. சங்கம் மருவிய காலத்து சமண இலக்கியங்களும் அதைக் கூறுவதை மேலே காட்டியிருக்கிறேன்..
// மேலும் சரவணன் என்று மட்டுமில்லை முருகன் கையிலும் வேல் எப்படி வந்தது? என்று பல விவாதம் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா முருகன் கோயிலும் வேல், முருகன் சிலை மீது சாத்திவைக்கப்படுகிறது. ஆனால் பழநி முருகன் கையில் தண்டம் இருக்கிறது. கையில் கம்பு உள்ள முருகன் எதைக் குறிக்கிறது? வேல் சாத்தப்படுவது எதைக் குறிக்கிறது?
இலக்கியங்களில் வேலன் முருகன் சார்பாக வேல் எடுத்து ஆடுகிற பூசாரி என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. தலைவி முருகனால் ஆட்கொள்ளப்படுகிற பொழுது பூசாரி தான் வெறியாட்டுதலில் ஈடுபடுகிறான். அவன் வேலன் என்று அழைக்கப்படுகிறான். சேவற்கொடி ஏற்றப்பட்டு முருகனுக்கு பூசை நடைபெறுகிறது. அப்படியானால் தண்டம் மற்றும் வேலின் மூலம் என்ன? இதில் வேல் உள்ளவன் காலத்தால் முந்தியவனா? இல்லை கம்பு உள்ள முருகன் காலத்தால் முந்தியவனா? //
கம்பின் உச்சியில் வேல்முனையை செருகினால் அது வேல்கம்பு.. இல்லாவிட்டால் அது வெறும் கம்பு.. பழனி ஆண்டவன் துறவு கோலத்தில் நிற்பவன், வேல் கம்பை விட வெறும் கம்பு பொருத்தமானது.. சிரவணராயிருந்தால் அதுவும் தேவையிருக்காது.. மலைக்கு கீழ் இருக்கும் ஆவினன்குடி முருகன் மயில்மேல் அமர்ந்து அபய ஹஸ்த முத்திரையுடன் இருக்கிறான்.. வேலை சாய்த்துதான் வைக்க முடியும்..
// இவ்வளவு சிக்கல் முருகனுக்கே இருக்கிறபொழுது சுப்புணி என்பதன் சூட்சுமம் என்ன? //
சிக்கல் முருகனுக்கோ, ’சுப்புணிக்கோ’ இல்லை..
\\ சூரனை தண்டிக்கும் குறிப்புகள் பார்ப்பனியம் புகுந்ததாக நீங்கள் கூறிய காலகட்டத்துக்கு முந்திய சங்கப்பாடல்களில் இருக்கும் போது இந்த தலைகீழ் பார்வை ஏன்..?! திருமுருகாற்றுபடை பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர்..?! \\
திருமுருகு கடைச்சங்க காலத்தில் வராது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பார்க்கவும். திருமுருகு, பரிபாடல், சீவக சிந்தாமணி எல்லாம் பிற்காலத்தியவை (முருகனின் பார்ப்பனியக் காலக்கோடு குறித்து நான் ஒரு கட்டுரையை சுட்டியிருந்தேன்; படிக்கிறேன் என்று சொன்னவர் இன்னும் இந்தப்பக்கம் திரும்பவில்லை!). நக்கீரர் காலம் குறித்த விவாதம் மயிலை சீனியின் புத்தகத்தில் இருக்கிறது! (களப்பிரர் கால தமிழகம்); மொத்தம் நான்கு நக்கீரரா? (சீனிவாச அய்யங்கார்), இரண்டு நக்கீரரா? (மயிலை சீனி), ஒரு நக்கீரரா? (இறையனார் கலம்பக பொழிப்புரைப்படி) என்பதை வாசித்து ஒரு முடிவிற்கு வரவும்.
\\ போகிற போக்கில் உவேசாவையும் விட்டுவைக்கவில்லை..\\
இராம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நச்சினார்க்கினியர் உரை, பழம்பெரும்பாடல் என்று இரு உதாரணங்களைச் சுட்டியிருக்கிறார். தொல்காப்பிய இலக்கணத்தை மறுமொழியாகக் கொடுத்திருக்கிறேன். இருவர் மனுவிற்கும் தனித்தனியாக பதில் எழுதுவது கடினம். பதிப்பித்தவரை பிராதில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை விவாதித்து தீர்க்க வேண்டியதுதான்.
\\ பாணிரண்டு என்று கூறப்படும் சிறு,பெரும்பாணாற்றுப்படை பாடல்களில், பாணர்கள் பாடினால் மன்னர்கள் பரிசில் கொடுப்பார்கள் என்றுதான் காட்டமுடியுமே தவிர வீடுபேற்றைத் தருவார்கள் என்றா காட்டமுடியும்..?! இவற்றில் ஏன் வீடுபேற்றைத் தேடுகிறீர்கள்..?!\\
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்! பரிசு கொடுப்பவனும் சூத்திரன்; பரிசு பெறுபவனும் சூத்திரன் என்கிற பொழுது வீடுபேற்றை அங்குதேட இயலாது என்பது இயல்புதான்!
\\ சாங்கியத்தில் ஏது சாமியாடுதலும், வெறியாட்டுதலும்..?!\\
சாமியாடுதலும் வெறியாட்டுதலும் கடவுள் இருப்பை உணர்த்துவதற்காக அல்ல. அப்படியானால் சாங்கியம் தானே சரி! இதைவிடுத்து ஆதிசங்கரர் அவிழ்த்து விடுகிற முருக-வழிபாடான கவுமாரத்திற்கும் தலைவன்-தலைவி தன் உணர்ச்சிநிலைக்கும் என்ன சம்பந்தம்?
// திருமுருகு கடைச்சங்க காலத்தில் வராது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பார்க்கவும். //
தொல்காப்பிய இலக்கணத்தை நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் எழுதிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஏன் பார்க்கவில்லை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..
//(முருகனின் பார்ப்பனியக் காலக்கோடு குறித்து நான் ஒரு கட்டுரையை சுட்டியிருந்தேன்; படிக்கிறேன் என்று சொன்னவர் இன்னும் இந்தப்பக்கம் திரும்பவில்லை!). நக்கீரர் காலம் குறித்த விவாதம் மயிலை சீனியின் புத்தகத்தில் இருக்கிறது! (களப்பிரர் கால தமிழகம்); மொத்தம் நான்கு நக்கீரரா? (சீனிவாச அய்யங்கார்), இரண்டு நக்கீரரா? (மயிலை சீனி), ஒரு நக்கீரரா? (இறையனார் கலம்பக பொழிப்புரைப்படி) என்பதை வாசித்து ஒரு முடிவிற்கு வரவும்.//
11-ம் திருமுறையில் திருமுருகு தவிர பிற 9 பதிகங்களையும் பாடியவர் தேவார கால நக்கீர நாயனார்.. நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர் என்று நேரடியாக தெளிவாக கூறவும்..
அம்பி தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு லாஜிக் இல்லாம பேசுராரு !
இந் நூலை [திருமுருகாற்றுப்படை] முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாலையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாக கொண்டு வந்தார்.ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. டாக்டர் உ. வே. சாமிநாதர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.” இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
//தொல்காப்பிய இலக்கணத்தை நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் எழுதிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஏன் பார்க்கவில்லை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..//
திருமுருகாற்றுபடையை எழுதியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்ற சங்க புலவர்.. அதை பதிப்பித்தவர்களின் கருத்துக்களை வைத்து அது சங்க இலக்கியமல்ல என்று வாதிடுவது அறிவுடமை ஆகாது..
// சாமியாடுதலும் வெறியாட்டுதலும் கடவுள் இருப்பை உணர்த்துவதற்காக அல்ல. அப்படியானால் சாங்கியம் தானே சரி!//
அப்படியா..?!!
// இதைவிடுத்து ஆதிசங்கரர் அவிழ்த்து விடுகிற முருக-வழிபாடான கவுமாரத்திற்கும் தலைவன்-தலைவி தன் உணர்ச்சிநிலைக்கும் என்ன சம்பந்தம்? //
சங்கரரையும் கவுமாரத்தையும் சங்க இலக்கியங்களுக்குள் ஏன் இழுத்துக் கொண்டுவருகிறீர்கள்.. வையாபுரிப்பிள்ளையை தெரியாத்தனமாக இழுத்துக்கொண்டுவந்து முழித்தது போதாதா..?! தலைவன்- தலைவி தன் உணர்ச்சி நிலைமைகள் தலைவியின் தாய்மார்களை எவ்வாறு கவலைக்குள்ளாக்குகின்றன என தலைவியின் வெறியாட்டுதல் குறித்து படித்தால் புரிந்து கொள்ளலாம்..
\\ வீடுபேறு என்பது வைதீக மரபு மட்டுமல்ல என்று சமணத்தையும் சரியாக காட்டுகிறீர்கள்.. சமணம், வைதிகம் இவற்றில் மட்டும்தான் வீடுபேறு சாத்தியமா..?! தமிழர்களுக்கு வீடுபேறு சிந்தனை எட்டாத சிந்தனையா..?!\\
தொல்காப்பியம் சுட்டுவதெல்லாம் அறம், பொருள், இன்பம் மட்டுமே. இதில் பேரின்பம் வீடுபேறாக சுட்டப்படுவது வைதிக மரபுகள் மற்றும் பவுத்த சமணத்தின் தாக்கத்தால் மட்டுமே. பெளத்தமும் சமணமும் பெண்களை இரண்டாம் நிலையாக கருதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் துறவு நிலை மோட்சம் பெற வழிகள். ஆனால் இந்துப்பார்ப்பனியமோ வீடுபேற்றை பார்ப்பனியத்தின் கீழ் இருத்துகிறது. மோட்சம் அடைவதற்கு அவதாரம் எடுக்கிற பித்தலாட்டம் பாரதத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது!
\\ சூரனும் சாகவில்லை, முருகனால் தண்டிக்கப்ப்பட்டு, ஆட்கொள்ளப்பட்டு மயிலானான் என்றால் முருகனின் அடியவர்கள் அவன் பதம் சேர விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள ஏன் வைதீக மரபு வந்தாக வேண்டும்..?! முருகன் அருளைப் பெற ஆற்றுப்படுத்தினால் அது எப்படி பார்ப்பனியப் பித்தலாட்டம் என்று புரியவில்லை.\\
ஆட்கொள்ளப்படுதல், மாபலியின் மண்டையை நசுக்குதல் போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் பார்ப்பானைத்தவிர, இந்திய சமூகத்தின் எந்த தொல்குடி சமூகத்திடமும் கிடையாது. சூரன் மயிலாகிறான் என்பதெல்லாம் சகிக்கவொண்ணாதவை. ஆரம்பத்தில் உங்கள் விவாதத்தில் சூர், அணங்கு என்று பேயைக் காட்டினீர்கள். ஆனால் இப்பொழுதோ சூரன் மயிலாகிறான் என்று சொல்கிறீர்கள்! இதைத்தான் அண்டப்புளுகு என்கிறோம்.
// தொல்காப்பியம் சுட்டுவதெல்லாம் அறம், பொருள், இன்பம் மட்டுமே. இதில் பேரின்பம் வீடுபேறாக சுட்டப்படுவது வைதிக மரபுகள் மற்றும் பவுத்த சமணத்தின் தாக்கத்தால் மட்டுமே.//
இதே தொல்காப்பியம்தான் இந்திரனும், வருணனும் மருத, நெய்தல் நில தெய்வங்கள் என்று கூறுகிறது.. அதெல்லாம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிவிட்டு இப்போது தொல்காப்பியம் கூறுவதால் தமிழன் வீடுபேற்றைப் பற்றி சிந்திக்ககூடாது என்று கண்டிசன் போடுவது கிறுக்குத்தனம்..
// பெளத்தமும் சமணமும் பெண்களை இரண்டாம் நிலையாக கருதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் துறவு நிலை மோட்சம் பெற வழிகள். //
அந்தக் குறிப்புகளை எங்கே படித்தீர்கள்.. பவுத்தமும் சமணமும் துறவுதான் மோட்சத்துக்கு வழி என்று அடம் பிடிக்கவில்லை.. இல்லறத்திலும் மனத்துறவுடன் மோட்சம் பெறலாம் என்றும் கூறுகின்றன.. துறவிகளாவதால் ஊர் ஊராய் திரிந்து சமூக, சமயத் தொண்டு செய்யும் சுதந்திரம் இருக்கும் என்பது ஒரு கூடுதல் வசதி..
// ஆனால் இந்துப்பார்ப்பனியமோ வீடுபேற்றை பார்ப்பனியத்தின் கீழ் இருத்துகிறது. மோட்சம் அடைவதற்கு அவதாரம் எடுக்கிற பித்தலாட்டம் பாரதத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது! //
தமிழன் கடவுள் அருளை மறுமையிலும் பெறுவது குறித்து சுயமாக சிந்திக்கத் தெரியாதவன் என்கிறீர்கள்..
// ஆட்கொள்ளப்படுதல், மாபலியின் மண்டையை நசுக்குதல் போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் பார்ப்பானைத்தவிர, இந்திய சமூகத்தின் எந்த தொல்குடி சமூகத்திடமும் கிடையாது.//
வெறியாட்டுதலும், சாமியாடுதலும் கூட ஆட்கொள்ளப்படுவதன் ஒரு வகைதான்..
// சூரன் மயிலாகிறான் என்பதெல்லாம் சகிக்கவொண்ணாதவை. ஆரம்பத்தில் உங்கள் விவாதத்தில் சூர், அணங்கு என்று பேயைக் காட்டினீர்கள். ஆனால் இப்பொழுதோ சூரன் மயிலாகிறான் என்று சொல்கிறீர்கள்! இதைத்தான் அண்டப்புளுகு என்கிறோம்.//
உங்களுக்கு சகிக்கமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்.. சூர் மா தடிந்து என்று சங்கப்பாடல்கள் இருந்து தொலைக்கின்றனவே.. சூர், அணங்கு என்று பேயை உங்களுக்கு வேறு யாராவது காட்டியிருப்பார்கள்.. முருகன் கோயிலுக்குப் போய் மயிலிடம், ஏன் தாத்தா மயிலான என்று கேளுங்கள்.. தாத்தாவா எவன்டா தாத்தா, நான் சூரன்டா என்று அகவி உச்சி மண்டையில் நச்சென்று கொத்தி வைக்கும்.. பிறகு எல்லாம் தெளிந்துவிடும்..
\\ குடைவரை கோயில்களை சமணர்கள் மட்டும்தான் அமைக்க வேண்டுமா..?! முக்குடையுடன் கூடிய அருகரோ, பாம்புக்குடை கொண்ட பார்சுவநாதரோ, எதுவும் இல்லாமல் இரு கைககளையும் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும் பாகுபலியோ முருகன் சன்னிதியிலா தென்படுகிறார்கள்..?! இல்லை அந்தக் குன்றிலிருக்கும் சிக்கந்தர் தர்க்காவில் தென்படுகிறார்களோ..?!\\
திருப்பரங்குன்றத்தில் இதுதான் கதை. அருகர் மட்டுமில்லை. அங்கெல்லாம் அசோக மரம் (பின்னி) இருக்கிறது. சைவக் கோயில்களில் அரச மரத்திற்கு என்ன சம்பந்தம்? சிலை மட்டுமில்லை மரம் கூட பார்ப்பனியத்தைக் காட்டிக்கொடுக்கும். எடுத்துக்காட்டாக தென்பரங்குன்ற உமையாண்டவர் சன்னதி, சமணக் கோயில் என்பது நிறுவப்பட்டிருக்கிறது (புலவர். சாந்தலிங்கம், திருப்பரங்குன்றம், கீற்று). மேலும் தொ.பரமசிவன் ஒரு பட்டியல்கொடுப்பார்; வெள்ளைச் சேலை அணிந்த சமணர்களின் வாக்யதேவி, சரஸ்வதியாக அறியப்படுகிறாள் (பார்ப்பனியம் தந்தை-மகள் புணர்ந்த கதையோடு சரஸ்வதியை பிறக்க வைத்தது!). இசக்கி மற்றும் பகவதி அம்மனும் சமண எச்சங்கள்; அய்யனார் சமணதெய்வமாக சிறுதெய்வ வழிபாட்டில் நிலைநிறுத்தப்படுகிறார். இப்படி பார்ப்பனிய துரோகங்களை நிறையச் சொல்லலாம்.
\\ சமணர்களான திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் சீவக சிந்தாமணியிலும், சிலப்பதிகாரத்திலும் முருகனை சூரனை தடிந்தவனாகவே குறிப்பாகப் பாடியிருக்கும் போது தென்றலுக்கு மட்டும் சூரனை தண்டிக்க பார்ப்பனியம் வேண்டியிருப்பது ஏனோ..?!\\
சூரனைத் தண்டிக்க பார்ப்பனியம் தான் தேவை. ஏனெனில் சூர் தடிந்த முருக என்ற சொற்றொடரை இரு தொடர் நிலைச் செய்யுள்களும் முருகாட்டுதலோடு, வெறியாட்டலோடு தொடர்புபடுத்தவில்லை. மாறாக சூர் தடிந்த முருகன் நிறுவனமயமாக்கப்படுகிறான்! பார்ப்பனியம் நிறுவனமயமாக்கப்படுதல் என்பதற்கு சமணமும் விதிவிலக்கல்ல. சான்றாக, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி களப்பிரர் கால இறுதிப்பகுதியான கி,பி. ஆறு மற்றும் ஏழில் எழுதப்படுகிறது. பாசுபதம் தமிழ்நாட்டில் கி,பி. ஐந்திலேயே புகுந்துவிடுகிறது. குப்தர் கால (கி.பி 200 லிருந்து கி,பி 500 முடிய) மகாபாரதம், குமார சம்பவத்தை விரிவாக பேசுகிறது. மகாபாரத புராண புளுகல்கள் உள்ளே நுழைந்ததாக வைத்துக்கொண்டால் நமக்கு மிஞ்சுவதற்கு ஒரு இலக்கியமும் இருக்காது. சிலப்பதிகார தொடர்நிலைச் செய்யுளில் வஞ்சிக்காண்டம் குன்றக்குரவையில் “செந்தில்” எல்லாம் வருகிறான் என்றால் குழந்தையிடம் கூட பார்ப்பனியம் பிடுங்கித் திங்க தயங்காது என்றுதான் தெரிகிறது. இளங்கோவடிகள் சமணராகப் பிறந்து சைவராக மாறியிருக்கக்கூடும் என்று வெள்ளந்தியாக தமிழ்பல்கலை நூல்கள் எழுதுகிற பொழுது கோவடி காவடி எடுத்ததற்கு பார்ப்பனியத்தின் நைச்சியம் தான் காரணம் என்பது எமது துணிபு!
// திருப்பரங்குன்றத்தில் இதுதான் கதை. அருகர் மட்டுமில்லை. அங்கெல்லாம் அசோக மரம் (பின்னி) இருக்கிறது. சைவக் கோயில்களில் அரச மரத்திற்கு என்ன சம்பந்தம்? சிலை மட்டுமில்லை மரம் கூட பார்ப்பனியத்தைக் காட்டிக்கொடுக்கும். //
அசோக, அரச மரங்களை சமணர்கள்தான் உருவாக்கிக் கொண்டிருந்தார்களா..?!
// சூரனைத் தண்டிக்க பார்ப்பனியம் தான் தேவை. ஏனெனில் சூர் தடிந்த முருக என்ற சொற்றொடரை இரு தொடர் நிலைச் செய்யுள்களும் முருகாட்டுதலோடு, வெறியாட்டலோடு தொடர்புபடுத்தவில்லை. மாறாக சூர் தடிந்த முருகன் நிறுவனமயமாக்கப்படுகிறான்! //
முழு முருக வழிபாட்டையும் பாடினால்தான் அவை செல்லுமாக்கும்..?!
// பார்ப்பனியம் நிறுவனமயமாக்கப்படுதல் என்பதற்கு சமணமும் விதிவிலக்கல்ல. சான்றாக, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி களப்பிரர் கால இறுதிப்பகுதியான கி,பி. ஆறு மற்றும் ஏழில் எழுதப்படுகிறது. //
சமணம் செழித்தோங்கிய அந்த கால கட்டத்தில், சைவ-வைணவ சமயங்களோடு மோதிக்கொண்டிருந்த காலத்தில் சமணம் பார்ப்பனியமயமாக்கப்பட்டது என்று உளறுவதற்கு துணிவு வேண்டும்.. அல்லது திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் உங்களை கைவிட்டுவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் புலம்புகிறீர்கள்..
// குப்தர் கால (கி.பி 200 லிருந்து கி,பி 500 முடிய) மகாபாரதம், குமார சம்பவத்தை விரிவாக பேசுகிறது. //
உங்களுக்கு இது வரை கைகொடுத்து வந்த சங்ககால பெரும்பாணாற்றுப்படை மகாபாரதத்தைப் பற்றியே பேசுகிறதே..:
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
முருகன் வடக்கேயும், பாரதம் தெற்கேயும் சுற்றுலா போய் வந்து கொண்டிருந்ததை அறிந்து விரக்தி அடைந்து புலம்பாதிருங்கள்..
// சிலப்பதிகார தொடர்நிலைச் செய்யுளில் வஞ்சிக்காண்டம் குன்றக்குரவையில் “செந்தில்” எல்லாம் வருகிறான் என்றால் குழந்தையிடம் கூட பார்ப்பனியம் பிடுங்கித் திங்க தயங்காது என்றுதான் தெரிகிறது. //
கவுண்டமணி போல நீங்களும் பெரிய அறிவாளிண்ணே..
// இளங்கோவடிகள் சமணராகப் பிறந்து சைவராக மாறியிருக்கக்கூடும் என்று வெள்ளந்தியாக தமிழ்பல்கலை நூல்கள் எழுதுகிற பொழுது கோவடி காவடி எடுத்ததற்கு பார்ப்பனியத்தின் நைச்சியம் தான் காரணம் என்பது எமது துணிபு! //
இளங்கோவடிகளின் மீதும் வசை பட ஆரம்பித்து விட்டீர்.. மயில்தான் உங்களுக்கு தெளிவையும் அமைதியையும் கொடுக்க வேண்டும்..
\\ சரவணன், சுப்ரமணிய சுவாமி போன்ற வடமொழிப் பெயர்களை காட்டி முருகன் பார்ப்பனியன் என்று நிறுவமுடியாது, முருகன் சூரனை தண்டித்தவன் என்ற தொன்மத்தையும் மாற்றமுடியாது.. சங்கம் மருவிய காலத்து சமண இலக்கியங்களும் அதைக் கூறுவதை மேலே காட்டியிருக்கிறேன்.\\
தாங்கள் தொன்மம் என்று சொல்வதை ஆங்கிலத்தில் Myth என்று அழைத்துப்பாருங்களேன். பார்ப்பனிய அரசியல் புலப்படும்!
\\கம்பின் உச்சியில் வேல்முனையை செருகினால் அது வேல்கம்பு.. இல்லாவிட்டால் அது வெறும் கம்பு.. பழனி ஆண்டவன் துறவு கோலத்தில் நிற்பவன், வேல் கம்பை விட வெறும் கம்பு பொருத்தமானது..\\
துறவிற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பேரின்பக் காதலைப் பேசுவதற்குத்தான் இறையனார் கலம்பகமே படைக்கப்பட்டது. தெய்வங்களின் நாயக-நாயகி பாவம், மனிதர்கள் தெய்வங்கள் மீது கொள்கிற காதல் எல்லாம் பார்ப்பனியத்தின் வேலை. இதில் முருகனின் துறவு நிலைக்கு என்ன காரணம்?
\\சிரவணராயிருந்தால் அதுவும் தேவையிருக்காது.. மலைக்கு கீழ் இருக்கும் ஆவினன்குடி முருகன் மயில்மேல் அமர்ந்து அபய ஹஸ்த முத்திரையுடன் இருக்கிறான்.. வேலை சாய்த்துதான் வைக்க முடியும்..\\
அபய ஹஸ்த முத்திரை! இப்படி ஏதாவது அல்டா புல்டா வாசகங்களை எடுத்துவிட்டால் தானே பார்ப்பனியத்தின் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும். உப தகவலாக, திருமுருகு அபயஹஸ்த முத்திரை குத்தப்பட்ட திரு ஆவினன்குடியைத்தான் பேசுகிறதாமே!
// தாங்கள் தொன்மம் என்று சொல்வதை ஆங்கிலத்தில் Myth என்று அழைத்துப்பாருங்களேன். பார்ப்பனிய அரசியல் புலப்படும்! //
சூரன் என் பாட்டன் என்று சொல்வது மட்டும் அறிவியல் உண்மையாக்கும்..?!
// துறவிற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பேரின்பக் காதலைப் பேசுவதற்குத்தான் இறையனார் கலம்பகமே படைக்கப்பட்டது. தெய்வங்களின் நாயக-நாயகி பாவம், மனிதர்கள் தெய்வங்கள் மீது கொள்கிற காதல் எல்லாம் பார்ப்பனியத்தின் வேலை. இதில் முருகனின் துறவு நிலைக்கு என்ன காரணம்? //
போகர் என்ற சிவயோகியிடம் கேட்டால் விவரமாக சொல்லக்கூடும்.. போகர் சமாதியும் அங்கேதான் இருக்கிறது.. சூர், அணங்கு போன்ற பேய்களை கண்ட தங்களுக்கு போகர் காட்சி தராமலா போய்விடுவார்..!
// அபய ஹஸ்த முத்திரை! இப்படி ஏதாவது அல்டா புல்டா வாசகங்களை எடுத்துவிட்டால் தானே பார்ப்பனியத்தின் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும். உப தகவலாக, திருமுருகு அபயஹஸ்த முத்திரை குத்தப்பட்ட திரு ஆவினன்குடியைத்தான் பேசுகிறதாமே!//
தமிழில் சொல்வதென்றால் “யாமிருக்க பயமேன்” என்று ஆசி வழங்குவதுதான் அந்த முத்திரை.. திரு ஆவினன்குடி ஒரு அறுபடை வீடேயல்ல என்று கூற வருகிறீர்களோ..?!
சுப்ரமணிய சாமி வந்துவிட்டதால் தமிழ்க்குடி மரபான வெறியாட்டுதல் நின்றுவிட்டதா என்ற அம்பியின் கேள்வி இப்படி போகிறது;
\\ சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் பின்னாளில் வந்ததால் முருகனுக்கு முருகனே சம்பந்தமில்லாதவன் என்று எப்படி கூறமுடியும்.. வெறியாட்டுக்கு இணையான அலகு குத்துதல், தீ மிதித்தல் என்றும் வெற்றி வேல் முருகா என விளித்துக் கொண்டும் பரவசத்தில் செல்லும் அடியார்களை சுப்ரமணிய சுவாமியாகப்பட்டவர் தடுத்து நிறுத்திவிட்டாரா..?!\\
வினவின் மற்றொரு பதிவில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து மக்களைச் சூறையாடுகின்றன என்கிற கேள்வியை விளக்க இயலுமா என்று கேட்டார் அம்பி. கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.
அமெரிக்கா ஏகாதிபத்தியம் நம் ஆற்றுத்தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கலரை மாற்றி நம்மிடமே கோக்கு என்று விற்கிற பொழுது கம்யுனிஸ்டுகள் ஏகாதிபத்தியம், மறுகாலனியாதிக்கம் என்று மக்களத் திரட்டிப்போராடுகிறார்கள். ஆனாலும் ஆளும் வர்க்க அல்லக்கைகளும் அம்பிகளும் (நீங்கள் அல்லர்; நீங்கள் அடுத்த பாராவில் வருகிறீர்கள்) காசு இருக்கவன் வாங்கி குடிக்கவேண்டியதுதானே? அவன் என்ன உன்னைத் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்றா சொன்னான்? என்று கேட்கிறார்கள்.
ஏகாதிபத்தியம் மக்களை இப்படிச் சுரண்டுகிற பொழுது, பார்ப்பனியம் முருகனை சுப்ரமணியனாக்கி காசு இருக்கவன் கோக்குகுடி, கடவுள் நம்பிக்கை இருக்கவன் சுப்ரமணியக் கும்பிடு என்று சொல்கிறது; அதுமட்டுமில்லாமல் உன்னை தண்ணியைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தரகுமுதலாளிவர்க்கம் சொல்வதைப்போல அம்பி அவர்கள் சுப்ரமணி சுவாமி வெறியாட்டுதலான அலகுத்துதல், தீ மிதித்தலைத் தடுத்தாரா? என்று கேட்கிறார். அம்பியின் இத்தரகுத்தனத்தைக் கண்டிப்பதோடு அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.
இதுபோக, சச்சின், ஐஸ்வர்யா, கிருத்திக் போன்ற மேட்டுக்குடிகள் விளம்பரத்தில் நடிக்கிற பொழுது கோக்கை விழுங்காமல் வாய்க்குள் குறிப்பிட்ட நேரம் வைத்திருப்பதற்கு தனித்தொகையாம்! ஏகாதிபத்தியத்தில் சிலர் இவ்வாறு பொறுக்கித் திங்கிற பொழுது, சுப்ரமணிக்கு விளம்பரம் கொடுக்கிற பார்ப்பான்கள் யாரும் அலகு குத்துவதோ அல்லை தீ மிதிப்பதோ கிடையாது. விநாயகர் ஊர்வலம் என்றாலும் அதைத் சூத்திரன் தான் தூக்கிச் சுமக்க வேண்டும்.
ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை தொழிலாளிகள் தான் சூத்திரர்கள். பார்ப்பனியத்தைப் பொறுத்தவரை சூத்திரர்கள்தான் தொழிலாளிகள். இதற்குக்காரணமாக இருக்கிற தரகுவர்க்கமும் பார்ப்பனிய சுப்ரமணிய சுவாமியும் அதற்குப் பல்லக்குத் தூக்குகிற அம்பியும் தூக்கி எறியப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?
// வினவின் மற்றொரு பதிவில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து மக்களைச் சூறையாடுகின்றன என்கிற கேள்வியை விளக்க இயலுமா என்று கேட்டார் அம்பி. கீழ்க்கண்டவாறு விளக்கலாம். //
அங்கே நான் கேட்டது அந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான்.. (”சங்க கால கவிஞர்கள் வெறும் இன்பவாத கவிராயர்கள் இல்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.. மற்ற தோழர்களின் கருத்து என்ன..?! லாபவெறியானது பார்ப்பனீயத்துடன் கைகோர்த்துதான் ஆப்ரிக்காவையும் அரேபியாவையும் சுரண்டுகிறது என்று ஒரு இந்துமத உதாரணத்துடன் நிறுவக்கூடிய கற்பனை வளம் படைத்த தோழர் தென்றலின் கருத்து என்னவோ..?!”)
உங்களிடமிருக்கும் பதிலுக்கு தக்கவாறு கேள்விகளை திரித்து இங்கே ஏன் விளக்குகிறீர்கள்..?!!!
//ஏகாதிபத்தியம் மக்களை இப்படிச் சுரண்டுகிற பொழுது, பார்ப்பனியம் முருகனை சுப்ரமணியனாக்கி காசு இருக்கவன் கோக்குகுடி, கடவுள் நம்பிக்கை இருக்கவன் சுப்ரமணியக் கும்பிடு என்று சொல்கிறது; அதுமட்டுமில்லாமல் உன்னை தண்ணியைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தரகுமுதலாளிவர்க்கம் சொல்வதைப்போல அம்பி அவர்கள் சுப்ரமணி சுவாமி வெறியாட்டுதலான அலகுத்துதல், தீ மிதித்தலைத் தடுத்தாரா? என்று கேட்கிறார். அம்பியின் இத்தரகுத்தனத்தைக் கண்டிப்பதோடு அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.//
பார்ப்பனர்கள் முருகனை சுப்ரமணிய சுவாமி என்று அழைத்ததால் முருகன் அம்பியாகிவிடவில்லையே என்று நான் சொன்னால், என்னை தரகு வேலை பார்ப்பதாக குற்றம் கூறுகிறீர்கள்.. பொது சிவில் சட்டம் பதிவில் ஷரியத் சட்டங்களுக்கு நீங்கள் தரகு வேலை பார்ப்பவர் என்ற தொனியில் உங்களை குற்றம் சாட்டுகிறவர்களுக்கு தெளிவான பதிலைக் கூறிவிட்டு என் தரகுத்தனத்தைப் பற்றி பேச வாருங்கள்..
// ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை தொழிலாளிகள் தான் சூத்திரர்கள். //
ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை மக்கள் எல்லோருமே அஃறிணைகள்..
\\ பொது சிவில் சட்டம் பதிவில் ஷரியத் சட்டங்களுக்கு நீங்கள் தரகு வேலை பார்ப்பவர் என்ற தொனியில் உங்களை குற்றம் சாட்டுகிறவர்களுக்கு தெளிவான பதிலைக் கூறிவிட்டு என் தரகுத்தனத்தைப் பற்றி பேச வாருங்கள்..\\
இந்த வாதம் தப்புலித்தனமானது. ஏனெனில் ஷரியத் சட்டத்திற்கு தரகுவேலை பார்க்கிறவன் என்று என்னை வைத்துக்கொள்ளுங்கள். ஷரியத் சட்டம் மக்கள் சனநாயகத்திற்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்த வாசகர் என் மீது அப்படியொரு சந்தேகத்தை எழுப்புவாரேயானால் அவர் நான் விரும்புகிற இலட்சியத்திற்கு அணுக்கமானவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது ஒரு மகிழ்வான விடயம். ஆக என் தரப்பில் இருந்து கூட்டு உழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக பேசுபொருளில் விவாதத்தை கிளப்புவது; நேர் நின்று பரிசீலிப்பது.
இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் மக்கள் என்றைக்குமே சரியாக இருக்கிறார்கள். அதனால் தான் கம்யுனிசத்தை மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் மார்க்சிய ஆசான்கள். ஆனால் தந்திரமாக கோர்த்துவிடுகிற தாங்கள் சுப்ரமணியசாமி தமிழ்கலாச்சாரத்தின் எதிர்குறியீடு என்பதற்கு மாறாக பார்ப்பனியத்திற்கு குடைபிடிக்கிறீர்கள். அம்பி என்ற பெயரிலேயே விவாதிக்கிற பொழுது தங்களிடையே ஒரு நேர்மையான சந்தர்ப்பவாதம் இருப்பதால் எனக்குள்ள நெருக்கடி உங்களுக்கு கிடையாது. ஆகையால் இதையே ஒரு சலுகையாக எடுக்காமல் உங்களுடைய தரகுத்தனத்திற்கு பதில் சொல்லவும்.
// இந்த வாதம் தப்புலித்தனமானது. ஏனெனில் ஷரியத் சட்டத்திற்கு தரகுவேலை பார்க்கிறவன் என்று என்னை வைத்துக்கொள்ளுங்கள். ஷரியத் சட்டம் மக்கள் சனநாயகத்திற்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்த வாசகர் என் மீது அப்படியொரு சந்தேகத்தை எழுப்புவாரேயானால் அவர் நான் விரும்புகிற இலட்சியத்திற்கு அணுக்கமானவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது ஒரு மகிழ்வான விடயம். ஆக என் தரப்பில் இருந்து கூட்டு உழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக பேசுபொருளில் விவாதத்தை கிளப்புவது; நேர் நின்று பரிசீலிப்பது.
இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் மக்கள் என்றைக்குமே சரியாக இருக்கிறார்கள். அதனால் தான் கம்யுனிசத்தை மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் மார்க்சிய ஆசான்கள். ஆனால் தந்திரமாக கோர்த்துவிடுகிற தாங்கள் சுப்ரமணியசாமி தமிழ்கலாச்சாரத்தின் எதிர்குறியீடு என்பதற்கு மாறாக பார்ப்பனியத்திற்கு குடைபிடிக்கிறீர்கள். அம்பி என்ற பெயரிலேயே விவாதிக்கிற பொழுது தங்களிடையே ஒரு நேர்மையான சந்தர்ப்பவாதம் இருப்பதால் எனக்குள்ள நெருக்கடி உங்களுக்கு கிடையாது. ஆகையால் இதையே ஒரு சலுகையாக எடுக்காமல் உங்களுடைய தரகுத்தனத்திற்கு பதில் சொல்லவும்.//
தரகுத்தனம், தப்புலித்தனம் (என்ன பொருள் ?!) என்று வசவுகளை அள்ளி வீசும் உரிமை உங்களுக்கு இருக்கிறதாம் ஆனால் உங்களிடம் அதே குற்றச்சாட்டை வைப்பவர்களிடம் உங்கள் இதயத்தை பிளந்துகாட்டி நம்பச் சொல்கிறீர்கள்..! முருகன் பார்ப்பனியன் ஆகவில்லை என்று ஆதாரங்களுடன் வாதிடும் நான் தரகுத்தனம் செய்பவன் என்றும் நம்பச் சொல்கிறீர்கள்..!
\\தரகுத்தனம், தப்புலித்தனம் (என்ன பொருள் ?!) என்று வசவுகளை அள்ளி வீசும் உரிமை உங்களுக்கு இருக்கிறதாம் ஆனால் உங்களிடம் அதே குற்றச்சாட்டை வைப்பவர்களிடம் உங்கள் இதயத்தை பிளந்துகாட்டி நம்பச் சொல்கிறீர்கள்..! \\
இது உங்களுடைய குறுகிய மனப்பான்மை! என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் ஷரியத் சட்டம் சனநாயகத்திற்கு விரோதமானது என்று தெளிவாகத்தானே வைக்கிறார்! இது நல்ல விசயம் தானே! இதில் என்னை அடுத்தவர்கள் நம்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே ஒரு முறை அருந்ததி ராயின் பெயரிலே ராய் இருக்கிறது! அவர் எப்படி அம்பேத்கரின் சாதியை ஒழிப்பது எப்படி என்ற புத்தகத்திற்கு அணிந்துரை எழுத இயலும் என்று கேட்டவர் தாங்கள் என்று ஞாபகம். சமூக அநீதிக்காக போராடுகிறவர்கள் பார்ப்பனர்களிடம் எப்பொழுதும் தடையில்லா வில்லங்க சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவகையான மனுநீதி? இதற்கு மாறாக தாங்கள் என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாலும் வெள்ளிடைமலையாக ‘அம்பி’ என்று அம்மணமாக நிற்கிறீர்கள். ஜீனியர் புஷ் உங்களிடம் தானே இருக்கிறார்? ஆக ‘நான் அயோக்கியன் என்றால் நீயும் அயோக்கியன்’ என்கிற இந்த தப்புலித்தனத்தை வன்மையாகக் கண்டிப்பது அவசியம் தானே!
//என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் ஷரியத் சட்டம் சனநாயகத்திற்கு விரோதமானது என்று தெளிவாகத்தானே வைக்கிறார்! இது நல்ல விசயம் தானே! இதில் என்னை அடுத்தவர்கள் நம்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? //
நல்ல விசயம் என்றால் பிறகு ஏன் அய்யா அப்படி எதிர் வாதம் செய்து கொண்டிருந்தீர்கள்..?!
// ஆக ‘நான் அயோக்கியன் என்றால் நீயும் அயோக்கியன்’ என்கிற இந்த தப்புலித்தனத்தை வன்மையாகக் கண்டிப்பது அவசியம் தானே! //
ஆக ஒரு அயோக்கியன் இன்னோரு அயோக்கியனைப் பார்த்து அயோக்கியன் என்று சொல்வதற்கு தென்றலாக இருந்தாகவேண்டும், யோக்கியனாக இருக்கத் தேவையில்லை..?!
\\முருகன் பார்ப்பனியன் ஆகவில்லை என்று ஆதாரங்களுடன் வாதிடும் நான் தரகுத்தனம் செய்பவன் என்றும் நம்பச் சொல்கிறீர்கள்..!\\
இது வரை என்ன ஆதாரங்களை வைத்துள்ளீர்கள்? பட்டியலிடுகிற கேள்விகளுக்கு உங்களது மறுமொழி என்னவாக இருந்தது?
1. முருகனுக்கும் சுப்புணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட பொழுது முருகனுக்கும் சுப்புணிக்கும் சிக்கலில்லை என்றுதான் பதில் வந்ததே தவிர எப்படி பார்ப்பனியமயமானன் என்பதை தொடவேயில்லை.
2. அசுரரை வென்ற இடம்; தேவரைக்காத்த இடம் என்பதற்கு பதில் சொல்லச்சொன்னால் தமிழ் மக்கள் வணங்குகிற இந்திரனைத்தான் முருகன் காப்பாற்றினான்; இதில் என்ன தவறு என்று கேட்டீர்கள்?
3. முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று கேட்டதற்கு பூணுல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை என்றீர்கள்.
4. முருகன் சூரனை வதம் செய்தல் நிகழ்விற்கும் வெறியாட்டுதல் நிகழ்வு குறிப்பிடுகிற தன் உணர்ச்சிபாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற பொழுது திருமுருகில் இருந்து சீவக சிந்தாமணி (இதற்கு பதில் எழுதுகிறேன்) வரை சூர் தடிந்த முருகன் என்பதைத்தான் எடுத்துக்காட்ட முடிகிறதே தவிர அகப்பாடல்களிலிருந்து தன் உணர்ச்சியை தனியாகப்பிரித்து எடுத்துவிட்டு சூரனை வதம் செய்யப்பட்டான் என்ற “பார்ப்பனிய நிறுவனமயமாதல்” என்பதற்கு தற்பொழுதுவரை பதில் இல்லை.
5. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன்பிறந்தான் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு ஒரு வரியில் நகர்கிறீர்கள்.
6. முருகன் சமணத்தோடு தொடர்புபடுத்தி குறிப்புகள் கொடுப்பதை பரிசீலிக்க மறுத்துவிட்டு; இப்பொழுது சிந்தாமணியிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் எடுத்துகாட்டுகள் தருகிறீர்கள்!
மேற்கண்ட ஆறுவாதங்களில் முருகன் பார்பனியம் ஆக்கப்படவில்லை என்பதற்கு தாங்கள் கொடுத்த அருள்வாக்கு இவைகள் மட்டும்தான்! இது பார்ப்பனியத் தரகுத்தனம் அன்றி வேறென்ன?
// இது வரை என்ன ஆதாரங்களை வைத்துள்ளீர்கள்? //
மீண்டும் நிதானமாக படித்துப் பார்த்தால் புரியும்..
// பட்டியலிடுகிற கேள்விகளுக்கு உங்களது மறுமொழி என்னவாக இருந்தது?
1. முருகனுக்கும் சுப்புணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட பொழுது முருகனுக்கும் சுப்புணிக்கும் சிக்கலில்லை என்றுதான் பதில் வந்ததே தவிர எப்படி பார்ப்பனியமயமானன் என்பதை தொடவேயில்லை. //
முருகன் பார்ப்பனியனானான் என்று நீங்கள்தான் கூவிக் கொண்டிருக்கிறீர்கள்.. நான் ஏன் தொடவேண்டும்..?!
// 2. அசுரரை வென்ற இடம்; தேவரைக்காத்த இடம் என்பதற்கு பதில் சொல்லச்சொன்னால் தமிழ் மக்கள் வணங்குகிற இந்திரனைத்தான் முருகன் காப்பாற்றினான்; இதில் என்ன தவறு என்று கேட்டீர்கள்? //
இந்திரனை ஏன் தமிழர்கள் வணங்கினார்கள் என்று தொல்காப்பியரிடம் போய் கேட்கவேண்டியதுதானே..
// 3. முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று கேட்டதற்கு பூணுல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை என்றீர்கள். //
முருகனில் பூணூலை கழற்றிவிட்டு வணங்கிக் கொள்ளுங்கள்.. வேல் முருகன் அருகனாகிவிடப் போகிறானா என்ன..?!
// 4. முருகன் சூரனை வதம் செய்தல் நிகழ்விற்கும் வெறியாட்டுதல் நிகழ்வு குறிப்பிடுகிற தன் உணர்ச்சிபாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற பொழுது திருமுருகில் இருந்து சீவக சிந்தாமணி (இதற்கு பதில் எழுதுகிறேன்) வரை சூர் தடிந்த முருகன் என்பதைத்தான் எடுத்துக்காட்ட முடிகிறதே தவிர அகப்பாடல்களிலிருந்து தன் உணர்ச்சியை தனியாகப்பிரித்து எடுத்துவிட்டு சூரனை வதம் செய்யப்பட்டான் என்ற “பார்ப்பனிய நிறுவனமயமாதல்” என்பதற்கு தற்பொழுதுவரை பதில் இல்லை. //
சூர் தடிந்த முருகனைத்தானே வெறியாட்டு நிகழ்வுகளில் வணங்குவதாக சங்கப்பாடல்கள் கூறுகின்றன.. இதை எத்தனை முறை சொல்வது..?!
// 5. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன்பிறந்தான் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு ஒரு வரியில் நகர்கிறீர்கள். //
தமிழர்கள் நம்பிக்கை அதுதான், முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் என்று நீங்கள் உங்கள் ஆராய்சித்திறமையால கண்டுபிடித்து கூறினாலும் செவ்வாய் கிரகத்தில்தான் சிவன் நெற்றிக்கண்ணை திறந்திருப்பார் என்று கூறிவிட்டு போகப்போகிறார்கள்..
// 6. முருகன் சமணத்தோடு தொடர்புபடுத்தி குறிப்புகள் கொடுப்பதை பரிசீலிக்க மறுத்துவிட்டு; இப்பொழுது சிந்தாமணியிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் எடுத்துகாட்டுகள் தருகிறீர்கள்! //
நீங்கள் கொடுத்த கவைக்குதவாத குறிப்புகளை வைத்து நீங்களே மகிழ்ந்து கொள்ளவேண்டியதுதான்.. சமணர்களே சூர் தடிந்த முருகன் என்று சங்கம் மருவிய, சமணம் உச்சத்தில் இருந்த, காலத்தில் பாடியதைக் காட்டினாலும் விதண்டாவாதத்தை தொடரும் அளவுக்கு இருக்கிறது உங்கள் தப்புலியில்லாத்தனம்..
// மேற்கண்ட ஆறுவாதங்களில் முருகன் பார்பனியம் ஆக்கப்படவில்லை என்பதற்கு தாங்கள் கொடுத்த அருள்வாக்கு இவைகள் மட்டும்தான்! இது பார்ப்பனியத் தரகுத்தனம் அன்றி வேறென்ன? //
முருகனை பார்ப்பனியன் என்று கூறி தமிழர்களிடமிருந்து முருகனையும், சங்க இலக்கியங்களையும் பிடுங்கி எறிய எத்தனிக்கும் நீங்கள் யாருக்கு தரகு வேலை பார்க்கிறவராக இருக்கக்கூடும் என்பதும் ஓரளவுக்கு புரிகிறது..
\\ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை மக்கள் எல்லோருமே அஃறிணைகள்..//
அந்த ஏகாதிபத்தியத்தை பார்ப்பனியம் விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.அது திணிக்கும் உலகமயமாக்க,தாராளமயமாக்க,தனியார்மயமாக்கல் இட ஒதுக்கீட்டையும் சமூக நீதியையும் குழி தோண்டி புதைப்பதால் அந்த தாராளமயமாக்கல் கொள்கைகள் பார்ப்பனிய ஆதிக்க நலன்களுக்கு உகந்ததாக இருக்கின்றன.நாட்டின் வளங்களை தங்கு தடையின்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவும் ,தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி காரியம் முடிந்தவுடன் கசக்கி தூக்கி எறியவும் ,மின்சாரம்.தண்ணீர் முதலான வளங்களை வழங்காமல் சிறு தொழில்களை நசுக்கி விட்டு அவற்றை வாரி வழங்கி பன்னாட்டு தொழில் நிறுவனங்கள கொழுக்கவும் பார்ப்பனியம் தனது ஊடக பரப்புரை வலுவால் துணை நிற்கிறது.இந்த அயோக்கியத்தனங்களை தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற பெயரில் நியாயப்படுத்துவதில் பார்ப்பனிய பரப்புரை முன்னிலை வகிக்கிறது.
திப்பு,
இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்று கூறும் தென்றலின் நிலைப்பாடுதான் உங்களுக்கும் என்றால், அரபு நாடுகளும், பாக்,பங்களாதேஷ் நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடப்பதற்கு இஸ்லாம்தான் காரணம் என்று கூறமுடியுமா..?!
அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள்தான் ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களவாணிகள் .மக்கள் அல்ல.அந்நாடுகளின் மக்கள் எப்போதுமே ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்கள்.
இத்தாலிய, பிரஞ்சு,பிரித்தானிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா லிபியாவின் உமர் முக்தார், ஈராக்கின் முகமது பர்சாஞ்சி என ஆரம்பித்து இன்றைய பாலசுதீன விடுதலை போராட்டம்,அரபு வசந்தம் வரை மிக நீண்டதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அம்மக்கள்.அந்த போராட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை.மாறாக அத்தகைய போராட்டங்களை ஊக்குவிப்பதாகவே இசுலாமிய நெறிகள் உள்ளன.அநீதியை எதிர்த்து புனிதப்போர் நடத்த சொல்லும் மார்க்கம் அது.அநியாயக்கார அரசனின் முன்னால் உயிருக்கு அஞ்சாமல் நீதியை,நியாயத்தை எடுத்து சொல்வதுதான் ஆக சிறந்த புனிதப்போர் என்கிறது இசுலாம்.
அதனால்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் ஆயுதம் ஏந்திய அந்த தலைவர்களில் ஆகப்பெரும்பான்மையானோர் இசுலாமிய மத கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.அவ்வளவு ஏன் அந்த போர்களில் முசுலிம்களின் போர் முழக்கமே [ Battle cry ] ”அல்லாஹு அக்பர் ” என்பதாகத்தான் இருந்தது.
அப்புறம் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுதான் உங்கள் பதிலா.பாருங்கள் நீங்கள் இசுலாமிய மதத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு முறையாக பதில் சொல்கிறேன்.இது விவாத நேர்மை.எனது விளக்கத்தை நீங்கள் ஏற்பதும் மறுப்பதும் பிரச்னை இல்லை.
ஒன்று பார்ப்பனர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் என ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் அல்லது குற்றச்சாட்டு உண்மை என ஏற்கவேண்டும்.நீங்களோ விவாதத்தை மடை மாற்றி விட்டு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்க முயல்கிறீர்கள்.சரி,வந்த சண்டையை விடுவானேன்.அதையும் பார்க்கலாம்.
\\இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்று கூறும் தென்றலின் நிலைப்பாடுதான் உங்களுக்கும் என்றால்//
சனாதன வர்ணாசிரம தர்மத்தின் அதாவது நால்வர்ண சாதிய கட்டமைப்பின் மறுபெயர்தானே இந்து மதம்.வர்ணாசிரம தர்மத்தின் நோக்கமே பார்ப்பனிய ,சாதிய ஆதிக்க நலன்களை பாதுகாப்பதுதான் என்பது வெள்ளிடை மலை.ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.
// அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள்தான் ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களவாணிகள் .மக்கள் அல்ல.அந்நாடுகளின் மக்கள் எப்போதுமே ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்கள்.//
அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள் பார்ப்பனர்களா..?! அந்நாடுகளின் மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்களோ இல்லையோ கையில் ஒரு குச்சியைக் கூட ஏந்தி ஏகாதிபத்திய இயற்கைவள-பொருளாதார சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடத்தமுடியாது.. மதத்தை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் நடத்தவேண்டுமானால் அனுமதிக்கப்படுவார்கள்..
// இத்தாலிய, பிரஞ்சு,பிரித்தானிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா லிபியாவின் உமர் முக்தார், ஈராக்கின் முகமது பர்சாஞ்சி என ஆரம்பித்து இன்றைய பாலசுதீன விடுதலை போராட்டம்,அரபு வசந்தம் வரை மிக நீண்டதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அம்மக்கள்.//
சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா என்று யாரைச் சொல்கிறீர்கள்..?! 100 ஆண்டுகளுக்கு முன் தன்னை மகதி (mahdi) என்று கூறிக்கொண்டவரையா..?! வஹாபி முல்லாக்கள் அவரை ஆதரித்தார்களா..?!
உமர் முக்தார் இத்தாலிய ஆக்ரமிப்பு படைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன எதிர்த்து போராடியவர்.. இன்றைய ஏகாதிபத்தியச் சுரண்டலை லிபியாவில் எதிர்த்தது கடாபியின் சொந்த சுரண்டல்.. அவரை வீழ்த்தியது அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட லிபிய கலகம்.. ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒரு குழப்பக்கதையாகவே லிபியாவில் இருக்கிறது..
ஈராக்கின் முகமது பர்சாஞ்சி ஒரு குர்து முசுலீம்.. அன்றைய பிரிட்டீசுகாரனே பரவாயில்லை என்ற அளவுக்கு குர்துகளை ஒடுக்குவதில் யார் முன்னிலை என்ற போட்டி ஈராக்,சிரியா,துருக்கி, ஈரான் நாடுகளுக்கிடையே அன்று போல் இன்றும் நிலவுகிறது.. இது போதாதென்று ISIS காலீபா குர்துகளை அமெரிக்காவிடம் முழுமையாக தள்ளிவிடும் பணியை செவ்வனே செய்து வருகிறார்..
பாலஸ்தீனத்தைப் பற்றி பேசாமலேயே இருப்பது நல்லது.. அரபு நாடுகள் இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ஒன்று சேரமாட்டார்கள்.. அதற்குள் அமெரிக்காவும், இசுரேலும் தாமாகவே சிதறினாலும் சிதறலாம்..
// அந்த போராட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை. //
அவர்களை ஒடுக்குபவர்களுக்கும் இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை.. கருவியாகவும், திசைதிருப்பவும் கூட பயன்படுத்தப்படுகிறது..
//மாறாக அத்தகைய போராட்டங்களை ஊக்குவிப்பதாகவே இசுலாமிய நெறிகள் உள்ளன.//
மதத்தைக் காக்கும் ஜிகாத் என்றால் மட்டும்..
// அநீதியை எதிர்த்து புனிதப்போர் நடத்த சொல்லும் மார்க்கம் அது.அநியாயக்கார அரசனின் முன்னால் உயிருக்கு அஞ்சாமல் நீதியை,நியாயத்தை எடுத்து சொல்வதுதான் ஆக சிறந்த புனிதப்போர் என்கிறது இசுலாம்.//
அது காபிர்களை மத அடிப்படையில் எதிர்க்கமட்டும்.. 6-வது காலீபா யஜித் பின் மூவாவியா, நீதி-நியாயம் என்று போராடிய இமாம் ஹுசைனையும் அவரது ஆதரவாளர்களையும் படுகொலை செய்த போது ஒரு காக்காவும் இமாம் ஹுசைனுக்கு ஆதரவாக வரவில்லை..
// ஒன்று பார்ப்பனர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் என ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் அல்லது குற்றச்சாட்டு உண்மை என ஏற்கவேண்டும்.//
குற்றச்சாட்டில் பார்ப்பனீயம்,பார்ப்பனீயர்கள் என்றீர்கள்.. இப்போது பார்ப்பனர்கள் என்கிறீர்கள்.. கீழே இந்துக்கள் என்றும் கூறுகிறீர்கள்.. வசதிக்கேற்ப பார்ப்பனீயர்கள்-இந்துக்கள்-பார்ப்பனர்கள் என்று மாற்றி மாற்றி எதை வேண்டுமாயினும் பயன்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது..
உங்கள் வசதிக்கேற்ப பா-இ-பா என்று வைத்துக்கொள்வோமா..?!
உங்கள் குற்றசாட்டில் கூறும் பார்ப்பனீய ஊடகங்கள் எவை..?!
பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் செக்யூலர் ஊடகங்கள் (இந்து எதிர்ப்பு ஊடகங்கள் என்று மேற்படி பா-இ-பா.க்களால் கூறப்படும்) பற்றியும் பார்ப்போம்..:
1. NDTV (செக்யூலர் ஓனர் பிரணாய் ராய், குருப் எடிட்டர் பர்க்கா தத்);
2. India today (NDTV)
3. CNN-IBN
4. Outlook (Editorial Chairman Vinod Mehta)
5. Times Group (Owned by Bennet & Coleman)
6. Hindustan Times (Owned by Birla Group; major editorials by Barkha Dutt, Vir Sanghvi)
பட்டியல் நீளமாக போவதால் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.. 5,6 – ல் வரும் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமான ‘செக்யூலர்’ ஊடகங்கள்.. இது தவிர மாநிலங்கள் அளவில் எண்ணற்ற செக்யூலர் ஊடகங்களையும் சேர்க்க வேண்டும்.. எல்லாம் பன்னாட்டு கார்பரேட்டுகளின் சேவையில் உள்ளவை..
// சனாதன வர்ணாசிரம தர்மத்தின் அதாவது நால்வர்ண சாதிய கட்டமைப்பின் மறுபெயர்தானே இந்து மதம்.வர்ணாசிரம தர்மத்தின் நோக்கமே பார்ப்பனிய ,சாதிய ஆதிக்க நலன்களை பாதுகாப்பதுதான் என்பது வெள்ளிடை மலை.ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.//
ஜிகாத்தில் காபிர்களைக் கொன்று தானும் செத்தால் ஏழாவது சொர்க்கம் நிச்சயம் என்பதுதான் இஸ்லாத்தின் சாரம் என்று கூறுவதைப் போல் இருக்கிறது..
\\அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள் பார்ப்பனர்களா..?//
பார்ப்பனர்கள் மட்டுமே ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று சொல்லவில்லையே. பார்ப்பனியத்தின் ஏகாதிபத்திய சேவையை மறைக்க நீங்கள் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு இசுலாம்தான் காரணம் என சொல்லலாமா என கேட்டீர்கள்.இல்லை என்று வரலாற்றிலிருந்து சொல்கிறேன்.இசுலாம் அநீதியை எதிர்த்து போரிட சொல்கிறது என்கிறேன்.அதை மறுக்க முடியாமல் ஆளும் கும்பலும் இசுலாமியர்கள்தானே என்கிறீர்கள்.முசுலிம்கள் என்றாலே அத்தனை பேரும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் பெருவாரியான மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறேன்.புரியாதது போல் நடிக்கிறீர்கள்.
அப்புறம் எடுத்துக்கொண்ட விவாதப்பொருளை நேர்மையாக பேசுங்கள்.போன நூற்றாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளை சுட்டியது இசுலாம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு காரணமில்லை என்று காட்டுவதற்குத்தான்,உங்கள் குற்றச்சாட்டு அதுதானே.அதற்கு பதில் சொன்னால் பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டைப்பாக்கு விலையில இருக்குன்னு ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுறீங்க. முசுலிம்களின் கொள்கை வேறுபாடுகளையும் அந்நாடுகளின் இன்றைய குழப்பங்களையும் பற்றி பேசுவதுதான் எதிர்வாதமா.உங்க நிலைமை வர வர ரொம்ப பரிதாபமா இருக்கு.இப்படி பொருளற்ற வாதம் எதையாவது சொல்லி கடைசி பின்னூட்டம் போட்டு ”வெற்றி” பெற்றே ஆகணுமா அம்பி.தென்றலின் ஒரு குற்றச்சாட்டுக்கு ”நன்று.ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று பதில் சொல்றீங்க.இதுலாம் ஒரு வாதமா.இப்படி ஒரு வெற்றி தேவையா உங்களுக்கு.
\\ பா-இ-பா //
ஊடகங்களை கையில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்கள் தொடங்கி IT அம்பிகள்.மாம்பலம்,மடிப்பாக்கம்,மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் ஊடாக அரசு மற்றும் தனியார் துறையில் மாத சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள் ஈறாக அத்தனை பேரும் தங்கள் ஆற்றலுக்கு எட்டிய வரையில் தனியார்மயமாக்கலை ஆதரித்து பரப்புரை செய்கிறார்கள்.
இதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.நீங்களோ அதை மறுக்க முடியாமல் அவன் ஆதரிக்கிறானே இவன் ஆதரிக்கிறானே என்று விவாதத்தை திசை திருப்புறீங்க.பாவம் அம்பி நீங்க..எப்புடி இருந்த நீங்க இப்புடி ஆயிட்டீங்க.
\\ஏழாவது சொர்க்கம் நிச்சயம்//
அதே திசை திருப்பல்.இந்துமதம்-பார்ப்பனியம் பற்றி ஆரம்பித்தது நீங்கதான்.ஆனால் அது குறித்து பேசினால் மேற்கொண்டு விவாதிக்காமல் ஓடி ஒளிகிறீர்கள்.
//பார்ப்பனர்கள் மட்டுமே ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று சொல்லவில்லையே. பார்ப்பனியத்தின் ஏகாதிபத்திய சேவையை மறைக்க நீங்கள் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு இசுலாம்தான் காரணம் என சொல்லலாமா என கேட்டீர்கள்.இல்லை என்று வரலாற்றிலிருந்து சொல்கிறேன்.//
பா-இ-பா.க்களும் அன்னியப்படைகளின் ஆக்ரமிப்பை எதிர்த்து போராடியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா அல்லது மறைத்துவிட்டீர்களா.. இப்போது ஏகாதிபத்தியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்பதுதானே கேள்வி..
// இசுலாம் அநீதியை எதிர்த்து போரிட சொல்கிறது என்கிறேன்.அதை மறுக்க முடியாமல் ஆளும் கும்பலும் இசுலாமியர்கள்தானே என்கிறீர்கள்.//
இதற்கு கொடுத்த பதிலை படிக்கவில்லையா..?!
// போன நூற்றாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளை சுட்டியது இசுலாம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு காரணமில்லை என்று காட்டுவதற்குத்தான்,உங்கள் குற்றச்சாட்டு அதுதானே.அதற்கு பதில் சொன்னால் பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டைப்பாக்கு விலையில இருக்குன்னு ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுறீங்க.//
சென்ற நூற்றாண்டில் ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்ப்பதற்கு இசுலாத்தை காரணம் காட்டும் நீங்கள் இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார-இயற்கைவள சுரண்டலை எதிர்க்க ஏன் இசுலாமால் முடியவில்லை என்றும் கூறவேண்டும்.. ஆளும் வர்க்கக்கும்பல் என்று சொல்லிவிட்டு நழுவமுடியாது.. ஆளும் வர்க்க கும்பல் ஏன் தடுக்கிறது, எப்படி தடுக்கிறது என்பதையெல்லாம் கூறாமல் தவிர்க்கவும் கூடாது.. பார்ப்பனியம் எப்படித் தடுக்கிறது என்று பட்டுக்கோட்டைக்கு படம் போட்டு வழி சொன்னதைப் போல் அதையும் சொல்லவேண்டும்..
// தென்றலின் ஒரு குற்றச்சாட்டுக்கு ”நன்று.ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று பதில் சொல்றீங்க.இதுலாம் ஒரு வாதமா.//
அவர் கழிந்து வைப்பதின் மேலெல்லாம் நான் கால் வைக்க வேண்டுமா..?!
// ஊடகங்களை கையில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்கள் தொடங்கி IT அம்பிகள்.மாம்பலம்,மடிப்பாக்கம்,மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் ஊடாக அரசு மற்றும் தனியார் துறையில் மாத சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள் ஈறாக அத்தனை பேரும் தங்கள் ஆற்றலுக்கு எட்டிய வரையில் தனியார்மயமாக்கலை ஆதரித்து பரப்புரை செய்கிறார்கள்.
இதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.நீங்களோ அதை மறுக்க முடியாமல் அவன் ஆதரிக்கிறானே இவன் ஆதரிக்கிறானே என்று விவாதத்தை திசை திருப்புறீங்க.//
பெரும்பான்மையோர் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் மேற்படி பார்ப்பனர்களை மட்டும் பார்த்து அவர்கள் ஒற்றைக் காலில் ஆட்டம் போடுவதாக கூப்பாடு போடுவதேன்..?! பார்ப்பன துவேசம்தான்..
// அதே திசை திருப்பல்.இந்துமதம்-பார்ப்பனியம் பற்றி ஆரம்பித்தது நீங்கதான்.ஆனால் அது குறித்து பேசினால் மேற்கொண்டு விவாதிக்காமல் ஓடி ஒளிகிறீர்கள். //
இந்து மதத்துக்கு கொடுக்கப்படும் விளக்கத்தைப் போல் எல்லா மதங்களுக்கும் சுருக்கி குறுக்கி விளக்கம் கொடுக்க முடியும் என்பதைத்தான் சுருக்கமாகக் கூறினேன்.. அது சரியா இல்லையா என்பதை நீங்களே கருதிப்பாருங்கள்..
\\இப்போது ஏகாதிபத்தியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்பதுதானே கேள்வி…………….இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார-இயற்கைவள சுரண்டலை எதிர்க்க ஏன் இசுலாமால் முடியவில்லை//
அரபு வசந்தம் போன நூற்றாண்டிலா நடந்தது.சொல்லவே இல்ல.
\\பெரும்பான்மையோர் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் மேற்படி பார்ப்பனர்களை மட்டும் பார்த்து அவர்கள் ஒற்றைக் காலில் ஆட்டம் போடுவதாக கூப்பாடு போடுவதேன்..?!பார்ப்பன துவேசம்தான்..//
ஆக,குற்றச்சாட்டை மறுக்க முடியவில்லை உங்களால்.அவன் அயோக்கியன்,இவன் அயோக்கியன்,அதுனால நான் அயோக்கியனா இருக்கிறத யாரும் கேள்வி கேக்க கூடாது அப்புடிங்கிறீங்க.நல்ல வாதம்,இப்புடியே நடத்துங்க.நாடு வெளங்கிரும்.
பார்ப்பனர்கள் மீது வெறுப்பு [ துவேசம் ] எல்லாம் இல்லை. அம்பி என்ற பெயரில் வந்து அதாவது ஒரு பார்ப்பனர் .ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசுவது நகை முரணாக தோன்றியது.அதை சுட்டிக்காட்டுகிறேன்.அவ்வளவுதான்.
\\இந்து மதத்துக்கு கொடுக்கப்படும் விளக்கத்தைப் போல் எல்லா மதங்களுக்கும்//
ஆக இந்த உத்தியை தவிர வேறு சரக்கு உங்களிடம் இல்லை.இந்த மலிவான உத்தி ஆயாசமூட்டுகிறது.வாதத்திற்காக மற்ற மதங்களில் நீங்கள் சொல்லும் குறைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.மற்றவர்களின் குறை நமது குறையை ரத்து செய்து விடுமா என்று நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
திப்பு ,
புதிர் போடுகின்றேன் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :
யார் அவர் ?
[1] பார்பனர்களை குற்றம் சுமத்தினால் அதனை ஏற்காமல் அல்லது மறுக்காமல் பிறரும் அப்படி தானே என்று அடுத்தவரை கை நீட்டுவது
[2] வால்மீகி இராமாயனத்தில் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்று தன் தேவைக்கு ஏற்ப கூறி விவாதத்தில் இருந்து தப்புவது.
[3] அதே சமையம் முருகனை பற்றி பார்பனர்கள் எழுதிவைத்து உள்ள அழுகுணி கருத்துகளை ஏற்று, தமிழ் மக்கள் இயல்பாக வணங்கும் கடவுளை பார்பன கடவுளாக ஆகம விதிகளை காட்டி false game ஆடுவது.
வினவில் வந்து இந்த அழுகுணிஆட்டம் ஆடும் இவர் யார் தெரியுமா உங்களுக்கு ?
போச்சு,ஏற்கனவே தென்றலுக்கு ஆதரவா ஏதோ எழுதிட்டேன்னு குழப்புறயே நீன்னு எம் மேல கோவமா இருக்காரு.[அவரு குழப்புறத விடவா]
இப்ப நீங்க வேறயா.என்ன கதிக்கு ஆளாவப்போறமோன்னு பயமா இருக்கு.மேக்கொண்டு பீதிய கிளப்பாதீங்க.
அம்பி,
\\கீழே இந்துக்கள் என்றும் கூறுகிறீர்கள்.//
பார்ப்பனர்கள் என்று குறிப்பாக சொன்னாலும் மொத்த இந்துக்கள் பின்னால் ஏன் ஒளிகிறீர்கள்.இந்துக்கள் என்ற சொல்லையே நான் பயன்படுத்தவில்லை.ஆனாலும் சொன்னதாக இட்டுக்கட்டலாமா.
சாமர்த்தியமா பேசுறதா ”நினைச்சுண்டு” பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லையா என கேட்காதீர்கள்.சாதி பிரிவினைகள் இன்றி இந்துக்களோ இந்து மதமோ ஏது.
// இந்துக்கள் என்ற சொல்லையே நான் பயன்படுத்தவில்லை.ஆனாலும் சொன்னதாக இட்டுக்கட்டலாமா.//
”ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.” என்று கூறிவிட்டு இந்துக்கள் என்று நான் சொல்லவேயில்ல என்கிறீர்கள்.. அப்படியென்றால் இந்த இந்துக்கள் எனப்படுபவர்கள் யார் என்று புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்பவர்கள் மீது இரக்கம் வைத்து அதையும் விளக்கியிருக்கிறீர்கள்.. :
//பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லையா என கேட்காதீர்கள்.சாதி பிரிவினைகள் இன்றி இந்துக்களோ இந்து மதமோ ஏது.//
சாமர்த்தியமா பேசுறதா நினைச்சுண்டு “இந்துக்களோ இந்து மதமோ ஏது” என்று இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள்தான் இந்துக்கள் என்று சரியான வாக்குமூலத்தையும் கொடுக்கிறீர்கள்.. எப்புடி இருந்த நீங்க இப்புடி ஆயிட்டீங்களே திப்பு.. தென்றலுக்கு வக்காலத்து வாங்க வந்தால் நீங்களும் அந்த பேரறிஞரைப் போலவே குழம்பி,குழப்பிக் கொண்டு திரியவேண்டியதுதான்..
\\ சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..\\
மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு, முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைக்கட்டுப்படுத்த வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. இனக்குழுவிற்கு சொந்தமான சாமியாடல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம்.
\\ சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..\\
மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைத்தான் வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. சங்ககால முருகனின் களிதறுப்புணர்ச்சிப் பாத்திரமே குய்யஹர்களின் மரபு என்று சொல்கிறது எஸ். இராமச்சந்திரனின் கட்டுரை. இதுஒருபுறமிருக்க இனக்குழுச்சமூகத்தில் உள்ள சாமியாடுதல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம்.
தொல்குடி மரபு, உள்ளது உள்ளபடி முருகனின் பாத்திரத்தை விளக்குகிற பொழுது பார்ப்பனியம் இப்படிக்கதைக்கிறது; “இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்? இதில் சு பிரம்மம் என்பது இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்றால் என்ன சொல்ல வருகிறது பார்ப்பனியம்?
// மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைத்தான் வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. சங்ககால முருகனின் களிதறுப்புணர்ச்சிப் பாத்திரமே குய்யஹர்களின் மரபு என்று சொல்கிறது எஸ். இராமச்சந்திரனின் கட்டுரை.//
முருகு என்றால் அழகு, இளமை.. சங்க இலக்கியம் கூறவருவது எதையென்றால் :-
1) தன் உணர்ச்சி கொண்ட தலைவியை அவள் காதல் எனும் நோய் உருக்குகிறது; அஃதறியாத (அல்லது அறிந்த ?!) அவள் தாயாகப்பட்டவள் தன் மகள் முருகனை வழிபட்டால் தப்புதாண்டாவுக்கு போகாமல் வெறியாட்டம் நிகழ்வு மூலம் மன-உடல் வலிமை மற்றும் இளமை இயல்பை மீண்டும் பெற்று பழைய நிலைக்கு திரும்புவாள் என்று முருகன் அருள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை..
2) சில தலைவன்கள் தம் தலைவிகளை டீலில் விட்டுவிட்டு பரத்தைகளிடம் போகும்காலை தலைவி முருகனை வழிபட்டாள் என்பதறிந்தால், சூர் தடிந்த முருகன் தப்பு செய்யும் தன்னை எந்த விதத்தில் முருக்குவானோ (அழிப்பானோ) என்ற அச்சம் கிளர்ந்து நல்வழிக்குத் திரும்புவர் என்ற நம்பிக்கையை..
குறிப்பு : முருக்குதல் என்றால் முறுக்கைப் போல் முறுக்குதல் அன்று.. அழித்தல், உருக்குதல் என்று பல பொருளுண்டு..
// இதுஒருபுறமிருக்க இனக்குழுச்சமூகத்தில் உள்ள சாமியாடுதல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? //
ஒரு சம்பந்தமும் இல்லை..
// இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம். //
சூ அல்ல சு.. மறைபொருளான பரம்பொருள் அச்சம் தரத்தக்க தெய்வ வடிவங்களில் வெளிப்படும் நிகழ்வுகளும் உண்டு.. அதன்றி இனிய குணமுள்ள ஒரு தெய்வமாக வெளிப்பட்ட பரம்பொருளை சுப்ரம்மம் என அழைத்தனர்..
// தொல்குடி மரபு, உள்ளது உள்ளபடி முருகனின் பாத்திரத்தை விளக்குகிற பொழுது பார்ப்பனியம் இப்படிக்கதைக்கிறது; “இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்? இதில் சு பிரம்மம் என்பது இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்றால் என்ன சொல்ல வருகிறது பார்ப்பனியம்? //
சு பிரம்மம் என்ற பெயர் முருகனின் இனிய குணத்தைத்தான் குறிப்பிடுகிறது.. தொல்குடிமரபில் முருகனின் பிறப்பு எப்படி கூறப்படுகிறதோ..?! பரிபாடலில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. கந்த புராணத்தில் இன்னொரு விதமாக கூறப்படுகிறது.. முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவன் என்பது தமிழர்களின் நம்பிக்கை.. சின்ன சிவன் என்பது சைவ நம்பிக்கை..
\\ சங்க இலக்கியங்கள் தமிழ் பண்பாட்டில் இல்லையா.. சொந்த ’இனத்தவனை’(?) தண்டிக்ககூடாது என்பது தமிழ் கலாச்சாரமா..?!\\
சொந்த இனத்தவனைத் தண்டிப்பது சரி. ஆனால் என்ன மயிருக்காக தேவர்களைக்காப்பதற்காக சொந்த இனத்தவனைத் தண்டிக்க வேண்டும்?
“அதிரப் பொருவது தும்பை-
போர்களத்துச் செருவென்றோர் மிக்கது வாகை” என்கிறது புறப்பொருள். இதில் இனக்குழுச் சண்டை விவரிக்கப்படுகிறது.
ஆனால் சூரனை வதம் செய்து தேவர்களை காக்க வேண்டிய தேவை தமிழனுக்கு எதற்கு? எந்த மாநிலத்திற்குப்போனாலும் அங்கு அசுரர்கள் அழிக்கப்பட்டனர்; தேவர்கள் காக்கப்பட்டனர் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லையா? இல்லை இங்குள்ள மக்களை தன்மானமற்றவர்களாக கருதுகிறதா பார்ப்பனியம்?
புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் சொல்கிற செய்து இது; மடவரல் மகளிர்க்கும் மறமிகுத்தன்று என்று சொல்லவரும் பொழுது தலைவி தலைவன் இறக்கிற செய்தியைக் கேட்கிறாள். முலைப்பால் அருந்துகிற பாலகனை முலையில் இருந்து பிடுங்கி போருக்கு அனுப்புகிறாள் என்று ஒரு செய்தி. ஆனால் திண்ணைத்தூங்கிகளான தேவர்களை எப்பொழுதும் எவனாவது ஒருவன் காக்க வேண்டும். தேவனுக்கு ஒரு துன்பமும் நேராது. சமயத்தில் கடவுளே களத்தில் இறங்கி கையாலாகாத தேவர்களைக்காக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய மோசடி; இருக்கறவனெயெல்லாம் சுயமரியாதையற்றவனாக கருதுவதோடுமட்டுமில்லாமல் சுரண்டிக்கொழுக்கிறது பார்ப்பனியம். அடுத்தவன் எச்சித்தட்டு என்றாலும் பார்ப்பனியம் புடுங்கித் திங்க தயங்காத தேவர்களைப் பிரதிநிதிப்படுத்த முருகன் சுப்ரமணியாக வேண்டும்; சூரன் வதம் செய்யப்படவேண்டும்; திண்ணைத்தூங்கிகள் எல்லாம் முடிந்துபிறகு நெய் ஊற்றி யாகம் வளர்ப்பார்கள்; இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு; கலாச்சாரம் அன்று.
// சொந்த இனத்தவனைத் தண்டிப்பது சரி. ஆனால் என்ன மயிருக்காக தேவர்களைக்காப்பதற்காக சொந்த இனத்தவனைத் தண்டிக்க வேண்டும்? //
என்ன ம_ருக்கு என்பதை பின்னால் பார்ப்போம்..
// “அதிரப் பொருவது தும்பை-
போர்களத்துச் செருவென்றோர் மிக்கது வாகை” என்கிறது புறப்பொருள். இதில் இனக்குழுச் சண்டை விவரிக்கப்படுகிறது.//
சரி, அதற்கென்ன..?
// ஆனால் சூரனை வதம் செய்து தேவர்களை காக்க வேண்டிய தேவை தமிழனுக்கு எதற்கு? //
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் – தொல்காப்பியம் அகத்திணையியல்
வேந்தன் (இந்திரன்), வருணன் மேய என்று கூறுவதன் பொருள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேயவில்லை, முறையே மருதம், நெய்தல் நிலங்களை மேவும் தெய்வங்கள் என்பதே.. தமிழர்களால் வழிபடப்பட்ட இவர்களைக் காக்க முருகன் சென்றால் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும்..?!
// எந்த மாநிலத்திற்குப்போனாலும் அங்கு அசுரர்கள் அழிக்கப்பட்டனர்; தேவர்கள் காக்கப்பட்டனர் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லையா? இல்லை இங்குள்ள மக்களை தன்மானமற்றவர்களாக கருதுகிறதா பார்ப்பனியம்? //
புராணத்தை சொந்த புராணமாகப் பார்த்தால்தால்தான் தன்மானம் வரும் என்று பெரியார் நினைத்தார்.. பெரும்பாலானோர்க்கு இது போன்ற குழப்பங்கள் இல்லை..
// புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் சொல்கிற செய்து இது; மடவரல் மகளிர்க்கும் மறமிகுத்தன்று என்று சொல்லவரும் பொழுது தலைவி தலைவன் இறக்கிற செய்தியைக் கேட்கிறாள். முலைப்பால் அருந்துகிற பாலகனை முலையில் இருந்து பிடுங்கி போருக்கு அனுப்புகிறாள் என்று ஒரு செய்தி. //
இது தமிழரின் வீரம்.. நன்று..
// ஆனால் திண்ணைத்தூங்கிகளான தேவர்களை எப்பொழுதும் எவனாவது ஒருவன் காக்க வேண்டும். தேவனுக்கு ஒரு துன்பமும் நேராது. சமயத்தில் கடவுளே களத்தில் இறங்கி கையாலாகாத தேவர்களைக்காக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய மோசடி; //
இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!
// இருக்கறவனெயெல்லாம் சுயமரியாதையற்றவனாக கருதுவதோடுமட்டுமில்லாமல் சுரண்டிக்கொழுக்கிறது பார்ப்பனியம். அடுத்தவன் எச்சித்தட்டு என்றாலும் பார்ப்பனியம் புடுங்கித் திங்க தயங்காத தேவர்களைப் பிரதிநிதிப்படுத்த முருகன் சுப்ரமணியாக வேண்டும்; சூரன் வதம் செய்யப்படவேண்டும்; //
முருகன் சுப்ரமணியாகும் முன்பே சூரர் தண்டிக்கப்பட்டுவிட்டாரே என்ன செய்வது..
//திண்ணைத்தூங்கிகள் எல்லாம் முடிந்துபிறகு நெய் ஊற்றி யாகம் வளர்ப்பார்கள்; இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு; கலாச்சாரம் அன்று. //
நன்று.. ஒன்றும் சொல்வதற்கில்லை..
\\ வேந்தன் (இந்திரன்), வருணன் மேய என்று கூறுவதன் பொருள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேயவில்லை, முறையே மருதம், நெய்தல் நிலங்களை மேவும் தெய்வங்கள் என்பதே.. தமிழர்களால் வழிபடப்பட்ட இவர்களைக் காக்க முருகன் சென்றால் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும்..?!\\
மறை என்றாலே மறுக்கப்பட்டது என்பதுதான் பார்ப்பனீயத்தின் இயங்குதளம். கடவுளை வேதத்தை மக்களுக்கு மறுத்துவிட்டு மக்கள் என்ன மறுப்பு தெரிவிக்கக் கூடும் என்று கேட்பது பார்ப்பனியத்தின் இழிந்த நிலையாகும். ‘வன்புணர்வு செய்தவனே கட்டுடா தாலியை’ என்று சொல்கிற எதேச்சதிகாரத்திற்கு ஒப்பானது.
இதில் வைதீகத்தாக்குதலில் சிறுதெய்வங்களே சின்னபின்னமாகி சீரழிந்துவிட்ட பிறகு மக்கள் எம்மாத்திரம்? எழுதப்பட்டதெல்லாம் வரலாறு என்று ஆளும் வர்க்கமும் பார்ப்பனியமும் சொல்லத்தான் செய்யும். ஆனால் தன்மானும் சுயமரியாதையும் தான் தன் சொந்த வேர்களைத் தேடிச் செல்ல ஒருவனுக்கு நிணமாக இருக்கின்றன.
அரசும் புரட்சியும் நூலில் ஒரு வாசகம் இவ்வாறாக இருக்கும்; “ஆளும் வர்க்கம் மக்களை சனநாயகம் குறித்து அதிகம் கவலைப்படாதபடி வைத்திருக்கிறது என்று”
ஆனால் பார்ப்பனியமோ மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது; அவ்வளவுதான். அதனால் தான் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும் என்று கேட்கிற அம்பி போன்றவர்களிடம் மஹிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? என்று கேட்கிறது இப்பதிவு.
// மறை என்றாலே மறுக்கப்பட்டது என்பதுதான் பார்ப்பனீயத்தின் இயங்குதளம். கடவுளை வேதத்தை மக்களுக்கு மறுத்துவிட்டு மக்கள் என்ன மறுப்பு தெரிவிக்கக் கூடும் என்று கேட்பது பார்ப்பனியத்தின் இழிந்த நிலையாகும். ‘வன்புணர்வு செய்தவனே கட்டுடா தாலியை’ என்று சொல்கிற எதேச்சதிகாரத்திற்கு ஒப்பானது. //
தமிழர்கள் இந்திரனையும், வருணனையும் வணங்கிக் கொண்டிருந்ததற்கும் பின்னால் வந்ததாகக் கூறப்படும் பார்ப்பனியம்தான் காரணமா..?!
// அதனால் தான் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும் என்று கேட்கிற அம்பி போன்றவர்களிடம் மஹிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? என்று கேட்கிறது இப்பதிவு.//
பெரியாருக்கு மாலை போட்டு சூடம் காட்டி துதி பாடும் போது மகிசாசுரனுக்கு செய்தால் மட்டும் என்ன வந்து விடப்போகிறது..?!
\\ புராணத்தை சொந்த புராணமாகப் பார்த்தால்தால்தான் தன்மானம் வரும் என்று பெரியார் நினைத்தார்.. பெரும்பாலானோர்க்கு இது போன்ற குழப்பங்கள் இல்லை..\\
சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார். இக்கேள்வியின் மூலமாக ஒருவனுக்கு வராதா தன்மானமா புராணத்தை சொந்தப் புராணமாக பார்க்கும்பொழுது வரப்போகிறது? எனவே பெரும்பாலானோர்க்கு புராணங்களை சொந்தப் புராணமாக பார்க்க வேண்டிய குழப்பங்கள் ஏதும் இல்லை.
\\ இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!\\
இதைத்தான் ‘காலந்தோறும் பார்ப்பனியம்’ என்கிறோம்.
2014இல் கூட தலித் சிறுவன் தண்ணீர் குடிக்க கோயிலுக்கு போனால் பார்ப்பானால் மண்டை உடைக்கப்படுகிறது என்றால் மக்கள் ஏன் இன்னும் பார்ப்பனியத்தை வணங்குகிறார்கள் என்பது நியாயமான கேள்வி. மேலேயே பதில் கூறியிருக்கிறேன்; மீண்டும் நினைவுபடுத்துவோம்;
“பார்ப்பனியம் மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது”.
// சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார். இக்கேள்வியின் மூலமாக ஒருவனுக்கு வராதா தன்மானமா புராணத்தை சொந்தப் புராணமாக பார்க்கும்பொழுது வரப்போகிறது? எனவே பெரும்பாலானோர்க்கு புராணங்களை சொந்தப் புராணமாக பார்க்க வேண்டிய குழப்பங்கள் ஏதும் இல்லை.//
வீட்டிலேயே கக்கூசு வசதி இருந்த பெரியாருக்கு வேண்டுமானால் இது போன்ற தத்துவார்த்தக் கேள்விகள் எழலாம்.. சரஸ்வதி தேவிக்கு மல,சலம் வந்தால் (?) சொம்பை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டு வருவாள் என்று சாமானியர்களும் கூறியிருப்பார்கள்..!
// \\ இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!\\
இதைத்தான் ‘காலந்தோறும் பார்ப்பனியம்’ என்கிறோம்.
2014இல் கூட தலித் சிறுவன் தண்ணீர் குடிக்க கோயிலுக்கு போனால் பார்ப்பானால் மண்டை உடைக்கப்படுகிறது என்றால் மக்கள் ஏன் இன்னும் பார்ப்பனியத்தை வணங்குகிறார்கள் என்பது நியாயமான கேள்வி. மேலேயே பதில் கூறியிருக்கிறேன்; மீண்டும் நினைவுபடுத்துவோம்;
“பார்ப்பனியம் மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது”. //
பார்ப்பான் சொல்லித்தான் தமிழர்கள் வணங்கினார்களா..?! அட கடவுளே..!
//சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார்.//
கொஞ்சம் கூட முதிர்ச்சியற்ற பேச்சு… சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கட்டும் என்றால், நாமகளின் அருளும் ஆசிகளும் உனக்கு துணையாக இருக்கட்டும் என்று பொருள். உன் நாவினால்(மதி நுட்பத்தால்) கற்றோர் சபைதனில் நீ சிறப்பெய்துவாய் என்று பொருள். மகாலட்சுமி என்றும் உன் இல்லத்தில் நிலைத்திருக்கட்டும் என்றால் என்ன அர்த்தம்.கல்வி, ஆரோக்கியம், உணவு போன்ற சகல செல்வங்களும் பெற்று உன் இல்லம் மகிழ்ச்சிகரமாக அமையட்டும் என்று அர்த்தம். இந்த எளிய உண்மை தெரியவில்லை என்றால் அறிவு எவ்வளவு புரையோடி போய் இருக்கிறது என்று பாருங்கள்.
ஒரு மனிதனின் அறிவிற்க்கும் நாவண்மைக்கும் சரஸ்வதியை காரணம் காட்டுவதைத்தான் பெரியார் கேலி செய்கிறார் இது எப்படி முதிர்ச்சியற்ற் பேச்சாகும் இந்து மத நம்பிக்கையை நகைச்சுவையுடன் கேலி செய்கிறார் அவ்வளவே…
ஆனாலும் இங்க ராமனை கேலி செய்யலாம் ,யேசுவை கஞ்சா அடிப்பவர் என்று சொல்லலாம்,இலாமையும் முகமதின் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி அல்லாவையும் கேலி செய்யவோ விமர்சிக்கவோ கூடாது அப்பிடி விமர்சித்தால் அதை வெளியிட மாட்டார்கள் அல்லது அதை தனி மனித விமரிசனம் என்பார்கள் சிவப்பு சட்டை போட்டுக்கொண்டு அல்லா எங்களை சாகடிக்க மாட்டாயா என்பார்கள் ….
அய்யா ஜோசப் உமக்கு மனநிலை சரியாத்தா இருக்கா.முசுலிம் எதிர்ப்பு மதவெறி நோய் முற்றிய நிலையில் நீர் முசுலிம்கள் முரடர்கள்,இசுலாமிய சட்டங்கள் காட்டுமிராண்டிதனமானவை பாகப்பிரிவினை சட்டங்கள் முட்டாள்தனமானவை என்றெல்லாம் பழைய பதிவுகளில் கழிஞ்சு _______ அதெல்லாம் வினவில் எப்படி வெளியிடப்பட்டுள்ளன என்று யோசிச்சு பாக்க மாட்டீரா.
பல பதிவுகள்ள நபிகள் நாயகம் அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் என்று அவதூறு சொல்லிருக்கீறு.ஏன் இந்த பின்னூட்டத்துல கூட அதையே வாந்தி எடுத்துருக்கீறு.இதெல்லாம் வெளியிடப்பட்டுள்ளன ஆனாலும் வினவு முசுலிம் ஆதரவு தளம் னு கொஞ்சம் கூட வெக்கமில்லாம பொய் சொல்றீரு.வினவு தோழர்கள் நியாயத்தின் பக்கம் நின்று எழுதுகிறார்கள்.பல பிரச்னைகளில் நியாயம் முசுலிம்கள் பக்கம் உள்ளது.அதைத்தான் வினவு கண்ணை மூடிக்கொண்டு முசுலிம்களை ஆதரிப்பதாக உம்மை போன்றோருக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது..நல்ல மனநிலையில் இருந்தால் வினவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
இசுலாமிய மதத்தை கடுமையாக விமரிசிக்கும் கட்டுரைகள் பல வினவில் உள்ளன.தேடி படியும்.ஒரு பதிவில் ”வெங்காய மதம் ”என்று கூட எழுதி இருக்கிறார்கள்.அந்த பதிவுகளில் முசுலிம் சகோதரர்கள் பதிலளிக்கும் விவாதங்களையும் படித்து பாரும்.நேர்மையாக குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் சொல்லியிருப்பார்கள்.இந்துவை,கிருத்துவத்தை,விமரிசித்தாயா என்று கேட்கும் அற்ப புத்தி அவர்களிடம் இருக்காது.
// பதிவுகள்ள நபிகள் நாயகம் அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் என்று அவதூறு சொல்லிருக்கீறு.ஏன் இந்த பின்னூட்டத்துல கூட அதையே வாந்தி எடுத்துருக்கீறு.இதெல்லாம் //நபி முகமதை மன நிலை பிறழ்ந்தவர் என்று சொன்னதற்க்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் உங்களிடம் உங்கள் மனநிலை சார்ந்து பேசுவது அவசியமாக இருப்பதால் கிட்லர் என்ற சர்வாதிகாரி எத்தனையோ யூதர்களை கொன்றொழித்தானாம் அவனை இன்றும் சில பேர்கள் மதிக்கிறார்களாம் அது போல முகமது நபியும் பல யூதர்களையும் சிலை வழிபாடு செய்த மனிதர்கலையும் அல்லாவின் பேரால் கொன்றார் என்று இசுலாமிய சரித்திரம் சொல்லுவாதால் முகமதுவும் அல்லாவும் கிட்லரை விட மன முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று சொல்லி மன்னிப்பு கோருகிறேன்..
\\பார்ப்பான் சீனாவுக்கு போனாலும் அசுரர்களும் தேவர்களும் கூடவே போவார்கள்.. ஆனால் சீனர்கள் தாங்கள்தான் அசுரர்கள் என்று நம்பிக்கொள்வார்களா என்பது சந்தேகமே..!\\
சந்தேகம் வருகிறவரின் பெயரிலே அம்பி இருக்கலாம். ஆனால் சீனர்கள் தங்களை அசுரர்கள் என்று கருதிக்கொள்வது மட்டும் சந்தேகமாம். இது கேலிக்கூத்து அல்ல. நூற்றாண்டு அவலம். மிகவும் கேடாக நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் பார்ப்பான்களுக்கு அசுரர் என்றால் இதைமுறியடிக்க அசுரர்கள் மீட்டெடுக்கப்படுவார்கள். பாட்டி கதை கூட எங்களுக்கு பார்ப்பனியத்தால் நஞ்சாக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குத் தேவை புதிய கலாச்சாரம்! புதிய கலாச்சாரத்தில் சந்தேகங்கள் தீர்க்கப்படும். ஆனால் அம்பிகள் என்ற பெயரில் அங்கு யாரும் இருக்க மாட்டர். அது அசூரர்களான தொழிலாளிகளின் உலகம் அது.
// மிகவும் கேடாக நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் பார்ப்பான்களுக்கு அசுரர் என்றால் இதைமுறியடிக்க அசுரர்கள் மீட்டெடுக்கப்படுவார்கள். //
அசுரர்கள் எல்லாம் நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் என்று பார்ப்பான்கள் உங்களிடம் கூறுகிறார்களா..?! நீங்களாகவே உங்களை அசுர வாரிசுகளாக நினைத்துக் கொண்டு எல்லா அசுரர்களையும் மீட்டெடுக்க முயன்றால் ஃபிரான்கென்ஸ்டீன் போன்ற வகையறாக்கள்தான் நமக்கு தலைவர்களாக வாய்ப்பார்கள்..!
\\அசுரர்கள் எல்லாம் நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் என்று பார்ப்பான்கள் உங்களிடம் கூறுகிறார்களா..?!\\
கூறுவது மட்டுமில்லை; அழித்துவிட்டேன் என்று விழா எடுக்கிறார்கள். இத்தகைய நயவஞ்சமும் சூழ்ச்சியும் வக்கிரமும் பார்ப்பனியத்திற்கு மட்டுமே உண்டு. மகிசாசுரன், சூரன், மாபலி, சுமாலி, நரகாசுரன், பேதை சூர்ப்பனகை, மாவீரன் இராவணன் என்று இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வரலாறு நெடுகிலும் நீச பாசை பேசுகிற தஸ்யுக்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் பலவாறாக இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
\\நீங்களாகவே உங்களை அசுர வாரிசுகளாக நினைத்துக் கொண்டு எல்லா அசுரர்களையும் மீட்டெடுக்க முயன்றால் ஃபிரான்கென்ஸ்டீன் போன்ற வகையறாக்கள்தான் நமக்கு தலைவர்களாக வாய்ப்பார்கள்..!\\
அடிமைகளுக்கும் அம்பிகளுக்கும் தான் தலைவர்கள் தேவை. மக்களுக்கு தலைவர்கள் தேவையில்லை. ஏனெனில் மக்களே தலைவர்கள்! போராடுவதற்கு தலைமைச் சித்தாந்தம் தான் தேவையேயொழிய தலைவர் அல்ல! பார்ப்பனியத்தை வேரொடு பிடுங்குவதும் ஏகாதிபத்தியத்தை அழிப்பதும் தலைமைச் சித்தாந்தத்தின் இருவேறு நிகழ்ச்சிநிரல்கள் அல்ல; ஒன்றுதான்.
// கூறுவது மட்டுமில்லை; அழித்துவிட்டேன் என்று விழா எடுக்கிறார்கள். இத்தகைய நயவஞ்சமும் சூழ்ச்சியும் வக்கிரமும் பார்ப்பனியத்திற்கு மட்டுமே உண்டு. மகிசாசுரன், சூரன், மாபலி, சுமாலி, நரகாசுரன், பேதை சூர்ப்பனகை, மாவீரன் இராவணன் என்று இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வரலாறு நெடுகிலும் நீச பாசை பேசுகிற தஸ்யுக்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் பலவாறாக இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர். //
வேதங்கள் புராணங்களில் மேற்படி ராட்சதர்கள்தான் அசுரர்களாக குறிப்பிடப்படுகிறார்கள்.. தஸ்யூக்கள், சண்டாளர்கள் எல்லாம் அசுரர்கள் என்று குறிபிடப்பட்டார்கள் என்பதெல்லாம் உங்கள் கற்பனை..
//அடிமைகளுக்கும் அம்பிகளுக்கும் தான் தலைவர்கள் தேவை. மக்களுக்கு தலைவர்கள் தேவையில்லை. ஏனெனில் மக்களே தலைவர்கள்! போராடுவதற்கு தலைமைச் சித்தாந்தம் தான் தேவையேயொழிய தலைவர் அல்ல! பார்ப்பனியத்தை வேரொடு பிடுங்குவதும் ஏகாதிபத்தியத்தை அழிப்பதும் தலைமைச் சித்தாந்தத்தின் இருவேறு நிகழ்ச்சிநிரல்கள் அல்ல; ஒன்றுதான்.//
பகுத்தறிவின் உச்சத்தை அடைந்துவிட்ட நீங்கள் இப்போது வானத்தில் ஏறி பறக்கவும் தொடங்கிவிட்டீர்கள்..
அம்பிக்கும் ,Rebecca Mary க்கும் என் கடுமையான கண்டனங்கள் !
இக் கட்டுரையில் உள்ள விவாத கருபொருலான
“டெல்லி பல்கலைகழக மாணவர்கள் மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில்ஆர் .எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளமைக்கு”
ஏதும் கண்டனம் தெரிவிக்காமல் விவாதம் செய்து கட்டுரை கருபொருளை திசை திருப்பி விவாதம் செய்துகொண்டு உள்ள “சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கும் அதிமேதாவிக்கும்”[அம்பிக்கும்] ,அவருக்கு ஜால்ரா போடும் பார்பன ஆதரவாளருக்கும் [Rebecca Mary] என் கடுமையான கண்டனங்கள்!
நீர் இருவரும் இவ் விவாதத்தை திசை திருப்புவதன் மூலம் ஆர் .எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் விழாவை சீர்குலைத்துள்ளமைக்கு ஆதரவு அளிக்கின்றிர்கள் அப்படி தானே ?
//திருமுருகாற்றின் பாடல் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்//
இது தவறான கருத்து மட்டும் இல்லாமல் நகைப்புக்குறியதுமாகும்.நெடுநல்வாடை நேரிசை ஆசிரியப்பா என்று கண்டுபிடித்த நீங்கள் திருமுருகு இணைக்குறள் ஆசிரியப்பா என்று கண்டுபிடித்த இலக்கண விதி என்ன? திருமுருகும் நேரிசை ஆசிரியப்பாவால் பாடப்பெற்றதுதான்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று,ஈற்றயலடி முச்சீராயும் பிற அடிகள் நாற்சீராயும்வருவது நேரிசை ஆசிரியப்பா [ஈற்றயலடி-இறுதியடிக்கு முதலடி]
1.திருமுருகின் ஈற்றயலடி “இழுமென இழிதரும் அருவி” என்று முச்சீர் பெற்றும் ஏனைய அடிகள் நாற்சீராயும் வருவதை காண்க.
2.நெடுநல்வாடையில் ஈற்றயலடி முச்சீராய் “சிலரோடு திரிதரும் வேந்தன்” என்று இருக்க ஏனைய அடிகள் அளவடி பெற்று வருவதை காண்க [அளவடி-நான்கு சீர்]
ஆசிரியப்பாவின் இலக்கணம் பெற்று முதலடியும் கடைசியடியும் நாற்சீர் பெற்று இடையில் உள்ள அடிகள் இருசீர்[குறளடி]அடிகளாயும் முச்சீர்[சிந்தடி] அடிகளாயும் வருவது இணைக்குறள் ஆசிரியப்பா.
எனவே திருமுருகு தனித்து நிற்க அவசியம் இல்லை.
நகைப்பதற்கு முன் மு.இளநங்கையின் கட்டுரையை படித்துவிடவும். http://puthu.thinnai.com/?p=20166. நேரிசை ஆசிரியப்பாவாக கருதினால் வஞ்சியடி நிரவிய நேரிசை ஆசிரியப்பா என்று கருத வேண்டும். ஆனால் இது தவறு. ஏன் இணைக்குறள் ஆசிரியப்பா என்பதை முழுதாக முதலில் படிக்கவும்.
(break…)
கட்டுரையில்.. // நக்கீரர் இயற்றிய சங்க இலக்கிய ஆசிரியப்பாக்களும் நெடுநல்வாடையும் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த நிலையில் திருமுருகாற்றுப்படை மட்டும் இணைக்குறளாசிரியப்பாவில் அமைந்துள்ளது // என வருகிறது..
ஆனால் கட்டுரையில் பத்துப்பாட்டின் பாவகைப்பட்ட பட்டியலில் நெடுநல்வாடை விடுபட்டிருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை..:
/// நேரிசை ஆசிரியப்பா – 6 (பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு,மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு)
வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா – 1 (பொருநராற்றுப்படை)
இணைக்குறளாசிரியப்பா – 1 (திருமுருகாற்றுப்படை)
வஞ்சிப்பா – 2 (பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி)
என்று பொதுவாகப் பத்துப்பாட்டு யாப்பியலை அடையாளப்படுத்தலாம். ///
திருமுருகை இணைகுறள் ஆசிரியப்பாவாக கொள்ள கட்டுரையில் காட்டப்படும் எடுத்துக்காட்டு..:
”மார்பொடு விளங்கஒருகை
தாரொடு பொலியஒருகை (திரு.112-113)”
ஒருகை என்பதை தனியான சீராகக் கொண்டு இவ்வரிகளை முச்சீர் சிந்தடியுள்ளவையாகக் கொண்டால் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் என்கிறது கட்டுரை..
இதையே நெடுநல்வாடையில்,
“’இன்னே வருகுவர் இன் துணையோர்’ என,
உகத்தவை மொழியவும்
தலைவியின் வருத்த மிகுதி
ஒல்லாள், மிகக் கலுழ்ந்து”
”ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,”
போன்ற வரிகள் அளவடிகள் இல்லை, எனவே நெடுநல்வாடையும் நேரிசை ஆசிரியப்பா அன்று இணைக்குறள் ஆசிரியப்பா என்று கூற இயலுமே..?!
இரண்டாவதாக, நக்கீர நாயனாரும் இணைக்குறள் ஆசிரியப்பாவில் சில பதிகங்கள் இயற்றினார் என்பதால், பெயர் குழப்பத்தால் திருமுருகும் அவருடையதாகத்தான் இருக்கும் என்று எப்படி கூறமுடியும்..?!
மூன்றாவதாக, சங்ககால திருமுருகையும் சைவ நூலாகக் கருதி சைவர்கள் அதனை 11-ம் திருமுறையில் சேர்க்கும் தர்க்கம், பாவகையை வைத்து அதில் சேர்க்க முயலும் தர்க்கத்தைவிட பொருத்தமாக இருக்கிறதே..?!
நான்காவதாக, பாடியவர் பெயர் 11-ம் திருமுறையின் பிற பதிகங்களில் வெறும் நக்கீரர் என்று இருக்க திருமுருகில் மட்டும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று தனிப்படுத்தி காட்டுகிறதே..?!
(over to தென்றல் & ராம்…)
@அம்பி,
சோற்றை பிசையும் போது தட்டுப்பட்டது என்று செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள் அதாவது பரவாயில்லை என்றால் உடனே கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கலாட்டா செய்கிறார்கள்.தமிழின் முதன்மையான ஆய்வாளர்கள் யாரும் திருமுருகை இணைக்குறள் ஆசிரியப்பா என்றும் சொல்லவில்லை அதை காரணம் காட்டி நக்கீர நாயனாரும் அவரும் ஒன்று என்றும் சொல்லவில்லை.
நெடுநல் வாடை ஏன் இணைக்குறள் ஆசிரியப்பா இல்லை என்ற தென்றலின் பதிலை அறிய நானும் ஆவலாக உள்ளேன்.
\\ சோற்றை பிசையும் போது தட்டுப்பட்டது என்று செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள்\\
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக! என்று சொல்லும்போது மட்டும் உங்களுக்கு சோற்றிலே செங்கல் தெரியவில்லையா?
\\ அதாவது பரவாயில்லை என்றால் உடனே கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கலாட்டா செய்கிறார்கள்.\\
பிறகு வள்ளிக்கு எப்படி நீதி கிடைக்கும்? ஆர் எஸ் எஸ் காலிகள் பொதுசிவில் சட்டம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இந்துக்களின் தெய்வமாக திணிக்கப்படுகிற சுப்புணிக்கு தெய்வானை வேறு! மாறாக தமிழ் தொல்குடியின் முருகனுக்கு வள்ளி மட்டும்தான் வருகிறாள். ஆக கல்யாணத்தை நிறுத்தங்கள் என்பது மட்டும் கலகம் அல்ல; சுப்புணியை அபய ஹஸ்த முத்திரையோடு தூக்கிக்கொண்டு ஓடுங்கள் என்று சொல்வதும் தான்.
//அசுரர் குடி கெடுத்த ஐயா//
இந்தியாவில் உள்ள சில இனக்குழுக்களில் சில நம்பிக்கைகள் தொன்மம்மாக நிலவி வருகிறது.ஏகலைவனின் வம்சம் என்று சிலர் கருதுகிறார்கள்.கட்டைவிரல் இல்லாமல் அம்பு எய்யும் பயிற்சி அவர்களிடம் உள்ளது.மலையாளிகள் தங்களை மகாபலியின் வம்சம் என்று கருதுகிறார்கள்.இந்த பதிவின் கட்டுரை தலித்கள்தான் அசுரர்கள் என்ற உள்ளடக்கம் உள்ளது.
தமிழ்நாட்டில் நிலமை தலைகீழாக உள்ளது.இங்கே ஒடுக்கபட்ட பிரிவை சேர்ந்த பள்ளர்கள் தங்களை தேவேந்திர குலத்தவர்களாக தங்களை அடையாள படுத்துகிறார்கள்.சங்க இலக்கியங்களில் இந்திரன் மருதநில கடவுளாக குறிக்கப்படுகிறான்.இன்றும் வேளாண் குடிகளாக அறியப்படும் பள்ளர்களின் தேவேந்திர குல தொன்மம் எளிதில் புறக்கணிக்க கூடியதல்ல.
எந்த தேவேந்திரர்களை காக்க முருகன் எந்த அசுரர் குடியை கெடுத்தான் என்பது கருப்பு வெள்ளையாக பார்க்காமல் கவனமாக ஆராய கூடிய ஒன்று.கல்யாணத்தை நிறுத்தனுமா வேண்டாமா என்பது அடுத்ததாக முடிவெடுக்க வேண்டிய ஒன்று.
பதிவிற்கு இந்தப் பின்னூட்டம் பொருத்தமாக இருப்பதால் மறுமொழி தனியாக எழுதலாம். ஆனால் அதற்கு முன் அசுரர் குடிகெடுத்த ஐயா என்பதவன் பார்வையைத் தொட்டுச்செல்வதாக இப்பின்னூட்டம் இல்லை என்று கருதுகிறேன். வேதகாலத்தைப் பொறுத்தவரை அசுரர்கள் என்பவர்கள் சுரா பானம் தவிர்த்தவர்கள். தண்ணியடிக்காதவர்களும் கஞ்சா குடிக்காதவர்களும் இந்துப்பார்ப்பனியத்திற்கு அசுரர்களாகத் தெரிகின்றனர். ஒருவரை அசுரர் என்று குறிப்பிடுகிற இந்த வார்த்தையே பார்ப்பனிய இந்து மதத்தின் எதேச்சதிகாரத்தை எடுத்துக்காட்ட போதுமானது. இதுதவிர பின்னாளில் அசுரர் என்பதன் கீழ் பார்ப்பனரை எதிர்த்தவர் எல்லாம் கீழிருத்தப்பட்டனர் என்பதன் கலாச்சாரக் குறியீட்டையும் இவ்வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டு கோணங்களையும் கவனமாக தவிர்க்கிறீர்கள். இதுவரை தாங்கள் ‘கட்டுரை சுட்டுகிறது’ என்று தான் சொல்கிறீர்களே தவிர பதிவு குறித்து தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கவில்லை. இதன் நோக்கம் முருகன் அசுரனை அழித்தது தன்னளவில் சரிதான் என்ற பார்வையையே சுட்டிக்காட்டுகிறது. இது சரியா? தங்களது பார்வையை பதிவு செய்வது விவாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொய்யுக்கும் புரட்டிற்கும் ஒரு அளவுண்டு! ஏதோ நாரத கான சபாவிலே பங்கஜம், ங்கஜம், கஜம், ஜம், ம் என்று பிரிக்கிற தொடைதட்டிகளின் கலாச்சாரம் தான் தமிழ் என்று நினைத்துவிட்டார் போலும் அம்பி.
அம்பி சுட்டிக்காட்டுகிற வரிகள் அளவடிகள் தான். தமிழில் அலகிடுதல் வாய்பாடு படித்த ஒரு பள்ளி மாணவனுக்கு தெரியும் எது அளவடியாக வருமென்று!
“இன்னே வருகுவர் இன்துணை யோரென”
“உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து”
“ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து”
இம்மூன்று அடிகளுமே அளவடிகள் தான்! இதை மூன்று சீராக மாற்றவே முடியாது; நான்கிற்கு மேற்பட்டதாக பிரிக்கவும் முடியாது. ஏனெனில் மூன்று சீர்களாக இவ்வடிகளைத் தொகுத்தால் அவை கனிச்சீர் வாய்ப்பாட்டைப்பெறும். வஞ்சிஉரிச் சீர்களான கருவிளங்கனி, கூவிளங்கனி என்று ஆசிரியப்பாவில் வருமானால் அதை நாம் ‘அம்பியப்பா’ என்று தான் அழைக்க வேண்டுமே தவிர ஆசிரியப்பாவென்று அல்ல.
நான்கு சீரைத்தாண்டி எழுதுவது ஆசிரியப்பா அல்ல; எனவே மடக்கி மடக்கி சீர்களை எழுதுகிற நரித்தனத்தை அம்பி கைவிடவேண்டும்.
மேலும் தலைவியின் வருத்த மிகுதி நெடுநல்வாடையில் எந்த அடியில் வருகிறது என்று சொன்னால் தகும்? அப்படியொரு பாடல் வரி நெடுநல்வாடையில் கிடையாது. தலைப்பைபிடித்துக்கொண்டு தொங்குகிறாரா என்று தெரியவில்லை!
திருமுருகாற்றூப்படைக்கும் மேற்சொன்ன அலகிட்டு வாய்பாட்டை பயன்படுத்தி பாவகையை நோக்கித் தெளிக. சூரனை மயிலாகி மாற்றுகிற பார்ப்பனிய நைச்சியம் தமிழ் மொழிக்கு அவசியமில்லை!
// “இன்னே வருகுவர் இன்துணை யோரென”
“உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து”
“ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து”
இம்மூன்று அடிகளுமே அளவடிகள் தான்! இதை மூன்று சீராக மாற்றவே முடியாது; நான்கிற்கு மேற்பட்டதாக பிரிக்கவும் முடியாது. ஏனெனில் மூன்று சீர்களாக இவ்வடிகளைத் தொகுத்தால் அவை கனிச்சீர் வாய்ப்பாட்டைப்பெறும். வஞ்சிஉரிச் சீர்களான கருவிளங்கனி, கூவிளங்கனி என்று ஆசிரியப்பாவில் வருமானால் அதை நாம் ‘அம்பியப்பா’ என்று தான் அழைக்க வேண்டுமே தவிர ஆசிரியப்பாவென்று அல்ல. //
மூன்று சீராக யார் மாற்றச் சொன்னது.. ஆசிரியப்பாவில் 5 சீர் நெடிலடிகளை அளவடிகளாக மாற்ற வலிந்து மூவசைச் சீர்களை உருவாக்கி இதோ பார் அளவடி என்று அளப்பது யார்..?!
மேலே குறிப்பிட்ட அடிகளில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள ”மிகக்கலுழ்ந்து”, ”புறம்போந்து” என்ற இரண்டு சீர்களையும் அசை பிரியுங்கள் பார்க்கலாம்.. நெடிலடியை அளவடியாக்க, வலுக்கட்டாயமாக மூவசைச்சீர்களை உருவாக்க முயன்று பங்கஜத்துக்கு அசை பிரித்தது போல் எதையாவது பண்ணி ஆசிரியப்பாவை கழிதலப்பா ஆக்கிவிடாதீர்..
// நான்கு சீரைத்தாண்டி எழுதுவது ஆசிரியப்பா அல்ல; எனவே மடக்கி மடக்கி சீர்களை எழுதுகிற நரித்தனத்தை அம்பி கைவிடவேண்டும்.//
ஆசிரியப்பாவின் இடையில் நாற்சீர் அளவடியல்லாத 5 சீர் நெடிலடி வரினும் அது ஆசிரியப்பாதான் சிங்கமே..
//மேலும் தலைவியின் வருத்த மிகுதி நெடுநல்வாடையில் எந்த அடியில் வருகிறது என்று சொன்னால் தகும்? அப்படியொரு பாடல் வரி நெடுநல்வாடையில் கிடையாது. தலைப்பைபிடித்துக்கொண்டு தொங்குகிறாரா என்று தெரியவில்லை!//
அளவடியின் நடுவில் தலைப்பை கொடுத்து வைத்திருந்ததை வெட்டி ஒட்டும்போது கவனிக்கவில்லை..
// திருமுருகாற்றூப்படைக்கும் மேற்சொன்ன அலகிட்டு வாய்பாட்டை பயன்படுத்தி பாவகையை நோக்கித் தெளிக. சூரனை மயிலாகி மாற்றுகிற பார்ப்பனிய நைச்சியம் தமிழ் மொழிக்கு அவசியமில்லை! //
தமிழ் மொழிக்கு எந்த நைச்சியம் தேவையில்லைதான்.. உங்களுக்கு தேவையாயிருக்கிறதே..:
மேற்படி கட்டுரையில் வரும் தர்க்கம்..: //மேற்குறிப்பிட்ட இரண்டு அடிகளிலும் ஒருகை என்ற சொல் அமைந்துள்ள நிலையில் அவற்றை முச்சீராகக் கொள்ளாமல் இரண்டு சீர்களாகக் கொண்டு ஒருகை என்பதைக் கூனாக எடுத்துக் கொண்ட நிலையில் ஆசிரியடியாக இவ்வடிகள் அமைகின்றன என்று புதுவிளக்கமும் தரலாம். சோ.ந.கந்தசாமி இவ்வடிகளை இருசீராகக் கொண்டால் வஞ்சியடிகளாக விளங்கி வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியம் என்று கொள்ளவும் இடம் உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் திருமுருகாற்றுப்படையில் வேறு எங்கும் வஞ்சியடிகள் பயிலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.// ஆனால் அதில் வேறு எங்கும் சிந்தடிகள் மட்டும் வந்திருக்கிறதா என்று பார்த்துச் சொல்லவும்..