Tuesday, October 27, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

-

மற்ற மதத்தவர்களை விட முசுலீம்கள் மட்டும் தமது மதத்தை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்ற கருத்து பொதுவில் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்துமதவெறியர்களது மூலதனமாகவும் செயலாற்றுகிறது. இசுலாமிய கடுங்கோட்பாட்டு அடிப்படைவாத இயக்கங்களும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே செயல்படுபகின்றன. மற்றவரது பண்பாடு, வழிபாடு, பண்டிகைகளை முசுலீம்கள் வெறுக்கிறார்கள் என்பதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்கிறது. 

இவை உண்மையல்ல என்பதை நடைமுறை மூலம் நிரூபிக்க விரும்பினோம். தீபாவளி அதற்கு பொருத்தமான நேரம். இதோ சென்னை வாழ் இசுலாமிய மக்கள் பேசுவதைப் பாருங்கள். இடையே ஓரிரு கிறித்தவ, ‘இந்து’க்களும் கூட உண்டு.  உழைக்கும் மக்களிடையே மதவெறிக்கும், மதவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை அவர்கள் வாயாலேயே கேளுங்கள்!

ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?

– வினவு

அலிப் உசேன்
அலிப் உசேன், வயது 14: “லச்சுமி பட்டாசு வெடிச்சேன். ஈஸ்வரி ஆண்டி ஜாங்கிரி, பொங்கல், பழமெல்லாம் கொடுத்தாங்க. அவங்க செஞ்சா நமக்கு, நம்ம செஞ்சா அவங்களுக்கு….”

சாதிக்
சாதிக், வயது 45, பூஜை பொருட்களை விற்பவர்: “பிரண்ட்ஷிப்தான் சார் முக்கியம். மனசு தான் காரணம். மத்தபடி தீபாவளி பலகாரம் சாப்டறதுல பிரச்சினையில்லை. இந்த தொழில் செய்றதுல என்ன தப்பு சார்? நான் திருடுறனா இல்ல பொய் சொல்றனா? இந்த தொழில்ல முதலீடு கம்மி. ஜமாத்துல கூட கற்பூரம், குங்குமம், திருஷ்டிக் கயிறு விற்க கூடாதுங்குறாங்க. வெறுமன தேங்காயும், வெத்தலையும் வித்தா யாரு வருவாங்க? பக்கத்துல பூஜை கடை வைச்சிருக்குறவரும் டிஎன்டிஜேவுல இருக்குறவரோட தம்பிதான். போரூருக்கு பக்கத்துல அந்த டிஎன்டிஜே பாயும் இதே மாதிரி கடை வெச்சிருக்கார். நமக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டம்.”

 

ரியாஸ்
ரியாஸ், வயது 34, ஆட்டோ டிரைவர்: “அண்ணன் தம்பியா பழகுறோம். அதனால தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வாங்குவோம் சார். தர்காவுக்கு நான் போக மாட்டேன், போறவங்கள தடுக்க மாட்டேன்.”

முஜீப்
முஜீப், வயது 32, அல் அமீன் மட்டன் ஸ்டால்: “நாங்க கொடுத்தா அவங்களும், அவங்க கொடுத்தா நாங்களும் சாப்பிடுறது காலங்காலமா நடக்குது. இது ஒரு சந்தோசமான நாள் சார். இப்பத்தான் பக்கத்து வீட்ல கறி வாங்கிட்டு போனாங்க. அங்க இருந்து எங்க வீட்டுக்கு பணியாரம் வந்திருக்கும். அத சாப்பிட்டா ஹரம்னு சொன்னா அதான் தப்பு. இப்போ நானே பிரியாணி தர்றேன். ருசியே இல்லாட்டி கூட பாய் நம்ம மதிச்சு தர்றாருனு வாங்கி சாப்பிடுவீங்க. இது பரஸ்பரம் இருக்கணும்.”

 

கலாவதி
ஆர். கலாவதி, வயது 45, வருமான வரித்துறையில் வேலை, இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்: “மனசுதான் சார் காரணம். எல்லோருக்கு ரத்தம் செவப்புதானே? நான் இங்கயே பொறந்து வளந்தவ. வேண்டாம் வேண்டாம்னாலும் கூப்பிட்டு கொடுப்பாங்க. நாங்களும் கிறிஸ்துமசு அப்போ கேக்கும், பிரியாணியும் கொடுப்போம். சாமிக்கு படைக்கறதுக்கு முன்னாலயே தனியா எடுத்ததுன்னு சொல்லித் தருவாங்க. உறவுதான முக்கியம்?”

பார்த்திபன்
பார்த்திபன், வயது 25, ஏர்செல் மார்க்கெட்டிங் வேலை: “அப்பா இறந்துட்டாரு. ஆனா அவரோட பிரண்டு சுல்தான் டெய்லர் அண்ணனுக்கு காலைல ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தேன். என்னோட பெஸ்டு பிரண்டு முகமது யாக்கோப். அவங்க வீட்டு கிச்சன் வரை போய் வருவேன். மாமா, மச்சானுதான் பேசிக்குவோம். அவனுக்கு நாங்க வச்சிருக்க பேரு கெளவி”

ஜாபர் நிசா
ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க இல்லியா”

ஜாஹீர் உசேன்
ஜாஹிர் உசேன், 21, மெக்கானிக்கல் டிப்ளமோ: “போன வருசம் தந்தாங்க. இந்த வருசம் வரல. ஏன்னா ஊருக்கு போயிட்டாங்க. போன வருசம் லட்டு, அதிரசம், சுண்டல் எல்லாம் வந்துச்சு. வெடியெல்லாம் சின்ன வயசுல போட்டேன். இப்போ இன்ட்ரஸ்டு இல்லை. எனக்கு திக் பிரண்டு சக்தி சரவணன், மாமா மச்சானுதான் கூப்பிட்டுக்குவோம். மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்.”

ஹீரின் பேகம்

ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”

 

 

 

 

 

முகமது இப்ராஹிம்
முகமது இப்ராஹிம், வயது 50, லிப்ட் டெக்னீசியன், ஹீரின் பேகத்தின் கணவர்: “சாப்பாட்டுல என்ன சார் இருக்கு? வந்தா விடக் கூடாது. அநியாயமா சம்பாதிக்கிறதுதான் தப்பு”

 

ஜீனத்
ஜீனத், வயது 40: “நாங்க முசுலீம்தான். என்னோட வூட்டல இருக்குற சரசாகிட்ட இருந்து அதிரசம், முறுக்கு வந்துச்சு. மதிங்கிற குடும்ப நண்பர் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாரு. பூசை பண்ணி சாப்பிட கூடாது தான். ஆனா எம்மதமும் சம்மதம்னு இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிடுவேன். அப்பிடி பாத்தா என் வீட்ட இந்துக்களுக்கு வாடகைக்கே விடக் கூடாது. அதெல்லாம் முடியுமா. சின்ன விசயத்த பெரிசாக்குறாங்க. எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.”

 

பஷீர் அகமது
பஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை  5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன். ஆனா முன்ன இந்து பிரன்ட்ஸ்ங்கக்கூட ஒரே கிளாஸுலதான் குடிப்பேன். நாகூர் தர்க்காவுக்கு முன்ன போனேன். இப்ப இல்ல. ஆனா என் பொண்ட்டாட்டி கூப்புட்டதால…. இப்ப போனேன். ஊர்ல்ல இருந்து தம்பிங்க வந்தா அவங்ககூட.. தர்க்காவுக்கு போவேன், இல்லனா அவங்க கோவிச்சுக்குவாங்க. தவ்ஹீத் ஜமாத்துல சேந்தாலும் நான் சூனியத்தை நம்புறேன். அவருக்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) யார்னா சூன்யம் வைச்சா..அப்ப.. தெரியும்! தவ்ஹீத் ஜமாத் ஐ நிர்வாகிங்க கூட வரதட்சணைக் கொடுத்துதான் கல்யாணம் பண்ணாங்க!

 

muslim woman

– புகைப்படங்கள், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அழகோ அழகு..!!

  சிறப்பானதொரு ரிப்போர்ட்டை எடுத்திருக்கும் வினவு தள நண்பர்களுக்கு நன்றி. இப்பத்தான் நம்ம இலியாஸ் பாய் இனிப்புப் பலகாரங்கள் கொண்டாந்து கொடுத்தாப்ல. அவங்க வீட்டுக்கு வந்த தீபாவளி ஸ்வீட்ஸ். அவரும் எங்களோட சேர்ந்து சாப்பிட்டாரு. மக்கள் வேறுபாடு பார்ப்பதில்லை; அது எல்லோருக்குமே தெரியும்.

  ஆர்.எஸ்.எஸும் டி.என்.டி.ஜேவும் ஒண்ணு; அறியாதவன் வாயில மண்ணு!

 2. ” ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை” – பார்ப்பனர் வீட்டில் முஸ்லிம் சகோதரிக்கு எப்படி வேலை கிடைத்தது. அப்ப வினவுல வர்ற பார்ப்பன எதிர்ப்பு செய்தி எல்லாம் கப்ஸாவா?

  • “ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?”

   • Thiru Vinavu avarkale thangalathu veetu samayalarai varai vanthu velai paarka anumathithu, manithaabimaana adipadayil thangalathu veetu inippukal mattrum pattasulkalai vazhankiya paarpanargalai Mathaveri kondavargal endru solvathai sirithu kooda etru kolla mudiyaathatgaaga ullathu!

   • அய்யா விணவு நல்லா வக்கனையாதான் பேசுறீங்க நான் போட்ட பின்னூட்டத்தை ஏன் வெளியிட வில்லை அதில் யாரை தாக்கி இருந்தேன் //கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
    வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
    ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.//
    இந்த மூன்று விவரங்களில் எதை மீறி இருந்தேன் என்பதை தெளிவு படுத்துவீர்களா…

  • Very True. The Videos of Zakir Naik was introduced by one Muslim guy to the rest of my Muslim friends at my office. It spread easily like a Virus and corrupted every one.
   They no longer even took Thirupati Prasadam (Laddu) which they use to take previously.

    • இராமன் ,ஹிந்து சமுகத்திலேயே அதன் மக்களிடம் இருந்தே, தீட்டு என்று சமைத்த உணவை கூலியாக வாங்காமல், சமைக்காத அரிசி பருப்பை வாங்கி செல்லும் சவுண்டி பார்ப்பானும் ,கல்யானம் ,புது மனை பூகு விழாவுக்கு பூசை போடும் பார்ப்பானும் இருப்பதை நீர் மறந்தது எந்த விதமான சவுகரியம் கருதி ஐயா ??????? ,

      • இப்படி பேசி வாலை சுருட்டிக்கொண்டு ஓடினா எப்படி இராமன் ? எனக்கு பதில் எழுதி பாருங்க! வினவு பர்மிட் செய்யாமலா போக போவுது ?

  • ராமன் இன்னுமா இந்த லட்டு கள்ளப்பரப்புரையை கைவிடவில்லை.இதற்கு ஏற்கனவே வாணக்காரய்யா பதிவில் அளித்த விளக்கம்.
   தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அழகாக எடுத்துக் காட்டுகிறது கட்டுரை.பொறுக்குமா மதவெறியர்களுக்கு.பாய்ந்து வந்து குதறுகிறார்கள் முசுலிம்களை.

   கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே அப்பட்டமான பார்ப்பனிய இந்து மதவெறி நஞ்சை கக்குகிறார் ராமன்.நாங்க லட்டு குடுத்தா அவன் திங்க மாட்டேங்குறான் என்று ரெம்பவே உணர்ச்சிவசப் பட்டு சினம் கொள்கிறார்.இதற்கு முன்னா என்பவர் தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார்.ஒரே தெய்வ வழிபாட்டை கொள்கையாக கொண்ட முசுலிம்கள் பிறிதொரு தெய்வ பிரசாதத்தை உண்ண வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்.

   அதே சமயம் இந்து மதத்தார் மீதும் அவர்கள் நம்பிக்கை மீதும் வெறுப்பு கொண்டு முசுலிம்கள் இதை செய்யவில்லை.இந்து மத நண்பர்கள் வீடுகளிலும் திருமண வைபவங்களிலும் முசுலிம்கள் விருந்துண்டு மகிழ்வதை கண்கூடாக காணலாம்.நான் ஆண்டுதோறும் தீபாவளி அன்று எனது நண்பர் மிண்ட் சாமியின் தாயாரின் கைப்பக்குவத்தில் உருவான பதார்த்தங்களை குறிப்பாக அதிரசத்தை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

   ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது” என்ற நெறிமுறையை இந்து முசுலிம் கிருத்துவ மக்கள் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள்.உங்கள் சிந்தனை ரெம்பவே பெருக்கெடுத்து ஓடுவதால் உங்களால் அதை உணர முடியல போல.

   கிருத்துவர்களும் தலித்களும் பன்றி இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக முசுலிம்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை.அவர்கள் கடைகளில் பொருள் வாங்காதேன்னு சொல்றதில்லை.அவர்களுக்கு வீடு தர மாட்டோம்னு முசுலிம்கள் சொல்றதில்ல.அவுக வீடுகள்ல குடியிருக்க மாட்டோம்னு சொல்றதில்ல.சென்னை போன்ற நகரங்களின் எந்த ஒரு சேரியை எடுத்துக்கிட்டாலும் கிருத்துவ இந்து தலித் மக்களுடன் முசுலிம்கள் சேர்ந்து வாழ்வதை காணலாம்.முசுலிம்கள் இல்லாத ஒரு சேரி கூட சென்னையில் இருக்காது.
   ஆண்டுதோறும் திருப்பதி குடை கவுனி தாண்டும் திருவிழா அன்று வட சென்னை நகரமெங்கும் அன்னதான நிகழ்ச்சிகள் வீதிதோறும் நடக்கின்றன.அதற்காக நன்கொடை வசூலிக்கும் அன்பர்களை கேட்டுப் பாருங்கள்.ஒரு தெருவில் கூட நன்கொடையில் முசுலிம்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.

   மசூதிகளில் தொழுகை நேரம் என்றால் அவற்றை கடந்து செல்லும் இந்து மத பக்தி ஊர்வலங்களில் செல்லும் இந்து சகோதரர்கள் இசைக்கருவிகளை இசைப்பதில்லை.மசூதிகளின் வாயிலில் காலை மாலை தொழுகை நேரங்களில் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய சொல்லி இந்து மத தாய்மார்கள் குவிகிறார்கள்.மசூதிகளுக்கு அருகில் கடை வைத்திருக்கும் இந்து மத சகோதரர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்க பள்ளிக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்கிறார்கள்.சென்னையில் ஒவ்வொரு பள்ளியிலும் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை இந்து,கிருத்துவ சகோதரர்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

   கிருத்துவ மத நிறுவனங்கள் நடத்தும் சில பள்ளிகளில் கூட [ஆண்டு முழுவதும் இல்லன்னாலும்] சில சமயம் வெள்ளி கிழமை சிறப்பு தொழுகைக்கு போய் வர முசுலிம் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் விடுப்பு தருவதும் உண்டு.

   இப்படியான நிகழ்வுகள்தான் ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது”

   அதை விடுத்து லட்டு தின்னால்தான் நல்லிணக்கம் என்று பிதற்றாதீர்கள்.இந்து மத நம்பிக்கைபடி தெய்வத்துக்கு படைக்கப்பட்ட உணவை உண்பது புண்ணியம்.அதுவும் ஒரு வழிபாடு.அதனால்தான் தெய்வ பிரசாதத்தை கோவிலுக்கு வெளியே பல கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு வந்து கொடுத்தாலும் இரு கரம் ஏந்தி அதை வாங்கி பவ்யமாக உண்கிறார்கள் இந்து மத சகோதரர்கள்.

   ஆக ஒரு இந்து மத வழிபாட்டை முசுலிம்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அதை செய்யலன்னா மத நல்லிணக்கம் இல்லைன்னு சொல்றதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

   https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122322

    • ராமனோட ”இனப் ரிப்ளை” இதுதான்.

     https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122388

     அதற்கு கொடுத்த விளக்கம்.

     முசுலிம்கள் திருப்பதி லட்டை உண்ண முடியாது என நான் அளித்த விளக்கத்திற்கு ஒரு வரி கூட மறுப்பு சொல்ல முடியவில்லை உங்களால்.ஆனால் அது தவறு என்று பெரிய நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்கிறீர்கள்.அறிவாளியே திருப்பதி குடைக்கு நன்கொடை கொடுக்கும் அதே முசுலிம் சகோதரர்கள்தான் திருப்பதி லட்டை ஏற்க மறுக்கிறார்கள்.அதே சமயம் நோன்பு துறக்க கஞ்சி காய்ச்ச இந்து சகோதரர்கள் நன்கொடை கொடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

     தன்னளவில் ஒரு செயலை செய்ய மறுப்பதே மதவெறியாக உங்களுக்கு தெரிகிறது என்றால் நீங்கள் சிந்தனை சிகரம்தான்.நாங்கள் மதவெறியர்களா இல்லையா என்பதை எங்கள் கருத்துக்களை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.உங்களை போன்ற கடவுள் மறுப்பாளர் வேடத்தில் நடமாடும் பார்ப்பன இந்து மத வெறியர்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை.

     \\என்னை திசை திருப்ப முடியாது //

     வேணாம்யா.உங்க திசையிலேயே இருந்துக்கங்க.இந்த பக்கம் வந்து உங்க மதவெறி நோயை மத்தவங்களுக்கும் பரப்பிற போறீங்க.

    • \\I cant waste my time listening to your how muslims are best//

     அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது.இதை மட்டும் படிக்கவும் மறுமொழி எழுதவும் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடுவது எப்படி.காரணத்தை நான் சொல்லவா.

     முசுலிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வது குறித்த செய்திகளை கண்டாலே உங்களை போன்றவர்களுக்கு ”டாப் டு பாட்டம் பத்த்த்திண்டு எரியறது”. அதுனால அந்த பதிவுகளின் மீது முசுலிம் எதிர்ப்பு வெறியை கழிஞ்சு வைக்க வந்துர்றீங்க.

     • பொங்கலை ஆண்டவனுக்கு படைக்காமல், தனியாக எடுத்து வைத்து தனது மத சடங்குகளை புறம் தள்ளி சக மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து , ஒரு படி மேலே சென்று , மத நல்லிணக்கத்தில் தனது பங்கை ஆற்றியவன் இந்து .

      கொடுக்கப்பட்ட உணவை ஆசீர்வதிக்கப்பட்டதா இல்லையா என்று மனம் முழுவதும் மதம் நிறைத்து ஆராய்ந்து ஏற்று கொள்பவன் முஸ்லிம் . சக மனிதனின் பண்பாட்டிற்கு மதிப்பளைக்காதவன் . ஹோட்டலில் சாபிடுவது மாதிரி …

      ஹலால் உணவு என்று இந்துக்கள் புறம் தள்ள மாட்டார்கள் . எல்லாவற்றிற்கும் மதத்தை வைத்து கொண்டு முடிவு எடுக்கும் நிலை அவர்களுக்கு இல்லை

      நீங்கள் பக்கம் பக்கமாக எழுதினாலும் இது மறுக்க முடியாத உண்மை .

      நான் குறிப்பிட்ட லட்டு கதையை இன்னொரு முறை படித்து _____ . ______ மது குடிப்பது ஹராமாக தெரியவில்லை ஆனால் லட்டு சாபிட்டால் ஆளாவுக்கு கோவம் வரும் …
      மத வெறியை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு , அது இயல்பானது தான் என்று உங்கள் மனதில் தோன்றும் அளவிற்கு தான் உள்ளது

      • \\பொங்கலை ஆண்டவனுக்கு படைக்காமல்…………….தனது பங்கை ஆற்றியவன் இந்து .//

       உண்மை.இந்து சகோதரர்கள் அண்டை வீட்டு முசுலிம்களின் மத உணர்வுகளை மதித்து நடந்து கொள்கிறார்கள்.அதுதான் சரியானது, நண்பர்கள் எந்த மத நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும் நமது விருப்பபடி உண்ண வேண்டும் பருக வேண்டும் என எதிர்பார்க்க கூடாது.முடியாது இல்லையா.

       ராமனின் நண்பர் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பி உண்பவராக இருந்தாலும் அதை அவருக்கு பரிசாக கொடுத்து அனுப்ப மாட்டார்.ராமனின் உணர்வுகளை புரிந்து அவ்வாறு நடந்து கொள்வார்.அது போன்றுதான் இந்து நண்பர்கள் முசுலிம் நண்பர்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

       \\கொடுக்கப்பட்ட உணவை ஆசீர்வதிக்கப்பட்டதா இல்லையா என்று //

       இதென்னய்யா வம்பா இருக்கு.யார் எதை குடுத்தாலும் வாங்கி தின்றே ஆகணுமா.ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.முசுலிம்கள் ஒரே இறைவன் என்ற [ஏகத்துவ] கொள்கை உடையவர்கள். பிற தெய்வ வழிபாடு அவர்களுக்கு ஏற்புடையது அல்ல.அப்படி பிற தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட உணவை,தெய்வீக தன்மை கொண்டதாக இந்துக்கள் கருதும் உணவை, எந்த உணவை உண்பது ஒரு புண்ணிய செயல் என கருதுகுரார்களோ அந்த உணவை முசுலிம்களும் உண்டால் அந்த வழிபாட்டை அவர்களும் ஏற்று செய்கிறார்கள் என்பதுதானே பொருள்.அதனால் அந்த உணவை முசுலிம்கள் உண்பது இயலாத ஒன்றாக உள்ளது.இது மத வெறி அல்ல,மத உணர்வு.

       இதை மத வெறி கொள்ளாத இந்து சகோதரர்கள் புரிந்து நடந்து கொள்கிறார்கள்.அவர்களுக்கு அதில் பிரச்னை ஏதுமில்லை.உங்களுக்கு இது பிரச்னையாக தெரிகிறது என்றால் கோளாறு உங்களிடம்தான் இருக்கிறது.

       ………… முஸ்லிம் . சக மனிதனின் பண்பாட்டிற்கு மதிப்பளைக்காதவன் . ஹோட்டலில் சாபிடுவது மாதிரி //

       சக மனிதனின் பண்பாட்டை மதிப்பது வேறு.அதையே பின்பற்றுவது வேறு.

       \\ஹலால் உணவு என்று இந்துக்கள் புறம் தள்ள மாட்டார்கள் . எல்லாவற்றிற்கும் மதத்தை வைத்து கொண்டு முடிவு எடுக்கும் நிலை அவர்களுக்கு இல்லை//

       உண்மை.இந்துக்கள் பல தெய்வ வழிபாட்டுக்கு சொந்தக்காரர்கள்.அதனால் ”பிஸ்மில்லா ” என்று சொல்லி அறுக்கப்பட்ட [இவ்வளவுதான் ஹலால் உணவு எனபது ] ஆட்டு இறைச்சியையோ,மாட்டு இறைச்சியையோ சாப்பிடுவதில் அவர்களுக்கு பிரச்னை இல்லை.இந்த இரண்டையுமே சாப்பிடாத உங்களுக்கு இதில் என்ன பிரச்னை.முசுலிம்கள் தங்களுடைய செயல்களை பொறுத்தவரை தங்களின் மதத்தை பின்பற்றி நடந்தால் அதில் என்ன தவறு.திருப்பதி லட்டை முசுலிம்கள் தின்னே ஆகணும்னு நீங்க அடம் பிடிக்கிற மாதிரி மற்றவர்களை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதுதான் தவறு.

       \\மது குடிப்பது ஹராமாக தெரியவில்லை //

       மது அருந்துவது ஹராம்தான்.இல்லையென்று யார் சொன்னது.மது அருந்தி போதையில் திளைப்பவன் உண்மையான முசுலிம் இல்லை.ஒரு பாவ செயலை செய்பவன் அந்த செயலை விட்டு நீங்கும் வரை,அந்த செயலை செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் முசுலிம் இல்லை என்பதுதான் இசுலாமிய நெறி.

       \\லட்டு சாபிட்டால் ஆளாவுக்கு கோவம் வரும் …
       மத வெறியை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு , அது இயல்பானது தான் என்று உங்கள் மனதில் தோன்றும் அளவிற்கு தான் உள்ளது//

       மீண்டும் சொல்கிறேன்.தன்னளவில் ஒரு செயலை செய்யாமல் இருப்பது மத வெறி ஆகாது.
       இது புரியவில்லை என்று சொன்னால் ஒன்று செய்யலாம்.உங்களுக்கு ஒரு தட்டு மாட்டுக்கறி பிரியாணியும்,முழு ஆட்டு ஈரல் வறுவலும் தருகிறேன்.அதை நீங்கள் உண்டால் திருப்பதி லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் என ஏற்கலாம்.உண்ண மறுத்தால் லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் இல்லை என கொள்ளலாம்.

       • //இது புரியவில்லை என்று சொன்னால் ஒன்று செய்யலாம்.உங்களுக்கு ஒரு தட்டு மாட்டுக்கறி பிரியாணியும்,முழு ஆட்டு ஈரல் வறுவலும் தருகிறேன்.அதை நீங்கள் உண்டால் திருப்பதி லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் என ஏற்கலாம்//

        ____ புரியாது . இருந்தாலும் மத்த வினவு வாசகர்களுக்கு புரியணும் என்பதற்காக எழுதுகிறேன் .

        அதாவது இசுலாமியருக்கு பன்றிக்கறி கொடுத்து சாப்பிடு என்று ஒருவர் சொன்னால் , அது கொடுத்தவரின் பிழை. அதற்கு பெயர் மத சகிப்புத்தன்மை அல்ல ,மத துவேசம்.

        ஆனால் அவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது , உணவு என்று பார்க்காமல் , மதத்தை முன்னிறுத்தி சிந்திப்பவன் மதவாதி . சைவ உணவில் தீட்டு பார்க்கும் பார்பனனுக்கும் இதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை .

        என்னுடைய மதம் சொல்லுது சாமி சொல்லுது என்று பசும்தொல் போர்த்திகொண்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா

        பின்குறிப்பு : ஆட்டுகால் வறுவலை தனியாக எடுத்து வைக்கவும் . எனது குடும்பத்தில் மற்றவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

        • \\ஆனால் அவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது //

         பன்றி இறைச்சி கூட பலருக்கு விருப்பமான உணவாக இருக்கிறது.

         \\____ புரியாது //

         மட்டுறுத்தலில் அடிபடும் அளவுக்கு கீழ்த்தரமான சொற்களால் எதிர்வாதம் செய்பவர்களை குறிக்கிறார்..அந்த அளவுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்கிறது.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அல்லவா.அதனால்தான் யாருக்கு புரிய வேண்டும் என்று சொல்கிறேன் என்பது கூட அவருக்கு விளங்கவில்லை.

         \\ஆட்டுகால் வறுவலை தனியாக எடுத்து வைக்கவும் . எனது குடும்பத்தில் மற்றவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் //

         மாட்டுக்கறி பிரியாணியும் ஆட்டு ஈரலும் சேர்த்துதான் தருவதாக சொன்னேன்.பிரியாணிதான் முதன்மை உணவு,ஈரல் தொடுகறி தான்.ராமன் மாட்டுக்கறி பிரியாணியை புறக்கணிப்பது ஏனோ.இவரும் இவரு குடும்பமும் மட்டும் ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது தங்கள் கொள்கைக்கு மாற்றமாக இருந்தால் உண்ண மறுப்பார்களாம்.பாய்ங்க மட்டும் இவர் குடுக்குறத தங்கள் கொள்கையை பத்தி யோசிக்காம சாப்புடணுமாம்.நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.ஓகோ, இதுதான் சாதிக்கொரு நீதியோ.

         • //பன்றி இறைச்சி கூட பலருக்கு விருப்பமான உணவாக இருக்கிறது.
          //

          Here I refer receiving party. Not the person who gives.

          \\____ புரியாது //

          By the way , I dint use any derogatory word .I had used the word “you”. Vinavu wants respectful You.

          //ராமன் மாட்டுக்கறி பிரியாணியை புறக்கணிப்பது ஏனோ//

          I am a vegetarian. But You see my family beleives in relegion.They beleive If you eat meat on saturday, god will take your eye kind of stories.

          You will never get the point.I dont expect any religious people will do. They are cant seem to think outside their religion box.I am sorry for you thippu

          • \\ I dint use any derogatory word …. wants respectful You.//

           நான் உங்களை போங்க வாங்க என்று அழைக்கும்போது நீங்கள் மட்டும் ”நீ” என அழைக்க தலைப்பட்டது ஆத்திரத்தின் வெளிப்பாடுதானே.அதுக்குத்தா உங்க இங்கிலிபிசு இருக்கே.நிறைய ”அறிவாளிகள்” ஆங்கிலத்தில் எழுதுவதே எதிராளிகளை போங்க வாங்க என்று அழைக்க விருப்பமில்லாததால்தானே.

           \\ But You see my family beleives in relegion.They beleive If you eat meat on saturday, god will take your eye kind of stories.//

           உங்க குடும்பத்தினரின் மத நம்பிக்கைகளை,உணர்வுகளை மதித்து மாட்டுக்கறி பிரியாணியை அவர்கள் உண்ண வேண்டாம் என விலக்கு அளிக்கும் நீங்கள் முசுலிம்களின் மத நம்பிக்கைகளை,உணர்வுகளை மதித்து திருப்பதி லட்டிலிருந்து விலக்கு அளிக்க மறுப்பதற்கு காரணம் என்ன.அதுதான் உங்கள் நெஞ்சில் தங்கியிருக்கும் முசுலிம் எதிர்ப்பு நஞ்சு..

           பி.கு.

           மேலும் இந்த விவாதத்தை ‘வளவளன்னு இழுக்க விருப்பமில்லை.இதற்கு ஒரு பின்னூட்டத்தை போட்டு நீங்களே வெற்றி அடைந்து கொள்ளுங்கள்.

          • பார்பனர்கள் எல்லாம் தன் ஹிந்து மத வேதங்களின் அடிப்படையில் தான் அசைவ உணவு சாபிடாம இருக்கா ! என்ற எளிய உண்மை கூட “பாட்டாளி வர்க்கம்” என்ற போர்வைக்குள் பூகுந்து பேசும் இராமனுக்கு வகுப்பு தான் எடுக்கனும் போல !இஸ்லாமியர்கள் திருப்பதி லட்டு சாப்பிடாததற்கு காரணம் அவர் மதம் தான் என்று திப்பு ஒத்துகிட்டார்! அது போல பார்பனர்கள் அசைவ உணவு சாபிடாம இருக்க காரணம் ஹிந்து மத வேதங்களின் அடிப்படை தான் என்று ஒத்துக்க பாட்டாளி வர்க்க முகமூடி இராமருக்கு என்ன தயக்கம் ?

        • //அதாவது இசுலாமியருக்கு பன்றிக்கறி கொடுத்து சாப்பிடு என்று ஒருவர் சொன்னால் , அது கொடுத்தவரின் பிழை. அதற்கு பெயர் மத சகிப்புத்தன்மை அல்ல ,மத துவேசம்.//

         //என்னுடைய மதம் சொல்லுது சாமி சொல்லுது என்று பசும்தொல் போர்த்திகொண்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா//

         மிகவும் நெத்தியடியான பதில்….. இந்து மத தெய்வங்களுக்கு படைத்த உணவை சாப்பிட்டால் தங்களுடைய மத உணர்வு பாதிக்கும் என்று கூறும் அயிந்து அறிவு அறிவிலிகள் இசுலாத்தில் மட்டுமல்ல கிறித்துவத்திலும் பலர் இருக்கிறார்கள். இந்து மத தெய்வங்களுக்கு படைத்த உணவை உண்பதால் இவர்களுக்கு என்ன வந்து விடப்போகிறது. எத்தனையோ முறை என் தோழர்கள் பலர் திருப்பதி சென்று வரும் பொழுது எனக்கும் லட்டு கொடுப்பார்கள். இதனை வருடங்களாக அதனை அன்போடு சாப்பிட்டு வருகிறேன் எனக்கென்ன சாக்காடா வந்துவிட்டது? இப்படி பேசுவதெல்லாம் முதிர்சியற்ற புத்தியை தான் காட்டுகிறது!!!!!

         • \\அயிந்து அறிவு அறிவிலிகள் //

          என்ன ஒரு நாகரீகம்.இந்த அளவுக்கு நாகரீகத்தில் சிறக்காத காரணத்தால் உங்களுடன் விவாதிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

          • என்னப்பா மறுபடியும் மறுபடியும் புரியாதமாதிரி நடிக்கிறீங்க …

           சைவ உணவு சாபிடரவருக்கு சைவ உணவை அண்டை வீட்டார் தருகின்ற பொது மத காரணம் சொல்பவன் மத வியாதி கொண்டவன்

           கோழி சாபிடுபவன் பக்கத்துக்கு வீட்டுக்காரன் கொடுத்த கோழி , தன மதப்படி வெட்டப்பட்டு இருக்கிறதா என்று சிந்திப்பது அயோக்கியத்தனம்

           ஆனால் பாம்பு சாபிடாதவனை , எங்க மதத்துல பாம்பு பிரியாணிதான் சார் நீங்களும் சாப்பிடனும் என்று எதிர்பார்ப்பதுவும் அயோக்கியத்தனம் தான்

           பார்பான் பக்கத்துக்கு வீட்டுக்காரன் கொடுத்த பொங்கலை தீட்டு என்று சொல்லும்போது இந்த அயோக்கியத்தனம் அப்பட்டமாக தெரிகிறது . நீங்கள் அதே அயோக்கியத்தனத்தை செய்து விட்டு நல்லவர்கள் என்கின்ற பட்டம் வேண்டும் என்கிறீர்கள் .

           எல்லா மதமும் பொய் தான் சார் அதுல எது நல்ல பொய் என்று சிந்திக்கவில்லை . எந்த பொய் மக்களை அதிகம் தனிமை படுத்துகிறது என்றுதான் பார்த்தேன் .

           அதிலே வினவு கூறுவது போல பாட்டாளி வர்க்கம் நிதர்சனத்தை உணர்ந்து இருக்கிறது . கோவிலில் கற்பூரம் விற்பவர் ஹராமா இல்லையா என்று சிந்தப்பது இல்லை .

           இதே பசியோடு இருந்தால் மாட்டுக்கறியோ பன்றிகறியோ ஹலாலோ கோசரோ என்று சிந்திக்க இடம் இல்லை ….

 3. ஹாஹாஹாஹா

  முஸ்லீம்கள் நல்லவர்கள், இந்துக்கள்தான் கெட்டவர்கள். சபாஷ் வினவு.

  • பெருமாள் தேவன்

   இந்துக்கள் முஸ்லீம்கள் நல்லவர்கள்தன் ஆன இந்த TNTJ & RSS மதவெறிகள் இயக்கம்தன் கெட்டவர்கள்

   உங்களமாதிரி

   • தமிழ் என்று பெயர் வைத்திருக்கும்போதே நீங்க ரொம்ப நல்லவர்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

 4. பார்பனர்களில் சிலர் அனைத்து சமூக மக்களிடமும் அன்புடன் பழகுவது உண்மையே எனது தந்தை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில ஆசிரியையாக பணியாற்றிய ஒரு பார்ப்பண ஆசிரியையும் எங்கள் வீட்டாருன் அன்புடன் பழகுவார்கள் எங்கள் வீட்டில் வந்து உணவுவகைகளை சாப்பிடுவது மட்டும் அல்லாமல் அவர்கள் செய்த உணவு வகைகளையும் எங்களுக்கு கொடுத்து அன்புடன் பழகி இருக்கிறார்கள், ஆனால் இசுலாமியர்கள் மட்டுமே நல்லவர்கள் அவர்கள் மட்டுமே சாதி மதம் பாராமல் நட்புணர்வுடன் பழகுகிறார்கள் என்று வினவு வலிந்து நிறுவ முயல்வது ஏன் என்று தெரியவில்லை ஆனால் நடைமுறை உண்மை வேறாகத்தான் இருக்கிறது பெரும்பான்மை முசுலீம்கள் மற்றவர்கள் தரும் உணவை உண்பதை கராம் என்றுதான் நினைக்கிறார்கள் பெருநகரங்களில் அருகருகே வசிப்பதால் பண்டிகை சமய்ங்களில் ஒருவர் உணவை மறவர்கள் பரிமாறிக்கொள்வதா இசுலாமியர்கள் மட்டும் சகிப்பு தன்மை உடையவர்கள் என்று சொல்லுவது ஏற்ப்புடையது அல்ல இசுலாமியர்களிலும் மத வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்னதான் நீங்க சொன்னாலும் இசுலாமியர்களில் சிலர் எதோ நட்புடன் குடுக்கிறார்கள் நாங்கள் பக்கத்து வீடு என்பதால்// ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க// ஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை 5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன்//என்றுதான் சொல்லி இருக்கிறார்கள் உழைக்கும் மக்களிடமே மதம் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது அதோடு மட்டும் அல்லாமல் நகரங்களில் அருகருகே குடியிருக்கும் மனிதர்களிடமே பாகுபாட்டை இசுலாம் உண்டாக்கி இருக்கிறது என்றால் இசுலாமியர்கள் மட்டும் தனித்து வசிக்கும் இடங்களில் மதம் எந்த அளவிற்க்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை எனவே எதோ இசுலாமியர்கள் மட்டும்தான் சகிப்பு தன்மை உடையவர்கள் என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்…

  • ஒரு பார்ப்பண ஆசிரியையும் எங்கள் வீட்டாருன் அன்புடன் பழகுவார்கள் எங்கள் வீட்டில் வந்து உணவுவகைகளை சாப்பிடுவது மட்டும் அல்லாமல் அவர்கள் செய்த உணவு வகைகளையும் எங்களுக்கு கொடுத்து அன்புடன் பழகி இருக்கிறார்கள்,

   __________ p.joseph அவர்களே,

   ஒரு பார்ப்பண உங்க விட்டுல சாப்பிட்டார் நாம்பிட்டேன் , வினவு சொல்வது போல் முஸ்லிம் அமைப்புகளும் அவர்களுக்கு சில அடிபொடிகள் இருக்கிறர்கள் அனால் அனைத்து முஸ்லிகளும் அவர்களை அதரிப்பது இல்லை

   காத்தர் நாட்டில் வடநாட்டு இந்து பூஜைசெய்த இனிப்புகளை முஸ்லிம் அரபி உட்பட சாப்புடுகிறன்

   அனால் அல்லேலியா கிறுத்துவன் மட்டும் தன் சாப்பிடமட்டன்

   முதல நீங்க சாப்பிடுவிங்கள __________ p.joseph ,

   • நான் சாப்பிடுவேன் தமிழ் ,நீங்க நம்பனும்றதுக்காக நான் எதையும் சொல்லல பாஸ் உண்மையத்தான் சொன்னேன் உங்கள் பார்வையில் நான் மதவெறியனாக தெரிகிறேன் என்ன செய்ய ….

  • ஜோசப்,

   சிலர் நம்மிடம் அன்பாக பழகுகிறார்கள் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். கொங்கு மாவட்டங்களில் வாழும் மக்கள் எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் இதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். அங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்து தான் நாம் முடிவு செய்ய முடியும்.

   பிறப்பின் அடிப்படையில் அமைந்த சமுதாயக் கட்டுமானத்தை , மனதளவிலும் தொழில்முறையிலும் ஏற்றுக் கொள்ளும் ஒருவன், அதன் அடையாளங்களைத் களையாமலேயே பிறரிடம் அன்பாகப் பழக முடியுமா. அப்படி ஒருவன் பழகினால் அது போலியானது. தலித் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள்/அதிகாரிகள் கோவிலுக்கு வந்து போனவுடன் கோவிலைக் கழுவித் தீட்டு கழிப்பதைப் போன்றது.

   கட்டுரையில் இசுலாமிய மக்களைக் குறிப்பாக காட்டுவதன் நோக்கம் தங்களுக்குப் புரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறீர்கள். ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பமானது தவறானது என்றும் உண்மையில் அம்மக்கள் இந்துக்களிடம் சாதரணமாக தான் பழகுகிறார்கள் எனவும் இக்கட்டுரை தகுந்த ஆதாரத்தைக் கொடுக்கிறது.

   அதுமட்டுமல்லாமல் , கட்டுரையில் கற்பூரம் காட்டியதை சாப்பிட மாட்டேன் என்று அனைவரும் கூறவில்லையே. ஓரிருவர் கூறினாலும் அதில் என்னக் குற்றத்தை கண்டுபிடித்தீர்கள். தனது சொந்த மதத்தை சேர்ந்த மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று சேரிக்குள் தள்ளிய பார்ப்பனியத்தை விட வேறு மதத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் வேறுபாடு பார்க்காமல் பழகும் இவர்கள் சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் தாம்.

   மீண்டும் ஒன்றை வழியுறித்துக் கூற விரும்புகிறேன். இங்கே இசுலாமியர்கள் மட்டுமே சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் என்று எங்கும் கூறவில்லை. இசுலாமியர்களைப் பற்றிப் பொதுபுத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் தவறு என்றுப் பொட்டில் அறைந்தாற் போல் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. அதற்க்கு பதில் சொல்ல வக்கத்து போய் இப்படி இசுலாமிய மக்களை எதிர்த்து ஆவதென்ன?

   நன்றி.

 5. எல்லா மதங்களிலும் சகிப்புத்தன்மை உடையவர்களும் உள்ளார்கள், சகிப்புத்தன்மை இல்லாதவர்களும் உள்ளார்கள். எல்லா சாதிகளிலும் மற்ற சாதியினரை அரவணைத்து செல்பவர்களும் உள்ளார்கள், சாதிவெறி பித்து பிடித்தவார்களும் உள்ளார்கள். இதனால் இந்த குறிப்பிட்ட மதத்தவர் எல்லாம் இப்படித்தான் என்று stereotype செய்வது தவறு.

 6. இந்து சகோதர்கள் வீட்டிலிருந்து வரும் பலகாரங்கள், உணவு பொருட்களை முஸ்லீம்கள் தாரளாமாக சாப்பிடுவார்கள். படையல் செய்த மற்றும் பூசையில் வைக்கப்பட்ட உணவுகளை தவிர, இது முஸ்லீம்களுடன் பழகும் இந்து குடும்பங்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்களும் குடுக்க மாட்டார்கள்.

  • [1]தமிழ் நாட்டில் விதைக்கபட்ட பெரும்பாலான விதைகள் இயற்க்கைக்கு பொங்கல் அன்று படையல் செய்ய பட்டு தான் சந்தைக்கு வருகின்றது ஐயா ! அதை தான் இஸ்லாமிய சகோதரர்கள் காசு கொடுத்து வாங்கி உண்கின்றனர்.

   [2]ஹலால் செய்யபட்ட கோழி ,ஆடுகளை தான் ஹிந்துக்களும் காசு கொடுத்து வாங்கி உண்கின்றேம்.

   படையலில் , மந்திரிபதில் எல்லாம் பேதம் பார்க்க முடியாது பாய் !

   பேதம் பார்த்தா குஜராத் சமுகம் போன்று தமிழ் சமூகமும் மத ரீதியாக பிளவு பட்டு போகும் பாய்! தேவையா நமக்கு?

 7. ஐயா வினவு,

  இதே மாதிரி வேறு ஒரு பிரிவினர் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, உண்மையில் அவர்கள் நல்லவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?

  • பெருமாள்,

   சாதி, மதம், மொழி இன்னபிற அடையாளங்களை முன்னிறுத்துவதற்காக தனது அடையாளம் தவிர மற்றவற்றை அல்லது தனது அடையாளத்தை உயர்த்தும் பொருட்டு அல்லது ஆதிக்கம் செய்யும் பொருட்டு ‘எதிர்’ அடையாளங்களை உருவாக்கி அல்லது கற்பிதம் செய்து கொண்டு பேசும் போதே பிரச்சினை வருகிறது.உண்மையில் இந்த உலகில் வர்க்க ரீதியான அடையாளமே ஒரு நபரை அவரது ஆளுமையை சமூக இருப்பை தீர்மானிக்கிறது. இதனால் மற்ற அடையாளங்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அந்த அடையாளங்களின் ஜனநாயகக் கூறு அல்லது ஒடுக்கப்படுவதற்கு எதிரான உரிமை உணர்வு என்பதற்கேற்ப அவையும் முன்னிலை அடையலாம். இதன்றி ஆதிக்கம் செய்யும் அடையாளமே பிரச்சினைகளை வன்மத்தை ஏற்படுத்துகிறது.

   ஒரு பிரிவினர் நல்லவரா, கெட்டவரா என்று அவர்களது வர்க்கம் தவிர்த்த இதர மரபு ரீதியான அடையாளத்தை வைத்து முட்டும் முடிவு செய்தால் முருகன் ஜியை வைத்து முக்குலத்தோர் அனைவரும் சாதிவெறியர்கள் என்ற தவறான முடிவை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தேவர் சாதி மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள்தான். அவர்களிடம் இருக்கும் சாதிவெறியர்களோ சிறுபான்மையினர்தான். இந்த சிறுபான்மையிர்தான் கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து, தொழில்கள், ரியல் எஸ்டேட், சொத்து, அரசியல் கட்சிகள் என்று தமது சொத்துக்களை பெருக்கவும், காக்கவும் சாதிவெறியை கையிலெடுக்கிறார்கள். உழைத்து வாழும் இதர தேவர் சாதி மக்களும் சமயத்தில் இந்த சதிக்கு பலியாகிறார்கள். அதை கண்டிக்கும் போது இன்னொரு புறம் உழைக்கும் மக்கள் என்ற வகையில் அவர்களது உரிமைகளையும், போராட்ட உணர்வையும், மற்ற மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய தேவையையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனால்தான் தேவர் சாதி உழைக்கும் மக்கள் எமது விமரிசனங்களை கவனிக்கிறார்கள், சில நேரங்கள் கோபம் வந்தாலும் பல நேரம் எங்களோடு நெருங்கவே விரும்புகிறார்கள். இப்படித்தான் இந்த உறவும், விமரிசனமும் ஒரு போராட்டமாக இருக்கிறது.

   ஆகவே பெருமாள் தனது பெயரில் உள்ள ‘தேவனை’ கைவிட்டுவிட்டு உழைக்கும் மக்களோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே எமது அவா.ஒருக்கால் இன்று நீங்கள் இதை மறுத்தாலும் நாளையே நீங்கள் மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே உண்மை. அதன் அறிகுறிதான் தொடர்ந்து நீங்கள் வினவை படிப்பது.

   இந்தக் புகைப்படக் கட்டுரையில் முசுலீம் உழைக்கும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக நேசத்துடன் இருக்கிறார்கள், இவர்களைப் போய் எப்படி மதவெறியர்களாக சித்தரிக்கிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட வேண்டும். அது உங்களிடம் கொஞ்சம் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதிகப்படுத்த வேண்டியது எங்களது பணி. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது உங்களது கடமை.

   நல்லதே நடக்கும். நம்புங்கள்!

 8. உங்கள் வகையறா ஆரம்பத்திலிருந்தே இத தான் சொல்றது.. இந்துக்கள் வெறியர்கள் – நீங்கள் மத அடிப்படையில் ஒன்று சேராதீர்கள் (உங்க அடிப்படையே தப்பு) அப்படின்னு பாய்களுக்கு சாம்பிராணி தூவுறீங்க..

  சாதார பொதுமக்கள் எந்தவித மத வேறுபாடும் பார்ப்பதில்லை.. இந்த பதிவின் மூலம் நீங்களே ப்ரூவ்பண்ணிட்டீங்க.. அவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவருவது கஷ்டம்.. நீங்க வேணுமினா இஸ்லாமிய மத தலைவர்களுக்கு அறிவுரை சொல்லி பார்க்கலாமே

 9. ஹாஹாஹாஹா

  வினவு சார்,

  நீங்க சொல்றபடியே நான் என் பெயரில் உள்ள “தேவனை” விட்டுவிடுகிறேன். அதேபோல நீங்கள் சொல்லும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள மத அடையாளங்களை கைவிடுவார்களா? நாங்கள் அடையாளத்தை துறந்து விட மேற்படி மக்கள் மட்டும் தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக் கொண்டால் அது சமூக கேடுகளை ஏற்படுத்தாதா?

  எப்படியோ கம்யூனிஸ ஆட்சியை ஏற்படுத்தி விட துடிக்கிறீர்கள். உங்கள் மனப்பால் குறித்து தமிழக மக்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

  • பெருமாள்,

   முசுலீம்களோ இல்லை கிறித்தவர்களோ தங்களது பெயர்களோடு முசுலீம்,கிறித்தவர் என்று – ஜோசப் கிறித்தவர், சலீம் முசுலீம் என்றெல்லாம் – வைப்பதில்லை! சரி,விடுங்கள் தீபாவளி காலமதலால் உங்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கொடுத்து அவர்கள் அப்படி அடையாளத்தோடு வைப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்போதும் நீங்கள் தேவன் பெயரை விட்டொழித்தே ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் மல சலம் கழிக்கும் போது நீங்கள்தானே கால் கழுவ வேண்டும்? அதற்கு மற்றவரெல்லாம் கழுவியிருக்கிறார்களா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் அய்யா? அடுத்து நீங்கள் கால் கழுவிவிட்டு, மற்றவர் கால்கழுவாமல் விட்டால் சமூக கேடுகளை ஏற்படுத்தாதா என்று கேட்கிறீர்கள்! நல்ல கேள்விதான். அப்போதும் கூட நீங்கள் சேம் சைடு கோல்தான் போடுகிறீர்கள். பாருங்கள் முன்னர் மூன்று பேர் கால் கழுவ வில்லை. இப்போது இரண்டு பேர் மட்டும் கழுவவில்லை. இது நிச்சயம் முன்னேற்றம்தானே? கழுவுமய்யா, உள்ளத்தை கழுவுமய்யா!

   அடுத்து நாங்கள் கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த துடிப்பது குறித்து தமிழக மக்கள் ஒரு போதும் கவலைப்படமாட்டார்கள் என்று சாபம் போட்டு விட்டு அதற்கு நேரெதிராக நீங்களே கவலைப்பட்டு அதை இங்கே மறுமொழி போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை அந்த மக்கள் கூட்டத்தில் பெருமாள் இல்லையா? எனில் தாங்கள் எந்த கூட்டத்தில் இருக்கிறீர்கள்? எது எப்படியோ அந்த கூட்டத்திலிருந்து உங்களை காப்பாற்றி மக்கள் கூட்டத்தில் இணைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை மறுக்காமல் ஏற்கும் வீரம் உங்களுக்கு இருக்கிறதா?

   • இலக்கண தவறு வினவு !

    கழுவும் + ஐயா = கழுவுமையா [ம் + ஐ = மை ]

    அல்லது

    கழுவும் + அய்யா = அழுவுமய்யா [ம் + அ = ம ]

    என்று பிழை நீக்கிக்கொள்ளலாம் அல்லவா வினவு ?

   • வினவு இரண்டாம் முறையை தான் சரியாக கையாண்டு உள்ளது.
    கழுவும் + அய்யா = கழுவுமய்யா [ம் + அ = ம ]

    சரியாக தான் எழுதியுள்ளது .

    நன்றி ,நன்று.

    I am really very sorry for my careless mistake of observation

    //கழுவுமய்யா, உள்ளத்தை கழுவுமய்யா!//

   • வினவு,
    ஜாதி மத ரீதியாக மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதைப் புரிஞ்சிக்க முடியுது. இந்த ஜாதி மதம்ங்கிறது தங்களுக்கான அடையாளம்னும் அதை நாம விட்டுட்டா அதை வச்சிக்கிட்டிருக்கற அடுத்தவன் நம்மை ஏறி மிதிச்சிட்டு போயிருவான்னு நினைக்கிறதையும் புரிஞ்சிக்க முடியுது. உதாரணமா இந்து மதம் அழிஞ்சிட்டா அத்தனை பேரையும் முஸ்லீமாவோ கிறிஸ்துவனாவோ மாத்திருவாங்கங்கறதால் இருக்கலாம். அப்படி அவங்க நினைக்கிறதுல தப்பில்லையே?? ஆக இந்து மதத்தை அழிக்கும்போது கூடவே இஸ்லாமிய மதம், கிருத்துவ மதம், புத்த மதம் போன்ற அனைத்தையுமே அழிச்சாகணுமே? சரிதானே?

   • // ஜோசப் கிறித்தவர், சலீம் முசுலீம் என்றெல்லாம் – வைப்பதில்லை! //

    ஹாஹாஹா இல்லாட்டி ஜோசப் என்ன மதம், சலீம் என்ன மதம் என்று தெரியாதாக்கும். ஒருவேளை நிறக்குருடு மாதிரி பெயர்க்குருடும் ஏற்படுமோ?

   • // அதற்கு மற்றவரெல்லாம் கழுவியிருக்கிறார்களா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் அய்யா? –//

    வினவு சார்,

    மக்களுக்கு ஒரு விதிமுறை என்றால் அது எல்லாருக்கும் பொருந்தத்தானே வேண்டும். எங்களை நீங்கள் கழுவச் சொல்வதால்தான், நீங்கள் எல்லாரையும் கழுவச் சொல்கிறீர்களா என்று கேட்கிறோம்.

    உங்கள் வாதத்தில் உள்ள நியாயத்தை வாசகர்கள் புரிந்துகொள்வார். அதுபோதும் எனக்கு. நான் தேவன் என்ற பெயரை விட்டுவிடுகிறேன். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பெயர்களில் உள்ள தங்கள் மதங்களை விட்டு விட வேண்டும்.

    இல்லை அவர்கள் வைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை என்று நீங்கள் வாதம் செய்தால் அதில் உள்ள வித்தியாசத்தையும் வாசர்கள் புரிந்துகொள்வார்கள்.

    • //ஹாஹாஹா இல்லாட்டி ஜோசப் என்ன மதம், சலீம் என்ன மதம் என்று தெரியாதாக்கும். ஒருவேளை நிறக்குருடு மாதிரி பெயர்க்குருடும் ஏற்படுமோ?//

     என்னத்த சொல்றது இப்படி உளறினால். பெருமாள்னு சொல்லும்போது மட்டும் தெரியாலையா உம்மோட மதம் என்ன மதம்னு ஐயா.

     நீங்கள் முதல்ல சாதிய விட்டு வெளிய வாங்க பின்னால மததத்யும் விடலாம்.

     தமிழ்ல நெறைய நல்ல பேரு இருக்கும் போது மதம் சார்ந்த பெயர் உமக்கு இருக்கும் போது அது மத்தவங்களுக்கு இருக்க கூடாதா ஐயா?

     • ஐயா அறிவாளி,

      அதைத்தான் நானும் சொல்றேன். சாதி அடையாளத்தோட, மத அடையாளத்தையும் கைவிடலாமே செய்வார்களா, செய்வீர்களா?

      தமிழ்ல உள்ள நிறைய பெயர்களை கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் வைத்துக் கொள்வதை எது தடுக்கிறது?

      உளறல் நல்லா இருந்தா பதில் சொல்லுங்க.

      • பெயரில் மத அடையாளத்தை விட வேண்டும் என்று கூவும் பெருமாளு , பெருமாள் என்ன நம்ம ஹிந்து சாமி பெயர் இல்லையா ? ஒரு நாகரிகமான தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ? ஜோசப் ,ஜமால் இந்த பெயர் எல்லாம் எந்த சாதியையும் உணர்த்தாத போது நீர் மட்டும் சாதியை பெயருடன் பெருமையாக வைத்து கொள்ளவது ஏன் ?

       • இஸ்லாமிலும், கிருத்துவத்திலும் சாதிகள் கிடையாதா தமிழ் தாகம்?

        • சரவெடி,

         பெருமாளு கிட்ட நான் எழுபும் கேள்விகளில் வந்து எதிர் கேள்வி போடுவது நல்லா தான் இருக்கு சரவெடி. நானும் தகவலை கோரும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல கடமை பட்டு தான் உள்ளேன். ஆனால் பெருமாளிடம் நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லலாமே நீங்க.

         @@@’ஜோசப் ,ஜமால் இந்த பெயர் எல்லாம் எந்த சாதியையும் உணர்த்தாத போது நீர் மட்டும் சாதியை பெயருடன் பெருமையாக வைத்து கொள்ளவது ஏன் ?’

         @@@’ஒரு நாகரிகமான தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ?’

         இதுக்கு பதில் சொன்னீங்க என்றால் உங்க கேள்விக்கும் பதில் தானா உங்களிடம் இருந்தே வருமே ! முயறசி பண்ணுங்க ,முடியாவிட்டால் நான் பதில் அளிக்கின்றேன்

         • ஹும்… ஒரு பேச்சுக்குக் கூட பிற மதங்களின் ஜாதிப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டியதுதான்னு ஒரு வரிகூட வரமாட்டேங்குதே. அவ்ளவு கஷ்டமா இருக்குதா என்ன 🙁

          • சர வெடிக்கு ஒரு சின்ன பயம் ; எங்க பெருமாளுகிட்ட நான் கேட்ட என் கேள்விக்கு இவர் பதில்சொன்னா செம் சைடு கோல் ஆகிடுமே என்ற பயம் ; அதனால் தான் பெருமாளுக்கு நான் எழுப்பும் கேள்விகளை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு , “இஸ்லாமிலும், கிருத்துவத்திலும் சாதிகள் கிடையாதா தமிழ் தாகம்?” என்ற கேள்வியை எழுப்புறாரு !

           நான் தான் பதில் சொல்ல தயாரா இருக்கேன்,அதுக்கு முன் நீங்க முயற்சி செய்ங்க என்று கூறும் போதே இவருக்கு மூக்கு மேல் வியர்த்து கிட்டு ,முந்திரி கொட்டை மாதிரி ,இந்த விவாதத்தின் தொடக்கத்தின் போதே ….. “ஒரு பேச்சுக்குக் கூட பிற மதங்களின் ஜாதிப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டியதுதான்னு ஒரு வரிகூட வரமாட்டேங்குதே. அவ்ளவு கஷ்டமா இருக்குதா என்ன ” என்று ஏதோ நானு மாற்று மதத்தவருக்கு ஆதரவா இருப்பது போல பேசுறாருசர வெடி !

           பெருமாளுகிட்ட நான் கேட்ட கேள்வியில் எதிர் கேள்வி போடுவதற்கு [ சரவெடிக்கு ] இவருக்கு உரிமை உள்ள போது ,பெருமாளுகிட்ட நான் கேட்ட என் கேள்விக்கு பதில் சொல்லும் கடமை இவருக்கு[சரவெடிக்கு] இருக்கு இல்லையா ?

           சரி இவருக்கு வெளக்க உரை கொடுப்போம் !

           ’ஒரு நாகரிகமான *1தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் *2சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ?’

           இதுக்கு பொருள் என்ன ?

           *1தமிழன் –>என்றால் தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர்
           [ஏன் சரவெடிக்கு தமிழ் பேசும் முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர் எல்லாம் தமிழர் இல்லை என்று தோனுதோ ? ] தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர் எல்லாம் தமிழர் என்பதை மறுகின்றாறோ சரவெடி?

           *2சாதியை சேத்துக்க மாட்டான் –>என்றால் என்ன பொருள் ? நாகரிகமான தமிழன் [தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ ] சாதியை சேத்துக்க மாட்டான் என்று தானே பொருள் வருது !

          • ஹா..ஹா… தமிழ் தாகம். உங்க பதிலை ரசித்தேன். ஒரு சிறு கரெக்‌ஷன். நாகரிகமுள்ள தமிழன்னு சொல்றதுக்குப் பதிலா நாகரிகமுள்ள மனுஷன்னு வச்சிக்கலாம். எதுக்கு இந்து, முஸ்லீம் கிருத்துவத்தை ஒரு பத்து கோடிப்பேர் பரப்பளவுக்குள்ள முடக்கி வச்சுப் பார்க்கணும். ஆக அனைத்து மதங்களிலும் இருக்கும் சாதிப் பிரிவினைகள் ஒழிக்கப்ட வேண்டியது சரியே என்று ஏற்றமைக்கு நன்றி 🙂

           பெருமாள் கிட்ட நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்ல. ஏன்னா அவரே சொல்லிட்டாரு அவரு சாதிய அவரு வுட்டுர்றாராம். அதையே நானும் வழிமொழிகிறேன். வாங்க உலக மக்கள் எல்லாம் அவரவருக்கு திணிக்கப்பட்ட சாதி மதம் அத்தனையும் ஒழிச்சிட்டு சந்தோசமா இருக்கலாம்.

      • //உங்கள் வாதத்தில் உள்ள நியாயத்தை வாசகர்கள் புரிந்துகொள்வார். அதுபோதும் எனக்கு. நான் தேவன் என்ற பெயரை விட்டுவிடுகிறேன். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பெயர்களில் உள்ள தங்கள் மதங்களை விட்டு விட வேண்டும்.//

       அவர்கள் மதங்களை விட்டால் நீங்கள் சாதியை விடுவீர்கள், என்னவிதமான பினாத்தல் இது.

       அய்யா மீண்டும் முதல்ல இருந்து உங்கள மாதிரி ஆட்களுக்கு விளக்குவதற்குள் நாக்கு தள்ளுது.

       என்ன விட்டுடுங்க.

 10. @ வினவு

  //இந்தக் புகைப்படக் கட்டுரையில் முசுலீம் உழைக்கும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக நேசத்துடன் இருக்கிறார்கள், இவர்களைப் போய் எப்படி மதவெறியர்களாக சித்தரிக்கிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட வேண்டும்//

  இப்படி எல்லாம் பேச உங்களுக்கு எப்படி தான் மனசு வருகின்றதோ தெரியவில்லை. __________ என் மறுமொழிகளை வெளியிட்டு என் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வீரம் உங்களிடம் இருக்கிறதா? என் கருத்து சுதந்திரத்தை பறிக்காமல் இருக்கும் நாணயம் உங்களிடம் இருக்கிறதா?

 11. வினவின் கேள்வி என்ன?
  முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ?
  இதற்கு சில முசுலீம்கள் இனிப்பு சாப்பிடும் படம் போட்டு,பதில் அளிப்பது சரியல்ல !!!
  முசுலீம்கள் ஒரு செயலை செய்யலாமா இல்லையா(ஹராமா,ஹலாலா) என குரான் ,ஹதிதில் தான் தேட வேண்டும்.
  அதாவது அவர்கள் பிரிவு முல்லா (அல்லா சொல்வதாக) கொடுக்கும் விளக்கம் மட்டுமே (அவர்களுக்கு)சரியானது.
  இழிவான பிறவிகளான (quran 8.55)காஃபிர்களுடன் முசுலீம்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே நட்பு பாராட்டலாம்(quran3.28) என ஏக இறைவன் குரானில் வசனம் இறக்கிய பிறகு,அதனை மீறுபவர்கள் பெயர்தாங்கிகள்,அல்லது தாக்கியா செய்கிறார்கள்.
  பிற தெய்வங்களுக்கு படைக்கப் படாத எதையும் சாப்பிடலாம் என்பதும் தாக்கியாதான்,
  அல்லாவின் பெயர் சொல்லாத எதையும் சாப்பிடாதே என்பதே குரான் வசனம் 6.121!!!
  இப்படி சொல்லும் வேதம், மதம் தேவையில்லை என வெளிவருவதுதான் நல்ல மனிதனுக்கு அழகு. மனிதனுக்கு மதம் தேவை இல்லை!!!

 12. திரு வினவு அவர்களே,

  இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது எந்தவொரு சாதியை எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள். சிறு எண்ணிக்கையிலான நபர்களே தவறு செய்பவர்களாக, குற்றம் செய்பவர்களாக இருப்பார்கள்.

  அந்த சிறு எண்ணிக்கையிலானோருக்காக அந்த ஒட்டுமொத்த மக்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது. ஆனால் உங்களைப் போன்ற கற்றறிந்த அறிஞர்கள் ஒட்டுமொத்தமாக தேவர் சாதிவெறி, வன்னிய சாதி வெறி, கவுண்டர் சாதிவெறி, இந்து தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதம் என்று எழுதுவதைக் கண்டு வாசகர்கள் உங்கள் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

  இதில் உள்ள நியாயம் உங்களைப் பார்த்து சிரிக்கும். வாழ்க உங்கள் சமுதாயச் சேவை.

 13. நான் பார்த்தவரைக்கும் பழகிய வரைக்கும் பாய்ங்க பழக இனிமையானவர்கள்.

  நான் சின்ன பையனா இருக்குறப்ப, எங்கள் ஊர் தேவமாரு,நாடக்கமாரு மாறி யாரா இருந்தாலும், அது உழைக்கும் மக்களாக இருந்தாலும் எங்கள் வீட்டு விசேசங்களில் மதியம் சாப்பிடவரமாட்டார்கள்.ஏனென்றால் மதியம் எங்கள் வீட்டில் தாயாரிக்கப்பட்ட மதிய சாப்பாடு தான் இருக்கும்.

  அப்பாவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆதிக்க சாதியினர் மாலை வேளையில் டீ பார்ட்டி என்ற பெயரில் , எங்கள் வீட்டில் சமைக்காத, வெளியில் கடையில் வாங்கிய உணவுவகைகளை( மிச்சர், லட்டு, கடையில் வாங்கப்பட்ட டீ, கலர்) சாப்பிட்டு போவார்கள். அதே மாலை வேளையில் மறுவீடு என்ற பெயரில் வீட்டில் சமைத்த உணவுகளை கொண்ட விருந்தும் நடக்கும். அதில் சாப்பிட மாட்டார்கள். இப்பொழுது நிலைமை சற்று மாறியிருக்கிறது.

  ஆனால் அப்போதே எங்கள் வீட்டு அருகில் வசித்த பள்ளி ஆசிரியர் ஒரு பாய்(பெயர் நினைவில்லை) அந்த வீட்டு ஹக்கிம் அண்ணன்,அன்வர் அண்ணன், பீமா(பெயர் முழுமையாக நினைவில்லை) அக்கா, அவங்க அம்மா எல்லாரும் ரொம்ப இயல்பா பழகுவாங்க.வீட்டில் சமைத்த உணவை பந்தியில உக்காந்து சாப்பிடுவாங்க.ரொம்ப இயல்பா அவங்க வீட்டுக்கு நான் போறதும் விளையாடுறது அவங்க வருவதும் இருக்கும்

  டிரான்ஸ்பர் ஆகி போயிட்டாங்க.அன்வர் அண்ணன் கூலி வேலைக்கு துபாய் போயிட்டாருனு கேள்விபட்டேன்.
  இந்த பதிவை பார்க்கும் போது அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.நன்றி வினவு.

  இது போலவே நான் பாத்த பாய்ங்க எல்லாருமே பழக இனிமையானவர்கள் தான்.

 14. இராமன் ,

  ஹிந்து மதத்தில் உள்ள பார்பனர்கள் :

  @@@ தன் பார்பன சாதி மேன்மையை காரணம் காட்டி, …….

  ########## தன் மதத்தை சார்ந்த பிற சாதியினர் கொடுக்கும் எந்த சைவ உணவையும் உட்கொள்வது இல்லை [அது ஹிந்து கடவுளுக்கு படைக்க பட்டு இருந்தாலும்,படைக்க படாவிட்டாலும் ] சாதி அடிப்படையில் …..!

  ########## பிற மதத்தவர் கொடுக்கும் எந்த சைவ உணவையும் உட்கொள்வது இல்லை [அது ஹிந்து அல்லாதவேறு கடவுளுக்கு படைக்க பட்டு இருந்தாலும்,படைக்க படாவிட்டாலும் ] [மத அடிப்படையில் ]

  ########## தன் மதத்தை சார்ந்த பிற சாதியினர் கொடுக்கும் அசைவ உணவையும் உட்கொள்வது இல்லை [தன் ஹிந்து மத வேதங்களின் அடிப்படையில்]

  ########## பிற மதத்தவர் கொடுக்கும் எந்த அசைவ உணவையும் உட்கொள்வது இல்லை [மத அடிப்படையில் ]

  முஸ்லிம் மதத்தவர் :

  ##########பிற மதத்தவர் கொடுக்கும் ,படைக்க பட்ட உணவு பொருள்களை உட் கொள்வது இல்லை[இஸ்லாமிய மத அடிப்படையில் ]

  ##########பிற மதத்தவர் கொடுக்கும் ,படைக்கபடாத உணவு பொருள்களை உட் கொள்வது உண்டு [மத நல்லிணக்க அடிப்படையில் ]

  Conclusion :

  [a]அடுத்தவர் கொடுக்கும் உணவுடன் உறவாட பார்பனர்களுக்கு சாதியும் ,மதமும் இரண்டுமே தடையாக உள்ளது.

  [b]அடுத்தவர் கொடுக்கும் உணவுடன் உறவாட இஸ்லாமியருக்கு அவர்கள் மதம் மட்டும் தடையாக உள்ளது.

  எனவே இராமன் போன்ற முற்போக்கு முகமூடிகள் , முதலில் நம் ஹிந்து மதத்தில் உள்ள பார்பன சனாதனவாதிகளை நோக்கி அல்லவா கீழ் கண்ட முறையில் கேள்வி எழுப்பிவிட்டு

  **** சனாதன பார்பனர்களே ,மாற்று சாதியினர் ,மாற்று மதத்தவர் கொடுக்கும் உணவை உண்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப வேண்டும் ?

  ****அதன் பின் அல்லவா இஸ்லாமியருடன் ஹிந்து கடவுளுக்கு படைத்த உணவை உண்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப வேண்டும் ?

  இது இராமனுக்கு புரிந்தா சரி !

  • இதுக்கு எத்தன ‘அவாள்’ கிட்ட அய்யா ஆராய்ச்சி பண்ணினீங்க? சில கிறுக்கு பொறம்போக்குகள் பண்றத இந்து மதத்தில் உள்ள எல்லாரும் பண்றாங்க, இல்ல ஒரு சில கிருகனுங்க பண்றதுதான் அவன் சாதில இருக்கற எல்லாரும் பண்றது அப்படின்னு எப்படி உங்களால நாக்கு கூசாம சொல்ல முடியுது? முஸ்லிம்கள் எல்லாரும் கெட்டவங்க இல்ல, அது சில கிருகனுங்க பிரச்சாரம்னு தெளிவா புரியுது உங்களுக்கு. அதே லாஜிக் ஏன் இந்துக்கள் கிட்ட காணாம போய்டுது? பெரும்பாலான ஐய்யர் அல்லது அய்யங்கார் பழக நல்லவங்க. ஒரு சில கிறுக்கனுங்க இன்னும் சாதி பிடிப்போட இருகான். எல்லா பிரிவுலயும் அது போல இருகாங்க. ஒரு சிலரை வெச்சு எல்லாரையும் ஒரே கூண்டில் அடைப்பதை விடுங்க.

   அப்புறம் இந்த பார்பனர்கள் என்ற வார்த்தையை விடுங்கள். அவன் என்னவோ அதை சொல்லுங்கள். சாதி வெறியன் என்று. பார்பனன், பாப்பான், அவா, அம்பி இது எல்லாம் வேண்டாம். சாதி வெறியனும், அம்பியும் ஒன்று அல்ல. அம்பிகளிலும் பெரும்பாலனோர் நல்லவங்க தான். தர்காவில் மந்திரிக்க, இல்ல சர்ச்க்கு போக, இல்ல ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்க, இல்ல அவசரம்னா உதவி பண்ணவோ இங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. முஸ்லிம்கள் பழக இனிமையானவர்கள் அப்படின்னு சொல்ல இவளோ வாதாட்றீங்க. அதே உண்மை அய்யர் அல்லது அய்யங்கார்க்கு பொருந்தும்னு உங்களுக்கு ஏன் கொஞ்சம் கூட தோணல? எல்லா மேல்சாதி மக்களும் சாதி வெறி கொண்டவர்கள் என்பது தான் உங்கள் அடிப்படை கருத்தா? கொஞ்சம் யோசிங்க!

   பி.கு: வேதம் எல்லாம் ஒண்ணும் நீ சைவமா இருன்னு சொல்லல. ஒரு சிலர் அசைவம் சாப்பிடாமல் இருப்பது அவர் அவர் குடும்ப வழக்கம். எங்கள் குல தெய்வ திருவிழாவில் பலி பூஜை ரொம்ப பிரபலம். ஆனா எங்க குடும்பத்துல பொங்க வெக்கரதோட சரி. கருப்பசாமி, மதுரைவீரன்க்கு சுருட்டும், சரக்கும் உண்டு. ஆனா பலி கிடையாது. அது எங்க குடும்ப வழக்கம். இதுக்கும் என் சாதிக்கும் எந்த சம்பந்தம்மும் இல்லை. அய்யர் மற்றும் அய்யங்கார் பரம்பரையா சைவமா இருந்துட்டாங்க. அதே மாதிரி சைவம் மட்டும் சாப்பிடற சாதிகளும் உண்டு. எல்லாம் அவர் அவர் வழக்கம் மற்றும் வளர்ப்பு. இதுல வேதம், சாதி, மதம் எல்லாத்துக்கும் இடம் இல்லை.

   • சந்துரு ,ஒரு பார்ப்பனன் நல்ல மனிதனாக இருக்க முடியுமா? என்ற உங்கள் கேள்விக்கு செவப்பு மற்றும் தென்றல் ஆகியவர்கள் கொடுத்த பதில் மறந்து விட்டதா ? அவர்கள் இருவருடைய பதிலும் உங்களுக்க்கு உடன்பாடு தானே ? ஏன் கேட்கிறேன் என்றால் அவர்கள் இருவருடைய பதிலுக்கும் நீங்கள் எந்த மறுப்பும் தெரிவிகாமல் September 1, 2014 at 12:24 pm முதல் நீண்ட அமைதி காக்கின்றீர்!

    https://www.vinavu.com/2014/08/28/hindu-spiritual-fair-experiences-5/

    • அவர்கள் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை தான் சார். ஒத்து கொள்கிறேன். சில முஸ்லிம் தீவிரவாதிகளை காரணம் காட்டி, இந்த முஸ்லிம் மதமே இப்படி தான் என்று சொல்வது போல அவர்கள் பதில் இருந்தது. இதே நிலைமை பல நேர் விவாதங்களில் எனக்கு ஏற்பட்டது.

     ////நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி,//
     இந்து மதம் என்று தனித்து ஒன்றோ அதற்க்கு என ஒரு தனித்துவமான ஒரு மத நூலோ, தனித்துவமான கலாச்சாரமோ,பண்பாடோ கிடையா. அதனால் நடுவில் இந்து மதம் \\அடைந்த கேவலமான நிலைமையை\\ போன்ற கருத்துக்கள் பொருளற்றவை. //

     இது திரு சிவப்பு சொன்னா பதிலின் ஒரு பகுதி.

     //“நடுவில் இந்துமதம் அடைந்த கேவலமான நிலை” என்பது தவறானதும் வரலாற்றுத் திரிபுமாகும். உழைக்கிற மக்களின் வழிபாடுகள் இந்துமதத்திற்குள் வராது. எனவே நாம் ஒன்றைப் பகுத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். ஆதிமுதலே இந்துமதத்தின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானவை. நாமே இந்து என்றாலும் நம்மை இந்துவாக ஏற்கமாட்டார்கள். ஏனெனில் இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமே வருணம் ஆகும்.//

     இது திரு தென்றலின் பதிலில் ஒரு பகுதி.

     இதே வார்த்தைகளை சில நண்பர்களிடம் கேட்டு உள்ளேன். அது வரை நன்றாக சென்று கொண்டு இருந்த விவாதம், கடைசியில் அவர்கள் என்னை RSS கையால் என்றோ, அல்லது சப்பை கட்டு கட்டுகிறேன் என்றோ, இல்லை நீயும் ஒரு பார்பனன் தான் அதான் இப்படி பேசற என்று சொல்வதிலோ முடிந்தது. ரொம்ப தடவ இத பட்டுட்டேன் சார். அதுனால வெறுத்து போய் தான், ஒரு நண்பரின் பரிந்துரையின் பேரில் இங்கு வந்தேன். இங்கயும் அதே கருத்துக்களை பார்த்த பிறகு, இன்னும் விளக்கம் தந்து திரும்ப புண் பட எனக்கு மனம் இல்லை. அதனால் தான் அதை அப்படியே விட்டு விட்டேன். நீங்கள் கேட்பதால் நான் இங்கு விளக்கம் தருகிறேன்.

     இந்து மதத்தின் அடிப்படை நூல் வேதம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும் என நம்புகிறேன். நான் இந்து மதம் காலபோக்கில் பல மாறுதல்களை அடைந்து, பல வழிகளில் வளர்ந்தும், தேயுந்தும் வந்தாலும் வேதம் என்பது இன்றும் இந்து வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு என்பதால் அதை அடிப்படை என்கிறேன். வேதத்தில் வர்ணம் பற்றி பேசுவது ஒரே இடத்தில் மட்டும் தான். அதுவும் பின்னால் வந்த இடை சொருகல் என்பது இன்று பரவலாக ஏற்கப்பட்ட உண்மை. அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை. வேதம் நீங்க கடவுள் இல்லன்னு சொல்றத கூட எதுக்குது. மனு, புராணங்கள் இயற்றப்பட்ட குப்தர்கள் கூட வைசியர்கள் தான். அப்போ எழுதப்பட்ட சீன யாத்ரிகர்கள் நூல்கள் கூட சாதி கட்டுப்பாடு எல்லாம் சொல்லல. மக்கள் என்ன சாப்டாங்க, தின வாழ்கை எப்படி இருந்தது என்று சொல்லும் புத்தகத்தில் சாதி பத்தி ஒண்ணும் இல்லை. முஸ்லிம் ஆட்சியில் பெரும்பாலும் பிராமணர்களுக்கு இந்த சலுகையும் இல்லை. கோயிலில் வேலை பார்த்தால் படை எடுக்கும் போது சாவு அநேகமாக நிச்சயம். சோமநாதர் கோவில் வரலாறு ஒரு உதாரணம். பக்தி இலக்கிய காலத்தில் கூட சில பிரச்சனைகள் இருந்தாலும், இப்போ இருக்கற இந்த கேவலமான நிலை இல்லை. சாதி யாரையும் கட்டுபடுத்தவில்லை. ஜாதி பெயர்ப்பு எல்லாம் சாதாரணம்தான். சூத்திர மன்னர்கள் கூட இருந்து உள்ளனர். ஒரு சில கிறுக்கர்கள் அப்போவும் கிறுக்குதனம் பண்ணாலும், மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்து வந்தனர்.

     வெள்ளைக்காரன் வந்தபோ மக்களை சுலபமா பிரிக்க கையாண்ட வழிகளில் ஒன்று தான் சாதி படி சலுகைகள். நிறைய சம்பாதிச்ச பணக்காரன் எனக்கு இன்னும் பணம் வேணும், அத தக்க வைக்க அரசாங்கம் சலுகை தர நெருக்குவது போல தான். எல்லா அறிஞர்களாலும் சாதி பற்றிய ஆராய்ச்சியில் authority ஆக ஏற்றுகொள்ளபட்ட dirk இதை தன் புத்தகங்களில் தெளிவாக விளக்குகிறார். தன்னுடன் இணைந்த இந்திய மக்களுக்கு சலுகைகள் தர, இந்த சாதி மக்களுக்கு இந்த சலுகைகள் என்று அறிவிக்கும் போது, அந்த சலுகைக்கு ஆசை பட்டு உடனே நான் இந்த சாதி, எனக்கும் அதே சலுகை வேண்டும் என மக்கள் ஓடிபோய் கேட்டதன் விளைவுதான் சாதி இப்படி ஊறி போய் இருப்பது.

     இது இன்று ஆராய்ச்சியில், அறிஞர்களால் ஏற்றுகொள்ளபட்ட உண்மை. இந்து மதத்தின் சாராம்சமே சாதி தான் என வாதிடுவது சுத்த முட்டாள்தனம். கி.மு. 1000 முதல் நம்மால் இந்து மதத்தின் evolutionஐ நம்மால் பார்க்க முடியும். இந்த காலத்தில் கண்டிப்பாக சாதி பேதத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி, பார் அப்போவே சாதி வெறி இருந்தது என்று சொல்லவும் முடியும். அனால் அது முஸ்லிம் தீவிரவாதிகளை காட்டி எல்லா முஸ்லிம்களும் இப்படி தான் என்று சொல்வது அல்லது ஹிட்லரின் ஜெர்மனி தான் ஜெர்மனி என்று சொல்வதற்கு ஒப்பாகும். இந்து மதமே இங்கு தப்பில் இல்லை. எல்லா அய்யரும், அல்லது அய்யங்காரும், இல்ல மேல்சாதியினரும் தப்பில் இல்லை. சில காலிகளை கை காட்டி, அது தான் எல்லாரும் என்று சொல்வது மிக பெரும் தவறு. இந்த இந்து மதம் மற்றும் பார்பனர்கள் தான் இன்று நிலவும் சாதி கேடுக்கு ஒரே காரணம் என்பது மிகவும் தவறான கருத்து.
     கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் எப்படி இருந்ததோ அப்படி தான் இந்தியா 3000 ஆண்டுகளாக இருந்தது என்பது அந்த கருத்தின் அடிப்படை. இது எவளோ அப்பட்டமான பொய் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

     • //வேதம் நீங்க கடவுள் இல்லன்னு சொல்றத கூட எதுக்குது//

      இதில் ஏதுக்குது என்பது தட்டச்சு பிழையின் காரணமாக எதுக்குது என்று வந்து விட்டது. வேதத்தில் கடவுள் இல்லை, கடவுள் வழி பாடு தேவை இல்லை என்பதும் ஒரு ஏற்றுகொள்ளபட்ட , அங்கீகரிக்கப்பட்ட தத்துவம் என்பதாக இதை எடுத்து கொள்ளவும்.

      • சந்துரு,

       %%% வெள்ளை யானை படித்திர்களா ? அதில் சென்னை காஞ்சி மாவட்ட தலித் மக்கள் வெள்ளையன் ஆட்சியில் உண்ண உணவின்றி குலையுயிராக நாயிக்கு உணவான உண்மை உமக்கு தெரியும். தலித் மக்கள் பணம் பண்ண சாதி படி சலுகைகள் கேட்டார்கலா? அல்லது ஒரு வேலை சோத்துக்கு வழிகேட்டார்களா ?என்பதும் புரியும்! சுமுகத்தின் விளிம்பு நிலை மக்களான தலித் மற்றும் பழங்க்குடி மக்கள் சாதி படி உரிமைகள் கேட்பது கூட உமக்கு தவறாக தெரிவது வக்கிரமாக தெரியவில்லையா ?

       &&& எதோ ஒரு கால கட்டத்தில் சாதி தலைவிரித்தாடி இருந்தால் சரி அது வேதத்தின் மீதான இடை சொருகலால் ந்டந்தாதாக நம்ப சிறிது இடம் இருக்கு ! ஆனால் தெடர்சியாக 2000 ஆண்டுகளாக சாதிய கொடுமையும் ,சாதிய புறக்கணிப்பும் ஹிந்து மதத்தின் பெயரில் நிகழும் போது அதனை மறுத்து பேசுவது உமக்கே கூறுகேட்ட கிறுக்கு தனமாக இல்லையா ?

       தொடரும்

      • சந்துரு,

       @@@என்ன Mr இப்படி பசப்புரிங்க? வேதத்தை எழுதிய பார்பனர்களே அசைவ உணவை மிருக உணர்வுக்கு உரியது என்று கூறி அதனை தீண்டா உணவாக தவிர்க்கும் போது ,ஏன் இப்படி பசப்பல் ,பொய் ,மோசடியான பின்னுட்டத்தை ஈடுகின்றிர்கள் ? //நான் சாதிக்கு அந்த விளக்கத்தை தரவில்லை.என்றும் தரவும் மாட்டேன். நான் அந்த விளக்கத்தை தந்தது சில மக்கள் சைவ உணவு பழக்கத்துக்கு மட்டுமே. இது வேதத்தில் உள்ளது என்று அவன் விளக்கம் தந்தால் அது அவன் நம்பிக்கை சம்பந்தபட்ட விசயம். //

       @@@அப்படி என்றால் சாதிவெறி பார்பனர்களை முஸ்லிம் கடும் கோட்பாட்டுவாதிகளான போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு உள்ளீர்கள் அப்படிதானே ? மிக்க நன்றி ! ஹிந்து மதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாகவும் இருப்பது போல ,முஸ்லிம்களின் பெரும்பான்மை மக்கள் நல்லவர்கள் தான் அல்லவா ? //எனக்கு இதுல தான் சார் அச்சிர்யம்! உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். //

       @@@ கோவில்கள் தான் சாதிய கட்டமைப்பின் உச்சமாக இருபதை மோசடியாக மறப்பது யார் வசதிக்காக mr ? ஆலைய நூழைவு போராட்டங்களும் ,கருவறை நூழைவு போராட்டங்களும் , நடந்தது எதற்காக ? சிதம்பரம் நடராசர் கோவில் இன்னும் தமிழ் மொழியை மறுப்பது ஏன் ? அனைத்து மக்களும் ஆகம கோவில்களில் அர்சகர் ஆக விடாமல் நந்தியாக நீர்பது யார் ? சாதிவெறி பார்பனர்கள் தானே ? //இந்து மதத்தின் சாரமே தனி மனித ஒழுக்கம் தான். நீ கோவிலுக்கு போனால் தான் ஆண்டவனிடம் செல்ல முடியும் என்றோ, இல்ல கீழ சாதிக்காரனை அடகினால்தான் உனக்கு புண்ணியம் என்றோ இந்து மதம் சொல்லவில்லை!//

       தொடரும்

       • //வேதத்தை எழுதிய பார்பனர்களே அசைவ உணவை மிருக உணர்வுக்கு உரியது என்று கூறி அதனை தீண்டா உணவாக தவிர்க்கும் போது ,ஏன் இப்படி பசப்பல் ,பொய் ,மோசடியான பின்னுட்டத்தை ஈடுகின்றிர்கள் ?//

        அவன் தன் முடிவுக்கு என்ன காரணம் வேணா சொல்லிட்டு போட்டுமே சார். அதை அவன் நம்ம மேல திணிக்காத வரை எந்த பிரச்சனையும் இல்லையே. நான் மதம் சொல்லுவதால் (எந்த உயிரையும் இம்சிக்காதே) அசைவம் உண்ணமாட்டேன் என்று சொல்வதற்கும், பன்றி கறி அசுத்தமானது என்று என் மதநூல் சொல்லி இருக்கு, அதுனால நான் அதை உண்ண மாட்டேன் என்று சொல்வதும், இல்லை திருக்குறளில் சொல்லியது போல நான் கள் (சாராயம்) குடிக்க மாட்டேன் என்பதோ ரொம்ப வித்யாசம் இல்லை. இரண்டுமே அவர் தனி மனித நம்பிக்கை சார்ந்த விசயம்.

        இதையே அவன் இது கீழ் சாதி உணவு என்பதால் அசைவம் சாப்பிட மாட்டேன், இல்ல கள் சூதிரன் குடிப்பது, அதனால் குடிக்க மாட்டேன் என்று சொன்னால் அடிச்சு துரத்துங்க, இல்ல தூக்குல கூட போடுங்க. அதல்லாம் வெறி பிடிச்ச மிருகம். மனிதன் அல்ல.அத செய்யறதுக்கு முன்னாடி இந்த வேத பத்திய காட்டுங்க:

        Those who eat flesh uncooked, and those who eat the bleeding
        flesh of men,
        Feeders on babes unborn, long-haired, far from this place we
        banish these.

        (லிங்க்: http://www.sacred-texts.com/hin/av/av08006.htm. பகுதி 6, பாடல் 23).

        அதுவும் பத்தலன்னு சொன்னா இந்த மனு சாஸ்திர பத்தியையும் காட்டுங்க:

        There is no sin in eating meat, in spirituous liquor, and in carnal intercourse, for that is the natural way of created beings, but abstention brings great rewards.

        அப்புறம் அவனை அடிச்சு ஊர விட்டு தொரதுங்க. கீழ சாதி உணவுன்னு நான் மாமிசம் சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவன் சாதி வெறியன். ஆனா என் குடும்ப பழக்கம் அது; எங்க வீட்ல அசைவம் கிடையாது, அது எனக்கு பழகி போச்சு என்றோ, இல்ல என்னை மாதிரி தலைய வெட்டும் போது ஆடு, கோழி துடிகறத பாத்து, சிக்கன் மட்டன் பாத்தா அது துடிச்சது தான் கண்ணுக்கு முன்னால நிக்குது; அதனால எனக்கு அசைவம் வேண்டாம்ன்னு சொல்றவன எதுவம் சொல்லாதீங்க.

        //அப்படி என்றால் சாதிவெறி பார்பனர்களை முஸ்லிம் கடும் கோட்பாட்டுவாதிகளான போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு உள்ளீர்கள் அப்படிதானே ? //

        அமாம் சார். என் பார்வையில் இருவரும் ஒன்று தான். மிருகங்கள். திருத்த முயற்சி பண்ணலாம். இல்ல கொன்னும் போடலாம். அது செய்பவரின் விருப்பம். நான் திருத்த முயற்சி செய்கிறேன். நீங்க என்ன விருப்பமோ அதை பண்ணலாம். என் மனமார்ந்த ஆதரவு உண்டு.

        நான் சொல்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான் சார். நீங்க எப்படி போகோ ஹராமின் செயலுக்கு இஸ்லாத்தை காரணமாக கூற மாட்டீர்களோ, அதே போல சாதி வெறியனின் செயலுக்கு இந்து மதத்தை காரணம் கூற வேண்டாம். இரண்டு இடத்திலும் மனிதன் தான் பிரச்சனை. மதம் அல்ல. குப்பையையும், குப்பை போட்ரவனையும் சுத்தம் பண்ணிட்டா போதும். வீட்டை கொளுத்த வேண்டாம். சாதி வெறியனையும், அடக்குமுறை வாதியையும், முதாளிதுவத்தையும் அழிச்சிட்டா போதும்.இந்து மதத்தையோ, இஸ்லாத்த்யோ இல்ல அமெரிக்காவையோ அழிக்க வேண்டாம்.

     • சந்துரு,

      ஹிந்து மதத்தில் உள்ள சாதிய படிநிலைக்கும், அதனால் தலித் மற்றும் பழங்குடிமக்கள் இன்றும் துயர் அடைவதற்கும் காரணம் ஹிந்து மத மனுதர்ம வருணாசிர கொள்கைகளும் ,வேத வியாக்கானங்களும் தான் என்ற தியரி தவறு என்று கூற எப்படி முயன்றாலும் அது உம்மால் முடியாது சந்துரு! ஏன் தெரியுமா ?உமது பின்னுட்டம் முழுவதுமே ஹிந்து மனுதர்ம வருணாசிர கொள்கைகள் மேலும் ,வேத வியாக்கானங்களை அடிப்படையாக கொண்டும தான் கட்டமைக்க பட்டு உள்ளன என்ற விடயத்தை உங்கள் கருத்துக்கள் முலமே நிறுவ போகின்றேன்.

      &&&வேதங்கள் தான் ஹிந்து மதத்தின் அடிப்படை என்று நிருபிக்க என்னமா முயற்சிக்கின்றிர்கள் சந்துரு! கடினபட தெவையே இல்லை நண்பரே ! நாங்க என்ன இல்லை என்றா கூறுகின்றேம் ? அது தான் உண்மை ! ஆம் பார்பனர்களை கொண்டு ,பார்பன்ர்களுக்காக ,பார்பனர்களால் எழுத பட்டது தான் வேத வியாக்கானங்கள். //இந்து மதத்தின் அடிப்படை நூல் வேதம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும் என நம்புகிறேன்//

      &&&இல்லை என்றா சொல்கின்றோம். ஆம் வேதம் தான் பார்பனர்களின் வ்ழிப்பாட்டில் முதலிடம் வகிக்கின்றது என்பது ஆணித்தரமான உண்மை தான்.
      //வேதம் என்பது இன்றும் இந்து வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு என்பதால் அதை அடிப்படை என்கிறேன்//

      &&& கால அரசியல் சூழலுக்கு ஏற்ப வேதத்தில் வர்ணம் என்பது இடை சொருகல் தான் என்று கூற நீர் முயன்றாலும், மகாபாரதத்தில் கட்டைவிரல் இழந்த வேடனும் ,சிதம்பரம் நடராஜர் கோவிலில் எரித்து கொள்ள பட்ட நந்தனும் உம் கனவில் வந்து உம்மிடம் ஞாயம் கேட்கவா போகின்றார்கள் ?//வேதத்தில் வர்ணம் பற்றி பேசுவது ஒரே இடத்தில் மட்டும் தான். அதுவும் பின்னால் வந்த இடை சொருகல் என்பது இன்று பரவலாக ஏற்கப்பட்ட உண்மை//

      $$$$ எங்க அப்பன் குதிருக்குள் இல்லை ! பார்பனர்களும் ,பார்பன சார்பு ராசாக்களும் சாதியை வேதத்தின் அடிப்படையில் கட்டமைக்காமல் பின்பு புத்தர் அல்லவா சாதிகளை படைத்தார் என்று சொல்ல வருகின்றிர்களா ? //அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை. //

      %%%% சாதியை பற்றிய,அதன் வேர்களை பற்றிய நிசம் இதுவா ? சிரிப்பு தான் வருகின்றது ,//பக்தி இலக்கிய காலத்தில் கூட சில பிரச்சனைகள் இருந்தாலும், இப்போ இருக்கற இந்த கேவலமான நிலை இல்லை. சாதி யாரையும் கட்டுபடுத்தவில்லை. ஜாதி பெயர்ப்பு எல்லாம் சாதாரணம்தான். சூத்திர மன்னர்கள் கூட இருந்து உள்ளனர். ஒரு சில கிறுக்கர்கள் அப்போவும் கிறுக்குதனம் பண்ணாலும், மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்து வந்தனர்.//

      தொடரும்

      • அற்புதம் சார். மிகவும் அற்புதம். நான் சொன்னதை முழுசா படிச்சு, அது தப்புன்னு சொன்னா அதுக்கு அதாரம் காட்டுவதை விட்டுட்டு, இபப்டி நடந்து இருக்கு, இதுக்கு என்ன சொல்ற அப்படின்னு கேக்குறீங்க. தீவிரவாதியை காட்டி, அவன் செயலை காட்டி இஸ்லாத்தை குறை கூறுவது போல, சில பொறம்போக்குகள கை காட்டி, இதான் இந்து மதம் என்கிறீர்கள். இதே இந்து மதத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்தவன் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிவதே இல்லை. அதே என்னை போன்றோர் இந்து மதம் சாதியை ஆதரிப்பது இல்லை. அது சிலரின் சுயநலத்தில் பிற்பாடு இந்து மதத்தில் புகுத்த பட்ட ஒன்று, 3000 வருசமா இப்படியே இல்லை இந்து மதம். பிற்காலத்தில் காலிகளின் அட்டகாசம் காரணமாக அது இப்படி அசிங்கபடுதபடுகிறது. இந்த அசிங்கம் இந்து மதம் இல்லை அப்படின்னு நாங்க ஆதார பூர்வமா சொன்னாலும், நீங்க “இல்லை! இந்த அசிங்கம் தான் இந்து மதம் அப்படின்னு” சொல்லிகிட்டே இருகீங்க! சாதி அசிங்கம் என்று நான் மறுக்கல சார். ஆனா சாதி தான் இந்து மதமே, அதன் அடிப்படை கொள்கையே அப்படின்னு நீங்க சொல்றதை நான் ஆதார பூர்வமா இல்லன்னு சொல்றேன். என் கேள்வி ரொம்ப சிம்பிள் சார். இடைசொருகலாக வந்த ஒரு விசயம், எப்படி அடிப்படை தத்துவம் ஆகும்? நீங்க கட்டடத்தை அடித்தளம் என்கீர்கள். நான் இல்லை, அது கட்டிடம் தான், எவனோ கட்டியது, அடித்தளம் இது என்று காட்டினாலும் நீங்க இல்லைன்னு சாதிக்கீரங்க!

       //அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை//

       இது இன்று இந்து மத ஆராய்ச்சி மூலம் நிரூபிகபட்ட உண்மை! (நீங்க மறுத்தாலும்). ஏகலைவன சுட்டி காட்டும் நீங்க வால்மீகிய என் பாக்க மறுக்குறீர்கள்? அதே வேடுவன் தானே வால்மீகியும்? அவர் எழுதுன ராமாயணம் இந்து மதத்தின் அடிப்படை நூலாக இருப்பது தெரியாது. ஏகலைவனை நடத்தியது தான் இந்து மதத்தின் விளைவு என்று நீங்க சொன்னா, அப்போ வால்மீகி எழுதுன ராமாயணம் ஒதுகிட்டதற்கான விளக்கம்?

       // கால அரசியல் சூழலுக்கு ஏற்ப வேதத்தில் வர்ணம் என்பது இடை சொருகல் தான் என்று கூற நீர் முயன்றாலும்//

       நான் சொல்லல சாமி. ஆதாரம் சொல்லுது. காலா காலமா இப்போ இருக்கற மாதிரி நிலைமை இல்லை. வேதம் அடிப்படை அப்படின்னு ஒத்துகர நீங்க, வேதத்துல வர்ணாஸ்ரமத்தை புகுத்தும் சுலோகம் (புருஷ சுக்தம் அப்படிங்கற பகுதி. நால்வகை சாதி புருஷனின் நான்கு பாகங்களில் தோன்றியது என்று சொல்லும் பகுதி) பின்னால இடை சொருகளாக வந்தது என்று நிரூபிக்கப்பட்ட உண்மையை பொய் என்று சொல்கீர்கள். இது அம்பேத்கர் அவர்களும் ஒத்துகொண்ட உண்மை (அவருடைய எழுத்து இப்போது கைவசம் இல்லை. இருப்பது திரு. ஜப்பார் எழுதிய Historiography and Writing Postcolonial India என்னும் நூல்தான். இதில் பக்கம் 149-150). அம்பேத்கர் உண்மைன்னு ஒதுகொண்டதை தாங்கள் மறுத்தால் தயவுசெய்து ஆதாரம் காட்டவும் (பத்திரிக்கை எழுத்துகள் அல்ல, peer review journalஇல் ஏற்றுகொள்ளபட்ட ஆதாரம் கட்டுங்க). அம்பேத்கர் பத்தலனா இதையும் வெச்சுகோங்க

       இது திரு.மாக்ஸ் முல்லர் எழுதிய நூல்: https://archive.org/stream/historyofancient00mluoft#page/570/mode/2up.

       இது திரு. ஹென்றி தாமஸ் எழுதியது:
       https://archive.org/stream/miscellaneouses00unkngoog#page/n324/mode/2up

       நால்வர்ணம் என்பது வேதத்தில் பின்னால் திணிக்க பட்டது என்பதற்கு இந்த ஆதாரம் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?

       //சிதம்பரம் நடராஜர் கோவிலில் எரித்து கொள்ள பட்ட நந்தனும் உம் கனவில் வந்து உம்மிடம் ஞாயம் கேட்கவா போகின்றார்கள்//

       கேக்கறாங்க சார். அதுனால தான் நான் சாதி இந்து மதத்தின் அடிப்படை இல்லை. அது பிற்பாடு சிலரின் சுயநலத்துக்காக இந்து மதத்தின் மீது திணிக்க பட்டதுன்னு புரிய வெக்க இவளோ வாதிடுகிறேன். என்னால் முடிந்த வரை இந்த உண்மையை எல்லா மக்களுக்கும் சொல்லியும் வருகிறேன். கடந்த சில நூற்றாண்டுகளாக மனிதனின் சுயநலத்தினால் மாற்றப்பட்டு, இப்படி மக்களை சாதி பேதத்தால் பிரிப்பது அல்ல இந்து மதம் என்பது தான் உண்மை நிலை. பிற்பாடு புகுத்தப்பட்ட கொள்கைகள், அடிப்படை தத்துவம் ஆகாது!

       உங்களுக்கு சுலபமா புரியும்படியா சொல்றேன். இஸ்லாத்தின் அடிப்படை அன்பு. ஆண்டவனிடமும், மக்களிடமும் தூய்மையான அன்பு செலுத்து என்பது இஸ்லாம். பின்னால வந்த சிலர் அதை கொண்டு மத்த மதத்தை அடக்க, மத்த மதத்து ஆளை துன்புறுத்த அதை உபயோக படுத்தினால் அது யாருடைய தவறு என்பீர்கள்? அந்த மனிதனுடைய தவறா? அல்லது இஸ்லாத்தின் தவறா? மனிதனை விட்டு விட்டு இஸ்லாத்தை சாடுபவனை நீங்க என்னன்னு சொல்வீங்க?

       ஒண்ணு தெளிவா புரிஞ்சுகோங்க சார். தலித்துகளின் நிலைமைக்கும், துயருக்கும் சாதி காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அனால் சாதி தான் இந்து மதத்தின் அடிப்படை என்பதை நான் ஆதார பூர்வமாக இல்லை என்று கூறுகிறேன். சமூகத்தை தன் லாபத்திற்காக, தன் கட்டுபாட்டில் வெயத்துகொள்ள சில காலிகாளால் இந்து மதத்தில் புகுத்த பட்டது இந்த சாதி என்பது தான் உண்மை. தன்னை இஸ்லாமியன், இஸ்லாத்தை காப்பவன் என்று கூறிக்கொண்டு மக்களை கொள்கிறானே தீவிரவாதி, அவனை போல! இந்த தீவிரவாத விளக்கத்தை நீங்கள் எப்படி இஸ்லாத்தின் அடிப்படை என்று கூற மாட்டீர்களோ அதே போல தான் சாதி அடக்குமுறை இந்து மதத்தின் அடிப்படை அல்ல. வேதங்கள் வர்ணத்தை பற்றி கூறவும் இல்லை. பின்னால் புகுத்தப்பட்ட அதை தூக்கி எறிந்து விடலாம். கான்செர் கட்டிய வெட்டிட்டா போதும் சார். ஆளையே கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கான்செர் கட்டிய வெட்டிட்டு, வைத்தியம் பாத்தாலே ஆள் சரியாகிடுவான்.

       இதுக்கு மேலயும் வருணம், சாதி தான் வேதத்தின் அடிப்படை கொள்கை என்று நீங்க சொன்னா என்ன சொல்றதுன்னு தெரியல!

   • \\முஸ்லிம்கள் பழக இனிமையானவர்கள் அப்படின்னு சொல்ல இவளோ வாதாட்றீங்க. அதே உண்மை அய்யர் அல்லது அய்யங்கார்க்கு பொருந்தும்னு உங்களுக்கு ஏன் கொஞ்சம் கூட தோணல?\\

    கொஞ்சம் நடைமுறைக்கு நேர்ல வரணும். அய்யங்கார்களிடம் அய்யர் படும் பாடு நீங்கள் கேள்விப்பட்டதேயில்லையா? என் பேட்ச்மேட் அய்யர். அவரது அம்மா சமையல் வேலைபார்க்கிறவர். தினுமும் காலை நான்கு மணிக்கே அய்யாங்கர் வீட்டுக்கு சமைக்கச் செல்ல வேண்டும். அப்படி சமைக்கிற பொழுது முழுதாக நனைந்து கொண்டு ஈரப்புடவையுடன் தான் அடுப்பே பற்றவைக்க வேண்டும். இருபதுவருடங்கள் தக்காட்டியவர், உடல்நிலை காரணமாக முடியாது என்ற சொன்ன பொழுது அய்யாங்கர் குடும்பம் வேறு சமையல்காரரைத்தான் தேடியதே தவிர இவருக்கு வேலை இல்லை. இதே பதிவில் ஒரு முசுலீமுக்கு பிராமின் வீட்டிலே வேலை கிடைக்குதுன்னு படிக்கிற பொழுது அய்யங்கார் வீட்டில் ஆச்சாரம் இல்லாத அய்யருக்கு இடம் கிடையாது என்பதுதான் சனாதனம்.

    அய்யருக்கு வருவோம். அதே என் பேட்ச் மேட்டின் மனைவி என் பேட்ச் மேட்டிடம் சொல்கிறாள் இப்படி; சூத்திராளோட நோக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? அய்யங்காருக்கு கீழ் அய்யர்; அய்யருக்கு கீழ் சூத்திராள்! பேஷான இந்து மதம்!

    என்னுடைய துறைப் பேராசியரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்! காபி தனி டம்ளரில்! என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் என்பதால் மானம் ரோசம் கருதி நாங்கள் காப்பி குடிப்பதில்லை என்று சொல்லிவிடுவோம். அங்கேயும் சில நல்ல மனிதர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தார்கள்; நம்ம வெங்கடேசன் மாதிரி; ஆனா நமக்கு எதுக்கு வம்பு என்று இவரைப்போன்றவர்கள் அமைதியாகிவிடுவது உண்டு. பொணம் கூடதான் அமைதியாயிருக்கும். அதனால அமைதி என்பது நியாயமான கோரிக்கையே அல்ல. அதனால் தான் என் துறைப்பேராசியர் வீட்டில் இருக்கிற நபர்கள் நன்றாக பழகினாலும் அவர்கள் எல்லையை தாண்டமாட்டார்கள். அப்படியானால் நன்றாக பழகுதல் என்றால் என்ன?

    என் சமூகத்திற்கு வருவோம். என் உறவினர் என்று சொல்கிறவர்கள் எல்லாம் அப்பட்டமான சாதிவெறியர்கள். என் அண்ணனுக்கு திருமணம் நடந்தது. பெண்வீட்டார் வீட்டு வேலைக்கு வந்த தலித்தை நடத்திய விதத்தை வழக்காக பதிந்தால் அவர்களையெல்லாம் சாகும்வரை தூக்கில்போட வேண்டும். வீட்டு ஓட்டில் சொருகியிருந்த தட்டை எடுத்து இட்லியை போட்டார்கள்!

    எங்கம்மா சிறுவயதில் இருந்த பொழுது தலித் நண்பரிடம் சேர்ந்து பழகி சோறு போட்டு சாப்பிட்டார்களாம். அதைப்பார்த்த என் பாட்டி ஈவு இரக்கமின்றி நாயைப்போட்டு அடிப்பது போல என் அம்மாவை அடித்தார்களாம். ஏதோ அந்தக்காலம் என்று சொல்கிற பொழுது 2015இல் தான் ஓட்டில் சொருகிய தட்டில் இட்லியைப்போட்டது என் சமூகம்.

    இதைவிட என் சித்திகாரி ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வந்த பத்திரிக்கையை எடுத்துப்பார்த்துவிட்டு கேட்டாள் இப்படி; “என்ன சாதிபேரே போடல! தரைப்பட கோஷ்டியா இருக்குமோ?” தரைப்படை என்றால் எந்தப்பொது நிகழ்ச்சி என்றாலும் தலித்துகள் மண்ணுல உக்காரணும். அதைத்தான் அப்படிச் சுட்டிக்காட்டுகிறார்.

    என் சமூகத்தில் நல்லவன் என்று ஒருத்தனைக் கைகாட்ட முடியாது. இதில் வர்க்க அளவில் ஏழைகளாக இருந்தவர்களை மட்டும் தான் சாதிவெறியிலிருந்து அசைக்க முடிந்தது. என் தாயார் 13 வருடம் சித்தாள் வேலை பார்த்தவர்; துன்பம் வந்த பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருந்தது எங்கள் சாதியைச் சராத எங்கள் பக்கத்துவீட்டு பல சாதிகளே தவிர ஒருத்தன் கூட ஏன் குரங்கு என்று நாங்கள் விழுந்துகிடந்தபொழுது தூக்கவில்லை. அதைத்தான் நாங்கள் வர்க்கமாக அணிதிரள்வது என்று சொல்கிறோம். அதைவிடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் என்று சாதிக்கு புதுவியாக்கனம் கொடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சந்துருவின் பார்வைக்கு வைக்கிறேன்.

    சாதி இந்துக்கள் என்று சொல்கிற எங்கள் வீட்டில் மாட்டுக்கறி வாங்கி உண்போம். ஆனால் கள்ளர் சாதியைச் சேர்ந்த என் வகுப்பு நண்பன் மாட்டுக்கறி தின்பதில்லை. காரணம் மாடு புனிதம் என்பதல்ல; மாட்டுக்கறி தலித்துகள் திங்கறது என்ற காரணம் மட்டுமே. ஆனால் தலித்துகளிலே பறையர்கள் மாட்டுக்கறி தின்பதால் அது இழிவானது என்று சொல்கிற பள்ளர்களும் இருக்கிறார்கள். இத்துணை இழிவுகளை வைத்துக்கொண்டு அதை பழக்கம் என்று சுருக்குவதும் இந்துமதத்தை மதம் என்பதன் அடிப்படையில் பிறமதத்தோடும் ஒப்பிடுவதும் மனிதத்தன்மையற்ற செயல். ஏனெனில் மனிதனை மதிப்பதற்கு இந்துமதத்தில் ஒரு மயிரும் கிடையாது.

    ஆக சமத்துவத்தைத் தேட வேண்டுமானால், பழக்கம் என்று சால்ஜாப்பு சொல்லக்கூடாது. ஜனநாயகமாக மக்கள் சேர்ந்துவாழ்கிற இடங்களையெல்லாம் நாம் கண்டுகொள்வது மட்டுமின்றி தான் சார்ந்த சமூகத்தின் அழுக்குகளை கண்டிக்க முன்வர வேண்டும். ஆனால் இதே நடுத்தரவர்க்க கோஷ்டிகளுக்கு வர்க்கம் என்று சொன்னால் கம்யுனிச அரிப்புவந்துவிடும். சந்துரு அவர்கள் இவ்வாதத்திலே நியாயம் இருப்பதை உணர்ந்தால் வர்க்க ரீதியாக அய்யர்களை அணிதிரட்ட வருவாரா?

    • வருடக்கணக்கில் தட்டச்சு பிழை. 2014 என்று இருக்க வேண்டும். 2015 என்று இருக்கிறது. திருத்தி வாசித்து கருக்காக பதில் சொல்லவும் சந்துரு.

     • //தலித்துகளிலே பறையர்கள் மாட்டுக்கறி தின்பதால் அது இழிவானது என்று சொல்கிற பள்ளர்களும் இருக்கிறார்கள்.// உண்மைதான் இதத்தான் நானும் ஒரு பின்னூட்டத்துல சொன்னேன் ஆன என்னையும் பார்ப்பண அம்பி சாதி வெறியர் என்று சொல்லிவிட்டார்கள் சரி அத விடுங்க ,உங்களுக்கு இசுலாம் அஸ்கர் அலி என்ற இன்சினியர் மூலம் அறிமுகமானதாக சொல்லுகிறீர்கள் எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது இசுலாமிய மாணவர் மூலம் அறிமுகமானது இசுலாமிய அறிமுக கூட்டத்திற்க்கு பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்த்தவ பாதிரி போல அங்கி அணிந்து குல்லா வைத்த ஒரு மத போதகர் இசுலாம் இனிமையானது சமத்துவத்தை பாதுகாக்கும் ஒரு மதம் என்றார் இசுலாமிய மந்திரங்கள அரபியில் பாடி விளக்கம் குடுத்தார்கள் எந்த கேள்வினாலும் கேளுங்க அதுக்கு இசுலாத்தில் பதில் இருக்கிறது என்றார்கள் குரான் புத்தகத்தையும் குடுத்தார்கள் இலவசமாக ,குரான் புத்தகத்த படிச்சிட்டு அடுத்த பயான்ல இந்த கேள்விய நான் கேட்டேன் “அய்யா குரானின் ஆர்மப்த்துலயே இது கடவுள் அருளியது மாற்றம் இல்லாதது பாமரனுக்கும் புரியும் படித்த பன்டிதர்கலையும் கவர்ந்தது என்று போட்டு இருக்கீங்க அனா ஒவ்வொறு அதிகாரத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் அதுக்கு விளக்கமுனு அந்த அதிகாரத்த விட அதிக பக்கங்களில் விளக்கம் குடுத்து இருக்கீஙகளே ஏன்” அப்பிடினு கேட்டேன் அவரும் ஒரு இசுலாமிய மந்திரத்த ஓதிட்டு இது எந்த இடத்துல குரானுல இருக்குனு பக்கத்துல இருந்த உதவியாளர்ட கேட்டு பதில் சொன்னாறு நான் கேட்டதுக்கும் அவரு சொன்ன பதிலுக்கும் சம்மந்தமே இல்லை,அடுத்து என்னை இசுலாமிய கூட்டத்துக்கு அழைத்து சென்ற நண்பரும் நீங்க குரான பொருமையா படிங்கனு சொல்லிட்டாறு அடுத்து அந்த கூட்டத்துக்கே போகல அனா இனையத்துல இசுலாம பத்தி முன்னால் முஸிலீம்களின் கருத்துகளை படித்த பின்பு இசுலாம் என்பது மனிதர்களை பிரித்து வன்முறையை தூண்டும் மார்க்கம் என்பதை தெரிந்து கொண்டேன் ,இசுலாமியர்கள் நல்லவர்களே அதை மறுக்கவே முடியாது ஆனால் _______இசுலாத்தை விட்டு விலகுவது அவ்வளவு எளிது அல்ல “என்னுடன் பணியாற்றிய நண்பர் தனிப்பட்ட முறையில் இசுலாமை தாக்கி பேசுவார் அனாலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லுவார் ஏன் இப்பிடி இருக்கீங்க என்று கேட்ட போது சும்மா இருங்க சார் ஜிம்மா தொழுகைக்கு கூட போகலனா ஜமாத்த விட்டு தள்ளி வச்சுருவானுக அப்புறம் ஏகப்பட்ட கஸ்டம் அதுக்கு இந்த வெள்ளிக்கிழம கஸ்டப்படுரது எவ்வளவோ தேவலை அப்பிடினாறு”மத்த மதத்துகாரன விட இசுலாமியர்கள் கம்மூனிஸ்டாவோ நாத்திகனாவோ மாறுறது கஸ்டம் அனா தென்றலும் வினவும் இசுலாமியர்கள் நல்லவர்கள் என்று சொல்லுவதால் இசுலாமும் நல்ல மதம்தான் என்று புரிந்து கொள்ளுவார்கள் அதனாலதான் திப்புவும் ஜாகிறும் தங்களிம் மதம் சிறந்தது என்று பேசுகிறார்கள் ,தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாமிற்கு மாற விடாமல் என்னால் இயன்றதை செய்கிறேன் நண்பர் உனிவர்புட்டியும் இசுலாமிய மதத்தை பொருமையுடன் விளக்கி அம்பலப்படுத்துகிறார் ஆர் எஸ் எஸ் என்னும் மத வெறி இயக்கம் இசுலாமிய்ர்கள் இந்தியாவில் அதிகாமிகி விடுவார்களோ என்று கவலைப்படுகிறது அதைத்தான் உனிவர்புட்டியும் வழி மொழிகிறார் என்கிறீர்கள் அனாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை ____

    • உங்கள் அனுபவத்திற்கு நான் வருந்துகிறேன் சார். உங்க கூட படிச்சவர் கிட்ட நீங்க பட்ட பாடு கொடுமை தான். அந்த அய்யர் உங்களை அப்படி நடத்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

     //அதைவிடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் என்று சாதிக்கு புதுவியாக்கனம் கொடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சந்துருவின் பார்வைக்கு வைக்கிறேன்.//

     நான் சாதிக்கு அந்த விளக்கத்தை தரவில்லை.என்றும் தரவும் மாட்டேன். நான் அந்த விளக்கத்தை தந்தது சில மக்கள் சைவ உணவு பழக்கத்துக்கு மட்டுமே. இது வேதத்தில் உள்ளது என்று அவன் விளக்கம் தந்தால் அது அவன் நம்பிக்கை சம்பந்தபட்ட விசயம். முஸ்லிம்கள் குரானில் சொல்லப்பட்டது என்பதால் நாங்கள் பன்றி உண்ணமாட்டோம் என்பது போல. அனால் அதற்க்கு அவன் இது கீழ் சாதிக்காரன் சாப்பிடுவது, அதனால் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் அது அயோக்யத்தனம். கடைந்து எடுத்த சாதி வெறி! மதத்தின் பெயரால் ஏற்படும் தனி மனித முடிவையும், அவன் மேல் சாதி என்னும் திமிரால் ஆடும் ஆட்டத்தையும் ஒன்றாக கருத வேண்டாம். என் மதம் என்னை பன்றி சாப்பிட கூடாது என்று சொல்கிறது, அதனால் நான் பன்றி உண்ண மாட்டேன் என்பது வேறு. பன்றி காபிர்களின் உணவு, அதனால் உண்ண மாட்டேன் என்பதும் இரு வேறு நிலைப்பாடு. ஒன்று தன்னை மட்டும் சம்பந்தப்பட்ட சுய முடிவு. அதனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. இரண்டாவதாக சொன்னது வெறி. அழிக்கப்பட வேண்டிய ஒன்று.

     //இந்துமதத்தை மதம் என்பதன் அடிப்படையில் பிறமதத்தோடும் ஒப்பிடுவதும் மனிதத்தன்மையற்ற செயல். ஏனெனில் மனிதனை மதிப்பதற்கு இந்துமதத்தில் ஒரு மயிரும் கிடையாது//

     எனக்கு இதுல தான் சார் அச்சிர்யம்! உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். நீங்கள் அய்யர், அய்யங்கார், உங்கள் சுற்றத்தினர் ஆகியோரிடம் சந்தித்த சாதி வெறியை கூறினீர்கள். அதை நீங்கள் அனைத்து மக்களிடமும், ஒரு படி மேலாக இந்து மதத்தின் மேலும் பூசுவது தான் எனக்கு பிரச்சனை. கேவலமான மனிதர்கள் எல்லா இடங்களில் இருகாங்க! முஹம்மது உபயோக படுதியதனால் ஒரு பல் துலக்கும் கருவியை உபயோகிக்கும் அளவுக்கு இஸ்லாத்தின் மீது பற்று கொண்ட ஒருவன் தான், போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் தலைவன். பள்ளி சிறுமியரை கடத்தி விற்றவன். அதே குரான் அடிப்படை தான், நபிகள் நாயகுதுக்கும். இருவருக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் மனம் மற்றும் அறிவு தான். இதில் இஸ்லாத்தின் தவறு என்ன?

     இந்து மதத்தின் சாரமே தனி மனித ஒழுக்கம் தான். நீ கோவிலுக்கு போனால் தான் ஆண்டவனிடம் செல்ல முடியும் என்றோ, இல்ல கீழ சாதிக்காரனை அடகினால்தான் உனக்கு புண்ணியம் என்றோ இந்து மதம் சொல்லவில்லை! உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! உன் கடமையை செய், அனைவருக்கும் உதவு, நீ கடவுள் இல்லைன்னு கூட சொல்லு! ஆனா உனக்கு சமூகத்தில் கடமை இருக்கு, அதை ஒழுங்கா பண்ணு, நீ நல்லா இருப்பே என்கிறது இந்து மதம். பிரமம் தான் எல்லாத்துலயும் இருக்கு! அனைத்தும் கடவுளே என்பது இந்து மதம்! இதை விட அனைவரும் சமம் என்பதை எப்படி சார் சொல்ல முடியும்! எல்லாரும் மனிதர் என்று கூட சொல்லவில்லை, எல்லாரும் கடவுள் என்கிறது! இதை தான் தாங்கள் மனிதனை மதிக்க ஒரு மயிரும் இல்லாத மதம் என்று சாடுகீர்கள். மனிதன் பாவப்பட்டவன், ஏவாள் செய்த பாவத்தால் நீ பிறக்கிறாய். ஏசுவை ஏற்றுகொல்வதன் மூலம் மட்டுமே நீ பாவத்தை போக்க முடியும். நீ எவளோ நல்ல வாழ்கை வாழ்ந்தாலும், புத்தானவே இருந்தாலும், ஏசுவை ஏற்பதே நீ இறப்பில் சொர்க்கம் செல்லும் வழி என்பதை விட நீ சக உயிர்களை எப்படி நடத்துகிறாயோ அதுவே உன் விதியை தீர்மானிக்கும் என்று சொல்லும் இந்து மதம், மனிதனை மதிக்கும் மதமாக எனக்கு தோன்றுகிறது.

     இதில் சாதியை கலந்தது, தன் சுயநலத்துக்காக கதையை மாற்றி எழுதியது எல்லாம் அவனவன் செய்த அயோக்யத்தனம். இதே இந்து மதத்தை வெய்து தான் திலகர் மக்களை ஒன்று திரட்டினார், ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் சமூக மாற்றங்களை கொண்டு வந்தனர். இதன் மூலம் தான் பல தமிழ் இல்லகிய பொக்கிஷங்கள் (சிலபத்திகாரம் உட்பட)நமக்கு கிடைத்தது. உலகத்தில் எல்லாம் மாறுவது. மாற்றுபவன் மனிதன். கடந்த 200-300 வருசத்துல வந்துதான் இந்து மதம் இல்ல. 3000 வருசமா அது தன்னை மாற்றி கொண்டுள்ளது. சில சமயம் அது வளர்ந்தது, சில சமயம் அது தேய்ந்தது. இப்போ அதுக்கு நோய் வந்துருக்கு. அதுக்காக அதை அழித்தே ஆக வேண்டும் என்பது இல்ல.வைத்தியம் பாத்து சரி பண்ணிடலாம். என்ன கொஞ்சம் பொறுமை வேணும்.அடகப்பட்டவனுக்கு இது கோவத்தை தரும். நியமான கோவம் அது. ஆனா இப்படி அழுசுட்டே போனா கொஞ்ச நாள்ள ஒண்ணும் மிஞ்சாது. அழிப்பை விட வைத்தியம் சிறந்தது.

     அணு சக்திய வெச்சு மின்சாரம் எடுக்கலாம் இல்ல உலகத்த அழிக்கலாம். உலகத்தை அழித்ததனால் அணு சக்தி ஆயுதம் மட்டும் அல்ல! ஆக்குவதும், அழிப்பதும் யார் கையில் அது இருக்கிறது என்பதை பொருத்தது. நீங்கள் இந்து மதம் இந்த கொடுமைக்கு எல்லாம் காரணம், அதனால் அது அழிக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். நான் சற்று மாற்று கருத்து உடையவன். உலகத்தில் முழுமையாக நல்லது அல்லது தீமை என்பது எதுவும் இல்லை. இந்து மதம் இல்லை என்றால் வேற காரணம் காட்டி அடக்குமுறை செய்பவன் அதை செய்து கொண்டே இருப்பான். இதை அழிக்க ஒரே வழி மக்கள் சிந்தனையை மாற்றுவது மட்டும் தான் என்பதே என் வாதம்.

     • இந்து மதத்தின் சாரமே தனிமனித ஒழுக்கம் என்கிறீர்கள்.

      சுயமரியாதை, தன்மானம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒழுக்கத்தைப் போதிப்பதற்கு இந்துமதம் என்றில்லை இன்னபிற மதங்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அவசியம் இருக்கிறது? உழைத்துவாழ்கிற எந்த மக்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள்?

      ஒரு மதம் தன் மக்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பார்க்குமேயானால் அதன் யோக்கியதை என்ன? இரண்டாவது கடமையைச் சுட்டுகிறது என்று சொல்கிறீர்கள். உரிமைகள் இருந்தால் தானே கடமைகள் பற்றி பேசமுடியும். உழைத்து வாழ்கிற மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு எந்த இந்து டெக்ஸ்டிலாவது ஒருவரியாவது இருக்கிறதா?

      \\உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! உன் கடமையை செய், அனைவருக்கும் உதவு, நீ கடவுள் இல்லைன்னு கூட சொல்லு! ஆனா உனக்கு சமூகத்தில் கடமை இருக்கு, அதை ஒழுங்கா பண்ணு, நீ நல்லா இருப்பே என்கிறது இந்து மதம். பிரமம் தான் எல்லாத்துலயும் இருக்கு! அனைத்தும் கடவுளே என்பது இந்து மதம்!\\

      மேற்கண்ட நீங்கள் சுட்டிக்காட்டுகிற வசனம் பகவத் கீதையாகும். இதைவிட சூழ்ச்சியான நயவஞ்சகமான வெறித்தன்மை கொண்ட கருத்து வேறெங்கும் இருக்க இயலாது. இவ்வசனங்கள் கிருஷ்ணன் அருச்சனிடம் உரைத்தது. போர்க்களத்திலே தன் சொந்தபந்தங்களையே கொல்ல வேண்டும் என்று அர்ச்சுனன் இனக்குழுச் சமூகத்தின் விழுமியங்கள் காரணமாக தயங்கி நிற்கிற பொழுது கிருஷ்ணன் உன் தயக்கம் தவறானது என்றும் பிரம்மம் எல்லாத்திலேயும் உண்டு; நீ பார்ப்பது வெறும் உயிர் மட்டுமே என்று குலகுரு பீஷ்மரைக் கொல்லச் சொல்கிறான். துரோணாச்சாரியாரைக் கொல்லச் சொல்கிறான்; கர்ணனைச் சொல்கிறான். காரணமே இல்லாமல் மனித உயிரைக்கொல்வதற்கு பெயர் கடமையாம். நயவஞ்சமாக சொன்னப்பட்ட கருத்துக்கள் விழுமியங்களாம். என்ன சார் இது?

      இனக்குழு சமூகத்திற்கே உரிய காரணங்களான ஈகை இரக்கத்தோடு அருச்சனுன் ஒரு கணம் யோசிக்கிறானே அதுதான் விழுமியங்கள். இந்து மதத்திற்கு அங்கு அவசியமே கிடையாது! பிச்சையெடுத்தாவது பொண்டாட்டிக்கு டீயும் பன்னும் வாங்கித்தருகிற கணவனுக்கு இல்லாத விழுயங்களா நீங்கள் சுட்டிக்காட்டுகிற பிரம்மத்தில் இருக்கிறது? இதெல்லாம் ரொம்ப அயோக்கியத்தனமாக இல்லையா சார்!

      • இவ்வளவு தானா உங்க புரிதல்? நீங்க மதங்களை புரிந்து கொள்ள எடுத்த முயற்சி இவளோ தானா? மொதல்ல போய் நீங்க சாடுகிற புத்தகங்களையும் கருத்துகளையும் படிங்க சார். அப்புறம் பேசுங்க.

       //சுயமரியாதை, தன்மானம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒழுக்கத்தைப் போதிப்பதற்கு இந்துமதம் என்றில்லை இன்னபிற மதங்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அவசியம் இருக்கிறது? உழைத்துவாழ்கிற எந்த மக்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள்?//

       இதை ஏன் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று விளக்க வேண்டுகிறேன். ஒழுக்கத்தை போதிக்க மதத்திற்கு என்ன தகுதி என்று கேட்கிறீர்கள். மதம் தன் மக்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பார்கிறது என்று நான் சொல்லவில்லையே! அது உங்கள் inference. சிவில், கிரிமினல் சட்டங்கள் போல மதமும் மனிதனை வழி நடத்தி செல்ல ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடு. சட்டம் இல்லாட்டி இப்போ இருக்கற பல உரிமை மக்களுக்கு இருக்காது சார். அப்போ சட்டம் மக்களை ஒழுக்கம் கெட்டவனாக பார்கிறது என்பது சரியா? மனிதன் ஒழுக்கம் கெட்டவன் என்று அது சொல்லவதில்லை. மனிதன் எப்போதுமே சுயநலம் இல்லாமல் இருப்பது இல்லை. அப்படி தன் நலத்துக்காக மத்தவனை துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பது சட்டம். அப்படி நீ ஏன் செய்ய கூடாது என்று சொல்வது மதம். மனிதன் சுயநலம் இல்லாம இருந்தா இன்னைக்கு உலகத்துல எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனா அப்படியா சார் இருக்கு? உழைக்கும் மக்களை அடிச்சு புடுங்க எந்த மதமும் சொல்வதில்லை. அப்படி செய்யாதே என்று தான் சொல்கிறது. எல்லா மக்களும் சேர்ந்தது தான் சமூகம். ஒண்ணு இல்லைனாலும் மொத்த சமூகமும் அழிந்து விடும் என்பது தான் வேதம் சொல்லும் உண்மை. ஒவ்வருவருக்கும் கடமையை அது அளிப்பது இதன் அடிப்படியில்தான். பிரமச்சாரி, க்ரிஹஸ்தான், வனப்ரசதன், சன்யாசி என்று பகுத்து நீ ஒவ்வாரு நிலையிலும் செய்ய வேண்டிய கடமை இது. நீ சுயநலமாக இருக்கல் ஆகாது, சமூகத்தில் ஒரு நல்ல அங்கமாக இருக்க வேண்டியது இப்படி, அது உன் கடமை என்று சொல்கிறது. இப்போ நீங்க சொல்ற உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடுவதும், ஒரு சாராரை அடக்கி, உழைப்பை கொள்ளை அடித்து வாழ்வது தவறு என்று சொல்வது இந்து மதம். இது தான் தனி மனித ஒழுக்கம், சமூக கடமை என்று சொல்கிறது. போய் படிச்சு பாருங்க. நீங்கள் சொல்லும் பறிக்க பட்ட உரிமை சில காலிகளின் கைவரிசை. எய்தவனை விட்டுட்டு அம்பை ஏன் நோகிறீர்கள்? மதம் உரிமையை மறுக்கவில்லை! அதை காட்டி சில மனித மிருகங்கள் உரிமையை மறுத்தன! அது மனிதனின் தவறே தவிர, மதத்தின் தவறு அல்ல!

       //காரணமே இல்லாமல் மனித உயிரைக்கொல்வதற்கு பெயர் கடமையாம். நயவஞ்சமாக சொன்னப்பட்ட கருத்துக்கள் விழுமியங்களாம். என்ன சார் இது?//

       எப்படி சார் இப்படி உங்களால பேச முடியுது? பாண்டவருக்கு சேர வேண்டிய உரிமையை மறுத்த பிறகு, அதை பெற போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டார்கள். உரிமையை மறுத்தவன் உன் சொந்தமாகவே இருந்தாலும் அவனை எதிர்க்க தயங்காதே என்று சொல்வது எப்படி சார் நயவஞ்சகம்? உங்க கூட பிறந்தவன் சாதி வெறி புடிச்சு ஆடினால் அவனை என்ன ஏது என்று கேட்க மாடீர்களா? இல்ல நீங்க உழைச்சு சம்பாதிச்ச சொத்த ஏமாத்தி புடுங்கினா போனா போகுது அப்படின்னு விட்டுடுவீங்களா? கோர்ட்டில் கேஸ் போடவோ இல்ல அவர்கள்கிட்ட சண்டை போடவோ மாட்டீர்கள்? தயக்கம் வந்தாலும் என் உரிமை எனக்கு வேண்டும்னு சொல்ல மாட்டீர்கள்? இத நீங்க சொன்னா சரி, கீதை சொன்னா அது நயவஞ்சகமா?

       //பிச்சையெடுத்தாவது பொண்டாட்டிக்கு டீயும் பன்னும் வாங்கித்தருகிற கணவனுக்கு இல்லாத விழுயங்களா நீங்கள் சுட்டிக்காட்டுகிற பிரம்மத்தில் இருக்கிறது?//

       நீங்க சொல்றது உண்மை தான் சார். இந்த இடத்தில் மதம் தேவை இல்லை. அதற்க்கு வேலையும் இல்லை. ஆனா கஷ்ட படும்போது பொண்டாடியை விட்டு ஓடறவனும் இருக்கானே சார்! என்னால இதுக்கு மேல முடியாது, என் குடும்பம் எப்படியோ போகட்டும் , நான் தப்பிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால் அது சரி என்று சொல்வீர்களா? அப்படி சுயநலம் தலைதூக்கும் போது தான் அங்கே மனிதமும், மதமும் தேவை. ஒருவரின் நியாயம் அடுத்தவனுக்கு பொருந்துவது இல்லை. ஒரு முதலாளிக்கு லாபம்தான் முக்கியம், என் தொழிலாளி எப்படி போனாலும் பரவாயில்லை என்பது அவனை பொறுத்த வரை சரின்னு வாதிடுவான். ஆனா எல்லாரும் ஒண்ணு, தொழிலாளிகள் இல்லேன்னா நீ இல்லை அப்படின்னு சொல்லுவதன் மற்றுமொரு வடிவம்தான் அனைத்து உயிர்களும் பிரமம் என்பது. நீ அனைத்தையும் நம்பித்தான் வாழ்கிறாய், அவை அனைத்தையும் எப்போதும் பாதுகாக்க வேண்டியது உன் கடமை என்பதை ரெண்டே வரியில் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல மனிதன் மனிதனாக இருக்கும் போது மதம், தத்துவம் எதுவும் தேவை இல்லை. அவன் சுயநலம் கொண்ட மிருகமாக மாறும்போது அவனை இழுத்து பிடிக்கும் கயிறு தான் மதம். சிலர் அந்த கயிறை கொண்டு மக்களை அடிப்பது, பிடிதிருப்பவன் தவறே அன்றி, கயிறின் தவறு அல்ல. அவனக்கு இது இல்லாட்டி இன்னொரு கயிறு. கயித்தை அறுப்பதை விட்டு, அவனை நல்ல வழிக்கு கொண்டு வருவதுதான் நாம் செய்ய வேண்டியது.எல்லாரும் சக மனிதனை மனிதனாக மதித்தால் மதம், தத்துவம், கம்முநிசம் எதற்கும் வேலை இல்லை.

     • \\ உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். நீங்கள் அய்யர், அய்யங்கார், உங்கள் சுற்றத்தினர் ஆகியோரிடம் சந்தித்த சாதி வெறியை கூறினீர்கள். அதை நீங்கள் அனைத்து மக்களிடமும், ஒரு படி மேலாக இந்து மதத்தின் மேலும் பூசுவது தான் எனக்கு பிரச்சனை. கேவலமான மனிதர்கள் எல்லா இடங்களில் இருகாங்க!\\

      இல்லை. இதுதவறான புரிதல். நாமெல்லாம் இந்துக்கள் என்ற பட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறோமோ தவிர, இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்து பார்ப்பனீயம் சொல்கிற கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான மக்கள் வழிவழியாய் வணங்குகிற சிறு தெய்வ வழிபாட்டிற்கும், இந்துமதம் கற்பிக்கிற வேத புராணங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையில் மக்களின் இந்த பழக்கவழக்கங்கள் எல்லாம் எதிர்கலாச்சாரமாக சித்தரிக்கிறது இந்து-பார்ப்பனீயம்.

      முப்பதுமுக்கோடி தேவர்கள் எல்லாம் கையாலாகதவர்கள். நம்மை ஆண்ட சிறு குறு நில மன்னர்கள் எல்லாம் நீங்கள் சொல்வதைப்போல சூத்திர சத்திரியர்கள் தான். ஆனால் அவர்கள் எல்லாம் அரக்கர்களாக சித்தரிக்கப்படுவதுடன் எல்லாப் போரிலும் தோற்கடிக்கப்பட்டவர்களாக, நீச பாசை பேசுகிறவர்களாக, நிறத்தால் பிரிக்கப்பட்டவர்களாக காட்டுகிறது இந்து மதத்தின் விழுமியங்கள். இதை ஒரு இந்து உணர்கிற பொழுது பார்ப்பனிய மதம் எதேச்சதிகாரமானது என்பதை உணரவே செய்வார்.

      சனாதனமும் சாதிவெறியும் தான் இந்து மதம். இதைத்தவிர்த்த உழைக்கிற மக்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் இந்துமதம் சொல்கிற கடமை, ஒழுக்கம், பிரம்மம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திண்ணை தூங்கிகளின் கலாச்சாரம் எப்படி அய்யனார் சாமி கும்பிடுகிற மானுமுள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு தலைமையேற்க முடியும் சந்துரு? அதனால் உங்கள் வசதிக்கேற்ப புரிந்துகொள்வதை விடுத்து, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வது தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். நமக்கு இங்கு வினையாற்றுதல் தான் தேவையே தவிர வெற்று சமரசங்கள் அல்ல.

      • நான் புராணம் சொன்னா கதை எல்லாம் உண்மைன்னு வாதிடவில்லை சார். நீங்க சொல்ற அதே சிறுதெய்வங்களில் ஒன்றான மாரியம்மனை ரிஷி பத்தினின்னு சொல்லுது சார் இந்து மதம். சிறு தெய்வ வழிபாட்டை எதிர்க்கும், அதை அழிக்க வேண்டும் என்று எந்த இந்து நூலாவது சொல்லிருந்தால் அதை நான் இது வரை படித்தது இல்லை. அப்படி எதாவது இருந்தா தயவுசெய்து காட்ட வேண்டுகிறேன்.

       நீங்க சொல்ற மாதிரி குறுநில மன்னர்களை எல்லாரையும் அரக்கர்களாக சித்தரிக்கவில்லை.அரக்கனாக இருந்தாலும் அவன் அரக்கன் என்பதால் எந்த அசுரனையும் எந்த கடவுளும் கொன்றதாக இந்து மதம் சொல்லவில்லை. தவறு செய்து, அட்டூழியம் செய்ததால் அவர்கள் கொல்லப்பட்டனார் என்று தான் சொல்கிறது. ஒரு அரக்கனாக இருந்தாலும், நல்ல மன்னன் என்பதால் ஓணம் கொண்டாடுவதும் இதே இந்து மதம் தான். (இது அனைத்தும் மக்களுக்கு வாழ்கை கோட்பாடுகளை சொல்ல எழுத பட்ட கற்பனை கதை என்பது என் பார்வை).தமிழ் கடவுள் முருகனும் தான் அரக்கர்களை அழித்ததாக கந்த புராணம் சொல்லுது. தமிழன் எழுதிய கந்த புராணம்! இதுவும் பார்பனர் சதியா? தொல்காப்பியம் தன் குருவாக அகத்தியரை சொல்கிறது. முதல் சங்கத்தின் தலைவராக சிவனை சொல்கிறது. கடல் கொண்ட போது நூல்களை முருகன் காப்பாற்றியதாக சொல்கிறது. இதுவும் பார்பன சதியா? இந்து மதம் பிராமணிய வழிபாடு மட்டும் அல்ல சார். அது கலவை சாதம். அதில் உங்களுக்கு வேண்டியதை நீங்கள் உண்ணலாம். இதை தான் உண்ண வேண்டும் என்று இந்து மதம் கட்டாய படுத்தவில்லை. தன் கடவுள் பெரிது என்று நினைக்கும் மனிதன் செய்வது அது.

       //சனாதனமும் சாதிவெறியும் தான் இந்து மதம். இதைத்தவிர்த்த உழைக்கிற மக்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் இந்துமதம் சொல்கிற கடமை, ஒழுக்கம், பிரம்மம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திண்ணை தூங்கிகளின் கலாச்சாரம் எப்படி அய்யனார் சாமி கும்பிடுகிற மானுமுள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு தலைமையேற்க முடியும் சந்துரு? //

       சனாதனத்தை தாங்கள் ஏன் எதிர்கீர்கள் என்று தெரிந்தால் தேவலை. மீண்டும் சொல்கிறேன். சாதி வெறி இந்து மதம் அல்ல! இடையில் வந்த சொருகல் அது. சுய லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இடைசொருகல். அவ்வளவே! இந்த சனாதன தர்மம் புத்த மதத்துலயும் இருக்கு சார். புத்தர், “வெறுப்பை அழிப்பது வெறுப்பு அல்ல. அன்பும், நல்லெண்ணமும் தான். இதுவே சனாதன தர்மம் ” என்கிறார் (Na hi varena verani, sammantidha kudacanari/ Averena ca sammanti, esa dhammo sanantano,”). இந்து மதம் அய்யனார் சாமி கும்பிடுபவனின் கலாச்சாரம் என்றோ அல்லது அதற்கு தலைமை என்றோ நான் சொல்லவில்லை. நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு அய்யனாரையும் கும்பிடலாம், அல்லாவையும் வணங்கலாம். மற்ற மதங்களை போல இந்து மதத்திற்கு ஒரு கடவுள் தூதுவர், ஒரு தத்துவம், ஒரு கோட்பாடு என்ற கட்டுப்பாடு இல்லை. சைவம், வைணவம், சக்தி வழிபாடு, த்வைதம், அத்வைதம், முன்னோர் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு எல்லாம் இதே இந்து மதத்தின் பிரிவு தான். இதை பற்றி நான் இங்கு சொல்வதை விட திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் The Hindu View of Life என்னும் நூல் மிக தெளிவாக விளக்கும். சுருக்கமா சொன்னா இந்து மதம் ஒரு கடல் சார். அதில் கலக்கும் பிராமணியம் என்றும் ஒரு ஆறு மட்டுமே இந்து மதம் என்று நீங்கள் வாதிடுகீர்கள். பிராமணீயம் தான் இந்து மதம், அதனால் அதை எதிர்கிறேன் என்று சொல்வது என் கண்ணுக்கு எட்டிய வரை தான் உலகம் என்று வாதிடுவதை போன்றது. நீங்கள் தத்துவத்தையும் கடவுள் வழிபாட்டையும் ஒன்றாக அணுகுகுரீர்கள்.

       இந்து மதம் மற்ற எல்லா மதத்தையும் ஏற்று கொள்கிறது. நீங்கள் எந்த பாதையை வேண்டுமானாலும் பின் பற்றலாம். எல்லா பாதையும் முடிவில் ஒரு இறைவனை சேரும் என்பது இதன் அடிப்படை சாராம்சம். அதனால் தான் தைவதம், அத்வைதம், சைவம், வைணவம் எல்லாம் இந்து மதத்தில் பிரச்சனை இருக்கு. மற்ற மதங்களை போல என் வழி மட்டுமே ஆண்டவனை சேரும் வழி என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்த வழிகள் எல்லாம் இருக்கிறது. அனைத்தும் ஒரு இலக்கை நோக்கி செல்லும். எது வேண்டுமோ அதை பின்பற்று. அனால் அனைத்தும் பிரமம், அனைத்தும் ஒன்றே என்னும் உண்மையை ஏற்துக்கொள் என்பது தான் இந்து மதத்தில் இது வரை மாறாமல் இருக்கும், யாராலும் மாற்று கூற முடியாத அடித்தளம்.

       பார்பனிய வழக்கம் மட்டுமே இந்து மதம் அல்ல. இதை நான் சொல்வதால் என் வசதிக்காக நான் புரிந்து கொள்வதாக எடுத்துகொள்ள வேண்டாம். இந்து மதம் அய்யனார் வழிபடும் மக்களின் கலாச்சாரத்தின் தலைமை இல்லை. அய்யனார் வழிபட்டாலும், ஆஞ்சநேயர் வழிபட்டாலும் அனைத்து உயிர்களும் ஒன்று தான் என்று நீ ஏற்பது போதுமானது என்பதே இந்து மதம். இதில் சில காலிகள் தங்கள் சுயநலத்துக்காக வேறு மாதிரி சொல்வது, தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு தங்கள் புனித நூலை காரணம் காட்டுவது போல தான். அவன் சொல்வதை எப்படி நீங்கள் ஏற்க மாட்டீர்களோ, அதே போல் நீங்கள் இந்து மதத்தில் எந்த விசயத்தையும் ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விசயம். அனால் ஒன்று மட்டும் நினைவில் வெய்க்க வேண்டுகிறேன். இந்து மதம் என்பது பார்பனம் அல்ல. நிச்சயமாக அல்ல.அது எந்த கலாச்சாரத்துக்கும் எதிரியோ அல்லது மேற்பட்டதோ அல்ல. நீ என்ன வழி முறையில் வேண்டுமானாலும் வழிபடு அல்லது கடவுள் என்று ஒன்று இல்லை என்று கூட கூறு. ஆனால் எல்லா உயிர்களும் ஒரு இடத்தில் இருந்து தான் வந்தது, உன் வாழ்கையின் குறிக்கோள் இந்த உண்மையை உணர்வது தான். அதற்காக உன் சமூக கடமையை மறக்காதே. நீ சமூகத்தில் உன் பங்கை ஆற்றி கொண்டே, இந்த உண்மையை உணர எந்த வழியை வேண்டுமானாலும் பின் பற்றலாம் என்று கூறுவதே இந்து மதம். இதற்க்கு மாற்றாக எவன் என்ன கூறினாலும் அவன் தன் சுய பார்வையை இந்து மதத்தின் மீது திணிக்கிறான்.

       • சாதி வெறி இடைச் செருகல் என்று சொல்லி வேதத்தைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள். வேதம் மக்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளைத் தோற்றுவித்தது என்று சொல்லவேண்டும்.

        சுவற்றுப் பல்லி கூட தன் உணவிற்கு பல இடங்களில் அலைந்துதிரிந்து பூச்சிகளைப்பிடித்து உழைத்துவாழ்கிறது. ஆனால் மடப்பள்ளி சாம்பலே உயர்வு என்று சொல்கிற சர்வபள்ளிபோன்றவர்கள் பலகொடூரங்களை மறைத்துவிட்டு வேதம் வேதம் என்று பித்தலாட்டம் பாடுகிறார்கள். இராதா கிருஷ்ணனின் முகத்திரை அம்பேத்காரால் அக்குவேறாக ஆணிவேறாக கிழிக்கப்பட்டிருக்கின்றன ((நூல்; சாதியை ஒழிப்பது எப்படி? மற்றும் இந்துயிசத்தின் தத்துவம்). எப்படி வேதம் ஒன்றுக்கும் உதவாத நூலோ அதே போன்றது இராதகிருஷ்ணனின் தத்துவ நூல்கள். அவை பயனற்றவை மட்டுமல்ல; மனித சமூகத்தின் இழிவை நியாயப்படுத்துபவை. சனநாயகத்தை விரும்புகிற எவர் ஒருவரும் இதைக் கேள்விக்கு உட்படுத்துவர்.

        இந்துமதத்தின் தத்துவங்கள் என்று எழுதிய கொடூரங்கள் எல்லாம் கேள்வி கேட்பாரின்றி அவர்கள் சார்ந்த சாதி காரணமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதே இந்துமதத்தை காந்திசம் என்ற பெயரில் காந்தி வாந்திஎடுத்ததையெல்லாம் அம்பேத்கர் சுட்டிக்காட்டியபொழுது பாரிய எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கிற பொழுது அம்பேத்கர் இப்படி எழுதினார்; “நாய்கள் குரைத்தாலும் வணிகவண்டிகள் தொடர்ந்து முன் செல்லவேண்டும்”

        இன்றைக்கும் அதே நிலைமைதான் நிலவுகிறது. இந்துச் சமூகத்தின் பல உறுப்புகள் அழுகிநாறுகிற பொழுது, ஒரு கூட்டம் மட்டும் வேதம் சிறந்தது; வேதப்பாரம்பரியம், வேதத்தத்துவம் என்று கூச்சலிடுகின்றன. இதில் ஒரு நபராக சந்துரு போன்றவர்கள் இருக்கிற பொழுது, அவர்களிடத்திலே உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டியது அவசிமாகிறது.
        தத்துவத்தை விவாதத்தில் வைக்கவிரும்புகிறவர் அம்பேத்கர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்சொல்லவேண்டும். “இந்துயிசத்தின் தத்துவம்” என்ற நூலில் இந்துமதத்தின் சனநாயகமற்ற தன்மை, வன்முறையையே ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிற அமைப்பு விளக்கப்பட்டிருகிறது. உபநிடதங்கள் மக்களின் வாழ்க்கையில் என்னமாதிரியான தாக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது விரிவாகவிளக்கப்பட்டிருக்கிறது. அதை சந்துரு போன்ற வாசகர்கள் வாசிக்கவேண்டும்.

        இந்திய வரலாற்றில் நெய் ஊற்றித்தின்றதற்காக தலித்துகள் கொடூரமாகத்தாக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டாடை அணிந்தற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கவஸ்திரம் அணிவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு நடக்கிற பொழுது, இதையெல்லாம் கண்டிக்கிற அளவிற்கு, தவறு என்று சொல்கிற அளவிற்கு வேதம் ஒரு போதும் நித்ய சாட்சியாக என்றைக்கும் இந்திய சமூகத்தில் இருந்ததே கிடையாது.

        கிருத்தவனுக்கு பைபிள் இருக்கிறது, இசுலாமியனுக்கு குரான் இருக்கிறது என்று சொல்வதைப்போல இந்துவிற்கு வேதம் இருக்கிறது என்று சொல்வது அயோக்கியத்தனமானது. ஏனெனில் ஒரு புத்தகம் பறைசாற்றுகிற விழுமியங்கள் அதைப்பின்பற்றுகிற மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து நம்மால் இனம்காணமுடியும். ஆனால் ஓர் இந்துவின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது ஸ்மிருதிகள் மற்றும் மனுச் சட்டம் மட்டுமே. ஆதிக்கசாதிகள் வேதோக்தா முறையில் வாழவேண்டும் என்பதும் பிற சாதிஇந்துக்கள் புரோணாக்தா முறையில் வாழவேண்டும் என்பதும் ஸ்மிருதிகளின் கட்டளை. அதுதான் இன்றுவரை நடத்தைவிதிகள்.

        சான்றாக பார்ப்பனர் உபநயம் செய்வது அவருக்குவிதிக்கப்பட்ட சட்டம். ஆனால் இந்துவின் பிறசாதிகளுக்கு புரோணாக்தா விதியின் படி உபநயம் கிடையாது. ஒரு சூத்திரனுக்கு புரோணாக்தா விதிப்படி திருமணம் செய்கிற உரிமையோ, இறுதிச் சடங்கு செய்கிற உரிமையோ கிடையாது. அவ்வாறான தருணங்களில் எல்லாம் அவன் பூணுல் அணிந்து பார்ப்பானாக கணநேரம் மாறிக்கொள்ள வேண்டும் என்கிறது புரோணாக்தா.

        1. ஒரு சமூகத்தின் மக்கள் இவ்வாறு தெளிவாகப்பிரிக்கப்பட்டு, இன்று வரை அதுவே விதியாக இருக்கிறபொழுது, இதெல்லாம் இடைச்செருகல்கள்; ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை; இந்துப்பாரம்பரியம் சிறப்பானது என்று சொல்வதன் மூலமாக தாங்கள் வலிறுத்தவிரும்புகிற பார்வை என்ன?

        2. ஒரு காலத்தில் இந்துக்களுக்கென்று சிறந்த பாரம்பரியம் இருந்ததாகவும், சாதிவந்தபிறகு அவையெல்லாம் சீர்கெட்டுவிட்டன என்று சொல்ல வருகிறீர்களா?

        3. வரலாற்றில் வேதம் எதைபதிவு செய்திருக்கிறது?

        என்பதைச் சொல்லுங்கள். நானும் இதுகுறித்து பதிவிடுகிறேன்.

        • //1. ஒரு சமூகத்தின் மக்கள் இவ்வாறு தெளிவாகப்பிரிக்கப்பட்டு, இன்று வரை அதுவே விதியாக இருக்கிறபொழுது, இதெல்லாம் இடைச்செருகல்கள்; ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை; இந்துப்பாரம்பரியம் சிறப்பானது என்று சொல்வதன் மூலமாக தாங்கள் வலிறுத்தவிரும்புகிற பார்வை என்ன?//

         எப்படி சொல்ற எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு, நல்ல விசயம் மட்டும் எடுத்துக்கலாம். இந்து மதத்தில் நல்ல விசயம் நெறைய இருக்கு (கெட்டதோட சேத்து), கெட்டதை ஒழிக்க பாடுப்ட்ற சமயத்தில் நல்லதையும் நாலு பேருக்கு சொல்லலாம் என்ற நப்பாசை தான் சார். எல்லாம் மனிதன் உருவாக்கியது தானே. அவனவன் வசதிக்கு ஏத்த மாதிரி சில இடங்களை மாத்திட்டான். அதுனால எனக்கு எல்லாத்தையும் தூக்கி எரிய மனசு இல்லை சார். நான் பைபிள், குரானையும் படிச்சு இருக்கேன். அதுலயும் சமூகத்துக்கு ஒவ்வாதது இருக்கு. உதாரணம் (தமிழ் மொழிபெயர்ப்பு என்னிடம் pdf வடிவில் தான் உள்ளது. வலையில் தேட சிறிது நேரம் இல்லை. மன்னிக்கவும்):

         அடிமை செய்ய வேண்டியது பற்றி Genesis 16:8

         And he said “Hagar, Sarai’s slave girl, where have you come from and where are you going?” She answered, “I’m running away from Sarai, my mistress.” The angel of the Lord said to her, “Go back to your mistress and submit to ill treatment at her hands.”

         கஷ்டத்தில் இருக்கும்போது மக்களை உண்ண அனுமதி தரும் Deut. 28:53

         Then because of the dire straits to which you will be reduced when your enemy besieges you, you will eat your own children, the flesh of your sons and daughters whom the Lord has given you.

         ஊனமுற்றோர் கடவுளின் சபையை சேரமுடியாது என்று சொல்லும் Deut. 23:1

         No man whose testicles have been crushed or whose organ has been cut off may become a member of the Assembly of God.

         எந்த சமூகத்திலும் பொருந்தாத சில:

         Luke 14:26 “If anyone comes to me and does not hate his own father and mother and wife and children and brothers and sisters, yes, and even his own life, he cannot be my disciple.”

         Timothy 2:12 “I permit no woman to teach or have authority over a man. She has to keep silent”

         Peter 2:18 “Slaves, accept the authority of your masters with all deference. Not only those who are kind and gentle but also those who are harsh”

         இதை எல்லாம் வெய்து நாம் மொத்த பைபிள், அல்லது கிறிஸ்துவ மதத்தையோ தூக்கி எரியவில்லயே! கெட்டதை தூக்கி போட்டுட்டு நல்லதை எடுதுகல? அதையே இந்து மதத்திலும் செய்வோம். சாதி, வர்ணம் போன்றவற்றை தூக்கி போட்டுட்டு, கர்ணனின் நட்பு, ராமன் தன் தந்தை வார்த்தையை மதித்தது, ஏகலைவனின் விடா முயற்சி (அவன் கட்டை வெரலை துரோணர் கேட்டதை தப்புன்னு காட்டி, இப்படி எந்த குருவும் கேட்க கூடாது என்பதற்கு ஒதாரணம்), அடுத்தவன் பொண்டாட்டிய, குடும்பத்த எதாவது பண்ணுனா இராவணன், கௌரவர் கதி தான், உனக்கு உரிமை மறுக்கபட்டால் தெய்ரியமா போராடு (உன் குடும்பமா இருந்தாலும்) கடவுள் உன் பக்கம் இருப்பான் (மகாபாரத யுத்தமே அது தானே), அநியாயத்தை பார்த்து கொண்டு சும்மா இருகாத (சபைல துரோணர், பீஷ்மர் மாதிரி), அப்படி இருந்தா நீ எவளோ பெரிய ஆளா இருந்தாலும் அழிவாய் அப்படின்னு நம்ம வாழ்கை முறை, கடை பிடிக்க வேண்டிய நெறி சொல்லிகுடுபோம். இது மனிதம் தான். ஆனா மக்களுக்கு மனிதத்தை நேரடியா சொல்றதை விட, மதம் மூலமா சொன்னா சீக்கிரம் ஏற்துகுவான். அப்புறம் போக போக அப்படியே மதத்தை கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுட்டு வந்தோம் நா, மனிதம் தான் இருக்கும். நம்ம இலக்கும் அது தானே.

         //ஒரு காலத்தில் இந்துக்களுக்கென்று சிறந்த பாரம்பரியம் இருந்ததாகவும், சாதிவந்தபிறகு அவையெல்லாம் சீர்கெட்டுவிட்டன என்று சொல்ல வருகிறீர்களா?//

         நமக்கு என்று ஒரு பாரம்பரியம் இருந்தது. நாமும் நல்லவர்களாக, மேற்பட்ட சமூகமாக இருந்தோம். அதுனால தானே அத்துனை படை எடுப்பு. நாம மனிதன நம்ம சுய லாபத்துக்காக சிலர் பிரிச்சதை தட்டி கே