ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்!
புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
சென்ற இடமெல்லாம் உழைக்கும் மக்களை பிளவு படுத்தி சாதி மதவெறிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கிவரும் ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நவம்பர்9-ல் பேரணியும் பொதுக்கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டது.
பெரியாரையும் அம்பேத்கரையும் வைத்து பிழைப்பு நடத்தும் யாரும் மூச்சு விடவில்லை. டிரோஜன் குதிரையை நம்பாதீர்கள் என்று வீரமணி அறிக்கைவிடுகிறார்.எனினும் 94 வயதிலும் தன் மூத்திரச்சட்டியை தூக்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கு சூடு சொரணையை ஏற்படுத்தக் காலமெல்லாம் அடிகளையும் உதைகளையும் வாங்கி திரிந்த பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாருக்கு அந்தக்கவலை எப்போதும் இருந்ததில்லை பார்ப்பன எதிர்ப்பில்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் அணிதிரண்டு களத்திலிறங்கி போராடிக் கொண்டிருக்கின்றன, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்கள்.
இப்போது ‘சமுதாய நல்லிணக்கம்’, ‘ராஜேந்திர சோழனுக்கு விழா’ என்று முகமூடி போட்டு வரும் ஆ.எஸ்.எஸ்-ன் பொய்முகத்தை கிழிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் 09.11.14 அன்று காலை வடபழனி சந்தை அருகில் காலை 11 மணிக்கு எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் பாசிச இருளைக்கிழிக்கும் முழக்கங்களோடு தொடங்கியது.
அனுமதியோம்! அனுமதியோம்!
காவி உடை பயங்கரவாதிகள்
ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணியை
தமிழகத்தில் அனுமதியோம்!
கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளான
தொழிலாளிகளின் எதிரியான
தீண்டாமையை கொடுமையைப் புகுத்தி
தலித் மக்களை இழிவுபடுத்திய
பார்ப்பன……பாசிஸ்டுகளின்
பேரணியை முறியடிப்போம்!
இட்லரின் வாரிசுகளின்
ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி
வி.எச்.பி-இந்து முன்னணி
பார்ப்பன பயங்கரவாதிகளை
தமிழகத்தில் காலூன்றவிடாமல்
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
இது பெரியார் பிறந்த மண் என்ற
வெற்றுப் பேச்சு பயனில்லை!
ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பு
படையெடுத்து வருகிறது!
குஜராத்தில், முசராபாத்தில்
இந்துமதவெறி ஆட்டம் போட்டு
முசுலீம் மக்களை கொன்று குவித்த
மோடி – அமித்ஷா பாசிச கும்பல்
தமிழகத்தில் நுழைகிறது!
பெரியாரின் வாரிசுகளே……!
இனியும் தாமதிப்பது அறிவீனம்
களமிறங்குவோம்! களமிறங்குவோம்!
ஆர்.எஸ்.எஸ் வகையாறாக்களை
தமிழகத்தில் இருந்து துடைத்தெறிவோம்!
உழைக்கும் மக்களே!
ஜனநாயக சக்திகளே!
ஓரணியாய் எழுந்து நிற்போம்!
பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு எதிரான
அரசியல் எழுச்சிக்கு அணிதிரள்வோம்!
ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி
பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு
தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்!
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். வெங்கடேசன் “முசுலீம் மக்களையும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களையும் கொல்வதையே கொள்கையாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் இப்போது இப்போது கலாச்சார அமைப்பு என்ற பெயரில் வந்திருக்கிறது. மயானம், கோயில் குடிநீர் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்றும் சமுதாய நல்லிணக்கம் வேண்டும் என்றும் சுவரொட்டி ஒட்டுகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களை வருணாசிரம அடிப்படையில் பிரித்து அவர்களை தன் பார்ப்பன சாதிவெறிக்கு பலியிடுவது யார் ? உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி சமுதாயத்தை துண்டாடுவது யார்? ஆர்.எஸ்.எஸ் தான்.
இப்படிப்பட்ட இந்த நச்சுப்பாம்பு தேச விடுதலைப்போரில் வெள்ளைக்காரனுக்கு அடியாள் வேலை பார்த்தது. அன்று முதல் இன்று வரை பல்வேறு கலவரங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களை கொன்றொழித்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இன்று பேரணி நடத்த ஜனநாயக உரிமை வேண்டும் என்கிறதென்றால் தமிழகத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
பார்ப்பன எதிர்ப்பினை கற்றுக்கொடுத்த தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த ஆர்.எஸ்.எஸ்ன் கீழ் 46 நச்சுப்பாம்புகள் நாடுமுழுக்க பரவிக்கிடக்கிறது. இந்த பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் உழைக்கும் மக்களுக்கானவை அல்ல, அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே என்பதை நாம் உணர்ந்து உழைக்கும் மக்களை அணிதிரட்டி பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை மோதி வீழ்த்தவேண்டும் ” என்று அறைகூவினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரசுரத்தை வாங்கிய பலர் நம்மிடம் சந்தேகங்களைக் கேட்டுச் சென்றனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி என்றவுடன் கொந்தளித்து பார்ப்பன எதிர்ப்பு தடையரணாக இருந்து இருக்க வேண்டிய தமிழகம் இப்போது அமைதியாக இருக்கிறது. இதோ அந்த அமைதியை உடைக்க ஆரம்பித்து விட்டோம், பெரியார் என்ற அந்த பார்ப்பன எதிர்ப்புச் சூரியனை கையிலேந்தி தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபின் வழியில் பார்ப்பன பாசிஸ்டுகளை சுட்டெரிப்போம் அந்த நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் உழைக்கும் மக்களுக்கானவை அல்ல, அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே
அதில் பார்ப்பணமும் இல்லை மதவெறியும் இல்லை வலி….உழைக்கும் மக்களும் அதில் அடக்கம்.
சுதந்திர இந்தியாவில் காந்தியை கொன்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ், இந்தியா முழுவதும் மத, சாதிக் கலவரங்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித இரத்தங்களை குடித்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ், சாகா என்ற பெயரில் ஆயுதம் ஏந்தி துப்பாக்கி பயிற்சி அளிக்கும் பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ், சமஜுதா ரயில் உட்பட பல்வேறு இடங்களில் குண்டு வைத்து மனித உயிர்களை படுகொலை செய்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ், பாபரி மஸ்ஜித் உட்பட நூற்றுக்கணக்கான பள்ளிவாசலை (மஸ்ஜித்) இடித்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ், இன்று வரை தேசிய கொடியை ஏற்க மறுக்கும் ஆர்.எஸ்.எஸ், தென்காசியில் தங்கள் அலுவலகத்திலேயே குண்டுகளை வைத்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ் etc., இப்படிப்பட்ட குற்றச்சாட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் க்கு சென்னை உயர்நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்தது ஏன்?
இவர்கள் கலவரக்காரர்கள் என்பதற்கு பேரணி நடத்த தேர்வு செய்த ஊர்களே சாட்சி , தென்காசி, தக்கலை , கோயம்புத்தூர் , சென்னை ஆகிய ஊர்கள் ஏற்கனவே கலவரம் நடைபெற்ற ஊர்கள் . இந்த ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் பேரணி நடத்த ஆர் எஸ் எஸ் முன் வரவில்லை? , இதற்க்கு காரணம், இந்த ஊர்களில் அதிகமான முஸ்லிம்கள் வாழவில்லை.
காவிப்ப் படை பேரணியில் கூட்டமே இல்லை என்பவர்கள் உங்கள் கூட்டத்தைப்பார்த்தால் அது எவ்வளவு பெரிய கூட்டம் என்பதை அறிவர்.
மற்றூம் ஆர் எஸ் எஸ்ஸிடம் உள்ள டிசிப்ளின் உங்க கூட்டதில் இல்லை…
ரசியாவிலிருந்து வந்தெரிகலாக வந்த கம்முனாட்டிகலின் எச்சிகலைகலா
”ரசியாவிலிருந்து வந்தெரிகலாக வந்த கம்முனாட்டிகலின் எச்சிகலைகலா”
மாமா நீங்க சங்கராச்சாரியின் கோமனத்திலிருந்து தானே வந்தீங்க!! பொய் சொல்லாம சொல்லுங்க மாமா!!
////ரசியாவிலிருந்து வந்தெரிகலாக வந்த கம்முனாட்டிகலின் எச்சிகலைகலா///
ரசியாவில் மட்டுமல்லாது நமது எதிரி நாடான சீனாவிற்கும் வக்கலாத்து வாங்குகிரவர்கள்தான் இவர்கள். நமது நாட்டுக்கு நல்லது எது நடந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது. நமது முன்னேறுவதை விரும்பபாதவர்கள். கடந்த பல ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டேதான் போனது. இறங்கவில்லை. அப்போது குதித்தார்கள்.இப்போது இதன் விலைகள் பலமுறை குறைந்து விட்டது. இதற்கும் ஏதேனும் காரணம் கண்டுபிடித்து போராடுவார்கள்!!! பெட்ரோல் பாங்க் வைத்துருக்கும் “சிறு வியாபாரிகள்” பாதிக்கிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தினாலும் நடத்துவார்கள்!!
Yes Mr Natraayan.Petrol and diesel prices have come down due to fall in barrel prices.But it will go up when the crude oil prices go up.Govt has washed its hands recently even from fixation of diesel prices.Do you understand?First understand and then call communists with your choicest epithets.
//Govt has washed its hands recently even from fixation of diesel prices//
Yes, Indian Govt should control Saudi oil price 🙂
திராவிடத்தை ஆட்கொள்ளும் ஆரியம்”
வன்முறை கலாச்சாரமான RSS பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
உச்சி குடுமியில் தொங்கும் உயர் நீதிமன்றம் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது
இந்தியா ஒரு மதசார்பற்ற(?) ஜனநாயகநாடு என்பது உங்களுக்கு தெரியாது போலும். இங்கு எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அதுபோல் தங்களது கொள்கைகளை பரப்ப அனைவருக்கும் உரிமை உண்டு. அதுபோல் இந்த இயக்கமும் செயல்படுகிறது. இங்கு வெளியிட்டுள்ள படங்களைப் பார்த்தால் உங்களின் செயல் அவர்களை விட மட்டரகமாக உள்ளது என்பது தெரிகிறது. உங்களுக்கு மட்டும் கலர் கலராக கொடிகளை கொண்டு சிவப்பு நிற ஆடை அணிந்து வலம்வர உரிமை இருக்கிறது போலும். மற்றவர்களுக்கு கிடையாது போலும்!!!!!
முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தங்களது மதம் சார்ந்த விழாக்களை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்!! அது போல் இந்துக்கள் மதவிழாவில் கொண்டாடுவது இல்லை. ஒரு வினாடி மட்டும் கடவுளை பார்த்துவிட்டு எந்த பிரச்சாரமும் இல்லாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் இஸ்லாமியத்தில் தொழுகை என்ற பெயரிலும் கிருஸ்துவத்தில் ஜெபம் என்ற பெயரிலும் இந்துக்கள் தூற்றப்படுகிறார்கள்.
மு.நாட்ராயன் அவர்களே நீங்கள் உங்களுடைய அறிவை சற்றாவது வளர்த்து கொன்டு பின்னூடம் இடுவது நல்லது. இசுலாமியர்களின் தொழுகையில் இறைவனை துதி பாடுவது மட்டுமே உண்டு.
அது சாகா அல்ல மற்றவர்களை தூற்றுவதர்க்கு. நாங்கள் மதத்தையும் அரசியலையும் பிரித்து பார்பதற்கு பக்குவப்பட்டு விட்டோம்.
கம்யூனிஸ்டுகள் மக்களை பிரிவு படுத்தி குளிர்காய மாட்டார்கள். நீஙகள் பாகிஸ்தானை வைத்து இந்து வெறியை வளர்கிரீர்கள்.நாங்கள் சீனாவை காட்டி உருப்பட சொல்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் பேரணியின் தடைக்காக வருத்தப்படும் பாா்ப்பனா் அல்லா வைணவ சைவா்களே.. நீங்க இதுவரைக்கும் உங்களில் ஒரு பகுதி வைணவ சைவா்களை (ஒடுக்கப்பட்டும்) மக்களுக்காக குரல் கொடுத்தது உண்டா..
பூாி சங்கராசாாி என்பவன் சூத்திரா்களை கோவிலில் உள்ளே வருவதற்கு தடை வேண்டும் என்று பேசிய போது..உங்களில் பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் இல்லது இந்து சபைகள் ஏதாவது ஏன் இந்த முட்டாள் பூாி “சூத்திரா்கள் என்று இந்துக்களை பிாிக்கிறாா்“ என்று வருத்தப்பட்டு இப்படி புழம்பியது உண்டா??
இங்கு ஆடை மட்டும் பிரச்சனை அல்ல..அந்த அமைப்புகளின் முந்தைய செயல்பாடுகளையும் அரசு ஆலோசிக்கும்..பல கலவர வரலாற்றை கருத்தில் கொண்டு தான் அதன் பேரணி தடை செய்யப்பட்டது. அரசுக்கு சில பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அடிப்படைமதவாதிகள் கலவரங்களில் ஈடுபடு திட்டயிட்டதாக தகவல் வந்தால் காரணத்தால் தான் அது நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு பிறகும் தடை செய்யப்பட்டது..
அதே போல் ஆயுதம்.அது கம்பு…கத்தி…வால் கொண்டு செல்வது.. சீா்வுடை அணிவது தடை என்பது இந்திய சட்டம்…
பா.ஜ.க ஒரே வண்ணத்தில் மேல் துண்டு அணிகிறது..அதை எப்போழுதாவது தடை வந்ததுண்டா.. ஆனால் காவல்துறை போன்று..சீா்வுடைகள் அணிவது சட்டப்படியே தவறு என்று சட்டம் இருக்கிறது…
இஸ்லாமீயா்களையோ..கிருத்துவா்களையோ..மட்டும் பேசிகிட்டு இருந்தா எப்படி உங்க இந்துக்களில் ஒரு குழுவான அதிலும் பொரும் பகுதியான உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை தலித்து சூத்திரன் பஞ்சமன் அாிஜன் என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க இந்து சபைகள் ஒடுக்குறாங்களே அதை பத்தியும் கொஞ்சம் கவலை படுங்க..