தருண் விஜயின் உண்மை முகம் பாரீர்!
“சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால்
இந்திய உணர்வே அழிந்து விடும்…
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை…
உயர்பதவிகளைப் பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்
என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது.
அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”
(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே,
சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே!
உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருண் விஜய்க்கு விழாவா? வெட்கமாயில்லை?
இருநூறாண்டுகளுக்கு முன் பார்ப்பன ஆதிக்க சக்திகளால்
அழிக்கப்பட்ட தமிழையும், திராவிட மரபையும் மீட்டுத்தந்தார்
அயர்லாந்திலிருந்து வந்த கால்டுவெல் !
தமிழால் வயிறு வளர்க்கும் சினிமாக் கவிஞன் எவனும்
அவருக்கு விழா எடுக்கக்காணோம்!
கால்டுவெல்லையும், திராவிட மரபையும் அழிப்பதையே
தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் வடநாட்டுக்காரன்
“தமிழ் ஆதரவு” என்று நடித்தால் உடனே அவனுக்கு விழாவாம்!
ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கயமையில் காங்கிரசை விஞ்சும் பாஜக!
- ஈழத்தமிழின அழிப்புப் போரை எதிர்த்து
அன்று கும்பலோடு கோவிந்தா!
இன்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து,
சிங்களவெறி பிக்கு அநகாரிக
தர்மபாலாவுக்கு இங்கே தபால்தலை வெளியீடு!
- தமிழக மீனவர்களைக் காப்போம் எனப்பேசி
ஓட்டுப் பொறுக்கிவிட்டு,
தற்போது மீனவர்களுக்கு தூக்கு!
படகு பறிமுதல், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என்று
சு.சாமியின் திமிர்ப்பேச்சு! - இந்தி – சமஸ்கிருத திணிப்பு,
பாடநூல்கள் பார்ப்பனமயம்..!
கூடவே தமிழுக்கு ஆதரவு என்று
தருண் விஜய் நடத்தும் நாடகம்!
- இத்தனைக்குப் பிறகும்
காவிக் கிரிமினல்களைப் பாராட்ட
மியூசிக் அகாதமிக்குப் போகும் தமிழன்,
இளித்தவாயனா, இனத்துரோகியா?
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
வைரமுத்து பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரை கெரோ செய்யவேண்டும்
இந்தியாவின் ஜனநாயக மாண்பை விலை பேசும் கம்யுனிஸ எச்சக்கல்ல வினவுன்னு எங்களுக்கு சுவரொட்டி அடிக்க தெரியாதா முட்டாப்பயல்களா..
ஏன் இன்னும் அடிக்கல? எப்போ அடிப்பீங்க?
பவளமுத்து, ஒழுக்கமா விவதம்பன்னவும் உங்களை ____________ பவளமுத்து என்று எழுதினால் எப்படீருகும்
“சமஸ்கிருதமே மூச்சு, சமஸ்கிருதமே இந்தியா” என்பதில் தருண் விஜய் என்னும் ஆர்.எஸ்.எஸ் அம்பி தெளிவா இருக்கிறார்.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள்: http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/de-indianisation-begins-with-elimination-of-sanskrit/
அவரு தமிழ் மொழியைப் பாராட்டினாராம்.
அதனால் இங்கே இருக்கிற சில ஆர்வக் கோளாறுகள் அவருக்கு பாராட்டு விழா எடுப்பது பற்றி என்னத் சொல்ல…
இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு நடந்தபோது/நடந்துகொண்டிருக்கும் போது தருண் விஜய் என் வாயை மூடி இருந்தார் என்பதை கேட்டு சொல்லுங்க.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்குவது பற்றி ஒரு மனு எழுதி அதனை பாஜக தலைவரான மோகன் பகவத் அவர்களிடம் கொடுக்க சொல்லுங்க.
அடுத்ததாக தமிழர்த் திருநாளான பொங்கலன்று பாஜக கும்பல் அவரைத் தமிழகத்தில் தெருத்தெருவாக கொண்டு செல்லப் போகிறார்களாம்!!
சிதம்பரம் கோவிலில் தமிழ் திருவாசகத்தை ஒலிக்க மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் பாஜக கும்பலின் தமிழ் ஆதரவைக் கண்டு வியக்கேன்..
“தமிழைக் கொண்டு தமிழர்களை ஆரியமயப்படுத்தும் முயற்சி” தவிர வேறு எதுவுமில்லை.
சோ கால்ட் தமிழறிஞர்கள் அதைத்தான் செய்தார்கள் (அனைத்து அறிஞர்களும் அல்ல).
வடமொழியில் உள்ள புராணக் குப்பைகளைத் தமிழுக்கு கொண்டுவந்தனர்.
அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை விதைத்தனர்.
அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து நின்றவர் தந்தை பெரியார்.
ஆனால் நம்ம ஆளு என்ன செய்கிறான்?
ஆரியத்தை தமிழில் விதைத்தவனை மறந்துவிடுகிறான். இல்லைன்னா தலையில் தூக்கி வைத்து ஆடுறான்.
மிக லாவகமாகப் பெரியாரைத் திட்டுகிறான்.
“பெரியார் தமிழுக்கு என்ன செய்தார்? அவர் ஏன் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார்?” என பெரியாரிடம் சண்டைக்கு போகிறான்.
ஆரியம், மதம், புராணம் இவற்றிலிருந்து தமிழைக் காப்பதுதான் பெரியாரின் நோக்கமாக இருந்திருக்கும்.
இன்று பெரியார்தான் தேவைப்படுகிறார்.
கம்பனோ, தருண் விஜயோ அல்ல.
மிகச் சரியான பார்வையடன் தந்த இக்கட்டுரைக்காக வினவை மனமாரப் பாராட்டுகிறேன். கவிப் பேரரசு காவிகளுக்கு காவடி எடுப்பதை விடுத்து தமிழ் மொழி மூலக் கல்விக்கும் தமிழை அழிய விடாது தடுப்பதிலும் கவனம் செலுத்த கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுகள் கட்டுரையாளருக்கு.
பவளமுத்து, எது இந்திய ஜனநாயக மாண்பு ? ஓட்டுபோட்ட மக்கள் தெருவில நடக்கறதும், தேர்தல்ல நின்ன அரசியல் ரவுடிகள் சைரன் வச்ச கார்ல போறதுமா ? இது போலி ஜனநாயகம்..இத வினவுதான் கேவலப் படுத்தனுமா ? ஏற்கனவே நாறிப் புளுத்துப் போய் தான கிடக்குது ?
வைரமுத்து தெளிவாகத்தான் இருக்கிறார். அவர் சில/பல முறை தேசிய விருது வாங்கியாகிவிட்டது. இப்போது அவர் மகன்கள் வாங்க வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் அவர் சொம்படிக்கும் கூட்டம் ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் இங்கே மட்டும் சோம்பு அடித்தால் போதும். அதற்கு வழி இல்லாததால், சொம்பை நேரடியாக டெல்லியிலேயே அடிக்க வேண்டியிருக்கிறது. தருண் விசைக்கு அடிக்கும் சோம்பு, பாரதிய ஜனதாவுக்கு அடிக்கும் சொம்புதான்.
என்னதான், தமிழ், தமிழன், ஈழம், உணர்வு…etc ..etc
பொழப்புன்னு ஒன்னு இருக்குதில்லையா? அதியாயும்தானே கவனிக்கணும்? என்ன நான் சொல்றது?
தருண் விஜயின் சமஸ்கிருதம் குறித்த கருத்தை தள்ளி வைத்து விட்டு பார்த்தாலும், இந்த விழா அபத்தம். “தமிழ் சூப்பர். தமிழ் வாழ்க” என சொன்னதை தவிர இவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஏதாவது நல்ல நூல் எழுதினாரா, அதன் வளர்ச்சிக்கு ஏதாவது செய்தாரா? சும்மா “வாழ்க” கோஷம் போட்டால், விழா என்றால், நானும் ஒரு கோஷம் போட்டு விடுகிறேன். “தமிழே உலகின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி. தமிழே சூப்பர் மொழி. மற்றவை எல்லாம் சொத்தை மொழி”. எங்கே எனக்கு விழா? எங்கே பொன்னாடை? ஸ்டார்ட் மியூசிக். தாரை தப்பட்டை கிழிந்து தொங்கட்டும்!
ஆமாம், இந்த மாதிரி விழாக்களில் பொன்னாடை, போர்வாள் மட்டும்தான் தருவார்களா, அல்லது பணமுடிப்பு ஏதாவது உண்டா? பணம் உண்டென்றால், இதையே சைடு பிசினஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். உலகில் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளன. வாரம் ஒரு மொழியை புகழ்ந்து பேசி லம்பாக அள்ளிவிடலாம்.
பாரதியாரே சொல்லிட்டாரு, தெலுங்கு மொழியே சுந்தர மொழி.
அசாமியா மொழியே உலகின் மூத்த மொழி. அது மட்டுமல்ல. ஆண்ட்ரமெடா காலக்ஸியில் பேசப்படும் ‘அசுக்கு புசுக்கு’ என்ற ஐம்பது லட்ச வருட பழமையான மொழி கூட அசாமிய மொழியில் இருந்து பிறந்ததுதான்.
உலகின் பழைமையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய வார்த்தை ‘ஸ்வாஹா’ என்பது. இதை வைத்து பார்க்கும் போது ஸ்வாஹிலி மொழியே உலகின் மூத்த மொழி என்பது தெளிவாகிறது.
போஜ்புரி மொழியில் மட்டுமே அர்த்தராத்திரியிலும் அனுபவிக்க முடியக் கூடிய இனிய பாடல் காட்சிகள் நிரம்ப உள்ளன. அவ்வகையில் அதை தேவேந்திர மொழி என கூற முடியும்.
எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மன நோய் கொண்ட மனிதர்கள்(?) வாழும் சமூகத்தில் இருப்பதே வெட்கக்கேடானது. தன் மத/ ஜாதி வெறியை எல்லாவற்றிலும் திணிக்கும் போக்கு கேவலமானது.
[…] [8] https://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/ […]