சிட்னியில் புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு கூட்டத்துக்கு நேற்று (17/11/2014) மோடி சென்றார். இந்தியர்கள் 16,000 பேர் மோடியை வரவேற்க அலைகடலென திரண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. கூட்டத்தின் பிரம்மாண்டத்தை சித்தரிக்கும் ஊடகங்கள், மோடி செல்லுமிடமெல்லாம் அவரை விடாமல் துரத்தும் 2002-ம் வருட குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலைகளின் நீதிக்கான வேட்கையை மூடி மறைக்கின்றன. கவித்துவ நீதியின் மீது நாட்டம் கொண்ட அறவுணர்வு குன்றாத இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது இந்த செய்தி.
நூற்றுக்கணக்கான மக்கள் — பெரும்பாலும் சீக்கியர்கள் திரண்டு மோடிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது’, ‘பொய் ஒருபோதும் உண்மையாகாது’, ‘தவறு எப்போதும் சரியாகாது’, ‘தீமை நல்லதாக மாறாது’ என்று எழுதப்பட்டிருந்தன. சிட்னியில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட் மெல்போர்னில் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்கும் சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர், போராட்டக்காரர்கள்.
இந்த எதிர்ப்பு குறிப்பாக 2002-குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்காக என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னியில் என்ன நடக்கிறது என்று கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் மோடி மகிமை அள்ளித் தெளிக்கப்படும் போது ஆஸ்திரேலிய வாழ் சீக்கிய மக்களின் எதிர்ப்பெல்லாம் எங்கேயும் வராது.
இதோடு கூடவே “காஷ்மீர் கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா” எனும் குழுவினரும் மோடியை எதிர்த்து போராட்டத்தை பதிவு செய்திருக்கின்றனர். இந்த போராட்டம் நியூ சவுத் பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. காஷ்மீருக்கு அமைதியான தீர்வு ஏற்பட்டால்தான் இந்தியா, பாக் இருநாடுகளும் முன்னேற்றத்தை அடையுமென கவுன்சிலின் நிறுவனர் மும்தாஸ் மியன் ஊடகங்களிடம் கூறினார்.
மோடி எனும் பாசிஸ்டை எவ்வளவுதான் மூடி மறைத்து மேக்கப் போட்டு மினுக்க வைத்தாலும் உண்மை மறைந்து விடாது. மோடி எங்கு சென்றாலும் அங்கே எதிர்ப்பதற்கு நம் மக்கள் இருக்கிறார்கள். காட்டுவதற்குத்தான் ஊடகங்கள் இல்லை.
மேலும் படிக்க:
ரத்தக்கரை படிந்த, ஒரு இனப் படுகொலையாளன் செல்லுமிடங்களிலால்லாம் உலகெங்கும் உள்ள மனித நேயம் கொண்ட மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இப் போராட்டங்களையெல்லாம் மறைத்து, பாசிச மோடியை ஜீ- 20 மாநாட்டின் கதா நாயகன் என்று கார்ப்பரேட் ஊடகங்கள் முதல் கார்ப்பரேட் பத்திரிக்கை வரை தன் வக்கிரத்தை வெளிபடுத்தும் மத்தியில் வினவு போன்ற புரட்சிகர வலைத்தளங்களே விரக்கதியுறும் மக்களுக்கு தன்னம்பிக்கையையும் ஊணர்வையு ஊட்டுகின்றன.
வினவுக்கு நன்றி!
Vinavu antha photola justice for Sikhs than potruke thavara Gujarath pathi oru variyum illa. Modi un kayil ratham engira vaasagam kooda illa.
Sigappu Sattai Veluthathu.
ஐயா, அவசரப்படாதீர்கள், கட்டுரையின் கீழே உள்ள இணைப்புகளில் முதலாவதை அழுத்தி பாருங்கள், மோடியின் கையில் இரத்தம் என்கிற வாசகத்தை புகைப்படத்தோடு காணலாம், கூடவே செய்தியையும் படிக்கலாம். நன்றி.
ippa veluththathu kaavi sattaiya modikku vakkalaththu vaangura paavi sattaiya?
ஊர் சுற்றி மோடியின் பேர் சொல்லும் பணிகள் இரண்டு:1]இந்தியாவின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது 2]இந்திய முதலாளிகளுக்கு சந்தை பிடித்துக் கொடுப்பது.தரகர்களுக்குத் தரகன்.அவரது கைகளில் ரத்தக் கறை இருந்தால் என்ன மலம் ஒட்டிக் கொண்டிருந்தால் என்ன?பலனடைகிறவர்களுக்கு என்ன கவலை, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் கவலை.பிரம்மஹத்தி தோஷம் ஊடகங்களின் ஊனக் கண்களுக்குத் தெரியாது!
ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (புசினெச்ச் டெலெகடிஒன்) சென்றுள்ளது.
இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Cஅர்மிச்கஎல் (Qஉஏன்ச்லன்ட் ) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (ஸ்டடெ Bஅங் ஒf ஈன்டிஅ )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று –
1 பில்லிஒன் ஊஸ் டொல்லர்ச் அரெ எஃஉஅல் டொ கொந் மன்ய் ஈன்டிஅன் ருபேச்?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் – ஆச் ஒf ஓச்டொபெர் 2014, $1,000,000,000 = 61,532,000,000 ஈன்டிஅன் றுபேச்.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல –
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ. தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்- போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
“Mஅகெ இன் ஈன்டிஅ” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் ……
எதில் சேர்த்தி …??? ஒன்றுமே புரியவில்லை…. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி – இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது….
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Gலென்சொரெ ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி ஸ்டடெ Bஅங் ஒf ஈன்டிஅ கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kஇங்fஇச்கெர் விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் – இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல – அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?
இங்கே எனக்கு கிடைத தகவலை பதிவு செய்கிறேன்…