Friday, October 7, 2022
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் - மகஇக பத்திரிகை செய்தி

ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

_______________________________________________________________________
16.12.2014
பத்திரிகைச் செய்தி

சிறுபான்மை மக்களை மதம் மாற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!

ட்சியைப் பிடித்த ஆறே மாதத்தில் இந்தியாவை கூறுகட்டி விற்பதை அதிவேகமாக செய்து வருகிறது மோடி அரசு. கூடவே  தனது பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச செயல் திட்டத்தையும் புயல் வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றையே வரலாறு என்று திரிப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது என்ற வரிசையில் தாய் மதத்திற்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம்கள் மதமாற்றம்
படம் : நன்றி http://indianexpress.com

புகழ்பெற்ற தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில், இருநூறு ஏழை முஸ்லீம்களை, ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாள் படையான பஜ்ரங்தள் கும்பல் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழைய – வீணான பொருட்களை சேகரித்து வாழும் ஏழைகள். மேற்கு வங்கத்திலிருந்து பிழைக்க வந்த பரிதாபத்திற்குரியவர்கள், இம்மக்கள்.

ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, உதவித்தொகை, போலீஸ் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்துவிடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட மதமாற்றம் இது.

50 இடங்களில் ஒரு லட்சம் சிறுபான்மையினரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்து, வரும் டிசம்பர் 25 (கிருஸ்துமஸ்) அன்று 4000 கிருத்துவர்களையும், ஆயிரம் முஸ்லீம்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் மண்டலத் தலைவர் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மதமாற்றம் செய்ய மட்டும் மாதம் 50 லட்சம் ரூபாயும், போக்குவரத்து செலவுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும் செலவழிப்பதாக ராஜேஸ்வர் சிங் அறிவித்துள்ளார். வழிபாடு எதுவும் நடக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்து அறுபது கிருஸ்தவ தேவாலயங்களையும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைப்பற்றியுள்ளது. கடந்த 2003 வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இப்போதைய மிரட்டல் வழியில் உ.பியிலும், உத்திரகாண்டிலுமாக 2.73 லட்சம் பேரை மதம் மாற்றினர்.

இந்தியாவில் மதமாற்றம் என்பது பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் எனும் இந்து சாமியாராலேயே “பைத்தியக்காரர்களின் நாடு” என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் சாதிக் கொடுமையில் சிக்கியிருந்த கேரளமோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன கிரிமினல் பிடியில் மாட்டியிருந்த குமரி மாவட்ட நாடார் சாதி மக்களோ, கம்மா-ரெட்டி காட்டுமிராண்டித்தனத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்த ஆந்திரத்து தலித் மக்களோ, ஒரிசாவின் பழங்குடியினரோ, வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தின் பண்பாட்டு பிடியை ஏற்க மறுத்த வட கிழக்கு மக்களோ, நிலவுடமை ஆதிக்கத்தின் இறுமாப்போடு தலித் மக்களை ஒடுக்கி வரும் இந்தி பேசும் மாநிலங்களோ…இங்கெல்லாம் மதமாற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் பெருமூச்சாகவே இருந்தது.

இந்துமதவெறியர்கள் தூற்றுவது போல மதமாற்றம் என்பது வாளின் முனையிலோ இல்லை பால்பவுடர் தயவிலோ நடைபெறவில்லை. ஒருவேளை வாழ்க்கை வசதிகள் கிடைக்கும் என்பதால் ஏழைகள் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பார்ப்பனியத்தின் நிலவுடமை சமூகம் தோற்றுவித்த வறுமைதான் அடிப்படை. அப்போதெல்லாம் இகலோக வசதிகளுக்காக ‘தாய் மதத்தை’ – தாயை விற்றுவிட முடியுமா என்று நொள்ளை நியாயம் பேசினார்கள், இந்துமதவெறியர்கள்.

இப்போது அதே இகலோக வசதிகளை கொடுப்போம் என்று ஆசை வார்த்தையோடு, அதிகார மிரட்டலையும் சேர்ந்து மதம் மாற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவம் போன்று இந்துமதம் அடிப்படியிலேயே ஒரு மதத்திற்குரிய அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை என்றார் அம்பேத்கர். அதனால்தான் இந்து மதம் மற்ற மதங்களைப் போல தனது மதத்தில் வெளிநபர்கள் யாரையும் சேர்ப்பதை விரும்பவில்லை, முயலவுமில்லை. காரணம் இது சாதி ஏற்றத்தாழ்வை ஆன்மாவாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார அமைப்பு.

இப்போதும் கூட இவர்கள் மதம் மாற்றினாலும் அந்த மக்கள் வங்கதேச முசுலீம்கள் – ஆதலால் தலித்துக்கள் எனும் அடையாளத்தோடுதான் அங்கே நடத்தப்படுவார்கள். பாஜக அதிகாரத்தில் இல்லாத போது இந்தியா முழுவுதம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று ஊளையிட்டதும் இதே கூட்டம்தான். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தடை சட்டம் மற்ற சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமெனஅமல்படுத்தி விட்டு, இவர்கள் “தாய் மதம்” திரும்புதலுக்கு இது பொருந்தாது என்று மதம் மாற்றுவார்கள்.

பார்ப்பனியம் என்னதான் முயன்றாலும், எத்தனை இலட்சம் பேரை மதம் மாற்றினாலும் சாதி ஏற்றத்தாழ்வு எனும் கொடுங்கோன்மை இங்கே இல்லாமல் போய்விடாது. இந்து மதத்தின் கொடுமைகளுக்கு எதிராக மதம் மாறினார்கள் எனும் வரலாற்று உண்மை, இப்போதும் பொருள் இழந்து விடவில்லை. கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.

ஆர்.எஸ்.எஸ்
படம் : நன்றி reuters

‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற மோசடி முழக்கத்தின் கீழ் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, மேலும் 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் உட்பட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, சமையல் எரிவாயுவுக்கு வங்கி கணக்கின் பெயரில் மறைமுக மானிய வெட்டு என பீடை நடை போடுகிறது மோடி அரசு.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலாச்சார ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு பார்ப்பன பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது. இந்தியாவை இந்து நாடு என மறைமுகமாக அல்ல பகிரங்கமாகவே அறிவிக்கிறது.

பெரியார், அம்பேத்கர் உட்பட ஏராளமான அறிஞர்களாலும், வரலாற்றறிஞர்களாலும் குப்பை என்றும் சாதிவெறிக் கிரிமினல் சட்டத் தொகுப்பு என்றும் இகழப்பட்ட பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்களையும், பகவத் கீதையையும் ஊதிப்பெருக்கி இந்து வெறியைத் தூண்டுகிறது இக்கும்பல்.

கீதையை தேசிய நூலாக்குவதன் மூலம் கருத்தியல் ரீதியாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை பறைசாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்வதன் மூலம் பள்ளி மாணவரிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சமத்துவ உணர்வையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். பெரியார் உருவாக்கிய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி மதம் பார்க்காத சமத்துவ நடைமுறைகள், சாதி மறுப்பு திருமணங்கள், பகுத்தறிவு ஆகிய பண்புகள் கோலோச்சிய தமிழகத்தில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெளிப்படையாக கூட்டங்களையும் பயிற்சியையும் நடத்துகிறது.

அனைத்து ஓட்டுக்கட்சிகள், இனவாதிகள், சாதியக் கட்சிகள், அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணைபோகும் அபாயகரமான சூழலில் மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை நம் முன் நிற்கிறது. எனவே பார்ப்பனியத்திற்கு பாடை, கட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

thai-matham-post-cartoon
படம் : ஓவியர் முகிலன்

 1. ஒருவர் 50 ஆண்டுக்கு முன் மதம் மாறி இருந்து அவர் எந்த ஜாதியில் இருந்து மாறினார் என்று தெரியவில்லை என்றால் அவரை தற்போது எந்த ஜாதியில் சேர்ப்பிர்கள்?
  வேண்டுமென்றால் இப்படி செய்யலாம்…
  ஒரு சலுகை அறிவிக்கலாம் இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரை மாறுகிறவர்களுக்கு உயர் சாதி வழங்கப்படும்..அதன் பிறகு சேருகிறவர்களுக்கு அடுத்த நிலை..
  இதில் விசேசம் என்னவென்றால், தற்போது இந்துவாக கீழ்ஜாதியில் (மேல்ஜாதி பார்வையில்) இருப்பவர்களும் பயனடைவார்கள்..
  எப்படி?
  அவர்கள் உடனடியாக மதம் மாற வேண்டும் (muslim or Christian) அதன் பிறகு BJPன் சலுகை நேரத்தில் மீண்டு(ம்) உயர் ஜாதி ஆகிவிடலாம்.

  • மதம் மாறியவர்கள் விரும்பினால் எந்த ஜாதியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்! தங்களுக்கு ஜாதி தேவையில்லை என்று விரும்பினால் ஜாதி இல்லை என்று எந்த சான்றிலும் குறிப்பிடலாம் என்று அரசு ஆணை கூறுகிறது. கிருத்துவர்களை பொருத்தமட்டில் அவர்கள் கிருஸ்துவர்களாக மதம் மாறும்போது இந்துமத ஜாதியுடந்தான் மதம் மாறுகிறார்கள்.தலித் கிருஸ்துவர்கள் தங்களுக்கு இந்து தலித்துக்களுக்கு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிவருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லீம்களிலும் தலித் முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.

   • முஸ்லீம்களில் தலித் முஸ்லீம்கள் கிடையாது.. உங்களை போன்ற வஞ்சக எண்ணம் கொண்டவர்களால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.

    • வட மாநிலங்களில் தலித் முஸ்லீம்கள் என்று மற்ற முஸ்லீம்கள்தான் அழைக்கிறார்கள்!! மற்றவர்கள் அல்ல!! ஆகையால் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் யார் என்று இப்போது தெரிந்திருக்கும்!!

   • மதம் மாறியவர்கள் விரும்பினால் எந்த ஜாதியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்!

    அப்படி என்றால் பறயர்கள் எல்லாம் முதலில் முஸ்லிம் மதத்திற்க்கு மாறிவிட்டு,பிறகு இந்து மதத்திற்கு திரும்பி பார்ப்பான் ஜாதிக்கு மாறமுடியுமா?

    • மதம் மாறிதான் ஒருவர் ஜாதி மாற வேண்டியதில்லை. உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளலாம்!! நாம் உயர்தவர்கள் என்ற எண்ணம் வேண்டும். நாம் தாழ்ந்தவர்கள என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்!!மற்றவர் ஜாதிக்கு போக வேண்டாம் நாம்தான் உயர்ந்தவர்!!

     • “உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளலாம்!! நாம் உயர்தவர்கள் என்ற எண்ணம் வேண்டும். நாம் தாழ்ந்தவர்கள என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்!மற்றவர் ஜாதிக்கு போக வேண்டாம் நாம்தான் உயர்ந்தவர்!!

      எப்படி?
      ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அர்ச்சகர் ஆக முடியும்!

      • ///ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அர்ச்சகர் ஆக முடியும்!///
       உங்கள் ஜாதியில் பெரும் பணக்காரர்கள் அதிகம்பேர் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் அதிக அளவில் பணம் வசூல் செய்து நல்ல ஒரு பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி கட்டி ஏழை மாணவர்களை படிக்க வைத்து முன்னேற்ற செய்யுங்கள்.
       அடுத்து பணத்தை வசூலித்து ஸ்ரீரங்கம் கோவிலை விட மிகப்பெரிய கோவிலை கட்டுங்கள். கலை ரசமும் ஆன்மீக சிந்தனையும் உள்ளதாக இருக்கவேண்டும். அதில் சென்று நீங்கள் அர்சகராக அமருங்கள். அடுத்தவர்களை நம்பி இருக்காதீர்கள். நீங்கள்தான் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை உருவாக்குங்கள். அரசை நம்பியது போதும். உங்களையே முதலில் நம்புங்கள்.
       மேல் மருவத்தூரில் எப்படி ஒருவரால் கோவில் கட்டி பிரபலமாக முடிந்ததோ அதேபோல் நீங்களும் மாறுங்கள். அர்சகராக மட்டுமல்ல மற்றவர்கள் பூஜிக்கும் ஆண்டவனாக கூட ஆகலாம்!!

   • அவர்கள் எந்த மதம் மாறினால் என்ன ? இரண்டாயிரம் வருட கொடுமைக்கு நீதி கேட்கிறார்கள் .
    இட ஒதுக்கீடு கேட்க அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது .

    மதம் மாறியதால் , அவர் தாத்தனும் பாட்டியும் பட்ட கொடுமைகள் இல்லை என்று ஆகுமோ ?
    இந்து மதத்தை காக்க மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்காக அவர்களுக்கு உரிமைகள் மறுக்கபடுகிறது

    • உள்ளன்போடு தானே மதம் மாறினால் தவறில்லை. அதுவும் அந்த மதம் சம்பந்தமான அனைத்தையும் தெரிந்துகொண்ட பிறகு. ஆனால் காசுக்கும் பணத்திற்கும் வேலைக்கும் கட்டாயப்படுத்தியும் மதம் மாறுவது கண்டிக்கதக்கது. வெளி நாட்டினர் இங்கு நிரந்தரமாக குடியிருக்க அரசியல் செய்ய இங்கு ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார்கள். அதுதான் அப்போதைய மதமாற்றம். இந்திய சுதந்திரம் அடைந்த பொது இந்தியாவின் மக்கள்தொகை வெறும் முப்பது கோடிதான். அப்படியானால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன மக்கள் தொகை இருக்கும். வெறும் லட்சங்கள் மட்டுமே!! எங்கோ ஒரு மூலையில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அப்போது சிற்றசர்களும் ஜமீன்தார்கள் மட்டுமே இருந்தனர். கொடுமை நீதி எல்லாம் எங்கே இருந்தது? அப்போது ஏதோ தவறு நடந்ததாக பூதாகரமாக பேசி இப்போது அரசியல் செய்கிறார்கள். பணம் பண்ணுகிறார்கள்!!!
     அன்று அடிமையாக இருந்து, கிருஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பயந்து அவர்களின் பின்னால் போனார்கள். வெளிநாட்டு மதங்களுக்கு என்று மதம் மாற்ற பணம் கொடுக்க தலைமை அமைப்புக்கள் இருக்கின்றன ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. அவரவர் தேவையான கடவுளை உருவாக்கி வழிபட்டுக் கொள்ளலாம். கோவில் கட்ட சொந்தமாக பணம் வசூலித்துத் கட்டினார்கள். கட்டுகிறார்கள்.வெளி நாட்டிலிருந்து கொடுக்கும் நிதியில் அல்ல.

 2. மத மாட்ரம் என்பதே க்ரிச்தவ மிஷநரிகலின் ஆயுதம் தானெ… Conversionai ulagukku bothithavarkale kristhavarkal thaan.. Australiyavil Aborigines endra inathai mutrilumaaka azhithu, Then Amerikkavil Mayan inathavarkalai azhithu, Africavil tharpothu perum ina veri thaakuthalkal nadapatharku mukkiya kaaraname intha misha nari kootam thaane?

  200 perai convert seithatharkaaka ivvalavu konthalikkum Vinavu, thinamum ulagengum aayirakanakkanor convert seyyapaaduvathai patri en ezhthuvathu illai… Thaan oru muslim illai enbatharkkaka ISIS mattrum Boko Haram bayangaravaathikallal thinamum suttu kolla padupavarkal ungalathu kangalukku theriya villaya?

 3. எப்படி?
  ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அர்ச்சகர் ஆக முடியும்!
  // ஆர்ச்ககர் ஆன
  உயர்ந்தவர் ஆக முடியும் இருக்க உஙல பொல இருக்குர வரைக்கும் யரும் உருபுடாது .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க