Monday, January 24, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

-

பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

pakistan-relativesசெவ்வாய்க்கிழமை (16-12-2014) காலை 10.30 மணிக்கு பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை.

பாகிஸ்தானில் தூய இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசுலாமிய தீவிரவாத இயக்கம் அவ்வப்போது சிறியதும் பெரியதுமான பல தாக்குதல்களை பொதுமக்கள் (முசுலீம்கள்) மீதும் ராணுவத்தின் மீதும் நடத்தியிருந்தாலும் இதுதான் இதுவரையிலான தாக்குதல்களில் பெரியது, கொடூரமானது. எட்டு மணி நேரம் வரை நீடித்த பயங்கரவாதத் தாக்குதல் இது. பாக் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து திருப்பி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

‘’கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் எங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வரும் பாக் அரசின் ஷர்ப் இ அஸ்ப் (Sharp and cutting straight) நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய மக்களின் வேதனையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாக்குதல்’’ என்று அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹொராசனி தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்களின் கோரிக்கை இதுதான் என்றால் இனி இவர்களை ஆதரிக்க கூடியோரும் கூட இவர்களின் வேதனையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.  முன்னிலும் அதிகமாய் இவர்களை அழிப்பதற்கே இந்த தாக்குதல் உதவி செய்யும் என்பது கூட இந்த முட்டாள் பயங்கரவாதிகளுக்கு தெரியவில்லை.

children-funeral2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நவாஸ் ஷெரீப் சொன்ன போதிலும், 2014 ஜூன் துவங்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் இந்த நடவடிக்கையில் அப்பாவி மக்களையும் உள்ளிட்டு 1600 பேர் வரை இறந்துள்ளனர். கூடுதலாக ஆளில்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கப் படையும் இங்கே தாக்குதல் நடத்துவது வழக்கம். கொல்லப்படுவதற்கென்றே பிறந்தவர்களைக் கொண்ட நாடு போல பாகிஸ்தான் மாற்றப்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப் சாயை சுட்டவர்களும் இதே தெஹ்ரிக் இ தாலிபான் கூட்டத்தினர்தான். மலாலா துவங்கி ஒபாமா, மோடி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரை இந்த பள்ளி தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.

தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது. பெற்றோர்களின் மன வேதனையை பகிர்ந்து கொள்வதாக கூறுகிறார் ஒபாமா. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் உண்டு.

‘’இறந்தவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போல, ஆகவே இது என்னுடைய துயரம் போன்றது’’ என்கிறார் நவாஸ் ஷெரீப். அன்றாடம் குண்டுவெடிப்புகளால் குதறப்படும் பாகிஸ்தானின் துயரத்தை இத்தகைய ரெடிமேடான அறிக்கைகள் எந்த அளவு பகிரும்? இம்ரான்கானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஐநா செயலர் பான் கி மூன் இதனை எப்படியும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளால் பத்து இலட்சம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கடமை உணர்வின் பேச்சிது.

குழந்தைகளைக் கொன்றது கோழைத்தனமானது என்று சொன்னவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் மோடி. சங்க பரிவாரங்களால் கொல்லப்பட்ட குழந்தைகளும் குதறப்பட்ட பெண்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ‘கோழைத்தனத்தை’ மோடியை விட நன்கு அறிவார்கள்.

குஜராத் குழந்தைகள்
குஜராத்தில் மோடியின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள்

“மாணவர்களில் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் தான் தேடி கொல்லச் சொல்லியிருக்கிறோம். எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடில் இதுபோல செயல்படும் 146 ராணுவப் பள்ளிகளையும் தாக்குவோம்’’ என்று பாகிஸ்தான் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் எனும் போது பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் சாவதற்கு தகுதியானவர்கள் என்று ‘பெருந்தன்மையுடன்’ முடிவு செய்யுமளவுதான் இந்த காட்டுமிராண்டிகளின் சிந்தனை இருக்கிறது. இந்த சிந்தனையின் பயன் என்ன? இன்னும் அதிக அளவில் எல்லை மாகாண பழங்குடி மக்கள் அமெரிக்கா மற்றும் பாக் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள்.

ஆப்கானை ஒட்டிய பகுதியில் பழங்குடி மக்களிடையே செல்வாக்காக இருக்கும் இந்த இயக்கத்தின் முதல் தலைவரான பைதுல்லா மசூதுவை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 2009-ல் சுட்டுக் கொன்றது. தற்போது தலைவராக இருப்பவர் ஹக்கிமுல்லா மசூத். இந்த பள்ளி தாக்குதலில் யாரையும் பிணையக் கைதிகளாக வைக்கும் நோக்குடன் தீவிரவாதிகள் வரவில்லை. முடிந்தவரை சுட்டுக் கொல்வது, தற்கொலைப் படையாக மாறுவது, ராணுவம் முன்னேறாதபடி கண்ணிவெடிகளைப் புதைப்பது என்ற பேரழிவு நோக்கத்துடனேயே அவர்கள் செயல்பட்டனர்.

ஆப்கானில் தாலிபான் அரசை தாக்கி ஒழித்த அமெரிக்காவிற்கு எதிராக தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த தெஹ்ரி இ தாலிபான் இயக்கம். இதன் போக்கில் இந்த தாலிபான்களை எதிர்க்கும் அமெரிக்க அரசுக்கு உதவியாக பாகிஸ்தான் அரசு மாறிய பிறகு இவர்கள் பாக் அரசையும் கடுமையாக எதிர்க்கின்றனர். கூடவே கடுமையான ஷரியத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், பாகிஸ்தானை அதி தீவிர இசுலாமிய மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம்.

இத்தகைய மத பயங்கரவாதிகளை நாம் கண்டிக்கிறோம். இவர்களெல்லாம் இசுலாமிய மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உலா வரும் கயமைத்தனத்தையும் நாம் முறியடிக்க வேண்டும். ஏழ்மையிலும் பயங்கரவாதத்திலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இவர்களும் முக்கியமான எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படுகொலையை கேள்விப்பட்ட மாத்திரத்தில் யாரும் கடும் அதிர்ச்சியடைவதும், இந்த கொலைபாதகத்தை செய்தவர்களை கண்டிப்பதும் இயல்பானதே. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் கொடூரமான காட்சிப்படிமங்களை வைத்து மட்டும் முடிவு செய்வதாக அது சுருங்கி விடக்கூடாது. ஏனெனில் அரசு ரீதியான அதிகாரப்பூர்வமான பயங்கரவாதிகளும், அவர்களின் ஊடகங்களும் கூட இந்த துயர நிகழ்வை வைத்து குளிர்காய்கின்றனர்.

வியட்நாம் குழந்தைகள்
வியட்நாமில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசிய அமெரிக்கா இன்று பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு கண்ணீர் வடிக்கிறது.

ஏனெனில் இந்தியாவில் இந்துமதவெறியர்கள், உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் அனைவரும் இதை வைத்து இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னொரு புறம் நெஞ்சினுள்ளே பார்ப்பனியத்தையும் தோற்றத்தில் முற்போக்கையும் கொண்டிருக்கும் பார்ட் டைம் முற்போக்காளர்கள் பலரும் இந்த சம்பவத்தை வைத்து எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நொட்டம் சொல்லாதீர்கள் என்று அவதாரத்தை கலைத்துவிட்டு உறுமுகின்றனர்.

உலகில் எந்த மதமும் தனது மதக் கொள்கையின் கீழ் முழு உலகையும் கொண்டு வருவதற்கான ஆசையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அது துளியளவு கூட சாத்தியமில்லை. முதலாளித்துவ உற்பத்தி ஆரம்பித்து, வளர்ந்து ஏகாதிபத்தியமாகி மேல்நிலை வல்லரசாகி விட்ட இந்த காலத்தில் முழு உலகையும் கட்டுப்படுத்துவது பொருளியல் உலகின் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களே அன்றி பண்டார பரதேசிகளோ, பாதிரியார்களோ, முல்லாக்களோ இல்லை. ஒருவேளை இந்த முட்டாள்கள் அப்படிக் கூறிக் கொண்டாலும் அது பவர் ஸ்டார் என்று தன்னை காசு கொடுத்து அழைக்க வைக்கும் ஜந்துவின் அற்பத்தனமாக மட்டுமே இருக்கும். இத்தகைய மதக் கனவுகளுக்கு உலகமெங்கும் உள்ள ஆளும் வர்க்கங்கள் எப்போதும் புரவலராக நடந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றன.

அது போல இசுலாமிய சர்வதேசியம் என்பதும் அமெரிக்கா காசு கொடுத்து கற்றுக் கொடுத்து பரப்பச் செய்த ஒரு புரட்டே அன்றி வேறல்ல. ஈராக்கில் சதாமை வளர்த்து விட்டு, அதே போல ஆப்கானில் தாலிபான்களை உருவாக்கி ஆளச் செய்து பின்னர் வேலைக்காகாது என்று அவர்களை அழிக்க நினைத்தது அமெரிக்கா. ஆதரித்ததற்கும், அழிப்பதற்கும் அமெரிக்க நலனே காரணமே அன்றி வேறல்ல.  ராம்போ பட வரிசையில் ஆப்கான் முசுலீம்களை அற்புதமான பழங்குடி போராளிகளாக காண்பித்த ஹாலிவுட், பின்னர் அவர்களை கொடூரமான காட்டுமிராண்டிகளாகக் காட்டி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக அமெரிக்க தலைமையிலான ஒற்றைத் துருவ வல்லரசு ஆதிக்கத்தை கேள்வி கேட்கக் கூட இங்கே உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லை.  அதனால் அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் போராட்டம் இத்தகைய மதத் தீவிரவாதிகளால் சில நாடுகளில் கையிலெடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மதத்தீவிரவாதிகள் தன்னை எதிர்ப்பதை அமெரிக்காவும் விரும்பிகிறது. இவர்களை வில்லன் போல காட்டிக் கொண்டு தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு அமெரிக்காவிற்கு சதாம் உசேனும், பின்லேடனும், தாலிபான்களும் எப்போதும் தேவைப்படுகிறார்கள்.

இந்த உலகில் இசுலாமிய நாடுகளில் இயல்பாக ஜனநாயகமும், கம்யூனிசமும் துளிர்விட ஆரம்பித்த காலத்தில் தன்னுடைய கேடான நோக்கத்திற்காக்க அவற்றை ஒழித்து மத பிற்போக்குவாதிகளை ஆட்சியில் அமர்த்தி இன்று வரை பாதுகாத்து வருவதும் இதே அமெரிக்காதான். அன்று அதை ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைந்த சோசலிச முகாமின் எதிரிகள் இன்று பாக் குழந்தைகளுக்கு கண்ணீர் விடுவதில் முதல் ஆளாய் நிற்கிறார்கள்.

ஈராக் குடும்பங்கள்
அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி ஓடும் ஈராக்கிய குடும்பங்கள்.

இந்த ஏகாதிபத்திய சதுரங்க ஆட்டத்தில் சிக்கியதனால்தான் பொதுவில் இசுலாமிய மதம் இருக்கும் நாடுகளில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் வளருவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் அது சுத்தமாக இல்லை. துருக்கி, துனிஷியா போன்ற நாடுகளில் அது வென்றிருக்கிறது. வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் அது இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது.

இசுலாமிய  மக்கள் மற்ற மத  மக்களைப் போல வர்க்கங்களால் பிரிந்திருக்கிறார்களே அன்றி மதத்தினால் ஒன்றுபட்டிருக்கவில்லை. அப்படி ஒரு மத ஒற்றுமை இருப்பதாகக் காட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகளான சவுதி ஷேக்குகளின் ஆதிக்கத்திற்கு பாதுகாப்பு. மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமையே அன்றி சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் அதை அனுமதிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

ஆனால் இசுலாமிய மதவாதிகள் இதற்கு எதிராக வர்க்கம் கடந்த மதம் என்று தூய இசுலாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களை உருவாக்கியது அமெரிக்காதான் என்றாலும் இந்த மதவாதிகளை இசுலாமிய மக்கள் புறந்தள்ள வேண்டும். முசுலீமாக இருந்து கொண்டு நாத்திகராய் இருப்பதும்,  கம்யூனிஸ்டாய் வேலை செய்வதும் பல்வேறு முசுலீம் நாடுகளில் உண்டு. இவற்றையெல்லாம் ஒழித்து விட்டு வெறும் மத மனிதராய் இசுலாமியர்களை மாற்ற வேண்டும் என்பதே இசுலாமிய மதவாதிகளின் இலக்கு.

பாலஸ்தீனம்
அமெரிக்க – இசுரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன குழந்தைகள்

இதன் அதி பயங்கர வெளிப்பாடுதான் பாகிஸ்தான் தாலிபான்கள் போன்றவர்களின் பள்ளி தாக்குதல்கள். ஆகவே மதத்தை மதத்தின் இடத்தில் மட்டும் வைத்து விட்டு தங்களது சமூக பொருளாதார கோரிக்கைகளுக்கு வர்க்க ரீதியாக அணிதிரளுவதே இசுலாமிய மக்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. இதை பிறப்பால் முசுலீம்களாய் வாழும் நண்பர்கள் பரிசீலிக்க வேண்டுமாய் கோருகிறோம்.

அதே நேரம் இந்த மதவாதம் இசுலாத்திற்கு மட்டும உரிய பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் ஆட்சியில் வாழும் நாம் இதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மதங்களை தனது கேடான நோக்கத்துக்கு பயன்படுத்தி ஆதாயம் அடையும் அமெரிக்காதான் தற்போது சி.ஐ.ஏ. பயங்கரவாத சித்ரவதைகளை வெளியிட்டுள்ளது. பயங்கரம் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்ல அது அவர்களின் ஆசானான சி.ஐ.ஏ. மூலம்தான் என்ற புரிதல் அவசியம்.

மேலதிகமாக இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இசுலாமிய மக்கள்தான். பாகிஸ்தானில் இவர்களால் கொல்லப்படுவது அப்பாவி முசுலீம் மக்கள்தான். ஷியாக்களின் மசூதிகளில் வெடித்த குண்டுகளின் இரைச்சல் நித்தம் கேட்கிறது. ஈராக்கின் மனித ஓலத்திற்கு என்றுமே ஓய்வு கிடையாது.

ஆகவே பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி வைத்து விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

எங்களது குடும்பத்தினரை கொன்ற பாக் இராணுவத்திற்கு அதன் வலியை உணர வைக்கவே இப்படி செய்தோம் என்று தாலிபான்கள் கூறியிருப்பது வேறு யாரையும் விட பாக் இராணுவத்தின் சிப்பாய்களுக்கு புரியும். இந்த சிப்பாய்களோ இல்லை அவர்கள் போரிடும் தாலிபான்களோ இருவரும் சாதாரண மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

இவர்களை மோதவிட்டு ஆதாயம் பார்க்கும் அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கமும்,  கண்டன அறிக்கையையும், குண்டுகளையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

 1. இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது சிலபேர் இதை மிருகத்தனம்னு சொல்றாங்க எந்த மிருகமும் இரைக்காக வேட்டையாடுமே தவிர இதுபோன்ற தன் இனத்தையே சுத்திகரிப்பு செய்யாது, தனக்கு வயறு நிரஞ்சதும் தனது இரையே அருகில் இருந்தாலும் அது வேட்டையாடாது. எந்த கடவுளாலும் மக்களை காப்பாத்த முடியாது, கடவுளையும் அவனுவ காப்பாத்த முடியாது.

 2. “தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது”

  பாக் ராணுவத்தை இந்துமதவெறியர்கள் தூற்ருகிரார்கள் சரி வேரு யாரெல்லம் ஆதரிகின்ரார்கள்.
  வினவு பதிலலிக்குமா?

  இவ்வாரு பதிக்க வெட் கமாக இல்லை. you have to always fight against the people issues. Not blindly supporting one community/Religion. All religions and community people issues should be treated equally.

  you have to remove the above para if vinu stands for all people.

 3. ஆம். பயங்கரவாதிகளை உருவாக்குவது அமேரிக்கா மட்டுமல்ல சவூதியும்தான் என்பதை முஸ்லீம்கள் உணர்ந்து வர்க்கமாய் ஒன்று திரள வேண்டும்.

 4. நபி வழி நடந்த தாலிபாஙளை உண்மை இசுலாமிற்க்காக குழந்தைகளை கொன்ற ஆப்கானிஸ்தான் சகபாக்களை அல்லா சொர்க்கதில் சேர்த்துக்கொள்வார் இறந்து போன குழந்தைகளையும் அல்லா சொர்க்கம் குடுப்பார் வினவு வீணாக கவலைப்பட்டு ஆர் எஸ் எஸ் அமெரிக்கா என்று ஊர் சுற்ற வேண்டாம் _______________________________________________________________________

  • அய்யா பிணவூ ஏன் நான் சொன்னதை மட்டுருத்தினீர் நீர் சொன்ன கட்டுப்பாடுகளில் எதை மீறீ பின்னுட்டம் இடப்பட்டு உள்ளது அப்பிடிப்பார்த்த என்னா மயித்துக்குடா மத்த மதத்த விமர்சணாம் பன்றீங்க நொன்நைகளா இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மதம் காரனமே இல்ல எல்லாம் அமெரிக்காதானு ஏன்டா மென்டல் மாறி அடிச்சு விடுறீங்க எங்களுக்கி இங்க உள்ள இசுலாமிய வெறியர்களை பற்றி நல்லாவே தெரியும்டா ஈர வெங்காயம் சி தூ இது எல்லாம் ஒரு பிழைப்பாடா …,

   • வொய் டென்சன் ஜோசப்?

    குழந்தைகள் கொல்லப்பட்டால் உங்கள் உள்ளம் துடிக்கும் என்றால், அது எல்லா சந்தர்பங்களிலும் இதே அளவுக்குத் துடித்திருக்க வேண்டும் அல்லவா?

    தலீபான் பயங்கரவாதிகள் அல்லது ஐ.எஸ் பயங்கரவாதிகள் குழந்தைகளைக் கொல்வது சந்தேகமின்றி படுபாதகச் செயல் தான். காட்டுமிராண்டித் தனம் தான். மனிதத்தனமற்றது தான். இதைக் கட்டுரையாளர் குறிப்பிட்டும் உள்ளார்.

    இதே போல் ஆப்கானிலும் ஈராக்கிலும் கொரியாவிலும் வியத்நாமிலும் கூட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இது எப்படி மனிதத்த்னமற்றதோ, காட்டுமிராண்டித்தனமானதோ, படுபாதகச் செயலோ அதே போல் பிற பகுதிகளில் நடந்த சம்பவமும் ஒரே தன்மை கொண்டது தான்.

    உலகம் இப்போது அடைந்த அதிர்ச்சி போன்று அப்போது ஏன் அடையவில்லை? என்பதை சிந்திக்க கோருகிறார் இந்தக் கட்டுரையை எழுதியவர்.

    ஈராக்கை சுற்றிவளைத்து பொருளாதாரத் தடைகள் போட்டு, அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் செய்து, தண்ணீர் சுத்திகரிப்புக்குத் தேவையான கருவிகளைக் கூட தடுத்து மலேரியாவிலும் டைஃபாய்டிலும் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்தனர் (முதல் வளைகுடா யுத்தம் தொடங்கி இரண்டாம் யுத்தம் வரை) அப்படிச் செத்தவர்களில் ஐந்து லட்சம் பேர் குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    நீங்கள் சொல்லும் ”முசுலீம் சொர்கம்” என்ற லாஜிக்கை இங்கே அப்ளை செய்தால், அமெரிக்கர்கள் “பரதீசுக்கு” போய் இயேசுநாதரின் புனித இரத்தத்தில் இரட்சிக்கப்படுவதற்கா இந்தக் கொலைகளைப் புரிந்தார்கள்??

    நீங்கள் என்ன பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்தவரா? நீங்கள் உளறிக் கொட்டும் ’அந்நிய பாசை’ கருமாந்திரங்களை நாங்கள் ஏன் ஐயா கேட்டுத் தொலைய வேண்டும்? அதை மட்டுருத்திய வினவு நண்பர்களுக்கு நன்றி!

    _______________

    ____________

    • நீ என்று ஒருமையில் அழைப்பதே தவறு என்று வியாக்கியானம் பேசி, விளக்கமும் கொடுத்த வினவு நிர்வாகிகள், ……… என்பதை அனுமதித்துள்ளனர். வினவில் ஒரு சிலர் மட்டும் எதையும் எழுதலாம் எப்படியும் மற்றவர்களை அவமதிக்கலாம். வினவு நடுநிலையான இணையத்தளமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் கொஞ்சங் கூட ஊடகபண்பற்ற இணையத்தளம் என்பதை நிரூபிக்கிறது மேலேயுள்ள அடிகள்.

     வினவின் வாசகர்களில் ஒருவரின் மதத்தைக் குறிப்பிட்டு _____________ என்று கிறித்தவரைப் பார்த்து வேறொருவர் கூறுகிறார், ஆனால் அதை மட்டுறுத்தாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர் வினவு நிர்வாகிகள். சும்மா தேவையில்லாத விடயங்களை எல்லாம் மட்டுறுத்தல் செய்கிறவர்கள், மேலேயுள்ள வாத்தைகளை ஏன் மட்டுறுத்தல் செய்யவில்லை. வினவிலுள்ளவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில மதங்களை மட்டும் தான் வெறுக்கிறார்கள் என்பது இப்பொழுது தான் தெரிகிறது. கிறித்தவர்கள் கூட சிறுபான்மையினர் தானே, அதிலும் பெந்தெகொஸ்தே பிரிவினர் மிகவும் சிறுபான்மையினர். ஒரு சிறுபான்மை மதக்குழுவினரை ஒருவர் இழிவு படுத்துவதை, வினவு அனுமதிக்கிறது. ‘ஊருக்குத் தான் உபதேசம்……… 🙂

     • சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, தவறுக்கு வருந்துகிறோம். இனி கவனமாக நடந்து கொள்கிறோம்.

     • திரு வியாசன்,

      மேற்கண்ட மறுமொழியை எழுதிய வாசகன் என்ற முறையில் நீக்கப்பட்ட வார்த்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகள் வினவின் மட்டுறுத்தல் கொள்கைகளுக்கு வேண்டுமானால் விரோதமாக இருக்கலாம். என்றாலும் வினவின் மட்டுறுத்தல் கொள்கை கருத்து சொன்ன என்னைக் கட்டுப்படுத்தாது.

      எனது கருத்தை நான் முன்வைக்கிறேன்; அது வினவு தளத்தாரின் மட்டுறுத்தல் கொள்கைக்கு மாறாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதை நீக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியமான விவாதங்கள் தேவை என்ற பொது நோக்கத்திற்காக அவர்கள் பிரச்சினைக்குரியது என்று அவர்கள் கருதுவதை நீக்குகிறார்கள். எனவே, நீக்கியதிலும் எனக்கு பிரச்சினையில்லை.

      மற்றபடி திரு ஜோசஃப் அவர்கள் மேல் எனக்குத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. செலக்டிவ் பொங்குதல், வக்கிரச் சிந்தனை போன்ற சிந்தனை தடித்தனங்கள் தான் பிரச்சினை.

      உங்களது ‘அறச்சீற்றத்தில்’ கூட பாருங்களேன், திரு ஜோசஃப் அவர்கள் “அடா புடா” என்று கீழ்த்தரமாக ஏசுவது கண்ணில் படவில்லை நான் ‘இடியட்’ என்று சொன்னது மட்டும் தெளிவாக தெரிந்திருக்கிறது.

      திரு.ஜோசஃபுடனான வாய்க்காத்தகறாரில் கூட இதே அடிப்படை தான். குழந்தைகள் கொல்லப்பட்டால் மனிதத்தன்மை உள்ள எல்லோருக்குமே பதைபதைக்க வேண்டும். ஆனால், அதில் செலக்டிவாக ஏற்படும் பதைபதைப்புகளின் அடிப்படை என்ன? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

      எல்லா மதத்திலும் தீவிரவாதி / பயங்கரவாதி இருக்கிறான்… முசுலீம் பயங்கரவாதியைக் கண்டிக்கும் போது ஏற்படும் அதே ’உளக்கிளர்ச்சியோடு’ பிறர் செய்யும் பயங்கரவாதக் குற்றங்களை ஏன் இந்த பொதுபுத்தி கண்டிக்க மறுக்கிறது? தலீபான் காட்டுமிராண்டிகள் தான், ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தான்; நாமிருவதும் இதில் உடன்படுவோம் என்று கருதுகிறேன். எனில், இந்தக் காட்டுமிராண்டிகளின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தவன் குற்றவாளியில்லையா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

      பெந்தெகொஸ்தே கும்பல் பற்றி நீங்கள் சொன்ன கருத்திலிருந்து நான் மிகவும் மாறுபடுகிறேன். என்றாலும் இந்தப் பதிவின் பொருளுக்கு அந்த விவாதம் பொருந்தாது என்பதால் ஒரு சில விசயங்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு, அது குறித்த விவாதத்தில் இருந்து விலகுகிறேன்.

      1, பெந்தெகொஸ்தே, 7th டே அட்வெண்டிஸ்ட், வஹாபி, சலாஃபி, ஆர்.எஸ்.எஸ் பாணி இந்துத்துவம் – இவையெல்லாமே ஒரு தன்மை உடையது என்பது எனது கருத்து.

      2, வஹாபிகள் இசுலாமியர்களில் சிறுபான்மையினர் தான், அதற்காக அவர்களைத் தூக்கி வைத்துக் கொஞ்ச முடியாது.

      3, சில மாதங்கள் முன்பு, சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தில் அசைவம் தின்பவன் பொய் சொல்வான், திருடுவான், குற்றங்கள் செய்வான் என்கிற பொருள்பட ஒரு பாடம் இருந்ததையும், பின்னர் ஜனநாயக சக்திகளின் போராட்டங்களைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் – குறிப்பிட்ட அந்தப் பாட நூலை எழுதியவர் ஒரு பார்ப்பனர் அல்ல, 7th டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒரு பாதிரி.

      • திரு.மன்னாரு,

       திரு. மன்னாரு,

       இப்பொழுது தான் உங்களின் பதிலைப் பார்த்தேன். இதுவரை நீங்கள் __________ ஒரு குறிப்பிட்ட மதத்தையும், அந்த மதத்தைச் சார்ர்ந்தவரையும் இழிவுபடுத்தியவர் என்பதையும் நான் கவனிக்கவில்லை.

       நீங்கள் அவரை ‘இடியட்’ என்று மட்டும் கூறவில்லை. மிகவும் கேவலமாக அவரையும், அவர் சார்ந்திருக்கும் மதக் குழுவையும் இழிவு படுத்தியிருந்தீர்கள். அதையும் அப்படியே மட்டுறுத்தல் செய்யாமல் வினவு வெளியிட்டிருந்தது. அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். ஆதாரங்களுடன், யார் எதிர்த்தாலும், அவர் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் வாதாடுவது வேறு, நீங்கள் அவமதித்தது போன்று அவமதிப்பது வேறு. திரு.யோசப் அவர்களின் “மயித்துக்கு” (தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் அது முறையான் சொல் அல்ல) என்ற பதிலும் மட்டுறுத்தப்பட வேண்டியது தான்.

       நீங்கள் தான் அவ்வளவு மோசமான் வார்த்தைகளால் யோசப் அவர்களை அவமதித்தவர் என்பதைப் பார்க்கும் போது, நான் ஒரு முறை ‘அரிப்பு’ என்ற சொல்லைப் பாவித்ததே தவறு ஆபாசம் என்று நீங்கள் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.

       December 12, 2013 இல் உங்களுடைய ஒரு கேள்விக்கு நான் இவ்வாறு பதிலளித்தேன்.

       …….அதனால் உங்களைப் போன்றவர்கள் தான், உங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள புலிகள் கொடுத்த மருந்தை- அதாவது ஆயுதப் போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே தவிர ஈழத் தமிழர்களல்ல.

       அதற்கு நீங்கள்இவ்வாறு பதிலளித்தீர்கள்:

       “ஒரு விவாதத்தில் சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், நீங்கள் பேசுவது மிகவும் ஆபாசமாக இருக்கிறது திரு வியாசன் அவர்களே.”

       அதற்கு நான் உங்களுக்கு விளக்கம் அளித்தேன்:

       அரிப்பு என்ற சாதாரண தமிழ்ச் சொல் உங்களது ஆபாச உணர்வுகளைத் தூண்டி விடும் என்று எனக்குத் தெரியாது மன்னாரு. அப்படி எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் அந்த வகையான அரிப்பைக் குறிப்பிடவில்லை, இலங்கைத் தமிழில் உங்களின் அரிப்பு என்றால், ஒரு விடயத்துக்கு விளக்கமளித்த பின்பும் மீண்டும், மீண்டும் பேசுவதையும் குறிக்கும். உதாரணமாக. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலைமுடி என்பதை நாங்கள் தலை மயிர் அல்லது மயிர் என்போம். ஆனால் மயிர் என்பது தமிழ்நாட்டில் மற்றவர்கள் முன்னால் பேசத் தகாத சொல். ஆனால் ஈழத்தில் அப்படி அல்ல.

       ஆனால் நீங்கள் யோசப்பை பற்றிப் பேசியது ஆபாசமாக மட்டுமல்ல, வெறும் அசிங்கமாக இருந்தது. அதைத் தான் வினவு நிர்வாகத்துக்குச் சுட்டிக் காட்டினேன். அவர்களும் உங்களின் வார்த்தைப் பிரயோகங்கள் தவறானவை என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றை நீக்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

       • அய்யா வியாசன் மயித்துக்கு என்பது பிரயோசனமற்ற செயல் என்பதை குறிப்பதற்க்கே கோவமாக பயன்படுத்தப்படும் சொல் அதில் அசிங்கம் இல்லை…

    • //நீங்கள் சொல்லும் ”முசுலீம் சொர்கம்” என்ற லாஜிக்கை இங்கே அப்ளை செய்தால், அமெரிக்கர்கள் “பரதீசுக்கு” போய் இயேசுநாதரின் புனித இரத்தத்தில் இரட்சிக்கப்படுவதற்கா இந்தக் கொலைகளைப் புரிந்தார்கள்??//
     அய்யா மன்னாறு என்ற மகமது நீங்கள் சொல்லுவது போல அமெரிக்காகாரன் சொன்னானா இல்லை பெந்தகோஸ்தே தீவிரவாதிதான் சொன்னானா கிறிஸ்தவ சொர்க்கத்திற்க்காக அமெரிக்கா குழந்தைகளை கொலை செய்ததாக எங்காவது அமெரிக்கா அறிக்கை விட்டதா இல்லை பெந்தகொஸ்தேவினர்தான் அமெரிக்கா செய்தது சரி என்று கூட்டம் போட்டு பேசினாறா அதை நீர் எங்காவது கேட்டீரா அனா உங்க பூராந்தான் சொல்லுது காபீர கொன்னா சொர்க்கம் போகலாமுனு உங்க ஆளுகதான் கூட்டம் போட்டு பேசுரானுக சரி என்ன செய்ய பெந்தகோஸ்த தீவிரவாதிகள் எல்லாம் சேர்ந்து உம்ம கண்ணை மறைக்கும் படி ஜெபம் செய்து விட்டார்கள் போல அமா நான் என்ன சொன்னேன் அப்பிடீனே வினவு வெளியிடவே இல்லை அப்புறம் நான் அந்நிய பாஸைல உளருனதா வேற சொல்லுதீரு மத பித்து பிடிச்சா இப்பிடிதாம்யா உளருவீரு ,சரி எல்லா விசய்த்திலும் நபி வழிய பின்பற்றுரதா இசுலாமிய தீவிரவாதிக சொல்லுறாங்க அந்த நபி வ் வழி என்னானு சுட்டிக்காட்டுனேன் அல்லா வினவின் மூலமாக இந்த பெந்தகோஸ்தேவின் சைத்தானிய செயலை முறியடித்து விட்டான் என்னே நீங்க நம்பும் அல்லாவின் வல்லமை வினவு போன்ற கம்மூனிச வலைப்பூவையே நபி வழியில் கட்டுரை எழுதச்செய்து மன்னாறு மூலம் என்னை கண்டபடி வசை பாடவும் செய்து விட்டான் அல்லா சதி செய்வதில் மிகவும் சிறந்தவன் அவனுக்கு ஜோசப் என்ற காபிருக்கு எதிராக வினவின் மூலம் சதி செய்வது எளிதானதுதானே…

     • உங்களின் மேன்மையான் கருத்து மீது தனது தனிப்பட்ட பார்வையை செலுத்த ஏன் இன்னும் தென்றல் வரவில்லை ஒரு வேளை மதுரையில் புயல் அடிக்கிறதோ என்னவோ தெரியல…

     • indhiyavil irukkum oru christian joseph thevai illamal americavirku support seivathu america kuriththa arasiyal theriyathathuthan karanam.ithanal ivarukku ethuvum kidakka povthum illai.yezhai christian evanukkum america uthava munvaramaattan.ithupondra periya vishayangalil ellam karuththu solla varumpothu sinthiththu othungi viduvathu joseph pondravargal othungi kollalaam.america kuriththa anaiththum vinavil irukkumpothu joseph ippadi pesuvathu……..yetho ondrin vlippaadaagave therigirathu.

     • திரு யோசேப்பு,

      வஹாபியம் தலைவெட்டிக் கொல்கிறது. உங்கள் பெந்தெகொஸ்தே ‘ஜெபித்தே’ சாவடிக்கிறீர்கள்.

      மற்றபடி, இன்க்விசிஷன்களில் பல லட்சம் கோவன்களைக் கொன்றவர்கள் எந்த அல்லாவின் பெயரைச் சொன்னார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
      முப்பது கோடி செவ்விந்தியர்களை கொன்று குவித்து அவர்களை ‘பரதீசுக்கு’ அனுப்பியவன் கும்பிட்ட சாமியின் பெயர் என்னவோ? அவர்கள் எதன் பெயரால் அதைச் செய்தார்கள்.
      உலகமெங்கும் பல கோடி அபார்ஜின் மக்களை கொன்று தேவனின் கிருபைக்குள் கொண்டு வந்த மகிமையின் பரம்பரையில் வந்தவர் அல்லவோ நீங்கள்?

      அட வரலாற்றை விடுங்கள். சமீபத்தில் மோகன் சி லாசரஸ் நடத்திய ஜெபக்கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன் – (லூசுகளை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு தனி இன்பம்)
      அவர் மேடையில் நின்று இப்படி ஜெபிக்கிறார் – “ஆண்டவரே நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி எல்லாம் அதிகரித்து வருகிறது ஏசப்பா… இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் வல்லமையைத் தாரும் அய்யா”
      பசி பட்டினியில் வாடும் ஏழை மக்களை சோற்றுக்காக போராட விடாமல், பட்டினியில் போட்டு வாட்டிக் கொல்லும் தத்துவம் தான் கிருஸ்தவம் – மெல்லக் கொல்லும் விஷம். மத்தியகால காட்டுமிராண்டிக் கொலைகார கும்பல் இன்று அடைந்திருக்கும் நாகரீக வளர்ச்சியின் யோக்கியதை இது.

      இரட்சண்ய சேணை அமைத்து ரொட்டிக்காக அலைந்தவர்களின் நெற்றியில் சிலுவை போட்டே சாகடித்த பரம்பரைக்கு இந்தப் பேச்சு ரொம்பவே ஓவர் பிரதர். உங்கள் வரலாற்றை திரும்பிப் பார்த்து விட்டுப் பேசுங்கள்.

      போகட்டும்.

      தீவிரவாதம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதல்ல. மத அடிப்படைவாதம் மக்களைக் கொல்லும் – அது பெந்தெகொஸ்தே, வாஹாபியம், ஆர்.எஸ்.எஸ்; எந்த எழவாக இருந்தாலும் அது தான் உண்மை. அந்த வகையில் உங்களால் ’மகமது’ என்று நாமகரணம் சூட்டப்பட்ட என்னைப் பொருத்தவரை ஜெய்னுலாபிதீனும், தலீபான் முல்லாக்களும், பெந்தெகொஸ்தே, பி.ஜோசஃப், ஆர்.எஸ்.எஸ் மோகன் பாகவத் மற்றும் இந்துத்துவ கும்பல் எல்லோரும் ஒரே தரத்தவர்கள் தான்.

      வியாசன்,

      உங்கள் பொலிட்டிக்கல் கரெக்ட்னெசுக்கு எனது சல்யூட் 🙂
      ரொரன்றோ மூளைகளோடு பேசும் ஆற்றலை ”அல்லா” எனக்கு வழங்கவில்லை. குட் பை.

      • திரு யோசேஃபு,

       30 லட்சத்துக்கும் மேல் யூதர்களைக் கொல்ல ஹிட்லருக்கு இயேசு கிருஸ்துவின் தேவ ஆசீர்வாதத்தை கொரியரில் தருவித்துக் கொடுத்த போப் ஆண்டவரின் பெயரை மறந்து விட்டேன், வயசாயிடிச்சி பாஸ் 🙁

       உங்களுக்கு நினைவிருந்தால் சொல்லுங்கள்.

       • யாரும் கிட்லரை இறைத்தூதன் அவன் வழி நடக்க வேண்டும் அவனைப்போலவே சட்டை பேண்ட் போடவேண்டும் என்றெல்லாம் அந்த பப்பாண்டவர் சொன்னதாக நினைவில் இல்லை பப்பாண்டவரும் கிட்லரும் நெருக்கமாக இருந்தற்க்காக கிட்லரை தெய்வ பிறவி கருணையே வடிவானவர் என்று அந்த பப்பாண்டவ்ரும் அறிக்கை விட்டதாக தெரியவில்லை அனா நீங்களும் உங்க கூட்டமும் என்ன செய்யிறாங்க அப்பிடின்றது உலகுக்கே தெரியும் கிட்லரின் வழியிலேயே தாலிபாஙளும் நடந்து கொண்டார்கள் அதற்க்கு நபி வழியில் நாங்கள் 13 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை கொல்ல வில்லை என்று பெருந்தன்மையுடன் கூறிக்கொண்டார்கள் யா அல்லா என்ன உமது கூட்டத்தின் பெருமை வயசானா புத்தி கூடனும் ….

      • மன்னாரு,

       எப்போதும் பெந்தேகோஸ்தே என்று சொல்லியே காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். முன்னொரு முறை கொடுத்த பதிலுக்கு பதில் பேசாமல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காணாமல் போயிருந்தீர்கள். மறுபடியும் பெந்தெகொஸ்தே ‘ஜெபித்தே’ சாவடிக்கிறீர்கள் என்று கூறிக்கொண்டு வந்து விட்டீர்கள். இன்றும் தலைவெட்டிக் கொல்வதையும் அளவுக்கு மீறி ஜெபிப்பதையும் ஒரே மாதிரி பார்க்கிறீர்கள். கஷ்டம்.

       இன்ஷாவினவு, நாம் மேலும் விவாதிக்கலாம். நீங்கள் மறுபடியும் காணாமல் போகாமாட்டீர்கள் தானே.

      • மன்னாரு,

       // இன்க்விசிஷன்//

       இந்த இயக்கம் ஸ்பெயனிலும் அதன் காலனிகளிலும் இருந்த ஸ்பானியர்களை இலக்காகக் கொண்டது. அது அவர்களின் மதத்தூய்மை உறுதிப்படுத்த வேண்டி கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள்தான். இந்த இயக்கம் தோண்ற காரணமே முகமதியம் தான் என்பது கூடுதல் தகவல். இன்க்விசிஷனைப்பற்றி கிருத்துவர்கள் போதிய அளவுக்குப் பேசியிருக்கிறார்கள். சர்ச்சின் பல்லை பிடுங்கியருக்கிறார்கள்.

       முகமதியத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசலாமே.

       இந்த இன்க்விசிஷன் மூலம் பல லட்சம் கோவன்களைக் கொன்றார்கள் என்பது மோசடி.

       // முப்பது கோடி செவ்விந்தியர்//
       // பல கோடி அபார்ஜின் //

       இந்த எண்ணிக்கைகளும் மோசடிகளே.

       // லூசுகளை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு தனி இன்பம்//

       வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போனால் அதை விட கூடுதலான இன்பம் உங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். முயன்றிருக்கிறீர்களா அல்லது அது வாடிக்கையானதா.

       // தீவிரவாதம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதல்ல//

       உன்மைதான். ஆனால் முகமதியர்கள் தான் இதை அதிக அளவு பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்.

       //”அல்லா” எனக்கு வழங்கவில்லை.//

       நீங்கள் முகமதியராக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

      • மன்னாரு,
       // யூதர்களைக் கொல்ல ஹிட்லருக்கு இயேசு கிருஸ்துவின் தேவ ஆசீர்வாதத்தை கொரியரில் தருவித்துக் கொடுத்த போப்//

       இது மற்றுமொரு மோசடி. நிறைய சரக்கு வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. கிருத்துவின் போதனைகளுக்கும் அவர் வாழ்ந்து காட்டிய வழிக்கும் (Sunna) இதற்கும் சம்மந்தமில்லை. ஆகையால் Holocaust க்கு கிருத்துவத்தை காரணமாக்குவது பொருளற்றது. ஹிட்லர் கிருத்துவத்தை பெரிதாக எடுத்துக் கொண்டவனுமில்லை. அதேசமயம் அவன் முகமதின் மதத்தை மரியாதையுடன் பார்த்தாகவும், ஜெருசலேமின் முல்லாவிற்கும் அவனுக்கும் சிறந்த தொடர்புகள் இருந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன.

       கூடுதலாக யூதர்களைக் கொன்றதற்காக இன்றும் முகமதியர்கள் ஹிட்லரை மிகவும் மதிக்கின்றனர் என்றும் இணையச் செய்திகள் மூலம் தெரிகிறது.

       • திரு. மன்னாரு சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை. பாப்பாண்டவர் Pope Pius XII க்கும் ஹிட்லருக்குமிடையே இருந்த நட்பு, அவரது யூத எதிர்ப்பு மட்டுமன்றி, ஹிட்லரின் பாசிசத்துக்கு ஐரோப்பிய மக்களிடம் அங்கீகாரம் கிடைக்க Pope Pius XII உதவியது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு Hitler’s Pope என்று கூட பட்டம் கொடுத்து விட்டனர்.

        http://www.amazon.ca/Hitlers-Pope-Secret-History-Pius/dp/014311400X

        எந்த வித பயமுமின்றி தமது மதத்தையும், மதத் தலைவர்களையும் விமர்சிக்க, அவர்களைக் குற்றஞ்சாட்ட, அவர்களை எதிர்க்க, அவர்களைப் பற்றி புத்தகம் வெளியிட இந்து, கிறித்தவ மக்களுக்கு உரிமையுண்டு.ஆனால் அந்த luxury எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைப்பதில்லை. அது தான் இங்குள்ள வேறுபாடு.

      • லூஸாக இருப்பதையே அல்லது லூஸுகளின் செய்கைகளுக்கு வக்காளத்து வாங்குவதையே சிறப்பாக செய்யும் நீர் லூஸிகளை பார்த்து சந்தோசம் பொங்குகிறது என் கிறீரே லூஸில என்ன்ய்யா இசுலாமிய லூஸு கிறிஸ்தவ லூஸி என்று பேதம்…

       • திரு யோசேஃபு மற்றும் யுனிவர்பட்டி,

        நீங்களிருவரும் என்னை முசுலீமாக வரித்துக் கொண்டு இந்த முக்கு முக்குகிறீர்கள். இதிலிருந்தே நீங்கள் எந்தளவுக்கு மதவெறியேறிக் கிடக்கிறீர்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் எனக்கு இந்தக் காமெடி பிடித்திருப்பதால், நீங்கள் முகமதுவை எத்தனை வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம். நோ ப்ராப்ளம்.

        போர்த்துகீசியர்கள் கோவா மற்றும் கொங்கன் கோஸ்ட் பகுதிகளில் நடத்திய கொலைவெறியாட்டங்களும், அமெரிக்காவில் ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தேவ மைந்தர்கள் ஆடிய ஆட்டங்களும் வரலாறு. உலகெங்கும் தேவ மைந்தர்கள் போட்ட கொலைவெறிக் குத்தாட்டங்கள் அத்துனைக்கும் தெளிவான ஆவணங்கள் இப்போதும் உண்டு. தேவையெல்லாம் தேடிப்படிக்கும் பொறுமை ஒன்று தான்.

        “இயேசு நாதன் கட்டிப்பிடித்து கிஸ் அடிக்கச் சொன்னான், இந்தப் பிக்காளிப் பயல்கள் தவறாக புரிந்து கொண்டு குரள்வளையைக் கடித்துத் துப்பிவிட்டார்கள் – எனவே இது புரிந்து கொண்டவர்களின் தவறு” என்றெல்லாம் போங்காட்டம் ஆடக்கூடாது.

        ஐரோப்பாவிலேயே கிரிஸ்துவத்தின் பெயரால் நடத்தப்பட்ட எக்சார்சிஸங்களும், விட்ச் ஹண்ட் கொலைகளும், பகானிய மதத்தவர்கள் கொல்லப்பட்டதும்… என்று எழுத வார்த்தைகள் போதாது.

        நிற்க.

        இதே அளவில் முசுலீம் அடிப்படைவாதிகளும் கொடூரங்களைப் புரிந்திருக்கிறார்கள். அதற்கு மத்திய கால இசுலாமியப் படையெடுப்புகளில் இருந்து ஆப்கானிய / பாக்கிஸ்தானிய தலீபான்கள் வரை ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

        மீண்டும் நிற்க.

        இவர்களுக்கு ஒப்பான கொடூரங்களை இந்து மதத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகளும் செய்துள்ளனர். எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் சொல்லித் தான் புரியவைக்க வேண்டுமென்பதில்லை… ஸ்டெயின்ஸ் பாதிரி எரிக்கப்பட்டதைப் போன்ற நேரடித் தாக்குதல்களில் இவர்கள் முசுலீம் / கிருஸ்தவ மதவெறியர்களோடு போட்டியிட முடியாதென்றாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக தீண்டாமை என்ற பெயரில் சூத்திர பஞ்சமர்களைக் கொல்லாமல் கொன்றவர்கள் இவர்கள்.

        ஒன்ஸ்மோர் நிற்க.

        ஆக மொத்தம் எல்லா மத அடிப்படைவாதங்களுமே மனிதர்களை மனிதத்தைக் கொல்லக் கூடியவை தான்.

        அதென்ன உங்களூக்கெல்லாம் சொல்லி வைத்தா போல, அடுத்த மதத்தை திட்டும் போது உள்ளிருந்து ஆனந்தம் பொங்குகிறது.. அதே, நேரம் உங்கள் மதத்தின் வெறியாட்டங்களைச் சுட்டிக்காட்டும் போது பொத்துக் கொள்கிறது?

        ஹிப்போக்ரசி… தனியே அமர்ந்து பொறுமையாக யோசித்துப் பாருங்கள். அடுத்த மதத்தின் தவறுகளை நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு பேசும் நீங்கள், சொந்த மதம் என்று வரும் போது வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள் அல்லவா.. அந்த சின்ன இடைவெளியில் தான் தலீபான்களும், பெந்தெகொஸ்தே கும்பலும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் புகுந்து புறப்படுகிறார்கள்.

        தப்பு எவன் செய்தாலும் தப்பு என்று சொல்வது தானே பாஸ் நியாயம்?

        நியாயமா நடந்துக்கங்க முதல்ல.

        • (மன்னாருவின் மைண்ட் வாய்ஸ்)
         அடடா…

         கிரிஸ்டீனுக்கு பத்து லைன், முசுலீமுக்கு மூணு லைன், இந்துவுக்கு ஆறு லைன் எழுதிய மன்னாரு கண்டிப்பா முசுலீமா தான் இருக்கனும்னு யுனிவர்பட்டி கரீட்டா கண்டுபுடிச்சிருவாரே.. அவ்வ்வ்வ்வ்

         • என்னண்ணே திடிருனு குல்லாவ கழட்டிட்டு சிவப்பு சட்டை மாட்டிக்கிறீங்க சகிக்கல, பின்னாடி எரிஞ்சதால இதுக்கு முன்னாடி நீர் முக்குனத விடவா நாங்க முக்கிட்டோம் ரெம்ப முக்காதிங்க சிவப்பு பேண்ட் நாறிட போகுது…

          • அடடா.. பயங்கர கண்டுபிடிப்பு பாஸ் 🙂

           என்னா வெறித்தனம்…!

           பாருங்க மக்களே, இதுக்குப் பேரு தான் அன்பு மதம்.

           சிக்குனா செதைச்சிருவாய்ங்க. எல்லாம் ஒர்ர்ரே அன்பு; ஏசுநாதன் சொல்லிக் கொடுத்த அதே அன்பு தான் 😉

        • “தப்பு எவன் செய்தாலும் தப்பு என்று சொல்வது தானே பாஸ் நியாயம்?”

         We should also see the root cause of the mistake or crime.

         Jesus never told to kill anybody. He advised every one to be kind. He lived as he preached. Even when he was crucified, he was not even angry with those who were responsible for his crucifixion. He preached only love.

         Christians might have murdered many. But not in the name of Christ. Christ or his Father in the Heaven did not command to kill those who do not accept christ or Bible. The Bible after Christ teaches only Love. Bible does not promote hatred.

         Similarly Buddhism. Jainism. They all teach love only.

         In the case of Hinduism, there is not a single scripture acceptable to all Hindus. There are number of scriptures. Saivaites tell that the Love is Sivam. There is no such word as hinduism in any of the scriptures of Hindus.

         But in the case of Islam, it commands hatred. It commands to kill non-muslims. Please read Quran Chapter 9 verses 5 and 29.

         Muslims believe that Quran is from their God. They follow the commandments of the quran.
         That is why there was no protest from muslims for the death of the innocent children of Pakistan. Because the killer and killed are the muslims.

       • யுனிவர்பட்டி / யோசேப்பு,

        இயேசு நாதர் அன்பை போதித்தார். முகமது சண்டை போட சொல்லிக் கொடுத்தார். அதனால் கிருத்துவம் அன்பு மதம் முசுலீம் வம்பு மதம் என்ற எளிமைப்படுத்தல்கள் முதலில் தவறு.

        அன்பை போதித்த இயேசுவைப் பின் தொடர்ந்தோர், வன்முறையைச் சொல்லிக் கொடுத்தார் என்று உங்களால் சொல்லப்படும் முகமதியர்களுக்கு ஈடாக (எனது பார்வையில் மேலாக) வன்முறை வெறியாட்டங்கள் போட்டதேன்?

        “சார் அவிங்க ஆளுங்க பதினைஞ்சி பேரைப் போட்டாய்ங்க, எங்காளுங்க பதினாலரை பேரைத் தான் போட்றுக்காய்ங்க அதனால எங்க மதம் ரொம்ப அன்பு மதம் சார்…” – என்று மொக்கை கணக்கு விவரங்களோடு வராதீர்கள் ப்ளீஸ். நாத்தம் தாங்க முடியலை பாஸ்.

        இயேசுவோ, முகமதுவோ தங்கள் சமகாலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளும் இன்றைக்கு அவர்களைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் வேலையும் சம்பந்தமே இல்லாதவை.
        பல இனக்குழுக்களாக சிதறிக் கிடந்த நிலை, அதில் சில இனக்குழுக்களின் காட்டுமிராண்டித் தன்னிலை, இவற்றுக்குள் நித்தம் போர்கள் என்ற அரபுக்களின் ஒன்றினைவையும் அவர்களுக்குள்ளே சகோதரத்துவத்தையும் நிலைநாட்டினார் முகமது. ரோமானிய பேரரசின் அடிமைமுறையின் கீழ் வதைபட்டுக் கொண்டிருந்த அடிமைகளின் உரிமைக் குரலாக வரலாற்றில் எழுந்து வந்தார் இயேசு.
        அவை வரலாறு அவர்களுக்குக் கொடுத்த கடமைகள். அதைச் சரியாக செய்து முடித்தவர்கள் அவர்கள்.

        மற்றபடி இன்றைய ”கிருஸ்தவத்துக்கும்” கிருஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஐசுவர்யவானை ஒதுக்கி லாசருவை நாடிய இயேசு எங்கே இன்றைக்கு சர்ச்சுகளின் ஆடம்பர கேலிக்கூத்துகள் எங்கே? சர்ச்சை வியாபாரச் சந்தையாக்காதே என்று சீறியெழுந்த இயேசு எங்கே, இன்றைக்கு ஐ.எம்.எஸ் பண்டிகை நடத்தி ஸ்டால் போட்டு வியாபாரம் செய்து கல்லா கட்டும் சர்ச்சுகள் எங்கே? (எத்தனை பண்டிகைகள் என்னா வசூலூ…? அடேயப்பா.. அறுப்பின் பண்டிகை, சேர்ப்பின் பண்டிகை, இப்ப கொஞ்ச நாளா பஸ்கா(!?) பண்டிகை, அசண பண்டிகை, பிரதிஸ்டை…. ஊப்ஸ்ஸ்ஸ். வருசம் பூரா கல்லாகட்றீங்களேப்பா)

        இப்படியெல்லாம் சேர்க்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டு அடிக்கும் ஆடம்பரக் கூத்துகளைக் கண்டு ஊரே காறித் துப்புகிறது. சென்னை மறைமாவட்ட (சி.எஸ்.ஐ) ஆயர் ஒருவர் சர்ச் சொத்துக்களை விற்று பி.எம்.டபிள்யு காரில் பவனி வருகிறார் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஃபுல் போதையில் ஆல்டரில் நின்று பிரசங்கிக்கும் அய்யர்களை எனக்கே தனிப்பட்ட முறையில் தெரியும். நண்பரின் மூலமாக தெரிந்த ஒரு சர்ச்சின் அய்யர் தனது பெண்டாட்டியின் சொல்லைக் கேட்டு அம்மாவை வறுமையில் தவிக்க விட்டுள்ளார் – தையல் போட்டு மாதம் ரெண்டாயிரம் ரூபா சம்பாதித்து வயதான காலத்தில் மருந்து வாங்க கூட காசில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கிறார் அந்த அம்மாள். இந்த அய்யர் சர்ச்சு சர்வீஸ்களில் அளிக்கும் நல்லொழுக்க போதனைகள் இருக்கிறதே…. இயேசு மட்டும் உயிரோடு இருந்தால் செருப்பால் அடித்திருப்பார்.

        இது போன்ற விவரங்களை தொகுக்க ஆரம்பித்தால் முடிவின்றி போய்க் கொண்டேயிருக்கும்.

        மதம் மனிதனின் அபிலாஷைகளை பிரதிபலித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உண்மையில் அப்படி இருந்த காலமும் மிக குறுகியதே. யூத மதத்தின் உட்பிரிவினராக அறியப்பட்ட இயேசுவின் பண்ணிரு சீஷர்கள் முன்வைத்த கோட்பாடுகளும், இயேசுவுக்குப் பின் முன்னூறு வருடங்கள் கழிந்து வந்த பவுலடிகளார் முன்வைத்த கோட்பாடுகளும் நேர் எதிரானவை.

        அந்த டெக்னிக்கல் விவரங்களை முன்வைத்து வாதிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என்றாலும், மறைக்கப்பட்ட வேதாகமம், டெட் ஸீ ஸ்க்ரோல்ஸ் என்றெல்லாம் இணையத்தில் தேடிப்பாருங்கள் – இயேசுவுக்கு கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தார் என்று கூட அவை தெரிவிக்கின்றன – மீண்டும் சொல்கிறேன், அவற்றுக்குள் புகுந்து பீறாயும் எண்ணமோ விருப்பமோ எனக்கில்லை.

        இன்றைய பிரச்சினைகளுக்கு இந்த மதங்கள் என்ன தீர்வைச் சொல்லுகின்றன? ஒரு வெங்காயமும் இல்லை. எல்லாம் மோகன் சி லாசரஸ் சொல்லும் தீர்வு தான். ஆக, சுரண்டலுக்கு மக்களைத் தயாரிப்பது தான் மதத்தின் வேலை என்றால், அது தேவையில்லை. அந்த மதம் இசுலாமோ, கிருஸ்தவமோ, இந்துவோ… எந்த வெங்காயமாகவும் இருந்தாலும் தேவையில்லை. மதவெறியேறாத சாதாரண மக்கள் இந்தப் புரிதலில் தான் இருக்கிறார்கள். பித்தம் குறைந்துள்ள ஐரோப்பிய நாடுகளில் தற்போது மொபைல் சர்ச் என்ற அளவுக்கு இறங்கி வந்தும் சீந்துவாரில்லை.

        நவீன கால பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் மக்களை சுரண்டலுக்குத் தயார்படுத்தும் வேலையையும் தலீபான்கள் போன்ற கொலை பாதகத்தையும் புரியக் கூடியதாக மதம் வளர்ந்திருக்கிறது.
        உண்மையில், இசுலாமிய பயங்கரவாதத்தின் வேர் அமெரிக்க சுரண்டல் நலனில் இருந்து கிளைக்கிறது.

        இதில் விதை சிறந்ததா நிலம் சிறந்ததா என்ற உளுத்துப் போன விவாதத்திற்குள் என்னைப் பிடித்து தள்ளி குரானின் போரடிக்கும் வசனங்களைத் தேடியலைய வைக்க வேண்டாம். ப்ளீஸ்.

        வினவில் ”இசுலாமிய சர்வதேசியம் ஒரு மாயமான்” என்ற கட்டுரையில் இருந்து துவங்கி வஹாபியம் குறித்து வந்துள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

        இசுலாம் மோசம், கிருஸ்தவம் நல்லது என்ற கீழ்த்தரமான ஒப்பீட்டுக்காக முதலில் நீங்களே வெட்கப்பட வேண்டும்.

        • ரெம்ப நாளா இருந்த அரிப்பு இன்னிக்கிதான் மன்னாறுக்கு தீர்ந்து போய் இருக்குமுனு நினைக்கிறேன் அல்லாகு அப்பர் குரானே சூப்பர் முகமதே முதல் கம்மூனிச போராளி என்று விளக்கு விளக்குனு விளக்குனதுக்கு முதலில் பிரச்சனை என்ன என்பதையே பிரியாமல் ஏகாதிபத்தியம் சுரண்டல் எதிர்ப்புணர்வு மழுங்கடிப்பு என்று வேறொறு கோணத்தில் பயனிக்கிறீர் எங்களை வன்முறையாளராக சித்தரித்து சுய இன்பம் காண்கிறீர் நான் சொல்லவந்தது என்னவென்றால் 13 வ்யதுக்கு மேற்ப்பட்டவ்ரகளை மட்டுமே கொன்றோம் என்ற தாலிபாங்களின் பெருந்தன்மை முகமதால் அரங்கேற்றிய கொலை சம்மபத்தில் இருந்து எடுத்துகொண்டு அதை முன்னுதாரனமாக சொல்லுகிறார்கள் இவர்கள், ஏகாதிபத்தியம் இல்லாத கம்மூனிச அரசாகவே இருந்தாலும்
         இந்த முன்னுதாரனமும் மத நம்பிக்கையும் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் இதைச்செய்வார்கள்,அப்புறம் ஒரு விசயம் யேசுவை விமர்சித்தற்க்காக யாரும் யாரையும் கொல்ல மாட்டார்கள் முகமத கார்ட்டூன் போட்டாலே போதும் போட்டுத்தள்ள ஒரு கூட்டம் இருக்கும் அவன் கம்மூனிஸ்டு என்று விட்டுவிட மாட்டார்கள் ,முஸ்லீம் தீவிரவாதிகள் செய்யும் கொலைகளுக்கு அவன் கொலை செய்தான் இவன் கொலை செய்தான் என்று சுட்டிக்காட்டுவதுதான் கீழ்தரமானது,நான் பெரும்பாலும் முஸிலீம்களுடன் வாதம் செய்வதற்க்காக கருத்து சொல்லுவது இல்லை அது என் வேலையும் இல்லை இந்த இசுலாமிய மதத்தை பற்றி தாழ்த்தப்பட்ட எனது இன மக்கள் வாசித்தால் போதுமானது சமத்துவம் கிடைக்கும் என்று இசுலாமிய மத்த்துக்கு மாறி விடாமல் செய்வதற்க்காகத்தான் எழுதுகிறேன்
         உங்களுடன் இனி மேல் இது குறித்து பேசவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன் நாய் சகவாசம் வேட்டியை கிழிக்கும் என்பது முதுமொழி

         • திரு யோசேப்பு

          நல்லது.. வேட்டியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேட்டியின் பயன்பாடு அரையில் கட்டுவதற்கு, நீங்கள் அதை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

          நான் முன்வைத்த வாதங்கள் பதில் அளிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இருக்கட்டும். பின்னர் பயன்படும், எனக்கே கூட.

          • என்ன ஆச்சு மன்னாறு பழைய படி யேசுநாதன் அவன் இவன் என்ற தோரனையிலேயே எழுதலாமே தீடிர்னு மரியாதை எதற்க்கய்யா // இயேசுவுக்குப் பின் முன்னூறு வருடங்கள் கழிந்து வந்த பவுலடிகளார் முன்வைத்த கோட்பாடுகளும் நேர் எதிரானவை.// இதெல்லாம் காரல் மார்க்ஸ் சொன்னாரா இல்லை பைபிளில்தான் இருக்குதா பிஜைனுலாபிதின் கூட நெருக்கமா இருக்கீங்க போல சத்தியமா சொல்லுங்க இந்த கருத்த ஆன்லை பிஜே லருந்த்து தான சுட்டிங்க//உண்மையில், இசுலாமிய பயங்கரவாதத்தின் வேர் அமெரிக்க சுரண்டல் நலனில் இருந்து கிளைக்கிறது.// அப்பிடியா அப்ப குரான் ரெம்பவே கம்மூனிசத்த பத்தி சொல்லுதா அதான்பா கொல்லுறாங்க போல அடிக்கடி வகாபியிசமுனு சொல்லுறீங்க அது அமெரிக்கா போட்ட குட்டியா இல்ல இசுலாம் போட்ட குட்டியா

        • மன்னாரு,

         எல்லா மத அடிப்படைவாதங்களுமே மனிதர்களை மனிதத்தைக் சமமான அளவில் கொல்லக் கூடியவை என்று கூறுவது ஒரு பெரிய மோசடி. இதைத்தான் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. மனிதர்களை மனிதத்தைக் கொல்வதில் முகமதியத்திற்கு ஒரு தனிச்சிறப்பான இடமிருக்கிறது. கிருத்துவர்கள் கொலைவெறிக் குத்தாட்டங்கள் போட்டிருக்கிறார்கள். அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது மூமீன்களின் ஆட்டத்திற்கு எந்த விதத்திலும் இணையானதில்லை என்பதை நான் விளக்க விரும்புகிறேன். ஆனால் வினவில் இந்த கோணத்தில் விவாதத்தை செய்ய முடியாது என்று தெரிகிறது.

         எனது ப்ளாகில் இதை செய்வேன். வினவு அனுமதித்தால் அதன் தொடுப்பு இங்கே வரும.

         உங்களின் சில கொசுறுக் கருத்துக்களுக்கேனும் இங்கே பதில் கூறலாம்.

         1.அடிமைகளின் உரிமைக் குரலாக வரலாற்றில் இயேசு எழுந்து வந்தார் என்பது வரலாறு தெரியாமல் செய்யும் தவறு. இயேசு ஒரு புது மதத்தை போதிக்கவில்லை. சில சீர்திருத்தத்தைப் பற்றியே பேசியிருக்கிறார. அவரைப்பற்றி பல கதைகளைக்கட்டி அவரை ஒரு ரேஞ்சுக்குக் கொண்டு சென்றது அவர்களின் சீடர்கள்தான்.

         இயேசுவின் குறுகிய பார்வைக்கு பைபிளில் பதிவாகியிருக்கிற கானான் பெண்ணிடம் அவர் கூறிய கருத்தை ஆதாரமாகக் கூறலாம. (Matthew 15:21-28) கானானியர்கள் இஸ்ரேலியர்களால் வெல்லப்பட்டவர்கள். அதாவது இங்கே ஆதிதிராவிடர்களைப் போல நடத்தப்பட்டவர்கள் என்று யூகிக்கலாம். தன் பெண்ணுக்கு சுகமளிக்க வேண்டிக் கேட்ட அந்த பெண்ணை ஏசு தன் சீடர்களைப்பார்த்து விரட்டிவிடும் படி சொல்லியிருக்கிறார். விடாப்பிடியாக கெஞ்சிக் கொண்டு நின்ற அந்த பெண்ணிடம் நான் இஸ்ரேலியர்களுக்காக வந்தவன் என்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ரொட்டியை நாய்களுக்குப் போடமுடியுமா என்றும் கேட்டதாக பதிவாயிருக்கிறது.

         இயேசு அடிமைகளுக்காக ஒன்றும் பேசவில்லை. அவர்கள் சீடர்களும் இதைச் செய்யவில்லை.
         Some sample advises of these disciples to slaves are as follows:

         1 Timothy 6:1 All who are under the yoke of slavery should consider their masters worthy of full respect, so that God’s name and our teaching may not be slandered

         1 Timothy 6:2 Those who have believing masters should not show them disrespect just because they are fellow believers. Instead, they should serve them even better because their masters are dear to them as fellow believers and are devoted to the welfare of their slaves. These are the things you are to teach and insist on.

         Titus 2:9 Teach slaves to be subject to their masters in everything, to try to please them, not to talk back to them,

         1 Peter 2:18 Slaves, in reverent fear of God submit yourselves to your masters, not only to those who are good and considerate, but also to those who are harsh.

         பல நூற்றாண்டுகள் கழித்து ரோமாபுரி பேரரசு வழக்கொழிந்து ஐரோப்பா நாடுகள் தன்னிச்சையான நாடுகளாகி அரசர்கள் கிருத்துவர்களாகி மக்கள் எல்லோருமே கிருத்துவர்கள் என்ற நிலை வந்த போதுதான் அவர்களிடம் அடிமைமுறை குறைந்தது என்று நினைக்கிறேன்.

         2.அரேபிய குழுக்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியது முகமது என்பதும் தவறே. இதற்கு விளக்கமான பதில் எனது பளாகில் வரலாம். சுருக்கமாக சொன்னால் முகமது சாதித்தது முகமதியர்களை ஒரு குழுவாகவும் மற்றவர்களை எதிர் குழுக்களாகவும் ஆக்கியது தான்.

         3. இசுலாமிய பயங்கரவாதத்தின் வேர் அமெரிக்க சுரண்டல் நலனில் இருந்து கிளைக்கிறது என்கிறீர்கள். இதுவும் அப்பட்டமான மோசடியே. இசுலாமிய பயங்கரவாதத்தின் வயது கிட்டதட்ட 1450 ஆண்டுகள். வெள்ளையர்களால் ஆட்டோமன் கிலாபை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து சிறிது தேக்கநிலையிலிருந்த இது பெட்ரோலியத்தின் வரவினாலும், முகமதியர்களுக்கு ஐரோப்பாவில் கிடைத்த இடத்தினாலும் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது.

        • மற்ற மதங்களுக்கும் இஸ்லாமுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது தான்:
         1. மற்ற மதங்கள், தம் மதத்தைச் சார்ந்தவர்களையும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களையும் பிரித்து அவர்களுக்குள் வெறுப்பையும், விரோதத்தையும் கடவுளின் பெயரால் வளர்க்க வில்லை.
         ஆனால் இஸ்லாம் தமது குரானில் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களோடு நட்பு கூடாது என்றும் அவர்கள் கடவுளின் எதிரிகள் என்றும் அவர்களோடு போரிட்டுக் கொல்லுங்கள் அல்லது அவர்களை அடிமைப் படுத்தி அவமதியுங்கள் என்று கட்டளை இட்டுள்ளது.
         2. மற்ற மதங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஒரு பிரச்சனையும் வராது.
         ஆனால் இஸ்லாத்தையோ, முகமதுவையோ சிறிது விமர்சித்தாலும், விமர்சித்தவர்கள் தாக்கப்படுவார்கள்.

   • ஜோசப்,

    உங்களது இசுலாமியர் எதிர்ப்பு ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவனுக்கு சரக்கு ஊத்திக் கொடுத்து பேச சொன்ன மாதிரி இருக்கு. இசுலாமியர் எதிர்ப்பு பின்னர், வினவு எத எழுதினாலும் எதிர்க்கணும் என்கிற வெறியை உங்களுக்குள் வளர்த்து இருக்கு.ஒரேவழி தான் இருக்கு, ஒன்னு உங்க மன நிலையை சரி பண்ணனும் அல்லது உங்களுக்கு சரக்க ஊத்திக் கொடுத்தவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கணும். அது சரி, இத்துணைக் குழந்தைகளை அந்த படுபாவிப் பயலுக கொன்னுபுடாங்க. என்ன தான் இசுலாமியர் மேல உங்களுக்கு காண்டு இருந்தாலும், பாவம் சின்னக் குழந்தைகள் தானே.ஒரு வருத்தமாவது தெரிவிச்சு இருக்கலாம்.ஹ்ம்ம் என்ன செய்வது உள்ளே இசுலாமிய எதிர்ப்பு வெளியே வினவு எதிர்ப்பு இரண்டும் சேர்ந்த கலைவையாக பாவம் நீங்க.

    நன்றி.

    • //உங்களது இசுலாமியர் எதிர்ப்பு ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவனுக்கு சரக்கு ஊத்திக் கொடுத்து பேச சொன்ன மாதிரி இருக்கு.//
     சூப்பர் சிகப்பு வினவின் எல்லா எழுத்தையும் எதிர்ப்பவன் அல்ல நான் எனது மற்ற கட்டுரைகலின் பின்னூட்டங்கலை நிதானமாக படித்து பாரும், வினவினை நான் அதிகம் படிக்கிறேன் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன் கம்மூனிசம் என்றால் இசுலாமிய தீவிரவாதிகள் எது செய்தாலும் அதை அமெரிக்கா ,ஏகாதிபத்தியம்,ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு காவீககளுக்கு பதிலடி என்ற கருத்துகள் வரும் கட்டுரைகளை மட்டுமே எதிர் கருத்தை வைத்து இருப்பேன் நியாயமாக படித்து பார்க்கவும்

    • pj வை வாருவது இருக்கட்டும், தமிழ்-தாகம் அவர்களே, இந்த கொடூர செயலை குறிந்து உங்கள் கருத்து என்ன?

   • உலகம் முழுவதும் கண்டித்துக்கொண்டிருக்கும் இந்த கொடுமையை “வினவு” போன்ற பிற்போக்கு வலைதளங்கள் ஆதரிப்பது இதன் “பெட்ரோ டாலர்” ஆசையை காட்டுகிறது. இந்த கட்டுரை மிகவும் மென்மையாக உள்ளதையும் கவனிக்கவும்!! எதெற்கெடுத்தாலும் அமெரிக்க
    ஏகாதிபத்தியம் என்று கூறி இஸ்லாமிய கொடுமைகளை மறைப்பது வினவுவின் செயல்.இதற்கெல்லாம் இதற்கு “நல்ல விலை” உண்டு.நாம் எழுதும் கருத்துக்களை மறைப்பதும் வெளி இடாமல் தவிர்ப்பதும் இதன் “பரிசுத்தத்தை” காட்டுகிறது!

    • @ m natrayan.

     Well said brother. A portion of our views are simply removed by VINAVU or totally and fully not published. They publish opinions which satisfy their taste. These people talk about freedom.

     No muslim organisations in India protested the killings. Because the killed and the killers are both muslims in this case.

     When so many innocent children have been mercilessly killed by these barbarians, VINAVU is diluting the issue by discussing about Vietnam, American imperialism and Hindutva.

     Only monsters will kill innocent children.

     Pakistan is paying for promoting the terrorism.

   • p.ஜோசப்
    உங்களுடைய அமெரிக்க ஆதரவு வியப்பாக உள்ளது .
    தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா செய்த கொடுமை கொஞ்சம் நஞ்சம் அல்ல அங்கே பல்லாயிரம் ஆயிரம் கொலைகள் செய்தது அமெரிக்கா. அவர்கள் அதனை பேரும் கிறிஸ்தவர்கள்தான் பதிரியர்களியும் கண்ணியச்த்ரிகளியும் கற்பழிப்புகள் கொலைக்கள் செய்ததும் அமெரிக்கா கூலிபடைகள் தான்.

    உங்களுடைய மைனாரிட்டி மக்களுகாக எவ்வளவு போராடி இருகிறர்கள் அந்த நன்றி கொஞ்சமாவுது இருந்திருந்தால் இப்படி கேவலமாக எழுத மாடீற்கள் உங்களுக்கும் இஸ்லாமிய வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்?

  • ராமன், புலிகள் ஒருவரோடு நிறுத்தாமல் அவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அழித்து இருந்தால், மாபியாக்கள் செய்வது போல், அவர்களை அழிக்க யார் வருவர்? அவர்கள் இரன்டும் கெட்டான்களாய் செயல்ப்ட்டு விட்ட்னர் தலிபன் அப்படி இருப்பர்களா?

   • சார் சார் அமெரிக்காவையும் சேர்த்துகோங்க சார் , ப்ளீஸ் வாய்மை சார்

 5. Taliban acts seems like a brutal animal, Talibans are not humans, they have to be vanished from this world. They are the worst enemies for Muslim all over the world.

  I feel sad for the parents, relatives who lost their children and for the wounded children have to recover soon.

 6. On 14th August 2006, fifty-three Tamil school girls and 3 staff members were killed, and over 150 injured, when four Sri Lankan Air Force jets flew over the Vanni, dropping sixteen bombs over the Sencholai children’s home in Vallipuram for orphaned girls. – Discuss

 7. “அதனால் அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் போராட்டம் இத்தகைய மதத் தீவிரவாதிகளால் சில நாடுகளில் கையிலெடுக்கப்படுகிறது”

  இந்த மதத்தீவிரவாதிகள் கொன்றது அப்பாவிக் குழந்தைகளை. இக்குழந்தைகளைக் கொன்றதன் மூலம் அமெரிக்கா பயந்து விடும் என்றோ, பாகிஸ்தான் அரசு பணியும் என்றோ தீவிரவாதிகள் நினைத்தால் இதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்க முடியும்?

  இந்தக் கொலை பாதகச் செயலைச் செய்தவர்களை இங்குள்ள முஸ்லிம்கள் ஏன் ஒரு போராட்டம் மூலம் கண்டிக்க வில்லை?
  ______________

 8. // தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது. //

  பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியர்கள் யாரும் பாராட்டவேண்டிய தேவை என்ன இருக்கிறது..? பாகிஸ்தானின் பெயரளவு ஜனநாயகத்தையும் அடியறுக்கும் பாக் இராணுவமும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் ஒரு புறம் LET, JeM போன்ற பயங்கரவாத அமைப்புகளை வளர்த்துக் கொண்டே ஸ்வாட் பழங்குடிகளின் மீது போர் தொடுப்பதன் காரணம் பாக் ராணுவத்திற்கும் அதன் கையில் உள்ள விளையாட்டு பொம்மையான பாக் அரசுக்கும் எஜமானனான அமெரிக்காவின் உத்தரவுதான்..

  ஆப்கன் தாலிபான்களை கைவிட்டுவிட்டதாக வெளியுலகுக்கு படம் காட்டிக் கொண்டே அவர்களுக்கு மறைமுக உதவிகள் செய்தும், ஆப்கன் தாலிபான்களுக்கு ஆதரவான பாக் தாலிபான்களை ஒடுக்குவதற்கு ஸ்வாட் பழங்குடிகளின் மீது போர் தொடுக்கும் பாக் இராணுவத்தின் ஏமாற்று வேலையை உலகம் நம்பலாம், பாக் தாலிபான்கள் நம்புவார்களா.. பாக் இராணுவம் என்ற திருடனுக்கு தேள் கொட்டினால் பரவாயில்லை, ஆனால் அப்பாவி பள்ளிக் குழந்தைகளை பலி வாங்கும் பாக் தாலிபான்களின் கொலைவெறி ஒரு முட்டாள்தனமான வெறிச்செயல் என்பதில் சந்தேகமில்லை.. இந்த விடயத்தில் பாக் இராணுவத்தை பாராட்ட ஒரு அவசியமுமில்லை, அது அமெரிக்க ஆணையை ஏற்று நடத்தும் ஒரு பல்வேட, அதிகாரப்பூர்வமான, அமெரிக்க ஆதரவு பயங்கரவாத அமைப்பே..

 9. Vinavu ungalal gujarathil erithu kollapatta picturin source kodukka mudiyuma

  Antha picture FrontlineKashmir engira pakistan magazinil veliyidapatta picture

  ivvalavu kiztharamaga pakistan magazinil irundhu copy adikum vinavu endru ethirpakavillai

  Ungalukku copyrights pathi theriyumnu ninaikiren. Oru picturai copy paste pannal athanudaya source yum mention pannanum kudava theriyadhu ungalukku

 10. தேடுதல் வேட்டை என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பாகிஸ்தானில் நடத்தும் அத்து மீறிய தாக்குதலுக்கு உழைத்து வாழும் அப்பாவி மக்களும் , இது பழிக்குப் பழி என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு ஒன்றும் தெரியாத குழந்தைகளும் மக்களும் பலியாகியிருக்கின்றனர்

  • நண்பரே,
   அந்த தேடுதல் வேட்டையில் தான், அந்த அத்து மீறிய தாக்குதலில் தான் ஒசாமா பின் லேடன் சிக்கியது நினைவில்லையா?
   பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திகொள்ளுங்கள்.
   தீவிரவாதிகளின் கொலைவெறிக்கு நியாயம் கற்பிக்க முயல வேண்டாம்.

 11. பாகிஸ்தான் அரசு இதன் வீரியத்தை உணர்ந்து ஏகாதிபத்தியங்களை கண்டிப்பதும், தீவிரவாதிகளை அடக்கி வைப்பது போன்ற வேலையை உடனடியாக செய்து அடுத்து இதே போன்று ஒரு கொடுஞ்செயல் நடக்கா வண்ணம் பார்த்து கொள்வது அரசின் செயல் பாட்டில் உள்ளது ,என்னுடைய சார்பாக இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை இதன் மூலம் தெரிவிக்கிறேன்

  • நந்தன் பாபு அவர்களே,

   ஏகாதிபத்தியங்களை கண்டித்தால் மட்டும் போதுமா?
   தீவிரவாதிகளை அடக்கி வைத்து இது போன்ற கொடுஞ்செயல் நடக்காவண்ணம் பார்த்து கொள்வதா?
   எப்படி அடக்கி வைப்பது என்று சொல்ல முடியுமா?

   ஒட்டுமொத்தமாக ஒழித்தால் மட்டுமே இது போன்ற கொடுஞ்செயல்கள் நடக்காமல் மக்களை காக்க முடியும்.

   தீவிரவாதத்திலும் பயங்கரவாதத்திலும் நல்லது கெட்டது என்ற வேறுபாடு கிடையாது.
   பாம்புக்கு பாலை வார்த்து அது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் கொத்தும் என்று எண்ணிய பாகிஸ்தான் அரசை மறைமுகமாக ஆளும் இராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் எண்ணியது அவர்களின் முட்டாள்தனம்.

   இனியாவது அவர்கள் அமைதிவழியை தேர்ந்தெடுப்பார்கள் என்று எண்ணினால் இப்போது இந்த பயங்கரம் நடந்த 48 மணி நேரத்தில் ஹபீஸ் சயீதை விடுதலை செய்து தீர்ப்பளிக்கின்றனர். அவர்களும் வாழமாட்டேன் என்கிறார்கள், அடுத்தவரையும் வாழ விட மாட்டேன் என்கிறார்கள்.

 12. Most of this article is correct including parallels to other similar tragedies. What I cannot understand is why vinavu is not blaming the religion itself when it comes to talibans. Root cause is the religion itself for any terrorism.

 13. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள இந்துவெறியர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும், உலக புத்த மதத்தினரும்தான் உண்மையான காரணம். இதனை மூடி மறைக்க பலர் முயற்சிக்கிறார்கள். ஒருபோதும் இது நடக்காது!! “வினவு” இதனை முன்னிருந்து நடத்தி இதனை வெளிக்கொண்டுவரும் என்று நம்புவோம்!!!!!!!!

  • Dear Vinavu
   It is unfortunate that you try to blame taliban unnecessarily. For all miseries in the world, the america, modi, sanhga parivar etc are all responsible. To solve the problems in pakisthan, vinavu and all the rationalists should move immediatley to Warsistan and do their wonderful service. Here, we take care of hindu fundamentalists

 14. Let us call a Spade a Spade.

  தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் கண்டிக்கத்தக்கது, தண்டிக்கதக்கது தான்.

  ஆனால் நூற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகளை பலிகொண்ட தீவிரவாதத்தை நேரடியாக எதிர்க்க வினவிற்கு என்ன தயக்கம். உடனே உலகில் நடந்த அநியாயங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து இப்போது வெளியிட்டு ஏதோ பாகிஸ்தானில் நடைபெற்றது பத்தோடு பதினொன்று என்றும் கோழைத்தனமான தீவிரவாதத்திற்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பது ஏன்.

  வினவு ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஊதுகுழலாக மட்டும் இருக்க விரும்புகிறதா, தெரியவில்லை.
  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்வுக்கு வினவு என்ன சொல்கிறது?

  பிரச்சினைகளின் மூலக்காரணங்களை விவாதிக்காமல் சும்மா வழவழா என்று ஏன் வினவு இழுக்கிறது?

  சமீபகாலமாக வினவின் மேல் நம்பிக்கை குறைந்து வருகிறது. நாட்டு முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும், மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு எவ்வகையில் உத்திரவாதம் தர முடியும், இதை பற்றிய விவாதங்களை விட்டு தேவையில்லாத ஒன்றிக்கும் உதவாத விடயங்களில் வினவும் வினவில் பதிவிடும் நண்பர்களும் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

  Feeling Deflated 🙁

  • // பிரச்சினைகளின் மூலக்காரணங்களை விவாதிக்காமல்

   மற்றவர்கள் இந்தப் பிரச்னையை “குழந்தைகள் கொலை, காரணம் தீவிரவாதம்” என்ற அளவில் சுருக்குகிறார்கள். வினவு இதன் மூல காரணம் அமெரிக்கா என்கிறது. அந்த அடிப்படையிலேயே வியட்நாம், ஈராக் என்பது பற்றி பேசுகிறது. சம்பந்தமற்ற மற்ற குழந்தைக் கொலைகள் (உதாரணமாக கும்பகோணம்) போன்றவற்றை பேசவில்லை. எனவே நீங்கள் சொல்வது சரியில்லை.

   ஆனால், “எல்லாம் அவன் செயல்” என்பது போல, “எல்லாம் அமெரிக்கா செயல்” என சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

   • என்ன பேசுகிறீர்கள் வெங்கடேசன்?
    குழந்தைகள் கொலைக்கு காரணம் தீவிரவாதம் இல்லையா, மிதவாதம் தான் குழந்தைகளை கொன்றதா? இந்த கொலைகளுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

    • இந்த நிகழ்ச்சியை தனித்துப் பார்த்தால், இதன் அடிப்படை தீவிரவாதம் மட்டுமே. இந்தப் படுகொலையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஆனால், தாலிபான்கள் போன்ற தீவிரவாத குழுக்கள் உருவானதில் அமெரிக்காவின் பங்கு உண்டு.

     • வெங்கடேசன்,

      ரசியாவை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் தான் தாலிபான்கள் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர்களது தற்போதைய காட்டுமிராண்டிதனத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு முழு காரணம் பாகிஸ்தானை ஆளும் இராணுவமும் ISI யும் தான்.

      • நீங்கள் சொல்வது உண்மைதான்.

       ஆனால், big picture என்று பார்த்தால் கிரிக்கட் ஆட்டம் போன்றது இது. மொத்தமாக பத்து பதினைந்து அணிகள் உள்ளன. அவ்வப்போது சில பல அணிகள் ஒன்று கூடி ஏதாவது கோப்பைக்காக விளையாடுவார்கள். தனியாக ஒண்டிக்கொண்டி ஆடுவதும் உண்டு. அவ்வகையில், கடந்த ஆட்டம் தாலிபான்-பாகிஸ்தான் ராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலானது. அமெரிக்கா இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

      • ரஷ்யாவை எதிர்ப்பதற்காக அமெரிக்காவால் ஆதரவளிக்கப்பட்டு வளர்த்து விடப்பட்டவர்கள் முஜாகிதீன்கள். ஆனால் முஜாகிதீன்களை எதித்தவர்கள் தலிபான்கள். ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, தலிபான்களை உருவாக்கி, அவர்களை வளர்த்து விட்டது பாகிஸ்தானிய இராணுவமும், பாகிஸ்தானிய அரசும் தான்.

 15. மிக மிக கொடூரமான கொலை பாதக செயல்.விலங்காண்டி கும்பலின் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் கூக்குரலும் குருதியும் மனக்கண்ணில் தோன்றி நெஞ்சை உருக்குகிறது. இக்கொடூரத்தை உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் உள்ள சொற்களை பயன்படுத்தி கண்டித்தாலும் சொற்கள் போதாது.

 16. Dear Vinavu,

  இந்த காட்டுமிராண்டித்தனத்தை எந்த disky யும் இல்லாமல் கண்டித்திருக்க வேண்டும்.

  //பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் சாவதற்கு தகுதியானவர்கள் என்று ‘பெருந்தன்மையுடன்’ முடிவு செய்யுமளவுதான் இந்த காட்டுமிராண்டிகளின் சிந்தனை இருக்கிறது.//

  ________________________

  //மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமையே அன்றி சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் அதை அனுமதிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.//

  இது முகமதியர்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.

  • Islam is not simply a religion. It talks about business, politics, various laws (sharia), why the women is inferior to men, size of the stone to be used to stone the women to death etc.

   Vinavu should not bury its head in the sand.

 17. எனக்கு என்னவோ வினவு இந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கொடூர செயலின் தாக்கத்தை மக்கள் மனதில் இருந்து குறைப்பதற்கு தீவிர முயற்சி செய்வதாகவே தெரிகிறது.

  என் எண்ணம் தவறாகவும் இருக்கலாம். ஆனால் அந்த எண்ணம் தோன்ற வினவின் கட்டுரையே காரணம்.

  ஜெயலலிதாவை கைது செய்த போது, யார் தான் ஊழல் செய்யவில்லை என்று அதிமுக ஊதுகுழல்கள் சப்பை கட்டியது போல வினவு இந்த தீவிரவாத செயலை நேரடியாக கண்டிக்காமல் சுற்றி வளைத்து உலகம் முழுக்க நடந்த அநீதிகளையும் இணைத்து யார் தான் தீவிரவாதம் செய்யவில்லை என்று சப்பை கட்டுகிறது.

  ஒரு கோட்டின் பக்கத்தில் அதை விட பெரிய கோட்டை வரைந்து முன் வரைந்த கோட்டை சிறியதாக காட்ட வினவு முயல்வதாவே படுகிறது.

  தீவிரவாதம் என்பது இரு முனை கத்தி. தீட்டியவர்களின் கைகளை அது எப்போது வேண்டுமானாலும் பதம் பார்க்கும்.

  அது சரி, ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை ஏன் வினவு கண்டுகொள்ளவில்லை.”செலக்டிவ் அம்னீசியாவா?”

 18. “தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது.”

  Shall we garland the Pakistan military for injecting the terrorists through the border States of India to destabilise our country?

  Doesn’t VINAVU know that the terrorist jihadi (ahimsa murthi) was living at the very nose (just 1.3 km) of the Pakistan Military Academy in Abbotobad? Was it without the knowledge of Pakistan military?

  When VINAVU is garlanding the Pakistan military, VINAVU can please invite all of us and we will go in a procession to participate in that grand function.

  This article is as atrocious as the massacre of those innocent children.

 19. மிஞ்சு உள்ளங்களுக்கு அஞ்சலி !!!!.

  வெறும் அஞ்சலியோடு இருந்து விடாமல், இந்த மதக் காட்டுமிராண்டிகளுக்கு காரணம் மத உணர்வுதான். மததினை வீட்டிலேயே விட்டு விட்டு வரவேண்டும்.

  மததீவிரவாதத்தினை வளர்த்த அமெரிக்காவின் பாத்திரத்தினையும் நாம் அறிய வேண்டும் !!! ஐ எஸ் ஐ யை உருவாக்கிவிட்டு அதனை அழிக்க முயல்வது போன்று.

  ஒன்று மட்டும் நிச்சயம் – உலகில் ஒரே வழிதான் இப்போது. மதங்களற்ற பொதுவுடமை அல்லது பண, மத ஜாதி வெறி பிடித்த முதலாளித்துவம். நடுநிலை கல்லறையில்தான் வரும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க