Monday, July 26, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் கொம்பன் பட பாம்படம் பாட்டிகளின் சினிமா கசப்புகள்

கொம்பன் பட பாம்படம் பாட்டிகளின் சினிமா கசப்புகள்

-

காலையில் சென்னையில் பேருந்தில் ஏறும்பொழுதே நடத்துனரிடம் “எப்பொழுது மதுரை போய் சேரும்?” கேட்டேன். 8 மணிக்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தேன்.  “இரவு 7.30 மணிக்கு போய்விடும்” என்றார். 8 மணிக்குள் சென்றாலே போதும் என நினைத்துக்கொண்டேன்.

கொம்பன்
“பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படம்”

பேருந்து கிளம்பும் நேரத்தில் வயதான பாட்டிகள் சுமார் 20 பேர் பேருந்தில் திமு திமு என ஏறினார்கள்.  அவர்களின் சலசலப்பான பேச்சு பேருந்து முழுவதும் பரவியது.  பகல் நேரத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியதில் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் அத்தனை ஆனந்தம்.

எல்லா பாட்டிகளிடமும் ஒரு ஒற்றுமையை கவனிக்க முடிந்தது. எல்லோரும் காதுவளர்த்து தண்டட்டி போட்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்ததில், “பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படத்துல நடிச்சு, ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக” சொன்னார்.

“சென்னையை சுத்திப்பார்த்தீங்களா?” என்றதற்கு,

“நாங்க வந்து ஒரு வாரமாச்சு! வந்ததற்கும், போவதற்கும்  இரண்டு நாள் ஆயிருச்சு! நாலுநாள் தான் படமெடுத்தாங்க! ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டிப்போனாங்க!” என்றார்.

எம்.ஜி.ஆர் சமாதியை எப்படியாவது சுற்றி காண்பித்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் விட்டாலும் சினிமாக்காரர்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவுபடுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

மதிய நேரம். ஒரு பைபாஸில் இருந்த மோட்டலில் வண்டி நின்றது. போய் சாப்பிட்டதில் எல்லா மோட்டல்களை போலவே சாப்பாடு ரெம்ப சுமாராக இருந்தது.

கொம்பன்
சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே 50 ரூபாய் தான்!

எல்லா பாட்டிகளும் உள்ளே நுழைந்தவர்கள் சிறிது நேரத்திலேயே சாப்பிடாமலேயே எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள்.  என்னவென்று விசாரித்தால், “கொஞ்சூண்டு சோறு வைக்கிறாங்க! அதுக்குப் போய் 70 ரூபாய் சொல்றாங்க! அநியாயம். சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே  50 ரூபாய் தான்!” என்று அங்கலாய்த்து சொன்னார்.

வண்டி கிளம்பிய அரைமணி நேரத்தில் பாட்டிகளிடம் சலசலப்பு.

“எப்பா காலையிலேயே நாங்க சரியா சாப்பிடலை! வேறொரு சாப்பாட்டுக் கடையப் பாத்து நிப்பாட்டுப்பா! பசி உயிர் போகுது. யாராவது மயக்கமாயிட்டா ரெம்ப தொல்லையாயிரும்!” என செல்லமாய் மிரட்டினார்கள்.

‘அய்யய்யோ இன்னொரு அரைமணி நேரமா!’ என்று மற்ற பயணிகள் எல்லாம் பதட்டமானார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இரண்டு பாட்டிகளிடம் “இங்க எல்லா இடத்திலும் 70 ரூபாய் தான் சாப்பாடு” என ஓட்டுநர் சொல்லிப்பார்த்தார். மயக்கம் போட்டு விட்டால், மருத்துவமனைக்கு யார் அலைவது என யோசித்து, கெஞ்சியும் பார்த்தார்.

அந்த பாட்டிகளோ அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.  ஓட்டுநருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  புதிதாக திறந்திருந்த ஒரு மோட்டலில் நிறுத்தி, அதன் முதலாளியிடம் தன் நிலைமையைச் சொல்லி, (கெஞ்சி) 70 ரூபாய் சாப்பாட்டை 50 ரூபாய்க்கு பேசி முடித்தார்.

எல்லா பாட்டிகளும் இறங்கி போய் சாப்பிட்டார்கள். ”இவங்க தர்ற இத்துணூண்டு சாப்பாடு எவ்வளவு நேரத்துக்குப்பா தாங்கும்! 50 ரூபாயாம். அநியாயம!, கொள்ளையடிக்கிறாங்கப்பா” என்று புலம்பிக்கொண்டே வண்டியில் திரும்ப ஏறினார்கள்.

கொம்பன்
“நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க!”

ஓட்டுனருக்கு காதில் புகை வந்தது!

“சாப்பிட்டதற்கு பின்னாடி உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? காரசாரமாய் பேசிக்கிட்டு இருந்தீங்க!” எனக் கேட்டேன்.

“அது ஒண்ணுமில்லப்பா! நாங்க ஊர விட்டு கிளம்பி ஒருவாரம் ஆச்சு! நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க! எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களோன்னு சண்டைபோட்டோம். அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிகாரங்ககிட்ட கேட்டிருப்போம்! ஏமாத்திட்டாங்கப்பா!” என்றார் வருத்தத்துடன்!

அடப்பாவிகளா!  மதுரையிலிருந்து வயதானவர்கள் 20 பேரை அழைத்து வந்து, ஒருவாரம் ஆகியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல். ரூ 1000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி நடிக்கும் கொம்பன் படம் ஒன்றும் பட்ஜெட் படமில்லை. சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ் என பல வெற்றிப்படங்களில் காசு பார்த்த ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார். இப்போதைக்கு கார்த்திக்கு சம்பளம் 6 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதில் தெலுங்கு டப்பிங்குக்கு சில கோடிகள் தனி! 6 மாதத்தில் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள்.  குறைந்தபட்சம் 6 கோடி சம்பளம் என வைத்துக்கொண்டால் கூட ஒரு நாள் கார்த்தியோட சம்பளம் 3.5 லட்சம்.

சமீபத்தில் ஒரு திரைவிழாவில் நடிகர் சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 15 லட்சம் என ஆர்யா வெளிப்படையாக தெரிவித்தார். நம்ம வயதான பாட்டிகளுக்கு ஒரு நாள் ஊதியம் 250 ரூ.  மதிய சாப்பாட்டுக்கு ரூ 50 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கொம்பன்
70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

ஒருவழியாக பேருந்து 8 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தாமதமான நேரத்தையெல்லாம் ஓட்டுநர் கொஞ்சம் விரைவாக ஓட்டி, ஈடுசெய்திருந்தார்.

பேருந்திலிருந்து பாட்டிகள் எல்லோரும் தளர்வாக இறங்கினார்கள். மெல்ல மெல்ல அந்த இருட்டில் மறைந்துபோனார்கள். மாறியிருக்கும் ஏற்றத்தாழ்வான உலகம் அவர்களுக்கு தெரியாது.

அதனாலென்ன? எல்லா புள்ளிவிவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டு நாம் மட்டும் என்ன செய்துவிட்டோம்?

– குருத்து

 1. டேய் குருத்து குந்தானி… இந்த வயசுல இவளுங்க தண்டட்டியை ஆட்டிகிட்டு மதுரையிலிருந்து மயிரு புடுங்க ஏன் சென்னை வரணும்??? இவளுங்களுக்கு 250 ஓவா குடுத்ததே ஜாஸ்தி…… சினிமாவை பத்தி அந்த கிழவிங்களுக்கு தெரிந்ததைவிட உனக்கு ஒரு ____… தெரியல!!!.. என் கூட கிளம்பி வாடா கும்பகோணம் போறதுக்குள்ளே முப்பது ரூபாய்க்கு சாப்பாடு நூறு இடத்துல போடுறத காட்டவா??? ஏண்டா எல்லாத்துலேயும் பொய்யும் புரட்டுமா அவுத்துவுடரீங்க??? வெக்கமாயில்ல????

  • எந்த மயிரைப்புடுங்குவதற்கு அவர்களை ஞானவேல்ராஜா மதுரையிலிருந்து கூட்டிவரச்சொன்னான்? உன்னைப்போல இந்தியன்கள்தான் அந்த வேலைக்காகவெல்லாம் கும்பகோணம் போவார்கள்? முப்பதுரூபாய்க்கு சாப்பாடு போடுகிற இடம் இருக்கிறதுதான். ஆனால், அங்கே கண்டக்டர் நிறுத்தமாட்டாரே? உனக்கு ஏதேனும் கோயில் அன்னதானத்தில் நிறுத்தியிருக்கலாம்.

   • இந்தியன் நாகரீகமாக பேசுவதிலிருந்தே தெரியல அவருக்குள்ள எம்புட்டு நாத்தமடிக்குதுனு…அது கெடக்கட்டும் நொந்தியனுக்கு ஏன் இந்த பொச்செறிப்பு……

 2. // இந்த வயசுல இவளுங்க தண்டட்டியை ஆட்டிகிட்டு மதுரையிலிருந்து மயிரு புடுங்க ஏன் சென்னை வரணும்??? // How vulgar this guy. I despise to know these kind of ugly inside creature exists in this world.

 3. தண்டட்டி அணிந்த கிழவிகள் என்றால் வினவுக்கும் இளக்காரம்தானா? அவர்களை அவள்கள் இவள்கள் என்று இந்த மனநோய் பிடித்த இந்தியன் _____ பேசுவதை வினவு ஏன் மட்டறுக்க வில்லை

 4. பயணம் செய்கிற பலருக்கும் மோட்டல்களில் விலை கூடுதலாக இருக்கும் என்பது இயல்பாய் எல்லோருக்கும் தெரிந்த விசயம். உள்ளூரை விட்டு வெளி உலகைப் பார்க்காத கிணற்றுத் தவளையா இந்தியன் என்பது மிகவும் வருந்ததக்க விசயம்.

  நமது பாட்டிகளின் மீது ஏன் இவ்வளவு கோபம்? இந்தியன் மாதிரி ரசிகர்கள் தான் தன் தலைவர்களின் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றுவார்களா? அல்லது அங்கிருந்து தவறி மல்லாக்க விழுந்து செத்துப் போவார்களா? பாட்டிகளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்ககூடாதா என்ன?

  அதெப்படிப்பா இந்தியன் பெயர் வைச்சாலே பொங்கனும்னு தோணுது! உங்களையெல்லாம் ‘புரட்சி கலைஞர்’ விஜய்காந்த் ரெம்ப கெடுத்து வைச்சிருக்காருப்பால!

 5. முதலாளித்துவம் தவறு என்று சொல்கிறீர்கள்.
  சரி, ஒத்துக்கொள்கிறேன். அதில் குறைகள் உள்ளது தான். உண்மை.

  அதற்கு மாற்றாக கம்மியுனுஸ்டுகள் தரும் வழியும் தெளிவாக இல்லை.
  நானும் பல நாளாக பல்வேறு கோணங்களில் யோசித்து பார்த்து வருகிறேன்.
  கம்மியுனுஸ்டுகளின் புரட்சிகர மாற்று ஆட்சிமுறையில் சுற்றி சுற்றி அதிகாரம் ஒரு சிறிய கும்பலின் சர்வாதிகாரமாகவே வடிவெடுக்கிறது. உலகெங்கிலும் தற்போது ஒரே ஒரு நாட்டில் கம்மியுநிசத்தின் நல்லதொரு மாதிரி வடிவம் உள்ளதா? இதற்கு பதிலாக எனது கம்மியுனிச தோழர்கள் பண்டைய சீனா, ரசியாவில் அத்தகைய ஒரு சிறந்த மாதிரி வடிவம் இருந்ததாலும் அது சூழ்ச்சியால் தோற்க்கடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மையிலேயே அது சிறந்ததொரு ஆட்சிமுறை என்றால் மக்களின் பேராதரவு கொண்டு அது இன்னும் ஆட்சியில் இருந்திருக்க வேண்டுமே. பெயருக்கு கம்மியுனிசம் என்று இருக்கிற நாடுகளில் இப்போது சர்வாதிகாரம் தான் உள்ளது. உண்மையான கம்மியுனிசம் இல்லை.

  கம்மியுனிச வாதிகளிடம் ஆட்சிமுறையை இப்போது ஒப்படைத்தால் ஒன்று, அவர்களால் முழுதாக ஒரு நல்லாட்சியை தர முடியாமல் தோற்று சூழ்ச்சியால் அது தோற்றது என்று மீண்டும் கையை பிசைந்து கொண்டிருப்பார்கள், இல்லை என்றால் முழுமையான சர்வாதிகார ஆட்சியாக ஆக்கி மக்களை அடக்குமுறைக்கு தள்ளி விடுவார்கள்.

  ஒரு நாட்டில் அல்ல, ஒரு மாநிலத்தில் அல்ல, ஒரு நகரத்தில் அல்ல, ஒரே ஒரு தொழிற்சாலையில் முழுமையான கம்மியுநிசத்தை செயல்படுத்தி வெற்றி காணுங்கள். பிறகு நாங்களே, பொதுமக்களே உங்களுடன் கை கோர்க்கிறோம். அதை விடுத்து அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பது போல புரட்சி வந்தால் நாடு முன்னேறும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.

  உண்மையான புரட்சி என்பது மக்களின் பேராதரவு கொண்டு தான் நடைபெற வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் மக்களுக்கு கம்மியுனிசம் மூலம் நன்மைகள் முதலில் நடை பெற வேண்டும். மக்களின் நம்பிக்கையை கம்மியுனிசம் பெற வேண்டும்.

  ஒரே ஒரு மாதிரி வடிவம் கொண்டு வாருங்கள். ஒரு மாதிரி தொழிற்சாலை. முதலாளிகள் இல்லாத ஒரு தொழிற்சாலை. தொழில் உண்டு, தொழிலாளியும் உண்டு. முதல் உண்டு, முதாலாளி இல்லை. இத்தகைய ஒரு தொழிற்சாலையை, சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, அதனை உருப்படியாக வெற்றிகரமாக உருவாக்கி காட்டுங்கள். பின்னர் உங்கள் பின்னால் நாங்கள் அணிவகுக்கிறோம்.

  என்னுடைய கருத்துக்கு நேரடியான நேர்மையான விடைகளை எதிர்பார்க்கிறேன். தனிமனித தாக்குதல் தான் தங்களது பதிலாக இருந்தால் தாங்கள் விடை தர இயலாமல் இருப்பதாகவே எண்ணுவேன்.

   • கற்றது கையளவின் பொது அறிவு இவ்வளவு மோசமா…? கம்யூனிசம் என்ன பண்ணுச்சுனு எங்கேயெல்லாமோ தேடுணீங்களே, சோவியத் யூனியன் பற்றி என்.எஸ்.கிருஷ்ணனும், முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனும் எழுதியதை படியுங்கள், குறைந்த பட்சம் பொது அறிவு வளரும் என்பது எனது தாழ்மையான கருத்து……

    • அன்புள்ள கருப்பன் அவர்களே,

     என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ரசியாவின் இரும்புத்திரை பற்றி எழுதியதை நானும் படித்தேன். இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதியது பற்றி தெரியாது. அவரும் அப்போது ரசியாவின் மேன்மையை பற்றி நன்றாகவே எழுதியிருப்பார். உண்மை தான், மறுக்கவில்லை.

     என்னுடைய கேள்வியை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
     ஒரு நாட்டின் விருந்தினராக நாம் போகும்போது அந்த நாட்டில் நமக்கு இராஜ மரியாதை தரப்படுவது எல்லா இடங்களிலும் நடக்கும் விடயம் தானே. என்.எஸ்.கிருஷ்ணன் ரசியாவில் அதிகம் போனால் ஒரு வாரம் தங்கி இருப்பார். அவருக்கு ரசியாவின் இருட்டு பக்கங்களுக்கு அந்த நாட்டு ஆளும் வர்க்கம் அழைத்து சென்றிருக்குமா, யோசித்து பாருங்கள்.

     தாங்கள் என்.எஸ்.கிருஷ்ணன், இராதாகிருஷ்ணன் காலத்தை பற்றி சொல்கிறீர்கள். நான் சமீபத்தில் நடக்கும் விடயங்களை சொல்கிறேன். நான் நேரடியாக ரசியா, உக்ரைன், கசகிஸ்தான் நாட்டு நண்பர்களிடம் பேசியதை தான் உங்களுடன் பகிர்ந்தேன். கம்மியுனிசம் தேவையில்லை என்பதே அவர்களது கருத்தாக உள்ளது. கம்மியுநிசத்தினால் ஒரு பொற்கால ஆட்சியை தர முடிந்தது உண்மை என்றால் ஏன் மக்கள் அந்த பொற்கால ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்?

     ஆழ யோசித்து பாருங்கள் நண்பரே,

     • கற்றது கையளவு : இங்கு எதை பற்றி பேசுகிறார்கள் சரியான ஊதியம் கொடுக்க வில்லை என்பதைதான் ஆழமாக சொல்கிறார்கள்… நீங்கள் எதற்காக திசை மாற்றுகிறீர்கள் இதை பற்றி உங்கள் கருத்தை தெளிவாக சொல்லவும்… கம்யூனிசத்தை குறை சொல்வதை நிறுத்துங்கள் அதனின் உன்னதத்தை புரிந்து கொள்ளுங்கள்…

      • அழகிரி உதயன்,

       கட்டுரையின் கருத்துக்கு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதில் உடன்படுகிறேன்.
       என்னுடைய ஆதங்கம் இந்த கட்டுரையை ஒட்டி அல்ல. பொதுவாகவே வினவில் வெளிப்படும் பல்வேறு கட்டுரைகளில் பிரச்சினைகளை கூறுகிறார்களே ஒழிய அதற்கான தீர்வுக்கு தெளிவான ஒரு வழியை சொல்வதில்லை என்பதால் நான் எனது கருத்தை பதிவிட்டேன்.

       அந்த வயோதிக அம்மையார்களுக்கு தகுந்த ஊதியம், கூலி வழங்கப்படுவதை நான் வரவேற்கவே செய்கிறேன்.

       என்னுடைய கருத்து இந்த கட்டுரையின் கருத்தை திசை மாற்றுவதாக இருந்தால் என்னை மன்னியுங்கள். எல்லா பிரச்சினைகளையும் விவரிக்கிரார்களே தவிர, இந்த பிரச்சினைகளுக்கு ஒரு முடிவான, தெளிவான தீர்வு என்ன என்று சொல்வதில்லையே என்றே நான் வருந்தி எனது பதிவினை வெளியிட்டேன். இத்தனை காலமாக சேர்த்து வைத்த ஆதங்கம், இந்த கட்டுரையை படிக்கும்போது வெளிப்பட்டது.

       இந்த இந்த வேலைக்கு இந்த இந்த ஊதியம் என்று தெளிவாக நிர்ணயித்து அதனை அரசு சட்டமாக்குவதற்கு நாம் போராடினால் அது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக்கும். மாறாக பிரச்சினை இருக்கிறது, இருக்கிறது என்று நாமும் புலம்பிக்கொண்டு இருந்தோமானால் பின் நமக்கு விடிவது எப்போது?

  • ராமன் ஆகட்டும். அல்லது கற்றது கையளவு ஆகட்டும். கம்யூனிசம் குறித்த புரிதலுக்கு வினவு வில் ஏராளமான பதிவுகள் இருந்தும் தாங்கள் அதை படிக்காமல் அரைகுறையாக விவாதிக்கிறீர்கள் என எண்ணுகிறேன். இதை பிறகு பேசுவோம். இந்த சீரழிந்த சமூகத்திற்கு மாற்றாக கம்யூனிசம் என வினவு தோழர்கள் கூறுகின்றனர். அதை விடுங்கள். கம்யூனிசம் வேண்டாம். நீங்கள் என்ன மாற்று சொல்கிறீர்கள்…? அதை சொல்லுங்கள். இதை விடுத்து அதை மெருகேற்றுவோம்.

   • அபிசரன்,

    கம்மியுனிச சித்தாந்தம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எனது கருத்தை தாங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
    கம்மியுனிச போர்வையில் சர்வாதிகாரம் தலையெடுப்பதை எப்படி தவிர்ப்பது என்று தான் நான் கேட்கிறேன். தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய ஆட்சியின் மாடல் எங்காவது இருந்தால் தங்களுக்கு தெரிவியுங்கள். மீண்டும் என்.எஸ்.கிருஷ்ணன் கால கருத்துக்களுக்கு செல்ல வேண்டாம்.

    ஜனநாயக முறையில் மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சிமுறை எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதரவு தெரிவிப்போம்.

    ஜனநாயகம் இல்லாத கம்மியுநிசத்தின் மேல் தான் எனது சந்தேகம். கம்மியுநிசத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் அதன் முதல் படி, மக்களுக்கு கம்மியுநிசவாதிகளின் மேல் நம்பிக்கை வர வேண்டும். இவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் இவர்கள் நாட்டை நல்ல வழிக்கு அழைத்து செல்வார்கள், நம் வாழ்வு செழிக்கும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

    அந்த நம்பிக்கை எங்களை போன்ற பொதுமக்களுக்கு இன்னும் வரவில்லை.
    அது வர வேண்டும் என்றால் அது தோழர்களின் கையில் தான் உள்ளது.

    ஆட்சியின் முழு அதிகாரம் ஒரு குழுவிடம் ஒப்படைத்தால், அந்த குழு தவறு செய்யும்போது, ஆட்சி மமதையில் ஊழல் செய்யும்போது, இல்லை சர்வாதிகார திமிரில் எதிர்ப்பவர்களை எல்லாம் கொள்ளும்போது, பத்திரிகை சுதந்திரத்தை ஒட்டு மொத்தமாக நசுக்கும்போது, மக்களால் எப்படி அதிகாரத்தை அந்த குழுவிடம் இருந்து பறிக்க முடியும்.

    நான் ஒரு சாதாரண பாமரன். அனைத்தும் அறிந்தவன் அல்ல,
    என்னை போன்றவர்களுக்கு புரியும் விதத்தில் என் கேவிக்கு பதில் அளித்தால் நன்று.

 6. //இதற்கு பதிலாக எனது கம்மியுனிச தோழர்கள் பண்டைய சீனா, ரசியாவில் அத்தகைய ஒரு சிறந்த மாதிரி வடிவம் இருந்ததாலும் அது சூழ்ச்சியால் தோற்க்கடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்//

  இதில் உண்மை இல்லை . ரச்யர்களிடமும் சீனர்களிடமும் போலந்து நாட்டுகாரர்களிடம் விவாதித்து விட்டேன் .

  மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கம்ம்யூனிச நாடு அமைப்பீர்களா என்று கேட்டேன் ?
  மீண்டும் அந்த முட்டாள்தனத்தை செய்ய மாட்டோம் என்றார்கள்

  ஆனால் அந்த காலகட்டத்தில் ராஜாவின் பிடியில் இருந்து தப்பிக்க கம்ம்யூநிசம் கைகொடுத்தது . பின்னர் அதிகாரம் கம்யூனிச ராஜாக்களிடம் போய் விட்டது.
  மன்னர் பிரபுக்கள் என்று இருந்த அதிகார மையம் , கம்யூனிச கட்சி ஆட்களிடம் போய் விட்டது.

  ஒரு வேளை அதே காலகட்டத்தில் இந்திய கம்ம்யூனிச நாடாகி இருந்தால் , சாதியை ஓரளவு அழித்திருப்பார்கள்..

  ஆனால் இன்றைய கட்டமைப்பில் க்யூபா கூட தனித்து இயங்க முடியாமல் அமெரிக்காவிடம்
  மண்டி இட வேண்டியதாக போய்விட்டது

  கம்யூனிசத்தில் ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் கிடக்கும் ஆனால் அதை வைத்து பொருள் ஈட்ட முடியாது .வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது

  • இராமன் அவர்களே,

   நானும் உக்ரைன் மற்றும் கசகிஸ்தான் நாடுகளுக்கு பணி நிமித்தமாக பயணம் செய்யும்போதும் அங்கிருக்கும் நண்பர்களிடம் கலந்து பேசியபோதும், ரசியாவிலிருந்து வந்த நண்பர்களிடம் உரையாடியபோதும், அவர்கள் தாங்கள் கூறியதை போல சொல்கின்றனர்.

   அதே சமயம், கம்மியுநிசத்தில் உள்ள நல்ல விடயங்களை நாம் ஆதரிப்பதில் தவறில்லை. கம்மியுனிசம் அந்த நாடுகளில் தோல்வியடைந்ததற்கு சூழ்ச்சி தான் காரணம் என்று வினவில் பல நண்பர்கள் ஆவேசமாக வாதாடுகின்றனர். உண்மை நிலை என்னவென்றால் மக்களிடம் ஆதரவு அங்கு கிடைக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை பெற என்ன முயற்சி எடுக்க வேண்டும், கம்மியுனிச போர்வையில் சர்வாதிகாரம் எப்படி தலையெடுக்காமல் பாதுகாப்பது என்று கம்மியுநிசவாதிகள் யோசிக்க வேண்டும்.

 7. கற்றது கையளவு…
  கம்யூனிசம் கம்யூனிசம்னு சொல்ரீங்க..
  அப்படீன்னா என்னாங்க.. கொஞ்சம் உஙகளுக்கு தெரிஞ்சத விளக்குங்களேன்.

 8. குரு,

  கம்மியுநிசத்தில் கரை கண்டவர்கள் இதே வினவு தளத்தில் உள்ளனர்.

  எனக்கு தெரிந்த வரை அனைவரையும் சமமாக பாவித்து, சாதி, மத இன வேறுபாடுகளை களைந்து உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அளிக்கும் அனைத்தும் கம்மியுநிசத்தில் உள்ள நல்ல விடயங்கள்.

  ஆனால் உலகெங்கிலும் உள்ள கம்மியுனிச ஆட்சிகளில் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவிடம் மட்டும் இருந்துக்கொண்டு சர்வாதிகாரமாக உருவாகிறது. ஜனநாயகம் அங்கே அடிபடுகிறது. இந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது என்று ஆக்கபூர்வமாக யோசித்தால் என்னை போன்றவர்களும் உங்களுடன் கைகோர்க்க முடியும்.

  • // எனக்கு தெரிந்த வரை அனைவரையும் சமமாக பாவித்து, சாதி, மத இன வேறுபாடுகளை களைந்து உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அளிக்கும் அனைத்தும் கம்மியுநிசத்தில் உள்ள நல்ல விடயங்கள்.//
   இதுக்கு communism தான் வேணுமா என்ன?

   Communism என்பதே ஒரு Utopia. Communist அனைவருமே அது போல ஒரு நாடு அமையாதா என்ற ஏக்கமுடையவர்கள். பல கம்முனிச அரசாங்க தோல்விகளுக்கு பிறகும் அத்தோல்விகளுக்கு சூழ்ச்சியே காரணம்னு அப்பாவியா நினைப்பவர்கள். There is a thin line between belief and madness.

   • காபி,

    கம்மியுனிசம் இல்லாமலும் இவை நடக்கலாம். நல்லாட்சி என்பது ஜனநாயகத்திலும் கிடைக்கும், கம்மியுநிசத்திலும் கிடைக்கும், மன்னராட்சியிலும் கிடைக்கும், அது ஆள்பவரை பொருத்தது.

    ஜனநாயகத்தில் ஆள்பவர் சரியில்லையெனில் அவர்களை மாற்றிடும் உரிமை, வாக்குரிமை, மக்களிடம் உள்ளது. அதை தற்போதைய ஆட்சியாளர்கள் கேலிக்குரியதாக மாற்றியது ஜனநாயகத்தின் தவறல்ல, அதை ஆண்டவர்களின் தவறு.

    கம்மியுநிசத்திலும், சர்வாதிகாரத்திலும், மன்னராட்சியிலும் அது போன்று ஆள்பவரை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. இதனால் தான் கம்மியுனிச சித்தாந்தத்தில் எனக்கு தெரிந்த குறைபாடு.

    அனைவரையும் சமமாக பாவிப்பது, ஏற்ற தாழ்வற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது, உழைக்கும் தொழிலாளிகளின் உரிமைகளை காப்பது ஆகிய கம்மியுனிச சித்தாந்தத்திற்கு நான் ஆதரவு தெரிவித்தாலும், அதில் மறைமுகமாக சர்வாதிகாரம் தலையெடுப்பதை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. கம்மியுநிசத்தில் இதற்கு தீர்வு உண்டா, தோழர்கள் தெரிவிக்கலாம்.

    புரட்சி வந்தால் நாடு சுபீட்சமடையும் என்று தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது எப்படி என்று தெளிவாக தோழர்கள் விளக்கினால் நல்லது. இல்லையென்றால் மதவாதிகள் சொல்வார்களே, இறைவன் விரைவில் தோன்றுவான், அப்போது பாவிகள் அனைவருக்கும் தண்டனை கிடைத்து நல்லவர்கள் சொர்கத்திற்கு செல்வார்கள் என்று கூறுவார்களே, அதை போல தான் கம்மியுனிச வாதிகளின் கருத்துக்களையும் நான் கருத வேண்டியதிருக்கும்.

    வினவில் பதிவிடும் தோழர்களே, ஆக்கபூர்வமான விவாதங்கள் என்றால் அதில் என் பங்கு நிச்சயம் இருக்கும். தனிநபர் தாக்குதல், தேவையில்லாத விவாதங்கள் போன்றவற்றில் பங்கெடுத்து தங்களின் நேரத்தையும் எனது நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை.

 9. இளைஞர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியே சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என ஞாநி எழுதியதற்கு எனது கருத்து :

  ஞாநி வாயிலிருந்து இப்படிக் கூட வருமா? வந்து விட்டதே! நான் இருப்பது அமெரிக்காவில். 17 வருடங்களாக இருக்கிறேன். ஆனால் இப்பொழுதெல்லாம் இங்குள்ள இடது/ வலதுசாரிகள் மற்றும் கார்பொரேட் கம்பெனிகளின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுத்துப் போய் விட்டது. அமெரிக்காவில் மேல்மட்ட ஊழல் என்பது இந்திய ஊழல்களை விட 100 மடங்கு அதிகம். இலாபம் ஒன்று மட்டுமே குறியாய் இருக்க வேண்டும் என்பதே இப்போது தாரக மந்திரம் ஆகும். அதிலும் நம் இந்தியர்கள் பலர் முதலாளி ஆகும் கனவுகளில் கம்பெனிகள் ஆரம்பித்து இன்னும் ஊழலைப் பெருக்க வைத்துள்ளனர்! எப்பொழுது காகிதப் பணத்தில் நம்பிக்கை வைத்து தொழில் செய்ய விளைகிறோமோ அப்போதே எல்லாம் நாசம் தான்! Modern capitalism calls for heavy accumulation of wealth. Everyone wants to make more and more money and there is no limit. But, in reality there is nothing like unlimited supply of resources. மனிதன் கண்டு பிடித்த பணத்தின் உண்மையான நோக்கம் இப்போது மாறி விட்டது! எப்போது பணம் என்பது இவ்வளவு இருந்தால் போதும் என்ற நிலையை மனிதன் உணர்கிறானோ அன்றுதான் ஊழல் குறையும். அது இந்தியாவில் இல்லை. அமெரிக்காவிலும் இல்லை. அமெரிக்க ஊழல் இந்தியாவை விட அதிகம் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை!
  அமெரிக்கா மற்றும் இந்தியப் பொருளாதாரங்கள் சரியும் நாள் வெகு தொலைவில் இல்லை. மற்ற ஸ்கேண்டினேவியன் ஐரோப்பிய நாடுகளில் வேண்டுமானால் ஊழல் குறைவாக இருக்கலாம்! அங்கே சென்று கற்று வாருங்கள் என்று நமது அரசியல் வாதிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு அறிவுரை கூறுங்கள். பணம் என்பது வெறும் காகிதம் தான் என்று எப்போது நமக்குப் புரிகிறதோ அப்போதுதான் ஊழல் ஒழியும்.
  “I want to leave a legacy. That’s why I want to create a business. Money is just a side effect of that whole thing. ” இதுதான் ஒரு உண்மையான முதலாளியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

  • குவான்,

   வசதியான வாழ்க்கை, கை நிறைய பணம் இது தான் மக்களின் இன்றைய ஆசை, பேராசை எல்லாம். இதனால் இழப்பது என்னவாக இருந்தாலும் அதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

 10. நிறையர் பேர் இந்தியன வசை பாடுகிறார்கள் எனக்கென்னமோ இந்தியன் என்ற பெயரில் இந்த இணைய வலைப்பூவ நடத்துறவங்களே வேண்டுமென்றே பின்னூட்டம் இட்டு இதை படிப்பவர்களின் மன நிலையை
  கொதிக்கும் படி செய்து அதில் இவர்கள் ஆதாயம் தேடுகிறார்களோ என்பதே என் அய்யம்…

 11. சில குறிப்பிட்ட அன்பர்களின் பதிவுகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது ஜோசப்.
  பொது எதிரி இருந்தால் நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து நாம் அந்த பொது எதிரிக்கு எதிராக போரிடுவோம்.

  சில மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் கருவாடு விற்பதை ஹிந்து பத்திரிகை கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசு தடை செய்ததை கண்டித்து வினவு வெளியிட்ட பதிவுகளில் iyyarval என்ற ஒரு நபர் பின்னூட்டமிட்டிருப்பார். படிப்பவர்களின் ஒட்டுமொத்த கோபமும் அந்த ஒரு நபரின் மேல் திரும்பும் வண்ணம் அவரது பின்னூட்டம் நரகலாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க