முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!

கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!

-

செவ்வாய்க் கிழமை (22-12-2014) அன்று அரசு கணக்கின்படி ரூ 16,000 கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம் மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்டதல்ல; வாங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 2012-ல் சகாயம் அளித்த அறிக்கையின்படி 90 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பி.ஆர்.பி. உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, குவாரிகளை இயக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றம் சென்ற பி.ஆர்.பி. நிறுவனத்தின் மனுக்கள் கடந்த 13.12.2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

அதன்பின் கடந்த ஆகஸ்ட், 2014-ல் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சகாயத்தை நீதிமன்ற ஆணையராக நியமித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சூழலில்தான் குவாரிகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கொள்ளை நீதிமன்ற உத்தரவுகள் – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அனுமதித்த நீதித்துறைக்கு சில கேள்விகள்!

1. உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியான வழக்கின் கோரிக்கையை,வேறு வார்த்தைகளில் கேட்டால் அனுமதிக்க முடியுமா?

2. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கிரானைட் பிரச்சனையை கையாளுகையில் மதுரையில் ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

3. 2012-ல் போடப்பட்ட விசாரணை அதிகாரியின் உத்தரவை டிசம்பர், 2014-ல் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

4. இன்றோடு (23.12.2014) நீதிமன்றம் முடிய உள்ள சூழலில், அட்மிசன் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் நிலையில் பி.ஆர்.பி வழக்கை அவசரமாக விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன?

5. அரசு வழக்கறிஞர், “இவ்வழக்கில் A.G ஆஜராக உள்ளார், அரசு செயலர் அனைத்து மாவட்டங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கையில் வந்து விட்டது. சரிபார்த்து தாக்கல் செய்கிறேன்” எனச் சொல்லி மன்றாடி ஒரு வாய்தா கேட்டபோதும் நீதிபதி மறுத்ததேன்?

6. “INTERIM PRAYER-ம், MAIN PRAYER-ம் ஒன்றுதான் அடுத்த வாரம் போடுங்கள்” என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்கப்படாதது ஏன்?

7. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் IMPLEAD PETITION அனுமதிக்கப்படாதது ஏன்?

8. பி.ஆர்.பி மனுவில் மதுரை தவிர வேறு எந்த மாவட்டங்களில் குவாரி நடத்தப்படுகிறது, எங்கு குவாரி நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே குறிப்பிடப்படாத நிலையில், பெயர் குறிப்பிடாத இடங்களில் குவாரி நடத்த அனுமதித்தால் அது நீதிமன்றமா? கடந்த 2 மாதங்களாக மற்ற வழக்கறிஞர்களிடம் பல கேள்விகளை தேவையின்றி எழுப்பியது வேற வாயா?

9. அரசை, தொழிற்துறை செயலரை, கனிம வளத்துறை இயக்குநரை, மாவட்ட ஆட்சியரை, எஸ்.பி.யை எதிர்மனுதாரராகச் சேர்க்காமல் ஒரே ஒரு டி.எஸ்.பி.யை மட்டும் சேர்த்த மனுவில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

10. நேற்று சென்னையில் தலைமை நீதிபதி அமர்வு, சகாயம் விசாரணைக்கு 2 மாதம் நீட்டிப்பு வழங்க, மதுரையில் குவாரி இயக்க உத்தரவு பிறப்பித்தால்-மக்கள் காறித் துப்ப மாட்டார்களா?

11. நேற்று அரசு அலுவலகங்களில் குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கில் ஆஜராக மதுரை வந்த ஓ.பன்னீர் செல்வம் அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி கிரானைட் வழக்கிற்கு வராத மர்மம் என்ன?

12. பி.ஆர்.பி.க்கு முந்தைய வழக்கில் மனுதாரரான துணை தாசில்தார் அடுத்தவர் ஏ.டி.எம்.-ல் 10,000 ரூபாய் எடுத்ததற்காக நோட்டீஸ் இன்றி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் திருடனுக்கு உத்தரவு வழங்க முடியாது என்று சாமியாடிய ராஜா, ரூ 10,000 கோடி திருடியவனுக்கு உத்தரவு வழங்கியதேன்?

இன்னமும் இந்த ஊர், உலகம் கோர்ட்டை எப்பிடித்தேன் நம்புதோ!
————————————————————————-
கிரானைட் கொள்ளைக்கெதிராக தொடர்ந்து போராடி வரும்…..
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை

தொடர்புக்கு.
ம.லயனல் அந்தோணிராஜ்,
மாவட்ட செயலர்,
9443471003

  1. நீங்க எந்த நம்பிக்கையில் HRPC மூலம் வழக்கு போடுறீங்களோ? அதே நம்பிக்கையில்தான் மக்களும் நம்புறாங்கஜீ.

  2. //நீங்க எந்த நம்பிக்கையில் HRPC மூலம் வழக்கு போடுறீங்களோ? அதே நம்பிக்கையில்தான் மக்களும் நம்புறாங்கஜீ.// People believe in this system and law somehow, so HRPC gives respect to this and struggle within that purview too. If it success a temporary relief to the people, If it fails then people understand the system and good for future proof solution.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க