Wednesday, December 11, 2024
முகப்புசெய்திசென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

-

அரசியல் வானில் ஒளிக்கீற்று! அழைக்கிறது கீழைக்காற்று…

ன்பிற்கும், சமூக ஆர்வத்திற்கும் உரிய வாசகர்களே!

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35-ல் நடைபெற உள்ளது.

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

புதிய நூல்கள், சமூகப் பரிமாணங்களை அறிய உதவும் தேவையான வெளியீடுகள், காலத்தை வென்ற மாஸ்கோ நூல்கள், பெரியார் – அம்பேத்கர் படைப்புகள், மாற்றத்திற்கு வித்திடும் மார்க்சிய – லெனினிய சிந்தனைகள்… இவைகளுடன் “கீழைக்காற்று” புத்தகக்காட்சிக்கு உங்களை வரவேற்கிறது.

பிற்போக்கு பாசிசக் கருத்துக்கள், முதலாளித்துவ சந்தை வக்கிரங்கள் கழுத்தை நெறிக்கும் இந்தச் சூழலில், அரசியல் கூர்மை இன்னும் அதிக அவசியமாகிறது.

சமூக முன்னேற்றத்திற்காக படிக்கவும், அதை சக மனிதர்களிடம் பரப்பவும், புதிய சமூகத்தை உருவாக்கவும் சிந்திப்போம்… சந்திப்போம்!

keezhai-katru-chennai-bookfair

வாருங்கள்!

வரவேற்கும்
கீழைக்காற்று
சென்னை – 2
போன்: 044 – 28412367

  1. கடை எண்?.இருப்பில் இருக்கும் புத்தக தலைப்புகளை பட்டியலிட முடியுமா?

  2. கண்காட்சிக்கான நாட்கள் நெருங்கும்போது உரிய நேரத்தில் புதிய புத்தகங்கள் மற்றும் காட்சிக்கு வைக்கப்படும் புத்தகங்களின் தலைப்புகளை சென்ற ஆண்டு போலவே வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

    முக்கியமான வேண்டுகோள்: இரு வருடங்களுக்கு முன்பு தோழர் பகத்சிங் மற்றும் தந்தை பெரியாரின் படங்கள் போட்ட சாவிக்கொத்துகள் கீழைக்காற்றில் கிடைத்தன. மிக நேர்த்தியான வடிவமைப்பில் பார்க்க எளிமையாகவும் அருமையாகவும் இருந்தன. அதேபோன்ற சாவிக்கொத்துகளை இந்த ஆண்டும் ஏற்பாடு செய்து விற்பனைக்கு வைக்கலாம். அது பலவிதங்களில் புரட்சிகர முற்போக்கு அரசியலை அடையாளப்படுத்துவதாக அமையும். இதுபோன்ற புதிய வடிவங்களைக் கையாண்டு புத்தகம் மற்றுமன்றி பிற வழிகளிலும் முற்போக்குக் கருத்துக்களையும் பார்ப்பன முதலாளித்துவ எதிர்ப்புப் பண்பாட்டையும் கொண்டுசெல்ல முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க