privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை - ஆதரியுங்கள் !

TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !

-

ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு
ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.

வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் இன்று (07.01.2015) காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.

வந்திறங்கும் தொழிலாளர் படை
வந்திறங்கும் தொழிலாளர் படை
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்

tcs-layoff-ndlf-campaign-09பணிக்கு சென்று கொண்டிருக்கும் ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கமாக ஒன்றிணையுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.டி காரிடாரில் உள்ள டி.சி.எஸ் மற்றும் மற்ற ஐ.டி நிறுவன அலுவலகங்கள் முன்பும் சாலை சந்திப்புகளிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகிக்கின்றனர்.

அதிகாலையில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் லே ஆஃப் கொடுங்கனவோடு பேருந்துகளில் பயணிக்கும் ஐ.டி மற்றும் டி.சி.எஸ் ஊழியர்களை நம்பிக்கை ஊட்டும் விதமாக தொழிலாளர்களாக இருக்கும் தோழர்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான ஆங்கிலம் மற்றும் தமிழ் துண்டறிக்கைகளை விநியோகித்து உரையாடுகின்றனர்.

காலையிலேயே வந்திறங்கி, பிரசுரங்களை பிரித்து மடித்து, கொடிகள், பேனர்களை உயர்த்திப்பிடித்து ஐ.டி வளாக நெடுஞ்சாலையில் நம்பிக்கையூட்டும் விதமாக அவர்கள் பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்?

உடனே அவர்கள் உத்தரவுப்படி போலீசு பெரும்படையுடன் களமிறங்கியது. தோழர்களிடம் நைசாக பேசி கலைந்து போகுமாறு கூறியது. தொழிலாளிகளோ, “துண்டறிக்கை விநியோகிப்பது அடிப்படை ஜனநாயக உரிமை, இதை நிறுத்த முடியாது” என்று பேசி தமது தலைவர்களிடம் அனுப்பினர்.

தலைவர்களை தேடி அலைந்த போலீசு இறுதியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் முகுந்தன், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.தங்கராசு, மாநிலப் பொருளார் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து பேசியது. தோழர்களும் தொழிலாளிகள் சொன்ன அதே ஜனநாயக விளக்கத்தை எடுத்தியம்பினர்.

“குறைந்த பட்சம் பேனர்கள், கொடிகளையாவது அப்புறப்படுத்துங்கள்” என்று ஆரம்பித்து “பிரசுரம் கொடுக்காதீர்கள்” என்று மிரட்டி வருகிறது போலீசு. இதற்கு அஞ்சாத தொழிலாளர் படை தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் செய்து வருகின்றது. ஐ.டி ஊழியர்களை தூக்கி எறியும் டாடாவை எதிர்த்து பேசக்கூடாது என்பதே இங்குள்ள ஜனநாயகத்தின் இலட்சணம்.

 

TCS-Prasuram-tamil-1 TCS-Prasuram-tamil-2

சாலையில் தொடங்கிய இந்த பிரச்சாரம் அவர்களை தொழிற்சங்கமாக திரட்டும் வண்ணம் தொடர்கிறது.

tcs-layoff-ndlf-campaign-04இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 6 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைவரும் வாருங்கள்!

tcs-layoff-ndlf-campaign-05

இது தொடர்பாக மேலும் விபரங்களைப் பெற 9003198576 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அல்லது combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பேஸ்புக் பக்கம் fb://VinavuCombatsLayoff

இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த முயற்சியில் இணைய பிரச்சாரம் தொடர்பான பணிகளை வினவு தளமும், பு.ஜ.தொ.முவும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு வினவு வாசகர்களின் ஆதரவையும், உதவியையும் கோருகிறோம். இந்தச் செய்தியை இணையத்திலும், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.

tcs-layoff-ndlf-campaign-10

TCS Layoff - NDLF (2)

TCS-Prasuram-english-1 TCS-Prasuram-english-2
  1. ஒரு மண்ணும் நடக்காது… டி.சி.எஸ்சில் இருந்து ஒரு “அமெளன்ட்” வந்ததும், “தோழர்க”” போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவார்கள்… இவனுங்க போராடி என்ன எழவு நடந்தது?? கூடங்குளம், ஆங்கில வழி கல்வி, தனியார் கல்வி, மின் கட்டண விலை ஏற்றம், பால் மற்றும் பஸ் கட்டண விலை ஏற்றம் போன்ற பல விசயங்களிலும் இவனுங்க போராடி என்னத்த கிழிச்சுட்டானுங்க?? சும்மா ஒரு நித்தியானந்தாவை எதிர்த்து ஒரு வழக்கு நடத்தி வெற்றி பெற முட்ந்ததா??? போராடினா முடிவு கிடைக்கனும், இல்லைனா செத்து மடியனும்… சும்மா பத்து பேரும்,நாலு கொடியும் வெச்சுகிட்டு, அப்படியே தமிழ்நாடு போலீஸும், இந்திய ராணுவமும் இவனுங்க போராட்டத்தை முடக்க நினைக்குற மாதிரி பில்டப் குடுக்குறது எல்லாம் சும்மா பிலக்கா பசங்க வேலை….. இது எல்லாம் இப்ப “சரக்கு” கடையை மூட சொல்லி பொம்பளைங்களே இத விட வீரியமாகவும், தைரியமாகவும் போராடி வெற்றி பெறுகின்றனர் ( உ.த: மைலாப்பூர் முண்டகன்னியம்மன் ஆலயம் அருகில் இருந்த “டாஸ்மாக்” கடையை மூட செய்தது)… இது போன்ற வெற்றி பெற்ற “தோழர், தோழிகள் போராட்டம்” ஏதாவது உண்டா??? இவனுங்களை நம்பி போராடினா “கதற கதற” மிதி வாங்கி வீட்டிலே முடங்க வேண்டியதுதான்….. டி.சி.ஸ். பிரச்சனையை வினவு தங்கு சாதகமாக்கி கொள்ள துடிக்கிறது. போராட்ட குணம் உண்மையாக இருந்தால், “அம்மா”வ கைதி செய்த போது தமிழகம் முடங்கியதே, அதை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்து போராடி இருக்க வேண்டியது தானே?? “அம்மா” டவுசரை கழட்டிடுவாளோனு பயம், அப்படி தானே???

    • ஜெயாவுக்கு எதிராக மகஇக மற்றும் அதன் தோழமை புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் பலவும் இதே வினவு இணைய தளத்தில் வெளி வந்துள்ளது. ஜெயா கைதின் போது தமிழகத்தை அழிக்க வந்த சதிகாரி என்று முதற்பக்க கார்ட்டூனில் – அம்மா மாயையை கிழித்து தொங்கவிட்டவர்களைப் பார்த்து கார்ப்பரேட் அடிமையின் சுய இன்பக் கூச்சலை நினைத்து சும்மா சிரிப்பதா ?.. விழுந்து விழுந்து சிரிப்பதா என்று தெரியவில்லை.

    • Mr. Indian understand and observe what has happened around you. i’ll give the press release when jaya’s party men tried to shut down the whole state. And read the news paper on relevant dates to know more about the resistance of our organisation.

      HUMAN RIGHTS PROTECTION CENTRE-TN
      50, Armenian Street, Parrys, Chennai – 01.
      …………………………………………………………….

      28.09.2014
      Press Release
      PIL filed to restore Normalcy in Tamil Nadu
      On 27.9.2014, the then Chief Minister of Tamil Nadu, J.Jayalalitha was convicted for 4 years on a Charge under Section 13 (e) Prevention of Corruption Act as ordered by the designated special Court at Bangalore.
      Immediately after the pronouncement of the judgment, the party men of All India Anna Dravida Munnetra Kazhagam,(AIADMK), entered into atrocities and a massive violence all over Tamil Nadu. Even today normalcy was not restored. Tamil Nadu police remained as a mere spectator and witnessed the violence. Rather than taking action against the Rioters the Police authorities forcefully restrained common public movement and ordered for closure of shops.
      Thus to restore law and order, Public safety and tranquility Human Rights Protection Center, Chennai moved a PIL(W.P 26660/ 14 ) to restore normalcy in the state and to ensure police protection for peaceful mobility of people and transport, peaceful conduct of shops and offices. Moreover it sought the court to direct the DGP to file a report regarding law and order situation and deploy adequate police protection to ensure public safety.
      The matter was taken up as urgent and a Bench was immediately constituted and the matter was heard by Justice S Vaidhyanathan and Justice K Mahadevan today (Sunday sep 28 2014) at 1.30 p.m. Mr. G. Purushotaman argued on behalf of the Petitioner. The Counsel brought to the notice of the Court about the Constitutional vacuum and an undeclared bandh that remains in the State. In the absence of appropriate authority the Judiciary has to intervene and to bring the situation under control by maintaining law and order. The Advocate General argued before the Court stating there are precedents of such emotional expressions while the head of the Parties are arrested. After hearing all the arguments the bench ordered to file a status report and posted the matter for next hearing on 06.10.2014.
      With regards,
      S.Jimraj Milton.

  2. இந்த போராட்டம் வெற்றி அடையாது. ஆனால் வினவு ஒரு மிகப்பெரிய பில்டப் குடுக்கும்… யாராவது பந்தயம் கட்டத்தயாரா??? ஒரு லட்சம் வரை நான் கட்ட தயார் — இந்தியன்….

    • வெற்றி தோல்வி எனபது மட்டுமே அளவீடு அல்ல . நோக்கம் என்ன என்பதுவும் முக்கியம் .

      நேதாஜி தோல்வி அடைந்து விட்டார் அதனால் அவர் உதவாக்கரை என்று முடிவுக்கு வருவதில் அர்த்தம் இல்லை .

      என்ன செய்கிறார்கள் நோக்கம் என்ன எனபது மிகவும் முக்கியம்

  3. ரயில்வேயில் எதிர்த்து போராடலாம் , ரயிலை வேறு நாட்டிற்கு கொண்டு போக முடியாது

    மென்பொருள் துறையில் போராடினால் , தொழிலை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும்.

    மூல பொருள் தேவை இல்லை . மனித உழைப்பு மட்டும் போதும் .

    இன்றைய நவீன உலகில், கொள்ளையடிக்கப்பட்ட முன்னாள் சோவியத் நாடுகள் , பிலிப்பைன்ஸ் சீனா போன்ற நாடுகள் மெதுவாக மார்கெட் சேரை அதிகபடுத்தி கொண்டு வருகின்றன.

    தொழிற்சங்கம் மூலம் வேலை தூக்க கூடாது என்று போராடுவது ஏற்புடையது அல்ல .

    ஆனால் வேலை விட்டு தூக்கினால் பத்து வருட வேலை செய்தவர்களுக்கு ஒன்னரை வருட சம்பளத்தை தரவேண்டும் என்று கேட்பது ஏற்புடையது

  4. //இவனுங்களை நம்பி போராடினா “கதற கதற” மிதி வாங்கி வீட்டிலே முடங்க வேண்டியதுதான்…..//

    இதுவரை எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டு மிதி வாங்கியிருக்குறீர்கள் மிஸ்டர் இண்டியன்

    உங்களை போன்றவர்களுக்கு வினவில் பதிவு செய்ய அனுமதிப்பது என்பது உங்களுடைய கருத்துக்களை நாகரீக முறையில் விமர்சனங்களை பதிவிட வேண்டும் என்பத்ற்க்காக மட்டுமே,

    போராடமல் வாழ்க்கையில்லை என்பதுதான் இன்றைய அகிலத்தின் நிலை, உங்களை போன்று ஒருபோதும் போராடாமல் இருப்பதை விட போராடி செத்து மடிவதே மேல்..!

    உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் சேர்த்துத்தான் எங்களது போராட்டம் ,
    போராட்டம் எவ்வளவு இன்பமயமானது என்று தெரியும்…
    போராடிப்பார் அப்போதுதான் புரியும் …

    போராட்டம் வெல்லட்டம் தேழர்களே…!

    • //போராட்டம் வெல்லட்டம் தேழர்களே…!//

      பிழை திருத்தம்
      போராட்டம் வெல்லட்டும் தோழர்களே..!

  5. Agreed Mr. AsuraBalagan. Without fight there is no life. But how we fight really matters.
    It is the credibility of Unions In India that “Indian” ( and I also) is questioning. Not the fight itself. (Nokia, Foxconn, HPF, MSL… so many examples where Indian UNIONS failed to save the jobs of so many people).

    So why should i believe the Unions? Why should i Join the Unions to fight? Unions can armtwist only the State and Central Government who give in to their demands for petty political reasons. We all know even there How Jaya gave a hard time to Unions. If not for the mercy of Supreme Court we all know what would have happened to Govt Employees at that time.

    So why UNIONS? For a fight to succeed, one need a good cause, a noble/selfless leadership to lead that fight, which is not there in India. That’s why the other questions of “Indian” assumes significance. Why the fights led by women to close the liquor shops succeeded and why the fight led by Unions failed in Nokia? Because the women fighting there were selfless. Can you say this for the Unions? If one Union fight another union will compromise with the Management.

    So may be the language used by “Indian” appears rough, but his questions needs to be answered if one supports the UNION way of fighting.

    Fight has many meanings 🙂

  6. “Indian”would not have participated in any strike.He is having lot of time at his disposal.He will respond to any article as the first person and put his comments provoking others. He is doing it wantonly.He will appear again with similar comment on fresh article.Mr.Asurabalagan.Do not waste your time.Some people will not change.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க